சரமோபாய நிர்ணயம்

சரமோபாய நிர்ணயம்

நாயனார் ஆச்சான் பிள்ளை

1 – தனியன்கள்

நாயனாராச்சான் பிள்ளையின் தனியன்௧ள்

ஸ்ருத்யர்த்த ஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம்
பத்மோல்லஸத் ப௧வதங்௧ரி புராணபந்தும் |
ஜ்ஞாநாதி ராஜம் அபயப்ரத ராஐபுத்ரம்
அஸ்மத் குரும் பரமகாருணிகம் நமாமி ||

श्रुत्यर्थ सारजनकं स्मृतीबालमित्रम
पद्मोंल्लसद् भगवदङ्ग्रि पूराण बन्धुम |
ज्ञानाधिराजम अभयप्रदराज पुत्रम
अस्मदगुरुम परमकारुणिकं नमामी ||

(வேதப்பொருள்களின் ஸாரத்தைக் கடைந்து எடுப்பவராய் ஸ்ம்ருதி௧ளாகிற தாமரைகளுக்கு இளஞ்சூரியனாய், ஶ்ரீய:பதியின் திருவடிகளுக்குப் பழைய உறவினராய், ஞானங்களுக்கு பேரரசராய், அபயப்ரதராஜரின் பிள்ளையாய், பரமகாருணிகரான என் ஆசார்யரை வணங்குகிறேன்.)

அபயப்ரத பாத தேஶிகோத்பவம்
குருமீடே நிஜமாதரேண சாஹம் |
ய இஹாகில லோக ஜீவநாதர:
சரமோபாய விநிர்ணயம் சகார ||

अभयप्रदपाद देशिकोद्भवम
गुरुमिडे निजमादरेण चाहम् |
या इहाखिललोक जीवनादर:
चरमोपाय विनिर्णयं चकार ||

(அபயப்ரதபாதர் என்னும் பெரியவாச்சான் பிள்ளையாகிற ஆசார்யரின் பிள்ளையாய், எல்லா உலகினரையும் உய்விக்க விரும்பி ‘சரமோபாய நிர்ணயம்’ என்னும் நூலை இயற்றியவரான என் ஆசார்யரை அன்புடன் துதிக்கிறேன்)

பரமகாருணிகரான நாயனாராச்சான் பிள்ளை அருளிச்செய்த சரமோபாய நிர்ணயம்

அபயப்ரத பாதாக்யமஸ்மத் தேஶிகமாஶ்ரயே |
யத்ப்ரஸாதஹம் வக்ஷ்யே சரமோபாயநிர்ணயம் ||

अभयपप्रद पादाख्यं अस्मदेशिकमाश्रये  ।
यत्प्रसादाद अहं वक्ष्ये चरमोपाय निर्णयम ।।

அஸ்மஜ் ஜநக்காருணயஸுதாஸந்து ஷிதாத்மவான் |
கரோமி சரமோபாயநிர்ணயம் மத்பிதா யதா ||

अस्मज्जनककारुण्य सुधा सन्धुक्षितात्मवान ।
करोमी चरमोपायनिर्णय मत्पिता यथा ॥

அஸ்மதுத்தாரகம் வந்தே யதிராஜம் ஜகத்குரும் |
யத்க்ருபாப்ரேரித: குர்மி சரமோபாய நிர்ணயம் ||

अस्मदुत्तारक वन्दे यतिराज जगद्गुरूम |
यत्कुपाप्रेरित: कुर्मी चरमोपाय निर्णयम ||

பூர்வாபரகு ரூகதைஶச ஸ்வப்நவ்ருத்தைர் யதீஶபாக் |
க்ரியதேத்ய மயா ஸம்யக் சரமோபாய நிர்ணயம் ||

पूर्वापरगुरूक्तेश्च स्वप्नवृतैर्यतिशभाक ।
क्रियतेद्य मया सम्यक चरमोपाय निर्णयम॥

உடையவருக்கு முன்புள்ள முதலிகளுடையவும், பின்புள்ள முதலிகளுடையவும் திவ்யஸூக்திகளாலும் அத்யத்புதமான ஸவப்ன வ்ருத்தாந்தங்களாலும், சரமோபாயமானது உடையவரிடத்திலே பூர்ணமாக நிர்ணயிக்கப்படுகையாலே இதுக்குச் சரமோபாய நிர்ணயமென்று திருநாமம் ஆயிற்று.

முதலிகள் தந்தாம் ஆசார்யர்கள் பக்கலிலே ஸாக்ஷாத் ஆசார்யத்வத்தை அறுதியிட்டு  அவ்வர்களுடைய அபிமானமே உத்தாரகமென்று சரமோபாயத்தை அறுதியிட்டிருந்தார்களேயாகிலும், தந்தாம் ஆசார்யர்கள் உடையவரேயே உத்தாரகத்வேந அறுதியிட்டுத் தங்களைப் பற்றினார்க்கும் உடையவரயே தஞ்சமாக உபதேசிக்கையாலே, ஸர்வர்க்கும் உத்தாரகத்வேந சரமோபாயத்தை அறுதியிடலாவது உடையவர் பக்கலிலேயிறே.

குருரிதி ச பதம் பாதி என்கிறபடியே ஆசார்யத்வம் ஒளிவிஞ்சிச் செல்லுகிறது உடையவர் பக்கலிலே வ்யவஸ்திதமிறே. வடுகநம்பி வார்த்தையை நினைப்பது.

உடையவர்க்கு முன்புள்ள முதலிகள் பாவ்யர்த்த ஜ்ஞாநமுடையவர்களாகையாலே, பரமகாருணிகரான இவரிடத்திலே உத்தாரகத்வம் நிலை நிற்குமென்று அறுதியிட்டுத் தங்களுக்குப் பேற்றில் குறையின்றிக்கே இருக்கவும் “கலியும் கெடும்” என்கிற ஆழ்வாருடைய திவ்யஸுக்தியை உட்கொண்டு இவரோடு அவிநாபாவ ஸம்பந்தத்தைப் பரமோத்தாரகமென்று நினைத்து இருந்தார்கள். ஸம்பந்தம் தான் த்விவிதமாயிறேயிருப்பது; ஆரோஹண ஸம்பந்தம் என்றும், அவரோஹண ஸம்பந்தம் என்றும். அதில் ஆரோஹண ஸம்பந்தம் ஆசார்யத்வேந படிப்படியாக ஏறிநிற்கும். அவரோஹண ஸம்பந்தம் ஶிஷ்யத்வேந படிப்படியாக இறங்கி வரும். இவை இரண்டுக்கும் விளை நிலம் உடையவரிறே. இதில் ஒன்றுநிரவதிகமாய் ஒன்று ஸாவதிகமாய் இருக்கும்.

அஸாவஸாவித்யாபகவத்த: என்கிறபடியே எம்பெருமானளவும் சென்று                          கொழுந்திலையாயிருக்குமிறே. மற்றயைது கொழுந்துவிட்டுப் படராநிற்கும். இந்த ஸம்பந்த த்வயந்தான் இடையிட்டு வந்ததொன்றிறே. குருபரம்பரையிலே இடையிடபட்டாரிறே உடையவர். ஒரு முக்தாஹாரத்தில் நடுவே ஒளியுடைய மாணிக்கத்தை அழுத்தி வைத்தால் இருதலையும் நிறம்பெற்று வருமிறே. அப்படியே உடையவரும்  இருதலை நாயகமாகக் கொண்டு உபயஸம்பந்திகளுக்கும் ப்ரகாசகரானார். இரண்டு திறத்தார்க்கும் கார்யம் கொள்ளும் போது மத்யஸ்தரைக் கொண்டுகொள்ளவேணுமிறே. நடுச்சொன்னவரிறே மத்யஸ்தராவார். நாம் பற்றினாலும் முன் பின்னுற்ற ப்ரகாரம் கார்யம் தலைக்கட்டுமிறே பதத்ரயத்துக்கும் மத்யமபதம் போலே ஆயிற்று.

இவர் இங்கிருக்கும் படி அதாவது – மகாரமான நாரபதவாச்யர்க்கு இஷ்டாநிஷ்ட ப்ராப்தி பரிஹாரங்களைப் பண்ணிக்கொடுக்கவற்றான எம்பெருமானுடைய உபாயபாவத்தை காட்டுகிறது மத்யம்பதம். அப்படியே உடையவரும் – குருபரம்பரைக்கிடையிலிருந்து ஸம்பந்த

த்வயத்துக்கும் கார்யோபயோகியான தம்முடைய ஆசார்யத்வேந உத்தாரகத்வத்தை விஶேஷேண வெளியிட்டுக் கொண்டு விஶ்வஸநீயராயிறேயிருக்கிறது இத்தையிட்டாயிற்று.

அர்வாஞ்ச: என்று அருளிச்செய்தது இப்படி உத்தாரகமான ஆசார்யத்வந்தான் இரண்டு படிப்பட்டிருக்கும் – ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யத்வம் என்றும், க்ருபாமாத்ர ப்ரஸ்நநாசார்யத்வம் என்றும். இதில் பின்பு சொன்னது க்வாசித்கமாக இருக்கும். அக்ரோக்தமானது பஹுவ்யக்திதமாயிருக்கும். இவனுக்கு பேறு தப்பாதென்று துணிந்து இருக்கலாவது க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்ய ஸம்பந்த்த்தாலேயாயிற்று. எலியெலும்பனாயிருக்கிற இவனுக்கு ஆசார்யன் திருவுள்ளத்துக்கேற்க அநுவர்த்திக்க முடியாதிறே இவ்வர்த்தத்தில் ஆழ்வானுக்கும் ஆண்டானுக்கும் ப்ரஸங்கமாக ஆழ்வான் அறுதியிட்ட வார்த்தையை நினைப்பது. “மத்தகத்துத் தன்தாளருளாலே வைத்த அவா” என்ற அவர் அருளிச்செய்கையாலே, அருளாளப் பெருமாள் எம்பெருமானார் க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யன் முக்யனென்று அறுதியிட்டார் என்று நம்முடைய பிள்ளை பலகாலும் அருளிச்செய்வர்.

ப்ரதம்பர்வத்தில் பரகதஸ்வீகாரம் போலே சரமபர்வத்திலும் பரகதஸ்வீகாரமே இவனுடைய பேற்றுக்கு முக்யமான உபாயமென்று அருளிச்செய்வர்.

யஸ்ஸாபராதாந் ஸ்வபத ப்ரபந்நாந் ஸவகீயகாருண்ய குணேந பாதி | ஸ ஏவ முக்யோ குருரப்ரமேயஸ்தைவ ஸத்பி: பரிகீர்த்யதே ஹி || என்று ஸோமாசியாண்டான் ஆசார்ய வைபவத்தை அருளிச்செய்கிற ‘குரு குணாவளி’ என்கிற ப்ரபந்தத்திலே க்ருபாமாத்ரப்ரஸந்நாசார்யனே முக்யமாக அருளிச்செய்தாரிறே.

இப்படி முக்கியமான க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யத்வம் க்வாசித்கமானவிடத்திலும் உத்தாரகத்வ விஶிஷ்டமாயிருக்கும். அதுவும் ம்ருக்யமாயிருக்கும். உத்தாரகத்வ விஶிஷ்டமான க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யத்வம் பூரணமாக கடவது உடையவர் பக்கலிலேயிறே.

ஸ்வாநுவ்ருத்தியினாலே நம்பியை ப்ரஸன்னராம்படி பண்ணி வருத்தத்தினாலே பெற்ற சீரிய அர்த்தத்தை தாம்மேல் விழுந்து க்ருபையினாலே எல்லார்க்கும் வெளியிட்டருளினாரிறே. ராஜ மஹேந்தரப் பெருமாள் அரையருக்கு அரங்கமாளிகை என்று குமாரருண்டாய், அவர் பித்ருவசனாத்யுல்லங்கநம் பண்ணி அவிநீதராய்த் திரிகிற நாளிலே உடையவர் அறிந்தருளி, ஶ்ரீ பாதத்திலுள்ளவர்களை அழைத்தருளி வலியப்பிடித்துக் கொண்டு வரச் சொல்லி அருளிச்செய்ய, அவர்களும் அபிமதஸ்தலத்தில் நின்றும் பிடித்துக்கொண்டு வந்து திருமுன்பே விட, உடையவரும், “ பிள்ளாய்! நம்மோடு ஒட்டற்று நீ திரிந்தாலும் நாமுன்னை விட்டுக்கொடுப்பதில்லை காண் “ என்று பேரருளாளர் ஸந்நதியிலே அழைத்துக்கொண்டு எழுந்தருளித் திருக்காப்பை அடைத்து திரிய ஒரு வட்டம் பகவத் ஸம்பந்தம் பண்ணியருளி, ரஹஸ்யார்த்தத்தையும் ப்ரஸாதித்து அருளி, தம்முடைய திருவடிகளிரண்டையும் அவர் தலையிலே வைத்து அருளி, “ நீ பற்றிப் போந்த காலுக்கும் நம்முடைய காலுக்கும் வாசி கண்டாயே? அது நரகாவஹம், இது மோஷாவஹம். இத்தையே தஞ்சமாக நினைத்திரும்” என்று பூர்ணமாக கடாக்ஷித்துத் திருவடிகளைக் காட்டி அருளினார். அன்று தொடங்கி அப்படியே ப்ரதிபத்தி பண்ணிப் போந்தவராய் இந்த ரஹஸ்யத்தைப் பிள்ளை அடியேனுக்கு அருளிச் செய்து, உடையவர் திருவடிகளையே தஞ்சமாக காட்டி அருளினார். அன்று தொடங்கி அப்படியே ப்ரதிபத்தி பண்ணிப் போருவன் உடையவருடைய உத்தாரகத்வ விஶிஷ்டமான க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யத்வத்துக்கு இவ்விரண்டு வ்ருத்தாந்தமும் ப்ரமாணமாக அத்யவஸிக்கப்போரும் அறிவுடையார்க்கு இன்னமும் இவ்வர்த்தத்தை ஸ்திரீகரிக்கைக்காக உடையவர்க்கு முன்புள்ள முதலிகளுடைய திவ்ய ஸூக்திகளும் ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களும் பரக்க ப்ரதிபாதிக்கப்படுகிறது மேல்.

2 – திருமுடி ஸம்பந்தம்

நாதமுனிகளுக்கு ஆழ்வார் திருத்திரை வளைத்துத் திருவாய்மொழி ப்ரஸாதித்து அருளுகிற அளவிலே “பொலிக பொலிக” வந்தவாறே பூதபவிஷ்யத்வர்த்தமான காலத்ரயபர்யவஸாயி ஜ்ஞாநமுடையராகையாலே உடையவருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்தருளி “கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று “இந்த ப்ரபந்ந குலத்திலே ஒரு மஹானுபாவர் திரு அவதரிக்க போகிறார். அவாராலே நாடு அடங்க வாழப்போகிறது” என்று நாதமுனிக்கு அருளிச் செய்ய, அவரும் “பயன் அன்றாகிலும்” என்கிற பாட்டை இயலும் இசையுமாக ஏறிட்டு ஆழ்வாரைப் பாடி உகப்பித்து, ”தேவரீர் ஸர்வஜ்ஞராகையாலே அறியப் போகாது ஒன்றுமில்லை அவ்யக்தியினுடைய  ஸம்ஸ்தானத்தை தேவரீர் பாவித்துக் காட்டியருளவேணும்” என்று ப்ரார்த்திக்க  அற்றை ராத்திரியிலே நாதமுனிகளுக்கு ஸ்வப்னமுகேந ஆழ்வார் எழுந்தருளி த்வாதஶோர்த்வ புண்டரங்களும் காஷாய திருப்பரியட்டமும், த்ரிதண்ட ஹஸ்தமும், ஆஜானுபாஹுவும் நிரவதிக தேஜோரூபமான திருமேனியும், “மகரம்சேர் குழையிருபாடிலங்கியாட” தீர்க்கராய் எழுந்தருளி, க்ருபா ப்ரவாஹ ஸூசகமான முகமும், முறுவலும் சிவந்த திருக்கண் மலருமாக ஸேவை ப்ரஸாதித்தருளி ‘அவ்யக்த்தியிருக்கும்படி இது காணீரே’ என்றருளிச் செய்து, ‘இவ்யக்தி அடியாக ப்ரபந்நகுல பூதரெல்லாரும் பேறு பெறப் போகிறார்கள்’ என்று அருளிச் செய்தார்.

நாதமுனிகளும் உடனே உணர்ந்தருளி ஆழ்வார் திருவடிகளிலே தண்டம் சமர்ப்பித்து ‘தேவரீருடைய ஸம்ஸ்தானத்திலும் தேவரீர் பாவித்தருளின ஸம்ஸ்தானம் அடியேனுக்கு மிகவும் ஆகர்ஷகமாயிருந்ததீ!” என்ன, “இதென்ன மாயம்! லோகமெல்லாம் இவ்யக்த்தியாலே காணும் மேல்விழப் போகிறது!” என்று அருளிச் செய்தார். நாதமுனிகளும் திரியவும் ஆழ்வாரை உகப்பித்து இந்த பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தை நித்யமாக அனுபவித்துக் கொண்டிருக்க வேண்டுமென்று விண்ணப்பம் செய்ய, ஆழ்வாரும் உடையவருடைய ஸர்வோத்தாரகத்வத்தை வெளியிடக்கடவோமென்று மற்றை நாள் ராத்திரி ஸ்வவிக்ரஹத்துக்கடவ சில்பவம்ஶரிடத்திலே ஸ்வப்ன முகேன எழுந்தருளி பவிஷ்யதாசார்ய ஸம்ஸ்தானத்தை வகுத்துக் காட்டியருளி “நாளை நம் புளிக்கீழே வந்து இப்படியே ஸர்வாவயவ பூர்ணமாக சமையுங்கோள்” என்று அருளிச் செய்ய, மற்றை நாள் விடிந்தவாறே, திருப்புளியின் கீழேவந்து ஶரீரஶோதன பூர்வகமாக ஆஹாரநித்ரையின்றிக்கே அவ்விக்கிரஹத்தை நிர்மித்துக்கொடுக்க, அவ்விக்ரஹத்திலே ஒரு ஶக்தி விசேஷத்தை அதிஷ்டிப்பித்தருளி, நாதமுனிகளை அழைத்தருளி, “உம்முடைய அபேக்ஷிதத்தை இதோ தலைக் கட்டினோம் கண்டீரே” என்று அவ்விக்ரஹத்தை ப்ராஸாதித்து அருளி – 9. “ராமஸ்ய தக்ஷிணோ பாஹூ: “ என்கிறபடியே நம்முடைய அவயவமாக நினைத்திரும். இவ்யக்த்திக்கு அடி நாமாகையாலே நமக்கு அடியுமாய் நம் கார்யத்துக்கு கடவதுமாயிருக்கும். இனிமேல் நம் தர்ஶனத்துக்கு வர்த்தகமாக அடியிட்டு வைத்தோம். உம்முடைய குலத்திலே ஒருவர் இவ்வயக்தியை ஸாக்ஷாத்கரிக்க போகிறார். அது தான் பெருமாள் திரு அபிஷேகத்துக்கு பாரித்த மாதத்திலே பதினெட்டாமோத்திலே ப்ரதமோபாயம் பிறந்தாப்போலே நம் பிறவி நாளைக்கேறப்பார்த்தால் பதினெட்டாமவதியிலே சரமோபாயம் பிறக்கப் போகிறது, இவ்வயக்தியை நம்மை கண்டு கொண்டிருந்தாப் போலே கண்டுகொண்டிரும் என்றருளிச் செய்து விடைக் கொடுத்தருள, அப்போதே நாதமுனிகளும் ஆழ்வார் ஸேவை ஸாதித்தருளினதுக்குத் தோற்று.

