ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
பரமகாருணிகரான திருநாராயணபுரத்து ஆயி அருளிச்செய்த
ஆசார்யஹ்ருதய வ்யாக்யாநம்
த்விதீய ப்ரகரணம்
87. அணைய ஊரப் புனைய அடியும் பொடியும்படப் பர்வத பவநங்களிலே ஏதேனுமாக ஜநிக்கப் பெறுகிற திர்யக்ஸ்தா₂வர ஜந்மங்களைப் பெருமக்களும் பெரியோரும் பரிக்₃ரஹித்து ப்ரார்த்திப்பர்கள்
இனிமேல் ப₄க₃வத்₃விநியோகா₃ர்ஹமாயும், ப₄க₃வத்ஸம்ப₃ந்த₄த்தை உடைத்தாயும் இருக்கிற திர்யக்ஸ்தா₂வரங்களேயாகிலும் மிகவும் உத்க்ருஷ்டங்களென்னுமிடத்தை ‘‘வாசிகை: பக்ஷிம்ருக₃தாம் மாநஸைரந்த்யஜாதிதாம் | ஶரீரஜை: கர்மதோ₃ஷைர்யாதி ஸ்தா₂வரதாம் நர:’’ (மநு) என்று வாசிககாயிகப₂லமாய்க்கொண்டு அல்லாதார்க்கு வரக் கடவதான திர்யக்ஸ்தா₂வரஜந்மங்கள் போலன்றிக்கே, ப₄க₃வத்₃ விநியோகா₃ர்ஹமாய், ப₄க₃வத் ஸம்ப₃ந்த₄த்தை உடைத்தாயுமிருக்கிற திர்யக் ஸ்தா₂வரங்களே உபாதே₃ய– மென்று மஹாத்மாக்களாலே பரிக்₃ரஹிக்கவும் ஆத₃ரிக்கவும் படுகையாலே தந்முகே₂ந ப்ரகாஶிப்பிக்கிறார் (அணைய இத்யாதி₃).
‘‘அணைவதரவணைமேல்’’ (திருவா.2-8-1) விடாயர் மடுவிலே சேர்ந்தாப்போலே ஶ்ரமஹரமாய், அதாவது – ‘‘பூம்பாவையாகம் புணர்வது’’ என்று நாச்சிமாரோட்டைச் சேர்த்தியோடே விகல்பிக்கலாம்படியான ஸுக₂ஸ்பர்ஶத்தை உடையனாகையாலே ஸர்வேஶ்வரன் கண்வளர்ந்தருளுகைக்குப் பாங்காயிருப்பதான திருவனந்தாழ்வானாயும், ‘‘ஊரும் புட்கொடியுமஃதே’’ (திருவா.10-2-3) என்கிறபடியே வேதா₃ந்தவேத்₃ய– த்வத்₃யோதகமான க₃ருட₃வாஹநன், க₃ருட₃த்₄வஜன் என்று சொல்லப்படும்படி அவனுக்கு வாஹநமாயும் த்₄வஜமாயுமிருக்கும் பெரிய திருவடியாயும், ‘‘தாளிணைமேலும் புனைந்த’’(திருவா.1-9-7), ‘‘புனையுங்கண்ணி’’ (திருவா.4-3-2) என்கிறபடியே ஸர்வேஶ்வரத்வ ஸூசகமான தனிமாலையாய், ‘‘மலர்த்துழாய் மாட்டே நீ மனம் வைத்தாய்’’ (திருவா.3-1-4) என்கிறபடியே அவன் திருவுள்ளத்தைக் கொள்ளை கொள்ள வற்றான திருத்துழாயd ஆழ்வாராயுமிருக்கிற திர்யக் ஸ்தா₂வர ஜந்மங்களைப் ‘‘பெருமக்களுள்ளவர்’’ (திருவா.3-7-5) என்னும்படி மஹாத்மாக்களாயும், ஸத்தையே பிடித்து ஶேஷத்வஜ்ஞாந திரோதா₄நம் இல்லாமையாலே ‘‘அஸந்நேவ’’, ‘‘ஸந்தமேநம்’’ (தை.ஆ.) என்னவேண்டாதபடி இருக்கையாலே நித்யரான ஸூரிகள் ப₄க₃வத்₃விநி– யோகா₃ர்ஹமாக ஸ்வேச்சை₂யாலே பரிக்₃ரஹித்தார்கள்.
(அடியும் பொடியும்பட) ‘‘பத்யு: ப்ரஜாநாமைஶ்வர்யம் பஶூநாம் வா ந காமயே | அஹம் கத₃ம்போ₃ பூ₄யாஸம் குந்தோ₃ வா யமுநாதடே’’ என்று ப்ரஜாபதி- பஶுபதிகளுடைய ஐஶ்வர்யத்தையும் வேண்டேன்; ‘‘பூத்தநீள் கடம்பேறி’’ (நா.தி.4-4) என்றும், ‘‘பூங்குருந்து ஏறியிருத்தி’’ (நா. தி.3-3) என்றும் சொல்லுகிற க்ருஷ்ணனுடைய திருவடிகளோட்டை ஸ்பர்ஶத்துக்கு விஷயமான குருந்தாதல், கடம்பாதல் ஆவேனாக வேணும் என்றும், “ஆஸாமஹோ சரணரேணுஜுஷாமஹம் ஸ்யாம் ப்₃ருந்தா₃வநே கிமபி கு₃ல்மல தௌஷதீ₄நாம் | யா து₃ஸ்த்யஜம் ஸ்வஜநமார்யபத₂ஞ்ச ஹித்வா பே₄ஜுர் முகுந்தபத₃வீம் ஶ்ருதிபி₄ர்விம்ருக்₃யாம்’’ (பா₄க₃.10) என்று வேதங்களாலும் தேடவரிய க்ருஷ்ணன் போனவழியை ஸ்வஜநத்தையும் குலாசாரத்தையும் அதிக்ரமித்து யாவர்சில பெண்கள் பின்தொடர்ந்தார்கள், அந்த க்ருஷ்ணனுடையவும், பெண்களுடையவும் பாத₃ரேணுவை த₄ரித்திருக்கும் ப்₃ருந்தா₃வநத்தில் சிறுசெடிகள் கொடிகள் ஓஷதி₄கள் இவையாவேனாக வேணும் என்றும்,
(பர்வத) ‘‘கோனேரிவாழும் குருகாய்ப்பிறப்பேனே’’ (பெருமா. தி. 4 – 1) என்றும், ‘‘திருவேங்கடச்சுனையில் மீனாய்ப்பிறக்கும் விதியுடையேனாவேனே’’ (பெருமா.தி. 4 – 2) என்றும் ‘‘தம்பகமாய் நிற்கும்’’(பெருமா. தி. 4 – 5) , ‘‘செண்பகமாய் நிற்கும்’’ (பெருமா. தி. 4 – 4) , ‘‘கானாறாய்ப்பாயும்’’(பெருமா. தி. 4 – 7), ‘‘எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனுமாவேனே’’(பெருமா. தி. 4 – 10) என்றும் திருமலையாழ்வா- ரோட்டை ஸம்ப₃ந்த₄முடைய திர்யக்ஸ்தா₂வரங்களில் ஏதேனுமொன்றாகப் பெறுவேனாக வேணும் என்றும்,
(ப₄வநங்களில்) ‘‘தவ தா₃ஸ்யஸுகை₂கஸங்கி₃நாம் ப₄வநேஷ்வஸ்த்வபி கீடஜந்ம மே’’ (ஸ்தோ.ர. 55) என்று – தேவரீருடைய தா₃ஸ்யஸுக₂மொன்றிலுமே ஸங்க₃த்தை உடையரான ஸ்ரீவைஷ்ணவர்கள் திருமாளிகைகளிலே உத்பத்திவிநாஶங்களிரண்டும் அங்கேயாம் படியான கீடஜந்மமே எனக்கு உண்டாகவேணும் என்றும்; இப்படி ப₄க₃வத்₃ ப₄க₃வத ஸம்ப₃ந்த₄ங்களையுடைய திர்யக்ஸ்தா₂வரஜந்மங்களை ★பேராளன் பேரோதும் பெரியோரான ஸ்ரீஶுகப்₃ரஹ்மர்ஷி, ஸ்ரீகுலசேகரப்பெருமாள், பெரிய முதலியார் தொடக்கமான முமுக்ஷுக்கள் ப்ரார்த்தி₂த்தார்கள்.
ஆக, இத்தால் ப₄க₃வஜ்ஜ்ஞாநரஹிதமான உத்க்ருஷ்டவர்ணாதி₃கள் ஸத்துக்களுக்கு அநாத₃ரணீயமென்றும், ப₄க₃வத்₃விநியோகா₃ர்ஹமான திர்யக்ஸ்தா₂வரஜந்மங்கள் ஆத₃ரணீயமென்னுமிடத்தையும் சேர அருளிச்செய்தார். (87)
88. ஶேஷத்வ ப₃ஹிர்பூ₄த ஜ்ஞாநாநந்த₃மயனையும் ஸஹியாதார் த்யாஜ்ய உபாதி₄யை ஆத₃ரியார்களே..
இனிமேல் ஶேஷத்வத்துக்குப் புறம்பான ஆத்மாவையும் அநாத₃ரிக்கிறவர்களுக்கு ஓளபாதி₄கமான வர்ணாதி₃களை அநாத₃ரிக்கச் சொல்லவேணுமோ? என்கிறார் (ஶேஷத்- வேத்யாதி₃). ‘‘ந தே₃ஹம் ந ப்ராணாந் ந ச ஸுக₂மஶேஷாபி₄லஷிதம் ந சாத்மாநம் நாந்யத் கிமபி தவ ஶேஷத்வவிப₄வாத் | ப₃ஹிர்பூ₄தம் நாத₂ க்ஷணமபி ஸஹே யாது ஶததா₄ விநாஶம் தத் ஸத்யம் மது₄மத₂ந விஜ்ஞாபநமித₃ம்’’ (ஸ்தோ.ர.57) என்று – தேவரீருடைய ஶேஷத்வத்துக்குப் புறம்பான தே₃ஹாதி₃கள் ஒன்றையும் ஸஹியேன்; அவ் வளவே யன்றியிலே ஜ்ஞாநாநந்த₃மயமான ஆத்மவஸ்துவையும் ஸஹியேன்; அது ஶததா₄வாக விநாஶத்தை அடைவுதாக. இது – அஹ்ருத₃யமன்று, ஸத்யம். இது அஸத்யமாகில் தேவரீர் ஸந்நிதி₄யில் அஸத்யம் சொன்ன மது₄பட்டது படக்கடவேன் என்று ஶேஷத்வத்துக்குப் புறம்பானபோது ‘‘ஜ்ஞாநாநந்த₃மயஸ்த்வாத்மா’’ (பாஞ்ச.) என்று ஜ்ஞாநாநந்தமயனையும் ஸஹியாதவர்கள், ஶேஷத்வஜ்ஞாநவிரோதி₄யான அஹங்காரத்துக்கு ஹேது வாகையாலே த்யாஜ்யமாய், கர்மமடியாக வருவதொன்றாகை- யாலே ஓளபாதி₄கமான வர்ணத்தை ஆத₃ரியார்களென்னுமிடம் சொல்லவேணுமோ? என்கிறார். (88)
89. இதின் ஓளபாதிகத்வம் ஒரு ராஜா தன்னை மறைமுனிவனாக்கினவன் நீசனாக்குவித்த ராஜாவை வாரே உறுப்பாக யஜிப்பித்து ஸ்வர்க்க₃மேற்றினபோதே தெரியும்
இந்த வர்ணத்தினுடைய ஓளபாதி₄கத்வத்தை உதா₃ஹரணமுக₂த்தாலே வெளியிடுகிறார் (ஒரு ராஜா என்று தொடங்கி). குஶிகவம்ஶோத்₃ப₄வனாய் ராஜாவான விஶ்வாமித்ரன் ப்₃ரஹ்மர்ஷித்வத்தை ஆசைப்பட்டு நெடுங்காலம் தபஸ்ஸுபண்ணின தன்னை ‘‘மந்திரங்- கொள் மறைமுனிவன்’’ (பெருமா.தி.10-2) என்னும்படி ப்₃ரஹ்ம ர்ஷியாக்கின வஸிஷ்ட₂ன், தன்னுடைய வார்த்தாதிலங்க₄நம் பண்ணின த்ரிஶங்குவைத் தன் புத்ரர்களுடைய ஶாபத்தாலே மார்விலிட்ட யஜ்ஞோபவீதந்தானே வாராம்படி சண்டா₃ளனாக்குவிக்க, அந்த த்ரிஶங்குவையும் அந்த வாரே யஜ்ஞாங்க₃மான உறுப்புத்தோலாம்படித் தன்னுடைய தபோப₃லத்தாலே யஜிப்பித்து ஸ்வர்க்கா₃ரோஹணம் பண்ணுவித்த போதே வர்ணம் கர்மோபாதி₄கம் என்னுமிடம் ஸுவ்யக்தமென்கிறார்.
ஆக இத்தால் ஒரு க்ஷத்ரியன் ப்₃ரஹ்மர்ஷியானானென்றும், ஒரு க்ஷத்ரியன் சண்டாள- னானானென்றும், அந்த சண்டாளனானவனை அந்த ப்₃ரஹ்மர்ஷியானவன் தபோ– ப₃லத்தாலே ஸ்வர்க்க₃மேற்றினான் என்றும் சொல்லுகையாலே வர்ணம் ஓளபாதி₄கம் என்னுமிடம் ஸுஸ்தி₂ரமாய்த்து. (89)
90. மாவுருவில் கள்ளவேடம், திருந்து வேதமலமான மானிடம்– பாடல், ஸர்வவர்ண ஶூத்ரத்வம், காடுவாழ்சாதியில் கடல்வண்ணன் வேடம், தென்னுரையில் ஹரிகீர்த்தி, ஶ்வபசரில் பத்திபாசனமும் அறிவார் ஆரார் அமரரென்ன ஏற, அறியாதார் சாதியந்தணர்களேலும் தகரவிழுவர்.
ஆக, கீழ் ப₄க₃வத்ஸம்ப₃ந்த₄ஜ்ஞாநரஹிதமான உத்க்ருஷ்டஜந்மம் அபக்ருஷ்ட மாகையாலே அதினளவிலே நிற்கிற ப்ரமாதாக்கள் அநுபாதே₃யர் என்றும், ப₄க₃வத் ஸம்ப₃ந்த₄– ஜ்ஞாநமுக₂த்தாலே அபக்ருஷ்டஜந்மம் உத்க்ருஷ்ட ஜந்மமாகையாலே அதிலே நிற்கிற ப்ரமாதாக்கள் உபாதே₃யரென்றும் சொல்லாநின்றது. இனிமேல் ப்ரமாதாக்களளவேயன்றிக்கே ப்ரமாண-ப்ரமேய-ப்ரமாதாக்கள் மூன்றிலும் த்யாஜ்யமும் உண்டு, உபாதே₃யமுமுண்டு; அப்படி உபாதே₃யமான ப்ரமாண-ப்ரமேயங்களோடு விகல்பிக்கலாம்படியான அந்த ப்ரமாதாக்களுடைய வைப₄வத்தை ப்ரமாணங்களும் ப்ராமாணிகரும் சொல்லா நிற்க, அத்தை அறியாதே மந்த₃ மதிகளாய்க்கொண்டு ஜந்ம நிரூபணம் பண்ணுமவர்கள் அத₄:பதிப்பர்களென்று கீழே ‘‘வீட்டின்பவின்பப்பாக்களில் த்₃ரவ்ய– பா₄ஷாநிரூபணஸமம் இன்பமாரியிலாராய்ச்சி’’ என்று உபக்ரமித்த அர்த்த₂த்தை நிக₃மிக்கிறார் (மாவுருவில் கள்ளவேடம் என்று தொடங்கி).
‘‘எம்மாவுருவும் வேண்டுமாற்றாலாவாயெழிலேறே’’ (திருவா.5-8-2) ‘எவ்வுருவும் மாவுரு’ என்று அவன் பரிக்₃ரஹித்த விக்₃ரஹமெல்லாம் அப்ராக்ருதமாயிருக்குமென்றும், ‘‘இச்சா₂க்₃ருஹீதா பி₄மதோருதே₃ஹ:’’ (வி.பு.6-7-84) என்று இச்சையாலே பரிக்₃ருஹீதமாயிருக்குமென்றும் சொல்லுகிற விக்₃ரஹங்களில் வைத்துக் கொண்டு ‘‘கள்ள வேடத்தைக்கொண்டு போய்ப்புறம் புக்கவாறும்’’ (திருவா.5-10-4) என்று, ‘‘யதா₂ ஹி சோரஸ்ஸ ததா₂ ஹி பு₃த்₃த₄:’’ (ரா.ஆ.109-73) என்று வேத₃த்துக்கு அப்ராமாண்யம் சொல்லுகிற பு₃த்₃த₄முனியான விக்₃ரஹமும்,
(திருந்துவேதம்) ஸகலஶப்₃த₃ங்களும் ஸத்₃வாரகமாகவும், அத்₃வாரகமாகவும் ஸர்வேஶ்வரனை ப்ரதிபாதி₃க்கையாலே கட்டளைப்பட்ட வேத₃த்தில் (மலமான மானிடம் பாடல்) ‘‘ஓர் மானிடம் பாடலென்னாவதே’’ (திருவா.3-9-3) என்றும், ‘‘ந ஸ்மர்த்தவ்யோ விஶேஷேண வேதமந்த்ரோப்யவைஷ்ணவா:I காவ்யாலாபோபிஜப்யோஸௌ யத்ர ஸங்கீர்த்யபதேச்யுத:II என்றும் சொல்லுகிறபடியே ஹேயரான க்ஷேத்ரஜ்ஞரை சொல்லுகின்ற வாக்யங்களும்,
(ஸர்வவர்ணஶூத்₃ரத்வம்) ‘‘ந ஶூத்₃ரா ப₄க₃வத்₃ப₄க்தா விப்ரா பா₄க₃வதாஸ்ஸ்ம்ருதா: | ஸர்வவர்ணேஷு தே ஶூத்₃ரா யே ஹ்யப₄க்தா ஜநார்த்த₃நே’’ (பா.ஆஶ்வா.118-32) ,என்று ப₄க₃வத்₃– ப₄க்தனல்லாதவன் எல்லா வர்ணங்களிலும் ஶூத்₃ரனென்றும், ப்ரமாண-ப்ரமேய- ப்ரமாதாக்கள் மூவரிலும் த்யாஜ்யரையும் சொல்லி, இனிமேல் உபாதே₃யரையும் சொல்லுகிறது.
(காடுவாழ்சாதியில் கடல்வண்ணன்வேடம்) ‘‘கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான் காடுவாழ் சாதியுமாகப்பெற்றான்’’ (நா.திரு.12-8) என்று கோ₃பாலனாய்க் கொண்டு காட்டிலே பசுக்களின்பின்னே ‘‘கறையினார்’’ (திருவா.4-8-4) என்னும்படி பேணாதே திரியச்செய்தேயும் ‘‘கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர்’’ (பெரியா.தி.3-3-1) என்னும்படி பிறர்க்கும் அழைத்துக்காட்டவேண்டும்படி த்₃ரஷ்டவ்யமான க்ருஷ்ணவிக்₃ரஹமும், (தென்னுரையில் ஹரிகீர்த்தி) த்₃ராவிட₃பா₄ஷாபரிகல்பிதமான ப்ரப₃ந்த₄ங்களில் வைத்துக்கொண்டு ‘‘ஹரிகீர்த்திம் விநைவாந்யத்’’ (மாத்ஸ்யே) இத்யாதி₃ப்படியே ப₄க₃வத்ப்ரதிபாத₃கமானவையும், (ஶ்வபசரில்) ‘‘ஶ்வபசோபி மஹீபால விஷ்ணுப₄க்தோ த்₃விஜாதி₄க:’’ (பாஞ்ச.) என்று ஶ்வபாகரேயாகிலும், (பத்தி பாசனமுமறிவார்) ‘‘பெறற்கரிய நின்னபாதபத்தியான பாசனம்’’ (திருச்ச.விரு.100) என்று சொல்லுகிறபடியே ஸ்வயத்நத்தாலே பெறுதற்கரிதான ப₄க₃வச்சரணாரவிந்த₃ங்களில் ப₄க்தியைத் தங்களுக்கு த₄நம் என்று அறியுமவர்களுமாகிற ப்ரமாண– ப்ரமேய- ப்ரமாதாக்கள் மூன்றும் உத்க்ருஷ்டதமம் என்றும் சொல்லி,
இந்த உத்க்ருஷ்டதமமான ப்ரமாண ப்மேயங்களோடு விகல்பிக்கும்படியான இந்த ப்ரமாதாக்கள்வைப₄வத்தை (ஆராரமரரென்ன) ‘‘நீரார் முகில்வண்ணன் பேராரோதுவார் ஆராரமரரே’’ (திருவா.10-5-8) என்று விலக்ஷணவிக்₃ரஹயுக்தனான ஸர்வேஶ்வரனுடைய திருநாமங்களை அநுஸந்திக்கவல்லவர்கள் ஏதேனுமொரு ஜந்மவ்ருத்தங்களை உடையரேயாகிலும் அவர்கள் நித்யஸூரிகள் என்றும், ‘(ஏற) ‘‘இலங்குவான் யாவருமேறுவர் சொன்னாலே’’ (திருவா.3-8-11) என்று ப₄க₃வத்₃ விஷயத்தில் அந்வயித்தவர்கள் ஆரேனுமாகிலும் தே₃ஶவிஶேஷப்ராப்தி பண்ணுவர்கள் என்றும்,
இப்படி ஸர்வோத்க்ருஷ்டராகச் சொல்லாநிற்க, (அறியதார்) ஜந்மாதி₃களால் வந்த அஹங்காரத்தாலே மந்த₃மதிகளாய்க்கொண்டு அவர்கள்வைப₄வத்தை அறியாதே ஜந்ம– நிரூபணம் பண்ணுமவர்கள் (சாதியந்தணர்களேலும் தகரவிழுவர்) ‘‘அமரவோரங்க- மாறும்’’ (திருமாலை 43) என்கிற பாட்டின்படியே ‘‘அநாசாராந் து₃ராசாராந் அஜ்ஞாத்ரூந் ஹீநஜந்மந: | மத்₃ப₄க்தாந் ஶ்ரோத்ரியோ நிந்த₃ந் ஸத்₃யஶ்சண்டா₃ளதாம் வ்ரஜேத்’’ என்றும் சொல்லுகிறபடியே உத்க்ருஷ்டஜந்மத்திலே பிறந்து அங்க₃ஸஹிதமான நாலு வேதங்களையும் அதி₄கரித்து ப₄க₃வத்₃ப₄க்தராயிருந்தார்களேயாகிலும் ஜந்மாதி₃களால் குறைய நின்று ப₄க₃வதீ₃யராயிருப்பாருடைய ஜந்மத்தை காதா₃சித்கமாகவாகிலும் நிரூபித்– தார்களாகில் அந்நிலையிலே அவர்கள் சண்டா₃ளராவர் என்கையாலே பின்னை ஒருகாலும் உஜ்ஜீவநமில்லாதபடி அத₄:பதிப்பர்களென்கிறார். ‘‘ஶூத்₃ரம் வா ப₄க₃வத்₃ப₄க்தம் நிஷாத₃ம் ஶ்வபசம் ததா₂ | ஈக்ஷதே ஜாதிஸாமாந்யாத் ஸ யாதி நரகம் பர:’’ என்றும், ‘‘ப்ரத்யக்ஷிதாத்மநாதா₂நாம் நைஷாம் சிந்த்யம் குலாதி₃கம்’’ என்றும் சொல்லாநின்றதிறே. (90)
91. தமிழ்மாமுனிதிக்கு ஶரண்யமென்றவர்களாலே க்வசித் க்வசித் என்று இவராவிர்பா₄வம் கலியும் கெடும்போலே ஸூசிதம்.
இப்படி பா₄க₃வதஸாமாந்யத்தாலே ஆழ்வாருடைய உத்பத்தி நிரூபிக்கலாகாது என்கிற மாத்ரமன்றிக்கே, ஆழ்வாருடைய அவதாரம் வ்யாஸஶுகாதி₃களாலும் ப்ரகாஶிப்பிக்கப் பட்டதென்கிறார் மேல். (தமிழ்மாமுனிதி₃க்கு ஶரண்யமென்றவர்களாலே) ‘‘வண்டமிழ் மாமுனி’’ (பெருமா.தி.10-5) ‘‘த₃க்ஷிணா தி₃க் க்ருதா யேந ஶரண்யா புண்யகர்மணா’’ (குருகாமாஹாத்ம்யம்) என்று த்₃ரவிடஶாஸ்த்ரப்ரவர்த்தகனான அக₃ஸ்த்யன் நின்ற தி₃க்கு ஸர்வர்க்கும் புகலிடம் என்ற வ்யாஸஶுகாதி₃களாலே (க்வசித் க்வசித் என்று இவர் ஆவிர்பா₄வம்) ‘‘கலௌ க₂லு ப₄விஷ்யந்தி நாராயணபராயணா: | க்வசித்க்வசிந்மஹாபா₄கா₃ த்₃ராவிடே₃ஷு ச பூ₄யஶ: | தாம்ரபர்ணீ நதீ₃ யத்ர க்ருதமாலா பயஸ்விநீ | காவேரீ ச மஹாபா₄கா₃ ப்ரதீசீ ச மஹாநதீ₃ | யே பிப₃ந்தி ஜலம் தாஸாம் மநுஜா மநுஜேஶ்வர | தேஷாம் நாராயணே ப₄க்திர்பூ₄யஸீ நிருபத்₃ரவா’’ (பாக.11.5.38-39.) என்றும்,
‘‘க்ரூரே கலியுகே₃ ப்ராப்தே நாஸ்திகை: கலுஷீக்ருதே | விஷ்ணோரம்ஶாம்ஶஸம்பூ₄தோ வேத₃வேதா₃ர்த்த₂ஸாரவித் | ஸ்தோத்ரம் வேத₃மயம் கர்த்தும் த்₃ராவிட்₃யா ஸ ச பா₄ஷயா | ஜநிஷ்யதி ஸதாம் ஶ்ரேஷ்டோ₂ லோகாநாம் ஹிதகாம்யயா | கஶ்சிந்மநுஷ்யரூபேண க்ருபயா தத்ர வை முநி: | ப்ரயாஸ்யதி புநஸ்ஸோபி ஸாயுஜ்யம் பரமாத்மந: | அத்₄யேதவ்யம் த்₃விஜஶ்ஶ்ரேஷ்டை₂ர்வேத₃ரூபமித₃ம் க்ருதம் | ஸ்த்ரீபி₄ஶ்ஶூத்₃ரா– தி₃பி₄ஶ்சைவ தேஷாம் முக்தி: கரே ஸ்தி₂தா’’ (குருகாமா.) என்றும், ‘‘கலௌ புந: பாபரதாபி₄பூ₄தே ஸ உத்₃ப₃பூ₄ வாஶ்ரித வத்ஸலத்வாத் | ப₄க்தாத்மநா ஸர்வஜநாந் ஸுகோ₃ப்தும் விஶ்வாதி₄கோ விஶ்வமயோ ஹி விஷ்ணு:’’ என்றும் இவ்வாழ்வாருடைய ஆவிர்பா₄வம் கர்மமூலமன்றிக்கே ப₄க₃வத₃வதாரம் போலே ஜக₃த்₃ரக்ஷணார்த்த₂– மாக ப₄க₃வதி₃ச்சை₂யாலே உண்டானதாகையாலே ஆவிர்பா₄வமென்கிறது. அந்த ஆவிர்பா₄வம் ‘‘கலியும் கெடும்’’ (திருவா.5-2-1) என்று இவர்தாம் திருமங்கையாழ்வார், உடையவர் போல்வார் வந்துதித்து கலியுக₃ஸ்வபா₄வம் கெடும் என்று அருளிச்செய்தாப்போலே அவர்களாலே ஸூசிப்பிக்கப்பட்டது என்கிறார். (91)
92. அத்ரி-ஜமதக்நி பங்க்திரத₂-வஸு-நந்த ஸூநுவானவனுடைய யுக வர்ண-க்ரமாவதாரமோ? வ்யாஸாதி₃வத் ஆவேஶமோ? மூதுவர் கரைகண்டோர் சீரியரிலே ஒருவரோ? முன்னம் நோற்ற அனந்தன்மேல் புண்ணியங்கள் பலித்தவரோ? என்று ஶங்கிப்பர்கள்.
இப்படி அருளிச்செய்கிற இவருடைய அவதாரவைப₄வத்தைப்பார்த்து ப₄க₃வத₃வ– தாரங்களில் ஸ்வரூபேண அவதாரமோ? ஆவேஶாவதாரமோ? நித்யரோ? முக்தரோ? ஸித்₃த₄ரோ? தம்முடைய ஜந்மாந்தரஸஹஸ்ரபுண்யஸஞ்சயங்களாலே வந்தவரோ? ஈஶ்வரனுடைய பா₄க்₃யப₂லத்தாலே வந்தவரோ? என்று அதிஶங்கிப்பர்கள் என்கிறார் (அத்ரி ஜமத₃க்₃நி என்று தொடங்கி).
க்ருதயுக₃த்திலே அத்ரிஜமதக்₃நிகள்பக்கலிலே த₃த்தாத்ரேயராயும், பரஶுராமனாயும், த்ரேதாயுக₃த்திலே க்ஷத்ரியனான த₃ஶரத₂சக்ரவர்த்திபக்கலிலே வந்தவதரித்தும், த்₃வாபர– யுக₃த்திலே க்ஷத்ரியரில் தண்ணியராகையாலே வைஶ்ய ப்ராயரான வஸுதேவ ஸூநுவாயும் “க்ருஷி கோரக்ஷவாணிஜ்யம் வைஶ்யம் கர்ம ஸ்வபாவஜம்” (ப.கீ.18-44) என்று கோ₃ரக்ஷணத₄ர்மத்தை உடையராகையாலே வைஶ்யரான ஸ்ரீநந்த கோபர்க்குப் புத்ரராயும், யுக₃க்ரமத்திலும் அடைவே வர்ணத்ரயத்திலே வந்து அவதரித்துப் போந்த ஸர்வேஶ்வரன் கலியுக₃த்திலே நாலாம் வர்ணத்திலே ஆழ்வாராய்த் திருவவதரித்தானோ என்றும்,
‘க்ருஷ்ணத்₃வைபாயநம் வ்யாஸம் வித்₃தி₄ நாராயணம் ப்ரபு₄ம்’’ (வி.பு.3-4-5) என்கிறபடியே வேதங்களை வ்யஸிக்கைக்காக வ்யாஸாதி₃கள்போல் வந்து அவதரித்தானோ? என்றும், ‘‘கரைகண்டோர்’’ (திருவா.8-3-10) என்று ஸம்ஸாரத்தைக் கரைகண்ட முக்தரிலே ஒருவர் அப்படியே அவதரித்தாரோ? ‘‘பாம்பணை மேல் பள்ளி கொண்டருளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே’’ (திருவிரு.79) என்றும், ‘‘முக்தாநாம் லக்ஷணம் ஹ்யேதச்ச்₂வேதத்₃வீப நிவாஸிநாம்’’ (பா₄ர. ஶா.337-40) என்றும் நித்யமுக்தரோடொக்கச் சொல்லலாம்படி இருக்கிற ஶ்வேதத்₃வீப வாஸிகளான ஸித்₃த₄ரிலே ஒருவரோ? ‘‘முன்னம் நோற்ற விதிகொலோ’’ (திருவா.6-5-7) என்கிறபடியே ஜந்மாந்தரஸஞ்சிதமான தம்முடைய பா₄க்₃யத்தாலே பிறந்தவரோ? ‘‘அனந்தன் மேல் கிடந்தவெம்புண்ணியா’’ (திருச்ச.45) என்று அநந்தஶாயியான ஸர்வேஶ்வரனுடைய பா₄க்₃யத்தாலே பிறந்தவரோ? என்று ஶங்கிப்பர்கள் என்கிறார். (92)
93. இதுக்கு மூலம் – யான் நீ என்று மறுதலைத்து வானத்து மண்மிசை மாறும் நிகருமின்றி நிலையிடம் தெரியாதே தெய்வத்து இனம் ஒரு வகைக்கொப்பாக இனத் தலைவன் அந்தாமத்தன்பு செய்யச் சேர்ந்தமைக்கு அடையாளம் உளவாக உகந்துகந்து திமிர் கொண்டாலொத்து நாட்டியல் வொழிந்து ஶட₂ரையோட்டி மதா₃ வலிப்தர்க்கு அங்குஶமிட்டு நடாவிய கூற்றமாய்த் தீயன மருங்குவாராமல் கலியுகம் நீங்கிக்கிதயுகம் பற்றிப் பட்டெழுபோதறியாதிருந்த ப்ரபகிதயுகம் பற்றிப் பட்டெழுபோது அறியாதிருந்த ப்ரபாவம்.
இப்படி இவர்கள் ஶங்கிக்கைக்கு ஹேது என்னென்னில், இவருடைய ப்ரபா₄வம் கண்டு என்கிறார் மேல். (இதுக்கு மூலம்) இப்படி இவர்கள் ஶங்கிக்கைக்கு ஹேது. (யான் நீ என்று மறுதலைத்து) ‘‘புவியும் இருவிசும்பும் நின்னகத்த, நீ என் செவியின் வழி புகுந்தென்னுள்ளாய், அவிவின்றி யான் பெரியன் நீ பெரியை என்பதனை யாரறிவார், ஊன்பருகு நேமியாய் உள்ளு’’ (பெரிய திரு.75) என்று – உப₄யவிபூ₄தியையும் உன் ஸங்கல்பைகதே₃ஶத்திலே வைத்து என் ஶ்ரவணத்₃வாரா நெஞ்சிலே புகுந்து விச்சே₂த₃– மின்றியிலே நித்யவாஸம் பண்ணாநின்றபின்பு, நானோ, நீயோ பெரியாய்? ஆரென்று ஸர்வாதி₄கனான நீயே விசாரி – என்று ஸர்வேஶ்வரனோடே விகல்பிக்கலாம்படியாய்,
(வானத்து மண்மிசை மாறும் நிகருமின்றி) ‘‘இனியாவர் நிகரகல்வானத்தே’’ (திருவா.4-5-8) என்றும், ‘‘மாறுளதோ இம்மண்ணின்மிசையே’’ (திருவா.6-4-9) என்றும் உப₄யவிபூ₄தியிலும் எனக்கு ஸத்₃ருஶருண்டோ என்னும்படி தா₃ஸ்யஹ்ருஷ்டோக்தியை உடையராய், (நிலையிடம் தெரியாதே) ‘‘வைகுந்தமோ வையமோ நும் நிலையிடம்’’ (திருவிரு.75) என்று – இந்த விபூ₄திஸ்த₂ரோ? நித்யவிபூ₄திஸ்த₂ரோ? என்று அறுதியிட ஒண்ணாதபடி இருக்கையாலே உப₄யவிபூ₄தியிலும் வ்யாவ்ருத்தராய்,
(தெய்வத்தினம் ஒருவகைக்கொப்பாக) ‘‘தெய்வத்தினமோரனையீர்களாய்’’ (திருவிரு.23) என்று நித்ய ஸூரிகளெல்லாரும் கூடினாலும் தம்முடைய ஒருவகைக்கொப்பாக உடையராய், (இனத்தலைவன் இத்யாதி₃) ‘‘வானோனாரினத்தலைவன்’’ (பெரியதிரு. 25) என்று அப்படிப்பட்ட ஸூரிஸமூஹத்துக்கு நிர்வாஹகனான ஸர்வேஶ்வரன், ‘‘அந்தாமத்தன்பு செய்து’ (திருவா.2-5-1) என்று விலக்ஷணமான பரமபத₃த்தில் பண்ணும் வ்யாமோஹத்தை இவர் பக்கலிலே பண்ண, (சேர்ந்தமைக்கடையாளமுளவாக) ‘‘திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்தவுள’’ (திருவா.8-9-6) என்று ஸர்வேஶ்வரனுடைய க்ருபையாலே விஷயீக்ருதரானமைக்கு ஸுவ்யக்தமாக லாஞ்ச₂நமான ராக₃த்தை வாய்க் கரையிலே உடையராய், கேவலம் வாய்க்கரையில் ராக₃மாத்ர– மன்றிக்கே ‘‘உகந்து உகந்து உள்மகிழ்ந்து குழையுமே’’ (திருவா.6-5-4) என்று பா₃ஹ்யாப்₄யந்தர ஹர்ஷத்தாலே ஶிதி₂லராய், ‘‘திமிர்கொண்டாலொத்துநிற்கும்’’ (திருவா.6-5-2) என்று அநுஸந்தா₄நத்தால் உண்டான ஆத₃ராதிஶயத்தாலே ‘‘ஸ்தப்₃தோ₄ஸ்யுத தமாதே₃ஶம ப்ராக்ஷ்ய:’’ (சா.6-1-3) என்று ஸர்வநியாமகமான ப்₃ரஹ்மஸ்வரூப– ஸாக்ஷாத்காரம் பிறந்தாரைப்போலே ஸ்திமிதராய், (நாட்டியல்வொழிந்து) ‘‘நாட்டாரோடியல்வொழிந்து’’ (திருவா.10-6-2) என்று ஸம்ஸாரிகளோட்டை ஸங்க₃த்தை விட்டு, (ஶட₂ரையோட்டி) ஶட₂கோபராகையாலே ப்ரமாணாநுகு₃ணமாக தர்க்கம் சொல்லுகை– யன்றிக்கே ஸ்வமநீஷையாகக் கற்பித்துக் கொண்டு, ஶுஷ்கதர்க்கங்களாலே அர்த்த₂ஸ்தா₂பநம் பண்ணவிருக்கிற ஶட₂ரைத் தம்முடைய உக்திஶ்ரவணமாத்ரத்தாலே தம்முடைய ஸந்நிதா₄நத்தில் நில்லாதபடி பண்ணி,
(மதா₃வலிப்தர்க்கு அங்குஶமிட்டு) பராங்குஶராகையாலே ‘‘வித்₃யாமதோ₃ த₄நமத₃ஸ்– த்ருதீயோபி₄ஜநோ மத₃: | ஏதே மதா₃வலிப்தாநாம் ஏத ஏவ ஸதாம் த₃ம:’’ என்று அபி₄ஜநவித்₃யாவ்ருத்தங்களாகிற மத₃த்ரயங்களினாலே தூ₃ஷிதராய் இருக்கிறவர்களை ஸ்வோக்திரூபமான அங்குஶங்களாலே நிர்மத₃ராம்படி பண்ணி, (நடாவிய கூற்றமாய்) ‘‘பறவையின் பாகன் மதனசெங்கோல் நடாவிய கூற்றங்கண்டீர்’’ (திருவிரு.6) என்று வேத₃வேத்₃யத்வஸூசகமான க₃ருட₃வாஹநனான ஸர்வேஶ்வரன் விஷயத்திலே, ‘‘நின்கண் வேட்கை எழுவிப்பனே’’ (திருவிரு.96) என்கிறபடியே எல்லார்க்கும் ப₄க்தியை உண்டாக்கி நடத்துமவராய். கூற்றம் என்கையாலே தம்முடைய த₃ர்ஶநஸ்த₂ருடைய ஸாம்ஸாரிகமான ருசிக்கு விநாஶகரராய். (தீயன மருங்கு வாராமல்) ‘‘கொன்றுயிருண்ணும் விசாதி பகைபசி தீயனவெல்லாம்’’ (திருவா.5-2-6) என்று சேதநரை முடித்து ப்ராணாபஹாரம் பண்ணக்கடவதான ஆதி₄வ்யாதி₄ரூபமான தோ₃ஷங்களும் ‘‘வானோ மறிகடலோ’’ (பெரியதிரு.54) இத்யாதி₃ப்படி ஸாம்ஸாரிகது₃:க₂ஹேதுவான பாபங்களும் பார்ஶ்வத்திலும் வாராதபடியாய்,
(கலியுகம் நீங்கிக் கிதயுகம் பற்றி) ‘‘திரியும் கலியுகம் நீங்கி’’ (திருவா.5-2-3) என்று -‘‘ப₄விஷ்யத்யத₄ரோத்தரம்’’ (பா₄ர.ஶா.மோ) என்கிறபடியே பதா₃ர்த்த₂ ஸ்வபா₄வங்கள் வேறுபட்டு வருகிற கலியுக₃தோ₃ஷமும் நீங்கி, ‘‘பெரியகிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருக) (திருவா.5-2-3) என்று ஆதி₃க்ருதயுக₃த்தையொக்க மஹத்தான ஆநந்த₃ ஸாக₃ரம் அபி₄வ்ருத்₃த₄மாக, ‘‘பட்டபோதெழுபோதறியாள் விரைமட்டலர் தண்டுழாய் என்னும்’’ (திருவா.2-4-9) என்று ப₄க₃வத்₃விஷயத்தில் போ₄க்₃யதாநு– ஸந்தா₄நத்தாலே ‘‘நந்த₃ந்த்யுதி₃த ஆதி₃த்யே நந்த₃ந்த்யஸ்தமிதே ரவௌ’’ என்றும், ‘ப்ராதர்மூத்ர புரீஷாப்₄யாம் மத்₄யாஹ்நே க்ஷுத்பிபாஸயா | ஸாயம் காமேந பா₃த்₄யந்தே ஜந்தவோ நிஶி நித்₃ரயா’’ என்கிறபடியே ஸம்ஸாரிகளுக்குப் புறம்பே காலக்ஷேப- ஹேதுவான தி₃வாராத்ரவிபா₄க₃மறியாதே அகாலகால்யமான தே₃ஶவிஶேஷத்திற் போலே ப₄க₃வத₃நுப₄வைகபரராய்ப் போந்த இவருடைய ப்ரபா₄வம் கீழ் அப்படி ஶங்கிக்கைக்கு ஹேது என்கிறார். (93)
94. இதுக்கு ஹேது – ஊழிதோறும் சோம்பாது ஒன்றிப் பொருளென்று அளி மகிழ்ந்து முற்றுமாய் நின்று, நூலுரைத்து, யோகுபுணர்ந்து, கண்காணவந்து ஆள்பார்க்கிறவன் உலகினதியல்வை நல்வீடுசெய்ய, இணக்குப்பார்வைதேடிக் கழல் அலர் ஞானமுருவின முழுதுமோட்டின பெருங்கண், எங்குமிலக்கற்று, அன்பொடு நோக்கான திசையிலே, ஆக்கையில் புக்குழன்று மாறிப்படிந்து துளங்குகிறவர் மேலே பட, பக்கநோக்கறப் பண்ணின விஶேஷ கடாக்ஷம்.
இவர்க்கு இந்த ப்ரபா₄வமுண்டாகைக்கடி என் என்னில், ஸ்ருஷ்ட்யாதி₃முக₂த்தாலே ஸம்ஸாரிகளுடைய உஜ்ஜீவநத்துக்கு க்ருஷி பண்ணுகிற ஈஶ்வரன் ஸஜாதீயரைக் கொண்டு இவர்களைத் திருத்தவேணுமென்றுபார்த்து அதுக்காளாவாரை ஸம்ஸாரத்தில் கிடையாத த₃ஶையிலே தே₃வமநுஷ்யாதி₃ஶரீரங்களிலே ப்ரவேஶித்து, தத₃நுஸாரிக– ளாய்க்கொண்டு ஜந்மபரம்பரைகளிலே இழிந்த ஸம்ஸாரஸாக₃ரமத்₄யஸ்த₂ரான இவர் பக்கலிலே நிர்ஹேதுகமாகப்பண்ணின விஶேஷகடாக்ஷமென்கிறார் (இதுக்கு ஹேது ஊழிதோறும் என்று தொடங்கி). இதுக்கு ஹேது – கீழ் ப்ரஸ்துதமான ப்ரபா₄வத்துக்கு ஹேது.
