முக்தபோகாவலீ

ஶ்ரீ:

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

ஆச்சான்பிள்ளை அருளிச்செய்த

முக்தபோகாவலீ

          ஶ்ருத்யர்த்தஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம்

          பத்மோல்லஸத்பகவதங்க்ரிபுராணபந்தும்! |

          ஜ்ஞாநாதிராஜமபயப்ரத ராஜபுத்ரம்

          அஸ்மத்குரும் பரமகாருணிகம் நமாமி  ||

“ஏகோ ஹ வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நேஶாநோ நேமேத்யாவாப்ருதிவீ ந நக்ஷத்ராணி”, “மஹாநவ்யக்தே லீயதே, அவ்யக்தமக்ஷரே லீயதே, அக்ஷரம் தமஸி லீயதே, தம: பரே தேவ ஏகீபவதி”, “தம ஆஸீத்தமஸா கூடமக்ரே”, ”நாஸதாஸீத்” என்கிற படியே கரணகளேபரவிதுரராய், அசிதவிஶேஷிதராய்த் தன்பக்கலிலே சுவறிக்கிடந்த ஸம்ஸாரிசேததரைப்பார்த்து ஸூரிகளோபாதி ஸதா பஶ்யந்தி பண்ணி ஆநந்த நிர்ப்பரராகைக்கு இட்டுப்பிறந்த இச்சேதநர் இறகொடிந்த பக்ஷிபோலே கரணகளேபரங்களை இழந்து போக, மோக்ஷஶூந்யராய், இங்ஙனேக்லேஶிக்கவொண்ணாது என்று தயமாநமநாவாய், ”விசித்ரா தேஹஸம்பத்திரீஶ்வராய நிவேதிதும் | பூர்வமேவ க்ருதாப்ரஹ்மந் ஹஸ்தபாதாதிஸம்யுதா” என்று தன் திருவடிகளிலே அபிமுகிகரித்துக் கரைமரம் சேருகைக்காகத் ததுப கரணங்களான கரணகளேபரங்களை ஈஶ்வரன் கொடுக்க, அவற்றைக் கொண்டு ஸ்வதேஹபோஷணபரராவாரும், இந்த்ரியங்களுக்கு இரை தேடி இடுகையிலே யத்நம் பண்ணுவாரும், பரஹிம்ஸையிலே விநியோகம் கொள்ளுவாரும், தேவதாந்தரங்களுக்கு இழிதொழில் செய்வாரும், பகவத்பாகவதநிந்தைக்கு பரிகரமாக்குவாரும், ஸ்வரூபாநநுரூபமான க்ஷுத்ரபுருஷார்த்தங்களுக்கு ஸாதநாநுஷ் டாநம் பண்ணுவாரும், முமூர்ஷுக்களாய் அபதே ப்ரவ்ருத்தராவாரும், விதவாலங்காரகல்பமான கைவல்யத்திலே யத்தம் பண்ணுவாரு மாய், இப்படி அந்யபரராய்ப்போருகிற ஸம்ஸாரிகள்நடுவே இச்சேதநரோட்டை நிருபாதிகஸம்பந்தமே ஹேதுவாக நெடுநாள் ஸ்ருஷ்டிப்பது அவதரிப்பதாய், இவை படுகிற நோவைக்கண்டு “ப்ருஶம் பவதிது:கித:” என்று திருவுள்ளம் நோவுபட்டுப் போந்த ஈஶ்வரனுடைய பாக்யவைபவத்தாலே “மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஶ்சித்யததி ஸித்தயே | யததாமபி ஸித்தாநாம் கஶ்சிந்மாம் வேத்தி தத்த்வத:” என்று எங்கேனுமொருவன் பராகர்த்தங்களில் பரகுபரகு என்கைதவிர்ந்து, ‘உணர்வெனும் பெரும் பதம் தெரிந்து வாடினேன்’ என்கிறபடியே த்யாஜ்யோபாதேயங்களுக்கு நிர்ணாயகப்ரமாணமான தத்ஸ்வருபயாதாத்ம்யநிரூபணத்தே இழிந்து, தேஹேந்த்ரியமந:ப்ராண தீப்யோந்யனாய், ஜ்ஞாநாநந்தலக்ஷணனாய், ஜ்ஞாநகுணகனாய், நித்யத்வாதிகுணயுக்தனான ஆத்மாவை ”யஸ்யாஸ்மி”, “தாஸபூதா:’, ‘தாஸோஹம் வாஸுதேவஸ்ய’, ”பரவாநஸ்மி” என்கிறபடியே பகவதநந்யார்ஹஶேஷபூதன் என்றறிந்து அத்தாலே தேஹாத்மாபிமாநமென்ன, ஸ்வஸ்வாதந்தர்யமென்ன, அந்யஶேஷத்வமென்ன, ப்ரயோஜநாந்தர ஸம்பந்தமென்ன, இவை இத்தனையும் குடநீர்வழிந்து விஷய-விஷதரவ்ரஜவ்யாகுலமாய், ஜநநமரணசக்ரநக்ராஸ்பதமாய், ஸ்வபரஸ்வரூபதிரோதாநகரமாய், விபரீதவ்ருத்தப்ரவர்த்தகமாய், அநந்தக்லேஶபாஜநமான ஸம்ஸாரத் தில் பயமும், நிரஸ்தாதிஶயாஹ்லாத, – ஸுகபாவைகலக்ஷணமான பகவத்கைங்கர்யமாகிற பரமப்ராப்யத்திலே ருசியையுமுடையனாய், அஸ்ஸம்ஸாரநிவ்ருத்திபூர்வகமான பரமப்ராப்ய – ஸித்திக்கு “தர்மேணபாபமபநுததி”, “யஜ்ஞேநதாநேநதபஸாநாஶகேந ப்ராஹ்மணாவிவிதிஷந்தி” என்கிறபடியே த்ரிவிதபரித்யாகபூர்வகமாக அநுஷ்டிதமான கர்மயோகத்தாலே ”த்ருதே: பாதாதிவோதகம்” என்று துருத்திமூக்குப்போலே ஜ்ஞாநப்ரஸரணத்வாரமான நெஞ்சை யடைத்து, அந்யதாஜ்ஞாநவிபரீதஜ்ஞாந – ஹேதுவான ரஜஸ்தமஸ் ஸுக்களை “மனனக மலமறக்கழுவி” என்கிறபடியே மறுவலிடாதபடி க்ஷீணமாக்கி, அம்மிஶ்ர – ஸத்த்வத்தை அறுத்து, “ஸத்த்வாத் ஸஞ்ஜாயதேஜ்ஞாநம்”, ‘ஸத்த்வம் விஷ்ணுப்ரகாஶகம்” என்று யதாவஜ்ஜ்ஞாநஸாதநமான அந்த ஸத்த்வத்தாலே ‘ஸத்த்வஶுத்தெள த்ருவா ஸ்ம்ருதி:” என்கிறபடியே ஸாக்ஷாத்காரபர்யந்தையான அநவரதபாவனை பிறந்து, அது ”ஸ்நேஹபூர்வமநுத்யாநம் பக்தி:” என்கிற பக்திரூபாபந்நையாய், அதினுடைய விபாகதஶையாய், அந்த பக்திபகவத்ஸம்ஶ்லேஷவியோகைகஸுகது:கனாம்படி பண்ணக் கடவதாய் “யமேவைஷ வ்ருணுதே தேநலப்ய:”, “பக்த்யா மாமபி ஜாநாதி”, “பக்த்யாத்வநந்யயாஶக்ய:”, “மத்பக்திம் லபதே பராம்” என்று ஸாதநதயாஶாஸ்த்ரஸித்தமான பரபக்தியை ஸாதித்தல், அங்கனன் றிக்கே ஸாத்யமான ஸகலஸாதநங்களையும் ஸாங்கமாகவும் ஸவாஸநமாகவும் விட்டு, துஷ்கரத்வாதிதோஷதூரமாய், ஸ்வ ரூபாநுரூபமாய், வாத்ஸல்யாதி, குணவிஶிஷ்டமாய், நித்யாநபாயி நியான பிராட்டியையும் ஸஹகாரியாக ஸஹியாதபடி நிரபேக்ஷ மாய், “தஸ்மாந்ந்யாஸமேஷாம் தபஸாமதிரிக்தமாஹு:”, ”தேஷாம் து தபஸாம் ந்யாஸமதிரிக்தம் தபஶ்ஶ்ருதம்”, “க்ருஷ்ணம் தர்மம் ஸநாதநம்”, ”பாவநஸ்ஸர்வலோகாநாம் த்வமேவ” என்று ஶ்ருதிஸ்ம்ருதிஸித்தமான ஸித்தஸாதநத்தை ஸ்வீகரித்தல் செய்து,