  1. यस्सवैभव कै कारून्नकरस्सन भविष्यादाचार्यपरस्वरूपम
    संधार्चयमास महानुभावम तम कारीसुनुम शरणम प्रपद्ये

யஸ்ஸ்வாபகாலே கருணாஸ்ஸந் பவிஷ்யதாசார்ய பரஸ்வரூபம் |
ஸந்தர்ஶயாமாஸ மஹாநுபாவம் தம் காரிஸூநும் ஶரணம் ப்ரபத்யே || என்கிற ஶ்லோகம் அருளிச் செய்தாரென்று நம்முடைய பிள்ளை பலகாலும் அருளிச் செய்வர். இவ்வர்த்தம் ஓராண்வழியாய்ப் பரமகுஹ்யமாய் வந்ததென்றும் அருளிச்செய்வர். இப்படி நாதமுனிகள் நாலாயிரமும் ஆழ்வார் பக்கலிலே கேட்டருளி, மீளவும் வீரநாராயணபுரத்தேற எழுந்தருளினவளவிலே, ஆழ்வார் தம்மை விஷயீகரித்த ப்ரகாரங்களை மன்னனார் திருமுன்பே அருளிச் செய்து, ஸந்நிதியிலே எல்லா வரிசைகளையும் பெற்றுத் தம்முடைய திருமாளிகையிலே எழுந்தருளித் தம்முடைய மருமக்களான கீழையகத்தாழ்வானையும் மேலையகத்தாழ்வானையும் அழைத்தருளி, ஆழ்வார் தம்மை விஶேஷ கடாக்ஷம் பண்ணி க்ருபை பண்ணி அருளின ப்ரகாரத்தையும், ஸ்வப்னமுகேன ஸேவை சாதித்த கட்டளையையும் அருளிச் செய்ய, அவர்களும் விஸ்மயப்பட்டு, இப்படிப்பட்ட மஹானுபாவனுடைய ஸம்பந்தம் ஆரோஹண க்ரமத்தாலேயாகிலும் உண்டாகக் பெற்றதே என்று தேறியிருக்கலாமென்றார்கள்; பின்பு தம்முடைய ஶ்ரீபாதத்தில் ஆஶ்ரயித்து ஶிஷ்யகுண பூர்த்தியுடையவரான திருக்கண்ணமங்கை ஆண்டானுக்குத் த்வயோபதேஶ பூர்வகமாகத் திருவாய்மொழி ப்ராஸாதித்தருளுகிற போது ‘பொலிக பொலிக’ வந்தவாறே ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்திகளையும் ஸ்வப்னவ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்ய “அவ்யக்த்தியை ஸ்வப்னமுகேன ஸாக்ஷாத்கரித்த தேவரீரோடே ஸம்பந்தமுள்ள அடியேனுக்கு ஒரு குறைகளுமில்லை” என்று அருளிச்செய்தார்.

பின்பு உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், தம்முடைய குமாரரான ஈஶ்வரமுனிகள் இவர்களை அழைத்துருளி  ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் ஆழ்வார் அருளிச் செய்த திவ்ய ஸூக்திகளையும் அருளிச்செய்து, குருகைக்காவலப்பனை யோகக்ரமத்தை அப்யஸிக்கச் சொல்லி, உய்யக்கொண்டாரை தர்ஶனத்தை ப்ரவர்ப்பித்துக் கொண்டு வரச்சொல்லி, ஈஶ்வர முனிகளை “ உமக்கொரு குமாரர் உண்டாகக் போகிறார். அவருக்கு யமுனைத்துறைவர் என்று திருநாமம் சாத்தும்” என்று அருளிச் செய்து ஆஸந்ந சரமதஶையானவாறே உய்யக்கொண்டாரை அழைத்தருளி, “ஒருவருக்கும் வெளியிடாதே கிடீர்” என்று சூழரவு கொண்டு, ஆழ்வார் தமக்கு ப்ராஸிதித்தருளின பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தை ப்ரஸாதித்தருளி, வரவும் அருளிச் செய்து, ‘இத்தை ஈஶ்வர முனிகள்  குமாரருக்கு நாம் விரும்பின விஷயமென்று சொல்லித் தஞ்சமாக காட்டிக் கொடும்’ என்று அருளிச் செய்து, அவ்விக்ரஹத்தைத் திருவுள்ளத்திலே த்யானம் பண்ணிக்கொண்டு, ஆழ்வார் திருவடிகளே சரணம் என்று அந்தமில் பேரின்பத்தடியரோடு ஒரு கோவையாக எழுந்தருளினார்.

பின்பு உய்யக்கொண்டார், நாதமுனிகள் ஶ்ரீபாதத்து முதலிகளும் தாமுமாக தர்ஶநார்த்தங்களை ப்ரவர்த்திப்பித்துக் கொண்டு ஸுகமே எழுந்தருளியிருக்கிற நாளிலே, உய்யக்கொண்டார் ஶ்ரீபாதத்து முதலிகள் மணக்கால்நம்பி, திருவல்லிக்கேணிப் பாண்பெருமாளரையர் ஸ்வாசார்யரிடத்திலே திருவாய்மொழி கேட்கிறவளவிலே “பொலிக பொலிக” என்கிற திருவாய்மொழி ஆனவாறே. “கலியும் கெடும்” என்கிற இடத்துக்கு அர்த்தம் அருளிச்செய்கிற வளவில், நாதமுனிகள் தமக்கு அருளிச் செய்த ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்ய, மிகவும் விஸ்மயப்பட்டு “நாதமுனிகள் பெற்ற பேறு ஆர் தான் பெறப் போகிறார்கள்? பவிஷ்யதாசார்ய வ்யக்த்தியை ஸ்வப்னமுகேந ஸாக்ஷாத்கரித்த இடத்திலே அத்யாகர்ஷகமாயிருந்தது என்று அருளிச் செய்யும் போது, ப்ரத்யக்ஷமாய் ஸாக்ஷாத்கரிக்கும் படியினால் லோகமாக மேல் விழுந்து ஆஶ்ரயிக்குமாகாதே” என்று அருளிச் செய்தார். அவ்வளவிலே உய்யக்கொண்டார் “அந்த மஹானுபாவனுடைய ஸம்பந்தம் ஸித்தித்தாலே ஒழியத் தவிராதிறே” என்று அருளிச் செய்தார்.

உய்யக் கொண்டார் சரமதஶையிலே ப்ரதம சிஷ்யரான மணக்கால் நம்பியை அழைத்து அருளிப்  பன்னிரண்டு ஸம்வத்ஸரம் பழுக்க ஸ்வாநுவாத்தநம் பண்ணிப் போந்தவராகையாலே, நாதமுனிகள் தமக்கருளிச் செய்த ரஹஸ்யார்த்தங்களையும் வெளியிட்டருளி, ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்ய, மணக்கால் நம்பியும், இந்த தர்ஶன  ப்ரவர்த்தகராரென்று கேட்க, நம்முடைய பக்கலிலே பகவத் ஸம்பந்தம் பண்ணிக் கொண்ட நீரே நடத்தக் கடவீர். பின்பு சொட்டைக் குலத்திலே நாதமுனிகளுக்குத்  திருப்பேரனாரான யமுனைத்துறைவர் ப்ரவர்த்தகராவார். அவருக்கு பின்பு கரையத் தேவையில்லை என்று அருளிச் செய்தார்.

அதாவது – நாதமுனிகள் அருளிச் செய்தபடியே ப்ரபன்ன குலமாகப் பேறு பெறும்படி ஒரு மஹானுபாவர் திருவவதரிக்கப் போகிறார். அவராலே தர்ஶனம் விளங்கப் போகிறது – என்று அருளிச் செய்தார் என்றபடி. பின்பு உய்யக்கொண்டாரும் மணக்கால் நம்பியை அழைத்தருளி, அவ்விக்ரஹத்தை ப்ராஸிதித்தருளி , “ நம் காலத்திலே யமுனைத்துறைவர் திருவவதரிக்கப் பெற்றதில்லையே. நீர் இவ்விக்ரஹத்தை, ‘உங்கள் திருப்பாட்டனார் விரும்பின விஷயம்’ என்று தஞ்சமாக காட்டிக் கொடுத்து, நாம் சொன்ன ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் ரஹஸ்யார்த்தர்தங்களையும் வெளியிடும்’ என்றருளிச் செய்தார்.

பின்பு மணக்கால் நம்பியும் ஆளவந்தாரைப் பச்சையிட்டுக் கொண்டு கோயிலேற எழுந்தருளி ஸ்வாசார்யரான உய்யக்கொண்டார் அநுமதிபடியே நாதமுனிகள் அருளிச் செய்ததாக ஸ்வாசார்யர் அருளிச் செய்த அர்த்த விஶேஷங்களையும் விஶேஷித்து ஸ்வப்ன வ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்து ‘நெடுங்காலம் தேவரீர் இந்த தர்ஶனத்தை ப்ரவர்த்திப்பித்துக் கொண்டு ஶ்ரீவைஷ்ணவ ஸம்ருத்தியோடே எழுந்தருளியிரும்’ என்றருளிச் செய்தார்.

அப்படியே ஆளவந்தார் தர்ஶன ப்ரவர்த்தகராய் எழுந்தருளியிருக்கிற நாளிலே மணக்கால் நம்பி சரமதஶையானவாறே, நாதமுனிகள் ஸ்வப்னத்திலே எழுந்தருளி நம்பியைப் பார்த்து,”நம்முடைய யமுனைத்துறைவர்க்கு நாட்டையளித்து உய்யச் செய்து நடத்துமவனை நாம் தேடச் சொன்னோம் என்று சொல்லும். நாம் விரும்பின விக்கிரஹத்தைத் தஞ்சமாக அவர் கையிலே காட்டிக் கொடும்” என்றருளிச் செய்ய, இப்படி அருளிச் செய்கிறது ஏதென்ன, ‘நமக்கு ஸ்வப்ன த்ருஷ்டமான வ்யக்தி நம் பேரனுக்கு ப்ரத்யக்ஷ ஸித்தமானால் நமக்கு நெஞ்சாறல் தீரும்’ என்றருளிச் செய்தார்.

நம்பியும் – உடனே உணர்ந்தருளி மிகவும் விஸ்மயப்பட்டு, நிர்ஹேதுகமாக நமக்குப் பேறு கிடைப்பதேயென்று போர ப்ரீதராய் எழுந்தருளியிருக்கிற அவ்வளவிலே, ஆளவந்தாரும் அவராய் எழுந்தருள, “உம்முடைய திருப்பாட்டனார் நிர்ஹேதுகமாக நமக்கு சேவை சாதித்தருளி தேவரீர்க்கு ஒரு வார்த்தை விண்ணப்பம் செய்யச்சொல்லி அருளிச் செய்தாரென்று அவ்வார்த்தையை அருளிச் செய்ய, இது நேரேயாகப் பெற்றதில்லையேயென்று இழவு பட்டருளி, ஸத்வாரகமாகவாகிலும் விஷயீகரிக்கப்பட்ட இதுவே அமையுமென்று ப்ரீதராய் எழுந்தருளியிருக்க,    பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் ப்ராஸிதித்து, “உம்முடைய திருப்பாட்டனார், தாம் விரும்பின விஷயம்” என்று உம்மை இவ்விக்ரஹத்தைத் தஞ்சமாகப் பற்றியிருக்கச் சொல்லும் என்று நியமித்தருளினார். ஆகையாலே தேவரீரும் இந்த அவதார ரஹஸ்யத்தைப் பேணி நோக்கி கொண்டு போரும்; இவ்வ்யக்திமானை நேரே ஸாக்ஷாத்கரிக்கப் போகிறீர். அவ்யக்திமானாலே இத்தர்ஶனம் நெடுங்காலம் நிலைநிற்கப் போகிறது” என்று அருளிச் செய்தார்.

ஆளவந்தாரும் அப்படியே தர்ஶன ப்ரவர்த்தகராய் எழுத்தருளியிருந்து அவ்விக்ரஹத்தைப் பரமரஹஸ்யமாகப் பரிவுடனே நோக்கிக் கொண்டு மணக்கால் நம்பி அருளிச் செய்தபடியே நாட்டை அளித்து உய்யச் செய்து நடத்துகிறவனைத் தேடுவதாக உத்யோகித்து ஒருவரையும் அடைவுபடக் காணாமையாலே வ்யாகுலாந்த கரணராய் எழுந்தருளியிருக்க, இளையாழ்வாருடைய வ்ருத்தாந்தங்களைச் சிலர் விண்ணப்பம் செய்யக் கேட்டருளி, பெருமாள் கோயிலுக்கு எழுந்தருளினவுடனே, நம்பி முகேன இளையாழ்வாரைக் கண்டு அவருடைய திருநக்ஷத்ரமும் கேட்டருளி, மூன்றுபடியாலும் ஓத்திருக்கையாலே பூர்ணமாகக் கடாக்ஷத்தருளி, ‘ஆமுதல்வனிவன்’ என்று ப்ரதிபத்தி பண்ணியருளினார்.

பின்பு கோயிலேற எழுந்தருளிச் சிலநாள் செல்லத் தம்முடைய சரமதஶையானவாறே, திருக்கோட்டியூர் நம்பியை அழைத்தருளி, அந்த விக்ரஹத்தை ப்ராஸிதித்து வரவாறும் அருளிச் செய்து, மற்றுமுண்டான வ்ருத்தாந்தங்களையும் அருளிச் செய்து, நீர் இளையாழ்வார்க்கு நாம் அருளிச் செய்த ரஹஸ்யார்தங்களெல்லாம் அருளிச் செய்யுமென்று நியமித்து, அவர் திருநாமத்தாலே தர்ஶனம் விளங்க போகிறது என்றும் ப்ரபன்ன குலமாகப் பேறு பெறும்படி உத்தாரகராகத் திருவவதரித்திருக்கிறார் என்றும் அருளிச் செய்தார். பின்பு ஆஸந்ந சரமதஶையானவாறே, முதலிகள் எல்லாரும் சூழவிருந்து, அடியோங்களுக்கு இனி தஞ்சம் ஏதென்று கேட்டருள, “உங்களுக்கு நாம் ஒருவரை உண்டாக்கியன்றோ பேறு பெறப் போகிறோம். உங்களுடைய இழவைத் தீர்த்து நாம் மாத்ரம் அன்றோ இழவோடே போகிறோம்” என்று அருளிச் செய்தார். இப்படி எம்பெருமானார்க்கு முன்புள்ள முதலிகள் எல்லாரும் உடையவரிடத்திலே உத்தாரகத்வத்தை அறுதியிட்டார்கள். முன்புள்ளார்க்கு இவர் உத்தாரகராக கூடும்படி எங்ஙனேயெனில்,

  1. अस्पोतयन्ती पितर प्रन्तुथ्यन्थी पितामह
    वैष्णवो नः कुले जात सनः सन्तारायीश्यती (श्री वराह पुराण श्लोक )

ஆஸ்போடயந்தி பிதர: ப்ரந்ருத்யந்தி பிதாமஹா: | 
வைஷ்ணவோ : குலே ஜாத: : ஸந்தார யிஷ்யதி || என்று முன்பே லோகாந்தரஸ்தரான பித்ருக்கள் ஸ்வகுலத்திலே  ஒருவன் வைஷ்ணவனாகப் பிறந்தால் அவனையே தங்களுக்கு உத்தாரகனாகச் சொல்லக்கடவதிறே.