‘‘ஊழிதோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்துழலும்’’ (திருவா.10-7-9) என்றும், ‘‘சோம்பாதிப்பல்லுருவையெல்லாம் படர்வித்தவித்தா’’ (பெரியதிரு. 18) என்றும், ‘‘ஒன்றியொன்றி உலகம் படைத்தான்’’ (திருவா.3-9-10) என்றும், ‘‘பொருளென்றிவ்வுலகம் படைத்தவன்’’ (திருவா.2-10-11) என்றும், ‘‘அளிமகிழ்ந்- துலகமெல்லாம் படைத்தவை’’ (திருவா.3-4-8) என்றும் சொல்லுகிறபடியே கர்ஷகனானவன் ஒருபோகம் பதறி{?ரி}ற்றென்னா, கைவாங்காதே மேலேமேலே க்ருஷி பண்ணுமாப்போலே கல்பந்தோறும் ஸ்ருஷ்டிக்கச்செய்தேயும், அது ஸப₂லமாகாதிருக்கச்செய்தேயும், பின்னையும் முசியாதே, ப்ரயோஜநமாம், ப்ரயோஜநமாம் என்று திருவுள்ளத்தில் க்ருபையாலே வந்த உகப்போடே அடுத்தடுத்து ஸ்ருஷ்டித்து,
(முற்றுமாய்நின்று) ‘‘தத்ஸ்ருஷ்ட்வா ததே₃வாநுப்ராவிஶத்’’ (தை.2-6-1) என்கிற படியே ஸ்ருஷ்டமான ஜக₃த்திலே அவற்றினுடைய வஸ்துத்வ-நாமபா₄க்த்வங்களுக்காக அவற்றைச் சொல்லுகிற ஶப்₃த₃ங்கள் தன்னளவிலே பர்யவஸிக்கும்படி வ்யாப்தனாய்க் கொண்டு ப்ரகாரியாய் நின்று, ‘‘அன்னமதாயிருந்தங்கறநூலுரைத்த’’ (திருமொழி11-4-8) என்கிறபடியே ஸாராஸாரவிவேகோந்முக₂மான ஹம்ஸரூபியாய்க்கொண்டு ஶாஸ்த்ர ப்ரதா₃நத்தைப்பண்ண, (யோகுபுணர்ந்து) ‘‘தன்கோலச்செந்தாமரைக்கண் உறைபவன் போலவோர் யோகுபுணர்ந்த ஒளிமணிவண்ணன்’’(திருவா.3-10-2) என்று க்ஷீராப்₃தி₄யில் யோக₃நித்₃ராவ்யாஜத்தாலே சேதநருடைய ரக்ஷேணாபாய– சிந்தைபண்ணி,
சிந்தாஸமநந்தரம் தோற்றின உபாயாநுகு₃ணமாக (கண்காணவந்து) ‘‘துயரில் மலியும் மனிசர்பிறவியில் தோன்றிக்கண்காணவந்து’’ (திருவா.3-10-6) என்கிறபடியே ‘‘ந மாம்ஸ சக்ஷுரபி₄வீக்ஷதே தம்’’, ‘‘ந சக்ஷுஷா பஶ்யதி கஶ்சநைநம்’’, ‘‘என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுரு’’ (பெரியதிரு.28) என்றும் சொல்லுகிற தான் து₃:க₂– ப₃ஹுளரான மநுஷ்யரோடே ஸஜாதீயராய்க்கொண்டு வந்து பிறந்து அவர்களுடைய மாம்ஸ சக்ஷுஸ்ஸுக்கு விஷயபூ₄தனாய், ‘‘ஆள்பார்த்துழிதருவாய்’’ (பெரியதிரு.60) என்று அப்ராக்ருத விக்₃ரஹவிஶிஷ்டனாய், நிரங்குஶஸ்வதந்த்ரனாய், நிரபேக்ஷனான தான் உற்றாராயிருப்பார் உருமாறிநின்று ஆராயுமாப்போலே ★தமருகந்த இத்யாதி₃ப்படியே
அர்ச்சகர் உகந்த த்₃ரவ்யத்தைத் திருமேனியாகக் கொண்டு அவர்களுக்கு மிகவும் இட்டவழக்கானவனாய், அவர்கள் இடுகிற இலை, மலர் முதலானவைகளிலே விருப்பத்தோடு கூடியவனாய்க்கொண்டு கோயில்களிலேயும், வீடுகளிலேயும் நின்றருளி, நம்முடைய விஷயத்துக்கு இலக்காவார் ஆர் என்று ஆள் பார்க்கிறவன்.
(உலகினதியல்வை நல்வீடுசெய்ய) ‘‘ஓஓ உலகினதியல்வே’’ (திருவாசிரி.6) என்கிறபடியே எல்லா வகையாலும் காப்பாளனான தன்னைவிட்டு தாழ்ந்த தேவதைகளை பிறரைத் துன்புறுத்துவது முதலான உபாயத்தின் வாயிலாலே வலித்து, தாழ்ந்த பயன்களைப் பெற்று அவற்றை அநுப₄விக்கைக்காக தே₃வர் முதலான ஶரீரத்தில் நுழைந்து, வியப்பான ப்ரக்ருதிக்கு வஶப்பட்டவரான ஸம்ஸாரி சேதநர் ஸ்வபா₄வத்தை ‘‘யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல்வீடுசெய்யும்’’ (திருவிரு.95) என்று ப்ரக்ருதி ப்ராக்ருதங்களில் ஏதேனுமொன்றைப் பற்றத்தன்னைவிட்டு நீங்குகையே தன்மையான வ்ரதத்தை வேரோடே போக்குகைக்காக,
(இணக்குப்பார்வை தேடி) ஒப்பான பு₃த்₃தி₄யாலே தன்னோடு இணக்கவற்றான பார்வை மானை வைத்து ம்ருக₃ம் பிடிப்பாரைப்போலே ஒப்பானவரைக்கொண்டு திருத்த வேணும் என்று பார்த்து, அதுக்கு ஆளாவார் ஆரோ என்றுதேடி, (கழறலர் ஞானமுருவின முழுது- மோட்டின பெருங்கண்) ‘‘கழறலம்’’ (திருவிரு.58) என்கிற பாட்டில் சொல்லுகிற படியே ஜகத்திலே பரந்ததான ஞானத்தையும் மீறி, ‘‘மண்முழுதுமகப்படுத்துநின்ற’’ , ‘‘மேலைத்தண்மதியும் கதிரவனும் தவிரவோடி’’ (திருநெடு.5) என்று எல்லா உலகங்களையும் ஆக்ரமிக்கும்படி வ்யாபிக்கப்பெற்ற திருவடிகளிலும் முற்பட்ட ‘‘அழறலர்தாமரைக்கண்ணன்’’ (திருவிரு.58) என்றும், ‘‘பெருங்கேழலார் தம்பெருங்- கண்மலர்ப்புண்டரீகம்’’ (திருவிரு.45) என்கிற திருக்கண்களானவை, (எங்குமிலக்கற்று) விஷயீகாரத்துக்கு அநுகு₃ணமான நன்மை சேதநர்பக்கல் காணாமையாலே எங்கும் இலக்கற்று,
(அன்பொடுநோக்கான திசையிலே) ‘‘அன்பொடுதென்திசைநோக்கிப் பள்ளி கொள்ளும்’’ (பெருமா.தி.1-10) என்கிறபடியே இவர்கள்பக்கல் நன்மைபெறாத- வளவிலும் இவர்கள் பக்கல் தனக்குண்டான சாபலத்தாலே ஸஸ்நேஹமாக கடாக்ஷித்த திசையிலே, (ஆக்கையில் புக்கு) ‘‘யாதானுமோராக்கையில் புக்கு’’ (திருவிரு. 95) என்றும், ‘‘ஆக்கையின் வழியுழல்வேன்’’ (திருவா. 3-2-1) என்றும், ‘‘மாறிமாறிப் பலபிறப்பும் பிறந்து’’ (திருவா.2-6-8) என்றும், ‘‘பன்மாமாயப்பல்பிறவியில் படிகின்ற யான்’’ (திருவா.3-2-2) என்றும், ‘‘பிறவிக் கடலுள் நின்றுநான் துளங்க’’ (திருவா.5-1-9) என்றும் சொல்லுகிறபடியே தே₃வாதி₃ ஶரீரங்களிலே புக்கு ‘தே₃வோஹம், மநுஷ்யோஹம்’ என்கிறபடியே அவற்றிலே ப₃த்₃த₄ராய், அவற்றின் வழியேபோய் தத்ப₂லமான ஜந்மபரம்பரைகளிலே தோள்மாறி அவற்றிலே அவகா₃ஹித்துத் தரைகாண ஒண்ணாத ஸம்ஸாரஸமுத்₃ர மத்₄யஸ்த₂ராய்க் கொண்டு நடுங்குகிற இவர்மேலே படும்படி,
‘‘எங்கும் பக்கநோக்கறியான்’’ (திருவா.2-6-2) என்கிறபடியே நாச்சிமார்வந்து திருமுலைத் தடத்தாலே நெருக்கி அணைத்தாலும் புரிந்து பாராதே ‘‘நாஸௌ புருஷகாரேண ந சாப்யந்யேந ஹேதுநா | கேவலம் ஸ்வேச்ச₂யைவாஹம் ப்ரேக்ஷே கஞ்சித் கதா₃சந’’ (பாஞ்ச.), ‘‘நிர்ஹேதுககடாக்ஷேண மதீ₃யேந மஹாமதே | ஆசார்யவிஷயீகாராத் ப்ராப்நுவந்தி பராங்க₃திம்’’ (பாஞ்ச.) என்றும் சொல்லுகிறபடியே ஸ்வேச்சை₂யாலே நிர்ஹேதுகமாகப் பண்ணப்பட்ட விஶேஷகடாக்ஷம் என்கிறார்.
ஆக இத்தால் கீழ்ச்சொன்ன அவருடைய ப்ரபா₄வத்துக்கு ஹேது ப₄க₃வத்கடாக்ஷம் என்றதாய்த்து. (94)
95. ஶ்ரமணீ-விதுர-ருஷிபத்நிகளைப் பூதராக்கின புண்டரீகாக்ஷன் நெடுநோக்கு, சாபம் இழிந்து என்னப்பண்ணுமிறே.
நித்யஸம்ஸாரியாய்ப் போந்தாரொருவர்க்கு ப₄க₃வத்கடாக்ஷத்தாலே ஸாம்ஸாரிக ஸகல– பாபங்களும் போய் இந்த ப்ரபா₄வமெல்லாம் உண்டாகக்கூடுமோ என்னில்; ஶப₃ரிமுதலானாரை பரிஶுத்₃த₄மாக்கின ஸர்வேஶ்வரனுடைய தி₃வ்யகடாக்ஷம் அவஶ்யமநுபோ₄க்தவ்யமான ஸகலபாபங்களையும் நஶிப்பிக்குமிறே என்கிறார் (ஶ்ரமணீவிது₃ர என்று தொடங்கி). (ஶ்ரமணீவிது₃ர) ‘‘ஶ்ரமணீம் த₄ர்மநிபுணாம்’’ (ரா. ஆ.1-56) என்கிறபடியே வேடுவிச்சியாயிருக்கிற ஶப₃ரியை ‘‘சக்ஷுஷா தவ ஸௌம்யேந பூதாஸ்மி ரகு₄நந்த₃ந | பாத₃மூலம் க₃மிஷ்யாமி யாநஹம் பர்யசாரிஷம்’’ (ரா.ஆ.74-12) என்று அவள்தானே ‘தேவரீருடைய அழகிய கடாக்ஷத்தினாலே என்னுடைய ப்ராப்திப்ரதி ப₃ந்த₄கங்களெல்லாம் நிஶ்ஶேஷமாகப் போகையாலே பரிஶுத்₃தை₄யானேன்’ என்று சொல்லும்படி பண்ணியும்,
ஸ்ரீவிது₃ரரை ‘‘பீ₄ஷ்மத்₃ரோணாவதிக்ரம்ய மாஞ்சைவ மது₄ஸூத₃ந | கிமர்த்த₂ம் புண்ட₃ரீகாக்ஷ பு₄க்தம் வ்ருஷலபோ₄ஜநம்’’ (பா₄ர. உத்₃.) என்று எதிரியானவன் சீறிச்- சொல்லாநிற்கச்செய்தேயும் ‘‘புண்ட₃ரீகாக்ஷ’’ என்னும்படியான திருக்கண்களாலே அவரை பரிஶுத்₃த₄ராம்படி பண்ணியும்,
(ருஷிபத்நிகளை) ‘‘வேர்த்துப்பசித்து வயிறசைந்து வேண்டடிசிலுண்ணும்போது ஈதென்று பார்த்திருந்து நெடுநோக்குக்கொள்ளும்’’ (நா.திரு.12-6) என்கிறபடியே தன்னுடைய நெடுநோக்காலே ப₄த்தவிலோசநத்தில் ருஷிபத்நிகளிலே ஒருத்தியை ‘‘தத்ரைகா வித்₄ருதா ப₄ர்த்ரா ப₄க₃வந்தம் யதா₂ஶ்ருதம்| ஹ்ருதோ₃பகூ₃ஹ்ய விஜஹௌ தே₃ஹம் கர்மநிப₃ந்த₄நம்’’ (பா₄க₃.10-23-34) என்று தன்பக்கல் ப்ராவண்யத்தாலே அப்போதே முக்தையாம்படிபண்ணியும், அதிலே சிலர் தன்னை அநுப₄விக்கும்படி– யாகவும் பண்ணின விஶேஷகடாக்ஷமானது, (சாபமிழிந்தென்னப்பண்ணுமிறே) ‘‘திங்களுமாதித்தியனும் எழுந்தாற்போல் அங்கணிரண்டுங்கொண்டெங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாபமிழிந்து’’ (திருப்பாவை 22) என்கிறபடியே ஆஹ்லாத₃– கரத்வத்தையும், அதிப்ரகாஶ கத்வத்தையும் உடைத்தாகையாலே சந்த்₃ராதி₃த்யர்களிரு– வரும் உதித்தாற்போலே இருக்கிற அழகிய திருக்கண்களாலே எங்களைப் பார்த்தருளி- னாயாகில் ஶாபோபஹதரைப்போலே, அநுப₄வித்தல்லது நஶியாத ஸாம்ஸாரிகஸகல– து₃ரிதங்களும் நிவ்ருத்தமாம் என்று சொல்லும்படி ஸகலபாபக்ஷபணத்தில் நிபுணங்க– ளாயிறே இருப்பது என்கிறார். (95)
96. கோ₃வ்ருத்₃தி₄க்கு நெரிஞ்சியைப் புல்லாக்கினவன், ஜக₃த் ஹிதார்த்தமாக ‘எனக்கே நல்லவருள்கள் என்னும்படி ஸர்வ ஸௌஹார்த்த₃ ப்ரஸாதத்தை ஒருமடைசெய்து இவரைத்தன்னாக்க, லோகமாகத் தம்மைப் போலாக்கும்படி ஆனார்.
ஸர்வேஶ்வரன் இவரை இப்படி நிர்ஹேதுகமாக கடாக்ஷித்ததுக்கு ப்ரயோஜநம் என் என்னில், லோகஹிதார்த்த₂மாக என்கிறார் (கோ₃வ்ருத்₃தி₄க்கு நெரிஞ்சியைப் புல்லாக்– கினவன் என்று தொடங்கி). ‘‘திவத்திலும் பசுநிரை மேய்ப்புவத்தி’’ (திருவா.10 3-10) என்று ஸ்வரக்ஷணத்தில் அந்வயமில்லாத கோ₃ரக்ஷணத்திலே திருவுள்ளம் உகந்திருக்கையாலே அவற்றினுடைய அபி₄வ்ருத்₃தி₄க்காக ‘‘ப்₃ருந்தா₃வநம் ப₄க₃வதா க்ருஷ்ணேநா க்லிஷ்ட கர்மணா | ஶுபே₄ந மநஸா த்₄யாதம் க₃வாம் வ்ருத்₃தி₄மபீ₄ப்ஸதா’’ (வி.பு.5-6-28) என்று நெரிஞ்சிக்காட்டை பரஸம்ருத்₃த்₄யேகப்ரயோஜநமாகத் திருவுள்ளத்தாலே ‘‘உத்பந்நந வஶஷ்பாட்₄யம்’’ (வி.பு.5-6-37) என்கிறபடியே அவற்றுக்கு போ₄க்₃யமாக ஸங்கல்பித்தவன். ‘‘நமோ ப்₃ரஹ்மண்யதே₃வாய கோ₃ப்₃ராஹ்மணஹிதாய ச | ஜக₃த்₃தி₄தாய க்ருஷ்ணாய கோ₃விந்தா₃ய நமோ நம:’’ (பா₄ரதம்) என்று பசுக்களினுடைய ரக்ஷணத்தோபாதி ஜக₃த்தினுடைய ரக்ஷணத்துக்குக் கடவன் தானாகையாலே அந்த ஜக₃த்தினுடைய ஹிதார்த்த₂மாக.
(எனக்கே நல்லவருள்கள் என்னும்படி) ‘‘எதிர்சூழல்புக்கெனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய – எம்மான் திருவிக்கிரமனை – விதி சூழ்ந்தது’’ (திருவா.2-7-6) என்று – அநேகஜந்மங்கள் நான் பிறந்த ஜந்மங்களுக்கு எதிரே பிறந்துவந்து என்னை விஷயீகரிக்கும்படி ஸர்வேஶ்வரனை க்ருபை கால்கட்டிற்று என்றும், ‘‘நல்லவருள்கள் நமக்கே தந்தருள்செய்வான்’’ (திருவா.8-6-1) என்றும் தன்பேறாக க்ருபைபண்ணி, ‘பிராட்டி திருவநந்தாழ்வான் தொடக்கமானார்க்குக் கூறுகொடாதே எனக்கும் என்னோடு ஸம்ப₃ந்த₄முடையார்க்கும் தருகிறவன்’ என்று இவர் பெறும்படி.
(ஸர்வஸௌஹார்த்த₃ப்ரஸாத₃த்தை ஒருமடைசெய்து) ‘‘ஸுஹ்ருத₃ம் ஸர்வ பூ₄தாநாம் ஜ்ஞாத்வா மாம் ஶாந்திம்ருச்ச₂தி’’ (கீ₃தை .5-29) என்கிறபடியே ஸர்வபூ₄தங்கள்– பக்கலிலும் நடக்கிற தன்னுடைய ஸௌஹார்த்த₃த்தாலுண்டான ப்ரஸாத₃த்தை இவரொருவர் பக்கலிலே ஒருமடைப்படச் செய்து விஷயீகரித்து. (இவரைத்தன்னாக்க) ‘‘என்னைத் தன்னாக்கி’’ (திருவா.7-9-1) என்கிறபடியே இவரைத் தன்னோடொத்த ஜ்ஞாநஶக்திகளை உடையராகவும், அநந்யார்ஹஶேஷபூ₄தராகவும் பண்ண, அவனாலே விஷயீக்ருதரான இவரும் லோகமாகத் தம்மைப்போலே ஆக்கும்படி ஆனார். ‘‘ஊரும் நாடுமுலகமும் தன்னைப்போல்’’ (திருவா.6-6-2) என்கிறபடியே தாம் அவதரித்த திருநகரி, அத்தோடே சேர்ந்த திருவழுதிவளநாடு, அத்தோடே சேர்ந்த பூ₄லோகம், அவற்றிலுள்ளார் அடையத் தம்மைப்போலே ப₄க₃வத₃நுப₄வைகபரராகப் பண்ணும்படி ஆனார் என்கிறார். (96)
97. அதாவது மயர்வற மதிநலமருளுகை.
(அதாவது மயர்வறமதிநலமருளுகை) அதாவது – தன்னாக்குகையாவது என்றபடி. தன்னாக்குகையாவது – தான் ‘‘மயர்வறமதிநலமருளினன்’’ என்று தாமே அருளிச்- செய்யலாம்படி அஜ்ஞாநத்தை ஸவாஸநமாகப்போக்கி ப₄க்திரூபாபந்நஜ்ஞாநத்தைத் தன்னுடைய நிர்ஹேதுகக்ருபையாலே கொடுக்கை. (97)
98. இருள் துயக்கு மயக்கு மறப்பு என்கிற அநுதய-ஸம்ஶய-விபர்யய-விஸ்ம்ருதிகளற்று, மலர்மிசை எழுகிற ஜ்ஞாநத்தைக் காதல் அன்பு வேட்கை அவா என்னும் ஸங்க காம-அநுராக- ஸ்நேஹாத்₃யவஸ்தா ₂நாமங்களோடே பரமப₄க்தி த.ஶையாக்குகை.
அஜ்ஞாநத்தைப்போக்கி ப₄க்திரூபாபந்நஜ்ஞாநத்தைக் கொடுக்கையாவது – ப₄க₃வஜ்– ஜ்ஞாநவிரோதி₄யான நாலு வகைப்பட்டிருக்கிற அஜ்ஞாநம் போய் ஜ்ஞாநப்ரஸரண– த்₃வாரமான மநஸ்ஸு அவித்₃யாதி₃களாலே திரோஹிதமாகையாலே குண்டி₂தமாய், தந்நிவ்ருத்தியிலே விகஸிதமாய்க்கொண்டு மேல்நோக்கிக் கிளருகிற ஜ்ஞாநத்தை பரமப₄க்திபர்யந்தமாக வளர்க்கை என்கிறார்.
(இருள் துயக்கு மயக்கு மறப்பென்கிற) ‘‘இருளார் வினைகெட’’ (திருவிரு.33), ‘‘துயக்கின்றித்தொழுதுரைத்த’’ (திருவா 3-1-11), ‘‘மயக்குடை மாயைகள்’’ (திருவா.1-3-10)
‘மறப்பற என்னுள்ளே மன்னினான்’’ (திருவா.1-10-10) என்கிற ஜ்ஞாநாநுத₃யமென்ன, ‘ஸ்தா₂ணுர்வா புருஷோ வா’ என்று வஸ்துவை யதா₂வாக க்₃ரஹிக்கவொட்டாதிருக்கிற ஸம்ஶயமென்ன, ரஜ்ஜுவில் ஸர்ப்பபு₃த்₃தி₄யும், ஸ்தா₂ணுவில் புருஷபு₃த்₃தி₄யும்போலே வஸ்துவை விபரீதமாக க்₃ரஹிக்கையாகிற விபர்யயமென்ன, அநுபூ₄தவிஷய ஜ்ஞாந திரோதா₄நரூபமான விஸ்ம்ருதியென்ன, இப்படிச்சொல்லுகிற அஜ்ஞாநத்தை வாஸனையோடே போக்கி.
(மலர்மிசை எழுகிற ஜ்ஞாநத்தை) ‘‘மனனகமலமற மலர்மிசை எழுதரும்’’ (திருவா. 1 -1-2) என்று ஜ்ஞாநப்ரஸரணத்₃வாரமான மநஸ்ஸைப் பற்றிக் கிடக்கிற ‘‘காம: க்ரோத₄ஶ்ச லோப₄ஶ்ச ஹர்ஷோ மாநோ மதோ₃Sக்₄ருணா | விஷாத₃ஶ்சாஷ்டம: ப்ரோக்த இத்யேதே மநஸோ மலா:’’ என்று சொல்லப்படுகிற காமக்ரோதா₄தி₃ரூபமாய் அஷ்டவித₄மான மலநிவ்ருத்தியாலே விகஸிதமாய்க்கொண்டு மேல்நோக்கிக் கிளருகிற ஜ்ஞாநத்தை. (காதல் அன்பு வேட்கை அவா என்னும்) ‘‘நொந்தாராக்காதல்’’ (திருவா 2-1-9) என்றும், ‘‘ஆராவன்பு’’ (திருவா.6 10 2) என்றும், ‘‘பெருகுமால்வேட்கை’’ (திருவா.9-6-1) என்றும், ‘‘அதனில் பெரிய என்னவா’’ (திருவா.10-10-10) என்றும் சொல்லப்படுகிற – வஸ்து த₃ர்ஶநத்திலே ப்ரத₂மபா₄வியாய், ஸ்நேஹாங்குரரூபமான ஸங்க₃மென்ன, ‘‘ஸங்கா₃த் ஸஞ்ஜாயதே காம:’’ (கீ₃தை 2-62) என்கிற அதினுடைய பரிபாகமான காமமென்ன, அதினுடைய அவிச்சே₂த₃ரூபமான அநுராக₃மென்ன, அநந்தரம் அவ்வஸ்துவை அநுப₄வித்தல்லது நிற்கவொண்ணாத அபி₄நிவேஶரூபமான ஸ்நேஹமென்ன, இவைதொடக்கமான இப்படி அவஸ்தா₂நுரூபமான நாமங்களை உடைத்தாய்க்கொண்டு பரமப₄க்திபர்யந்தமாக அபி₄வ்ருத்₃த₄மாம்படி பண்ணுகை என்கிறார்.
ஆக, இதுக்குக் கீழ், ப₄க₃வத்கடாக்ஷமடியாக இவருக்கு அஜ்ஞாநநிவ்ருத்தி பூர்வகமாய்க் கொண்டு உண்டான ப₄க்திரூபாபந்நஜ்ஞாநம் பரமப₄க்திபர்யந்தமாக அபி₄வ்ருத்₃த₄மான படி சொல்லிற்று. (98)
99. ஜந்மாந்தர ஸஹஸ்ர நற்றவங்களாலே க்யாத குலங்களிலே பிறந்து, எழுதி வாசித்து தத்த்வஜ்ஞராய், குளித்து ஓதி உருவெண்ணும் அந்தி, ஐவேள்வி அறுதொழில்களால் மிக்கு, ஊன்வாடப் பொருப்பிடைத் தாம் வருந்தி, துன்பவினைகளை விடுத்து, , விவேகஶமாதிகள் வளர, எட்டுநீக்கி, எட்டுமிட்டு, எட்டினாய பேதப்பூவில் சாந்தொடு தேவ – காரியம் செய்து உள்ளம் தூயராய், வாரிப்புன்புலவகத்தினுள் இளைப்பினை அடைவே விளக்கினைக் கண்டு, யோகநீதி நண்ணி, அறந்திகழுமறையோர் மனந்தன்னுள் அமர்ந்துறையும் அரும்பெரும் சுடரைக் ★கண்கள்சிவந்திற்படியே மனவுட்கொண்டு நிரந்தரம் மறவாமை தொடக்கறா ஸ்ம்ருதியாய், கனவில்மிக்க த₃ர்ஶநஸமமாய், ஆகத்துப்புல்கும் அத்யர்த்த ப்ரியமாய், வைகும் சிறப்புவிட்டுக் குற்றேவல் என்னாத அநந்யப்ரயோஜகமாய், வேத₃ந-உபாஸந-ஸேவா-த்₄யாநாதிகள் என்று சொல்லுமது ஸாத்₄ய ஸாதந பக்தியாக ஶாஸ்த்ர ஸித்தம்.
இனிமேல் இவருடைய இந்த ப₄க்தி கர்மஜ்ஞாநஸாத்₄யையாய்,உபாஸநரூபையான ஸாத₄நப₄க்தியோ? அன்றிக்கே ஸித்₃த₄ஸாத₄நபரிக்₃ரஹம்பண்ணினவர்கள் கைங்கர்– யோபகரணமாக அபேக்ஷித்துப்பெற்ற ப₄க்தியோ? என்னில்; உப₄யமுமன்று, ஸஹஜையாய், ஸத்தாப்ரயுக்தையான வ்ருத்த்யுபகரணப₄க்தி என்கிறார், அதில் (ஜந்மாந்தர ஸஹஸ்ர நற்றவங்களாலே) என்கிற சூர்ணையாலே உபாஸநரூபையான ப₄க்தியினுடைய வேஷத்தை அருளிச்செய்கிறார்.
(ஜந்மாந்தரஸஹஸ்ரநற்றவங்களாலே) ‘‘ஜந்மாந்தரஸஹஸ்ரேஷு தபோஜ்ஞாந- ஸமாதி₄பி₄: | நராணாம் க்ஷீணபாபாநாம் க்ருஷ்ணே ப₄க்தி: ப்ரஜாயதே’’ (லக்₄வத்ரி– ஸ்ம்ருதௌ) என்றும், ‘‘ஒன்றிநின்று நற்றவம் செய்தூழியூழிதோறெலாம்’’ (திருச்ச. 75) என்றும், ‘‘அநேகஜந்மஸம்ஸித்₃த₄:’’ (கீ₃தை .6-45) என்றும் சொல்லுகிறபடியே ஜந்மாந்தரஸஹஸ்ரங்களிலே ப₂லாபி₄ஸந்தி₄ ரஹிதமாய், ப₄க₃வத்ஸமாராத₄நரூபமான ஸத்கர்மங்களாலே, (க்₂யாதகுலங்களிலே பிறந்து) ‘‘ஶுசீநாம் ஸ்ரீமதாம் கே₃ஹே யோக₃ப்₄ரஷ்டோsபி₄ஜாயதே’’ (கீ₃தை.6-41) என்றும், ‘‘ஜநித்வாஹம் வம்ஶே மஹதி ஜக₃தி க்₂யாதயஶஸாம் ஶுசீநாம் யுக்தாநாம் கு₃ணபுருஷதத்த்வஸ்தி₂தி விதா₃ம்’’ (ஸ்தோ. ர.61) என்றும் சொல்லுகிறபடியே தத்த்வஜ்ஞாநிகளாய், பரமயோகி₃கள் என்றும் ப்ரஸித்₃த₄ரானவர்ஸ்த₂லங்களிலே வந்துபிறந்து.
(எழுதிவாசித்து தத்த்வஜ்ஞராய்) ‘‘தெரித்தெழுதி வாசித்தும் கேட்டும்’’ (நான்.திரு. 63) என்று ஶாஸ்த்ராப்₄யாஸத்துக்கு யோக்₃யமான அக்ஷரஶிக்ஷையென்ன, அந்த அக்ஷர- ராஶிக்₃ரஹணரூபமான வேதா₃ப்₄யாஸமென்ன, அந்த வேத₃த்தினுடைய அர்த்த₂– விஜ்ஞாநத்துக்குறுப்பான ஶாஸ்த்ராப்₄யாஸமென்ன, உப₄யத்தினுடையவும் அர்த்த₂– ஶ்ரவணமென்ன; அவற்றாலே பிறந்த தத்த்வஜ்ஞாநத்தையுடையராய். (குளித்து) உபாஸநாங்க₃மான நித்யகர்மாநுஷ்டா₂நத்துக்கு உபயுக்தமாக காயஶுத்₃த்₄யர்த்த₂மான ஸ்நாநத்தைப்பண்ணி. (ஓதி உருவெண்ணுமந்தி ஐவேள்வி) ஸந்த்₄யாவந்த₃ந– கா₃யத்ரீஜப-பஞ்சமஹாயஜ்ஞங்களைப்பண்ணி. (அறுதொழில்களால்மிக்கு) ‘‘அறுதொழிலந்தணர்’’ (திருவெழுகூ.)என்று யஜந-யாஜந-அத்₄யயந-அத்₄யாபந-தா₃ந– ப்ரதிக்₃ரஹங்களென்கிற ஷட்கர்மங்களாலே பூர்ணராய்.
‘‘ஊன்வாட உண்ணாதுயிர்காவலிட்டு’’ (திருமொழி 3 – 2 – 1) என்று அவிகலமான நித்ய- கர்மாநுஷ்டா₂நத்தாலே தபஶ்சர்யைக்கு யோக்₃யமானவாறே தத₃ர்த்த₂மான காய-ஶோஷணார்த்த₂மாக நிராஹாரராய், அவ்வளவிலும் ப்ராண தா₄ரணார்த்த₂மாக அப்₃ப₄க்ஷண– வாயுப₄க்ஷணங்களைப்பண்ணி. (பொருப்பிடைத்தாம் வருந்தி) ‘‘பொருப்பிடையே நின்றும் புனல்குளித்தும் ஐந்து நெருப்பிடையே நிற்க’’ (மூ.திருவ. 76) என்றும், ‘‘வீழ் கனியுமூழிலையுமென்னுமிவையே நுகர்ந்துடலம் தாம் வருந்தி’’ (பெ.திருமடல்) என்றும் சொல்லுகிறபடியே க்₃ரீஷ்மகாலங்களில் பர்வதாக்₃ரத்திலே நின்றும், பஞ்சாக்₃நிமத்₄யே நின்றும், ஶீதகாலங்களிலே அறாக்கயமான தடாகங்களிலே முழுகிக்கிடந்தும், ஜீர்ண- பர்ணப₂லாஶநராயும் இப்படி தபஶ்சர்யையாலே ஶரீரத்தை ஶோஷிப்பித்து. (துன்ப வினைகளை விடுத்து) ‘‘மேவுதுன்பவினைகளை விடுத்தும்’’ (திருவா.3-2-8) என்று கீழ்ச்சொன்ன கர்மாநுஷ்டா₂நத்தாலே ‘‘திலதைலவத்₃ தா₃ருவஹ்நிவத்’’ (ஶர.க₃த்₃யம்) என்கிறபடியே ஆத்மாவோடு பிரிக்கவொண்ணாதபடி பொருந்திக்கிடக்கிற து₃:க₂ஹேதுவான பாபங்களை ‘‘த₄ர்மேண பாபமபநுத₃தி’’ (தை. உப.) என்கிறபடியே க்ஷயிப்பித்து.
(விவேகஶமாதி₃கள் வளர) இப்படி பாபவிமோசநம் பிறந்தவாறே மநோநைர்மல்ய- ஹேதுவான விவேக- விமோகாப்₄யாஸக்ரியாகல்யாணாநவஸாதா₃நுத்₃த₄ர்ஷங்களும், ‘‘ஶமத₃மநியதாத்மா ஸர்வபூ₄தாநுகம்பீ விஷயஸுக₂விரக்தோ ஜ்ஞாநத்₃ருஷ்டி: ப்ரபந்ந: | அநியதநியதாந்நோ நைவ ருஷ்டோ ந ஹ்ருஷ்ட: ப்ரவஸித இவ கே₃ஹே வர்த்ததே யஸ்ஸ முக்த:’’ என்கிற ஶமாதி₃களும் அபி₄வ்ருத்₃த₄மாக. இதில் விவேகமாவது – ‘‘ஜாத்யாஶ்ரய நிமித்தாSது₃ஷ்டாத₃ந்நாத்காயஶுத்₃தி₄ர்விவேக:’’ (போ₃தா₄யந) என்கிற காயஶுத்₃தி₄க்கு அடியான அந்நஶுத்₃தி₄. விமோகமாவது – காமாந- பி₄ஷ்வங்க₃ம். அப்₄யாஸமாவது – ‘‘ஆரம்ப₄ணஸம்ஶீலநம் புந: புநரப்₄யாஸ:’’ என்று த்₄யாநாலம்ப₃ந வஸ்துவிலே பலகாலும் பரிஶீலநம் பண்ணுகை. க்ரியையாவது – ‘‘பஞ்சமஹாயஜ்ஞாத்₃யநுஷ்டா₂நம் ஶக்தித: க்ரியா’’ என்று நித்யகர்மங்களை வல்ல- வளவும் அநுஷ்டி₂க்கை. கல்யாணமாவது – ‘‘ஸத்யார்ஜவ த₃யாதா₃நாஹிம்ஸாநபி₄த்₄யா: கல்யாணாநி’’ என்கிற ஸத்யார்ஜவத₃யாதா₃நா ஹிம்ஸாதி₃கள். அநவஸாத₃மாவது – ‘‘ஶோகஹேதுஷு மநஸ: கே₂த₃ராஹித்யம் அநவஸாத₃:’’ என்கிறபடியே ஶோக- ஹேதுக்கள் உண்டானாலும் நெஞ்சு தளராதிருக்கை. அநுத்₃த₄ர்ஷமாவது – ‘‘தத்₃விபர்ய– யஜா துஷ்டி: – உத்₃த₄ர்ஷ:, தத்₃விபர்யய: – அநுத்₃த₄ர்ஷ:’’ என்று ஹர்ஷஹேதுக்கள் உண்டானாலும் அதிப்ரீதனாகாதொழிகை.
(எட்டுநீக்கி) ‘‘ஈனமாய எட்டுநீக்கி’’ (திருச்ச. 114) என்கிறபடியே ஆத்மாவுக்குப் பொல்லாங்கைப் பண்ணக்கடவதான ‘காம-க்ரோத₄-லோப₄-மோஹ-மத₃-மாத்ஸர்ய- அஜ்ஞாந -அஸூயை’கள் என்கிறவற்றை விட்டு. (எட்டுமிட்டு) ‘‘கந்தமாமலரெட்டு- மிட்டு’’ (திருமொழி 3 – 5 – 6), ‘‘இனமலரெட்டுமிட்டு’’ (திருமொழி 1 – 2 – 7) என்கிறபடியே ‘‘அஹிம்ஸா ப்ரத₂மம் புஷ்பம் புஷ்பமிந்த்₃ரியநிக்₃ரஹ: | ஸர்வபூ₄தத₃யா புஷ்பம் க்ஷமா புஷ்பம் விஶேஷத: | ஜ்ஞாநம் புஷ்பம் தப: புஷ்பம் த்₄யாநம் புஷ்பம் ததை₂வ ச | ஸத்யமஷ்டவித₄ம் புஷ்பம் விஷ்ணோ: ப்ரீதிகரம் ப₄வேத்’’என்கிறபடியே அஹிம்ஸாதி₃களான அஷ்டவித₄ புஷ்பங்களை இட்டு. இந்த அஹிம்ஸாதி₃கள் திருவுள்– ளத்துக்கு உகப்பாகையாலே புஷ்பமென்கிறது.
(எட்டினாய பேதம்) ‘‘எட்டினாய பேதமோடிறைஞ்சி’’ (திருச்ச.77) என்கையாலே ‘‘மநோபு₃த்₃த்₄யபி₄மாநேந ஸஹ ந்யஸ்ய த₄ராதலே | கூர்மவச்சதுர: பாதா₃ந் ஶிரஸ்– தத்ரைவ பஞ்சமம்’’ என்றும், ‘‘உரஸா ஶிரஸா த்₃ருஷ்ட்யா வசஸா மநஸா ததா₂ | பத்₃ப்₄யாம் கராப்₄யாம் ஜாநுப்₄யாம் ப்ரணாமோஷ்டாங்க₃ ஈரித:’’ என்றும், ப₄க்₃நாபி₄– மாநனாய் விழுகையும், மநோபு₃த்₃தி₄களுக்கு ஈஶ்வரனையே விஷயமாக்குகையும், பாணித்₃வயமும், பாத₃த்₃வயமும், ஶிரஸ்ஸும் பூமியிலே பொருந்துகையாகிற அஷ்டாங்க₃ப்ரணாமத்தைப் பண்ணி. (பூவில் சாந்தொடு தேவகாரியம் செய்து) ‘‘பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து’’ (திருவா.5-2-9), ‘‘சாந்தொடு விளக்கம் தூபம் தாமரைமலர்கள் நல்ல ஆய்ந்துதொண்டு’’ (திருவா.10-2-10) என்று ஸமாராத₄நோபகரணங்கள் மிகுத்துக்கொண்டு அநந்யப்ரயோஜநராய், ‘‘தேவகாரியம் செய்து’’ (பெரியா. திரு.4-4-1) என்கிறபடியே ப₄க₃வத்ஸமாராத₄நத்தைப்பண்ணி.
(உள்ளம் தூயராய்) ‘‘ஒன்றிநின்று நற்றவம் செய்தூழியூழிதோறெலாம் நின்று நின்றவன் குணங்களுள்ளி உள்ளம் தூயராய்’’ (திருச்ச. 75) என்கிறபடியே நித்ய கர்மாநுஷ்டா₂நம் முதலாக ப₄க₃வத்ஸமாராத₄நமெல்லையாக ப₂லஸங்க₃கர்த்ருத்வத்யாக₃ பூர்வகமாக உண்டான கர்மாநுஷ்டா₂நத்தாலும் ப₄க₃வத்₃கு₃ணாநுஸந்தா₄நத்தாலும் ‘‘கஷாயே கர்மபி₄: பக்வே ததோ ஜ்ஞாநம் ப்ரகாஶதே’’ என்கிறபடியே கர்மாநுஷ்டா₂நத்தாலே ம்ருதி₃தகஷாயனானவாறே ஜ்ஞாநவிகாஸத்துக்கடியான மநோநைர்மல்யத்தை உடையராய்.
(வாரிப்புன்புலவகத்தினுள்) ‘‘வாரிசுருக்கி மதக்களிறைந்தினையும் சேரி திரியாமல் செந்நிரீ,’’ (மு.திருவ.47) என்றும், ‘‘புன்புலவழியடைத்தரக்கிலச்சினை செய்து நன்புல
வழிதிறந்து ஞானநற்சுடர்கொளீஇ’’ (திருச்ச.76) என்றும், ‘‘ஐம்புலனகத்தினுள் செறுத்து’’ (திருவெழு.) என்றும், ‘‘ப்ரகீர்ணே விஷயாரண்யே ப்ரதா₄வந்தம் ப்ரமாதி₂நம் | ஜ்ஞாநாங்குஶேந க்₃ருஹ்ணீயாத்₃வஶ்யமிந்த்₃ரியத₃ந்திநம்’’ என்கிறபடியே இந்த்₃ரியங்க– ளாகிற மத₃முதி₃தமான ஆனைகளை த்யாஜ்யோபாதே₃யவிவேகஜ்ஞாநமாகிற அங்குஶத்– தாலே வணக்கி, விஷயங்களாகிற சேரியில் திரியாதபடி ப₄க₃வத்₃விஷயமாகிற யதா₂–
ஸ்தா₂நமாகிற தறியிலே சேர்த்தென்றும், இந்த்₃ரியங்களை க்ஷுத்₃ரவிஷயங்களிலே போகாதபடி வாஸனையோடே விடுவித்து ப்ராப்தவிஷயத்திலே மூட்டி ஜ்ஞாநமாகிற ப்ரகாஶமான தீ₃பத்தைக் கொளுத்தி. இப்படி நிக்₃ருஹீதேந்த்₃ரியக்₃ராமராய், (இளைப்பினை- யடைவே விளக்கினைக்கண்டு) ‘‘இளைப்பினை இயக்கம் நீக்கி இருந்து முன்னிமை- யைக்கூட்டி அளப்பிலைம்புலனடக்கி அன்பவர் கண்ணே வைத்துத் துளக்கமில் சிந்தை செய்து தோன்றலும் சுடர்விட்டாங்கே விளக்கினை விதியிற்காண்பார்’’ (திருக்குறு. 18) என்றும் சொல்லுகிறபடியே யோகா₃ப்₄யாஸவிரோதி₄யாயிருந்துள்ள யாதாயாதங்களை மாற்றி ஓராஸநவிஶேஷங்களிலே இருந்து நாஸாக்₃ரந்யஸ்தலோசநனாய், இந்த்₃ரியங்களை நியமித்து த்₄யேயவஸ்துவின் பக்கலிலே நிரதிஶயமான ஸ்நேஹத்தைப்பண்ணி தத₃நந்தரம் ஸ்வயம்ப்ரகாஶமாய்க் கொண்டு தோற்றுகிற ஆத்ம ஸ்வரூபத்தை ஶாஸ்த்ரோக்தப்ரகாரத்திலே ஸாக்ஷாத்கரித்து.
