[highlight_content]

சிறிய ரஹஸ்யங்கள் Part 2

சிறிய ரஹஸ்யங்கள் (Continued)

உடையவருக்கு திருக்கோட்டியூர் நம்பி அருளிச்செய்த

ப்ரமேய ஸாரம்

ப்ரபந்நனுக்கு பரிஹார்யம் ஆறு. ஆச்ரயண

விரோதி, ச்ரவணவிரோதி, அநுபவவிரோதி,

ஸ்வரூபவிரோதி, பரத்வவிரோதி, ப்ராப்திவிரோதி. இதில்

ஆச்ரயணவிரோதியாவது – அஹங்கார மமகாரமும்,

பலாபிஸந்தியும், புருஷகாரத்தையிகழ்கையும், பேற்றில்

ஸம்சயமும்; ச்ரவணவிரோதியாவது தேவதாந்தரகதா

விஷயங்களில் அவசமாகவும் செவிதாழ்க்கை:

அநுபவ விரோதியாவது போகத்ரவ்யம்கொண்டு புக்கு ஸ்நாநத்ரவ்யங்கொண்டு புறப்படுகிற விஷயாநுபவேச்சை;

ஸ்வரூப விரோதியாவது – தன்னை பரதந்த்ரனாகவிசையாதே

ஸ்வதந்த்ரனாகவிசைகை; பரத்வவிரோதியாவது – க்ஷேத்ரஜ்ஞரான ப்ரஹ்ம ருத்ராதிகளை ஈச்வரனாக ப்ரமிக்கை;

ப்ராப்திவிரோதியாவது-கேவலரோட்டைச்சேர்த்தி என்றும்;

பகவத் ப்ராப்திப்ரதிபந்தகம்-சரீரம், ஆத்மாத்மீயாநுவர்த்தந

ப்ரதிபந்தகம் – புத்ர மித்ராதிகள், பாகவதாநுவர்த்தந ப்ரதிபந்தகம் – இதரஸஹவாஸம், பகவச்சேஷத்வ ப்ரதிபந்தகம் – அஹங்காரம், உபாயாத்யவஸாய ப்ரதிபந்தகம் – மமகாரம், உபேயருசி ப்ரதிபந்தகம் – விஷயப்ராவண்யமென்றும், வ்யாக்ரஸிம்ஹங்களோபாதி

உபாயவேஷம், யூதபதியான மஹாகஜம்போலே உபேயவேஷமென்றும், ஸ்வரூபம் வாய்திறக்க வொட்டாது, விரோதி வாய்மூடவொட்டாது,

த்வரை நற்றரிக்க வொட்டாது என்றும், ஸ்வரூபம்

தனிபொறாது தேஹம் திரள் பொறாது என்றும், வ்ருத்தி  சோற்றோடேபோம். சோறு உடம்போடேபோம்,

உடம்பு மண்ணோடேபோம், ஆத்மா கர்மத்தோடேபோம்,

 ஈச்வரன் கண்ணநீரோடே போமென்றும்,சேதநனொன்றை நினைக்கும்போது ஈச்வரன் திருவுள்ளத்திலே ஆறுப்காரமாக நினைவுகூடினாலாய்த்து நினைக்கலாவது ; எவையென்னில் :- கர்த்ருத்வம்,காரயித்ருத்வம், உதாஸீநத்வம், அநுமந்த்ருத்வம்,

ஸஹகாரித்வம், பலப்ரதத்வம். இதில் கர்த்ருத்வமாவது-தான் முதல் நினைக்கை ; காரயித்ருத்வமாவது-அந்நினைவு இவனை

நினைப்பிக்கை; உதாஸீனத்வமாவது – நினைப்பிக்குமிடத்திலிவன்கர்மமடியாக நினைப்பிக்கை, அநுமந்த்ருத்வமாவது – இவன் நினைக்குமிடத்தில்

விலக்கவல்லவனாயிருக்கச் செய்தே

விலக்காதொழிகை ; ஸஹகாரித்வமாவது – சேதநனீச்வரனையொழிய வொருப்ரவ்ருத்தி நிவ்ருத்திக்ஷமனன்றிக்கேயிருக்கை ; பலப்ரதத்வமாவது – இவையித்தனையும் இவன் பண்ணின கர்மத்தினுடையபலமாம்படி பத்தும் பத்தாக வறுத்துத்தீற்றுகை

என்றும், ஸ்வரூபத்துக்கு ஸம்ஸரண யோக்யதை பரதந்த்ரசேதநத்வம்; ஸஹகாரி காரணம்-அநாத்யாஜ்ஞாதிலங்கநமாகிறவபராதம்; ப்ரதானகாரணம்-ஈச்வரனுடைய நிரங்குச ஸ்வாதந்தர்யம்;

ஸ்வரூபத்துக்கு பரமப்ராப்யமான கைங்கர்ய

யோக்யதை-சேஷத்வேஸதி சேதனத்வம். ஸஹகாரிகாரணம்

அனுகூலவ்ருத்திகளாகிற பக்தி ப்ரபத்திகள்; ப்ரதான

காரணம் ஈச்வரனுடைய ஸஹஜ காருண்யம் என்றும்,

ஜ்ஞானம் ஜ்ஞானத்தை விநியோகங் கொள்ளும்படி

என்னென்னில் – இவன் கரணத்வாரா விநியோகப்படும்; அவன் விக்ரஹத்வாரா விநியோகங்கொள்ளும்; ஜ்ஞானம் ஜ்ஞானத்துக்கு சேஷமானபடி என்னென்னில்யாதொன்றினுடைய ஸ்வரூப

ஸ்திதி ப்ரவ்ருத்திகள்யாதொன்றிலே கிடக்கிறது

அது சேஷியாகத் தட்டில்லை. இப்படியிருக்கிற

ஜ்ஞாநத்தை அவித்யை மூடினபடி என்னென்னில் –

கல்கலங்காதே நீர்கலங்குமித்தனையிறே. அப்ராப்தத்திலே கலங்குதல், ப்ராப்தத்திலே கலங்குதல்;ஜ்ஞானம் த்ரவ்யமாகையாலேயெப்போது மொக்ககலங்கியல்லதிராதிறே. ஸ்தூலத்திலே

ஸூக்ஷ்மமிருந்தபடியென்னென்னில் ஜ்ஞானேந்திரியங்களிலே வ்யாபித்து நிற்கும். ”சரீரம் யதவாப்நோதி

யச்சாப்யுத்க்ராமதீச்வர : | க்ருஹீத்வைதாநி ஸம்யாதி

வாயுர்கந்தா நிவாசயாத்’ என்கிறபடியே

வாயுகந்தத்தைக் கடிதாகக் கொண்டு போமாப்போலே,

இந்திரியங்களையும் ஸூக்ஷ்ம சரீரத்தோடே

 க்ரஹித்துக்கொண்டு போரா நிற்கும். ஸ்தூலம் விட்டபோதே

ஸூக்ஷ்மம் விடாதொழிவானென்னென்னில்,

ப்ராக்ருத தேசத்திலே அப்ராக்ருததேஹமில்லாமையாலே ;

இது யாதொரு தேசத்திலே விட்டது அது

அப்ராக்ருத தேசமாமித்தனை. இது கமன ஸாதனமாகையாலும்,

போகிற வழியிலுள்ள தேவஜாதிகள் இவனை ஸத்கரித்துத் தந்தாம் ஸ்வரூபம் பெறவேண்டுமாகையாலும், ஸூஷ்மம் விட்டால்

பன்னிரண்டு கோடி ஆதித்யர்கள் அழலைக் கழற்றியொளியைத் தோற்றினாப்போலேயிருக்கிறவிவன்தேஜஸ்ஸு

புறவெள்ளப்பட்டால் தேச தேசங்களிலுள்ளார் எதிரே நின்று

கிஞ்சித்கரித்து ஸ்வரூபம் பெறவொண்ணாமையாலுமிறே இது அவ்வருகுங் கிடக்கிறது ; அதவா- ராஜமஹிஷி அந்த:புரத்துக்குப்

போகும்போது தட்டுப்பாயிட்டு மூடியே போகை

ஸ்வரூபமிறே; அப்படியே தேவஜாதிகளும் “இடர்

கெட வெம்மைப் போந்தளியாயென்றும்,” “நீணகர்

நீளெரிவைத் தருளா” யென்றும், சொல்லிக் காரியம்

தலைக்கட்டினால் எதிரம்பு கோக்கும் மனஸ்ஸையுடையவர்களாகையாலே அப்படிப்பட்ட

ஹேயர்கள்கண்படாமல் போய் வைகுந்தத் திருவாசலிலேயிழிந்து தட்டுப்பாய் வாங்குமித்தனை. அதாவது-

ஸ்ரீவைகுண்டநாதனையுகப்பிக்கக்கடவ அப்ஸரஸ்ஸுக்கள், “சதம்மாலாஹஸ்தா: சதமஞ்ஜன

ஹஸ்தா: சதம்சூர்ணஹஸ்தா: சதம்வாஸோ

ஹஸ்தா: சதமாபரணஹஸ்தா:” என்றிவனையும்

உகப்பிக் கவந்தால் அவர்கள் முகத்திலேயிறே இவன்

விழிப்பது.ஸ்வரூபமிருக்கும்படிஜ்ஞாநமிருக்கும்

அவனுக்கப்பிலே கிடக்கை பாலே :அதாவது அவ

னுடைய ஜ்ஞாநாநந்தத்திலேயிவன் ஸத்தைகிடக்க,

அவனைத் தண்ணீர் தண்ணீர் என்னப் பண்ணுகிறது.

