பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த
அர்ச்சிராதி
தனியன்
(கலித்துறை)
போர்மண்டலஞ்சங்கு தண்டுவில்வாள்புக ராழிவெய்யோன்
கார்மண்டலஞ்சென்று காண்பார்தமக்குக் கதிரொளியோன்
ஏர்மண்டலந்தன்னை யெய்தும்வழியை யினிதுரைத்தான்
பேர்மண்டலகுரு வென்னு முடும்பை பிறந்தவனே.
ப்ரதமப்ரகரணம்
ஶ்ரிய:பதியான ஸர்வேஸ்வரனுக்கு விபூதித்வயமும் ஶேஷமா யிருக்கும். அதில் போகவிபூதியிலுள்ளார் (திருவாய் 4.9.10) “ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப” என்கிறபடியே அவனுடைய செங்கோலே ஏகாதபத்ரமாக நடக்கும்படி அவனுடையஅபிமாநத்திலே அந்தர்பவித்துப் போருவர்கள், லீலா விபூதியிலுள்ளார். அவர்களைப்போலே சந்தாநுவர்த்திகளன்றிக்கே ஸங்கல்பாநுவிதாயிகளாய், 1. “நம இத்யேவ வாதி, ந:” என்கிறதுக்கு எதிராக 2. “ந நமேயம்” 3. “ஈஸ்வரோ ஹம்” என்கிறபடியே, மனை யடைவே, (திருவாய் 2.9.9) “யானேயென்றனதே” என்று, அவர்கள் (திருவாய் 8.3.6) “பணியா அமரரா”யிருக்கும் இருப்புக்கெதிராக (திருவாய் 4.10.7) “மற்றோர் தெய்வம்பாடி ஆடிப்பணிந்து’, (திருவாய் 2.9.8) ‘மிக்கார் வேதவிமலர்” என்கிறபடியே, அவர்களைப்போலே (திருவாய் 3.7.4) “பெருமக்க”ளாயிராதே, (நான் திருவ 6) “சிறியார் சிவப் பட்டார்’ என்கிறபடியே சிறியராய், (திருவாய் 1.1.1) ”அயர்வறும் அமரர்கள்” என்கிறபடியே அவர்களைப்போலே திவ்யஜ்ஞாநோப பந்நராயிராதே (திருமாலை 13) ”அறிவிலாமனிச”ராய், (திருவாய் 2.3.10) “ஒளிக்கொண்ட சோதிக்”கெதிராக, (திருவிருத்தம் 1) அழுக்குடம்பைப் பரிக்ரஹித்து, 4. “விபந்யவ:” (திருவாய் 2.6.3) “விண்ணோர் பரவுந் தலைமகன்” என்கிறதுக்கெதிராக 1 (பெரிய திரு 1.1.7) “உலகில் கண்டவா தொண்டரைப்பாடி”, (திருப்பாவை 29) “உனக்கே நாம் ஆட்செய்வோம்” என்கிறபடியே அவனுக்கு ஆட்செய்யாதே, (பெரு.திரு 3-3) “மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்து”, (திருமாலை 5) “தொண்டுபூண்டமுதமுண்ணாதே”, (பெரிய திரு 1.3.5) “பாவையர் வாயமுதமுண்டு, 5.”ஸ ஏகதாபவதி” என்கிறதுக்கெதிராக (பெரியதிரு 1.9.4) குலந்தான் எத்தனையும் பிறந்து, (திருவாய் 8.3.7) “உருவார் சக்கரஞ்சங்கு சுமந்து இங்கவனோடு ஒருபாடுழலாதே (திருவாய் 3.2.1) ஆக்கையின்வழியுழன்று, 6. “ஏதத், வ்ரதம் மம” என்கிற வனுடைய வ்ரதத்துக்கு எதிராக (திருவிருத்தம் 95) ஆதானும்பற்றி நீங்கும் விரதத்தை ஏறிட்டுக்கொண்டு, (பெரிய திரு 1.1.1) “அவர் தரும் கலவியே கருதி ஓடினேன” என்கிறபடியே – (திருநெடுந் 6) அலம்புரிந்த நெடுந்தடக்கைக்கும் எட்டாதபடி கைகழியவோடி, (திருவாய் 3.2.6) அற்பசாரங்களவை சுவைத்தகன்று