பரந்தபடி
ஶ்ரீ: பரந்தபடி திருமந்த்ர ப்ரகரணம் உபோத்காதம் ’நித்யோ நித்யாநாம்’ என்றும் ’ஜ்ஞாஜ்ஞௌத்வாவஜாவீஶ நீஶௌ’ என்றும் ’ப்ரக்ருதிம் புருஷம்சைவ வித்யநாதி’ என்றும் சொல்லுகிறபடியே ஆத்மஸ்வரூபம் நித்யமாயிருக்கச் செய்தேயும் ’அஸந்நேவ ஸ பவதி’ என்கிறபடியே அநாதிகாலம் அஸத்வ்யவஹாரத்துக்கு விஷயமாய்ப் போந்தது பகவத்விஷய ஜ்ஞாநராஹித்யத்தாலே ஆகையாலே ‘ஸந்தமேநம்’ என்கிறபடியே ஸத்வ்யவஹாரத்துக்கு விஷயமாம் போது பகவத்விஷய ஜ்ஞாந ஸத்பாவத்தாலே ஆகவேணும். இப்படிப்பட்ட ஜ்ஞாநவிஶேஷமாகிறது, ஈஶ்வரனுடைய ஶேஷித்வ விஷயஜ்ஞாநமும், உபாயத்வ விஷயஜ்ஞாநமும், உபேயத்வவிஷயஜ்ஞாநமுமிறே. ஈத்ருஶமான ஜ்ஞாந விஶேஷத்துக்கு உத்பாதகமாயிருப்பது அபௌருஷேயமாய் […]
ஶ்ரிய:பதிப்படி
ஶ்ரிய:பதிப்படி திருமந்த்ர ப்ரகணம் உபோத்காதம் :– ஶ்ரிய: பதியாய் ஸர்வஸ்வாமியாய் யிருந்துள ஸர்வேஶ்வரனுடைய ஸ்வரூபத்தையும் அவனுக்கு அநந்யஶேஷமான தந்தாமுடைய ஸ்வரூபத்தையும் யதாவஸ்திதமாக ப்ரதிபத்திபண்ணி நித்யமுக்தரைப்போலே ஸ்வரூபாநுரூபமான பரிமாற்றத்திலே அந்வயித்து வாழப்பெறாதே இருவருடைய ஸ்வரூபத்தையும் விபரீதமாக ப்ரதிபத்திபண்ணி விபரீத வ்ருத்தப்ரவ்ருத்தராய் ஸ்வரூபவிரோதியான ப்ராக்ருத போகத்திலே மண்டி தாபத்ரய தப்தராய்ப் போருகிற பத்தாத்மாக்களிலே ஆரேனும் ஒருவனுக்கு நிர்ஹேதுக பகவத் கடாக்ஷமடியாக அந்யதாஜ்ஞாந விபரீதஜ்ஞாந ஜநகமான ரஜஸ் தமஸ்ஸுக்கள் தலைசாய்ந்து யதாஜ்ஞாந ஜநகமான ஸத்வம் தலையெடுத்து ஸத்வ கார்யமான வெளிச் சிறப்புப் […]
தனி சரமம்
தனி சரமம் அவதாரிகை ஸர்வேஶ்வரன், ஜகத்ஸ்ருஷ்டிபண்ணி, வேதோபதேஶத்தைப்பண்ணியருளி, தத்வாரா சேதநருடைய ருச்யநுகூலமாக புருஷார்த்தங்களையும் தத்ஸாதநங்களையும் காட்டி, அவ்வழியாலேதானே ஸாத்யமும் ஸாதநமுமென்கிற ஶாஸ்த்ரத்தையும் உபதேஶித்து விடுகையன்றிக்கே, பரவ்யூஹ விபவ அர்ச்சாவதாரங்களினாலும் அதிமானுஷ சேஷ்டிதங்களாலும் தானே ரக்ஷகனென்றுமிடத்தைக் காட்டி இத்தனையும் ” செய்த விடத்திலும், “ஆஸுரீம் யோநி மாபந்நா மூடா ஜந்மநி ஜந்மநி மாமப்ராப்யைவ கௌந்தேய ததோயாந்த்யதமாம் கதிம்” என்று அஸுர ப்ரக்ருதிகளாய், இவ்வாத்மாக்கள் ப்ரக்ருதி ப்ராக்ருதங்களையே புருஷார்த்தங்களாகவும், அவை ஸம்பாதிக்குமிடத்திலும் தாங்களே ஸம்பாதித்து கொள்ளுவதாகவும் கோலி, அவை […]
தனி த்வயம்
