பரந்தபடி

ஶ்ரீ:

பரந்தபடி

திருமந்த்ர ப்ரகரணம்

உபோத்காதம்

                ’நித்யோ நித்யாநாம்’ என்றும் ’ஜ்ஞாஜ்ஞௌத்வாவஜாவீஶ நீஶௌ’ என்றும் ’ப்ரக்ருதிம் புருஷம்சைவ வித்யநாதி’ என்றும் சொல்லுகிறபடியே ஆத்மஸ்வரூபம் நித்யமாயிருக்கச் செய்தேயும் ’அஸந்நேவ ஸ பவதி’ என்கிறபடியே அநாதிகாலம் அஸத்வ்யவஹாரத்துக்கு விஷயமாய்ப் போந்தது பகவத்விஷய ஜ்ஞாநராஹித்யத்தாலே ஆகையாலே ‘ஸந்தமேநம்’ என்கிறபடியே ஸத்வ்யவஹாரத்துக்கு விஷயமாம் போது பகவத்விஷய ஜ்ஞாந ஸத்பாவத்தாலே ஆகவேணும்.

                இப்படிப்பட்ட ஜ்ஞாநவிஶேஷமாகிறது, ஈஶ்வரனுடைய ஶேஷித்வ விஷயஜ்ஞாநமும், உபாயத்வ விஷயஜ்ஞாநமும், உபேயத்வவிஷயஜ்ஞாநமுமிறே.

                ஈத்ருஶமான ஜ்ஞாந விஶேஷத்துக்கு உத்பாதகமாயிருப்பது அபௌருஷேயமாய் நித்ய நிர்தோஷமாய் ஸ்வத:ப்ரமாணமான வேதம்.

அந்தவேதம் தான் ’அநந்தாவை வேதா:’ என்கிறபடியே அஸம்க்யாதமாயிருக்கையாலும் ’அல்பஶ்சகால:’ என்றும் ’பூதஜீவிதமத்யல்பம்’ என்றும் ’நம்முடை நாள்’ என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே சேதனர் பரிமித காலவர்திகளாயிருக்கையாலும், உள்ள காலம் தன்னிலே வேதத்தில் சொல்லுகிற அர்த்தத்தை ஆராயவென்று இழிந்தால் ’ஶ்ரேயாம்ஸி பஹு விக்நாநி’ என்றும் ’பஹவஶ்ச விக்நா:’ என்றும் சொல்லுகிறபடியே ஶ்ரேய: ப்ராப்தி ப்ரத்யூஹ பாஹுள்யத்தாலும், அந்த வேதத்தில் ஸாரபூதமான அர்த்த நிர்ணயம் பண்ணுகைக்கு யோக்யதை அற்றிருக்கும்.

ஆனபின்பு ’யத்ஸாரபூதம் ததுபாஸிதவ்யம்’ என்கிறபடியே வேததாத்பர்ய பூதமாயிருப்பதொன்றாலே வேதத்தில் நிர்ணீதமான அர்த்தத்தை அறியவேணும்.

அதில் ’ருசோயஜூம்ஷி ஸாமானி ததைவாऽதர்வணாநி ச | ஸர்வமஷ்டாக்ஷராந்தஸ்தம்’ என்கிறபடியே ஸகலவேத தாத்பர்ய பூமியாயிருப்பதொரு மந்த்ரமாகையாலே இம்மந்த்ரமுகத்தாலே ஶேஷஶேஷி பாவாதிஜ்ஞாநம் உபாதேயமாகக் கடவது.

’யதா ஸர்வேஷு தேவேஷு’ இத்யாதி ப்ரக்ரியையாலே ஸகல தைவங்களிலும் ஸர்வேஶ்வரன் ப்ரதாநனாகிறாப்போலே ஸகல மந்த்ரங்களிலும் இம்மந்த்ரவிஶேஷம் ப்ரதாநமாயிருப்பதொன்று.

’ஆஸ்தாந் தே குணராஶிவத்’ என்றும் ’பஹவோ ந்ருப கல்யாணகுணா: புத்ரஸ்ய ஸந்தி தே- தவா அநந்த குணஸ்யாபி ஷடேவ ப்ரதமே குணா:, ஈறில வண்புகழ், பஹூநி மே வ்யதீதாநி, எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய், பிறப்பில் பல் பிறவிப் பெருமான்’ என்றும் இத்யாதிகளில்  சொல்லுகிற படியே ஸர்வேஶ்வரனுடைய குணங்களும் குணபரீவாஹங்களான அவதாரங்களும் அஸங்க்யாதங்களாயிருக்குமா போலே அவற்றை அநுபந்தித்திருக்கும் மந்த்ர விஶேஷங்களும் ’பஹுபிர்மந்த்ரை:’ என்கிற படியே பஹுவிதங்களாயிருக்கும்.

இப்படி பஹுவிதங்களான மந்த்ரவிஶேஷங்களில் வைத்துக்கொண்டு ’நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்’ என்று விஷ்ணு காயத்ரியிலே இம்மூன்று மந்த்ரத்தையும் ப்ராதாந்யேந ப்ரதிபாதிக்கையாலே வ்யாபகமந்த்ரத்ரயமும் ப்ரதாநமாகக்கடவது.

அந்த வ்யாபக மந்த்ரங்களில் வைத்துக்கொண்டு ப்ரதமத்திலே நாராயண ஶப்தத்தை ப்ராதாந்யேந ப்ரதிபாதிக்கையாலும் மேல் தானும் வாஸுதேவ விஷ்ணுஶப்தங்களை அநாதரித்து பலவிடங்களிலும் நாராயண ஶப்தத்தையிட்டு பகவத் ஸ்வரூபாதிகளை நிர்தேஶிக்கையாலும் இப்படி வேதபுருஷன் ஆதரித்தவளவன்றிக்கே, வேதார்த்த விஶதீகரண ப்ரவ்ருத்தராந வ்யாஸாதி பரமருஷிகள் பலரும் வேதார்த்தோபப்ரும்ஹணங்களாயிருக்கிற ஸ்வப்ரபந்தங்களிலே பலவிடங்களிலும் ’ஆர்த்தா விஷண்ணா:, ஆபோ நாரா:, மாபைர்மாபை:, ஸர்வவேத ரஸேப்ய:, ஏகோऽஷ்டாக்ஷரமேவாயம்’ என்று ஸகல மந்த்ர ப்ரதாநதயா இத்தை ப்ரஶம்ஸிக்கையாலும் ஸ்வயத்ந ஸாத்யமான பகவத்ப்ரஸாதத்தாலே லப்தஸார்வஜ்ஞராந ருஷிகளைப் போலன்றிக்கே ’மயர்வற மதிநலமருளினன்’ என்கிறபடியே நிர்ஹேதுக பகவத் கடாக்ஷத்தாலே ஸமதிகத ஸமஸ்தவஸ்து வாஸ்தவரான ஆழ்வார்கள் பலரும் ஸ்வப்ரபந்தங்களிலே பலவிடங்களிலும் இத்தையே ப்ரஶம்ஸிக்கையாலும்; ததநுஸாரிகளான பூர்வாசார்யர்களும், இதர மந்த்ரங்களை அநாதரித்து இத்தையே தந்தாமுக்குத் தஞ்சமாக அநுஸந்தித்து உபதேஶவேளையிலும் தந்தாமைப் பற்றினவர்களுக்கு இத்தையே உஜ்ஜீவந ஹேதுவாக உபதேஶித்துப் போருகையாலும் ததநுயாயிகளான நமக்கும் இதுவே அநுஸந்தேயமாகக்கடவது.

’விஷ்ணுஶித்தன் விரும்பியசொல்’ என்கையாலேயிறே திருப்பல்லாண்டை நம்மனிசர் ஆதரிக்கிறது.

வாச்யவைபவம் போலன்று வாசகவைபவம். அவன் தூரஸ்தனானாலும் இது ஸந்நிதி பண்ணி கார்யம் செய்யும். த்ரௌபதிக்கும் பலஸித்தி உண்டாயிற்று திருநாம வைபவத்தாலேயிறே ’ஸாங்கேத்யம்’ என்கிறபடியே இதுதான் சொல்லும் க்ரமமொழியச் சொன்னாலும் தன் ஸ்வரூபம் கெட நில்லாது. ’ஓராயிரமாய்’ என்கிறபடியே. அவன் தனக்கும் ரக்ஷணபரிகரம் இதுவே ஜ்ஞாந ஶக்த்யாதிகளைப்போலே அல்லாத திருநாமங்கள்; ஜ்ஞாநாநந்தங்களைப்போலேயிது. ’நாமமாயிரமேத்த நின்ற நாராயணா’ ’நாமம் பலவுமுடை நாரணநம்பி’ என்னா நின்றதிறே. இதுதான் ஸர்வாதிகாரம் ப்ரணவார்தத்துக்கு எல்லாரும் அதிகாரிகள் இடறினவன் ’அம்மே’ என்னுமாப்போலே இது சொல்லுகைக்கு எல்லாரும் யோக்யர். ப்ராயஶ்சித்தா பேக்ஷையில்லை.

இது தான் பலப்ரதமாமிடத்தில் ’ஐஹிகலௌகிகம் ஐஶ்வர்யம் ஸ்வர்காத்யம் பாரலௌகிகம் கைவல்யம் பகவந்தஞ்ச மந்த்ரோऽயம் ஸாதயிஷ்யதி’ என்றும் ’நமோ நாராயணாயேதி மந்த்ரஸ் ஸர்வார்த்த ஸாதக:’ என்றும், ‘குலந்தரும் செல்வம் தந்திடும்’ என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஐஶ்வர்ய கைவல்ய பகவச் சரணார்திகளாகிற த்ரிவிதாதிகாரிகளுக்கும் தத்தத் ஸ்வாபிமத பலவிஶேஷங்களை ஸாதித்துக் கொடுக்கக் கடவதாயிருக்கும், பகவச்சரணார்திகளான அதிகாரிகளில், பக்தியோகபரனுக்கு, கர்ம ஜ்ஞாநங்களினுடைய உத்பத்திக்கு ப்ரதிபந்தகங்களாயிருக்கிற ப்ரபல கர்மங்களை நிவர்த்திப்பித்து, அவன் தனக்கு உத்தரோத்தரம் அபிவ்ருத்திகளையும் பண்ணிக்கொடுத்து தத்வாரா உபகாரகமாயிருக்கும், ப்ரபத்த்யதிக்ருதனுக்கு ஆத்ம யாதாத்ம்யஜ்ஞாந ஜநகமாய், காலக்ஷேப ஹேதுவாய், ’எனக்கென்றும் தேனும் பாலும் அமுதுமாய திருமால் திருநாமம்’ என்கிறபடியே, ப்ரதிபாத்ய வஸ்துவைப்போலே ஸ்வயம் போக்யமுமாயிருக்கும்.

இப்படி அபேக்ஷித பலஸாதகத்வ மாத்ரமே அன்றிக்கே ’ஸர்வமஷ்டாக்ஷராந்தஸ்தம்’ என்றும் ’நின் திருவெட்டெழுத்துங்கற்று- மற்றெல்லாம் பேசிலும்’ என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே, ஜ்ஞாதவ்யங்களான நிகில த்ரய்யந்த ரஹஸ்யபூத தத்த்வார்த்த விஶேஷங்களையும் ஸாகல்யேந ஜ்ஞாபிக்கக்கடவதா யிருக்கும்.

ஜ்ஞாதவ்ய ஸகலார்த்தங்களெல்லாம் இதிலே புஷ்கலமாக ப்ரதிபந்நமாகில், மற்றை ரஹஸ்யத்வயமும் அநுஸந்தேயமாகாதோ என்னில்; அது செய்யாது. இதிலே ஸங்க்ரஹீதங்களான அர்த்தங்களை அவை விஸ்த்ருதங்களாக ப்ரதிபாதிக்கிறனவாகையாலே, ஸகலார்த்தமும் இதிலே கண்டோக்தமாகிலிறே அவை அநநுஸந்தேயங்களாவன; இதில் அஸ்பஷ்டங்களான அர்த்தங்களை அவை விஸ்த்ருதங்களாக ப்ரதிபாதிக்கிறனவாகையாலே, அவற்றினுடைய அநுஸந்தேயதைக்குக் குறையில்லை. வித்யநுஷ்டான ரூபங்களாகையாலும் அவற்றையொழிய பலஸித்தியில்லாமையாலும் அவை அநுஸந்தேயங்கள். இது தன்னிலே, அவை அநுஸந்தேயங்களானபோது இதினுடைய நைரபேக்ஷ்யம் பக்நமாகாதோ என்கிற சோத்யமும் பரிஹ்ருதம்.

ஆக, இப்படி வேதங்களோடு வைதிகரான ருஷிகளோடு, ஆழ்வார்களோடு, ஆசார்யர்களோடு, வாசியற எல்லாரும் இத்தையே ஆதரிக்கையாலும் எல்லா அதிகாரிகளுக்கும் நின்ற நின்ற நிலைகளிலே அபேக்ஷித ப்ரதாநம் பண்ணக் கடவதாயிருக்கையாலும் ஜ்ஞாதவ்யார்த்த ஜ்ஞாபகமாகையாலும் இம்மந்த்ரவிஶேஷம் எல்லாவற்றிலும் ப்ரதாநமாயிருக்கும்.

இம்மந்த்ரம் தனக்கு ப்ராதாந்யேந ப்ரதிபாத்யமான அர்த்தமாகிறது- ஈஶ்வரனுக்கும் ஆத்மாவு க்கும் உண்டான ஶேஷஶேஷிபாவ ஸம்பந்தமாகையாலே ஆத்மபரமாத்ம ஸ்வரூபநிரூபணமும், விரோதி ஸ்வரூபநிரூபணமும், கைங்கர்யஸ்வரூப நிரூபணமும் இதுக்கு ஶேஷதயா வரக்கடவது. அந்த ஶேஷஶேஷிபாவ ஸம்பந்தம் தான் த்விநிஷ்டமாயிருக்கையாலே, பகவத்ஸ்வரூப நிரூபணமும், சேதந ஸ்வரூப நிரூபணமும் அபேக்ஷிதமாகக்கடவது. இது தான் ஸித்தமாவது அதுக்கு விரோதியான ஸ்வாதந்த்ர்யத்தினுடைய நிவ்ருத்தியுண்டானால் ஆகையாலே விரோதி நிவ்ருத்தி அபேக்ஷிதமாயிருக்கும். அது தான் ஸபலமாவது ’அகிஞ்சித்கரஸ்ய ஶேஷத்வாऽநுபபத்தி:’ என்கிறபடியே கிஞ்சித்காரத்துக்கு அநந்தரமாகையாலே ஶேஷத்வ நிவ்ருத்தி நிரூபணம் அபேக்ஷிதமாயிருக்கும்.

ஆக, பதத்ரயமும் ஆத்ம பரமாத்ம ஸம்பந்தத்தையும் தத்ஸம்பந்த விரோதியான ஸ்வஸ்வாதந்த்ர்யத்தினுடைய நிவ்ருத்தியையும் தத்ஸாபல்ய ஹேதுபூதமான கிஞ்சித்காரத்தையும் ப்ரதிபாதிக்கிறது.

இது தனக்கு, ஸ்வரூபம் சொல்லுகிறது என்றும், ப்ராப்யம் சொல்லுகிறது என்றும் வாக்யார்த்தம். ஸ்வரூபம் சொல்லுகிற இதுக்கு, விரோதி ஸ்வரூபமும், உபாய ஸ்வரூபமும், பலஸ்வரூபமும், அதிகாரி ஸ்வரூபமும், பகவத் ஸ்வரூபமாகிற அஞ்சர்த்தமும் சொல்லா நிற்கச் செய்தே மற்றை நாலும் அதிகாரிக்காகையாலே, அதிகாரிஸ்வரூபமும் ப்ரதமத்திலே அபேக்ஷிதமாயிருக்கையாலும், ப்ரஸித்தி ப்ராசுர்யத்தாலும் ஸ்வஸ்வரூபத்தைச் சொல்லுகிறது என்று பொருளாகக்கடவது.

இதில் ப்ரணவமொன்றிலுமன்றோ ஆத்மஸ்வரூபம் சொல்லுகிறது, நமஸ்ஸாலும் நாராயண பதத்தாலும் உபாய ஸ்வரூபத்தையும் உபேய ஸ்வரூபத்தையும் சொல்லா நிற்க, திருமந்த்ரம் முழுக்க ஸ்வரூபம் சொல்லுகிறது என்று சொல்லும்படி. எங்ஙனே என்னில்; ப்ரணவத்தில் ப்ரதிபாதிக்கப்படுகிற பகவச்சேஷத்வம் ஆத்மாவுக்கு ஸ்வரூபமாகிறாப்போலே உத்தர பதத்திலும் ப்ரதிபாத்யமான பகவதேக ஸாதநத்வமும், பகவதேக ஸாத்யத்வமும் இவனுக்கு ஸ்வரூபமாயிருக்கையாலே, பதத்ரயமும் ஸ்வரூபத்தை ப்ரதிபாதிக்கிறது என்னக் குறையில்லை.

நாராயண பதத்தாலே ப்ரதிபாதிக்கப்படுகிற ஶேஷவ்ருத்தி ப்ராப்யமாகிறாப்போலே, முன்பு சொல்லுகிற பகவச்சேஷத்வமும், அந்யஶேஷத்வராஹித்யமும், ஸ்வஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தியும், ஸித்தோபாய ஸ்வீகாரமும், ததீய ஶேஷத்வமும், இத:பூர்வம் அப்ராப்தமாய், மேல் ப்ராப்தமாயிருக்கையாலே, தத் ப்ரதிபாதகமான பதத்வயமும் ப்ராப்ய ஸ்வரூபத்தை ப்ரதிபாதிக்கிறதென்னக் குறையில்லை.

ப்ரணவ நமஸ்ஸுக்களாலே, ஸ்வரூபம் சொல்லி நாராயண பதத்தாலே ப்ராப்யம் சொல்லுகிறது என்னவுமாம்.

சதுர்த்யந்தமான ப்ரதமாக்ஷரத்திலே ரக்ஷகத்வ ஶேஷித்வங்கள் சொல்லி மத்யமாக்ஷரமான உகாரத்திலே அந்யஶேஷத்வ நிவ்ருத்தியைச் சொல்லி த்ருதீயாக்ஷரமான மகாரத்திலே ப்ரக்ருதே: பரமான ஆத்ம ஸ்வரூபத்தினுடைய ஜ்ஞாநாநந்த லக்ஷணத்வம் சொல்லி நமஸ்ஸாலே விரோதி ஸ்வரூபத்தினுடைய த்யாஜ்யத்வம் சொல்லி, பகவச் சேஷத்வ பௌஷ்கல்ய ஹேதுவான பாகவத ஶேஷத்வஞ்சொல்லி, ஶேஷத்வானுரூபமான உபாயஸ்வரூபஞ்சொல்லி, நாராயண பதத்தாலே ஸர்வாத்ம ஶேஷியான ஸர்வேஶ்வரன் ஸ்வரூபம் சொல்லி, சதுர்த்தியாலே ஶேஷ வ்ருத்தியை ப்ரார்த்தித்துத் தலைக் கட்டுகையாலே ரக்ஷகத்வம் தொடங்கி ஶேஷவ்ருத்தி பர்யந்தமான நடுவுண்டான அர்த்த விஶேஷங்களெல்லாம் பதார்த்தமாகக் கடவது.

ஈஶ்வரனுடைய ஸர்வ ஶேஷித்வ, ஸர்வ ரக்ஷகத்வங்களும் நிரதிஶய போக்யத்வமும் தாத்பர்யார்த்தம்.

இத்திருமந்த்ரம்தான் அநாதிகாலம் ஈஶ்வரனுக்கு ரக்ஷ்யபூதருமாய், ஶேஷபூதருமாயிருக்கிற சேதநர் பக்கலிலே ரக்ஷகத்வ ஶேஷித்வ புத்தி பண்ணியும் ஜடமாய் இதம் புத்தி யோக்யமாயிருக்கிற ப்ரக்ருதி தத்த்வத்திலே ப்ரக்ருதே:பரமாய் ஜ்ஞாநாநந்த லக்ஷணமாயிருக்கிற ப்ரத்யகாத்ம ஸ்வரூபத்துக்கு பண்ணக்கடவ அஹம் புத்தி பண்ணியும் ஸ்வரூப விருத்தமான ஸ்வஸ்வாதந்த்ர்யத்தை ஏறிட்டுக் கொண்டு உபாயாபாஸங்களிலே உபாயபுத்தியும் ப்ராப்யாபாஸங்களிலே ப்ராப்ய புத்தியும் பண்ணி ஸம்ஸரித்துப்போந்த சேதனனுக்கு பகவத்வ்யதிரிக்த ஸமஸ்த வஸ்துக்களினுடையவும் ரக்ஷ்யத்வ ஶேஷத்வ ஜ்ஞாநத்தை பிறப்பித்து ஆத்மஸ்வரூபம் ப்ரக்ருதே: பரமாய் ஜ்ஞாநாஶ்ரயமாயிருக்கு மென்றுமிடத்தையும் அறிவித்து ஸ்வரூப விரோதியான ஸ்வஸ்வாதந்த்ர்யத்தினுடைய நிவ்ருத்தி பூர்வகமாக பகவச் சேஷத்வ பௌஷ்கல்யத்தை பிறப்பித்து உபாயாபாஸம்களில் உபாயத்வ புத்தி நிவ்ருத்தி பூர்வகமாக ஸம்யகுபாயமான ஸித்த ஸாதநத்திலே யதாவத் ஜ்ஞாநத்தை பிறப்பித்து புருஷார்த்தாந்தர நிவ்ருத்தி பூர்வகமாக நிராஸதாதிஶயாஹ்லாத ஸுகபாவைக லக்ஷணமான பகவத் கைங்கர்யமே நிரதிஶய புருஷார்த்தம் என்னுமிடத்தையும் அறிவிக்கிறது.

இத்திருமந்த்ரம்தான் (1) ஸ்வஸ்வரூப, (2) பரஸ்வரூப, (3) விரோதி ஸ்வரூப (4) புருஷார்த்த (5) ததுபாயங்களில் அந்யதா ப்ரதிபத்தி பண்ணிப்போந்த சேதனனுக்கு யதாவத் ப்ரதிபத்தியை பிறப்பிக்கிறது.

  • ஸ்வஸ்வரூபமாகிறது தேஹேந்த்ரியாதிகளிற் காட்டில் விலக்ஷணமாய், நித்யமாய் ஜ்ஞாநாநந்த லக்ஷணமான ஆத்மஸ்வரூபம்; அதில் யதாவத் ப்ரதிபத்தியாவது பகவதநந்யார்ஹ ஶேஷபூதமாய் பகவதேக ரக்ஷ்யமாய் பகவதேக போக்யமாயிருக்குமென்று அறிகை.
  • பரஸ்வரூபமாவது ஹேயப்ரத்யநீகமாய் கல்யாணகுணாகரமாய் அப்ராக்ருத திவ்யமங்கள விக்ரஹ விஶிஷ்டமான பகவத்ஸ்வரூபம்; அதில் யதாவத் ப்ரதிபத்தியாவது ஸர்வஶேஷியாய் ஸர்வ ரக்ஷகமாய் நிரதிஶய போக்யமாயிருக்குமென்று அறிகை.
  • விரோதி ஸ்வரூபமாவது ஸ்வஸ்வரூப, பரஸ்வரூப யாதாத்ம்யஜ்ஞாந ஜநந விரோதியாய், யதாவத் ஜ்ஞாந ஜநந விரோதித்வ மாத்ரமே அன்றிக்கே, ரஜஸ் தமஸ்ஸுக்களாலே அந்யதா ஜ்ஞாந விபரீத ஜ்ஞாந ஜநகமாயிருக்கிற ப்ரக்ருதி ஸம்பந்தம்; அதில் யதாவத் ப்ரதிபத்தியாவது ஏததீயங்களான ஶப்தாதி விஷயங்கள் அல்பாஸ்திரத்வாதி தோஷதூஷிதங்களாகையாலே ஜுகுப்ஸாவிஷய மாயிருக்கு மென்றும், அவற்றை ஸ்வயத்நத்தாலே கழித்துக்கொள்ள ஒண்ணாதாப்போலே பகவதேக நிவர்த்யமாயிருக்குமென்றும் ப்ரதிபத்திபண்ணுகை.
  • புருஷார்த்த ஸ்வரூபமாகிறது அநாதிகால கர்ம ப்ரவாஹ ப்ராப்தி ப்ரக்ருதி ஸம்பந்தம் விதூநந பூர்வகமாக அர்சிராதி மார்கத்தாலே அப்ராக்ருத திவ்யதேஶத்தை ப்ராபித்து, பகவத் குணைகதாரகரான ஸூரிகளோடே ஒருகோவையாய், பகவதனுபவஜநித ஹர்ஷத்தாலே ப்ரேரிதனாய் “காமான்நீ கமரூப்யநுஸஞ்சரந், ஸர்வேஷுலோகேஷு காமசாரோ பவதி, யேநயேந தாதா கச்சதி தேநதேந ஸஹகச்சதி” இத்யாதிப்படியே, ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் உசிதமாக ஸர்வ ப்ரகாரத்தாலும் பண்ணும் ஶேஷவ்ருத்தி; அதில் யதாவத் ப்ரதிபத்தியாவது தானுகந்த கைங்கர்யமாதல் தானும் அவனுமுகந்த கைங்கர்யமாதல் பண்ணுகை அபுருஷார்த்தமென்றும், ’தந்நியுக்த: கரிஷ்யாமி’ ’க்ரியதாமிதி மாம் வத’ ’முகப்பே கூவிப்பணி கொள்ளாய்’ என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே அவனேவச் செய்கையே புருஷார்த்தமென்றும். இப்படி செய்யா நின்றால் வேறேயொரு புருஷார்த்தத்துக்கு ஸாதநதயா செய்கை அன்றிக்கே ஈஶ்வரனுடைய முகவிகாஸமே ப்ரயோஜநமாக செய்யுமதென்றும் ப்ரதிபத்திபண்ணுகை.
  • உபாய ஸ்வரூபமாகிறது ஜ்ஞாந ஶக்த்யாதி கல்யாண குணவிஶிஷ்டனாய் நித்யமங்கள விக்ரஹோபேதமாய் துஷ்கரத்வாதி தோஷ ஸம்பாவநாகந்த ஶூந்யமாய், அந்திமஸ்ம்ருதி நிரபேக்ஷமாய், ஏகரூபமாய், பரமசேதநமாய், ஸ்வரூபாநுரூபமாயிருக்கிற ஸித்தஸாதநம்; அதில் யதாவத் ப்ரதிபத்தியாவது இதரோபாய த்யாக பூர்வகமாக ஸ்வீகரிக்கவேணுமென்றும் ஸ்வீகார விஶிஷ்டமான போது பலப்ரதமாகா நிற்கச்செய்தே தந்நிரபேக்ஷமாயிருக்குமென்றும் ப்ரதிபத்தி பண்ணுகை.

அதில் ஸ்வஸ்வரூபம் சொல்லுகிறது ப்ரணவம், பரஸ்வரூபம் சொல்லுகிறது நாராயணபதம், விரோதி ஸ்வரூபத்தையும், உபாய ஸ்வரூபத்தையும் சொல்லுகிறது- நமஸ்ஸு.  நாராயணபதத்தில் சதுர்த்தி, புருஷார்த்த ஸ்வரூபத்தையும் சொல்லுகிறது.

இவ்வதிகாரிக்கு ஜ்ஞாத வ்யார்த்த ப்ரகாஶகத்வேந அத்யந்தோபாதேயமாயிருக்கிற ரஹஸ்யத்ரயத்திலும் வைத்துக்கொண்டு சரமஶ்லோகத்தாலும் த்வயத்தாலும் ப்ரதிபாதிக்கபடுகிற உபாயோபேயங்களுக்கு முன்னே ஆத்மஸ்வரூபநிரூபணம் அபேக்ஷிதமாயிருக்கையாலே, ப்ரதம ரஹஸ்யமான திருமந்த்ரம் ப்ரதமத்திலே அநுஸந்தேயம்.

அக்ஷர பத விபாகாதிகள்

திருமந்த்ரம்தான் “ஓமித்யேகாக்ஷரம்- நம இதி த்வே அக்ஷரே, நாராயணாயேதி பஞ்சாக்ஷராணி. ஓமித்யக்ரே வ்யாஹரேத் நம இதி பஶ்சாத் நாராயணாயேத் யுபரிஷ்டாத்’ என்றும் ’நின் திருவெட்டெழுத்தும் கற்று’ என்றும் ’எட்டெழுத்துமோதுவார்கள் வல்லர் வானமாளவே’ என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே எட்டு திருவக்ஷரமாய், மூன்றுபதமாயிருக்கும்.

பதத்ரயமும் அர்த்தத்ரய ப்ரகாஶகமாயிருக்கும்.

இதில் ப்ரதமபதம் ஸ்வரூப யாதாத்ம்ய ப்ரதிபாதந பரமாயிருக்கும்; மத்யமபதம் உபாய யாதாத்ம்ய ப்ரதிபாதந பரமாயிருக்கும்; உத்தரபதம் உபேய யாதாத்ம்ய ப்ரதிபாதந பரமாயிருக்கும்.

ப்ரதமபதம் ஶேஷத்வ ப்ரகாஶகமாயிருக்கும், மத்யமபதம் பாரதந்த்ர்ய ப்ரகாஶகமாயிருக்கும், உத்தரபதம் கைங்கர்ய ப்ரகாஶகமாயிருக்கும்.

ஶேஷத்வாநுஸந்தாநத்தாலே அந்ய ஶேஷத்வ நிவ்ருத்தி பிறக்கும்; பாரதந்த்ர்யாநு ஸந்தாநத்தாலே ஸ்வஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தி பிறக்கும்; கைங்கர்யாநு ஸந்தாநத்தாலே அப்ராப்த விஷய கிஞ்சித்கார நிவ்ருத்தி பிறக்கும். ஈஶ்வர ஶேஷித்வ ஜ்ஞாநத்தாலே தேவதாந்தர பரத்வ நிவ்ருத்தி பிறக்கும்; ஸ்வபாரதந்த்ர்யாநு ஸந்தாநத்தாலே ஸாத்ய ஸாதந ஸம்பந்த நிவ்ருத்தி பிறக்கும்; ஈஶ்வர போக்யதாநு ஸந்தாநத்தாலே ப்ராப்யாந்தர ஸம்ஸர்க நிவ்ருத்தி பிறக்கும்.

அதில், ப்ரதம பதமான ப்ரணவம் மூன்று அக்ஷரமாய், மூன்று பதமாய், மூன்று அர்த்த ப்ரகாஶகமாய்; ஏகாக்ஷரமாய், ஏகபதமாய், ஏகார்த்த ப்ரகாஶகமுமாயிருக்கும்.

அதில். ப்ரதமபதமான அகாரம்- பகவத் வாசகமாயிருக்கும், மத்யமபதமான உ காரம்- அவதாரண வாசியாயிருக்கும், த்ருதீய பதமான மகாரம்- ஆத்மவாசியாயிருக்கும்.

ப்ரணவம் தான் ஆத்ம ஸ்வரூபத்தையும், பர ஸ்வரூபத்தையும் ப்ரகாஶிப்பியா நிற்கச் செய்தே, ஆத்ம ஸ்வரூபத்திலே தத்பரமாயிருக்கும். “ராஜபுருஷ:” என்கிறவிடத்தில் ராஜாவும் ப்ரஸ்துதனாய் புருஷநும் ப்ரஸ்துதனாயிருக்கச் செய்தே, ஶப்தத்தாலே புருஷன் ப்ரதானனாய் அர்த்தத: ராஜா ப்ரதானனாயிருக்கும்; அப்படியே இவ்விடத்திலும் ஶப்தத்தாலே சேதனன் ப்ரதானனாய் அர்த்தத்தாலே ஈஶ்வரன் ப்ரதானனாயிருக்குமென்று ஆழ்வானருளிச் செய்யுமாகையாலே, ஶாப்தமான சேதநப்ராதானத்தைப்பற்ற. ’ஓமித்யாத்மானம் யுஞ்ஜீத’ என்று ஆத்ம வாசகமாகச் சொல்லும்; அர்த்தமான ஈஶ்வர ப்ராதாந்யத்தைப்பற்ற, ’ஓம்காரோ பகவான்விஷ்ணு:’ என்றும் ’ப்ரணவ ஸ்ஸர்வவேதேஷு’ என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே பகவத்வாசகமுமாயிருக்கும்.

