Thirukurundandakam Moolam
திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருக்குறுந்தாண்டகம் நிதியினைப் பவளத்தூணை நெறிமையால் நினைய வல்லார் கதியினைக் * கஞ்சன் மாளக் கண்டு முன், அண்டமாளும் * மதியினை மாலை வாழ்த்தி வணங்கி என் மனத்து வந்த விதியினைக் * கண்டு கொண்ட தொண்டனேன் விடுகிலேனே. 1 காற்றினைப் புனலைத் தீயைக் கடிமதிளிலங்கை செற்ற ஏற்றினை * இமயம் மேய எழில் மணித்திரளை * இன்ப வாற்றினை அமுதந் தன்னை அவுண னாருயிரை யுண்ட கூற்றினைக் * குணங் கொண்டு உள்ளம் ! […]