ஶ்ரீ:
மணவாள மாமுனிகள் அருளிச்செய்த
உபதேசரத்தினமாலை
தனியன்
(கோயிற் கந்தாடையண்ணன் அருளிச்செய்தது)
முன்னந்திருவாய்மொழிப்பிள்ளைதாமுபதேசித்த* நேர்
தன்னின்படியைத் தணவாதசொல் மணவாளமுனி*
தன்னன்புடன்செய் உபதேசரத்தினமாலை தன்னை*
தன்னெஞ்சுதன்னில் தரிப்பவர்தாள்கள்சரண்நமக்கே.
**எந்தைதிருவாய்மொழிப்பிள்ளை இன்னருளால் *
வந்தஉபதேசமார்க்கத்தைச் – சிந்தைசெய்து*
பின்னவரும்கற்க உபதேசமாய்ப்பேசுகின்றேன்*
மன்னியசீர் வெண்பாவில் வைத்து. 1
கற்றோர்கள்தாமுகப்பர் கல்விதன்னில்ஆசையுள்ளோர் *
பெற்றோமெனஉகந்துபின்புகற்பர்* – மற்றோர்கள்*
மாச்சரியத்தால் இகழில் வந்ததென்நெஞ்சே!* இகழ்கை
ஆச்சரியமோ தானவர்க்கு. 2
**ஆழ்வார்கள்வாழி அருளிச்செயல்வாழி*
தாழ்வாதுமில் குரவர்தாம் வாழி* – ஏழ்பாரும்
உய்ய அவர்கள்உரைத்தவைகள்தாம் வாழி*
செய்யமறைதன்னுடனே சேர்ந்து. 3
பொய்கையார் பூதத்தார் பேயார் * புகழ்மழிசை
ஐயன்அருள்மாறன் சேரலர்கோன்* – துய்யபட்ட
நாதன்அன்பர்தாள்தூளி நற்பாணன்நன்கலியன்*
ஈதிவர்தோற்றத்தடைவா இங்கு. 4
அந்தமிழால் நற்கலைகள் ஆய்ந்துரைத்த ஆழ்வார்கள்
இந்த உலகில் இருள் நீங்க* – வந்துதித்த
மாதங்கள்நாள்கள்தம்மை மண்ணுலகோர்தாமறிய*
ஈதென்று சொல்லுவோம்யாம். 5
**ஐப்பசியில் ஓணம் அவிட்டம்சதயம்இவை*
ஒப்பிலவா நாள்கள் உலகத்தீர்!* – எப்புவியும்
பேசுபுகழ்ப் பொய்கையார் பூதத்தார் பேயாழ்வார்*
தேசுடனே தோன்றுசிறப்பால். 6
மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னேவந்துதித்து*
நற்றமிழால்நூல்செய்து நாட்டை உய்த்த * – பெற்றிமையோர்
என்று முதலாழ்வார்கள் என்னும் பெயர்இவர்க்கு*
நின்றதுலகத்தே நிகழ்ந்து. 7
பேதைநெஞ்சே! இன்றைப்பெருமை அறிந்திலையோ*
ஏதுபெருமைஇன்றைக்கென்றென்னில் * – ஓதுகின்றேன்
வாய்த்தபுகழ்மங்கையர்கோன் மாநிலத்தில்வந்துதித்த*
கார்த்திகையில் கார்த்திகைநாள்காண். 8
**மாறன்பணித்ததமிழ்மறைக்கு* மங்கையர் கோன்
ஆறங்கம்கூற அவதரித்த* – வீறுடைய
கார்த்திகையில் கார்த்திகைநாள் என்றென்று காதலிப்பார்*
வாய்த்த மலர்த்தாள்கள் நெஞ்சே! வாழ்த்து. 9
கார்த்திகையில் உரோகிணி நாள் காண்மினின்று காசினியீர்!*
வாய்த்தபுகழ்ப்பாணர் வந்துதிப்பால்* – ஆத்தியர்கள்
அன்புடனேதான் அமலனாதிபிரான்கற்றதற்பின்
நன்குடனே கொண்டாடும்நாள். 10
மன்னியசீர்மார்கழியில் கேட்டைஇன்று மாநிலத்தீர்*
என்னிதனுக்குஏற்றமெனில்உரைக்கேன்* – துன்னுபுகழ்
மாமறையோன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பிறப்பால்*
நான்மறையோர் கொண்டாடும்நாள். 11
தையில் மகமின்று தாரணியீர்! ஏற்றம்* இந்தத்
தையில்மகத்துக்குச் சாற்றுகின்றேன்* – துய்யமதி
பெற்ற மழிசைப்பிரான்பிறந்த நாளென்று
நற்றவர்கள் கொண்டாடும் நாள் 12
மாசிப்புனர்பூசம் காண்மினின்று மண்ணுலகீர்!*
தேசுஇத்திவசத்துக்கேதென்னில்* – பேசுகின்றேன்
கொல்லிநகர்க்கோன் குலசேகரன் பிறப்பால்*
நல்லவர்கள் கொண்டாடும்நாள் 13
**ஏரார்வைகாசிவிசாகத்தின் ஏற்றத்தைப்
பாரோர் அறியப்பகர்கின்றேன் * – சீராரும்
வேதந் தமிழ்செய்த மெய்யன்* எழில் குருகை
நாதன் அவதரித்தநாள். 14
**உண்டோ வைகாசிவிசாகத்துக்கொப்பொருநாள் ? *
உண்டோ சடகோபர்க்கொப்பொருவர் ?* உன்டோ
திருவாய்மொழிக்கொப்பு தென்குருகைக்குண்டோ
ஒருபார்தனில் ஒக்குமூர் 15
இன்றைப்பெருமைஅறிந்திலையோ ஏழைநெஞ்சே!*
இன்றைக்கென் ஏற்றமெனில் உரைக்கேன் * – நன்றிபுனை
பல்லாண்டுபாடிய நம்பட்டர்பிரான் வந்துதித்த*
நல்லானியிற் சோதிநாள். 16
மாநிலத்தில்முன் நம்பெரியாழ்வார்வந்துதித்த*
ஆனிதன்னில் சோதியென்றால் ஆதரிக்கும்* – ஞானியர்க்கு
ஒப்போரில்லை இவ்வுலகுதனில் என்றுநெஞ்சே!*
எப்போதும் சிந்தித்திரு. 17
மங்களாசாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள்* ஆர்வத்தளவு தான் அன்றி * – பொங்கும்
பரிவாலே வில்லிபுத்தூர்ப்பட்டர்பிரான் பெற்றான்*
பெரியாழ்வார் என்னும் பெயர். 18
கோதிலவாம் ஆழ்வார்கள் கூறுகலைக்கெல்லாம்*
ஆதி திருப்பல்லாண்டானதுவும்* – வேதத்துக்கு
ஓம் என்னுமதுபோல் உள்ளதுக்கெல்லாம் சுருக்காய்*
தான் மங்கலம் ஆதலால். 19
**உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலைதான் ?*
உண்டோ பெரியாழ்வார்க்கொப்பொருவர் ?* – தண் தமிழ் நூல்
செய்தருளும் ஆழ்வார்கள் தம்மில் அவர்செய்கலையில்*
பைதல்.நெஞ்சே! நீ உணர்ந்து பார் 20
ஆழ்வார்திருமகளார் ஆண்டாள்* மதுரகவி
ஆழ்வார் எதிராசராம் இவர்கள் * – வாழ்வாக
வந்துதித்த மாதங்கள்நாள்கள்தம்மின் வாசியையும்*
இந்த உலகோர்க்குரைப்போம் யாம் 21
**இன்றோ திருவாடிப்பூரம்* எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்* – குன்றாத
வாழ்வான வைகுந்தவான்போகந்தன்னை இகழ்ந்து*
ஆழ்வார் திருமகளாராய். 22
பெரியாழ்வார் பெண் பிள்ளையாய்* ஆண்டாள் பிறந்த
திருவாடிப்பூரத்தின் சீர்மை* – ஒருநாளைக்கு
உண்டோ மனமே! உணர்ந்துபார் * ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்பிதற்குமுண்டு. 23