ஆக இப்படி ஸித்த-ஸாத்ய-ரூபமான ஸாதநத்வயாவலம்பநத்தாலே ”ஏவம்விதி, பாபம் கர்ம ந ஶ்லிஷ்யதே”, “ஏவம் ஹாஸ்ய ஸர்வே பாப்மாந: ப்ரதூயந்தே”, ‘தத்ஸுக்ருததுஷ்க்ருதே தூநுதே” ‘ஸுஹ்ரு தஸ்ஸாதுக்ருத்யாம் த்விஷந்த: பாபக்ருத்யாம்’ “தஸ்ய ப்ரியா ஜ்ஞாதயஸ்ஸுக்ருதமுபயந்தி அப்ரியாதுஷ்க்ருதம்”, ”அஶ்வ இவ ரோமாணி விதூய பாபம்”, “ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்று புண்யபாபரூபமான பூர்வாகத்தை ஸுஹ்ருத்துக்கள் பக்க லிலும், துஷ்க்ருத்துக்கள்பக்கலிலும் பகிர்ந்தேறிட்டு, ப்ராமாதிகமாய்ப் புகுந்த உத்தராகம் ஈஶ்வரன் திருவுள்ளத்திற்படாமையாலே கழன்று, ஆக இப்படி பூர்வாக, உத்தராகங்களினுடைய அஶ்லேஷ விஶ்லேஷ ரூபமான விமோசநம் பிறந்து, ‘போகேந த்விதரே க்ஷபயித்வாத, ஸம்பத்யதே” என்கிறபடியே ஆரப்த கர்மாவஸாநத்திலேயாதல், ”யந்மரணம் ததவப்ருத:”, ”மரணமானால்” என்கிறபடியே ஆரப்த- ஶாரீராவஸாநத்திலேயாதல்

இம்முமுக்ஷுசேதநன் இஶ்ஶரீரத்தை விட்டுப்போம்போது ‘அதிப்ர புத்தோ மாமேவாவலோகயந்” என்கிறபடியேதான் ஈஶ்வரன் என்றி ருத்தல், ‘காஷ்டபாஷாணஸந்நிபம் அஹம் ஸ்மராமி” “மமாநுஸ்மர ணம் ப்ராப்ய” என்கிறபடியே ஈஶ்வரஸ்ம்ருதிவிஷயமாதல் செய்து, ”அஸ்ய ஸோம்ய புருஷஸ்ய ப்ரயதோவாங்மநஸி ஸம்பத்யதே” “இந்த்ரியைர்மநஸி ஸம்பத்யமாநை:”, “அத ஏவு ஸர்வாண்யது” என்கிறபடியே வாகிந்த்ரியமும், அல்லாத கரணங்களும் மதஸ்ஸிலே லயித்து, ‘மநாப்ராணே”, ”தந்மந:ப்ராண உத்தராத் என்று ஸர்வேந்த் ரிய ஸம்யுதமான மநஸ்ஸு ப்ராணன்பக்கலிலே ஏகிபவித்து, “ஸோத்யக்ஷே”, ”ஏவமேவமமாத்மாநமந்தகாலே ஸர்வே ப்ராணா அபிஸமாயந்தி ” என்கிறபடியே ப்ராணன் ஜீவனோடேகூடி “ப்ராணஸ் தேஜஸி” என்று ஜீவஸம்யுக்தனான ப்ராணன் பூதஸூக்ஷ்மத்திலே லயித்து, பூதஸுக்ஷ்மந்தான் ”தம: பரஸ்யாம் தேவதாயாம்” என்கிற படியே பரதேவதை – பக்கலிலே ஏகீபவிக்கும்.