  1. வைகுண்டே து பரே லோகே என்று சொல்லபடுகிற லோகாந்தரஸ்தரான நாதமுனி ப்ரப்ருதிகள், ஸ்வகீயமான ப்ரபந்ந குலத்திலே நித்ய ஸூரிகளின் தலைவராய் வைஷ்ணவாக்ரேஸர் ஆகிய ஒரு மஹானுபாவன் திரு அவதாரம் பண்ணினால், அவரையே தங்களுக்கு உத்தாரகராக நினைத்திருக்கச் சொல்ல வேண்டாவிறே. “பித்ராதிகளுக்கு  வைஷ்ணத்வம் இல்லாமையாலும், அவர்களுக்கு ப்ராப்யமான தேஶ விசேஷம் வேறே ஒன்று உண்டாயிருக்கையாலும், உத்தரணாபேக்ஷை உடையவர்களாகையாலும் ஸ்வகுலோத்பன் ஆன வைஷ்ணவனை உத்தாரகனாகச் சொல்லக் குறையில்லை. இவர்கள் தாம் வைஷ்ணவாக்ரேஸர் ஆகையாலும், ப்ராப்ய பூமி கைபுகுந்திருக்குமவர்கள் ஆகையாலும்  உத்தரணாபேக்ஷாரஹிதராயிருக்கவடுக்குமத்தனை போக்கிக் காலவிப்ரக்ருஷ்டரான இவர் பக்கலிலே ஸ்வோத்தாரகத்வ புத்தி பண்ணக்கூடாதே” என்னில் – அங்ஙனே சொல்லப்படாது. இதுவும் கூடும். எங்ஙனேயென்னில்- நாதமுனிகளுக்கு ஆழ்வாரிடத்திலே உத்தாரகத்வ ப்ரதிபத்தி நடக்குமே ; அதில் சோத்யமில்லையிறே; இனி, நாதமுனிகள் தமக்கு உத்தாரகமாக ஆழ்வாருடைய திருவடிகளை அறுதியிட்டு இருக்கையாலும், ஆழ்வார் தாமும் பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தைக் காட்டிக் கொடுத்து – 9. ராமஸ்ய தக்‌ஷிணோ பாஹூ : என்கிறபடியே “நம்முடைய அவயவமாக நினைத்திரும். இவ்வயக்திக்கடி நாமாகையாலே நமக்கு அடியுமாய் இருக்கும்” – என்று உடையவரை ஆழ்வார் தமக்குத் திருவடிகளாக அறுதியிட்டு அன்றே அருளிச் செய்கையாலும், நாதமுனிகள் ஆழ்வார் ப்ரஸாதித்த வ்யக்தியிலே பரிபூர்ணமாக உத்தாரகத்வத்தை அறுதியிட்டு, உய்யக்கொண்டார்க்கு வெளியிட்டருள, அவர் மணக்கால் நம்பிக்கு வெளியிட்டருள, மணக்கால் நம்பியும் ஆளவந்தார்க்கு வெளியிட்டருள, ஆளவந்தாரும் தம்முடைய ஶ்ரீபாதம் முதலிகளில் திருமலை நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டான், பெரிய நம்பி, திருவரங்கப் பெருமாள் அரையர் தொடக்கமானார்க்கு வெளியிட்டருள, இவர்களுடைய தந்நிஷ்டராய், இந்த ரஹஸ்ய விசேஷத்தைத் திருவுள்ளத்திலே கொண்டு உடையவரோடு ஸம்பந்தம் தங்களுக்கு வேண்டுமென்று கொண்டு “ கொடுமின் கொண்மின்” என்றும் 13. “ तस्मे देहम तथो ग्राहयम ” – தஸ்மை தேயம் ததோ க்ராஹ்யம் என்றும் சொல்லுகிறபடியே தாங்கள் உடையவர்க்கு ரஹஸ்யார்த்தங்களை உபதேஶித்து ஆசார்ய வ்யாஜேன ஸம்பந்தம் பெற்று , தந்தாம் குமார்களையும் ஆஶ்ரயிப்பித்து , அத்வாரகமான ஸம்பந்தத்திலும் ஸத்வாரகமான ஸம்பந்தத்தையிறே கனக்க நினைத்திருந்து ஸ்வோத்பாதக விஷயீகாரக விஷயத்தில் ஸ்வோத்தாரகத்வ ப்ரதிபத்தி பண்ணியிருந்தார்கள்’ – என்றபடி கண்டாகர்ணன் பக்கம் பண்ணின விஷயீகாரம் அவனுடன் பிறந்தவனளவும் சென்றாப்போலவும், ஶ்ரீ விபீஷணாழ்வான் பக்கல் பண்ணின விஷயீகாரம், கூடச் சென்ற நால்வரளவும்  சென்றாப்போலவும், ஶ்ரீப்ரஹ்லாதாழ்வான் பக்கல் பண்ணின விஷயீகாரம் தத்ஸம்பந்திகள் அளவும் சென்றாப்போலவும் நினைத்திருந்தார்கள். பந்த மோக்ஷங்கள் இரண்டுக்கும் ஹேதுவான ப்ரதமபர்வ விஷயீகாரம் அப்படிச் செய்தபடி கண்டால், மோக்ஷைக  ஹேதுவான சரமபர்வ  விஷயீகாரம் இப்படியே செய்யச் சொல்ல வேண்டாவிறே.  இவர்கள் எல்லாரும் இவரிடத்திலே உத்தாரகத்வத்தை அறுதியிட்டு இருக்கைக்கு நிதானம் நாதமுனிகளிறே. உடையவர்க்கு இவர்கள் ஆசார்யர்கள் ஆனது எதிலே அந்வயிக்கறது என்னில் உபகாரத்வத்திலே அந்வயிக்கும் இத்தனை, உத்தாரகத்வத்தில் புகாது.

ஆசார்யத்வந்தான் உபகாரத்வேநவும் உத்தாரகத்வேநவும் த்விவிதமாயிருக்கும். அதில் உபகாரத்வேந ஆசார்யத்வமே இவர்கள் பக்கலில் உள்ளது. தங்கள் பக்கல் உத்தாரகத்வமுண்டாகில், தந்தாம் குமாரர்களை இங்கு ஆஶ்ரயிப்பிக்கக் கூடாதிறே தங்கள் பக்கல் உபகாரகத்வமே உள்ளது என்னும் இடத்தை இவ்வழியாலே தோற்றுவித்தார்கள்.

3 – உத்தாரக ஆசார்யர்கள்

உத்தாரகத்வந்தான் வ்யக்தித்ரயகதமாயிருப்பது, ஈஶ்வரனிடத்திலும், ஆழ்வாரிடத்திலும், உடையவரிடத்திலுமிறேயுள்ளது. உபயவிபூதிக்கும் கடவனிறே உத்தாரகனாவான். 14. “अस्य ममश शेषम ही विभूतिरुभयात्मिका ” (அஸ்யா மம ச சேஷம் ஹி விபூதிருபயாத்மிகா) என்று உபயவிபூதிக்கும் கடவனான ஶ்ரீமான் தானென்னுமிடத்தைத் தானே அருளிச் செய்தான்.

ஆழ்வார் “பொன்னுலகாளீரோ புவனிமுழுதாளிரோ“  என்று உபயவிபூதியும் தாமிட்ட வழக்காய் இருக்கிமென்னிடத்தை தாமே அருளிச் செய்தார். பெரிய பெருமாள் உபய விபூதியும் கொடுக்கப் பெற்று உடையவரானாரிறே இவர். ஆகையாலே இது வ்யவஸ்தித விஷயமாயிருக்கும்.. அவ்யக்தித்ரயத்திலும் உடையவரிடத்திலே உத்தாரகத்வம் உறைத்திருக்கும்.  ஈஶ்வரன் ஆழ்வாரை இவ்விபூதியிலே நெடுநாள் இட்டுவைத்து ஜகத்தைத் திருத்துவதாக நினைத்தளவிலே, முப்பத்திரண்டு திருநக்ஷத்ரத்துக்குள்ளே, “கூவிக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ” என்றும், “எந்நாள் யானுன்னை இனி வந்து கூடுவனே” என்றும், “மங்கவொட்டுன் மாமாயை” என்றும் அறப்பதறி வீடு பெற்றாரிறே.

அந்த இழவெல்லாம் தீர உடையவரை நூற்றிருபது திருநக்ஷத்ரமிட்டு வைத்து ஜகத்தை வாழ்வித்தானிறே; ஆழ்வார் காலத்தில் இல்லாத வைஷ்ணவ ஸம்ருத்தி இவர் காலத்தில் பொலிந்ததிறே. இதுக்கு நிதாநம் – உத்தாரகத்வத்தினுடைய உறைப்பாய்த்து.

ஆழ்வார் தாமும் “கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல் மலியப் புகுந்து இசை பாடியாடி உழிதரக் கண்டோம்” என்று நிஶ்சயித்து அருளிச் செய்தாரிறே.

ஆகையாலே, இவரே ஸர்வோத்தாரகர். ஆசார்யத்வத்திலே வந்தால் க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யத்வத்தை முக்யமாக கொள்வது இவர் பக்கலிலே ஆயித்து. அநர்த்தங்கண்டால் ஆற்றாமையும், மிக்க க்ருபையும் உடையவராயிறே இவரிருப்பது. இது தான் வ்யவஸ்தித விஷயமாகையாலே துர்லபமாயிருக்கும் . ஆகையிறே ஆசார்யத்வத்தை ஆசைப்பட்டு ஶ்ரீகீதையை உபதேசிக்குமளவிலே.

  1. (யச்ச்ரேயஸ் ஸ்யாந் நிஶ்சிதம் ப்ரூஹி தந்மே ஶிஷ்யஸ் தேஹம் ஶாதி மாம் த்வாம் ப்ரபந்நம் )

என்று தானும் ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யனாய்,

  1. (தத் வித்தி ப்ரணிபாதேந பரிப்ரஶ்நேந ஸேவயா| உபதேக்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ் தத்வதர்சின: ||) என்று ஸ்வவ்யதிரிக்த விஷயத்திலும் ஸ்வாநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யத்வத்தையிறே சொல்லிற்று. ஆகையாலே, ஆழ்வாரிடத்திலும், அவரடியாக வந்த இவரிடத்திலும் க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யத்வம் வ்யவஸ்திதம்.

இன்னமும் இவருடைய உத்தாரகத்வ ஸாதகங்களான ஆசார்ய திவ்யஸூக்திகள் பலவும் சொல்லப்படுகிறது.

4 – உடையவரின் ஆசார்யர்கள் இவரை உத்தாரகர் என்று அறுதியிடுதல்

பெரியநம்பி மதுராந்தகத்து ஏரிகாத்த பெருமாள் கோயில் திருமகிழ அடியிலே எழுந்தருளியிருந்து 17. चक्राधिधारणम पुसंम परसम्भन्दवेदणम (சக்ராதிதாரணம் பும்ஸாம் பரஸம்பந்த வேதநம் | பதிவ்ரதாநிமித்தம் ஹி வலயாதி விபூஷணம் || ) என்றும்,

  1. एवम प्रपद्ये देवेचम आचार्य कृपा स्वयम अध्यापेन मन्त्रार्थम सर्शीछन्धोधी देवताम

(ஏவம் ப்ரபத்ய தேவேஶம் ஆசார்ய: க்ருபயா ஸ்வயம் | அத்யாபயேந்மந்த்ர ரத்நம் ஸர்ஷிச்சந் தோதி தைவதம் || ) என்றும் சொல்லுகிறபடியே பகவத் ஸம்பந்த பூர்வகமாக உடையவர்க்கு த்வயோபதேஶம் பண்ணியருளி “நாம் உமக்கு ஆசார்யராக வேணுமென்று பெருமைக்கு செய்தோமில்லை. ஆளவந்தார் கணிசித்த விஷயமென்று செய்தோமித்தனை. ஆழ்வார் உம்மைக் கடாக்ஷித்து ‘கலியும் கெடும் கண்டுகொண்மின்’ என்று அருளிச் செய்தாராகையாலே அப்படிப்பட்ட மஹாநுபாவனன்றோ;  இவ்வழியாலே தேவரீரோட்டை ஒரு ஸம்பந்தம் வேணுமென்றும் செய்தோம் இத்தனை. “வெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி விண்முழுதும் உய்யக்கொண்டவீரன்” என்றும், 19. ஜநகாநாம் குலே கீர்த்திமாஹரிஷ்யதி மே ஸுதா என்றும் சொல்லுகிறபடியே, “தேவரீர் வந்தவரதரிக்கையாலே ப்ரபன்ன குலமாக விளங்கப் போகிறது. தேவரீரே ஸர்வோத்தாரகர். அடியேன் ரஹஸ்யத்திலே நினைத்திருப்பதும் அப்படியே” என்றருளிச் செய்தார். இவ்வார்த்தை ஸம்ப்ரதாயமென்று பிள்ளை அருளிச்செய்வர்.

பெரிய திருமலை நம்பி திருமாளிகையிலே, உடையவர் ஒரு ஸம்வத்ஸரம் எழுந்தருளி இருந்து இதிஹாஸ ஶ்ரேஷ்ட்டமான ஶ்ரீராமாயணம் நம்பி பக்கலிலே கேட்டருளுகிறவளவிலே, 20. यस्य रामे पश्येथू यंच रामो पश्यती निन्धितस वासेश्लोके स्वथ माप्येन विगर्हथे ” (யஶ்ச ராமம்  நபஶ்சயேத்து) என்கிற ஶ்லோகம் வந்தவாறே ஸ்வகதஸ்வீகார பரகதஸ்வீகாரங்கள் இரண்டுமன்றியிலே தானும் பிறரும் தன்னை இகழும்படி வர்த்திக்கிற சேதனனுக்கு தஞ்சமேதென்று கேட்டருளினவளவிலே, “நித்யஸூரிகளில் தலைவரான தேவரீருடைய அபிமானமே அமோகோத்தாரகம்” என்று அருளிச் செய்தார். பின்பு எம்பாரை உதகபூர்வகமாக உடையவர்க்கு ஸமர்ப்பித்து, “நீர் உடையவரை நம்மிலும் அதிகராக நினைத்திரும் ; அவர் திருவடிகளே தஞ்சம்; அவர் ஸர்வோத்தாரகராகத் திரு அவதரித்தவர். ஆகையாலே இவரோட்டை  ஸம்பந்தம்  நேராகப்பெற்றதில்லை என்று ஶ்ரீராமாயண வ்யாஜத்தாலே ஒரு ஸம்பந்தம் பெற்றோம். ஆளவந்தாரும் இழவோடே எழுந்தருளும் படிகாணும் இவருடைய ஏற்றமிருப்பது.  இந்த மஹாநுபாவனோட்டை ஸம்பந்தத்தாலே நீரும் நிழலுமடிதாறுமாயிரும் “ என்றருளிச் செய்தார். இதுவும் ஸம்ப்ரதாயம்.

திருக்கோட்டியூரிலே உடையவர் எழுந்தருளி நம்பி பக்கலிலே சரமஶ்லோகம் கேட்கிறபொது, தஞ்சமான அர்த்த விஶேஷங்களை எல்லாம் அருளிச்செய்து, “தேவரீரைப் பலகாலும் துவளப் பண்ணினத்தைத் திருவுள்ளத்திலே கொள்ளாதேகிடீர். அர்த்தத்தின் சீர்மையை வெளியிடவேண்டிச் செய்தோமித்தனை. தேவரீர் லோக ஸம்ரக்ஷணார்த்தமாகத் திருவவதரித்தருளிற்று. நாதமுனிகளுக்குத் தஞ்சமான விஷயம் தேவரீர். இப்படிப்பட்ட மஹானுபாவனோட்டை ஸம்பந்தமுண்டாகப் பெற்றோம் என்று மார்பிலே கைபொகட்டு உறங்கலாம்படிக்கு உடலாயிருக்கிறது. எங்கள் ஆசார்யரான ஆளவந்தார் ஸ்ரீபாதத்திலே ஆஶ்ரயித்த முதலிகளிலே இத்தர்ஶநத்தை நிர்வஹிக்க ஆளுண்டாயிருக்கவும், தேவரீரே தர்ஶனப்ரவர்த்தகராக வேணுமென்று பேரருளாளன் ஸன்னிதியிலே ப்ரபத்தி பண்ணியருளித் திருநாட்டுக்கு எழுந்தருளுகிற போது, “இந்த மஹாநுபாவனோடே நாலு நாளாகிலும் கலந்து பரிமாறப் பெற்றோமில்லையே” என்று இழவோடே எழுந்தருளினார். ஆகையாலே இத்தர்ஶனம் எம்பெருமானார் தர்ஶநமென்று தேவரீர் திருநாமத்தினால் நாள் தோறும் கொழுந்து விட்டு விளங்கப்போகிறது” என்று அருளிச் செய்தார்.

திருக்கோட்டியூர் நம்பி நியோகத்தாலே உடையவர் திருமாலையாண்டான் பக்கலிலே திருவாய்மொழி நடத்தா நிற்க, இடையிலே ஒரு அர்த்த வ்யத்யாஸத்தாலே வ்யாக்யானம் நடத்தாமல் தவிர, இத்தைத் திருக்கோட்டியூர் நம்பி கேட்டருளிக் கோயிலேற எழுந்தருளினவளவிலே திருமாலையண்டானை அழைத்தருளி “ நீரிவருக்கு அஜ்ஞாத ஜ்ஞாபனம் பண்ணுகிறோமென்று இராதே கொள்ளும். இவர்க்கு ஆளவந்தார்க்குத் தோற்றின அர்த்தமொழிய விபரீதார்த்தம் தோற்றாது. ஸாந்தீபநி பக்கலிலே க்ருஷ்ணன் வேதாத்யயநம் பண்ணினாப்போலே காணும் உம்முடைய பக்கலிலே இவர் திருவாய்மொழி கேட்கிறது” என்றருளிச் செய்து, விட்ட தருவாய் தொடங்கி உடையவர் மடத்திலே திருக்கோட்டியூர் நம்பியும், திருமாலையாண்டானும், பெரிய நம்பியும் கூட எழுந்தருளியிருந்து திருவாய்மொழி வ்யாக்யானம் நடத்துவியாநிற்க, “பொலிக பொலிக” வந்தவாறே, “கலியும் கெடும்” என்கிறவிடத்திலே நம்பியும் உடையவரை ஏறவும் இறங்கவும் பார்க்க, உடையவர் அத்தைக் கண்டருளி இதுக்குப் பொருளேதென்று கேட்க, “ தேவரீர் திருவவதரித்து இதினுடைய அர்த்தத்தை வெளியிட்டுக் கொண்டு எழுந்தருளியிருக்கச் செய்தே கேட்க வேணுமோ? ப்ரபன்ன குலோத்தாரகரான தேவரீரே இதுக்குப் பொருள்; அஸ்மதாதிகளைக் கரையேற்றுகைக்காகவன்றோ நித்ய விபூதியில் நின்றும் இங்கே எழுந்தருளிற்று” என்று அருளிச் செய்தார். இத்தைக் கேட்டிருந்த திருமாலையாண்டானும் ஹர்ஷபுளகிதகாத்ரராய், “இனி நான் ஆளவந்தாரை அறியேன்; எல்லாப் பேறும் தேவரீரே; தேவரீரோடு உண்டான ஸம்பந்தமே அடியேனுடைய பேற்றுக்கு ஸாதனம்” என்றருளிச் செய்தார்.