என்றும் உடையவர்க்குத் திருக்கோட்டியூர் நம்பி

அருளிச்செய்த ப்ரமேயஸாரம்.

ரஹஸ்ய த்ரய விவரணம்

ஓரொன்றிலநுக்தங்களாய், அவச்யம்ஜ்ஞாதவ்யங்களான

அர்த்த விசேஷங்களுக்கு விவரணமாகையாலே, அதிலே ரஹஸ்யத்ரயமும் ஒருவனுக்குஜ்ஞாதவ்யமாகக் கடவது.

எத்தை எது விவரிக்கிறதென்னில்-ஸவிபக்திகமான அகாரத்தை

அநத்தராக்ஷர த்வயம் விவரிக்கிறது; அவ்வக்ஷர த்வயத்தையும் மந்த்ரசேஷபதத்வயம் விவரிக்கிறது; அப்பதத்வயத்தையும்

த்வயத்தில் வாக்யத்வயம் விவரிக்கிறது. அவ்வாக்யத்வயத்தையும்

 சரம ச்லோகத்தில்அர்த்த த்வயம் விவரிக்கிறது; அதில் அகாரத்தை

அக்ஷரத்வயத்தில் ப்ரதமாக்ஷரம்விவரிக்கிறது; விபக்தியை அநந்தராக்ஷரம் விவரிக்கிறது: இதில்

ப்ரதமாக்ஷரத்தைப்ரதமபதம் விவரிக்கிறது: அநந்தராக்ஷரத்தை அநந்தரப்பதம் விவரிக்கிறது; இதில்

ப்ரதமபதத்தை ப்ரதமவாக்யம் விவரிக்கிறது ;

அநந்தர பதத்தை அநந்தர வாக்யம் விவரிக்கிறது: இதில் ப்ரதமவாக்யத்தை பூர்வார்த்தம் விவரிக்கிறது,உத்தரவாக்யத்தை உத்தரார்த்தம் விவரிக்கிறது ;

இதில் சேஷத்வப்ரதி ஸம்பந்தியைச் சொல்லுகிற அகாரத்துக்கு

அநந்யார்ஹ சேஷத்வ வாசகமான உகாரம் விவரணமானபடி எங்ஙனேயென்னில் , அகாரவாச்யனுடைய

சேஷித்வம் ஆச்ரயாந்தரங்களிலும் கிடக்குமோ,

அநந்ய ஸாதாரணமாயிருக்குமோவென்று ஸந்திக்தமானால் அதினுடைய அநந்ய ஸாதாரணத்வப்ரகாசகமாகையாலே

உகாரம்அகார விவரணமாகிறது. எங்ஙனேயென்னில், சொல்லுகிற

 சேதநனுடைய அநந்யார்ஹ சேஷத்வம் ஸித்திப்பது

அதுக்கு ப்ரதிஸம்பந்தியான சேஷித்வம் ஓரிடத்திலே

இளைப்பாறில். அங்ஙனன்றியிலே அனேகம் சேஷிகளாகில்

அநந்யார்ஹ சேஷத்வம் ஸித்தியாது.

                    அந்யராயிருப்பர் சில சேஷிகளுண்டாகில்

      அந்யசேஷத்வம்    ஸித்திப்பதொழிய அநந்யார்ஹ சேஷத்வம்

ஸித்தியாது. ஆகையாலே அகாரவாச்யனுடைய

ஸமாப்யதிக தரித்ரதை சொல்லிற்றாய்த்து சதுர்த்தியிற்

சொல்லுகிற சேஷத்வத்துக்கு ஆச்ரயவிசேஷ ப்ரகாசகமாகக்

கொண்டு விவரணமாகிறதுமகாரம். நிராச்ரயமாக தர்மத்தின்

ஸ்திதியில்லையே;பகவத் வ்யதிரிக்தரைத் தன்னோடு பிறரோடு

 வாசியறஅந்யராகச் சொல்லி அவர்களில் அந்யதமன்

சேதநனென்கிறது. உகாரத்தில் கழியுண்கிற தேவதாந்தராதி

மாத்ரத்தாலே அந்யசப்தத்துக்கு பூர்த்தியில்லாமையாலே

அவ்வந்ய சப்தத்தில் அந்விதனாய்த்

தன்னையுங் கழித்து அநந்யார்ஹதையைப் பூரிக்கிற

முகத்தாலே உகார விவரணமாகிறது நமஸ்சப்தம்.

அஹமபி நமம பகவத ஏவாஹமஸ்மி”என்கிற

படியே, ஸ்வரக்ஷணத்தில் ப்ராப்தியில்லாத அத்யந்த

பாரதந்த்ரயத்தைச் சொல்லுகிறது நமஸ்சப்தத்திலேயிறே.

ஆகையாலே உகார விவரணமாகிறது நமஸ்

சப்தம். சேஷத்வத்துக்கு ஆச்ரய விசேஷப்ரகாசகமான

மகார வாச்யனுடைய சேஷத்வபூர்த்தி

பிறப்பது “அகிஞ்சித்கரஸ்ய சேஷத்வானுபபத்தி:”

என்கிறபடியே கிஞ்சித்காரத்தாலேயாகையாலே

கிஞ்சித்கார ப்ரகாசகமாய்க் கொண்டு மகார விவரண

மாகிறது நாராயணாயபதம். அத்யந்த பாரதந்த்ர்ய

ப்ரயுக்தமாய் வருகிற உபாய விசேஷத்தினுடைய

ஸ்வரூபமென்ன, இதிலிழிகைக்கேகாந்தமான துறையென்ன,

இவ்வுபாய விசேஷமாகச் செய்ய வேண்டுமம்சமென்ன,

இவற்றை ப்ரகாசிப்பிக்கையாலே நமஸ்சப்த விவரணமாகிறது

த்வயத்தில் பூர்வவாக்யம்; கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியொரு

மிதுனமென்னுமிடத்தையும், அதுக்கு களையானவற்றையுங்

கழித்துத் தருகையாலே நாராயண சப்தத்துக்கு

விவரணமாகிறது உத்தரவாக்யம். அவ்வுபாயஸ்வீகாரம்

ஸாதனாந்தர நிவ்ருத்தி பூர்வகமாகையாலே

தத்ப்ரகாசகமாய்க் கொண்டு பூர்வ வாக்யத்துக்கு

விவரணமாகிறது பூர்வார்த்தம் ; உத்தரவாக்யத்திற்சொன்ன

ப்ராப்யஸித்தி விரோதி நிவ்ருத்தி பூர்வகமாகக்கடவதென்று விவரணமாகிறது உத்தரார்த்தம். ஸர்வாதிகாரமாயும்,

அதிக்ருதாதிகாரமாயும் அர்த்தத்ரயாத்மகமாயுமிருக்கும் இதில்

ஸ்ரீமந் என்கிற பதம் புருஷகாரம்,சரணம்ப்ரபத்யே’ என்கிற பதம்

அதிகாரி க்ருத்யம். நடுவில்நாராயண சரணௌ என்கிறபதம்

உபாயம். உபாயம்புருஷகார ஸாபேக்ஷமாயும், அதிகாரி

ஸாபேக்ஷமாயுமிருக்கும்; பலத்தில் வந்தால் அந்ய

நிரபேக்ஷமாயிருக்கும். உத்தரவாக்யமும் பதத்ரயாத்மகமாயிருக்கும். இதில் ஆயவென்கிறவிடம் கைங்கர்யத்தைச்

சொல்லுகிறது, இதுக்குக் கீழ் கைங்கர்யப்ரதிஸம்பந்தியைச் சொல்லுகிறது, மேலில் பதம் கைங்கர்யத்தில் களையறுக்கிறது.

ஆச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்

எம்பெருமானார் அருளிச்செய்த

 

ப்ரபந்த க்ருத்யம்

முழுக்ஷவாய் ப்ரபன்னனாயிருக்குமவனுக்கு

இருக்கும் நாளைக்கு காலக்ஷேபம் பண்ணும்

 ப்ரகாரமிருக்கும்படியெங்ஙனேயென்று உடையவர்

திருவடிகளிலே முதலியாண்டான் விண்ணப்பஞ்செய்ய, குரு

பரம்பரா பூர்வகமாக த்வயத்தை அநுஸந்தானம்

பண்ணுவான். உபய விபூதிநாதனாய் ச்ரிய:பதியான

ஸர்வேச்வரனும், நாச்சிமாரும், நித்யஸூரிகளுங்கூட எழுந்தருளியிருக்கும் பீட கட்டணமாயிருக்கும்

த்வயம். பெரியபெருமாள் திருவடிகளைப் பார்த்தவாறே,

 “பொது நின்ற பொன்னங்கழ” லென்கிற

படியே ஸர்வாத்மாக்களுக்கும் ஸாதாரணமாயிருக்கும்.

