॥ श्रीमद्रहस्यत्रयसारे तत्त्वत्रयचिन्तनाधिकारः ॥ ५ ॥
5.1 प्रकृत्यात्मभ्रान्तिर्गळति चिदचिल्लक्षणधिया
तथा जीवेशैक्यप्रभृतिकलहस्तद्विभजनात् ।
अतो भोक्ता भोग्यं तदुभयनियन्तेति निगमै
र्विभक्तं नस्तत्वत्रयमुपदिशन्त्यक्षतधियः ॥ १४ ॥
5.2 संबन्धமும் अर्थपञ्चकமுங்கூட ஆறு अर्थமறியவேண்டியிருக்க இவற்றில் एकदेशமான तत्वत्रयத்தை मुमुक्षुவுக்கு विशेषिத்தறிய வேணுமென்று आचार्यர்களுपदेशिத்துப்போருகைக் கடியென்னென்னில்; அதுக்கடி प्रकृत्यात्मभ्रमமும் स्वतन्त्रात्मभ्रमமும் இதுக்கு निदानமான अनीश्वरवादरुचिயுமாகிற महा-
5.3 विरोधिகளை முற்படக்கழிக்க प्राप्तமாகை. இத்தை நினைத்து भोक्तृभोग्य-नियन्तृरूपத்தாலே शास्त्रங்களிலே तत्वविवेकம் பண்ணுகிறது. இவற்றில் வைத்துக்கொண்டு ‘‘अचेतना परार्था च नित्या सततविक्रिया । त्रिगुणा कर्मिणां क्षेत्रं प्रकृते रूपमुच्यते ॥’’ (பரமஸம்ஹிதா.) ‘‘अनादिर्भगवान् कालो नान्तोऽस्य द्विज विद्यते” (வி-பு. 1-2-26), ‘‘कलामुहूर्तादिमयश्च कालो न यद्विभूतेः परिणामहेतुः’’ (வி-பு. 4-1-84), ‘‘ज्ञानानन्दमया लोकाः’’ (பாஞ்சராத்ரம்), ‘‘कालं स पचते तत्र न कालस्तत्र वै प्रभुः’’ (பார-ஶாந்தி. 196-9.) इत्यादिகளிலே त्रिगुणकालशुद्धसत्वरूपங்களான त्रिविधाचेतनங்களுடைய स्वभावஞ் சொல்லிற்று. ‘‘पुमान्न देवो न नरः’’ (வி-பு. 2-13-98.), ‘‘नायं देवो न मर्त्यो वा’’(), ‘‘क्षरस्सर्वाणि भूतानि कुटस्थोऽक्षर उच्यते’’ (கீதை 15-16) ‘‘यद्वै पश्यन्ति सूरयः’’ (வி-பு. 1-6-39) इत्यादिகளாலே त्रिविधजीवர்களுடைய प्रकारம் विवेकिக்கப்பட்டது.
5.4 ‘‘सर्वज्ञस्सर्वदृक्सर्वशक्ति-ज्ञानबलर्द्धिमान् । क्लमतन्द्री भयक्रोधकामादिभिरसंयुतः ॥’’ (வி-பு. 5-1-46) इत्यादिகளாலே ईश्वरस्वभावम् उपदिष्टமாயிற்று. இவ்वीशेशितव्यरूपமான तत्वत्रयம் நிற்கும் நிலையை ‘‘स्वाधीनत्रिविधचेतनाचेतनस्वरूपस्थितिप्रवृत्तिभेदम्’’ என்று சுருங்க அருளிச்செய்தார்.
5.5 त्रिविधचेतनரென்றது बद्धரையும் मुक्तரையும் नित्यரையும். त्रिविधाचेतनமென்றது त्रिगुणद्रव्यத்தையும் कालத்தையும் शुद्धसत्वமான द्रव्यத்தையும். स्वरूपமென்றது स्वासाधारणधर्मத்தாலே निरूपितமான धर्मिயை. स्थितिயாவது இதினுடைய
5.6 कालान्तरानुवृत्ति. இதுதான் नित्यवस्तुக்களுக்கு नित्यैயாயிருக்கும். अनित्य-वस्तुக்களுக்கு ईश्वरसङ्कल्पத்துக்கீடாக ஏறியுஞ் சுருங்கியுமிருக்கும். இங்கு प्रवृत्तिயாவது प्रवृत्तिनिवृत्तिरूपமான व्यापारம். இவையெல்லாம் वस्तुக்கள் தோறும் प्रमाणप्रतिनियतமாயிருக்கும். இப்प्रमाणங்கள் वस्तुக்களைக் காட்டும் போது அவ்வோ वस्तुக்களின் स्वरूपத்தையும், स्वरूपनिरूपकधर्मங்களையும், निरूपितस्वरूपविशेषணங்களையும், व्यापारங்களையுங் காட்டும்.
