தனி ப்ரணவம்

ஶ்ரீமதே ராமானுஜாய நம:

தனி ப்ரணவம்

லோகாசார்யாய குரவே க்ருஷ்ணபாதஸ்ய ஸூநவே

ஸம்ஸாரபோகி ஸந்தஷ்ட ஜீவஜீவாதவே நம: ।।

     ஸகல வேத தாத்பர்யமாய், ஸகல ஶாஸ்த்ர ஸங்க்ரஹமாய், ஸகல பலப்ரதமாய், ஸகல மந்த்ரங்களிலு மதிகமான, திருவஷ்டாக்ஷரமான திருமந்த்ரத்துக்கு, நம் பூர்வாசார்‌யர்கள், “ஸ்வரூபம் சொல்லுகிறதென்றும், ப்ராப்யம் சொல்லுகிறதென்றும், இரண்டுபடி வாக்யார்த்தம்” என்றருளிச் செய்வர்கள்‌.

இம்மந்த்ரம்தான், “ஓம்”’ என்றும், “நம:” என்றும், “நாராயணாய”’ என்றும், மூன்று பதமாயிருக்கும்.

இதில் முதல் பதம், ப்ரணவமென்று  திருநாமமாய், அகாரமென்றும், உகாரமென்றும், மகாரமென்றும், மூன்று பதமாயிருக்கும்.

     இம்மந்த்ரத்துக்கு நம்பிள்ளையருளிச்செய்த தாத்பர்யம் (௧) ஆஶ்ரயியையும் (௨) ஆஶ்ரயியிநுடைய வைஶத்யத்தையும், (௩) ஆஶ்ரயத்தையும், (௪) ஆஶ்ரயத்தினுடைய வைஶத்யத்தையும் (௫) ஆஶ்ரயணீய வைபவத்தையும், (௬) ஆஶ்ரயண பலத்தையும், சொல்லுகிற தென்று.

இங்கு ஆஶ்ரயியென்கிறது ஶேஷத்வத்தை. இது ப்ரதமாக்ஷரமான அகாரத்திலே சொல்லுகிறது.

ப்ரஹ்மவாசியானஅகாரத்தை ஶேஷத்வவாசியாக்கினபடி யென்னென்னில் ; இப்பதம் ப்ரஹ்மப்ரதான மன்றியிலே ஸ்வரூப ப்ரதானமாகையாலே.

இங்கு ப்ரஹ்மவாசகம்‌ வந்தது. அந்த ஸ்வரூபத்துக்கு அந்தரங்க நிரூபகமான ஶேஷத்வம், ப்ரதிஸம்பந்தி ஸாபேக்ஷமாபையாலே.

இதில் விபக்தியில்‌ ஶேஷத்வம் சொல்லுகிறது; பதம் தன்னாலே ப்ரதிஸம்பந்தியை சொல்லுகிறது.

ப்ரதிஸம்பந்தி வேஷமிருக்கும்படியென்னென்னில்; ஸகல ஜகத்காரணமுமாய், ஸகல ஜகத்ரக்ஷகமுமாய், அகிலஹேய ப்ரத்யநீகமுமாய், ஸமஸ்த கல்யாண குணாத்மகமுமாய், நிருபாதிக ஸர்வஶேஷியுமாய், ஸலக்ஷ்மீகமுமாயிருக்கும் வஸ்துவென்று, இவ்வக்ஷர ஸ்வபாவத்தாலும், தாது ஸ்வபாவத்தாலும், இந்த தாத்வர்த்த ஸ்வபாவத்தாலும், விபக்தி ஸ்வபாவத்தாலும், இவ்வஸ்து ஸ்வபாவத்தாலும், சொல்லிற்று.

ஸகல ஜகத்காரணத்வம் இவ்வக்ஷர ஸ்வபாவத்தாலே சொல்லுகிறது; எங்ஙனேயென்னில், இந்த ப்ரஹ்மவாசகமான அகாரம் ஸகல வாசகங்களுக்கும் காரணமாகையாலே வாச்யமான ப்ரஹ்மம் ஸகல வாச்யங்களுக்கும் காரணமாகக்கடவதென்று, வாச்யவாசக ஸம்பந்ததாலே சொல்லிற்று.

இன்னமுமிவ்விடத்திலே காரணத்வமநு ஸந்திப்பதொரு வழியுண்டு; எங்ஙனேயென்னில் ; வாசகங்களொடு வாச்யங்களோடு வாசியற ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்தத்துக்கும் இவ்வகாரமாகிற வாசகமே காரணமாகக்கடவதென்றார்கள். ஆனபடியென்னென்னில்’ “இவ்வகாரமாகிறேன்  நான்” என்று அவன் தானேயருளிச் செய்கையாலும், இவ்வாசகம்  காரணமென்கிறவிடத்தில் வாச்யங்களுக்கு காரணமென்கிற நிஷேத விதியில்லாமையாலும், இவ்வாசகமே காரணமாகவற்றென்னலாம்; இவ்வாசக ப்ரபாவம் சொல்லிற்றாய்த்து.

இன்னமுமிவ்விடத்திலே காரணத்வமநுஸந்திப்பதொருவழியுண்டு ; எங்ஙனேயென்னில்; இது ஈஶ்வர வாசகமாகையாலும், ஈஶ்வரத்வமாகிறது-ஆபத் ரதக்ஷணம் பண்ணுகையாலும், ஆபத் ரதக்ஷணத்தில் ப்ரதானம் – அகரணரான சேதநரை ஸகரணராக்குகையும், அஸம்ஸ்தாநரூபமான வசித்தை ஸம்ஸ்தாந ரூபவாக்குகையும், இத்தால் காரணத்வம் சொல்லிற்றாய்த்து.