ஆக இப்படி ஸாதாரணமான உத்க்ராந்தி உண்டாய், ”ஶதஞ்சைகா ச ஹ்ருதயஸ்ய நாட்ய: தாஸாம் மூர்த்தாநமபி நிஸ்ஸ்ருதைகா | தயோர்த்வமாயந்நம்ருதத்வமேதி”, ”ஊர்த்வமேக: ஸ்திதஸ்தேஷாம் யோ பித்வா ஸுர்யமண்டலம் | ப்ரஹ்மலோகமதிக்ரம்ய தேந யாதி பராம் கதிம்” என்று ஶ்ருதிஸ்ம்ருதிகளிற் சொல்லுகிறபடியே ஹ்ருதயகமலாவலம்பிகளான நூற்றொரு நாடிகளில் தலையில் ஊர்த்வகபாலாவலம்பிநியான நூற்றோராம் நாடியாலே ‘ததோகோக் ரஜ்வலநம் தத்ப்ரகாஶிதத்வாரோ வித்யா ஸாமர்த்யாத் தச்சேஷகத் யநுஸ்ம்ருதியோகாச்ச ஹார்த்தாநுக்ருஹீதஶ்ஶதாதிகயா” என்கிற படியே இவன்தன்னை ஆஶ்ரயிக்கையினாலும், அர்ச்சிராதிகதி சிந்தனையினாலும் அதிப்ரீதனாய் ஹ்ருதயகுஹாகதனான ஈஶ்வர னுடைய ப்ரஸாத விஶேஷத்தாலே ப்ரகாஶிதத்வாரனாய்க்கொண்டு, “ய ஏஷஸ்தந இவாவலம்பதே ஸேந்த்ரயோநி:” என்று முலைபோலே நாலுகிற ஹ்ருதய – கு,ஹையினின்றும் புறப்பட்டு உச்சந்தலையள வும் சென்று, “வ்யபோஹ்ய ஶீர்ஷகபாலே” என்று தலையோட்டைப் பிட்டு, ”அத யத்ரைத்தஸ்மாச்சரீராதுத்க்ராமதி”, “அதைதைரேவரஶ்மி பிரூர்த்வமா க்ரமதே”, ”ரம்யநுஸாரீ” என்கிறபடியே அந்நாடியோடே பிடையுண்டு கிடக்கிற ஆதித்யரஶ்மிவிஶேஷத்தாலே ‘அஸ்யைவ சோப்பத்தேரூஷ்மா”, ”ஸூக்ஷ்மம் ப்ரமாணதஶ்சததோபலப்தே:’ என்கிறபடியே ஊஷ்ம லக்ஷணையான ஸூக்ஷ்மப்ரக்ருதியோடே புறப்பட்டுப்போம்போது,

“அர்ச்சிஷமேவாபி, ஸம்பவந்தி”, ”அர்ச்சிஷோஹ: அஹ்ந ஆபூர்ய மாணபக்ஷம் ஆபூர்யமாணபக்ஷாத்யாந்ஷடுதங்ஙேதி மாஸாம்ஸ்தாந் மாஸேப்யஸ்ஸம்வத்ஸரம் ஸம்வத்ஸராதாதித்யம் ஆதித்யாச்சந்த்ர மஸம் சந்த்ரமஸோ வித்யுதம் தத்புருஷோSமாநவ: ஸ ஏநாந் ப்ரஹ்மகமயதீத்யேஷ தேவபதோ ப்ரஹ்மபத: ஏதேந ப்ரதிபத்யமாநா இமம் மாநவமாவர்த்தம் நாவர்த்தந்தே நாவர்த்தந்த இதி”, ”ஸ ஏதம் தேவயாநம் பந்தாநமாபத்யாக்நிலோகமாகச்சதி ஸ வாயுலோகம் ஸ வருணலோகம் ஸ ஆதித்யலோகம் ஸ இந்த்ரலோகம் ஸ ப்ரஜாபதி லோகம் ஸ ப்ரஹ்மலோகம்’, “அக்நிர்ஜ்யோதிரஹஶ் ஶுக்லஷ்ஷண் மாஸா உத்தராயணம் | தத்ர ப்ரயாதா கச்சந்தி ப்ரஹ்ம ப்ரஹ்ம விதோ ஐநா:” என்று ஶ்ருதிஸ்ம்ருதிகளிற் சொல்லுகிறபடியே ப்ரத, மத்திலே அர்ச்சிஸ் என்றும், அஹஸ் என்றும், ஶுக்லபக்ஷம் என்றும், உத்தராயணம் என்றும், ஸம்வத்ஸரம் என்றும் இவ்வோ ஶப்தங்களாலே சொல்லப்படுகிற தத்ததபிமாநிதேவதாபூதரான ஆதி வாஹிகரும், அதுக்கு மேலே “வாயுமப்தாதவிஶேஷவிஶேஷாப்யாம்” என்று வாய்வாக்யனான ஆதிவாஹிகனும், இவ்வளவிலே தந்தா முடைய எல்லையளவிலே வழிவிட, ஆதித்யனளவிலே வந்து, அநந்தரம் “பித்வா ஸூர்யமண்டலம்”, ‘தேரார் நிறைகதிரோன் மண்ட லத்தைக் கீண்டுபுக்கு” என்கிறபடியே ஆதித்யமண்டலத்தைக்கண்டு, அவ்வருகே புறப்பட்டு சந்த்ரனளவும் சென்று இதுக்கு அவ்வருகே வித்யுதபிமாநியான அமாநவனளவும் சென்று, அவனோடேகூட “தடீதோதிவருணஸ்ஸம்பந்தாத்” என்று மேலே வருணேந்த்ர ப்ரஜாபதிலோகங்களிலே தத்ததபிமாநி தேவதைகளாலே ஸத்க்ருத னாய்க் கொண்டுபோய், “அண்டம் பிநத்தி அவ்யக்தம் பிநத்தி தமோ பிநத்தி” என்கிறபடியே அண்டகபாலத்தைப்பிட்டு, அவ்வருகே புறப் பட்டு வாரி – வஹ்நி – அநல – அநில – ஆகாஶ – மஹத் அஹங்கார ரூபமாய் ஒன்றுக்கொன்று தஶோத்தரமான ஆவரணங்களைக்கடந்து இத்தனையும் தனக்குள் வாயிலே அடங்கி ”அநந்தஸ்ய ந தஸ்யாந்தஸ்ஸங்க்யாநம் வாபி வித்யதே” என்றும், “முடிவில் பெரும் பாழ்” என்றும் சொல்லுகிற ப்ரக்ருதிதத்த்வத்தைக் கடந்து, ஆக இப்படிச் சிறை என்கிற கூட்டத்தினின்றும் புறப்பட்டுப்போமாப் போலே ‘இமையோர்வாழ்தனிமுட்டைக்கோட்டை”யைக்கழித்து, ஒரு படி வெளிநாடு கண்டு,

“ஸ ஆகச்சதி விரஜாம் நதீம்” என்கிறபடியே ஸம்ஸாரபரமபதங்க ளுக்கு எல்லையாய், அம்ருதமயமாய், விரஜாக்யையான ஆற்றங் கரையளவிலே வந்தவாறே, “சந்த்ர இவ ராஹோர்முகாத் ப்ரமுச்ய தூத்வா ஶரீரம் ‘ என்கிறபடியே ராஹுமுகத்துக்கு இரையான சந்த்ரன் ராஹுமுகத்தினின்றும் புறப்பட்டுப்போமாப்போலே நெடுநாள் ஸ்வரூபம் கரையேறும்படி விழுங்கிவிடாய்த்துக் கிடக்கிற ஸூக்ஷ்ம ப்ரக்ருதியை விட்டுப் புறப்பட்டவாறே கரிப்பானையாலே கவிழ்த்து ப்ரபாப்ரஸரமின்றியிலே திரோஹிதஸ்வரூபமானதீபம் அதைத் தகர்த்தவாறே கண்டவிடமெங்கும் தன் ஒளியாமோபாதி இவனுக் கும், “பரம் ஜ்யோதிருபஸம்பத்ய ஸ்வேந ரூபேணாபிநிஷ்பத்யதே”, “நிரஞ்ஜந: பரமம் ஸாம்யமுபைதி” என்று ஜ்ஞாநாநந்தஸ்வரூப லக்ஷணமாய், ஸ்ரீகௌஸ்துபம் போலேயும், ஸ்ரீஸ்தநம்போலேயும் ஈஶ்வரனுக்கு ஸ்ப்ருஹாஸ்பதமாம்படி அத்யந்தவிலக்ஷணமான ஸ்வரூபமும், ஸ்வரூபாஶ்ரயமான அபஹதபாப்மத்வாதிகுணங் களும், ‘யதா ந க்ரியதே ஜ்யோத்ஸ்நா மலப்ரக்ஷாலநாந்மணே: | தோஷப்ரஹாணந் ந ஜ்ஞாநமாத்மந: க்ரியதே ததா | யதோதபாந கரணத் க்ரியதே ந ஜலாம்பரம் | ஸதேவநீயதே வ்யக்திமஸதஸ்- ஸம்பவ: குத: | ததா ஹேயகுணத்வம்ஸாதவபோதாதயோ குணா: | ப்ரகாஶ்யந்தே ந ஜந்யந்தே நித்யா ஏவாத்மநோ ஹி தே” என்கிற படியே கிணற்றைக்கல்லினால் உள்வாயிலே கிடக்கிற ஜலாகாஶங் கள் ப்ரகாஶிக்குமாப்போலேயும், மலயோகத்தாலே மழுங்கின மாணிக்கத்தை நேர்சாணையிலே இட்டுத் தெளியக்கடைந்தால் தன்னடையே தத்கதமான ஒளி ப்ரகாஶிக்குமாப்போலேயும் இவனுக் கும் தன்னடையே ப்ரகாஶிக்கும்.

