நவவித ஸம்பந்தம்

பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த

நவவித ஸம்பந்தம்

 1. “பிதா ச ரக்ஷகஶ்ஶேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி: | ஸ்வாம்யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யமநூதித ||

என்கிறபடியே – 1. அகாரத்தாலே – பிதாபுத்ரஸம்பந்தம் சொல்லி, 2. 2.”அவ-ரக்ஷணே” என்கிற தாதுவினாலே – ரக்ஷ்யரக்ஷக ஸம்பந்தஞ்சொல்லி, 3. லுப்தசதுர்த்தியாலே – ஶேஷஶேஷி ஸம்பந்தஞ்சொல்லி, 4. உகாரத்தாலே – பர்த்ருபார்யா ஸம்பந்தஞ் சொல்லி, 5. மகாரத்தாலே – ஜ்ஞாத்ருஜ்ஞேய ஸம்பந்தஞ் சொல்லி, 6. நமஸ்ஸாலே  ஸ்வஸ்வாமி ஸம்பந்தஞ்சொல்லி,  7. நாரப்பதத்தாலே – ஶரீரஶரீரி ஸம்பந்தஞ் சொல்லி, 8. அயந பதத்தாலே – ஆதாராதேய ஸம்பந்தஞ்சொல்லி, 9. ஆயபதத் தாலே – போக்த்ருபோக்ய ஸம்பந்தஞ்சொல்லி, ஆக, திருமந்த்ரத் தால் – நவவித ஸம்பந்தங்களைச் சொல்லித் தலைக்கட்டுகிறது.

நம்மாசார்யர்கள், ப்ரதமரஹஸ்ய தாத்பர்யமான நவவித ஸம்பந்தம் ஸ்வரூபஜ்ஞனுக்கு நித்யாநுஸந்தேயமென்று அநுஸந்தித்தும் உபதே ஶித்தும் போருவர்கள்.

அவையெவையென்னில் – 1. விஶேஷண விஶேஷ்ய ஸம்பந்தம்,   2. ரக்ஷ்யரக்ஷகஸம்பந்தம், 3. ஶேஷஶேஷி ஸம்பந்தம், 4. பர்த்ரு பார்யா ஸம்பந்தம், 5. ஜ்ஞாத்ருஜ்ஞேய ஸம்பந்தம், 6. ஸ்வஸ்வாமி ஸம்பந்தம் 1. ஶரீரஶரீரி ஸம்பந்தம், 8. தார்யதாரக ஸம்பந்தம்     9. போக்த்ருபோக்ய ஸம்பந்தம்.

(1) இதில், விஶேஷண விஶேஷ்ய ஸம்பந்தமாவது. 1. ப்ரக்ருத்யர்த்த ஶங்கா நிவர்த்தகமாய், 2. ஆஶ்ரயாஶ்ரயியாய், 3. வ்யாவர்த்தக வ்யாவர்த்யமாயிருப்பதொன்று.

 1.   ப்ரக்ருத்யர்த்த, ஶங்கா நிவர்த்தகமாகையாவது – ஸமஸ்தஶப்த காரணமான அகாரஸ்வபாவத்தாலே தத்வாச்யனும், ஸமஸ்தஶப்த, வாச்யமான சிதசித்துக்களுக்குக் காரணமாமிடத்தில் ‘நித்யங்க ளானவை கார்யமாமிடத்தில். அநித்யங்களாமே” என்கிற ஶங்கை யுதிக்க, அவை நித்யப்ரஹ்ம விஶேஷணமாகையாலே அநித்யத்வம் ஶங்கநீயமன்றென்று பரிஹரிக்குமதாகை.
 2. ஆஶ்ரயாஶ்ரயியாவது – ஶௌக்ல்யம் படத்தைப் பற்றியல்லது நில்லாதாப்போலே, சிதசித்துக்கள் பகவத்ஸ்வரூபத்தைப் பற்றி யல்லது ஸத்தையற்றிருக்கை.
 3. வ்யாவர்த்தக வ்யாவர்த்யமாகையாவது – இவை பகவத் ஸ்வரூபத்துக்குண்டான இதர வ்யாவ்ருத்திக்கு ப்ரகாஶகமாய், வ்யாவர்த்யமான பகவத்ஸ்வரூபம் வ்யாவர்த்தகமான இவற்றை யொழிய ப்ரகாஶியாதபடியுமாயிருக்கை. ஆக, நித்யகார்யாநாதித்வ ஸூசகம் இந்த ஸம்பந்தம்.