 ஈஶ்வரனென்றபோதே, ஜகத்காரண வஸ்து வென்றதாய்தென்றார்கள். இத்தால் வாச்யலக்ஷணம் சொல்லிற்றாய்த்து. எங்ஙனேயென்னில் இவ்வாச்யமான ஈஶ்வரத்வம் மோக்ஷப்ரதவஸ்துவுக்கொழிய வில்லாமையாலும், மோக்ஷப்ரதத்வமுள்ளது ஜகத்காரண வஸ்துவுக்கேயாகையாலும் , ஈஶ்வரனென்ற போதே ஸகல ஜகத்காரணமென்றார்கள்.

 இப்படி ப்ரமாணோபபத்திகளாலே, இவ்வகாரத்தில் சொன்ன காரணத்வத்தை, நம்மாசார்யர்கள் ஸ்தூல ஸூக்ஷ்மரூபேண பலவகையாலுமநுஸந்தித்து உபதேஶித்துப் போருவர்கள். அவைகளெவையன்னில்;

இக்காரணத்வம்தான் –

(௧) ஔபாதிக காரணத்வமென்றும்,

(௨) நிருபாதிக காரணத்வமென்றும்,

(௩) ஸத்வாரகௌபாதிக காரணத்வமென்றும்,

௪) அத்வாரகௌபாதிக காரணத்வமென்றும்,

(௫) ஸத்வாரக நிருபாதிக காரணத்வ மென்றும்,

(௬) அத்வாரக நிருபாதிக காரணத்வமென்றும் ஆறுபடியாயிருக்கும்.

(௧) ஔபாதிக காரணத்வமாவது-பூர்வ பூர்வ யுகங்களிலே சேதநர் ஶரீரங்களாலே பண்ணின புண்யபாபங்கள் ஹேதுவாக ஸ்ருஷ்டிக்கை.

(௨) நிருபாதிக காரணத்வமாவது-அநாதியாக அசிதந்தர்கதராய் அஶரீரிகளாய் திரிகிற சேதநர்க்கு நிரவதிக க்ருபையாலே ஶரீராதிகளைக் கொடுக்கை.

(௩) ஸத்வாரகௌபாதிக காரணத்வமாவது-புண்யபாபங்களை நிறுத்து அவற்றின் வழியே தேவாதி சதுர்வித ஶரீரங்களையும் ஸ்ருஷ்டிக்கை.

(௪) அத்வாரகௌபாதிக காரணத்வமாவது-புண்யலேஶமுடையவர்களுக்கும், ஸஹஜ காருண்யத்தாலே விலக்ஷண ஸ்ருஷ்டியைப் பண்ணியும் பாபமேயானவர்களையும் ஸத்தாஹாநி பிறக்குமளவில் , ஸம்பந்தமே பற்றாசாக வங்கீகரித்து ஆபிமுக்யஜநகமான ஸ்ருஷ்டியைப் பண்ணுகை.

(௫) ஸத்வாரகநிருபாதிக காரணத்வமாவது- இப்படி ஸ்ருஷ்டிப்பதாகப்புரிந்த ஈஶ்வரன், ப்ரஹ்மாதிகளைக் காரணமாக்கிகொண்டு ஸ்ருஷ்டிக்கை.

(௬) அத்வாரக நிருபாதிக காரணத்வமாவது-காருண்யாதிகளே காரணமாகத்தானே ஸ்ருஷ்டிக்கை.

இவ்வகாரத்கால் அப்படி ஜகத்காரணத்வம் சொன்னபோதே, இவனுடைய ஸர்வஸ்மாத்பரத்வமும், அத ஏவ அகிலஹேய ப்ரத்யநீகத்வமும் அநுஸந்தேயம்.

 உடையவருக்கு திருக்கோட்டியூர்‌ நம்பி, காரணத்வம் அருளிச்செய்யச்செய்தே “பெற்ற தாயை யறியாமல் பிறந்து வளருவாரைப் போலேயிறே – காரணத்வம் காணாமல் கண்டநுஸந்திக்கும் தர்ஶநார்தங்களெல்லாம்”  என்றருளிச் செய்தாராம்.

பட்டர் நஞ்ஜீயர்க் கிவ்வர்த்தமருளிச் செய்யச்செய்தே, “பகவத்காரணத்வ நிரூபணம் பண்ணுமவனுக்கு, மோக்ஷத்திலே யொழிய அந்வயமில்லை’ என்றருளிச்செய்தார்‌.

நம்பிள்ளை, பின்பழகிய பெருமாள் ஜீயர் மடத்திலே யெழுந்தருளியிருக்கச்செய்தே, “ஈஶ்வர பரத்வத்தையநுஸந்திக்கையாவது ஜகத்காரணத்வத்தை யநுஸந்திக்கை” என்றருளிச்செய்தாராம்.

ஆச்சான்பிள்ளை, நடுவிற்றிருவீதிப் பிள்ளை பட்டரை ‘பகவத்குணங்களெல்லாம் சேரவநுஸந்திக்கலாந்துறையேது ” என்று கேட்க, “ஜகத்காரணத்வத்தை யநுஸந்திக்கவே, எல்லா குணங்களையுமநுஸந்தித்ததாம்” என்றருளிச்செய்தாராம்.

 பிள்ளையெங்களாழ்வான், நடாதூரம்மாளுக்கு இவ்வர்த்தமருளிச்செய்யச்செய்தே  “ஜகத்காரண நிரூபணம் பண்ணினவனுக்கு , நிஷித்தாநுஷ்டாநத்திலந்வயமில்லை’ என்றருளிச்செய்தார்.

ஆகையால் நம் பூர்வாசார்யர்கள் ஜகத்காரண நிரூபணமே நிரந்தரம் பண்ணா நிற்பர்கள்.