ஆக இப்படி ப்ரகாஶிதஸ்வரூபஸ்வபாவனாய், ”ஸர்வத: பாணிபாதம் தத் ஸர்வதோக்ஷிஶிரோமுகம் | ஸர்வதஶ்ஶ்ருதிமல்லோகே ஸர்வ மாவ்ருத்ய திஷ்டதி” என்கிறபடியே ஸ்வஸங்கல்பமாத்ரத்தாலே கரசரணாத்யவயவங்களால் கொள்ளும் கார்யத்தைக் கொள்ள க்ஷமனாகையால் “தாம் மநஸைவாத்யேதி’ என்கிறபடியே அவ்விரஜாக்யையான ஸரித்தை ஸ்வஸங்கல்பத்தாலே கடந்து, “ஸோத்வந: பாரமாப்நோதி தத்விஷ்ணோ: பரமம் பதம்”, ”ஸதா பஶ்யந்தி ஸுரய:”, “தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் யத்வை பஶ்யந்தி ஸூரய:” என்கிறபடியே ப்ராப்யபூமியாக ஶ்ருதமாய், ‘ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ரதாரகம் நேமா வித்யுதோ பாந்தி குதோய- மக்நி:”, “அத்யர்க்காநலதீப்தம் தத் ஸ்தாநம் விஷ்ணோர்மஹாத்மந: ” என்கிறபடியே ப்ராக்ருததேஜ:பதார்த்தங்களை கத்யோதகல்பமாக்கக் கடவதாய், “காலம் ஸ பசதே தத்ர ந காலஸ்தத்ரவைப்ரபு:” என்கிற படியே அகாலகால்யமாய், ”ஏதே வை நிரயாஸ்தாத ஸ்தாநஸ்ய பரமாத்மந:” என்று அபரிமிதபுண்யஸாத்யமான ப்ரஹ்மலோகாதி களை யமன்குழியாக்கும் வைலக்ஷண்யத்தை உடைத்தாய், “தமஸ: பரஸ்தாத்”, ”ரஜஸ: பராகே” ”தெளிவிசும்பு”, ”நலமந்தமில்லதோர்நாடு” என்கிறபடியே அநந்தக்லேஶபாஜநமான இருள்தருமாஞாலத்துக்கு எதிர்த்தட்டாய், பரமயோகி, வாங்மநஸாSபரிச்சேத்யஸ்வரூபஸ்வ பாவமான பரமபதத்திலே “அநேகஜந்மஸாஹஸரீம் ஸம்ஸாரபதவீம் வ்ரஜந் | மோஹாச் ச்ரமம் ப்ரயாதோஸௌ வாஸநாரேணுகுண்டித:” என்று பெருங்காற்றில் தூறல் போலே அநாதிகாலம் கர்மவஶ்யனாய் ஸ்ருஷ்டனாவது, ஸம்ஹ்ருதனாவது, ப்ரஹ்மலோகஸ்தனாவது, பாதாலஸ்தனாவது, தேவனாவது, ஸ்தா வரமாவது, ஸ்த்ரீயாவது, புருஷனாவது, ப்ராஹ்மணனாவது, சண்டாலனாவது, பாலனாவது, வ்ருத்தனாவதாய் ஒரு நிலையிலே நிற்கப்பெறாதே காலிலே சீலை கட்டி ஜங்காலனாய், கண்டிடமெங்கும் தட்டித்திரிந்தவன் மீட்டுத் தட்ட வேண்டாதபடி ‘அத்வந:பார’ மான தேஶத்திலே வந்து புகுந்து, ஸாலோக்யம் பெற்று,

ப்ராக்ருதமாய், குணத்ரயாத்மகமாய், மாம்ஸாஸ்ருகாதிமயமாய், பரிணாமாஸ்பதமாய், கர்மஹேதுகமாய், அஸ்வாதீநமாய், ஸ்வரூப திரோதாநகரமாய், து:காநுபவோபகரணமான உடம்பின்கையிலே அநாதிகாலம் பட்டுப்போந்த பழிப்படையத் தீரும்படி அப்ராக்ருதமாய், ஶுத்தஸத்த்வாத்மகமாய், பஞ்சோபநிஷந்மயமாய், ஏகரூபமாய், பகவத்ப்ரஸாத ஹேதுகமாய், ஸ்வாதீநமாய், ஸ்வரூபப்ரகாஶகமாய், கைங்கர்யஸுகாநுபவோபகரணமாய், திவ்யமங்கலவிக்ரஹ ஸஜா தீயமான உடம்பைப்பெற்று, இப்படி லப்தஸ்வரூபனாய், ‘ஐரம்மதீயம் ஸர:’ என்கிற திவ்யஸரஸ்ஸில் அஶ்வத்தத்தளவும் சென்றவாறே “தம் பஞ்சஶதாந்யப்ஸரஸ: ப்ரதிதாவந்தி ஶதம் மாலாஹஸ்தா: ஶதமஞ்ஜநஹஸ்தா: ஶதம் சூர்ணஹஸ்தா: ஶதம் வாஸோஹஸ்தா: ஶதம் பணாஹஸ்தா:” என்கிறபடியே ஐந்நூறு அப்ஸரஸ்ஸுக்கள் வந்தெதிர்கொள்ள, பர்த்ருக்ருஹத்துக்கு வரும் பெண்களை அவ்வூர்க் குளக்கரையிலே குளிப்பாட்டி, ஒப்பித்துக்கொண்டுபோம் பந்துக் களைப்போலே “தம்ப்ரஹ்மாலங்காரேணாலங்குர்வந்தி” என்கிறபடியே ஸ்ரீவைகுண்டநாதனுக்கு ஸத்ருஶமாக ஒப்பித்துக்கொண்டு போம் போது, “தம் ப்ரஹ்மகந்த: ப்ரவிஶதி”, “தம் ப்ரஹ்மரஸ: ப்ரவிஶதி”, “தம் ப்ரஹ்மதேஜ: ப்ரவிஶதி”, ”ஸர்வகந்தஸ்ஸர்வரஸ:”, ”பரஞ்ஜ்யோதி:” என்கிறபடியே ஸர்வேஶ்வரனுடைய திவ்யபரிமளத் தையும், திவ்யபோக்யதையையும், திவ்யதேஜஸ்ஸையுமுடைய னாய், பரமபதத்தில் நாட்டெல்லையைக்கழித்து, ”ஸ ஆகச்ச, தீந்த்ர- ப்ரஜாபதீ த்வாரகோபௌ”, “கொடியணிநெடுமதிள் கோபுரம் குறுகினர்” என்கிறபடியே ”அபராஜிதா ப்ரஹ்மண:” என்று அபராஜிதாக்யையான ப்ரஹ்மபுரத்வாரகோபுரத்தளவும் வந்து, அநாதிகாலம் இந்த்ரியங்கள் – கையிலும் மஹதாதிகள்கையிலும் எளிவரவுப்பட்டுப்போந்த இவன் “முடியுடை வானவர் முறைமுறை எதிர்கொள்ள” என்கிறபடியே தேஶாந்தரகதனான ராஜபுத்ரன் வரும்போது ராஜபரிகரம் புறப்பட்டுத் தந்தாம் தரத்திலே எதிர்கொள்ளுமாப்போலே த்ரிபாத்விபூதியிலுள்ள ஸுரிவர்க்கமடைய வமஞ்ஜியாகத் {அமஞ்சி – கூலியில்லாதவேலை} திரண்டு எதிர்கொள்ள அவர்களோடேகூட ஒருபெரியதிருநாள் போலே ஸஸம்ப்ரமமாக உள்ளேபுக்கு ராஜமார்க்கத்தாலேபோய் ப்ரஹ்மவேஶ்மத்தில் சென்று,