அகாரார்த்தாரம்பம்

அதில், ப்ரதமாக்ஷரமான அகாரம், ’அவரக்ஷணே’ என்கிற தாதுவிலே பதமாய் நிஷ்பந்நமாகையாலே, ரக்ஷகனான ஈஶ்வரனுக்கு வாசகமாகக் கடவது. தாத்வர்த்தம் ரக்ஷணமாகையாலே, ரக்ஷணமாகிற தர்மம் ஸாஶ்ரயமுமாய், ஸர்வ விஷயமுமாயல்லதிராமையாலே, அதுக்காஶ்ரயதயா பகவத் ஸ்வரூபம் தானே புகுந்தது.  விஷயதயா பத்தமுக்த நித்யரூபமான த்ரிவிதாத்மவர்கமும் புகுரும்.  ’நஹி பாலந ஸாமர்த்யம் ருதே ஸர்வேஶ்வரம் ஹரிம்’ என்கிறபடியே, பாலந ஸாமர்த்யம் ஸர்வேஶ்வரைக நிஷ்டமாயிருக்கையாலே, பகவத்ஸ்வ ரூபம் ப்ரஸ்துதமாயித்து; இவன் இன்னார்க்கு ரக்ஷகனென்று வ்யவச்சேதியாமையாலே, த்ரிவிதாத்மவர்கமும் ப்ரஸ்துதமாம். இன்ன தேஶத்திலே ரக்ஷகனென்று சொல்லாமையாலே, ஸர்வதேஶரக்ஷகத்வம் சொல்லிற்று; ஒருகால விஶேஷத்திலே ரக்ஷகனென்று சொல்லாமையாலே, ஸர்வகாலரக்ஷகத்வம் சொல்லிற்று; இன்ன  ப்ரகாரத்திலே ரக்ஷகமென்று சொல்லாமையாலே, ஸர்வப்ரகாரத்வம் சொல்லிற்று. ’ஜ்ஞாநத்தூடே நடந்து நின்றும்’ இத்யாதி- ஜ்ஞாந ஶக்த்யாதிகளில்லாதபோது ரக்ஷகத்வமநுபபந்நமாகையாலே, ஜ்ஞாநஶக்த்யாதிகுணங்கள் ப்ரஸ்துதமாம். ஜ்ஞாந ஶக்த்யாதிகளுண்டானாலும், பந்த விஶேஷமும் காருண்யாதிகளுமில்லாதபோது “பட்டது படுகிறான்” என்றிருக்கலாமிறே; அது செய்யாதே, ரக்ஷிக்கும்போது இவை அபேக்ஷிதமாகையாலே, ஸ்வாமித்வாதிகள் ப்ரஸ்துதங்களாம். ரக்ஷிக்கும்போது கண்காணவந்து ரக்ஷிக்கவேண்டுகையாலே, திவ்யமங்கள விக்ரஹம் ப்ரஸ்துதமாம். ரக்ஷிக்கும்போது திவ்யாயுதங்களபேக்ஷிதமாகையாலே, ரக்ஷணத்துக் கேகாந்தமான பரிகரத்தையும் அநுஸந்தேயமாகக்கடவது.

ரக்ஷணமாகிறது தான் இஷ்டானிஷ்டப்ராப்தி பரிஹாரரூபமாயிருக்கையாலே, இஷ்டமும் தத்ப்ராப்தியும், அநிஷ்டமும் தன்னிவ்ருத்தியும், அநுஸந்தேயம். இஷ்டானிஷ்டப்ராப்தி பரிஹாரம் தான் அதிகாராநுரூபமாகையாலே, பத்தர்க்கும் முமுக்ஷுக்களுக்கும் முக்தர்க்கும் நித்யர்க்கும் இஷ்டானிஷ்டங்களான வஸ்த்ராந்ந பாநாதி போகங்களும், அப்ராக்ருத திவ்ய தேஶப்ராப்தியும், உத்தரோத்தராநுபவமும் பகவத நுபவஜநித ப்ரீதிகாரித கைங்கர்யம், ஶத்ரு பீடாதிகளும், ப்ரதிபந்தகர்மமும், அநுபவ விச்சேத ஶங்கையும் அநுஸந்தேயம்.

தர்மி ஸ்வரூபம் புகுந்தவிடத்திலே ஸ்வரூபநிரூபக தர்மங்களும் ப்ரஸ்து தங்களாக ப்ராப்தமாகையாலே, “ஶ்ரீநிவாஸே” என்றும் “ஶ்ரிய:பதி” யென்றும்” “நித்யஶ்ரீ” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஜ்ஞாநாநந்தங்களோபாதி பகவத் ஸ்வரூபத்துக்கு அந்தரங்க நிரூபகமாயிருக்கிற பிராட்டி ஸ்வரூபமும் நிரூபகதயா ப்ரஸ்துதமாக ப்ராப்தமாகையாலே, லக்ஷ்மீ ஸம்பந்தமநுஸந்தேயம்.

ஆக, இப்படியாவை சில அர்த்த விஶேஷங்கள் ஶாப்தமாகவும் ஆர்தமாகவும் இதினுடைய விவரணமான நாராயணபதத்திலே அநுஸந்தேயங்களாகின்றன; அவையத்தனையும் தத்ஸங்க்ரஹமான இவ்வக்ஷரத்திலேயும் அநுஸந்தேயமாகக்கடவது.

ஆக, ப்ரதமாக்ஷரத்தாலே- ஸர்வ ரக்ஷகனான ஸர்வேஶ்வரனுடைய ஸ்வரூபம் சொல்லப்பட்டது.

லுப்தசதுர்த்யர்தாரம்பம்

இதன் மேலேறிக் கழிந்த விபக்த்யம்ஶம்.  தத்ப்ரதிஸம்பந்தியான சேதந விஶேஷத்வத்தை ப்ரதிபாதிக்கிறது. ’தாஸ பூதாஸ்ஸ்வதஸ் ஸர்வே’ என்றும் ’யஸ்யாஸ்மி’ என்றும் ’பரவாநஸ்மி’  என்றும் ’தாஸோஹம்’ என்றும் இத்யாதி ப்ரமாணங்கள் சொல்லுகிறபடியே, ஸகலாத்மாக்களுக்கும் ஶேஷத்வமிறே ஸ்வரூபம் ஸ்வாதந்த்ர்ய மௌபாதிகமாய் த்யாஜ்யமாயிறேயிருப்பது.

’ஸர்வம் பரவஶம் து:கம்’ இத்யாதிகளிற்படியே, லோகத்திலே ஶேஷத்வம் து:கரூபமாய் ஸ்வாதந்த்ர்யம் ஸுகரூபமாயன்றோ கண்டுபோருகிறது, லோகத்ருஷ்டிக்கும் விருத்தமாக ஸுக ரூபமான ஸ்வாதந்த்ர்யத்தை த்யாஜ்யமென்றும் து:கரூபமான ஶேஷத்வத்தையுபாதேயமென்று சொல்லுகை அநுபபந்நமன்றோவென்னவொண்ணாது. லோகத்தில் ஸ்வாதந்த்ர்யமாகில் ஸுகரூபமாய் பாரதந்த்ர்யமாகில் து:கரூபமாயிருக்குமென்று ஒரு நியமமில்லாமையாலே லோகத்தில் ஸ்வதந்த்ரனான அவன் தனக்கே ஒரு வ்யக்தி விஶேஷத்திலே பாரதந்த்ர்யம் தானே போகரூபமாகக் காணா நின்றோமிறே; ஆகையாலே, ஶேஷத்வம் தானே ஸுகரூபமாகிலுபாதேயமாகக்கடவது; ஸ்வாதந்த்ர்யம் தானே து:கரூபமாகில் த்யாஜ்யமாகக் கடவது, ’ஸேவாஶ்வவ்ருத்திர் வ்யாக்யாதா தஸ்மாத்தாம் பரிவர்ஜயேத்’ என்று நிஷேதித்தது – நிஷித்தஸேவையும், அப்ராப்தவிஷயத்தில் ஸேவையும், ப்ராப்த விஷயத்தில் ஸேவையையும், ’ஸா கிமர்தம் ந ஸேவ்யதே’ என்றும் ’சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச்சேவித்து’ என்றும் உபாதேயமாகச் சொல்லா நின்றார்களிறே. ஈஶ்வர ஶேஷத்வம் விஹிதமாய், ’தாஸ்யமஹா ரஸஜ்ஞா:’ என்றும் ’தாஸ்ய ஸுகைகஸங்கிநாம்’ என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே போகரூபமாயிருக்கையாலே உபாதேய மாகக்கடவது.

உகாரார்த்தாரம்பம்

மத்யமாக்ஷரமான உகாரம், ஶேஷத்வ விரோதியான அந்ய ஶேஷத்வத்தினுடைய நிவ்ருத்தியை ப்ரதிபாதிக்கிறது; சதுர்தீ விபக்தியாலே, ஈஶ்வர ஶேஷத்வம் ப்ரதிபாதிதமாகச் செய்தே, அந்ய ஶேஷத்வம் ப்ரஸ்துதமாமோ வென்னில்; லோகத்ருஷ்ட்யாவொரு அந்யஶேஷத்வ ஶங்கையுண்டநுவர்த்திப்பது. லோகத்திலே ஒருவனுக்கு ஶேஷமான க்ருஹக்ஷேத்ர புத்ரதாஸதாஸிகள் வேறேயும் சிலருக்கு ஶேஷமாகக் காணாநின்றோம். அப்படிப்பட்ட அந்ய ஶேஷத்வமிந்த ஸ்தலத்திலும் உண்டோவென்றொரு ஶங்கையுதிக்குமிறே; ஆகையாலே, தாத்ருஶ அந்ய ஶேஷத்வம் இங்கில்லை யென்னுமிடத்தை ப்ரதிபாதிக்கிறது உகாரம். ’ததேவபூதம் ததுபவ்யமா இதம்’ என்றும் ’ததேவாக்நிஸ் தத்வாயுஸ் தத்ஸூர்யஸ் ததுசந்த்ரமா:’ என்றும் இத்யாதிகளிலே, ஏவகார ஸ்தாநத்திலே உகாரத்தை ப்ரயோகிக்கக் காண்கையாலே, இவ்வுகாரம் ஸ்தாந ப்ரமாணத்தாலே அவதாரணார்த்த வாசகமாகக்கடவது ’உகாரஶ்சைவ காரார்த்த:’ என்று, அவதாரணவாசகமென்றுமிடத்தை அருளிச்செய்தாரிறே பட்டர். க்ருஹ க்ஷேத்ர புத்ரதாராதிகளினுடைய ஶேஷத்வம் போலே ஔபாதிகமாய், அநேக ஸாதாரணமாய், அநித்யமாய், ப்ருதக் ஸித்தமாயிருக்கையன்றிக்கே, நிருபாதிகமாய், அநந்யஸாதாரணமாய், நித்யமாய், அப்ருதக் ஸித்தமான பகவத் ஶேஷத்வத்தை ப்ரதிபாதிக்கிறது.

மகாராத்தாரம்பம்

ஏவம் வித ஶேஷத்வம் சிதசித் ஸாதாரணமாயிருப்பது. அதில், ஶேஷத்வவிஷய ஜ்ஞாநம்; தத்கார்யமாயிருக்கிற ததநுகுண ஸாதநஸ்வீகாரம், தத்கார்ய ததநுகுண ஸாத்யாநுபவம், ததநுபவ விரோதி ப்ரதிபந்தக நிபர்ஹணம் தொடக்கமான ஶேஷத்வ கார்யங்கள் பிறக்கைக்கு யோக்யதை யுண்டாயிருக்கிற ஜீவாத்ம ஸ்வரூபத்தை ப்ரதாநதயா ப்ரதிபாதிக்கிற த்ருதீயாக்ஷரமான மகாரம் ’மந-ஜ்ஞாநே’ என்கிற தாதுவிலே பதமாய் நிஷ்பன்ன மாகையாலே, ஜ்ஞாதாவான ப்ரத்யகாத்மாவினுடைய ஸ்வரூபம் சொல்லுகிறது. ஜ்ஞாநவாசக ஶப்தம் தானே ஜ்ஞாநைக நிரூபணீயனான ஆத்மாவை ப்ரதிபாதிக்குமென்றும் சொல்லிற்றிறே. ’தத்குணஸாரத்வாத் து தத்வ்யபதேஶ: ப்ராஜ்ஞவத்’ என்கிற ஸூத்ரத்திலே; அங்ஙனன்றியே, ககாராதி பகாராந்தமான இருபத்துநாலக்ஷரமும் இருபத்து நாலு தத்வத்துக்கும் வாசகமாகச் சொல்லி, இருபத்தைந்தாம் அக்ஷரமான மகாரத்தை பஞ்சவிம்ஶகனான ஆத்மாவுக்கு வாசகமாகச் சொல்லுகையாலே மகாரம் ஆத்ம வாசகமாகவுமாம். இம்மகாரம் ஜீவ ஸமஷ்டி வாசகமாகையாலே, கீழ் சொன்ன அநந்யார்ஹ ஶேஷத்வத்துக் காஶ்ரயமான பத்த முக்த நித்ய ரூபமான த்ரிவிதாத்ம வர்கமும் அநுஸந்தேயமாகக்கடவது. ஆத்மஸ்வரூபம் ஜ்ஞாநாநந்த லக்ஷணமாயிருக்குமென்கையாலே, ஜடமாய் து:கரூபமாயிருக்கிற ப்ரக்ருதி தத்த்வத்தில் காட்டில் வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது. ஜ்ஞாநாநந்தங்களுக்கு முன்னே பகவத் ஶேஷத்வத்தை நிரூபகமாகச் சொல்லிற்றாகையாலே அவற்றிற் காட்டிலிது அந்தரங்க நிரூபகமாகக் கடவது. ஒளிக்காஶ்ரயமென்று மாணிக்கத்தை விரும்புமாப்போலேயும், மணத்துக்காஶ்ரயமென்று புஷ்பத்தை விரும்புமாப்போலேயும், ஶேஷத்வத்துக்காஶ்ரயமென்றிறே ஆத்மஸ்வரூபத்தை விரும்புகிறது. கீழ்ச் சொன்ன ஶேஷத்வம் உபய ஸாதாரணமாயிருக்கையாலே, சேதநப்ரகாரமான அசித்தத்வமும் பகவத் ஶேஷத்வாஶ்ரயதயா, இவ்விடத்திலே அநுஸந்தேயம்.

ஆக, ப்ரணவத்தாலே ஶேஷத்வ ப்ரதிஸம்பந்திதயா ப்ரஸ்துதனான ஈஶ்வரனை ரக்ஷகத்வ தர்மத்தையிட்டு நிரூபித்து, அப்படிப்பட்ட ஈஶ்வரனுக்கு ஶேஷபூதனான ஆத்மாவிநுடைய ஜ்ஞாநாநந்த லக்ஷணத்தைச் சொல்லி, ஸர்வஶேஷியான ஸர்வேஶ்வரனுக்கு அநந்யார்ஹ ஶேஷபூதனான ஆத்மாவென்னுமிடத்தைச் சொல்லித்தலைக்கட்டுகிறது.

நம: பதார்த்தாரம்பம்

இப்படி ஸ்வாபவிகமான பகவச் சேஷத்வத்தை அநாதிகாலம் அபிபூதமாம்படி பண்ணின விரோதியினுடைய ஸ்வரூபத்தையுபாதாநம் பண்ணிக்கொண்டு தன்னிவ்ருத்தியை ப்ரதிபாதிக்கிறது- நமஸ்ஸு.

இதுதான், சதுர்த்யந்தமான அகாரத்தில் சொல்லுகிற ஈஶ்வர ஶேஷத்வத்துக்கு விரோதியான அந்யஶேஷத்வத்தை நிவர்திப்பிக்கிற உகாரத்திலே அந்யதமதயா ப்ரஸ்துதமான ஸ்வஸ்வரூபத்தில் ஸ்வஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தியை விவரிக்கிறது.  இங்கே விஶேஷித்துச் சொல்லுகையாலே இத்தை ஒழிந்த அந்ய ஶேஷத்வ நிவ்ருத்தியைச் சொல்லுகிறதாகவுமாம்.

இது தான், ‘ந’ என்றும் ‘ம:’ என்றும், இரண்டு பதமாயிருக்கும். இதில் ப்ரதமபாவியான நஞ்ஞாலே ’வீடுமின் முற்றவும்’ என்னுமாப்போலே, த்யாஜ்ய ஸ்வரூப நிரூபணம் பண்ணுமதுக்கு முன்னே த்யாகத்தை ப்ரதிபாதிக்கிறது. ஆத்மஸ்வரூபம் பகவதநந்யார்ஹ ஶேஷத்வைக நிரூபணீயமாயிருக்குமென்றுமிடம் தோற்ற ப்ரணவத்திலே ஆத்மஸ்வரூபத்தை ப்ரதிபாதிப்பதற்கு முன்பே ஶேஷத்வத்தை ப்ரதிபாதித்தாற்போலே, இவ்விடத்திலும் விரோதி ஸ்வரூபம் நிஷித்ததைக நிரூபணீயமாயிருக்குமென்றுமிடத்தை ப்ரகாஶிப்பிக்கைக்காக நிஷித்த ஸ்வரூப ப்ரதிபாதநத்துக்கு முன்பே நிஷேதந ப்ரதிபாதநம் பண்ணுகிறது.  ‘ம:’  என்கிறவிது ஷஷ்டியாகையாலே, எனக்கென்றபடி; எனக்கென்கிறது –தன்னையாதல், தன்னுடைமையாதல். அநுஷங்கத்தாலே, கீழ்ச்சொன்ன தன்னை எனக்கென்கையாகிறது- நான் ஸ்வதந்த்ரனென்கை. அத்யாகாரத்தாலே தன்னுடைமையை எனக்கென்கையாகிறது. நான் ஸ்வாமி யென்கை.  ஸ்வாதந்த்ர்யமாவது – அஶேஷத்வம். ஸ்வாமித்வமாவது- ஸ்வாऽந்ய விஷயமாயிருக்கும் தன்னை எனக்கென்கிறது; ஸ்வஶேஷத்வமாகவுமாம். ந – என்கிறவிது ப்ரதிஷேதத்யோதகமாகையாலே, அத்தை நிஷேதிக்கிறது. ஈஶ்வரனுக்கு ஶ்ரீகௌஸ்துபத்தோபாதி ஸ்ப்ருஹா விஷயமான ஆத்மஸ்வரூபம் அநாதிகாலம் ஸம்ஸரித்துப்போந்தத. ’அஹம்க்ருதிர்யா பூதாநாம்’ என்றும் ’அநாத்மந்யாத்மபுத்திர்யா’ என்றும் சொல்லுகிறபடியே அஹங்காரத்தாலும் மமகாரத்தாலுமாக அந்த ஸம்ஸார நிவ்ருத்தி பிறந்து ’அஹமந்நம்’ என்கிறபடியே ஈஶ்வரனுக்கு போக்யமாம் போது, ’அச்யுதாஹம் தவாஸ்மீதி’ என்றும் ’நமமேதி ச ஶாஶ்வதம்’ என்றும் சொல்லுகிறபடியே அவை இரண்டும் நிவ்ருத்தமாகவேணும், ’நீர் நுமது என்றிவை வேர்முதல் மாய்த்து இறைசேர்மின்’ என்கிற படியே, அஹங்கார மமகார ராஹித்யமில்லாதபோது, ஈஶ்வர ஸம்பந்த யோக்யதை இல்லை. ஸ்வஸ்மிந் ஸ்வத்தாநு ஸந்தாநமில்லாதபோது, ஸ்வாமி ஸந்நிதியில் நிற்கைக்கு அநர்ஹனாயிறே இருப்பது. அஹங்கார மமகாரங்களிரண்டும் அந்யோந்யம விநாபூதமாகையாலே, அஹங்காரம் வந்த விடத்தே மமகாரம் வந்து மம காரம் வந்தவிடத்தே அஹங்காரம் வரும்படியாயிருக்கையாலே, அஹங்கார மமகாரங்களிரண்டும் ப்ரஸ்துதமாய்- இரண்டினுடைய நிவ்ருத்தியும் இவ்விடத்தை அநுஸந்தேயம்- ’யானேயென்றெனதே யென்றிருந்தேன்’ என்று, அஹங்கார மமகாரங்களிரண்டையும் அநுஸந்தித்து, ’யானே நீ என்னுடைமையும்  நீயே’ என்று அநந்தரத்திலே அவற்றினுடைய நிவ்ருத்தியும் அநுஸந்தித்தாரிறே; ’யஸ்யைதே தஸ்ய தத்தநம்’ என்கிறபடியே, அஹங்காரம் போனவாறே மமகாரம் போமிறே. அஹங்கார மம கார நிவ்ருத்தி மாத்ரமேயன்றிக்கே, ’பகவத ஏவாஹஸ்மி’ என்றும் ’தேஷாமபி நமோ நம:’ என்றும் ’ததீய தர்ஶநேபி ஏவம் பவேத்’ என்றும் ’உற்றதும் உன்னடியார்க்கு அடிமை’ என்றும் ’அடியார்க்கு ஆட்படுத்தாய், அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்’ என்றும் இத்யாதியிற்படியே- பகவத் பாரதந்த்ர்யமும் தத்காஷ்டபூமியான பாகவதபாரதந்த்ர்யமும் அநுஸந்தேயமாகக்க டவது.

ததீய ஶேஷத்வாநந்யார்ஹ ஶேஷத்வங்களிரண்டினுடையவும் பரஸ்பர விரோதராஹித்யமடியாக வருகிற ஏகத்ர, ஸமாவேஶாபடனத்தாயாலே அந்யத்ர பரித்யாகம் ப்ரஸங்கிக்குமென்று சொல்லவொண்ணாது. ததீய ஶேஷத்வ விஷயாந்யத்வா பாவப்ரயுக்தமான பரஸ்பர விரோத ராஹித்யமடியாக வருகிற ஏகத்ர ஸமாவேஶோபபத்தியாலே உபயஸ்வீகாரம் விருத்தமாகையாலே இப்படி தர்ம த்வயத்தினுடையவும் விரோதஹேதுவான அந்யஶப்தார்த்த ததீய ஶப்தார்த்தத்தை ப்ரதிக்ஷேபித்துக்கொண்டு, உபயத்துக்கும் ஏகத்ரஸமாவேஶத்தை அங்கீகரித்து, அவ்வழியாலே அந்யதர பரித்யாக ப்ரஸங்கத்தை பரிஹரிக்கும் போது, பகவச்சேஷத்வாபாவத்தையொழிய அந்யஶப்தார்த்த வ்யக்திக்கு அந்யத்வம் அங்கடியாமையாலே, த்ருதீயாக்ஷரவாச்யரான ஜீவர்களிலே சிலருக்க்கு பகவச்சேஷத்வமின்றிக்கே ஒழியாதோவென்னில்; இங்கு விவக்ஷிதமான ததீயத்வமாகிறது- பாகவத ஶேஷத்வ பர்யந்தமான மிதுந ஶேஷத்வ ஜ்ஞாநாவஸ்தை யாகையாலும்; அந்யத்வமாகிறது- ஈத்ருஶ ஜ்ஞாந விஶேஷராஹித்யமாகையாலும் சிலருக்கு ஶேஷத்வ மின்றிக்கே ஒழியாது. இத்தால், பகவத் ஶேஷத்வ ஜ்ஞாநாவஸ்தாமாத்ரம் ததீய (ஶேஷ) த்வமென்று நினைத்துப் பண்ணும் அதி ப்ரஸங்கமும் பரிஹ்ருதம்.

இந்த நமஸ்ஸுதான்; ப்ரணவத்துக்கும் நாராயண பதத்துக்கும் நடுவே கிடக்கையாலே, இரண்டு பதத்துக்கபேக்ஷிதமான விரோதி நிவ்ருத்தியைச் சொல்லக்கடவது. ஆகையாலே, ஸ்வரூப விரோதியும் ஸாதந விரோதியும் ப்ராப்ய விரோதியுமாகிற விரோதி த்ரயத்தினுடையவும் நிவ்ருத்தியை இப்பதத்திலே அநுஸந்திக்கக் கடவது. பூர்வோத்தர பதத்வயத்திலும், ஸ்வரூபமும் ப்ராப்யமும் ப்ரதிபாதிதமாகையாலே, தத்விரோதிநிவ்ருத்தி இப்பதத்திலே அநுஸந்தேயமாக ப்ராப்தம். ஸாதந ஸ்வரூபம் அப்ரஸ்துதமாயிருக்க தத்விரோதி நிவ்ருத்தி இவ்விடத்திலே அநுஸந்தேயமாம்படி என்னென்னில்; கீழில் பதத்தில் ஸாதநஸ்வரூபம் ப்ரஸ்துதமாகையாலே, தத்விரோதி நிவ்ருத்தியை அநுஸந்திக்கக் குறையில்லை. மேலிற் பதத்திலே ஶாப்தமாகச் சொல்லும்; இப்பதத்திலே நிஷேத்யதயா ப்ரஸ்துதமான ஸ்வாதந்த்ர்யம் பகவதேக ஸாதநதைக வேஷமான ஸ்வரூபத்துக்கு விரோதியாய், ஸ்வரக்ஷணத்தில் ஸ்வாந்வயத்துக்கு ஹேதுபூதமாயிருப்பதொன்றிறே; தாத்ருஶமான ஸ்வாதந்த்ர்யம் நிவ்ருத்திமாகையாகிறது- ஸ்வரக்ஷணத்தில் ஸ்வாந்வயம் ஸ்வரூபஹாநி என்றறிகையிறே.  ஸ்வஸ்வரூபமீஶ்வரனைக் குறித்து அத்யந்த பரதந்த்ரமாயிருக்கையாலே, ஸ்வரக்ஷணத்தில் தனக்கந்வயமுண்டானால் ஈஶ்வரனைக் குறித்து தனக்கத்யந்த பாரதந்த்ர்ய மின்றிக்கே யொழியும் ஆகையாலே, ஈஶ்வரைக பரதந்த்ரதா விரோதியான ஸ்வரக்ஷணத்தில் ஸ்வாந்வயம் நிவ்ருத்தமானால் பின்னை அந்வயமுள்ளது அகாரத்திலே ஸ்வரக்ஷகதயா ப்ரஸ்துதமான ஈஶ்வரனுக்கேயாகையாலே, அவனுடைய உபாயபாவம் இவ்வழியாலே இதிலே ப்ரஸ்துதமாம், ஸ்வரக்ஷணத்திலே தான் அதிகரித்தாரே ஈஶ்வரன் கை வாங்கியிருப்பது. தன்னுடைய ரக்ஷணத்திலே தான் கைவாங்கினால் கஜேந்த்ரரக்ஷணம் பண்ணினாப்போலே த்வரித்துக்கொண்டு இவனுடைய ரக்ஷணத்திலே அதிகரிப்பான் ஈஶ்வரனிறே.  இப்படியார்த்தமாக ஈஶ்வரனுடைய உபாயபாவம் ஸித்திக்கையன்றிக்கே ’நமஶ் சக்ருர் ஜநார்தநம்’ என்கிறபடியே ஸ்தாந ப்ரமாணத்தாலே நமஶ்ஶப்தத்துக்கு ஶரணஶப்த பர்யாயத்வமுண்டாகையாலே, ஶாப்தமாக ஈஶ்வரனுடைய உபாயபாவம் ஸித்திக்கும்.

இப்படி நம: ஶப்தம் உபாய ஸ்வரூபத்தை ப்ரதிபாதிக்கையாலே, தத்விரோதி நிவ்ருத்தியும் இப்பதத்திலே அநுஸந்தேயம், ஸ்வரக்ஷணே ஸ்வாந்வய ஹேதுபூதமான ஸ்வஸ்வாதந்த்ர்யம் நிவ்ருத்தமாகை ஸாதந விரோதி நிவ்ருத்தி பிறக்கையாகிறது.

அநந்யார்ஹ ஶேஷத்வத்துக்கு பலம் ஶேஷி விஷய கிஞ்சித்காரமாகையாலே ஶேஷத்வாநுஸந்தாநத்துக்கு அநந்தரபாவியாயிருப்பது ஶேஷவ்ருத்தி ப்ரார்த்தனை யன்றோ? ஆனால் ஶேஷத்வ வாசகமான பதத்துக்கநந்தரம் ஶேஷவ்ருத்தி ப்ரார்தனா ப்ரதிபாதகமாயிருக்கிற உத்தரபதமநுஸந்தேயமாக ப்ராப்தமாயிருக்க அதற்கு முன்பே நமஸ்ஸு அநுஸந்தேயமாவனென்னென்னில்; அப்பதத்தில் ப்ரதிபாதிதமான கைங்கர்ய கரணம் விரோதி நிவ்ருத்தி பூர்வகமாயருக்கையாலும், ஶேஷத்வ ப்ரார்தநைக்கு ஶேஷத்வ ஜ்ஞாந பௌஷ்கல்யம் பிறக்கவேண்டுகையாலே உபேயஸித்திக்கு உபாயாநந்தர பாவித்வமுண்டாகையாலும், விரோதி நிவ்ருத்த்யாதிகளுக்கு ப்ரதிபாதகமான இந்த பதம் நாராயண பதத்துக்குமுன்னே அநுஸந்தேயம். உபேயஸித்திக்கு உபாயாந்தர பாவித்வமுண்டாகையாலே இதே உத்தர வாக்யத்துக்கு முன்னே பூர்வ வாக்யமநுஸந்தேயமாகிறது. ஈஶ்வரனுடைய உபாயபாவாநு ஸந்தாநத்துக்கு ஈஶ்வரனுடைய ரக்ஷகத்வாநுஸந்தாநம் ஸ்வஶேஷத்வாநு ஸந்தாநம் தொடக்கமானவை அபேக்ஷிதங்களாகையாலே, நமஸ்ஸுக்கு முன்னே தத்ப்ரதிபாதகமான ப்ரணவம் அநுஸந்தேயம், இப்படியாகாதபோது, நமஸ்ஸு உகார விவரணமன்றிக்கேயொழியுமிறே.

நாராயண பதார்த்தாரம்பம்

ப்ரணவ நமஸ்ஸுக்களாலே ஸ்வரூபஶோதநமும், உபாய ஶோதநமும் பண்ணப்பட்டது; இனி மேல், சதுர்த்யந்தமான நாராயணபதம் உபேயஶோதநம் பண்ணுகிறது.  கைங்கர்ய ப்ரதிஸம்பந்திதயா உதிக்கும் பகவத்ஸ்வரூபமும் உபயவிபூதி விஶிஷ்டமாயிருக்கையாலே, உபயவிபூதி யோகத்தையும் சொல்லுகிறது நாராயணபதம். நர:, நார:, நாரா:, என்று- நித்யபதார்த்தத்தையும் அதனுடைய ஸமூஹத்தையும், ஸமூஹ பாஹுள்யத்தையும் சொல்லுகிறது. ப்ரக்ருதி புருஷகாரங்களோடு, பரமபதத்தோடு, முக்த நித்யவர்கத்தோடு, சத்ரசாமர ப்ரமுகமான பரிச்சந்தங்களோடு, ஆயுதாபரணங்களோடு, பெரியபிராட்டியார் தொடக்கமான நாய்ச்சிமாரோடு, திவ்யமங்களவிக்ரஹத்தோடு, ஜ்ஞாநஶக்த்யாதி குணங்களோடு வாசியற ஸர்வத்தையும் நாரஶப்தம் ப்ரதிபாதிக்கிறது ’எண்பெருக்கந்நலத்தொண் பொருள்’ என்றும் ’நாரணன் முழுவேழுலகுக்கும் நாதன்’ என்றும், அருளிச் செய்கையாலே, சேதநா சேதநங்களிரண்டும் நாரஶப்தவாச்யமாகக்கடவது. ’ஈறில வண் புகழ் நாரணன்’ என்றும் ’வாழ்புகழ் நாரணன்’ என்றுமருளிச்செய்கையாலே, குணங்களும் நாரஶப்த வாச்யமாகக்கடவது ’செல்வ நாரணன்’ என்றும் ’திருநாரணன்’ என்றும் பிராட்டி ஸ்வரூபமும் நாரஶப்தவாச்யமாகக்கடவது. ’காராயின காளநன் மேநியிநந் நாராயணன்’ என்கையாலே திவ்யமங்களவிக்ரஹமும், ஆயுதாபரணங்களும், காந்தி ஸௌகுமார்யாதிகுணங்களும், நாரஶப்தவாச்யமென்றுமிடம் ஸூசிதம்.

அயநஶப்தம், இவற்றுக்கிருப்பிடமாயிருக்குமென்று ஈஶ்வரனை ப்ரதிபாதிக்கிறது. ’நாராணாம் அயநம்’ என்கிற தத்புருஷ ஸமாஸத்தில் நித்ய பதார்த்தங்களெல்லாவற்றுக்கும் ஈஶ்வரன் இருப்பிடமென்று பொருள்.

