[highlight_content]

Thiruvoymozhi 6-6

திருவாய்மொழி

ஆறாம் பத்து

ஆறாம் திருவாய்மொழி

மாலுக்கு, வையமளந்த மணாளற்கு *

நீலக் கருநிற, மேக நியாயற்குக் *

கோலச், செந்தாமரைக் கண்ணற்கு * என் கொங்கல

ரேலக் குழலி, இழந்தது சங்கே.    6.6.1      திருவேங்கடம் திருப்பதி

சங்கு வில் வாள் தண்டு, சக்கரக் கையற்குச் *

செங்கனி வாய்ச், செய்ய தாமரைக் கண்ணற்குக் *

கொங்கலர் தண்ணந்துழாய், முடியானுக்கு * என்

மங்கை யிழந்தது, மாமை நிறமே.    6.6.2      திருவேங்கடம் திருப்பதி

நிறங் கரியானுக்கு, நீடுலகுண்ட *

திறங் கிளர்வாய்ச் சிறுக் கள்வனவற்குக் *

கறங்கிய சக்கரக், கையவனுக்கு * என்

பிறங்கிருங் கூந்தல், இழந்தது பீடே.      6.6.3      திருவேங்கடம் திருப்பதி

பீடுடை நான்முகனைப், படைத்தானுக்கு *

மாடுடை வையம் அளந்த, மணாளற்கு *

நாடுடை மன்னர்க்குத் தூது செல் நம்பிக்கு * என்

பாடுடை யல்குல், இழந்தது பண்பே.      6.6.4      திருவேங்கடம் திருப்பதி

பண்புடை வேதம் பயந்த, பரனுக்கு*

மண்புரை வையம் இடந்த வராகற்குத் *

தெண் புனற் பள்ளி, எம் தேவ பிரானுக்கு * என்

கண்புனை கோதை, இழந்தது கற்பே.      6.6.5      திருவேங்கடம் திருப்பதி

கற்பகக் காவன, நற்பல தோளற்குப் *

பொற்சுடர்க் குன்றன்ன, பூந்தண் முடியற்கு *

நற்பல தாமரை, நாள் மலர்க் கையற்கு * என்

விற்புருவக் கொடி, தோற்றது மெய்யே.   6.6.6      திருவேங்கடம் திருப்பதி

மெய்யமர் பல்கலன், நன்கணிந்தானுக்குப் *

பையரவினணைப், பள்ளியினானுக்குக் *

கையொடு கால், செய்ய கண்ணபிரானுக்கு * என்

தையல் இழந்தது, தன்னுடைச் சாயே.      6.6.7      திருவேங்கடம் திருப்பதி

சாயக் குருந்தம், ஒசித்த தமியற்கு *

மாயச் சகடம் உதைத்த, மணாளற்குப் *

பேயைப் பிணம் படப், பாலுண் பிரானுக்கு * என்

வாசக் குழலி, இழந்தது மாண்பே.   6.6.8      திருவேங்கடம் திருப்பதி

மாண்பமை கோலத்து, எம்மாயக் குறளற்குச் *

சேண் சுடர்க் குன்றன்ன, செஞ்சுடர் மூர்த்திக்குக் *

காண் பெருந் தோற்றத்து, எம் காகுத்த நம்பிக்கு * என்

பூண்புனை மென்முலை, தோற்றது பொற்பே.   6.6.9      திருவேங்கடம் திருப்பதி

பொற்பமை நீள்முடிப், பூந்தண்துழாயற்கு *

மற்பொரு தோளுடை, மாயப் பிரானுக்கு *

நிற்பன பல்லுருவாய், நிற்கு மாயற்கு * என்

கற்புடை யாட்டி, இழந்தது கட்டே.        6.6.10    திருவேங்கடம் திருப்பதி

கட்டெழில் சோலை, நல் வேங்கட வாணனைக் *

கட்டெழில், தென் குருகூர்ச் சடகோபன் சொல் *

கட்டெழி லாயிரத்து, இப்பத்தும் வல்லவர் *

கட்டெழில், வானவர் போக முண்பாரே.         6.6.11    திருவேங்கடம் திருப்பதி

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.