அநந்தரம், ஜகத்காரணவஸ்துவினுடைய ரக்ஷகத்வம் சொல்லுகிறபடியென்னென்னில், இது “அவ-ரக்ஷணே” என்கிற  தாதுவை யுடைத்தாகையால், ஶாப்தமாகச் சொல்லிற்று.

இன்னமும் இப்பதத்திலே ரக்ஷகத்வமநுஸந்திப்பதொரு ப்ரகாரமுண்டு, எங்ஙனேயென்னில்; ஜகத்காரணத்வம் சொன்னபோதே ரக்ஷகத்வம் சொன்னதாகலாம், ஆகிறபடி யென்னென்னில்; “குடற்றுவக்கு  உடையவர்களை ரக்ஷிக்கை குண ப்ரயுக்தம் ” என்கிற  ந்யாயத்தாலே.

 ஜகத்தில் குடற்றுவக்கு  உடையவர்களையெல்லாம் ரக்ஷிக்கிறார்களோவென்னில் ; ஜகத்திலுள்ளார்‌ அந்யோந்யமஸ்நேஹிகளுமாய் அஸ்வதந்த்ரருமாய் அப்ராப்தருமாகையாலே ரக்ஷிக்கமாட்டார்கள். இங்கு ஜகத்காரணபூதன் ஸ்நேஹியுமாய் ஸ்வதந்த்ரநுமாய் காருணிகனுமாய் ப்ராப்தனுமாகையாலே “இவனையொழிய ரக்ஷகரில்லை” என்கிற  ந்யாயத்துக்கு குறையில்லை.

 நம்பிள்ளை இவ்வர்த்த்தமருளிச்செய்தே  “அயீற்றுப்பரவிக்குப் பொகடப்போம் ” என்றருளிச்செய்தாரிரே.

[அயீற்றுப்பரவிக்குஅகாரத்தினுடைய ஈறாவது, ‘அவ ரக்ஷணேஎன்கிற தாத்வர்த்த்தமான ரக்ஷகத்வம்; அந்த ரக்ஷணார்த்தமாக ஸர்வத்ர; பரவிக்குவியாபித்திருப்பவனுக்கு, பொகடப்போம்அந்த ரக்ஷகத்வத்தை தன் தலையிலே ஏறிட்டுக் கொள்ளாதே தன்னை ரக்ஷ்யமாக நினைத்து ஸமர்பிக்கவடுக்கும். ‘போயொழிந்தான்என்னுமாப்போலே வார்த்தைப் பாடிருந்தபடி. அன்றிக்கே அகாரமாகிற யில்லிலே, பரவிக்குபொருந்தினவனுக்கு என்றவுமாம்.]

இன்னமுவ்விடத்திலே ரக்ஷகத்வ மநுஸந்திப்ப தொருவழியுண்டு, எங்ஙனேயென்னில்; இப்பதம் விஷ்ணுவாசகமாகையாலும், விஷ்ணுவாகிறான் வ்யாபந ஶீலனாகையாலும், வ்யாப்தியாவது ஸ்வவ்யதிரிக்த ஸகலத்தினுடையவும், ஸத்தாஸம்ரக்ஷணங்களாகை யாலும், ரக்ஷணப்ரகாரத்தில் ப்ரதான ரக்ஷணமிதுவேயாகையாலும், இவ்வழியாலே வரும் ரக்ஷகத்வத்துக்கும் குறையில்லையென்றார்கள்.

இன்னமுவ்விடத்திலே ரக்ஷகத்வமநுஸந்திப்பதொருவழியுண்டு, எங்ஙனேயென்னில்; இப்பதம் ஈஶ்வரவாசகமாகையாலும், ஈஶ்வரத்வமாவது-ஸமஸ்தஜகத்துக்கும் தாரகனுமாய் நியந்தாவுமாயிருக்கையாகையாலும், ஈஶ்வரனென்றபோதே ரக்ஷகத்வத்துக்கு குறையில்லையென்பர்கள் நம் பூர்வாசார்யர்கள்.

இந்த ரக்ஷகத்வந்தான், (1) ஔபாதிக ரக்ஷகத்வமென்றும், (2) நிருபாதிக ரக்ஷகத்வமென்றும் த்விவிதம்.

[1]இதில் ஔபாதிக ரக்ஷகத்வம் தான், (௧) ஸத்வாரகௌபாதிக ரக்ஷகத்வமென்றும் (௨) ஸத்வாரகௌபாதிகரக்ஷகத்வ ப்ரகாரமென்றும் (௩) அத்வாரகௌபாதிக ரக்ஷகத்வமென்றும் (௪) அத்வாரகௌபாதிகரக்ஷகத்வ ப்ரகாரமென்றும்,

[2] நிருபாதிக ரக்ஷகத்வம் தான், (க) ஸத்வாரக நிருபாதிக ரக்ஷகத்வமென்றும், (உ) ஸத்வாரக நிருபாதிக ரக்ஷகத்வப்ரகாரமென்றும் (௩) அத்வாரக நிருபாதிக ரக்ஷகத்வமென்றும்’, (௪) அத்வாரக நிருபாதிக ரக்ஷகத்வ ப்ரகாரமென்றும், பலவகையாயிருக்கும்.

 இதில் [1] ஔபாதிக ரக்ஷகத்வமாவது-எதிர்‌த்தலையில் அபேக்ஷை கண்டு ரக்ஷிக்கை.

[2] நிருபாதிக ரக்ஷகத்வமாவது அபேக்ஷாநிரபேக்ஷமாக ரக்ஷிக்கை.

            [1]        (௧) ஸத்வாரகௌபாதிக ரக்ஷகத்வமாவது-ஏதேனுமபேக்ஷிக்க ஏதேனும் பலம் கொடுக்கையன்றிக்கே, அபேக்ஷாப்ரகாரங்களுக்கு தகுதியாக பலம் கொடுக்கை.

