பரந்தபடி
ஶ்ரீ: பரந்தபடி திருமந்த்ர ப்ரகரணம் உபோத்காதம் ’நித்யோ நித்யாநாம்’ என்றும் ’ஜ்ஞாஜ்ஞௌத்வாவஜாவீஶ நீஶௌ’ என்றும் ’ப்ரக்ருதிம் புருஷம்சைவ வித்யநாதி’ என்றும் சொல்லுகிறபடியே ஆத்மஸ்வரூபம் நித்யமாயிருக்கச் செய்தேயும் ’அஸந்நேவ ஸ பவதி’ என்கிறபடியே அநாதிகாலம் அஸத்வ்யவஹாரத்துக்கு விஷயமாய்ப் போந்தது பகவத்விஷய ஜ்ஞாநராஹித்யத்தாலே ஆகையாலே ‘ஸந்தமேநம்’ என்கிறபடியே ஸத்வ்யவஹாரத்துக்கு விஷயமாம் போது பகவத்விஷய ஜ்ஞாந ஸத்பாவத்தாலே ஆகவேணும். இப்படிப்பட்ட ஜ்ஞாநவிஶேஷமாகிறது, ஈஶ்வரனுடைய ஶேஷித்வ விஷயஜ்ஞாநமும், உபாயத்வ விஷயஜ்ஞாநமும், உபேயத்வவிஷயஜ்ஞாநமுமிறே. ஈத்ருஶமான ஜ்ஞாந விஶேஷத்துக்கு உத்பாதகமாயிருப்பது அபௌருஷேயமாய் […]