5.7 அதில் स्वरूपத்தை स्वरूपनिरूपकधर्मங்களாலே विशिष्टமாகவே காட்டும். அந்த स्वरूपத்தைச் சொல்லும்போது அவ்வோ धर्मங்களையிட்டல்லது சொல்லவொண்ணாது அவற்றைக் கழித்துப்பார்க்கில் शशविषाण तुल्यமாம். ஆகையால் जीवस्वरूपத்தைச் ज्ञानत्वमानन्दत्वममलत्वमणुत्वमित्यादिகளான निरूपकधर्मங்களையிட்டு निरूपिத்து ज्ञानमानन्दममलमणु என்று இம்मुखங்
5.8 களாலே சொல்லக்கடவது. இஜீजीवतत्त्वம் सर्वेश्वरனுக்கு शेषமாயே யிருக்குமென்றும், அவனுக்கே निरूपाधिकशेषமென்றும், अयोगान्ययोग-व्यवच्छेदங்களாலே प्रथमपदத்தில் தோற்றின शेषत्वம் संबन्धरूपமாகையாலே संबन्धिस्वरूपம் निरूपितமானாலல்லதறிய வொண்ணாமையாலே ஜீவனுக்கு இது निरूपितस्वरूपविशेषமென்னலாம். अणुत्वे सति चेतनत्वம் போலே स्वतश्शेषत्वे सति चेतनत्वமும் जीवलक्षणமாகவற்றாகையாலே இச்शेषत्वம் ஜீவனுக்கு
5.9 स्वरूपनिरूपकமென்னவுமாம். இப்படி विभुत्वेसति चेतनत्वமும் अनन्या-धीनत्वनिरूपाधिकशेषित्वादिகளுமீश्वरलक्षणங்கள். जीवेश्वररूपமான आत्मवर्गத்துக் கெல்லாம் பொதுவான लक्षणம் चेतनत्वமும் प्रत्यक्त्वமும். चेतनत्वமாவது ज्ञानाश्रयமாகை; प्रत्यक्त्वமாவது தனக்குத்தான் தோற்றுகை. அப்போது धर्मभूतज्ञाननिरपेक्षமாக நானென்று தோற்றும். இப்படி चेतनत्वादिகளீश्वरனு க்கும் ஜீவனுக்கும் பொதுவாகையாலே யவனிற்காட்டில் व्यावृत्ति தோற்றுகைக்காக जीवलक्षणத்தில் स्वतश्शेषत्वादिகள் சொல்லுகிறது. प्रथमा-क्षरத்தில் चतुर्थिயில் தோற்றின तादर्थ्यத்துக்கு उपाधिயில்லாமையாலே सर्वरक्षक
5.10 னான श्रियःपतिக்கு जीवात्मा निरुपाधिकशेषமாயேயிருக்குமென்றிப்படி याव-त्स्वरूपம் संबन्धஞ்சொல்லுகை अयोगव्यवच्छेदம். मध्यमाक्षरத்தில் अवधारण-सामर्थ्यத்தாலே அவனுக்கே निरुपाधिकशेषம் வேறோருத்தருக்கு निरुपाधिकशेषமன்றென்கை अन्ययोगव्यवच्छेदம். இச்शेषत्वம் भागवतशेषत्वपर्यन्तமாக வளரும்படி மேலே சொல்லக்கடவோம். இப்படியிருக்கிற चेतनருக்குப்
5.11 प्रवृत्तिயாவது पराधीनமுமாய் परार्थமுமான कर्तृत्वமும் भोक्तृत्वமும் ईश्वरன் தன் भोक्तृत्वार्थமாக இவர்களுக்கு कर्तृत्वाभोक्तृत्वங்களை உண்டாக்குகையாலிவை परार्थங்கள். बद्धचेतनருக்கு நீக்கியுள்ளாரில் भेदம் अविद्याकर्मवासनारुचिप्रकृति-संबन्धयुक्तராயிருக்கை. இவர்களுக்கு अन्योन्यம் வரும் ज्ञानसुखादिभेदத்தை ब्रह्मादिस्तंबपर्यन्तங்களான வகுப்புக்களிலே கண்டுகொள்வது. இப்बद्धचेतनர் தந்தாமுக்கு कर्मानुरूपமாக ईश्वरனடைத்த शरीरங்களை धर्मिस्वरूपத்தாலும்
5.12 धर्मभूतज्ञानத்தாலும் धरियाநிற்பர்கள். धर्मिயால் வருகிற धारणம் शरीरத்தினுடைய सक्त्तैக்குப் प्रयोजकமாயிருக்கும். जाग्रदाद्यवस्थैயில் धर्मभूतज्ञानத்தாலே வருகிற शरीरधारणம் पुरुषार्थतदुपायानुष्ठानங்களுக்கும் कृतोपायனான परमैकान्ति க்கு भगवदनुभवकैङ्कर्यங்களுக்கும் उपयुक्तமாயிருக்கும். पापकृத்துக்களுக்கு
5.13 இச்शरीरधारणம் विपरीतफलத்துக்கு हेतुवाயிருக்கும். இஜீजीवர்கள் இச்शरीरத்தை விட்டாலிதின் सङ्घातங்குலையுமித்தனை. शरीरத்துக்கு उपादानமான द्रव्यங்கள் ईश्वरशरीरமாய்க்கொண்டு கிடக்கும். बद्धचेतनருக்கு इतरரிற் காட்டில் स्थितिभेदं संसारबन्धம் यावन्मोक्षमनुवर्तिக்கை. प्रवृत्तिभेदம் पुण्यपापानुभयरूप ங்களான त्रिविधप्रवृत्तिகளும். मुक्तருக்கு நீக்கியுள்ளாரில் भेदம் प्रतिबन्धकनिवृत्तिயாலே आविर्भूतस्वरूपமாயிருக்கை. स्थितिभेदம் पूर्वावधि யுண்டான आविर्भावத்துக்கு उत्तरावधिயன்றிக்கேயிருக்கை. இவர்களுக்கு
5.14