“ஸ ஆகச்சதி விசக்ஷணாமாஸந்தீம்”, ப்ரஜாபதேஸ்ஸபாம் வேஶ்ம ப்ரபத்யே”, என்கிறபடியே மணிமயமாய், அநேகமாயிரம் மாணிக்க ஸ்தம்பங்களாலே அநேகமாயிரம் ஆதித்யஸங்கங்களை உருக்கி வார்த்து வகுத்தாற்போலே அபரிமிதமான தேஜஸ்ஸை உடைத்தாய், அவ்வாதித்யஸங்கம்போலே எரிந்திருக்கையன்றியிலே புக்காரை யடைய ஆநந்தநிர்ப்பரராக்கும்படி ஆநந்தமயமாய், மஹாவகாஶமான திருமாமணிமண்டபத்திலே ஏறி, ஸூரிஸங்கஸங்குலமான நடுவில் நாயகவ்ருத்தியிலே சென்றுபுக்கு, ‘ப்ரஜ்ஞயா ஹி விபஶ்யதி ஸ ஆகச்சத்யமிதௌஜஸம் பர்யங்கம் ஸதம் ப்ராணஸ்தஸ்யபூதம் சபவிஷ்யச்ச பூர்வௌ பாதௌ” இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே அநேகதேவதாமயமாய், அபரிமிதவிவிதசித்ரிததிவ்யஸிம்ஹாஸந மாய், அதுக்குமேலே ஆயிரம்தளகமாய், எப்பொழுது மொக்க அலர்ந்து அழுக்கற உருக்கி ஒப்பமிட்ட மேருபோலே ஒங்கின கர்ணிகையை உடைத்தான திவ்யகமலமாய், அதின்மேலே அம்ருதபேநபடலபாண்டரனாய், ”ஸ்வஸாஹஸ்ரஶிரோந்யஸ்த- ஸ்வஸ்திகாமலபூஷண: | பணாமணிஸஹஸ்ரேண யஸ்ஸ வித்யோதயந்திஶ:”, “பணாமணிஸஹஸ்ராட்யம்”, “பணாமணிவ்ராதம- யூகமண்டலப்ரகாஶமாநோதரதிவ்யதாமநி”, “இருளிரியச்சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி இனத்துத்தி அணிபணமாயிரங்களார்ந்த” என்கிற படியே பகவத் ஸ்பர்ஶஸுகத்தாலே விரிகிற பணாஸஹஸ்ரங்களில் இளவெய்யில் விளங்குகிற ஆதித்யநிவஹம்போலே அம்மண்டலத் தோடு மாளிகையோடு வாசியறத் தன்னுடைய அருணமான கிரணங்களாலே வழியவார்க்கிற மாணிக்கமண்டலங்களை உடைய னாய், ப்ரக்ருஷ்டவிஜ்ஞாநபலங்களுக்கு ஏகதாமனாய், ஸகல- கைங்கர்யஸாம்ராஜ்யதீக்ஷிதனான திருவநந்தாழ்வானாய்,

“தஸ்மிந் ப்ரஹ்மாஸ்தே”, ‘தஸ்யோத்ஸங்கே,” என்கிறபடியே அவன் மடியிலே “நீலதோயதமத்யஸ்தாவித்யுல்லேகே,வபாஸ்வரா”, “நீலமுண்ட மின்னன்ன மேனி” என்கிறபடியே மஹாமேருவை உருக்கித் தேக்கினாப்போலே புறவாயடையப்புகர்த்து, அத்தை நீக்கிப்பார்த்தவாறே கண்டார் கண்களை அடைய விரித்து அஞ்ஜநம் எழுதினாப்போலே இருண்டு, ”கருமாணிக்கமலைமேல் மணித்தடந் தாமரைக்காடுகள்போலே திருமார்வுவாய்கண்கை உந்திகாலுடை யாடைகள் செய்யபிரான்”, “கார்வண்ணம் திருமேனிகண்ணும் வாயும் கைத்தலமுமடியிணையும் கமலவண்ணம்” என்கிறபடியே காலமேக, நிபஶ்யாமமானதிருமேனிக்கு பரபாகமாம்படி கண்டவிடமெங்கும் சிதற அலர்ந்த தாமரைக்காடுபோலே சிவந்தகரசரணாத்யவயவ விஶேஷங்களாலே உத்புல்லபங்கஜதடாகஶீதலனாய், இலங்கொலி நீர்ப்பெரும்பௌவம் மண்டியுண்டதொரு காலமேகத்திலே கண்டிட மெங்கும் மின்கொடி படர்ந்தாற்போலே கிரீடமகுடாதிதிவ்யாபரண பூஷிதனாய், “யுவாகுமார:”, “அரும்பினை அலரை” என்கிறபடியே அப்பால்யத்தோடு தோள்தீண்டியான யௌவநத்தை உடையனாய், “ஸர்வகந்த:” என்கிற திவ்யாங்கபரிமளத்தாலே த்ரிபாத்விபூதியைத் தேக்கி, “ஸர்வரஸ:” என்கிற ஸர்வரஸஸாரஸ்யத்தாலும் ஸூரி ஸங்கங்களை விஹ்வலராக்கி, ஆதித்யாதி, தேஜ:பதார்த்தங்களைக் கரிக்கொள்ளியாக்குகிற தன்னுடைய திவ்யதேஜஸ்ஸாலே “ஶோபயந் தண்டகாரண்யம் தீப்தேந ஸ்வேந தேஜஸா” என்கிறபடியே பரம பதத்தை மயிற்கழுத்துச் சாயலாக்கிப் பொற்குப்பியில் மாணிக்கம் புறம்பொசிந்து காட்டுமாப்போலே உள்வாயிலே நிழலெழுகிற ஜ்ஞாந ஶக்த்யாதி, குணங்களையும், அக்குணங்களுக்கும் ஆஶ்ரயமான திவ்யாத்மஸ்வரூபத்தையும், ‘யதா கப்யாஸம் புண்டரீகமேவ- மக்ஷிணீ”, ”செந்தாமரைத்தடங்கண்’ என்று. அப்போதலர்ந்த செவ்வித் தாமரைத் தடாகம் போலே நிரங்குஶைஶ்வர்யத்தாலும், ஆஶ்ரித வாத்ஸல்யத்தாலும் குதறிச்சிவந்து திருச்செவியளவும் அலையெறி கிற திருக்கண்களையும், ”உள்ளே வெண்பலிலகுசுடர்’ என்று திரு முகத்திலே பாலசந்த்ரிகையைச் சொரிகிற மந்தஸ்மிதத்தையும், திருக்கழுத்தடியிலே ஸ்நிக்தநீலமாய் அலையெறிகிற திருக்குழற் கற்றையையும், “திருவிளையாடு திண்டோள்” என்கிறபடியே பெரிய பிராட்டியாருக்கு லீலாகல்பகோத்யாநமாய், ஶார்ங்கஜ்யாகிணகர்க்க ஶமான நாலுதிருத்தோள்களையும், இவைதொடக்கமான திவ்யா வயவஶோபையையும், ஆபாதசூடம் பெருக்காறு போல் அலை யெறிகிற திவ்யலாவணய ஸிந்துவையும், நாச்சிமாரும், நித்ய ஸூரிகளும் அநுபவித்து, அநுபவஜநிதப்ரீதிப்ரகர்ஷத்தாலே ‘தத், விப்ராஸோ விபந்யவோ ஜாக்ருவாம் ஸஸ்ஸமிந்ததே” என்கிற படியே பெருங்கடல் இரைக்குமாப்போலே பெரியகிளர்த்தியோடே வாயாரப்புகழ்வாரும், ‘பிணங்கி அமரர் பிதற்றும் குணம்”, “கோதில வண்புகழ்கொண்டு சமயிகள் பேதங்கள் சொல்லிப்பிதற்றும் பிரான்” என்கிறபடியே ஸ்வாநுபூதமானகுணங்களினுடைய தாரதம்யத்தைச் சொல்லி ஸரஸவிவாதகோலாஹலம் பண்ணுவாரும், ஸஸம்ப்ரம ந்ருத்தம் பண்ணுவாருமாய், நித்யஸுரிகள் திரளாக மொய்த்துக் கொண்டு அப்பெரிய போகஸம்ப்ரமங்களைப் பண்ணும் இவர்க ளடைய ஒவ்வொரு குணஶீகரங்களிலே குமிழ்நீருண்டு,