(௨) ஸத்வாரகௌபாதிக ரக்ஷகத்வ ப்ரகாரமாவது – தன்னை அபேக்ஷித்தவர்‌களுக்கேயன்றிக்கே தன் ஶரீரங்களான  ப்ரஹ்ம ருத்ராதிகளை அபேக்ஷித்தவர்களுக்கும் அவர்களுக்குள்ளீடாய் நின்று அபேக்ஷித பலங்களைக் கொடுக்கை.

(௩) அத்வாரகௌபாதிக ரக்ஷகத்வமாவது-எதிர்‌த்தலையில்‌ ஆபிமுக்யம் பற்றாசாக அபூர்ணோபாயர்க்கும் பூர்ண பலங்களைக்கொடுக்கை

(௪) அத்வாரகௌபாதிக ரக்ஷகத்வ ப்ரகாரமாவது – தன்னளவில் ஆபிமுக்யமின்றிக்கே கீழ்ச் சொன்ன தேவதைகள் பக்கலிலே ஆபிமுக்யம் பிறக்கிலும் , அவர்களுக்குள்ளீடாய் நின்று அவர்களபேக்ஷிதபலங்களை கொடுக்கை.

            [2]        (௧) ஸத்வாரக நிருபாதிக ரக்ஷகத்வமாவது-பலஸாபேக்ஷையுடையராய் பலப்ரத விஷயமறியாதவர்களுக்கும் அத்வேஷமே பற்றாஶாகத்தானே யறிந்து பலப்ரதானம் பண்ணுகை,

(உ) ஸத்வாரக நிருபாதிக ரக்ஷகத்வ ப்ரகாரமாவது-துஷ்கரங்களுமாய் ஸ்வரூப விருத்தங்களுமான உபாயாந்தரங்களிலே மண்டினவர்களுக்கும் உபாயபூர்த்தியை பிறப்பித்து மோக்ஷப்ரதானம் பண்ணுகை,

(௩) அத்வாரக நிருபாதிக ரக்ஷகத்வமாவது-பலாபேக்ஷை இல்லாதவர்களுக்கும் ஸம்பந்தமே பற்றாஶாக ருசியைவிளைத்து பலத்தைகொடுக்கை.

(௪) அத்வாரக நிருபாதிக ரக்ஷகத்வ ப்ரகாரமாவது- தனக்குநிலை நின்றவடிவான மோக்ஷப்ரதானம் பண்ணுமிடத்தில் சேதநகத வ்யாபார ஸாபேக்ஷனாயிருக்கையன்றிக்கே, சேதந விஷய ஸாபேக்ஷனாய் கொண்டு மோக்ஷம் கொடுக்கை.

            இத்தால் சேதநகதமான உபாய ஸ்வீகாரமும் உபகாரஸ்ம்ருதியும், சைதந்யக்ருத்ய மென்றாய்த்து.

 இத்தால் -நிருபாதிக ரக்ஷகத்வத்துக்கு லக்ஷணம் சொல்லிற்றாய்த்து . இந்த லக்ஷணமாகிறது-இப்படி ரக்ஷியாதபோது தன் ஸத்தையில்லையாம்படியா யிருக்கையிறே.

ஆக, (இவ்வகைகளெல்லாம்) இவ்வகாரம்- (ரக்ஷகத்வத்துக்கு ஸ்வபாவம்) விஷ்ணுவாசகமாகையாலே, ஸ்வவ்யதிரிக்த ஸமஸ்தத்துக்கும் ஸர்வதேஶ ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் ஸர்வப்ரகாரத்தாலும் ஸர்வ ரக்ஷகனென்று நிர்ணயித்த தாய்த்து.

இவ்விடத்தில் இந்த ரக்ஷகத்வ ப்ரயுக்தங்களான-(1) ஸர்வஜ்ஞத்வ, (2) ஸர்வஶக்தித்வ, (3) பரம காருணிகத்வ, (4) பரமோதாரத்வ, (5) ஆஶ்ரிதவத்ஸலத்வ, (6) அஶரண்யஶரண்யத்வ (7) அநாலோசித விஶேஷாஶேஷலோக ஶரண்யத்வ, (8) நிருபாதிக ஸர்வஸ்வாமித்வ, (9) ஶ்ரிய: பதித்வ, (10) நாராயணத்வங்களாகிற ஸமஸ்தகல்யாண குணங்களுமநுஸந்தேயம்

என் செய்யவென்னில்;

  • ரக்ஷிக்கும்போது ஸர்வத்தையும் அறியவேண்டுகையாலே ஸர்வஜ்ஞத்வம் சொல்லிற்று,
  • அஶக்தனுக்கு ரக்ஷகத்வமில்லா மையாலே ஸர்வ ஶக்தித்வம் சொல்லிற்று.
  • அகாருணிகனுக்கு ரக்ஷகத்வமில்லாமையாலே பரம காருணிகத்வம் சொல்லிற்று,
  • லுப்தனுக்கு ரக்ஷகத்வமில்லாமையாலே பரமோதாரத்வம் சொல்லிற்று.
  • தோஷாஸஹனுக்கு ரக்ஷகத்வமில்லாமையாலே ஆஶ்ரிதவாத்ஸல்யம் சொல்லிற்று.
  • தன்னையொழிய ரக்ஷிப்பாரில்லாமையாலே அஶரண்ய ஶரண்யத்வம் சொல்லிற்று.
  • சிலரை ரக்ஷிக்கிறோம், சிலரை ரக்ஷியோம் என்னவொண்ணாமையால் அநாலோசித விஶேஷாஶேஷலோக ஶரண்யத்வம் சொல்லிற்று.
  • ரக்ஷிக்கை தன் பேறாகையாலே நிருபாதிக ஸர்வஸ்வாமித்வம் சொல்லிற்று
  • ரக்ஷிக்கும்போது சேரவிடுவார்‌ வேண்டுகையாலே, ஶ்ரிய:பதித்வம் சொல்லிற்று,.
  • ரக்ஷியாதபோது தானில்லாமையாலே, நாராயணத்வம் சொல்லிற்று.