போரக்கடவராயிருப்பர்கள். இவர்கள் தண்மையைப் பார்த்துக் கைவிடாதே ஸ்வாபாவிக ஸம்பந்தமே ஹேதுவாக விடமாட்டாதே, (திருவாய் 2-7-6) எதிர்சூழல் புக்குத்திரிகிற ஸர்வபூத ஸுஹ்நத்தான ஸர்வேஶ்வரனுடைய யத்நவிஶேஷம் ஒருநாள் வரையிலே ஓர் அவகாஶத்திலே பலித்து அத்வேஷாபி ஸந்தியையுடையனாய், மோக்ஷ ஸமீக்ஷாயுக்தனாய், ப்ரவ்ருத்தமான வைராக்யனாய், விவேகாபிநிவேஶியாய், ஸதாசார்ய ஸமாஶ்ரயணம் பண்ணிச் (திருவாய் 5.7.5) செய்த வேள்வியனாய், ஸம்ஸாரத்தினுடைய கொடுமையை அநுஸந்தித்து, ஸர்ப்பாஸ்யகத மான மண்டூகம்போலேயும், காட்டுத்தீ கதுவின மான்பேடை போலேயும், (பெரிய திரு 11.8.4) இருபாடெரி கொள்ளியினுள் எறும்பு போலேயும், (திருவாய் 5.1.9) ஆவாரார் துணையென்றலை நீர்க்கடலுள் அழுந்தும் நாவாய்போலேயும், (பெரியதிரு 11.8.2) ஆற்றத்துளங்கி, (திருவாய் 6.9.9) “பல நீ காட்டிப் படுப்பாயோ” (திருவாய் 6.9.8) “இன்னங்கெடுப்பாயோ”, (திருவாய் 7.1.10) “ஐவர்திசை திசை வலித் தெற்றுகின்றனர்” (பெரிய திரு 7.7.9) “கூறைசோறிவைதா வென்று குமைத்துப்போகார்” என்று இந்த்ரியங்களினுடைய கொடுமையை நினைத்துக் கூப்பிட்டு, (திருவாய் 4.9.1) “எண்ணாராத் துயர்விளைக்கு மிவையென்ன உலகியற்கை”, (திருவாய் 4.9.3) “உயிர் மாய்தல் கண்டாற்றேன்” (திருவாசிரி 6) “ஓஓ உலகினதியல்வே” என்று ஸம்ஸாரிகள் இழவுக்கு நொந்தாற்றமாட்டாதே, (பெரு திரு 3.8) “பேயரே எனக்கு யாவரும்” (பெரியாழ் திரு 5.1.5) “நாட்டுமானிடத்தோடு எனக்கரிது” என்றும் (திருவாய் 10.6.2) “நாட்டாரோடியல்வொழிந்து” என்றும் சொல்லுகிறபடியே, பிராட்டிக்கு ராக்ஷஸிகளோட்டை ஸஹவாஸம் அஸஹ்யமானாற்போலே (பெரு திரு 3.1) “மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக்கொண்டு” (பெரு திரு 3.4) “உண்டியே யுடையே உகந்தோடு”கிற ஶௌரிசிந்தா விமுகரான ஸம்ஸாரிக ளோட்டை ஸஹவாஸம் துஸ்ஸஹமாய் (திருவிருத்தம் 1) “இந்நின்ற நீர்மை இனியாமுறாமை” (திருவாய் 3.2.9) “எங்கினித் தலைப்பெய்வன்” (திருவாய் 9.8.4) “நாளேலறியேன்” (பெரிய திரு 6.3.8) “வானுலகம் தெளிந்தே என்றெய்துவது” (திருவாய் 5.8.7) “தரியேன் இனி” (திருவாய் 6.9.9) “கூவிக்கொள்ளுங்காலமின்னுங் குறுகாதோ” என்று பகவதநு பவம் பெறாமையாலே பெருவிடாய்ப் பட்டு (திருவாய் 6.9.6) “தீயோடுடன் சேர்மெழுகாய்” (திருவாய் 8.5.2) “காணவாராய்” என்றென்று கண்ணும் வாயும் துவர்ந்து காணப் பெறாமையாலே (திருவாய் 10.3.1) “ஒருபகலாயிர மூழியாய்” 1.