தான் நிஸ்தரங்க, ஜலதிபோலே அவாக்யநாதர:” என்கிறபடியே ஸ்வாநுபவாநந்தவைபவத்தாலே அவிக்ருதனாய், ”நேமியும் சங்கும் இருகைக்கொண்டு பன்னெடுஞ்சூழ் சுடர் ஞாயிற்றோடு பான்மதி யேந்தி ஓர் கோலநீல நன்னெடுங்குன்றம் வருவதொப்பான்” என்கிற படியே ஒரு மரகதகிரி தன் கொடிமுடித்தலையிலே சந்த்ரஸூர்யர் களைக்கவ்வி இருக்குமாப்போல் எதிர் மடித்த திருத்தோள்களிலே ஆழ்வார்களை ஏந்தி, ஒரு திருக்கையைத் திருவநந்தாழ்வான் மடியிலே ஊன்றி, ஒருபக்கத்திலே மின்குழாம் சேர்ந்தாப்போலே ஸர்வாபரணபூஷிதையாய், ஸ்வவைஶ்வரூப்ய வைபவத்தையுடை யளாய், ஈஶ்வரனை வாய்க்கரையிலே அமிழ்த்தும்படியான ஶீல சரிதங்களையுடையளாய், உபயவிபூதிநாயகியாய், ஈஶ்வரஸ்வரூப குணவிபூதிகளுக்கு நிரூபகபூதையாய், ஸ்வஸம்பந்தத்தாலே ஈஶ்வர னுடைய ஶேஷித்வ போக்யத்வங்களைப் பூரிக்கக்கடவளான பிராட்டி யோடும், இடப்பக்கத்திலே இம்மிதுநபோகைகளாய், அவளோடொத்த ஸௌந்தர்யாதிகளை உடையரான ஸ்ரீபூ-நீளைகளோடும், ”ஶ்ரியா ஸார்த்தம் ஜகத்பதிராஸ்தே ”தயாஸஹாஸீநம்”, ”ஹ்ரீஶ்ச தே லக்ஷ்மீஶ்ச பத்ந்யௌ ‘ என்கிறபடியே கூட எழுந்தருளியிருந்து நித்ய ஸூரிகளை அடிமை கொள்ளுகிற ஸ்ரீவைகுண்டநாதனைக்கண்டு, கண்டபோதே ப்ரீதிப்ரகர்ஷம் பிடரிபிடித்துத் தள்ள, வேரற்றமரம் போலே விழுவது எழுவதாய், ”ந ஶாஸ்த்ரம் நைவ ச க்ரம:” என்கிற படியே க்ரமவிவக்ஷையின்றியிலே தாய்நாடுகன்றேபோலே ஸத்வரனாய்க் கொண்டு, ‘ஆநந்தமயமாத்மாநமுபஸங்க்ராமதி” என்கிறபடியே ஸமீபஸ்த,னாய், ”இத்தம்வித் பாதே நைவாத்யாரோ- ஹதி” என்று பாதபீடத்திலே காலையிட்டுப் படுக்கையைத் துகைத்து, மடியிலே சென்றேறும்.