(2) ரக்ஷ்யரக்ஷக ஸம்பந்தமாகையாவது – 1. தாதுஸித்தமாய், 2. ப்ர க்ருத்யர்த்தாநந்தரபாவியாய், 3. உபயஸ்வரூபோசிதமாயிருப்ப தொன்று.

 1.   தாதுஸித்தமாகையாவது – 1. “அவ – ரக்ஷணே” என்கிற தாத்வர்த்தமான ரக்ஷணம்–நிர்விஷயமாயும் நிராஶ்ரயமாயும் நில்லாமையாலே. 2 “யேந ஜாதாநி ஜீவந்தி” இத்யாதி ப்ரஸித்தமான ரக்ஷ்ய ரக்ஷகஸ்வரூப ப்ரதர்ஶநமாகை.
 2. ப்ரக்ருத்யர்த்தாநந்தரபாவித்வமாகையாவது – (திருவாய் 2.8.5) “மூவாத்தனிமுதலாய் மூவுலகுங் காவலோன்” என்கிறபடியே, ப்ரக்ருத்யர்த்தமான காரணத்வத்துக்கு அநந்தரம் வேண்டுவ தொன்றாகை.
 3. உபயஸ்வரூபோசிதமாகையாவது–ரக்ஷ்யரக்ஷக ஸ்வரூபமான பாரதந்த்ர்ய ஸ்வாதந்த்ர்யங்களுக்குச் சேருகை. பரதந்த்ரனுக்கு ஸ்வ ரக்ஷணாந்வயம் கூடாமையைக் காட்டும் இந்த ஸம்பந்தம். –

(3) ஶேஷஶேஷிஸம்பந்தமாவது – 1. விபக்திஸித்தமாய், 2. தாத்வர்த்தபரார்த்ததா ப்ரகாஶகமாய், 3. போகாநுரூபதாதர்ஶகமா யிருப்பதொன்று.

 1. விபக்திஸித்தமாகையாவது – அகாரத்தில் ஏறிக்கழிந்த சதுர்த்தியிலுதித்த ஶேஷத்வம் – 1. “யஸ்யாஸ்மி” இத்யாதி ப்ரஸித்தமான ஶேஷஶேஷிகளைக் காட்டுகை.
 2. தாத்வர்த்த பரார்த்ததா ப்ரகாஶகமாசையாவது – தாத்வர்த்த மான ரக்ஷணம் ஶரீரியான ஶேஷிப்ரயோஜநமத்தனையென்று காட்டுகை,
 3. போகாநுரூபதா தர்ஶகமாகையாவது – ஶேஷவஸ்து ஸ்வ ரூபம் ஶேஷிவிநியோகாநுகுணமாயிருக்கையாயிற்று நிலைநின்ற வேஷம் என்று காட்டுகை. அதாவது. ஶேஷி ஶேஷத்வத்தை அழியமாறி விநியோகிக்குமிடத்தில் பிற்காலியாத முறையுணர்த்தி, ஸ்வகதஸ்வரூபகுணத்தையும் ஸஹியாததொரு ஸம்பந்தம்.

(4) பர்த்ருபார்யா ஸம்பந்தமாவது-1. உகாரஸித்தமாய், 2. விபக்த்யர்த்த ஶோதகமாய், 3. ஸ்வரூபப்ராப்தமாயிருப்பதொன்று.

