பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த
நிகமநப்படி
திருமந்த்ரப்ரகரணம்
ஸ்ரீமத்க்ருஷ்ணஸமாஹ்வாய நமோ யாமுநஸூநவே |
யத்கடாக்ஷைகலக்ஷ்யாணாம் ஸுலபஶ் ஸ்ரீதரஸ் ஸதா ||
திருமந்திரம் எட்டு திருவக்ஷரமாய், மூன்று பதமாயிருக்கும். எங்கனேயென்னில்: “ஓம்” என்றும், “நம:” என்றும், “நாராயணாய” என்றும் மூன்று பதமாயிருக்கும். அதில் முதல் பதம் ஏகாக்ஷரமான பரணவம். இது அகாரமென்றும், உகாரமென்றும், மகாரமென்றும் மூன்று திருவக்ஷரமாய் மூன்று பதமாயிருக்கும். இரண்டாம் பதமான நமஸ்ஸு, ‘ந’ என்றும், ‘ம” என்றும் இரண்டு திருவக்ஷரமாய் இரண்டு பதமாயிருக்கும். மூன்றாம் பதமான ‘நாராயணாய’ பதம் அஞ்சு திருவக்ஷரமாய், ‘நார’ என்றும், ‘அயந’ என்றும் இரண்டு பதமாய், மேல் ‘ஆய’ வென்று சதூர்த்தியாயிருக்கும். எம்பெருமா னுடைய ஸர்வரக்ஷகத்வமும், ஸமஸ்தகல்யாண குணாத்மகத்வ மும், ஸர்வஶேஷித்வமும், ஶ்ரிய:பதித்வமும் இவை அகாரார்த்தம், அந்யஶேஷத்வநிவ்ருத்தியும், பகவதநந்யார்ஹ ஶேஷத்வமும் இவை உகாரார்த்தம், ஆத்மாவினுடைய ஜ்ஞாநாநந்தத்வமும், ஜ்ஞாநகுண கத்வமும், நித்யத்வமும், அணுத்வமும், ஏகரூபத்வமும், ஸ்வஸ்மை ஸ்வயம்ப்ரகாஶத்வமும், ப்ரக்ருதே:பரத்வமும் இவை மகாரார்த்தம். ஸ்வாஹங்காரமமகார நிவ்ருத்தியும், நிவ்ருத்தமான ஸ்வரூபத்தி னுடைய அத்யந்தபாரதந்தர்யமும், பாரதந்தர்யபராகாஷ்டையான ததீயஶேஷத்வமும், பரதந்தரனுக்கு அருரூபமான உபாயத்வமும் இவை நமஶ்ஶப்தார்த்தம். சேதநாசேதநங்களினுடைய நித்யத்வமும், அவற்றினுடைய ஸமூஹத்வமும், ஸமூஹாஸங்க்யாதத்வமும் இவை நாரஶப்தார்த்தம், ஈஶ்வரனுடைய தாரகத்வமும், வயாபகத்வ மும், நியந்த்ருத்வமும், ஸர்வவிதபந்துத்வமும், ப்ராப்யத்வமும், ப்ராபகத்வமும், ஸகலஜகத்காரணத்வமும் இவை அயநஶப்தார்த்தம். நித்யகைங்கர்ய ப்ரார்த்தனை ஆயஶப்தார்த்தம். எம்பெருமானை யொழிய ரக்ஷகாந்தர ப்ரதிபத்தி நடையாடிற்றாகில் அகாரார்த்தம் நெஞ்சில் பட்டதில்லையாகக்கடவது. அந்யஶேஷத்வம் நடையாடிற் றாகில் உகாரார்த்தம் நெஞ்சில் பட்டதில்லையாகக்கடவது. அநாத்மா வான தேஹத்தில் ஆதமபுத்தி, நடையாடிற்றாகில் மகாரார்த்தம் நெஞ்சில் பட்டதில்லையாகக் கடவது. ஸ்வஸ்வாதந்தர்யமும், ஸ்வ ரக்ஷணப்ரதிபத்தியும், ஸ்ரீவைஷ்ணவஸமபுத்தியும், உபாயாந்தரமும் நடையாடிற்றாகில் நமஶ்ஶப்தார்த்தம் நெஞ்சில் பட்டதில்லையாகக் கடவது. ஈஶ்வரஶரீரிபூதரான சேதநாசேதநங்களோடே ராகத்வேஷம் நடையாடிற்றாகில் நாரஶப்தார்த்தம் நெஞ்சில் பட்டதில்லையாகக் கடவது. அபந்துக்கள் பக்கலிலே பந்துத்வப்ரதிபத்தி நடையாடிற் றாகில் அயநஶப்தார்த்தம் நெஞ்சில் பட்டதில்லையாகக் கடவது, அபோக்யமான ஶப்தாதி, விஷயங்களிலே போக்யதாபுத்தி, நடை யாடிற்றாகில் ஆயஶப்தார்த்தம் நெஞ்சில் பட்டதில்லையாகக் கடவது. திருமந்த்ரத்துக்கு தாத்பர்யார்த்மேது? வாக்யார்த்தமேது? ப்ரதாநார்த்தமேது? அநுஸந்தாநார்த்தமேது? என்னில்: தாத்பர்யார்த் தம்:- ஸகலவேதஶாஸ்த்ரருசி பரிக்ருஹீதம்: வாக்யார்த்தம்:-ப்ராப்ய ஸ்வரூபநிரூபணம். ப்ரதாநார்த்தம்:- ஆத்மஸ்வரூபநிருபணம். அநுஸந்தாநார்த்தம் ஸம்பந்தாநுஸந்தாநம். ஸம்பந்தமேதென்னில்:- அகாரபதத்தாலே பிதாபுத்ர ஸம்பந்தம் சொல்லி, “அவ-ரக்ஷணே” என்கிற தாதுவினாலே ரக்ஷ்யரக்ஷகஸம்பந்தம் சொல்லி லுப்த சதுர்த்தியாலே ஶேஷிஶேஷஸம்பந்தம் சொல்லி, உகாரபதத்தாலே பர்த்ருபார்யா ஸம்பந்தம் சொல்லி, மகாரபதத்தாலே ஜ்ஞாத்ருஜ்ஞேய ஸம்பந்தம் சொல்லி நம: பதத்தாலே ஸ்வஸ்வாமிஸம்பந்தம் சொல்லி, நாரபதத்தாலே ஶரீரஶரீரிஸம்பந்தம் சொல்லி, அயநபதத் தாலே ஆதாராதேயஸம்பந்தம் சொல்லி, ஆயபதத்தால் போக்த்ருத்வ யோக்யத்வ ஸம்பந்தம் சொல்லி, ஆக திருமந்த்ரத்தால் நவவித ஸம்பந்தம் சொல்லித் தலைக்கட்டுகிறது.
த்வயப்ரகரணம்.
த்வயம் இரண்டு வாக்யமாய், ஆறு பதமாய், பத்தர்த்தமாய், இருபத் தஞ்சு திருவக்ஷரமாயிருக்கும். அதில் பூர்வவாக்யம் பதினஞ்சு திருவக்ஷரமாய், உத்தரவாக்யம் பத்துத் திருவக்ஷரமாய் இருக்கும். எங்ஙனேயென்னில்: “ஸ்ரீமந்நாராயணசரணௌ ஶரணம் ப்ரபத்யே” என்றும், “ஸ்ரீமதே நாராயணாய நம:” என்றும் இரண்டு வாக்யமாயிருக்கும். “ஸ்ரீமந்நாராயணசரணௌ ” என்றும், “ஶரணம்” என்றும், “ப்ரபத்யே” என்றும், “ஸ்ரீமதே” என்றும், “நாராயணாய” வென்றும் , “நம:” என்றும் ஆறு பதமாய், “ஸ்ரீ” என்றும், “மந்” என்றும், “நாராயண” என்றும், “சரணௌ ” என்றும், “ஶரணம்” என்றும் “ப்ரபத்யே” என்றும், “ஸ்ரீமதே” என்றும், “நாராயண” வென்றும், “ஆய” வென்றும், “நம:” என்றும் பத்து அர்த்தமாயிருக்கும். ‘ஸ்ரீ’ என்கை யாலே எம்பெருமானுக்கே மறக்கவொண்ணாத பெரியபிராட்டியா ருடைய புருஷகாரத்வம் சொல்லி, ‘மந்’ என்கையாலே அப்புருஷ காரத்தினுடைய நித்யயோகம் சொல்லி, ‘நாராயண’ என்கையாலே இப்படி புருஷகாரபூதையான. பெரியபிராட்டியார் தான் குறைசொல் லிலும், “என்னடியாரதுசெய்யார் செய்தாரேல் நன்று செய்தார்” என்னும்படியான வாத்ஸல்யாதிகுணயோகம் சொல்லி, ‘சரணௌ’ என்கையாலே அக்குணங்களுக்கும் பெரிய பிராட்டியாருக்கும் ஆஶ்ரயணியமான விலக்ஷணவிக்ரஹயோகம் சொல்லி, ‘ஶரணம்’ என்கையாலே அவ்விக்ரஹமே உபாயமென்னுமிடம் சொல்லி, ‘ப்ரபத்யே’ என்கையாலே