அஞ்சுகுடிக்கொருசந்ததியாய்* ஆழ்வார்கள்
தஞ்செயலைவிஞ்சிநிற்கும்தன்மையளாய்* பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன்நாளும்*
வழுத்தாய் மனமே! மகிழ்ந்து. 24
**ஏரார்மதுரகவி இவ்வுலகில்வந்துதித்த*
சீராரும்சித்திரையில் சித்திரைநாள் * – பாருலகில்
மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துதித்தநாள்களிலும்*
உற்றதெமக்கென்றுநெஞ்சே! ஓர் 25
**வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம்போல்* –
சீர்த்த மதுரகவி செய்கலையை* – ஆர்த்தபுகழ்
ஆரியர்கள்தாங்கள் அருளிச்செயல் நடுவே*
சேர்வித்தார் தாற்பரியம்தேர்ந்து. 26
**இன்றுலகீர்! சித்திரையில் ஏய்ந்த திருவாதிரைநாள் *
என்றையினும் இன்றிதனுக்கேற்றம் என்தான்?* – என்றவர்க்குச்
சாற்றுகின்றேன்கேண்மின் எதிராசர்தம் பிறப்பால்*
நாற்றிசையும் கொண்டாடும்நாள். 27
**ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்தநாள்களிலும்*
வாழ்வானநாள்நமக்கு மண்ணுலகீர்!* ஏழ்பாரும் –
உய்ய எதிராசருதித்தருளும்* சித்திரையில்
செய்ய திருவாதிரை. 28
எந்தைஎதிராசர் இவ்வுலகில்எந்தமக்கா*
வந்துதித்த நாளென்னும் வாசியினால்* – இந்தத்
திருவாதிரைதன்னின் சீர்மைதனை நெஞ்சே*
ஒருவாமல் எப்பொழுதும் ஓர். 29
எண்ணரும்சீர்ப்பொய்கைமுன்னோர் இவ்வுலகில் தோன்றியவூர்*
வண்மைமிகு கக்சி மல்லை மாமயிலை* மண்ணியில்நீர்
தேங்கும்குறையலூர் சீர்க்கலியன் தோன்றியவூர்*
ஓங்குமுறையூர் பாணனூர். 30
தொண்டரடிப்பொடியார் தோன்றிய ஊர் * தொல்புகழ்சேர்
மண்டங்குடியென்பர் மண்ணுலகில் * – எண்டிசையும்
ஏத்தும்குலசேகரன் ஊரென வுரைப்பர் *
வாய்த்த திருவஞ்சிக்களம். 31
–
மன்னுதிருமழிசை மாடத்திருக்குருகூர்*
மின்னுபுகழ்வில்லிபுத்தூர் மேதினியில்* – நன்னெறியோர்
ஏய்ந்தபத்திசாரர் எழில்மாறன் பட்டர்பிரான்*
வாய்ந்துதித்த ஊர்கள்வகை. 32
சீராரும்வில்லிபுத்தூர் செல்வத்திருக்கோளூர்*
ஏரார் பெரும்பூதூர் என்னுமிவை* – பாரில்
மதியாரும் ஆண்டாள் மதுரகவியாழ்வார்*
எதிராசர் தோன்றிய ஊரிங்கு. 33
ஆழ்வார்கள் ஏற்றம் அருளிச்செயல் ஏற்றம்*
தாழ்வாதுமின்றி அவைதாம்வளர்த்தோர் * – ஏழ்பாரும் உய்ய
உய்யஅவர்கள்செய்த வியாக்கியைகள் உள்ளதெல்லாம் *
வையமறியப்பகர்வோம் வாய்ந்து. 34
ஆழ்வார்களையும் அருளிச்செயல்களையும்*
தாழ்வாநினைப்பவர்கள் தாம்* – நரகில் – வீழ்வார்கள்
என்று நினைத்து நெஞ்சே! எப்பொழுதும்நீ அவர்பால் *
