உபதேசரத்தினமாலை
ஶ்ரீ: மணவாள மாமுனிகள் அருளிச்செய்த உபதேசரத்தினமாலை தனியன் (கோயிற் கந்தாடையண்ணன் அருளிச்செய்தது) முன்னந்திருவாய்மொழிப்பிள்ளைதாமுபதேசித்த* நேர் தன்னின்படியைத் தணவாதசொல் மணவாளமுனி* தன்னன்புடன்செய் உபதேசரத்தினமாலை தன்னை* தன்னெஞ்சுதன்னில் தரிப்பவர்தாள்கள்சரண்நமக்கே. **எந்தைதிருவாய்மொழிப்பிள்ளை இன்னருளால் * வந்தஉபதேசமார்க்கத்தைச் – சிந்தைசெய்து* பின்னவரும்கற்க உபதேசமாய்ப்பேசுகின்றேன்* மன்னியசீர் வெண்பாவில் வைத்து. 1 கற்றோர்கள்தாமுகப்பர் கல்விதன்னில்ஆசையுள்ளோர் * பெற்றோமெனஉகந்துபின்புகற்பர்* – மற்றோர்கள்* மாச்சரியத்தால் இகழில் வந்ததென்நெஞ்சே!* இகழ்கை ஆச்சரியமோ தானவர்க்கு. 2 **ஆழ்வார்கள்வாழி அருளிச்செயல்வாழி* தாழ்வாதுமில் குரவர்தாம் வாழி* – ஏழ்பாரும் உய்ய அவர்கள்உரைத்தவைகள்தாம் வாழி* செய்யமறைதன்னுடனே […]