ஶ்ரீமதே ராமானுஜாய நம: தனி த்வயம் –அவதாரிகை லோகாசார்யாய குரவே க்ருஷ்ணபாதஸ்ய ஸூநவே । ஸம்ஸாரபோகி ஸந்தஷ்ட ஜீவஜீவாதவே நம: ।। ஸகலவேத ஶாஸ்த்ரங்களும் தாமஸ ராஜஸ ஸாத்விக புருஷர்களுக்கு அவ்வோ குணாநுகுணமாக புருஷார்த்தங்களை விதித்தது. எல்லார்க்குமொக்க அபிமதமான மோக்ஷம் தான் து:க நிவ்ருத்தியும் ஸுகப்ராப்தியுமிறே, இதுவிறே ப்ரியமாகிறது. இத்தை லபிக்குமுபாயத்தை ஹிதமென்கிறது. இதில்தாமஸ புருஷர்கள் பரஹிம்ஸையை ஸாதநமாகக்கொண்டு அத்தாலே வரும் தனாதிகளை ப்ரியமான புருஷார்த்தமாக நினைத்திருப்பர்கள் -இதுக்கு வழியிட்டுக்கொடுக்கும் வேதமும் ஶ்யேந விதியென்கிற முகத்தாலே. ராஜஸ […]
தனி ப்ரணவம்
ஶ்ரீமதே ராமானுஜாய நம: தனி ப்ரணவம் லோகாசார்யாய குரவே க்ருஷ்ணபாதஸ்ய ஸூநவே । ஸம்ஸாரபோகி ஸந்தஷ்ட ஜீவஜீவாதவே நம: ।। ஸகல வேத தாத்பர்யமாய், ஸகல ஶாஸ்த்ர ஸங்க்ரஹமாய், ஸகல பலப்ரதமாய், ஸகல மந்த்ரங்களிலு மதிகமான, திருவஷ்டாக்ஷரமான திருமந்த்ரத்துக்கு, நம் பூர்வாசார்யர்கள், “ஸ்வரூபம் சொல்லுகிறதென்றும், ப்ராப்யம் சொல்லுகிறதென்றும், இரண்டுபடி வாக்யார்த்தம்” என்றருளிச் செய்வர்கள். இம்மந்த்ரம்தான், “ஓம்”’ என்றும், “நம:” என்றும், “நாராயணாய”’ என்றும், மூன்று பதமாயிருக்கும். இதில் முதல் பதம், ப்ரணவமென்று திருநாமமாய், அகாரமென்றும், உகாரமென்றும், […]
தத்த்வ ஶேகரம்
தத்த்வ ஶேகரம் ப்ரதமம் பரஸ்வரூபநிர்ணய ப்ரகரணம் உபோத்காதம் பும்ஸ்பர்ஶ க்லேஶ ஸம்பாவநாகந்த விதுரமாய் ப்ரத்யக்ஷாதி ப்ரமாண விலக்ஷணமாயிருந்துள்ள நிகில வேதஜாதத்துக்கும் ததுபப்ரும்ஹணங்களான ஸ்ம்ருதீதிஹாஸ புராணாதிகளுக்கும் க்ருத்யம் ஸகல ஸம்ஸாரி சேதனர்க்கும் தத்வ ஜ்ஞாநத்தை ஜநிப்பிக்கை. தத்த்வஜ்ஞாநமாவது-ஸர்வஸ்மாத் பரனான நாராயணனுக்கு, ஸர்வப்ரகார பரதந்த்ரரான ஸர்வாத்மாக்களினுடையவும் ஸ்வரூபதுக்கநுரூப புருஷார்த்தமான கைங்கர்யத்தை, அநாதியாக ப்ரதிபந்தித்துக்கொண்டு போருகிற கர்ம ஸம்பந்தத்தை நிவர்திப்பிக்குமுபாயம் தச்சரணாரவிந்த ஶரணாகதியென்கிற நிரூபண ஜ்ஞாநவிஶேஷம். நாராயணன் ஸர்வஸ்மாத்பரனானபடி யெங்ஙனே என்னில்; பரத்வ சின்னங்களான ஜகத்காரணத்வ முமுக்ஷோ பாஸ்யத்வ […]
சரமோபாய தாத்பர்யம்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: நாலூராச்சான் பிள்ளை அருளிச்செய்த சரமோபாய தாத்பர்யம் சரமோபாய தாத்பர்யம் யதீந்த்ர விஷயேகரோத் | யஸ்தமார்ய வரம் வந்தே தேவராஜாஹ்வயம்குரும் || பகவத் ப்ராப்தி ப்ரதிபந்தகமான ஸம்ஸாரத்தில் அருசி பிறந்து பகவத்சரணாரவிந்தப்ராப்தி ரூபமான மோக்ஷத்திலிச்சை பிறந்த வதிகாரி , தத்சித்யர்த்தமாக சரம பர்வமான எம்பெருமானாரபிமானத் திலே ஒதுங்கி , தத்விஷய ப்ரபத்தி நிஷ்டையையுடையவனாயிருக்க வேணும் . பகவத் ப்ராப்திரூப மோக்ஷத்தை பெறுகைக்குடலாக வேதாந்தங்களிலே கர்மாத்யுபாய சதுஷ்டயத்தைச் சொல்லிப் போரா நிற்க , அத்தை விட்டு […]