(யோகநீதிநண்ணி) என்று யோகம் தலைநின்று. (அறந்திகழும் மறையோர் மனந்தன்னுள் அமர்ந்துறையும் அரும்பெருஞ்சுடரை) ‘‘மறந்திகழுமனமொழித்து வஞ்சமாற்றி ஐம்புலன்களடக்கி இடர்ப்பாரத்துன்பம் துறந்து இருமுப்பொழுதேத்தி எல்லையில்லாத் தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்டரான அறந்திகழுமனத்தவர்தம் கதியை’’ (பெருமாள் திரு 1-7) என்றும், ‘‘மறையோர்மனந்தன்னுள்’’ (திருமொழி7-3-7) என்றும், ‘‘மாதவமானவர்தங்கள் சிந்தை’’ (திருமொழி2-1-1) என்றும், ‘‘ஆரமார்வன் அரங்கனென்னுமரும்பெருஞ்சுடரொன்றினைச் சேரும் நெஞ்சினராகி’’ (பெருமாள்திரு.2-7) என்றும் சொல்லுகிறபடியே பரமயோகி₃களுடைய ஹ்ருத₃யங்களிலே அதிப்ர– காஶமான விக்₃ரஹத்தோடே எழுந்தருளியிருக்கிற ஸர்வேஶ்வரனை.
(கண்கள்சிவந்திற்படியே மனவுட்கொண்டு) ‘‘கண்கள்சிவந்து’’ (திருவா.8-8-1) என்கிறபாட்டின்படியே அவயவஶோபை₄யோடும் ஆப₄ரணஶோபை₄யோடும் கூடி காளமேக₄நிப₄ஶ்யாமமாயிருக்கிற விலக்ஷணவிக்₃ரஹத்தை ‘‘கற்றவர்தந்தம் மனவுட்- கொண்டு’’ (திருமொழி.7-3-1) என்கிறபடியே ஹ்ருத₃யகமலத்திலே த்₄யாநம்பண்ணி. (நிரந்தரம் மறவாமை) ‘‘நிரந்தரம் நினைப்பதாக’’ (திருச்ச. 101) என்றும், ‘‘மன்னு சேவடிக்கே மறவாமை’’ (திருமொழி.3-5-7) என்றும் சொல்லுகிறபடியே அந்த த்₄யாநத்துக்கு விஸ்ம்ருதியும் விச்சே₂த₃முமின்றிக்கே. (துடக்கறா ஸ்ம்ருதியாய்) ‘‘சோர்விலாத காதலால் துடக்கறா மனத்தராய்’’ (திருச்ச.78) என்கிறபடியே ஸர்வகாலமும் விஷயாந்தரங்களால் அபஹ்ருதமாகாத ப்ரேமத்தை உடையராகையாலே தத்ஸம்ஶ்லேஷவியோகை₃க ஸுக₂து₃:க₂ராய், ப₄க₃வத்ஸ்ம்ருதிஸந்ததிரூபேண செல்லாநின்றால் விச்சே₂த₃மில்லாத த்₄ருவாநுஸ்ம்ருதிரூபமாய், ‘‘ஸத்த்வஶுத்₃தௌ₄ த்₄ருவா ஸ்ம்ருதி: ஸ்ம்ருதிலம்பே₄ ஸர்வக்₃ரந்தீ₂நாம் விப்ரமோக்ஷ:’’ (சா₂ந்தோ₃..7-26-2) என்னக்கடவதிறே. (கனவில்மிக்க த₃ர்ஶநஸமமாய்) ‘‘கனவில் மிகக்கண்டேன்’’ (இ.திருவ.81) என்கிறபடியே அந்த ஸ்ம்ருதி ப்ரத்யக்ஷ ஸமாநாகாரையாய். (ஆகத்துப் புல்கும் அத்யர்த்த₂ப்ரியமாய்) ‘‘ஆகத்தணைப்பார் அணைவரே’’ (மு.திருவ.32) என்றும், ‘‘ஆர்வம் புரிய பரிசினால் புல்கில்’’ (மு.திருவ.50) என்றும் சொல்லுகிறபடியே அந்த த₃ர்ஶநஸமாநாகாரையான ஸ்ம்ருதிதான் அந்த த்₄யேயவஸ்துவை ஹ்ருத₃யகமலத்திலே அணைக்கும்படி ஸ்மர்த்தவ்யவிஷய ஸாரஸ்யத்தாலே தானும் அத்யர்த்த₂ப்ரியரூபையாய்.
(வைகும் சிறப்புவிட்டுக் குற்றேவலென்னாத அநந்யப்ரயோஜநமாய்) ‘‘நின்புகழில் வைகும் தம் சிந்தையிலும் மற்றினிதோ நீ அவர்க்கு வைகுந்தமென்றருளும் வான்’’ (பெரியதிருவ. 53) என்றும், ‘‘உலகுபடைத்துண்டவெந்தை’’ (திருவாசி.2) என்று தொடங்கி, ‘‘அமுதவெள்ளத்தானாம் சிறப்புவிட்டு ஒருபொருட்கசைவோரசைக – நல்வீடு பெறினும் கொள்வதெண்ணுமோ தெள்ளியோர் குறிப்பே’’ என்றும், ‘‘மேலால் பிறப்பின்மை பெற்றடிக்கீழ்க் குற்றேவலன்று மறப்பின்மை யான் வேண்டும் மாடு’’ (பெரியதிருவ. 58) என்றும் சொல்லுகிறபடியே இவ்வநுஸந்தா₄நரஸத்தாலே தே₃ஶ– விஶேஷத்தில் அநுப₄வத்தை உபேக்ஷிக்கும்படி தானே பரமப்ரயோஜநமாம்படி இருக்கையாலே அநந்யப்ரயோஜநமாய்.
(வேத₃ந-உபாஸந-ஸேவா-த்₄யாநாதி₃களென்னுமவை) வேத₃நம், உபாஸநம், ஸேவை, த்₄யாநம், த்₄ருவாநுஸ்ம்ருதி, த₃ர்ஶநஸமாநாகாரம், ப₄க்தி என்றும் சொல்லப் படுகிறவை– யாகையாலே இந்த ப₄க்தி ஸாத்₄யஸாத₄நப₄க்தியாக ஶாஸ்த்ரஸித்₃த₄ம். ‘‘உப₄ய– பரிகர்மிதஸ்வாந்தஸ்ய ஐகாந்திகாத்யந்திக ப₄க்தியோகை₃க லப்₄ய:’’ (ஆத்ம ஸித்₃தி₄) என்று கர்மஜ்ஞாநஸம்ஸ்க்ருதாந்த:கரணனுக்குப் பிறக்குமது ஒன்றாகையாலே ஸாத்₄யமாய், ப₄க₃வத்ப்ரஸாத₃நோபாயமாகையாலே ஸாத₄நமான ப₄க்தி என்று ஶாஸ்த்ரங்களாலே சொல்லப்பட்டதென்கிறார். ஆக இத்தால் சேதநனாலே ஸாத்₄யமாய், உபாயரூப- மான ப₄க்திவிஶேஷம் சொல்லிற்று. (99)
100. ஸ்வீக்ருத ஸித்த₄ ஸாதநர் இத்தை ஸாத்₄யமாக இரக்க, ப்ராப்திக்கு முன்னே ஸித்தி₄க்கும்.
இனி உபேயமான கைங்கர்யோபகரணமாய், ப்ரார்த்₂யமான ப₄க்திவிஶேஷம் சொல்லுகிறது மேல் (ஸ்வீக்ருதஸித்₃த₄ஸாத₄நர் என்று தொடங்கி). (ஸ்வீக்ருதஸித்₃த₄– ஸாத₄நர்) ‘‘த்வத்பாத₃மூலம் ஶரணம் ப்ரபத்₃யே’’ (ஸ்தோ.ர.22) என்றும், ‘‘ஸ்ரீமந்– நாராயணசரணாரவிந்த₃ம் ஶரணமஹம் ப்ரபத்₃யே’’ (ஶர.க₃த்₃யம்) என்றும், ‘‘லோக– விக்ராந்தசரணௌ ஶரணம் தேSவ்ரஜம் விபோ₄’’ (ப₄வி.பு.) என்றும் சொல்லுகிறபடியே இப்படி ஸித்₃த₄ஸாத₄நஸ்வீகாரம் பண்ணினவர்கள் இத்தை ஸாத்₄யமாக இரக்க, இந்த ப₄க்தி கைங்கர்யோபகரணமாய்க்கொண்டு ப்ராப்யாந்தர்க₃தமாகையாலே ‘‘ப₄கவந் ப₄க்திமபி ப்ரயச்ச₂ மே’’ (ஸ்தோ.ர.) என்றும், ‘‘பரப₄க்திபரஜ்ஞாநபரமப₄க்த்யேக– ஸ்வபா₄வம் மாம் குருஷ்வ’’ (ஶர.க₃த்₃யம்) என்றும் சொல்லுகிறபடியே இந்த ப₄க்தியை ஸாத்₄யமாக அவன்பக்கலிலே அபேக்ஷிக்க, ப்ராப்திக்கு முன்னே ஸித்₃தி₄க்கும், இது கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியாகையாலே ப₄க₃வத்ப்ராப்திக்குமுன்னே ஸித்₃தி₄க்கும் என்கிறார். (100)
101. இது உப₄யமும் அன்றிக்கே, அறியாக்காலத்தே ஒக்கப் பிறந்து தழுவி நின்று, கட்டமே நோயாய், உலர்த்தி, வீழ்ந்து அலப்பாய், தியாக ஸ்வீகார நிஷ்டாஹாநிகள் ஆக்கி, ஸத்தா போக விருத்தி உபகரணமாவது ஒன்று..
(இது உப₄யமுமின்றிக்கே) இவருடைய ப₄க்தி உபாஸகர் கர்மஜ்ஞாநங்களாலே ஸாதி₄த்து ப₄க₃வத்ப்ரஸாத₃த்துக்கு ஸாத₄நமாகக் கொள்ளுகிற ப₄க்தியுமன்றிக்கே, ஸித்₃த₄ஸாத₄ந– பரிக்₃ரஹம் பண்ணினவர்கள் கைங்கர்யோபகரணமாக அபேக்ஷித்துப் போருகிற ப₄க்தியு– மன்றிக்கே; (அறியாக்காலத்தே ஒக்கப்பிறந்து) ‘‘அறியாக்காலத்துள்ளே அடிமைக்கண் அன்புசெய்வித்து’’ (திருவா.2-3-3) என்றும், ‘‘பா₃ல்யாத்ப்ரப்₄ருதி ஸுஸ்நிக்₃த₄:’’ (ரா.) என்றும் சொல்லுகிறபடியே அறிவு நடையாடுகைக்கு யோக்₃யதை யில்லாத அதிபா₃ல்யத்திலே கைங்கர்யத்தைப் பெற்றல்லது நிற்கவொண்ணாத அதிமாத்ர– ப்ராவண்யத்தை விளைத்தான் என்றுசொல்லும்படி ‘‘ஸஹஜப₄க்திரஸ்மாகம்’’ என்று ஸஹஜையாய், ‘‘தழுவிநின்றகாதல்’’ (திருவா.4-7-11) என்று உடன்வந்தியாய், ‘‘கட்டமே காதல்’’ (திருவா.7-2-4) என்றும், ‘‘வேட்கைநோய்கூர’’ (திருவா.9-6-7) என்றும் அபி₄நிவேஶாநுகு₃ணமாக அநுப₄வம் ஸித்₃தி₄யாமையாலே இது கஷ்டம் என்று சொல்லும்படி வ்யாதி₄ரூபமாகையாலே பா₃த₄கமாய், ‘‘வேவாரா வேட்கைநோய் மெல்லாவி உள்ளுலர்த்த’’ (திருவா.2-1-10) என்றும், ‘‘உன்னைக்காணுமவாவில் வீழ்ந்து’’ (திருவா.5-7-2) என்றும், ‘‘உன்னைக்காண்பான் நானலப்பாய்’’ (திருவா.5-8-4) என்றும் அஶோஷ்யமான ஆத்மவஸ்துவை ஶோஷிப்பித்து, அபி₄நிவேஶத்திலே ஆழ்ந்து, காணவேணுமென்று அலமாக்கப்பண்ணி. (த்யாக₃ஸ்வீகாரநிஷ்டா₂ஹாநி– களாக்கி) த்யஜித்த உபாயத்திலே மூட்டி, த்யாக₃நிஷ்டை₂யைக்குலைத்து, ஸக்ருத்- ஸ்வீகாரம் அமைந்திருக்க ★நோற்ற நோன்பு தொடங்கி, அடுத்தடுத்து ப்ரபத்தி பண்ணுகையாலே ஸ்வீகாரத்தில் நிஷ்டை₂யைக்குலைத்து. (ஸத்தாபோ₄க₃வ்ருத்த்யுபகரணமானதொன்று) ‘‘நாகிஞ்சித் குர்வதஶ் ஶேஷத்வம்’’ (வேதா₃.ஸம்) என்று ஶேஷத்வைக- நிரூபணீயமான இவருடைய ஸத்தை கிஞ்சித்காரத்தாலேயாகையாலே இவருடைய ஸத்தாஹேதுவாய், ‘‘தனக்கேயாக’’ (திருவா. 2-9-4) என்றும், ‘‘உன்தன் திருவுள்ளமிடர்கெடுந்தோறும்’’ (திருவா. 10-3-9) என்றும் ‘‘கதா₃ த்₃ரக்ஷ்யதி மாம் பதி:’’ (ரா.ஸு.) என்றும், ‘‘கதா₃ ப்ரஹர்ஷயிஷ்யாமி’’ (ஸ்தோ.ர. ) என்றும், ‘‘உன்னாகமுற்றுமகத்தடக்கி ஆவியல்லல் மாய்த்ததே’’ (திருவா.4-3-3) என்றும் ஸர்வேஶ்வரனை ப₂லியாகச் சொல்லுகையாலே அவனுக்கு போ₄க₃மாயிருக்கிற கைங்கர்யத்துக்கு உபகரணமாயிருப்பதொரு ப₄க்தி என்கிறார். ஆக, இதுக்குக்கீழ் இவருடைய பரப₄க்தி ஸாதி₄த்துப் பெற்ற ப₄க்தியுமன்று, அபேக்ஷித்துப் பெற்ற ப₄க்தியுமன்று, ஸஹஜையாய், ஸத்தாப்ரயுக்தையான ப₄க்தி என்றார். (101)
102. இடகிலேன் நோன்பறிவிலேன் கிற்பன் கீழ்நாள்கள் என்கையாலே ஸாதநத்ரயபூர்வாப்யாஸஜமல்ல.
இவருடைய பரப₄க்தி ஜந்மாந்தரங்களிலே கர்மஜ்ஞாநாதி₃களை அநுஷ்டி₂த்து தத்ப₂லமாய்க்கொண்டு வந்ததானாலோ என்னில், ஜந்மாந்தரங்களில் அவை தமக்கு இல்லை என்னுமிடம் தாமே அருளிச்செய்தார் என்கிறார் (இடகிலேன் இத்யாதி₃). ‘‘இடகிலேன் ஒன்றட்டகில்லேன் ஐம்புலன் வெல்லகில்லேன் கடவனாகிக்காலந்தோறும் பூப்பறித்தேத்த கில்லேன்’’ (திருவா.4-7-9) என்று ப₄க₃வத்₃விபூ₄திபூ₄தர் என்று அந்ந பாநாதிகளை பூ₄தங்களுக்கு இட்டுக்கொடுபோரில் கர்மயோக₃த்திலே நிவேஶிப்பிக்கலாம். இந்த்₃ரியஜயம் பண்ணினேனாகில் ஜ்ஞாநயோக₃த்திலே நிவேஶிப்பிக்கலாம். ஶாஸ்த்ரோக்தமான ப்ரகாரங்களிலே புஷ்பாத்₃யுபகரணங்களைக் கொண்டு ப₄க₃வத் ஸமாராத₄நம் பண்ணினேனாகில் ப₄க்தியோக₃த்திலே நிவேஶிப்பிக்– கலாம். இவை இத்தனையும் செய்யப் பெற்றிலேன் என்றும், ‘‘நோற்றநோன்பிலேன் நுண்ணறிவிலேன்’’ (திருவா.5-7-1) என்று ப₂லத்தோடே வ்யாப்தமாய் இருப்பதொரு கர்மத்தை அநுஷ்டி₂க்கப்பெற்றிலேன்; ஆத்மயாதா₂த்ம்யஜ்ஞாநபூர்வகமான ப₄க₃வஜ்ஜ்ஞாநத்தை உடையேனல்லேன்; ஆக இவை இல்லாமையாலே உப₄ய– ஸாத்₄யமான ப₄க்தியை உடையேனல்லேன் என்றும். (கிற்பன் கீழ்நாள்கள் என்கை- யாலே) ‘‘கிற்பன் கில்லேன் என்றிலன் முனநாளால்’’ (திருவா.3-2-6) ‘விஹிதத்தைச் செய்து அவிஹிதத்தைத்தவிர்’ என்கிறவிடத்தில் அப்படிச் செய்கிறேன் என்னாதே விஹிதத்தைத்தவிர்ந்து அவிஹிதத்தைச் செய்து போந்தேன்நெடுங்காலம் என்றும்.
‘‘ஆழியங்கை அம்மானை ஏத்தாதயர்த்து – தீவினையேன் வாளாவிருந்தொழிந்தேன் கீழ்நாள்களெல்லாம்’’ (பெரியதிருவ.82) என்றும், ஸர்வாதி₄கனான ஸர்வேஶ்வரனை மங்களாஶாஸநம் பண்ணாதே விஸ்மரித்து அநாதி₃காலம் வ்யர்த்த₂மே இருந்தேன் என்கையாலும், இப்படி ஜந்மாந்தரங்களில் தமக்கு கர்மஜ்ஞாநாதி₃களில் அந்வயமில்லை என்று அருளிச்செய்கையாலே. (ஸாத₄நத்ரயபூர்வாப்₄யாஸஜமல்ல) ஜந்மாந்தரங்களில் கர்மஜ்ஞாநப₄க்திகளை அநுஷ்டி₂த்து தத்ப₂லமாய் வந்த ப₄க்தியன்று என்கிறார். (102)
103. இப்பிறப்பே சிலநாளில் என்றபோதே இரண்டும் கழியும்.
ஜந்மாந்தரங்களிலே ஸாதி₄த்துப்பெற்றதன்றாகிலும் இந்த ஜந்மத்திலே சிலநாள் ஸாதி₄த்துப்பெற்றதானாலோ என்னில், அதுவுமல்ல என்கிறார் (இப்பிறப்பே சிலநாளில் என்று). ‘‘குறிக்கொள் ஞானங்களால் எனையூழிசெய்தவமும் கிறிக்கொண்டிப்பிறப்பே சிலநாளிலெய்தினன் யான்’’ (திருவா.2-3-8) என்று யமநியமாத்₃யவஹிதராய்க் கொண்டு ஸம்பாதி₃க்கவேண்டும் வேத₃ந-த்₄யாந-உபாஸநாத்₃யவஸ்தா₂விஶேஷங்களான ஜ்ஞாநங் களாலே அநேககல்பம் கூடி ஶ்ரவணமாய், மநநமாய், த்₄ருவாநுஸ்ம்ருதியாய், வரக் கடவதான தப:ப₂லத்தை ஒரு யத்நமின்றியிலே இருக்க, நல்விரகனான அவனாலே இஜ்ஜந்மத்திலே, அதுதன்னிலும் அல்பகாலத்திலே பெற்றேனென்கையாலே ஜந்மாந்தர ஸாத்₄யமுமல்ல; இஜ்ஜந்மத்திலும் ஸாதி₄த்து வந்ததுமல்ல என்கிறார். (103)
104. பெரும்பாழில் க்ஷேத்ரஜ்ஞன் பெருஞ்செய் கலியாரேவ ஆளும் வன்குறும்பர் குடியேறிப்பெருங்குடியும் தங்கள் கருத்துள்ளேயாக்கிப் படிந்துண்ணும் போகத்தே தூராதே பொறுக்கொணாப் போகத்துக்குக் காவல்செய்து குமைத்துத் திரித்து வீழ்த்தி வலித்தெற்றி அருவியறுத்துக் கடனாயின இறுப்பிக்கப் பாழ்த்த விதியானவாறே தன்பால் மனம் வைப்பிப்பதாகத் தேய்ந்தறமன்னி ஒள்வாளுருவி வினைத் தூற்றை வேரறுவித்துத் தீக்கொளீஇக் கவ்வை எருவிட்டு அமுதவாறு தலைப்பற்றி ஈரியாய்க்கசிந்ததிலே ஈரநெல் வித்தி எழுநாற்றுக்களையையும் வேர்முதல்மாய்த்துப் பட்டிச்சேவதக்கி மீதுகொள்ளாமல் குறிக் கொள்வித்துக் கடல்புரையவிளைந்து தலை வணக்கினவாறே நாளுநாள் கோட்குறையாக நின்றாரறியாமல் குந்தங்கொண்டு ஆராமையுண்டு காலக்கழிவாலே நிலத்துகாமல் பற்றறுத்துத் தண்டாலடித்துப் பதரறுத்தசுப் போர்த்த தோல்விடுத்து ஸூக்ஷ்மவொட்டும் நீரிலேகழுவி வேறோர் கலத்திட்டு பைந்தொடிமடந்தையரைக் கொண்டு ஷட்குணரஸாந்நமாக்கி வானோர்க்காராவமுதானவாறே முற்றுமுண்ண முன்னம் பாரித்து உழுவதோர் நாஞ்சில் கொண்டு பெருக முயலும் பத்தியுழவன் க்ருஷி பலமிறே.
ஆனால் இவர்க்கு இந்த ப₄க்தி உண்டாகைக்கு ஹேது ஏதென்னில் ப₂லபோ₄க்தாவான ஸர்வேஶ்வரனுடைய க்ருஷிப₂லம் என்னுமிடத்தை க்ஷேத்ரமும், கர்ஷகனும், க்ருஷியும், தத்ப₂லமுமான வேஷத்தாலே அருளிச்செய்கிறார் (பெரும்பாழில் க்ஷேத்ரஜ்ஞன் என்று தொடங்கி). (பெரும்பாழில் க்ஷேத்ரஜ்ஞன்) ‘‘முடிவில் பெரும்பாழேயோ’’ (திருவா.10-10-10) என்று அபரிச்சே₂த்₃யமாய், சேதநர்க்கு போ₄க₃ மோக்ஷங்களை விளைத்துக்கொள்ளுகைக்கு நிலமான மூலப்ரக்ருதியிலே ப₃த்₃த₄னான சேதநன், ‘‘நெஞ்சப் பெருஞ்செய்யுள்’’ (திருவா.5-3-4) என்று ப₄க₃வத்₃ப₄க்திக்கு விளைநிலமான சேதநருடைய நெஞ்சாகிற பெரும் செய்யிலே.
(கலியாரேவ) ‘‘ஏவினார் கலியார் நலிக’’ (திருமொழி. 1-6-8) என்று கலியுகமாகிற வறியன் தன் ப₄டரான இந்த்₃ரியங்களை ப்ரேரிக்க. (ஆளும் வன்குறும்பர்) ‘‘மன- மாளுமோரைவர் வன்குறும்பர்’’ (பெ.திருவ.51) என்று ப்ரதா₄நகரணமான மநஸ்ஸையும் தங்கள்வஶமாக்கிக்கொண்டு ஆளுமவர்களுமாய் முன்கைமிடக்கருமாய் அநியாம்– யருமான அத்₃விதீயரை வரும் ‘‘பொய்யாலைவரென் மெய்குடியேறி’’ (திருமொழி 7-7-9) என்கிறபடியே குடியேறி.
(பெருங்குடியும் தங்கள் கருத்துள்ளேயாக்கி) ‘‘ஐம்புலன்கருதும் கருத்துளே திருத்தினேன் மனத்தை’’ (திருமொழி.1-1-8) என்கிறபடியே ப்ரதா₄நகரணமான மநஸ்ஸாகிற பெருங்குடியும் தங்கள் கருத்துள்ளேயாம்படிபண்ணி. (படிந்துண்ணும் போகத்தே தூராதே) ‘‘புலம்படிந்துண்ணும் போகமே பெருக்கிப்போக்கினேன்’’ (திருமொழி.1-6-2) என்று ஶப்₃தா₃தி₃விஷயங்களிலே அவகா₃ஹித்து பு₄ஜிக்கிற போ₄க₃த்தை அபி₄வ்ருத்₃த₄மாக்கி. ‘‘தூராக்குழி’’ (திருவா.5-8-6) என்கிறபடியே அத்தால் ஒருகாலும் பர்யாப்தி பிறவாதே. (பொறுக்கொணாப்போகத்துக்குக் காவல் செய்து) ‘‘பொறுத்துக் கொண்டிருந்தால் பொறுக்கொணாப்போகமே நுகர்வான் புகுந்து’’ (திருமொழி.7-7-7) என்று சேதநனாலே பொறுக்கப்போகாத ஶப்₃தா₃நுப₄வத்துக்கு, ‘‘கடியார் காளையர் ஐவர் புகுந்து காவல்செய்த’’ (திருமொழி.7-7-8) என்று நெஞ்சில் க்ரௌர்யத்தை உடையராய், பா₃தி₄க்க பா₃தி₄க்க மேலே இளகிப்பதித்து வருகிற அந்த விஷயங்கள் {இந்த்₃ரியங்கள்} கீழேசொன்ன போ₄க₃த்துக்கு விருத்₃த₄மான ப₄க₃வத்– ஸம்ரம்ப₄மாகிற ராஜபரிகரம் புகுராதபடி காவல்செய்து.
(குமைத்துத்திரித்து வீழ்த்தி வலித்தெற்றி அருவியறுத்தென்றும்) ‘‘கூறைசோறிவை தாவென்று குமைத்துப்போகார்’’ (திருமொழி.7-7-9) என்றும், ‘‘செக்கிலிட்டுத் திரிக்கும் ஐவரை’’ (திருவா.7-1-5) என்றும், ‘‘கொடுவன்குழியனில் வீழ்க்குமைவரை’’ (திருவா.7-1-9) என்றும், ‘‘திசைதிசை வலித்தெற்றுகின்றனர்’’ (திருவா.7-1-10) என்றும், ‘‘அருவித்தின்றிட அஞ்சி நின்னடைந்தேன்’’ (திருமொழி.7-7-1) என்றும், ‘‘ஐவரறுத்துத்தின்றிட அஞ்சி’’ (திருமொழி .7-7-7) என்றும் சொல்லுகிறபடியே இப்படி ஆராய்ச்சியற்றுத் தங்கள் வஶமானவாறே பலபடியாலும் தண்டித்து. (கடனாயின இறுப்பிக்க) ‘‘பொருளின்பமென இரண்டுமிறுத்தேன் ஐம்புலன்கட்கடனாயின’’ (திருமொழி. (6-2-1) என்று ஶ்ரோத்ராதி₃ களுக்கு ப்ராப்தமாயிருக்கிற அர்த்த₂காமங்கள் என்று சொல்லப்படுகிற இரண்டையும் கடமையிறுப்பாரைப்போலே அவற்றாலே பரிபூ₄தனாய்க் கொடுத்துப்போந்தேன் என்று அவற்றுக்கு ப்ராப்தங்களை இறுப்பித்துக் கொள்ள.
(பாழ்த்த விதியானவாறே) ‘‘வாழ்த்தி அவனடியைப் பூப்புனைந்து நின் தலையைத் தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாத பாழ்த்தவிதி’’ (பெ.திருவ. 84) என்று இப்படி இந்த்₃ரிய பாரவஶ்யதையாலே ஒரு கரணமும் ப₄க₃வத்₃விஷயத்தில் ப்ரவணமாகாத படியாய், நெஞ்சில் ப₄க₃வத்ஸ்மரணலேஶமுமின்றிக்கே ஈஶ்வரன் எடுக்கைக்குப் பற்றாசாக ஒரு நன்மையும் இல்லாதபடியானவாறே. (தன்பால் மனம் வைப்பிப்பதாகத் தேய்ந்தற மன்னி) ‘‘தன்பால் மனம் வைக்கத்திருத்தி’’ (திருவா.1-5-10) என்கிறபடியே இந்த்₃ரியங்களாலே கவரப்பட்டதான மனத்தைத் தன் வஶமாக்குவதாக, ‘‘எனதேழை நெஞ்சாளும் திருந்தாத ஓரைவரைத்தேய்ந்தறமன்னி’’ என்று பிடித்தார்க்குப் பிழையாதபடி ஆசையுடையதான நெஞ்சைத் தங்கள் வஶமாக்கிக்கொண்டு ஆளுகிற அதி₄கரான இந்த்₃ரியங்களாகிற கள்ளர் பள்ளிகளைத் தான் போக்குவரத்தாயிருக்கில் ஜயிக்கவொண்ணாதென்று அவர்கள் க்ஷயித்து நஶிக்கும்படி ஸ்தா₂வரப்ரதிஷ்டை₂யாயிருந்து.
(ஒள்வாளுருவி வினைத்தூற்றை வேரறுவித்து) இப்படி இந்த்₃ரியங்களாகிற திருடர்களாலே ஆக்ரமிக்கப்படுகையாலே பாபமாகிற தூறுமண்டின அந்த இடத்தை, ‘‘நீ பணித்த அருளென்னும் ஒள்வாளுருவி எறிந்தேன்’’ (திருமொழி.6-2-4) என்று ‘‘மாமேகம்’’ என்ற என்னுடைய அருளாலேயே உனக்கு உய்வதற்குக் காரணமாகப் பயிற்சி செய் என்று சொல்ல, ‘‘ஐயம் நீங்கினவனாய் நிலைத்து நிற்கிறேன்’’ (கீதை.18-73) என்னும்படி சந்தேகங்களையெல்லாம் துணித்துப் பொகடவல்லதாய், ‘‘உன்னை எல்லாப் பாபங்களினின்றும் விடுவிக்கிறேன்’’ என்று அருளிச்செய்தபடியே அந்த பாபமாகிற தூற்றை வெட்டுவதற்கு ஸமர்த்த₂மான தன்னுடைய பரமக்ருபையாகிற வாளை உருவி, ‘‘கொடுவினைத் தூற்றுள்நின்று’’ (திருவா.3-2-9) என்று இவனால் அடிக்காணவும் அடியறுக்கவும் அரிதாய்ப் புகும் வழி அறியும் இத்தனையொழியப் புறப்பட வழி தெரியாதிருப்பதாயிருக்கிற தூற்றை, ‘‘வினைகளை வேரற’’ (திருவா.3-2-1) என்றும், ‘‘தொன்மாவல்வினைத் தொடர்களை முதலரிந்து’’ (திருவா.3-2-2) என்றும் சொல்லுகிற படியே மீண்டு ருசிவாஸனையாகிற ருசி வாஸனையாகிற ஊசிவேரோடும் பக்கவேரோடும் அறுத்துப்பொகட்டு.
(தீக்கொளீஇ) ‘‘இறவுசெய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால்’’ (பெரியா. தி.5-4-2) என்று ‘‘அஸந்நேவ ஸ ப₄வதி’’ என்கிறபடியே இவ்வாத்மாவுக்கு விநாஶத்தைப் பண்ணுகிற பாபமாகிற காட்டை, ‘‘இஷீகாதூலமக்₃நௌ ப்ரோதம் ப்ரதூ₃யேத, ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந: ப்ரதூ₃யந்தே’’ (சா.5-24-3), ‘‘போயபிழையும் புகுதருவானின்றனவும் தீயினில் தூசாகும்’’ (திருப்பாவை.5) என்கிறபடியே வேம்படி பண்ணி, ‘‘ஊரவர்கவ்வை எருவிட்டு’’ (திருவா.5-3-4) என்று ப₄க₃வதா₃பி₄முக்₂யம் பிறந்தவளவிலே இவனை பா₄க₃வதனென்று ஸம்ஸாரிகள் சொல்லுகிற பழிமொழியை ப₄க₃வத்₃ப₄க்திவர்த்த₄கமான எருவாக இட்டு. (அமுதவாறு தலைப்பற்றி) ‘‘அறிவை- யென்னுமமுதவாறு தலைப்பற்றி வாய்க்கொண்டது’’ (பெரியா. தி.5-4-2) என்று ஜ்ஞாநமாகிற அம்ருதப்ரவாஹத்தை உடைத்தான நதியைப் பெருகும்படி பண்ணி.
(ஈரியாய்க்கசிந்ததிலே) ‘‘கண்ணனுக்கென்று ஈரியாயிருப்பாள்’’ (திருவா.6-7-9) என்றும், ‘‘கசிந்த நெஞ்சினளாய்’’ (திருவா.6-7-8) என்றும், அந்த ஜ்ஞாநவாரியாலே நெஞ்சு பதஞ்செய்து செவ்வி வாய்த்தவாறே. (ஈரநெல்வித்தி) ஸங்க₃மாகிற நெல்லை விரைத்து. (எழுநாற்றுக்களையையும் வேர்முதல் மாய்த்து) ‘‘செய்த்தலையெழுநாற்று’’ (பெரியா. தி. 3-7-9) என்று சொல்லுகிற அந்தப்பயிரிலுண்டான ‘‘நீர்நுமதென்றிவை வேர்முதல் மாய்த்து’’ (திருவா.1-2-3) என்று அஹங்காரமமகாரமாகிற களையை ஊசி வேரோடு பறித்துப் பொகட்டு. (பட்டிச்சேவதக்கி) ‘‘வன்புலச்சேவையதக்கி’’ (பெரியா. தி.5-2-3) என்கிறபடியே அந்தப்பயிருக்குப் பட்டியான இந்த்₃ரியங்களாகிற சேக்களினுடைய ஸ்வைர ஸஞ்சாரஹேதுவான க₃ர்வத்தைப்போக்கி. (மீதுகொள்ளாமல்) ‘‘விளைந்த தானியமும் இராக்கதர் மீதுகொள்ளகிலார்கள்’’ (பெரியா. தி.4-4-8) என்று அந்த ப₄க்தியாகிற தா₄ந்யம் அப்ராப்தவிஷயத்திலே போகாதே ‘‘பள்ளியறை குறிக்கொண்மின்’’ என்று காவலடைத்து. (கடல்புரைய விளைந்து) ‘‘காதல் கடல் புரைய விளைவித்த காரமர்மேனி’’ (திருவா.5-3-4) என்று, எருவும் நீரும் உண்டானாலும் மேல் வர்ஷமில்லாத போது பயிர் அபி₄வ்ருத்₃த₄காமையாலே காளமேக₄– நிப₄ஶ்யாமமான வடிவழகாலே அபரிச்₃சே₂த்₃யமான ஸமுத்₃ரம் போலே அந்த ப₄க்தியாகிற பயிரை அபி₄வ்ருத்₃த₄மாக்கி. (தலைவணக்கினவாறே) ‘‘வரம்புற்ற கதிர்ச்செந்நெல் தாள் சாய்த்துத்தலைவணக்கும்’’ (பெரியா.தி.4-9-8) என்கிறபடியே அந்த ப₄க்தி பரிபாகத்தாலே, ப₂லித்த பயிரானது தலைவணக்குமாப்போலே, ஆர்த்தியால் வந்த பாரவஶ்யம் விளைந்தவாறே.
(நாளுநாள் கோள்குறையாக நின்றாரறியாமல் குந்தங்கொண்டு) ‘‘நாளுநாள்வந்தென்னை முற்றவும் தானுண்டான்’’ (திருவா.9-6-8)என்றும், ‘‘கோட்குறைபட்டது என்னாருயிர் கோளுண்டே’’ (திருவா.9-6-7) என்றும், ‘‘என்னெஞ்சுமுயிருமுள்கலந்து நின்றாரறியாவண்ணம் என்னெஞ்சுமுயிருமவையுண்டு’’ (திருவா.10-7-1) என்றும் சொல்லுகிறபடியே நாள்தோறும் பு₄ஜியாநிற்கச்செய்தே பர்யாப்தனன்றியிலே அவனுடைய அலமாப்புக்கண்டு இத்தலையிலே சிறிது உண்டென்று நிரூபிக்கலாம்படியாயும், ப₄க₃வத₃நுப₄வத்தில் தலைநின்ற பிராட்டி திருவடி திருவநந்தாழ்வான் தொடக்கமானவர்களும் அறிய வொண்ணாதபடி குந்தங்கொண்டு பு₄ஜித்தும். (ஆராமையுண்டு) ‘‘மனக்காராமை மன்னி உண்டிட்டாய்’’ (திருவா.10-10-6) என்று இப்படிக் குந்தங்கொள்ளுகையாலே அபர்யாப்தனாம்படி பு₄ஜித்து.
(காலக்கழிவாலே நிலத்துகாமல் பற்றறுத்து) ‘‘காலக்கழிவு செய்யேலே’’ (திருவா.2-9-2) என்றும், ‘‘மன்னும் வறுநிலத்து வாளாங்குகுத்ததுபோல்’’ (பெ.மடல்) என்றும், இப்படி பக்வமான ஸமநந்தரம் காலக்ஷேபத்தாலே மங்கிப்போகாதபடி, ‘‘வினை பற்றறுக்கும்’’ (திருமொழி.11-4-9) என்றும், ‘‘வினைகள் பற்றறுதல்’’ (திருச்ச.74) என்றும் சொல்லுகிறபடியே ப்ராப்திவிரோதி₄யான கர்மங்களை அறுத்து, ‘‘அருளென்னும் தண்டாலடித்து’’ (பெ.திருவ. 26) என்றும், அவனுடைய பரமக்ருபையாலே நெல்லோடேகூடி விளைந்திருப்பதாய், அஸாரமான பதர்போலே இருக்கிற ஆத்மாநு- ப₄வத்தில் ருசியை அறுத்து. (போர்த்ததோல்விடுத்து) ‘‘போர்த்த பிறப்பொடு நோயொடு மூப்பொடிறப்பவை பேர்த்து’’ (திருவா.7-5-10) என்கிறபடியே ஆதி₄வ்யாதி₄களுக்கும் ஷட்₃பா₄வ விகாரத்துக்கும் அடியான ஸ்தூ₂லதே₃ஹத்தையும் கழற்றி.
(ஸூக்ஷ்மவொட்டும் நீரிலே கழுவி) ஸ்தூ₂லதே₃ஹம் போனாலும் ஸம்ஸரிக்கைக்கு யோக்₃யமாகையாலே ப₄க₃வத₃நுப₄வ விரோதி₄யுமாய், விரஜாதீர பர்யந்தமாக இவ்வாத்மாவுக்கு க₃மநஸாத₄நமுமாய், துஷம்போலே ஸ்வரூபத்தைப் பற்றிக்கிடக்கிற ஸூக்ஷ்மப்ரக்ருதியையும் ‘‘தத்தோய ஸ்பர்ஶ மாத்ரேண’’ என்கிறபடியே விரஜாஜல-ஸ்பர்ஶத்தாலே வாஸநாருசிகளோடே போம்படி கழுவி. (வேறோர்கலத்திட்டு) ‘‘சீரார் தயிர் கடைந்து வெண்ணெய் திரண்டதனை வேரார் நுதல் மடவாள் வேறோர் கலத்திட்டு’’ (சி.மடல்) என்று ஸ்தூ₂லஸூக்ஷ்மமான ப்ரக்ருதியினின்றும் விவேகித்து எடுக்கப்பட்டு ப₄க₃வத்₃விநியோகா₃ர்ஹமான ஆத்ம ஸ்வரூபத்தை அமாநவகரஸ்பர்ஶத்தாலே அப்ராக்ருதவிக்₃ரஹ ப்ரவேஶத்தைப் பண்ணி வைத்து.
(பைந்தொடிமடந்தையரைக்கொண்டு ஷட்₃கு₃ணரஸாந்நமாக்கி) ‘‘அணைவர் போயமருலகில் பைந்தொடிமடந்தையர்தம் வேய்மருதோளிணை’’ (திருவா.10-2-11) என்று ‘‘ஶதம் மாலாஹஸ்தா:’’ (கௌஷீதகீ) இத்யாதி₃யாலே சொல்லப்படுகிற தி₃வ்யாப்ஸர ஸ்ஸுக்களைக்கொண்டு ப₄க₃வத்₃போ₄க₃யோக்₃யமாம்படிஅலங்கரித்து, ‘‘ஸ்வேந ரூபேண அபி₄நிஷ்பத்₃யதே’’ என்று ஸ்வஸ்வரூபாவிர்பா₄வத்தைப் பெறுவிக்கையாலே ஸ்வரூபக₃த மாயிருக்கச்செய்தே முன்பு திரோஹிதமாயிருக்கிற ஜ்ஞாநஶக்த்யாதி₃களும், அபஹதபாபாப்மத்வாதி₃களும் ப்ரகாஶித்து இவை ஶேஷவஸ்துக₃தமாகையாலே ஶேஷி– விநியோக₃த்துக்குறுப்பாகையாலே அந்த கு₃ணவிஶிஷ்டமான ஆத்மவஸ்துவைத் தனக்கு போ₄க்₃யமாக்கி.
(வானோர்க்காராவமுதானவாறே) நித்யஸூரிகளுக்கும் போக்யமான வாறே. (முற்றுமுண்ண முன்னம் பாரித்து) ‘‘என்னை முற்றுமுயிருண்டு’’ (திருவா.10-9-10) என்றும், ‘‘என்னில் முன்னம் பாரித்து’’ (திருவா.9-6-10) என்றும் சொல்லுகிறபடியே இவனை புஜிப்பதாக இவனிலும் முன்னே பாரித்து.
(உழுவதோர் நாஞ்சில்கொண்டு பெருகமுயலும் பத்தியுழவன்க்ருஷிப₂லமிறே) ‘‘உழுவதோர் படையும்’’ (பெரியா. தி.4-7-5), ‘‘ஒற்றைக்குழையும் நாஞ்சிலும்’’ (திருமொழி 8-8-8) என்று க்ருஷிஸாத₄நத்தைக்கொண்டு, ‘‘அரியதெளிதாகுமாற்றலால் மாற்றிப் பெருக முயல்வாரைப்பெற்றால்’’ (இ.திருவ.22) என்று அரிதான ப₄க₃வத்– ப்ராப்தியும் எளிதாம்படி இவனுடைய உஜ்ஜீவநத்துக்கு மிகவும் க்ருஷி பண்ணுகிற ‘‘பத்தியுழவன்’’ (நா. திருவ.23) என்கிற ப₄க்திக்கு க்ருஷிபண்ணுகிற ஸர்வேஶ்வர– னுடைய க்ருஷிபலமாய்க் கொண்டு உண்டாய்த்து இவருடைய ப₄க்தி என்கிறார். ஆக இத்தால் இவருடைய ப₄க்தி போ₄க்தாவான ஸர்வேஶ்வரனுடைய க்ருஷிப₂லம் என்றதாய்த்து. (104)
105. கோஸலகோகுலசராசரம் செய்யும் குணமொன்றின்றியே அற்புதமென்னக் கண்டோம்.
இப்படி இத்தலையில் ஒரு நன்மையின்றிக்கேயிருக்க ஈஶ்வரனுடைய க்ருஷி ப₃லித்தவிடமுண்டோவென்னில், கோஸலதே₃ஶத்திலுண்டான ஸ்தா₂வரஜங்க₃மங்– களையும் கோ₃குலத்திலுண்டான சராசரங்களையும் ஸ்வஸம்ஶ்லேஷவிஶ்லேஷைக– ஸுக₂து₃:க₂ராம்படி பண்ணக்கண்டோமிறே என்கிறார் (கோஸலமென்று தொடங்கி).