பெரிய பெருமாளை அபய ஹஸ்தராய்ப் பார்த்தவாறே,

அநந்ய சரணராயிருக்கிற ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே

அஸாதாரணமாயிருக்கும். பெரிய பெருமாள் திருமுக

மண்டலத்தைப் பார்த்தவாறே, நித்ய ஸூரிகளுக்கும்

ஸாதாரணமாயிருக்கும். ப்ராப்ய பரமான திரு மந்த்

ரார்த்தத்தைப் பெரிய பெருமாள் திருவடிகளிலே

அநுஸந்தானம் பண்ணுவான். ப்ராபகமான சரம ச்லோகத்தைப்

பெரிய பெருமாள் அபய ஹஸ்தத்திலே அநுஸந்தானம்

பண்ணுவான். இரண்டுங்கூடி போகரூபமான த்வயத்தைப்

பெரிய பெருமாள் திருமுகமண்டலத்திலே அநுஸந்தானம் பண்ணுவான். மத்ஸ்யத்தின் வடிவெல்லாம் ஜலமயமாயிருக்குமாப்போலே

இவள் அவன் ஸ்வரூபாதிகளுக்கு நிரூபக பூதையாகையாலே

அவயவமெல்லாம் ஸ்ரீமயமாயிருக்கும்,

”ஸ்ரீஞ்ஸேவாயாம்” என்கிற தாத்வர்த்தப்ரகாசகமாய்,

புருஷகார ஸ்வரூபமான ஸ்ரீ யென்கிற திருநாமத்தைப்

பெரிய பெருமாள் திருநன் மார்பிலே அநுஸந்தானம்

பண்ணுவான். மத் என்று இப் புருஷகாரம் நித்யமென்று

அநுஸந்நானம் பண்ணுவான். நாராயண

என்று ஆச்ரயண ஸௌகர்யாபாதகங்களான வாத்ஸல்யாதி குணங்களையும், ஆச்ரித கார்யாபாதகங்களான ஜ்ஞாநசக்த்யாதி குணங்களையும் உடையவவனென்று அநுஸந்தானம் பண்ணுவான். சரணௌ என்று பெரிய பெருமாள் திருவடிகளை அநுஸந்தானம் பண்ணுவான். சரணம் என்று சரண்யரான

பெரியபெருமாள் அபய ஹஸ்தத்திலே அநுஸந்தானம்

பண்ணுவான். ப்ரபத்யே என்று ப்ராப்தாவான

தன்னுடைய ஸ்வரூபானுரூப  ஸ்வீகாரமென்று அநுஸந்தானம் பண்ணுவான். ஸ்ரீமதே நாராயணாய வென்கிற பதங்களை

ஸ்வாமிநியாய், அவனுக்கு வல்லபையாய், ப்ராப்யையாய், கைங்கர்யவர்த்தகையாய் பகவந்முகோல்லாஸ

ஜநகையாய்,தத்ப்ரீத்யநுபவைகயாத்ரையாயிருக்கிற

பெரிய பிராட்டியோடே சேஷத்வ கார்யமான கைங்கர்ய ப்ரதி

ஸம்பந்தியாயிருக்கும் அவனுடைய தாரகத்வ வ்யாபகத்வ

நியந்த்ருத்வ ஸ்வரூபமென்ன, ஸ்வரூப குணங்களான

ஜ்ஞாநபலாதிகளென்ன, அதில் நின்றுமெழுந்த

வாத்ஸல்யாதிகளென்ன, திவ்யாத்ம தத்ஸ்வரூப குணப்ரகாசக

பஞ்சோபநிஷன்மய விக்ரஹங்களென்ன,

விக்ரஹ குணங்களான ஸௌந்தர்ய ஸௌகுமார்யாதிகளென்ன,

ஆச்ரித விரோதி விஷயமான சௌர்யாதிகளென்ன, திவ்யமங்கள விக்ரஹ ப்ரகாசகமான திவ்யாபரணங்களென்ன, ததநுபவ விரோதி

நிவர்த்தகமான திவ்யாயுதங்களென்ன, அவற்றிற்கநுரூபமான ஸ்ரீவைகுண்டத்திலே திவ்ய நகரியில் திவ்ய மண்டபத்திலே

 மற்றை திவ்ய மஹிஷிகளோடே திவ்ய பரிச்சதங்களாலே

ஸேவிக்க, ஸ்வாமித்வ ப்ரகாசகமாகவெழுந்தருளியிருக்கிற

விருப்பிலே அநுஸந்தானம் பண்ணுவான். ஆயவென்று அவன் சரண்யனாகையாலும், சேஷியாகையாலும், இவன் அடிசூடும்

அரசாகையாலும், சேஷமாகையாலும், ஸர்வவித

சேஷவ்ருத்திகளையும் பண்ணப்பெறுவேனாக வேணுமென்று

அநுஸந்தானம் பண்ணுவான். நம:-” த்வ்யக்ஷரஸ்து

பவேந்ம்ருத்யு:” என்றும், “மமேதித்வ்யக்ஷரோம்ருத்யு:” என்றும்,

”யானே யென்றன தேயென்றிருந்தேன்” என்றுஞ் சொல்லப்படுகிற

ம: என்கிற ஷஷ்ட்யந்தமான பதத்தை “த்ர்யக்ஷரம் ப்ரஹ்மண: பதம்’,

என்றும், “நமமேதிச சாச்வதம்’ என்றும், “யானே

நீயென்னுடைமையும் நீயே” என்றுஞ் சொல்லுகிற

நகாரார்த்த பலத்தாலே, நிஷேதித்து, ”தனக்கேயாக” வென்கிறபடியே, அத்தலையில் நினைவே நினைவாம்படி கீழ்ச்சொன்ன

ஸகல சேஷவ்ருத்திகளையுங்கொண்டருள வேணுமென்று

பெரிய பெருமாள் திருமுகத்தைப் பார்த்து அநுஸந்தானம் பண்ணுவான்

என்று அருளிச்செய்தார்.

சரம ரஹஸ்ய த்ரயம்

 

முமுக்ஷுவான சேதநனுக்கு மோக்ஷத்திலேயிச்சையுண்டாம்போது ரஹஸ்யத்ரயமறியவேணும்,ரஹஸ்ய த்ரயமாவது – திருமந்த்ரமும், த்வயமும்,சரமச்லோகமும். இவற்றுக்கு ப்ரகரணமென்றும்,

ப்ரயோஜனமென்றும் இரண்டாயிருக்கும்.இதில்

ப்ரகரணமறிகையாவது ரஹ்ஸ்யத்ரயத்திலுண்டானவர்த்த விசேஷங்களைப் பதங்கள் தோறும் ஸக்ரமமாகவறிகை.

ப்ரயோஜநமறிகையாவது – தாத்பர்யமறிகை. திருமந்த்ரத்துக்கு

 நாராயண பதமும்,த்வயத்துக்கு சரணபதமும் சரமச்லோகத்துக்கு

ஏசபதமும் தாத்பர்யமாயிருக்கும். இந்த பதத்ரயங்களிலுமுண்டான பரமார்த்தம் யதார்த்தமாகவறியவேணும் திருமந்த்ரத்தில் நாரப்பதத்திலே சேதநாசேதநங்களடைய வெல்லாஞசொல்லிற்றேயாகிலும்,

நாரபதத்துக்கு அவன் விக்ரஹத்திலேயூற்றமுமாயிருக்கும். விக்ரஹந்தானிரண்டு விதமாயிருக்கும்.அதாவது சேதந்மென்றும் அசேதநமென்றும், இதில்சேதனமென்கிறது நம்மாழ்வாரை. அசேதனமென்கிறது பரத்வாதிகளில் அவன் பரிக்ரஹித்த திவ்யமங்கள

தேஹங்களை.அதுக்குமிதுக்கும் நெடுவாசியுண்டு இது நினைவிலேயெழுந்திருந்து விநியோகப்படும்,

அதுக்கு இவன்தானறிந்து யத்நிக்க வேணும் அங்கு

போகவேளையாநந்தம் சரீரிக்கேயுள்ளது “அறிவாருயிரானாய் ”

என்கிறபடியே, இங்கு சரீரசரீரிகளிருவர்க்குமாநந்தமுண்டு. திருமந்திரத்தில் நாரபுதத்திலேஆழ்வாரை ஈச்வரனுக்குத்

திருமேனியாகவநுஸந்தித்து, அயநபதத்தாலே ஆழ்வாருக்கு

ஈச்வரனையுயிராகவநுஸந்திக்கை. அங்ஙனன்றிக்கே,

“என்னதுன்னதாவி” என்றும், ‘ஜ்ஞாநீத் வாத்மைவமேமதம் ”

என்றும் இவரை அவனுக்குயிராகவநுஸந்திக்கை. அங்ஙனன்றிக்கே ஈச்வரன் நினைவாலே ஸம்பந்தமறிகையாவது, சரீராத்ம ஸம்பந்தம்

போலே ஆழ்வாருக்கும் ஈச்வரனுக்குமுண்டான

ஸம்பந்தமென்றறிகை. சரீரத்துக்கும் கரணத்துக்குமுண்டான

ஸம்பந்தம் போலே ஆழ்வாருக்கும் நமக்குமுண்டான சம்பந்தமென்றறிகை. த்வயத்துக்குத் தாத்பர்யம் சரணபதத்திலே – ஆழ்வாரை ஈச்வரனுக்குத் திருவடிகளாகவநுஸந்தித்து, திருவடிகளை உபாயமாகப் பற்றும்போது ஆழ்வாரையேயுபாயமாக அநுஸந்தித்துப் பற்றவேணும். சரம ச்லோகத்தில், “ மாம் என்று

தன்னைத் தொட்டுக்காட்டி”ஏகம்” என்று கையும் ஜ்ஞாந முத்ரையுமாய்

ஆசார்ய பதத்தையேறிட்டுக்கொண்டிருக்கிறவென்னை ஒருவனையுமே உபாயமாகப் பற்றென்றுவிதிக்கையாலே, ஆழ்வார் ஓருவரையுமே

உபாயமாகப் பற்றவேணும். ஆழ்வாரைப் பற்றும்போது

அவர் திருவடிகளைப் பற்றவேண்டுகையாலே எம்பெருமானார் திருவடிகளோட்டை  ஸம்பந்தமேயிவ்வாத்மாவுக்குஜ்ஜீவனம். இதற்கு ப்ரமாணம் “கண்ணிநுண் சிறுத்தாம்பு ” ம், ” நூற்றந்தாதி ”யும்.