உடையவர், ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர் பக்கலிலே சென்று ஸ்வாநுவர்த்தனத்தாலே அவரை உகப்பித்து பரமரஹஸ்யமான சரமோபாயத்தைப் பெற்று ப்ரீதராய் எழுந்தருளியிருக்க அவ்வளவிலே உடையவரை அழைத்தருளி “நாம் உமக்குச் சரமோபாய ரஹஸ்யத்தைச் சொன்னோமேயாகிலும் இது முக்யமாக விலைச்செல்லுகிறது  உம்முடைய பக்கலிலேதானே” என்றருளிச் செய்தார்”. இதுக்கு நிதானம், நாதமுனிகளாகையாலே நீரே ஸர்வோத்தாரகராக குறையில்லை” என்றும் அருளிச் செய்தார்.

இப்படி ஐவரும் கூடி உடையவர்க்கு ஆசார்யர்களாக இருந்தார்களேயாகிலும், தாங்கள் தஞ்சமாக அறுதியிட்டு இருப்பது உடையவரிடத்தில் உத்தாரகத்வத்தையிறே. திருக்கோட்டியூர் நம்பி தம் குமாரத்தியாரை உடையவர் திருவடிகளிலே ஆஶ்ரயிப்பித்தவளவிலே, உடையவர் அப்பெண்பிள்ளையை ஏகாந்தத்திலே அழைத்தருளி தம் திருவடிகள் இரண்டையும் காட்டி, “பெண்ணை! இத்தையே தஞ்சமாக நினைத்திரு” என்றருளிச் செய்தார். அந்தப் பெண்ணும் “மேவினேனவன் பொன்னடி மெய்ம்மையே” என்று, தேவரீர் எங்கே எழுந்தருளியிருந்தாலும், அடியேனுக்கு தேவரீருடைய திருவடிகளே தஞ்சம்; தேவரீருக்கு ஆசார்யரான எங்கள் ஐயர் நினைத்திருக்கும்படி கண்டால் தேவரீருக்கு அநந்யார்ஹசேஷபூதையான அடியேன் நினைத்திருக்கச் சொல்லவேணுமோ” என்று சொன்னாளாகப் பிள்ளை அருளிச்செய்வர். திருக்கோட்டியூர் நம்பி தம்முடைய அந்திம தஶையிலே குமாரத்தியாரை அழைத்தருளி, “பெண்ணே! நம் ப்ராயாணத்தில் நீ நினைத்திருப்பது என்” என்ன , “ஐயரே! எங்களாசார்யரான எம்பெருமானரோடு உண்டான ஸம்பந்தத்தாலே தேவரீருக்குப் பேறு முற்படப் பெற்றதே என்று  நினைத்திருக்கின்றேன்” என்ன, அவரும், “ வளர்த்ததனால் பயன் பெற்றேன்” என்று அப்பெண்பிள்ளையை அழைத்தருளி, ஆளவந்தார் ப்ராஸாதலப்தமான விக்ரஹத்தை ஸாதித்து உள்ளிற்கருத்தும் வெளியாம்படி, “எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்” என்று திருநாட்டுக்கு எழுந்தருளினார். இத்தால் எம்பெருமானாரிடத்திலே நிஸ்ஸம்ஶயமாக உத்தாரகத்வத்தை அறுதியிட்டார் என்னுமிடம் ஸித்தமாயிற்றதிறே.

திருக்கச்சி நம்பி ஒரு நாள் ராத்திரி காலத்திலே பேரருளாளன் ஸன்னதியிலே நெடும் போது திருவாலவட்டம் பரிமாற , “நம்பி ! ஒன்று சொல்லுவாரைப் போலே இராநின்றீர், என்?” என்ன, “நாயிந்தே! இளையாழ்வார், ‘சில நினைவுகள் நினைத்தேன் அவை எவை என்று தேவரீரிடத்திலே கேட்டு வந்து சொல்ல வேணும்’ என்றார். அவற்றை அருளிச் செய்ய வேணும்” என்ன, “வாரீர்! அவர் அறியாததோ நாம் சொல்லப் போகிறது. ஸாந்தீபனி பக்கலிலே நாம் அத்யயனம் பண்ணினாப் போலே காணும் அவா இருக்கும்படி ஸகலஶாஸ்த்ரங்களும் ஸகலோபாயங்களும் அறிந்த ஸாரவித்தமராய், நம் முதன்மையிலே அடிமை செய்வாரில் தலைவராய், தம் பக்கலிலே ஸகலார்த்தங்களும் கேட்டு நாடு அடங்க வாழ வேண்டியிருக்க  , நாமென்று சொல்லக் கிடக்கிறதோ? பின்னையும் உம்மையிடுவித்து கேட்கிறாரித்தனை” என்றருளிச் செய்தார்.

“உடையவர், பெரிய நம்பி தொடக்கமான ஐவர்களுக்கும் ஶிஷ்யராய், அவர்கள் ஆசார்யர்களாயிருக்க, ஶிஷ்யரான இவரோட்டை ஸம்பந்தத்தாலே அவர்கள் பேறு பெற்றார்கள் என்று சொல்லும்படி எங்ஙனே? ஆசார்ய ஸம்பந்தத்தாலேயன்றோ ஶிஷ்யனுக்குப் பேறு” என்னில் – தஶரதவஸுதேவாதிகளிடத்திலே பிறந்த ராமக்ருஷ்ணாதிகள் வித்யாப்யாஸத்துக்குடலாக விஶ்வாமித்ர ஸாந்தீபனீ ப்ரப்ருத்திகளை ஆசார்யத்வேந வரித்து 21. किंकरौ समुपस्थितौ (கிங்கரௌ ஸமுபஸ்தி தௌ) என்றும் 22. “तत्वम दासभूतोस्मी किमध्य कारवन्निथे” (தவாஹம் தாஸபூதோ ஸ்மி கிமத்ய கரவாணி தே ) என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடியே தாங்கள் ஶிஷ்யராய் நின்றவிடத்தில் ஶிஷ்ய ஸம்பந்தத்தாலே உபதேஶகத்வேந நின்று குருக்களான விஶ்வாமித்ராதிகளுக்குப் பேறானாப் போலே, ஶிஷ்யரான இவரோடுண்டான ஸம்பந்தத்தாலே ஆசார்யர்களான பெரியநம்பி தொடக்கமானாக்கும் பேறாகக் குறையில்லை.

  1. विष्णु मनुष्य रूपेण चाचर वासूदैवते(விஷ்ணுர் மாநுஷ ரூபேண சாசர வஸுதாதலே ) என்றும், 24. इदनमपी गोविन्दा लोकानाम हितकम्य, मानुषम वपुरस्थय,द्वारवत्यम ही तिष्ठसे (இதாநீமபி கோவிந்த லோகாநாம் ஹிதகாம்யயா | மாநுஷம் வபுராஸ்தாய த்வாரவத்யாம் ஹி திஷ்டஸி || ) என்றும் சொல்லுகிறபடியே ஸாக்ஷாத் ஸர்வேஶ்வரன் தானே மாநுஷரூபத்தை ஏறிட்டுக் கொண்டு ஶிஷ்யத்வபாவநாமாத்ரமாய், தன்னில் தானான தன்மையாய் இருக்கையாலே, அவர்களும் அடியறிந்தவர்களாகையாலே , உபதேஷ்டருத்வ பாவனை ஒழிய வஸ்துத: அஜ்ஞாதஜ்ஞாபனத்வாரா குருத்வம் தங்களுக்கு இல்லாமையாலே அவர்களுக்குப் பேறு அவராலேயாகக்‌ குறையில்லை. இங்கு அப்படிக் கூடாதே – என்னில்  இங்கும் கூடும். எங்ஙனேயென்னில்- 25. ஆசார்யஸ்ஸ ஹரிஸ்ஸாக்ஷாத் சரரூபி ந ஸம்ஶய: என்றும், 26. குருரேவ பரம் ப்ரஹ்ம என்றும், “பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து” என்றும், “திருமாமகள் கொழுனன் தானே குருவாகி” என்றும் இத்யாதிகளில் சொல்லுகிறபடி உடையவரும் அவதார விசேஷமாகையாலும், பெரிய நம்பி தொடக்கமானார் இவர்க்கு அஜ்ஞாதஜஞாபனத்வாரா ஆசார்யர்களன்றிக்கே  இவரோடே நமக்கொரு ஸம்பந்தம் உண்டாகவேணுமென்னுமதிலே நோக்காய் ஆசார்யத்வத்தை வ்யாஜமாக நினைத்திருக்கையாலும் நாதமுனிகளுடைய ஸம்ப்ரதாய ஶ்ரவணத்தாலும், பேற்றுக்கு உடலாக உத்தாரகத்வத்தை இவரிடத்திலே அறுதியிட்டிருந்தார்கள்.

ப்ரதம குருவான எம்பெருமானுக்கும் இவர் உத்தாரகரானபடி கண்டால், அவாந்தர குருக்களுக்கு இவர் உத்தாரகராகச் சொல்ல வேண்டாவிறே. உத்தாரகராகையாவது – ஸ்வரூபஸத்பாவம் அழிந்து அத:பதிதனானவனை ஸ்வரூபஸத்பாவத்தை உண்டாக்கிக் கரைமரம் சேர்க்கையிறே. பாஹ்ய குத்ருஷ்டிகள் ப்ரஹ்மஸ்வரூபத்தை இல்லை செய்ய, அத்தாலே ஸ்வரூபஸித்தியில்லாமல், அத:பதிதனானவளவிலே, ஸகல வேதாந்தங்களாலும் பரப்ரஹ்மத்தை ஸ்வரூப ஸித்தியுண்டாக்கிக் கரைமரம் சேர்த்தாரிறே. இன்னமும் 27. गोपालन यादव वंशम, स्वयं मग्नम अभ्यूधरीष्यती (கோபாலோ யாதவம் வம்ஶம் ஸ்வயம் மக்நம் அப்யுத்தரிஷ்யதி) என்று நாரத பகவான் க்ருஷ்ணாவதாரத்தைக் கடாக்ஷித்து, யதுவம்ஶத்தை ஒரு கோபாலன் வந்து உத்தரிக்கப் போகிறான் என்று சொன்னாப் போலே, ப்ரபன்ன ஜன கூடஸ்தரான ஆழ்வாரும் உடையவருடைய திருவவதாரத்தைக் கடாக்ஷித்து “கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று ஒரு மஹானுபாவன் திருவவதரித்து ப்ரபன்ன குலமாக வாழும்படிக்கு ஶ்ரீவைஷ்ணவஶ்ரீ கொழுந்துவிட்டுச் செல்லும்படி பண்ணப்போகிறாரென்று அருளிச் செய்தாரிறே. ஆகையாலே ஆளவந்தார் தொடக்கமான முன்புள்ள முதலிகள் பலரும் தர்ஶந ப்ரவர்த்தகராயிருக்க, இங்கும் அங்கும் இவர் திருநாமத்தாலே தர்ஶனம் பேறு பெற்று – எழுபத்துநாலு ஸிம்ஹாஸனஸ்தாரும், ஜ்ஞாநாதிகரான ஸந்யாஸிகளும், ஶ்ரீவைஷ்ணவர்களும், ஏகாங்கிகளும், ஜ்ஞாநாதிகைகளான அம்மையார்களும் நிரவதிக வைஷ்ணவ ஶ்ரீயோடே வாழ்ந்தது. அந்த ஸம்ருத்தி இன்றளவும் வெள்ளமிட்டுப் பெருகும்படி ராமாநுஜதர்ஶநமென்று கொழுந்து விட்டுச் செல்லுகிறது.

5 – ஸ்ரீ ராமானுஜரின் அவதார ரஹஸ்யம்

ஸர்வேஶ்வரன் க்ருஷ்ணாவதாரத்திலே அர்ஜுன வ்யாஜத்தாலே ஸ்வவிஷயமான சரமஶ்லோக முகத்தாலே ப்ரதமோபாயத்தை நிஶ்சயித்துக் காட்டினாப் போலே உடையவரும், அவதார விஶேஷமான தம் பக்கலிலே சரமோபாயத்தை நிஶ்சயித்து அருளிச் செய்தாரிறே.

எங்ஙனேயென்னில்: திருநாராயணபுரத்திலே உடையவர் முதலிகளும் தாமுமாக எழுந்தருளி இருக்கிற நாளிலே முதலியாண்டான் யாதவகிரி மாஹாத்ம்யம் வாசியா நிற்க,

  1. अनंतप्रथम रूपमलक्ष्मणच तथा परम
    बलभद्र तृतीयस्तुकलौ कच्चीद भविष्यति (அனந்த: ப்ரதமம் ரூபம் லக்ஷ்மணஶ்ச தத: பரம் | பலபத்ரஸ் த்ருதீயஸ்து கலௌ கஶ்சித் பவிஷ்யதி || ) என்கிற ஶ்லோகம் வந்தவாறே சதுர்த்த பாதத்துக்குப் பொருள் ஏதென்று சில முதலிகள் முதலியாண்டானைக் கேட்க, அவரும் உடையவர் திருமுக மண்டலத்தைப் பார்க்க, உடையவரும், ‘ஆழ்வாரை அபேக்ஷித்து ருஷி சொன்னதாயிருக்கும்’ என்று அருளிச் செய்ய, அதினாலே முதலிகளுக்கு த்ருப்தி இல்லாதபடியைக் கண்டு, “இற்றைக்குச் செல்லும்; பின்னை வெளியிடுகிறோம்” என்றருளிச் செய்ய, அவ்வளவிலே மாஹாத்ம்யத்தை முட்ட வாசித்துக்கட்டி, கோஷ்டியும் குலைந்து போய் அன்று ராத்ரி காலத்திலே முதலியாண்டான், எம்பார், திருநாராயணபுரத்தரையர், மாருதியாண்டான், உக்கலம்மாள் இவர்கள் ஐவர்களும் உடையவர் திருவடிகளிலே தண்டம் ஸமர்ப்பித்து, “தேவரீர் அடியோங்களுக்கு அவ்வர்த்தத்தை அருளிச்செய்ய வேணும்’ என்ன, “ஆகில் இத்தை ஓருவர்க்கும் வெளியிடாதே கிடீர்கள். இதிலே ப்ரதிபத்தி பிறக்கிறது மிகவும் துர்லபமாயிருக்கும்” என்றருளிச் செய்து,
  2. (கலௌ கஶ்சித் பவிஷ்யதி) என்றதுக்கு நாமே விஷயம்; நம் பிறவி ஸர்வோத்தாரகமாகப் பிறந்த பிறவியாய் இருக்கும். ஆகையாலே எல்லாரும் நம்மைப் பற்றி நிர்ப்பரராய் இருங்கோள். ஒரு குறைகளுமில்லை” என்றருளிச் செய்தார். இவ்வர்த்தம் பரமரஹஸ்யம்.

உடையவர்தாம் அவதார விஶேஷமென்னுமிடத்தைப் பலரும் வெளியிட்டார்களிறே.

எங்ஙனே என்னில் – அழகர் ஸன்னிதியிலே திருவத்யயனம் நடவாநிற்க, ஒரு நாள் திருவோலக்கத்திலே நம்மிராமாநுசமுடையார்க்கு அருளப்பாடென்று திருவுள்ளமாய் அருள, ‘நாயிந்தே’ என்று முதலிகள் எல்லாம் எழுந்திருந்து, அழகர் திருவடிகளுக்கு ஆஸன்னமாக எழுந்தருள, பெரிய நம்பி வழியிலே சிலர் எழுந்திருந்து வாராமலிருக்க, ‘நாமழைக்க நீங்கள் வாராமலிருப்பானேன்’ என்ன, “இராமநுசமுடையார்க்கு அருளப்பாடென்று தேவரீர் திருவுள்ளம்பற்றுகையாலே அவர் எங்களுக்கு ஶிஷ்யராய் இருக்கையாலே, அவர் எங்களுக்கு ஶேஷபூதரன்றோ என்று வாராமலிருந்தோம்” என்ன, அவரும் “நம்மை தஶரத வஸுதேவாதிகள் புத்ரப்ரதிபத்தி பண்ணினாப் போலே இருந்தது நீங்கள் நம் இராமநுசனை ஶிஷ்ய ப்ரதிபத்தி பண்ணினது. நம் முதன்மையிலே அடிமை செய்வாரில் தலைவரான இவரோட்டை ஸம்பந்தத்தை  அறுத்துக் கொண்ட உங்களுக்கு கதி ஏது?” என்று அருளிச்செய்தார். பின்பொரு நாள் கிடாம்பியாச்சானை அழைத்து அருளப்பாடிட்டருளி, ஒரு பாசுரம் சொல்லிக் காணாயென்ன, அவரும்,

  1. धर्मनिष्ठोस्मि  चात्मवेदी  भक्तिमास्त्वच्चरणारविन्दे 
    अकिंचनोनन्यगतिश्शरण्य त्वत्पादमूलम शरणम प्रपद्ये   (ந தர்ம நிஷ்டோஸ்மி) என்று தொடங்கி 29. ( அகிஞ்சநோநந்ய கதிஶ்ஶரண்ய த்வத்பாதமூலம் ஶரணம் ப்ரபத்யே|| ) என்றருளிச் செய்ய , “நம்மிராமாநுசனையுடையையாய் வைத்து அநந்யகதி என்று சொல்லப் பெறாய் காண்” என்றருளிச் செய்தார். அதாவது – “எல்லார்க்கும் புகலிடமாய், ஸர்வோத்தாரகமான நம்மிராமாநுசனிருக்கச் செய்தே உமக்கு ஒரு குறைகளுமில்லை. மார்விலே கைப்பொகட்டு உறங்கும்” என்றருளிச் செய்தார் என்றபடி.