நாரா: அயநம் யஸ்ய என்கிற பஹுவ்ரீஹி ஸமாஸத்தில், நாரங்களை ஈஶ்வரன் இருப்பிடமாக உடையன் என்னுமர்த்தத்தைச் சொல்லுகிறது. அயநஶப்தம், ப்ராப்யத்துக்கும் வாசகமாய் ப்ராபகத்துக்கும் வாசகமாயிருந்ததேயாகிலும், இவ்விடத்தில் ப்ராப்யபரமாயிருக்கும். பஹுவ்ரீஹி ஸமாஸத்தில், அயந ஶப்தம், திவ்யாத்மஸ்வரூபத்தையொழிந்த ஸகல வஸ்துக்களுக்கும் வாசகமாயிருக்கும்; ஷஷ்டீ ஸமாஸத்தில், திவ்யாத்ம ஸ்வரூபமொன்றுக்கும் வாசகமாயிருக்கும் ஈஶ்வரனுடைய ஸர்வாத்மத்வ அபஹத பாப்மத்வ பரமபத நிலயத்வத்யோதகமாம் குணவிஶேஷங்களெல்லாம் இப்பதத்திலேயநுஸந்தேயங்களாகக்கடவது.

வ்யக்த சதுர்தியின் அர்த்தம்

இதில் சதுர்த்தீ, ப்ரணவத்தில் சொன்ன அநந்யார்ஹஶேஷத்வத்தினுடையவும் நமஸ்ஸில் சொன்ன உபாய ஸ்வீகாரத்தினுடையவும் பலரூபமான கைங்கர்ய ப்ரார்த்தநத்தை ப்ரதிபாதிக்கிறது. தேஶ, காலாவஸ்தா ப்ரகார விஶேஷ விதுரமாக ப்ரார்த்திக்கையாலே ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளுக்கும் உசிதமான ஸகல ஶேஷ வ்ருத்தியையும் சொல்லுகிறது.

திருமந்த்ரார்த நிகமநம்

ப்ரதமாக்ஷரமான அகாரத்தாலே- ஈஶ்வரனுடைய ரக்ஷகத்வம் சொல்லி, சதுர்த்யம்ஶத்தாலே ஜீவாத்மாக்களுடைய ஶேஷத்வம் சொல்லி, உகாரத்தாலே- அந்ய ஶேஷத்வ நிவ்ருத்தி சொல்லி, மகாரத்தாலே- ஶேஷத்வாஶ்ரயமாய் ப்ரக்ருதே: பரமான ஆத்ம ஸ்வரூபத்தினுடைய ஜ்ஞாநாஶ்ரயத்வத்தை ப்ரதிபாதித்து நமஸ்ஸாலே- அநாதி காலம் ஏவம் வித ஶேஷத்வத்துக்கு திரோதாயகமாய்ப்போந்த விரோதி ஸ்வரூபத்தை நிவர்திப்பித்து பாகவத ஶேஷத்வ ப்ரதிபாதநத்வாரா பகவத் ஶேஷத்வத்தை ஸ்திரமாக்கி, ஶேஷத்வாநுரூபமான ஸித்த ஸாதந ஸ்வீகாரத்தைச் சொல்லி, நாராயணபதத்தாலே- நித்யவஸ்து ஸமூஹ பாஹுள்யம் சொல்லி ததாஶ்ரயமான பகவத் ஸ்வரூபத்தினுடைய ஸர்வஶேஷித்வ ஸர்வரக்ஷகத்வ நிரதிஶய போக்யத்வ நிருபாதிக பாந்தவத்வ நியந்த்ருத்வ தாரகத்வ ப்ரமுகமான குணவிஶேஷங்களைச் சொல்லி, சதுர்த்யம்ஶத்தாலே- நிரதிஶயாநந்தரூபமான ஸஹஜ கைங்கர்யத்தினுடைய ஆவிர்பாவ ப்ரார்த்தநத்தைச் சொல்லித் தலைக்கட்டுகிறது.

ஆக, திருமந்த்ரத்தாலே- ஈஶ்வரனுக்கும் ஆத்மாவுக்கும் உண்டான ஸம்பந்தத்தையும், ஸம்பந்தாநுரூபமான உபாய ஸ்வீகாரத்தையும், ஸ்வீகாராநுகுணமான உபேய ப்ரார்தநத்தையும் சொல்லித் தலைக்கட்டுகிறது.

’விடையேழடர்த்தான்’ என்கிற பாட்டும், ’மூன்றெழுத்தனை ’ என்கிற பாட்டும், ப்ரணவார்த்தமாக அநுஸந்தேயம், ’யானே’ என்கிறபாட்டும்  நம: ஶப்தார்த்தமாக அநுஸந்தேயம், ’எம்பிரான் எந்தை’ என்கிற பாட்டு, நாராயண ஶப்தார்த்தமாக அநுஸந்தேயம்; ’ஒழிவில் காலமெல்லாம்’ என்கிற பாட்டு, சதுர்த்யர்தமாக அநுஸந்தேயம்; அகாரார்தாயைவ என்கிற ஶ்லோகம், பதத்ரயத்துக்கும் அர்த்தமாக அநுஸந்தேயம்.

திருமந்த்ர ப்ரகரணம் ஸம்பூர்ணம்

ஶ்ரீமதே ராமானுஜாய நம:

பரந்தபடி

-வது சரமஶ்லோக ப்ரகரணம்

உபோத்காதம்

திருமந்த்ரத்தில் மத்யமபதத்தாலும் நாராயணபதத்தாலும் ஆர்த்தமாக ப்ரதிபாதிக்கப்பட்ட அர்த்தத்வயத்தையும், சரமஶ்லோகத்தில் அர்த்தத்வயம் ஶாப்தமாக ப்ரதிபாதிக்கிறது. ஸங்க்ரஹமான பதத்வயத்துக்கும் பூர்வாபர நியமமுண்டாயிருக்கிறாப்போலே, விவரணபதமான இதுவும் பூர்வா பரபாவேந நியதமாயிருக்கும்.  திருமந்த்ரம் அநேகார்த்தங்களை ப்ரதிபாதியா நிற்கச் செய்தே ப்ராப்ய ப்ரதி பாதநமாயிருக்கிறாப்போலே, இதுவுமநேகார்த்தங்களை ப்ரதிபாதித்ததேயாகிலும், ப்ராபக ப்ரதிபாதந பரமாயிருக்கும்.

தேஹாத்மாபிமானியாய், ஆத்மபரமாத்ம விவேக ஶூந்யனாயிருக்கிற அர்ஜுனனைக் குறித்து ’அமலங்களாக  விழிக்கும்’ என்கிறபடியே- ஸகல பாபலக்ஷண நிபுணங்களாயிருக்கிற திவ்யகடாக்ஷங்களாலும், அம்ருத நிஷ்யந்தியான வசந விஶேஷங்களாலும், முமுக்ஷுத்வ விரோதிகளான ஸகல ப்ரதிபந்தகங்களையும் நஶிப்பித்து, மோக்ஷ ருசியையுண்டாக்கி, ’தே தம் புக்த்வா ஸ்வர்கலோகம் விஶாலம் க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விஶந்தி’ இத்யாதியாலே – ஐஶ்வர்யம் அல்பாஸ்திரத்வாதி தோஷ தூஷிதமாயிருக்கு மென்றுமிடத்தையருளிச் செய்து, ’ஜராம ரணமோக்ஷாய’ இத்யாதியாலே கைவல்யம் க்லேஶஸாத்யத்வாதி தோஷ துஷ்டமென்றுமிடத்தை யருளிச் செய்து, ’மாமுபேத்யது கௌந்தேய’ இத்யாதியாலே ஸ்வப்ராப்தி லக்ஷணமான மோக்ஷமே நிரதிஶய புருஷார்த்த மென்றுமிடத்தையருளிச் செய்து, ’தஸ்மாதஸக்தஸ்ஸததம்’ இத்யாதியாலே கர்மஜ்ஞாந பக்திகளை தத்ப்ராப்திஸாதநமாக அருளிச் செய்தத்தைக்கேட்டு, அர்ஜுனன், ஸர்பாஸ்யகதமான ஜந்துவைப்போலே இருக்கிற தன்னுடைய துர்கதியையும்,  ‘மம மாயா துரத்யயா’  என்கிறபடியே- தன்னால் கழித்துக் கொள்ளவொண்ணாதபடி விரோதியம்ஶம் அதிப்ரபலமாயிருக்கிற படியையும், விஹிதோபாய விஶேஷம் துரநுஷ்டானமாயிருக்கிற படியையும் அநுஸந்தித்து, ப்ராப்ய லாப நிமித்தமாக ஶோகாவிஷ்டனாக,  அநந்தரத்திலே.  துஷ்கரங்களான ஸாதந விஶேஷங்களை ஸவாஸநமாக த்யஜித்து,  நிரபாய ஸாதநபூதனான என்னையே நிரபேக்ஷஸாதநமாக ஸ்வீகரி; ப்ராப்தி ப்ரதிபந்தகங்களை நிஶ்ஶேஷமாக நானே போக்குகிறேன்; ஆனபின்பு, ப்ராப்ய லாப நிமித்தமாக ஶோகத்தைப் பொகட்டு நிர்பரனாயிருக்க, என்று அர்ஜுனனுக்கு ஶோகத்தை நிவர்திப்பிக்கிறான்.

ஸகல ஶாஸ்த்ரங்களிலும் இப்ப்ரபந்தம் தன்னில் இஶ்ஶ்லோகத்துக்குக் கீழடங்கிலும் மோக்ஷ ஸாதநங்களாக விஹிதங்களாய் வைதிக புருஷர்களாலே அத்யாதரேண அநுஷ்டிதங்களாய்ப் போருகிற ஸாதந விஶேஷங்களைப் பரக்கவிதியா நிற்க, இஶ்ஶ்லோகத்திலே தத்த்யாகபூர்வகமாக உபாயாந்தர விதாநம் பண்ணுகை விருத்தமென்று நினைத்து, விரோதி பரிஹாரார்த்தமாகப் பலபொருள்களைச் சொன்னார்கள்.

பரமாப்தனான க்ருஷ்ணனருளிச்செய்த வார்த்தை யாகையாலும், ’க்ராவாண: ப்லவந்தே’ என்றும் ’அக்நிநா ஸிஞ்சேத்’ என்றும் இத்யாதியான வைதிக லௌகிக வாக்யம் போலே அநந்விதமாயிருக்கையன்றிக்கே அந்விதமாய்க் கொண்டு அர்த்த   ப்ரத்யாயகமா யிருக்கையாலும், ப்ரமிதிஜநகமன்றென்றும், அநேக ப்ரமாண விருத்தமா யிருக்கையாலே தத்ப்ரதிபாதிதமான அர்த்தம் அப்ராமாணிகமாய் பரீக்ஷகாநுஷ்டேயமா யிருக்கு மென்றும் சொல்லவொண்ணாது. ஆகையால், ‘கர்மபல பரித்யாக பூர்வகாங்க ப்ரபத்தி விதாநபரம் இஶ்ஶ்லோகமென்று சொன்னார்கள்;

கர்மங்களினுடைய லக்ஷண புநருக்த ஸந்நிதாநங்களாலே அந்த பக்ஷம் துஷ்டம்;

உபாஸநம்- த்ரைவர்ணிக விஷயமா விஹிதமாகிறது, ப்ரபதநம் தத்வ்யதிரிக்த விஷயமாக விதிக்கப்படுகிறது;  இப்படி வ்யவஸ்தித  விஷயமாகையாலே, உபாயத்வய விதாநம் அவிருத்தமென்று சிலர் சொன்னார்கள்;

அந்த பக்ஷம், ப்ரபத்தியினுடைய ஸர்வாதிகாரத்வ ஶ்ருதியாலும், த்ரைவர்ணிகோபதேஶ்யதாநுபபத்தியாலும், அநுஷ்டான விரோதத்தாலும், அநுபபந்நம்.

ஜ்ஞாநயோகஸாதந கர்மத்யாக பூர்வகாங்க ப்ரபதந விதாநம் பண்ணுகிறதென்கிற பக்ஷம், தர்ம ஶப்தத்தினுடைய அஸங்குசித வ்ருத்தித்வத்தாலும், ஜ்ஞாநயோக வாசகஶப்தா ஸந்நிதாநத்தாலும் துஷ்டம்.

கர்ம ஶப்தத்தினுடைய அப்ரஸ்துத ப்ராயஶ்சித்த விஷயத்வ ஸங்குசித விஷயத்வ ப்ரஸங்கத்தாலும், ஜ்ஞாந விஶிஷ்ட கர்மயோக ப்ரதிபந்தகனாகையாலும், ப்ராயஶ்சித்தவிதாந பக்ஷமும் அநுபபந்நம்.

ஶோக நிவ்ருத்த்யநுபபத்தியாலே ப்ரஶம்ஸாபரமென்கிற பக்ஷமுமநுபபந்நம்.

பூர்ணாஹுதி த்ருஷ்டாந்த முகத்தாலே ஶரணாகத்யயநுஷ்டாந மாத்ரத்திலே தாத்பர்யம், த்யாகத்தில் தாத்பர்யமில்லை என்கிற பக்ஷமும், ஸாதநாந்தர பரித்யாக லக்ஷணாங்க வைதுர்யத்தில் ப்ரபத்த்யுபாயம் அநநுவர்திதமாகையாலே அஸங்கதம்.

கர்ம யோகாதி ப்ரச்யுதி ஸம்பாவநையிலே தத்ப்ராயஶ்சித்ததயா ப்ரபத்திவிதாநம் பண்ணுகிறதென்கிற பக்ஷம், ’நேஹாபிக்ரமநாஶோஸ்தி’ என்று ப்ராயஶ்சித்த நைரபேக்ஷ்ய ப்ரதிபாதகமான பூர்வ வசநத்தோடே விரோதிக்கையாலே அஸங்கதம்.

மோக்ஷஸாதந கர்மவிரோதி ஸ்வர்காதி காம்யகர்ம பரித்யாக ப்ரதிபாதகமென்கிற பக்ஷமும், மோக்ஷஸாதந கர்மவிதாந தஶையிலே காம்யகர்மம் ப்ரதிஷித்தமாகையாலும், ’மாமேகம் ஶரணம் வ்ரஜ’ என்கிற வாக்யம் கர்ம ப்ரதிபாதகமல்லாமையாலும் துஷ்டம்.

(௧) பூர்வோக்த ஸாதநங்களுக்கு ஶோக ஜநகத்வ மில்லாமையாலும், (௨) ஶோகம் தான் ஶ்ருதமல்லாமையாலும், (௩) பக்தி த்யாகத்தில் தத்ப்ரதிபாதக ஶாஸ்த்ராந்தரத்துக்குமிந்த ப்ரபந்தம் தன்னில் பூர்வவசநங்களுக்கும் வையர்த்யம் ப்ரஸங்கிக்கையாலும், (௪) ப்ரபத்த்யுபாயத்துக்கு ஸ்வதந்த்ர ஸாதநத்வ ஶ்ரவணமில்லாமையாலும், (௫) ஸுகர மார்கமுண்டானால் வத்ஸலகரமான ஶாஸ்த்ரம் துஷ்கரமார்கோபதேஶம் பண்ணக்கூடாமையாலும், (௬) நிரங்கத்வேந ஸாதநத்வம் அகடிதமாகையாலும், விஹிதோபாய பரித்யாக பூர்வகமாக உபாயாந்தர விதாநம் பண்ணுகிறதென்கிறபக்ஷம் அநுபபந்நமென்று சிலர் சொன்னார்கள்.

(௧) இப்ரபந்தம் தன்னில் ப்ரதமத்திலே, ஸ்வரக்ஷணே ஸ்வாந்வயம் ஸ்வரூப விரோதித்வேந ப்ரகாஶிக்கும்படி ஆத்மஸ்வரூபத்தை அத்யந்த பரதந்த்ரமாக உபதேஶிக்கக் கேட்டபடியாலும், ஸததகதியான வாயுவினுடைய நிரோதம் போலே விஷயாந்தர ஸஞ்சாரியான மநஸ்ஸினுடைய நிக்ரஹம் துஷ்கரமாயிருக்கையாலும், அப்படிப்பட்ட மநஸ்ஸு தன்னை ப்ரத்யக் ப்ரவணமாக்கப் பார்த்தாலும் அதுக்கு யோக்யதை இல்லாதபடி இந்த்ரியங்கள் தந்தாம் வழியிலே இழுத்துக்கொண்டு நலியாநின்றதென்று இந்த்ரிய ப்ராபல்ய ஜநிதபீதி அநுவர்திக்கையாலும், ஸகல ஜகத்தினுடையவும் ஸத்தாஸ்தித்யாதிகள் மததீநங்களாய் நடக்கிறதென்றும் உபாஸந ஸாதந ஜ்ஞாநாதிகளுக்கும் நானே ப்ரவர்த்தகனென்று மருளிச்செய்யக்கேட்கையாலும், ஸர்வாவஸ்தைகளுக்கு ப்ரபத்தியொழிய புகலில்லை என்னுமிடம் நிழலெழும்படி இந்த்ரிய நியமநாதி ஸாதநத்வேந பலவிடங்களிலும் ப்ரபத்தி ஶ்ருதையாகையாலும் விஹித ஸாதநங்கள் பஹுதர ஸாத்யத்வ ஸாபேக்ஷத்வ ஸாபாயத்வாத்யநேக தோஷாவஹங்களாயிருக்கையாலும், விரோத்யம்ஶம் ஸ்வநிவர்த்யமல்லாதபடி அவன் கையிலே கிடக்கிறபடியை அநுஸந்தித்தால் ஜ்ஞாநவானாயிருக்கிற இவனுக்கு ஶோகவேகம் பிறக்கை ஸம்பாவித மாகையாலே பூர்வோக்த ஸாதநங்களுக்கு ஶோக ஜநகத்வமில்லை என்கிற பக்ஷம் துஷ்டம்.

(௨) இவ்விடத்திலே ஶோகம் ஶ்ருதமன்றேயாகிலும், ’மாஶுச:’ என்கிற நிஷேத வசநத்தாலே ஶோகம் அநுமேயமாகக் கடவது.

(௩) தத் ஶாஸ்த்ரங்கள் தன்னிலே ஸாதநாந்தர பரித்யாக பூர்வகமாக ஸித்தஸாதந ஸ்வீகாரம் விஹிதமாகையாலும், இதுதான் ஏகாதிகார விஷயமன்றிக்கே பின்னாதிகார விஷய மாகையாலும், ப்ரஹ்மசர்ய கார்ஹஸ்த்ய வானப்ரஸ்தாத் யாஶ்ரமங்களிலே பூர்வபூர்வாஶ்ரமவிஹித கர்மானுஷ்டான பரித்யாக பூர்வகமாக உத்தரோத்தரஶ்ரம விஹித தர்மம் அநுஷ்டேயமாகிறாப்போலே, இவ்விடத்திலும் பூர்வோபாய பரித்யாக பூர்வமாக உத்தரோபாயமநுஷ்டிதமாகை அவிருத்தமாகையாலும், ஶாஸ்த்ராந்தர விரோதமும் பூர்வவசந விரோதமும் பரிஹ்ருதம்.

(௪) 1. அநந்யஸாத்யே ஸ்வாபீஷ்டே 2. அஹமஸ்ம்யபராதாநாமாலய: 3.தஸ்மாந்ந்யாஸமேஷாம்தபஸாம் 4. முமுக்ஷுர்வைஶரணமஹம் ப்ரபத்யே 5. ஶரணம்த்வாம் ப்ரபந்நாயே இத்யாதிகளிலே ஸ்வதந்த்ரோபாயத்வேந ஶ்ருதமாகையாலே, ஸ்வதந்த்ர ஸாதநத்வாநுபபத்தியை த்வாரமாகக் கொண்டு த்யாகோபாயவிதாநபரத்வம் அர்த்தம் அன்றென்கிறபக்ஷம் துஷ்டம்.

(௫) இது தன்னாலே ஏகபல விஷயமாக ஸுகரதுஷ்கரமார்க த்வயவிதாநாநுபபத்திரூபமாம சோத்யமும் பரிஹ்ருதம். இங்ஙனே கொள்ளாதபோது, ஏகபல விஷயமான ஸமாவர்தநாதி கர்ம விதாயக ஶாஸ்த்ரங்களுக்கும் விரோதம் ப்ரஸங்கிக்கும். க்ருஷ்ணாநுஸ்மரணாதிகளும் விருத்தம்.

(௬)’ஸர்வ தர்மான் பரித்யஜ்ய’ என்று, ஸாங்கப்ரபதநம் விஹிதமாகையாலே சரமபக்ஷம் துஷ்டம்.

ஸ்வரூபாநுரூபமான இந்த உபாயத்தையே ப்ரதமத்திலே உபதேஶியாதே உபாயாந்தரங்களை உபதேஶித்து அவற்றிற்கு அநந்தரமாகவித்தை உபதேஶிப்பான் என்னென்னில், த்ரைகுண்ய விஷயமான ஶாஸ்த்ரம்; ப்ரதமத்திலே ரஜஸ்தம ப்ரசுரராய் துர்ஜ்ஞாந துர்வ்ருத்த ஸம்ருத்தரான சேதநருடைய அநீதியைக்கண்டு நெகிழ விடமாட்டாதபடி அத்யந்த வத்ஸலமாகையாலே சேதநருடைய ஸத்வாதி குணாநுகுணமாக, ஶத்ருநிரஸநவர்ஷ தநலாப புத்ர பஶ்வந்நஸ்வர்காதி புருஷார்த்தங்களையும், தத்ஸாதநமான அபிசார கார்யாதி ஸாதந விஶேஷங்களையுமுபதேஶித்து,  பரமபுருஷார்த்த லக்ஷணமோக்ஷ தத்ஸாதந ஶ்ரவணத்துக்கு யோக்யனானவவஸ்தையிலே அத்தையுபதேஶிக்கவேணுமென்று நினைத்து ப்ரதமத்திலே, நாஸ்திகனாய் பரஹிம்ஸைகபோகனாய் அத்யந்த ந்ருஶம்ஸனாய் வர்த்திக்கிற ஸமயத்திலே, அபிசார கர்மத்தை உபதேஶித்து, அவற்றை ஸபலமாகக்கண்டு, ஶாஸ்த்ர விஶ்வாஸம் பிறந்த ஸமயத்திலே தேஹாத்மாபிமானியாயிருக்கிறவனுக்கு தேஹாதுத்தீர்ணமான ஸ்வரூபத்தை அறிவிக்கைக்காக, ஸ்வர்காத்யாமுஷ்மிக ஸாத்ய ஸாதந பூத ஜ்யோதிஷ்டோமாதிகளை விதித்து, ஸ்வஸ்வாதந்த்ர்ய ப்ரதிபத்தி கழன்ற அளவிலே பகவத் பாரதந்த்ர்ய ஜ்ஞாநம் பிறக்கும்படி பகவத் கைங்கர்ய லக்ஷணமான மோக்ஷத்தையுபதேஶித்து, தத்ஸாதந பக்தியையும் விதித்து, பாரதந்த்ர்ய யாதாத்ம்ய ஜ்ஞாநார்த்தமாக அநந்தரத்திலே ப்ரபத்யுபதேஶம் பண்ணுமாப் போலே; இவனும், பந்துவத பீதியாலே யுத்த நிவர்தகனான அர்ஜுனனைக் குறித்து, ப்ரதமத்திலே ஸ்வாநுபவ லக்ஷணமான பரமபுருஷார்தத்தையும் தத்ஸாதநமான ப்ரபத்தியையும் உபதேஶிக்கச் சேராமையாலே, க்ரமத்திலே தேஹாதி விலக்ஷணமான வஸ்து விஷய ஜ்ஞாநத்தையும்  ததந்தர்யாமியான தன்னுடைய ஸ்வரூபாதி விஷய ஜ்ஞாநத்தையும் ஸ்வப்ராப்தி லக்ஷணமான மோக்ஷ விஷய ஜ்ஞாநத்தையும் ஜநிப்பித்து, தத்ஸாதநமான பக்த்யுபாயத்தை விதித்து, “ பூர்வோக்த ஸாதநங்களில் ருசிவிஷயமான ஸாதநத்தை யநுஷ்டிப்பித்து, ’நம்மை ப்ராபி, இவ்வுபாய விஶேஷங்களையொழிய நம்மை ப்ராபி; இவ்வுபாய விஶேஷங்களையொழிய நம்மை ப்ராபிக்கைக்கு உபாயங்களில்லை, இவத்திலே அந்யதமத்தையநுஷ்டிப்பித்து “நம்மைப் பெறப்பார்” என்று சொன்னால், அநந்தரத்திலேயிவனுக்குப் பிறந்த அவஸ்தைக்கநுரூபமாக ஸித்தோபாயத்தை உபதேஶிக்க வேண்டுகையாலே, ப்ரதமத்திலே உபதேஶத்திலன்.

இவ்விடம் தன்னில் த்யாஜ்யமாகச் சொல்லுகிறது. ஸர்வ தர்மஸ்வரூபத்தை என்னவொண்ணாது; அஶக்யமாகையாலும், உத்தரகாலத்தில் அநுஷ்டானம் அநுப்பந்நமாகையாலும், பலத்யாகமாகமாட்டாது. பௌநருக்த்ய ப்ரஸங்கத்தாலும், ப்ரபத்யுபதேஶம் கடியாமையாலும், ஸ்வதந்த்ரஸாதநத்வம் ஸித்தியாமையாலும், அவை விருத்த மாகையாலும், உபாயத்வ புத்தித்யாகமென்னவொண்ணாது; ப்ரபத்திக்கு தர்மாங்கத்வமும் ஆகிஞ்சநாதிகாரத்வஹாநியும் உத்தர காலத்திலநுஷ்டேய கர்மங்களில் கைங்கர்யரூபஹாநியும் ப்ரஸங்கிக்கையாலே. ஆகையாலே தர்மத்யாகோபதேஶ மநுபபந்நமன்றோ வென்னில்;

அது சொல்லவொண்ணாது, இவ்விடத்தில் த்யாஜ்ய தயா உபதிஷ்டையாகிறது ஸாதநத்வ ப்ரபத்தியாகையாலே என்றும், ஸ்வர்கார்த்தமான ஜ்யோதிஷ்டோ மாதிகளைப்போலே புத்தி விஶிஷ்டத்தாலே கர்மாந்தரத்வ முபபந்நமாகையாலே ஸ்வரூபத்தை த்யாஜ்யமாகச் சொல்லவுமாமென்றும் சொல்லுவர்கள்.

நிஷ்க்ருஷ்ட ஸத்வநிஷ்டனாய், பரமாத்மநிரக்தனாய், அபரமாத்மநி வைராக்யமுடையனாய், ப்ரமாண பரதந்த்ரனாய், பகவத்வைபவம் ஶ்ருதமானால் அது உபபந்ந மென்னும்படியான விஸ்ரம்ப பாஹுள்யமுடையனாய் ஆஸ்திகாக்ரேஸரனாயிருப்பான் ஒருவனுண்டாகில், அவனே இஶ்ஶ்லோகார்த்த ஶ்ரவணாநுஷ்டானத்துக்கதிகாரி. ஸர்வாதிகாரமாயிருக்கச்செய்தே அதிக்ருதாதிகாரமாயிறே யிருப்பது. இங்குச் சொல்லுகிற பரித்யாகம் ஸ்வீகாராங்கதயா உத்தேஶ்யமென்று ப்ரதிபத்தி பண்ணினபோது உஜ்ஜீவந ஹேதுவாம் ஸ்வரூபேண உபாதேயமென்று ப்ரதிபத்தி பண்ணினால் அநர்த்த ஹேதுவாம், அதிகாரி துர்லபத்வத்தாலும் அர்த்த கௌரவத்தாலும் இத்தை வெளியிடாதே மறைத்துக்கொண்டு போந்தார்கள் எம்பெருமானார்க்கு முன்புள்ளார். ஸம்ஸாரிகள் துர்கதியைப் பொறுக்கமாட்டாதபடி க்ருபை கரை புரண்டிருக்கையாலே  அர்த்தத்தின் சீர்மைபாராதே அநர்த்தத்தையே பார்த்து வெளியிட்டருளினார் எம்பெருமானார்.

தத்த்வநிர்ணயம் பண்ணின உய்யக்கொண்டார் விஷயமாக அருளிச்செய்தருளின வார்த்தையும், நம்ஜீயர் வீராணத்தருளாளப்பெருமாளுக்கருளிச்செய்தருளின வார்த்தையும், துடக்கமான பூர்வாசார்ய வசநங்களிவ்விடத்தேயநுஸந்தேயங்கள்.

உபாயவிதி ப்ரகரணமாய் கீழே அநேக ஸாதநங்களை விதித்துக்கொண்டு போந்ததுக்கநந்தரமாக ஸித்தோபாய பரிக்ரஹத்தை விதித்து அதுக்கு மேலொரு உபாயவிஶேஷத்தை விதியாதே இவ்வளவிலே பர்யவஸித்து விடுகையாலே இத்தை சரமஶ்லோகமென்கிறது. இப்படியாகாதபோது அதி ப்ரஸங்கமுண்டாமிறே.

“ஸாங்கமாக ஸகலதர்மங்களையும் ஸவாஸநமாக த்யஜித்து ஸௌலப்யாதி கல்யாண குணவிஶிஷ்டனாயிருக்கிற என்னையே இஷ்டப்ராப்திக்கும் அநிஷ்டநிவாரணத்துக்கும்  நிரபேக்ஷஸாதநமாக ஸ்வீகரி; ஜ்ஞாநஶக்த்யாதி கல்யாண குணகணவிஶிஷ்டனாயிருக்கிற நான், என்னையே நிரபேக்ஷ ஸாதநமாக ப்ரபத்தி பண்ணின உன்னை, அவித்யா கர்ம வாஸநா ருசி ப்ரக்ருதி ஸம்பந்தங்களாகிற விரோதிகளினின்றும் முக்தனாக்குகிறேன், உன் கார்யம் சுட்டி ஶோகிக்கவேண்டா” வென்று, உபாயாந்தர தர்ஶநத்தாலே, ஶோகாவிஷ்டனான அர்ஜுனனுடைய ஶோகத்தை நிவர்த்திப்பிக்கிறான்.

இதில் பூர்வார்த்தத்தாலே ப்ரபத்தாவிநுடைய க்ருத்யம் சொல்லுகிறது, உத்தரார்த்தத்தாலே- ப்ரபத்தவ்யனுடைய க்ருத்யம்  சொல்லுகிறது, ப்ரபத்தாவுக்கு க்ருத்யம்- உபாயஸ்வீகாரம்; ப்ரபத்தவ்யனுக்கு க்ருத்யம்- விரோதி நிவர்த்தனம். ஈஶ்வரனுக்கு கைங்கர்யத்தில் அந்வயமில்லாதாப்போலே, இவனுக்கு விரோதி வ்ருத்தியில் அந்வயமில்லை. இவனுக்கு ஶேஷித்வத்தில் அந்வயமில்லாதாப்போலே, அவனுக்குமுபாய ஸ்வீகாரத்தில் அந்வயமில்லை.

ஸர்வதர்ம ஶப்தார்த்தம்

’ஸர்வதர்மான்’ தர்மமாகிறது- ஶாஸ்த்ர விஹிதங்களான இஷ்ட ஸாதநங்கள் (1) இவ்விடத்தில் இஷ்ட ஸாதநமாகச் சொல்லுகிற தர்மமாகிறது- ஸ்வர்காதி ஸாதநமான ஜ்யோதிஷ்டோமாதிகளாதல், (2) உபாஸநாங்கமாய் பாபாபநோதந- ஸாதநமான தர்மமாதல், (3) அங்கியான உபாஸநந்தான் ஆதல் (4) அவ்யவஹித ஸாதகமான தர்மமாதலிறே- இவையத்தனையும் அநுபபந்நங்கள்.

  • ஜ்யோதிஷ்டோ மாதிகளை த்யாஜ்யமாகச் சொல்லவொண்ணாது; அவை ப்ரஸ்துதங்களாகையாலும், அதிகாரிக்கு பலாந்தராபிலாஷை இல்லாமையாலும்.
  • பாபாபநோதந ஸாதநமான தர்மத்தை த்யாஜ்யமாகச் சொல்லுகிறதென்ற வொண்ணாது; வக்ஷ்யமாண தர்மத்துக்கு அங்கத்வம் ப்ரஸங்கிக்கையாலும், “ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்கிறது சேராமையாலும்.
  • அங்கியான உபாஸநத்தை த்யாஜ்யமாகச் சொல்லுகிறதென்ற வொண்ணாது; ஸர்வஶப்தத்துக்கு நைரர்த்யம் ப்ரஸங்கிக்கையாலும், அது ஸார்தமாச்சுதேயாகிலும் அவைதிக ப்ரஸங்கமும் அதிப்ரஸங்கமும் துஷ்பரிஹாரமாகையாலும்.
  • பரஸ்பர விரோதத்தாலே அந்வயமில்லாமையாலே, சதுர்தி பக்ஷமும் உபபந்நமன்று.