உபாயஸ்வீகாரம் பண்ணின அதிகாரியி னுடைய அத்யவஸாயம் சொல்லி, ‘ஸ்ரீமதே’ என்கையாலே மிது னமே ப்ராப்யம் என்னுமிடம் சொல்லி, ‘நாராயண’ என்கையாலே எம்பெருமானுடைய ஸர்வஸ்வாமித்வம் சொல்லி, ‘ஆய’ என்கை யாலே அவன் திருவடிகளிலே பண்ணும் வருத்திவிஶேஷம் சொல்லி, ‘நம:’ என்கையாலே அவ்வருத்திக்கு விரோதியான ஸ்வாஹங்காரமமகார நிவ்ருத்தியைச் சொல்லித் தலைக்கட்டுகிறது. த்வயத்துக்குத் தாத்பர்யார்த்தமேது? வாக்யார்த்தமேது? ப்ரதாநார்த்த மேது? அநுஸந்தாநார்த்தம் ஏது? என்னில்: தாத்பர்யார்த்தம்:-ஆசார்யருசி பரிக்ருஹீதம். வாக்யார்த்தம்:- ப்ராபகஸ்வருபநிரூபணம். ப்ரதாநார்த்தம்:- மிதுந கைங்கர்யம், அநுஸந்தாநார்த்தம்:- ஸ்வதோஷாநுஸந்தாநம் சொல்லித் தலைக்கட்டுகிறது.
சரமஶ்லோக ப்ரகரணம்
சாமஶ்லோகம் இரண்டு அர்த்தமாய், பதினொரு பதமாய், முப்பத்தி ரண்டு திருவக்ஷரமாயிருக்கும். எங்ஙனேயென்னில்: “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஶரணம் வ்ரஜ, அஹம் த்வா ஸர்வபாபேப் யோ மோக்ஷயிஷ்யாமி மாஶுச:” என்றும் இரண்டர்த்தமாயிருக்கும். “ஸர்வதாமாந்” என்றும், ‘பரித்யஜ்ய’ என்றும், ‘மாம்’ என்றும். “ஏகம்’ என்றும், ‘ஶரணம்’ என்றும், ‘வ்ரஜ’ என்றும், ‘அஹம்’ என்றும், ‘த்வா’ என்றும், ‘ஸர்வபாபேப்ய:’ என்றும், ‘மோக்ஷயிஷ்யாமி’ என்றும், ‘‘மாஶுச’ என்றும் பதினொரு பதமாயிருக்கும். “ஸர்வதர்மாந்” என்கையாலே இதரோபாயங்களைச் சொல்லி, “ப்ரித்யயை” என்கையாலே இதரோபாயநிவ்ருத்தியைச் சொல்லி, “மாம்” என்கையாலே ஸம்யக்ஜ்ஞாநோபாயம் சொல்லி, “ஏகம்” என்கையாலே உபாயநைரபேக்ஷ்யம் சொல்லி, “ஶரணம்” என்கையாலே உபாயத்வம் சொல்லி, “வ்ரஜ” என்கையாலே உபாயஸ்வீகாரம் சொல்லி, “அஹம்” என்கையாலே தன்னுடைய ஸர்வபக்தித்வம் சொல்லி, “த்வா” என்கையாலே உபாயஸ்வீகாரம் பண்ணின அதிகாரிஸ்வரூபம் சொல்லி, “ஸர்வபாபேப்ய:” என்கையாலே ப்ராப்யப்ரதிபந்தகங்களைச் சொல்லி, “மோக்ஷயிஷ்யாமி” என்கையாலே ப்ராப்யப்ரதிபந்தகநிவ்ருத்தியைச் சொல்லி, “மாஶுச:” என்கையாலே நிர்ப்பரத்வாநுஸந்தாநம் சொல்லித் தலைக்கட்டுகிறது. சரமஶ்லோகத்துக்குத் தாத்பர்யார்த்த மேது? வாக்யார்த்தமேது? ப்ரதாநார்த்தமேது? அநுஸந்தாநார்த்த மேது? என்னில்: தாத்பர்யார்த்தம்:- ஶரண்யருசிபரிக்ருஹீதம்; வாக்யார்த்தம்:- ப்ராபகஸ்வரூபநிரூபணம்; ப்ரதாநார்த்தம்:- ஈஶ்வரஸ்வரூபநிரூபணம்; அநுஸந்தாநார்த்தம்:- நிர்ப்பரத்வாநுஸந் தாநம் சொல்லித் தலைக்கட்டுகிறது.
நிகமநப்படி முற்றிற்று.
பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே ஶரணம்.