இவ்வர்த்தமறியாதவனுக்கு யாவதாத்மபாவி

ஸம்ஸாரமநுவர்த்திக்கும். இவ்வர்த்த நிஷ்டரானவதிகாரிகளுக்கு ஆழ்வார் ப்ரபத்தியும், உடையவர் ப்ரபத்தியும் நித்யாநுஸந்தேயமாகககடவது. இவ்வர்த்தம்ப்ரஸாதித்த ஆசார்யன் திருவடிகளே உபாயமாகக்கடவன.

ஆழ்வார் திருவடிகளே சரணம்

திருநகரிப் பிள்ளை ரஹஸ்யம்

பிள்ளை செண்டலங்கார தாஸர் திருநகரிப் பிள்ளை

ஸ்ரீ பாதத்திலே நெடுநாளபேக்ஷித்து ”ஒரு பத்த

சேதனன் முமுக்க்ஷுவாய் முக்தனாம் போது, ஸ்வரூபா

வேச வ்யாப்தியை ஸதாவாகவுள்ளவர்களுடையவபிமானமும்,

பகவத்பாகவதாசார்யாபிமான நிஷ்டர்

விஷயங்களில் மானஸ கைங்கர்யாநுஸந்தாதமுங்கூட

வேணுமென்று பலநாளுமருளிச் செய்யா நின்றது,

அடியேனுக்கு அவை கூடும்படியெங்ஙனேயோஅறிகின்றிலே ‘,னென்று விண்ணப்பஞ் செய்ய,ஆகிலிவ்வர்த்தத்தையொருவருக்குஞ்

சொல்லாதே கொள்ளு ‘ மென்று தம்முடைய ஸ்ரீ பாதத்தைத் தொட்டு ஆணையிடுவித்துக்கொண்டு அங்கீகரித்து, பூர்வாசார்யர்கள் தங்களுக்குத்தஞ்சமாகவநுஸந்தித்தும், தங்களைப் பற்றினவர்களுக்கும் குஹ்யதமமாகவுபதேசித்தும் போருவன சிலவர்த்த

விசேஷங்களுண்டு. அவையெவையென்னில் – வஸ்து நிர்த்தேசமும், உபாய நிர்த்தேசமும், உபேய நிர்த்தேசமும்

இனியிவைதன்னை நிர்த்தேசிக்கும்போது ப்ரமாணங்கொண்டே நிர்த்தேசிக்க வேண்டுகையாலே, இவ்வர்த்த விசேஷங்களுக்கு

நிர்ணாயகப்ரமாணத்தன்னை ப்ரதமத்திலே நிர்ணயித்துக்

கொள்ளவேணுமிறே. அதாவது அபௌருஷேயமாய், நித்ய

நிர்த்தோஷமாய், அகில ப்ரமாணோத்க்ருஷ்டமான

வேதத்துக்கு ஸங்க்ரஹமான திருமந்த்ரத்திலும், அதினுடைய விவரணமான ரஹஸ்ய த்வயத்திலுமுண்டானவர்த்த

விசேஷங்களை ப்ரதிபாதியாநின்றுள்ள

ஆழ்வார்கள் அநளிச்செய்த த்ராவிட வேதத்துக்குக்

கருத்துமறிவிக்கும் ஆசார்யர்கள் தங்களுக்குத்

தஞ்சமாக நினைத்திருக்குமதாய், ரஹஸ்யத்திலும்

ஆர்த்தமாக மறைத்து உபதேசிக்கக்கடவ அர்த்த

விசேஷங்களை சாப்தமாக ப்ரதிபாதிக்கையாலே, இவ்வர்த்த விசேஷங்களுக்கு நிர்ணாயகமான ப்ரமாணம்

” கண்ணிநுண் சிறுத்தாம்பு . ” ஆயிருக்கும்.

இனி வஸ்து நிர்த்தேசமாவது – இந்த ப்ரமாணப்ரதிபாத்யரான நம்மாழ்வாருடைய ஸ்வரூபத்தையுள்ளபடியுணர்ந்து, இவரே நமக்கு தாரகரென்று ஸ்ரீ மதுரகவிகள் போல் அறுதியிடுகை. அது

செய்யுமிடத்தில் இதுக்கு ப்ரமாணம் மூலமந்த்ரமாகையாலும்,

“மிக்க வேதியர் வேதத்தினுட்பொருள் நிற்கப் பாடி

யென்னெஞ்சுள் நிறுத்தினான்” என்றிவர் தாமே

அருளிச் செய்கையாலும் இதற்கு வரலாறு திருமந்த்ரங்

கொண்டே அறுதியிடவேணும். அது நாராயணாயவென்று

சொல்லா நிற்கவிறே, அதினுடையவர்த்தாநுஸத்தாநம்

பண்ணுகிறவிவரும் “தேவுமற்றறியேன்” என்றதும், திருமங்கையாழ்வாரும், ” நின் திருவெட்டெழுத்துங்கற்று

நானுற்றது உன்னடியார்க்கடிமை” ,என்றதும். இவர்களிப்படி சொல்லுகைக்கடி ஸர்வேச் வரனுடைய நாராயணத்வபூர்த்தியுள்ளபடி யறிந்துபற்றினவூற்றமிறே! அல்லது நாராயணாயவென்று

சொல்லாநிற்கமந்த்ர சரீரத்திலேவ்யக்தமாகச்

“தேவுமற்றறியேன்” என்பது “ அடியார்க்கடிமை” ,என்பதாக

வொண்ணாதிறே. இத்தனையுமறிய வேண்டுவது

உஜ்ஜீவனாம்சத்துக்கு நாராயணத்வபூர்த்தியாவது

தானேதென்னில் நாராயணபதம்,நாரபதத்தாலே பகவத் வ்யதிரிக்த ஸமஸ்த பதார்த்தங்களையும், அயந சப்தத்தால ததாச்ரயமான

பகவத் ஸ்வரூபத்தையும் ப்ரதிபாதியாகொண்டு யோகரூடி

ந்யாயத்தாலும், ஸாதாரணமாயும், அஸாதாரணமாயுமிருக்கும்.

இதிலேவஸ்து நிர்த்தேசம் பண்ணும்போது ஸாதாரணத்துக்கும், அஸாதாரணத்துக்கும் வாசியறிய வேணும்.

ஸாதாரணமாவது விதிசிவாதிகளான அஹங்காரயுக்த ஜீவர்களை யதிஷ்டித்துக் கொண்டு அஹங்காரயுக்த ஜீவர்களுக்கந்தர்யாமியாய் நின்றுகொண்டு,அவர்களைச் சொல்லுகிற வாசகத்தாலே தன்னைச்

சொல்லலாம் படியாக நிற்கும் நிலை ; அதாகிறது “நான்

முகனே முக்கண்ணப்பா” வென்று ஸம்போதிக்கலாம்படியிருக்கை.

இனி அஸாதாரணமாவது – அப்ராக்ருதமாய் சுத்த ஸத்வமயமாய், இச்சாக்ருஹீதமான திவ்யவிக்ரஹத்தோடே கூடியிருக்கிறவிருப்பு.

இவ்விரண்டிலும் நாராயணத்வ பூர்த்தியில்லை.

இனி ஸாதாரணபரமான விதிசிவாதிவ்யக்திகள் போலே

அஹங்காரயுக்தமாயிருத்தல், அஸாதாரணமான திவ்ய

விக்ரஹம்போலே நினைவறியாதிருத்தல் செய்கையன்றிக்கே, “தனக்கேயாக” என்கிற அத்யந்த பாரதந்த்ர்யத்தாலே. “உந்தன்

திருவுள்ள மிடாகெடுந்தோறும் நாங்கள் வியக்கவின்புறுதும் “ என்று நினைவறிந்து பறிமாறவல்ல வ்யக்தி ப்ராதாந்யத்தாலும்,

அஸாதாரண திவ்ய விக்ரஹத்திலும் அவனுகந்த அந்தரங்க

சரீரம் ஆழ்வாராயிருக்கும்.

ஈச்வர ஸ்வரூபந்தான் பரத்வம், வ்யூஹம்,விபவம்,

அந்தர்யாமித்வம், அர்ச்சாவதாரம் ஆசார்யத்வமென்று ஆறு ப்ரகாரத்தோடே கூடியிருக்கும். அதில் பரத்வாதிகளைந்திலும், தத்வத்ரயத்தினுடைய வைசிஷ்ட்யமில்லாமையாலே

நாராயணத்வ பூர்த்தியில்லை. இனி ஆசார்யத்வமென்று

கீழ்ச் சொன்னதிலேயாய்த்து நாராயணத்வம் பூர்ணமாவது.