இப்படி ஸர்வரக்ஷகன், ஸமஸ்த கல்யாண குணாத்மகனென்ற போதே, காரணத்வோபயுக்தமான அகிலஹேய ப்ரத்யநீகத்வம் சொல்லிற்று.

அகிலஹேய ப்ரத்யநீகத்வ மாவது- தன்னையொழிய ஸகல சேதநாசேதநங்களோடு தானிருக்கச்செய்தே. சிறைகூட்டத்திலே சிறையனோடே கூடப்படையிலானும் வர்த்த்திக்கச்செய்தேயும், சிறையில் து:கம் படையிலானுக்கு வாராதாப்போலே, ஶரீரத்தில் ஆத்மாவோடே ஈஶ்வரனும் வர்த்த்தியாநிற்கச்செய்தேயும், ஆத்மா வினுடைய து:கங்கள் ஈஶ்வரனுக்கு வாராதிருக்கை.

ஆக, காரணத்வ ரக்ஷகத்வோபயுக்தங்களாகிற உபயலிங்கத்வமும் சொல்லிற்று.

அநந்தரம் இப்பதம் சதுர்த்த்யந்தமாகையாலே, நிருபாதிக ஸர்வப்ரகார ஸர்வஶேஷித்வம் சொல்லிற்று.

இப்பதத்திலே லக்ஷ்மீ ஸம்பந்தமும் அநுஸந்தேயம். எங்ஙனே என்னில்?

  • ஸகல ப்ரமாணங்களும், லக்ஷ்மீ-தர்மம், ஈஶ்வரன் -தர்மீ, என்று சொல்லுகையாலும்,
  • கீழ்ச் சொன்ன காரணத்வ ரக்ஷகத்வங்களும் லக்ஷ்மீப்ரேரிதங்களாகையாலும்,
  • இவனுடைய ஸ்வரூப நிரூபகங்களான ஸமஸ்த கல்யாணகுணங்களிலும் ப்ரதானம் -லக்ஷ்மீ ஸ்வரூபமாகையாலும்.
  • இப்பத விவரணமான நாராயண பதத்தில், நாரபதத்திலே லக்ஷ்மீ ஸ்வரூபம் வ்யக்தமாகச் சொல்லுகையாலும்,
  • மேல் சொல்லுகிற ஶேஷத்வத்துக்கு ப்ரதிஸம்பந்தி ஒருமிதுநமாக வேண்டுகையாலும்,
  • இவனுக்கு தேவதாந்தர வ்யாவ்ருத்தி லக்ஷணங்களிலே ப்ரதானம் -லக்ஷ்மீ பர்த்ருத்வமாகையாலே இவனுடைய ஸ்வரூபரூப குண விபூதிகளெல்லாம் இவளோட்டை ஸம்பந்தத்தாலே நிறம் பெறுகையாலும்.

ஆக இப்படியிவளுடைய ஸ்வரூபம், ப்ருதக் ஸ்திதி ப்ருதங் நிர்தேஶாநர்ஹமாய் அல்லது இராமையால், இவ்விடத்திலே பெரிய பிராட்டியாருடைய ஸ்வரூபம் ஆர்த்தமாகவநுஸந்திக்க ப்ராப்தமாயிருக்கக்கடவது என்று பிள்ளையருளிச்செய்வர்.

இன்னமும் சிலவாசார்யர்கள் இங்ஙனேயருளிச்செய்வர்கள், எங்ஙனேயென்னில்; ‘அபத்நீகனுக்கு யாகத்திலே அந்வயவில்லாதாப்போலேயும், ப்ரதானமஹிஷீ வ்யதிரேகேண ராஜாவுக்கு அபிஷேகமில்லாதா ப்போலேயும், இவனுடைய ரக்ஷகத்வ ஶேஷித்வங்கள், லக்ஷ்மீவ்யதிரேகேண இல்லை” என்று

நஞ்ஜீயர், இவ்வர்த்தமருளிச்செய்யச்செய்தே, “பிராட்டிக்கு ஸத்தாஸித்தியைம்பெருமானாலே எம்பெருமானுக்கு நிரூபக ஸித்தி பிராட்டியாலே’ என்றிறேயருளிச்செய்தது.

ஆக இப்பதத்தில், ஶேஷத்வ ப்ரதிஸம்பந்தியான ஶேஷி, ஸகல ஜகத்காரணபூதனாய், ஸர்வஸ்மாத்பரனாய், அத ஏவ அகிலஹேய ப்ரத்யநீகனாய், ஸர்வவிஷய ஸர்வப்ரகார ரக்ஷகனாய், ஸமஸ்த கல்யாண குணாத்மகனாய், நிருபாதிக ஸர்வப்ரகார ஸர்வஶேஷியாய், ஶ்ரிய: பதியாயிருக்குமென்றாய்த்து.

இவ்வகாரத்தில் மிதுந ஶேஷத்வம் சொல்லுகிற சதுர்த்தீ விபக்தியை நிரூபித்தவிடத்தில், லுப்தமாய் கிடந்தது; லுப்தம் என்றது ஏறிக்கழிந்தபடி. ஆனால் கழிந்துபோன விபக்தியை, சதுர்த்தீ விபக்தியென்றறிந்தபடியென்னென்னில் இதினுடைய விவரணமான நாராயணபதத்திலே சதுர்த்தீயேறிக்கிடக்கையாலே, அதினுடைய ஸங்க்ரஹமானவிதிலும் சதுர்த்தியாகக்கடவது.

