திருவாய்மொழி
ஐந்தாம் பத்து
இரண்டாம் திருவாய்மொழி
பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம் *
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை *
கலியும் கெடும் கண்டுகொண்மின் கடல்வண்ணன்பூதங்கள் மண்மேல் *
மலியப் புகுந்து இசை பாடி ஆடி யுழிதரக் கண்டோம். 5.2.1
கண்டோம் கண்டோம்கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம் *
தொண்டீர் ! எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்றார்த்தும் *
வண்டார் தண்ணந் துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல் *
பண் தான் பாடி நின்றாடிப் பரந்து திரிகின்றனவே. 5.2.2
திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து *
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக் *
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல் *
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே. 5.2.3
இடங்கொள் சமயத்தையெல்லாம் எடுத்துக் களைவன போலே *
தடங்கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய்க் *
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி *
நடந்தும் பறந்தும் குனித்தும் நாடகம் செய்கின்றனவே. 5.2.4
செய்கின்றது என் கண்ணுக்கொன்றே ஒக்கின்றது இவ்வுலகத்து *
வைகுந்தன் பூதங்களேயாய் மாயத்தினால் எங்கும் மன்னி *
ஐய மொன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீ ருள்ளீரேல் *
உய்யும் வகை யில்லை தொண்டீர் ! ஊழி பெயர்த்திடும் கொன்றே. 5.2.5
கொன்று யிருண்ணும் விசாதி பகை பசி தீயனவெல்லாம் *
நின்று இவ்வுலகில் கடிவான் நேமிப் பிரான் தமர் போந்தார் *
நன்றிசை பாடியும் துள்ளி யாடியும் ஞாலம் பரந்தார் *
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர் ! சிந்தையைச் செந்நிறுத்தியே. 5.2.6
நிறுத்திநும்முள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மையுய்யக்கொள் *
மறுத்தும் அவனோடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே *
கறுத்த மனமொன்றும் வேண்டா, கண்ணனல்லால் தெய்வமில்லை *
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தியாய் அவர்க்கே இறுமினே. 5.2.7
இறுக்கும் இறை யிறுத்துண்ண எவ்வுலகுக்கும் தன் மூர்த்தி *
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே *
மறுத் திருமார்வ னவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி *
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுதுய்ம்மின் நீரே. 5.2.8
மேவித் தொழுதுய்ம்மினீர்கள், வேதப் புனித விருக்கை *
நாவில் கொண்டு அச்சுதன் தன்னை, ஞான விதி பிழையாமே *
பூவில் புகையும் விளக்கும், சாந்தமும் நீரும் மலிந்து *
மேவித் தொழும், அடியாரும் பகவரும் மிக்கதுலகே. 5.2.9
மிக்க உலகுகள் தோறும், மேவிக் கண்ணன் திருமூர்த்தி *
நக்க பிரானோடு, அயனும் இந்திரனும் முதலாகத் *
தொக்க அமரர் குழாங்கள், எங்கும் பரந்தன தொண்டீர் ! *
ஒக்கத் தொழ கிற்றிராகில், கலியுக மொன்று மில்லையே. 5.2.10
கலியுக மொன்று மின்றிக்கே தன்னடியார்க்கு அருள்செய்யும் *
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான் கண்ணன் தன்னை *
கலிவயல் தென்னன் குருகூர்க் காரி மாறன் சடகோபன் *
ஒலிபுக ழாயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக்குமே. 5.2.11