கேவலம் ப்ராக்ருதமான திவ்ய விக்ரஹமொன்றோடுங் கூடியிருக்கையாலே தத்வத்ரயத்தில் அசித்தத்வமொன்றோடுங் கூடியிருக்கிற விருப்பிறே. இது அங்ஙனன்றிக்கே, ஆழ்வாரையும்,

அவர் திருமேனியையும் இரண்டையும் தனக்கு விக்ரஹ்மாகக்கொண்டு, அவருடைய அஹந்தை தன்னுடைய அஹந்தையிலே

அந்தர்ப்பூதமாம்படியிருக்கிற விருப்பிறே. ”யானுந்தானா யொழிந்தானே, தானேயானென்பானாகி, தானேயாகி நிறைந்தானே” என்று

தத்வத்ய விசிஷ்-மாயன்றோ ஜகத்துமிருப்பதென்னில்?

அங்ஙனே சொல்லவொண்ணாது-வ்யவஸ்திதமாயிருக்கையாலே பிராட்டிமாரெல்லாம் ஒத்திருக்கச்செய்தே பெரிய பிராட்டியார்

அவன் ஸ்வரூபாதிகளுக்கு நிரூபகபூதையாய், ப்ரதாந

மஹிஷியாய்,திருவின்னிழல்போலேயாம்படி அல்லாதவர்கள்

தனக்கு சாயாபரதந்த்ரராம்படி வ்யாவ்ருத்தையாயிருக்கிறாப்போலே இதுவும் இவ்விஷயத்துக்கே வ்யவஸ்திதம். மற்றையாழ்வார்கள், இவர்க்கு அவயவபூதர். இது “முடியானே” யிலே ஸுஸ்பஷ்டம்.

இவ்வாழ்வாருக்குமித்தனை ப்ரகாரமுண்டு, நாச்சிமாரோடே

ஸர்வதா ஸாதாச்யமுண்டு ; “பின்னைகொல்”

இத்யாதிப்படியே, ஆழ்வாருக்கும் ஈச்வரனுக்கும்

உண்டான ப்ரகாரிப்ரகாரஸம்பத்தைக்யத்தை யதாதர்சனம்

பண்ணினாலாய்த்து, “தேவுமற்றறியேன்”,என்னலாவது.

ஆகவீப்படி ஆழ்வாருக்கும் ஈச்வரனுக்குமுண்டான

ஸம்பந்தைக்யத்தை யதாதர்சனம்பண்ணி ”தேவுமற்றறியேன்”

என்னுமதிகாரிக்கும் எம்பெருமானாரைப் பற்றவேண்டுகிறது.

ஆழ்வாரைப் பற்றும்போது, அவர் திருவடிகளைப்பற்றவேண்டுகையாலே, “மேவினேனவன்பொன்னடி” என்று ஸ்ரீ மதுரகவிகள் ஆழ்வாரை விட்டு,

எம்பெருமானாரையூன்றுகைக்கடி – தத்தர்ம்யைக்யத்தாலே ஏக விஷயமாகையாலும், ப்ரயோஜனாம்சத்திலே நிற்கவேண்டுமாகையாலும், ”பாவினின்னிசை

பாடித்திரிவன்” “கரியகோலத் திருவுருக்காண்பன் ”

“எண்டிசையுமறிய வியம்புகேன்” என்று பாரித்தபடியே,

“தீதில் நன்னெறி காட்டியெங்குந், திரிந்தரங்கனெம்மானுக்கே

காதல் செய்து” ஆழ்வார் க்ருபையையே ஸுப்ரஸித்தமாக்குவதாக அவதரித்தபடியிறே. ‘பாமன்னுமாறனடி பணிந்துய்ந்தவன் பல்

கலையோர் தாம்மன்னவந்தவிராமானுச ‘னிறே. பகவத்

க்ருபையையும், ஆழ்வார் க்ருபையையும் சீர் தூக்கித்

பார்த்தால் “பாடினானருள்கண்டீரிவ்வுலகினில் மிக்கதே”

என்று ஆழ்வார் க்ருபைவிஞ்சியிருக்குமாப்போலே ஆழ்வார் க்ருபையையும், இவருடையக்ருபையையும் தனித் தனியே விகல்பித்தால் ”உன்னருளின்கணன்றிப் புகலொன்றுமில்லை’

என்னும்படியான க்ரூபா வைபவத்தாலும், ”ஆரானுமாதானுஞ்

செய்ய அகலிடத்தை யாராய்ந்தது திருத்தலாவதே” என்று

சேதநருடைய அவிதேயதையைக்கண்டு மீளுகையன்றிக்கே,

”அவர்பின் படருங்குண” னென்று ஸர்வாவஸ்தையிலும்

சேதனரைக் கைவிடமாட்டாத வாத்ஸல்யத்தாலும்,

பெருவருத்தத்தோடேலபித்த பரமார்த்தத்தைச் சேதனருடைய துர்க்கதிகண்டு பொறுக்கமாட்டாமல், தம்மையழியமாறியுபதேசித்

தருளுகையாலும், “உபய விபூதியையும் நீரிட்ட வழக்காகத்தந்தோ ” மென்று பெருமாள் ப்ரஸாதித்தருளப்பெற்ற உடையவராகையாலும், ஸர்வாத்மாக்களையுடையராகையாலே “உடையவ” ரென்று

நிரூபகமாகையாலும், ஆழ்வார் திருவடிகளில் ஸம்பந்த

முணர்ந்தவர்களெல்லொரும் எம்பெருமானாரே தங்களுக்குத்

தஞ்சமாக நினைத்திருப்பார்கள். இதுதான்- ஈச்வர ஸம்பந்தம் பொலே பந்தமோக்ஷங்களிரண்டுக்கும் பொதுவாயிருக்கையன்றிக்கே,

மோக்ஷத்துக்கே ஹேதுவாயிருக்கும். ஆகையிறே

”ஞானப்பிரானை யல்லாலில்லை” திருக்குருகூ ரதனையுளங்கொள் ஞானத்து வைம்மின் ” என்று தாமேயருளிச்செய்தது.

ஆசார்யபதமென்று ஒன்றுண்டு. அதுள்ளது

எம்பெருமானார்க்கே. எம்பெருமானார் திருவடிகளே

தஞ்சமென்றாய்த்து வடுகநம்பியுபதேசித்தருளுவது,

எம்பெருமானார்க்கேயென்றது ஆழ்வார் திருவடிகளில்

ஸம்பந்தைக்யத்தாலே, அவர் தமக்கடியேதென்னில் – கீழ்ச்சொன்ன நாராயணத்வ பூர்த்தி. இப்படி வஸ்துநிர்த்தேசம் பண்ணினவதிகாரிக்கு அநிஷ்டமான ஸம்ஸார நிவ்ருத்திக்கும், இஷ்டமான பகவத்ப்ராப்திக்கும் அநுரூபமான வுபாயம் அநவரதமபேக்ஷிதமாயிருக்குமிறே.

ஸ்ரூபத்துக்கும், ப்ராப்யத்துக்கும் சேர்ந்திருக்கவேணுமிறே ப்ராபகம். ” தேவுமற்றறியேன் ” என்று ஆசார்ய விஷயத்திலேயூன்றி, அவனுக்கு கரணவத்பரதந்த்ரனாகத் தன்னை யநுஸந்தித்திருக்குமவனுக்கு

உபாயம் ஆசார்யன் பண்ணின ப்ரபத்தியே யாகக்கடவது.இவனுக்குத் தனித்து சரணவரணம் பண்ணவேண்டுவதில்லை. பண்ணினானாகில் ஸம்பந்தங்குலையும். கரணந்தான் தனக்கு ரக்ஷண சிந்தை பண்ணாதே.அநாதிகாலம்ஸ்வாபிமானத்தாலே,ஈச்வராபிமானத்தைக் குலைத்துக் கொண்டவிவனுக்கு ஆசார்யாபிமானமொழிய

கதியில்லை. ஸ்வாபிமானமாவது – கரணவத் பரதந்த்ரனாய்

ஒருவனபிமானத்திலேயந்தர்ப்பூதனாயிருக்கக்கடவவிவன்,

தன்னை ப்ருதக்ஸ்திதிபண்ணி, தனக்கென்று ஒருபுருஷார்த்த முண்டாகவும் நினைத்து, தத்ப்ராப்த்யுபாயம் ஈச்வரனேயென்றிருக்கை. ஆசார்யாபிமானமொழிய கதியில்லையென்றிருக்கையாவது – தன்

பேற்றுக்குத் தானொரு ப்ரபத்தி பண்ணுகையன்றிக்கே,

அவன் பண்ணின பரபத்தியே தனக்குபாயமாகக்கொண்டு,

தன்னையவனுக்கு கரணவத் பரதந்த்ரனாகவநுஸந்திக்கை. “தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேலது காண்டும் தங்கள்

தேவரையேத்தியிருப்பாரை வெல்லும் வகையது கொண்டு, “நாதமுனிம்

விலோக்ய ப்ரஸீத.” உபேய நிர்த்தேசமாவது – ஆசார்யமுகோல்லாஸ ஹேதுவான கைங்கர்யமே புருஷார்த்தமென்றிருக்கை. “திரிதந்தாகிலும் ”

இவ்வர்த்த விசேஷங்களையுபதேசித்தவாசார்ய விஷயத்திலே யுபகாரகத்வ ப்ரதிபத்தி. ஆழ்வார் திருவடிகளானவெம்பெருமானார் விஷயத்திலே,யுத்தாரகத்வப்ரதிபத்தி. இவ்வர்த்தோபதேசம்

பண்ணினவாசார்யன், எம்பெருமானார்க்கே கரணவத்

பரதந்த்ரனாகையாலே அந்த ஐக்யத்தாலும்,ஒரு காலத்துக்கு ஒரு சேதநன்முகே நின்று, சேதநனுக்கு அஜ்ஞாத ஜ்ஞாபனம்பண்ணி

அங்கீகரித்தருளுவரென்கிறவுபதேசத்தாலும், அவ்வோவ்யக்தி

விசேஷங்கள் தான் ஜ்ஞாநாநுஷ்டாந பரிபூர்த்தியாலே,

இதர விஸஜா தீயமாய்த் தோற்றுகையாலும், எம்பெருமானார் திருவடிகளில் ஸம்பந்தத்தையுணர்த்தினவளவிலே கேவலமுபகாரகத்வ ப்ரதிபத்தியேயன்றிக்கேயுத்தாரகரென்று அநுஸந்திக்கக் குறைவில்லை.