க்ருத க்ருத்யா: ப்ரதீக்ஷந்தே என்கிறபடியே (திருவாய் 1.2.9) “ஆக்கை விடும் பொழுதை” மநோரதித்து, மஹிஷியினுடைய உச்சிஷ்டத்தை விரும்பும் ராஜபுத்ரனைப்போலே தான் த்யஜித்த தேஹத்தை விரும்புகிற ஈஶ்வரனை (திருவாய் 10.7.10) “மங்கவொட்டு” என்றபே க்ஷித்து, (திருவாய் 10.10.6) ‘உண்டிட்டாயினி யுண்டொழியாய்” (திருவாய் 10.10.8) “முற்றக்கரந்தொளித்தாய்’ (திருவாய் 10.10.2) “திருவாணை நின்னாணை கண்டாய்” (திருவாய் 10.10.1) “இனி நான் போக லொட்டேன்” என்று தடுத்தும், வளைத்தும் பெறவேண்டும்படி பரமபக்திதலையெடுத்தல், அவ்வளவன்றிக்கே உக்திமாத்ரத்திலே அந்வயித்தல், (நாச்சி திரு 10.4) “நானும் பிறந்தமை பொய்யன்றே” (நாச்சி திரு 10.10) ”தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டும்” என்று சொல்லுகிறபடியே (நான் திரு 89) பழுதாகாத வழியையறிந்து (நான் திரு 18) வேறாகவேத்தியிருக்குமவனைப் பற்றுதல் செய்து, (திருவாய் 7.5.11) தெளிவுற்று வீவின்றி நிற்குமவனுக்கு, ஶரீராவஸாந காலத்திலே, ஈஶ்வரன் தன் திருவடிகளிலே இவன் தலைசாய்த்தவன்று தொடங்கி 1. “ருணம் ப்ரவ்ருத்தம்”, (பெரிய திருவ 53) ”உன்னடியார்க்கென் செய்வனென்றே யிருத்தி நீ” என்கிறபடியே பெருந் தனிசாளனாய், ப்ரத்யுபகாரந்தேடித் தடுமாறி, (திருவாய் 3.5.11) திருத்திப் பணிகொள்ள நினைத்து, பல்வாங்கின பாம்புபோலே ஸம்ஸாரம் மறுவலிடாதபடி அடியறுக்கச் செய்தேயும் ‘பிணமெழுந்து கடிக்கிறதோ’ என்று அதிஶங்கைபண்ணி, அமர்ந்த நிலத்திலே கொண்டுபோகையிலே விரைந்து, ‘இவன் விடாய் குளப்படி’ என்னும்படி கடல்போலே (திருவாய் 9.6.10) முற்றப்பருக வேண்டும்படி பெருவிடாயையுடைய னாய், (திருவாய் 10.7.8) ஒருமாநொடியும் பிரியாதே, சக்ரவர்த்தி, பெருமாள் திருவபிஷேகத்துக்கு, வஸிஷ்ட வாமதேவாதிகளை யழைத்துப் பாரித்தாற் போலே, நித்யஸூரிகளை யழைப்பித்து வழியைக்கோடிப்பிப்பதாய்க் கொண்டு, 2. “அலங்கார விதிம் க்ருத்ஸ்நம் காரயாமாஸ வேஶ்மநி” என்கிறபடியே (திருவாய் 1.5.10) வீடுதிருத்தி, அநாதிகாலார்ஜிதங்களாய் இவன் ஆசார்ய ஸமாஶ்ரய ணம் பண்ணின அன்றே தொடங்கி (பெரியதிருவ 26) அருளென்னுந் தண்டாலடியுண்டு மூக்கும் (பெரியதிருவ 69) முகமுஞ் சிதைந்து, (பெரிய திருவ 30) பண்டுபோலே வீற்றிருக்கை தவிர்ந்து மடியடக்கி நில்லாதே சரக்கு வாங்கி, (பெரிய திருவ 54) “மருங்குங்கண்டிலமால்” என்னும்படி யொளித்துவர்த்திக்கிற பூர்வாகங்களையும், உத்தராகங்களையும், அநுகூலர் விஷயமாகவும், ப்ரதிகூலர் விஷயமாகவும், வருணனைக் குறித்துத் தொடுத்த அம்பை மருகாந்தாரத்திலே விட்டாற்போலே அசல் பிளந்தேறிட்டு, இவனோடு ஸம்பந்தமுடையராய் நரகாநுபவம் பண்ணுகிறவர்களை 3. “ஏதத்ஸம்பந்தி, நஶ்சாந்யே” என்கிறபடியே ஸ்வர்கஸ்தராம்படி நினைப்பிட்டு, 4. ”ஊட: பஞ்சாத்மநா தேந தார்க்ஷ்யரூபேண” (திருவாய் 