ஆனபின்பு, இங்குச் சொல்லுகிற தர்ம த்யாகம் அஸங்கதமாகமாட்டாதோவென்னில்; ப்ரதமத்விதீய சதுர்த விகல்பங்கள் அப்யுபகதங்களில்லாமை நிரஸ்தங்கள். இங்கு த்யாஜ்யமாகச் சொல்லுகிறது ஸகல ஶாஸ்த்ரங்களிலும் இப்ப்ரபந்தம் தன்னில் இஶ்ஶ்லோகத்துக்குக் கீழடங்கிலும் விஸ்த்ருதமாக ப்ரதிபாதிக்கப்பட்ட மோக்ஷஸாதநமான உபாஸநரூப தர்மத்தை.

ஸர்வ ஶப்தார்த்தம் யோக்யதா பாதகங்களாகையாலே நைரர்த்யமில்லை. நிமித்தாந்தரத்தாலே அநுஷ்டானமுண்டாகையாலும் விஹிததயா அவர்ஜநீயங்களாகையாலும் அவைதிகத்வாதி தோஷமில்லை. ஆகையால், இங்குச் சொல்லுகிற தர்மத்யாகமுபபந்நமென்றும் ஸமாதாநம் பண்ணினார்கள்.

பஹுவசநத்தாலே- அவதார ரஹஸ்யஜ்ஞாநம், புருஷோத்தமவித்யை, தேஶவாஸம் துடக்கமானவத்தைச் சொல்லுகிறது. ஸத்வித்யாதி பேதத்தாலே வந்த பஹுத்வத்தைச் சொல்லுகிறதென்றுவுமாம். ’நெறியெல்லாமெடுத்துரைத்த’ என்கிறபடியே அருளிச்செய்தவுபாயங்கள் அநந்தங்களாயிறே இருப்பது.

ஆக, தர்ம ஶப்தத்தாலும் பஹுவசநத்தாலும்- ஸாங்கமான தர்மங்களையும் அதனுடைய பஹுத்வத்தையும்ச் சொல்லுகிறது.

ஸர்வ ஶப்தத்தால்- உபாஸநாதிகாரிகளெல்லாரும் பொதுவாய், முன்புசொன்ன ஸாதநாநுஷ்டானத்துக்கு யோக்யதா ஸம்பாதகங்களாய், ஶ்ருதி ஸ்ம்ருதி ஸித்தங்களாயிருக்கிற தர்ம விஶேஷங்களைச் சொல்லுகிறது. யோக்யதாஸம்பாதக தர்மத்யாகம் ஸாதநத்யாகத்தில் அந்தர்பூதமாயிருக்கச் செய்தேயும் ஸர்வ ஶப்தம் ப்ரயோகம் பண்ணுகிறது ப்ரபதநாத்மக தர்மத்தினுடைய ஸர்வாதிகாரத்வ ஜ்ஞாபநார்தமாக, அங்ஙனே கொள்ளாதபோது, ஸ்த்ரீ ஶூத்ராதிகளுக் கதிகாரமின்றிக்கே யொழியுமிறே. இதரோபாயங்களுக்கு யோக்யதை அத்யந்தாபேக்ஷிதமாயிருக்கிறாப்போலே, இவ்வுபாயத்துக்கு தாத்ருஶ யோக்யதா நிவ்ருத்தி அத்யந்தாபேக்ஷிதமாயிறே யிருப்பது. ஈத்ருஶ யோக்யதா நிவ்ருத்தி யில்லாமையாலே, ஶரண்ய ஶரணாகதி நிஷ்பலையாயிற்று.

ஆக, ஸர்வதர்மான் என்கிறபதத்தாலே மோக்ஷ ஸாதநமாக விஹிதங்களாய், ஸாங்கங்களாயிருக்கிற ஸகல தர்மங்களையும் சொல்லிற்று.

பரித்யஜ்ய பதார்த்தம்

(2) ’பரித்யஜ்ய’ என்கிற பதத்தாலே- அவற்றினுடைய த்யாகத்தைச் சொல்லுகிறது. இங்கும் சொல்லுகிற த்யாகமாகிறது. மோக்ஷஸாதநத்வ ப்ரபத்தியைப் பொகடுகை, என்று ப்ரவேஶத்திலே சொன்னோமிறே; ஆகையால், அநுஷ்டான விரோதமில்லை. மேல் பரிக்ரஹிக்கப்படுகிற ஸித்த தர்மம் ஸாத்யதர்ம நிரபேக்ஷமாகையாலும், இவற்றை ஸஹியாமையாலும், இவைதான் துரநுஷ்டானங்களாயிருக்கையாலும், ப்ராப்யவிஸத்ருஶங்களாகையாலும். பகவதநேக ஸாதநதைக வேஷமான ஸ்வஸ்வரூபத்துக்கு அநநுரூபங்களாயிருக்கையாலும், விளம்பஸஹங்களாகையாலும், கீழ்ச்சொன்ன தர்ம விஶேஷங்கள் த்யாஜ்யங்களாயிருக்கும்.

இது – ப்ராப்தமுமாய் ஸித்தமுமாய் ஸர்வஶக்தியுக்தமாயிருக்கையாலே, ஸாத்ய தர்மம் நிரபேக்ஷமாயிருக்கும். சணற்கயிறு கண்ட ப்ரஹ்மாஸ்த்ரம்போலே வேறொன்றைக்காணில் நெகிழ நிற்குமதாகையாலே, உபாய ஸ்வரூபத்தைப் பார்த்தால் ஸாத்யதர்மங்கள் சேராதபடியாயிருக்கும். ஸகல ப்ரவ்ருத்திகளிலும் ஸஹாயாந்தர நிரபேக்ஷமுமாய் ஸஹாயாந்தர ஸஹமுமாயிறே வஸ்து ஸ்வரூபமிருப்பது. ஆகையாலேயிறே இவ்வுபாய பரிக்ரஹம் பண்ணுமதிகாரி ஆகிஞ்சந்யத்தை புரஸ்கரித்துக்கொண்டிழிகிறது. ஸ்வரக்ஷணத்தில் ஸாதந ராஹித்யமாகிறது- பகவத் ரக்ஷகத்வ ப்ரதிபந்தக ஸ்வப்ரவ்ருத்தி நிவ்ருத்திபிறக்கையிறே. அபாய பஹுளங்களாயிருக்கையாலும், சிரகால ஸாத்யங்களாயிருக்கையாலும், துரநுஷ்டானங்களா யிருக்கும். ப்ராப்யஸ்வரூபத்தைப் பார்த்தால் அநந்ய ஸாத்யமாயிருக்கையாலே அதுக்கு விஸத்ருஶமாயிருக்கும். (1) ’ஶரைஸ்து ஸங்குலாம்’ இத்யாதியிற்படியே ஶக்தியுண்டேயாகிலும் லங்கைக்குள்ளே பிராட்டியிருந்தாப்போலே, ஸ்வப்ரவ்ருத்தியில் பராங்குஶனாய் ஈஶ்வரன் பக்கலிலே ஸமர்பித்த ஸர்வபரனாயிருக்கையிறே அதிகாரிக்கு ஸ்வரூபம். ஆகையால், அதிகாரி ஸ்வரூபத்தைப்பார்த்தால் அநு ரூபமன்றிக்கே இருக்கும். (2) ’காலேஷ்வபி ச ஸர்வேஷு’ இத்யாதிப்படியே- ப்ரதி க்ஷணம் அஞ்சவேண்டும்படியாயிறே உபாயாந்தர ஸ்வரூபத்தை ஆராய்ந்தாலிருப்பது. ப்ராந்திதஶையிலும் ஸாதநாந்தர ஸத்பாவ ப்ரதிபத்தி ரஹிதனாயிருக்குமவனுக்கிறே இஸ்ஸாதந விஶேஷங்கார்யகரமாவது.  (3) ’அதபாதக பீதஸ்த்வம்’ என்று தர்மதேவதை தர்மபுத்ரனைக்குறித்து பாதகத்வேந உபதேஶித்ததிறே. ஸ்வப்ரவ்ருத்தியாலே ஈஶ்வரனைக் கிட்டவேணுமென்று நினைக்கிறது, பகவத் விஷயத்துக்கென்றும் புறம்பாகைக்கு உருப்பாமித்தனையிறே. அவனுடைய ப்ரவ்ருத்தியிலே அவனைக்கிட்ட நினைத்திலிருந்தாலிறே கரைமரம் சேரலாவது. ஸ்ருஷ்ட்யவதாராதி முகத்தாலே எதிர் சூழல் புக்கு இவனைச் சேர்த்துக்கொள்ளுகைக்கு யத்நம் பண்ணித் திரிகிறவனுடைய அநுக்ரஹ விஶேஷத்தாலே அவனைப் பெறுகையிறே உசிதம். (4) ’என் நான் செய்கேன்’ இத்யாதிப்படியே- ததேக ஸாதநனா யிருக்கையிறே இவனுக்கு ஸ்வரூபம். பகவதத்யந்த பாரதந்த்ர்யமாகிற உத்தேஶ்யத்துக்கு விரோதியாயிருக்கையாலே அதர்ம ஶப்தவாச்யங்களாகச் சொல்ல ப்ராப்தங்களாயிருக்கிற உபாயாந்தரங்களை தர்மஶப்த ப்ரயோகம் பண்ணுகிறது அர்ஜுநாபிப்ராயத்தாலே. துஷ்கரங்களாய்(5)  ’ஜந்மாந்தர ஸஹஸ்ரேஷு’ என்னும்படி இருக்குமவையாகையாலே விளம்ப ஸஹங்களாயிருக்கும்.

இவைதான் ஓராகாரத்தாலே த்யாஜ்யங்களாய் ஓராகாரத்தாலே உபாதேயங்களாயிருக்கும். கர்மாநுஷ்டாநம் தேஹயாத்ரையிலே அந்தர்பூதமாயிருக்கும். ஸ்வஸ்வ ரூபஜ்ஞாநத்திலே அந்விதமாயிருக்கும்-ஜ்ஞாந யோகம். போஜனத்துக்கு க்ஷுத்துபோலே, கைங்கர்யத்துக்கு பூர்வக்ஷணத்திலே அநுவர்த்திக்கக் கடவதான ருசிவிஶேஷத்திலே அந்வயித்திருக்கும். இருவர் பக்கலிலும் அநுஷ்டாநம் ஸமாநமாயிருக்கச் செய்தே ஹேதுவைஷம்யமுண்டாயிருக்கும். ஸாதநத்வ புத்தி அநுவர்த்திக்கும் உபாஸகனுக்கு. ஸாத்யத்வ புத்தி அநுவர்த்திக்கும் ப்ரபன்னனுக்கு. விஹித கர்மாநுஷ்டாநத்துக்கு முக்யாதிகாரி ஸித்தஸாதந நிஷ்டன். ஸாத்யாந்தர நிஷ்டன் ஸ்வர்காதிஸாதநமாக நினைத்திருக்கும். ஸாதநாந்தர நிஷ்டன் மோக்ஷஸாதநமாக நினைத்திருக்கும். ஸித்தஸாதந நிஷ்டன் ஸ்வயம்ப்ரயோஜநமாக நினைத்திருக்கும்.

நிவ்ருத்திரூப தர்மங்கள் வ்யாபாரார்தங்களுமாய் ஸ்வரக்ஷண ஹேதுக்களுமாயிருக்கையாலே நிஷேதவிதி ஸ்வீகாரத்தில் ஸ்வரக்ஷணார்தமான வ்யாபாரம் பரித்யக்தமல்லாமையாலே ப்ரபத்தியிலந்வயம் பலிக்கையாலும், (’ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி’) என்கிற வார்த்தையோடு சேராமையாலும், நிஷேத விதி த்யாகமவஶ்யம் கர்தவ்யமன்றோ?  என்ன வொண்ணாது. நியம விஶேஷாதி விஶிஷ்டவேஷ்ய வ்யதிரேகேண ஸாமான்யேந நிஷித்த நிவ்ருத்திமாத்ரத்துக்கு தர்ம ஶப்தார்த்தத்வமில்லாமையாலும் விஶேஷணாம்ஶத்தை யொழிய விஶேஷ்யாம்ஶத்துக்கு த்யாக விஷயராஹித்யத்தாலே நிஷேத விதி ஸ்வீகாரத்தில் ஸ்வரக்ஷணஹேதுவான ஸ்வயத்நமில்லாமையாலும் பரபத்த்யநந்வயமுண்டாவதுவும் (ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி) என்கிறவிதுவும் சேராதொழிவதும் நிஷேதவிதித்யாகத்திலாகையாலும், நிஷித்தம் ஸர்வாதிகாரிகளுக்கும் அகர்தவ்யமாயிருக்கையாலே இவ்வதிகாரிகளுக்கும் அநநுஷ்டேயமாயிருக்கையாலும், அநந்யஸாத்யமாய் அநந்யஸஹாயமான வஸ்துவைப் பற்றியிருக்கிறவனுக்கு இது கூடாமையாலும், அதிப்ரஸங்கம் வருகையாலும், விஶேஷநிஷேத விதிபலத்தாலும், நிஷித்தநிவ்ருத்திமாத்ரம் ஸர்வஶப்தார்த்தமானாலும் வித்யந்தர தர்மத்யாகத்தோபாதி கர்தவ்யமன்று.

ஆகையாலே நிஷேத விதித்யாஜ்யமன்று பரித்யாஜ்யமாகச் சொல்லுகிறது. உபாயதாபோதகத்தை ஆகையாலே த்யாஜ்யமென்னவுமாம்.

[பரி] என்கிற உபஸர்கம், வாஸநா ருசிஸஹிதமான த்யாகத்தைச் சொல்லுகிறது.

அவைகிடக்குமாகில் பரிக்ரஹிக்கப்புகுகிற ஸாதநத்திலந்வயமின்றிக்கே யொழியும். (1) ’மானிடவர்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்’ என்னுமாப்போலே இருக்கவேணும். ஸ்வஸ்வரூபத்திற்போலே உபாயத்தில் ஸ்வஸ்பர்ஶமும் விரோதியாயிருக்கும். (2) ’என் நான் செய்கேன் யாரே களைகண்’ என்றாரிறே “அநாதி காலமநுபாயங்களிலே உபாய புத்திபண்ணிப் போந்தோமென்று லஜ்ஜா புரஸ்ஸரமான த்யாகத்தைச் சொல்லுகிறது”,  என்று ஆழ்வான் பணிக்கும். ஸாத்யதா ப்ரதிபத்தி பண்ணவேண்டுமதிலேயிறே ஸாதநத்வ புத்தி பண்ணிப்போந்தது, ஶுக்லமான ஶங்கத்திலே பீதத்வ புத்தி பண்ணுமாப்போலே. ஸ்வீகாரத்துக்கு [ஏக] பதம் போலே த்யாகத்துக்கிந்த உபஸர்கம். அது உபாய பௌஷ்கல்ய ப்ரதிபாதகமாயிருக்கும். இது த்யாக பௌஷ்கல்ய ப்ரதிபாதக மாயிருக்கும். இப்ப்ரதிபத்தியினுடைய அத்யந்தாபாவமிறே குணாயவாவது. ப்ரத்வம்ஸா பாவமுண்டானால் அதுவும் தோஷாயவாம்படியிறே இருப்பது. த்யாகம் தன்னிலும் அந்வயமில்லாதபடியானால் ஆயிற்று ஸ்வரூப பூர்த்தியுள்ளது. அங்கமான உபாயாந்தராநந்வயம் அத்யந்தாபாவத்திலுமுண்டாகையாலே அங்கத்திலந்வயமில்லாமையால் அங்கியிலந்வயமில்லை என்று சொல்லப்பெறாது என்று, நஞ்ஜீயர் அருளிச்செய்வர். இவ்விடத்திலப்படி சொல்லவேண்டுகிறது ப்ரஸக்தமாகையாலேயிறே, இவ்வாகாரமில்லாமையாலே உபாயாந்தர பரித்யாக விதுரமாக ப்ரபதநமாத்ரமே த்வயத்தில் ப்ரதிபாதிதமாயிற்று.

த்யாகம் ஸ்வீகாராங்கமாகையாலே த்யாக ஸாபேக்ஷதையாகையாலே ஈஶ்வரனுடைய நைரபேக்ஷ்யம் குலையுமென்கிற சோத்யமும் பரிஹ்ருதம். அங்கி ஸ்வரூபந்தானும் நைரபேக்ஷ்யத்துக்கு குறையின்றியிலே இருக்க ததங்கம் நைர பேக்ஷ்யத்துக்கு பஞ்ஜகமாகப் புகுகிறதன்றிறே. நிரபேக்ஷனான ஈஶ்வரனுக்கு த்யாக ஸ்வீகாராதிகளில் வருகிற ஸாபேக்ஷதை தோஷாமாகாது.

ஆக, இந்த “ல்யப்” பாலே உபயாந்தர பரித்யாகம் ஸித்தோபாய ஸ்வீகாரத்துக்கு அங்கமென்றுமிடத்தைச் சொல்லுகிறது ’ப்ரபத்தியாவது ஒன்றை விட்டு ஒன்றைப் பற்றுகை’ என்று அநந்தாழ்வான் வார்த்தை. இந்த “ல்யப்பு” ’புக்த்வா சாந்த்ராயணம் சரேத்’ என்கிறது போலன்றிக்கே, ’ஸ்நாத்வா புஞ்ஜீத’ என்கிறதுபோலேயாய் த்யாகத்தில் அந்வயமில்லாதபோது ஸ்வீகாரத்தில் அநந்வயத்தை ஸூசிப்பிக்கிறது.

ஆக, இரண்டுபதமும் த்யாஜ்ய பௌஷ்கல்யத்தையும் த்யாக பௌஷ்கல்யத்தையும் சொல்லுகிறது.

மாம் பதார்த்தம்

மேல்பதம் ஸ்வீகார்ய ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது. ’மாம்’ த்யாஜ்யங்களான தர்மத்திற்காட்டில் ஸ்வீகார்யமான தர்மத்துக்குண்டான வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது.

அவை, ஆபாஸ தர்மங்களுமாய், அநித்யங்களுமாய், அநேகங்களுமாய், ஸாத்யங்களுமாய் துர்லபங்களுமாய், ஸ்வரூப விரோதிகளுமாய், ஸாபேக்ஷங்களுமாய், அசேதநங்களுமாய், ஸாபாயங்களுமாய், துர்லப ப்ரமாணங்களுமாய், அஶக்தங்களுமாய், அதிக்ருதாதிகாரங்களுமாய், விளம்ப்ய பலப்ரதங்களுமாயிருக்கும்.

இது, ஸாக்ஷாத் தர்மமுமாய், நித்யமுமாய், ஏகமுமாய், ஸித்தமுமாய், ஸுலபமுமாய், ஸ்வரூபாநுரூபமுமாய், நிரபேக்ஷமுமாய், சேதநமுமாய், நிரபாயமுமாய், ப்ரபலப்ரமாணமுமாய், ஶக்தமுமாய், ஸர்வாதிகாரமுமாய், அவிளம்ப பலப்ரதமுமாயிருக்கும்.

வாக்யத்வயத்தில் ப்ரதமபதத்தில் சொன்ன அர்த்த விஶேஷங்களெல்லாமிவ்விடத்தில் அநுஸந்தேயம். அதாகிறது –ஶ்ரிய:பதித்வமும், வாத்ஸல்யாதி குணசதுஷ்டயமும், திவ்யமங்களவிக்ரஹமும்.

  1. ’ஏஷ நாராயண: ஶ்ரீமான்’ என்று க்ருஷ்ணனாய் வந்து அவதீர்ணனானவன் ஶ்ரிய:பதி யாகையாலே, பூர்வாபராதக்ஷாமணம் பண்ணி புருஷகாரபூதையாய் நின்று சேர்பிக்கக்கடவ பெரிய பிராட்டியாரோட்டைச் சேர்த்தி அநுஸந்தேயம்.

அதர்ம புத்தியாலே ஸ்வதர்மத்தில் நின்றும் நிவ்ருத்தனாய் ’அஸ்தாந ஸ்நேஹ காருண்ய தர்மாதர்மதியாகுலனான’ அர்ஜுனனுக்கு புபுத்ஸிதங்களான ஸ்வஸ்வரூபாதிகளைத் தன்பேறாக அருளிச்செய்கையாலே, வாத்ஸல்ய மநுஸந்தேயம்.

  1. ’மத்த: பரதரம் நாந்யத்’ இத்யாதிகளாலே தன்னுடைய ஸர்வஸ்மாத் பரத்வத்தைப் பலவிடங்களிலும் அருளிச்செய்த வளவன்றிக்கே, அர்ஜுனன் தான் பல ப்ரகாரங்களாலும் அபரோக்ஷிக்கும்படி பண்ணுகையாலே, ஸ்வாமித்வமநுஸந்தேயம்.

’ஹே க்ருஷ்ண ஹே யாதவ ஹே ஸகேதி’ என்று இவன்தானே சொல்லும்படி தேவ தேவனான தன்னுடைய உத்கர்ஷத்தையுமிவனுடைய நிகர்ஷத்தையும் பார்த்து நெகிழவிடாதே இவனோடே ஏகரஸனாய்க் கலந்து பரிமாறுகையாலும், ’ஆஸ்யே க்ருஹீத்வாதுரகஸ்ய பந்தாந்’ இத்யாதியில் சொல்லுகிறபடியே இவனுக்கிழிதொழில் செய்கையாலும், ஸௌஶீல்யமநுஸந்தேயம்.

அப்ராக்ருதமான திவ்யமங்கள விக்ரஹத்தை சக்ஷுர் விஷயமாம்படி பண்ணுகையாலே, ஸௌலப்யமநுஸந்தேயம்.

3.’கம் ப்ரஹ்ம கம் ப்ரஹ்ம 4. ரஸோ வைஸ: ரஸக்க் ஹ்யேவாயம் லப்த்வாநந்தீ பவதி, 5.ஸோஶ்நுதே ஸர்வாந் காமான் ஸஹ’ என்று சொல்லுகிறபடியே நிரதிஶய போக்யங்களான ஸ்வரூபரூப குணங்களை பரிச்சேதிக்கிலும் பரிச்சேதிக்க வொண்ணாத படியான 6. ’நகநியமித கண்டூநாந் பாண்டவஸ்யந்தநாஶ்வாநநுதிந மபிஷிஞ்சந்நஞ்ஜலிப்தை: பயோபி: – அவது விததகாத்ர ஸ்தோத்ரஸம் ஸ்யூத-மௌளிர்தஶந வித்ருத ரஶ்மிர்தேவகீ புண்யராஶி: 2.ஆஸ்யே க்ருஹீத்வா துரகஸ்ய பந்தாந் பார்தாத்யமாயு:, 7. ருக்மிணீ க்ருஷ்ணஜந்மநி, 8. ’போதார் தாமரை யாள்’ இத்யாதி’ போக்யதா ப்ரகர்ஷத்தையுடைத்தாய், அவற்றிற் காட்டிலும் திருவுள்ளத்துக்கு மிகவும் அபிமதமாய், இச்சாக்ருஹீதமாய், அணைந்த நாய்ச்சிமாரையும் 9. ’அகலகில்லேன்’ என்றும்படி பண்ணக் கடவதாய், அப்ராக்ருதமாய், அகாலகால்யமாய், 10. ’யுவாகுமார:’  11. அரும்பினை அலரை’ என்கிற திருமேனியையும், 12. ’சென்னி நீண்முடி’ என்றும் 13. ’ஸ்புரத்கிரீடம்’ என்றும், 14. மெய்யமர் பல்கலன்’ என்றும் இத்யாதியில் சொல்லுகிறபடியே, கிரீடாதி நூபுராந்தமாக அஸம்க்யேயமாயிருக்கிற திவ்யாபரண வர்க்கத்தையும், 15. ’ப்ரியோஸிமே’ என்று தானருளிச்செய்தபடியே தனக்கு ப்ரிய விஷயமான அர்ஜுனனுக்கு யதாவத் ப்ரகாஶிப்பித்தபடியை, [மாம்] என்று நிர்தேஶிக்கிறான். ஆகையாலே, திவ்யமங்கள விக்ரஹமநுஸந்தேயம்- 16. ’க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம், 17. ஶரண்யம் ஶரணஞ்சத்வாமாஹு:, 18. அம்ருதம் ஸாதநம் ஸாத்யம், 19. யோகோயோக விதாந்நேதா,  ’வைப்பாம் மருந்தாமடியரை வல்வினைத்துப்பாம் புலனைந்தும் துஞ்சக்கொடான் யவன்- எப்பாலெவர்க்கும் நலத்தாலுயர்ந்துயர்ந்தப்பாலவனெங்களாயர் கொழுந்தே’ என்றும் இத்யாதியிற் சொல்லுகிறபடியே, ஸநாதந தர்மமான ஸித்த ஸாதந ஸ்வரூபம் சொல்லுகிறது.

ஏக பதார்த்தம்

(௪) ’ஏகம்’ இவ்வுபாய விஶேஷத்தைச் சொல்லுகிறவிடத்திலும் அவதாரண ப்ரயோகமுண்டாகையாலே உகாரம்போலே இந்த ஏகஶப்தமும் ஸ்தாந ப்ரமாணத்தாலே அவதாரண வாசகமாயிருக்கிறது. ’மாமேவ யே ப்ரபத்யந்தே, தமேவ ஶரணம் கச்ச’ என்னும் இத்யாதியான ப்ரபத்தி ப்ரகரணத்திலே தானே ஸாவதாரணமாக அருளிச்செய்தானிறே. ’ஶரணே ஶரண்’ என்றும் ’நின் பாதமே ஶரணாக’ என்றும் இத்யாதியாலே ஆழ்வாரருளிச்செய்தார்.

இது தனக்கு உபாயாந்தரங்கள் வ்யாவர்த்யமாக மாட்டாது, பௌநருக்த்யம் ப்ரஸங்கிக்கையாலே அநேகம் ஔஷதம் கூடி ஒரு ஸாதநமாக வேண்டும் உபாயாந்தர வ்யாவ்ருத்தி ஏகவசநத்தாலே சரிதார்த்தம். தேவதாந்தர வ்யாவ்ருத்தி வ்ருத்த பரத்வம் சொல்ல வொண்ணாது. தூரதோ நிரஸ்தமாகையாலே. மத்யம புருஷனில் ப்ரதிபாத்யமான ஸித்தஸாதந ப்ரபத்தியில் ஸாதநத்வ புத்தி வ்யாவ்ருத்தியாகமாட்டாது, ஸாதநத்துக்கு யோக்யதையில்லாமையாலே.  உண்டாகில் உபாயாந்தர துல்யத்வம் ப்ரஸங்கிக்கும். யோக்யதா வையர்தூர்யத்தில் இத: பூர்வமேவ கார்யகரத்வம் ப்ரஸங்கியாதோ என்னவொண்ணாது; அகார்ய கரத்வமதிகார்ய பாவ ப்ரயுக்தமாகையாலே, அதிகாரி ஸாபேக்ஷத்வம் தோஷாயவன்று. ஆகையாலே ஏகபதம் நிரர்த்தகமாக இருந்ததே என்னில்;– உபாயாந்தரமும் தேவதாந்தரமும் அநேகத்வமும் வ்யாவர்த்யமன்றே யாகிலும் ஸித்த ஸாதநத்தில்  ஸாதநத்வபுத்தி வ்யாவர்தய மாகலாம், அந்வய வ்யதிரேகத்தாலே ஸாதநமென்று நினைக்கலாயிருக்கையாலே. ஆனால் ஸாதநத்வம் ப்ரஸங்கியாதோவென்ன வொண்ணாது. ஸாதநத்வமுண்டாம்போது உபாயாந்தர வ்யாவ்ருத்தி குலைகையாலே. ஆனாலும் ப்ரபத்தி அபேக்ஷைதையாகையாலே ஸித்தஸாதநத்வபங்கமுண்டாகாதோவென்னில்; உண்டாகாது, உபாயநைரபேக்ஷ்யமாகையாலே. ததேகோபாயத்வ ப்ரதிபத்தியாலே அதிகாரியினுடைய உபாஸக வ்யாவ்ருத்திக்கும் குறையில்லை. அதிகார்யபேக்ஷையாலே இதுக்கு முன்பு கார்யகரமின்றிக்கே போருகிறது. ப்ரார்த்தனை என்செய்யவென்னில்; பலதஶையிற்போலே  இங்கு ப்ரார்தனையுண்டு. பலதஶையில் புருஷார்ததா ஸித்த்யர்தமாக ப்ரார்தநம் அபேக்ஷிதமாகக்கடவது. பாரதந்த்ர்யம் நித்யமாகிறவோபாதி பரதந்த்ரமான வஸ்துதான் சித்வஸ்துவாகையாலே, சைதந்யகார்யமான அந்த ப்ரார்தநா விஶேஷமும் நித்யஸித்தமாயிருக்கும். இது த்யாஜ்ய கோடியிலும் அந்வயியாது, உபாயகோடியிலும் அந்வயியாது. ’அதுவுமவனது இன்னருளே’ என்கையாலே ப்ரபத்தி விஶேஷத்துக்கு உபாயகார்யத்வமுண்டு இத்தனையல்லாது  உபாயத்வமில்லை. ஈஶ்வரன் உபாயமாகையாலே இத்தை உபாயமென்ன வொண்ணாது. உபாயாங்கமென்னவும் ஒண்ணாது, உபாயபூதமான ஈஶ்வர ஸ்வரூபம் ஸித்தமாய் பரமசேதநமாய் ஸர்வஶக்தியுக்த மாயிருக்கையாலே. அங்கத்வம் கொள்ளில், ஈஶ்வரனுக்கு உத்பாத்யத்வாநித்யத்வாநேக ரூபத்வங்களாதல் அசைதந்யா ஸாமர்த்ய ஸாபேக்ஷதைகளாதல் உண்டாம். அப்போது, உபாயாந்தர வ்யாவ்ருத்தி ரூபமான ஸித்தத்வம் ஏகரூபத்வம் பரமசேதநத்வம் ஸர்வஶக்தியோகம் நைரபேக்ஷ்யம் தொடக்கமான தர்மங்களுங்குலையும். இவ்வுபாய விஶேஷம் ஸ்வவ்யதிரிக்தமாயிருப்பதொன்றை ஸஹியாமையாலேயிறே ஆநுகூல்ய ஸங்கல்பாதிகளுக்கு உபாயாங்கத்வமின்றிக்கே அவகாதஸ்வேதம் போலே ஸம்பாவித ஸ்வபாவத்வமுண்டாகிறது, ப்ரபத்தவ்ய கதங்களான ரக்ஷகத்வாதிகள் போலே ப்ரபந்நகதமான இப்ப்ரபத்தி விஶேஷம் ஸ்வரூபாநுபந்தியாய்க் கிடக்குமித்தனை. த்யாகத்துக்கு உபாயாந்தர பாவமுண்டாம் போதாய்த்து இது உபாயத்திலந்தர்பூதமாவது. இவ்வதிகாரியினுடைய ஜ்ஞாநகார்யமாய், ராக ப்ராப்தமாய், ஸ்வரூபநிஷ்டமாய், ப்ராப்ய கோடிகடிதமாயிருக்குமத்தனை. பரித்யக்தங்களான தர்மங்கள் போலே ஸ்வீகார்யமான இந்த தர்மமும் ஸாதநமாகில் ஸாங்கமாக இருக்கவேண்டாவோவென்னில்; ஸாதநபூதங்களுக்கெல்லாம் ஸாங்கத்வநியமமில்லை. பக்தியோகத்திலே அங்கஸாபேக்ஷதை கண்டோமே என்னில்; அது ஸாதநத்வ ப்ரயுக்தமன்று, ஸாத்யத்வப்ரயுக்தம். இந்த தர்மவிஶேஷம் ஸநாதந தர்மமாகையாலே ஜ்ஞாநகர்ம ஸாத்யமான த்யாஜ்ய தர்மம்போலே த்யாக ஸ்வீகார ஸாத்யமாயிராது, ஆனால் ஈஶ்வர ஸாபேக்ஷமாயிருக்கக் குறையென்னென்னில்; அதுவுமில்லை, ஈஶ்வர வ்யதிரேகமில்லாமையாலே. ஆனாலும் அங்கஸாபேக்ஷத்தை வேணுமென்னில்; அது உபாயாந்தர்பூதம். ஸித்த தர்மம்போலே ஸாத்ய தர்மமும் ஆகார த்வய விஶிஷ்டமாயிருக்கும். இதில் ஸாத்ய தர்மத்தில் ஓராகாரம் த்யாஜ்யமாயும் ஓராகாரம் உத்தேஶ்யமாயுமிருக்கும், ஸித்த தர்மத்திலிரண்டும் உத்தேஶ்யமாயிருக்கும்.