இவ்வர்த்த விசேஷங்கள் தான் பலருடைய ஹ்ருதயத்தளவிலே யுண்டாயிருந்ததேயாகிலும், ஆசார்யத்வ பூர்த்தியுமுள்ளது,

அவ்வக்காலங்களுக்கு ஒருவ்யக்தி விசேஷங்களிலேயாயிருக்கும். அவ்வோவ்யக்தி விசேஷங்கள் தான் ஜ்ஞாந பக்தி வைராக்யங்களாலே தற்காலத்தில் அத்விதீயமாயிருக்குமென்றுபிள்ளை

பலகாலுமருளிச்செய்வர். இவ்வர்த்த விசேஷங்களையதாதர்சனம் பண்ணியிதுவே தஞ்சமென்றிருக்குமதிகாரிக்கு

ரஹஸ்யத்ரயமநுஸந்தேயம்.

திருநகரிப்பிள்ளை ரஹஸ்யம் முற்றிற்று

ஸாரார்த சதுஷ்டயம்

எங்களாழ்வான் ஸ்ரீபாதத்திலே அம்மங்கியம்மாள் சென்று தண்டனிட்டு,  ‘அடியேனுக்கு தர்சநமிருக்கும்படி அருளிச் செய்யவேணும்’ என்று

விண்ணப்பம் செய்ய, எங்களாழ்வானும் ‘ தர்சநாந்தரங்களை

நிரஸிக்கவோ, ஸ்வதர்சநஸ்தாபநம் பண்ணவோ,

தர்சனமிருக்கும்படியைக் கேட்கவோ செய்ய, இவரும்

‘ தர்சநாந்தரங்களை நிரஸிக்கவும்ஸ்வதர்சநஸ்தாபநம்

பண்ணவும் தேவரீர் எழுந்தருளியிருந்தீர். அடியேனுக்கு

தர்சநமிருக்குப்படியை அருளிச் செய்யவேணும் ” என்ன,

 எங்களாழ்வான்அம்மங்கியம்மாளுக்கு அருளிச்செய்த

ஸாரார்த்த சதுஷ்டயம்-

எம்பெருமானார் திருவடிகளே சரணமென்றிருக்கும்

நம் பூர்வாசார்யர்கள், தங்களுக்குத் தஞ்சமாகவும்

உத்தாரகமாகவும் போக்யமாகவும் போகமாகவும் அநுஸந்தித்தும் உபதேசித்தும்போருவது நாலிரண்டு அர்த்தம் உண்டு.

அவையாவன-ஸ்வரூபஜ்ஞாநமென்றும்,ஸ்வரூபயாதாத்ம்ய ஜ்ஞாநமென்றும் விரோதிஜ்னூதமென்றும்

விரோதியாதாத்ம்யஜ்ஞாநமென்றும் பலஜ்ஞாநமென்றும்

பலயாதாத்ம்யஜ்ஞாநமென்றும் உபாயஜ்ஞாநமென்றும்

உபாய்யாதாத்ம்யஜ்ஞாநமென்றும்.இதில்

ஸ்வரூபஜ்ஞா நமாவது-ஜ்ஞா நா நந்தங்களும்

புறவிதழென்னும்படி பகவததந்யார்ஹ சேஷத்வமே

ஸ்வரூபமென்றிருக்கை. ஸ்வரூபயாதாத்ம்யஜ்ஞாமாவது- பகவதநந்யார்ஹ சேஷத்வம் புறவிதழென்னும்படி

பாகவதசேஷத்வமே ஸ்வரூபமென்றிருக்கை. விரோதிஜ்ஞா நமாவது–பரம பாகவதவிச்லேஷத்தில் நெஞ்சழியாத நினைவு. விரோதியாதாத்ம்ய ஜ்ஞாதமாவது–வருந்தியும் ஒரு பாகவதனோடே ஸம்ச்லேஷிக்கத் தொடங்கி அவன்பக்கல் தோஷாரோபணம் பண்ணுகை. பலஜ்ஞாநமாவது–ஒரு பாகவத நியமநத்தை வெறுத்தல் பொறுத்தல் செய்கையன்றிக்கே,விஷயப்ரவணனுக்குப் படுக்கைத்தலையிலே விஷய

பாருஷ்யம் போக்யமாமாப்போலேயாகிலும் போக்யமென்றிருக்கை. பலயாதாத்ம்யஜ்ஞாநமாவது-ஆர்த்தப்ரபத்தியைப் பண்ணி அக்கரைப்பட இருக்கச்செய்தே, மாதாபிதாக்களுங்கூட அநாதரிக்கும் படியான

ஆர்த்தியையுடைய ஸ்ரீவைஷ்ணவர்களைக் கண்டு, அவர்கள் ரக்ஷணத்துக்கு உறுப்பாக இங்கேயிருக்கையிலே ஒருப்படுகை

உபாய ஜ்ஞநமாவது – ஸம்பந்தஜ்ஞாநம். ஸம்பந்தஜ்ஞாநம்தான்

ஸம்பந்தஜ்ஞாநமென்றும் ஸம்பந்தயாதாத்ம்ய ஜ்ஞாநமென்றும்

ஸம்பந்தஸ்வரூபஜ்ஞாநமென்றும் ஸம்பந்த ஸ்வரூபயாதாத்ம்யஜ்ஞாநமென்றும் . இதில்

ஸம்பந்த ஜ்ஞாநமாவது- அவனுடைய நிருபாதிக

சேஷித்வத்தையும் தன்னுடைய நிருபாதிக சேஷத்

வத்தையும் தெளியவறிகை. ஸம்பந்தயாதாத்ம்யஜ்ஞாநமாவது – அவனுடைய நிருபாதிக சரீரித்வத்தையும் தன்னுடைய

 நிருபாதிகசரீரத்வததையும் தெளியவறிகை. ஸம்பந்தஸ்வரூபஜ்ஞாநமாவது அவனுடைய நிருபாதிக தர்மித்வத்தையும் தன்னுடைய

நிருபாதிக தர்மத்வத்தையும் தெளியவறிகை.

ஸம்பந்தஸ்வரூபயாதாத்ம்ப ஜ்ஞா நமாவது- தர்மிதர்மங்களுடைய ஐக்யத்தைத் தெளியவறிகை. விசிஷ்ட வேஷத்தில் அவனேயாய் தானில்லையாம்படியிருக்கை, உபாய யாதாத்ம்யஜ்ஞாநமாவது

தந்நிஷ்டை; அதாவது – சேஷத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும்

ஜ்ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும், கர்த்ருவத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும், போக்த்ருத்வத்தில் கர்த்ருத்வ நிவ்ருத்தியும் பிறக்கை. சேஷ்த்வத்தில் கர்த்ருத்வமாவது – ராஜஸக்தியையிட்டு ஜகத்தைப்

பீடிக்கும் மந்த்ரிகளைப்போலே பகவதாஸக்தியையிட்டு ஸதாசாரத்தை நெகிழுகை. அதாவது- சப்தாதி விஷய ஸ்பர்சத்தில் அச்சமும் பகவத் பாகவத கைங்கர்யத்தில் ஆசையும் விளையாதொழிகை. தந்நிவ்ருத்தி

யாவது–ப்ராமாதிகமான விஷ்யஸ்பர்சத்தில் அச்சமும்

ப்ராமாதிகமான கைங்கர்யவிச்லேஷத்தில் ஆர்த்தியும்விளைகை. ஜ்ஞாத்ருத்வத்தில் கர்த்ருத்வமாவது – நாம்

ஜ்ஞாதாவானவாறேயன்றோ நம்மை அவன் பரிக்ரஹித்தது என்று தன் ஜ்ஞாத்ருத்வத்தையிட்டு இறுமாக்கை, தந்நிவ்ருத்தியாவது – தேஹாத்மாபிமாநிகளிலும் கடையாய், அவித்யாபரனாய் முதலழித்துக்

கொண்டு போந்தவென்னை இரும்பைப் பொன்னாக்குவாரைப்போலே. அவன் தானே அஜ்ஞாநத்தைப்போக்கி ஜ்ஞாநத்தைத் தந்தானென்றறிகை, கர்த்ருத்வத்தில் கர்த்ருத்வமாவது – நாம் நிஷித்தங்களைவிட்டு விஹிதங்களைப் பற்றினவாறேயன்றோ நம்மை அவன் அங்கீகரித்தான் என்று தன் ப்வருத்தி நிவ்ருத்தியையிட்டு இறுமாக்கை. தந்நிவ்ருத்தியாவது- நம் வ்யாபாரமொன்றுமில்லை. மரப்பாவையை ஆட்டுவிப்பாரைப் போலே அவன் தானே நிஷித்தங்களில்

நின்றும் விடுவித்து விஹிதங்களைப் பற்றுவித் தான் என்றிருக்கை, போக்த்ருவத்தில் கர்த்ருத்வமாவது- நாம் அவனுக்கு அடிமை செய்கிறோமென்றிருக்கை. தந்நிவ்ருத்தியாவது – தன்கையாலே தன்மயிரைவகுத்தால் தன்கை தனக்கு உபகரித்தோமென்றிராதாப்போலே, அந்யோந்யம் உபகாரஸ்ம்ருதி வேண்டாதாப்போலே, அவயவபூதனான ஆத்மா அவயவியான எம்பெருமானுக்கெடுத்துக் கைநீட்டுகிறானென்றிருக்கை இவ்வர்த்தம் – ஓராசார்யன் அங்கீகரித்த முமுக்ஷவுக்கு ஜ்ஞாதவ்யம்.