சென்றணுகக் கூசித்திரி. 35
தெருளுற்ற ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர் ?*
அருளிச் செயலை அறிவார் ஆர்?* – அருள்பெற்ற
நாதமுனிமுதலான நம்தேசிகரைஅல்லால்*
பேதைமனமே! உண்டோபேசு. 36
ஓராண்வழியாய் உபதேசித்தார் முன்னோர்*
ஏரார் எதிராசர் இன்னருளால் * – பாருலகில்
ஆசையுடையோர்க்கெல்லாம் ஆரியர்காள்! கூறுமென்று*
பேசி வரம்பறுத்தார் பின் 37
**எம்பெருமானார் தரிசனமென்றே இதற்கு*
நம்பெருமாள் பேரிட்டு நாட்டிவைத்தார்* – அம்புவியோர்
இந்தத்தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த *
அந்தச்செயல் அறிகைக்கா. 38
பிள்ளான் நஞ்சீயர் பெரியவாச்சான்பிள்ளை*
தெள்ளார் வடக்குத் திருவீதிப் – பிள்ளை *
மணவாளயோகி திருவாய்மொழியைக்காத்த*
குணவாளரென்று நெஞ்சே! கூறு. 39
முந்துறவே பிள்ளான்முதலானோர் செய்தருளும்*
அந்தவியாக்கியைகள் அன்றாகில்* – அந்தோ
திருவாய்மொழிப்பொருளைத் தேர்ந்துரைக்கவல்ல குருஆர்?*
குருஆர்?* இக்காலம் நெஞ்சே! கூறு. 40
தெள்ளாரும் ஞானத் திருக்குருகைப்பிரான்
பிள்ளான் எதிராசர்பேரருளால் * – உள்ளாரும் அன்புடனே
அன்புடனே மாறன்மறைப்பொருளை அன்றுரைத்தது *
இன்பமிகும் ஆறாயிரம். 41
தஞ்சீரை ஞானியர்கள்தாம் புகழும் வேதாந்தி*
நஞ்சீயர்தாம் பட்டர்நல்லருளால் * – எஞ்சாதா ஆர்வமுடன்
ஆர்வமுடன் மாறன்மறைப்பொருளை ஆய்ந்துரைத்தது*
ஏரொன்பதினாயிரம். 42
நம்பிள்ளை தம்முடையநல்லருளால் ஏவியிட*
பின் பெரியவாச்சான்பிள்ளை அதனால் * – இன்பா வருபத்தி
வருபத்தி மாறன்மறைப்பொருளைச் சொன்னது*
இருபத்துநாலாயிரம். 43
**தெள்ளியதாநம்பிள்ளைசெப்பு நெறிதன்னை*
வள்ளல் வடக்குத்திருவீதிப்பிள்ளை* – இந்த
நாடறிய மாறன்மறைப்பொருளை நன்குரைத்தது*
ஈடுமுப்பத்தாறாயிரம். 44
அன்போடு அழகிய மணவாளச் சீயர் *
பின்போரும் கற்றறிந்து பேசுகைக்கா* – தம்பெரிய போதமுடன்
போதமுடன் மாறன்மறையின் பொருளுரைத்தது*
ஏதமில் பன்னீராயிரம். 45
பெரியவாச்சான்பிள்ளை பின்புள்ளவைக்கும் தெரிய*
தெரிய* வியாக்கியைகள் செய்வால்* – அரிய
அருளிச்செயற்பொருளை ஆரியர்கட்கிப்போது*
அருளிச்செயலாய்த் தறிந்து. 46
நஞ்சீயர் செய்த வியாக்கியைகள் நாலிரண்டுக்கு
எஞ்சாமையாவைக்கும் இல்லையே * – தம்சீரால்
வையகுருவின்தம்பி மன்னுமணவாளமுனி
செய்யுமவைதாமும் சில. 47
சீரார் வடக்குத்திருவீதிப்பிள்ளை * எழு
தேரார்தமிழ்வேதத்து ஈடுதனை * – தாருமென
வாங்கிமுன்நம்பிள்ளை ஈயுண்ணிமாதவர்க்குத்தாம்
தாம்கொடுத்தார்* பின்னதனைத் தான். 48