‘‘த்வாமாமநந்தி கவய: கருணாம்ருதாப்₃தே₄ ஜ்ஞாநக்ரியாப₄ஜந– லப்₄யமலப்₄ய மந்யை: | ஏதேஷு கேந வரதோ₃த்தரகோஸலஸ்தா₂: பூர்வம் ஸதூ₃ர்வ– மப₄ஜந்த ஹி ஜந்தவஸ்த்வாம்’’ (வரத₃.ஸ்த.69), என்றும், ‘‘அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும் – ஒன்றின்றியே நற்பாலுக்குய்த்தனன்’’ (திருவா.7-5-1) என்றும் கோஸலதே₃ஶத்தி– லுண்டான சராசரங்களடைய ‘‘அபி வ்ருக்ஷா: பரிம்லாநாஸ்ஸபுஷ்பாங்குரகோரகா: | உபதப்தோத₃கா நத்₃ய: பல்வலாநி ஸராம்ஸி ச || பரிஶுஷ்கபலாஶாநி வநாந்யுபவநாநி ச’’ (ரா. அ.59-8), ‘‘விஷயே தே மஹாராஜ ராமவ்யஸநகர்ஶிதா:’’, என்றும், ‘‘அகாலப₂லிநோ வ்ருக்ஷா:’’ (ரா. யு.127-18) என்றும், ‘‘ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாமப₄வந் கதா₂: | ராமபூ₄தம் ஜக₃த₃பூ₄த்₃ராமே ராஜ்யம் ப்ரஶாஸதி’’ (ரா.யு.131-96.) என்றும் ஒரு ஹேதுவின்றியிலே ஸ்வஸம்ஶ்லேஷவிஶ்லேஷைகஸுக₂து₃:க₂ராகவும்.
கோகுலங்களிலுண்டான சராசரங்களிலே சைதந்யப்ரஸரணமில்லாத வ்ருக்ஷங்களும், ‘‘அவெனாருவன் குழலூதினபோது மரங்கள்நின்று மதுதாரைகள்பாயும் மலர்கள் வீழும் வளர்கொம்புகள் தாழும் இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவைசெய்யும் குணமே’’ (பெரியா.தி.3-6-10) என்றும், சைதந்யலேஶமுடைய திர்யக்குக்களும் ‘‘மருண்டு மான்கணங்கள் – கால்பரப்பிட்டுக்கவிழ்ந்திரங்கிச் செவி- யாட்டகில்லாவே’’ (பெரியா.தி.3-6-6) என்று திர்யக்ஸ்தா₂வரங்கள் அந்யோந்யம் ஸ்வபா₄வங்கள் மாறாடும்படி பண்ணி, ‘‘நங்கைமீர்களிதோரற்புதம் கேளீர்’’(பெரியா.தி.3-6-1) என்று இதோராஶ்சர்யமென்று விஶேஷஜ்ஞர் சொல்லும்படியாகக் கண்டோமிறே என்கிறார். ஆக இத்தால், சைதந்யாசைதந்யங்களிரண்டும் தன்னில் பதா₃ர்த்த₂ வைஷம்யத்துக்கு ஹேதுவாமித்தனையொழிய ப₄க₃வத்₃விஷயீகாரத்துக்கு ஹேதுவாகக் காணாமையாலே இவர்க்குப் பிறந்த ப₄க்தி ப₄க₃வந்நிர்ஹேதுகவிஷயீகாரத்– தாலே என்றதாயிற்று. (105)
106. பட்டத்துக்குரிய ஆனையும் அரசும் செய்யுமவை ஆராயாது.
ஆனால் ‘‘ஸமோஹம் ஸர்வபூ₄தேஷு ந மே த்₃வேஷ்யோஸ்தி ந ப்ரிய:’’ (கீதை.9-26) என்கிறபடியே ஸர்வஸமனுமாய், பரது₃:க₂ம் ஸஹியாதபடியான பரமக்ருபையை உடையனான ஸர்வேஶ்வரன் ஸர்வரோடும் தனக்கு ஸம்ப₃ந்த₄ம் ஒத்திருக்க, அவர்களிலே ஒருவனை நிர்ஹேதுகமாக விஷயீகரித்தான் என்றால் அவனுக்கு வைஷம்ய நைர்க்₄ருண்யங்கள் வாராதோ என்னில், நிருபாதி₄க ஸர்வஶேஷியுமாய், ஸ்வதந்த்ர ஸ்வாமியுமாய், அத ஏவ உப₄யவிபூ₄தியையும் ஸ்வாதீ₄நமாகவும், ஸ்வார்த்த₂மாகவும் உடைய ஸர்வேஶ்– வரன் ஸ்வகீயமானவற்றிலே ஒன்றை ஸ்வவிநியோகா₃ர்த்த₂மாக இப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரிக்கும்போது வைஷம்யநைர்க்₄ருண்யங்களையிட்டு நிவாரகர் இல்லை என்னும் அர்த்த₂த்தை லோகத்₃ருஷ்டாந்தத்₃வாரா அருளிச்செய்கிறார்.
(பட்டத்துக்குரிய ஆனையும் அரசும் செய்யுமவை ஆராயாது) தான் செய்தது தான் இட்டவழக்காம்படி நிரங்குஶஸ்வதந்த்ரமான ஆனை, யாரேனுமொருவனை எடுக்க, அவனே ராஜாவாகவும் அந்த ராஜா பரிக்₃ரஹித்தவளே ராஜமஹிஷியுமாமிடத்தில், இப்படி ஆவானென்? என்று ஆராய்வாரில்லையிறே. அப்படியே, ‘‘ரூபப்ரகாரபரிணாம- க்ருதவ்யவஸ்த₂ம் விஶ்வம் விபர்யஸிதுமந்யத₃ஸச்ச கர்த்தும் | க்ஷாம்யந் ஸ்வபா₄வநியமம் கிமுதீ₃க்ஷஸே த்வம் ஸ்வாதந்த்ர்யமைஶ்வரமபர்யநுயோஜ்யமாஹு:’’ (வை.ஸ்த. 55), ‘‘படுநைகவராடிகேவ க்லுப்தா ஸ்த₂லயோ: காகணிகாஸுவர்ணகோட்யோ: | ப₄வ மோக்ஷணயோஸ்த்வயைவ ஜந்து: க்ரியதே ரங்க₃நிதே₄ த்வமேவ பாஹி’’ (ர. ஸ்த. உ. 88) என்று உப₄யமும் தானிட்ட வழக்காம்படி நிரங்குஶஸ்வதந்த்ரனானவன் செய்யுமவை ஆராயப்படாதிறே என்கிறார். (106)
107. முந்நீர், வாழ்ந்தார், சூட்டும், கோவை, ஆழி என்கிற ஸாக்ஷாத்க்ருத ஸ்வபர வ்ருத்தாந்தர்க்கு, யாத்₃ருச்சிகாதி₃கள் உண்டாகில் தோன்றும்.
அப்படிச் சொல்லுவானென்? இவர்தமக்கு ஜ்ஞாதஸுக்ருதமன்ேறா இல்லை என்றது; யாத்₃ருச்சி₂காதி₃களான அஜ்ஞாதஸுக்ருதமடியாக அவன் விஷயீகரித்தானாகத் தட்டென்? என்னில், ஸ்வபரவிபா₄க₃மற ஸர்வத்தையும் ஸாக்ஷாத்கரித்தருளிச் செய்தவர்க்கு யாத்₃ருச்சி₂காதி₃கள் உண்டாகில் ப்ரகாஶிக்குமிறே. இவர்க்கு அஜ்ஞாதமாவது பூர்வா- வஸ்தை₂யிலிறே. உத்தராவஸ்தை₂யிலும் அஜ்ஞாதமாகில் மயர்வற மதிநலம் அருளப்பெற்றாரில்லையாவரிறே. (முந்நீர் வாழ்ந்தார் தொடங்கி)‘‘முந்நீர்ஞாலம் படைத்த எம் முகில்வண்ணனே’’ (திருவா.3-2-1) என்று தொடங்கி அவன் சேதநருடைய உஜ்ஜீவ- நார்த்த₂மாக ஜக₃த்ஸ்ருஷ்ட்யாதி₃வ்யாபாரங்களைப் பண்ணினபடியையும், தாம் அவன் கொடுத்த தே₃ஹத்தைக்கொண்டு அதன்வழியே ஒழுகி ஸம்ஸரித்துப்போந்தபடியையும், ‘‘வாழ்ந்தார்கள் வாழ்ந்தது’’ (திருவா.4-1-6) என்கிற பாட்டிற்படியே முன்பு ஜீவித்த வர்களாகச் சொல்லுமவர்கள் ஜலபு₃த்₃பு₃த₃ம்போலே நஶித்து அதோ₄க₃தியிலே போனார்கள் என்னுமதொழிய ஒருபடிப்பட ஜீவித்துப் போந்தார்கள் என்னுமர்த்த₂ம் இல்லை என்னுமதுவும், ‘‘சூட்டுநன்மாலைகள்’’ (திருவிரு.20) என்று தொடங்கி – ஒரு விபூ₄தியாக ஸமாராத₄நோந்முக₂ராய் உபகரணங்களைக்கொண்டு நில்லாநிற்கச்செய்தே அத்தை உபேக்ஷித்துத் திருவாய்ப்பாடியில் திரண்ட வெண்ணெயை அசிந்திதமாக பு₄ஜிக்கையிலுண்டான இச்சையாலே க்ருஷ்ணனாய் வந்தவதரித்து நப்பின்னைப் பிராட்டிக்காக ருஷப₄ங்கள் ஏழையும் அடர்த்தான் என்றும்.
‘‘கோவைவாயாள்பொருட்டு’’ (திருவா.4-3-1) என்று தொடங்கி – ராமக்ருஷ்ணாத்₃யவதாரங்களைப்பண்ணி விரோதி₄ நிரஸநம் பண்ணுகிற த₃ஶைகளிலே உதவி ஶிஶிரோப– சாரம் பண்ணப் பெற்றிலேனாகிலும் என்னுடைய ஸத்தாதி₃களெல்லாம் தனக்கு போ₄கோ₃பகரணமாகக் கொள்ளும்படி என்பக்கலிலே வ்யாமுக்₃த₄னானானென்றும். ‘‘ஆழியெழச்சங்கு’’ (திருவா.7-4-1) என்று தொடங்கி – அவனுடைய த்ரைவிக்ரமாப- தா₃நம், அம்ருதமத₂நம், பூ₄ம்யுத்₃த₄ரணம், மஹா ப்ரளயவ்ருத்தாந்தம், ஹிரண்யநிரஸநம், ராவணவத₄ம், பா₃ணனுடைய பா₃ஹுவந ச்சே₂த₃நப்ரகாரம், தத₃நந்தரம் ஜக₃த்ஸ்ருஷ்டி– ப்ரகாரம், கோ₃வர்த்₃த₄நோத்₃த₄ரணம் இப்படிப் பத்தும்பத்தான விஜயபரம்பரைகளையும், இப்படி ஸ்வபரவிபா₄க₃மற ஸர்வத்தையும் ஸாக்ஷாத்கரித்துப் பேசின இவர்க்குத் தம்மை விஷயீகரித்தது யாத்₃ருச்சி₂காதி₃ ஸுக்ருதமடியாக என்னுமது உண்டாகில் ப்ரகாஶிக்குமிறே என்கிறார். (107)
108. செய்தநன்றி தேடிக்காணாதே கெடுத்தாய் தந்தாய் என்ற அத்வேஷாபி₄முக்யங்களும் ஸத்கர்மத்தாலல்ல.
இப்படி அங்கீ₃காரத்துக்கு ஹேதுவாயிருப்பதொரு ஸுக்ருதமில்லையேயாகிலும், அத்₃வேஷாபி₄முக்₂யங்கள் ஸுக்ருதமடியாக ஆனாலோ என்னில், அந்த அத்₃வேஷா– பி₄முக்₂யங்களும் அவனாலே உண்டாய்த்தென்று இவர்தாமே அருளிச்செய்தாரிறே. (செய்த நன்றி தேடிக்காணாதே என்று தொடங்கி) ‘‘வாட்டாற்றார்க்கெந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திகழ்வதுவே’’ (திருவா.10-8-8) என்று ஸர்வேஶ்வரன் தம்மை விஷயீகரித்ததுக்கு ஹேது தேடிக்காணாதே. (கெடுத்தாய் தந்தாய் என்று) ‘‘என்னைத் தீமனங்கெடுத்தாய்’’ (திருவா.2-7-8), ‘‘மருவித்தொழும் மனமே தந்தாய்’’ (திருவா.2-7-7)
என்று சொல்லுகிற அத்₃வேஷாபி₄முக்₂யங்களிரண்டும் அவனாலே உண்டாய்த்தென்று தாமே அருளிச்செய்கையாலே அவையும் ஸத்கர்மமடியாக வந்ததன்று என்கிறார். (108).
109. எண்ணிலும் வரும் கணனைக்கு எண்டானுமில்லை.
ஆனால் பரமப₄க்திக்கு முகம் காட்டுமாப்போலே பரிக₃ணனைக்கும் முகம்காட்டும் என்றாரிறே இவர்தாமே,ஆகையாலே அந்த பரிக₃ணனை இவர்க்கு உண்டாய்த்தானாலோ என்னில், அதுவுமில்லை என்று தாமே அருளிச்செய்தாரிறே என்கிறார் மேல். (எண்ணிலும் வரும் க₃ணனைக்கு எண்டானுமில்லை) ‘‘எண்ணிலும் வரும் என்னினி வேண்டுவம்’’ (திருவா.1-10-2) என்று பரமப₄க்தியுக்தர்க்கு முகம்காட்டுமாப்போலே பரிக₃ணனைக்கு முகம் காட்டும் என்னுமிடம் ஈஶ்வரனுடைய கு₃ணாதி₄க்யம் சொல்லிற்றத்தனைபோக்கி, அந்த பரிக₃ணனையும் தமக்கில்லை என்னுமிடத்தை ‘‘கருமங்கள் வாய்க்கின்று ஓரெண்டானுமின்றியே வந்தியலுமாறு – கண்டாயே’’ (திருவா.1-10-5) என்று – கார்யங்கள் ஸித்₃தி₄க்குமிடத்தில் ‘‘எண்ணிலும் வரும்’’ என்றதுதானும் மிகையாம்படி ‘‘ஓரெண்டா- னுமின்றியே’’ என்று அந்த எண்தானுமின்றியே ப₂லித்துக்கொடுநின்றபடி கண்டாயே என்று அதுவுமில்லை என்று தாமே பேசினாரிறே. (109)
110. மதியால் இசைந்தோம் என்னும் அநுமதி-இச்சைகள் இருத்துவம் என்னாத என்னை இசைவித்த என்னிசைவினது.
ஆனால் தமக்கு அநுமதீச்சை₂கள் உண்டாக அருளிச்செய்தாரே, அவைதான் ஹேது- வானாலோ என்னில், அவையும் அவனாலே உண்டானவையாகையாலே ஹேது அன்று என்கிறார் (மதியால் இசைந்தோம் என்று தொடங்கி). ‘‘வைத்தேன் மதியால் எனதுள்ளத்- தகத்தே’’ (திருவா.8-7-10) என்றும், ‘‘யானுமென்னெஞ்சுமிசைந்தொழிந்தோம்’’ (பெ.திருவ. 26) என்றும், அநுமதிமாத்ரத்தாலே அவனை என் நெஞ்சுக்குள்ளே வைத்தேன் என்றும், விரோதி₄யைப் போக்குவானாக யானும் என் நெஞ்சும் இசைந்தொழிந்தோம் என்றும் தமக்கு அநுமதி இச்சை₂கள் உண்டாகச் சொன்னாரே என்னில்; அந்த அநுமதி இச்சை₂களும் ‘‘யானொட்டி என்னுள் இருத்துவமென்றிலன்’’(திருவா.1-7-7) என்று, நான் அவனை என்னுள்ளே இருக்கவொட்டேன் என்று ப்ரதிஜ்ஞைபண்ண, தான் ‘‘அத்₃ய மே மரணம் வாபி தரணம் ஸாக₃ரஸ்ய வா’’ (ரா.யு.21-87) என்று ப்ரதிஜ்ஞை பண்ணினாப்போலே ப்ரதிஜ்ஞை பண்ணி, ஸ்வதந்த்ரமான நெஞ்சை அபஹரித்து ஶரீரத்- தோடே கலந்து, பின்பு ஆத்மாவோடே கலந்து, இப்படி யத்நம் பண்ணி, ‘‘இசைவித் தென்னை’’ (திருவா.5-8-9) என்று என்னை இசையும்படி பண்ணினான் என்றும், இசைவித்த மாத்ரமேயன்றியிலே, ‘‘என் இசைவினை’’ (திருவா.1-7-4) என்று இசைவு தானும் தானேயாய் நின்றவனுடைய க்ருஷிபலம் என்கிறார். (110)
111. மாதவன் மலை நீர் நிழல் என்றேறிடுமது, வ்யாவ்ருத்த்யுக்தி, அந்யார்த்த₂ம், அபுத்தி₄ பூர்வகம், அவிஹிதம், ப₂லவிஸத்ருஶம், ப₂லாந்தரஹேது.
ஆனாலும் இவர் தம்முடைய ப்ரப₃ந்த₄த்திலே ஹேதுஸூசகமாகச்சில உக்திகள் உண்டாயிராநின்றதே என்னில், அவையும் ஹேது அன்றென்னுமிடத்தைப்பல படியாலும் உபபாதி₃க்கிறார் (மாதவன் என்று தொடங்கி). ‘‘மாதவனென்றதே கொண்டு என்னையினி இப்பாற்பட்டது’’ (திருவா.2-7-3) என்றும், ‘‘திருமாலிருஞ்சோலைமலை என்றேனென்னத் திருமால் வந்தென் நெஞ்சுநிறையப்புகுந்தான்’’ (திருவா.10-8-1) என்றும் இப்படி அந்த:புரத்திலுள்ளார் சொல்லும் பாசுரத்தை அஹ்ருத₃யமாகச்சொன்ன– வளவிலே இத்திருநாமத்துக்கும் அல்லாத திருநாமத்துக்கும் வாசியறியாத என்னை விஷயீ- கரித்து என் விரோதி₄களைப் போக்கினான் என்றும், திருமலையின் பேரைச் சொன்னேனாக ஶ்ரிய:பதியான ஸர்வேஶ்வரன் என்னுடைய அஹ்ருத₃யமான உக்தியையே பற்றாசாகக் கொண்டு விஷயீகரித்தான் என்றும்.
(நீர் நிழல் என்று) ‘என்னடியார் விடாயைத் தீர்த்தாய், அவர்களுக்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய்’ என்றாப்போலே இவை விஷயீகாரஹேதுவானாலோ என்னில்; மாதவன், மலை என்றது இரண்டும் வ்யாவ்ருத்த்யுக்தி. அதாவது – இந்தத்திருநாமத்துக்கும் அல்லாத திருநாமங்களுக்கும் வாசி அறிந்து ஶ்ரிய:பதியுடைய திருநாமம் என்று சொன்னதன்று; இப்பேருக்கும் அப்பேருக்கும் வேறுபாடு சொன்ன மாத்ரம். ‘‘திருமாலிருஞ்சோலைமலை’’ என்றது – ஸர்வேஶ்வரனுக்கு இது வஸ்தவ்யபூ₄மி என்று சொன்னதன்று; ஓரோ தே₃ஶங்களில் மலைகளைச் சொல்லுவார், ‘கொல்லிமலை’, ‘குலைமலை’ என்று சொல்லு- வாரைப்போலே இம்மலைக்கும் அம்மலைக்கும் வேறுபாடு தோற்றச் சொன்னவித்தனை.
(நீர் நிழல் என்னுமவை அந்யார்த்த₂ம்) அதாவது – தன் பயிருக்காக ஏற்றமிரைத்தும் சூதுசதுரங்கத்துக்காக விரிவுண்டாக அகம்கட்டியும் செய்கிறானத்தனைபோக்கி, பா₄க₃வதர்கள் விடாய் தீருகைக்கும், ஒதுங்குவார் ஒதுங்குகைக்குமன்றிறே; ஒரு வைஷ்ணவன் அந்நீரிலே துளி நீர் அள்ளக்காணுதல், அந்நிழலிலே ஒருவன் ஒதுங்கக் காணுதல் செய்யில் தடியிட்டு விலக்குவர்களிறே. இவையெல்லாம் சேர அபு₃த்₃தி₄பூர்வம் இந்த உக்திவ்ருத்திகளிரண்டும் இவர்க்கு பு₃த்₃தி₄பூர்வமல்ல. (அவிஹிதம்) இவைதான் மோக்ஷ ஹேதுக்களென்று ஶாஸ்த்ரவிதி₄யுமில்லை. (ப₂லவிஸத்₃ருஶம்) ப₄க₃வத்₃ விஷயீகார மஹாப₂லத்துக்கு இவை ஸத்₃ருஶமுமன்று. (ப₂லாந்தரஹேது) இவை உண்டாயிற்றாகில் இப்பாலுண்டான அல்பப்ரயோஜநத்துக்கே ஹேதுவாமித்தனை போக்கி, அந்த மஹாப₂லத்துக்கு ஹேதுவாகவும்மாட்டாது. ஆகையால் இவை ஹேதுவாக மாட்டாது. (111)
112. இவன் நடுவே அடியான் என்று ஓலைப்படா ப்ரமாணம் பக்ஷபாதி ஸாக்ஷி வன்களவில் அநுபவமாக இந்திர ஞாலங்கள் காட்டிக், கொள்ள, காப்பாரற்று விதிசூழ்ந்தது.
இவற்றை ஹேதுவாக நினைத்திருந்தாராகில் ‘‘மதிநலமருளினன்’’ (திருவா.1-1-1) என்றும், ‘‘ஓரெண்டானுமின்றியே வந்தியலுமாறு’’ (திருவா.1-10-5) என்றும், ‘‘எனதாவி உள்கலந்த’’ (திருவா. 2-3-4) என்றும், ‘‘நீசனேன் நிறைவொன்றுமிலேன் என்கண் பாசம் வைத்த பரஞ்சுடர்ச்சோதி’’ (திருவா.3-3-4) என்றும், ‘‘அதுவு- மவனதின்னருளே’’ (திருவா.8-8-3) என்றும், ‘‘வெறிதே அருள்செய்வர்’’ (திருவா.8-7-8) என்றும், ‘‘இன்றென்னைப் பொருளாக்கித்தன்னை என்னுள் வைத்தான்’’ (திருவா.10-8-8) என்றும், ‘‘பொருளல்லாத என்னைப்பொருளாக்கி அடிமை கொண்டாய்’’ (திருவா.5-7-3) என்றும், ‘‘நடுவே வந்துய்யக்கொள்கின்ற நாதன்’’ (திருவா.1-7-5) என்றும், ‘‘என்னைத் தீமனங் கெடுத்தாய்’’ (திருவா.2-7-8) என்றும், ‘‘மருவித்தொழும் மனமே தந்தாய்’’ (திருவா.2-7-7) என்றும், ‘‘வரவாறொன்றில்லையால் வாழ்வினிதால்’’ (பெ.திருவ.56) என்றும் இப்படி நிர்ஹேதுகமாக விஷயீகரித்தான் என்றருளிச்செய்த ஸ்வவாக்யங்கள் பலவற்றோடும் வ்யாஹதமாமே.
இப்படி இவரை அஹேதுகமாக விஷயீகரிக்கவேண்டுவானென் என்னில் ‘‘த்வம் மே அஹம் மே’’ என்று ஸம்ப₃ந்த₄த்தை ஏறிட்டு இவரை வலியப்பிடிக்க, இவர் இறாய்த்த- விடத்திலும் வழக்குப்பேசி, அவ்வளவிலும் அகப்படாதொழிய, மஹாப₃லிக்குத்தன் வடிவழகைக்காட்டி வஶீகரித்து லோகத்தை அதிக்ரமித்துக்கொண்டாப்போலே தன் வடிவழகைக்காட்டி இவரை வாய்மாளப்பண்ணி விஷயீகரிக்கும்படி அவனை க்ருபை கால்கட்டிற்று என்கிறார் (இவன் நடுவே அடியான் என்று தொடங்கி). ‘‘நடுவே வந்துய்யக்கொள்கின்ற நாதன்’’ (திருவா.1-7-5) என்றும், ‘‘அடியான் இவனென்று எனக்கு ஆரருள் செய்யும்’’ (திருவா.9-4-10) என்றும் நாதனாகையாலே நிர்ஹேதுகமாக வந்து இவர்க்கிசைவின்றிக்கே இருக்கச்செய்தே ‘இவன் என் அடியான்’ என்று பிடிக்க, அதுக்கு, இவர் இசையாதொழிய, இவர் இசைகைக்காக ‘‘பதிம் விஶ்வஸ்ய’’ இத்யாதி₃க ளைக் காட்ட, அது எழுதாமறையாகையாலே அது ஓலைப்படா ப்ரமாணம் என்று அத்தையும் இவர் அந்யதா₂கரிக்க, இவர் அடியானானமைக்கு தத்த்வதர்ஶிகளான ஜ்ஞாநிகள் ஸாக்ஷியாக உண்டீ என்ன; அவர்களும் உனக்கு பக்ஷபாதிகள் என்று ப்ரதிவசநம்பண்ண, ஆனால் ‘இவ்வஸ்து உம்மதானபடி எங்ஙனே?’ என்று ப₄க₃வத₃பி₄ப்ராயமாக, ‘‘அநுப₄வவிப₄வாத்’’ என்கிறபடியே ‘அஹம் மம’ என்று அநாதி₃– காலம் அநுப₄வித்துப்போந்தேன் என்று ப்ரப₃லப்ரமாணமான அநுப₄வத்தைக்காட்ட, ப்ரமாணஸாக்ஷிகளும் ஆக்ரோஶமுண்டாய் இருக்கச்செய்தே அநுப₄வித்துப்போந்த இது. ‘‘வன்கள்வனேன்’’ (திருவா.5-1-4) என்று ஸர்வ ஜ்ஞனானவனையும் க்ருத்ரிமித்துப் போந்தேன் என்று விஷயீகாராநந்தரம் தாமே பேசும்படி இவர் க்ருத்ரிமத்திலே அநுப₄வித்தாராம்படி ‘‘இந்திரஞாலங்கள்காட்டி இவ்வேழுலகுங்கொண்ட நந்திரு மார்வன்’’ (திருவா.9-5-5) என்று ஐந்த்₃ரஜாலிகம் காட்டுவாரைப்போலே சிறுப்பது பெருப்பதான வடிவழகைக்காட்டி, ‘‘மன்னை மனங்கொள்ள வஞ்சித்து நெஞ்சுருக்கி’’ (பெ.மடல்) என்கிறபடியே ஆஸுரப்ரக்ருதியான மஹாப₃லியை வாய்மாளப்பண்ணி ஸகல ஜகத்தையும் ஆக்ரமித்துக்கொண்டாப்போலே, வடிவழகைக்காட்டி வாய்மாளப் பண்ணி விஷயீகரிக்கும்படி. (காப்பாரற்று) ‘‘விதிவாய்க்கின்று காப்பாரார் – ஐயோ கண்ணபிரான் அறையோ இனிப்போனாலே’’ (திருவா.5-1-1) என்று – க்ருபை பெருகுமிடத்தில் க்ருபா பரதந்த்ரனான நீ காக்கவோ? க்ருபாப்ரேரிகையான அவள் காக்கவோ? க்ருபாவிஷயமான நான் காக்கவோ? இந்த க்ருபையைத்தப்பி நீ போனா- யாகில் ‘அறையோ அறை’ என்று நிவாரகரில்லாதபடி விதிசூழ்ந்தது. ‘‘எதிர்சூழல் புக்கெனைத்தோர் பிறப்பும் எனக்கே அருள்கள் செய்ய – அம்மான் திருவிக்கிரமனை – விதி சூழ்ந்தது’’ (திருவா.2-7-6) என்று அநேக ஜன்மங்கள் இவர் பிறவிகளுக்கு எதிரே பிறந்துகொடுவந்து இவரை விஷயீகரிக்கும்படி விரோதி₄நிரஸநஶீலனான ஸர்வேஶ்வரனை, இவரை விஷயீ கரித்தல்லது நிற்கவொண்ணாதபடியான க்ருபை கால்கட்டிற்று என்கிறார். (112)
113. வரவாறில்லை, வெறிதே என்று அறுதியிட்ட பின் வாழ்முதல் என்கிற ஸுக்ருதமொழியக் கற்பிக்கலாவதில்லை.
ஆகையாலே இவர்தாமே ‘நிர்ஹேதுகமாக விஷயீகரித்தான்’ என்று அர்த்த₂த்தை அறுதியிட்டபின்பு விஷயீகாரஹேதுவான ப்ரத₂மஸுக்ருதமும் அவனையல்லதில்லை என்கிறார் மேல் (வரவாறில்லை என்று தொடங்கி). ‘‘வரவாறொன்றில்லையால் வாழ்- வினிதால்’’ (பெ. திருவ.56) என்று பேற்றுக்கு ஒரு ஹேதுவின்றியிலே இருக்கச் செய்தே, அப்பேறு மிகவும் இனிதாயிருந்ததென்றும், ‘‘வெறிதே அருள்செய்வர் செய்வார்கட்குகந்து’’ (திருவா.8-7-8) என்று ‘‘செய்வார்களுக்கு உகந்து வெறிதே அருள்செய்வர்’’ என்கையாலே தான் அங்கீகரிக்கவேண்டினார்க்குத் திருவுள்ளத்தோடே உகந்து நிர்ஹேதுகமாக க்ருபை பண்ணுமென்று இப்படி இவ்விஷயீகாரம் நிர்ஹேதுகமென்று தாமே அறுதியிட்டபின். (வாழ்முதல் என்ற ஸுக்ருதமொழியக் கற்பிக்கலாவதில்லை) இவ்விஷயீகாரத்துக்கு ஹேதுவான மூலஸுக்ருதம் ‘‘பொழிலேழுமேனமொன்றாய் நுனியார் கோட்டில் வைத்தாய் – தனியேன் வாழ்முதலே’’ (திருவா.2-3-5) என்று ப்ரளயார்ணவமக்₃னையான ஸ்ரீபூமிப் பிராட்டியை நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக்கொண்டு உத்₃த₄ரிப்பித்து, தனியே ஸம்ஸாரார்ணவமக்₃நனாய் ஒரு கைம்முதலில்லாத என்னுடைய உஜ்ஜீவநத்துக்கு ப்ரத₂ம ஸுக்ருதமானவனே என்று அருளிச்செய்த ஞானப்பிரானையொழிய வேறு கல்பிக்கலாவதில்லை என்கிறார்.
ஆக, இதுக்குக்கீழ் இவருடைய ப்ரபா₄வத்தையும், ப்ரபா₄வத்துக்கடி ப₄க₃வந் நிர்ஹேதுக– கடாக்ஷம் என்னுமிடத்தையும், அந்த கடாக்ஷம் காரணமாக இவர்க்குண்டான ப₄க்தியினுடைய வ்யாவ்ருத்தியையும், அந்த ப₄க்திதான் கர்ம ஜ்ஞாந ஸாத்₄யையுமல்ல, அதுக்கடியான யாத்₃ருச்சி₂காதி₃களுமில்லை, கேவல நிர்ஹேதுக க்ருபையாலே உண்டாயிற்று என்னுமிடத்தையும் அருளிச்செய்து தலைக்கட்டினாராய்த்து. (113)
114. நலமருளினன் என்கொல் என்று ஆமூலசூட₃ம் அருளால் மன்னுமிவர்க்கு அன்புக்கடியானதுவே அடிசேருகைக்கு ஸாதநம்.
ஆனால், உபாஸகனுக்கு கர்மஜ்ஞாநங்களாலே ஸாத்₄யையான ப₄க்தி ப₄க₃வத் ப்ராப்திக்கு ஸாத₄நமாகக் கண்டோம், இவர்க்கு நிர்ஹேதுகக்ருபையாலே ப₄க்தி உண்டாயிற்றாகில் ப₄க₃வத்ப்ராப்திக்கு இது ஸாத₄நமானாலோ என்னில், அந்த ப₄க்த் யுத்பத்திஹேதுவான க்ருபைதானே ப்ராப்திக்கும் ஸாத₄நம் என்கிறார் மேல் (நலமருளினன் என்று தொடங்கி). ‘‘மயர்வற மதிநலமருளினன்’’ (திருவா.1-1-1), ‘‘ஆவாவென்றருள் செய்து’’ (திருவா. 5-1-9), ‘‘தானே இன்னருள் செய்து’’ (திருவா.5-1-10), ‘‘அது- வுமவனது இன்னருளே’’ (திருவா.8-8-3), ‘‘என்கொலம்மான்திருவருள்கள்’’ (திருவா.10 7 -4) என்று ஜ்ஞாநத₃ஶையோடு, உபாயத₃ஶையோடு, ப்ராப்தித₃ஶையோடு வாசியற ஆமூலசூட₃ம் அருளால் ‘‘மன்னுகுருகூர்ச்சடகோபன்’’ (திருவா,1-5-11) என்று தொடங்கி – ஸுகுமாரராயிருப்பார் பிடிதோறும் ‘நெய்’ என்னுமாப்போலே அவனுடைய அருளை யொழியச் செல்லாத இவர்க்கு. (அன்புக்கடியானதுவே அடி சேருகைக்கும் ஸாத₄நம்) ‘‘அறியாக்காலத்துள்ளே அடிமைக்கணன்புசெய்வித்து’’ (திருவா.2-3-3) என்று அறிவு நடையாடுகைக்கு யோக்₃யதையில்லாத அதிபா₃ல்யத்திலே அன்பை விளைத்தானென்றும், ‘‘ஆராவன்பிலடியேனுன்னடிசேர் வண்ணமரு ளாயே’’ (திருவா.6-10-2) என்கையாலே அந்த ப₄க்திக்கடியான க்ருபையே ப₄க₃வத்– ப்ராப்திக்கு ஸாத₄நம் என்கிறார். (114)
115. புணர்தொறுமென்னக்கலந்து பிரிந்து ஜ்ஞாநபக்திகளை வளர்த்தது கனங் குழையிடக் காது பெருக்குதலும், மாஸோபவாஸி போ₄ஜநப்புறப்பூச்சும்போலே ஆற்ற நல்ல மாபோகச்சிரமமாக.
இப்படி பரமக்ருபாவானானவன் இவர்க்கு ஸம்ஶ்லேஷவிஶ்லேஷங்களினாலே ஶோக– ஹர்ஷங்களை விளைவித்ததுக்கு ப்ரயோஜநம் என் என்னில், இவர்க்கு தே₃ஶ விஶேஷத்தில் அநுப₄வம் ஸாத்மிக்கைக்காக ஸம்ஶ்லேஷவிஶ்லேஷங்களினாலே ஜ்ஞாந ப₄க்திகளை வளர்த்து ஶ்ரமம் செய்வித்தபடி என்கிறார் (புணர்தொறும் என்று தொடங்கி). ‘‘புணர்தொறும்’’ (திருவா.10-3-2) என்கிறபாட்டில் ஸம்ஶ்லேஷிக்குந்தோறும்அந்த ஸம்ஶ்லேஷத்தின் அளவல்லாத ஸுக₂ஸாக₃ரம், அபரிச்சி₂ந்நமான ஆகாஶத்தையும் கடந்து அதுதானும் இதுக்குள்ளேயாம்படியான இவருடைய ஜ்ஞாநமும் தனக்குள்ளே– யாம்படி வ்யாப்தமான அந்த ஸுக₂ம், அவனுடைய விஶ்லேஷத்திலே பெருக்காறு அடிச்சுடுமாப் போலே ஸ்வப்நஸமமாய்ப்போய் அந்த ஸுக₂ம் போனவிடமெல்லாம் வ்யாப்தமாய்க் கொண்டு அணுபரிமாணமான ஆத்மாவின் அளவல்லாத அபிநிவேஶம் பெருகிற்றென்று சொல்லும்படி ஸம்ஶ்லேஷித்து ஜ்ஞாநத்தை வளர்த்து, விஶ்லேஷித்து ப₄க்திகளை வளர்த்தது. (கனங்குழையிடக் காது பெருக்குதலும் மாஸோபவாஸி போ₄ஜநப் புறப் பூச்சும்போலே) கனத்த பணிகளிடுகைக்குக் காது பெருக்குவாரைப்போலேயும், மாஸோபவாஸிகளுக்கு அப்போதே அஶநத்தை இடில் ஸாத்மியாதென்று ஶரீரத்திலே அந்நத்தை அறைத்துப் பூசியும் கஞ்சியைக் கொடுத்தும், குழம்பு கொடுத்தும் ஸாத்மிப்பிப்பாரைப்போலேயும்.
(ஆற்றநல்ல மாபோகச்சிரமமாக) ‘‘ஆற்றநல்ல வகைகாட்டுமம்மான்’’ (திருவா.4-5-5) என்றும், அர்ஜுநனுக்கு ஸாத்மிக்க ஸாத்மிக்க அர்த்த₂ம் அருளிச்செய்தாப்போலே எனக்கும் ஸாத்மிக்க ஸாத்மிக்கத் தன்னுடைய பரத்வாதி₃களை அநுப₄விப்பித்தான் என்று இவர் அருளிச்செய்தபடியே ப₄க₃வத₃நுப₄வம் என்று கனாக்கண்டறியாத இவர்க்கு ‘‘எம்மாவீடு’’ (திருவா.2-9-1) என்றும், ‘‘மாபோகம்’’ என்றும் சொல்லுகிறபடியே எல்லாப் படியாலும் விலக்ஷணமாய், ‘‘கொள்ளமாளா இன்பவெள்ளம்’’ (திருவா.4-7-2) என்கிறபடியே அதிஶயிதஜ்ஞாநஶக்திகரான நித்யஸூரிகளாலும் துலைத்தநுப₄விக்கவொண்ணாதபடி அபரிச்சே₂த்₃யமாயிருக்கிற தன்னோட்டை அநுப₄வத்தை முதலிலே ப்ரகாஶிப்பிக்கில் இவரைக்கிடையாதென்றும், அவ்வநுப₄வம் ஸாத்மிக்கைக்காகச் சிரமம் செய்வித்தபடி என்கிறார். (115)
116. இவற்றால் வரும் ஸம்ஶ்லேஷவிஶ்லேஷங்களாகிறன எளியனாய் நிற்கும் அரியனாய் எய்தான் என்கிற தர்ஶநஸமமான மாநஸாநுஸந்தா₄நமும் திண்கொள்ளப் பெறாத மநஶ்ஶைதில்யமும்.
இவர்க்கு இங்கு ஸம்ஶ்லேஷவிஶ்லேஷங்களாகச் சொல்லுகிறவை எவை என்னில், ப்ரத்யக்ஷஸமாநாகாரமான மாநஸாநுப₄வமும், அவ்வநுப₄வத்தை பா₃ஹ்ய ஸம்ஶ்லேஷாபேக்ஷைபண்ண, அது கிடையாமையாலே மாநஸாநுப₄வத்துக்கு வந்த கலக்கமும் என்கிறார் மேல் (இவற்றால் வரும் ஸம்ஶ்லேஷவிஶ்லேஷங்களாகிறன). அந்த ஜ்ஞாந- ப₄க்திகளை வளர்த்தத்தால் வரும் ஸம்ஶ்லேஷவிஶ்லேஷங்களாகிறனவை எவை என்னில், (எளியனாய் நிற்கும் அரியனாய் எய்தான் என்கிற த₃ர்ஶநஸமமான மாநஸ அநுஸந்தா₄நமும்) ‘‘கருத்துக்கு நன்றுமெளியனாய்’’ (திருவா.3-6-11), ‘‘நிற்கும் முன்னே வந்து’’ (திருவா.7-2-6), ‘‘கண்கள் காண்டற்கரியனாய்’’ (திருவா.3-6-11), ‘‘கைக்கு- மெய்தான்’’ (திருவா.3-6-11) என்றும் சொல்லுகையாலே என்னுடைய ஹ்ருத₃யத்திலே மிகவும் எளியனாய்க்கொண்டு என்முன்னே நிற்கும் என்றும், என் கண்ணுக்கு அவிஷயமாய்க் கொண்டு கையாலே அணைக்கைக்கு எட்டுகிறிலன் என்றும் சொல்லுகிற ப்ரத்யக்ஷஸமாநாகாரமாநஸாநுஸந்தா₄நமும், (திண்கொள்ளப்பெறாத மநஶ்- ஶைதி₂ல்யமும்) அந்த மாநஸாநுப₄வவைஶத்₃யத்தாலே ‘‘என் கண்கட்குத்திண்கொள்ள ஒருநாள் அருளாயுன் திருவுருவே’’ (திருவா.5-10-7) என்று பா₃ஹ்யஸம்ஶ்லேஷாபேக்ஷைபண்ணி அது கிடையாமையாலே அம்மாநஸாநுப₄வத்துக்கு வரும் குலைதலும் என்கிறார். (116)
117. புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவை அவை சரித்தவர்க்கு ப்ரியஹிதபரன்தான் துளக்கற எங்கும் தழைக்க நடத்தும்.
அபி₄மதவிஷயத்தில் ஸம்ஶ்லேஷவிஶ்லேஷங்களிரண்டும் நாட்டார்க்கு புண்யபாப– ப₂லமாயன்றோ உண்டாகிறதென்னில்; அந்த பாபங்கள் வாஸனையோடே போகப் பெற்ற இவர்க்கு ப்ரியஹிதபரனான ஈஶ்வரன்தானே நடத்தும் என்கிறார். (புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவை) ‘‘புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவென்றிவையாய்’’ (திருவா. 6 – 3 – 4) என்று நாட்டார்க்கு புண்யபாபப₂லமாய்க்கொண்டு வருகிற ஸம்ஶ்லேஷ– விஶ்லேஷங்களை, (அவை சரித்தவர்க்கு) ‘‘சார்ந்த இரு வல்வினைகளும் சரித்து மாயப் பற்றறுத்து’’ (திருவா. 1 – 5 – 10) என்று ஆத்மாவோடே பிரிக்கவொண்ணாதபடி சேர்ந்திருக்கிற புண்யபாபரூபமான ப்ரப₃லகர்மங்களை விரகர் நெடுஞ்சுவர் தள்ளுமாப் போலே ஒருகாலே வாஸனையோடே போம்படி ஈஶ்வரன் போக்குகையாலே அவை இல்லாத இவர்க்கு, (ப்ரியஹிதபரன்தான் துளக்கற எங்கும் தழைக்க நடத்தும்) ப்ரியபரனாய்க்கொண்டு ஜ்ஞாநத்தை வர்த்தி₄ப்பித்தும் ஹிதபரனாய்க்கொண்டு ப₄க்தியை வர்த்தி₄ப்பித்தும் போருகிற ஈஶ்வரன்தானே.