10.6.5) “செழும்பறவை தானேறித் திரிவான்” என்று சொல்லுகிறபடியே (திருவாய் 1.4.6) அருளாழிப்புட் கடவீர் என்று இவனாசைப்பட்டபடியே (பெரிய திரு 8.1.8) கொற்றப் புள்ளொன்றேறி வந்து தோன்றி, (பெரிய திரு 9.2.8) மஞ்சுயர் பொன் மலைமேலெழுந்த மாமுகில்போன்ற வடிவையநுபவிப்பித்து, ஆதி வாஹிகரை யழைத்தருளி, இவனை ஸத்கரிக்கும் க்ரமத்திலே ஸத்கரிக்க அருளிச்செய்ய, பின்பு 1. “இந்த்ரியைர்மநஸி ஸம்பத்ய மாநை:”, 2.”வாங்மநஸி ஸம்பத்யதே மந: ப்ராணே ப்ராணஸ் தேஜஸி தேஜ: பரஸ்யாம் தேவதாயாம்” என்கிறபடியே, பாஹ்ய கரணங்கள் அந்த:கரணத்திலே சேர்ந்து, அந்த:கரணம் ப்ராணனோடே சேர்ந்து, ப்ராணன் இச்சேதனோடே ஸம்பந்தித்து, இவன் பூத ஸூக்ஷ்ம விஶிஷ்டனாய்க்கொண்டு பரமாத்மாவின் பக்கலிலே சேரும். பின்பு, கர்மகாலத்திலே ஆதித்யகிரணத்தாலே தப்தனானவன் நிழல்மரத்தைப்பற்றி இளைப்பாறுமாபோலே, ஸம்ஸாரது:க்கார்க்க தாபதப்தனான இவன் வாஸுதேவ தருச்சாயையைக்கிட்டி விஶ்ர மித்து, திருக்கோவலூருக்குப் போம்போது திருமங்கையாழ்வாருக்கு (திருநெடுந் 6) “தானுகந்த வூரெல்லாந் தன்தாள்பாடி” என்கிறபடியே திருவுலகளந்தருளின திருவடிகளே பாதேயமாமாபோலே, 3. ” ப்ராண ப்ரயாணபாதேயம்” 4. “பாதே,யம் புண்டரீகாக்ஷ நாமஸங்கீர்த்த நாம்ருதம்” என்கிறபடியே த்வயவசநமே பாதேயமாகவும், 5. ஏதேந ப்ரதி பத்யமாநா:”, 6. தேவயாநபதாஸ்ஸர்வே முக்தி மார்க்காபி லாஷிண:” என்கிறபடியே அர்ச்சிராதி மார்க்கமே (பெரிய திரு 10.2.5) பெருவழியாகவும், (பெரிய திரு 7.10.5) அண்டத்தப்புறத் துய்த்திடுமை யனாய், ஆப்ததமனாய், (திருவாய் 10.1.4) படர்கொள் பாம்பணைப்பள்ளி கொண்ட (திருவாய் 10.1.1 ) சுரிகுழற்கமலக்கட் கனிவாய்க்காளமேக மான (பெரிய திரு 3.7.6) அரங்கத்துறையுமின்துணைவனே வழித்துணையாகவும், விரஜாதீரமும் தில்யவ்ருக்ஷமும் ஐரம் மதஹ்ரத தடமுமே விஶ்ரமஸ்தலமாகவும், திரு (திருவாய் 10.9.11) மாமணிமண்டபமே புகலிடமாகவும், அர்ச்சிராதி, புருஷர்களே உசாத் துணையாகவும், (திருவாய் 10.9.1) சூழ்விசும்பணி முகிலினுடைய முழக்கமே ப்ரயாண படஹத்வநியாகவுமமைந்து (திருவாய் 3.9.3) வழியைத்தரும் நங்கள் வானவரீசனான ஹார்த்தன் (திருவாய் 8.10.4) வழிபட்டோடவருள, (திருவாய் 10.6.5) வானேற வழிபெற்று, போக்கிலே யொருப்பட்டு ப்ரீத்யதிஶயத்தாலே, அநாதிகாலம் தன்னைக்குடிமை கொண்டுபோத்த ஸம்ஸாரத்தை (திருவாய் 10.6.5) “நரகத்தை நகு நெஞ்சே” என்கிறபடியே புரிந்து பார்த்துச்சிரித்து, (திருவாய் 9.3.7) மாக வைகுந்தங் காண்பதற்குப் பண்டேயுண்டான ஆசை கொந்தளித்து மேலேமேலே பெருக, பிராட்டியும் ஸ்ரீவிபீஷணப்பெருமாளும் இலங்கையினின்றும் புறப்பட்டாற்போலே ஹ்ருதயகமலத்தினின்றும் புறப்பட்டு, 1.”