ஶரண ஶப்தார்த்தம்

(௫) ’ஶரணம்’- கீழ் ஸ்வீகார்ய வஸ்துவைச் சொல்லிற்று, இது ஸ்வீகார்ய ப்ரகாரத்தைச் சொல்லுகிறது. த்வயத்தில் ஶரணஶப்தம் போலே இதுவுமுபாய வாசகமாயிருக்கிறது. “ஸர்வதர்மான் பரித்யஜ்ய” என்கிறதுக்கு  அநந்தரமாக ப்ரயுக்தமான ஶரண ஶப்தமாகையாலே ரக்ஷிதாவைச் சொல்லுகிறதாக மாட்டாது. உபாயாந்தர பரித்யாகத்துக்கு பஶ்சாத்பாவியாய் பாபவிமோசநத்துக்கு பூர்வ பாவியாயிருக்கையாலே உபாய வாசகமாமித்தனை.

இவ்வஸ்துவுக்கு ப்ராப்யதயா ஸ்வீகாரத்வமும் உண்டு. இதில் ப்ராப்யதயா ஸ்வீகார்யத்தை வ்யவச்சேதிக்கிறது. ப்ராபக ஸமயத்தில் போலே ப்ராப்ய ஸமயத்திலும் ப்ராபகாந்தர பரித்யாகம் ஸமானமாகையாலே, தத்விஶிஷ்டமேயாகிலும் ஸ்வீகாரமாத்ரம் வ்யவச்சேதிக்கமாட்டாதென்றும் சொல்லுவர்கள்.

ஆக, ஶரணஶப்தம் இஷ்ட ப்ராப்திக்குமநிஷ்ட நிவ்ருத்திக்கும் அவ்யவஹிதமான ஸாதநபாவத்தைச் சொல்லுகிறது.

வ்ரஜ ஶப்தார்த்தம்

(௬) ’வ்ரஜ’- கீழ் ஸ்வீகார ப்ரகாரத்தைச் சொல்லிற்று. இதில் ஸ்வீகாரத்தைச் சொல்லுகிறது. கீழ் பரித்யாஜ்யங்களாகச் சொல்லப்பட்ட தர்மங்கள் ஸநாதந தர்ம வ்யதிரிக்த தர்மங்களாகையாலும் இந்த தர்மந்தான் அவற்றில் அந்தர்பூதமானாலும் பரித்யாக விஷயமாவது மோக்ஷ ஸாதநத்வ வேஷமன்றிக்கே ஸாதநாங்கத்வமாகையாலும் ஸர்வதர்ம பரித்யாக ப்ரதிபாதநத்துக்கும் ஸித்த தர்மஸ்வீகார விதாநத்துக்கும் பரஸ்பர விரோதமில்லை

வ்ரஜ என்றது- ‘புத்தஸ்வ’ என்கிறபடி. அந்த புத்தியாகிறது – த்யாஜ்யகோடியிலுத்தீர்ணமாய், உபாயகோடியில் அநநுப்ரவிஷ்டமாய், ப்ராபகாந்தர பரித்யாகபூர்வகமாய், பகவத்ரக்ஷகத்வாநுமதிரூபமாய், சைதந்ய கார்யமாய், ப்ரார்தநாகர்பமாய், பகவந்முகவிகாஸ ஹேதுவாய், ஸ்வரூபாநுரூபமாய், வ்யபிசார விளம்ப விதுரமாயிருப்பதொரு அத்யவஸாயாத்மக ஜ்ஞாந விஶேஷம்; இதில் ஸாராம்ஶம் விஸ்ரம்ப விஶேஷமென்றும் விஸ்ரம்ப விதுரமான போது அகார்யகரமென்றுமிடமும் த்வயத்திலே சொன்னோம்.  உபாயாந்தர பரித்யாக பூர்வகத்வமும், ஸ்வஸ்மிந் உபாயத்வ ப்ரதிபத்தி ராஹித்யமும், வாத்ஸல்யாதி குணவிஶிஷ்டவஸ்து விஷயத்வமும் தொடக்கமானவை, இப்ப்ரதிபத்தி விஶேஷத்துக்கு ஸ்வரூபம்.  “மாமேகம் ஶரணம் வ்ரஜ” என்கிறது தானே ப்ரமாணம். பரித்யக்த ஸாத்யஸாதநனாய் ஸ்வீகாரத்திலுபாயத்வ ப்ரதிபத்திக்கயோக்யனாயிருக்கும் அவன் இதுக்கதிகாரி. இந்த புத்திவிஶேஷம் ஏககரணயுக்தமாகவுமாம். இதிலுபாயத்வமில்லா மையாலே பலத்துக்கு வ்யபிசாரமில்லை என்னுமிடமும் த்வயத்திலே சொன்னோம்.

தனி த்வயத்திலே ஸௌலப்யாதி குணவிஶிஷ்ட வஸ்து கோசரத்வம் இரண்டிலுமுண்டு. த்யாக விஶிஷ்டத்வமும் நைரபேக்ஷ்யமும் இங்கு அதிரிக்தமான அர்த்தம்;

ஆக, பூர்வார்தத்தாலே –1 த்யாஜ்ய ஸ்வரூபத்தையும், 2 தத்பாஹுள்யத்தையும், 3 த்யாகத்தையும், 4 தத்ப்ரகாரத்தையும், 5 அதனுடைய அங்கத்வத்தையும், 6 ஸ்வீகார்ய வஸ்துஸ்வரூபத்தையும், 7 இதினுடைய நைரபேக்ஷ்யத்தையும் 8 ஸ்வீகார ப்ரகாரத்தையும், 9 ஸ்வீகாரத்தையும்  சொல்லிற்று.

அஹம் பதார்த்தம்

இனிமேல், ப்ரபத்தவ்யக்ருத்யத்தையும், ப்ரபந்நக்ருத்யத்தையும் சொல்லுகிறது. விரோதி நிவர்தகத்வம் ப்ரபத்தவ்ய க்ருத்யம்;  நிர்பரத்வம் ப்ரபந்நக்ருத்யம். ’அஹம்’ – ஸர்வஜ்ஞத்வாதி குணவிஶிஷ்டனான நான், கீழ், உபாய பரிக்ரஹத்துக்கு ஏகாந்தங்களான குணவிஶேஷங்களைச் சொல்லிற்று.  இங்கு, கார்யகரத்வத்துக்கு ஏகாந்தமான குணவிஶேஷங்களைச் சொல்லுகிறது. வாத்ஸல்யாதிகளில்லாத போது உபாய பரிக்ரஹமின்றிக்கே ஒழியுமாப்போலே, ஜ்ஞாநாதிகளில்லாத போது கார்யகரமன்றிக்கேயொழியும்.  அசித்தும் சேதனனும் சேதநாந்தர்யாமித்வமும் பரத்வமும் வ்யூஹமும் தொடக்கமானவைகளல்ல வ்யாவர்த்யம்.  விபவாந்தரங்களும் இவ்விபவந்தன்னில் முன்னும் பின்னும் வ்யாவர்த்யம்  தேஹேந்த்ரிய மந: ப்ராணாதிகளிலே ஆத்மபுத்தி பண்ணியிருக்குமவனுடைய அஹம் ஶப்த ப்ரயோகம் தத்தத்வஸ்துமாத்ர பர்யவஸிதமாயிருக்கும். தேஹாதுத்தீர்ண வஸ்துமாத்ர விஷய ஜ்ஞாநவானுடைய அஹம் ஶப்தப்ரயோகம் சேதந பர்யவஸிதமாயிருக்கும், ஈஶ்வரனுடைய அஹம் ஶப்த ப்ரயோகம் உபயவ்யாவ்ருத்தமாயிருக்கும்.

ஜ்ஞாநமும் ஶக்தியும் ஶேஷித்வமும் பூர்த்தியும் இவ்விடத்தை அநுஸந்தேயம். இவை இல்லாதபோது மேல் சொல்லுகிற விரோதி நிவ்ருத்திகூடாது. இங்கு ஶக்தியாக நினைக்கிறது, 1. ’யானுமிசைந்து’ என்றும் 2. ’இசைவித்தென்னை’ என்றும் சொல்லுகிறபடியே, சேதனனுடைய அவிவாத ஜநநத்துக்கும் ஸம்ஸார விமோசநத்துக்குமடியான ஸாமர்த்யத்தை. அத்தைப்பற்ற, ப்ரளயாபத்விமோசநமும், ஸர்வஸௌலப்யமும், ஸர்வவஸ்துக்களிலும் பரிஸமாப்ய வ்யாபந வ்ருத்தியும் தொடக்கமானவை அத்யந்த ஸுஶகங்களென்னும்படியிருக்கும். இதில் சொல்லுகிற குணவிஶேஷங்கள் சேதனனுடைய அநந்ய ஸாதநத்வத்துக்குமீஶ்வரனுடைய பலப்ரதாத்ருத்வத்துக்கும் உபயுக்தங்களாயிருக்கும். மாம் என்று ’உத்த்ருதரதிசரண:’  என்கிறபடியே இவன் கால் தன் தலையிலே படநிற்கும் நிலையைச்சொன்னான், அஹம் என்று – தன் கால் அவன்தலையிலே படநின்றநிலையைச் சொல்லுகிறான்,  3. ‘தேர் மன்னர்க்காய் அன்று தேரூர்ந்தானாகிலும்- தார்மன்னர் தங்கள் தலைமேலான்  சாழலே’ என்றதிறே மாம் என்று- கையுமுழவு கோலுமாய் நின்ற வேஷத்தைக்காட்டினான். அஹம் என்று கையும் திருவாழியுமாய் நின்ற வேஷத்தைக் காட்டுகிறான். செழுந்தார் விசயனிறே. 1. ’பற்றலர் வீயக்கோல் கையில் கொண்டு, 2. சங்கொடு சக்கரமேந்தும் தடக்கையன்’ என்னா நின்றதிறே. மாம்- என்று  தர்மங்களைக் குலைக்கும் நிலையைக்காட்டினான்; அஹமென்று- அதர்மங்களைக் குலைக்கும் நிலையைக் காட்டுகிறான். மாம் என்கிறது- உக்திக்கு விபரீதமான நிலையை, அஹமென்கிறது. அநுஷ்டானத்துக்கு விபரீதமானநிலையை.

த்வா பதார்த்தம்

’த்வா’- ஸாத்யமான  ஸாதநங்களை ஸவாஸநமாக த்யஜித்து ஸித்தோபாய ஸ்வீகாரம் பண்ணியும், தேஹாத்மப்ரமம் தன்னையும் தேஹாதுத்தீர்ணமான ஆத்ம வஸ்துவில் ஸ்வாதந்த்ர்ய புத்தியையும் அந்யஶேஷத்வ ப்ரதிபத்தியையும் தச்சேஷத்வமாத்ர புத்தியையும். ஸாத்யாந்தரங்களில் ஸாத்யதாபுத்தியையும், ஸாதநாந்தரங்களில் ஸாதநத்வ புத்தியையும்,  ஸித்தோபாய ஸ்வீகாரத்திலுபாயத்வ புத்தியையும், க்ஷுத்ர ஸாத்யங்களகப்பட ப்ரவ்ருத்தி ஸாத்யமாயிருக்க துர்லபமான மோக்ஷ புருஷார்தத்துக்கு நிவ்ருத்தி ஸாத்யத்வம் அகடிதமென்கிற புத்தி விஶேஷம் தொடக்கமானவற்றையும் ஸவாஸநமாக த்யஜித்திருக்கிற உன்னை.

கீழிற்பதத்தில் ஈஶ்வர ஸ்வரூபம் சொல்லிற்று; இப்பதமதிகாரி ஸ்வரூபத்தை ப்ரதிபாதிக்கிறது. அங்கு ஸர்வஜ்ஞத்வ ஸர்வஶக்தித்வங்களும் ப்ராப்தியும் நைரபேக்ஷ்யமும் சொல்லப்பட்டது; இங்கு, அஜ்ஞாநாஶக்திகளையும் அப்ராப்தியையும் ஆகிஞ்சந்யத்தையும் சொல்லுகிறது.  ஸ்வீகாரத்தில் உபாயபுத்தியிலும் அகப்படச் சோம்பனாயிருக்கிற உன்னை. இந்த ப்ரதிபத்தி விஶேஷத்திலுமுபாய புத்தியநுவர்திக்குமாகில் உபயாந்தரத்தோடு ஒக்குமித்தனை. ஈஶ்வரனே உபாயமென்கிற அத்யவஸாய விஶேஷத்தில் ஸாதநத்வபுத்தியும் அஸக்ருத்கரணமும் உண்டான போது, ததேகோபாயத்வமில்லை. ஆக எல்லாம் கூட, த்யாகச்ஸ்வீகார விஶிஷ்டனான உன்னை என்றபடி.

ஸர்வபாப பதார்த்தம்

(௬) ’ஸர்வ பாபேப்ய:’ கீழ் நிவ்ருத்திக்கு ஏகாந்தமான குணவிஶேஷங்களைச் சொல்லிற்று; இது நிவர்த்யஸ்வரூபத்தைச் சொல்லுகிறது. பாபமாகிறது இஷ்ட விரோதியாயிருக்குமதும், அநிஷ்டஹேது வாயிருக்குமதும்.  மோக்ஷப்ரகரணமாகையாலே இவ்விடத்தில் இஷ்டவிரோதிகளாகிறன– பகவல்லாப விரோதிகள். ஜ்ஞாந விரோதியும் ருசிவிரோதியும் உபாய விரோதியும் பண்டே நிவ்ருத்த மாயிற்று. இனி ப்ராப்தி விரோதியிறேயுள்ளது; அத்தை ப்ரதிபாதிக்கிறதிப்பதம். 1.’புண்யபாபே விதூய’ என்றும் 2. ’சார்ந்த இருவல்வினைகளும் சரித்து’ என்றும் இத்யாதிகளிலே பாபத்தோபாதி புண்யமும் த்யாஜ்யமாகச் சொல்லிற்றிறே; ஆகையாலே, புண்ய பாபங்களிரண்டையும் பாப ஶப்தத்தாலே சொல்லுகிறது.

பஹுவசநத்தாலே- அவற்றினுடைய பாஹுள்யத்தைச் சொல்லுகிறது. அதாவது- 3. ’பொய் நின்ற ஜ்ஞாநமும் பொல்லாவொழுக்கும் அழுக்குடம்பும்’ என்கிறபடியே- அஜ்ஞாநம் தொடங்கி ஶரீரஸம்பந்த மெல்லையாக உண்டானவை.

ஶரீரபாதஸமயத்தில் ஈஶ்வர ஸ்ம்ருதிக்கு விஷயபூதனாம்படியும், வாங்மநஸாதிலயப்ரகாரமும், உத்க்ரமணப்ரகாரமும், ஹார்தாநுக்ரஹ கார்யமான மார்க விஶேஷப்ரகாஶமும், ஹ்ருதயகுஹாநிர்கமநமும், ஸூக்ஷ்மஶரீர ஸம்ஸர்கமும், அர்சிர் வாஸர ஶூக்லபக்ஷோத்தராயண ஸம்வத்ஸர வாயு பாஸ்கர சந்த்ர வித்யுத் வருணேந்த்ர ப்ரஜாபதிகளாகிற ஆதிவாஹிகர்களுடைய ஶ்லாகா விஶேஷங்களும், அண்டாவரணாதிக்ரமணமும், ப்ரக்ருதிலங்கநமும், விரஜாப்ராப்தியும், ஸூக்ஷ்மஶரீர விஶ்லேஷமும், அமாநவகரஸ்பர்ஶமும், அகாலகால்யதிவ்யதேஶ ப்ராப்தியும், அபஹதபாப்மத்வாதி குணகணப்ராதுர்பாவமும், பகவத்ஸங்கல்ப கல்பித திவ்யதேஹ ப்ரவேஶமும், அப்ராக்ருதஸரஸ்ஸம்ஸர்கமும், திவ்யாப்ஸரஸ் ஸங்கஸத்காரமும், அப்ராக்ருதமண்டலப்ராப்தியும், பகவத்ஸளரப்யாதி ஸம்ஸர்கமும், அப்ராக்ருத கோபுரப்ராப்தியும், ஸூரிபரிஷத் ப்ரத்யுத்கமநமும், ராஜமார்ககமநமும், ப்ருஹ்மவேஶ்ம ப்ரவேஶமும், ஸூரிபரிஷந் மண்டப ப்ராப்தியும், ஸபத்நீகஸர்வேஶ்வர தர்ஶநமும், ஸ்துதிப்ரணாமாஞ்சலி ப்ரமுக ஸம்க்ரமாநுவர்த்தநமும், பரமாத்ம ஸமீப ப்ராப்தியும், பாதபீட பர்யங்காரோஹணமும், பகவத்ஸங்கஸங்கமும், ஆலோகநாலாபாலிங்கநாத்யநுபவமும், ஸ்வஸ்ரூப குணவிக்ரஹாத்யநுபவஜநித ப்ரீதிப்ரகர்ஷமும், நாநாவித விக்ரஹ பரிக்ரஹ பூர்வக ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தோசிதமான ஸர்வப்ரகார கைங்கர்யகரணமுமாகிற ப்ராப்தி விஶேஷங்கள் இதுக்கநந்தரத்திலே அநுஸந்தேயங்கள்.

ஸர்வஶப்தத்தாலே “ஸர்வதர்மான் பரித்யஜ்ய” என்று த்யாஜ்யங்களாக விஹிதங்களாய் போகபுத்த்யா அநுஷ்டேயங்களாயிருக்கிற தர்மங்களிலுபாயத்வ புத்தியையும், அபுத்திபூர்வகமாக அநுஷ்டிதமான உத்தராகத்தையும், ப்ராரப்தத்தையும், லோகஸம்க்ரஹார்தமாக அநுஷ்டேயங்களான தர்மவிஶேஷங்களில் ஸ்வார்ததா புத்தியையும் ஆவ்ருத்த ப்ரவ்ருத்தியையும், பகவத் பாகவத விஷயங்களிலுபசார புத்த்யா பண்ணுமபசாரங்களையும், பரி- என்கிற உபஸர்கத்தாலும் ஏக-ஶப்தத்தாலும் சொன்னவற்றினுடைய அநுவர்த்தியையும் சொல்லுகிறது.

அதிகாரி குறையாலே யாதல், உபாயபூதனான ஈஶ்வரன் குறையாலேயாதலிறே பாபங்களில் சிறிது கிடப்பது. உபாயாந்தர பரித்யாகமும் ஸித்தோபாய பரிக்ரஹமும் புஷ்கலமாகையாலே, அதிகாரி பக்கல் குறை யில்லை; ஜ்ஞாந ஶக்த்யாதி புஷ்கலமாகையாலே, உபாயபூதனான ஈஶ்வரன் பக்கல் குறையில்லை;

மோக்ஷயிஷ்யாமி பதார்த்தம்

(10) ’மோக்ஷயிஷ்யாமி’ – கீழில் மூன்றுபதமும், நிவர்தக ஸ்வரூபத்தையும் நிவர்த்யாஶ்ரயத்தையும், நிவர்த்யத்தையும்,  தத்பாஹுள்யத்தையும் சொல்லிற்று. இந்த பதம், நிவ்ருத்தியையும் நிவ்ருத்தி ப்ராகாரத்தையும் சொல்லுகிறது.

  1. “சும்மெனாதே கை விட்டோடி தூறுகள் பாய்ந்தனவே’ என்கிறபடியே- அநாதிகால ஸஞ்சிதங்களான கர்மவ்விஶேஷங்களெல்லாம் உன்னைக்கண்டு கூசி தானேவிட்டுப் போம்படி பண்ணுகிறேன். 2. ’வானோமறி கடலோ’ என்றும் 3. ’யானுமென்னெஞ்சும் இசைந்தொழிந்தோம்’ என்று சொல்லுகிறபடியே – வேறு சிலருடைய இசைவுகொண்டு பஹு ப்ரயாஸத்தாலே போக்கவேண்டாதே, தன்னடையே விட்டும்போம்படி பண்ணுகிறேன். பூர்வாகத்தோடு உத்தராகத்தோடு வாசியற ப்ரதிபந்தகங்களெல்லாம் அக்நிஸ்ப்ருஷ்டமான இஷீகதூலம் போலே ’ஆயர் குலத்தினில் தோன்றும் மணிவிளக்கை’ கிட்டினால் 4. ’தீயினில் தூசாகும்’ என்கிற படியே பிணமுங்காண வொண்ணாதபடி தக்தமாய்ப் போமிறே. பாபங்களாகின்றன– குப்பையிலாமணக்குபோலே உயரவெழுந்து பாம்பு போலேமிடத்தைப்பிடிப்பதொன்றிறே. சேதநன் பண்ணின கர்மங்கள் க்ஷணத்வம்ஸிகளாகையாலே அப்போதே நஶித்துப்போம், அஜ்ஞனாகையாலே கர்தாவானவிவனும்  மறந்துபோம்; ஸ்வத: ஸர்வஜ்ஞனான ஈஶ்வரன் ஒன்றொழியாமே உணர்ந்து கொண்டிருந்து ப்ராப்த காலங்களிலே ப்ராப்த பலங்களைத்தப்பாமே நிறுத்து அநுபவிப்பிக்கும்.  ஆகையாலே கர்மங்களாகிறன- அவனுடைய நிக்ரஹங்கள். ‘இக்கர்மங்களைப் பண்ணிப்போருகிற சேதனன், ஸத்த்வம் தலையெடுத்து ஒருக்கால் அவன் திருவடிகளிலே தலைசாய்த்தால், விலக்காமை பற்றாசாக ரக்ஷண ஸ்வபாவநாயிருக்கும். ஈஶ்வரன் இவ்வளவும் பெற்றால் விடானிரே. ஆகையாலே. இவனுடைய பூர்வாகத்தை க்ஷமித்து உத்தராகத்தில் அவிஜ்ஞாதாவாயிருக்கும். இனி யாரைக் கைக்கொண்டு அவை ஜீவிப்பது? “உணர்ந்தபோது இவன் பக்கல் வ்யாமோஹதிஶயத்தாலே “நன்று செய்தார்” என்று அவைதன்னை குணமாகக் கொள்ளுகையாலே, இவ்வதிகாரிக்கு ஒருப்ரகாரத்தாலும் அநாதி காலார்ஜிதங்களான கர்ம விஶேஷங்களைக் குறித்தஞ்ச வேண்டா. ’மோக்ஷயிஷ்யாமி’ என்கிற வார்த்தை தப்பாதென்று விஶ்வஸ்தனாயிருக்கும் அத்தனை வேண்டுவது” என்று நம்ஜீயரருளிச் செய்வர்.
  2. ‘போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பாடு இறப்பு அவை பேர்த்துப் பெருந்துன்பம் வேரற நீக்கித் தந்தாளின் கீழ்ச்சேர்த்தி அவன் செய்யும் ஶேமத்தையெண்ணித் தெளிவுற்று, 3. ‘தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு இன்பக் கதிசெய்யும்’ என்று அருச்சுனனுக்கு அருளிச்செய்த வார்த்தையறிந்தவர்களுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான இஷ்டப்ராப்தியன்றோ பலம். ஆயிருக்க அநிஷ்ட நிவ்ருத்தி மாத்தரத்தையே பலமாகச் சொல்லுவானென்,  பகவல்லாப விதுரமாக அநிஷ்ட நிவ்ருத்தி மாத்ரமே பலமாயிருப்பது கேவலநுக்கன்றோ, முமுக்ஷுவான இவ்வதிகாரிக்கு இரண்டும் பலமாய், அதுதன்னில் இஷ்டப்ராப்தி ப்ரதாந பலமாயிருக்கும். அத்தைச் சொல்லாதே ததங்கதயா உபாதேயமான ப்ரதிபந்தக நிவ்ருத்தி மாத்ரத்தையே பலமாகச் சொல்லி விடுவானேனென்னில்:– விரோதி நிவ்ருத்தியும் பகவத் ப்ராப்தியுமாகிற பலத்வயத்தைவைத்துக் கொண்டு ஒருபலத்தைச் சொன்னால் பலாந்தரம் தன்னடையே வருகையாலே சொல்லிற்றில்லை. 4. ’மாமேவைஷ்யஸி ஸத்யந்தே’ என்று- கீழிலுபாயத்துக்குச் சொன்ன பலந்தானே இவ்வுபாயத்துக்கு பலமாகையால் வேறு இதற்கு பலமின்றிக்கேயொழிகையாலே. பலகதநம் பண்ணிற்றில்லையென்னவுமாம்.

ஆனால் விரோதி நிவ்ருத்தி தன்னைச் சொல்லுவானென்னென்னில்; ’மாமேவைஷ்யஸி’ என்று- ஸ்வப்ராப்தி லக்ஷணமான பலத்தையாய்த்து- அங்குச் சொல்லிற்று; அதுக்கு பூர்வபாவியாய் ப்ரதிபந்தக நிவ்ருத்தி பூர்வகமாயிருக்கிற பலவிஶேஷம் அங்கு அநுக்தமாகையாலே தாத்ருஶமான பலவிஶேஷமிவ்வதிகாரிக்கு அதிகாரமாகையாலும் இங்குச் சொல்லிற்று. இவனுக்கபிலக்ஷிதமாய் பகவதநுபவாதி ரூபமாயிருக்கிற ப்ரதாநபலம், திரோஹிதங்களாயிருக்கிற மணித்யுமணி தீபாதிகளிநுடைய ப்ரகர்ஷாதிகளைப்போலே ஸ்வதஸ்ஸித்தமாய் ப்ரதிபந்தக நிவ்ருத்திமாத்ர ஸாகாங்க்ஷமாயிருக்கையாலே, நிவ்ருத்தி ப்ரதிபந்தகனான இவனுக்கு ஸ்வத: ஏவ ஆவிர்பாவமாய் இருப்பதொன்றாகையாலே தனித்துச் சொல்ல வேண்டாவிறே 1.’வழித்தங்குவல் வினையை’ என்றும் 2. ’கண்ணபிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை யமுதை- நண்ணியும் நண்ணகில்லேன் நடுவேயோருடம்பிலிட்டு’ என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே- தேஹ ஸம்பந்த ப்ரமுகமான ப்ரதிபந்தக வர்கமௌபாதிகமாயிறே இருப்பது; ஆகையாலே, வந்தேறியான விரோதி கழிந்தால் தன்னடையே வருகையாலே சொல்லிற்றில்லை.

ஶரீரபாத ஸமயத்தில் ஈஶ்வர ஸ்ம்ருதிக்கு விஷய பூதநாம்படியும், வாங்மநநாதி லயப்ரகாரமும். ஹார்த்ராநுக்ரஹ கார்யமான மார்க விஶேஷ ப்ரகாஶமும், ஹ்ருதயகுஹநிர்கமமும், ஸூக்ஷ்ம ஶரீர ஸம்ஸர்கமும், அர்சிர்வாஸர ஶுக்ல பக்ஷோத்தராயண ஸம்வத்ஸர வாயுபாஸ்கர சந்த்ர வித்யுத்வருணேந்த்ர ப்ரஜாபதிகளாகிற ஆதி வாஹிகர்களுடைய ஶ்லாக்யா விஶேஷங்கள், அண்டாதாரணாதி க்ரமணமும், ப்ரக்ருதி லங்கநமும், விரஜா ப்ராப்தியும், ஸூக்ஷ்ம ஶரீர விஶ்லேஷமும், அகால கால்ய திவ்யதேஶ ப்ராப்தியும், அபஹத பாப்மத்வாதி குண கண ப்ராதுர்பாவமும், பகவத் ஸங்கல்ப கல்பித திவ்யதேஹ ப்ரவேஶமும், அப்ராக்ருத ஸம்ஸர்கமும், திவ்யாப்ஸர ஸங்க ஸத்காரமும், அப்ராக்ருத மண்டப ப்ராப்தியும், பகவத் ஸௌலப்யாதி ஸம்ஸர்கமும், அப்ராக்ருத கோபுர ப்ராப்தியும், ஸூரிபரிஷ்க்ருதத்யுர்கமநமும், ராஜமார்ககமநமும், ப்ரஹ்ம வேஶ்ம ப்ரவேஶமும், ஸூரிபரிஷந்மண்டப ப்ராப்தியும், ஸபத்நீக ஸர்வேஶ்வர தர்ஶநமும், ஸூரி ப்ரணாமாஞ்ஜலி ப்ரமுக ஸஸம்ப்ரமானுவர்தநமும், பரமாத்ம ஸமீப ப்ராப்தியும், பாதபீட பர்யங்காரோஹணமும், பகவதுத்ஸங்கமும், ஆலோகநாலோபாலிங்கநாதி ஸம்பவமும், ஸ்வஸ்வ ரூபகுண விக்ரஹாத்யநுபவஜநித ப்ரீதி ப்ரகரமும், நாநாவித விக்ரஹ பரிக்ரஹபூர்வக ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தோசிதமான ஸர்வப்ரகார கைங்கர்ய கரணமுமாகிற ப்ராப்தி விஶேஷங்கள், இதுக்கநந்தரத்திலே அநுஸந்தேயங்கள்.

மாஶுச ஶப்தார்த்தம்

(11) மாஶுச: கீழெல்லாம் கூட, ஶோகநிவ்ருத்திக்கு வேணும் பரிஹரங்களை விஸ்த்ருதமாகச் சொல்லிற்று. இப்பதம்  ஶோக நிவ்ருத்தியைச் சொல்லுகிறது. ஸாதநாந்தர ஸம்பந்தமும், ஸுகர ஸாதநா தர்ஶநமும், விரோதிஸமூஹாநுவ்ருத்தியுமிறே ஶோககாரணம்.

துஷ்கரங்களான ஸாதநாந்தரங்களை வாஸநா ஸஹிதமாக த்யஜிக்கச் சொல்லுகையாலே, ஸாதநாந்தர நிபந்தநமாக ஶோகிக்கவேண்டா. ஸர்வ ஸுலபனாய்,  நிருபாதிக வத்ஸலனாய் ஸர்வஸ்வாமியாய் ஶீலவானாய் நிரபேக்ஷ ஸாதநபூதனாய் பரமகாருணிகனாயிருக்கிற தன்னை நிரபேக்ஷ ஸாதநமாக ஸ்வீகரிக்கச் சொல்லுகையாலே, ஸுக ஸாதநாதர்ஶநத்தாலே ஶோகிக்கவேண்டா.  ’ஸர்வஜ்ஞனாய் ஸர்வஶக்தியாய் அவாப்தஸமஸ்தகாமனாய் ப்ராப்தனாயிருக்கிற நான், ஸாம்ஸாரிக ஸகல துரிதங்களையும் ஸவாஸநமாகப் போக்கி, நிரதிஶயாநந்தயுக்தனாம்படி பண்ணுகிறேன்’ என்கையாலே, விரோதி பாஹுள்யத்தையநுஸந்தித்து ஶோகிக்கவேண்டா.  உபாயஸ்வரூபத்தை யநுஸந்தித்தாலும் ஶோகிக்க யோக்யதையில்லை; அதிகார்ஸ்வரூபத்தை அநுஸந்தித்தாலும் ஶோகிக்கயோக்யதையில்லை; பலஸ்வரூபத்தை அநுஸந்தித்தாலும் ஶோகிக்கயோக்யதையில்லை; உபாயம் ஸுஶக்த மாகையாலே உபாயத்தினுடைய துஷ்கரத்வ நிபந்தனமாக ஶோகமில்லை.  அதிகாரிக்கு கர்தவ்யமில்லாமை யாலே தந்நிபந்தனமாக ஶோகிக்கவேண்டா.  ஸர்வபாபமோக்ஷத்தை பலமாகச் சொல்லுகையாலே பலஸ்வரூப யுக்தமாக ஶோகிக்கவேண்டா; த்யாஜ்யங்களில் கிடப்பதொன்றில்லாமையாலே ஶோகிக்கவேண்டா; கர்தவ்யம் மாநஸவ்யாபார மாத்ரமாகையாலே ஶோகிக்கவேண்டா; ப்ரதிபந்தகம் நிஶ்ஶேஷமாக நிவ்ருத்தமாகையாலே தன்னிமித்தமாக ஶோகிக்க யோக்யதையில்லை;

உபாயாந்தர ஶ்ரவணத்தில் ஶோகியாதொழிகைக்கு யோக்யதையில்லாதாப்போலே இவ்வுபாய ஶ்ரவணத்தில் ஶோகிக்க யோக்யதையில்லை.  ஸாதநாந்தர ஶ்ரவணத்தில் ஶோகாநுவ்ருத்தியும் ஜ்ஞாத்ருத்வகார்யம்.  ஸித்த ஸாதந ஶ்ரவணத்தில் ஶோகாபாவமும் ஜ்ஞாத்ருத்வ கார்யம்.  உபாயாந்தர ஶ்ரவணத்தில் ஶோகாபாவமுண்டாய்த்தாகில் த்யாக ஸ்வீகாரங்களில் அந்வயமில்லை; ப்ரபத்த்யுபாய பரிக்ரஹத்துக்குப் பின்பு ஶோகாநுவ்ருத்தியுண்டாய்த்தாகிலும் த்யாக ஸ்வீகாரங்களிலந்வயமில்லை. ஸ்வாமிக்காய்த்து பலித்வமுள்ளது;  பலியாயிருக்குமவனுக்காய்த்து உபாயாநுஷ்டாத்ருத்வமுள்ளது. ஸ்வாமி, ஸ்வம்மான வஸ்துவையிழந்தால் ஶோகிக்கும், பலி பலமில்லாத போது ஶோகிக்கும், அநுஷ்டாதா அநுஷ்டாந விரோதம் பிறந்தால் ஶோகிக்கும்;  மூன்றிலும் உனக்கு அந்வயமில்லாமையாலே ப்ராப்தியில்லை. முன்பு ஶோகித்திலனாகில் உபாயாதிகாரமில்லை,  ’பின்பு ஶோகித்தானாகில் உபேயாதிகாரமில்லை. முன்பு ஶோகித்திலனாகில் உபயாந்தர தோஷமறிந்திலனாம், பின்பு ஶோகித்தானாகில் உபாயகுணமறிந்திலனாம். ஶோகா நுவ்ருத்திக்குஹேது உபாயஜ்ஞாநம்.