[சிக்கென இத்யாதி₃] துளக்கற்றமுதமாய்க்கொண்டு ‘‘எங்கும் பக்கநோக்கறியான்’’ (திருவா. 2 – 6 – 2) என்று விபூ₄திவ்யாபாரத்தை ஒருங்கவிட்டுக்கொண்டு வந்து என்– னுள்ளே சிக்கெனப் புகுந்து அத்தாலே விகஸிதஸஹஜஸார்வஜ்ஞ்யனுமாய், ‘‘விஜ்வர:’’ (ரா. பா. 1 -85) என்கிறபடியே உள்நடுக்கம் தீர்ந்து நிரதிஶயபோ₄க்₃யனுமாய் நாச்சிமாரையும் புரிந்து பாராமல் என்னளவிலே நிரந்தரமாக கடாக்ஷிக்கையாலே திருக்கண்களும் செவ்விபெற்று இப்படி என்னுள்ளே இருந்தான் என்றும், ‘‘தழைநல்ல இன்பம் தலைப்பெய்தெங்கும் தழைக்கவே’’ (திருவா.9-5-10) என்று ‘விஶ்லேஷ- வ்யஸநத்தாலே நான் முடியாநின்றேன், என்னுடைய க்லேஶம் கண்டு ஜகத்து க்லேஶிக்கவேண்டாவே’ என்றும், தீப்பாய்வார் ‘நாடுவாழ, நகரி வாழ’ என்று வாழ்த்து- மாப்போலே ‘ஜகத்தெங்கும் ஆநந்தமானது அபி₄வ்ருத்₃த₄மாயிருக்க’ என்று தாம் முடிகையிலே வ்யவஸிதராயும் இப்படித் தாமே பேசும்படி நடத்திக்கொண்டு போரும் என்கிறார். (117)
118. ஜ்ஞாநத்தில் தம் பேச்சு, ப்ரேமத்தில் பெண் பேச்சு.
ஆனால் இவர்க்கு இந்த ஜ்ஞாநத₃ஶையில் பேச்சேது? ப்ரேமத₃ஶையில் பேச்சேது? என்னில், ஜ்ஞாநத்தில் தம் பேச்சு, ப்ரேமத்தில் பெண்பேச்சு என்கிறார். (118)
119. தேறும் கலங்கி என்றும் தேறியும் தேறாதும் ஸ்வரூபம் குலையாது.
பேச்சில் வைஷம்யமொழிய ஸ்வரூபத்தில் மாறாட்டமில்லை என்கிறார் (தேறும் கலங்கி என்று). ‘‘சிந்திக்கும் திசைக்கும் தேறும் கைகூப்பும்’’ (திருவா.7-2-5), ‘‘கலங்கிக் கை தொழும் நின்றிவள்’’ (திருவா. 2-4-4) என்றும், ‘‘தேறியும் தேறாதுமாயோன் திறத்தனளே இத்திருவே’’ (திருவா.4-4-7) என்றும் பிண்ட₃த்வ-க₄டத்வ-கபாலத்வ- காபாலிகத்வாத் அவஸ்தை₂களில் ம்ருத்தான ஆகாரம் அநுவர்த்திக்குமாப்போலே தெளிந்த {தேறின – பா.} போதோடு கலங்கினபோதோடு வாசியற இரண்டவஸ்தையிலும் அஞ்ஜலி ஹஸ்தையாய்க் கொண்டு ‘அவனையல்லதறியாள்’ என்கையாலே ஜ்ஞாநத₃ஶையில் தாமான தன்மையோடு ப்ரேமத₃ஶையில் பிராட்டிமார்பேச்சான அவஸ்தை₂யோடு வாசியற ஶேஷத்வத்தில் கலக்கமற்று ஏகரூபமாயிருக்குமென்கிறார்.
120. அடியோம் தொடர்ந்து குற்றேவல் அடிச்சியோம் அடிக்கீழ்க்குற்றேவலாகை
அவஸ்தா₂ந்தரம்.
ஆனால் பின்னை அவஸ்தா₂ந்தரம் கூடினபடி என் என்னில் (அடியோம் தொடர்ந்து குற்றேவல் அடிச்சியோம் அடிக்கீழ்க்குற்றேவலாகை அவஸ்தா₂ந்தரம்) ஸ்வரூபத்திலும் ஸ்வரூபாநுரூபமான வ்ருத்திப்ரார்த்த₂னையிலும் வாசியில்லை. தம் பேச்சும் பிராட்டிமார் பேச்சுமான இவ்வளவே அவஸ்தா₂ந்தரம். (120)
121. வித்₃யை தாயாகப்பெற்று பாலுமமுதுமான திருநாமத்தாலே திருமகள்போல வளர்த்த தஞ்சமாகிய தந்தை மற்றொருவர்க்குப் பேச்சுப்படாமல், விஶ்வபதி லோகபர்த்தா என்னும் மணவாளரை, நாலிரண்டிழை கொண்டு முப்புரியான பரஹ்மஸூத்ர பந்த₄த்தோடே வரிப்பிக்க, பரம்புருடன் கைக்கொண்டபின் சதுர்த்தி₂யுள்புக்கு, இடையீடு நடுக்கிடக்கும் நாள்கழித்து ஜந்மபூமியை விட்டகன்று, சூழ்விசும்பிற்படியே உடன் சென்று, குடைந்து நீராடி வியன்துழாய் அஞ்சனத்தின் நீறு நானப்பொடி பீதகவாடை பல்கலன்கொண்டு நோக்கியர் அலங்கரித்துப் பல்லாண்டிசைத்துக் கவரிசெய்ய, நிறைகுட- விளக்கமேந்தி இளமங்கையர் எதிர்கொள்ள வைகுந்தம் புக்கிருந்து வாய்மடுத்துப் பெரும் களிச்சியாக வானவர் போகமுண்டு கோப்புடைய கோட்டுக்கால் கட்டில் மிதித்து ஆரோஹித்து ப₄ரத-அக்ரூர- மாருதிகளைப் பரிஷ்வங்கித்த மணிமிகுமார்விலே குருமாமணியாய் அணையும் வஸ்துவுக்கு மணிவல்லிப்பேச்சு வந்தேறியன்று.
ஆனால் இவர்க்குத்தாமான தன்மை ஸ்வாபா₄விகமாய், பிராட்டிமார்த₃ஶை வந்தேறியாயிருக்குமோ? என்னில்; ப₄க₃வதே₃கபரதந்த்ரமுமாய், ப₄க₃வதே₃க போ₄க₃முமாய் இருக்கிற ஆத்மவஸ்துவுக்கு ஸ்த்ரீத்வம் வந்தேறியல்லாமையாலே பிராட்டிமார்த₃ஶை ஸ்வாபாவிகம் என்கிறார் (வித்₃யை தாயாக என்று தொடங்கி). ‘‘ஸ ஹி வித்₃யாதஸ்தம் ஜநயதி தச்ச்₂ரேஷ்ட₂ம் ஜந்ம’’ (ஆப.த₄ர்ம.) என்றும், ‘‘உத்பாத₃க ப்₃ரஹ்ம பித்ரோர்க₃ரீயாந் ப்₃ரஹ்மத₃: பிதா’’ என்றும் சொல்லுகையாலே ஆசார்யன் திருமந்த்ரமுக₂த்தாலே ஸ்வரூப ஜ்ஞாநத்தை உண்டாக்க, தத₃நந்தரம் இவனுடைய ஸத்₃பா₄வமாகையாலே வித்₃யை தாயாகப்பெற்று, ‘‘தேனும் பாலுமமுதுமாய திருமால் திருநாமம்’’ (திருமொழி 7-10-6) என்ற போ₄க்₃யபதா₃ர்த்த₂த்தாலே ‘‘திருமகள்போல வளர்த்தேன்’’ (பெரியா. திரு.3-8-4) என்கிறபடியே அநந்யார்ஹஶேஷத்வாதி₃களாலே பிராட்டியோடொக்கச்சொல்லும்படி வளர்த்துக்கொண்டுபோந்த.
‘‘தஞ்சமாகிய தந்தைதாய்’’ (திருவா.3-6-9) என்று தே₃ஹ உத்பாத₃க னாய் ‘‘ ஆபத் காலங்களிலே ‘‘ஸ பித்ரா ச’’ (ரா.ஸு.38-32) இத்யாதி₃களிற்படியே கைவிடுமவனைப் போலன்றிக்கே ‘‘பூ₄தாநாம் யோவ்யய: பிதா’’ (பா₄ரதம்) என்கிற ஸம்ப₃ந்த₄முண்டாயிருக்கச் செய்தேயும் ஸம்ஸாரமோக்ஷங்கள் இரண்டுக்கும் பொதுவான பிதாவைப்போலு மன்றிக்கே மோக்ஷைகஹேதுவாய் எல்லா அவஸ்தையிலும் இவனுடைய உஜ்ஜீவநத்திலே நோக்காய், இவனுடைய ஹிதைஷியாய்ப்போருகிற ஆசார்யனாகிற பிதா.
(மற்றொருவர்க்குப் பேச்சுப்படாமல்) ‘‘மற்றொருவர்க்கென்னைப்பேசவொட்டேன்’’ (பெரியா. தி.3-4-5), ‘‘மானிடவர்க்கென்னு பேச்சுப்படில் வாழகில்லேன்’’ (நா.தி.1-5) என்று அந்யஶேஷத்வப்ரஸங்கமும்வாராதபடி. (விஶ்வபதி லோகப₄ர்த்தா– வென்னும் மணவாளரை) ‘‘பதிம் விஶ்வஸ்ய’’ (தை.நா.11) என்றும், ‘‘கௌஸல்யா லோகப₄ர்த்தாரம்’’ (ரா.ஸு.38-56) என்றும், ‘‘பணவாளரவணைப்பற்பல காலமும் பள்ளிகொள் மணவாளர்’’ (நா.தி.10-6) என்றும் சொல்லுகிறபடியே ப்ராப்த- ஶேஷியாய், ஸர்வரக்ஷகனானவனை. (நாலிரண்டிழைகொண்டு முப்புரியான ப்₃ரஹ்மஸூத்ரப₃ந்த₄த்தோடே வரிப்பிக்க) ★எட்டிழையாய் மூன்று சரடாயிருப்பதொரு மங்கலஸூத்ரம்போலே எட்டுத் திரு எழுத்தாய், மூன்று பதமாய், ஸர்வேஶ்வரனோடு அவிநாபூ₄தஸம்ப₃ந்த₄ப்ரகாஶகமான திருமந்த்ரமாகிற மங்க₃லஸூத்ரப₃ந்த₄த்தோடே ‘‘பாணிம் க்₃ருஹ்ணீஷ்வ பாணிநா’’ (ரா. பா₃. 23 – 27) என்று அவன் வரிக்கும்படி பண்ண.
(பரம்புருடன் கைக்கொண்டபின்) ‘‘பறவையேறுபரம்புருடா நீ என்னைக்கைக் கொண்ட பின்’’ (பெரியா. தி.5-4-2) என்று கருடவாஹநனான புருஷோத்தமன் கைக்கொண்ட அநந்தரம். (சதுர்த்தி₂யுள்புக்கு) விவாஹாநந்தரம் ஶேஷஹோமபர்யந்தமான சதுர்- தி₃வஸம்போலே ப்ரத₂மசதுர்த்தி₂யிலே சொல்லப்பட்ட ஶேஷத்வஜ்ஞாநாநந்தரம் சரம– சதுர்த்தி₂யில் சொல்லுகிற கைங்கர்யப்ரார்த்த₂னையில் அந்வயித்து. (இடையீடு நடுக்- கிடக்கும் நாள் கழித்து) ஒரு படுக்கையிலே த₃ம்பதிகளிருவருமிருக்கச் செய்தே ஸோமாதி₃– களான மூவர்களும் நடுவே இருக்கையாலே இவர்களுக்கு ஸ்பர்ஶயோக்₃யதை இல்லாதாப்போலே ஶேஷத்வஜ்ஞாநமும் ஶேஷவ்ருத்திப்ரார்த்த₂னையும் உண்டாய் இருக்கச்– செய்தே, ‘‘நண்ணியும் நண்ணகில்லேன் நடுவேயோருடம்பிலிட்டு’’ (திருவா.5-1-5) என்று ப₄க₃வத₃நுப₄வவிரோதி₄யாய், இடையீடான ஶரீரம் கிடக்கும் நாலுநாள் ப₄க₃வத₃நுப₄வம் கூடாமையாலே அந்நாலுநாளையும் ‘‘நாள்கடலைக்கழிமின்’’ (திருவா.1-6-7) என்று கழித்து.
(ஜந்மபூ₄மியை விட்டகன்று) ‘‘முற்றிலும் பைங்கிளியும் பந்துமூசலும் பேசுகின்ற சிற்றில் மென்பூவையும் விட்டகன்ற செழுங்கோதை’’ (திருமொழி.3-7-8) என்று ஒருவராலும் விடவொண்ணாத ஜந்மபூ₄மியான ஸம்ஸாரவிபூ₄தியை விட்டகன்று. (சூழ் விசும்பிற்படியே) ‘‘சூழ்விசும்பு’’ என்கிற திருவாய்மொழியிற்படியே அர்ச்சிராதி₃– மார்க்க₃ ஸ்த₂ராயிருக்கிற அர்ச்சிராதி₃புருஷர்களடைய அடைவே ஸத்கரிக்க. (உடன் சென்று) ‘‘அங்கவேனாடுடன்சென்று’’ (நா.தி.6-9) என்கிறபடியே அவன் முன்னே போகப் பின்னே போய். (குடைந்து நீராடி) ‘‘குள்ளக்குளிரக்குடைந்து நீராடாதே’’ (திருப்பாவை.13) என்கிற படியே ப₄ர்த்ருக்₃ருஹத்துக்குப்போம் பெண்ணை அவ்வூர்க்குளக்கரையில் குளிப்பாட்டக் கடவர்களிறே, அப்படியே விரஜைக்கரையிலே இப்பா- லுள்ள அழுக்கறும்படி நீராடி.
(வியன்துழாய் அஞ்சனத்தின் நீறு என்று தொடங்கி) ‘‘வியன்துழாய்க்கற்பென்று சூடும்’’ (மூ.திருவ.69), ‘‘ஆராரயில்வேற்கணஞ்சனத்தின் நீறணிந்து’’ (சி.மடல்), ‘‘மெய்திமிருநானப்பொடி’’ (பெரியா.தி.1-4-9), ‘‘பெருமானரையில் பீதகவண்ண- வாடை’’ (நா.தி.13-1), ‘‘பல்கலனும் யாமணிவோம்’’ (திருப்பாவை-27) என்றும், ‘‘தம் பஞ்சஶதாந்ய ப்ஸரஸாம் ப்ரதிதா₄வந்தி ஶதம் மாலாஹஸ்தா: ஶதம் சூர்ணஹஸ்தா: ஶதம் வாஸோஹஸ்தா:’’ (கௌஷீ. உப.) என்று குளக்கரையிலே ப₄ர்த்தாவினுடைய ப₃ந்து₄க்கள் வந்து அலங்கரிக்குமாப்போலே தி₃வ்யாலங்காரோபகரணங்களை ஏந்திக் கொண்டு மானேய் நோக்கிகளான ஐந்நூறு தி₃வ்யாப்ஸரஸ்ஸுக்கள் எதிரே வந்து ‘‘தம் ப்₃ரஹ்மாலங்காரேணாலங்குர்வந்தி’’ (கௌஷீ.உப.) என்கிறபடியே பரவிநியோ- கா₃ர்ஹமாம்படி அலங்கரித்து.
(பல்லாண்டிசைத்துக்கவரிசெய்ய) இவர்கள் விஷயத்தில் சாபலத்தாலே மங்க₃ளாஶாஸநம் பண்ணிச் சாமரமிட. (நிறைகுடவிளக்கமேந்தி இளமங்கையரெதிர் கொள்ள) ‘‘நிதியும் நற்சுண்ணமும் நிறைகுடவிளக்கமும் மதிமுகமடந்தையர்’’ (திரு.10-9-10) என்று மங்க₃ளாவஹமான மங்க₃ள தீ₃ப பூர்ண கும்ப₄ங்களையும் த₄ரித்துக்கொண்டு. ‘‘சதிரிளமங்கையர் தாம் வந்தெதிர்கொள்ள’’ (நா.தி.6-5) என்று நித்யநவயௌவன ஸ்வபாவைகளான வேறே சில திவ்யாப்ஸரஸ்ஸுக்கள் எதிர்கொள்ள.
(வைகுந்தம் புக்கிருந்து) ‘‘மன்னியமாதவேனாடு வைகுந்தம் புக்கிருப்பார்’’ (நா.தி.3-10) என்று ஶ்ரிய:பதியான ஸர்வேஶ்வரேனாடே தே₃ஶவிஶேஷப்ராப்தி பண்ணி. (வாய்மடுத்துப்பெருங்களிச்சியாக வானவர்போகமுண்டு) பின்பு ப₄ர்த்ருக்₃ருஹத்திலே த₃ம்பதிகளும் மற்றுமுள்ள ப₃ந்து₄க்களும் பெருங்களிச்சியுண்ணக்கடவரிறே; அப்படியே ‘‘அடியேன் வாய்மடுத்துப்பருகிக் களித்தேன்’’ (திருவா.2-3-9) என்றும், ‘‘கட்டெழில் வானவர் போகமுண்பாரே’’ (திருவா.6-6-11) என்றும் நித்யஸூரிகளுடைய போ₄க₃த்தை அவர்களோடொக்க முழுமிடறுசெய்து ‘‘ஸோஶ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்₃ரஹ்மணா விபஶ்சிதா’’ (தை. உப.) என்கிறபடியே பு₄ஜித்து.
(கோப்புடைய கோட்டுக்கால் கட்டில் மிதித்து ஆரோஹித்து) பின்பு ப₄ர்த்ரு ஸம்ஶ்லேஷத்துக்குப் படுக்கையிலே ஏறக்கடவதிறே; அப்படியே ‘‘கோப்புடைய சிங்காசனம்’ ( திருப்பாவை.23) என்றும், ‘‘குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் – மெத்தென்ற பஞ்ச சயனத்தின்மேலேறி’’ (திருப்பாவை.19) என்றும் சொல்லுகிறபடியே உப₄யவிபூ₄தியும் தொழிலாக வகுப்புண்ட ஸர்வாஶ்சர்யமயமான சீரியசிங்காசனத்திலே ‘‘தமேவம்வித் பாதே₃நாத்₄யாரோஹதி’’ (கௌஷீ.1-5) என்கிறபடியே பாத₃பீட₂த்திலே அடியிட்டேறி. (ப₄ரதாக்ரூரமாருதிகளைப் பரிஷ்வங்கி₃த்த மணிமிகுமார்விலே) ‘‘அங்கே ப₄ரதமாரோப்ய முதி₃த: பரிஷஸ்வஜே’’ (ரா.யு.130-41) என்றும், ‘‘ஸோப்யேநம் த்₄வஜவஜ்ராப்ஜ– க்ருத சிஹ்நேந பாணிநா | ஸம்ஸ்ப்ருஶ்யாக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸுகா₃ட₄ம் பரிஷஸ்வஜே’’ (வி.பு.5-18-2) என்றும், ‘‘ஏஷ ஸர்வஸ்வபூ₄தஸ்து பரிஷ்வங்கோ₃ ஹநூமத:’’ (ரா. யு.1-13) என்றும், ஸ்ரீப₄ரதாழ்வானையும், அக்ரூரனையும், திருவடியையும் அணைத்த மணிமிகுமார்விலே – ஸ்ரீகொஸ்துப₄மும் நிறம்பெறும்படி அழகுமிக்க திருமார்பிலே, (குருமாமணியாயணையும் வஸ்துவுக்கு) ஶ்லாக்₄யமாய், ஸர்வேஶ்வரத்வசிஹ்நமான அந்த ஸ்ரீகௌஸ்துப₄த்தோபாதி அவனுக்கு போ₄க்₃யமுமாய், தேஜஸ்கரமுமாய்க் கொண்டு அணைகிற ஆத்மவஸ்துவுக்கு. (மணிவல்லிப்பேச்சு வந்தேறியன்று) ‘‘வண்பூ மணிவல்லி யாரே பிரிபவர்தாம்’’ (திருவிரு. 9) என்று உதா₃ரமாய், அழகுமிக்கதாய், ஶ்லாக்₄யமான கொடிபோன்றவள் என்கிற ஸ்த்ரீத்வப்ரயுக்தமாய் வருகிற பேச்சு வந்தேறியன்று, ஸ்வாபா₄விகம் என்கிறார். (121)
122. இன்பும் அன்பும் முற்படுவது கொழுந்து விடுவதாகிறது கடிமா மலர்ப் பாவையோடு உள்ள ஸாம்ய ஷட்கத்தாலே..
கேவலம் ஸ்த்ரீத்வஸாம்யமேயன்றிக்கே பரிஶுத்₃த₄மான ஸ்வரூபத்தினுடைய யாதா₂த்ம்யத்துக்குப் பெரியபிராட்டியாரோடு அநந்யார்ஹத்வாதி₃களாலே ஸ்வரூப– ஸாம்யம் உண்டென்கிறார் (இன்பும் அன்பும் என்று தொடங்கி). (இன்பும் அன்பும் முற்படுவது கொழுந்துவிடுவதாகிறது) ‘‘நமக்கும் பூவின்மிசை நங்கைக்குமின்பனை’’ (திருவா.4-5-8) என்று – இன்று ஆஶ்ரயித்த நமக்கும் நித்யஸூரிகளுக்கும் அவ்வருகாய், ரூப கு₃ணத்தாலும் ஆத்மகு₃ணத்தாலும் பரிபூர்ணையாயிருக்கிற பெரியபிராட்டியார்க்கும் இன்பனாமிடத்தில் ‘இங்கே இன்பனாயாய்த்துப் பின்னே அவளுக்கு ஸ்நேஹிப்பது’ என்று பிராட்டிக்கு முன்னே தன்பக்கல் இன்பனாவது, ‘‘கோலமலர்ப் பாவைக்கன்பாகிய என் அன்பேயோ’’ (திருவா.10-10-7) என்று – நிரதிஶய- போ₄க்₃யதைகவேஷையான பெரியபிராட்டியாருக்கு அன்பனாகையாலே அவள்பரிக்₃ரஹமான என்பக்கலிலும் அன்பனானவன் என்று பெரியபிராட்டியார்பக்கல் அவனுக்குண்டான அன்பு தம்மளவாக வர்த்தி₄ப்பதாய், இப்படி இன்பு முற்படுவது, அன்பு கொழுந்துவிடுவதாகிறது. (கடிமாமலர்ப் பாவையோடுள்ள ஸாம்யஷட்கத்தாலே) ‘‘காவியங்கண்ணியெண்ணில் கடிமாமலர்ப் பாவையொப்பாள்’’ (திருமொழி.3-7-9) என்றும், ‘‘காவி’’ என்று செங்கழுநீராய், செவ்வரியாலும், கடைக் கண்ணில் சிவப்பாலும் செங்கழுநீர்போன்ற கண்ணழகை உடையள் என்கையாலே
ராகோ₃த்தரமான ஜ்ஞாநத்தை உடையள் என்றபடி.
இத்தால் மேற்சொல்லப்படுகிற அநந்யார்ஹஶேஷத்வஜ்ஞாநாதி₃ஷட்கத்துக்கும் உப– லக்ஷணம். அது என் என்னில், ‘‘கடிமாமலர்ப்பாவையொப்பாள்’’ என்று – இவளை ஆராயில் பரிமளப்ரசுரமான தாமரையை இருப்பிடமாக உடையளாய், நிருபாதி₄கமான ஸ்த்ரீத்வத்தை உடையளாகையாலே ரூபகுணத்தாலும், ஆத்மகுணத்தாலும் பூர்ணை- யாய்க்கொண்டு நிரதிஶயபோ₄க்₃யையாயிருக்கிற பெரியபிராட்டியாரோடொக்கச் சொல்லலாம்படியான அநந்யார்ஹஶேஷத்வமும், அநந்யஶரணத்வமும், அநந்ய-போ₄க₃த்வமும், ஸம்ஶ்லேஷத்தில் த₄ரிக்கை, விஶ்லேஷத்தில் த₄ரியாமை, ததே₃க– நிர்வாஹ்யத்வம் என்கிற ஆறு ப்ரகாரத்தாலே என்கிறார்; இனி அபி₄மதத்வம், அநு- கூலத்வம், நிரூபகத்வம், ஶேஷத்வஸம்ப₃ந்த₄த்₃வாராபா₄வம், புருஷகாரத்வம், ப்ராப்ய- பூரகத்வம் என்கிற இவை முதலான ஸ்வபா₄வவிஶேஷங்கள் பெரியபிராட்டியாருக்கே அஸாதா₄ரணமாயிருக்குமிறே. (122)
123. உண்ணாது கிடந்தோர்மாயையினால் என்னும் வீறுடைய முடிக்குரியாரோடு இத்திரு மண்ணேரன்ன ஒண்ணுதல் பின்னைகொல் என்கிற ஒப்பு தென்பால் நெடுமாடம் கடுஞ்சிலை அம்பெரியூட்டி நீறெழவெரித்த பெருந்தோற்றத்தாருயிர்க்காகுத்தன் ஆதியங்கால மண்புரை பொன்மாதின் துகளாடி எருதேழ்தழீஇச்சறையினார் .என்னுமவற்றிலே தோன்றும்.
இப்படிப் பெரியபிராட்டியாரோடு ஸாம்யம் சொன்னவளவன்றிக்கே நிரதிஶய– போ₄க்₃யதையை உடைய பிராட்டிமார் மூவரோடும் இவர்க்கு ஸாம்யம் உண்டு என்னுமாகாரம் இவருடைய பாசுரங்களிலே ப்ரகாஶிக்குமென்கிறார் (உண்ணாது என்று தொடங்கி). ‘‘உண்ணாதுறங்காதொலிகடலை ஊடறுத்துப் பெண்ணாக்கை ஆப்புண்டு தாமுற்ற பேது’’ என்றும், ‘‘ந மாம்ஸம் ராக₄வோ பு₄ங்க்தே ந சாபி மது₄ ஸேவதே’’ (ரா. ஸு.36-41), ‘‘அநித்₃ரஸ்ஸதம் ராமஸ்ஸுப்தோபி ச நரோத்தம:’’ (ரா.ஸு.36-44), ‘‘நைவ த₃ம்ஶாந்ந மஶகாந் ந கீடாந்ந ஸரீஸ்ருபாந் | ராக₄வோபநயேத்₃கா₃த்ராத் த்வத்₃– க₃தேநாந்தராத்மநா’’ (ரா.ஸு.36-42) என்கிறபடியே தீ₄ரோதா₃த்தநாயகனான சக்ரவர்த்தி திருமகனையும் தன்னுடைய விஶ்லேஷத்தில் ஊணுமுறக்கமுமற்று, கடித்ததும், ஊர்ந்ததும் அறியாதபடி பண்ணவல்ல வைலக்ஷண்யத்தால் வந்த வீறுடையளாய், ஸர்வேஶ்வரஸாம்ராஜ்யத்தில் அவேனாடொக்க அபி₄ஷிக்தையாகையாலே முடிக்குரியளாயிருக்கிற ஜநககுல ஸுந்த₃ரியான பெரியபிராட்டியாரோடும், ‘‘கிடந்திருந்து நின்றளந்து’’ (திருவா.2-8-7) என்கிற பாட்டின்படியே ஸர்வஜ்ஞனான ஸர்வேஶ்வரனையும், ப₃ஹுப்ரகாரமாகத் தன்னை அநுப₄வித்தாலும் பர்யாப்தனாகாதபடி பிச்சேற்றவல்ல வைலக்ஷண்யத்தை உடையளாய்ப் பெரியபிராட்டியாரோபாதி முடிக்கு உரியளான ஸ்ரீபூ₄மிப்பிராட்டியாரோடும்.
(ஓர் மாயையினால் இத்யாதி₃) நித்யஸூரிகள் ஸமாராத₄நபரராய்நிற்க, அவர்களையும் உபேக்ஷித்துத் தாழ்வுக்கெல்லையான இடைக்குலத்திலே க்ருஷ்ணனாய் வந்து பிறந்து, அவள்தன்னைப் பெறுகைக்கு ஶுல்கமாக இட்டு ம்ருத்யுஸமங்களான ருஷப₄ங்களின் கொம்பிலே கருமாறிப்பாய்ந்தாப்போலே தன்னைப்பேணாமல் சென்று விழும்படி அவனைப்பிச்சேற்றவல்ல வைலக்ஷண்யத்தை உடையளாய் அவர்களோபாதி முடிக்குரியளான நப்பின்னைப்பிராட்டியோடும்.
(இத்திரு மண்ணேரன்ன பின்னைகொல் என்கிற ஒப்பு) ‘‘தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத்திருவே’’ (திருவா.4-4-7), ‘‘மண்ணேரன்ன ஒண்ணுதலே’’
(இத்திரு மண்ணேரன்ன பின்னைகொல் என்கிற ஒப்பு) ‘‘தேறியும் தேறாதும் மாயோன்
திறத்தனளே இத்திருவே’’ (திருவா.4-4-7), ‘‘மண்ணேரன்ன ஒண்ணுதலே’’ (திருவிரு.50), ‘‘பின்னைகொல் நிலமாமகள்கொல்’’ (திருவா.6-5-10) என்று தேறின த₃ஶையோடு தேறாத த₃ஶையோடு வாசியற ‘‘சூரியனோடு ஒத்த ஒளியைப்போன்று ராமனோடு நான் வேறுபட்டவள் அல்லள்’’ (ரா. ஸு.21-16) என்கிறபடியே அவனையல்லது அறியாள் இத்திரு என்றும், ஸ்ரீபூ₄மிப்பிராட்டி– யாரோடொத்த பிரிதொன்றுக்கில்லாச் சிறப்பை உடையாள் என்றும், ‘நப்பின்னைப்பிராட்டியாரோ? ஸ்ரீபூ₄மிப் பிராட்டியாரோ? பெரியபிராட்டியாரோ?’ என்று விகல்பிக்கலாம்படி இவர்க்கு உண்டான ஸாம்யம்.
(தென்பால் இத்யாதி₃) ‘‘தென்பால்’’ (திருவிரு.77), ‘‘இலங்கைக்குழா நெடுமாடம் இடித்தபிரானார் கொடுமைகளே’’ (திருவிரு.36), ‘‘காயுங்கடுஞ்சிலை என் காகுத்தன் வாரானால்’’ (திருவா.5-4-3), ‘‘இலங்கைநகர் அம்பெரி உய்த்தவர்’’ இத்யாதி₃ (திருவா.4-2-8), ‘‘தீமுற்றத் தென்னிலங்கை ஊட்டினான் தாள் நயந்த யாமுற்றதுற்றாயோ’’ (திருவா.2-1-3), ‘‘மாறில் போரரக்கன்’’ இத்யாதி₃ (திருவா.6-1-10) ‘‘கிளிமொழியாள்காரணமா’’ இத்யாதி₃ (திருவா.4-8-5), ‘‘என்னாருயிர்க்காகுத்தன்’’ இத்யாதி₃ (திருவா.9-5-6) என்று சக்ரவர்த்தி திருமகனான அவ்வவதாரத்தையும், அவ்வவதாரத்திலுண்டான வியத்தகு செயல்களையும் அநுப₄விக்க வேணும் என்று ஆசைப்பட்டுப் பேசின இப்பாசுரங்களிலும்.
(ஆதியங்காலம் இத்யாதி₃) ‘‘ஆதியங்காலத்தகலிடங்கீண்டவர்’’ (திருவா.4-2-6), ‘‘மண் புரை’’ இத்யாதி₃ (திருவா.6-6-5), ‘‘மண்ணளந்த – செவ்வாய்’’ இத்யாதி₃ (5-4-4), ‘‘ஞாலப்பொன்மாதின் மணாளன்’’ இத்யாதி₃ (திருவிரு. 50), ‘‘ஏனமொன்றாய் மண்துகளாடி’’ இத்யாதி₃ (திருவிரு.55) என்று ஸ்ரீவராஹமாக தோன்றியும் அதில் வியத்தகு செயல்களையும் அநுப₄விக்க ஆசைப்பட்டுப் பேசின இவர் பாசுரங்களிலேயும்.
(எருதேழ்தழீஇச்சறையினார் இத்யாதி₃) ‘‘எருதேழ்தழீஇ’’ (திருவா.4-2-5) என்று தொடங்கி ‘‘நாளுநாள் நைகின்றதால்’’ என்றும், ‘‘நிறைவினால் குறைவில்லா’’ (திருவா.4-8-4) என்று தொடங்கி ‘‘சறையினார் கவராத தளிர்நிறத்தால் குறைவிலமே’’ என்று நப்பின்னைப்பிராட்டியார் ஆசைப்பட்ட க்ருஷ்ணாவதாரத்தையும், அதில் அபதா₃நங்களையும் அநுப₄விக்க ஆசைப்பட்டுப் பேசின இப்பாசுரங்களிலேயும் ப்ரகாஶிக்குமென்கிறார். (123)
124. இவர்கள் தேடிநிற்கப் பொய்கை முதுமணல் முல்லைப் பந்தல் முற்றம் மச்சொடுமாளிகை அவ்வவ்விடம் புக்கு வாரிச்சிதைத்துப் பறித்துக்கிழித்து கோயின்மை குறும்புசெய்து அல்லல் விளைத்துக் கவரும் உகக்கு நல்லவர் முழுசி ஆவரென்னும் தேன் மொழியாலே கோகுலத்தை மறப்பிக்கும் நகரஸ்த்ரீகள், நரகனைத் தொலைத்துக் கவர்ந்த பதினாறு பல்லாயிரம் எண்ணிரந்தார் பா₄வம், கடல்ஞாலம் மின்னிடை மல்லிகை வேய்மரு பேய்முலை முனிந்து மற்பொரு விறல் கஞ்சனை மங்கநூற்ற வாயும் தீர்ப்பாரென்னும் அவற்றிலே தோன்றும்.
அவ்வளவேயன்றிக்கே, ப்ரதா₄நமஹிஷிகளான இவர்களையும் உபேக்ஷித்துவந்து மேல்விழும்படியான வைலக்ஷண்யத்தை உடையரான திருவாய்ப்பாடியில் பெண்களு– டைய பா₄வமும், அவர்களையும் தங்கள் பேச்சழகாலே மறப்பிக்கும்படியான ஸ்ரீமதுரை- யில்பெண்களுடைய பா₄வமும், நரகவதா₄நந்தரம் பரிக்₃ரஹித்த ‘‘ஷோட₃ஶஸ்த்ரீ– ஸஹஸ்ராணி’’ (வி.பு.5-31-18) என்கிற ஸ்ரீமத்₃த்₃வாரகையில் பதினாறாயிரம் தேவிமார் களுடைய பா₄வமும்இவர்க்குண்டான ஆகாரம் இவர்பேச்சிலே தோன்றும் என்கிறார் (இவர்கள் தேடிநிற்க என்றுதொடங்கி).
‘‘தேடித்திருமாமகள் மண்மகள் நிற்ப’’ (திருமொழி 10-8-9) என்று இப்படி ப்ரதா₄ந– மஹிஷிகளான இவர்களும் தேடிநிற்கும்படி இவர்களை உபேக்ஷித்துவந்து. (பொய்கை முதுமணல் முல்லைப்பந்தல் முற்றம் மச்சொடுமாளிகை அவ்வவ்விடம் புக்கு வாரிச் சிதைத்துப் பறித்துக் கிழித்துக் கோயின்மை குறும்புசெய்து அல்லல் விளைத்துக் கவரும் உகக்கும் நல்லவர்) (பொய்கை) ‘‘இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்’’ (நா.தி.3-2), ‘‘மூத்தவைகாண முதுமணற்குன்றேறி’’ (பெரியா. தி.1-10-8) , ‘‘முல்லையின் பந்தர்நீழல் மன்னி அவளைப் புணரப்புக்கு’’ (பெருமா.தி.6-8), ‘‘முற்றத்தூடுபுகுந்து நின்முகங்காட்டிப் புன்முறுவல் செய்து’’ (நா.தி.2-9), ‘‘மச்சொடு மாளிகையேறி’’ (பெரியா.தி.2-7-3), ‘‘அவ்வவ் விடம் புக்கு அவ்வாயர் பெண்டிர்க்கணுக்கனாய்’’ (பெரியா. தி.3-2-5) என்று அவர்கள் ஜலக்ரீடைபண்ணுமிடம், அவர்கள் விளையாடும் இடம், அவ்வோவிடங்களிலே புக்கு.
‘‘துகில்வாரியும் சிற்றில் சிதைத்தும்’’ (திருமொழி.3-8-8),‘‘பந்துபறித்துத் துகில் பற்றிக் கீறி’’ (திருமொழி 10- 7-5) என்றும் அவர்களுடைய துகிலைவாரியும், அவர்களுடைய லீலாஸ்தா₂நங்களை அழித்தும், அவர்களுடைய லீலோபகரணங்களைப் பற்றிக் கொண்டும், ‘‘கோயின்மைசெய்து கன்மமொன்றில்லை’’ (திருவா.6-2-6), ‘‘குறும்பு செய்வாேனார் மகனைப்பெற்ற’’ (நா. தி.12-3), ‘‘கொள்ளைகொள்ளிக்குறும்பனை’’ (நா. தி. 13-8) என்றும், அராஜகமாய், ஸ்வதந்த்ரமான செயலைச்செய்து, ‘‘அல்லல் விளைத்த பெருமான்’’ (நா. தி. 13 – 10) என்கிறபடியே ஆரவாரத்தை விளைத்து.
‘‘முன்கைவளை கவர்ந்தாய்’’ (திருமொழி.10-9-2), ‘‘நீ உகக்கு நல்லவரொடும் உழிதந்து’’ (திருவா.6-2-6) என்றும் அவன் இப்படி மேல்விழவேண்டும்படியான வைலக்ஷண்- யத்தையுடைய திருவாய்ப்பாடியில் பெண்களுடைய பா₄வம். (கடல்ஞாலம் மின்னிடை மல்லிகை வேய்மரு பேய்முலை முன்னின்று) என்று – ‘‘து₃ஷ்டகாளிய திஷ்டா₂த்ர க்ருஷ்ேணாஹமிதி சாபரா’’ (வி.பு.5-13-27), “க்ருஷ்ணோஹமேஷ லலிதம் வ்ரஜாம்யாலோக்ய தாம் கதி:” என்று அவர்கள் அநுகரித்தாப்போலே ‘‘கடல்ஞாலம் செய்தேனும் யானேயென்னும்’’ (திருவா.5-6-1) என்று இவரும் அநுகரிக்கையாலும், ★மின்னிடைமடவாரிலே அவனோடே ஊடுகையாலும், ★மல்லிகைகமழ் தென்றலிலே பகல்போதெல்லாம் பசுமேய்க்கப்போன க்ருஷ்ணனைப் பசுக்களின் முற்கொழுந்தில் காணாதே பிற்கழையிலே வருமளவில் பற்றாமல் ஒரு ஸந்த்₄யையில் திருவாய்ப்பாடியில் பஞ்சலக்ஷம்குடியில் பெண்களுடைய ஆற்றாமையை இவரொரு– வருமுடையராய்க் கொண்டு பேசுகையாலும், ★வேய்மருதோளிணையில் ராத்ரியெல்லாம் க்ருஷ்ண ஸம்ஶ்லேஷம் ப்ரவ்ருத்தமாய் அவன் பசுமேய்க்கப்போகிற ப்ராத:காலம் வந்தவாறே அவன் அணைத்துக்கொண்டிருக்கச்செய்தேயும், அவன் விஶ்லேஷித்தானாக அதிஶங்கைபண்ணி அவனுடைய முகத்தைப் பார்த்துத் தம்முடைய ஆற்றாமையைப் பேசுகையாலும், ‘‘பேய்முலையுண்டு சகடம்பாய்ந்து’’ (திருவா.5-3-8), ‘‘முனிந்து சகடமுதைத்து’’ (திருவா.7-3-5) என்கிற பாட்டுக்களிலே பூதநாஶகட யமளார்ஜுநாதிகளை நிரஸித்த க்ருஷ்ணனைகிட்டுவதென்ேறா என்றும், அப்படிப்பட்ட க்ருஷ்ணனுக்கு என்னுடைய ஸ்த்ரீத்வத்தைத் தோற்றேன் என்றும்சொல்லுகிற பேச்சுக்களிலே இவர்க்கு உண்டென்னுமாகாரம் தோன்றும்.
(முழுசியாவரென்னும் தேன்மொழியாலே கோகுலத்தை மறப்பிக்கும் நகரஸ்த்ரீகள் என்று) க்ருஷ்ணன் ஸ்ரீமாலாகாரக்ருஹத்திலே திருமாலை சாத்தி, கூனிபக்கலிலே சாந்து சாத்தி, ராஜமார்க்கத்தாலே எழுந்தருளி, குவலயாபீடநிரஸநம் பண்ணிநின்றருளினபோது, ‘‘முழுசி வண்டாடிய தண்டுழாய்’’ (திருமொழி .2-8-7), ‘‘ஆவரிவை செய்தறிவார்’’ (திருமொழி.3-3-7) என்கிற பாட்டுக்களில் சொல்லுகிறபடியே ‘‘ஸக்₂ய: பஶ்யத க்ருஷ்ணஸ்ய முக₂மத்யருணேக்ஷணம் | க₃ஜ-யுத்₃த₄க்ருதாயாஸஸ்வேதா₃ம்பு₃ கணி காசிதம்’’ (வி.பு.5-20-54) என்று ஒப்பனையழகிலும், வடிவழகிலும், குவலயாபீட நிரஸநமாகிற சேஷ்டிதத்திலும் தோற்று, ‘‘மழறுதேன்மொழியார்கள்’’ (திருவா.6-2-5) என்று அந்யோந்யம் தங்களிலே பேசுகிற மழலைத்தேன்போலே இனிதான பேச்சுக்களினாலே ‘‘மது₄ராம் ப்ராப்ய கோ₃விந்த₃: கத₂ம் கோ₃குலமேஷ்யதி | நக₃ரஸ்த்ரீகலாலாபமது₄ ஶ்ரோத்ரேண பாஸ்யதி’’ (வி. பு.5-18-14) என்று கோகுலத்தில் பெண்கள்தானே பேசும்படி அவனை அந்த கோகுலத்தை மறக்கும்படி பண்ணும் ஸ்ரீமதுரையில் பெண்களுடைய பா₄வம்.
(மற்பொரு விறல்கஞ்சனை) ‘‘மற்பொருதோளுடை – மாயப்பிரானுக்கு’’ (திருவா.6-6-10) இத்யாதி – சாணூர முஷ்டிக நிரஸநம் பண்ணின ஆஶ்சர்யபூதனான க்ருஷ்ணனுக்கு அறிவையுடையளான என்னுடைய பெண்பிள்ளை எல்லாத்தையும் இழந்தாள் என்றும், ‘‘விறல் கஞ்சனை வஞ்சனை செய்தீரும்மைத்தஞ்சமென்றிவள் பட்டனவே’’ (திருவா.2-4-8) என்று பெருமிடுக்கனான கம்ஸனை நிரஸித்த உம்மைத்தஞ்சமென்று விஶ்வஸித்த இவளை நீர் இப்படிப்படுத்துவதே என்றும், சாணூரமுஷ்டிகரையும் கம்ஸனையும் நிரஸித்துநின்ற க்ருஷ்ணனை ஆசைப்படுகையாலே இவர்க்கு உண்டென்னுமாகாரம் தோன்றும்.
