சதுர்த்த ப்ரகரணம்
அர்ச்சிராதி சதுர்த்த ப்ரகரணம் (திருவாய் 4.5.1) ஏழுலகும் தனிக்கோல் செல்ல, (திருவாய் 5.5.10) குழுமித்தேவர் குழாங்கள் கைதொழ எழுந்தருளியிருக்கிற ஸ்ரீவைகுண்டநாதனை (திருவாய் 5.9.6) “காண்பதெஞ்ஞான்று கொலோ” (பெரிய திரு 4.9.7) “காட்டிரானீர்” என்கிற இழவுதீர, 1. “த்ருஷ்ட ஏவ ஹி நஶ்ஶோகம்” என்று இவன் மநோரதி,த்துக்கொண்டு, சென்றபடியே கண்ணாரக்கண்டு, 2. “ஸமஸ்த பரிவாராய ஸ்ரீமதே நாராயணாய நம:” என்று ஹர்ஷபரவஶனாய் விழுந்து எழுந்திருந்து, பெரிய ப்ரீதியோடேசென்று, பாதபீடத்திலே அடியிட்டு திவ்யஸிம்ஹாஸநத் திலேயேற, அவனும் இவனைக்கண்டு , 3. […]
த்ருதீயப்ரகரணம்
அர்ச்சிராதி த்ருதீயப்ரகரணம் உபயவிபூதியும் தொழிலாக வகுப்புண்டு, ஸர்வாஶ்சர்யமயமான (திருப்பாவை 23) கோப்புடைய சீரிய சிங்காசனத்திலே பன்னிரண்டி தழாய், நாநாஶக்திமயமான திவ்ய கமலமாய், அதில் திவ்ய கர்ணிகையிலே புஷ்ப ஸஞ்சய விசித்ரமான திவ்யயோகபர்யங்க மாய், அதின்மேலே அநேகமாயிரம் சந்த்ரர்களை உருக்கிவார்த்தாற் போலே குளிர்ந்த புகரையுடைத்தான திருமேனியையுடையனாய், கல்யாணகுணங்களுக்கு அந்தமில்லாமையாலும் ஸர்வவித கைங் கர்யத்திலும் அதிக்ருதனாய், கைங்கரியபரர்க்கெல்லாம் படிமாவா யிருக்கையாலும் அனந்தனென்றும் ஶேஷனென்றும் திருநாமத்தை யுடையனாய், பகவதநுபவத்துக்குப் போக்குவீடாகப் பல வாய்த் தலைகளையுமுடையனாய், விஜ்ஞாநபலங்களுக்கும் ஶைத்ய மார்த் தவ ஸௌரப்யாதி, […]
த்விதீயப்ரகரணம்
அர்ச்சிராதி த்விதீயப்ரகரணம் அதில் முற்பட அர்ச்சிஸ்ஸைக்கிட்டி, அவன் சிறிதிடம் வழிநடத்த, பின்பு அஹஸ்ஸையும், ஶுக்லபக்ஷாபிமாநியையும், உத்தராயணாபி மாநியையும், ஸம்வத்ஸராபிமாநியையும், வாயுவையுங் கிட்டி, அவர்கள் வழிநடத்த, 1. ப்ரவிஶ்ய ச ஸஹஸ்ராம்ஶும்’ (பெரிய திருமடல் 16) ‘மன்னுங்கடுங்கதிரோன் மண்டலத்தினன்னடுவுள்” என்கிறபடியே, ஹிரண்மயமாய், காலசக்ரப்ரவர்த்தகமான (சிறிய திருமடல் 7) தேரார் நிறைகதிரோன் மண்டலத்திலே, எதிர்விழிக்க வொண்ணாதபடி நிரவதிகதேஜஸ்ஸோடே எதிரே ஒரு ஆதித்யன் செல்லுமாபோலே சென்று, அவன் (சிறிய திருமடல் 7) மண்டலத்தைக் கீண்டுபுக்கு அவ்வருகேபோய், 2. “க்ரமாச்சந்த்ரமஸம் ப்ராப்ய” என்கிறபடியே […]
ப்ரதமப்ரகரணம்
பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த அர்ச்சிராதி தனியன் (கலித்துறை) போர்மண்டலஞ்சங்கு தண்டுவில்வாள்புக ராழிவெய்யோன் கார்மண்டலஞ்சென்று காண்பார்தமக்குக் கதிரொளியோன் ஏர்மண்டலந்தன்னை யெய்தும்வழியை யினிதுரைத்தான் பேர்மண்டலகுரு வென்னு முடும்பை பிறந்தவனே. ப்ரதமப்ரகரணம் ஶ்ரிய:பதியான ஸர்வேஸ்வரனுக்கு விபூதித்வயமும் ஶேஷமா யிருக்கும். அதில் போகவிபூதியிலுள்ளார் (திருவாய் 4.9.10) “ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப” என்கிறபடியே அவனுடைய செங்கோலே ஏகாதபத்ரமாக நடக்கும்படி அவனுடையஅபிமாநத்திலே அந்தர்பவித்துப் போருவர்கள், லீலா விபூதியிலுள்ளார். அவர்களைப்போலே சந்தாநுவர்த்திகளன்றிக்கே ஸங்கல்பாநுவிதாயிகளாய், 1. “நம இத்யேவ வாதி, ந:” என்கிறதுக்கு […]