अन्योन्यं स्थितिभेदं आविर्भावத்தில் முற்பாடு பிற்பாடுகளாலுண்டான முன்புற்ற வேற்றச் சுருக்கம். प्रवृत्तिभेदம் अनादिकालமிழ்ந்து பெற்ற परिपूर्णभगवदनुभवजनितप्रीतिकारितமான यथाभिमतकैङ्कर्यतद्विशेषங்கள். नित्यருக்கு நீக்கியுள்ளாரில் भेदம் अनाद्याविर्भूतस्वरूपராய் परतन्त्रராயிருக்கை. இவர்களுக்கு நீக்கியுள்ளாரிற்காட்டில் स्थितिभेदம் अनाद्यनुवृत्तமான शेषितत्त्वानुभवம். இது नित्यர்க் கெல்லாம் பொதுவானபடியாலே யிவர்களுக்கு अन्योन्यம் स्थितिயில் वैषम्यமில்லை. இவர்களுக்குப் प्रवृत्तिभेदம் अनादिप्रवाहनित्यங்களான कैङ्कर्यविशेषங்கள். अनन्तगरुडादिகளுக்கு अधिकारविशेषங்களும் तदुचितकैङ्कर्यங்களும் व्यवस्थितங்களாயிருக்க नित्यர்க்கும் मुक्तர்க்கும் सर्वविधकैङ्कर्यसिद्धिயுண்டென்கிற
5.15 अर्थங்கூடுமோவென்னில், स्वामिயினுடைய अभिप्रायத்துக்கீடாகத்தனக்கभिमतங்களான कैङ्कर्यங்களிலே கிடையாதவையொன்றுமில்லாமை யாலும், ஓரொருத்தர்க்கு व्यस्थितங்களான कैङ्कर्यங்களைத் தாங்களனுஷ்டிக்கவேணுமென்கிற अभिसन्धि வேறொருத்தர்க்குப் பிறவாமையாலும், ஆரேனுமொருவரनुष्ठिக்கும் कैङ्कर्यமும் स्वामिக்கு प्रियமானபடியாலே तदुचितकैङ्कर्यங்களும் सर्वர்க்கும் प्रियமாய் कैङ्कर्यफलமான प्रीतिயில் வாசி யில்லாமையாலும் सर्वர்க்கும் सर्वविधकैङ्कर्यसिद्धिயுண்டென்கையில் विरोधமில்லை. இவ்வாत्माக்களெல்லார்க்கும் धर्मिस्वरूपம் போலே धर्म-
5.16 भूतज्ञानமும் द्रव्यமாயிருக்க இதின் स्वरूपத்தைத் தனித்து இங்கு அருளிச் செய்யாதொழிந்தது चेतनரென்றெடுத்த विशिष्टத்திலே विशेषणணமாய்ச் சொருகி நிற்கையடியாக. இद्धर्मभूतज्ञानநம் विषयप्रकाशदशैயிலே स्वाश्रयத்துக்கு स्वयंप्रकाशமாயிருக்கும். இது ईश्वरனுக்கும் नित्यருக்கும் नित्यविभुवा யிருக்கும். மற்றுள்ளாருக்கு संसारावस्थैயில் कर्मानुरूपமாக बहुविधसङ्कोच-विकासவத்தாய் मुक्तावस्थैயிலே नैजविकासத்தாலே பின்பு யாவत्कालம் विभुவா
5.17 யிருக்கும். இதற்குப் प्रवृत्तिயாவது விஷயங்களை प्रकाशिப்பிக்கையும், प्रयत्नावस्थैயிலே शरीरादिகளை प्रेरिக்கையும், बद्धदशैயில் सङ्कोचविकासங்களும், आनुकूल्यप्रातिकूल्यप्रकाशनमुखத்தாலே भोगமென்கிற வवस्थैயை யடைகையும். भोगமாவது தனக்கनुकूलமாகவாதல் प्रतिकूलமாகவாதலொன்றையनुभविக்கை. ईश्वरविभूतिயான सर्ववस्तुவுக்குமாनुकूल्यம் स्वभावமாயிப்படி ईश्वरனும்
5.18 नित्यரும் मुक्तரும் अनुभविயா நிற்க, संसारिகளுக்கு कालभेदத்தாலும் पुरुषभेदத்தாலும் देशभेदத்தாலுமल्पानुकूलமாயும் प्रतिकूलமாயுமுदासीनமாயுமிருக்கிற विभागங்களெல்லாமிவ்वस्तुகளுக்கு स्वभावसिद्धங்களன்று. இதிவர்களுடைய कर्मங்களுக்கீடாக सत्यसंकल्पனான ईश्वरனிவர்களுக்கு फलप्रदानம் பண்ணின प्रकारம். இக்कर्मफलमनुभविக்கைக்கு बद्धருக்கு स्वरूपयोग्यதையும்
5.19 सहकारियोग्यतैயுமுண்டு. स्वरूपयोग्यதை परतन्त्रचेतनत्वம். सहकारियोग्यதை सापराधत्वம். नित्यருக்கும் मुक्तருக்கும் परतन्त्रचेतनதையாலே स्वरूपयोग्यதையுண்டே யாகிலும் ईश्वरानभिमतविपरीतानुष्ठानமில்லாமையாலே सहकारियोग्यதையில்லை. ईश्वरன் सर्वप्रशासिताவாய் தானொருத்தருக்கு शासनीयனன்றிக்கே நிற்கை யாலே परतन्त्रचेतनत्वமாகிற स्वरूपयोग्यதையுமில்லை. स्वतन्त्रனாகையாலே स्वतन्त्रा ज्ञातिलङ्घनமாகிற सहकारियोग्यதையுமில்லை. जीवेश्वररूपரான आत्मा-க்களெல்லாருடையவும் स्वरूपம் स्वस्मै स्वयं प्रकाशம். இद्धर्मिस्वरूपप्रकाशத்துக்கு बद्धருக்குமுள்பட வொருகாலத்திலும் सङ्कोचविकासங்களில்லை.