(நரகனைத் தொலைத்துக் கவர்ந்த பதினாறு பல்லாயிரம் எண்ணிறந்தார்பா₄வம்) ‘‘நரகனைத்தொலைத்த கரதலத்த மதியின் கருத்தோ’’ (திருமொழி.10-9-4), ‘‘மன்னு நரகன்தன்னைச்சூழ்போகி வளைத்தெறிந்து கன்னிமகளிர்தம்மைக்கவர்ந்த கடல் வண்ணன்’’ (பெரியா. தி.4-3-4) என்றும், ‘‘பதினாறாமாயிரவர் தேவிமார் பணிசெய்ய’’ ( நா. தி. 7-9), ‘‘பல்லாயிரம் பெருந்தேவிமார்’’ (பெரியா. தி.4-1-6) என்று நரகாஸுர- வதா₄நந்தரம் பரிக்₃ரஹித்த பதினாறாயிரம் தேவிமார்பா₄வமும். (மங்கநூற்ற வாயும் தீர்ப்பாரென்னும் அவற்றிலே தோன்றும்) ‘‘நூற்றுவரை அன்று மங்கநூற்ற’’ (திருவா.7-3-10) இத்யாதி₃ து₃ர்யோத₄நாதி₃கள் மண்ணுண்ணும்படி மந்த்ரித்த க்ருஷ்ணன் என் நெஞ்சை அபஹரித்தான் என்றும், ‘‘குரரி விலபஸி த்வம் வீதநித்₃ரா ந ஶேஷே ஸ்வபதி ஜக₃தி ராத்ர்யாமீஶ்வரக்₃ரஸ்தபோ₃தே₄ | வயமிவ ஸகி₂ கச்சித்₃கா₃ட₄4நிர்விண்ணசேதா நளிந நயந ஹாஸோதா₃ரலீலேக்ஷணேந’’ (பா₄க₃.10) இத்யாதி₃களால் ஸ்ரீமத்₃த்₃வாரகை– யில் பெண்கள் க்ருஷ்ணவிஷயத்திலே பேசினாப்போலே ★வாயுந்திரையுகளிலே நாரை அன்றில் தொடக்கமானவற்றுக்கு தா₄வள்யாதி₃ஸ்வபா₄வங்கள் நியதம் என்றறியாதே அவையும் தம்மைப்போல் நோவுபடுகிறனவாகக்கொண்டு தாம் நோவுபடுகையாலும், ★தீர்ப்பாரை யாமினியிலே ‘‘தேர்ப்பாகனார்க்கிவள் சிந்தைதுழாய்த்திசைக்கின்றதே’’ (திருவா.4-6-1) என்று அவனுடைய ஸாரத்₂யவேஷத்தில் அகப்பட்டு இவள் நெஞ்சு கலங்கினாள் என்று தொடங்கி, ‘‘வண்டுவராபதிமன்னனை ஏத்துமின்’’ (திருவா.4-6-10) என்று ஸ்ரீமத்₃ த்₃வாரகைக்கு நிர்வாஹகனானவனை மங்களாஶாஸநம் பண்ணவே இவர்வ்யாதி₄ பரிஹ்ருதமாம் என்று தலைக்கட்டுகையாலே இவர்க்கு உண்டானமை தோன்றும். (124)
125. இரானெனில் நசவாகக் குழைத்தவன் பின்தொடரவிருந்த வன்சிறையிலும் விதி₃தன் புணைவன் என்று ஜீவிதாதி₃களால் குறைவின்றி மாயும்வகை விஷஶஸ்த்ரங்கள்தேடி வில்வலவா ஹா என்று இரக்கமெழாக்கொடுமைகள் ஶங்கித்து என்னையும் ஜீவந்தீம் என்று-ஆள்விட்டுச் சுடரையடைந்து அகலகில்லா முற்றுவமை பெருமகளோடே.
ஆகக்கீழ், ப்ரதா₄நமஹிஷிகளான மூவரோடும் மற்றும் ப₄க₃வத்பரிக்₃ரஹமுடையா– ரோடும் ஆழ்வாருக்கு ஸாம்யமுண்டென்று சொல்லிற்றாய்த்து. இவர்களெல்லாரும் இவர்க்கு ஒருபுடைக்கு ஒப்பாய், ஸர்வதா₂ ஸாம்யமுள்ளது ஜநககுலஸுந்த₃ரியான
பெரியபிராட்டியாரோடே என்கிறார் (இரானெனில் ந ச ஆக என்று தொடங்கி). ‘‘மராமர- மெய்தமாயவன் என்னுளிரானெனில் பின்னை யானொட்டுவேனோ’’ (திருவா.1-7-6) என்றும், ‘‘ந ச ஸீதா த்வயா ஹீநா ந சாஹமபி ராக₄வ | முஹூர்த்தமபி ஜீவாவோ ஜலாந்மத்ஸ்யாவிவோத்₃த்₄ருதௌ’’ (ரா. அ.53-31) என்று சக்ரவர்த்தித்திருமகனைப்பிரியில் ஜலாது₃த்₃த்₄ருதமான மத்ஸ்யம்போலே முடியும்படியான பிராட்டியைப்போலே, இவரும் அவனைப்பிரியில் தாம் உளராகாதபடி ‘‘இலங்கைசெற்றாய் உன்னை என்னுள்ளே குழைத்தவெம்மைந்தா’’ (திருவா.2-6-9) என்று இவரோடு ஏகதத்த்வமென்னலாம்படி ஸம்ஶ்லேஷித்த சக்ரவர்த்தித்திருமகன் லங்காத்₃வாரத்தளவும் அவளைத்தேடிப்பின் தொடர்ந்தாப்போலே ‘‘எதிர்சூழல்புக்கு’’ (திருவா.2-7-6) என்று இவர்பிறந்த ஜந்மங்கள் தோறும் தானும் பின்தொடரும்படி, அவள் ராவணப₄வநத்திலே சிறையிருந்– தாப்போலே இவரும் ‘‘வன்சிறையில் அவன்வைக்கில்’’ (திருவா.1-4-1) என்று ஸம்ஸாரத்திலே சிறை இருந்தவிடத்தில், ப்ரதிகூலனான ராவணனுக்கு ‘‘விதி₃தஸ்ஸ ஹி த₄ர்மஜ்ஞஶ் ஶரணாக₃த வத்ஸல: | தேந மைத்ரீ ப₄வது தே யதி₃ ஜீவிதுமிச்ச₂ஸி’’ (ரா. ஸு.21-20) என்று ஹிதம் சொன்னாப்போலே இவரும் ப்ரதிகூலரான ஸம்ஸாரிகளுக்கு ‘‘புணைவன் பிறவிக்கடல் நீந்துவார்க்கே’’ (திருவா.2-8-1) என்று ஹிதமருளிச்- செய்கையாலும்.
(ஜீவிதாதி₃களால் குறைவின்றி) ‘‘ந ஹி மே ஜீவிதேநார்த்தோ₂ நைவார்த்தை₂ர் ந ச பூ₄ஷணை:’’ (ரா. ஸு.)என்று மஹாரத₂ரான சக்ரவர்த்தித்திருமகனையொழிய ராக்ஷஸிகள் நடுவே இருக்கிற எனக்கு என் ஆத்மாத்மீயங்களால் என்ன ப்ரயோஜநம் உண்டென்று பிராட்டி அவற்றை உபேக்ஷித்தாப்போலே ‘‘மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே’’ (திருவா.4-8-1) என்று தொடங்கி, ‘‘உயிரினால் குறைவிலமே’’, (திருவா.4-8-10), ‘‘உடம்பினால் குறைவிலமே’’ (திருவா.4-8-9) என்று இவரும், அவனுக்குறுப்பல்லாத நானும் என்னுடைமையும் வேண்டா என்று ஆத்மாத்மீயங்களை உபேக்ஷிக்கையாலும். (மாயும் வகை விஷஶஸ்த்ரங்கள்தேடி) ‘‘மாயும் வகையறியேன் வல்வினையேன்’’ (திருவா.4-8-1) என்றும், ‘‘விஷஸ்ய தா₃தா ந ஹி மேஸ்தி கஶ்சித் ஶஸ்த்ரஸ்ய வா வேஶ்மநி ராக்ஷஸஸ்ய’’ (ரா.ஸு.) என்று உயிர்க்கொலையாக்கி வைத்த ராவணக்₃ருஹத்திலே நற்கொலையாக்குவதித்தனை விஷம் தருவாரில்லையோ? விஷம்போலே நின்றுகொல்லுகையன்றிக்கே அப்போதே முடிப்பதொரு ஶஸ்த்ரம் தருவாரில்லையோ? என்று பிராட்டி முடியும் வகை தேடினாப்போலே இவரும் மாயும் வகை தேடுகையாலும்.
(வில்வலவா ஹா என்று) ‘‘புணராநின்ற மரமேழன்றெய்த ஒருவில்வலவாவோ’’ (திருவா.6-10-5) என்று – ‘‘ஹா ராம ஹா லக்ஷ்மண ஹா ஸுமித்ரே ஹா ராமமாதஸ்ஸஹ மே ஜநந்யா | ஹா ராம ஸத்யவ்ரத தீ₃ர்க்க₄பா₃ஹோ ஹா பூர்ணசந்த்₃ரப்ரதிமாநவக்த்ர’’ (ரா.ஸு.), ‘‘ஹா ஜீவலோகஸ்ய ஹிதப்ரியஸ்ய வத்₄யம் ந மாம் வேத்ஸி ஹி ராக்ஷஸாநாம்’’ (ரா. ஸு.) என்று பிராட்டி பெருமாளுடைய ஶௌர்யாதி₃களைச் சொல்லிக் கூப்பிட்டாப் போலே இவரும் கூப்பிடுகையாலும். (இரக்கமெழாக்கொடுமைகள் ஶங்கித்து) ‘‘க்₂யாத: ப்ராஜ்ஞ: க்ருதஜ்ஞஶ்ச ஸாநுக்ரோஶஶ்ச ராக₄வ: | ஸத்₃வ்ருத்தோ நிரநுக்ரோஶஶ்ஶங்கே மத்₃பா₄க்₃யஸங்க்ஷயாத்’’ (ரா.ஸு.26-13) என்று பெருமாளை நிர்க்₄ருணராக ஶங்கியா நின்றேன், என்னுடைய பா₄க்₃யஹாநியாலே என்று பிராட்டி அப்படி ஶங்கித்தாப்போலே, இவரும் ‘‘இரக்கமெழீரிதற்கென்செய்கென்’’ (திருவா.2-4-3) என்றும், ‘‘இலங்கைக் குழா நெடுமாடம் இடித்த பிரானார் கொடுமைகளே’’ (திருவிரு.36) என்றும், ‘‘அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்’’ (திருவா.8-1-4) என்றும் சொல்லுகிறபடியே அவரை நிர்க்ருணராக ஶங்கிக்கையாலும்.
(என்னையும் ஜீவந்தீமென்று ஆள்விட்டு) ‘‘ஜீவந்தீம் மாம் யதா₂ ராமஸ்ஸம்பா₄வயதி கீர்த்திமாந் | தத்த்வயா ஹநுமந் வாச்யோ வாசாத₄ர்மமவாப்நுஹி’’ (ரா.ஸு.39-10) என்று தம்முடைய ரக்ஷ்யவர்க்க₃த்திலே நானுமொருத்தி உளேனாகப்பெருமாளுக்கு விண்ணப்பம் செய் என்று பிராட்டி ஆள்விட்டாப்போலே, இவரும் ‘‘மாறில்போரரக்கன் மதிள் நீறெழச்செற்றுகந்த ஏறுசேவகனார்க்கென்னையுமுளளென்மின்கள்’’ (திருவா.6-1-10) என்று ஆர்த்தரக்ஷணத்திலே தீ₃க்ஷித்தவர்க்கு ஆர்த்தரிலே நானும் ஒரு ஆர்த்தை உளேனாகச் சொல்லுங்கோள் என்று பிராட்டியைப்போலே சதுஷ்பாத்தாயிருப்பது ஒன்றைத் தூதுவிடுகையன்றிக்கே ஷட்பத₃ங்களாய், பக்ஷபாதத்தை உடையனவாய், ஶாகா₂ஸஞ்சாரிகளாய், மது₄கரவ்ருத்திகளுமாய், அத ஏவ ஸாரக்₃ராஹிகளாயிருப்பார் பலரையும் தூதுவிடுகையாலும். (சுடரையடைந்து) ‘‘அநந்யா ராக₄வேணாஹம் பா₄ஸ்கரேண ப்ரபா₄ யதா₂’’ (ரா.ஸு.21-15) என்று பிராட்டி தன்னை அநந்யையாகப் பேசினாப்போலே, இவரும் ‘‘அரக்கியை மூக்கீர்ந்தாயை – சுடரை – அடியேனடைந்தேன் முதல்முன்னமே’’ (திருவா.2-3-6) என்று தம்மை அநந்யார்ஹமாகப் பேசுகையாலும்.
(அகலகில்லா) ‘‘அகலகில்லலேனிறையுமென்றலர்மேல்மங்கையுறைமார்பா’’ (திருவா 6-10-10) என்று பெரியபிராட்டியார் அவனுடைய திருமார்வைப்பற்றி அகலஶக்தை- அல்லேனென்னுமாப்போலே, ‘‘அடியேனுனபாதமகலகில்லேன்’’ (திருவா.6-10-9) என்று இவரும் அவன் திருவடிகளைப்பற்றி அகல ஶக்தனல்லேனென்கையாலும் முற்றுவமை ★பெருமகள் பேதை மங்கை தன்னோடே என்கிறார். அவள் மார்வைப்பற்றி அகல கில்லேன் என்னும்; இவர் தாளைப்பற்றி அகலகில்லேனென்பர். இதுவே இருவர்க்கும் வாசி. ஆனாலும் அவளைப் பற்ற இவர்க்குக் கால்கூறேற்றமுண்டிறே. (125)
126. பிரியிலிலேனுக்கு இளங்கோவும் அக்குளத்தில் மீனிறே.
இனிமேல், மற்றும் ப₄க₃வத்ப்ரத்யாஸத்தியையுடையரான லக்ஷ்மண-ப₄ரத-ஶத்ருக்ந த₃ஶரத₂-யஶோதா₃-ப்ரஹ்லாத₃-விபீ₄ஷண-மாருதி-அர்ஜுநன் என்கிற இவர்களோடு ஸாம்யமுண்டென்கிறார். (பிரியிலிலேனுக்கு) அவனைப்பிரியுமளவில் ‘‘நின்னலாலி- லேன் காண்’’ (திருவா.2-3-7) என்று இவரைப்போலே ஸத்தை அழிகைக்கு (இளங்கோவும்) ‘‘நேரிழையுமிளங்கோவும்’’ (பெருமா.தி 9-2) என்றும், ‘‘ந சாஹமபி ராக₄வ’’ (ரா.அ.53-31) என்று – பிராட்டியோடொக்கத் தம்மை ஏகப்ரக்ருதியாகச் சொன்ன இளையபெருமாளும். (அக்குளத்தில் மீனிறே) கீழ் ப்ரஸ்துதமான ஜலாந்- மத்ஸ்யமிறே. இத்தால் அவனைப் பிரியில் த₄ரியாமைக்குப் பிராட்டியும் இளையபெருமாளும் இவருமொக்குமென்றபடி. இத்தால் இளையபெருமாள் ஸாம்யம். (126)
127. அழுந்தொழும் ஸ்நேஹபாஷ்பாஞ்ஜலியோடே ருசிர- ஸாநுக்களில் கூவிக் கொள்ளும் பிரியாவடிமைக்குச் சரணே சரண் என்று வாளும் வில்லுங்கொண்டு ப₃ந்து₄வும் பிதாவுமவரே என்கையும், அன்னையென்செய்யிலென் ராஜ்யமும் யானே என்று பெருஞ்-செல்வமும் இச்சியாமல் வேண்டிச்சென்று திருவடியே சுமந்து விரைந்து வரும் அளவும் கண்ணநீர் பங்கமாக நிலந்துழாவிக் குடிக்கிடந்த கையறவும், கோதிலடிமை உறுமோ என்பித்த புலங்கொள் நித்ய ஶத்ரு விசிந்தநமுமான ப்₄ராதாக்கள், அப்பொழுதைக்கு அப்பொழுது போனாய் என்னும் மாதாபிதாக்கள், செந்தீ தண்காற்று இளநாகம் முதலான பகையறச் சிந்தைசெய்து எங்குமுளனென்னும் பள்ளிப்பிள்ளை, முற்றவிட்டு மற்றிலேனென்னும் த₄ர்மாத்மா வாளிபொழிந்த நிர்கு₃ண விஶ்வாத்மா உள்ளே உறைய வீரசரிதம் ஊணாக்க் கற்பார் பா₄வம் மற்றிலேன் என்னும் ராமதாஸன் பல்வகையும் கண்டு வெண்சங்கேந்தின ரூபபரனான ஶ்வேதன் முதலானார் படிகளும் காணலாம்.
(அழுந்தொழும் ஸ்நேஹபா₃ஷ்பாஞ்ஜலியோடே) ‘‘பா₃ல்யாத்ப்ரப்₄ருதி ஸுஸ்நிக்₃த₄:’’ (ரா. பா₃ 18-27) என்றும், ‘‘பா₃ஷ்பபர்யாகுலமுக₂:’’ (ரா. அ.31-1) என்றும், ‘‘ப்ரஹ்வாஞ்ஜலிபுடம் ஸ்தி₂தம்’’ (ரா. அ.16-26) என்றும் இளையபெருமாள் பெருமாளைப் பிரியில் த₄ரியாத ஸ்நேஹத்தாலே கண்ணும் கண்ணநீருமாய், அஞ்ஜலிஹஸ்தராய்க் கொண்டு ‘‘குருஷ்வ மாமநுசரம் வைத₄ர்ம்யம் நேஹ வித்₃யதே’’ (ரா. அ.31-24) என்றும், ‘‘ஸ்வயந்து ருசிரே தே₃ஶே க்ரியதாமிதி மாம் வத₃’’ (ரா. ஆ 15-7) என்றும்,‘‘ப₄வாம்ஸ்து ஸஹ வைதே₃ஹ்யா கி₃ரிஸாநுஷு ரம்ஸ்யதே | அஹம் ஸர்வம் கரிஷ்யாமி ஜாக்₃ரதஸ் ஸ்வபதஶ்ச தே’’ (ரா. அ.31-27) என்றும் சொல்கிறபடியே என்னை அநுசரனாகப் பண்ண வேணுமென்று ப்ரார்த்தி₂த்துச்செய்கிற அடிமைக்கு உபாயமாக ‘‘ஸ ப்₄ராதுஶ் சரணௌ கா₃ட₄ம் நிபீட்₃ய ரகு₄நந்த₃ந: | ஸீதாமுவாசாதியஶா ராக₄வஞ்ச மஹாவ்ரதம்’’ (ரா. அ.31-2) என்று நாச்சியார் புருஷகாரமாகத் திருவடிகளைக் கட்டிக்கொண்டு ‘‘அக்₃ரத: ப்ரயயௌ ராமஸ்ஸீதா மத்₄யே ஸுமத்₄யமா | ப்ருஷ்ட₂தஶ்ச த₄நுஷ்பாணி: லக்ஷ்மேணாநுஜகா₃ம ஹ’’ (ரா. ஆ.11-1) என்று ஸாயுத₄ராய்க்கொண்டு அவரைப்பின் சென்று ‘‘ப்₄ராதா ப₄ர்த்தா ச ப₃ந்து₄ஶ்ச பிதா ச மம ராக₄வ:’’ (ரா.அ.58-31) என்று பெருமாளை எல்லா உறவுமாகப் பற்றினாப்போலே.
இவரும் அப்படியே (அழுந்தொழுமித்யாதி₃ – பிரியாவடிமைக்கு) ‘‘அழுந்தொழும்’’ (திருவா.7-2-8) என்று அழுவது தொழுவதாய், ‘‘திருவேங்கடத்தெழில்கொள்சோதி எந்தை தந்தை தந்தைக்கு – ஒழிவில்காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்யவேண்டும் நாம்’’ (திருவா.3-3-1) என்று திருமலையிலே நின்றருளின பரம- ஸ்வாமிக்கு ஸர்வதே₃ஶ-ஸர்வகால-ஸர்வாவஸ்தோ₂சிதமான ஸர்வஶேஷவ்ருத்திகளை– யும், ‘‘முகப்பே கூவிப்பணிகொள்ளாய்’’ (திருவா.8-5-7) என்கிறபடியே ஏவி அடிமைகொள்ள வேணுமென்று ப்ரார்த்தி₂த்து, ‘‘பிரியாவடிமை என்னைக்கொண்டாய்’’ (திருவா.5-10-11) என்று விச்சே₂தி₃யாதபடியான கைங்கர்யத்துக்கு. (சரணே சரணென்று) ‘‘நாகணைமிசை நம்பிரான் சரணேசரண்நமக்கு’’ (திருவா. )என்று அவன் திருவடிகளை உபாயமென்று அத்₄யவஸித்து.
‘‘வாளும் வில்லும் கொண்டு பின்செல்வார் மற்றில்லை’’ (திருவா.8-3-3) என்று அவற்றைக்கொண்டு தாம் பின்னே திரிய ஆசைப்பட்டு. (ப₃ந்து₄வும் பிதாவும் அவரே என்கையும்) ‘‘சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நன்மக்களும் மேலாத்தாய் தந்தையுமவரே இனியாவார்’’ (திருவா.5-1-8) என்று ஸர்வேஶ்வரனே எல்லா உறவு முறையாகப் பற்றுகையாலும்.
(அன்னை என் செய்யிலென் இத்யாதி₃) ஸ்ரீப₄ரதாழ்வான் பெருமாளுடைய திருவபி₄ஷேகத்தைக் கைகேயி விலக்கின சீற்றத்தாலே ‘‘ஹந்யாமஹமிமாம் பாபாம் கைகேயீம் து₃ஷ்டசாரிணீம்’ (ரா. அ.78-22) என்கிறபடியே கைகேயியைச்சீறி உபேக்ஷித்து ‘‘ராஜ்யஞ்சாஹஞ்ச ராமஸ்ய’’ (ரா. அ.82-12) என்று – ராஜ்யமும் நானும் பெருமாளுக்கு ஶேஷமென்றும், ‘‘ம்ருதே து தஸ்மிந் ப₄ரதோ வஸிஷ்ட₂ப்ரமுகை₂ர்– த்₃விஜை: | நியுஜ்யமாநோ ராஜ்யாய நைச்ச₂த்₃ராஜ்யம் மஹாப₃ல:’’ (ரா.பா₃1-33) என்றும் வஸிஷ்டா₂தி₃ புரோஹிதர் ராஜாவாக வேணுமென்று அபேக்ஷிக்க, ‘‘இக்ஷ்வா- கூணாமியம் பூ₄மிஸ் ஸஶைலவநகாநநா |’’ (ரா. கி.18-6) என்கிற மஹதை₃ஶ்வர்யத்தை இச்சி₂யாதே, ‘‘அயாசத்₃ப்₄ராதரம் ராமமார்யபா₄வபுரஸ்க்ருத:’’ (ரா. பா₃.1-35) என்று பௌரஜநங்களோடே பெருமாள்திருவடிகளிலே சென்று மீண்டெழுந்தருளவேணும் என்றபேக்ஷிக்க, ‘‘பாது₃கே சாஸ்ய ராஜ்யாய ந்யாஸம் த₃த்த்வா புந:புந:’’ (ரா.பா₃1-37) என்று அவரும் அப்படிச் செய்யாதே திருவடிநிலையைக் கொடுத்துவிட.
‘‘பாது₃கே தே புரஸ்க்ருத்ய’’ (ரா. யு.124-4) என்று அத்திருவடிநிலையை முன்னிட்டுக் கொண்டிருந்து, ‘‘ஶிரஸா யாசதோ யஸ்ய வசநம் ந க்ருதம் மயா’’ (ரா. யு.121-19) என்கிற இழவு திருவுள்ளத்திலே கிடக்கையாலே ‘‘ந மே ஸ்நாநம் ப₃ஹுமதம் வஸ்த்ராண் யாப₄ரணாநி ச | தம் விநா கைகயீபுத்ரம் ப₄ரதம் த₄ர்மசாரிணம்’’ (ரா. யு.121-6) என்று – நாம் பிள்ளை ப₄ரதனையொழியக் குளித்தல் ஒப்பித்தல் செய்யக்கடவோமல்– லோமென்று பெருமாள் த்வரையோடே மீண்டு வருமளவும் ‘‘பங்கதி₃க்₃த₄ஸ்து ஜடில:’’ (ரா. யு.124-4) என்று கண்ணீராலுண்டான சேற்றிலே தரைக்கிடைகிடந்து இக்ஷ்வாகு- குலமர்யாதை தப்பாமலிருந்து, ‘‘க்ருதம் த₃ஶகு₃ணம் மயா’’ (ரா. யு.127-56) என்று பெருமாளுடைய தி₃வ்யைஶ்வர்யத்தை ஒன்று பத்தாகப் பெருக்கி, ‘‘ஸ காமமநவாப்- யைவ’’ (ரா.பா₃1-38) என்று தாம் ஆசைப்பட்ட பொருள் கைப்படாத இழவோடே இருந்தாப் போலே.
இவரும் அப்படியே ‘‘அன்னை என் செய்யிலென்’’ (திருவா.5-3-6) என்று – தாயார் முடியிலென்? பிழைக்கிலென்? என்று உபேக்ஷித்து. (ராஜ்யமும் யானே என்று) ‘‘யானே நீ என்னுடைமையும் நீயே’’ (திருவா.2-9-9) என்று ஆத்மாத்மீயங்கள் அவனுக்கு ஶேஷமென்று. (பெருஞ்செல்வமும் இச்சி₂யாமல்) ‘‘கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ் செல்வம் நெருப்பு’’ (திருவா.4-9-4) என்று ஐஶ்வர்யத்தை அக்₃நிஸமமாகக்கண்டு,
‘‘ஐங்கருவி கண்ட இன்பம் – ஒழிந்தேன்’’ (திருவா.4-9-10) என்கிறபடியே உபேக்ஷித்து. (வேங்கடவாணனை வேண்டிச்சென்று) அவனை அநுப₄விக்கவேணுமென்று வேண்டிச் சென்று இவர் அபேக்ஷித்தபடி கிடையாமையாலே. (திருவடியே சுமந்து) ‘‘திருவடியே சுமந்துழலக் கூட்டரிய திருவடிக்கள் கூட்டினை’’ (திருவா.4-9-9) என்று அவன் திருவடிகளை ஶிரஸா வஹிப்பிக்க ஶிரஸா வஹித்து. (விரைந்து வருமளவும்) வீடு திருத்துவான்போய் விண்ணுலகம் தருவானாய் விரைந்துவருமளவும். (கண்ணநீர் பங்கமாக்கி) ‘‘கண்ணநீர் கைகளாலிறைக்கும்’’ (திருவா.7-2-1) என்று கண்ணநீர் வெள்ளமிட இருந்து. (நிலந்துழாவி) ‘‘இருநிலம் கைதுழாவிருக்கும்’’ (திருவா.7-2-1) என்று ஆற்றாமையாலே நிலம் துழாவி.
(குடிக்கிடந்த) ‘‘குடிக்கிடந்தாக்கம் செய்து’’ (திருவா.9-2-2) என்கிறபடியே ப்ரபந்நகுலத்தில் செய்துபோருகிற மர்யாதையைத் தப்பாமலிருந்து. (கையறவும்) ‘‘காமுற்ற கையறவோடு’’ (திருவா.2-1-3) என்று ஆசைப்பட்டபொருள் கைபுகுராத இழவோடே இருக்கையாலும். (கோதிலடிமை உறுமோ என்பித்த) ஸ்ரீஶத்ருக்₄நாழ்வான் ‘‘க₃ச்ச₂தா மாதுலகுலம் ப₄ரதேந ததா₃நக₄: | ஶத்ருக்₄நோ நித்யஶத்ருக்₄நோ நீத: ப்ரீதி- புரஸ்க்ருத:’’ (ரா. அ 1-1) என்று – ‘‘அநக₄:’’, ‘‘நித்யஶத்ருக்₄ந:’’ என்று ஸ்ரீப₄ரதாழ்வானுடைய பாவநத்வபோ₄க்₃யத்வங்களிலே கால்தாழ்கையாலே ‘‘பும்ஸாம் த்₃ருஷ்டிசித்தாபஹாரிணம்’’ (ரா. அ.3-29) என்று ஸஜாதீயரையும் ஈடுபடுத்தவற்றான பெருமாளுடைய விக்₃ரஹத்திலே துவக்குண்ணாதே, அந்த வடிவழகுதான் ப₄ரதாநுவ்ருத்தியில் போகாதபடி துவக்கவற்றாகையாலே நித்யஶத்ருவாக நினைக்கிறாப்போலே.
இவரும் ‘‘கோதிலடிமை’’ (திருவா.8-10-9) என்று சொல்லப்படுகிற பா₄க₃வதஶேஷத்வ– ரஸம். (உறுமோ என்பித்த) ‘‘அவனடியார் சிறுமாமனிசராய் என்னையாண்டார் இங்கே திரிய – அதுவன்றி உலகமூன்றுமுடன் நிறைய சிறுமாமேனி நிமிர்த்த என் செந்தாமரைக்கண் திருக்குறளன் – நறுமாவிரைநாண்மலரடிக்கீழ்ப்புகுதல் – பாவியேனுக்கு உறுமோ’’ (திருவா.8-10-3) என்னும்படி பண்ண அந்த பா₄க₃வத ஶேஷத்வரஸத்தாலே. (புலங்கொள் நித்யஶத்ருவிசிந்தநமும்) ‘‘புலங்கொள் வடிவு’’ (திருவா.8-10-4) என்று ஸர்வேந்த்₃ரியாபஹாரக்ஷமமான வடிவழகையும் உபேக்ஷிக்கை யாலும். (ஆன ப்₄ராதாக்கள்) இப்படியிருந்துள்ள இளையபெருமாள், ஸ்ரீப₄ரதாழ்வான், ஸ்ரீஶத்ருக்₄நாழ்– வான் என்கிற ப்₄ராதாக்கள்.
(அப்பொழுதைக்கப்பொழுது போனாய் என்னும் மாதாபிதாக்கள்) ‘‘ந ததர்ப்ப ஸமாயாந்தம்’’ (ரா.அ.3-30) என்று பெருமாளை ஸர்வகாலமும் அநுப₄வியாநிற்கச் செய்தேயும் பர்யாப்தனாகாத சக்ரவர்த்தியைப்போலே இவரும் ‘‘அப்பொழுதைக்கப்- பொழுதென் ஆராவமுதம்’’ (திருவா.2-5-4) என்று ஸர்வகாலமும் அநுப₄வியாநிற்கச் செய்தேயும் பர்யாப்தி பிறவாத அபி₄நிவேஶத்தை உடையராகை– யாலும், ‘‘போனாய் மாமருதின் நடுவே’’ (திருவா.5-1-2) என்று யமளார்ஜுநங்களின் நடுவே போனபோது யஶோதைப்பிராட்டி வயிறெரிந்தாப்போலே இவரும் அதீதகால- மாயிருக்கச்செய்தேயும் ஸமகாலத்திற்போலே வயிறுபிடிக்கையாலும்.
(செந்தீ தண்காற்று இத்யாதி₃) ‘‘நாக்₃நிர்த₃ஹதி நைவாயம் ஶஸ்த்ரைஶ்சி₂ந்நோ மஹோரகை₃: | க்ஷயம் நீதோ ந வாதேந ந விஷேண ந க்ருத்யயா’’ (வி. பு.1-19-59), ‘‘ஸ த்வாஸக்தமதி: க்ருஷ்ணே த₃ஶ்யமாநோ மஹோரகை₃: | ந விவேதா₃த்மநோ கா₃த்ரம் தத்ஸ்ம்ருத்யாஹ்லாத₃ஸம்ஸ்தி₂த:’’ (வி. பு.1-17-39) என்று அக்₃நிமுதலான பா₃த₄க– பதா₃ர்த்த₂ங்களும் தன்னை பா₃தி₄யாதபடி ‘‘ஸர்வபூ₄தாத்மகே தாத ஜக₃ந்நாதே₂ ஜக₃ந்மயே | பரமாத்மநி கோ₃விந்தே₃ மித்ராமித்ரகதா₂ குத:’’(வி. பு.1-19-37) என்று ஸர்வத்தினுடையவும் ப₄க₃வதா₃த்மகத்வாநுஸந்தா₄நத்தாலே ஶத்ருமித்ரவிபா₄க₃மற ஸர்வமும் தனக்கு அநுகூலமாக அநுஸந்தி₄த்து, ‘‘எங்குமுளன் கண்ணன்’’ (திருவா.2-8-9) என்கிறபடியே ‘‘உர்வ்யாமஸ்தி’’ என்று தொடங்கி ‘‘ஸர்வத்ராஸ்தி’’ என்று பிறர்க்கு உபதேஶிக்கவும் வல்லனாய், ‘‘பள்ளியிலோதிவந்ததன் சிறுவன்’’, ‘‘பிள்ளையைச்சீறி’’ (திருமொழி.2-8-8) என்று சொல்லப்படுகிற பள்ளிப்பிள்ளையான ஸ்ரீப்ரஹ்லாதா₃ழ்வானைப்போலே.
இவரும் (செந்தீ தண்காற்று இத்யாதி₃ பகையறச்சிந்தைசெய்து) ‘‘அறியும் செந்தீ- யைத்தழுவி அச்சுதனென்னும் மெய்வேவாள் எறியும் தண்காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தனென்னும்’’ (திருவா.4-4-3), ‘‘போமிளநாகத்தின் பின்போய் அவன் கிடக்கை ஈதென்னும்’’ (திருவா. 4-4-5) என்றும் அப்படியே அக்₃நிமுதலான பா₃த₄க– பதா₃ர்த்த₂ங்களும் ப₄க₃வதா₃த்மகத்வாநுஸந்தா₄நத்தாலே அநுகூலமானபடி, ‘‘என் முன்னைக் கோளரியே – உன்னைச்சிந்தைசெய்துசெய்து – என் முன்னைத்தீவினைகள் முழுவேரரிந்தனன் – முடியாததென் எனக்கேலினி’’ (திருவா.2-6-6) என்று அநுஸந்தி₄த்து, ‘‘கரந்தசிலிடந்தொறும் இடந்திகழ்பொருடொறும் கரந்தெங்கும் பரந்துளன்’’ (திருவா.1-1-10) என்று அவனுடைய ஸர்வக₃தத்வத்தை அருளிச்செய்கையாலும்.
(முற்றவிட்டும் மற்றிலேன் என்னும் த₄ர்மாத்மா) ‘‘பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச த₄நாநி ச | ப₄வத்₃க₃தம் மே ராஜ்யஞ்ச ஜீவிதஞ்ச ஸுகா₂நி வை’’ (ரா. யு.19-5), ‘‘த்யக்த்வா புத்ராம்ஶ்ச தா₃ராம்ஶ்ச ராக₄வம் ஶரணம் க₃த:’’ (ரா. யு.17-16) என்றும் லங்கையோடே கூட புத்ரதா₃ராதி₃களான ஸர்வத்தையும் விட்டு எல்லாம் சக்ரவர்த்தித் திருமகனாகப்பற்றின ‘‘விபீ₄ஷணஸ்து த₄ர்மாத்மா ந து ராக்ஷஸசேஷ்டித:’’ (ரா. ஆ.17-24) என்ற, ‘‘ராமோ விக்₃ரஹவாந் த₄ர்ம:’’ (ரா.ஆ.37-13) என்று த₄ர்மஸ்வரூபமான சக்ரவர்த்தி திருமகனைத் தனக்கு தா₄ரகமாக உடையனாகையாலே த₄ர்மாத்மா என்று சொல்லப்படுகிற ஸ்ரீவிபீ₄ஷணப்பெருமாளைப்போலே இவரும். (முற்றவிட்டு) ‘‘பாதமடைவதன்பாசத்தாலே மற்ற வன்பாசங்கள் முற்ற விட்டு’’ (திருவா.8-2-11) என்று ஸாம்ஸாரிகமான ஸகல ஸங்க₃த்தையும் ஸவாஸநமாக விட்டு. (மற்றிலேன் என்று) ‘‘தயரதற்கு மகன்தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாகவே’’ (திருவா.3-6-8) என்று சக்ரவர்த்தி திருமகனையே தஞ்சமாகப் பற்றுகையாலும்.
(வாளிபொழிந்த இத்யாதி₃) ‘‘நிர்கு₃ண: பரமாத்மாஸௌ தே₃ஹம் தே வ்யாப்ய திஷ்ட₂தி’’ (பா. ஆ.147-8) என்று – ஏறிட்ட நாணை இறங்கிட்ட சக்ரவர்த்தித்திருமகனைத் தனக்குள்ளே உடையனாய், ‘‘ஸோத்ரைவ ஹந்த ஹநுமாந் பரமாம் விமுக்திம் பு₃த்₃த்₄யா விதூ₄ய சரிதம் தவ ஸேவதேஸௌ’’ (அதிமாநு.32) என்று அந்த சக்ரவர்த்தித் திருமகனுடைய வீரசரிதத்தை போ₄க்₃யமாக உடையனாய், ‘‘ஸ்நேஹோ மே பரமோ ராஜம்ஸ்த்வயி நித்யம் ப்ரதிஷ்டி₂த: | ப₄க்திஶ்ச நியதா வீர பா₄வோ நாந்யத்ர க₃ச்ச₂தி’’ (ரா.உ.40-16) என்று சக்ரவர்த்தி திருமகனுடைய வீரசரிதத்தை போ₄க்₃யமாக உடையனான திருவடியைப்போலே.
இவரும் (கற்பார்பா₄வம் மற்றிலேன்) ‘‘கற்பாரிராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ’’ (திருவா.7-5-1) என்று ப்ரியஹிதங்களிலொன்றைக் கற்குமவர்களைப்பற்ற உன்னைக் கற்குமவர்கள் சக்ரவர்த்தி திருமகனையொழியப் பரத்வாதி₃களையும், அவதாராந்தரங்களையும் கற்பரோ என்று தமக்கு இவ்விஷயத்திலுண்டான ப்ராவண்யத்தாலே ‘‘சிந்தை மற்றொன்றின் திறத்ததல்லா’’ (திருவா.7-11-10) என்று பரத்வத்தின் பேருங்கூட அஸஹ்யமாம்படி ‘‘தயரதற்கு மகன்தன்னையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே’’ (திருவா.3-6-8) என்று அந்த சக்ரவர்த்தி திருமகனையே தஞ்சமாகப் பற்றுகையாலும்.
(பல்வகையுங்கண்டு வெண்சங்கேந்தின ரூபபரனான ஶ்வேதன்) ‘‘பஶ்யாமி தே₃வாம்ஸ்தவ தே₃வ தே₃ஹே ஸர்வாம்ஸ்ததா₂ பூ₄தவிஶேஷஸங்கா₄ந் | ப்₃ரஹ்மாண– மீஶம் கமலாஸநஸ்த₂ம்ருஷீம்ஶ்ச ஸர்வாநுரகா₃ம்ஶ்ச தீ₃ப்தாந்’’ (கீதை.11-15) என்று விஶ்வரூபத்தை ஸாக்ஷாத்கரித்த அநந்தரம் தன்னால் அமைத்தநுப₄விக்கவொண்ணாமை– யாலே ‘‘க்ருதாஞ்ஜலிர்வேபமாந: கிரீடீ’’ (கீதை.11-35) என்று பீ₄தியாலே நடுங்கி அஞ்ஜலி ஹஸ்தனாய்க்கொண்டு ‘‘கிரீடிநம் க₃தி₃நம் சக்ரஹஸ்தமிச்சா₂மி த்வாம் த்₃ரஷ்டு– மஹம் ததை₂வ | தேநைவ ரூபேண சதுர்பு₄ஜேந ஸஹஸ்ரபா₃ஹோ ப₄வ விஶ்வமூர்த்தே’’ (கீதை.11-46) என்று ஶங்க₂சக்ரக₃தா₃த₄ரமாய் அஸாதா₄ரணமான உன்னுடைய விக்₃ரஹத்தைக் காட்டவேணுமென்று அவ்வடிவிலே தத்பரனாய் அபேக்ஷித்த அர்ஜுநனைப் போலே.
இவரும் ‘‘நல்குரவும்’’ (திருவா.6-3-1) என்று தொடங்கி ‘‘பல்வகையும் பரந்த பெருமானை – திருவிண்ணகர்க்கண்டேன்’’ என்று விருத்₃த₄விபூ₄தியுக்தனானவனைக் கண்டு. (வெண்சங்கேந்தின) ‘‘நீராய் நிலனாய்’’ (திருவா.6-9-1) என்று தொடங்கி, ‘‘சிவனாயயனானாய்’’ என்று கார்யகாரணங்களிரண்டையும் ஶரீரமாகக்கொண்டு நீ ஜக₃ச்ச₂ரீரனாயிருந்தாயேயாகிலும், அத்தால் நான் பெற்றது ‘விபூ₄தி என்னதுமல்ல, பிறரதுமல்ல; உன்னதே’ என்கிற ப்ரதிபத்தியொழிய எனக்கு அநுபா₄வ்யமாகிறது இல்லை. ஆன பின்பு எனக்கு அநுபா₄வ்யமாம்படி ‘‘கூராராழி வெண்சங்கேந்தி வாராய்’’ (திருவா. 6-9-1) என்று ஶங்க₂சக்ரக₃தா₃த₄ரமான உன்னுடைய அஸாதா₄ரணவிக்₃ரஹத்தோடே வரவேணுமென்று அபேக்ஷிக்கையாலும், இப்படி இளையபெருமாள் முதலானவர்க- ளெல்லாரோடும் ஸாம்யம் சொல்லிற்று. (127)
128. குழலில் நெஞ்சும் அருகலில் சுவையுமான இவர், அவர்கள் அளவு அல்லர்.
இனிமேல் இவர்களெல்லார்க்கும் இவரோடு ஏகதா₂ ஸாம்யமல்லது ஸர்வதா₂ ஸாம்யமில்லை என்று அவர்களில் இவருக்குண்டான வ்யாவ்ருத்தியை அருளிச்- செய்கிறார் (குழலில் நெஞ்சும் அருகலில் சுவையுமான இவர் அவர்களளவல்லரென்று). ‘‘குழற்கோவலர் மடப்பாவையும்’’ (திருவிரு.3) என்கிற பாட்டிற்படி மஹிஷீ- த்ரயத்துக்கும் வல்லப₄னாய் பூ₄ஷணாயுத₄விஶிஷ்டனாய்க்கொண்டு ஸர்வஸ்வாமியாய், கருட வாஹநனான ஸர்வேஶ்வரவிஷயத்தில் அவகா₃ஹித்த என்னுடைய நெஞ்சானது அவனுடைய பரத்வத்தைக்கண்டு மீளுமோ? போ₄க்₃யதையையும், ஸௌலப்₄யத்தையும் கண்டு நிற்குமோ? என்னும்படியான நெஞ்சையுடையராய், அத்தால் ‘‘அப்புள்ளின் பின்போன தனிநெஞ்சமே’’ (திருவிரு.4) என்கையாலே இவருடைய திருவுள்ளம் ப்ரமாணாநுஸாரியாய்க்கொண்டு ப்ரமாணஸாரப்ரதிபாத்₃யமான ஸ்வாராத₄த்வ– ரக்ஷகத்வ போ₄க்₃யத்வங்களிலே கால்தாழ்ந்து மேன்மை முதலாக நீர்மை ஈறாக அவகா₃ஹித்ததென்றபடி.