இச்சதுர்த்யர்த்தமான ஶேஷத்வம் தானிருக்கும்படியென்னென்னில்;

சிலர் க்ருஹக்ஷேத்ர கர்பதாந பத்ராதிவத் ஶேஷமென்றார்கள்.

சிலர்‌பார்யாவச்சேஷமென்றார்கள்.

சிலர் ஶரீரவத் ஶேஷமென்றார்கள்.

இவையித்தனையும் பார்த்தவிடத்தில், இதுதாதர்த்ய சதுர்த்தியாகையாலும் , தாதர்த்யத்துக்கர்த்தம் -ஸமஸ்த ஸ்வவ்யதிரிக்தத்துக்கும் ப்ருதக் ஸ்திதி ப்ருதங் நிர்தேஶத்துக்கு யோக்யதையில்லை என்கையாலும், இங்குச்சொன்ன க்ருஹக்ஷேத்ர கர்பதாந புத்ரபார்யா ஶரீரங்களுக்கு ப்ருதக் ஸ்திதி ப்ருதக் நிர்தேஶதுக்கு யோக்யதையுண்டாகையாலும் இவ்வோஸாமாந்யமான ஶேஷத்வம் தாதர்த்யத்துக்கு அர்த்தமாகமாட்டாது.

இனியிந்த தாதர்த்ய சதுர்த்திக்கர்த்தம் -தர்மீவிஷய தர்மவத் ஶேஷத்வமேயாகக்கடவது.

இத்தால், அகாரவாச்யமான பரப்ரஹ்மம், ஸூக்ஷ்ம சித சித்விஶிஷ்டமானபோது காரணமாயும், ஸ்தூலசித சித்விஶிஷ்டமான போது கார்யமாயு மிருக்குமென்றாய்த்து

 இவ்வர்த்தமிவ்விடத்தில் சொல்லுகிற படியென்னென்னில்; ஸ்வவ்யதிரிக்த ஸகலத்தினுடைய தர்மமுமிங்குசொல்லுகையாலே.

ஆக, சதுர்த்தீ விபக்தியால் -ஶேஷத்வ ஸித்தியும் , ஶேஷத்வலாபமும் சொல்லிற்றாய்த்து.

இங்கு ஶேஷத்வ ஸித்தியாகிறது -பராநர்ஹதையும் ஸ்வாநர்ஹதையும் ஶேஷத்வலாபமாகிறது-பகவத்வ்யதிரிக்த ஸகலத்துக்கும் ஶேஷத்வமொழிய ஸத்தையில்லை யாயிருக்கை.

ஆக, அகாரார்த்தம் தீர்ந்தது.

அநந்தரம், அவ்யயமாய் அவதாரணார்த்தமான உகாரமும், கீழ் தாதர்த்ய ஸித்தமான ஶேஷத்வலாபம் – ஸ்வலாபமோ, பரலாபமோ வென்கிற ஶங்கையிலே , ஸ்வலாபமன்று, பரலாபமென்கிறது.

இவ்வவதாரணார்தத்துக்குச் சொல்லும் ப்ரமாணங்களெல்லாம், அவனுக்கேயென்றிறே கிடப்பது.

இவ்விடத்திலே ததீயஶேஷத்வமும் அநுஸந்தித்துப் போருவாருமுண்டென்ற ருளிச்செய்வர்கள். எங்ஙனேயென்னில்; இப்பதம் (க) ஶேஷத்வவைஶத்ய ப்ரதிபாதகமாகையாலும், (உ) இஶ்ஶேஷத்வத்துக்கு வைஶத்யம் ததீய பர்யந்தமே யாயிருக்கையாலும், (௩) ததீய ஶேஷத்வ விதாநம் பண்ணுமிடத்தில், இவ்வவதாரணார்த்த நிஷ்டன் பக்கல் கொள்ளும் ஶேஷத்வமே ஸ்வரூப ப்ரயுக்தமாயிருக்கையாலும், (௪) மேல் ப்ரதிபாதிக்கப்படுகிற வஸ்து, ஶுத்த ஶேஷத்வத்துக்கு ஆஶ்ரயமாக வேண்டுகையாலும், (௫) இப்பதம் தான் ததீயஶேஷத்வ ப்ரதிபாதகமான மத்யமபத ஸங்க்ரஹமாகையாலும்; இவ்விடத்தில் ததீய ஶேஷத்வ ஸூசநத்வம் சொல்லுகையில் விரோதமில்லை. (சோத்யமில்லை).

“இப்பதம் -ஸம்பந்தயாதாத்ம்யஜ்ஞாந ப்ரதிபாதகம் ” என்றருளிச்செய்வர்கள், இப்பதத்தில், ப்ரதம சரமங்களினாலே ஜீவ பரர்‌களை சொல்லி, நடுவே அவதாரணம் கிடக்கையாலே, இது ஸம்பந்த வாசியாகக்கடவது.

ஆக, அவதாரணார்தமான உகாரத்தாலே ஶுத்தஶேஷத்வ லக்ஷணமும், ஶேஷத்வ பூர்த்தியும், ஶேஷத்வ ஜ்ஞாநயாதாத்ம்யமும் சொல்லிற்றாய்த்து.

அன்றியிலே, சிலவாசார்யர்கள், இவ்வர்த்த மித்தனையும் தாதர்த்யஸித்தமேயாய், அவதாரணத்தை அர்த்தமாக்கி, இவ்வுகாரம் லக்ஷ்மீ வாசகமென்றார்கள்.

ஆக, உகாரார்த்தம் தீர்ந்தது.

            அநந்தரம், மகாரம்  தாதர்த்யஸித்தமுமாய், அவதாரணஸித்தமுமான ஶேஷத்வத்துக்கு, ஆஶ்ரயமாய் -ப்ரக்ருதே: பரனாய் ஜ்ஞானானந்த ஸ்வரூபனான ஆத்மாவைச் சொல்லுகிறது.