ஶோகநிவ்ருத்தியையும், ஸர்வபாப விமோசநத்தையும், அப்பாபங்களுக்காஶ்ரயமான சேதனனுடைய ஸ்வரூபத்தையும், அவற்றிற்கு நிவர்த்தகனான ஈஶ்வரனுடைய ஜ்ஞாந ஶக்த்யாதிகுணவிஶேஷங்களையும், அவைகார்யகரமாம்படி பண்ணக்கடவதாய் சேதநகதமாயிருக்கிற புத்திவிஶேஷத்தையும், புத்தி விஶேஷ ப்ரகாரத்தையும், புத்தி விஶேஷத்தில் உபாயத்வ புத்திராஹித்யத்தையும், புத்தி விஶேஷ விஷயத்தையும்,  அதுக்கங்கபூதமான புத்யந்தர தத்பரிகர பரித்யாகத்தையும், அதுக்கு யோக்யதா பாதகங்களான ததிதரங்களினுடைய த்யாகத்தையும் சொல்லித் தலைகட்டுகிறது.

சரமஶ்லோக ப்ரகரணம் ஸம்பூர்ணம்

 

 

ஶ்ரீமதே ராமானுஜாய நம:

பரந்தபடி

.வது, த்வய ப்ரகரணம்

உபோத்காதம்

திருமந்த்ரத்தாலே ஸுஶிக்ஷிதமான பகவதநந்யார்ஹ ஶேஷத்வ ஜ்ஞாநத்தையுடையனாய், சரம ஶ்லோகத்தாலே பகவத் ப்ராப்திக்கு, ப்ரபத்தி வ்யதிரேகேண விளம்பவிதுரமாய் ஸ்வரூபாநுரூப மாயிருப்பதொரு ஸாதந விஶேஷமில்லை என்று நிர்ணயித்து ப்ராபக ஸ்வீகார பூர்வக ப்ராப்யத்தை லபிக்கவேணுமென்கிற கௌதுகத்தையுடையனாயிருக்குமதிகாரிக்கு; ஸ்வஶேஷத்வாநுரூபமான உபாயோபேயங்களை ப்ரதிபாதிக்கிறது த்வயம்.

ஜ்ஞாநத்துக்கு பலம் ததநுரூபமான அநுஷ்டானமாகையாலே ரஹஸ்யத்வயத்திலும் ப்ரதிபாதிதமான உபாயோபேய விஷய ஜ்ஞாநம் அநுஷ்டான ஶேஷமாயிறே இருப்பது,

ஆகையாலே உபாய விஷய ஜ்ஞாநத்தினுடைய ஸாபல்ய ஹேதுபூதமான உபாயாநுஷ்டானத்தை ப்ரதிபாதிக்கிறது பூர்வவாக்யம்; உபேய விஷய ஜ்ஞாநஸாபல்ய ஹேதுவாயிருக்கிற உபேயாநுஷ்டானத்துக்கு பூர்வபாவியாயிருக்கிற உபேய ப்ரார்தநத்தை ப்ரதிபாதிக்கிறது உத்தரவாக்யம்.

இதில் ப்ரதிபாதிதமான உபாயாநுஷ்டானமும், உபேய ப்ரார்தநையுமில்லாதபோது இவ்வதிகாரிக்கு ஸாதக வ்யாவ்ருத்தியும் ஸாத்யாந்தரநிஷ்டாதி வ்யாவ்ருத்தியுமின்றிக்கேயொழியக்கடவது.

ஆகையாலே, ஸ்வரூபாநுரூபமான ஸாதந ஸாத்யங்களிரண்டையும் ப்ரதிபாதிக்கிற வாக்யத்வயமும் அநுஸந்தேயமாயிருக்கும்.

பூர்வ வாக்யாநுஸந்தாநமில்லாதபோது பகவதேக ஸாதநத்வ லாபமில்லை; உத்தர வாக்யாநுஸந்தாந மில்லாத போது பகவதேக ஸாத்யத்வலாபமில்லை; உத்தர வாக்யாநுஸந்தாநம் ஸாதனனுக்கும் ஸாதாரணமாயிருக்கும். பூர்வ வாக்யாநுஸந்தாநம் அதிகாரித்வய ஸாதாரணமாயிருக்கும்; ஆகையாலே, உபயாநுஸந்தாநமும் உண்டானாலாய்த்து அதிகாரித்ரய வ்யாவ்ருத்தியும் உண்டாவது.

வாக்யத்வயத்திலும் ப்ரதிபாதிக்கப்படுகிற ஸாதந ஸாத்யங்களையொழிந்த இதர ஸாதநஸாத்யங்களிரண்டுக்கும் ஸ்வரூபாநுரூபத்வம் அவிஶிஷ்டமாயிருக்குமாகையாலே, அவை த்யாஜ்யங்களாகக்கடவன.  இவை இவனுக்கு ஸ்வரூபத்துக்கநு ரூபங்களாயிருக்கையாலே அத்யந்தம் உபாதேயங்களாகக்கடவது. ஸ்வரூபாநுரூபமாயிருக்கிற இந்த உபாயோபேயங்களிறே வேததாத்பர்யவிஷயம்.

  1. ’தஸ்மாதபி வத்யம் ப்ரபந்நந் ப்ரதிப்ரயச்சந்தி, 2. தஸ்மான் ந்யாஸ மேஷாந் தபஸாமதிரிக்த மாஹு:’ 3. ’ந்யாஸ ஏவாத்யரேசயத்’ 4. ’யோ ப்ரஹ்மாணம்’  5. ’தமேவ ஶரணம் கத:’ 6. ’ஸக்ருதேவ ப்ரபந்நாய’  1. ’பத்தாஞ்ஜலிபுடம்’ . ’மஹத்யாபதிஸம் ப்ராப்தேஸ்மர்தவ்ய:’ 3.  ’நம: சக்ருர்ஜநார்தநம்’ ’4. அநந்ய ஸாத்யேஸ்வாபிஷ்டே’ 5. ’யேந யேந தாதா கச்சதி’ 6. ’அநுஸஞ்சரந்’ 7. ’அஹம் ஸர்வம் கரிஷ்யாமி’ 8. ’க்ரியதாமிதி மாம் வத’ 9. ’தந்நியுக்த: கரிஷ்யாமி’ என்று இத்யாதிகளில் சொல்லுகிறபடியே- இந்த உபாயோபேயங்கள் தான் ஶ்ருதி ஸ்ம்ருதீதிஹாஸாதி ஸித்தங்களாவனவளவன்றிக்கே, 10. ‘கழல்களவையே ஶரணாகக்கொண்ட,  11. நாகணைமிசை நம்பிரான் ஶரணே ஶரண், 12. அடிக்கீழமர்ந்து புகுந்தேனே, 13. நாயேன் வந்தடைந்தேன், 14. உலகமளந்த பொன்னடியையடைந்துயந்தேன், 15. ’த்வத்பாதமூலம் ஶரணம் ப்ரபத்யே, 16. அநந்ய ஶரணஶ் ஶரணமஹம் ப்ரபத்யே’, 17. ’வழுவிலாவடிமை செய்யவேண்டும் நாம், 18. ‘அடியேனை ஆட்கொண்டருளே. 19.’ஐகாந்திக நித்யகிங்கர: ப்ரஹர்ஷயிஷ்யாமி, 20. ‘நித்யகிங்கரோ பவாநி’ என்று, இத்யாதிகளில் சொல்லுகிறபடியே- ஆழ்வார்களும், ஆசார்யர்களும் அநுஷ்டித்ததும் ப்ரார்தித்ததும் இவற்றையேயாகையாலே, நமக்குமிவையே உபாதேயங்கள்.

ப்ரமாணிகத்வ முண்டேயாகிலும் ஆசார்ய ருசிபரிக்ருஹீதத்வ மில்லாதபோது ஆதரணீயமில்லையிறே. ப்ரமாணிகத்வ முண்டாயிருக்கச்செய்தேயும், ஶிஷ்டர்களுடைய அநுஷ்டான ராஹித்யத்தாலே இறே. அஷ்டகையில் பஶுவிஶஸநம் அகர்தவ்யமாகிறது.

  1. ’ஆசார்யவாந் புருஷோவேத’, 22. ‘பவத: பரமோமத:, 23. ‘தர்மஜ்ஞஸமய: ப்ரமாணம்’ 24. ‘ஆசார்யநிஷ்டாமந்விஷ்ய’, இத்யாதிகளில் சொல்லுகிறபடியே- ஆதரணீயதைக்கு ப்ரதாந ஹேதுவான ஆசார்ய ருசிபரிக்ரஹம் இவற்றுக்குக் கனத்திருக்கையாலே இவையே ஆதரணீயங்கள்.

“பிள்ளை, ஜீயரை, ப்ரபத்திக்கு ருஷிசந்தோ தேவதாதிகள் அநுஸந்தேயங்கள் அன்றிக்கே ஒழிவானென்? ப்ரமாணம் சுருங்கி இருப்பானென்?  அதிகாரி சுருங்கி இருப்பானென்? என்று கேட்க” இதில் அர்த்தத்துக்குக் கூட்டு வேண்டிலன்றோ இதுக்குக் கூட்டுவேண்டுவது, 1. ’ருஷ்யாதீம்ஶ்சகரந்யாஸம் அங்கந்யா ஸஞ்ச வர்ஜயேத்” என்றதிறே ப்ரமாணம்; 2. ’யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்’,  3. ‘நாராயண பரம் ப்ரஹ்ம தத்த்வம் நாராயண:பர:’, 4. ‘ஹ்ரீஶ்சதே லக்ஷ்மீஶ்சபத்ந்யௌ’, 5. ‘தஸ்மான் ந்யாஸமேஷாம் தபஸாமதிரிக்த மாஹு:, ந்யாஸ இத்யாஹு: மநீர்ஷிண:’ ஏவமாதி ப்ரமாணங்களுண்டு. என் பக்ஷத்தாலிதுக்கு ப்ரமாணாபேக்ஷையில்லை. ஸம்ஸாரி கீழ் கழிந்ததுமறியான், மேல் வருவதுமறியான்; வர்தமானத்திலும் பூதாம்ஶமறியான், பவிஷ்யதம்ஶமறியான், இது இவன் நிலை; 6.  ’யஸ்ஸர்வஜ்ஞஸ்ஸர்வவித்’, 7. ‘ஆநந்தோப்ரஹ்ம’, 8. ‘ஸமஸ்தகல்யாண குணாத்மகோஸௌ’ என்று நிர்தோஷ ப்ரமாணத்தாலே கேட்டிருக்குமீஶ்வரன் படியிது. இருவர் ஸ்வபாவமும் ப்ரத்யக்ஷத்தாலும் நிர்தோஷ ஶாஸ்த்ரத்தாலுமறிந்தபின்பு, அவனை யிவன் பற்றுகைக்கு 9. ’நிதித்யாஸிதவ்ய:’ என்றாப்போலே ஒருவிதி வேணுமோ; இருவருடையவும் தர்மி க்ராஹக ப்ரமாணமேயமையும், ’அவரக்ஷணே, மநஜ்ஞாநே, 10. ‘மால் தேடியோடும் மனம்’, 11. ‘நோக்குமுணர்வு’,  துர்பலநாயிருப்பானொருவன் மகிழ்ந்தான் என்றால்  பலவானா இருப்பானொருவனருகே நின்றாலவனை இவன் பற்றுகைக்கொருத்தர் சொல்லவேணுமோ. “முமுக்ஷுக்களதிகாரிகளாகையாலே அதிகாரிகள் சுருங்கிற்று”. என்றருளிச்செய்தார்.

ஒருவன் வெட்டத் தொடர்ந்து வாரா நின்றால் அவன், ஶரணம் புக ரக்ஷித்திலனாகில் ’காதகன்’ என்று லோகமடைய கர்ஹியா நின்றது; ரக்ஷித்தானாஹில், ’ஒருவன் நீர்மையே’ என்று லோகமாக கௌரவியா நின்றது.

ரகுராக்ஷஸ ஸம்வாதம், நஹுஷ ப்ருஹஸ்பதி ஸம்வாதம், வ்யாக்ரவானர ஸம்வாதம், மறவன் “முயல் குட்டியை விட்டுப் போந்தேன்” என்ன அதுகேட்டு பட்டரருளிச்செய்த வார்த்தையும், பாஷ்யகாரர் சரம ஸமயத்திலே “த்வயத்தை யெப்போதும் அநுஸந்திக்கை எனக்குப்ரியம்” என்றருளிச்செய்த வார்த்தையும், பெரியகோயில் நாராயணரைக்குறித்து ஶபதபூர்வகமாக “த்வயமொழியத் தஞ்சமில்லை” என்றருளிச்செய்த வார்த்தையும், ஸசேல ஸ்நாந பூர்வகமாக ஆர்த்தியோடே உபஸந்நனான சிறியாத்தானுக்கு “த்வயமொழியத் தஞ்சமில்லை” என்று எம்பாரருளிச்செய்த வார்த்தையும், திருமந்த்ரத்திலே பிறந்து, த்வயத்திலே வளர்ந்து, த்வயநிஷ்டராவீர் என்று நம்ஜீயரை குறித்து அனந்தாழ்வான் ப்ரஸாதித்த வார்த்தையும், “மந்த்ராந்தரங்களைச் சொல்லிவிடுமித்தனை இறே” என்று நம்ஜீயர் த்வயத்தையுபதேஶித்துப் பிள்ளைக்கருளிச்செய்த வார்த்தையும், அம்மங்கியம்மாள் திருநாராயணபுரத்திலே காணச்செல்ல உடையவரருளிச்செய்த வார்த்தையும் தொடக்கமான பூர்வாசார்யர்கள் வசநங்கள், ருசி விஶ்வாஸங்களுக்கு உறுப்பாக இவ்விடத்திலேயநு ஸந்தேயங்கள்.

இங்கு ப்ரதிபாதிக்கிற உபாயோபேயங்களை, ஆசார்ய ருசி பரிக்ருஹீதமான இஶ்ஶப்த விஶேஷத்தையொழிய ஶப்தாந்தரத்தாலே அநுஸந்திக்கலாகாது.

மெய்க்கன்றுக்கு இறங்கிப்போந்த வாஸநையாலே தோற்கன்று மடுத்தாலும் ஸுரபியானது இரங்கிப்பால் சுரக்குமாப்போலே, மெய்யானவர்களுக்கிறங்கி போந்த வாஸநையாலே பொய்யான தமக்குமிரங்குவது இஶ்ஶப்தவிஶேஷத்தைக்கேட்டாலாய்த்து; ஆகையாலே இதுவே அநுஸந்தேயம். என்று பிள்ளைக்கு ஜீயரருளிச்செய்த வார்த்தை.

ஆகையாலே த்வயமே ஆதரணீயம். பூர்வாசார்யர்கள் ரஹஸ்ய த்ரயத்தையும் தங்களுக்கு தநமாக நினைத்துப் போரச் செய்தேயும், ஸர்வாதிகாரமாகையாலும், ஆசார்ய ருசிபரிக்ருஹீதமாகையாலும், புத்தி பூர்வகமான அபசாரத்துக்கும் பரிஹாரமாகையாலும், கர்மாவஸ்தாநத்திலே அன்றிக்கே ஶரீராவ ஸாநத்திலே மோக்ஷமாகையாலும், த்வயத்தையே மிகவும் தஞ்சமாக நினைத்துப் போருவர்கள்.

சக்ரவர்த்தி திருமகனோடு, காக விபீஷணாதிகளோடு, வாஶியர, எல்லாருக்குமதிகாரமாயிருக்கையாலே ஸர்வாதிகாரமாயிருக்கும். 1. ’ரோகிணாமௌஷதம் யதா’ என்கிறபடியே.

திருமந்த்ரம் ஶாஸ்த்ரருசி பரிக்ருஹீதம்; சரமஶ்லோகம் ஶரண்ய ருசி பரிக்ருஹீதம்; த்வயம் ஆசார்யருசிபரிக்ருஹீதம்.

இம்மூன்றுக்கும் மூன்றுண்டாயிருக்கச்செய்தேயும் இப்படி சொல்லுகிறது ஊற்றத்தைப்பற்ற.

த்வயம் கடவல்லியிலே அதீதமாகையாலே ஶாஸ்த்ரருசி பரிக்ருஹீதம்; ப்ரஹ்மாதிகளைக்குறித்து ஸர்வேஶ்வரனருளிச்செய்தான் என்னுமிடம் பகவச் ஶாஸ்த்ர ப்ரஸித்தமாகயாலே ஶரண்யருசி பரிக்ருஹீதம், ஆசார்யருசி பரிக்ருஹீதமென்கைக்கு, கீழே ஆசார்ய வசநங்கள் சொன்னோம்.

புருஷகார பூர்வகமாக அபராதக்ஷாபணத்திலே இழிந்தால், பூர்வாபராதங்களில் ஈஶ்வரன் அவிஜ்ஞாதாவாயிருக்கையாலே, க்ஷமித்தோமென்கிற உக்திக்கும் நக்ஷமாமிக்கும் விரோதமில்லை; ப்ரபத்த்யுத்தரகாலம் ப்ராமாதிகங்களையொழிய புத்திபூர்வகமாகவபசாரம் கூடாது; பகவத்ப்ர பாவத்தைப் பார்த்தால், காதாசித்கமாகவரும் புத்தி பூர்வகமான அபசாரத்துக்கும் பரிஹாரமாம்; அபசாரத்துக்கு அநந்தரம் அநுதாபம் பிறந்ததில்லையாகில், ஜ்ஞாநம் பிறந்ததுமில்லை, என்று ஜீயர், எண்ணாயிரத்துத் திருவாய்க் குலத்தாழ்வானைக் குறித்தருளிச் செய்தார். 1. ’குன்றனைய குற்றம் செய்யினும் குணம்கொள்ளும்’.

உபாஸகனுக்கு, மோக்ஷத்துக்கு ஸாதநமாகத் தான் அநுஷ்டிக்கிற உபாஸநம் பக்வமாய் அநந்தரத்திலே கர்ம க்ஷயம் பிறந்து முக்தனாக வேண்டுகையாலே, கர்மாவஸாநத்திலே மோக்ஷமாகக்கடவது; ப்ரபன்னனுக்கு, உபாயதயா கர்தவ்யமில்லாமையாலும், உபாயபூதனான ஈஶ்வரனுக்கு ஜ்ஞாந ஶக்தியில் வைகல்ய மில்லாமையாலும், வர்த்தமான ஶரீரத்தையொழிய ஆகாமி ஶரீரத்தில் இச்சையில்லாமையாலும், ப்ரபத்யுத்தர காலம் இஶ்ஶரீரத்தினுடைய ஸ்திதிக்கு ஹேது தீவ்ரஸம்வேகராஹித்யமாகையாலும், ஶரீராவ ஸாநத்திலே மோக்ஷமாகக்கடவது.

ஸூக்ஷ்ம ஶரீரம்போலே இஶ்ஶரீரமும் ஈஶ்வராநுக்ரஹத்தாலே இருக்கிறதென்னில்; அது விரஜையளவும் கமநஸாதநமாயிருக்கிறது. இஶ்ஶரீர ஸ்திதிக்கு ப்ரயோஜநமில்லை. ஸுகோத்தரமாக விருந்தானாகில் பகவதநுக்ரஹத்தாலே என்னலாம், அல்லாமையாலே அவனுக்கு வைஷம்ய நைர்க்ருண்யங்கள் ப்ரஸங்கிக்கும். ஆகையாலே, ஶரீரஸ்திதிக்கு ப்ராரப்தஶேஷமே ஹேது; ப்ரபதநா நந்தரம் ஶரீர மோக்ஷமுண்டாவது பரமார்த்தியுண்டாகில். கர்ப நரக ப்ரவேஶாதிகளில் அஸஹ்யதையொழிய வர்த்தமான ஶரீரத்தில் அஸஹ்யதையில்லை; ஆகையாலே வைத்தருளும். அப்போதே ஶரீர விஶ்லேஷம் பிறக்கில் நச்சுப்பொய்கை என்று பீதராயிழிவாரில்லை இவன் ஒருக்ஷண காலமிருக்க அநேகாவதாரங்களில் கிடையாத பலம் ஸித்திக்கும். சரம தேஹமாகையாலே ஈஶ்வரனுக்கு அதிலே ஆதரணீயம் நடக்கும். இவை அவாந்தர பலங்கள். து:கோத்தரமாயிருக்கச்செய்தே விடமாட்டாதவன் ஸுகலவமுண்டாகில். இதிலே வேர் பற்றுமென்று ஈஶ்வரன் ஹிதகாமனாகையாலே ’ஶரீராவஸாநத்தளவும் கர்மபலம் அநுபவித்திடுவான்’ என்று உதாஸீனனாயிருக்கும்; ஆகையாலே ப்ரபன்னனுக்கு ப்ராரப்தகர்மாவஸாநம் பார்த்திருக்கவேண்டா.

திருமந்த்ரத்திலும் சரமஶ்லோகத்திலும் அர்த்தஜ்ஞாநத்தாலும் துஸ்ஸாதநமான பலம் இதில் ஶப்தோச்சாரணத்தாலே ஸுலபமாம்.

பூர்வாசார்யர்கள் மற்றையிரண்டிலும் அர்த்தத்தையே மறைத்துக்கொண்டு போருவர்கள்; இதில் ஶப்தார்த்தங்களிரண்டையும் மறைத்துக்கொண்டு போருவர்கள்; மந்த்ர ஶ்லோகங்களிரண்டிலும் ஶப்தத்தை வெளியிட்டு அர்த்தத்தை மறைத்துகொண்டு போருவர்கள் த்வயத்தில் இரண்டையும் மறைத்துக்கொண்டு போருவர்கள், 1. ’குஹ்யாநாம் குஹ்யமுத்தமும்’ என்னதிறே.

வாச்யம் ஸக்ருத் கர்தவ்யமானாப்போலே, வாசகோச்சாரணமும் ஸக்ருத் கர்தவ்யம் 2. ’தஸ்மாத்ஸக்ருத்க்ருதே நைவகர்மணாயே ந மானவ:, ஸக்ருஜ்ஜப்தேன மந்த்ரேண க்ருதக்ருத்யஸ்ஸுகீ பவேத்’ என்று ப்ரஶ்நம் பண்ண, 2. ‘’மந்த்ரோஹி வித்யதே யேந ஸக்ருதுச்சாரிதேநவை- புருஷோஜீவ லோகேஸ்மிந் க்ருதக்ருத்யோ பவிஷ்யதி’ என்று ப்ரதிவசநம் பண்ணுகையாலே இவ்வர்த்தம் கடவல்லியிலும் சொல்லிற்று. இத்தையறிய எல்லா மந்த்ர பலங்களும் ஸித்திக்கும், 2. ’ஸர்வமந்த்ரப லாந்யஸ்ய விஜ்ஞாநேந பவந்திவை’ என்கையாலே; 2. ’ஏதந் மந்த்ரம் விஜ்ஞாய’ என்கையாலே இத்தை அறியாதபோது ஸம்ஸார நிவ்ருத்திக்கு உபாயமில்லை. 1. ’வாசிகம் மானஸம்’ இத்யாதியாலே உச்சாரணமொழிய ஸம்ருதிமாத்ரத்தாலே த்ரிவித கரணத்தாலும் பண்ணின பாபங்கள் போமென்று சொல்லும். அபிஜந வித்யாவ்ருத்தங்கள் மூன்றுமுடையவனேயாகிலும் த்வயத்துக்கதிகாரியன்றிக்கே யொழியுமாகில் அவனைக் கண்டால் விலகவேணுமென்று சொல்லிற்று. இம்மூன்றுமில்லையேயாகிலும் த்வயோச்சாரணம் பண்ணினவன் பூஜ்யதமனென்றுச் சொல்லிற்று. ரக்ஷகன் க்ருதாத்மாவாகையாலே அஹ்ருதயோக்தியையும் புத்திபூர்வோக்தியோடொக்க நினைத்திருக்கும்.  ஆநுகூல்யத்தில் தாரதம்யம் கொண்டு த்யாகபரிக்ரஹம் பண்ணுவது அபரிபூர்ணனாகிலிறே. பரிபூர்ணனாகையாலே ஆபிமு க்யஸூசகமொன்றுமிறே வேண்டுவது. 2. ’பொய்யே கைமைசொல்லி,’ என்றும், 3. புறனுரையேயாகிலும்’ நிரர்தகமான ஸமுத்ர கோஷத்தைக் காட்டில் ஸார்தங்களான கடபடாதிஶப்தங்கள் ஶ்ரேஷ்டங்கள். அவற்றிற்காட்டில் தேவதாந்தர நாமங்கள் ஶ்ரேஷ்டங்கள். அவற்றிற்காட்டில் பகவந்நாமங்கள் ஶ்ரேஷ்டங்கள். அவற்றில் வைத்துக்கொண்டு மூலமந்த்ரம் ஶ்ரேஷ்டம். மூலமந்த்ரம் ஸமுத்ர கோஷ ஸ்தாநீயமாம்படி த்வயம் ஶ்ரேஷ்டம். அதுக்கடி மூலமந்த்ரத்திலார்த்தமான அர்த்தம் த்வயத்திலே வாசகமாகை. வாச்யங்களில் ஸர்வேஶ்வரனுக்கு அவ்வருகில்லாதாப்போலே, வாசகங்களிலுமிதுக்கவ்வருகில்லை. இதுவே ஸித்தாந்தமென்று ஜீயரருளிச்செய்வர்.

திருமந்த்ரம்  ஆத்மபாரதந்த்ர்ய ப்ரதாநம். சரமஶ்லோகம் பகவத் ஸ்வாதந்த்ர்ய ப்ரதாநம், த்வயம் பகவத் பாரத்ந்த்ர்ய ப்ரதாநம். திருமந்த்ரம் ப்ராப்ய ப்ரதாநம். சரமஶ்லோகம் ப்ராபக ப்ரதாநம், த்வயம் உபய ப்ரதாநம். திருமந்த்ரம் மம்த்ரரூபம், சரமஶ்லோகம் விதி ரூபம், த்வயமநுஷ்டானரூபம். இதுக்கதிகாரி, திருமந்த்ரத்தில் த்ருதீயபதத்திலும், சரமஶ்லோகத்தில் ப்ரதம பாதத்திலும், த்வயத்திலும் நிஷ்டையுடையவன். இதுக்கு த்வயமென்று திருநாமமாய்த்து ஸாதந ஸாத்யங்களைச் சொல்லுகையாலே. இதொழிய நான்கு ஐந்து ஹேதுக்களைச் சொல்லுவர்கள்.

இதுதான், பூர்வவாக்யம் மூன்றுபதமும், உத்தரவாக்யம் மூன்றுபதமும், ஆக, ஆறுபதமாயிருக்கும். இதில் பூர்வவாக்யம், உபாயத்தை ப்ரதிபாதிக்கிறது; உத்தரவாக்யம் உபேயத்தை ப்ரதிபாதிக்கிறது. 4. ’நாளும் நின்றடும்  நம் பழமை அங்கொடு வினையுடனே மாளும்’ என்றும், 1. ’புலனைந்து மேயும் பொறியைந்தும்  நீங்கி’ என்றும், 2. ’ப்ரஹ்மவிதாப்நோதி பரம்’ என்றும். இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ஜ்ஞப்தி தஶையிலுபாயத்துக்கு உபேயாந்தர பாவித்வமுண்டாயிருந்ததேயாகிலும். ’மாமேகம் ஶரணம் வ்ரஜ, அஹம்த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி’ என்றும் 3. ’திருநாரணன்தாள், காலம்பெறச் சிந்தித்துய்மினோ’ என்றும் இத்யாதகளில் சொல்லுகிறபடியே, உத்பத்திதஶையில் உபேயம் உபாயாந்தர பாவியாயிருக்கையாலே உபாய ப்ரதிபாதகமான பூர்வவாக்யமுற்பட அநுஸந்தேயமாய் உபேய ப்ரதிபாதகமான உத்தரவாக்யம் பிற்பட அநுஸந்தேயமாயிருக்கும். ஆகையாலே இறே திருமந்த்ரத்தில் நமஸ்ஸுக்கு பின்பு நாராயண பதமாச்சுது. இதில் பதத்ரயாத்மகமான பூர்வவாக்யத்தில், ப்ரதம பதம் ஸ்வீகார்யவஸ்துவை ப்ரதிபாதிக்கிறது.  த்விதீயபதம் ஸ்வீகார ப்ரகாரத்தை ப்ரதிபாதிக்கிறது. த்ருதீயபதம் ஸ்வீகாரத்தை ப்ரதிபாதிக்கிறது.

ஶ்ரீஶப்தார்த்தம்

அதில் ஶ்ரீமந் என்கிற அம்ஶத்தாலே- புருஷகாரத்தையும், புருஷகாரத்தினுடைய நித்யஸந்நிதியையும் சொல்லுகிறது. ’ஶ்ரீ ஶப்தம்’ ஶ்ரீயதே, ஶ்ரயதே, என்கிற உத்பத்தித்வயத்தாலும் பிராட்டியுடைய புருஷகார பாவத்துக்கு உபயுக்தங்களான குணவிஶேஷங்களைச் சொல்லுகிறது. அக்குணவிஶேஷமாகிறது உபயஸம்பந்தம்; அதில் கர்மணி வ்யுத்பத்தி, சேதநனோடுண்டான பந்த விஶேஷத்துக்கு ப்ரகாஶகமாயிருக்கும்; கர்தரி வ்யுத்பத்தி ஈஶ்வரனோட்டை ஸம்பந்தத்துக்கு ப்ரகாஶகமாயிருக்கும்.  சேதநனோடே மாத்ருத்வச்லக்ஷண பந்தமுண்டாயிருக்கும்; ஈஶ்வரனோடே மஹிஷீத்வ லக்ஷண பந்தமுண்டாயிருக்கும். மாத்ருத்வ லக்ஷண பந்தத்தாலே புருஷகார நிரபேக்ஷமாக ஸகல சேதநர்க்கும் ஆஶ்ரயணீயையாயிருக்கும். மஹிஷீத்வ ப்ரயுக்தமாக ஈஶ்வரனோடே நித்யஸம்யுக்தையாயிருக்கையாலே புருஷகார நிரபேக்ஷமாக ஈஶ்வரனை ஸேவியாநிற்கும். 4. ’யஸ்யா: கடாக்ஷணமநுக்ஷணம்’ இத்யாதியாலே. வ்யுத்பத்தி த்வயத்தாலுமுண்டான அர்த்தத்தை ஆழ்வானருளிச்செய்தார். ’ஶ்ருணோதி, ஶ்ராவயதி’ என்கிற நிருக்திவிஶேஷத்தாலே- ’ஶ்ரீயதே’ ’ஶ்ரயதே’ என்கிற வ்யுத்பத்தி த்வயத்தாலும் பலிதமான அர்த்த விஶேஷத்தைச் சொல்லுகிறது- ஶ்ருணோதி என்றது கேளாநிற்குமென்றபடி. ஶ்ராவயதி என்றது கேட்டியா நிற்குமென்றபடி.

ப்ரதீப்த ஶரணத்தில் பொருந்தாதாப் போலே ஸம்ஸாரமடிக் கொதித்து  பகவத்விஷயத்தை கிட்டியல்லது தரிக்கமாட்டாத படியான தஶா விஶேஷத்தை யுடையனாய் பகவத் ஸமாஶ்ரயணோந்முகனான சேதனன்,1.  ’யத்ப்ரஹ்மகல்ப’ இத்யாதிப்படியே காலதத்வமுள்ளதனையும் அநுபவியா நின்றாலும் சிறிது வரையிட்டுக் காட்டக்கடவதல்லாதபடி க்ரூரங்களாயிருக்கிற, அக்ருத்யகரண க்ருத்யாகரண ப்ரமுகங்களான அபராத விஶேஷங்களை, கரணத்ரயத்தாலும் அநாதிகாலம் கூடுபூரித்து, ஈஶ்வரனுடைய 2. ’க்ஷிபாமி, 3. நக்ஷமாமி’ என்கிற வெட்டிய சொற்களுக்கு விஷயபூதனாய்ப் போந்தானொருவனாகையாலே, அநாதி காலார்ஜிதங்களான தன்னுடைய அபராத விஶேஷங்களையும், ஈஶ்வரனுடைய நிரங்குஶ ஸ்வாதந்த்ர்யத்தையும், அநுஸந்தித்து பீதனாய், பிராட்டியுடைய நிரவதிகமான காருண்யாதிகுணங்களையும், தன்னோடவனுக்குண்டான பந்தவிஶேஷத்தையும் புரஸ்கரித்து ஸாபராதனாய், ’அநந்ய ஶரணனாயிருக்கிற எனக்கு அபராத நிவ்ருத்திமாத்ரத்திலே ப்ரபந்நையாய் அஶரண்ய ஶரண்யையாயிருக்கிறவள் திருவடிகளொழியப்புகலில்லை, என்று இவன் விண்ணப்பம் செய்யும் வார்த்தையைத்தானே கேளாநிற்கும். ஈஶ்வரனைக் குறித்து விண்ணப்பம் செய்யும் வார்த்தையை அவன்கேட்கும்படி பண்ணாநிற்கும்.

இச்சேதனனுக்கு இருவரோடும் பந்தமுண்டாயிருக்க அவனுக்கிவள் புருஷகாரமாக வேண்டுகிறதென் என்னில்; மாத்ருத்வ நிபந்தநமான வாத்ஸல்யாதிரேகத்தாலும், ஈஶ்வரநோபாதி காடிண்யமார்தவங்கள் கலந்திருக்கையன்றிக்கே கேவலமார்தவமேயாய் ஸாபராதரான சேதநரை அபராதாநுகுணமாக நியமிக்குமிடத்தில் 4. ’மர்ஷயாமீஹ துர்பலா’ என்கிறபடியே அஶக்தையாயிருக்கையாலும், 5. ’த்வந்நீச ஶஶவத் ஸ்ம்ருத:’ என்கிறபடியே தன் திருவாயாலே புல்லியதான வார்த்தையை யருளிச்செய்ய வேண்டும்படி விபரீத புத்தியாலும் தன் திறத்திலே தீரக்கழிய அபராதத்தைப்பண்ணி 6. ’ராவணோ லோக ராவண:’ என்கிறபடியே இருந்ததே குடியாகக் கையெடுத்துக் கூப்பிடவேண்டும்படி பரஹிம்ஸையை யாத்ரையாக உடையனாயிருக்கிற ராவணனுடைய தண்ணிமையைப் பாராதே அவனைக் குறித்து 7. ’தேந மைத்ரீ பவது’ என்றும், 8. ’மித்ரமௌபயிகம் கர்தும்’ என்றும் ஹிதோபதேஶம் பண்ணுகையாலும், ராக்ஷஸிகள், ராவணன் பராஜிதனாகவும் பெருமாள் விஜயிகளாகவும் ஸ்வப்நம் கண்டு அத்தாலே பீதபீதைகளாக, த்ரிஜடை 1. ’அலமேஷா பரித்ரா தும் ராக்ஷஸ்யோமஹதோ பயாத்’ நாம் விடாதேயிருந்து தர்ஜந பர்த்ஸநங்களைப்பண்ணி நலிய நம்மாலே நலிவு படுகிறவள் தானே நமக்கு ஆபத்துண்டான காலத்திலே, நம்மைக்கைவிடாதே ரக்ஷிக்குமென்று சொல்லுகையாலும், இப்படி பிறர் சொன்னவளவன்றிக்கே பிராட்டிதானும் இவர்கள் நோவுபடுகிற ஸமயத்திலே 2. ’பவேயம் ஶரணம் ஹிவ:’ என்று ’நீங்கள் நோவுபடுகிற ஸமயத்துக்கு நான் இருந்தேன், நீங்கள் அஞ்ச வேண்டா” என்று அபயப்ரதாநம் பண்ணுகையாலும், இப்படி வ்யவஹார மாத்ரமேயாய் அநுஷ்டானம் விபரீதமாயிருக்கையன்றிக்கே, திருவடிவந்து “ராவணன் பட்டான், பெருமாள் விஜயிகளானார்” என்று விண்ணப்பம் செய்த வார்த்தையைக் கேட்டு இவன் பண்ணின உபகாரத்துக்கு ஸத்ருஶ ப்ரத்யுபகாரம் காணாதே தடுமாருகிற அவஸ்தையிலே ’பத்துமாஸம் தேவரீரை தர்ஜந பர்த்ஸ்யநங்கள் பண்ணி நலிந்து போந்த ’இப்பெண் பயல்களை நான் நினைத்த வகைகளிலே நலியும் படியவர்களைக் காட்டித்தரவேணும், நான் முன்பு தேவர் திருவடிகளிலே வந்தபோது இவர்கள் பண்ணின நலிவைப் பொறுக்க மாட்டாதே நொந்துபோனேன், இப்போதிவர்களை நிரஸிக்கைக்கொரு ப்ரதிபந்தகமில்லை, இவர்களை ஐம்பது அறுபது வகைகளாலே கொல்லும் வகை சொல்லாநின்றேன், இவனுக்கு நாம். பரிசிலாகக் கொடுக்கலாவதென் என்று தடுமாறவேண்டா, இவர்களை நிரஸிக்கும்படி என் கையிலே காட்டித்தருமதொழிய எனக்குப் பண்ணும் ப்ரத்யுபகாரம் வேறில்லை’  என்று விண்ணப்பம் செய்ய,  திருவடி பண்ணின உபகாரத்தையும் ராக்ஷஸிகள் பண்ணின அபகாரத்தையும் பாராதே அப்போதவர்களுடைய அச்சமொன்றுமே திருவுள்ளத்தே பட்டு, அவர்களுடைய கண்குழிவு காணமாட்டாத படியான மார்தவத்தாலே, 3.  ’நகஶ்சிந்நாபராத்யதி’ என்றும் 4.  ’க: குப்யேத்’  என்றும் 5. ’துர்லபா’ என்றும் திருவடியோடே மன்றாடி ஆர்த்ராபராதைகளான ராக்ஷஸிகளை ரக்ஷிக்கையாலும், இளையபெருமாள் காட்டுக்கெழுந்தருளுகிறபோது, பெருமாள் நிறுத்திப் போகத்தேடினவளவிலே 6. ’ஸீதாமுவாச’ என்றுபிராட்டி புருஷகாரமாக பெருமாளோடே கூடப்போகையாலும், விபீஷணப்பெருமாள் 7. ’ப்ரதீயதாம் தஶரதாய மைதிலீ’ என்று ஜீவிக்க வேண்டியிருந்தாயாகில் பெருமாள் தம்முடைமையும் தாமுமாகச் சேர இருக்கும்படிப் பண்ணப்பார் என்று ராவணனைக் குறித்துப் பெருமாளும் பிராட்டியும் சேரவிருக்கைக்குறுப்பான வார்த்தைகளைச் சொல்லியும், த்ரிஜடையைப் பிராட்டிக்கு வ்யஸநங்களில் உசாத்துணையாக வைத்தும்,  இப்படி பிராட்டி முன்னாகப் பெருமாளை ஶரணம் புகுகையாலும், மஹாராஜர் திருவாபரணம் முன்னாகப் பெருமாளைப் பற்றுகையாலும், காகம் அபராதத்தைப் பண்ணிவைத்து, பிராட்டி ஸந்நிதியிலே தலையறுப்புண்ணாதே பிழைக்கையாலும், ராவணனுக்கத்தனை அபராதமின்றிக்கேயிருக்க பிராட்டி ஸந்நிதியில்லாமையாலே தலையறுப்புண்கையாலும்’ பின்னையும் இளைய பெருமாளைக் குறித்துப் பிராட்டி தன்னை வனத்திலே விட்டுப் போகாநிற்க ‘தம்பிமாரோடொக்க நாட்டை ரக்ஷிக்க – விண்ணப்பம் செய்யும்’ என்றருளிச் செய்கையாலும், மற்றும் இவை தொடக்கமான ஸ்வபாவ விஶேஷணங்கள் எல்லாவற்றாலுமாக, ஈஶ்வரனை ஆஶ்ரயிக்கும்போது இவள் புருஷகார பூதையாகக்கடவள்.

முக்யமாக எம்பெருமானை ஆஶ்ரயிக்கையாவது. பிராட்டி முன்னாக ஆஶ்ரயிக்கை.

’ஆச்சி சிறியாத்தானுக்கு பகவச்சேஷமாய் அவற்றை நெடுங்காலமகன்று போந்த இவ்வாத்மாவை எம்பெருமானோடே யிணைக்கைக்குப் பற்றாசாக நமக்கு பிராட்டியுளளென்று நிர்பயனாயிரு” என்றருளிச் செய்தார்.

ஸர்வஜ்ஞனாய் ஸர்வ ஶக்தியாயிருக்குமீஶ்வரன் 1. ’உள்ளுவாருள்ளத் தெல்லாமுடனிருந்து அறிதி ’ என்கிறபடியே – ஹ்ருதிஸ்தனாய்க்கொண்டு சேதநர் பண்ணுமபராதங்களைக் குறித்து அவற்றுக்கீடாக நியமிக்கையாலே, ஸாபராதராந சேதநர் ஶரணோக்தியை ப்ரயோகித்தால் அதுவும் அபராத கோடி கடிதமாயிருக்குமிறே.

ஆகையாலே அநாதிகாலம் தான் பண்ணிப்போந்த அபராதங்களைப் பொறுத்தருளவேணுமென்று விண்ணப்பம் செய்யும்போது அந்த:புர பரிகரமாய் நின்று விண்ணப்பம் செய்யவேண்டுகையாலே ஸர்வஜ்ஞனான ஈஶ்வரனையும்கூட நிருத்தரனாம்படி பண்ணவற்றான தன்னுடைய உக்தி விஶேஷங்களாலும், 2. ’பித்தர் பனிமலர் மேல் பாவைக்கு’ என்றும் 3. ’மலராள் தனத்துள்ளான்’ என்றும் 4. ’மாமலர் மங்கை மணநோக்குமுண்டான்’ என்றும், 5. ’அல்லி மலர் மகள் போக மயக்கக்களகியும் நிற்கும் அம்மான்’’ என்றும், தன்னுடைய போக்யதா ப்ரகர்ஷத்தாலும் மற்றுமுண்டான உசிதோபாய விஶேஷங்களாலும், சேதனனுடைய அபராதங்கள் ஈஶ்வரன் திருவுள்ளத்திற்படாதபடி பண்ணி அநாதிகாலம் அகன்று  போந்த இருவரையும் சேர்கக்கடவதாயிருக்கிற பிராட்டி ஸ்வரூபம் சொல்லிற்று.

மதுப் அர்த்தம்

  1. ’மதுப்பாலே’ புருஷகார பூதையான பிராட்டியுடைய நித்ய யோகம் சொல்லுகிறது. 6.’நித்யாநபாயிநீம்’ என்றும் 7. ’அகலகில்லேன்’ என்றும் 8. ’விஷ்ணோஶ் ஶ்ரீரநபாயிநீ’ என்றும் 9. ’பாஸ்கரேண ப்ரபா யதா’ என்றும் 10. ’தன்னோடும் பிரிவிலாத திருமகள்’ என்றும் சொல்லுகிறபடியே- ஈஶ்வரனோடே நித்ய ஸம்ஶ்லிஷ்டையாயிருக்கையாலே ஆஶ்ரயணோந்முகனான சேதனன், தன்னுடைய அபராதங்களையும் ஈஶ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்தையும் அநுஸந்தித்து பிற்காலிக்குமாப்போலே புருஷகாரபூதையான பிராட்டியுடைய அஸந்நிதியை அநுஸந்தித்து பிற்காலிக்க வேண்டாதே, ருசிபிறந்தபோதே ஆஶ்ரயிக்கலாம்படி இருக்கும்.
  2. ’ந ச ஸீதாத்வயா ஹீநா’ என்கிறபடியே, அரைக்ஷணம் விஶ்லேஷித்தால் ஸத்தாஹாநி பிறக்கும்படியாயிருக்கையாலும், தன்னை பிரிந்தபோது 2. ’ஜகத்ஸஶைலம்’ என்கிறபடியே – நாடு குடிகிடவாதென்றறிந்திருக்கையாலும், பரத்வத்தோடு வ்யூஹத்தோடு விபவத்தோடு அர்ச்சாவதாரத்தோடு அந்தர்யாமித்வத்தோடு வாசியற எல்லா விடத்திலும் பிரியாதே இருக்கும்.

[’திருமால் வந்தென் நெஞ்சு  நிறையப் புகுந்தான், பாவை பூமகள் தன்னோடுமுடனே வந்தாய், என்மனத்தே புகுந்தாய், சேர்ந்த திருமால்’ இத்யாதி.]

இவளுக்கும் ஈஶ்வரனுக்கும் உண்டான சேர்த்தியும் நித்யமாய் அநுபவமும் நித்யமாய் தத்கார்யமான ஹர்ஷமுமென்று முண்டாகையாலே, இச்சேதனனுக்கு பிராட்டி அஸந்நிதி ப்ரயுக்தமாக ஆஶ்ரயணவைமுக்யம் பிறக்கையன்றிக்கே, இப்ப்ரதிபத்தி மாத்ரமேயாய்த்தபேக்ஷிதம். இதுண்டானபோது ஸர்வ காலமுமாஶ்ரயிக்கலாம்படியிருக்கும்.

ஆக, ஶ்ரீமச்சப்தத்தாலே- 3. ’அஸ்யேஶாநா ஜகத:’ என்றும், 4. த்வம் மாதா ஸர்வலோகாநாம், 5. அகில ஜகந்மாதரம், என்று  இத்யாதிகளில் சொல்லுகிறபடியே –ஜகத்துக்குப்பூஜ்யையாய், 6. விஷ்ணுபத்நீ என்றும், 7. விஷ்ணோஶ் ஶ்ரீ: என்றும், 8. தேவதேவ திவ்ய மஹிஷீம் என்றும் இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே  ஈஶ்வரனுக்கு மஹிஷியாய், அவனுக்கத்யந்த பரதந்த்ரையாய் அவனுடைய ஸ்வரூபகுணாதிகளைப்போலே அபரிச்சேத்யமாயிருக்கிற தன்னுடைய போக்யதா ப்ரகர்ஷத்தாலே எப்போதுமொக்க அவன் திருவுள்ளத்தை தன் பக்கலிலே துவக்கிக்கொண்டிருக்கக்கடவளாய், ஈஶ்வரன் வைஶ்வரூப்யமெல்லாம்கொண்டு ஸர்வகாலமும் உந்தன்னை அநுபவியா நின்றாலும் தன்னுடைய குண ரூப விலாஸ சேஷ்டிதங்களாலே அபூர்வவத்விஸ்மயங்களைப் பண்ணக்கடவளாய், இப்படி இருக்கிறதான் 9. ’இறையும் அகலகில்லேன் ’ என்கிறபடியே – விக்ரஹைக தேஶத்திலே கால தத்வமுள்ளத்தனையும் ஆழங்கால் படவேண்டும்படி நிரவதிக போக்யதா ப்ரகர்ஷத்தையுடையனாயிருக்கிற, ஈஶ்வரனை க்ஷணகாலமும் விஶ்லேஷிக்கில் ஸத்தாஹாநி பிறக்கக்கடவளாய், 1. ’யத்ர நாந்யத்பஶ்யதி’ என்றும்படியான விஷயத்தை ஸர்வகாலமும் அநுபவியாநிற்கச் செய்தேயும், ப்ரஜைகளுடைய ரக்ஷணத்தில் எப்போதும் திருவுள்ளம் கிடந்து தேவதேவ திவ்யமஹிஷியான தன்னுடைய மேன்மை ப்ரஜைகள் பக்கல் நடையாடாதே மாத்ருத்வ நிபந்தநமான பந்தமே அநுவர்திக்கக் கடவதாய், ஸர்வலோக ஜநநீத்வ ரூபமான ப்ராப்தி விஶேஷமன்றிக்கே, 2. ’அஶரண்ய ஶரண்யாம்’ என்கிறபடியே ஜந்ம வ்ருத்த ஜ்ஞாநங்களாலுண்டான நிகர்ஷமம் பாராதே, ரிபூணாமபிவத்ஸலனாய் ஸர்வபூத ஸமனாய் ஸ்ருஷ்ட்யவதாராதி முகத்தாலே ஜகத்ரக்ஷணத்திலே தீக்ஷிதனாயிருக்கிற ஈஶ்வரன் ’க்ஷிபாமி நக்ஷமாமி’ என்று தள்ளிக் கதவடைத்தாலும் தன் திருவடிகளிலே விழலாம் படியான விஶேஷ ப்ராப்தியையுடையளாய், ஈஶ்வரன் ஸ்வாதந்த்ர்யத்தையும் தந்தாமுடைய அபராதத்தையும் பார்த்துத் தடுமாறின அவ்வஸ்தையில், ஈஶ்வரன் முகத்தைப் பார்த்து, ’ஸர்வஜ்ஞராய் ஸர்வஶக்தராய், உபய விபூதி நிர்வாஹகராயிருக்கிற தம்முடைய பெருமையையும், அஜ்ஞாநாஶக்திகளால் புஷ்கலராய், 3.  ’சிறுமானிடவர்’ என்றும்படியிருக்கிற இவர்களுடைய சிறுமையையும் பார்த்தால், பர்வத–பரமாணுவுக்குச் சேர்தியில்லாதாப்போலே, உமக்கும் இவர்களுக்கும் 4. ’கதமாஸீத்ஸமாகத:’ என்கிறபடியே – ஒரு ப்ரகாரத்தாலும் சேர்த்தியற்றன்றோ இருக்கவடுப்பது, ஸப்ரயோஜந கடாக்ஷம் பண்ணி இவர்களை அங்கீகரிக்கைக்கு யோக்யதை இல்லாதபடி நீர் அவாப்த ஸமஸ்த காமராயிருந்தீர், உம்முடைய தரத்துக்கீடான பச்சை இவர்களாலிடப்போகாது, ஆனபின்பு இருவருடைய ஸ்வரூபத்தைப் பார்த்தாலும் இரண்டு தலையையும் சேர்க்கைக்கு யோக்யதையில்லை. இவர்களை அநாதரித்தால் உம்முடைய நாராயணத்வமும், ஒருவாய் போய் ஸர்வரக்ஷகனான உம்முடைய ரக்ஷகத்வமும் விகலமாய் ஶீலாதி குணங்களும் முடங்கபட்டு உம்முடைய ஸ்வாதந்த்ர்யமே தலையெடுத்து இவர்கள் உம்முடைய சீற்றத்துக் கிலக்காய் நசித்துப் போமத்தனையாயிருந்தது, உமக்குமிவர்களுக்குமுண்டான பந்த விஶேஷத்தைப் பார்த்தால், 5. ’உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது’ என்கிறபடியே- குடநீர் வழிந்தாலும் போகாததொன்றாயிருந்தது, ஸ்ருஷ்ட்யவதாராதிமுகத்தாலே எதிர் சூழல் புக்குத் திரிகிற உம்முடைய பேற்றுக்கு நான் இரக்க வேணுமோ, உம்முடைய ஸ்வரூப ஸித்த்யர்தமாக இவர்களை ரக்ஷிக்கவேண்டாவோ, 1. ’அதிக்ராமந்நாஜ்ஞாம்’ என்கிறபடியே நம்முடைய ஆஜ்ஞாதிலங்கனம் பண்ணி நம்முடைய சீற்றத்துக்கு அநாதிகாலம் இலக்காய் போந்தவர்களை, இவர்கள் பண்ணின அபராதத்துக்கு உசித தண்டம் பண்ணாதே, இவர்கள் செய்த தப்புக்களைப் பொறுத்து இவர்களை ரக்ஷித்தால், இவர்கள் அநாதிகாலம் ஶாஸ்த்ர மர்யாதி லங்கனம் பண்ணினாப் போலே நாமும் அநந்தகாலம் ஶாஸ்த்ர மர்யாதாதிலங்கனம் பண்ணினோம் ஆகோமா, அஜ்ஞானான இவன் தப்புச்செய்தான் என்ன ஸர்வஜ்ஞனான நாமும் தப்புச்செய்யவோ, இரண்டு தலையும் தப்புச் செய்வது, ஒருதலையே அத்தை அநுஷ்டித்து விடவமையாதோ, ஒருதலையில் தப்பைமாற்றக்கடவதாகத் தொடங்கி இரண்டு தலைக்கும் தப்புண்டாக்குகிறாயன்றோ, இவர்களை ரக்ஷித்தால் ஶாஸ்த்ர மர்யாதை குலையாதோ, என்றன்றோ திருவுள்ளத்திலோடுகிறது,  இவர்களை ரக்ஷணம் பண்ணாதே அபராதாநுகூலமாக நியமித்தாலும்முடைய க்ருபாதி குணங்கள் ஜீவிக்கும்படியென் – நியமியாதே போனால் ஶாஸ்த்ரம் ஜீவியாதாப்போலே ரக்ஷியாதபோது குணங்கள் ஜீவியாதே. ஆனபின்பு, க்ருபாதிகுணங்கள் ஜீவிக்கைக்காக இவர்களுடைய ரக்ஷணம் பண்ணவேண்டாவோ, ரக்ஷணத்தில் ஶாஸ்த்ரம் ஜீவியாதென்று சொல்லவேண்டா, ஶாஸ்த்ரத்தை விமுகர் விஷயமாக்கினால் இரண்டும் ஜீவிக்கும், ஆன பின்பு, இவர்களை ரக்ஷித்தருளவேண்டாவோ, என்று, இச்சேதனனை அபராதங்கள் பாராதே ஈஶ்வரன் விஷயீகரிக்கும்படியான பாசுரங்களைச் சொல்லி, விளக்குப் பொன்போலே நடுவே நின்று இரண்டு தலையையும் சேர்க்கக் கடவளாயிருக்கிற பிராட்டியாருடைய நித்யயோகத்தை ப்ரதிபாதிக்கிறது.

நாராயண பதார்த்தம்

  1. ’நாராயண பதம்’, இப்புருஷகார பூதையாயிருக்கிற பிராட்டிதானே தான் சேர்த்த இவனை ஈஶ்வரன் கைவிடும்படியான பாசுரங்களைச் சொன்னாலும், 2. ’தோஷோயத்யபி தஸ்யஸ்யாத்’ என்றும் 3. ’செய்தாரேல் நன்றுசெய்தார்’ என்றும் சொல்லுகிறபடியே – அவளோடே மறுதலைத்து நோக்கும்படியான வாத்ஸல்யாதி குணங்களை ப்ரதிபாதிக்கிறது.

இப்பதத்தில் ப்ரதிபாதிக்கப்படுகிற வாத்ஸல்யாதி குணங்களாகிறன – புருஷகார பூதையான பிராட்டியாலே உத்பவிக்கப்பட்டு, ’ப்ரபத்யே’ என்கிற பதத்தில் சொல்லப்படுகிற ஸ்வீகார ப்ரயுக்தங்களாய் இருப்பன சில.

வாத்ஸல்யமாவது – வத்ஸத்தின் பக்கல் தேநு இருக்குமிருப்பு; அதாகிறது அதனுடைய தோஷத்தை போக்யமாகக் கொள்ளுகையும், க்ஷீரத்தைக் கொடுத்து வளர்க்கையும், எதிரிட்டவர்களைக் கொம்பிலும் குளம்பிலும் கொண்டு நோக்குகையுமிறே; அப்படியே ஈஶ்வரனும், 1. ’செய்தாரேல் நன்று செய்தார்’ என்று- தோஷத்தை போக்யமாகக் கொண்டு, 2. ’பாலேபோல் சீர்’ என்கிறகுணங்களாலே தரிப்பித்து, 3. ’கதம்சந நத்யஜேயம்’ என்றும் 4. ’அபயம் ஸர்வபூதேப்ய:’ என்றும் அநுகூலர் நிமித்தமாகவும் ப்ரதிகூலர் நிமித்தமாகவும் நோக்கும்.

ஸ்வாமித்வமாகிறது உடையவனாய் இவனாயிருக்குமிருப்பு; அதாகிறது சேதநர் தன்மையழித்துக் கொள்ளுமன்று விடமாட்டாதே இவன் பக்கலிலே ப்ரவணனாய், கர்ஷகன் பயிர்த்தலையிலே குடில் வளைத்து நோக்குமாப்போலே இவர்களுடைய ரக்ஷணார்த்தமாக நித்யஸந்நிதி பண்ணிவிடாதே நோக்குகைக்கு உறுப்பான பந்தவிஶேஷம்; அத்வேஷம் தொடங்கி கைங்கர்யமெல்லையாக நடுவுண்டான அவஸ்தா விஶேஷங்களெல்லாமுண்டாக்குகிறது இந்த பந்தவிஶேஷமடியாகவிறே.

ஸௌஶீல்யமாவது- நித்யஸூரி நிர்வாஹகத்வத்தாலும் உபய விபூதியோகத்தாலும் பெரிய பிராட்டியாரோட்டைச் சேர்த்தியாலும் நிரங்குஶமான வைபவத்தையுடையனாயிருக்கிற ஈஶ்வரனுடைய ஸ்வரூபத்தையும், ’சிறுமானிடவர்’ என்கிற தங்கள் சிறுமையையும் கண்டு 5. ’அவன் எவ்விடத்தான் யான் ஆர்’ என்றும்படியிருக்குமிறே; அப்படி அவன் மேன்மையையும் தங்கள் சிறுமையையும் பார்த்து ஆஶ்ரய வைமுக்யம் பிறவாதபடி, தன் பெருமையையும் பாராதே இவர்கள் சிறுமையையும் பாராதே எல்லாரோடும் ஒக்க மேல்விழுந்து புரையற ஸம்ஶ்லேஷிக்கையும், இப்படி ஸம்ஶ்லேஷியா நின்றால் இவர்கள் கார்யம் செய்தானனன்றிக்கே தன் பேறாக நினைத்து தன்னுடைய மேன்மை திருவுள்ளத்தில் நடையாடாத படியிருக்கையும்.

ஸௌலப்யமாவது- அதீந்த்ரியனான தன்னை சேதனன் கண்ணாலே கண்டாஶ்ரயிக்கலாம்படி நயந விஷயதாங்கதனாகை; அதனுடைய பூர்த்தியுள்ளது அர்ச்சாவதாரத்திலே; ’மாம்’ என்று காட்டின ஸௌலப்யம் பரத்வமென்றும்படியிறே அர்ச்சாவதார ஸௌலப்யம், ’மாம்’ என்று, கையும் உழவு கோலும் சிறுவாய்க் கயிறுமாய்க் கொண்டு ஸாரதியாய் நின்ற நிலையிறே பற்றச் சொல்லிற்று; அங்குத்தை ஸௌலப்யம், 1. ’மய்யாஸக்தமநா: பார்த்த’ என்று, தன் பக்கலிலே ஆஸக்தமான மநஸ்ஸையுடைய அர்ஜுனனொருவனுக்குமாயிருக்கும். அர்ச்சாவதார ஸௌலப்யம் ஸர்வவிஷயமாயிருக்கும்ல்;  நீயே! நமக்கு வேண்டா, என்றவர்களையும் விடமாட்டாத ஸௌலப்யமிறே இது; அந்த ஸௌலப்யம்  காதாசித்கமாயிருக்கும்; இந்த ஸௌலப்யம் ஸார்வகாலிகமாயிறே இருப்பது. ஸ்வீகாரத்துக்கு உபயுக்தங்களான குண விஶேஷங்களோபாதி, உபாயத்வோபயோகிகளான குணவிஶேஷங்களும் இவ்விடத்தேயநுஸந்தேயங்கள். ப்ரதம பாதாநந்தரத்தில் அஸ்மச் ஶப்தத்துக்குப் போலே இதுக்கு ஸங்கோசமில்லாமையாலே, அஸ்மச் ஶப்தத்வயார்தமும் இவ்விடத்திலே அநுஸந்தேயம்.

சரண பதார்த்தம்

(௪)  ’சரணௌ’- கீழ்ச்சொன்ன குணம்களையொழியவும் தானே விரோதி நிவர்தகமுமாய் அபிமத ப்ராபகமுமாக வல்ல விக்ரஹ வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது. 2. ’தெரிவைமார் உருவமே மருவி’ என்கிறபடியே- இதர விஷயங்களினுடைய பொறி புறந்தடவின வடிவிலேயகப்பட்டுப் போருகிற சேதனனுக்கு, 3. ’தன்பால் ஆதரம் பெருகவைத்த’ என்கிறபடியே- தன் பக்கலிலே ப்ரேமத்தையுண்டாக்கி இதர விஷயங்களில் ருசியைமாற்றி பின்பு தானே உபாயமாய் ஒருதேஶ விஶேஷத்திலே போனாலும் 4. ’ஸதாபஶ்யந்தி’ என்கிறபடியே ப்ராப்யமும் தானேயாகையாலே ஸ்வரூப குணம்களிற்காட்டில் விக்ரஹமிறே உபாதேயமாயிருப்பது. 5. ’ஜிதந்தே புண்டரீகாக்ஷ’ என்றும் 6. ’சரணத்வம்த்வம் வ்ரஜாமி’ என்றும் 7. ’ந ஜாநே ஶரணம் பரம்’ என்றும் ’த்வத் பாத கமலாதந்யத்’ என்றும் 8. ’பாதயோஸ் ஸ்திதம்’ என்றும்- விக்ரஹத்தினுடைய ருசிஜநகத்வத்தையம், உபாயோபேயத்வங்களையுமிறே ஜிதந்தையிலடைவே ப்ரதிபாதிக்கிறது.

இவ்விடத்தில் திவ்யமங்கள விக்ரஹத்தைச் சொல்லுகிறதாகில் விக்ரஹவாசகமான ஶப்தத்தை ப்ரயோகியாதே விக்ரஹைகதேஶமான திருவடிகளுக்கு வாசகமான சரண ஶப்தத்தை ப்ரயோகிப்பானென்னென்னில்; மேல்ப்ரபதநம் பண்ணப்புகுகிற அதிகாரி நாராயண பதத்திலே ஈஶ்வரனுடைய ஸ்வாமித்வத்தையும் ஶேஷித்வத்தையும் அநுஸந்தித்தவனாகையாலும், மாதாவினுடைய இதராவயவங்களிற்காட்டில் க்ஷீரஸ்யந்தியான ஸ்தநத்திலே ப்ரஜைக்கு விஶேஷ ஸ்நேஹமும் ப்ராப்தியும் உண்டாயிருக்குமாப்போலே, இவனுக்கும் அம்ருத ஸ்யந்தியான திருவடிகளிலே விஶேஷ ப்ராப்தியும் ஸ்நேஹமும் கிடக்கக் கடவதாகையாலும், பாதக்ரஹணத்தில் க்ருபை அதிஶயித்திருக்கையாலும், சரணஶப்தப்ரயோகம் பண்ணுகிறது. 1. ’நாளும் நின் திருவுடையடியள் தம் கழல் வணங்கி’ என்றும் 2. ’திருநாரணன் தாள் காலம்பெறச் சிந்தித்துய்மினோ’ என்றும், இத்யாதிகளிற்படியே- உபதேஶ ஸமயத்திலும் திருவடிகள் ரக்ஷகமென்று உபதேஶித்து, 3. ’கழல்கள் அவையே ஶரணாகக்கொண்ட’ என்றும் 4. ’நாகணைமிசை நம்பிரான் சரணே ஶரண் நமக்கு’ என்றும் 5. ’அடிக்கீழமர்ந்து புகுந்தேனே’ என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே- அநுஷ்டானதஶையிலும் திருவடிகளையே ரக்ஷகமாக அத்யவஸித்தாரிரே நம்மாழ்வாரும்- மற்றுமுள்ள ஆழ்வார்களும், பலவிடங்களிலும் திருவடிகளை உபாயமென்றருளிச் செய்தார்களிறே. 6. ’ஸப்ராது: ஶரணௌ காடம் நிபீட்ய’ என்று ஆழ்வாருக்கடியான இளைய பெருமாளும் திருவடிகளையிறே உபாயமாக அத்யவஸித்தது. ப்ராப்யமும் ஸ்வரூபமும் ஸமாநமாயிருக்குமாபோலே, ப்ராபகமும்  ஸூரிஸமானமாயிறே இருப்பது.