பெருமாள் கோயிலிலே ஒரு வைஷ்ணவனுக்கு ஒரு பிள்ளை பிறந்தானாய், அந்தப் பிள்ளை ஐந்து, ஆறு வயஸ்ஸளவும் வார்த்தை சொல்லாமல் ஊமையாயிருந்து, அநந்தரம் இரண்டு மூன்று ஸம்வத்ஸரம் அவனைக் காணாமல் போக, சில நாளைக்குப் பின்பு அவன் வார்த்தை சொல்ல வல்லனாய் வந்தவாறே, இந்த ஆஶ்சர்யத்தைக் கேட்கைக்கு, ‘ஊமாய்! நீ இத்தனை நாளும் எங்கு போனாய்?’ என்று சிலர் கேட்க, அவனும் ‘க்ஷீராப்திக்குப் போனேன்’ என்ன, அங்கே விஶேஷமேதென்று கேட்க, “திருப்பாற்கடல் நாதன் ஸேனை முதலியாரை அழைத்தருளி, ‘எல்லாரும் நமக்காளாம்படி நீர் போய் அவதரித்து ஜகத்தையடையத் திருத்தும்?’ என்று நியோகிக்க அப்படியே ஸேனை முதலியாரும் இளையாழ்வாராய் வந்தவதரித்திருக்கிறாரென்று திருப்பாற்கடல் நாதன் ஸன்னிதியிலே ஶ்வேத த்வீப வாஸிகள் ப்ரஸங்கம் பண்ணிக் கொண்டு இருக்கிறார்கள்” என்று சொல்லி, உடனே அந்தப் பிள்ளை அந்தர்த்தாநம் பண்ணிப்போயிற்று.

உடையவர் யாதவப்ரகாஶனோடே ஶாஸ்த்ரபாடம் காலக்ஷேபம் பண்ணிக் கொண்டிருக்கிற நாளிலே, அந்த ராஜ்யத்து ராஜாவினுடைய பெண்ணை ப்ரஹ்மரக்ஷஸ்ஸு பிடித்து நலிய,  அத்தை யாதவப்ரகாஶனுக்கு அறிவிக்கப் பண்ண, அவனும் அதிக்ரூரமான மந்த்ரங்களை ஜபித்துக் கொண்டு இளையாழ்வார் தொடக்கமானாருடனே சென்று அத்தைப் போகச் சொல்ல, அது முடக்கின காலை நீட்டி, “நீ போகச் சொன்னால் உனக்கு பயப்பட்டு  போகேன்” என்று சில வார்த்தைகள் சொல்ல, “ஆனால் நீ யார் போகச் சொன்னால் போவுதி?” என்ன, “உன்னுடனே வாசிக்கிறவர்களிலே ஒருவர் அநந்த கருட விஷ்வக்ஸேநாதிகளான நித்யஸூரிகளில் தலைவரிலே ஓருவராயிருப்பார்” என்று உடையவரைக் காட்டி, “அவர் போகச் சொன்னால் அவர் திருவடிகளிலே தண்டனிட்டுப் போகிறேன்” என்று சொல்லுகையாலே, உடையவர் அவதார விஶேஷமென்னுமிடத்தை ப்ரம்ஹ்ரக்ஷஸ்ஸும் வெளியிட்டதிறே.

உடையவரும் ஶாரதா பீடத்துக்கு எழுந்தருளினவளவிலே ஸரஸ்வதியும் எதிரே புறப்பட்டு வந்து, “இவர் ஸர்வேஶ்வரனுடைய அம்ஶாவதாரமே; தப்பாது” என்று சொல்லி அதிப்ரீதியோடே, 30. “कप्यास” श्रुति  (கப்யாஸம் புண்டரீகமேவமக்ஷிணீ) என்கிற ஶ்ருதி வாக்யத்துக்கு அர்த்தம் அருளிச் செய்யவேணுமென்று உடையவரைக் கேட்க, உடையவரும் ,  “ஶ்ரீமந் நாராயணனுக்கு அப்போதலர்ந்த செந்தாமரைப் பூப்போலேயிருக்கும் திருக்கண்கள் “ என்றருளிச் செய்ய, ஸரஸ்வதியும் கேட்டு மிகவும் ஸந்தோஷித்து, “ அவதார விஶேஷமான தேவரீர் நூற்றுக்காத வழி எழுந்தருளினது அடியேனைக் கடாக்ஷிக்கைக்காக எழுந்தருளிற்றே” என்று ஶ்ரீபாஷ்யம் முதலான க்ரந்தங்களையும் ஶிரஸாவஹித்து உடையவருக்கு பாஷ்யகாரர் என்று திருநாமம் சாத்தி, உடையவருடைய அவதார ரஹஸ்யத்தை ஸரஸ்வதியும் வெளியிட்டாளிறே.

6 – எம்பெருமானாரின் பெருமைகள்

கூரத்தாழ்வானும் – உடையவருடைய நியோகத்தாலே பேரருளாளன் விஷயமாக வரதராஜ ஸ்தவம் அருளிச்செய்து நிறைவேற்றினவுடனே, ஆழ்வானும் உடையவர் ஸன்னதியிலே ஸமர்ப்பித்து, “தேவரீருடைய நியமன ப்ரகாரத்திலே வரதராஜ ஸ்தவத்தை தேவப்பெருமாள் திருமுன்பே விண்ணப்பம் செய்தேன், திருவுள்ளமுகந்து, அவர் பெருவிசும்பருளும் பேரருளாளராகையாலே அடியேன் கேட்டபடியே, 12. வைகுண்டே து பரே லோகே ஶ்ரீயா ஸார்த்தம் ஜகத்பதி: | ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ|| என்று சொல்லுகிற பரமபதத்தை ப்ரஸாதித்தோமென்று அருளிச்செய்து, “நாம் வானிளவரசாகையாலே நமக்கு ஸ்வாதந்த்ரயம் மட்டமாயிருக்கும், நம் முதன்மையிலே அடிமை செய்வாரில் தலைவரிலே ஒருத்தரான நம்மிராமாநுசனை அநுமதிகொண்டு அவர் தந்தோமென்றால் போய்வாரும்” என்றருளிச்செய்தார், அப்படியே தேவரீரும் திருவுள்ளம் பற்றியருளவேணும்” என்று விண்ணப்பம் செய்ய, உடையவரும், ஆழ்வான் திருவுள்ளத்தையறிந்து அவருடைய வலத்திருச்செவியிலே த்வயத்தையும் ப்ரஸாதித்தருளி, ‘நலமந்தமில்லதோர் நாடு புகுவீர்’ என்றருளிச் செய்ய, ஆழ்வானும் ‘நான் பெற்ற பேறு நாலூரானும் பெற வேணும்’ என்று விண்ணப்பம் செய்ய, “க்ருஷ்ணன் கண்டாகர்ணன் பக்கல் பண்ணின விஷயீகாரம் அவனுடன் பிறந்தவனளவும் சென்றாப் போலே நாம் உம்முடைய பக்கல் பண்ணின விஷயீகாரம் நாலூரானளவும் செல்லத் தட்டில்லை காணும்” என்று அருளிச் செய்தார். பின்பிறே கலங்காப் பெருநகரை ப்ராபித்தது,

ஆழ்வானுக்கு பட்டரைக் கொண்டு திருவத்யயன பர்யந்தம் நடத்தி, மற்றை நாள் உடையவர் பட்டரையும் கூட்டிக்கொண்டு பெரியபெருமாளை ஸேவிப்பதாக எழுந்தருள, அவ்வளவிலே பெருமாளும் பட்டரை அருளப்பாடிட்டருளி, “உமக்குப் பிதா போனாரென்று வ்யாகுலப் படாதே கிடீர்; நாமுமக்குப் பிதா” என்று பட்டரை புத்ரஸ்வீகாரம் பண்ணியருளி, “நீர் ஒன்றுக்கும் கரையாதே கொள்ளும் காணும். த்ருஷ்டத்தில் உமக்கு ஒரு குறைகளும் வையோம்; அத்ருஷ்டத்துக்கு நம் இராமநுசனிருக்கக் கரைய வேண்டுவதில்லை. “நம் பரமாயதுண்டே என்று துணிந்திரும்” என்று அருளிச் செய்தார்.

உடையவர், முதலிகளும் தாமுமாக திவ்யதேஶங்களெல்லாம் ஸேவித்துத் திருகரியிலே எழுந்தருளி ஆழ்வாரை ஸேவித்துக் கண்ணிநுண்சிறுத்தாம்பு அநுஸந்தாநம் பண்ணிக் கொண்டு நிற்க, ஆழ்வாரும் மிகவும் உகந்தருளி அர்ச்சமுகேன அருளப்பாடிட்டருளி, உடையவரைத் திருவடிகளின் கீழே திருமுடியை மடுக்கச் சொல்லி ஸகலமான ஶ்ரீவைஷ்ணவர்களையும் கோயில் பரிகரம் அனைத்துக் கொத்தையும் அருளப்பாடிட்டருளி, “நம்மோடு ஸம்பந்தம் வேண்டியிருப்பாரெல்லாரும் நமக்குப் பாதுகமாயிருக்கும் நம்மிராமாநுசனைப் பற்றுங்கோள். நம்மிராமாநுசனைப் பற்றுகை நம்மைப் பற்றுகையாயிருக்கும். நம்மிராமாநுசனையே நீங்கள் அனைவரும் உடையராய்ப் பிழையுங்கோள்” என்றருளிச் செய்தார். அன்று தொடங்கி ஆழ்வார் திருவடிகளுக்கு ‘இராமாநுசம்’ என்று திருநாமம் ஆயிற்று. தத்பூர்வம் ஶடகோப பதத்வயம் மதுரகவிகள் என்று திருநாமமாயிருக்கும். இந்த ஸம்ப்ரதாயத்தை உட்கொண்டாயிற்று அமுதனார் “மாறனடி பணிந்துய்ந்தவன்” என்று அருளிச் செய்தது.

மதுரகவி ஆழ்வார் ஸர்வஜ்ஞராகையாலே ஆழ்வார் திருவுள்ளக் கருத்தை அறிந்து “மேவினேனவன் பொன்னடி” என்று ஸாபிப்ராயமாக அருளிச் செய்தாரிறே. தாமரையடி என்னாதே பொன்னடி என்று விஶேஷணமிட்டது – பொன்னானது ஸகலத் த்ரவ்யங்களிலும் உத்க்ருஷ்டமாய், எல்லாரும் மேல் விழுந்து ஆசைப்படும்படியுமாய், பல ப்ரஸாதகமுமாய், ப்ராயிக(ப்ய)முமாய், வ்யக்தி தாரத்மயத்தையிட்டு வர்த்தியாமல் தன் பக்கல் ருசியுள்ளாரிடமெல்லாம் வர்த்திக்கும்படியாய், ஆண்களோடு பெண்களோடு வாசியறத் தொடரும்படியுமாய், கைப்பட்டால் நோக்கிக் கொள்ள வேண்டும்படியுமாய், இழவிலே ப்ராணஹானி வருகைக்கு உடலுமாய் இருக்கையாலேயிறே இந்த ஆகாரங்களெல்லாம் உடையவர் பக்கலிலே கண்டதிறே.

உடையவர் தாம் 31. “காருண்யாத் குருஷூத்தமோ யதிபதி:” என்கிறபடியே எல்லாரிலும் உத்க்ருஷ்டராய், எழுபத்துநாலு ஸிம்ஹாஸனஸ்தரும் ஆசைப்பட்டு மேல்விழுந்து ஆஶ்ரயிக்கும்படி ஸ்பரூஹணியருமாய், மோக்ஷபலப்ரதருமாய், இன்னாரின்னவர்களென்று அவர்களையும் விடாமல், ருசியுடையவர் பக்கலெல்லாம் ரஹஸ்யார்த்தங்களை வெளியிட்டருளி, அளவிறந்த ஶ்ரீவைஷ்ணவர்களோடு வாசியற வாய்த்த எல்லாரையும் ஈடுபடுத்தி, க்ருமிகண்டனடியாக வந்த துர்த்தஶையிலே முதலியாண்டான் தொடக்கமானாராலே பேணப்பட்டுத் தம்முடைய விஶ்லேஷத்தில் ஸ்ரீபாதத்தில் உள்ளவர்கள் பலரும் மூச்சடங்கும் படியாயிறே எழுந்தருளியிருந்தது. ஆகையால் ஆழ்வார் திருவடிகள் உடையவர் தானேயிறே.

உடையவர் ப்ராயணத்தில் மூச்சடங்கினார்கள் பலருமுண்டிறே. கணியனூர்ச் சிறியாச்சான் உடையவரைப் பிரிந்து கணியனூரிலே எழுந்தருளிச் சில நாள் கழிந்தவாறே ஸ்வாசார்யரான உடையவரை ஸேவிக்க வேணுமென்று தேட்டமாயெழுந்தருள, நடுவழியிலே ஒரு திருநாமதாரி கோயிலில் நின்றும் வரக்கண்டு, அவனை, எங்கள் ஆசார்யரான எம்பெருமானார் ஸுகமே எழுந்தருளி இருக்கிறாரோ?” என்று கேட்க, அவனும் உடையவருடைய ப்ரயாணத்தைச் சொல்ல, “எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்” என்று மூச்சடங்கினாரிறே. குமாண்டூர் இளையவில்லி என்கிறவர் திருப்பேரூரிலே எழுந்தருளியிருக்கச் செய்தே, ஒரு நாள் ராத்ரி ஸ்வப்னத்திலே உடையவர் அநேகமாயிரம் ஆதித்யர்கள் சேர உதித்தாப் போலே நிரவதிக தேஜோரூபமான திவ்ய விமானத்திலே ஏறியருளி நிற்கப் பரமபதத்துக்கும் பூமிக்கும் நடுவே நிர்வகாஶமாம்படி பரமபதநாதன், அநந்த கருட விஷ்வக்ஸேனாதிகள் தொடக்கமான அநேகமாயிரம் நித்யஸூரிகளும், ஆழ்வார் நாதமுனிகள் தொடக்கமான அளவிறந்த முக்தரும் தாமுமாக ஶங்க காஹளபேரிகள் தொடக்கமான வாத்ய கோஷங்களுடனே வந்து உடையவரை எதிர்கொண்டு முன்னே நடக்கத் தாமும் பரிகரமும் பின்தொடர்ந்து போகிறதாகக் கண்டு திடுக்கிட்டு எழுந்திருந்து, அசலகத்தில் வள்ளல் மணிவண்ணனை அழைத்தருளி, “எங்களாசார்யரான எம்பெருமானார் திவ்யவிமானத்திலே ஏறியருளி, பரமபதநாதன், நித்யஸூரிகளும் தானுமாக எதிர்கொள்ளப் பரமபதத்துக்கு எழுந்தருளுகிறதாகக் கண்டேன். ‘தரியேனினி’ என்றருளிச் செய்து ‘எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்’ என்று மூச்சடங்கினாரிறே. இப்படி இருந்த இடங்களிலே மூச்சடங்கினார் பலரும் உண்டிறே. அருகிருந்தாரை ஏற்கவே ஆணையிட்டு விலக்குகையாலும் தர்ஶநார்த்தங்களை ப்ரவர்த்திப்பிக்க வேண்டிப் பெருமாள் வலியவிட்டு வைக்கையாலும் அருகிருந்த முதலிகள் ஆற்றாமைப் பட்டிருந்தார்கள். இப்படித் தம்முடைய விஶ்லேஷத்தில் ஸ்வாஶ்ரிதர் மூச்சடங்கும்படியான வைலக்ஷண்யமுடையராயாயிற்று உடையவர் தாமிருப்பது.

7 – எம்பெருமானாரின் உத்தாரகத்வம் – 1

திருவாய்மொழி ப்ரவர்த்தகர்கள்

உடையவர் திருகுருகைப்பிரான் பிள்ளானுக்குத் திருவாய்மொழி ப்ரஸாதிக்கிற போது “பொலிக பொலிக” வந்தவாறே திருகுருகைப்பிரான் பிள்ளான் ஹர்ஷபுலகிதகாத்ரராய் விஸ்மயாவிஷ்டசித்தராய் எழுந்தருளியிருக்க, உடையவரும் அத்தைக் கண்டு , ‘இதென்ன வேறுபாடு தோற்றியிராநின்றீர்’ என்று கேட்டருள, “ஆழ்வார் தேவரீருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்தருளி ‘கலியும் கெடும் கண்டு கொண்மின்” என்று அருளிச் செய்தார். அப்படியே தேவரீரும் உருக்கள்தோறும் நாமே இதுக்கு விஷயமென்று தொட்டுக் காட்டியருளிற்று.

அத்தை எல்லாம் இப்போது நினைத்து ஹர்ஷ்பரவஶனாய், ஆழ்வார் அருளிச் செய்தபடியே ஸர்வோத்தாரகராய் நாடு அடங்க வாழும்படி திரு அவதரித்த தேவரீரிடத்திலே ஸம்பந்தமும் பெற்று, தேவரீர் திருப்பவளத்தாலே திருவாய்மொழிக்குப் பொருள் கேட்கும்படிக்கு ஒரு ஸுக்ருதம் நேர்படுவதே! என்று விஸ்மயப்பட்டிருந்தேன்” என்ன, உடையவர் மிகவும் உகந்தருளி, அன்று ராத்ரி காலத்திலே பிள்ளானை அழைத்தருளி, அவர் திருக்கையைப் பிடித்துக்கொண்டு பேரருளாளர் ஸன்னதியிலே அழைத்துக்கொண்டு எழுந்தருளித் தம்முடைய திருவடிகள் இரண்டையும் அவர் முடியிலே வைத்தருளி, “இத்தையே தஞ்சமாகப் பற்றி விஶ்வஸித்திரும், உம்மை அடைந்தார்க்கும் இத்தையே காட்டிக் கொடும்” என்றருளிச் செய்து, “நாளை பேரருளாளர் ஸன்னதியிலே தொடங்கி திருவாய்மொழிக்கு, ஶ்ரீ விஷ்ணு புராண ஸங்க்யையிலே ஆறாயிரம் க்ரந்தமாக வ்யாக்யானம் பண்ணும்” என்று நியமித்தருளினார். இத்தால் தம்முடைய உத்தாரகத்வத்தை வெளியிட்டபடியிறே.

