ஸாரஸங்க்ரஹம்
பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த ஸாரஸங்க்ரஹம் அகிலஜகத்திதாநுஶாஸநபரமான வேதத்திலும், வேதோபப்ரும்ஹ ணார்த்தமாக ப்ரவ்ருத்தங்களான ஸ்ம்ருதீதிஹாஸ புராணாதி, ஸமஸ்தஶாஸ்த்ரங்களிலும் ப்ரஸித்தமாய், ஸர்வேஶ்வரனுடைய ஸர்வஸ்வம்மாய், நம் ஆசார்யர்களுக்கு ஆபத்தநமாயிருந்துள்ள அர்த்தத்வயத்தையும் பிரதிபாதிக்கையாலே – த்வயமென்று திரு நாமத்தையுடைத்தாயிருந்துள்ள வாக்யத்வயம், பத்து அர்த்தத்தை ப்ரதிபாதிக்கிறது. அதாகிறது -1. ஶ்ரீய:பதித்வமும், 2. நாராயணத்வமும், 3. நாராயண னுடைய ஸர்வலோகஶரண்யமான சரணாரவிந்தயுகளமும், 4.அதினுடைய ப்ராபகத்வமும், 5. தத்கோசரமாய் சேதநகதமாயிருந் துள்ள ப்ரார்த்தநாகர்ப்பவிஸ்ரம்பமும், 6. லக்ஷ்மீ தத்வல்லபர்க ளுடைய நிகிலாத்ம நித்யகைங்கர்ய ப்ரதாநார்த்தமான நித்ய ஸம்பந்தமும், 7. கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியான […]