[highlight_content]

Thiruvoymozhi 9-7

திருவாய்மொழி

ஒன்பதாம் பத்து

ஏழாம் திருவாய்மொழி

எங்கான லகங் கழிவாய், இரை தேர்ந்திங் கினிதமரும் *

செங்கால மடநாராய் ! திருமூழிக்களத் துறையும் *

கொங்கார் பூந்துழாய்முடி எங்குடக் கூத்தர்க்கு என் தூதாய் *

நுங் கால்கள் என் தலை மேல், கெழுமீரோ நுமரோடே.       9.7.1      திருமூழிக்களம்

நுமரோடும் பிரியாதே, நீரும் நும் சேவலுமாய் *

அமர் காதல் குருகினங்காள் ! அணிமூழிக்களத் துறையும் *

எமராலும் பழிப்புண்டு இங்கு என்?, தம்மா லிழிப்புண்டு *

தமரோடு அங்குறைவார்க்குத், தக்கிலமே ? கேளீரே.  9.7.2      திருமூழிக்களம்

தக்கிலமே? கேளீர்கள், தடம் புனல் வாய் இரை தேரும் *

கொக்கினங்காள் குருகினங்காள் !, குளிர் மூழிக்களத் துறையும் *

செக்கமலத் தலர் போலும், கண் கை கால் செங்கனிவாய் *

அக்கமலத் திலை போலும், திருமேனி யடிகளுக்கே.          9.7.3      திருமூழிக்களம்

திருமேனி யடிகளுக்குத் தீவினையேன் விடு தூதாய்த் *

திருமூழிக்கள மென்னும், செழுநகர்வாய் அணிமுகில்காள் ! *

திருமேனி அவட்கருளீர், என்றக்கால் * உம்மைத் தன்

திருமேனி யொளி யகற்றித், தெளி விசும்பு கடியுமே ?     9.7.4      திருமூழிக்களம்

தெளிவிசும்பு கடிதோடித், தீவளைத்து மின்னிலகும் *

ஒளிமுகில்காள் ! திருமூழிக்களத் துறையும் ஒண்சுடர்க்குத் *

தெளிவிசும்பு திருநாடாத், தீவினையேன் மனத்துறையும் *

துளிவார்கட் குழலார்க்கு, என் தூதுரைத்தல் செப்புமினே.   9.7.5      திருமூழிக்களம்

தூதுரைத்தல் செப்புமின்கள், தூமொழிவாய் வண்டினங்காள் !*

போதிரைத்து மது நுகரும், பொழில் மூழிக்களத் துறையும் *

மாதரைத் தம்மார்வகத்தே வைத்தார்க்கு என் வாய் மாற்றம் *

தூதுரைத்தல் செப்புதிரேல், சுடர் வளையும் கலையுமே.    9.7.6      திருமூழிக்களம்

சுடர்வளையும் கலையும் கொண்டு அருவினையேன் தோள் துறந்த *

படர் புகழான், திருமூழிக்களத் துறையும் பங்கயக் கண் *

சுடர் பவள வாயனைக் கண்டு ஒரு நாள் ஒரு தூய் மாற்றம் *

படர் பொழில் வாய்க் குருகினங்காள்! எனக்கொன்று பணியீரே.  9.7.7      திருமூழிக்களம்

எனக்கொன்று பணியீர்கள், இரும்பொழில் வாயிரை தேர்ந்து *

மனக்கின்பம் பட மேவும் வண்டினங்கள் ! தும்பிகாள் ! *

கனக்கொள் திண்மதிள் புடை சூழ் திருமூழிக்களத்துறையும் *

புனக்கொள் காயா மேனிப் பூந்துழாய் முடியார்க்கே.     9.7.8      திருமூழிக்களம்

பூந்துழாய் முடியார்க்குப், பொன்னாழிக் கையாருக்கு *

ஏந்து நீரிளங்குருகே ! திருமூழிக்களத்தாருக்கு *

ஏந்து பூண்முலை பயந்து, என்னிணை மலர்க்கண் நீர் ததும்ப *

தாம் தம்மைக் கொண்டகல்தல், தகவன்றென் றுரையீரே.   9.7.9      திருமூழிக்களம்

தகவன்றென் றுரையீர்கள், தடம்புனல் வாயிரை தேர்ந்து *

மிகவின்பம் பட மேவும், மென்னடைய அன்னங்காள் ! *

மிகமேனி மெலிவெய்தி, மேகலையும் ஈடழிந்து * என்

அகமேனி யொழியாமே, திருமூழிக்களத்தார்க்கே.       9.7.10    திருமூழிக்களம்

ஒழிவின்றித், திருமூழிக்களத்துறையும் ஒண் சுடரை *

ஒழிவில்லா அணிமழலைக், கிளிமொழியாள் அலற்றிய சொல் *

வழுவில்லா வண்குருகூர்ச், சடகோபன் வாய்ந்துரைத்த *

அழிவில்லா ஆயிரத்து இப்பத்தும், நோயறுக்குமே.   9.7.11    திருமூழிக்களம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.