 1. உகாரஸித்தமாகையாவது – உகாரார்த்தம் அவதார ணார்த்தமாயிருக்கை. அதாவது – ரக்ஷகனான புருஷோத்தம னுக்கே ரக்ஷ்யமான ஆத்மஸ்வரூபம் அற்றுத்தீர்ந்திருக்கு மென்று தோற்றுகை.
 2. விபக்த்யர்த்த ஶோதகமாகையாவது – பதிவ்ரதையினுடைய ஶேஷேத்வம் அநந்யார்ஹமாயிருக்குமாபோலே, லுப்தசதுர்த்யர்த்த மான பகவச்சேஷத்வமும் அநந்யார்ஹமென்று மறுக்களைந்தி ருக்கை.

    3 ஸ்வரூபப்ராப்தமாகையாவது – பர்த்ருத்வ பார்யாத்வங்கள் பும்ஸ்த்ரீத்வத்துக்கீடாமாபோலே, பர்த்ருபார்யா ஸம்பந்தம் ஸ்வா தந்த்ர்ய பாரதந்த்ர்யங்களுக்கீடாகை. அந்யார்ஹப்ரஸங்காஸஹம் இந்த ஸம்பந்தம்.

(5) ஜ்ஞாத்ருஜ்ஞேய ஸம்பந்தமாகையாவது – 1 மகாரத்ருஶ்யமாய்,  2 உகாரார்த்தாநுஸந்தாநாபேக்ஷிதமாய், 3 அசித்வ்யாவ்ருத்தி வேஷமாயிருப்பதொன்று.

 1. மகாரத்ருஶ்யமாகையாவது – 1. “மந – ஜ்ஞாநே” என்கிற ஜ்ஞாநவாசியான மகாரம் காட்டுகிற ஜ்ஞாத்ருத்வத்துக்கு ஜ்ஞேயம் பகவத்ஸ்வரூபாதிகளாய்த் தோன்றுகை.
 2. உகாரார்த்தாநுஸந்தாநாபேக்ஷிதமாகையாவது – உகாரார்த்த மான பர்த்ருபார்யா ஸம்பந்தாநுஸந்தாநத்துக்கு ஜ்ஞாத்ருத்வம் அபேக்ஷிதமாகை.
 3. அசித்வ்யாவ்ருத்தி வேஷமாகையாவது – இந்த ஸம்பந்தங் களையறிகையும், ஜ்ஞேயமும், ஜ்ஞாதாவாகையும், ஜ்ஞேயாதீநமு மாய், தத்ப்ரயோஜநமுமாயிருக்கும் இந்த ஜ்ஞாத்ருத்வமென்று காட்டும் இந்த ஸம்பந்தம்.

(6) ஸ்வஸ்வாமி ஸம்பந்தமாவது – 1, நமஶ்ஶப்த தாத்பர்யமாய்,     2. மகாரார்த்த நிபந்தநப்ரமநாஶகமாய், 3. ஸ்வாபாவிகமாயிருப்ப தொன்று.

 1. நமஶ்ஶப்த தாத்பர்யமாகையாவது – நமஶ்ஶப்தார்த்தமான அஹம் மமதா நிவ்ருத்தி, பலித்வாபிமாநித்வங்களையும் ‘ஸ்வகத மன்று, பரகதம்’ என்று காட்டி, பலியுமாய், அபிமாநியுமான எம்பெருமானுடைமையுமாய்த் தோன்றுகை.
 2. மகாரார்த்த நிபந்தநப்ரம நாஶகமாகையாவது – மகாரார்த்த மான ஜ்ஞாத்ருத்வ நிபந்தநமாய் வந்த கர்த்ருத்வப்ரமத்தை அறுக்கு மதாகை. அதாவது – பராதீநமான ஸ்வரூபத்தின் குணவிஶேஷங்க ளும் பராதீநமென்று ஸ்வாதீநதாப்ரதிபத்தியைக் கெடுக்கை.
 3. ஸ்வாபாவிகமாகையாவது – அஹங்காராதிகளைப் போலே வந்தேறியன்றிக்கே, 2. “ஸ்வத்வமாத்மநி ஸஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம்” என்கிறபடியே ஜீவபரர்களுடைய ஸ்வஸ்வாமி ஸம்பந்தம் ஸ்வதஸ்ஸித்தமாய்ப் போருகை. ஸ்வத்துக்கு ஸ்வரக்ஷண கர்த்ருத்வமில்லையென்றும், ஸ்வாமிக்கே அது தொழி லென்றும் காட்டுகிறது இந்த ஸம்பந்தம்