எங்களாழ்வான் திருவடிகளே சரணம்.

ஸாரார்த்த சதுஷ்டயம் முற்றிற்று.

மணவாள மாமுனிகள்

பட்டர் பிரான் ஜீயருக்கு அருளிச்செய்தவார்த்தை

பஞ்சஸம்ஸ்காரனாகவேணும், பஞ்சகால

ப்ரபன்னனாகவேணும், பஞ்சமோபாய நிஷ்டனாகவேணும், பஞ்சவேதாந்த்தனாகவேணும், பஞ்சவிம்சதி

பரத்பரதாபிக்ஷ னாகவேணும், பஞ்சபாக தீக்ஷிதனாகவேணும்.

வாக்யகுருபரம்பரை என்கிற ஸந்த்யாநுஷ்டானம் பண்ண வேணும், நித்யாநு ஸந்தானமாகிற அங்கந்யாஸ கரந்யாஸம் பண்ணவேணும்,

தூற்றந்தாதி என்கிற ப்ரபன்ன காயத்ரி ஜபிக்கவேணும், திருவாய்மொழி என்கிற வேதத்தை அத்யயனம் பண்ணவேணும், திருவந்தாதி என்கிற சாஸ்திரம் அப்யஸிக்க வேணும், பூர்வாசார்யர்கள்

அருளிச்செய்த உபதேச ரத்னமாலை என்கிற ரகஸ்யங்கள்

தொடக்கமான புராணங்கள் அப்யஸிக்கவேணும், உன்னடியார்க்கு

அடிமையென்கிற – ததீயாராதனம்-பஞ்சயாகங்களென்றும் பண்ணவேணும்;ஷட்கர்ம நிரதனாகவேணும். இப்படியிருக்கிறவர்கள்

ஸ்ரீ வைஷ்ணவர்கள் – பூர்வாசார்யர்கள்

“ இதை அறியாதவர்க்கு சன்மங்கள் போகவில்லை “ யென்று மணவாள மாமுனிகள் பட்டர்பிரான் ஜீயருக்கு அருளிச்செய்தார்.

மணவாள மாமுனிகள் திருவடிகளே சரணம்

எம்பெருமானார் தம்முடைய சரமதசையில் அருளிச்செய்த

ப்ரபன்ன ரஹஸ்யம்

ஒருவன் ப்ரபன்னனானால், அவனுடைய தேஹயாத்ரை கர்மாதீன மாகையாலே கரைய வேண்டா. கரைந்தானாகில் நாஸ்திகனாமித்தனை. ஆத்மயாத்ரை பகவததீனமாகையாலே, அதில் தனக்கந்வயமில்லை.

உண்டென் றிருந்தானாகில் ஸமர்ப்பணம்

பொய்யாமீத்தனை. ஆகையாலே உபயயாத்ரையுங்கொண்டு

அந்வயமில்லை. ஆனால் கரணத்ரயங்களையுங்கொண்டு வேண்டிற்றுச் செய்து திரியவோவென்னில், அது ஸ்வரூபமன்று. உபாயாந்தரத்தில் அந்வயமில்லா விட்டால் ப்ராப்யமான கைங்கர்யத்திலே அந்வயிக்குமித்தனை. அதில் இங்கிருக்கும் நாள்

செய்யுங்கைங்கர்யமாறு. அவையாவன, பாஷ்யத்தை

வாசித்து வாசிப்பிக்கையும் ; அதுவும் மாட்டானாகில்,

அருளிச் செயல்களை ஓதி ஓதுவிக்கவும், அதுவும்

மாட்டானாகில் உகந்தருளின திவ்ய தேசங்களிலே

அமுதுபடி சாத்துபடியாராய்ந்து போரவும் ; அதுவும்மாட்டானாகில்

த்வயத்தை அர்த்தாநுஸந்தானம் பண்ணவும் ; அதுவும் மாட்டானாகில், தன்னை என்னுடையவனென்று அபிமானியாவொரு

வைஷ்ணவனபிமானத்திலேயொதுங்கி வர்த்திக்கவும் ; அதுவும்

மட்டானாகில், திருநாராயணபுரத்திலே ஒரு குடில்

கட்டியிருக்கவும். இப்படி வர்த்திக்கும் அதிகாரிக்கு முன்னடி பார்த்து வர்த்திக்க வேண்டுவது மூன்று விஷயமுண்டு. அதாவது,

அநுகூலரும், ப்ரதிகூலரும், அநுபயரும். இதில் அநுகூலராவார்,

ஸ்ரீ வைஷ்ணவர்கள். ப்ரதிகூலராவார். பகவத் விரோதிகள்.

அநுபயராவார், ஸம்ஸாரிகள். இதில் அநுகூலரான

ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால், சந்தனகுஸும

தாம்பூலாதிகளைப் போலேயும், நிலாத்தென்றலைப் போலேயும்,

அபிமத விஷயம்போலேயும் உகந்து வர்த்திப்பான்.

பகவத் விரோதிகளைக் கண்டால், ஸர்ப்பாக்கனிகளைக் கண்டாப்போலே வெருவிவர்த்திப்பான். அநுபயரைக் கண்டால், காஷ்டலோஷ்டாதிகளைக் கண்டாப்போலே உபேக்ஷித்துவர்த்திப்பான். இப்படி வர்த்திக்க

வொட்டாதொழிகிறது, அர்த்தகாம ப்ராவண்யம். அர்த்தகாமமடியாக

அநுகூலரான ஸ்ரீ வைஷ்ணவர்களை அவமானம்

பண்ணினானாகில் , . ராஜபுத்ரனை அவமானம் பண்ணினால்

ராஜஹ்ருதயம் புண்படுமாபோலே அவ்வழியால், எம்பெருமான் திருவுள்ளம் புண்படும். ப்ரதிகூலரான பகவத் விரோதிகளை அத்தகாம

மடியாக ஆதரித்தானாகில், ராஜா ஸார்வபௌமனயிருக்க

ராஜமஹிஷி க்ஷூத்ர ஜந்துக்கள் பக்கலிலே

மடிபிக்ஷைபுக்கால் ராஜாவுக்கு அவத்யமாமாப்

போலே எம்பெருமானுக்கு அவத்யமாய் அவ்வழியால்

எம்பெருமான் திருவுள்ளம் புண்படும். அநுபயரான ஸம்ஸாரிகளை அர்த்தகாமமடியாக ஆதரித்தானாகில், ரத்னத்துக்கும் பாஷாணத்துக்கும், வாசியறியாதாப்போலே தனக்கும் பிறர்க்கும் வாசியறிந்திலன். இவனுக்குப் பிறந்த ஜ்ஞானம் கார்யகரமாகப் பெற்றிலோமேயென்று இவனளவில் ஈச்வரன் என்றுமொக்க உதாஸனனாய்ப் போரும்.

ஈச்வரனளவில் உத்தாரகத்வ ப்ரதிபத்தியும், ஆசார்யனனவில்

உபகாரகத்வ ப்ரதிபத்தியும், ஸ்ரீ வைஷ்ணவர்களௗவில் உத்தேச்யத்வ ப்ரதிபத்தியும், உபாயத்தளவில் அத்யவஸாய ப்ரதிபத்தியும், உபேயத்தளவில் த்வராப்ரதிபத்தியும், சரீரத்தளவில் விரோதி

ப்ரதிபத்தியும், சரீரஸம்பந்தத்தளவில் பிரிவாகிற

ப்ரதிபத்தியும், ஸம்ஸாரிகளளவில் த்ருண ப்ரதிபத்தியும், ஐச்வர்யத்தளவில் அக்நிப்ரதிபத்தியும், விஷயத்தளவில் இடி ப்ரதிபத்தியும் ஆகவிப்பத்து ப்ரதிபத்தியும் ஓர் அதிகாரிக்கு அவச்யம்

ஜ்ஞாதவ்யமாகக்கடவது. ஈச்வரனளவில் உத்தாரகத்வ

ப்ரதிபத்தியாவது, “ஆவிக்கோர் பற்றுக் கொம்பு  நின்னலாலறிகின்றிலேன் ” என்றும், ” என்னுடை வாழ்நாளென்றம் “ ஆவியை யரங்கமாலை”, என்றும் எங்ஙனே தரிக்கேனுன்னைவிட்டு”, என்றுமிருக்கை.

ஆசார்யனளவில் உபகாரகத்வ ப்ரதிபத்தியாவது,

“ என்னைத் தீமனங் கெடுத் தாய், மருவித் தொழு

மனமே தந்தாய் ” என்றும், “ தேவு மற்றறியேன்”

என்றும், இத்யாதிப்படியேயிருக்கை. ஸ்ரீ வைஷ்ணவர்களளவில் உத்தேச்யத்வ ப்ரதிபத்தியாவது,”சீதனையே தொழுவா” ரென்றும்,

“பயிலும் திருவுடையா ” ரென்றும் “போதோடு புனல் தூவும்

புண்ணியரே ” என்றும் இத்யாதிப்படியேயிருக்கை.