5.20 सर्वात्माக்களுடையவும் धर्मभूतज्ञानம் विषयप्रकाशनவேளையிலே स्वाश्रयத்துக்கு स्वयंप्रकाशமாயிருக்கும். ज्ञानत्वமும் स्वयंप्रकाशत्वமும் धर्मधर्मिகளுக்கு साधारणம். धर्मभूतज्ञानத்துக்கு विषयित्वமேற்றம். धर्मिயானவாत्मस्वरूपத்துக்கு प्रत्यक्त्व மேற்றம். ज्ञानत्वமாவது कस्यचित्प्रकाशकत्वம். அதாவது – தன்னுடைய வாகவுமாம், வேறோன்றினுடைய வாகவுமாம். ஏதேனுமொன்றினுடைய व्यवहारानुगुण्यத்தைப்பண்ணுகை. स्वयंप्रकाशत्वமாவது தன்னை विषयीकरिப்பதொரு ज्ञानान्तरத்தாலபேக்ஷையறத் தானே प्रकाशिக்கை. धर्मभूतज्ञानத்துக்கு विषयित्वமாவது தன்னையொழிந்ததொன்றைக் காட்டுகை.
5.21 आत्माக்களுக்கு प्रत्यक्त्वமாவது स्वस्मै भास्मानत्वம். அதாவது தன் प्रकाश த்துக்குத் தான் फलियाயிருக்கை. ஏதேனுமொரு वस्तुவின் प्रकाशத்துக்கு फलिயென்கிற सामान्याकारத்தைத் தன் प्रकाशத்துக்குத் தான் फलिயென்று
5.22 विशेषिத்தவாறே प्रत्यक्त्वமாம். இவ்विशेषமில்லாத वस्तुவுக்கு இस्सामान्यமுமித்தோடு व्याप्तமான चेतनत्वமுமில்லை. இத் धर्मधर्मिகளிரண்டும் स्वयं- प्रकाशமாயிருந்தாலும் नित्यत्वादिधर्मविशेषविशिष्टरूपங்களாலே ज्ञानान्तरवेद्यங்
5.23 களுமாம். தன்னுடைய धर्मभूतज्ञानம் தனக்கு ज्ञानान्तरवेद्यமாம்போது प्रसरण-भेदमात्रத்தாலே ज्ञानान्तरव्यपदेशம். त्रिविधाचेतनங்களும் परருக்கே தோன்றக் கடவனவாயிருக்கும். अचेतनமாவது ज्ञानाश्रयமன்றிக்கே யொழிகை. பிறருக்கே தோன்றுகையாவது தன் प्रकाशத்துக்குத் தான் फलिயன்றிக்கே யொழிகை. இவையிரண்டும் धर्मभूतज्ञानादिகளுக்கும் तुल्यம். त्रिविधा-चेतनங்களென்றெடுத்தவற்றில் प्रकृतिயும் कालமும் जडங்கள். शुद्धसत्वமான
5.24 द्रव्यத்தையும் जडமென்று சிலர் சொல்லுவர்கள். जडत्वமாவது स्वयं-प्रकाशமன்றிக்கேயிருக்கை. भगवच्छास्त्रादिपरामर्शம் பண்ணினவர்கள் ज्ञानात्मकत्वம் शास्त्रसिद्धமாகையாலே शुद्धसत्वद्रव्यத்தை स्वयंप्रकाशமென்பர்கள்.
5.25 இப்படி स्वयंप्रकाशமாகில் संसारिகளுக்கு शास्त्रवेद्यமாகவேண்டாதே தானே தோன்றவேண்டாவோவென்னில்; सर्वात्माக்களுடையவும் स्वरूपமும் धर्मभूतज्ञानமும் स्वयंप्रकाशமாயிருக்க स्वरूपந்தனக்கே स्वयंप्रकाशமாய் வேறெல்லார்க்கும் ज्ञानान्तरवेद्यமானாற்போலவும், धर्मभूतज्ञानம் स्वाश्रयத்துக்கே स्वयंप्रकाशமாய் इतरருக்கு स्वयंप्रकाशமல்லாதாப்போலவுமிதுவும் नियतविषयமாக स्वयंप्रकाशமானால் विरोधமில்லை. ‘‘यो वेत्ति युगपत्सर्वं प्रत्यक्षेण सदा स्वतः । तं
5.26 प्रणम्य हरिं शास्त्रं न्यायतत्वं प्रचक्ष्महे ॥’’(ந்யாயதத்வம்) என்கிறபடியே धर्मभूतज्ञानத்தாலே सर्वத்தையும் साक्षाङ्करिத்துக்கொண்டிருக்கிற ईश्वरனுக்கு शुद्धसत्वद्रव्यம் स्वयंप्रकाशமாயிருக்கிறபடி எங்ஙனேயென்னில்? இவனுடைய धर्मभूतज्ञानம் दिव्यात्म-स्वरूपம் முதலாக सर्वத்தையும் विषयीகரியா நிற்க, இத்दिव्यात्मस्वरूपம் स्वयं-प्रकाशமாகிறாப்போலேயிதுவும் स्वयंप्रकाशமாயிருக்கலாம்.
