Thirukurundandakam Moolam
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருக்குறுந்தாண்டகம் நிதியினைப் பவளத்தூணை நெறிமையால் நினைய வல்லார் கதியினைக் * கஞ்சன் மாளக் கண்டு முன், அண்டமாளும் * மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினைக் * கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே. 1 காற்றினைப் புனலைத் தீயைக் கடிமதிளிலங்கை செற்ற ஏற்றினை * இமயம் மேய எழில் மணித்திரளை * இன்ப வாற்றினை அமுதந் தன்னை அவுண னாருயிரை யுண்ட கூற்றினைக் * குணங் கொண்டு உள்ளம் ! […]
Thirumozhi 1-1
பெரிய திருமொழி இரண்டாமாயிரம் திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழித் தனியன்கள் (திருக்கோட்டியூர்நம்பி அருளிச்செய்தது ) கலயாமி கலித்வம்ஸம் கவிம் லோகதிவாகரம் யஸ்யகோபி: ப்ரகாஶாபி: ஆவித்யம்நிஹதம்தம: (எம்பெருமானார் அருளிச்செய்தது) வாழிபரகாலன் வாழிகலிகன்றி* வாழிகுறையலூர் வாழ்வேந்தன் வாழியரோ* மாயோனைவாள்வலியால்மந்திரங்கொள்* மங்கையர்கோன் தூயோன்சுடர்மானவேல், (ஆழ்வான் அருளிச்செய்தது) நெஞ்சுக்கிருள்கடி தீபம் அடங்காநெடும்பிறவி நஞ்சுக்குநல்லவமுதம் தமிழ்நன்னூல் துறைகள் அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம்* பரசமயப் பஞ்சுக்கனலின் பொறி* பரகாலன்பனுவல்களே. (எம்பார் அருளிச்செய்தது) எங்கள் கதியே இராமாநுசமுனியே சங்கைகெடுத்தாண்டதவராசா – பொங்குபுகழ் மங்கையர்கோனீந்தமறையாயிரமனைத்தும் தங்குமனம்நீ எனக்குத்தா. (மாலைத்தனியேவழிபறிக்கவேணுமென்று * கோலிப்பதிவிருந்தகொற்றவனே!* […]
Thiruvoymozhi 10-10
திருவாய்மொழி பத்தாம் பத்து பத்தாம் திருவாய்மொழி முனியே ! நான்முகனே ! முக்கண்ணப்பா ! * என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக்கண் கருமாணிக்கமே ! என் கள்வா ! * தனியேனாருயிரே ! என் தலைமிசையாய் வந்திட்டு * இனிநான் போகலொட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே. 10.10.1 மாயம் செய்யேல் என்னை உன் திருமார்வத்து மாலை நங்கை * வாசம் செய் பூங்குழலாள் திருவாணை நின்னாணை கண்டாய் * நேசம் செய்து உன்னோ டென்னை […]
Thiruvoymozhi 10-9
திருவாய்மொழி பத்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி சூழ் விசும்பணி முகில், தூரியம் முழக்கின * ஆழ் கடலலை திரை, கையெடுத் தாடின * ஏழ் பொழிலும், வளமேந்திய என்னப்பன் * வாழ் புகழ், நாரணன் தமரைக் கண்டுகந்தே. 10.9.1 நாரணன் தமரைக் கண்டுகந்து, நல் நீர்முகில் * பூரண பொற்குடம், பூரித்தது உயர் விண்ணில் * நீரணி கடல்கள், நின்றார்த்தன * நெடு வரைத் தோரணம் நிரைத்து, எங்கும் தொழுதனருலகே. 10.9.2 […]
Thiruvoymozhi 10-8