ஆங்கவர்பால்பெற்ற சிறியாழ்வான் அப்பிள்ளை*
தாம்கொடுத்தார் தம்மகனார்தம்கையில் * – பாங்குடனே
நாலூர்ப்பிள்ளைக்கு அவர்தாம் நல்லமகனார்க்கவர்தாம்*
மேலோர்க்கீந்தாரவரே மிக்கு. 49
**நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
யென்பர்* அவரவர் தம்ஏற்றத்தால் * – அன்புடையோர்
சாற்றுதிருநாமங்கள்தானென்றுநன்னெஞ்சே!*
ஏத்ததனைச் சொல்லிநீ யின்று. 50
துன்னுபுகழ்க்கந்தாடைத்தோழப்பர் தம் முகப்பால்*
என்னஉலகாரியனோ என்றுரைக்க* – பின்னை
உலகாரியன் என்னும்பேர் நம்பிள்ளைக்கோங்கி*
விலகாமல் நின்றதென்றும் மேல். 51
பின்னை வடக்குத் திருவீதிப்பிள்ளை* அன்பால்
அன்ன திருநாமத்தை யாதரித்து* – மன்னுபுகழ்
மைந்தர்க்குச் சாற்றுகையால் வந்து பரந்தது* எங்கும்
இந்தத் திருநாமம் இங்கு. 52
**அன்னபுகழ்முடும்பைஅண்ணல் உலகாசிரியன்*
இன்னருளால்செய்தகலை யாவையிலும்*- உன்னில்
திகழ்வசனபூடணத்தின்சீர்மை ஒன்றுக்கில்லை*
புகழல்ல இவ்வார்த்தை மெய் இப்போது. 53
முன்னம்குரவோர் மொழிந்த வசனங்கள் தன்னை
தன்னை*மிகக்கொண்டு கற்றோர் தம்முயிர்க்கு* – மின்னணியாச்
சேரச்சமைத்தவரே சீர் வசனபூடணம்என்
பேர்* இக்கலைக்கிட்டார் பின். 54
ஆர்வசனபூடணத்தின் ஆழ்பொருள்எல்லாமறிவார்
ஆரதுசொல்நேரில்அனுட்டிப்பார்?*- ஓரொருவர்
உண்டாகில் அத்தனை காணுள்ளமே! * எல்லார்க்கும்
அண்டாத தன்றோ வது? 55
உய்யநினைவுடையீர்! உங்களுக்குச் சொல்லுகின்றேன்*
வையகுரு முன்னம்வாய்மொழிந்த* – செய்யகலை
யாம் வசனபூடணத்தின் ஆழ்பொருளைக்கற்று* அதனுக்
காம் நிலையில் நில்லும் அறிந்து. 56
தேசிகர்பால் கேட்ட செழும் பொருளை* சிந்தைதன்னில்
மாசறவே ஊன்ற மனனஞ்செய்து* ஆசரிக்க
வல்லார்கள்தாம் வசனபூடணத்தின் வான்பொருளை
கல்லாததென்னோ கவர்ந்து. 57
சச்சம்பிரதாயம் தாமுடையோர்கேட்டக்கால்*
மெச்சும் வியாக்கியைதானுண்டாகில்* – நச்சி
அதிகரியும்நீர் வசனபூடணத்துக்கற்ற மதியுடையீர்!
மதியுடையீர்! மத்தியத்தராய். 58
சீர் வசனபூடணத்தின் செம்பொருளை* – சிந்தைதன்னால்
தேரிலுமாம் வாய்கொண்டுசெப்பிலுமாம்* – ஆரியாகாள்!
என்தனக்குநாளும் இனிதாக நின்றதையோ*
உந்தமக் கெவ்வின்பமுளதாம். 59
தன் குருவின் தாளிணைகள் தன்னில் அன்பொன்றில்லாதார்*
அன்பு தன்பால் செய்தாலும் அம்புயைகோன்*- இன்பமிகு
விண்ணாடுதானளிக்க வேண்டியிரான்* ஆதலால்
நண்ணாரவர்கள்திருநாடு. 60
**ஞானம் அனுட்டானமிவை நன்றாகவே உடையனான*
குருவை அடைந்தக்கால்* – மாநிலத்தீர்!