உடையவர் தம் திருவடிகளில் ஆஶ்ரயித்த கூரத்தாழ்வானையும், முதலியாண்டானையும், அருளாளப் பெருமாள் எம்பெருமானாரையும் கூட்டிக் கொண்டு திருவாய்மொழிக்கு வ்யாக்யானம் பண்ணிக்கொண்டு இருக்கிற நாளிலே, ஆசார்யர்கள் எல்லாரும் உடையவர் திருவடிகளிலே மேல் விழுந்து ஆஶ்ரயிக்க, இந்த வ்ருத்தாந்தத்தைக் கேட்டு அனந்தாழ்வானும், எச்சானும், தொண்டனூர் நம்பியும், மருதூர் நம்பியும், உடையவர் திருவடிகளிலே ஆஶ்ரயிக்கவேணுமென்று எழுந்தருள, அவர்களை அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருவடிகளிலே ஆஶ்ரயிப்பித்தருளினார். அருளாளப் பெருமாள் எம்பெருமானாரும் போர  பயப்பட்டு, “குருவியின் கழுத்திலே பனங்காயைக் கட்டினாப்போலே செய்தாரித்தனை. இதுக்கெல்லாம் எனக்கு அதிகாரம் போராது, எம்பெருமானார் ஸர்வோத்தாரகராய்க் கொண்டு ஜகத்தடைய வாழப் பிறந்தவராகையாலே நமக்கெல்லாம் அவர் திருவடிகளேயாகையாலே, எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்று விஶ்வஸித்து நிர்ப்பரராய் இருங்கோள்” என்று அருளிச் செய்தார். பின்பு உடையவர் அவர்களை அழைத்தருளி, “ நாம் பகவத்ஸம்பந்தம் பண்ணினோமில்லை என்று குறைப்பட்டிராதே கிடீர்கோள்; அவர் பண்ணினதே நாம் பண்ணினது. உங்கள் பேற்றுக்கு நாமே கடவோம்” என்று அருளிச்செய்து, திருவடிகளிரண்டையும் நெருக்கி வைத்தருளி, “இத்தையே தஞ்சமாக நினைத்திருங்கோள்” என்று அருளிச்செய்தாரிறே.

உடையவர், முதலிகளும் தாமுமாகத் திருவேங்கடமுடையானை ஸேவிக்கவேணுமென்று  பேரருளாளனை அநுமதிகொண்டு திருப்பதியிலே எழுந்தருளி, “விண்ணோர் வெற்பு” என்கிறபடியே நித்யஸூரிகள் வந்து பரிமாறுமிடத்தே நாம் கால் கொண்டு மிதிக்கையாவதென்னென்று அங்கே திருத்தாழ்வரை அடியிலே எழுந்தருளியிருந்து, “தானே தொழுமத்திசையுற்று நோக்கியே” என்கிறபடியே திருவேங்கடமுடையானை திசை கைகூப்பி ஸேவித்து மீண்டு எழுந்தருளுவதாக உத்யோகித்தவளவிலே, அனந்தாழ்வான் தொடக்கமான ஶ்ரீவைஷ்ணவர்கள் எல்லாரும், ‘தேவரீர் ஏறாவிடில் நாங்களும் ஏறோம்; மற்றையொருவரும் ஏறுவதில்லையாகையாலே தேவரீர் அவஶ்யம் எழுந்தருள வேணுமென்ன’, உடையவரும் திருமேனி ஶோதனையும் பண்ணிக் கொண்டு, 32. “பாதேநாத் யாரோஹதி” என்று ஶ்ரீவைகுண்டநாதனுடைய நியோகத்தினாலே பாதபீடத்திலே அடியிட்டு ஏறுமாப்போலே திருவேங்கடமுடையான் அருளப்பாடிட்டருளத் திருமலையிலே ஏறியருளித் திருப்பரியட்டப்பாறையளவாக எழுந்தருளாநிற்க, “முடியுடைவானவர் முறை முறை எதிர் கொள்ள” என்கிறபடியே பெரிய திருமலைநம்பி திருவேங்கடமுடையானுடைய தீர்த்த ப்ராஸாதமும் கொண்டு ஶ்ரீவைஷ்ணவஶ்ரீயோடே எதிர்கொள்ள, உடையவரும் தண்டம் ஸமர்ப்பித்து, தீர்த்தப்ரஸாதமும் ஸ்வீகரித்து, “தேவரீர் எழுந்தருள வேணுமோ? ஒரு சிறியாரில்லையோ” என்ன, “நாலு திருவீதியும் ஆராய்ந்து பார்த்தவிடத்திலும் என்னிலும் சிறியாரைக் கண்டிலேன். தேவரீரை எதிர்கொள்ளுகைக்குத் திருவேங்கடமுடையான் தானே எதிர் கொள்ள வேணும், ஸகலஜன ஜீவாதுவாய், ஸர்வரையும் உத்தரிப்பிக்க வேணுமென்று திரு அவதரித்தருளின தேவரீருடைய வைபவத்தைப் பார்க்குமளவில் அடியேன் எதிரே விடைகொள்ளுகிறது தகாது , ஆகிலும், திருவேங்கடமுடையானுடைய நியோகத்தினாலே விடைகொண்டேனித்தனை” என்று அருளிச் செய்ய, உடையவரும் போர உகந்து, அவருடனே கூடத் திருவேங்கடமுடையானுடைய ஸன்னிதியிலே எழுந்தருளி, தண்டம் ஸமர்ப்பித்து நிற்க, அர்ச்சகமுகேந அருளப்பாடிட்டருளி, “நாம் உமக்கு முன்பே நம் தெற்கு வீட்டிலே தானே உபயவிபூத்யைஶ்வர்யங்களையும் தந்து ஜகத்தையடையத் திருத்தி வாழ்வித்திரும் என்று நியமித்தோமே, என்ன குறையாக வந்தீர்?” என்ன – நாயன்தே! “கிடந்ததோர் கிடக்கை” என்றும், “பிரானிருந்தமை” என்றும், “நிலையார நின்றான்” என்றும் சொல்லுகிறபடியே தேவரீர் நிற்றல், இருத்தல், கிடத்தல் செய்தால் அது மிகவும் ஆகர்ஷகமாயிருக்கும். அதில் கிடையழகு கோயிலிலே காட்டியருளிற்று, நிலையழகு ஹஸ்திகிரியிலே காட்டியருளிற்று, “அமரர் முனிகணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே” என்கிறபடியே திருமலையிலே குணநிஷ்டருக்கும் கைங்கர்ய நிஷ்டருக்கும் காட்டி கொடுத்துக் கொண்டு இருக்கிற நிலையழகும்  கண்டு அநுபவிக்க வேணுமென்று விடைகொண்டேன் என்ன, ஆகில், இங்கு வாருமென்று திருவடிகளிலே திருமுடியை மடுக்கச் சொல்லி “இத்தை மறவாதே நெஞ்சிலே கொண்டு தர்ஶனத்தை நடத்தி வையும், உபய விபூதிக்கும் நீரே கடவீர் . உம்முடைய அபிமானத்திலே ஒதுங்கினவர்களே நமக்கு வேண்டியவர்கள், எல்லாரையும் நமக்காளாம்படி திருத்தும், ஜகத்தை அடையத் திருத்த வேணுமென்றாய்த்து, நாமும்மை நம் முதன்மையில் நின்றும் அழைப்பித்தது, உம்மோடு ஸம்பந்தமுடையார்க்கு ஒரு குறைகளுமில்லை.

“சூழல் பல பல” என்கிறபடியே நாம் அனேகாவதாரங்கள் செய்தவிடத்தில் ஒருவரும் அகப்படாமல் இழவோடே போனோம். அந்த இழவை நீர் தீர்ப்பீரென்று ஆறியிருக்கிறோம். அப்படியே செய்யப்பாரும்” என்றருளிச் செய்தார். இத்தால் திருவேங்கடமுடையானும் இவருடைய உத்தாரகத்வத்தை வெளியிட்டானாய்த்து.

அனந்தரம், உடையவரும் முதலிகளுமாக நம்பியை சேவிக்க வேணுமென்று திருக்குறுங்குடிக்கு எழுந்தருளி, நம்பி ஸன்னிதியிலே தண்டம் ஸமர்ப்பித்து நிற்க, நம்பியும் உடையவரை அருளப்பாடிட்டருளி, –

  1. बहुनेमे व्यतीतानी जन्मानी तव चार्जुन 
    तान्यहं वेद सर्वाणी नत्वम वेत्थ परन्तप गीता . )

“பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி …” என்கிறபடியே எத்தனை ஜன்மம் பிறந்தோமோ தெரியாது. அதிலொருவரும் அகப்பாடுவாரின்றிக்கே,

  1. आसूरींयोनिमापन्ना मूढ़ा जन्मनि जन्मनि।
    मामप्राप्येव कौन्तेय ततो यांत्यधमां गतिम 

“ஆஸுரிம் யோநிமாபந்நா: மூடா ஜந்மநி ஜந்மநி | மாம்ப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்ய தமாம்  கதிம் ||” என்கிறபடியே ஆஸுரப்ரக்ருதிகளாய், அதோகதிகளிலே விழுந்து விட்டார்கள். இப்போதே எல்லாரும் உமக்கேயாளாய்த் திரிகின்றார்கள். இப்படி இவர்கள் எல்லாரையும் அகப்படுத்திக்கொண்ட விரகெங்ஙனே? அவ்விரகை நமக்கு ஒன்று நீர் சொல்லவேணுமென்று திருவுள்ளமாயருள, உடையவரும் “ தேவரீர் கேட்டருளும் அடைவிலே கேட்டருளும் அடைவிலே கேட்டருளினால் விண்ணப்பம் செய்கிறேன்; தேவரீர் இறுமாப்புக்குச் சொல்லுவதில்லை” என்ன, நம்பியும் திவ்யாஸ்தானத்தில் நின்றும் கீழேயிறங்கியருளி, தரையிலே ஒரு ஓலியலை விரித்து அதின் மேலே எழுந்தருளியிருந்து உடையவரைத் தன் ஸிம்ஹாஸனத்திலே எழுந்தருளியிருக்கும்படி பண்ணி, எல்லாரையும் புறப்படுத்தி அஷ்டகர்ணமாயிருந்து, இனித்தான் சொல்லிக்காணீரென்ன, உடையவரும்

  1. “நிவேஶ்ய தக்ஷிணே ஸ்வஸ்ய விநதாஞ்ஜலி ஸம்யுதம்| மூர்த்நி ஹஸ்தம் விநிக்ஷிப்ய தக்ஷிணம் ஜ்ஞாநதக்ஷினம் | ஸவ்யம் து ஹ்ருதி விந்யஸ்ய க்ருபயா வீக்ஷயேத் குரு| ஸ்வாசார்யம் ஹ்ருதயே த்யாத்வா ஜப்த்வா குருபரம்பராம் ஏவம் ப்ரபத்ய தேவேஶம் ஆசார்ய: க்ருபயா ஸ்வயம் | அத்யாபயேந்மந்த்ர ரத்நம் ஸர்ஷிச்சந்தோ’தி தைவதம்||” என்கிறபடியே ஸகலோப்நிஷத்ஸார ஶ்ரேஷ்டமாய், மந்த்ரரத்நம் என்று திருநாமத்தையுடைய, த்வயத்தை நம்பியுடைய வலத்திருச்செவியிலே அருளிச் செய்ய, நம்பியும் அருளிச் செய்தபடி – “நாம் முன்பொரு காலத்திலே பத்ரிகாஶ்ரமத்திலே ஶிஷ்யாசார்யரூபேண நின்று திருமந்த்ரத்தை வெளியிட்டோம். அவ்விடத்திலே ஶிஷ்யத்வேந நின்றவளவில் ஆசார்யவஸ்து வ்யக்த்யந்த்ரமாகப் போராமல் நாமேயாய் நின்றோமித்தனை.

மத்வயதிரிக்தரிலே ஒருவன் ஆசார்யனாய் நிற்க, நாம் ஶிஷ்யனாய் நின்று அவன் பக்கலிலே ரஹஸ்யார்த்தம் கேட்கவும், ஒரு திறமும் பெற்றதில்லை என்று பெருங்குறையோடே இருந்தோம், அக்குறை உம்மாலே தீரப்பெற்றதே! இனி நாம் இன்று தொடங்கி இராமாநுசமுடையாரிலே அந்தர்ப்பவிக்கப் பெற்றோம்” என்று அருளிச் செய்து, ‘நாம் வைஷ்ணவ நம்பியானதும் இன்றாய்த்து’ என்று அருளிச் செய்தார். இத்தால், நம்பியுடைய ஶிஷ்யத்வம் ஸ்வாதந்த்ரியத்தினுடைய எல்லை நிலமென்று தாத்பர்யம். ஸர்வர்க்கும் ப்ரதம குருவான நம்பி உடையவருடைய ஶிஷ்யத்வத்தை ஆசைப்பட்டு பெற்றது – உத்தாரகத்வேந உக்தமான இவருடைய ஆசார்யத்வத்தை வெளியிட்டபடியிறே.

நடாதூர் அம்மாள் ஸ்ரீபாதத்திலே பத்துப் பன்னிரண்டு ஶ்ரீவைஷ்ணவர்கள் ஶ்ரீபாஷ்யம் வாசிக்கிற காலத்திலே, பக்தி ப்ரபத்திகள் இரண்டும் துஶ்ஶகத்வ ஸ்வரூப விருத்தத்வ விஶ்வாஸதுர்லபத்வாதிகளாலே பண்ணக் கூடாமல் வெறுங்கையனான சேதனனுக்கு பேறுண்டாம்படி எங்ஙனே? என்று சிலர் கேட்க, “இவையிரண்டும் இல்லாதார்க்கு எம்பெருமானாருடைய அபிமானமே உத்தாரகம் இத்தை ஒழியப் பேற்றுக்கு வழியில்லை. நான் அறுதியிட்டிருப்பதும் அப்படியே” என்று அருளிச் செய்தார். பின்பு தம்முடைய சரமதஶையிலே ஸ்ரீபாதத்து முதலிகள், எங்களுக்கு தஞ்சமேதென்று  சதுரராய்  கேட்க , ”உங்களுக்கு பக்தி ப்ரபத்திகள் துஷ்கரங்களாய் ஒழிந்தது; ஸுலபமென்று எம்பெருமானாரைப் பற்றி அவரே தஞ்சமென்று விஶ்வஸித்திருங்கோள். பேற்றுக்கு குறையில்லை” என்று அருளிச் செய்தார்.

  1. “ प्रयाणकाले चतुरस श्वशिष्यन पधाथीकास्थान वरदो ही वीक्ष्य |
    भक्ति प्रपत्ति यदि दुष्करेव रामानुजार्यम नम तेत्यवादीत ||”

“ப்ரயாணகாலே சதுரஸ்ஸ்வஶிஷ்யாந் பதாந்திகஸ்தாந் வரதோ ஹி வீக்‌ஷய| பக்திப்ரபத்தீ யதி துஷ்கரே வ: ராமாநுஜார்யம் நமதேத்யவாதீத்||” என்று இவ்வர்த்தம் ப்ரஸித்தமிறே.

காராஞ்சியில் ஸோமயாஜியார், எம்பெருமானார் திருவடிகளிலே ஆஶ்ரயித்துச் சில நாள் ஆசார்ய கைங்கர்யம் பண்ணிக்கொண்டிருந்து, பின்பு தம்முடைய ஊரான காராஞ்சியிலே எழுந்தருளிச் சில நாள் கழித்தவாறே. ஸ்வாசார்யரைத்  தேட்டமாய், தேவியாருடைய உபாதியினாலே ஸ்வாசார்யருடைய ஸன்னிதிக்கு எழுந்தருளக் கூடாமையாலே, எம்பெருமானார்க்கு ப்ரதிநிதியாக ஒரு விக்ரஹம் ஏறியருளப்பண்ண, அந்த ஸம்ஸ்தானம் நன்றாக வகுப்புண்ணாமையாலே அத்தையழித்து வேறே ஏறியருளப் பண்ண, அன்றைக்கு ராத்ரி இவர் ஸ்வப்னத்திலே உடையவர் எழுந்தருளி, “நீர் ஏன் இப்படி நம்மை நலிந்து உருவழிக்கிறீர். எங்ஙனே இருந்தாலும் நம்முடைய அபிமானமே உத்தாரகமென்று அத்யவஸிக்கமாட்டாத நீரோ நம் விக்ரஹத்திலே ப்ரதிபத்தி பண்ணப் போகிறீர்” என்று அருளிச்செய்ய, திடுக்கிட்டு எழுந்திருந்து அப்போது தானே அந்த விக்ரஹத்தையும் சேமத்திலே எழுந்தருளப் பண்ணி, தேவியாரையும் அறத்துறந்து, அங்கு நின்றும் புறப்பட்டுக் கோயிலேற எழுந்தருளிக் கண்ணும் கண்ணீருமாய்க் கைகால் பதறி வந்து உடையவர் திருவடிகளிலே வேரற்ற மரம் போலப் புகல் அற்று விழுந்து பெருமிடறு செய்து அழப்புக்கவாறே இது ஏதென்று கேட்டருள, அங்குற்றை வ்ருத்தாந்தத்தை ஸப்ரகாரமாக விண்ணப்பம் செய்ய, உடையவரும் முறுவல் செய்தருளி, “வாரீர் அஜ்ஞாதாவே! உம்முடைய ஸ்தீரீபாரவஶ்யத்தை அறுக்க வேண்டிச் செய்தோமித்தனை, நீர் இகழ்ந்தாலும் நாம் உம்மை நெகிழவிடத்தக்கதில்லை. நீர் எங்கேயிருந்தாலும் நம்முடைய அபிமானத்தாலே உம்முடைய பேற்றுக்குக் குறைவராது. ஸர்வபரங்களையும் நம் பக்கலிலே பொகட்டு நிர்ப்பரராய் மார்விலே கைபொகட்டு உறங்கும்” என்று அருளிச் செய்தார் – என்று நம்முடைய பிள்ளை அருளிச் செய்வர்.