இம்மகாரத்தில், ப்ரக்ருதே: பரத்வமும், ஜ்ஞானானந்த ஸ்வரூபத்வமும் சொல்லுகிறபடியென்னென்னில்; இம்மகாரத்தில் சொல்லுகிற ப்ரமாணங்களிலே ப்ரக்ருதே: பரத்வம் சொல்லிற்று, இதில் தாதுவாலே-ஜ்ஞானானந்த ஸ்வரூபத்வம் சொல்லிற்று. இந்ததாது ‘மந-ஜ்ஞாநே” என்று ஜ்ஞாநமாத்ர ப்ரதிபாதகமாயிருக்க, ஜ்ஞாதாவை  சொல்லுகிற படியென்னென்னில்; குணத்தைச்சொன்னபோதே குணியையும் சொல்லிற்றாமென்று வேதாந்த ஸூத்ரத்திலே நிர்ணயிக்கையாலே.

கீழ்ச் சொன்ன ஶேஷத்வம் சேதநாசேதந ஸாதாரணமாயிருக்க, இங்கு சேதனைகாந்தமான மகாரத்தை ப்ரயோகிப்பா னென்னென்னில் ;

(௧) ஶேஷத்வஜ்ஞாநம் பிறப்பது சேதநனுக்கேயாகையாலும்,

(௨) ஶேஷத்வஜ்ஞாந ப்ரதிபந்தகமான ஸ்வாஹங்கார மமகார நிவ்ருத்தியுள்ளதும் சேதநனுக்கேயாகையாலும்,

(௩) ஶேஷத்வஜ்ஞாந கார்யாந்வய முள்ளதும் சேதநனுக்கேயாகையாலும்,

(௪) தத்ஸாதந ஸ்வரூப ஸமர்ப்பண கர்த்ருத்வமுள்ளது சேதநனுக்கேயாகையாலும்,

(௫) ததநந்தநரத்தில் ஸ்வரூபாநுஸந்தாநத்தாலே லஜ்ஜாபயங்களுண்டாவதும் சேதநனுக்கேயாகையாலும்,

(௬) ஆகாரத்தில் சொன்ன ஸ்வாமித்வத்துக்கு ப்ரதிஸம்பந்தியானதாஸத்வ முள்ளதும் சேதநனுக்கேயாகையாலும்,

(௭) ததநந்தரத்தில், இப்பதந்தான் ப்ரணவத்துக்கு த்ருதீயாக்ஷரம் மகாரமாக வேண்டுகையாலும்,

ஆக, இப்படி ஶேஷாத்வாஶ்ரய ப்ரதிபாதகபதம் சேதனைகாந்தமான மகாரமாகவேணும்,

ஆனால் இங்கு அசிச்சேஷத்வம் சொல்லுகிறடியெங்ஙனேயென்னில்;

இவ்வாத்மாவைச் சொல்லுகிறபோது, ப்ரக்ருதே: பரனென்று அசித்தை சொல்லி அநந்தரம் சொல்லுகையால், இப்பதங்கள்  போலே சொன்னவிடத்திலே அசித்தையும் சொல்லிற்றாகக்கடவது.

ஆஶ்ரயியாய் ஆநந்தத்தை முந்துறச்சொல்லுகிற ந்யாயத்தாலும், அசிச்சேஷத்வமிவ்விடத்திலே சொல்லிற்றாகக்கடவது.

இத்தால், அநந்யார்ஹதாஶ்ரயம் –ஜ்ஞாந ஸ்வரூபஜ்ஞாநகுணகனான வாத்மா வென்றதாய்த்து. ஆஶ்ரயியானஶேஷத்வத்தை முதல் சொல்லி, ஆஶ்ரயமான ஜ்ஞானானந்தத்தைப் பின்பு சொல்லுவானென்னென்னில்;

(௧) ஆஶ்ரயியானஶேஷத்வத்தை யொழிய ஜ்ஞானானந்தம் அஸந்நேவவாய் கிடக்கையாலும்,

(௨) புஷ்பத்துக்கு பரிமளத்தாலே ஶ்லாக்யதையானாப்போலே இவ்வாத்மாவுக்கு ஔஜ்வல்யம் ஶேஷத்வத்தாலேயாகையாலும்,

(௩) நெருப்புபட்ட அகத்திலேயகப்பட்டு நின்றவனை  நீரைச்சொரிந்துகொண்டு புறப்படப்படுத்துமாப்போலே, அஹங்காரமாகிற அழலிலேயகப்பட்டு உருவழிந்து கிடக்கிற ஆத்மாவை அடியானென்றே உணர்த்திக்கொண்டு (யிழி) அறியவேண்டுகையாலும்,

(௪) தன்னுண்ணிப் பகைபோலே அந்தராயமான ஆத்மானுபவமாத்ரமான படுகுழியிலே விழாமைக்காகவும்.

ஆக, இப்படி ஆஶ்ரயியான ஶேஷத்வத்தையொழிய ஆஶ்ரயமான ஜ்ஞாநஸ்வரூபனாய் ஜ்ஞாநகுணகனான வாத்மாவுக்கு ஸத்தையில்லாமையாலே, இவ்வந்தரங்கமான ஶேஷத்வத்தையே முற்படச் சொல்லிற்று.

இஶ்ஶேஷத்வாஶ்ரயமான ஆத்மாவினுடைய ஸ்வரூபம், (௧) ஸ்வஸ்மை ஸ்வயம் ப்ரகாஶமுமாய், (௨) ஆநந்தாத்மகமுமாய், (௩) ஸங்கோச விகாஸாயோக்யமுமாய் (௪) அணுவாயிருக்குமென்னுமிடமும்; ஸ்வபாவம் (௧) பரஸ்மை ஸ்வயம் ப்ரகாஶமுமாய், (௨) ஆநந்தஜநகமுமாய், (௩) ஸங்கோச விகாஸயோக்யமுமாய், (௪) அவிபு(குறைவு)வாயிருக்கு மென்னுமிடமும், இதினுடைய உபப்ரும்ஹணங்களிலே கண்டுகொள்வது.