தேனார்கமலத் திருமாமகள்கொழுநன்*
தானே வைகுந்தம் தரும். 61
உய்ய நினைவுண்டாகில் உங்குருக்கள் தம் பதத்தே வையும்
வையும்* அன்புதன்னை இந்தமாநிலத்தீர்!* – மெய்யுரைக்கேன்
பையரவில்மாயன்பரமபதம் உங்களுக்காம்*
கையிலங்கு நெல்லிக்கனி. 62
ஆசாரியன்செய்த உபகாரமானவது*
தூய்தாக நெஞ்சுதன்னில் தோன்றுமேல்* – தேசாந்தரத்திலிருக்க
தரத்திலிருக்க மனந்தான் பொருந்தமாட்டாது*
இருத்தலினி ஏதறியோம் யாம். 63
தன் ஆரியனுக்குத் தான் அடிமை செய்வது* அவன்
இந்நாடு தன்னில் இருக்கும் நாள் * – அந்நேர்
அறிந்தும் அதிலாசையின்றி ஆசாரியனைப்
பிரிந்திருப்பாரார்?* மனமே! பேசு. 64
ஆசாரியன் சிச்சன் ஆருயிரைப் பேணுமவன்*
தேசாரும் சிச்சனவன் சீர்வடிவை* – ஆசையுடன்
நோக்கும் அவனென்னும் நுண்ணறிவைக் கேட்டுவைத்தும்*
ஆர்க்கும் அந்நேர் நிற்கை அரிதாம். 65
பின்பழகராம்பெருமாள்சீயர் * பெருந்திவத்தில்
அன்பதுவுமற்று மிக்க ஆசையினால் * – நம்பிள்ளைக்
கானவடிமைகள் செய் அந்நிலையை நன்னெஞ்சே!*
ஊனமற வெப்பொழுதுமோர். 66
ஆசாரியர்கள் அனைவருமுன்னாசரித்த*
ஆசாரந் தன்னை அறியாதார்* – பேசுகின்ற
வார்த்தைகளைக்கேட்டு மருளாதே* பூருவர்கள்
சீர்த்த நிலைதன்னை நெஞ்சே! சேர். 67
நாத்திகரும் நற்கலையின்நன்னெறிசேராத்திகரும்
ஆத்திகநாத்திகருமாம் இவரை* – ஓர்த்து நெஞ்சே!
முன்னவரும்பின்னவரும் மூர்க்கரெனவிட்டு* நடுச்
சொன்னவரை நாளும்தொடர். 68
நல்லமணமுள்ளதொன்றை நண்ணியிருப்பதற்கு*
நல்லமணமுண்டாம் நயமதுபோல்* – நல்ல
குணமுடையோர்தங்களுடன் கூடியிருப்பார்க்கு*
குணமதுவேயாம் சேர்த்தி கொண்டு. 69
தீய கந்தமுள்ளதொன்றைச் சேர்ந்திருப்பதொன்றுக்கு*
தீயகந்தமேறும் திறமதுபோல்* – தீய
குணமுடையோர்தங்களுடன் கூடியிருப்பார்க்கு*
குணமதுவேயாம் செறிவுகொண்டு 70
**முன்னோர்மொழிந்த முறைதப்பாமல்கேட்டு
பின்னோர்ந்து தாமதனைப் பேசாதே* – தந்நெஞ்சில்
தோற்றினதேசொல்லி இதுசுத்தஉபதேசவர
வாற்றதென்பர்* மூர்க்கராவார். 71
**பூருவாசாரியர்கள் போதமனுட்டானங்கள்*
கூறுவார் வார்த்தைகளைக் கொண்டு நீர் – தேறி*
இருள்தருமாஞாலத்தே இன்பமுற்று வாழும்
தெருள்தரு மாதேசிகனைச் சேர்ந்து! 72
**இந்த உபதேசரத்தினமாலைதன்னை*
சிந்தைதன்னில் நாளும்சிந்திப்பார் * – எந்தை
எதிராசர் இன்னருளுக்கென்றும் இலக்காகி*
சதிராக வாழ்ந்திடுவர் தாம். 73
(எறும்பியப்பா அருளிச்செய்தது )
மன்னுயிர்காள் இங்கே! மணவாளமாமுனிவன்*
பொன்னடியாம் செங்கமலப்போதுகளை* – உன்னிச்
சிரத்தாலேதீண்டில் அமானவனும்நம்மை*
கரத்தாலேதீண்டல் கடன். 74
உபதேசரத்தினமாலை முற்றும்
மணவாளமாமுனிகள் திருவடிகளே சரணம்.