உபாயத்தளவில் அத்யவஸாய ப்ரதிபத்தியாவது,

“களைவாய் துன்பங்களையா தொழிவாய் ” என்றும்,

உன்னாலல்லால் யாவராலு மொன்றுங் குறை வேண்டேன்”

என்றும் இத்யாதிப் படியே யிருக்கை.உபேயத்தளவில்

த்வரா ப்ரதிபத்தியாவது “மாகவைகுந்தங் காண்பதற் கென்மன மேகமெண்ணு மிராப்பகலின்றியே ” என்றும் “வானுலகம் தெளிந்தே

யென்றெய்துவது” என்றும் “களிப்புங் கவாவுமற்”

றென்று துடங்கி, அடியார்கள் குழாங்களை உடன் கூடுவதென்று கொலோ” என்றும்,” வழுவிலா வடிமை செய்யவேண்டும் நாம் ” என்றுமிருக்கை.

சரீரத்தளவில் விரோதி ப்ரதிபத்தியாவது, “பாம்போ டொரு

கூறையிலே பயின்றாப்போல் ” ” பொல்லா வாக்கை என்றும்,

ஆக்கைவிடும் பொழுதெண்ணே” என்றும், “மங்கவொட்டு “

என்றுமிருக்கை. சரீர ஸம்பந்திகளளவில் பிரிவாகிற

,ப்ரதிபத்தியாவது, ” தாயே நோயே ” இத்யாதியும்,

“பெற்றாரும் சுற்றமு மென் றிவை பேணேன் ” என்றும், “பிறிந்தேன் பெற்றமக்கள் பெண்டிரென்றிவர் பின்னுதவா தறிந்தேன் ” என்றுமிருக்கை. இதரரான ஸம்ஸாரிகளளவில் த்ருண ப்ரதிபத்தியாவது,

நீசரென்றும், மிண்டரென்றும், தொழும்பர் என்றும்

இருக்கை. ஐச்வர்யத்தளவில் அக்நி ப்ரதிபத்தியாவது,

” வீழ்பொருட் கிரங்கி” என்றும் “ஆண்டார் வையமெல்லா மரசாகி, முன்னாண்டவரே மாண்டாரென்று வந்தார் ” என்றும், கம்பமதயானைக்

கழுத்தகத்தின் மேலிருந்து இன்பமருஞ் செல்வமு மிவ்வரசும் யான் வேண்டேன்” என்றும் இத்யாதிப்படியேயிருக்கை, விஷயத்தளவில் இடி ப்ரதிபத்தியாவது, ‘புலனைந்து மேயும் பொறியைந்து நீங்கி”

என்றும், ‘ சாந்தேந்து மென்முலையார் தடந்தோள்

புணரின்ப வெள்ளத் தாழ்ந்தேன், அருநரகத்தழுந்தும்

பயன்படைத்தேன்” என்றும், “ ஐவர் அறுத்துத்

தின்றிடவஞ்சி நின்னடைந்தேன்” என்றும், கோவாயைவர் என்

மெய் குடியேறிக் கூறை சோறிவை

தாவென்று குமைத்துப்போகார், நானவரைப் பொறுக்ககிலேன்

புனிதா புட்கொடியாய் நெடுமாலே, தீவாய்

நாகணையில் துயில் வானே திருமாலேயினிச் செய்வ

தொன்றறியேன்,ஆவாவென்றடயேற்கிறையிரங்காய்”

என்றுமிருக்கை. ஈச்வரனளவில் உத்தாரக ப்ரதி

பத்தியை, ‘உயர்வற உயர் நலம்” துடக்கமான இவற்றிலும், ஆசார்யனளவில் உபகாரகத்வ ப்ரதிபத்தியை,

“அஞ்சிறையமடநாராய், வைகல்பூங்கழிவாய்

பொன்னுலகாளீரோ, எங்கானலகங்கழிவாய்”

என்னும் தூது நாலிலும், ஸ்ரீ வைஷ்ணவர்களளவில்

உத்தேச்ய ப்ரதிபத்தியை, “பயிலுஞ் சுடரொளி நெடுமாற்கடிமை’

துடக்கமானவற்றிலும், உபாயத்தளவில்

அத்யவஸாய ப்ரதிபத்தியை, “நோற்ற நோன்பு” துடக்கமானவற்றிலும், உபேயத் தளவில் த்வரா ப்ரதிபத்தியை, ” முடியானே, நீராய்

நிலனாய், பாமருமூவுலகு, மாயக்கூத்தன் ” துடங்கி,

* முனியே நான்முக” னளவிலும், சரீரத்தளவில்

விரோதி ப்ரதிபத்தியை “முன்னீர் ஞாலம் “

துடக்கமான வற்றிலும், சரீர ஸம்பந்தத் தளவில்

பிரிவாகிற ப்ரதிபத்தியை, ‘ கொண்ட பெண்டிரிலே”

அபாந்தவாதிகளாகச் சுட்டிச்சாற்றியதிலும்; இதரரான ஸ்ம்ஸாரிகளளவில் தருணப்ரதிபத்தியை,

”நண்ணாதார் முறுவலிப்ப” விலும், த்ரிவிதைச்வர்யங்களளவில்

அக்நி ப்ரதிபத்தியை “ஒருநாயக” த்திலும்,

விஷயத்தளவில் இடிப்ரதிபத்தியை, உண்ணிலாவிய’ விலும்

ப்ரதமாசார்யரான நம்மாழ்வாரருளிச்செய்கையாலே, இப்பத்து ப்ரதிபத்தியும் ஓரதிகாரிக்குஅவச்யம் ஜ்ஞாதவ்யமாகத் தட்டில்லை.

எம்பெருமானார் திருவடிகளே சரணம்.

நஞ்ஜீயர் அருளிச்செய்த

ஆத்ம விவாஹம்

 

ஸ்ரீய:பதியாகிறகாளமேகத்திலும், ஸௌஹார்தமென்கிறதொரு

பாட்டம் மழை விழுந்து, க்ருபையாகிற நிலத்திலே ஜீவனாகிற

ஓஷதி முளைத்து, ஆசார்யனாகிற பிதா விரஹமென்கிற ஸங்கமத்தாலே

ஜ்ஞாநமாகிற மாதாவின் பக்கலிலே சேர்ந்து

ஜீவாத்மாவென்கிற பெண்பிள்ளை பிறக்க, ருசியாகிற

ஜீவநத்தையிட்டு வளர்த்துக்கொண்டு போந்து,

விவேகமாகிற பக்வம் பிறந்தவாறே பரம சேஷிகளாகிற

ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளைச் சேர்த்து, எம்பெருமானாகிற வரன்கையில், ஸ்வரூப ஜ்ஞானமென்கிற தாரை வார்த்துக் கொடுக்க, அவனும் சேஷமாகிற மந்தரவாஸஸ்ஸையுடுத்தி, சேஷவ்ருத்தியாகிற

மங்கள ஸூத்ரத்தையும் கட்டி, ரூப நாமங்களாகிற

ஆபரணங்களையும் பூட்டிக் கையைப் பிடித்துக்

கொண்டுபோந்து, அத்யவஸாயமென்கிறதொரு ஆஸனத்திலே கொண்டிருந்து, வ்யாபக ஜ்ஞாநமென்கிற அக்நியை வளர்த்து,

இதரோபாய த்யாகமென்கிற ஸமிதைகளையிட்டு, ஸித்தோபாய

ஸ்வீகாரமென்கிற ப்ரதாநாஹுதியைப் பண்ணி, சாஸ்த்ரங்களாகிற பொரியைச்சிதறி, ஸம்பந்த ஜ்ஞாநமென்கிற

பூர்ணாஹுதியாலே ப்ராப்தி ப்ரதிபந்தங்களை நிச்சேஷமாக்கி, நிர்ப்பரத்வானுஸந்தானம் பண்ணுவிக்கிற

பூர்வாசார்யர்களாகிற பந்துக்கள் முன்னிலையாக மாதாபிதாக்களிருவரும் சேரவிருந்து காட்டிக் கொடுக்கஆழ்வார்களீரச்சொல்லாகிற மூப்போடே சேரவிட்டு வாத்ஸல்யாதிகுணயுக்தனானவன் தான்

பர்த்தாவானவாகாரம் குலையாதபடி அணைத்துக் கொண்டு

போந்து, தானும், தன் ப்ரதான மஹிஷிகளும்கூட

அந்தப்புரக் கட்டிலிலே கொண்டு போய், அந்தமில்

பேரின்பத்தடியராகிற பந்துக்களோடே சேர்த்து,

ஹர்ஷப்ரகர்ஷத்தோடே அங்கீகரித்து, ப்ரீதிவெள்ளமாகிற

படுக்கையிலே கொண்டுபோய் விஷய

வைலக்ஷயண்யங்களாலே போகபோக்யங்களோடே

ஸகலவித கைங்கர்யங்களாகிற அனுபவத்திலேமூட்டி,

ஆனந்தமாகிற பெருக்காற்றூடே ஆழங்கால்

பட்டு, “நம :” என்பது போற்றி” யென்பது ”ஜித”

மென்பது “பல்லாண்டு ‘ என்பதாகாநிற்கும்.

நஞ்ஜீயர் திருவடிகளே சரணம்.

 

ஆத்ம விவாஹம் ஸம்பூர்ணம்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.