(7) ஶரீரஶரீரி ஸம்பந்தமாவது – 1. நாராயணபதத்தில்  ஸமாஸ விஶேஷ ஸித்தமாய், 2. நமஶ்ஶப்தார்த்த ஸ்வரூபப்ரகாஶகமாய்,     3. ஸாமாநாதிகரண்யயோக்யமாய் இருப்பதொன்று.

 1. ஸமாஸ விஶேஷஸித்தமாகையாவது – நாராயண பதத்தில் பஹுவ்ரீஹி ஸமாஸத்திலே வ்யாப்யமான நாரங்கள் ஶரீரமாய், அந்தர்வ்யாப்தியாலே வ்யாபகஸ்வரூபம் ஶரீரியாய்த் தோன்றுகை.
 2. நமஶ்ஶப்தார்த்த ஸ்வரூபப்ரகாஶகமாகையாவது – நமஶ் ஶப்தார்த்தமான ஸ்வஸ்வாமி ஸம்பந்தம், க்ருஹக்ஷேத்ராதி ஸம்பந்தங்கள் போலன்றிக்கே அப்ருதக் ஸித்தமாயிருக்குமென்று காட்டுகை.
 3. ஸாமாநாதிகரண்ய யோக்யமாகையாவது – ஸ்வரூபபேதத் தாலே பிந்நப்ரவ்ருத்தி நிமித்தமான ஜீவபரஸ்வரூபம் ஶரீர ஶரீரியான ஐக்யத்தாலே ஒன்றென்னலாகை. விஶிஷ்டாத்வைத ப்ரகாஶகம் இந்த ஸம்பந்தம்.

(8) தார்யதாரக ஸம்பந்தமாவது – 1. ஸமாஸாந்தர ஸித்தமாய்,      2. ஶரீரஶரீரி ஸம்பந்தைகலக்ஷணமாய், 3. அசித்விஶேஷ ஸ்திதி ஹேதுவாயிருப்பதொன்று.

 1. ஸமாஸாந்தர ஸித்தமாகையாவது – நாராயணபதத்தில் தத்புருஷ ஸமாஸஸித்தையான பஹிர்வ்யாப்தியாலே நாரபதவாச்யங்கள் தார்ய மாய், அயநபதவாச்யன் தாரகனாய்த் தோன்றுகை.
 2. ஶரீரஶரீரி ஸம்பந்தைக லக்ஷணமாகையாவது – ஆதேயத்வ விதேயத்வ ஶேஷித்வரூபமான ஶரீரலக்ஷணங்களிலும், ப்ரதாநமான ஆதேயத்வ ஆதாரத்வரூபலக்ஷணம் ஒன்றாய்த் தோன்றுகை.
 3. அசித்விஶேஷ ஸ்திதிஹேதுவாகையாவது – 1.”அநேக ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய நாமரூபே வ்யாகரவாணி” என்று அந்தர் வ்யாப்திபோலே சேதநஸ்திதி ப்ரதாநமாகை யன்றிக்கே பஹிர் வ்யாப்தியாலே சேதநாசேதநங்களிரண்டினுடையவும் வ்யவஸ்தித ஸ்வரூபஸ்திதி வ்யாபாரங்களுக்குக் காரணமாய்த் தோன்றுகை. சிதசிந்நித்யஸ்திதிகாரணம் இந்த ஸம்பந்தம்.

