[highlight_content]

Thiruvoymozhi 10-7

திருவாய்மொழி

பத்தாம் பத்து

ஏழாம் திருவாய்மொழி

செஞ்சொற் கவிகாள் ! உயிர் காத்தாட் செய்ம்மின் திருமாலிருஞ்சோலை *

வஞ்சக் கள்வன் மாமாயன் மாயக் கவியாய் வந்து * என்

நெஞ்சும் உயிரும் உள்கலந்து நின்றார் அறியா வண்ணம் * என்

நெஞ்சு முயிரு மவை யுண்டு தானே யாகி நிறைந்தானே.        10.7.1                திருமாலிருஞ்சோலை

தானேயாகி நிறைந்து எல்லாவுலகும் உயிரும் தானேயாய்த் *

தானே யானென்பானாகித் தன்னைத் தானே துதித்து * எனக்குத்

தேனே பாலே கன்னலே யமுதே திருமாலிருஞ்சோலைக் *

கோனேயாகி நின்றொழிந்தான் என்னை முற்றும் உயிருண்டே.  10.7.2                திருமாலிருஞ்சோலை

என்னை முற்றுமுயிருண்டு என்மாய வாக்கை யிதனுள் புக்கு *

என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர் *

தென்னன் திருமாலிருஞ்சோலைத் திசை கை கூப்பிச் சேர்ந்த யான் *

இன்னம் போவேனே கொலோ? என்கொல் அம்மான் திருவருளே?         10.7.3                திருமாலிருஞ்சோலை

என்கொல் அம்மான் திருவருள்கள் ? உலகும் உயிரும் தானேயாய் *

நன்கென்னுடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்துழக்கித் *

தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமாலிருஞ்சோலை *

நங்கள் குன்றம் கைவிடான் நண்ணா அசுரர் நலியவே.    10.7.4    திருமாலிருஞ்சோலை

நண்ணா அசுரர் நலிவெய்த நல்ல அமரர் பொலிவெய்த *

எண்ணாதனக ளெண்ணும் நன்முனிவர் இன்பம் தலை சிறப்பப் *

பண்ணார் பாடல் இன்கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடித் *

தென்னா வென்னும் என்னம்மான் திருமாலிருஞ்சோலையானே.       10.7.5                திருமாலிருஞ்சோலை

திருமாலிருஞ்சோலை யானேயாகிச் செழுமூவுலகும் * தன்

ஒருமா வயிற்றினுள்ளே வைத்து ஊழியூழி தலையளிக்கும் *

திருமால் என்னை யாளுமால் சிவனும் பிரமனும் காணாது *

அருமாலெய்தி அடிபரவ அருளை யீந்த அம்மானே.         10.7.6    திருமாலிருஞ்சோலை

அருளையீ என்னம்மானே ! என்னும் முக்கணம்மானும் *

தெருள் கொள் பிரமனம்மானும், தேவர் கோனும் தேவரும் *

இருள்கள் கடியும் முனிவரும், ஏத்தும் அம்மான் திருமலை *

மருள்கள் கடியும் மணிமலை, திருமாலிருஞ்சோலை மலையே.         10.7.7                திருமாலிருஞ்சோலை

திருமாலிருஞ்சோலை மலையே திருப்பாற்கடலே என் தலையே *

திருமால் வைகுந்தமே தண் திருவேங்கடமே எனதுடலே *

அருமா மாயத்து எனதுயிரே மனமே வாக்கே கருமமே *

ஒருமா நொடியும் பிரியான் என் ஊழிமுதல்வன் ஒருவனே.         10.7.8                திருமாலிருஞ்சோலை,

திருவேங்கடம் திருப்பதி,

திருப்பாற்கடல்,

பரமபதம்

ஊழிமுதல்வன் ஒருவனே யென்னும் ஒருவன் உலகெல்லாம் *

ஊழிதோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்துழலும் *

ஆழிவண்ணன் என்னம்மான் அந்தண் திருமாலிருஞ்சோலை *

வாழி மனமே ! கைவிடேல் உடலும் உயிரும் மங்க வொட்டே.         10.7.9                திருமாலிருஞ்சோலை

மங்கவொட்டு உன் மாமாயை திருமாலிருஞ்சோலை மேய *

நங்கள் கோனே !, யானே நீயாகி என்னை யளித்தானே ! *

பொங்கைம் புலனும் பொறியைந்தும், கருமேந்திரியம் ஐம்பூதம் *

இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி, மானாங்கார மனங்களே.   10.7.10  திருமாலிருஞ்சோலை

மானாங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்கத் *

தானாங்காரமாய்ப் புக்குத் தானே தானே யானானைத் *

தேனாங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்லாயிரத்துள் *

மானாங்காரத்திவை பத்தும், திருமாலிருஞ்சோலை மலைக்கே.         10.7.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.