திருவாய்மொழி பத்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழி திருமாலிருஞ்சோலை மலை என்றேன், என்னத் * திருமால் வந்து, என்னெஞ்சு நிறையப் புகுந்தான் * குருமாமணி யுந்து புனல், பொன்னித் தென்பால் * திருமால் சென்று சேர்விடம், தென் திருப்பேரே. 10.8.1 திருப்பேர்நகர், திருமாலிருஞ்சோலை பேரே யுறைகின்ற பிரான், இன்று வந்து * பேரேனென்று, என்னெஞ்சு நிறையப் புகுந்தான் * காரேழ் கடலேழ், மலையே ழுலகுண்டும் * ஆரா வயிற்றானை, அடங்கப் பிடித்தேனே. 10.8.2 திருப்பேர்நகர் […]
Thiruvoymozhi 10-7
திருவாய்மொழி பத்தாம் பத்து ஏழாம் திருவாய்மொழி செஞ்சொற் கவிகாள் ! உயிர் காத்தாட் செய்ம்மின் திருமாலிருஞ்சோலை * வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து * என் நெஞ்சும் உயிரும் உள்கலந்து நின்றார் அறியா வண்ணம் * என் நெஞ்சு முயிரு மவை யுண்டு தானே யாகி நிறைந்தானே. 10.7.1 திருமாலிருஞ்சோலை தானேயாகி நிறைந்து எல்லாவுலகும் உயிரும் தானேயாய்த் * தானே யானென்பானாகித் தன்னைத் தானே துதித்து * எனக்குத் தேனே […]
Thiruvoymozhi 10-6
திருவாய்மொழி பத்தாம் பத்து ஆறாம் திருவாய்மொழி அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு * ஆழியான் அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே * இருள் தரு மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன் * மருளொழி நீ மடநெஞ்சே ! வாட்டாற்றான் அடி வணங்கே. 10.6.1 திருவாட்டாறு வாட்டாற்றான் அடி வணங்கி மாஞாலப் பிறப்பறுப்பான் * கேட்டாயே மடநெஞ்சே ! கேசவன் எம்பெருமானைப் * பாட்டாய பலபாடிப் […]
Thiruvoymozhi 10-5
திருவாய்மொழி பத்தாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி கண்ணன் கழலிணை * நண்ணும் மனமுடையீர் ! * எண்ணும் திருநாமம் * திண்ணம் நாரணமே. 10.5.1 நாரணன் எம்மான் * பாரணங்காளன் * வாரணம் தொலைத்த * காரணன் தானே. 10.5.2 தானே உலகெல்லாம் * தானே படைத்திடந்து * தானே உண்டுமிழ்ந்து * தானே யாள்வானே. 10.5.3 ஆள்வான் ஆழிநீர் * கோள்வா யரவணையான் * தாள் வாய் மலரிட்டு […]
Thiruvoymozhi 10-4
திருவாய்மொழி பத்தாம் பத்து நான்காம் திருவாய்மொழி சார்வே தவ நெறிக்குத், தாமோதரன் தாள்கள் * கார்மேக வண்ணன், கமல நயனத்தன் * நீர்வானம் மண் எரி காலாய் நின்ற, நேமியான் * பேர் வானவர்கள் பிதற்றும், பெருமையனே. 10.4.1 பெருமையனே, வானத் திமையோர்க்கும் காண்டற் கருமையனே * ஆகத்தணையாதார்க்கு * என்றும் திருமெய்யுறைகின்ற, செங்கண்மால் * நாளும் இருமை வினை கடிந்து, இங்கு என்னை யாள்கின்றானே. 10.4.2 ஆள்கின்றான் ஆழியான், ஆரால் குறைவுடையம் ? * […]
Thiruvoymozhi 10-3
திருவாய்மொழி பத்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி வேய்மரு தோளிணை மெலியுமாலோ ! மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்கா * காமரு குயில்களும் கூவுமாலோ ! கணமயிலவை கலந்தாலுமாலோ ! * ஆமருவின நிரை மேய்க்க நீ போக்கு ஒரு பகல் ஆயிரமூழியாலோ * தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ ! தகவிலை தகவிலையே நீ கண்ணா ! 10.3.1 தகவிலை தகவிலையே நீ கண்ணா ! தடமுலை புணர்தொறும் புணர்ச்சிக்காராச் * சுகவெள்ளம் விசும்பிறந்து அறிவை […]