அவனும் நெடுநாள் தேஶாந்தரம்போன ப்ரஜை சாவாதேவந்தால் பெற்றதகப்பன் கண்வாங்காதே பார்த்துக்கொண்டிருக்குமாப்போலே ஸம்ஸாரதாபாநுபவத்தால் வந்த விடாயெல்லாம் ஆறும்படி அழகிய கடாக்ஷாம்ருததாரைகளாலே குளிரவழியவார்த்து ‘ஸம்ஸ்ப்ருஶ்யா- க்ருஷ்ய ச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே’ என்கிறபடியே தன் நாலுதிருத்தோள்களாலும் வரவணைத்து உச்சி மோந்து இவன் நீர்ப் பண்டமாம்படி சில ஸாந்த்வநோக்திகளைப் பண்ணும் அவனும் ததீய ஸ்பர்ஶஸுகத்தாலே உடம்படைய மயிரெரிந்து “ரஸம் ஹ்யேவாயம் லப்த்வாநந்தி பவதி” என்று பரமாநந்தியாய், “அக்ருதம் க்ருதாத்மா ப்ரஹ்மலோகமபி ஸம்பவாமி”, “ப்ரஜாபதேஸ்ஸபாம் வேஶ்ம ப்ரபத்யே யஶோஹம் பவாமி ப்ராஹ்மணாநாம் யஶோ ராஜ்ஞாம் யஶோ விஶாம்”, “தத்புண்டரீகநயநம் விஷ்ணோர்த்ரக்ஷ்யாம்யஹம் முகம்”, ‘கதாநுஸாக்ஷாத் கரவாணி சக்ஷுஷா”, ‘உன் கொழுஞ்சோதி உயரத்துக் கூட்டரிய திருவடிக்கள் எஞ்ஞான்று கூட்டுதியே”, ”அடியார்கள் குழாங்களை உடன்கூடுவ தென்று கொலோ”, ”அப்யேஷ ப்ருஷ்டே மம பத்மஹஸ்த: கரம் கரிஷ்யதி” என்கிறபடியே அத்தேஶ விஶேஷத்திலே சென்று பெறக்கடவோமே, திருமாமணி மண்டபத் திலே சென்றேறக்கடவோமே, நித்யஸுரிகளோடே அந்யதமராகக் கடவோமே, ஸ்ரீவைகுண்டநாதனைக் காணக்கடவோமே, அவன் திருவடிகளிலே சென்று விழக்கடவோமே, நம்மைக் கண்டால் இன்னான் என்று திருவுள்ளமாகக் கடவோமே, அணிமிகுதாமரைக் கையாலே நம் தலையை அலங்கரிக்கக்கடவோமே – என்றாப்போலே தான் ஆசார்யஸமாஶ்ரயணத்துக்கு அநந்தரம் பண்ணிப்போந்த மநோ ரதங்களடைய வயிறுநிரம்பிக் கண்டிடமெங்கும் திறந்து பாய்கிற பக்திரூபாபந்ந ஜ்ஞாநத்தாலே ”ஸோஶ்துதே ஸர்வாந் காமாந் ஸஹப்ரஹ்மணா விபஶ்சிதா” இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே பாகவத்ஸ்வரூபரூபகுணங்களில் ஒன்றும் பிரிகதிர்படமாட்டாதே, அப்ராப்தமாய், அபேடாக்யமாய், அஸ்திரமாய், அதிக்ஷூத்ரமான துர் விஷயங்களைக்கவ்வி அநாதிகாலம் பட்ட வெறுப்படையத்தீரும்படி அதுக்கு எதிர்த்தட்டான இவ்விஷயத்தை அநுபவித்து, அவ்வநுபவ ஜநித ப்ரீதிப்ரகர்ஷம் ஒருபக்கத்திலே கடைவெட்டிவிடவேண்டும்படி அணைத்தேங்கலாகத் தேங்கினவாறே, இதுக்குப் பரிவாஹரூபமாக ‘ஹாவு ஹாவு ஹாவு, அஹமந்நமஹமந்நமஹமந்நம், அஹமந்நாதோஹமந்நாதோஹமந்நாத:” என்றாப்போலே ஜ்வரஸந்நி பதிதரைப்போலே வாயாரப்புகழ்ந்து, அத்தால் ஆராமையாலே விக் ரஹபரிக்ரஹம் பண்ணி, “யேந யேநதாதாகச்சதி தேந தேந ஸஹ கச்சதி” என்கிறபடியே அடிமைசெய்வது, அதுதனக்கொன்றிரண்டு பால் ஆராமையாலே “ஸ ஏகதாபவதித்விதாபவதி த்ரிதா பவதி ஸஹஸ்ரதா பவதி ” என்று அநேகஶரீரபரிக்ரஹம் பண்ணி அடிமை செய்வது, த்ரிபாத்விபூதியிலே பண்ணும் அடிமையால் ஆராமையால் “ஸர்வேஷுலோகேஷுகாமசாரோபாவதி”, “இமாந்லோகாந் காமாந்நீ காமரூப்யநுஸஞ்சரந்” என்று லீலாவிபூதியிலும் தொடர்ந்தடிமை செய்வதாய், அப்படி ஸர்வதேஶங்களிலும், ஸர்வகாலங்களிலும் உசிதமான ஸர்வவித கைங்கர்யங்களையும் பண்ணி, இக்கைங்கர்யத் தாலே ஈஶ்வரனுக்குப் பிறந்த முகமலர்த்தியை அநுபவியாநின்று கொண்டு, ‘நோபஜநம் ஸ்மரந்நிதம் ஶரீரம்’ பண்ணி, “ந ச புநராவர்த்ததே” என்கிறபடியே யாவதாத்மபாவி ஆநந்தநிர்ப்பரனா யிருக்கும்.

அபயப்ரதமிஶ்ராணாம் ஸூநுநா ஸ்வாது நிர்மிதாம் |   முக்தபோகாவலீமேநாம் ஸேவந்தாம் ஸாத்த்விகா ஜநா: ||

முக்தபோகாவலீ முற்றிற்று.

நாயனாராச்சான்பிள்ளை திருவடிகளே ஶரணம்

Languages

Related Parts

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.