நிகமநப்படி
பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த நிகமநப்படி திருமந்த்ரப்ரகரணம் ஸ்ரீமத்க்ருஷ்ணஸமாஹ்வாய நமோ யாமுநஸூநவே | யத்கடாக்ஷைகலக்ஷ்யாணாம் ஸுலபஶ் ஸ்ரீதரஸ் ஸதா || திருமந்திரம் எட்டு திருவக்ஷரமாய், மூன்று பதமாயிருக்கும். எங்கனேயென்னில்: “ஓம்” என்றும், “நம:” என்றும், “நாராயணாய” என்றும் மூன்று பதமாயிருக்கும். அதில் முதல் பதம் ஏகாக்ஷரமான பரணவம். இது அகாரமென்றும், உகாரமென்றும், மகாரமென்றும் மூன்று திருவக்ஷரமாய் மூன்று பதமாயிருக்கும். இரண்டாம் பதமான நமஸ்ஸு, ‘ந’ என்றும், ‘ம” என்றும் இரண்டு திருவக்ஷரமாய் இரண்டு பதமாயிருக்கும். மூன்றாம் பதமான ‘நாராயணாய’ பதம் […]