5.27 இப்படி नित्यருக்கும் तुल्यம். विषयप्रकाशकालத்திலே धर्मभूतज्ञानம் स्वाश्रयத்துக்கே स्वयंप्रकाशமானாற்போலே मुक्तருக்கு அவ்வவस्थैயிலேயிதுவும் स्वयंप्रकाश மானால் विरोधமில்லை. धर्मभूतज्ञानத்தினுடைய स्वात्मप्रकाशनशक्तिயானது विषयप्रकाशமில்லாத காலத்தில் कर्मविशेषங்களாலே प्रतिबद्धैயானாற்போலே शुद्धसत्वத்தினுடைய स्वात्मप्रकाशनशक्तिயும் बद्धदशैயில் प्रतिबद्धैயாகையாலே शुद्धसत्वம் बद्धர்க்குப் प्रकाशियाதொழிகிறது. ‘‘धियः स्वयंप्रकाशत्वं मुक्तौ स्वाभाविकं यथा । बद्धे कदाचित्संरुद्धं तथाऽत्राऽपि नियम्यते ॥’’ இவ்வளவு अवस्थान्तरापत्ति विकारि-
5.28 द्रव्यத்துக்கு विरुद्धமன்று. ஆகையாலே प्रमाणप्रतिपन्नार्थத்துக்கு युक्तिविरोधஞ் சொல்ல வழியில்லை. இங்ஙனன்றிக்கே उपचारத்தாலே निर्वहिக்கப் பார்க்கில் आत्मस्वरूपத்திலும் ज्ञानादिशब्दங்களை उपचारத்தாலே अन्यपरங் களாக்கலாம். स्वयंप्रकाशத்துக்கு रूपरसादिगुणங்களுமவையடியாக வந்த
5.29 पृथिव्यादिविभागமும் परिणामादिகளுங்கூடுமோவென்கிற चोद्यமும் धर्मभूतज्ञानத்துக்கும் धर्मिज्ञानத்துக்குமுண்டான वैषम्यங்களை प्रतिबन्दिயாகக்கொண்டு, प्रमाणबलத்தாலே परिहृतம். இப்படி स्वयंप्रकाशமான शुद्धसत्वद्रव्यத்தை ज्ञातृत्वமில்லாமையாலே त्रिविधाचेतनங்களென்று சேரக்கோத்தது. இவ்வचेतन ங்கள் மூன்றுக்கும் प्रवृत्तिயாவது ईश्वरसङ्कल्पनुरूपங்களான विचित्रपरिणामादिகள்.
5.30 இவற்றில் त्रिगुणद्रव्यத்துக்கு स्वरूपभेदம் गुणत्रयाश्रयत्वம். सततपरिणामशीलமான இத்द्रव्यத்துக்கு सत्वरजस्तमस्सुக்கள் अन्योन्यம் समமானபோது महाप्रळयம். विषमமானபோது सृष्टिस्थितिகள். गुणवैषम्यமுள்ள प्रदेशத்திலே महदादिविकारங்கள். இதில் विकृतமல்லாத प्रदेशத்தையும் विकृतமான प्रदेशத்தையுங்கூட
5.31 प्रदेशத்திலே महदादिविकारங்களிति । இங்கு परिणाम மில்லாத गुणங்களுக்கு साम्यवैषम्यம் கூடுவது எப்படி யென்னில்? मधुरादिरसங்களில்
प्रकृतिमहदहङ्कारतन्मात्रभूतेन्द्रियங்களென்று இருபத்து நாலு तत्वங்களாக शास्त्रங்கள் வகுத்துச் சொல்லும். சில विवक्षाविशेषங்களாலே யோரொரு விடங்களிலே तत्वங்களை யேறவுஞ்சுருங்கவுஞ் சொல்லா நிற்கும். இத்तत्वங்களில் अवान्तरவகுப்புகளுமவற்றில் अभिमानिदेवதைகளுமவ்
5.32 வோவுपासनाधिकारिகளுக்கறியவேணும். आत्माவுக்கவற்றிற்காட்டில் व्यावृत्तिயறிகை இங்கு நமக்கு प्रधानம். இவையெல்லாம் सर्वेश्वरனுக்கு अस्त्रभूषणादिरूपங்களாய் நிற்கும் நிலையை
புருடன் மணிவரமாகப் பொன்றாமூலப்
பிரகிருதிமறுவாக மான்றண்டாகத்
தெருண்மருள் வாண்மறைவாக வாங்காரங்கள்
சாரங்கஞ்சங்காக மனந்திகிரியாக
இருடீகங்களீரைந்துஞ் சரங்களாக
விருபூதமாலை வனமாலையாக
கருடனுருவாமறையின் பொருளாங் கண்ணன்
கரிகிரிமேனின்றனைத்துங் காக்கின்றானே. (12)
என்கிற கட்டளையிலே அறிகையுचितம் .
5.33 இருபத்தி நாலுतत्त्वங்களுக்குமन्योन्यं स्वरूपभेदமவ்வோ लक्षणங்களாலே सिद्धம். இவற்றில் कार्यமான இருபத்திமூன்று तत्त्वங்களுக்கு மிவற்றா
5.34 லாरब्धங்களானவற்றுக்கும் स्थितिயில் வருமேற்றச்சுருக்கங்கள் पुराणங்களிலே प्रसिद्धமானபடியே கண்டு கொள்வது. ‘‘स्वसत्ताभासकं सत्वं गुण-सत्वाद्विलक्षणं’’(பாஞ்சராத்ரம்), ‘‘तमसः परमो धाता’’(ராமா-யுத் 114-15) ‘‘अप्राकृतं सुरैर्वन्द्य’’(ஜிதந்தா ஸ்தோ 2-21.) मित्यादिகளாலே तमस्सुக்கு மேலான देशविशेषம் सिद्धिக்கையாலே ‘‘अनन्तस्य न तस्यान्तस्संख्यानं वाऽपि