செய்யதாமரைத் தாளிணை வ்யாக்2யானம்
Page-1 செய்யதாமரைத் தாளிணை வ்யாக்2யானம் श्रीमते रम्यजामातृमुनये विदधे नम:। यत्स्मृतिस्सर्वसिद्धीनामन्तराय निवारिणी।। ஶ்ரீமதே ரம்யஜாமாத்ரு முநயே வித3தே4 நம: । யத் ஸ்ம்ருதிஸ் ஸர்வஸித்3தீ4நாம் அந்தராய நிவாரிணீ ।। ஶ்ரீஶைலேஶத3யாபாத்ரமென்று தொடங்கி அருளிச் செய்த ஸேனை முதலியார் நாயனார், ஜீயருடைய கல்யாண கு3ணங்களிலே தோற்று அடிமைபுக்கபடியை ப்ரகாஶிப்பிக்கிறாராய் நின்றார். ________________________________________________________________ யாவரொருவரைப் பற்றிய நினைவு எல்லா வெற்றிகளுக்கும் இடையூறுகளை நீக்கிவிடுமோ அந்த ஶ்ரீமந் மணவாளமாமுனிகளை வணங்குகிறேன். “ஶ்ரீஶைலேஶ தயாபாத்ரம் […]
ப்ரதாந சதகம்
प्रधानशतकम् ப்ரதாந சதகம் यः प्रधानः प्रपन्नानां प्रधानशतकं व्यधात् । तं नौमि वेङ्कटाचार्यं धुर्यं मार्गे यतीशितुः ॥ परविदुपदर्शितं नः प्रधानशतकं प्रमाणसिद्धमिदम् । भजति शतकोटिभावं परपक्षे च प्रयोजने च सताम् ॥ பொங்கு புனலாறுகளில் புவனமெல்லாம் பொன்கழலால் அளந்தவன்தன் தாளால் வந்த கங்கையெனும் நதி போலக் கடல்களேழில் கமலை பிறந்து அவனுகந்த கடலே போல சங்குகளில் அவனேந்தும் சங்கே போலத் தாரில் அவன் தண்துளவத் தாரே போல எங்கள் […]
சிறிய ரஹஸ்யங்கள் Part 2
சிறிய ரஹஸ்யங்கள் (Continued) உடையவருக்கு திருக்கோட்டியூர் நம்பி அருளிச்செய்த ப்ரமேய ஸாரம் ப்ரபந்நனுக்கு பரிஹார்யம் ஆறு. ஆச்ரயண விரோதி, ச்ரவணவிரோதி, அநுபவவிரோதி, ஸ்வரூபவிரோதி, பரத்வவிரோதி, ப்ராப்திவிரோதி. இதில் ஆச்ரயணவிரோதியாவது – அஹங்கார மமகாரமும், பலாபிஸந்தியும், புருஷகாரத்தையிகழ்கையும், பேற்றில் ஸம்சயமும்; ச்ரவணவிரோதியாவது தேவதாந்தரகதா விஷயங்களில் அவசமாகவும் செவிதாழ்க்கை: அநுபவ விரோதியாவது போகத்ரவ்யம்கொண்டு புக்கு ஸ்நாநத்ரவ்யங்கொண்டு புறப்படுகிற விஷயாநுபவேச்சை; ஸ்வரூப விரோதியாவது – தன்னை பரதந்த்ரனாகவிசையாதே ஸ்வதந்த்ரனாகவிசைகை; பரத்வவிரோதியாவது – க்ஷேத்ரஜ்ஞரான ப்ரஹ்ம ருத்ராதிகளை ஈச்வரனாக ப்ரமிக்கை; ப்ராப்திவிரோதியாவது-கேவலரோட்டைச்சேர்த்தி என்றும்; […]