தனி ப்ரணவம்
ஶ்ரீமதே ராமானுஜாய நம: தனி ப்ரணவம் லோகாசார்யாய குரவே க்ருஷ்ணபாதஸ்ய ஸூநவே । ஸம்ஸாரபோகி ஸந்தஷ்ட ஜீவஜீவாதவே நம: ।। ஸகல வேத தாத்பர்யமாய், ஸகல ஶாஸ்த்ர ஸங்க்ரஹமாய், ஸகல பலப்ரதமாய், ஸகல மந்த்ரங்களிலு மதிகமான, திருவஷ்டாக்ஷரமான திருமந்த்ரத்துக்கு, நம் பூர்வாசார்யர்கள், “ஸ்வரூபம் சொல்லுகிறதென்றும், ப்ராப்யம் சொல்லுகிறதென்றும், இரண்டுபடி வாக்யார்த்தம்” என்றருளிச் செய்வர்கள். இம்மந்த்ரம்தான், “ஓம்”’ என்றும், “நம:” என்றும், “நாராயணாய”’ என்றும், மூன்று பதமாயிருக்கும். இதில் முதல் பதம், ப்ரணவமென்று திருநாமமாய், அகாரமென்றும், உகாரமென்றும், […]