ப்ரபந்நபரித்ராணம்
பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த ப்ரபந்நபரித்ராணம் முமுக்ஷவாய், மோக்ஷார்த்தமாக ஸர்வேஶ்வரனைப் பற்றியிருக்கு மவனுக்கு அநந்யகதித்வமும், ஆகிஞ்சந்யமும் வேணும். அநந்ய கதித்வமாவது – (திருவாய் 5-8-8) “களைவாய் துன்பங்களையாதொழி வாய் களைகண்மற்றிலேன்” என்கிறபடியே ஸர்வேஶ்வரனை யொழிய வேறெரு ரக்ஷகரில்லை என்றிருக்கை. ப்ராதாக்கள், புத்ரர்கள், மாதாபிதாக்கள், ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமானவர்கள் ரக்ஷகராகக் குறையென்னென்னில்–ப்ராதாக்கள் ரக்ஷகரல்லர் என்னு மிடம் வாலிபக்கலிலும், ராவணன் பக்கலிலும் காணலாம். புத்ரர்கள் ரக்ஷகரல்லர் என்னுமிடம், ருத்ரன் பக்கலிலும், கம்ஸன் பக்கலிலும் காணலாம். மாதாபிதாக்கள் ரக்ஷகரல்லர் என்னுமிடம், கைகேயி பக்கலிலும், ஹிரண்யன் பக்கலிலும் […]