ஆக, கீழ்ச் சொன்ன ஶ்ரீமத்தையம், நராயணத்வமும் அகிஞ்சித்கரமான அவஸ்தையிலும் தானே கார்யம் செய்யவற்றான விக்ரஹ வைலக்ஷண்யம்  சொல்லுகிறது.

ஶரண பதார்த்தம்

(௫)  ’ஶரணம்’ உபாயமாக, கீழ் ஸ்வீகார வஸ்துவைச் சொல்லிற்று; இங்கு ஸ்வீகார ப்ரகாரத்தைச் சொல்லுகிறது. 5. ’அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல்மங்கை உறைமார்பா’ என்றும் 1. ’கோலத்திருமா மகளோடுன்னைக்கூட’ என்றும், இத்யாதிகளில் சொல்லுகிறபடியே- லக்ஷ்மீபரிஷ்வங்கியான வஸ்துவுக்கு ப்ராபகதயா வரணீயத்வமும் ப்ராப்யதயா வரணீயத்வமும் உண்டாயிறே இருப்பது; இதுவேயிறே வாக்யத்வயத்துக்குமர்த்தம். இதில் பூர்வவாக்யத்துக்கு ப்ராபகதயா வரணீயத்வமர்த்த மென்னுமிடத்தைச் சொல்லுகிறது; க்ஷீரம் பத்யமுமாய் போக்யமுமாயிருக்கிறாப்போலே- 1. ’நிர்வாணம் பேஷஜம்’ என்றும் 2. ’அம்ருதம் ஸாதநம் ஸாத்யம்’ என்றும். 3. ’மருந்தும் பொருளுமமுதமுந்தானே’ என்றும், இத்யாதிகளில் சொல்லுகிறபடியே ப்ராப்ய ப்ராபகங்களிரண்டும் ஏகமாயிறே இருப்பது.

உபாயமாகிறது- அநிஷ்ட நிவாரகமுமாய் இஷ்ட ப்ராபகமுமாயிருக்குமது, அநிஷ்டமாவது – 4. ’நீர் நுமது என்றிவை வேர் முதல் மாய்த்து’ என்றும் 5. ’அநாத்மந்யாத்ம புத்திர்யா’ என்றும், சொல்லுகிறபடியே- அநாத்மந்யாத்ம புத்திரூபமாயும் அஸ்வே ஸ்வப்ரதிபத்தி ரூபமாயுமிருக்கிற அவித்யையும் அவித்யா கார்யமான ராகத்வேஷங்களும் கரணத்ரயத்தாலும் கூடுபூரித்து வைக்கும் தத்கார்யங்களான புண்யபாபரூப கர்மங்களும், கர்ம த்வயத்தினுடைய பலபோகார்த்தமாக பரிக்ரஹிக்கும் தேவ திர்யகாதியான நாநா வித ஶரீரங்களும் அஶ்ஶரீரங்களை பரிக்ரஹித்து அநுபவிக்கும் ஆத்யாத்மிகாதி து:க பரம்பரைகளும் தொடக்கமானவை.

இஷ்டமாகிறது- புண்யபாப கர்ம விதூஸந ப்ரகாரமும், ஹார்தமார்க விஶேஷ ப்ரகாஶமும், ஹ்ருதயகுஹ நிர்கமநமும், அர்சிர்வாஸரோத்தராயண ஶுக்ல பக்ஷாத்யாதிவாஹிக ஸத்காரமும், ஸலில தஹந பவநாத்யாவரண ஸப்தகாதிலங்கநமும், த்ரிகுணாதிக்ரமணமும், விரஜாக்யா ப்ராக்ருதநதீ விஶேஷாவகாஹநமும், ஸூக்ஷ்மஶரீர விமோசநமும், அமானவகர ஸ்பர்ஶமும், அபஹத பாப்மத்வாதி குணகண ததாஶ்ரய ஸ்வரூபப்ரகாஶமும், பஞ்சோபநிஷந்மயமான திவ்ய விக்ரஹ பரிக்ரஹமும், ஐரம்மதீய திவ்யஸர: ப்ராப்தியும், திவ்யாப்ஸரஸ் ஸங்க ஸத்காரமும், ப்ரஹ்மாலங்காராலங்கரணமும், ப்ரஹ்ம கந்த ரஸ தேஜ: ப்ரவேஶமும், திவ்யகோபுர ப்ராப்தியும், ஸூரிஸங்க ஸத்காரமும், ராஜமார்க கமநமும், ப்ரஹ்ம வேஶ்ம ப்ரவேஶமும், திவ்யமண்டப ப்ராப்தியும், திவ்ய பர்யங்க நிரீக்ஷணமும், ஸபத்நீக ஸர்வேஶ்வர தர்ஶநமும், ஆநந்தமய பரமாத்ம ஸமீப ஸ்திதியும், பாதபீட பர்யங்கோத்ஸங்காரோஹணமும், ஆலோகாலாபாலிங்கநாத்யநுபவமும், ஸ்வரூபகுண விக்ரஹாத்யநுபவ ஜநித ப்ரீதிப்ரகர்ஷமும், நாநாவித விக்ரஹ பரிக்ரஹபூர்வக ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தோசித ஸர்வப்ரகார கைங்கர்யகரணமும். இதில் ப்ரதாநமாக இஷ்டமாயிருப்பது கைங்கர்யம், அதுக்குபயக்தங்களாகையாலே இஷ்டங்களாயிருக்கும் மற்றுமுள்ளவை.

ஆக, இப்படிக் கொத்த அநிஷ்டத்தை நிவர்திப்பித்து இஷ்ட ப்ராப்தியைப் பண்ணுகை உபாயமாகையாகிறது.

ப்ரபத்யே பதார்த்தம்

(௬)  ’ப்ரபத்யே’ கீழ், ஸ்வீகார ப்ரகாரத்தையும் ஸ்வீகார்யவஸ்துவையும் சொல்லிற்று; இதில் ஸ்வீகாரத்தைச் சொல்லுகிறது. பிராட்டியுடைய புருஷகார பாவமும், ஈஶ்வரனுடைய உபாய பாவமும் கார்ய கரமாம் போது, இவனுடைய ப்ரதிபத்தி வேணுமிறே; இந்த ப்ரதிபத்தி ராஹித்யத்தாலேயிறே, நித்யங்களாயிருக்கிறவிவை இத: பூர்வமகிஞ்சித்கரங்களாய்த்து. ஆகையாலே, அவை இரண்டையும் கார்யகரமாம்படி பண்ணக் கடவதான இவனுடைய ப்ரதிபத்தி விஶேஷத்தைச் சொல்லுகிறது.

பத்ளு கதௌ என்கிற தாதுவுக்கு அர்த்தம் கதி:, இவ்விடத்தில் கதியாக நினைக்கிறது. ’கத்யர்த்தா புத்த்யர்த்தா:’ என்கிற புத்தி விஶேஷத்தை; அந்த புத்தி விஶேஷமாகிறது- அநந்யார்ஹ ஶேஷத்வ ஜ்ஞாநாத்யநந்தர பாவியாய். ஸாத்ய ஸாதந வ்யாவ்ருத்தமாய், தேவாநாம் குஹ்யமாய், விதுரமாய், பகவத்ரக்ஷகத்வாநுமதி ரூபமாய், ஸக்ருதநுஷ்டேயமாய், அவிளம்ப்யபலப்ரதமாய்; ஸர்வாதிகாரமாய், ஸ்வரூபாநுரூபமாய், நியம விதுரமாய், அந்திம ஸ்ம்ருதி நிரபேக்ஷமாய், ஸுஶகமாய், யாச்ஞாகர்பமாய், த்ருடாத்யவஸாயமுமாயிருப்பதொரு ஜ்ஞாநவிஶேஷம்.  இந்த ஜ்ஞாநவிஶேஷத்தில் ப்ரயோஜநாம்ஶமாயிருப்பது ஒருவிஶ்வாஸம். 1. ’கிரயோவர்ஷ தாராபி:’ என்கிறபடியே- திரைமேல் திரையாகப் பொறுக்க வொண்ணாதபடி வந்து மேலிடுகிற வ்யஸந பரம்பரைகளாலும், யுக்த்யாபாஸவசநாபாஸங்களாலும், ஈஶ்வரன் பரீக்ஷை துடக்கமானவத்தாலும் இவ்வத்யவஸாய விஶேஷம் அப்ரகம்ப்யமானபோதிறே பலஸித்தியுள்ளது.

இப்ப்ரபதநம் கரணத்ரயத்தாலு முண்டாகவுமாம், ஏககாரணத்தாலே உண்டாகவுமாம், பலஸித்திக்குக் குறையில்லை. அதிகாரி பூர்த்திக்கு கரணத்ரயமும் வேணும், பலஸித்திக்கு ஏககரணமே அமையும். உபாய பூர்த்திக்கு ஶ்ரிய:பதித்வமும் வாத்ஸல்யாதி குணயோகமும் திவ்யமங்கள விக்ரஹமும் அபேக்ஷிதமாயிருக்கிறாப்போலே, அதிகாரி பூர்த்திக்கு கரணத்ரயமும் அபேக்ஷிதமாயிருக்கும். உபாயவரணத்துக்கு ஏகாந்தமான அநந்யார்ஹ ஶேஷத்வ ஜ்ஞாநமும் ப்ராப்யருசியும் தொடக்கமான குணவிஶேஷங்கள் இன்னார்க்குப் பிறக்கக் கடவதென்கிற நியமமில்லாமையாலும் இங்குப் பிறக்கிற ப்ரதிபத்தி விஶேஷம் தனக்கு இதர ஸாதநங்கள் போலே அக்நி வித்யா ஸாபேக்ஷதையில்லாமையாலும், உபாஸநம் போலே த்ரைவர்ணிகர்க்கே அதிகாரமாயிருக்கை யன்றிக்கே ஸர்வாதிகாரமாயிருக்கையாலே ஆஶ்ரயணம் விதுரமாய்க் கிடக்கிறது.

ப்ரபத்யே என்கிற வர்த்தமான நிர்தேஶத்தாலே 1. ’நாட்கடலைக்கழிமின்’ என்று இருக்கும் நாள் காலம் செல்லவிட அரிதாயிருக்கையாலும், ஸம்ஸாரத்தினுடைய தோஷத்தையும் பகவத்விஷயத்தினுடைய வைலக்ஷண்யத்தையும் அநுஸந்தித்தால் இப்போதே ஸம்ஸார ஸம்பந்தமற்று பகவத்விஷயத்தை லபிக்கவேணுமென்றும் படியான த்வராதிரேகம் பிறக்கக் கடவதாகையாலும், இவ்வுபாய விஶேஷம்தான் 2. ’அநந்யாஶ்சிந்தயந்த:’ என்கிறபடியே – நிரதிஶய ப்ரீதிரூபமான உபாஸனத்தளவன்றிக்கே அதிலும் காட்டில் அத்யர்த்த ப்ரீதி ரூபமாயிருக்குமாகையாலும், 3.  ’த்வயமர்த்தாநுஸந்தானேந ஸஹ’ என்கிறபடியே- யாவச்சரீரபாத மநுவர்த்திக்குமென்னுமிடம் ஸூசிதமாகிறது. பலஸித்திக்கு ஸக்ருத் கரணமமையும், காலக்ஷேபாதிகளுக்கு அஸக்ருத்கரணமபேக்ஷிதமாயிருக்கும்.  இப்படிகொள்ளாத போது, 4. ’ஸக்ருதேவ ப்ரபந்நாய’ என்கிற ப்ரமாணத்தோடு விரோதிக்குமிறே.

ஆக, பூர்வவாக்யத்தாலே- ஸ்வீகாரத்தையும், ஸ்வீகார ப்ரகாரத்தையும், ஸ்வீகார்யவஸ்து விஶேஷத்தையும் ப்ரதி பாதிக்கிறது.

உத்தர வாக்யாத்தாரம்பம்

(௭) உத்தரவாக்யம், ஸ்வீகாரத்தினுடைய பலரூபமாய், ஶ்ரிய: பதியாய் ஸ்ர்வஸ்வாமியாயிருக்கிற ஸர்வேஶ்வரன் திருவடிகளிலே இச்சேதநன் பண்ணும் வ்ருத்தி விஶேஷத்தினுடைய ப்ரார்தநத்தை ப்ரதிபாதிக்கிறது. பூர்வவாக்யத்தில் ப்ரதிபாதிதமான ஸாதந விஶேஷம் பல சதுஷ்டய ஸாதாரணமாயிறே இருப்பது. அதில் இவ்வதிகாரிக்கு அபிலஷிதமான பலவிஶேஷம் இன்னதென்னுமிடத்தை, ப்ரகாஶிப்பிக்கிறது இவ்வாக்யம். இவனுக்கு அபிலஷிதமான பலமாகிறது. விரோதி நிவ்ருத்தியும், அபிமத ப்ராப்தியும், அதில் அபிமத ப்ராப்தி ரூபமாயிருக்கிற பலத்தை முன்பே ப்ரதிபாதிக்கிறது.

இரண்டு பலமுமிவனுக்கு அபிமதமாயிருக்குமாகில் இரண்டையும் ப்ரார்த்தியாதே ஒன்றை ப்ரார்த்திப்பானென்னென்னில்;  பலத்வயமும் அபிலஷிதமாயிருந்ததேயாகிலும் ப்ரதாநபலமாயிருப்பது அபிமத ப்ராப்தி.  விரோதி நிவ்ருத்தி யுண்டானாலல்லது. அபிமதம் ஸித்தியாமையாலே விரோதி நிவ்ருத்தி ததர்த்தமாக அபேக்ஷிதமாயிருக்குமத்தனை. அங்கண் கொள்ளாதபோது, ததேகஸாத்யத்வமும் அஸித்தமாம்; ஆகையாலே, விரோதி நிவ்ருத்தியிற் காட்டில் கைங்கர்யத்துக்குண்டான ப்ராதாந்யத்தைப் பற்ற கைங்கர்யத்தை  ப்ரார்த்திக்கிறது. அதில் சரம பதம், கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியை ப்ரதிபாதிக்கிறது; மத்யம பதம், கைங்கர்யத்தையும் கைங்கர்யப்ரதி ஸம்பந்தியையும் ப்ரதிபாதிக்கிறது; ப்ரதமபதம், கைங்கர்ய ப்ரதி ஸம்பந்தி விஶிஷ்டம், என்னுமிடத்தை ப்ரதிபாதிக்கிறது.

ஶேஷத்வ ப்ரதிஸம்பந்தி மிதுநமாயிருக்குமாப்போலே, கைங்கர்ய ப்ரதி ஸம்பந்தியும் மிதுநமாயிறே இருப்பது. 1. ’கோலத்திருமாமகளோடு உன்னைக்கூடாதே’ என்றும், 2. ’ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப’ என்றும்,  நம்மாழ்வாரும் மிதுநமே ப்ராப்யமென்றருளிச்செய்தார். அவர் தமக்கடியான இளைய பெருமாளும், 3. ’ஸஹவைதேஹ்யா’ என்று கிஞ்சித்காரத்துக்கு விஶிஷ்டம் விஷயமென்றருளிச்செய்தார். அவர் தம்முடைய பூர்வாவஸ்தையிலும் 4. ’திருமாற்கரவு’ என்கிறபடியே கிஞ்சித்கார ப்ரதிஸம்பந்தி விஶிஷ்டமாயிறே இருப்பது. இவர்கள் இத்தனை பேரையும் அடியொற்றின, பரமாசார்யர், 5. ’ப்ரஹர்ஷயந்தம் மஹிஷீம் மஹாபுஜம்’ என்றும் 6. ’ஶ்ரிய:ஶ்ரியம்’ என்றும், விஶிஷ்ட வேஷத்தையருளிச்செய்து, 7. ’ஐகாந்திக நித்யகிங்கர: ப்ரஹர்ஷயிஷ்யாமி’ என்று, தத்விஷயமான ஆர்த்தி விஶேஷத்தை ப்ரார்தித்தார். அவர் திருவுள்ளத்தைப்பின்சென்ற  ஶ்ரீபாஷ்யகாரரும், 8. ’ஶ்ரீவல்லப’ என்று விஶிஷ்ட வேஷத்தை ப்ராப்யமாக அருளிச்செய்தார்; ஆகையாலே, தனித்தவர்களுக்கு ப்ராப்யத்வமில்லை. இருவரையும் பிரித்து விரும்பினால் ராவண ஶூர்பநகிகளுக்குப்போலே நாஶமே பலமாயிருக்கும்.  இருவரையும் பற்றினால் ஶ்ரீவிபீஷணாழ்வானைப்போலே உஜ்ஜீவநமே பலமாயிருக்கும்.

  1. ’அல்லி மாமலராள் தன்னோடுமடியேன் கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேன்’ என்றும் 2. ’வாரணிமுலையாள் மலர்மகளோடு மண்மகளும் உடன் நிற்பக் காரணி மேகம் நின்றதொப்பானைக் கண்டு கொண்டுய்தொழிந்தேன்’ என்றும் சொல்லுகிறபடியே சேர்த்தியிலே- பற்றினாலிறே ஸ்வரூபோஜ்ஜீவநமுள்ளது.

ஆக, கைங்கர்ய ப்ரதிஸம்பந்தி மிதுநமாயிருக்கையாலே, ஶ்ரீமச்சப்தம் பெரியபிராட்டியாரோட்டைச் சேர்த்தியைச் சொல்லுகிறது. பூர்வ வாக்யத்தில் ஶ்ரீமச்சப்தம், சேதனனுடைய அபராதத்தையும் ஈஶ்வரனுடைய ஸ்வாதந்த்ர்யத்தையும் கண்டு இவர்கள் அவனுடைய க்ரோதத்துக்கு விஷயபூதராய் நஶித்துப் போகாதே இவனைக் கிட்டியும் ஜீவித்துப் போகவேணுமென்று ஸாபராதராந சேதநரை ஈஶ்வரனோடே சேர்க்கைக்காக என்றுமொக்கவிடாதே இருக்குமிருப்பைச் சொல்லுகிறது. இங்குத்தை ஶ்ரீமச்சப்தம், கைங்கர்ய ப்ரதிஸம்பந்தித்வத்தை பற்றவும் இவர்கள் பண்ணும் கைங்கர்யத்தை ஈஶ்வரன் திருவுள்ளத்தே ஒன்று பத்தாகப் படுத்துகைக்காகவும் அநுபவிச்சேதத்தில் தனக்கு ஸத்தாஹாநி பிறக்கும் படியிருக்கையாலே நிரந்தர ஸம்ஶ்லேஷத்துக்காகவும் அவனை க்ஷணகாலம் பிரியாதே ஸர்வகாலமும் ஸம்ஶ்லிஷ்டையாயிருக்கு மிருப்பைச் சொல்லுகிறது.

  1. ’மாத்ரு தேவோபவ பித்ரு தேவோபவ’ என்கிறபடியே மாதாபிதாக்களைச் சேர்த்து கிஞ்சித்கரித்தாலிறே புத்ரனுக்கு ஸ்வரூபஸித்தியுள்ளது; அப்படி 2. ’த்வம்மாதா ஸர்வ லோகாநாம் தேவதேவோ ஹரி:பிதா’ என்கிறபடியே- நேரே மாதா பிதாக்களாயிருக்கிற பிராட்டியையும் ஈஶ்வரனையும் சேரவைத்து கிம்சித்கரித்தாலிறே இவனுக்கு ஸ்வரூப ஸித்தியுள்ளது.

நாராயண பதார்த்தம்

(௮) இப்படி கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியான பிராட்டியோட்டைச் சேர்த்தியளவன்றிக்கே, குணவிக்ரஹ விபூதிகளோடே கூடியிருக்குமாகார கைங்கர்ய வர்தகதயா அநுபாவ்யமாயிருக்கையாலே ஜ்ஞாந ஶக்த்யாதி கல்யாண குணங்களோடும் திவ்யமங்கள விக்ரஹத்தோடும் உபய விபூதி யோகத்தோடும் கூடியிருக்கிற பகவத் ஸ்வரூபத்தை ப்ரதிபாதிக்கிறது நாரயணபதம்.

  1. ’ஸோஶ்நுதே ஸர்வான் காமான்’ என்றும் 2. ’ஸதா பஶ்யந்தி ஸூரய:’ என்றும், இத்யாதிகளில் சொல்லுகிறபடியே குணவிக்ரஹாதிகளும் 3. ’ரஸக்க் ஹ்யேவாயம் லப்த்வாऽऽநந்தீபவதி’ என்கிற ஸ்வரூபத்தோபாதி கைங்கர்யவர்தகமாய் போக்யங்களாயிறே இருப்பது. ஜ்ஞாந ஶக்த்யாதி குணங்களோடு வாத்ஸல்யாதி குணங்களோடு ஶௌர்ய வீர்யாதி குணங்களோடு வாஶியர எல்லா குணங்களும் அநுபாவ்யங்களாயிருக்கையாலே பூர்வவாக்யத்தில் நாரயணபதத்தில் உபாய வரணத்துக்கு உபயுக்ததயா அநுஸந்தேயங்களான குணவிஶேஷங்களும் இப்பதத்திலே ப்ராப்யதயா அநுஸந்தேயங்கள். ஆஶ்ரயமான ஸ்வரூப விஶேஷத்துக்கு ஆகாரத்வயமுண்டாகிறாப்போலே ஆஶ்ரயிகளான குணவிஶேஷங்களுக்கும் ஆகாரத்வயமுண்டாயிறே இருப்பது. அநுபாவ்யத்வம் அவிஶிஷ்டமாகையாலே ஸகல குணங்களும் ப்ரதிபாதிதமாயிருந்ததேயாகிலும் சதுர்த்யந்தத்தில் சொல்லுகிற வ்ருத்தி விஶேஷத்தக்குமிகவும் அந்தரங்கமாயிருப்பது ஸ்வாமித்வமாகையாலே, கீழ் ஸௌலப்ய ப்ரதிபாதநத்திலே நோக்கானாப்போலே இங்கு ஸ்வாமித்வ ப்ரதிபாதநத்திலே நோக்காகக்கடவது.

சதுர்த்தியின் அர்த்தம்

(௯) இப்பதத்திலே ஏறிக்கிடக்கிற சதுர்தீ விபக்தி ஸர்வஸ்வாமியான ஸர்வேஶ்வரன் பக்கல் இச்சேதநம் பண்ணும் வ்ருத்தி விஶேஷ ப்ரார்த்தனையை ப்ரதிபாதிக்கிறது. இங்கு ப்ரார்த்தநீயமான வ்ருத்தி விஶேஷமாகிறது – அல்பமாய், அஸ்திரமாய், துஸ்ஸாத்யமாய், து:கமிஶ்ரமாய், ஸ்வரூப விருத்தமாயிருக்கிற ஐஶ்வர்ய புருஷார்த்தம் போலன்றிக்கே, நிரஸ்தாதிஶயா ஹ்லாத ஸுகபாவைக லக்ஷணமாய், விஷயத்தோடு ஆஶ்ரயத்தோடு தேஶத்தோடு தன்னோடு வாஶியற யாவத்காலமநிவர்திக்கக்கடவதாய், அஞ்ஜலிமாத்ரலப்யமாய், து:ககந்தரஹிதமாய், ஸ்வரூபாநுரூபமாய், 4. ’இறப்பதற்கே எண்ணாது’ என்றும் 5. ’இறுகலிறப்பு’ என்றும் சொல்லுகிறபடியே ஆத்மவிநாஶ ரூபமாயிருக்கிற கைவல்யத்திற் காட்டில் அத்யந்த வ்யாவ்ருத்தமாய், புண்யபாப விமோசநம் தொடங்கி பகவதநுபவஜநித ஹர்ஷமெல்லையாக நடுவுண்டான தேஹ விமோசநம் பரமபத ப்ராப்தி ஸ்வரூப ப்ராப்தி ஸாம்யாபத்தி தொடக்கமாகச் சொல்லுகிற புருஷார்த்த விஶேஷங்களுக்கும் அவ்வருகாய், 1. ’மம ஸஹஜ கைங்கர்ய விதய:’ என்கிறபடியே ஆத்மாவுக்கு நித்யஸித்தமாய், பகவந்முக விகாஸத்துக்கு ஹேதுவாயிருக்கிற பகவதநுபவஜநித ப்ரீதிகாரித கைங்கர்யம்.

இக்கைங்கர்யம், ஏககரணத்தாலே அநுஷ்டேயமாயிருக்கையன்றிக்கே, 2. ’ஸோஶ்நுதே ஸர்வான் காமான்’ என்றும் 3. ’ஸாமகாயந்நாஸ்தே என்றும், 4.  நம இத்யேவவாதிந:’ என்றும் 5. ’சாயாவா ஸத்வமநுகச்சேத்’ என்றும் 6. ’யேந யேந தாதா கச்சதி தேநதேந ஸஹ கச்சதி’ என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே கரணத்ரயத்தாலும் அநுஷ்டேயமாயிருக்கும். 7. ’ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்யவேண்டும் நாம்’ என்றும் 8. ’ஸர்வேஷு லோகேஷு காமசாரோ பவதி’ என்றும் 9. ’நச புநராவர்ததே’ என்றும் 10. ‘புணைக்கொடுக்கிலும் போகவொட்டார்’ என்றும் 11. ’சென்றால் குடையாமிருந்தால் ஸிங்காஸநமாம்’ என்றும், இத்யாதிகளில் சொல்லுகிறபடியே- இவ்வதிகாரியினுடைய ஸ்வரூபாநு ரூபமாய் நிரதிஶய போக்யமுமாய் தாரகமுமாயிருக்கிற கைங்கர்யத்தினுடைய அபிநிவேஶாதிஶயத்தாலே தேஶகால ப்ரகாராவஸ்தாதிகார நியம விதுரமாக ப்ரார்த்திக்கக்கடவனாயிருக்கையாலே, ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஸர்வப்ரகாத்தாலும் பண்ணும் வ்ருத்தி விஶேஷத்தை ப்ரதிபாதிக்கிறது.

இச்சதுர்திக்கு தாதர்த்யம்  அர்த்தமானாலோ, கைங்கர்யமர்த்தமாகவேண்டும் நிர்பந்தமென்னென்னில்; இதுக்கு கைங்கர்யமர்த்தமாகாதே தாதர்த்யமர்தமானபோது பூர்வவாக்யாநுஸந்தாநம் நிரர்த்தகமாய், வ்யாக்யாதாக்களுடைய வசநங்களோடும் விரோதம் ப்ரஸங்கிக்கும்.  ஆகையாலே, தாதர்த்ய பலரூபமான கைங்கர்யமே அர்த்தமாகக்கடவது. கைங்கர்யமர்த்தமாகிறது, ப்ரார்த்தநை வந்தபடியென்னென்னில்; கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியான விஷயம் உத்துங்கமாயிருக்கையாலும், ஆஶ்ரயபூதனான சேதனன் அத்யந்த பரதந்த்ரனாயிருக்கையாலும், ப்ரார்தநா விஶேஷமில்லாதபோது கைங்கர்யம் ஸித்தியாமையாலே விஷய ஸ்வபாவத்தாலும் ஆஶ்ரய ஸ்வபாவத்தாலும் ப்ரார்த்திக்கக்கடவது.

ஆக, இந்த விபக்த்யம்ஶத்தாலே- புருஷார்த்தாபாஸங்களான ஐஶ்வர்ய கைவல்யங்களிரண்டிற் காட்டில் வ்யாவ்ருத்தமாய், ஶ்ரிய: பதியாய் ஸர்வஸ்வாமியாயிருக்கிற ஸர்வேஶ்வரன் திருவடிகளை, விஷயமாகவுடைத்தாய், 1. ’க்ரியதாம்’ என்றும் 2. ’கூவிப்பணிக்கொள்ளாய்’ என்றும். 3.  ’ஏவமற்றமர் ஆட்செய்வார்’ என்றும், அவனுடைய நியோக கார்யமாய், ஸ்வநிர்பந்த விதுரமாய், வாங்மந:கார்யரூபமான கரணத்ரயத்தாலும் பண்ணும் வ்ருத்தி விஶேஷத்தைச் சொல்லுகிறது. ஈத்ருஶவ்ருத்தி விஶேஷமாகிறது, நிரதிஶய போக்யமான பகவத்விஷயத்தை விஷயீகரித்திருக்கையாலும், நிரஸ்தஸாம்ஸாரிக ஸகல ப்ரதிபந்தகமாயிருக்கிற ஸ்வஸ்வரூபத்தை ஆஶ்ரயமாக உடைத்தாயிருக்கையாலும், கர்த்தாவாயிருக்கிற சேதனனுக்கத்யந்த ப்ரீதிரூபமாயிறே இருப்பது.

நம: ஶப்தார்த்தம்

(௧௦) பரதந்த்ரனான இவனுக்குப் பிறக்கும் போகம் பாரதந்த்ர்ய விரோதியானாலல்லது புருஷார்த்தமல்லாமையாலே இவனுடைய புருஷார்ததா ஹேதுவான பகவத் ப்ரீதி ஜநகத்வ ப்ரதிபத்தியையொழிய ஸ்வயம் போக்யமாயிருக்குமாகாரம் விரோதியாயிறே இருப்பது; தாத்ருஶமான விரோதியை நிவர்திப்பிக்கிறது நமஸ்ஸு. பகவந்முக விகாஸமே நமக்கு போக்யம்; அதுக்கு ஹேதுவாகையாலே இது நமக்கு ஆதரணீயமென்று பிறக்கும் ப்ரதிபத்தியொழிய இப்போக விஶேஷத்தில் மதீய ப்ரதிபத்தியும், ஸ்வஸ்மிந் போக்த்ரு ப்ரதிபத்தியும் ஸஞ்சரிக்குமாகில் இவனுக்கு அபுருஷார்த்தமாயிறே இருப்பது. ஆகையாலே இந்த நமஸ்ஸு, கைங்கர்ய தஶையில் ஈத்ருஶமான ப்ரதிபத்தி விஶேஷம் விரோதி என்னுமிடத்தை ப்ரதிபாதிக்கிறது.  கீழிரண்டு பதமும், விஷய வைலக்ஷண்யத்தையும் விஷயியினுடைய வைலக்ஷண்யத்தையும் சொல்லுகிறது; இப்பதம், ஆஶ்ரய வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது.

ஸ்வரூப விரோதியென்றும், ஸாதந விரோதியென்றும், ப்ராப்தி விரோதியென்றும், ப்ராப்ய விரோதியென்றும், சதுஷ்டயமாயிருக்கும் விரோதி. அதில் திருமந்த்ரம், ஸ்வரூப விரோதி நிவ்ருத்தியை ப்ரதிபாதிக்கிறது; சரமஶ்லோகம், அர்த்தத்வயத்தாலும் ஸாதநவிரோதி நிவ்ருத்தியையும் ப்ராப்தி விரோதி நிவ்ருத்தியையும் ப்ரதிபாதிக்கிறது. இது ப்ராப்ய விரோதி நிவ்ருத்தியை ப்ரதிபாதிக்கிறது.

ஆக, (௧) கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியையும், (௨) கைங்கர்யத்தையும், (௩) கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியையும், (௪) கைங்கர்யப்ராப்திக்கு ஹேதுபூதமான ஸ்வீகாரத்தையும், (௫) ஸ்வீகார்யமான ப்ராபக ஸ்வரூபத்தையும், (௬) அதுக்கு ஏகாந்தங்களான குணவிஶேஷங்களையும், (௭) அக்குண விஶேஷங்களுக்கு உத்பாவகமான புருஷகாரத்தையும் சொல்லித் தலைக்கட்டுகிறது.

[புருஷகார ஸ்வரூபத்தையும், உபாய ஸ்வரூபத்தையும், உபாயத்வாயவஸயத்தையும், கைங்கர்யப்ரதிஸம்பந்தியுமான கைங்கர்யத்தையும் தத்விரோதி நிவ்ருத்தியையுஞ் சொல்லிற்று.]

 

ஶ்ரீஶ்ரீஶ்ரீ அஷ்டாக்ஷர மஹாவித்யா தாத்பர்யமகிலம் க்ரமாத் ।

ஸூநுநா க்ருஷ்ணமிஶ்ராணாம் லோகாசார்யேண தர்ஶிதம் ।।

 

ஆரணநூல் வாழ்க அருளிச்செயல் வாழ்க

தாரணியும் விண்ணுலக்ந்தான் வாழ்க-பூரணமாய்

பின்னுமுள்ளோர் தான்வாழ்கப் பிள்ளை யுலகாரியனே

இன்னுமொரு நூற்றாண் டிரும்.

 

பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே ஶரணம்

பரந்தபடி முற்றிற்று.

Languages

Related Parts

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.