இக்குணங்கள், மற்றுமிவ்வாத்மாவுக்கு சொல்லும் குணங்களெல்லாவற்றுக்குமுபலக்ஷணம்.

இதில் ஏகவசநம் -ஜாத்யேக வசநமாய், த்ரிவிதாத்ம வர்க்கத்தையும் சொல்லுகிறது.

ஆக, இம்மகாரத்தால் – ப்ரக்ருதே: பரனாய், ஶேஷத்வாஶ்ரயமாய், ஜ்ஞானானந்த ஸ்வரூபனாய், ஜ்ஞாநகுணகனானவாத்மாவை ச்சொல்லுகிறது.

“மூன்றேழுத்ததனை” இத்யாதிப்படியே, அக்ஷரத்ரயாத்மகமான ப்ரணவத்தில், ப்ரதம சரமங்களினாலே ஜீவபரர்களைச் சொல்லி, நடுவே அவதாரணத்தைச் சொல்லுகையாலே, ஜீவபரர்களிருவரையும், “ஏக தத்வம் ” (ஏக தத்த்வம்) என்னலாயிருக்க, பிரியச் சொன்னபடி யென்னென்னில்; ஏகாக்ஷரமான ப்ரணவத்தை அக்ஷரத்ரயாத்மகமாக ப்ரமாணங்களில்‌ பிரித்தாப்போலே, ஏகதத்த்வம் போலேயிருக்கிற இவர்களையும் ப்ரமாணங்களாலே பிரிக்கக்கடவதித்தனை.

இப்படி, ஸ்வஸ்வரூபத்தை பகவதப்ருதக் ஸித்த விஶேஷணமென்றிருக்கையே ஸ்வரூபப்ராப்தம்; இந்த ஜ்ஞாநமே மோக்ஷவிஷய யோக்யம்.

இத்தால் – ஸ்வரூப விஷயாந்யதா ப்ரதிபத்தி நிவ்ருத்தியைச்சொன்னபடி.

இத்தால் – ஆத்மஸமர்ப்பணம் சொல்லிற்றாய்த்து; ராஜ பண்டாரத்துள்ளறையிலே களவுகொண்டு உபகரிப்பாரைப்போலேயிறே.

இத்தால் –பழைய சௌர்ய மழகிய தென்னும் படியிறே ஆத்மஸமர்ப்பண ப்ரகாரமிருக்கும்படி.

ஆனால், ஸமர்ப்பணம் கூடும்படி யென்னென்னில்; இருக்கிற ஸம்ஸாரத்தில் கொடுமையாலும்,பேற்றில் த்வரையாலும் , ஸமர்ப்பணம் பண்ணியல்லது நில்லாதிறே சைதந்ய ஸ்வபாவம்.

ஆனால்; ஸ்வரூப விரோதமான ஸமர்ப்பணம் பண்ணினவன், ஸ்வரூப ஜ்ஞாநம் பிறந்தால் ப்ராயஶ்சித்தம் பண்ணவேண்டாவோவென்னில் ; வேண்டா. எங்ஙனேயென்னில்; அந்யதா ப்ரதிபத்தி யான ஆத்மாபஹாரம் பண்ணினவன் ஸர்வபாபமும் பண்ணி தன்னையுமழித்துக் கொண்டாப்போலே, யதாவத் ப்ரதிபத்தியான ஆத்மஸமர்ப்பணம் பண்ணினவனுக்கு  ஸர்வப்ராயஶ்சித்தமும் கூடி ஸர்வ ப்ராயஶ்சித்தமும் பண்ணினானாகக்கடவன்.

அன்றியே, ஸ்வர்ணாபஹாரம் பண்ணினவன் அபஹரித்த தனத்தைக் கொடுக்கத் தானுண்டாகையாலே ப்ராயஶ்சித்தம் பண்ணலாம்; இங்கும் கொடுத்தது தன்னையாகையாலே ப்ராயஶ்சித்தம் பண்ணுகைக்கு தானில்லாமையால், ஸர்வப்ராயஶ்சித்தமும், ஸ்வரூபலாபமும், ஆத்மஸமர்ப்பண மென்னுமிடமும், ப்ரமாணாந்தரங்களிலே கண்டுகொள்வது.

ஸ்வரூப லாபமே புருஷார்த்தமாகையாலே இவ்விடத்திலே புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லிற்றாய்த்து.

ஆக ப்ரணவத்தால் -ஆத்மயாகம் சொல்லித்தலைக்கட்டித்து. ஆத்மயாகம் வந்தபடி யென்னென்னில்; “நிருபாதிக தேவதா பரமாத்மா, நிருபாதிகம் ஹவி: ஜீவாத்மா, நிருபாதிகோ யாக: ஆத்ம ஸமர்ப்பணம்; நிருபாதிகோ மந்த்ர: ப்ரணவ:, நிருபாதிகபலம்-மோக்ஷ:” என்று ப்ரமாணாந்தரங்கள் சொல்லுகையாலே,

ஆக, பதத்ரயாத்மகமான ப்ரணவத்தால் அகாரவாச்யமான பரப்ரஹ்மத்துக்கு மகாரவாச்யமான ஜீவ ஸ்வரூபம் அநந்யார்ஹ ஶேஷமென்றாய்த்து.

இனி, மந்த்ரஶேஷமும் இப்பதத்திலே விவ்ருதம்.

பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே ஶரணம்.

தனிப்ரணவம் ஸம்பூர்ணம்

Languages

Related Parts

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.