ஶதம் சைகா ச ஹ்ருதயஸ்ய நாட்ய:” என்கிறபடியே – ஹ்ருதயத்தைப் பற்றிக்கிடக்கிற நூற்றொரு நாடியிலும் ஸுஷும்கை என்று பேரையுடைத்தான மூர்த்தந்யநாடி,யாலே வித்யாமாஹாத்ம் யத்தாலும் தேவயாநாநுஸ்ம்ருதியாலும் ப்ரஸந்நனான ஹார்த்தன் கைவிளக்குப் பிடித்துக்கொண்டுபோகப் போய், ஶிர:கபாலத்தை பேதித்து, 2. “தா ஆஸு நாடி, ஷுஸ்ருப்தா: ஆப்யோ நாடீப்ய: ப்ரதா யந்தே தேSமுஷ்மிந்நாதித்யே ஸ்ருப்தா:…அத ஏதைரேவ ரஶ்மிபி ரூர்த்வம் ஆக்ரமதே” என்கிறபடியே அந்நாடியோடே ஸம்பந்தித்து, ஆதித்யாஶ்மியை அநுஸரித்துக்கொண்டு, 3. “ஓங்காராதமாருஹ்ய” என்கிறபடியே ப்ரணவமாகிற தேரிலேயேறி, மநஸ்ஸு ஸாரத்யம் பண்ணப்போம்போது, (திருவாய் 5.1.1) கையார் சக்கரத்தினின்று எல்லாவடிவும் புதுக்கணிக்குமாபோலே உபயவிபூதியும் புதுக் கணித்து, கடல் தன் காம்பீர்யமெல்லாம் குலைந்து, கீழ்மண் கொண்டு மேல்மண்ணெறிந்து ஸஸம்ப்ரம ந்ருத்தம் பண்ணியார்க்க, உபரிதநலோகங்களிலுள்ளார்களடைய உபஹாரபாணிகளாய், (திருவாய் 10.9.2) நெடுவரைத் தோரணம் நிரைத்து, ஆகாஶமெங்கும் பூர்ணகும்பங்களாலே பூர்ணமாக்கி (திருவாய் 10.9.3) தூபநன்மலர் மழைபொழிந்து, ‘இவனொருகால் தங்கிப் போமோ’ என்கிற நோயாசையாலே (திருவாய் 10.9.4) எதிரெதிரிமையவரிருப்பிடம் வகுக்க, லோகங்களெல்லாமதிரும்படி கடலிரைத்தாற்போலே வாத் யங்கள் எங்கும் முழங்க, வழியிலுள்ளார்களடைய (திருவாய் 10.9.5) ”போதுமினெமதிடம் புகுதுக” என்கிறபடியே தந்தாம் ஸ்தாநங்களை யும் ஐஶ்வர்யங்களையும் ஸமர்ப்பிக்க, சிலர் (திருவாய் 10.9.5) கீதங்கள் பாட, சிலர் யாகாதிஸுக்ருத பலங்களை ஸமர்ப்பிக்க, வேறே சிலர் தூபதீபாதிகளாலே அர்ச்சிக்க, சிலர் (திருவாய் 10.9.6) காளங்கள் வலம் புரி கலந்தெங்கு மாரவாரிப்ப, (திருவாய் 1.9.6) வாளொண்கண் மடந்தை யரான ஆதிவாஹிகமஹிஷிகள், ‘இது அராஜகமாய்க் கிடக்கக் கடவதோ, இத்தையாள வேணும்’ என்று மங்களாஶாஸநம்பண்ண, (திருவாய் 10.9.7) மருதரும் வசுக்களும் இவன் விரைந்து போனால் ஈஶ்வரன் நமக்குக் கையடைப்பாக்கின நிலங்கழிந்ததென்றிராதே, லோகாந்தரங்களிலும் தொடர்ந்துசென்று இவன் செவிப்படும்படி ஸ்தோத்ரம்பண்ண, (பெரிய திரு 3.7.8) “மற்றெல்லாங் கைதொழப் போய்” என்கிறபடியே பெரிய ஸத்காரத்தோடே போம்போது, 1.”அர்ச்சிஷமேவாபி, ஸம்பவந்தி அர்ச்சிஷோSஹ அஹ்ந ஆபூர்ய மாணபக்ஷம்”, 2. “அக்நிர்ஜ்யோதிரஹஶ்ஶுக்லஷ்ஷண்மாஸா உத்தராயணம்” என்று சாந்தோக்ய வாஜஸநேய கௌஷீதகீ ப்ரப்ருதி களிற் சொல்லுகிறபடியே அர்ச்சிராதிபுருஷர்கள் வழிநடத்தப் போம்,
பிள்ளைலோகாசார்யர் திருவடிகளே ஶரணம்.