கணியனூர் சிறியாச்சான் ஸசேலஸ்நான பூர்வகமாக ஆர்த்தியோடே உபாஸன்னராய்ப் பெரிய திருமண்டபத்திலே முதலிகளெல்லாரையும் திருவோலக்கமாக இருத்தி ஶ்ரீஶடகோபனையும் திருமுடியிலே வைத்துக்கொண்டு திவ்யாஜ்ஞையிட்டு,

36 “ सत्यम सत्यम पुन: सत्यम यतिराजो जगद्गुरु |
 एव सर्वलोकानाम उद्धार्ता नात्र संशय ||”

(ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு| ஸ ஏவ ஸர்வலோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய :||) என்று அருளிச் செய்து “எல்லார்க்கும் எம்பெருமானார் திருவடிகளொழிய வேறொரு தஞ்சமில்லை, த்ரிப்ரகாரமும் ஸத்யமே சொல்லுகிறேன், ப்ரபன்ன  குலாந்தர்ப்பூதர்க்கெல்லாம் எம்பெருமானாரே உத்தாரகர், இதில் சற்றும் ஸம்ஶயமில்லை” என்று திருவோலக்கத்தின் நடுவே கோஷித்தாரிறே.

8 – எம்பெருமானாரின் உத்தாரகத்வம் – 2

அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருவடிகளிலே ஆஶ்ரயித்த அனந்தாழ்வானும், எச்சானும், தொண்டனூர் நம்பியும், மருதூர் நம்பியும் உடையவர் திருவடிகளிலே தண்டம் ஸமர்ப்பித்து “இவ்வாத்மாவுக்கு ஆசார்யன் ஒருவனோ பலரோ, இத்தனை பேருண்டென்று நிஶ்சயித்து அருளிச் செய்ய வேணும்” என்று கேட்க ‘பொன்னாச்சியாரைக் கேளுங்கோள்’ என்று அருளிச் செய்ய, அவர்களும் அங்கே எழுந்தருளி, “எம்பெருமானார் தேவரீரைக் கேட்கச் சொல்லி அருளிச் செய்தார். இவ்வாத்மாவுக்கு ஆசார்யன் ஒருவனோ பலரோ? இத்தனை பேருண்டென்று தேவரீர் நிஶ்சயித்தருளிச் செய்ய வேணும்” என்ன, அவரும் திருக்குழற்கற்றையை உதறி ஒன்றாக ஒட்ட முடிந்து பொகட்டுக் கொண்டு, “அடியேனாலே இது நிஶ்சயித்துச் சொல்லக்கூடாது. அபலையான அடியேனுக்குத் தெரியுமோ? எம்பெருமானார் தாமே அருளிச் செய்ய வேணுமித்தனை” என்று அருளிச் செய்து தரையிலே கிடந்த காவி நூலை எடுத்துத் தலையிலே வைத்துக்கொண்டு உள்ளே எழுந்து அருளினார்.

இவர்களும் அப்ராப்தமநோரதராய், உடையவர் ஸன்னிதியிலே சென்று தண்டம் ஸமர்ப்பித்து நிற்க, போன கார்யம் என்னென்று கேட்டருள, அவர் தமக்குத் தெரியாது. எம்பெருமானார் தாமே அருளிச் செய்ய வேணுமத்தனை – என்று அருளிச் செய்தார் என்ன, நீங்கள் போனபோது அவர் செய்த வியாபாரம் என்னென்று கேட்க, திருக்குழற்கற்றையை உதறி ஒன்றாக முடித்துத் தரையிலே கிடந்த காவிநூலை எடுத்துத் தலையிலே வைத்துக்கொண்டு, எங்களை அனுப்பி உள்ளே எழுந்தருளினார் என்ன, “அவர் வெறுமனே எழுந்தருளவில்லை. நீங்கள் பண்ணின ப்ரஶ்னத்துக்கு ஸதுத்தரமாகப்பொருள் சொல்லிப்  போனார். உங்களுக்குத் தெரிந்ததில்லையே” என்றருளிச் செய்ய, ஆகிலும் அந்த அர்த்தத்தை தேவரீர் வெளியிட்டருள வேணுமென்ன, உடையவர் அருளிச் செய்தபடி – “அவர், திருக்குழற்கற்றையை உதறினத்தினாலே – இவ்வாத்மாவுக்கு ஆசார்யனைப் பார்க்கும்போது ஓரோராகாரத்தாலே பலராயிருக்குமென்றபடி, ஒன்றாக முடிந்து பொகட்டதாலே – இவனுக்கு ஆசார்யனாய் நின்று பேற்றைப் பண்ணிக் கொடுக்கிறவன் ஒருவனென்றபடி; தரையிலே கிடந்த காவி நூலை எடுத்ததினாலே பேற்றுக் குடலாக அறுதியிட்ட ஆசார்யனை விசேஷிப்பதாக நினைத்துப் பேற்றுக்குடலாக அறுதியிட்ட ஆசார்யர் சதுர்த்தாஶ்ரமத்தை ப்ராபித்து காஷாயம் சார்த்தியிருக்கிற எம்பெருமானாரென்று நம்மைச் சொன்னபடி. தலையிலே வைத்ததினாலே நமக்கு மூர்த்தந்யரான இவர் அனைவர்க்கும் அதிஶயாவஹர் என்னுமிடத்தை வெளியிட்டபடி; அங்கிராமல் உள்ளே  புகுந்ததினாலே இப்படிப்பட்ட ஆசார்யனை ஹ்ருதயத்துக்குள்ளே, ‘பேணிக் கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன் பிறிதின்றி’ என்கிறபடியே பேணியிட்டு வைத்துக்கொண்டு அநுஸந்தித்துக் கொண்டு இருக்கையே தத்ஸம்பந்திகளுக்கு ஸ்வரூபமென்னும் அர்த்தத்தை வெளியிட்டப்படி”. ஆகையாலே நீங்களும் இவ்வர்த்தத்திலே நிஷ்ட்டராய்ப் போருங்கோளென்று அருளிச் செய்தார். இத்தாலே பொன்னாச்சியாரையிடுவித்துத் தம்முடைய உபாயதாத்மகமான ஆசார்யத்வத்தை வெளியிட்டபடியிறே.

எம்பாரும் வடுகநம்பியும் உடையவர் ஏகாந்தத்திலே எழுந்தருளியிருக்கிறவளவிலே அவர் திருவடிகளிலே சென்று தண்டம் ஸமர்ப்பித்து, மதுரகவியாழ்வார் “தேவுமற்றறியேன்” என்று ஶேஷித்வ ஶரண்யத்வ ப்ராப்யத்வங்கள் மூன்றையும் ஆழ்வாரிடத்திலே அறுதியிட்டுத் ததேக நிஷ்ட்டராய் ப்ரதமபர்வத்திலே கண்வையாதே எழுந்தருளியிருந்த நிலை அடியோங்களுக்கு உண்டாம்படி க்ருபை பண்ணியருள வேணுமென்ன, மதுரகவியாழ்வார் ஆழ்வாரிடத்திலே பண்ணின ப்ரதிபத்தி உங்களுக்கு நம் பக்கலிலே உண்டாம்படி பண்ணினோமே இனி உங்களுக்குச் செய்ய வேண்டும் அம்ஶம் ஏதென்ன, இந்த ப்ரதிபத்தி யாவதாத்மபாவியாய் நடக்கும் படி பண்ணியருள வேணுமென்ன, ‘ஆசார்யாபிமான நிஷ்ட்டனாகில் இங்ஙனிருக்க வேண்டாவோ?’ என்று மிகவும் உகந்தருளி, 37. उपाय उपेय भावेन तमेव शरणम व्रजेत् (உபாயோபேய பாவேன தமேவ ஶரணம் வ்ரஜேத்) என்கிறபடியே நமக்கிரண்டாகாரமுண்டாகையாலே, இரண்டிடத்திலும் நம் பக்கலிலே இரண்டையும் அறுதியிட்டு “தேவுமற்றறியேன்” என்றிருக்கக் குறையில்லை. இதுதான் உங்களளவுமாத்ரமன்று, நம்முடைய ஸம்பந்திஸம்பந்திகளுக்கும் இந்த ப்ரதிபத்தியேயாயிற்று கார்யகரமாவதென்று அருளிச் செய்தார்.

“ஆசார்யனுக்கு இங்கிருக்கும் நாள் உபாயத்வமித்தனை போக்கி ப்ராப்யபூமியில் உபாயத்வம் கொள்ளும்படி எங்ஙனே? ப்ராப்யம் கைபுகுந்தால் ப்ராபகம் வேண்டுவதில்லையே” என்னில், அங்குத்தானும் ஆசார்யனுக்கு உபாயத்வமுண்டு, ஆகையிறே, 38. (அத்ர பரத்ர சாபி நித்யம் யதீய சரணௌ ஶரணம் மதீயம்) என்று ஆளவந்தார் அருளிச் செய்தது.

  1. साध्यभावे महाभाओ साधने किम प्रयोजनम(ஸாத்யாபாவே மஹாபாஹோ ஸாதநை: கிம் ப்ரயோஜநம்) என்கிறபடியே ப்ராப்யபூமியிலே எல்லாம் கைப்பட்டு, ஸித்தமாய் ஸாத்யமன்றியிலேயிருக்கையாலே, ஸாதனங்கொண்டு கார்யமில்லையேயாகிலும், 40. उपयोपेयत्वे तदीह तव तत्वं तू गूणौ (உபாய உபேயத்வே ததிஹ தவ தத்வம் து குணௌ)என்கிறபடியே இரண்டும் ஸ்வரூபமாயிருக்கும்; அதிலொன்றுக்கு ஸங்கோசமில்லாமையாலே ஓளிவிஞ்சிச் செல்லா நிற்கும். மற்றையது உள்ளடங்கியிருக்கும். இவ்வாகாரம் பகவத் விஷயத்திலன்றோவென்னில்; ஆசார்ய விஷயத்திலும் அப்படியே கொள்ளகுறையில்லை. 37. उपाय उपेय भावेन तमेव शरणम व्रजेत्  (உபாயோபேயபாவேந தமேவ ஶரணம் வ்ரஜேத்) என்கையாலே ப்ராப்யத்வ ப்ராபகத்வங்களிரண்டும் ஆசார்யனுக்கு வடிவாயிருக்குமிறே. இவை வடிவாகையாலேயிறே 38. अत्र परत्र चापि (அத்ர பரத்ர சாபி) என்றது. 37. “தமேவ” என்று அவதாரணத்தையிட்டு அந்ய்யோகவ்யவச்சேதம் பண்ணுகையாலே சரமபர்வமும் ஸஹாயாந்தர ஸம்ஸர்க்காஸஹமாயிருக்கும். அதாவது கார்யகாலத்தில் சரமபர்வம் ஸ்வவ்யதிரிக்தத்தை ஸஹாயமாக அபேக்ஷியாமல் அந்திமோபாயமாயிருக்குமென்றபடி. பகவத் ஸம்பந்தம் அஞ்சியிருக்க அடுக்கும்; இது நிஸ்ஸம்ஶயமிறே. அது ஸம்ஸாரபந்த ஸ்திதி மோக்ஷ ஹேதுவாயிருக்கும். பகவத்ஸம்பந்தம் ஆசார்ய ஸம்பந்தத்தை அபேக்ஷித்திருக்கும். ஆசார்ய ஸம்பந்தத்துக்கு பகவத் ஸம்பந்தம் வேண்டுவதில்லை. ஈஶ்வர விஷயஜ்ஞானத்தை அபேக்ஷியாதென்றபடி. ஆசார்ய விஷயஜ்ஞானமுண்டாகிலிறே ஈஶ்வரன் ஸ்வரூபவிகாஸத்தைப் பண்ணுவது. இங்கு அது வேண்டுவதில்லை. இப்படி நிரபாயோபாயபூதரான உடையவரிடத்திலே, “தேவுமற்றறியேன்” என்கிற ப்ரதிபத்தி தத்ஸம்பந்திகளுக்கெல்லாம் யாவதாத்மபாவியாக நடக்கக் குறையில்லை.

பூர்வாபரர்க்கெல்லாம் உடையவரே உத்தாரகராகில், ஆளவந்தார் நாதமுனிகளிடத்திலே உபாயத்வத்தை அறுதியிட்டபடி எங்ஙனேயென்னில், நாதமுனிகள் – தான் ஆழ்வார் பக்கலிலே பெற்ற ரஹஸ்யார்த்தங்களையும், ஸ்வப்நார்த்தங்களையும், பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் உய்யக்கொண்டார் பக்கலிலே சேர்த்து, பவிஷ்யத்தான ஆளவந்தாருடைய திரு அவதாரத்தைக் கடாக்ஷித்து “ஈஶ்வர முனிகளுக்கு ஒரு குமாரர் உண்டாகப் போகிறார், அவருக்கு இந்த ரஹஸ்யார்த்தங்கள் எல்லாத்தையும் வெளியிடும்” என்று உய்யக்கொண்டார்க்கு அருளிச்செய்ய, அப்படியே தாமெழுந்தருளியிருக்கையிலே ஆளவந்தார் திரு அவதரிக்கப் பெறாமையாலே ஶ்ரீபாதத்தில் மணக்கால் நம்பியை நியமிக்க, அவரும் அப்படியே ஆளவந்தாருக்கு ஸம்ப்ரதாயார்த்தங்களையெல்லாம் வெளியிட, ஆளவந்தாரும் “நாம் பிறவாதிருக்க முன்னமே தானே கருவிலே திருவுடையேனாம்படி விசேஷ கடாக்ஷம் பண்ணியருளி, ஸம்ப்ரதாயார்தங்களையும் வெளியிடுவித்து, பவிஷ்யதாசார்ய விக்ரஹத்தையும் காட்டி, அதுதன்னை ஸமகாலத்திலே கண்ணுக்கு இலக்காம்படி பண்ணியிருக்க, பின்னும் ஸத்வாரக ஸ்வப்னமுகேந எழுந்தருளி விஷயீகரித்து, இப்படிப் பண்ணின உபகாரங்களுக்கு நம்மால் செய்யலாவதேதென்று நாதமுனிகளுடைய செயலுக்குத் தோற்று அவர் பக்கலிலே தமக்குண்டான உபகாரஸ்ம்ருதி யாவதாத்மபாவியாய் நடக்குமென்னுமிடத்தை வெளியிட வேண்டி, “நாதமுனிகள் அறுதியிட்ட விஷயத்தினளவும் போகவேணுமோ? தாமறுதியிட்ட விஷயத்தைக் காட்டிக் கொடுத்த இவரே நமக்கு எல்லாம்” என்கைக்காகச் சொன்னாரித்தனை. நாதமுனிகள் நினைவேயாயிற்று. இவர்க்கு உள்ளோடுகிற நினைவு. நாதமுனிகளிடத்திலே பேற்றுக்குடலாக உபாயத்வத்தை அறுதியிட்டாராகில் ஆழ்வாரிடத்திலே 41. ‘ஸர்வம்’ என்று உபாயத்வம் சொல்லக் கூடாதிறே. ஆகையாலே

  1. मातापितायुवतयस्तनया विभूतिः
    सर्वंयदेव नियमेन मदन्वयानाम्
    आदस्य नः कुलपतेर्वकुलाभिरामं
    श्रीमत्तदड़िघ्रयुगलं प्रणमामी मुर्ध्ना

(மதந்வயாநாம் ஸர்வம் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா) என்று எல்லார்க்கும் தமக்கும் ஆழ்வார் திருவடிகளே உபாயமாக அறுதியிடுகையாலே, உடையவரே உத்தாரகரென்று அறுதியிட்டபடியிறே அங்கே. 38. (மதீயம் ஶரணம்) என்று தம்மை ஒருவரையும் சொல்லி உபாயத்வத்தைச் சொல்லுகையாலே, அவர் தமக்கு பண்ணின உபகாரத்துக்குத் தோற்று தத்ஸம்ருத்தி ஸூசகமாகச் சொன்னாரென்னுமிடம் ஸித்தம்.

9 – எம்பெருமானாரின் உத்தாரகத்வம் – 3

எம்பார் ஒரு ராத்ரி திருவீதியிலே குணானுபவத்துடனே உலாவியருளா நிற்க, பட்டர் பார்த்தருள, எம்பாரை ஸேவித்து – ஆசார்யத்வமும் த்விவிதமாய், தத்விஷய ஸ்வீகாரமும் த்விவிதமாயன்றோ இருப்பது; எதிலே தேவரீர் அறுதியிட்டிருப்பதென்ன. எம்பாரும் – க்ருபாமாத்ர ப்ரஸன்னாசார்யனே முக்யன்; பரகத ஸ்வீகாரமே பேற்றுக்கு உடல். இவை இரண்டையும் நான் எம்பெருமானாரிடத்திலே அறுதியிட்டிருப்பன். நீரும் ‘பெருமாள் நம்மை புத்ரஸ்வீகாரம் பண்ணியருளினார்: ஆழ்வானுடைய பிள்ளை; ஸகல வித்யைகளை அப்யஸித்தோம்; நமக்கென்ன குறை’ என்று இருமாந்திராதே என்னைப் போலே எம்பெருமானாரிடத்திலே உத்தாரகத்வ ப்ரதிபத்தி பண்ணி அவரே உத்தாரகரென்று நினைத்திரும் என்று அருளிச் செய்தார்.

பட்டரும் நஞ்சீயருக்குத் திருவாய்மொழி வ்யாக்யானம் அருளிச் செய்து சாத்தினவுடனே 42. ப்ரத்யக்ஷே குரவ: ஸ்துத்யா என்கிறபடியே நஞ்சீயர் பட்டரை மிகவும் கொண்டாடி, அடியேனுடைய தலையிலே தேவரீர் திருவடிகளை ப்ரஸாதித்தருள வேணுமென்ன, ஏகாந்தத்திலே அழைத்தருளி, திருவடிகளிரண்டையும் ப்ரஸாதித்தருளி, ”இதுவன்று உமக்குத் தஞ்சம். உம்முடைய ப்ரதிபத்திக்காகச் செய்தோமித்தனை. உமக்கு மெய்யே பேறு கைப்படவேண்டினால், உமக்கும் நமக்கும் மற்றுமுள்ள எல்லார்க்கும் உத்தாரகரான எம்பெருமானார் திருவடிகளே பேற்றுக்கு உடலென்ற விஶ்வஸித்துத் ததேகநிஷ்டராய் இரும். இல்லையாகில் நித்யஸம்ஸாரியாய் விடுவீர்” என்றருளிச் செய்தார். இத்தால் “எம்பெருமானாருடைய ஸம்பந்தமே உஜ்ஜீவனத்துக்கு உடல். தத்வயதிரிக்த விஷயங்களை உஜ்ஜீவனத்துக்கு உடலாக நினைக்கை அஜ்ஞான காரியம்” என்றபடி இவ்வர்த்தத்தை அமுதனார் அருளிச் செய்தார்- “இராமானுசன் நிற்க வேறு நம்மை உய்யக்கொள்ளவல்ல தெய்வம் இங்கியாதென்றுலர்ந்து அவமே ஐயப்படாநிற்பர் வையத்துள்ளோர் நல்லறிவிழந்தே” என்று “இராமானுசன் – வேறு நம்மை உய்யக்கொள்ளவல்ல தெய்வம்” என்கையால் எம்பெருமானாரை விட்டால் பின்னை உய்யக்கொள்ளவல்ல தெய்வமாகக் கண்டது எம்பெருமானேயிறே. இனி சரமபர்வமான எம்பெருமானார் எழுந்தருளியிருக்க, ப்ரதமபர்வமான எம்பெருமானைப் பற்றுகை அஜ்ஞான கார்யமென்றபடி.