(9) போக்த்ரு போக்ய ஸம்பந்தமாவது – 1. சரம விபக்தி ஸித்தமாய், 2. பூர்வஸம்பந்த ப்ரயோஜந ப்ரதர்ஶகமாய், 3. ப்ரதிஸம்பந்திபோகாநு ரூபமாயிருப்பதொன்று.

 1. சரமவிபக்தி ஸித்தமாகையாவது – (ஆய) என்கிற சதுர்த்தீ விபக்தியிலே அநந்யார்ஹ ஶேஷபூதனான மகாரவாச்யனுடைய ஸஹஜஶேஷவ்ருத்தி தோன்ற, அதில் கர்த்ருத்வ போக்த்ருத்வங்கள் ஶரீரியான பரமஶேஷிக்கேயாய், ஶரீரமான ஶேஷபூதனுக்கன்றென் றிருக்கை.
 2. பூர்வஸம்பந்த ப்ரயோஜக ப்ரதர்ஶகமாகையாவது – ஸர்ப்ப விஷவத் தார்யதாரகத்வங்கள் நிஷ்ப்ரயோஜநமாய் விடாதே. ரஸநாரஸவஸ்துவத் தார்யதாரகங்களுக்கு அநுகூல க்ராஹ்ய க்ராஹகரூப ப்ரயோஜநத்தைக் காட்டுமதாகை.
 3. ப்ரதிஸம்பந்தி போகாநுரூபமாகையாவது – கைங்கர்யப்ரதி ஸம்பந்தியான ஶேஷியினுடைய கைங்கர்யரஸாநுபவத்துக்கும், கைங்கர்யாஶ்ரயமான ஶேஷபூதனுடைய ஶேஷிபோகவிருத்த ரஸத்வராஹித்யத்துக்கும் இடமாயிருக்கை. ஶேஷித்வத்திலும் ஶேஷத்வத்திலும் மறுக்களைந்தது இந்த ஸம்பந்தம்,

இதில், 1. விஶேஷண விஶேஷ்ய ஸம்பந்தஜ்ஞாநம் பிறக்கவே காரணாந்தரஶங்கை அறும், 2. ரக்ஷ்யரக்ஷக ஸம்பந்தஜ்ஞாநம் பிறக்கவே ரக்ஷகாந்தரஶங்கை அறும். 3. ஶேஷஶேஷிஸம்பந்த ஜ்ஞாநம் பிறக்கவே ஶேஷ்யந்தரஶங்கை அறும். 4. பர்த்ருபார்யா ஸம்பந்த ஜ்ஞாநம் பிறக்கவே அந்யார்ஹஶங்கை அறும். 5. ஜ்ஞாத்ரு ஞேய ஸம்பந்தஜ்ஞாநம் பிறக்கவே ஜ்ஞேயாந்தர ஶங்கை அறும்.    6. ஸ்வஸ்வாமி ஸம்பந்தஜ்ஞாநம் பிறக்கவே ஸ்வாதந்த்ர்யஶங்கை அறும். 7. ஶரீரஶரீரி ஸம்பந்தஜ்ஞாநம் பிறக்கவே ஸ்வரூபைக்ய ஶங்கை அறும். 8. தார்ய தாரக ஸம்பந்தஜ்ஞாநம் பிறக்கவே தாரகாந்தர ஶங்கை அறும். 9. போக்த்ரு போக்ய ஸம்பந்தஜ்ஞாநம் பிறக்கவே போக்த்ருத்வஶங்கை அறும்.- ஆக, நவவித, ஸம்பந்தமு மறிந்து ஆநந்தித்திருக்கவும்.

நவவித ஸம்பந்தம் முற்றிற்று.

பிள்ளை லோகாசார்யர் திருவடிகளே ஶரணம்.     

ஜீயர் திருவடிகளே ஶரணம்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

 • Free copy of the publications of the Foundation
 • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
 • Free access to the library and research facilities at the Foundation
 • Free entry to the all events held at the Foundation premises.