5.35 विद्यते । तदनन्तमसंख्यातप्रमाणञ्चापि वै यतः’’(வி-பு. 2-7-25, 26.) इत्यादिகள் नित्यविभूतिயாலवच्छिन्नமல்லாத प्रदेशத்தாலே मूलप्रकृतिக்கு आनन्त्यஞ்சொல்லுகின்றன. त्रिगुणद्रव्यத் துக்கு प्रवृत्तिभेदம் बद्धचेतनருடைய भोगापवर्गங்களுக்கும் ईश्वरனுடைய लीलारसத்துக்குமாக समமாகவும் विषमமாகவும் परिणामसन्ततिயை யுடைத் தாய் देहेन्द्रियादिरूपத்தாலே யவ்வோ व्यापारங்களையும் பண்ணுகை. இது रजस्तमस्सुக்களையிட்டு बद्धருக்கு तत्त्वங்களினுண்மையை மறைத்து विपरीत ज्ञानத்தை உண்டாக்குகிறது भोगार्थமாக. இது தானே अपवर्गार्थமாக सत्वविवृद्धिயாலே तत्वங்களை यथावत् प्रकाशिப்பிக்கிறது. இவையெல்லாம்
5.36 ईश्वरனுக்கு लीलारसावहமாயிருக்கும். शुद्धसत्वத்துக்கு स्वरूपभेदம் रजस्तमस्सुக்களோடு கலசாத सत्वगुणाश्रयமாயிருக்கை. இதின் स्थितिभेदம் नित्यமான मण्टपगोपुरादिகளிலும் ईश्वरனுடையவும் नित्यருடையவும் विग्रहविशेषங்களிலும் नित्यமாயிருக்கும். नित्यருடையவும் मुक्तருடையவும் ईश्वरனுடையவும் अनित्येच्छैயாலே வந்த विग्रहादिகளில் अनित्यமாயிருக்கும். இதின் प्रवृत्तिभेदம் இவர்களுடைய इच्छैக்கீடாக परिणामादिகளாலே शेषिக்கு भोगोपकरणமாயும் शेषभूतனுக்கு कैङ्कर्योपकरणமாயும் நிற்கை. कालத்துக்கு स्वरूपभेदம் जडமாய்
5.37 विभूवाயிருக்கை. இதின் स्थिति कालावच्छेदமில்லாமையாலே नित्यैயாயிருக்கும். प्रवृत्तिभेदம் कलाकाष्ठादिविभागத்தாலே सृष्ट्यादिகளுக்கு उपकरणமாயிருக்கிறபடியிலே கண்டுகொள்வது. இத்द्रव्यங்களெல்லாம் स्वरूपेण नित्य-ங்களாயிருக்கும். नामान्तरभजनार्हावस्थाविशेषविशिष्टतैயையிட்டுச் சிலவற்றை अनित्यங்களென்கிறது. அழிந்ததோடு सजातीयங்களான अवस्थान्तरங்கள் மேலும் முழுக்கவருகையாலே प्रवाहनित्यங்களென்று சொல்லுகிறது
5.38 இப்पदार्थங்களெல்லாவற்றினுடையவும் स्वरूपस्थितिप्रवृत्तिभेदங்கள் ईश्वरனுக்கு स्वाधीनங்களாயிருக்கையாவது ईश्वरसत्तैயையும் ईश्वरेच्छैயையுமொழிய இவற்றிற்கு सत्तादिகள் கூடாதொழிகை. ஆகையால் समस्त वस्तुக்களுக்கும் स्वभावसिद्धानुकूल्यம் ईश्वरेच्छायत्तம். இத்தாலே ईश्वरனுக்கும் नित्यருக்கும் मुक्तருக்கும் सर्वமும் अनुकूलமாயிருக்கும். बद्धருக்கு कर्मानुरूप மாக पुरुषभेदத்தாலும் कालभेदத்தலுமிவற்றில் प्रातिकूल्यங்களும் अल्पानुकूल्य ங்களும் நடவா நிற்கும். இப்बद्धர்தங்களுக்கும் स्वात्मस्वरूपம் सर्वदानुकूलமாக ईश्वरेच्छासिद्धம். இப்படி अनुकूलமான आत्मस्वरूपத்தோடே एकत्वभ्रमத்தாலும் कर्मवशத்தாலுமிறே हेयமான शरीरம் ज्ञानहीनர்க்கு अनुकूलமாய்த்
5.39 தோற்றுகிறது. இவற்றுக்கு कर्मोपाधिकமான प्रतिकूलरूपத்தாலே मुमुक्षुவைப் பற்ற त्याज्यत्वம். स्वाभाविकமான अनुकूलरूपத்தாலே मुक्तனைப்பற்ற
5.40 அவை தனக்கே उपादेयत्वம். अहङ्कारममकारयुक्तனாய்க்கொண்டு தனக்கென்று स्वीकरिக்குமவையெல்லாம் प्रतिकूलங்களாம். स्वरूपज्ञानம் பிறந்து स्वामिशेष மென்று காணப்புக்காலெல்லாம் अनुकूलமாம். இவ்வर्थம் परिपूर्णब्रह्मानु-भवஞ் சொல்லுமிடத்திலே பரக்கச்சொல்லக்கடவோம்.