ஆஸன்னமான சரமபர்வத்தைக் கைவிட்டு விப்ரக்ருஷ்டமான ப்ரதமபர்வத்தைப் பற்றுகை அஜ்ஞான கார்யமென்னுமிடத்தை த்ருஷ்டாந்த ஸஹிதமாக அருளிச் செய்தாரிறே. அருளாளப்பெருமாளெம்பெருமானார் “எட்டவிருந்தகுருவை” என்று.

“சரம பர்வத்துக்கு ஆளாகாதவன் ப்ரதம பர்வத்துக்கு ஆளாகான். ப்ரதம பர்வத்துக்கு ஆளாகாதவன் சரம பர்வத்துக்கு ஆளாவானிறே” என்று வங்கிபுரத்து நம்பி வார்த்தை “ததீயஶேஷத்வஜ்ஞானமில்லாதவனுக்குத் தச்சேஷத்வ ஜ்ஞானமும் இல்லையாய்விடும். பகவத் விஷயத்தில் ஜ்ஞானமில்லாதவன் தத்ப்ராப்த்யர்த்தமாக ஆசார்யோபஸத்தி பண்ணும். ஆசார்யாபிமான நிஷ்டன் ப்ரதமபர்வத்தில் கைவையான்” என்றபடி. அன்றிக்கே, “ஆசார்ய ஸம்பந்தம் குலைந்தவன் பகவத்க்ருதமான ஸ்வரூபஸங்கோசத்தை உடையனாம். ஈஶவராபிமானத்தைக் குலைத்துக் கொண்ட இவனுக்கு ஆசார்யாபிமானத்திலே ஒதுங்கவேணும். சரமோபாய நிஷ்டனுக்கு ஈஶ்வராபிமானம் வேண்டுவதில்லை” என்று இங்ஙனே பொருளாகவுமாம். இத்தால் “எம்பெருமானாரோடு ஸம்பந்தமில்லாதவனை ஈஶ்வரன் கைவிடும். ப்ரதமபர்வமான ஈஶ்வரன் தோஷ தர்சனந்தத்தாலே சேதனனை கைவிடும். சரமபர்வரான எம்பெருமானார் கைவிடுவதில்லை. எம்மெருமானாரோடு ஸம்பந்தமுண்டானவனுக்குப் பேற்றுக்கு உடலாக ஈஶ்வரன் கைபார்த்திருக்க வேண்டாவிறே” என்றபடி.

“தேவு மற்றறியேன் – மேவினேன் அவன் பொன்னடி மெய்மையே” என்றிருந்தால், பின்னை அங்ஙனல்லது இராதிறே. ‘பொன்னடி’ என்றருளிச் செய்தாரிறே. இப்படி ஸர்வ ப்ரகாரத்தாலும் ஸர்வர்க்கும் உத்தாரகர் எம்பெருமானாரேயாகக் குறையில்லை. இப்படி உத்தாரகரான எம்பெருமானாருடைய அபிமானத்திலே அந்தர்ப்பவியாதார் நித்ய ஸம்ஸாரிகளாய்ப் போருவர்கள்.

எம்பெருமானார் திருவடிகளிலே பொருந்தி வாழும் போது அவருடைய திருநாமத்தை அநுஸந்திக்கவேணுமிறே. எம்பெருமானாருடைய திருநாமோச்சாரணம் தத்பாத கமலப்ராவண்ய ஜனகமாக அருளிச் செய்தாரிறே. அமுதனார் – இராமாநுசன் சரணாரவிந்தம் நாம் மன்னிவாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே” என்று நாம் மன்னி வாழ அவன் நாமங்களைச் சொல்லுவோமென்கையாலே. அவன் நாமங்களைச் சொல்லாத போது பொருந்தி வாழக்கூடாது என்றபடி. பொருந்தி வாழும் போது அவன் நாமங்கள் சொல்லவேணுமென்கையாலே தந்நாமாநுஸந்தானம் தத்பாத கமலப்ராவண்ய (ஜநக?)மென்றபடி, இப்படி எம்பெருமானாருடைய திருநாமத்தை அநுஸந்தித்து அவர் திருவடிகளிலே பொருந்தி வாழுகிறவர்களுக்கு ப்ராப்ய ப்ராபகங்களிரண்டும் எம்பெருமானார் திருவடிகளேயிறே. “பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி அப்பேறளித்தற்கு ஆறொன்றுமில்லை மற்றச் சரணன்றி” என்று ப்ராப்ய ப்ராபகங்களிரண்டையும் அவர் திருவடிகளிலே அறுதியிட்டாரிறே அமுதனார். “பேறொன்று மற்றில்லை நின் சரணன்றி  ஆறொன்றுமில்லை” என்று அந்யயோக வ்யவச்சேதம் பண்ணுகையாலே சரமபர்வத்திலே ப்ராப்யத்வ ப்ராபகத்வங்களை அறுதியிட்டால், ப்ரதமபர்வத்திலே முதல் தன்னிலே வ்யுத்பத்திதானுமில்லையோ என்னும்படி ததேக நிஷ்டனாய் இருக்கவேணும் என்னுமிடம் தோற்றுகிறது. இத்தால் ஆசார்யபிமான நிஷ்டனாகில் மறுக்கலசாதபடி இருக்கவேணுமென்றபடி. இல்லையாகில் இருகரையர் என்னுமிடம் சொல்லப்படும்.

வடுகநம்பி, திருவோலக்கத்திலே சென்றால் எம்பெருமானாரை நோக்கி தண்டன் ஸமர்ப்பித்து ஒரு பார்ஶ்வத்திலே கடக்க நிற்பாராய், எம்பெருமானார் வடுகநம்பியை நம்முடைய மதுரகவிகள் என்றருளினாராம். ஆழ்வார்க்கும் ஒரு மதுரகவிகளுண்டிறே. இப்படி இருக்கையாலேயிறே இவர்க்கு ஆழ்வானையும் ஆண்டானையும் இரண்டிட்டுச் சொல்லலாயிற்று. ஒரு நாள் எம்பெருமானார் வடுகநம்பியை அழைத்தருளி, ‘வடுகா! ஆசார்யாபிமான நிஷ்டன் எத்தைப் போலே இருப்பான்’ என்று கேட்டருள ‘வேம்பின் புழுப்போலே இருப்பன்’ என்றருளிச் செய்தார். அதாவது – வேம்பின் புழு வேம்பன்றியுண்ணாது” என்கிறபடியே ஆசார்யனுடைய அபிமானத்திலே ஒதுங்கி இருக்கிறவன் பேற்றுக்கு உடலாக அறுதியிட்டிருப்பது தத் அபிமானத்தையொழிய வேறொன்றையும் பேற்றுக்கு உடலாக நினைத்திரான் என்றபடி. ‘கரும்பின் புழு’ என்று சொல்லுகையன்றிக்கே வேம்பின் புழுவை த்ருஷ்டாந்தமாகச் சொல்லுவானே என்னில் பரமதயாளுவான ஆசார்யன் தானே- தன் அபிமானத்திலே ஒதுங்கி இருக்கும் ஶிஷ்யனுக்குத் தன் பக்கல் (உள்ள) வைரஸ்யம் பிறக்கும்படி காதுகனான தஶையிலும், ‘நான் உன்னையன்றியிலேன்” என்கிறபடியே ததபிமானராஹித்யத்தில் ஸத்தையில்லை என்னும்படி “களைகண்மற்றிலேன்” என்கிறபடியே ததபிமான நிஷ்டனாயிருக்கவேணும் என்னுமிடம் தோற்றுகைக்காகச் சொல்லிற்று. இத்தால்- எம்பெருமானாருடைய அபிமானத்திலே ஒதுங்கிக் கரணத்ரயத்தாலும் ததேகநிஷ்டனாயிருக்கிறவன் தத்வயதிரிக்த விஷயங்களில் உத்தாரகத்வ ப்ரதிபத்தி பண்ணியிரான் – என்றபடி. ஸர்வோத்தாரகமான விஷயத்தைப் பற்றினால் தத்வயதிரிக்தரைக் கொண்டு தேவையில்லையிறே. “பல்லுயிர்க்கும் விண்ணின் தலை நின்று வீடளிப்பான் எம்மிராமாநுசன்” என்று எம்பெருமானாரை ஸர்வோத்தாரகராக அறுதியிட்டாரிறே ஸகல வேதஶாஸ்த்ரவித்தமரான அமுதனார்.

நம்பிள்ளை ஒரு நாள் எம்பெருமானார் ஸன்னிதியிலே எழுந்தருளி, நூற்றந்தாதி அநுஸந்தித்துச் சாத்தினவுடனே, எம்பெருமானார் திருமுக மண்டலத்தை ஸேவித்து, இன்றைக்கு அடியேனுக்கு ஒரு ஹிதமருளிச் செய்யவேணும் என்று திருமுன்பே அருளிச் செய்து திருமாளிகைக்கு எழுந்தருள, அன்றைக்கு ராத்ரியிலே எம்பெருமானார் ஸ்வப்ன முகேன எழுந்தருளி திருவடிகளிரண்டையும் நம்பிள்ளை திருமுடியிலே வைத்து, “உமக்கு ஹிதம் வேணுமாகில் இத்தையே தஞ்சமாக நினைத்திரும். உம்மையண்டினார்க்கும் இதுவே தஞ்சமாக உபதேஶித்துக் கொண்டு போரும்; இதுக்கு மேல் ஹிதமில்லை” என்று அருளிச் செய்ய, நம்பிள்ளை – நம்முடைய பிள்ளையை அழைத்தருளி அருளிச் செய்ய, பிள்ளையும் அத்தை அத்யாதரத்தோடே கேட்டருளி தந்நிஷ்டராய் எழுந்தருளியிருந்து, நம்பிள்ளை சரமதஶையிலே அடியேனுக்கு ஹிதமெதென்று கேட்கிறவளவில், “எம்பெருமானார் திருவடிகளுண்டாயிருக்க ஹிதமேதென்று கேட்க வேண்டியிருந்ததோ? அவருடைய அபிமானத்திலே அந்தர்ப்பூதராயிருக்கிற நமக்கெல்லாம் ஹிதத்துக்குக் கரையவேண்டா. எம்பெருமானார் திருவடிகளே தஞ்சமென்று விஶ்வஸித்துத் ததேக நிஷ்டராயிரும்; நான் பெற்றபேறு நீரும் பெறுகிறீர்” என்று அருளிச் செய்தார்.

10 – முடிவுரை

இப்படி எல்லாரும் உத்தாரகத்வேந அறுதியிடும்படி அவதார விஶேஷமாய், பரமகாருணிகராய் எழுந்தருளியிருக்கிற எம்பெருமானாருடைய அபிமானத்திலே அந்தர்ப்பூதராய் அவர் திருவடிகளையே ப்ராப்யப்ராபகமாக அறுதியிட்டுத் ததேக நிஷ்டராயிருக்கும் சரமாதிகாரிகளுக்கு வஸ்தவ்யபூமி – “இராமாநுசனைத் தொழும் பெரியோர் எழுந்திரைத்தாடுமிடம் அடியேனுக்கிருப்பிடம்” என்று அமுதனார் அருளிச் செய்கையாலே, எம்பெருமானார் பக்கல் ப்ராவண்யம் உடையரான ஜ்ஞாநாதிகர்கள் களித்து வர்த்திக்கும் இடமே வாஸஸ்தானம் என்றபடி. இங்கிருக்கும் நாள் அநுபவத்துக்கு விஷயமேதென்னில், “உவந்திருந்தேன் அவன் சீரன்றி யானொன்றுமுள் மகிழ்ந்தே” என்கையாலே எம்பெருமானாருடைய கல்யாண குணங்கள் தானே அநுபவத்துக்கு போக்யத்வேந விஷயம். “இராமாநுசன் மிக்க சீலமல்லால் உள்ளாதென் நெஞ்சு” என்கையாலே எம்பெருமானாருடைய அபரிச்சின்னமான ஶீலகுணத்தை நெஞ்சுக்கு விஷயமாக்குகை சரமாதிகாரிக்கு க்ருத்யம் என்றருளிச் செய்தபடியிறே. “இராமானுசன் தன் பிறங்கிய சீர் சாரா மனிசரைச் சேரேனெனக்கென்ன தாழ்வினியே” என்கையாலே, எம்பெருமானாருடைய ஔஜ்வல்ய கல்யாண குணங்களில் ப்ராவண்யமில்லாத கள்ளர்மிண்டரோடே ஸஹவாஸமின்றிக்கே இருக்கிறது சரமாதிகாரிக்கு ஏற்றமென்றபடி. “சேரேனெனக்கென்ன தாழ்வினியே” என்று தத்ஸஹவாஸராஹித்யம் ஆதிக்யாவஹமென்கையாலே தத்ஸஹவாஸம் அநர்த்தாவஹமென்றபடி. எம்பெருமானார் திருவடிகளில் ப்ராவண்யமுடையார் அதில்லாத மூர்க்கரோடு ஸஹவாஸம் பண்ணில் ஸ்வரூபஹானி பிறக்குமிறே. ”இராமாநுசன் புகழன்றி என்வாய் கொஞ்சிப் பரவகில்லாது” என்கையாலே எம்பெருமானாருடைய கல்யாண குணங்களே சரமாதிகாரிகளுக்கு வாசா அநுஸந்தேயமென்றபடி. “இராமாநுசன் மன்னுமாமலர்த்தாள் அயரேன்” என்கையாலே, எம்பெருமானார் திருவடிகளை மறவாதிருக்கை ததபிமான நிஷ்டனுக்கு கர்தவ்யம் என்றபடி. “அருவினை என்னை எவ்வாறின்றடர்ப்பதுவே” என்கையாலே தத்ஸ்மரணமே, அநிஷ்டநிவ்ருத்திகரம் என்றபடி தத்விஸ்மரணம் அநர்த்தாவஹம் என்னுமிடம் அர்த்தாத் ஸித்தம். ‘உன்தொண்டர்கட்கே அன்புற்றிருக்கும்படி என்னையாக்கி அங்காட்படுத்தே” என்கையாலே எம்பெருமானார் திருவடிகளுக்கு அநந்யார்ஹஶேஷபூதரான ஶ்ரீவைஷ்ணவர்கள் பக்கலில் பக்தியிருக்கும்படி தச்சேஷத்வத்தை எம்பெருமானார் திருமுன்பே ப்ரார்த்திக்கை ததபிமான நிஷ்டனுக்கு ஸ்வரூபம். “உன்தன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்……இவ்வருள் நீ செய்யில் தரிப்பன் இராமாநுச” என்கையாலே எம்பெருமானாருடைய விக்ரஹ குணங்களை ஸத்தாதாரகமாக நினைத்திருக்கை சரமாதிகாரிக்ருத்யம். “இராமானுசன் திருநாமம் நம்பவல்லார் திறத்தை” என்று தொடங்கி “செய்வன் சோர்வின்றியே” என்கையாலே எம்பெருமானாருடைய திருநாமத்திலே விஶ்வாஸயுக்தரான ஶ்ரீவைஷ்ணவர்களை மறவாத பாகவதர்கள் பக்கல் கரணத்ரயத்தாலும் ஸகலவித கைங்கர்யங்களும் வழுவில்லாமல் செய்து போருகை சரமாதிகாரிக்கு ஸ்வரூபம். எம்பெருமானாருடைய திருநாமத்தை விஶ்வஸித்துப் பரிஶீலனம் பண்ணாதார்க்குப் பேறு துர்லபமாயிருக்கும். “இராமாநுசன் திருநாமம் நம்பிக்கல்லார் அகலிடத்தோர் எது பேறென்று காமிப்பரே” என்று துர்லபமாக அருளிச் செய்தாரிறே அமுதனார்.

இந்த அர்த்தங்களெல்லாம் எம்பெருமானாருடைய திருமுகமண்டலத்தைப் பார்த்து அருளிச் செய்ய, அவரும் இதுக்கெல்லாம் இசைந்தெழுந்தருளியிருக்கையாலே இவ்வர்த்தம் அவிசார்யமாய் ஸுத்ருடமான ஸகல ப்ரமாண ப்ரமேய ப்ரஹ்மதீர்க்க (?) ரஸோக்தி – அநுஷ்ட்டாந ஸித்தம். இவ்வர்த்தம் 36. “ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்யம் யதிராஜோ ஜகத்குரு| ஸ ஏவ ஸர்வலோகாநாம் உத்தர்த்தா நாத்ர ஸம்ஶய: ||“, “இராமானுசன் மன்னுமாமலர்த்தாள் பொருந்தாநிலையுடைப்புன்மையினோர்க்கு ஒன்றும் நன்மை செய்யாப் பெருந்தேவரைப் பரவும் பெரியோர்தம் கழல் பிடித்தே” என்கையாலே எம்பெருமானார் திருவடிகளிலே ப்ராவண்யமில்லாதார்க்கு யாவதாத்மபாவி ஸம்ஸாரம் அநுவர்த்திக்கும். உடையோருக்கு யாவதாத்மபாவி ஸர்வாபீஷ்டங்களும் ஸித்திக்கும்.

சரமோபாய நிர்ணயம் முற்றிற்று

எம்பெருமானார் திருவடிகளே சரணம்
நாயனாராச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஜீயர் திருவடிகளே சரணம்

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.