‘‘அருகலிலாய’’ (திருவா.1-9-3) என்கிற பாட்டின்படி ஹேயப்ரத்யநீகனாய், கல்யாணகு₃ணங்களையுடையனாய், நித்யஸூரிகளுடைய ஸத்தாதிகளுக்கெல்லாம் காரணபூதனாய், விலக்ஷணவிக்₃ரஹயுக்தனாய், புண்டரீகாக்ஷனாய், கருடவாஹநனாய், ஶ்ரிய:பதியான ஸர்வேஶ்வரன், பிராட்டி நித்யஸூரிகளெல்லாரோடும் ஓரோ வகைகளாலே பரிமாறும் பரிமாற்றமெல்லாம் எம்பெருமானோடே பரிமாறி அத்தால் வந்த ரஸத்தை எனக்குத்தந்து பின்னையும் விட க்ஷமனாகிறிலன் என்னும் படியான ரஸத்தையுடையராய், இப்படிப்பட்ட சுவையையும் நெஞ்சையுமுடைய இவர், ப₄க₃வத்₃விஷயத்தில் ப்ராவண்யம் காதா₃சித்கமாய், புறம்பே பரந்த நெஞ்சையுடையராய், விஷயாந்தரங்களிலும் ரஸஜ்ஞராய்ப் போருகிற இவர்கள் அளவல்லர் என்கிறார். ஆக இதுக்குக்கீழ் ப₄க₃வத்ப்ரத்யாஸந்நரான லக்ஷ்மணாதி₃களோடு இவ்வாழ்வாருக்கு ஸாத₄ர்ம்ய– வைத₄ர்ம்யங்களிரண்டும் சொல்லிற்றாய்த்து. (128)
129. எற்றைக்கும் என்றது தோன்றப் பிறந்து ஒப்பித்து வீசிக்காப்பிட்டுக் காட்டுக்கு முற்பட்டு த₄ர்மம் சொல்லிக் கேட்டு ஶிஷ்யா-தா₃ஸீ-ப₄க்தைகளாய்ப் பாடி வருடி இன்றுவந்தென்பாரையும் சென்றாலூரும் நிவாஸ-தா₃ஸ-பே₄த₃ம் கொள்வாரையும் தாம் அவனாக பாவிப்பர்.
இப்படி ஸாம்யம் சொல்லுகிறமாத்ரமேயன்றிக்கே தம்முடைய பா₄வத்தாலும் வ்ருத்திகளாலும் பிராட்டிமாரையும், திருவடி திருவநந்தாழ்வான் தொடக்கமான வர்களையும் தாம் அவர்களாக பா₄விப்பர் என்கிறார் (எற்றைக்கும் என்று தொடங்கி). ‘‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாவோம்’’ (திருப்பாவை 29) என்று அபேக்ஷித்தமை தோன்ற ‘‘ராக₄வத்வேப₄வத்ஸீதா ருக்மிணீ க்ருஷ்ணஜந்மநி | அந்யேஷு சாவதாரேஷு விஷ்ணோரேஷாநபாயிநீ’’ (வி.பு.1-9-144) என்கிறபடியே அவன் வந்தவதரித்த அவதாரங்கள்தோறும் தாமுமவதரித்து. (ஒப்பித்தென்று) திருவபி₄ஷேக மஹோத்ஸவத்துக்கீடாம்படி பெருமாளை அலங்கரித்து. (வீசி) ‘‘ஸ்தி₂தயா பார்ஶ்வதஶ்சாபி வாலவ்யஜநஹஸ்தயா | உபேதம் ஸுதயா பூ₄யஶ்சித்ரயா ஶஶிநம் யதா₂’’ என்று திருவெண் சாமரம் பரிமாறி. (காப்பிட்டு) ‘‘பதிஸம்மாநிதா ஸீதா ப₄ர்த்தார– மஸிதேக்ஷணா | ஆத்₃வாரமநுவவ்ராஜ மங்க₃ளாந்யபி₄த₃த்₄யுஷீ’’, ‘‘பூர்வாம் தி₃ஶம் வஜ்ரத₄ரோ த₃க்ஷிணாம் பாது தே யம: | வருண: பஶ்சிமாமாஶாம் த₄நேஶஸ்தூத்தராம் தி₃ஶம்’’ என்று பெருமாள் வைலக்ஷண்யத்தைக்கண்டு இவ்வழகு நமக்குத் தொங்கப் புகுகிறதோ என்னும் வயிறுபிடியாலே மங்களாஶாஸநம் பண்ணி.
(காட்டுக்கு முற்பட்டு) ‘‘அக்₃ரதஸ்தே க₃மிஷ்யாமி ம்ருத்₃நந்தீ குஶகண்டகாந்’’ என்று பெருமாள் வநத்துக்கு எழுந்தருளுகிறபோது தான் முற்பட்டு. (த₄ர்மம் சொல்லி) பெருமாள் தண்டகாரண்யத்திலே கையும் வில்லுமாய்க்கொண்டு நின்ற நிலையைக்கண்டு இவர் ஸாயுத₄ராய் நிற்கில் ஆரேனையும் மேல்விழுந்து ப்ரமாத₂ம் விளையக்கூடுமென்று ப₄யப்பட்டு, பெருமாளைப்பார்த்து ‘நாயன்தே, த₄ர்மமூலமாயிருக்கும் ஸர்வமும், ஆனபின்பு தேவரீர் ஆயுத₄த்தை வைத்து தாபஸவேஷத்தோடே த₄ர்மத்தை அநுஷ்டிக்க அமையும்’ என்று த₄ர்மோபதே₃ஶத்தையும் பண்ணினாள் பிராட்டி.
(த₄ர்மம் கேட்டு) ஸ்ரீபூ₄மிப்பிராட்டியார் ஸகலத₄ர்மங்களையும் ஸ்ரீவராஹநாயனார் பக்கலிலே கேட்டு. (ஶிஷ்யாதா₃ஸீப₄க்தைகளாய்) ‘‘அஹம் ஶிஷ்யா ச தா₃ஸீ ச ப₄க்தா ச த்வயி மாத₄வ | மத்க்ருதே ஸர்வபூ₄தாநாம் லகூ₄பாயம் வத₃ ப்ரபோ₄’’ என்று ஶிஷ்யா- தா₃ஸீப₄க்தையாய்விஶேஷத₄ர்மத்தையும் கேட்டு.
(பாடி) ‘‘பாடிப்பறைகொண்டு’’ (திருப்பாவை 27) என்கிறபடியே க்ருஷ்ணனைப் பாடுவதும் செய்தாள். (வருடி) இவர்களிருவரும் ‘‘ஒருமதிமுகத்துமங்கையரிருவரும் மலரன அங்கையின்முப்பொழுதும் வருட’’ (திருவெழு.), ‘‘செங்கமலத்திருமகளும் புவியும் செம்பொன்திருவடியினிணை வருட’’ (திருமொழி.7-8-1) என்று இருவரும் திருவடியை வருடினார்கள். ‘‘இன்றுவந்தித்தனையும் அமுதுசெய்திடப்பெறில் நான் ஒன்று நூறாயிர- மாகக் கொடுத்துப் பின்னுமாளும் செய்வன்’’ (நா. தி.8-7) என்று தம்மைக்கொண்டு கைங்கர்யம் கொண்டால் அதுக்கு ப்ரத்யுபகாரமும் பண்ணுவர் என்கிறார்.
(சென்றால் ஊரும் நிவாஸ) திருவநந்தாழ்வான் ‘‘சென்றால் குடையாம்’’ (மு.திருவ. 53) என்கிறபடியே ‘‘நிவாஸஶய்யாஸநபாது₃காம்ஶுகோபதா₄நவர்ஷாதபவாரணாதி₃பி₄: | ஶரீரபே₄தை₃ஸ்தவ ஶேஷதாம் க₃தைர்யதோ₂சிதம் ஶேஷ இதீரிதே ஜநை:’’ (ஸ்தோ. ர.40) என்று ஸர்வேஶ்வரனுடைய விநியோக₃த்துக்கு அநுகு₃ணமாக ஶரீரபே₄த₃ங்களைக் கொண்டு அஶேஷஶேஷவ்ருத்திகளையும் பண்ணினார். ‘‘ஊரும் புட்கொடியுமஃதே’’ (திருவா.10-2-3) என்றும், ‘‘தா₃ஸஸ்ஸகா₂ வாஹநமாஸநம் த்₄வஜோ யஸ்தே விதாநம் வ்யஜநம் த்ரயீமய: | உபஸ்தி₂தம் தேந புரோ க₃ருத்மதா த்வத₃ங்க்₄ரிஸம்மர்த்த₃கிணாங்க– ஶோபி₄நா’’ (ஸ்தோ.ர.41) என்று பெரியதிருவடிநாயனார் வாஹநத்₄வஜாதி₃முக₂த்தாலே ஸகலவித₄கைங்கர்யங்களையும் பண்ணினார். அப்படியே இவரும் ‘‘பிறந்திட்டாள்’’ (திருவா.6-5-10) என்கிறபடியே பிறந்து அந்த நாச்சிமார் மூவரையும் திருவநந்தாழ்- வானையும், பெரியதிருவடியையும் தாமவர்களாக பா₄விப்பர் என்கிறார். (129)
130. எழுவதோருரு அழிக்க, செய்கிற வழுவிலா அடிமைக்குப் பாஞ்சாலி படுத்துமதும் கௌஸல்யாநுவ்ருத்தியும் ஒப்பாக்குகை பரிசு
இவர்க்கு இந்த நாச்சிமாருடைய பா₄வமும் இந்த வ்ருத்திபே₄த₃த்தில் அபி₄நிவேஶமும் உண்டானபடி எங்ஙனே என்னில், அப்ராக்ருதமான விக்₃ரஹம் பும்ஸ்த்வத்தை அழித்து ஸ்த்ரீத்வத்தை உண்டாக்கினதுக்கும், அநுரூபப்ராப்தமான அவ்விஷயத்திலுண்டான வ்ருத்த்யபி₄நிவேஶத்துக்கும், ப்ராக்ருதமாய் ஓளபாதி₄கமாயிருக்கிற விஷயங்களிலுண்– டானவற்றை த்₃ருஷ்டாந்தமாக்குகை ஸ்தூ₂லம் என்கிறார் (எழுவதோருரு என்று தொடங்கி). (எழுவதோருரு அழிக்க) ‘‘சோதிவெள்ளத்தினுள்ளே எழுவதோருரு’’ (திருவா. 5-5-40) என்று தேஜஸ்தரங்க₃ங்களுக்கு நடுவே உந்நேயமான ‘‘பும்ஸாம் த்₃ருஷ்டி சித்தாபஹாரிணம்’’ (ரா.அ.3-29) என்று ஸஜாதீயரையும் விஜாதீயராக்கவற்றான அப்ராக்ருதவிக்₃ரஹம் இவருடைய பும்ஸ்த்வத்தை அழிக்க, இவர்க்குண்டான ஸ்த்ரீத்வத்- துக்கும். (வழுவிலா அடிமைக்கு) ஸ்வரூபப்ராப்தமான அவ்விஷயத்தில் இவர்க்கு உண்டான வ்ருத்திபே₄த₃ங்களுக்கும்.
(பாஞ்சாலிபடுத்துமதும்) ‘‘பாஞ்சால்யா: பத்₃மபத்ராக்ஷ்யா: ஸ்நாயந்த்யா ஜக₄நம் க₄நம் | யா ஸ்த்ரியோ த்₃ருஷ்டவத்யஸ்தா: பும்பா₄வம் மநஸா யயு:’’ என்று ப்ராக்ருதமாய், பூதிக₃ந்தி₄யாய், மாம்ஸாஸ்ருகா₃தி₃மலமயமான த்₃ரௌபதி₃யினுடைய ஶரீரம் ஸஜாதீயருடைய ஸ்த்ரீத்வத்தை அழித்து பும்பா₄வத்தை அடைவித்தத்தையும். (கௌஸல்யாநுவ்ருத்தியும்) ‘‘யதா₃ யதா₃ ஹி கௌஸல்யா தா₃ஸீவச்ச ஸகீ₂வ ச | பா₄ர்யாவத்₃ ப₄கி₃நீவச்ச மாத்ருவச்சோபதிஷ்ட₂தி’’ (ரா.அ.12-68) என்று கௌஸலையார் ஓளபாதி₄கமான ப₄ர்த்ருவிஷயத்தில் தத்தத₃வஸ்தா₂நுகு₃ணமாகப் பண்ணின அநு– வ்ருத்தியையும் த்₃ருஷ்டாந்தமாக்குகை அதில் ஸ்தூ₂லம் என்கிறார். (130)
131. பெருக்காறு பலதலைத்துக் கடலை நோக்குமாப்போலே நெக்கொசிந்து கரைந்து அலைந்து இடிந்து உடையப் பெருகுகாதல் கடலிடங்கொண்ட கடலை ப₃ஹுமுகமாக அவகாஹிக்கும்.
ஆனால் தாமான தன்மையும் பிராட்டிமார்த₃ஶையுமுண்டான இதில் தாமான தன்மையில் அபி₄நிவேஶம் அளவுபட்டிருக்குமோ? என்னில்; ஆறு பெருகாநின்றால் பல வாய்த்தலைகளிலும் போராநிற்கச்செய்தே, தானும் கடலில் போரும் அம்ஶம் குறையாதிருக்குமாப் போலே பிராட்டிமார்த₃ஶையோடும், தாமான தன்மையோடும் வாசியற அபி₄நிவேஶம் கரைபுரண்டு ப₄க₃வத்₃விஷயத்தை அவகா₃ஹிக்கும் என்கிறார் (பெருக்காறு என்று தொடங்கி). (பெருக்காறு பலதலைத்துக் கடலை நோக்குமாப்போலே நெக்கொசிந்து கரைந்து அலைந்து இடிந்து உடையப் பெருகுகாதல்) ‘‘நினைந்தென்னுள்ளே நின்று நெக்கு’’ (பெரியா. தி.5-4-8), ‘‘நிமியும் வாயொடு கண்கள் நீர்மல்க நெக்கொசிந்து கரையும்’’ (திருவா.6-5-2), ‘‘என் மனம் உடைவதும் அவர்க்காகவே’’ (திருவா.9-3-6) என்று அபி₄நிவேஶத்துக்குக் கரைப்பற்றான நெஞ்சானது விட்டுச்சரிந்து கரைந்து அலைந்து இடிந்து உடைந்து ஶிதி₂லமாய்ப்போம்படி ‘‘பெருகுகாதலடியேன்’’ (திரு மொழி. 5-2-9 என்று இவருடைய அபரிச்சே₂த்₃யமான ப₄க்தியான ஆறானது. (கடலிடங்கொண்ட கடலை) க்ஷீராப்₃தி₄ஶாயியாய், ஸர்வேஶ்வரனாய், ஶ்ரமஹரமான வடிவையுடைய பெரிய பெருமாளாகிற கடலைப் பலமுகமாக அவகா₃ஹிக்கும் என்கிறார்.
132. அச்சேத்₃யமென்னுமது ஈரும் வேம் ஈரியாய் உலர்த்த என்னப்பட, சித்தம் சித்தாய் அல்லேனென்று நீங்க, கரணங்கள் முடியானேயிலவையாக உடலம் ஆத்மதர்மம் கொள்ள, காற்றும் கழியும் கட்டியழக் கொண்ட பெருங்காதலுக்குப் பத்திமைநூல் வரம்பில்லையே.
இப்படி இராநிற்கிற இவருடைய ப₄க்திதான் ஸக்ரமமாயிருக்கமோ? என்னில், இவருடைய ப₄க்திக்கு ‘‘ந ஶாஸ்த்ரம் நைவ ச க்ரம:’’ என்கிறபடியே தே₃ஶவிஶேஷத்தில் ப₄க்திபோலே இதுவும் வைத₄மல்லாமையாலே க்ரமாபேக்ஷை இல்லை என்கிறார் (அச்சே₂த்₃யமென்று தொடங்கி). ‘‘அச்சே₂த்₃யோயமதா₃ஹ்யோயமக்லேத்₃யோஶோஷ்ய ஏவ ச’’ (ப.கீ₃2-24) என்று சே₂த₃ந-த₃ஹந-ப்லாவந-ஶோஷணாதி₃களுக்கு அயோக்₃யமாயிருக்கிற ஆத்மவஸ்து. (ஈரும் வேம் ஈரியாய் உலர்த்த என்னப்பட) ‘‘சிவெனாடு பிரமன் வண்திருமடந்தை சேர் திருவாகமெம்மாவி ஈரும்’’ (திருவா.9-9-6), ‘‘வேம் எமதுயிரழல் மெழுகிலுக்கு’’ (திருவா.10-3-6) ‘‘கண்ணனுக்கென்றீரியாயிருப்பாள்’’ (திருவா.6-3-6), ‘‘வேவாரா வேட்கைநோய் மெல்லாவி உள்ளுலர்த்த’’ (திருவா.2-1-1) என்று அவனுடைய ஶீலகு₃ணம் என் ஆத்மாவை ஈராநின்றது என்றும், அக்₃நிஸகாஶத்துக்குள்ளே புகுந்த மெழுகுபோலே என் ஆத்மாவானது த₃க்₃த₄மாகாநின்றது என்றும், விலக்ஷணபதா₃ர்த்த₂ங்களைக் காணில் கண்ணனுக்கு என்று த்₃ரவீபூ₄தையாகாநின்றாள் என்றும், ப்ரேமவ்யாதி₄யானது என் ஆத்மாவைக் குருத்து பற்றாக உலர்த்தாநின்றது என்றும், இப்படி சே₂த₃நாதி₃களுக்கு யோக்₃யமாய்த்து என்று இவர்தாமே சொல்லும்படியாக, ஆத்மவஸ்து பா₃ஹ்ய– பதா₃ர்த்த₂ங்களாலே சே₂த₃நாதி₃ களுக்கு அயோக்₃யமென்றுது இத்தனைபோக்கி, தன்னிலும் அச்ச₂மான ப₄க₃வத்₃ கு₃ணங்கள் புக்கழிக்க, அழியாதாகில் இதுதான் ஜ்ஞாந- த்₃ரவ்யமன்றியிலே ஒழியுமிறே.
(சித்தம் சித்தாய் அல்லேனென்று நீங்க) ‘‘என்னெஞ்சென்னை நின்னிடையே- னல்லேன் என்று நீங்கி’’ (திருவா.8-2-10) என்று அசேதநமான சித்தமானது சேதநஸமாதி₄யாலே இவரை ‘‘ஸந்ந்யஸ்தம் மயா’’ என்று விட்டு நீங்க. (கரணங்கள் முடியானேயிலவையாக) ★முடியானேயிற்படியே சேதநஸமாதி₄யாலே விடாய்த்த கரணங்களை உடையராய். (உடலம் ஆத்மத₄ர்மம் கொள்ள) ‘‘அடியேனுடலம் நின்பாலன்பாயே நீராயலைந்து கரைய’’ (திருவா.5-8-1) என்று த்₃ரவ்யமிருந்த கு₃ஹை உருகுமாப்போலே ஆத்மா ப₄க₃வத் ப்ரேம வஶ்யதையாலே ஶிதி₂லமாகாதபடி கட்டின கரையான ஶரீரமானது அந்தராத்மாவைப் போலே ப₄க₃வத்ப்ராவண்யத்தை உடைத்தாய்க் கொண்டு ஶிதி₂லமாக.
(காற்றும் கழியும் கட்டியழ) ‘‘கடலும் மலையும்’’ இத்யாதி₃ (திருவா.2-1-4), ‘‘எம் ஆற்றாமை சொல்லி அழுவோமை’’ (திருவா.2-1-7) என்று வாயுவுக்கு ஸததக₃தித்வம் ஸ்வாபா₄விகம் என்றும், கழிக்கு ஏறுதல் வடிதல் செய்கை ஸ்வாபா₄விகமென்றும், மற்றும் நாரை தொடக்கமானவற்றுக்கு அவ்வோ ஸ்வபா₄வம் நியதமென்றும் அறியாதே தம்மைப் போலே ப₄க₃வத்₃விஶ்லேஷத்தாலே இவையும் நோவுபடுகிறனவாக இவற்றோடே க்லேஶிக்கும் படியாகக் கொண்ட பெருங்காதலுக்கு, ‘‘அலர் தூற்றிற்றது முதலாக் கொண்ட என்காதல்’’ (திருவா.7-3-8) என்று இப்படியிருக்கிற இவருடைய அபரிச்சே₂த்₃யமான ப₄க்திக்கு.
(பத்திமைநூல்வரம்பில்லையே) ‘‘ந ஶாஸ்த்ரம் நைவ ச க்ரம:’’ என்று தே₃ஶ விஶேஷத்தில் அநுப₄வோபகரணமான ப₄க்திபோலே இவருடைய ப₄க்திக்கு, ஸாத₄நப₄க்திபோலே வைத₄மாகையும் க்ரமாபேக்ஷையும் இல்லையிறே.
ஆக இதுக்குக்கீழ், ஜ்ஞாநத₃ஶையில் தாமான தன்மையிலே பேசுவர்; ப்ரேம த₃ஶையில் ஸ்த்ரீஸ்வபா₄வத்தாலே பேசுவர் என்றும், அந்த ஸ்த்ரீத்வம் இவர்க்கு ஸ்வாபா₄விகம் என்றும், ஸ்த்ரீத்வந்தான் ஸாமாந்யமன்றிக்கே அநந்யார்ஹ ஶேஷத்வாதி₃ களாலே பிராட்டியோடொப்பர் என்றும், மற்றுமுண்டான பிராட்டிமார் ப₄க₃வத்பரிக்₃ரஹ– முடையாரெல்லாரோடும் ஒப்பர் என்றும், ஸர்வதா₂ ஸாம்யமுள்ளது பெரியபிராட்டி- யாரோடே என்றும், மற்றும் ப₄க₃வத்ப்ரத்யாஸந்நரான லக்ஷ்மணாதி₃கள்படியும் இவர்க்கு உண்டென்றும், அவர்களிலும் வ்யாவ்ருத்தர் என்றும், அவர்களோடு ஸாம்யமன்றிக்கே அவர்களைத் தாமாக பா₄விப்பர் என்றும், இந்த பா₄வவ்ருத்திகள் இவர்க்கு உண்டாகைக்கு நிதா₃நம் இன்னதென்னுமிடத்தையும், இந்த பா₄வவ்ருத்திகளுக்கு அடியான ப₄க்தி– ப்ரகாரங்களையும் சொல்லிநின்றது கீழ். ஆக இத்தால் ப₄க்தித₃ஶையில் இவர்– பேச்சிருக்கும்படி சொல்லிற்று. (132)
133. ஸம்ப₃ந்தோ₄பாய ப₂லங்களில் உணர்த்தி துணிவு பதற்றமாகிற ப்ரஜ்ஞா அஸ்தைகளுக்குத் தோழி தாயார் மகள் என்று பேர்.
ஆனால் ப₄க்தித₃ஶையில் பெண்பேச்சாகில் பிராட்டி ஒருத்தியாகப் பேசுகை ப்ராப்தம், தோழி தாய் மகள் என்கிற த்ரைவித்₄யமான பேச்சுக்கு தாத்பர்யம் என் என்னில், இந்த அதிப்ராவண்யத்துக்கு ஸஹகாரியாயும், நிரோத₄கமாயுமிருக்கிற ஸம்ப₃ந்த உபாயங்களில் ஜ்ஞாந வ்யவஸாயங்களென்ன, அந்த ப்ராவண்யத்துக்கு விஷயமான உபேயத்தில் த்வரையென்ன, இவற்றைத் தோழி தாயார் மகள் என்கிறார் (ஸம்ப₃ந்த₄ம் என்று தொடங்கி). (ஸம்ப₃ந்தோ₄பாயப₂லங்களில் உணர்த்தி துணிவு பதற்றமாகிற ப்ரஜ்ஞா– வஸ்தை₂களுக்குத் தோழி தாயார் மகள் என்று பேர்) தோழியாவாள் நாயகநாயகிகளை இணக்கிச் சேர்க்குமவளாகையாலே திருமந்த்ரத்தில் ப்ரத₂மபத₃மான ப்ரணவத்தில் அகாரத்தாலே சொல்லப்பட்ட, காரணமாய் ரக்ஷகமாய் ஶேஷியாய் ஶ்ரிய: பதியாயிருக்கிற ப₄க₃வத்ஸ்வரூபத்துக்கும், தத்ப்ரதிஸம்ப₃ந்தி₄யாய், கார்யத்வ-ரக்ஷ்யத்வ- ஶேஷத்வங்களை ஸ்வரூபமாக உடைத்தாய், ப்ரக்ருதே: பரமாய், ஜ்ஞாநாநந்த₃மயமாய், ஜ்ஞாநகு₃ணகமாய் இருக்குமென்று மகாரத்தாலே சொல்லப்பட்ட ஆத்மஸ்வரூபத்துக்கும் சதுர்த்தி₂யாலும் உகாரத்தாலும் சொல்லப்பட்ட நிருபாதி₄கஶேஷத்வ-அநந்யார்ஹ- ஶேஷத்வாதி₃ ஸம்ப₃ந்த₄த்தை விஷயீகரித்த ஜ்ஞாநத்தைத் தோழி என்றும்,
தாயாராவாள் நாயகன் பக்கலிலே அதிமாத்ர ப்ராவண்யம் பெண்பிள்ளைக்கு உண்டானாலும் நாயகன்தானே வந்து பரிக்₃ரஹித்துக்கொண்டு போமதொழியப் படிகடந்து புறப்படுகை குலமர்யாதை₃க்குப் போராதென்று அவளை நிஷேதி₄த்து அவன் வரவு பார்த்திருக்குமவளாகையாலே, ஸம்ப₃ந்த₄ஜ்ஞாநஸமநந்தரம் ஸம்ப₃ந்தா₄நுரூபமான பரிமாற்றத்திலே த்வரை உண்டானாலும், ஸ்வப்ரவ்ருத்தியில் இழிகை நமஸ்ஸில் சொன்ன பாரதந்த்ர்யத்துக்கு விருத்₃த₄மாகையாலே அத்தை நிவர்த்திக்க, அதில் ஶாப்₃த₃மாகவும், ஆர்த்த₂மாகவும் சொல்லுகிற ப₄க₃வதே₃கோபாயத்வத்தாலே ப்ராப்ய– ஸித்₃தி₄ என்கிற அத்₄யவஸாயஜ்ஞாநத்தைத் தாயார் என்றும்,
தலைமகளாவாள், இயற்கையிலே புணர்ந்து நாயகன்வைலக்ஷண்யத்திலே ஈடுபட்டு, குலமர்யாதை₃களையும் பாராதே கிட்டியல்லது த₄ரியேன் என்னும் பதற்றத்தை உடையாளொருத்தியாகையாலே, நாராயணபத₃த்தாலே சொல்லப்பட்ட, ஶேஷியாய், ஶரண்யனானவனுடைய ஸ்வரூபரூபகு₃ணவிபூ₄திகளால் வந்த வைலக்ஷண்யத்தை அநுப₄வித்து அத்தால் வந்த விளம்பா₃க்ஷமத்வத்தாலே ததே₃கோபாயத்வாத்₄யவ– ஸாயத்தையும் அதிக்ரமித்துக்கிட்டி, அநுப₄வித்து, அநுப₄வஜநிதப்ரீதிகாரிதமான கைங்கர்யத்தை இப்போதே பெறவேணும் என்கிற த்வராஜ்ஞாநத்தைத் தலைமகள் என்றும் சொல்லும்.
‘‘ஸ்ம்ருதிர்வ்யதீதவிஷயா மதிராகா₃மிகோ₃சரா | பு₃த்₃தி₄ஸ்தாத்காலிகீ ப்ரோக்தா ப்ரஜ்ஞா த்ரைகாலிகீ மதா’’ என்று அதீத-அநாக₃த-வர்த்தமாந-விஷயஜ்ஞாநத்தை ஸ்ம்ருதி- மதி-பு₃த்₃தி₄ என்று சொல்லுகையாலே பூர்வமேவ உண்டாயிருக்கிற ஸம்ப₃ந்த₄த்தை விஷயமாக உடைத்தாயிருக்கிற ஜ்ஞாநத்தை ஸ்ம்ருதி என்றும், மேல்வரக்கடவதான கைங்கர்யத்தில் த்வராஜ்ஞாநத்தை மதி என்றும், ஸம்ப₃ந்த₄ஜ்ஞாநஸமநந்தரம் யாவத்– ப₂லப்ராப்தி நடக்கக்கடவதான உபாயத்வாத்₄யவஸாயத்தை பு₃த்₃தி₄ என்றும் சொல்ல வேண்டியிருக்க, ப்ரஜ்ஞாவஸ்தை₂கள் என்பானென்? என்னில், மூன்றும் ஏககாலிக- மாக நடக்கையாலே ஓரொன்றினுடைய ப்ராதா₄ந்யம் தோற்றப் பேசுகையாலே ப்ரஜ்ஞாவஸ்தை₂கள் என்றது.
ஆக இப்படி ஸ்வஸ்வரூப பரஸ்வரூப ஸம்ப₃ந்த₄ஜ்ஞாநம், ஈஶ்வரைக உபாயத்வத்தில் வ்யவஸாயம், ப₂லமான கைங்கர்யத்தில் த்வரை இவையாகிற ப்ரஜ்ஞாவஸ்தை₂களுக்குத் தோழி தாயார் மகள் என்று சொல்லுகிறது என்கிறார். (133)
134. ஸகி வெறிவிலக்கி ஆசையறுத்து அறத்தொடு நின்ற மூன்றில் அநந்யார்ஹத்வமும், வாடி மெலிந்து பித்தேறி ஏறப்பேசிக் கட்டிழந்தகன்று சார்வதே வலித்தமை ஸாதநமாமோ என்று மாதா அஞ்சி முறைப்பட்டு முறையிடுகிற ஏழில் அத்யவஸாயமும், புத்ரி பலகால் ஆள்விட்டு ஆற்றாமை சொல்லிக் கவராதவை விட்டு, இரைக்க மடலெடுத்துக் கண்புதையப் போக்கற்று, உருநெஞ்சுள்ளெழக் கூடுநாள்தேடித் தாழ்த்ததுக்கு ஊடி, உசாத்துணையற்றுச் சூழவும் பகைமுகம் செய்யத்தடைநில்லாதே புயக்கற்று மாலையும் காலையும் பூசலிடுகிற பதினேழில் த்வரையும் தெரியும்.
இனிமேல் மூன்றுத₃ஶையின் பேச்சினுடைய ப்ரகாரங்களையும் அவ்வோ த₃ஶைகளில் திருவாய்மொழி இன்னதென்னுமத்தையும் அருளிச்செய்கிறார் (ஸகி₂ வெறிவிலக்கி என்று தொடங்கி). வெறிவிலக்காவது – இயற்கையிலே புணர்ந்து பிரிந்த தலைமகள் மோஹங்க₃தையாய்க் கிடக்க, அவளுடைய ப₃ந்து₄க்கள் இது க்ஷுத்₃ர தே₃வதைகளால் வந்ததோ என்று ஶங்கித்து, இத்தை பரிஹரிப்பதாக வெறியாடலுற, அவ்வளவில் இவள்- ப்ரக்ருதியறிந்த உயிர்த்தோழியானவள் ‘இது க்ஷுத்₃ரதே₃வதைகளால் வந்ததன்று; இது ஒரு விஷயத்தில் ஸங்க₃த்தாலே வந்தது’ என்று அத்தை விலக்கி, அதுக்கு யோக்₃யமான பரிஹாரத்தைச் சொல்லுகை.
இத்தால் ஸம்ஸாரகாந்தாரத்திலே ஶப்₃தா₃தி₃களாகிற போ₄க்₃யோபஜீவநத்துக்காக ஸ்வர்க்க₃-நரக-க₃ர்ப்ப₄ங்களாகிற போ₄க₃ஸ்த₂லங்களிலே ஸஞ்சரிக்கிறவனுமாய், பாரதர்த்ர்ய-போ₄க்₃யதா-அநந்யார்ஹத்வங்களாலே ஸ்த்ரீத்வத்தை உடையனான ஆத்மாவை அவ்விடத்திலே ஆத்மம்ருக₃யாத்ராவ்யாஜத்தாலே ஸஞ்சரிக்கிற ஈஶ்வரன் ‘‘ஏவம் ஸம்ஸ்ருதிசக்ரஸ்தே₂ ப்₄ராம்யமாணே ஸ்வகர்மபி₄: | ஜீவே து₃:கா₂குலே விஷ்ணோ: க்ருபா காப்யுபஜாயதே’’ என்றும், ‘‘நாஸௌ புருஷகாரேண’’ இத்யாதியிற்படியே க₄டகரும், ஜ்ஞாபகருமன்றியிலே உப₄யருடையவும் த₄ர்மப்ரயுக்தமாக கடாக்ஷிக்க, அத்தாலே இத்தலைக்குமுண்டான க்ரமப்ராப்திபற்றாத அதிப்ராவண்யத்தாலே வந்த கலக்கத்தாலே ததே₃கோபாய அத்வாத்₄யவஸாயம் குலைந்து ‘இந்த ப்ராவண்யஹேது ஏது? ப்ராவண்ய கார்யமான கலக்கத்தை பரிஹரிக்கலாவது எத்தாலே?’ என்று தே₃வதாந்தர்யாமிபரமான கர்ம கலாபங்களாலே பரிஹரிக்கலாமோ என்று ஶங்கிக்க, ஸம்ப₃ந்த₄ஜ்ஞாநம், ‘அநந்யார்ஹமான இவ்வஸ்துவிலுண்டான இந்த ப்ராவண்யம் நிர்ஹேதுகக்ருபா கார்யமாகையாலே ததே₃கோபாயத்வத்தாலே பரிஹரிக்கலாமத்தனையல்லது தத்₃ வ்யதிரிக்தங்கள் பரிஹாரமாகாதவளவேயன்றிக்கே அநந்யார்ஹஶேஷத்வாதி₃ ஸம்ப₃ந்த₄ங்களுக்கு விருத்₃த₄மாகையாலே ஸ்வரூபத்துக்கு நாஶகமாகையாலே இவை நிவர்த்யங்கள்’ என்று அந்யஸ்பர்ஶத்தை நிவர்த்திப்பிக்கிற வெறிவிலக்காகிற ★தீர்ப்பாரையாமினியிலும்.
(ஆசையறுத்து) திருத்தொலைவில்லிமங்கலத்திலே அதிப்ரவணையாயிருக்கிற இவளை மீட்கப்பார்க்கிற தாய்மாரைக்குறித்துத் தோழியானவள் ‘நீங்களேயன்ேறா திருத்தொலை வில்லிமங்கலத்திலே கொடுபுக்கு அதிப்ராவண்யத்தை விளைத்திகோள்; இனி உங்களால் ப்ராப்தவிஷயப்ரவணையான இவளை மீட்கப்போகாது; ஆனபின்பு இவள்பக்கல் நீங்கள் ஆசையறுங்கோள்’ என்று ஆசையறுக்கிறது.
இத்தால் உபாயாத்₄யவஸாயமானது உபேயவைலக்ஷண்யத்தை முன்னிட்டுக் கொண்டல்லது இராமையாலே அந்த உபேயவைலக்ஷண்யத்தை விஷயீகரித்த ப்ராவண்ய கார்யமான த்வரை உபாயத்திலே அந்வயிக்கிறதோ என்னும் அதிஶங்கையாலே அந்த ப்ராவண்யத்தை வ்யவஸாயம் நிவர்த்திப்பிக்கத்தேட, இந்த ப்ராவண்யம் ஶேஷவஸ்து- க₃தமாகையாலே ஶேஷியினுடைய ப்ரியோபயோகி₃யாம் அத்தனையல்லது உபாயத்தில் அந்வயியாதென்கிற ஶங்கையை நிவர்த்திப்பிக்கிறது ஸம்ப₃ந்த₄ஜ்ஞாநம்.
இத்தால் ப்ராப்தவிஷயவைலக்ஷண்யாதீ₄நமாக உண்டான அந்த ப்ராவண்யத்தை, ‘இது ஸ்வரூபாதிரேகியாய்க்கொண்டு ஸாத₄நத்திலே அந்வயிக்குமாகில் ‘‘தத்தஸ்ய ஸத்₃ருஶம் ப₄வேத்’’ (ரா.ஸு.39-30) என்றிருக்கிற ஸ்வரூபத்துக்கு விருத்₃த₄மாம்; ஆகையாலே இது நிவர்த்யம்’ என்று இந்த ப்ராவண்யம் ஸ்வநிவர்த்யம் என்று தடுக்க, இவ்வுபாய அத்₄யவஸாயத்தில் ஸ்வாதீ₄நதாப்ரதிபத்தியை பரேச்சா₂நுகு₃ணவிநியோகா₃ர்– ஹதா ரூபமான ஶேஷத்வஜ்ஞாநமானது, ஶேஷவஸ்துக₃தமாய், ஶேஷியினுடைய வைலக்ஷண்யாதீ₄நமான இது ஶேஷிக்கு அதிஶயகரமாகையாலே ஸ்வரூபாதிரேகி– யன்று; தா₄ரகமாகையாலே ஸ்வநிவர்த்யமுமன்று. இத்தை ஸ்வநிவர்த்யமாக நினைத்திருக்கை யாகிற ஸ்வாதந்த்ர்யம் கீழ்ச்சொன்ன ஸ்வரூபத்தோடு விருத்₃த₄– மாகையாலே த்யாஜ்யம் என்று ஸ்வஸ்பர்ஶத்தை நிவர்த்திப்பிக்கிற ★துவளில் மாமணியிலும்.
(அறத்தொடுநின்ற) அறத்தொடுநிற்கையாவது – தலைமகளுடைய பருவத்தையும், வடிவில் வேறுபாட்டையும் கண்ட ப₃ந்து₄க்கள் ஸ்வயம்வரத்துக்கு ராஜலோகத்தைத் திரட்டுகைக்கு மணமும் செறிவிக்க, இவளுடைய உயிர்த்தோழியானவள் கேட்டு,‘இது இவள்செவிப்படில் இவளைக்கிடையாது, இத்தை ஏற்கவே பரிஹரிக்கவேணும்’ என்று இவளுடைய ப₃ந்து₄ஜநங்களைப்பார்த்து, ‘இவளுக்குத் திருப்புலியூர்நாயனாரோடே ஸங்க₃ம் உண்டுபோலே இராநின்றது; ஆனபின்பு நீங்கள் செய்கிறது த₄ர்மமல்ல’ என்ன, ‘ஆனால் இவளுக்குத்தக்க அவயவஶோபை₄தொடக்கமான நாயகலக்ஷணங்கள் அவனுக்குண்டோ’ என்ன, ‘அவை எல்லாத்தாலும் ஒரு குறையில்லை. அவையொன்று- மில்லையேயாகிலும் இவள் அவனுக்கு அநந்யார்ஹையானாள் என்னுமிடத்துக்கு அடை- யாளம் ஸுவ்யக்தமாகக் காணலாம். ஆனபின்பு நீங்கள் செய்கிறவிது அத₄ர்மம்’ என்று மத்₄யஸ்தை₂யாய்க்கொண்டு த₄ர்மம் சொல்லுகிறாளாய் அந்த மணத்தை விலக்குகை.
ஆக இத்தால் ப்ராப்யத்வரையினுடைய பரிபாகத்தை அநுஸந்தி₄த்த உபாயாத்₄யவ– ஸாயம், ‘இந்த த்வரை அப்ராப்தவிஷயாவலம்பி₃யோ?’ என்று அதிஶங்கைபண்ண, ஸம்ப₃ந்த₄ஜ்ஞாநம், ‘இது ப்ராப்தனான ஶேஷிவிஷயீகாரத்தாலே உண்டானது, இதுக்கு அப்ராப்தவிஷயஶங்கையும் ஸ்வரூபநாஶகரம்; இனி அந்த ஶேஷியினுடைய போ₄க்₃யதையாலும், அந்த போ₄க்₃யதை ஒழியவே நிருபாதி₄கஶேஷித்வத்தாலும் இவ்வஸ்து அவனுக்கு அநந்யார்ஹம்’ என்று அந்த அதிஶங்கையை நிவர்த்திப்பிக்கிற ★கருமாணிக்கமலையிலும், ஆகத் தோழிப்பேச்சான மூன்று திருவாய்மொழியிலும் இவ்- வாத்மா த₄ர்மித₄ர்மவிபா₄க₃மற அந்யஶேஷமுமன்று; ஸ்வஶேஷமுமன்று; ப₄க₃வத₃நந்– யார்ஹஶேஷமாயிருக்குமென்று ஸம்ப₃ந்த₄ஜ்ஞாநதஶையில் பேச்சாயிருக்கிறது.
(வாடி மெலிந்து என்று தொடங்கி) – (ஏழில் அத்₄யவஸாயமும்) ★ஆடியாடியில் ‘‘வாடி வாடுமிவ்வாணுதல்’’ (திருவா.2-4-1) என்று ஆஶ்ரயத்தையொழிந்த தளிர்போலே வாடாநின்றாளென்றும், ★பாலனாயேழுலகில் ‘‘பொன்செய்பூண்மென்முலைக்கென்று மெலியும்’’ (திருவா.4-2-10) என்று ப₄க₃வத்₃போ₄க்₃யதையை அநுப₄விக்க வேணுமென்று மெலியாநின்றாளென்றும், ★மண்ணையிருந்துதுழாவியில் ‘‘என்பெண்- கொடியேறிய பித்தே’’ (திருவா.4-3-7) என்று என்பெண்பிள்ளை அவனோடு ஸத்₃ருஶபதா₃ர்த்த₂ங்களையும் ஸம்ப₃ந்தி₄பதா₃ர்த்த₂ங்களையும் அவனாகச் சொல்லும்படி பிச்சேறினாள் என்றும், ★கடல்ஞாலத்திலே ‘‘ஈசன்வந்தேறக்கொலோ’’ (திருவா.5-6-1) என்று ஆற்றாமையாலே அநுகரிக்கிறாள் என்று அறியமாட்டாதே ஸர்வேஶ்வரன் இவள்பக்கலிலே ஆவேஶித்தாப்போலே பேசாநின்றாள் என்றும், ★மாலுக்குவையத்தில் ‘‘கற்புடையாட்டி இழந்ததகட்டே’’ (திருவா.6-6-10) என்று அறிவுடையாளான இவள் ஸர்வேஶ்வரனை ஆசைப்பட்டு ஸர்வத்தையும் இழந்தாள் என்றும், உண்ணும் சோற்றிலே ‘‘எனக்கு உதவாதகன்ற இளமான்’’ (திருவா.6-7-6) என்று தன்னைப்பிரிந்து க்லேஶப்படுகிற இவ்வாபத்₃த₃ஶையில் எனக்குதவாதே அகன்றாள் என்றும், ★கங்குலும் பகலில் ‘‘சந்தித்து உன்சரணம் சார்வதேவலித்த தையல்’’ (திருவா.7-2-5) என்று உன் திருவடிகளைக்கிட்டி உன்முன்னே முடியவேணுமென்று வ்யவஸிதையானாள் என்றும் சொல்லுகிற இவளுடைய விரஹகார்யத்தையும், அந்த விரஹக்லேஶத்தாலே அடைவு கெடப் பேசுகையும், பெற்றல்லது த₄ரியாத அதிமாத்ரப்ராவண்யமும், உபாஸகனுக்கும் உபாயாநுஷ்டா₂நது₃ஷ்கரதையாலும், ப₄க்திபாரவஶ்யத்தாலும் ப்ராப்தவைலக்ஷண்யா– நுஸந்தா₄நத்தாலும் அவை உண்டாகுமாகையாலே இவளுக்கும் இவை ஸாத₄நத்திலே அந்வயிக்கில் ததே₃கோபாயத்வத்துக்கு விருத்₃த₄மாமென்று மாதா அஞ்சி, ‘‘முறையோ அரவணைமேல் பள்ளிகொண்ட முகில்வண்ணனே’’ (திருவிரு. 60) என்று தேவர்க்ருபை- யொழிய இவள்பக்கல் உள்ளவையொன்றும் ஹேதுவல்ல; ஆனபின்பு இவளை இப்படித் துடிக்கவிட்டிருக்கை தேவரீருடைய க்ருபைக்கும், ரக்ஷகத்வத்துக்கும் போருமோ என்று சொல்லிக் கூப்பிடுகிற தாய்பேச்சான ஏழுதிருவாய்மொழிகளிலும் உபாய அத்₄யவஸாயமான த₃ஶையில் பேச்சுத்தோன்றும்.