இப்படி स्वाधीनसत्तादिகளையுடையவனாயிருக்கிற ईश्वरனுடைய स्वरूपம் सत्यत्वादिகளாகிற स्वरूपनिरूपकधर्मங்களாலே सत्यமாய் ज्ञानமாய் अनन्तமாய் आनन्दமாய் अमलமாயிருக்கும். இவ்வर्थத்தை “”””நந்தாவிளக்கே
5.41 யளத்தற்கரியாய்”” என்றும் “”உணர் முழு நல”” மென்றும் “”சூழ்ந்த தனிற்பெரிய சுடர்ஞானவின்பம்”” என்றும் “”அமல””னென்றும் इत्यादि களாலே ஆழ்வார்கள் अनुसन्धिத்தார்கள். மற்றுள்ள गुणங்களும் दिव्य-मङ्गलविग्रहादिகளுமெல்லாம் ईश्वरனுக்கு निरूपितस्वरूपविशेषणங்களாயிருக்கும். இக்गुणங்களில் ज्ञानबलैश्वर्यवीर्यशक्तितेजस्सुக்களென்று ஆறு गुणங்கள் परत्वो-पयुक्तங்களாயிருக்கும். सौशील्यवात्सल्यादिகள் सौलभ्योपयुक्तங்களாயிருக்கும். இக்गुणங்களெல்லாம் सर्वकालத்திலும் स्वरूपाश्रितங்களாயிருக்கும். पर-
5.42 व्यूहादिविभागங்களில் गुणनियमஞ்சொல்லுகிறதெல்லாம் அவ்வோरूपங் களை अनुसन्धिப்பார்க்கு सर्वेश्वरன் आविष्करिக்கும் गुणविशेषங்கள் சொல்லுகைக்காகவத்தனை. औपनिषदविद्याविशेषங்கள்தோறும் अनुसन्धेयगुणविशेषங் கள் नियतங்களானாற்போலே भगवच्छास्त्रोक्तமான रूपविशेषानुसन्धानத்துக்கும் गुणविशेषங்கள் नियतங்கள். அவ்விடத்தில் पररूपத்தில் ज्ञानादिगुणங்கள்
5.43 ஆறும் वेद्यங்கள். व्यूहங்கள் நாலென்றும் மூன்றென்றும் शास्त्रங்கள் சொல்லும். நாலு व्यूहமுண்டாயிருக்க व्यूहवासुदेवरूपத்துக்கு पररूपத்திற் காட்டில் अनुसन्धेय गुणभेदமில்லாமையாலே त्रिव्यूहமென்கிறது. இப்पक्षத்தை ‘‘गुणैष्षड्भिस्त्वेतैः प्रथमतरमूर्तिस्तवबभौ ततस्तिस्रस्तेषां त्रियुगयुगळैर्हित्रिभिरभूः’’(வரதராஜஸ்தவம் – 16) என்கிற श्लोकத்திலே संग्रहिத்தார்கள். இப்परव्यूहங்களில் गुणक्रियाविभागங்கள் ‘‘षाड्गुण्याद्वासुदेवः पर इति स भवान् मुक्तभोग्यो बलाढ्याद्बोधात्सङ्कर्षणस्त्वं हरसि वितनुषे
5.44 शास्त्रमैश्वर्यवीर्यात् । प्रद्युम्नस्सर्गधर्मौ नयसि च भगवन् शक्तितेजोऽनिरुद्धो बिभ्राणः पासि तत्त्वं गमयसि च तथा व्यूह्यरङ्गाधिराज’’(ரங்கராஜஸ்தவம்-உத்தரசகம் 39) என்கிற श्लोकத்திலே संग्रहिக்கப்பட்டன. जाग्रदादिभेदங்களிலுள்ள विशेषங்களெல்லாம் ‘‘जाग्रत्स्वप्नात्यलस तुरीयप्रायध्यातृक्रम-वदुपास्यः । स्वामिंस्तत्तद्गुणपरिबर्हश्चातुर्व्यहं वहसि चतूर्धा’’(ரங்கராஜஸ்தவம் உத்தரசதகம் – 40.) என்று संगृहीतங்களாயிற்று.
5.45 केशवादिகளான பன்னிரண்டு रूपங்களும் व्यूहान्तरங்கள். विभवங்களாவன पद्मनाभादिகளான முப்பத்துச்சில்வான रूपங்கள். இவற்றில் मत्स्यकूर्मादि களான अवतारங்களொரு प्रयोजनवशத்தாலே विशेषिத்துச் சொல்லப்பட்டன. இவ் विभवங்களில் ईश्वरனவ்வோ कार्यविशेषங்களுக்கீடாகத்தான் வேண்டின
5.46 गुणங்களை வேண்டினபோது மறைத்தும் வேண்டினபோது प्रकाशिப் பித்தும் நடத்தும். இவற்றில் आवान्तरभेदங்கள் ‘‘कृष्णरूपाण्यसङ्ख्यानि’’(பாஞ்சராத்ரம்.) इत्यादिகளிற்படியே अनन्तங்கள். இப்படி विभवान्तरங்களும் கண்டு கொள் வது. சில ஜீவர்களை विग्रहविशेषத்தாலும் शक्तिविशेषத்தாலும் अधिष्ठिத்து अतिशयितकार्यங்களை நடத்துகிறதுவும் विभवभेदம். परव्यूहादिरूपங்கள்தானே आश्रिதர்க்காக அவர்களपेक्षिத்தபடியே ‘‘बिम्बाकृत्यात्मना बिम्बे समागत्याव-
5.47 तिष्ठते’’ என்கிறபடியே நிற்கிற நிலை अर्चावतारம். सर्वருடையவும் हृदयங்களிலே सूक्ष्मமாயிருப்பதொரு रूपविशेषத்தைக்கொண்டு நிற்கிற நிலை अन्तर्याम्यवतारம். இது सर्वान्तर्यामिயான दिव्यात्मस्वरूपத்தை अनुसन्धिக்க இழிவார்க்குத் துறையாக ‘‘अष्टाङ्गयोगसिद्धानां हृद्यागनिरतात्मनाम् । योगिनामधिकार-
