ரஹஸ்யத்ரய தீபிகை
ரஹஸ்யத்ரய தீ3பிகை பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த ரஹஸ்யத்ரய தீ3பிகை ஶ்ரீமத் க்ருஷ்ண ஸமாஹ்வாய நமோ யாமுநஸூநவே । யத்கடாக்ஷைக லக்ஷ்யாணாம் ஸுலப4: ஶ்ரீத4ர: ஸதா3 ।। “ப்ராப்யஸ்ய ப்3ரஹ்மணோ ரூபம் ப்ராப்துஶ்ச ப்ரத்யகாத்மந: । ப்ராப்த்யுபாயம் ப2லம் ப்ராப்தேஸ் ததா2 ப்ராப்தி விரோதி4 ச ।। வத3ந்தி ஸகலா வேதா3ஸ் ஸேதிஹாஸபுராணகா: । முநயஶ்ச மஹாத்மாநோ வேத3வேதா3ந்தவேதி3ந: ।। என்கிறபடியே ஸகல வேதா3ந்த ப்ரதிபாத்3யமான அர்த்த2 பஞ்சகத்தைத் திருமந்திரத்தில் விவரிக்கிறபடி எங்ஙனேயென்னில்; ப்ரணவத்தில் அர்த்த2 பஞ்சகத்தை விவரிக்கிறபடி […]