(புத்ரி) தலைமகளானவள், (பலகால் ஆள்விட்டு) ★அஞ்சிறையமடநாரை (திருவா.1-4), ★வைகல்பூங்கழிவாய் (திருவா.6-1), ★பொன்னுலகாளீரோ (திருவா.6-8), ★எங்கானல் (திருவா.9-7) என்கிற நாலு திருவாய்மொழிகளிலும் க்ரமப்ராப்திபற்றாமல் தூதுவிட்டு, (ஆற்றாமைசொல்லி) ‘‘ஆற்றாமைசொல்லி அழுவோமை’’ (திருவா.2-1-7) என்று ★வாயும் திரையுகளிலே ஸகலபதா₃ர்த்த₂ங்களும் ப₄க₃வத₃லாப₄த்தாலே நோவு படுகிறனவாக க்லேஶித்து, (கவராதவைவிட்டு) ★ஏறாளுமிறையோனிலே ‘‘மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே’’ (திருவா.4-8-1) என்று அவன்விரும்பாத ஆத்மாத்மீயங்கள் வேண்டா என்று உபேக்ஷித்து, (இரைக்கமடலெடுத்து) ★மாசறு சோதியிலே ‘‘யாமடலூர்ந்தும் … நாடுமிரைக்கவே’’ (திருவா.5-3-10) என்று ஜக₃த்க்ஷோப₄ம் பிறக்கும்படி மடலூரக்கடவேனென்று, (கண்புதையப்போக்கற்று) ★ஊரெல்லாம் துஞ்சியிலே ‘‘பின்னின்ற காதல்நோய் நெஞ்சம் பெரிதடுமால் முன்னின்- றிராவூழி கண்புதைய மூடிற்றால்’’ (திருவா.5-4-6) என்று ப்ரேமவ்யாதி₄யும், ராத்ரியாகிற கல்பமும் க்ருத ஸங்கேதிகளாய்க்கொண்டு சூழப்பொருகையாலே போக்கடியற்று.
(உருநெஞ்சுள்ளெழ) ★எங்ஙனேயோவிலே ‘‘சோதிவெள்ளத்தினுள்ளே எழுவதோருரு என்னெஞ்சுள்ளெழும்’’ (திருவா.5-5-10) என்று தேஜஸ்தரங்க₃மத்₄யே உந்நேயமான அப்ராக்ருதவிக்₃ரஹம் நெஞ்சிலே ப்ரகாஶிக்கும்படியான உருவுவெளிப் பாட்டாலே ப்ரீத்யப்ரீதிஸமமாய், (கூடுநாள்தேடி) ★மானேய்நோக்கியிலே ‘‘திருவல்ல வாழுறையும் கோனாரை அடியேனடிகூடுவதென்றுகொலோ’’ (திருவா.5-9-1) என்று அவன்- திருவடிகளைக்கிட்டும் நாளை ப்ரார்த்தி₂த்து, (தாழ்த்ததுக்கு ஊடி) இப்படி ப்ரார்த்தி₂க்கச் செய்தேயும் தாம் தாழ்த்தவாறே, ★மின்னிடைமடவாரிலே ‘‘போகுநம்பீ’’ (திருவா.6-2-2) என்று ப்ரணயரோஷத்தாலே ஊடி.
(உசாத்துணையற்று) ★வெள்ளைச்சுரிசங்கிலே ‘‘என்னெஞ்சினாருமங்கே ஒழிந்தார் ஆரைக்- கொண்டென்னுசாகோ’’ (திருவா.7-3-4) என்று அபஹ்ருதசித்தையாகையாலே உசாத்துணையுமின்றிக்கே, (பகைமுகம்செய்ய) ★ஏழையராவியிலே ‘‘கண்ணன் கோளிழை வாண்முகமாய்க் கொடியேனுயிர் கொள்கின்றதே’’ (திருவா.7-7-8) என்று உருவெளிப் பாட்டாலே பா₃த₄கவர்க்க₃ங்களெல்லாம் ஒருமுகமாய் நலியத்தேட நில்லாதே, ★நங்கள் வரிவளையிலே ‘‘காலம்பலசென்றும் காண்பதாணை உங்களோடெங்கள் இடையில்லை’’ (திருவா.8-2-7) என்று அதிமாத்ரப்ராவண்யமாகாதென்று நிஷேதி₄க்கிற தோழிமாரையும் தாய்மாரையும் அதிக்ரமித்து.
(புயக்கற்று) ★இன்னுயிர்ச்சேவலிலே ‘‘இழைநல்ல வாக்கையும் பையவே புயக்கற்றது’’ (திருவா.9-5-10) என்று முடிகையிலே வ்யவஸிதையாய், (மாலையும் காலையும் பூசலிடுகிற) ★மல்லிகைகமழ்தென்றலிலும், ★வேய்மருதோளிணையிலும் ஸந்த்₄யாகாலத்தில் க்ருஷ்ணனைப் பசுக்களின் முற்கொழுந்தில் வரக்காணாமையாலும், அக்காலத்தில் பா₃த₄கபதா₃ர்த்த₂ங்களாலும் நோவுபட்டுக்கூப்பிட்டும், ப்ராத:காலத்திலே க்ருஷ்ணன் பசுமேய்க்கப்போனானாக அதிஶங்கைபண்ணி, க்ருஷ்ணன்முகத்தைப் பார்த்து, ‘நீ பசுமேய்க்கப்போனால் நலியக் கடவதான பா₃த₄கபதா₃ர்த்த₂ங்களும் நலியா– நின்றது’ என்று கூப்பிட்டும், இப்படித்தலைமகள்பேச்சான பதினேழுதிருவாய்மொழியிலும் க்ரமப்ராப்தி பற்றாத படியான அதிமாத்ரப்ராவண்யகார்யமான ப்ராப்யத்வரை தோன்றும். (134)
135. தோழிமார் அன்னையர் என்கிற பன்மை ரக்ஷகத்வாதி பந்தவாத்ஸல்யாதி வ்யவஸாயபுத்தி பேதத்தாலே.
ஆனால் தோழி என்றும், தாய் என்றும் சொல்லுகிறது ஸம்ப₃ந்த₄ஜ்ஞாநத்தையும் உபாயாத்₄யவஸாயஜ்ஞாநத்தையுமாகில் இவற்றினுடைய பன்மைக்கு தாத்பர்யம் என் என்னில்; அந்த ஸம்ப₃ந்தோ₄பாயங்களினுடைய விதா₄பே₄த₃ங்களை விஷயீகரித்த ஜ்ஞாநவ்யவஸாயங்களினுடைய பே₄த₃த்தாலே சொல்லுகிறதென்கிறார் (தோழிமார் அன்னையர் என்று தொடங்கி). ‘‘ஊரென்சொல்லிலென் தோழிமீர்’’ (திருவா.5-3-8), ‘‘எங்ஙனேயோ அன்னைமீர்காள்’’ (திருவா.5-5-1), ‘‘அன்னையரும் தோழியரும்’’ (திருவா. 5-4-5), ‘‘ஏலமலர்க்குழலன்னைமீர்காள்’’ (திருவா.8-2-3), ‘‘என்னுடைத் தோழியர்காள்’’ (திருவா.8-2-7) என்று தோழிமாரையும், தாய்மாரையும் பலவாகச் சொல்லுகிறது – ரக்ஷக த்வாதி₃ப₃ந்த₄வாத்ஸல்யாதி₃வ்யவஸாயபு₃த்₃தி₄பே₄த₃த்தாலே; ‘ரக்ஷகரக்ஷ்ய ஸம்ப₃ந்த₄ம், ஶேஷஶேஷிஸம்ப₃ந்த₄ம், பித்ருபுத்ரஸம்ப₃ந்த₄ம், ப₄ர்த்ருபா₄ர்யாஸம்ப₃ந்த₄ம், ஜ்ஞாத்ரு ஜ்ஞேய ஸம்ப₃ந்த₄4ம், ஸ்வஸ்வாமிஸம்ப₃ந்த₄ம், ஶரீரஶரீரிஸம்ப₃ந்த₄ம், ஆதா₄ராதே₄ய ஸம்ப₃ந்த₄ம், நியந்த்ருநியாம்யஸம்ப₃ந்த₄ம், போ₄க்த்ருபோ₄க்₃யஸம்ப₃ந்தம்’ என்று இவை முதலான ஸம்ப₃ந்த₄ங்களை விஷயீகரித்த ஜ்ஞாநங்கள் பலவாகையாலே அவற்றையும், வாத்ஸல்யம், ஸ்வாமித்வம், ஸௌஶீல்யம், ஸௌலப்₄யம், ஜ்ஞாநம், ஶக்தி, க்ருபை, ப்ராப்தி, பூர்த்தி என்கிற கு₃ணாநுஸந்தா₄நத்தாலே அந்த வ்யவஸாயபு₃த்₃தி₄களும் பலவாகையாலே பன்மையாகச் சொல்லுகிறது என்கிறார். (135)
136. அபி₄லாஷா–சிந்தந–அநுஸ்ம்ருதி–இச்சா–ருசி–பர– பரம–ா–ருசி–பர– பரம–லாஷா–சிந்தந–அநுஸ்ம்ருதி–இச்சா₂-ருசி–பர–பரமப₄க்திகளிலே பேதை முதலான பருவம் கொள்ளும்.
தலைமகளுக்கும் இந்த ப₄க்தியினுடைய அவஸ்தா₂பே₄த₃ங்களினாலே பேதை முதலான பருவங்கள் உண்டென்கிறார் (அபி₄லாஷை என்று தொடங்கி). அபி₄லாஷையாவது – ப்ரத₂மத₃ர்ஶநத்தில் பிறக்கும் ஆசை. சிந்தனையாவது – த்₃ருஷ்டமான விஷயத்தில் உண்டான ஸ்மரணம். அநுஸ்ம்ருதியாவது – அந்த ஸ்மரணம் இடைவிடாமல் நடக்கை. இச்சை₂யாவது – அவ்விஷயத்தை அவஶ்யம் அநுப₄விக்கவேணுமென்கிற ஆசை. ருசியாவது – ரஸாந்தரத்தால் மாற்றவொண்ணாதபடி அந்த ஆசை முதிருகை. பர ப₄க்தியாவது – அந்த வஸ்துவினுடைய ஸம்ஶ்லேஷவிஶ்லேஷங்களே ஸுக₂ து₃:க₂ங்களாகை. பரமப₄க்தியாவது – அவ்வஸ்துவினுடைய விஶ்லேஷத்தில் ஸத்தை கிடையாதொழிகை. ஆகையாலே இந்த அவஸ்தா₂பே₄த₃ங்களினாலே பேதை முதலான பருவம் கொள்ளக்கடவது என்கிறார். (136)
137. மயில் பிறை வில் அம்பு முத்து பவளம் செப்பு மின் தேர் அன்னம் தெய்வவுரு விகாஸ ஶுத்₃தி, தாந்தி ஜ்ஞாநாநந்த அநுராக பக்த்யணுத்வ போ₄க்யதாகதிகளையுடைய அகமேனியின் வகுப்பு.
மேல் அந்தத் தலைமகளுக்குச் சொல்லுகிற அவயவவைலக்ஷண்யம் இவ்வாத்மா– வினுடைய ஜ்ஞாநவிகாஸாதி₃களாகக் கடவதென்கிறார் (மயில் பிறை என்று தொடங்கி). ‘‘தோகைமாமயிலார்கள்’’ (திருவா.6-2-2) என்று ஸ்த்ரீகளை மயில் என்பது – அளக– பா₄ரத்தினுடைய விஸ்த்ருதியைப்பற்றவாகையாலே, ஆத்மாவினுடைய ஜ்ஞாநவிகா– ஸத்தைச் சொல்லுகிறது. ‘‘பிறையுடைவாணுதல்’’ (திருமோழி.2-9-9) என்று ஸ்த்ரீ களுடைய நெற்றியைப் பிறையாகச் சொல்லுகையாலே, அதினுடைய தா₄வள்யத்தை இட்டு அந்த ஜ்ஞாநத்தினுடைய ஶுத்₃தி₄யோக₃த்தைச் சொல்லுகிறது. ‘‘விற்புருவக்கொடி’’ (திருவா.6-6-6) என்று புருவத்தின் வளைவாலே வில்லாகச் சொல்லுகையாலே, அது கொண்டு ஜ்ஞாநத்தினுடைய தா₃ந்திரூபதையைச் சொல்லு– கிறது. ‘‘அம்பன்ன கண்ணாள்’’ (திருமொழி.6-8-6) என்று கண்ணை அம்பாகச் சொல்லுகிறது – லக்ஷ்யபாதியாகையாலே, அத்தாலே விஷயக்₃ராஹியான ஜ்ஞாநத்தைச் சொல்லுகிறது.
★முத்தன்னவெண்முறுவலை முத்தாகச் சொல்லுகிறது – அதினுடைய ஒளியையும், நீர்மையையும் இட்டாகையாலே, ‘‘முத்ப்ரீதி: ப்ரமதோ₃ ஹர்ஷ:’’ என்று அந்த ஜ்ஞாநத்தினுடைய ஆநந்தரூபதையைச் சொல்லுகிறது.‘‘பவளவாயாள்’’ (திருமொழி 4 – 8 – 1) என்று அத₄ரத்தை ப்ரவாளமாகச் சொல்லுகிறது – சிவப்பையிட்டாகையாலே, ப₄க₃வத்₃ விஷயத்தில் அந்த ஜ்ஞாநத்தினுடைய அநுராக₃தையைச் சொல்லுகிறது. ‘‘செப்பன்ன மென்முலை’’ (திருப்பாவை 20) என்று முலைகளைச் செப்பாகச் சொல்லு– கையாலே, ஶேஷிக்கு போ₄க்₃யமாம்படி அந்த ஜ்ஞாநம் ப₄க்திரூபாபந்நமானமையைச் சொல்லுகிறது. ‘‘மின்னனையநுண்மருங்குல்’’ (திருமொழி 3 – 9 – 5) என்று இடையின் நுண்மையையிட்டு மின்னாகச்சொல்லுகையாலே ஆத்மாவினுடைய அணுத்வம் சொல்லுகிறது.
‘‘தேரணங்கல்குள்’’ என்று நிதம்ப₃த்தினுடைய விஸ்த்ருதியைச் சொல்லுகையாலே ஆத்மாவினுடைய போ₄க்₃யதையைச் சொல்லுகிறது. ‘‘பெடை அன்னமென நடந்து’’ (திருமொழி.3-7-5), ‘‘தூவிசேரன்னமன்ன நடையாள்’’ (திருமொழி.3-7-9) என்று நடையை இட்டு அன்னமாகச் சொல்லுகையாலே, ஆத்மாவினுடைய ஶேஷத்வாநு– ரூபாநுஷ்டா₂நத்தைச் சொல்லுகிறது. ஆக இத்தால், ‘‘என் தெய்வவுருவில் சிறுமான்’’ (திருவா.4-4-2) என்று அப்ராக்ருதஸ்வபா₄வமாய், ‘‘அகமேனியொழியாமே’’ (திருவா.9-7-10) என்று ஸர்வேஶ்வரனுக்கு அந்தரங்க₃ஶரீரமான ஆத்மாவுக்கு அவயவபூ₄தமான ஜ்ஞாநத்தினுடைய பி₄தை₃கள் என்கிறார். (137)
138. சூழ்ச்சி அகற்றினீர் என்னும்பழி, இணக்கி எங்ஙனே என்னும் மேலெழுத்து, முன்னின்றாய் இவளை நீரென்னும் இருபடை மெய்க்காட்டு, நீரென்னேயென்னுமுடன்பாடு, இடையில்லையென்னுமுதறுதல், இருந்திருந்து நடந்தாளென்னும் கொண்டாட்டம் – அவஸ்தாத்ரய வ்ருத்தி.
இனிமேல் கீழ்ச்சொன்ன அவஸ்தா₂த்ரயத்தினுடைய வ்ருத்தியைச் சொல்லுகிறது (சூழ்ச்சி அகற்றினீர் என்று தொடங்கி). ‘‘தோழிமார்பலர் கொண்டுபோய்ச்செய்த சூழ்ச்சியை யார்க்குரைக்கேன்’’ (பெரியா. திரு.3-7-4) என்று தாயார் தோழிமார்மேலே பழியிட, ‘‘அமுதமென்மொழியாளை நீருமக்காசை இன்றி அகற்றினீர்’’ (திருவா. 6-5-2) என்று தோழி தாய்மார்மேல் பழியிட, ‘‘இணக்கி எம்மையெம் தோழிமார் விளையாடப் போதுமின் என்னப் போந்தோமை’’ (திருவா.6-2-8) என்றும், ‘‘எங்ஙனேயோ அன்னைமீர்காளென்னை முனிவது நீர்’’ (திருவா.5-5-1) என்றும் தலைமகள், ‘உங்களாலே யன்றோ எனக்கு இந்த ஈடுபாடு உண்டாயிற்று’ என்று பழி இரண்டுக்கும் ஒப்புக் கொண்டதற்கு அறிகுறியாக கையெழுத்திட (முன்னின்றாய் இத்யாதி₃ – மெய்க்காட்டு) ‘‘முன்னின்றாயென்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்’’ (திருவா.5-5-9) என்று தோழி தாய்மாரொடே கூடி நின்று தலைமகளைப் பொடிந்தும், ‘‘தொலைவில்லி மங்கலம் தொழுமிவளை நீரினி அன்னைமீர் உமக்காசையில்லை விடுமினோ’’ (திருவா.6-5-1) என்று தோழி, தாய்மார்க்கு கார்யோபதே₃ஶம் பண்ணுவாரைப்போலே தலைமகளுக்கும் ஸஹகரித்தும் இப்படி இருபடை மெய்க்காட்டு.
(நீரென்னேயென்னுமுடன்பாடு) ‘‘அன்னையரும் தோழியரும் நீரென்னேயென்னாதே நீளிரவும் துஞ்சுவரால்’’ (திருவா.5-4-5) என்று தலைமகள் தாய்மாரொடும் தோழி– மாரோடும் உடன்பாடாக வார்த்தைசொல்ல; (இடையில்லையென்னுமுதறுதல்) அவர்கள், ‘நீ எங்கள் வார்த்தை கேட்கில் மீளவமையும்’ என்ன, ‘‘உங்களோடெங்களிடை இல்லையே’’ (திருவா.8-2-7) என்று ‘நீங்கள் இவ்விஷயத்தினின்றும் மீட்கத்தேடினால் உங்களுக்கும் எனக்கும் ஒரு ஸம்ப₃ந்த₄மில்லை’ என்று அவர்களை மீறி, (இருந்திருந்து நடந்தாள் என்னும் கொண்டாட்டம்) ‘‘இருந்திருந்தரவிந்தலோசன என்றென்றே நைந்து இரங்குமே’’ (திருவா.6-5-8) என்று தோழி கொண்டாட்டமும், ‘‘நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே’’ (திருவா.6-7-9) என்று தாயார் கொண்டாட்டமுமான இவை அவஸ்தா₂த்ரயவ்ருத்தி.
இத்தால் இந்த வ்ருத்திகளினுடைய அவஸ்தா₂த்ரயத்துக்கும் ஸ்வாபதே₃ஶம் – ‘சூழ்ச்சி அகற்றினீர்’ என்று அந்யோந்யம் பழியிடுகிறவித்தால் ஶேஷத்வஜ்ஞாநம் ஶேஷ– வ்ருத்திபர்யந்தமாயல்லதிராமையாலே அந்த ஸம்ப₃ந்த₄ஜ்ஞாநம் ப்ராப்யருசிக்கு ஹேது என்றும், உபாயாத்₄யவஸாயம் உபேயவைலக்ஷண்யத்தை முன்னிட்டுக்கொண்டல்ல– திராமையாலே அந்த அத்₄யவஸாயம் உபேயருசிக்கு ஹேதுவென்றும், மேலெழுத்து என்று ப்ராப்யத்வரைதன்னை நிரூபித்தாலும் இது ஸம்ப₃ந்தோ₄பாயங்களிரண்டாலும் வந்ததென்று சொல்லுகிறவித்தாலும், ஸம்ப₃ந்த₄ஜ்ஞாநமும் உபாயாத்₄யவஸாயமும் ப்ராப்யத்வரைக்கு ஹேதுவென்று அந்த ஸம்ப₃ந்தோ₄பாயங்களிரண்டினுடையவும் ப்ராதா₄ந்யம் தோற்றிநிற்கிறது.
ப்ரத₂மத₃ஶையில் – வ்ருத்தி இருபடைமெய்க்காட்டென்கிறவித்தால் ஸம்ப₃ந்த₄ஜ்ஞாந– மானது, ஶேஷத்வம் ஸ்வரூபமானபின்பு அந்த ஶேஷிதானே வந்து விஷயிகரிக்கக் கண்டிருக்குமத்தனையல்லது தான் த்வரிக்கை ஸ்வரூபவிருத்₃த₄ம் என்று உபாயாத்₄யவ– ஸாயத்துக்கு ஸஹகரித்தும், ஶேஷத்வம் வ்ருத்திபர்யந்தமாகையல்லது ஸித்₃தி₄யா– தென்று அந்த வ்ருத்தியில் ருசியை விளைக்கையாலே ப்ராப்யத்வரைக்கு ஸஹகரித்தும், உடன்பாடென்கிறவித்தால் ப்ராப்யம் ஸம்ப₃ந்தா₄நுகு₃ணமாகவும் வேண்டுகையாலே ப்ராப்யத்வரை இவையிரண்டும் கூடி நின்றபடி சொல்லிற்று.
ஆக இருபடைமெய்க்காட்டு உடன்பாடென்கிற இரண்டாலும் ஸம்ப₃ந்த₄ஜ்ஞாநம் உபாயவ்யவஸாயம் உபேயருசி என்கிற இவற்றில் சேர்ந்துநின்றது மத்₄யமத₃ஶையில் வ்ருத்தி; உதறுதல் கொண்டாட்டம் என்கிற இரண்டாலும் ப்ராப்யத்வரையானது ஸம்ப₃ந்தோ₄பாயங்களை அதிக்ரமிக்க, ப₂லத₃ஶையில் ஸ்வரூபம் ப்ராப்யாநுகு₃ணம் என்னுமிடத்தையும், ‘‘எம்மையொன்றும் நினைத்திலளே’’ (திருவா.6-7-9) என்று உபாய அத்₄யவஸாயஸத்₃பா₄வம் இல்லையென்னுமிடத்தையும் சொல்லுகிறது, சரம– த₃ஶையில் வ்ருத்தி; ஆக அவஸ்தா₂த்ரயவ்ருத்தி. (138)
139. தாயார், ஏதலர் உற்றீர்கள் என்னும் ஸாத்₄யஸித்த₄ ஸாதந நிஷ்டரை; மகள், நம்முடை ஏதலர் யாமுடைத்துணை என்னும் ஸித்த ஸாதந ஸாத்₄யபரரை.
(தாயார் ஏதலர் இத்யாதி₃) தாயாரான உபாயாத்₄யவஸாயத₃ஶையில் ஸ்வரூபம் ப்ராப்யாநுகு₃ணம் என்னுமிடத்தையும், ‘‘எம்மையொன்றும் நினைத்திலளே’’ (திருவா.6-9-7) என்று உபாயாத்₄யவஸாயஸத்₃பா₄வமில்லை என்னுமிடத்தையும் சொல்லுகிறது ஆரை என்னில், ஸித்₃த₄ஸாத₄நத்துக்கு எதிர்த்தட்டான உபாயாந்தரநிஷ்ட₂ரையும், அநுகூலரான ஸித்₃த₄ஸாத₄நநிஷ்ட₂ரையும் சொல்லுகிறது. (மகள் நம்முடை ஏதலர் யாமுடைத்துணை என்னும்) மகள் என்று சொல்லுகிற ப்ராப்யத்வராத₃ஶையில் ‘‘நம்முடை ஏதலர் முன்பு நாணி’’ (திருவா.8-2-1) என்று அந்த விரோதி₄களாகவும், ‘‘யாமுடைத்துணையென்னும் தோழிமாரும்’’ (திருவா.9-9-5) என்று தன்ேனாடு ஸம– ஸுக₂து₃:கி₂களான ப₃ந்து₄க்களாகவும் சொல்லுகிறது ஆரை என்னில், தன்னைப்போலே ப₄க₃வத்₃ விஷயமொன்றிலும் இழிந்திருக்கச்செய்தேயும் அத்தை ப்ராப்யம் என்று கொள்ளாதே ப்ராபகம் என்று கொள்ளுகிற ஸித்₃த₄ஸாத₄நநிஷ்ட₂ரையும், தன்னைப் போலே ப்ராப்யமென்றிருக்கிற ஸாத்₄யபரரையும் சொல்லுகிறது.(139)
140. நாலயலார் அயற்சேரியார் உபாயசதுஷ்டயாந்தர்யாமித்வபரர்.
(நாலயலார் இத்யாதி₃ அந்தர்யாமித்வபரர்) ‘‘நாலயலாருமறிந்தொழிந்தார்) (நா.தி.12-2) என்றும், ‘‘அயற்சேரியுள்ளாருமெல்லே’’ (திருவா.6-7-4) என்றும் நாலயலாகவும், அயல் தெருவாகவும் சொல்லுகிறது ஆரை என்னில், கர்ம ஜ்ஞாந ப₄க்தி என்கிற நான்கு உபாயநிஷ்ட₂ரையும், பரத்வம் முதலான மற்றை நாலிடத்திலும் உறவற்று கேவலம் ஸ்வரூபாந்தர்யாமியளவிலே உறைத்திருக்குமவர்களையும் சொல்லுகிறது.
141. கீழை மேலை வடக்கிலவை புறம்பாகத் தன்பற்றுள்ளசல்.
ஆனால் ப்ரபத்திநிஷ்ட₂ரையும் அசலாகச் சொல்லுமோ என்னில், (கீழை மேலை வடக்கிலவை புறம்பாகத் தன்பற்றுள்ளசல்) என்கிறார். ‘‘கீழையகத்துத்தயிர்கடைய’’ (பெரு.தி.6-2) இத்யாதி₃யாலே சொல்லுகிற கர்மநிஷ்ட₂ரையும், ‘‘மேலையகத்துநங்காய் வந்து காண்மின்கள்’’ (திருமொழி.10-8-2) என்று சொல்லுகிற ஜ்ஞாநயோக₃- நிஷ்ட₂ரையும், ‘‘வடக்கிலகம் புக்கிருந்து மின்போல் நுண்ணிடையாளொரு கன்னியை வேற்றுருவம் செய்துவைத்த அன்பா’’ (பெரியா. தி.3–1-2) என்றும் சொல்லுகிற ப₄க்தியோக₃நிஷ்ட₂ர்க்கும் ஸித்₃த₄ஸாத₄நநிஷ்ட₂ர்க்குப் புறவாசலாகையாலும் இவ்விஷயத்திலே இழிந்திருக்கச் செய்தேயும் தன்பற்றை உபாயமென்றிருக்குமவர்கள் உள்ளசலாயிருக்கையாலும் சொல்லுகிறது. (141)
142. ஊரார் நாட்டார் உலகர் கேவலைஶ்வர்யகாம ஸ்வதந்த்ரர்.
(ஊரார் நாட்டார் உலகர்) ‘‘ஊரும் நாடுமுலகமும்’’ (திருவா.6-7-2) என்றும், ‘‘ஊரவர் கவ்வை’’ (திருவா.5-3-4) என்றும், ‘‘நாட்டாரோடியல்வொழிந்து’’ (திருவா.10-6-2) என்றும், ‘‘எங்கள்கண்முகப்பே உலகர்கள்’’ (திருவா.9-2-8) என்றும் சொல்லுகிற இது – ஊரார் என்று கேவலரையும், நாட்டார் என்று புத்ரபஶ்வந்நாதி₃களான ஐஹ– லௌகிக ஐஶ்வர்ய காமரையும், உலகத்தவர் என்று ஸ்வர்க்கா₃தி₃பரலோகைஶ்வர்ய– காமரான ஸ்வதந்த்ரரையும் சொல்லுகிறது. (142)
143. இறுகலிறப்புக்கும் இறந்தால் தங்குமூரொக்குமே.
கேவலனையும் ஓரூராகச் சொல்லுவானென் என்னில், (இறுகலிறப்புக்கும் இறந்தால் தங்குமூரொக்குமே) ‘‘எல்லாம்விட்ட இறுகலிறப்பு’’ (திருவா.4-1-10) என்று ஐஶ்வர்யத்தையும், ப₄க₃வத₃நுப₄வத்தையும் விட்டு ஆத்மாநுப₄வமாத்ரமான ஸங்கோ–சத்தை மோக்ஷமென்று சொல்லுகிற கேவலனுக்கு அவ்வநுப₄வம் நித்யமாம்போது ‘‘ஜராமரணமோக்ஷாய’’ (கீதை) என்று அதுக்கு விரோதி₄யான ஸ்ருஷ்டிஸம்ஹாரங்க– ளுக்கு கர்மீப₄விக்கைக்கடியான ப்ரக்ருதிப்ராக்ருதஸம்ப₃ந்த₄ம் அற வேண்டுகையாலே ‘‘யோகி₃நாமம்ருதம் ஸ்தா₂நம் ஸ்வாத்மஸந்தோஷகாரிணாம்’’ என்கிறபடியே ‘‘இறந்தால் தங்குமூரண்டமே கண்டுகொண்மின்’’ (திருமொழி.10-2-10) என்று அவனுக்கு வஸ்தவ்யம் தே₃ஶவிஶேஷமாக வேண்டுகையாலே ஊர் என்கிறது.(143)
144. சிறு சீரார் சுளகுகள் உப₄ய விவேக பரிகரம்
(சிறு சீரார் சுளகுகள் உப₄யவிவேகபரிகரம்) ‘‘சிறுசுளகும் மணலுங்கொண்டு’’ (நா.தி. 2-8) என்று சிறுசுளகாவது – பெருமணலையும் நுண்மணலையும் பிரிப்பதொன்றாகையாலே தே₃ஹாத்மவிவேகத்துக்கு பரிகரமான ப்ரமாணம். ‘‘சீரார் சுளகில் சிலநெல் பிடித்தெறியா’’ (சிறியதிருமடல்) என்று தொடங்கி ‘‘பேராயிரமுடையானென்றாள்’’ என்று இவளுக்கு இவ்வ்யாமோஹத்தை விளைத்தான் ஸர்வேஶ்வரனாகையாலே, சீரார் சுளகென்பது – ஆத்மபரமாத்மவிவேகத்துக்கு பரிகரமாய்ப் போருகிற ப்ரமாணம். (144)
145. மாலை கங்குல் காலை பகல் ரஜஸ் தமஸ் ஸத்த்வ ஸுத்த ஸத்த்வ ஞானங்கள்.
(மாலை கங்குல் இத்யாதி₃ – ரஜஸ் தமஸ் ஸத்த்வ ஶுத்₃த₄ஸத்த்வஜ்ஞாநங்கள்) ‘‘மாலையும் வந்தது’’ (திருவா.9-9-10) என்றும், ‘‘செங்களம்பற்றி நின்றெள்குபுன்மாலை’’ (திருவிரு.77) என்றும் சொல்லுகையாலே, மாலையாவது – ஸந்த்₄யை; அது ராகோ₃த்தரமாய் இருப்பதொன்றாகையாலே ராஜஸஜ்ஞாநம். ‘‘கங்குல் நாழிகை ஊழியில்’’ (திருமொழி.9-5-3) என்றும், ‘‘செல்கின்றகங்குல்வாய்’’ (திருவா. 5-4-10) என்றும்
கங்குல் என்பது – மத்₄யராத்ரி; அது தமோபூ₄தமாயிருக்கையாலே தாமஸஜ்ஞாநம். ‘‘காலை யெழுந்திருந்து’’ (நா.தி.9-8) என்று காலையாவது – ப்ராத:காலம்; அது ப்₃ராஹ்ம– முஹூர்த்தமாய் ஸத்த்வோத்தரகாலமாகையாலே ஸாத்த்விகஜ்ஞாநம். ‘‘பகல்கண்டேன் நாரணனைக்கண்டேன்’’ (இ.திரு.71) என்று, பகலாவது – ஸகலபதா₃ர்த்த₂ங்களையும் யதா₂ த₃ர்ஶநம் பண்ணுவிப்பதொரு காலமாகையாலே கு₃ணவிக்₃ரஹவிபூ₄தி விஶிஷ்டனான ஸர்வேஶ்வரனை யதா₂வாக ஸாக்ஷாத்கரிக்கிற ஶுத்₃த₄ஸத்த்வஜ்ஞாநம். இத்தால் அந்யதா₂- ஜ்ஞாநம், விபரீதஜ்ஞாநம், யதா₂ஜ்ஞாநம், தத்ப₂லமான ஸாக்ஷாத்கார ஜ்ஞாநம் என்கிற இவற்றைச் சொல்லுகிறது. (145)
146.நிலாமுற்றம் ப்ரஜ்ஞாப்ராஸாதம் என்னும் எல்லைநிலம்.
(நிலாமுற்றமித்யாதி₃ – எல்லைநிலம்) ‘‘நீணிலாமுற்றத்து நின்றிவள் நோக்கினாள்’’ (திரு– மொழி.8-2-2) என்று நிலாமுற்றமாகச் சொல்லுகிறது – ‘‘ப்ரஜ்ஞாப்ராஸாத₃- மாருஹ்யாஶோச்யஶ்ஶோசகாந் ஜநாந் | பூ₄மிஸ்தா₂நிவ ஶைலஸ்தோ₂ ஹ்யஜ்ஞாந் ப்ராஜ்ஞ: ப்ரபஶ்யதி’’ என்று சொல்லுகிறபடியே ‘‘காணுமோ கண்ணபுரமென்று காட்டினாள்’’ (திருமொழி .8-2-2) என்று சொல்லுகையாலே ததீ₃யரை ப்ராப்யர் என்கிற எல்லைநிலமான புருஷார்த்த₂ ஜ்ஞாநத்தை என்கிறார். (146)
147. கலைவளை அஹம் மம க்ருதிகள்.
(கலைவளை என்று தொடங்கி – மமக்ருதிகள்) ‘‘கைவளையும் மேகலையும் காணேன் கண்டேன் கனமகரக்குழையிரண்டும் நான்குதோளும்’’ (திருநெடு. 22) என்றும், ‘‘கலையாளாவகலல்குல் கனவளையும் கையாளா என்செய்கேன்நான்’’ (திருமொழி 5-5-2) என்றும் கலை வளையாகச் சொல்லுகிறது – ப₄க₃வத₃நுப₄வவிரோதி₄யான அஹங்கார– மமகாரங்களை. (147)
148. பட்டம் சூடகமாவன பராவரகுருக்கள் பூட்டும் ஆத்மபூ₄ஷணங்கள்.
(பட்டம் சூடகமாவன – பூ₄ஷணங்கள்) ‘‘பட்டங்கட்டிப்பொற்றோடுபெய்திவள் பாடகமும் சிலம்பும் இட்டமாக வளர்த்து’’ (பெரியா. திரு.3-7-6) என்றும், ‘‘சூடகமே தோள்வளையே’’ (திருப்பாவை.27) என்று தொடங்கி இவற்றாலே சொல்லுகிற ஆப₄ரணங்களாவன – ‘‘க்ருஷ்ணாங்க்₄ரிதுளஸீமௌளி: பட்டம் க்ருஷ்ணாபி₄வந்த₃நம் | குண்ட₃லே க்ருஷ்ணசரிதஶ்ரவணம் கங்கேணாஞ்ஜலி:’’ என்கிறபடியே ப்ரத₂மத்திலே இவளை அங்கீ₃கரித்த ஆசார்யன் உண்டாக்குமவை. இவ்வாத்மாவுக்கு அலங்காரமாய் இருக்கிற நாமரூபங்களும், ப₄க₃வத்₃வந்த₃நாதி₃களும், பின்பு அவ்வாசார்யவைப₄வத்தை உணர்த்தினவன் உண்டாக்கின ஶேஷத்வஜ்ஞாநாதி₃களும் என்கிற இவை. (148)
149. பந்து கழல் பாவை குழமணன் யாழ் தென்றல் மதியம் அடிசில் சாந்தம் பூண் அகில் சிற்றில் தூதை முதலாவன குணத்ரயவிசித்ரகர்ம ஸூத்ரத்தாலே கட்டி லீலையாக ப்ரேரிக்க விழுந்தெழுந்தும் சுழன்றுழன்றும் பறிபட்டும் அற்பசாரமாமவையுமாய், மதீயமென்னில் விட்டகலவும், ததீ₃யமென்னில் இகழ்வறவும் முனிவதும் இக்காலம் .ஈதோ என்னப்படும் பொங்கைம்புலனில் போக்யாதி ஸமூஹம்.
(பந்து கழல் இத்யாதி₃ – போ₄க்₃யாதி₃ முதலானவை) போ₄கோ₃பகரணமாகவும் சொல்லப்படுகிறவற்றுக்கு ஸ்வாபதே₃ஶம் அருளிச்செய்கிறார். ‘‘பந்தும் கழலும் தந்து போகு நம்பீ’’ (திருவா.6-2-1) என்று பந்து கழல் என்பது – போ₄க₃ஸ்தா₂நமாகிற ஸ்தூ₂ல ஸூக்ஷ்ம ஶரீரங்களை. ‘‘கன்மமன்றெங்கள் கையில் பாவை பறிப்பது’’(திருவா.6-2-7) என்றும், ‘‘குழகியெங்கள் குழமணன்கொண்டு’’ (திருவா 6-2-6) என்றும் சொல்லுகையாலே பாவை குழமணன் என்பது – போ₄க்த்ருவர்க்க₃மான ஸ்த்ரீபுருஷ– விபா₄க₃த்தை. ‘‘சீருற்ற அகில்புகை யாழ் நரம்பு’’ (திருவா.9-9-7) என்றும், ‘‘தைவந்த தண்தென்றல்’’ (திருவா 5-4-8) என்றும், ‘‘மேவுதண்மதியம்’’ (திருவா.9-9-4) என்றும், ‘‘இன்னடிசிலொடு பாலமுதூட்டி’’ (நா.தி.5-5) என்றும், ‘‘சாந்தமும் பூணும் சந்தனக்குழம்பும்’’ (திருமொழி .2-7-3) என்றும் சொல்லுகிற யாழ் தென்றல் மதியம் அடிசில் சாந்தம் பூண் அகில் என்கிறவை ஶப்₃தா₃தி₃களான போ₄க்₃யங்கள். சிற்றில் என்பது – போ₄க₃ஸ்தா₂நம், தூதை என்பது – பதா₃ர்த்த₂ங்களை இட்டுவைப்பதொன்றாகையாலே போ₄கோ₃பகரணங்களுக்கு உபலக்ஷணம்.
(கு₃ணத்ரயவிசித்ரகர்மஸூத்ரத்தாலே கட்டி) பந்தானது – வெண்ணூல் செந்நூல் கருநூலாலே கட்டியிருப்பதொன்றாகையாலே, ப்ரக்ருதியும், ‘‘லோஹிதஶுக்ல– க்ருஷ்ணாம்’’ (தை.உ.) என்று ஸத்வ ரஜஸ்தமஸ்ஸுக்களாலே விசித்ரமாய். ‘‘த்வம் ந்யஞ்சத்₃பி₄ருத₃ஞ்சத்₃பி₄: கர்மஸூத்ரோபபாதி₃தை: | ஹரே விஹரஸி க்ரீடா₃கந்து₃கைரிவ வஸ்துபி:’’ என்கிறபடியே கர்மஸூத்ரத்தாலே கட்டி. (லீலையாக ப்ரேரிக்க விழுந்– தெழுந்தும் சுழன்றுழன்றும்) ‘‘அஜ்ஞோ ஜந்துரநீஶோயமாத்மநஸ்ஸுக₂து₃:க₂யோ: | ஈஶ்வரப்ரேரிதோ க₃ச்சே₂த் ஸ்வர்க்க₃ம் வா ஶ்வப்₄ரமேவ வா’’ (பார.சா.ப.12-36) என்கிறபடியே அஜ்ஞனாய் அஶக்தனாயிருக்கிற இவன் கர்மாநுகு₃ணமாக ஈஶ்வரன் ப்ரேரிக்க, ‘‘யமாலயமஹாஶூலே மாதுர்ஜட₂ரதோல்பத: | யாதாயாதஸஹஸ்ராணாம் முநே ஜீவஸ்யஸாத₄நம் || க்வசித்கதா₃சித்ஸ்வர்க்க₃ஸ்ய புந:பதநது₃ர்க₃தே:’’ என்கிறபடியே ஸ்வர்க்க₃-நரக–க₃ர்ப்ப₄ங்களிலே தட்டித்திரிந்து பறிபட்டு, ‘‘பந்துபறித்து’’ என்கிறபடியே ஈஶ்வரன் தன்னுடைய போ₄க₃விரோதி₄ என்று விடுவிக்க விட்டும்.
(அற்பசாரமாமவையுமாய்) ‘‘அற்பசாரங்களவை சுவைத்தகன்றொழிந்தேன்’ (திருவா.3-2-6) என்கிறபடியே ஶப்₃தா₃தி₃கள் ப₄க₃வத்₃விஷயத்தினின்றும் அகற்றுமது (ஒழியத் தன்பக்கல் பு₄ஜிக்கலாவதொன்றில்லாதபடி அல்பஸாரங்களாய். (மதீ₃யமென்னில் விட்டகலவும்) இவற்றை ப₄க₃வதீ₃யத்வாகாரமொழிய மதீ₃யமென்று பார்த்தபோது ‘‘சிற்றில் மென்பூவையும் விட்டகன்ற செழுங்கோதை’’ (திருமொழி. 3-7-8) என்கிற படியே த்யாஜ்யங்களாய். (ததீ₃யமென்னில் இகழ்வறவும்) ததீ₃யத்வாகாரத்தாலே கண்டபோது ‘‘இகழ்விலிவ்வனைத்துமென்கொ’’ (திருவா.3-4-1) என்கிறபடியே கட்டடங்க உபாதே₃யங்களாயும்.
(முனிவதுமிக்காலமீதோ என்னப்படும்) ‘‘அன்னை முனிவதும் அன்றிலின் குரலீர்வதும்’’ இத்யாதி₃ (திருமொழி. 11-2-5), ‘‘இக்காலமிவ்வூர்ப்பனிப்பியல்வெல்லாம் தவிர்ந்தெரி வீசும்’’ (திருவிரு..5) என்கிறபடியே அவனையொழியக்கண்டபோது ப்ரதிகூலங்களாயும், ‘‘அவ்வாடை ஈதோ வந்து தண்ணென்றதே’’ (திருவிரு.27) என்று அவேனாடே சேர்த்துக்கண்டபோது அநுகூலங்களாயுமிருக்கிற. (பொங்கைம்புலனில் போ₄க்₃யாதி₃- ஸமூஹம்) ‘‘பொங்கைம்புலன் என்கிற பாட்டிற்சொல்லுகிற போ₄க்₃ய–போ₄க்த்ரு– வர்க்க₃-போ₄கோ₃பகரண–போ₄க₃ஸ்தா₂நங்களைச் சொல்லுகிறதென்கிறார்.
இரண்டாம் ப்ரகரணம் முற்றிற்று.
அழகியமணவாளப்பெருமாள்நாயனார் திருவடிகளே ஶரணம்
திருநாராயணபுரத்து ஆயி திருவடிகளே ஶரணம்