5.48 स्स्यादेकस्मिन् हृदये शये’’(ஸ்ரீ ஸாத்வதஸம்ஹிதை 2-7-8.) इत्यादिகளிலே சொல்லுகையாலே अन्तर्यामिरूपமென்று சொல்லப்பட்டது. இப்படி अवतरिக்கிற रूपங்களில் வகைகளெல்லாம் शुद्धसत्वद्रव्यमयங்களாய் कर्मतत्फलங்களோடு துவக்கற வருகையாலே शुद्ध-सृष्टिயென்று பேர்பெற்றிருக்கும். இவ் अवतारங்களெல்லாம் सत्यங்களென்றும், இவற்றில் ईश्वरனுக்கு ज्ञानादिशङ्कोचமில்லையென்றும்,
5.49 இவ்विग्रहங்கள் शुद्धसतत्वमयங்களென்றும், இவற்றிற்கு ईश्वरेच्छामात्रமே कारणமென்றும், धर्मरक्षणணம் பண்ணவேண்டும் कालமே कालமென்றும், साधुपरित्राणादिகளே प्रयोजनங்களென்றும் இவ்வर्थந்தெளிந்து अनुसन्धिப் பார்க்கு एकजन्मத்திலே स्वाधिकारानुगुणसमीहितोपायपूर्तिயாலே जन्मान्तरमनु-
5.50 भविயாதே मुक्तராகலாமென்றும் ‘‘बहूनि मे व्यतीतानि’’ (பகவத்கீதை 4-5.) என்று துடங்கி ஐந்து श्लोकத்தாலே गीताचार्यனருளிச்செய்தான். இது स्वतन्त्रप्रपत्तिनिष्ठனுக்கு शरण्यगुणविशेषज्ञानमुखத்தாலே उपायानुष्ठानक्षणத்திலே महाविश्वासादिகளை स्थिरीकरिத்து उपकारकமாம். இப்படியே अर्चावतारமும் மிறுக்கற मोक्षத்தைத்தரு
5.51 மென்னுமிடத்தை ‘‘सुरूपां प्रतिमां विष्णोः प्रसन्नवदनेक्षणाम् । कृत्वात्मनः प्रीतिकरीं सुवर्णरजतादिभिः ॥ तामर्चयेत्तां प्रणमेत्तां यजेत्तां विचिन्तयेत् । विशत्यपास्तदोषस्तु तामेव ब्रह्मरूपिणीम् ॥’’(விஷ்ணுதர்மம் 106-16.) என்று श्रीशौनकभगवा னருளிச்செய்தான். ஆழ்வார்களுமிவ்வதார रहस्यத்தையும் अर्चावतारवैलक्षण्यத்தையும் प्रचुरமாக अनुसन्धिத்து இதற்குப்பேரணியாக परत्वத்தைக் கண்டு போந்தார்கள். இப்படியிருக்கிற ईश्वरன் தன் आनन्दத்துக்குப் परीवाहமாகப் பண்ணும் व्यापारங்கள்
5.52 सकलजगत्सृष्टिस्थितिसंहार मोक्षप्रदत्वादिகள். இவ்வீश्वरன் ‘‘नित्यैवैषाजगन्माता-विष्णोःश्रीरनपायिनी’’(விஷ்ணுபுராணம் 1-8-17.) इत्यादिகளிற்படியே सर्वावस्थैயிலும் सपत्नीकனாய்க் கொண்டேயிருக்குமென்னுமிடத்தை ‘‘तत्त्वेन यः’’(ஆள-ஸ்தோ. 4.) ‘‘माता पिता’’(ஆள-ஸ்தோ. 5.) என்கிற श्लोकங்களிலே उपकारविशेषத்தாலே सादरமாக विशेषिத்துச் சொல்லப்பட்ட
5.53 पराशरपराङ्कुशप्रबन्धங்களிலே தெளிந்துகொள்வது. இவ்விடத்தில் दण्ड-धरत्वமும் पुरुषकारत्वादिகளும் எம்பெருமானுக்கும் பிராட்டிக்குங்கூறாக विभजिத்தव्यापारங்கள். उपदिश्यमानधर्माधारத்திற்காட்டில் अतिदिश्यमानधर्माधारத்
5.54 துக்கு विशेषம் स्वतःप्राप्तமென்று உவர் அருளிச்செய்ததுக்குமிப்படி विभागத்தால் வந்த वैषम्यத்திலே तात्पर्यம். இது ‘‘युवत्वादौ तुल्येऽपि’’(श्रीगुणरत्नकोशம் 34-வது श्लोकம்) என்கிற
5.55 श्लोकத்திலே निर्णीतம். “”இறை நிலை யுணர்வரிது””(திருவாய்மொழி 1-3-6.) என்றாழ்வாரருளிச் செய்த நிலத்திலே ஏதேனுமொரு वृथा निर्बन्धமாகாது. ‘‘कृशानर्थांस्ततः केचिदकृशांस्तत्र कुर्वते’’(பாரதம்-ஸபாபர்வம் 39-2) என்கிறபடியே तर्कपाण्डित्यத்தாலே நினைத்ததெல்லாம்
5.56 साधिக்கலாயிருக்கச் செய்தேயிறே நாம் प्रमाणशरणராய்ப் போருகிறது. ஆகையாலிவ்வீश्वर तत्त्वத்தையும் ईशितव्यतत्त्वங்களையும் यथाप्रमाणந் தெளியப்प्राप्तம். இவ்விடத்தில் सर्वज्ञனாகவும் வேண்டா, अत्यन्तानुपयुक्तங்களிற்போலே स्वल्पोपयुक्तங்களானவற்றில் अभिसन्धि பண்ணவும் வேண்டா,
5.57 अपरिच्छेद्यமான கடலிலே படகோடுவார் வழி முதலாக வேண்டுவன தெளியுமாப்போலே இவ்வளவு विवेकिக்கையवश्यापेक्षितம். இது प्रतिष्ठितமாகைக்காக இவற்றின் விரிவுகளெண்ணுகிறது. இப்படி மூன்று तत्त्वங்களாக வகுத்து चिन्तिத்தாப்போலே सर्वविशिष्टवेषத்தாலே ईश्वरன் एकतत्त्वமாக अनुसन्धिப்பார்க்கும் ईशेशितव्यங்கள் आत्मानात्माக்கள் उपायोपेयங்களென்றாப்போலே யிரண்டर्थம் ज्ञातव्यமாக வகுப்பார்க்கும், रक्ष्यன்
5.58 रक्षकன் हेयமுपादेय மென்றிப்புடைகளிலே अर्थचतुष्टयயம் ज्ञातव्यமாக संग्रहिப் பார்க்கும், முன்பு சொன்னபடியே अर्थपञ्चकம் षडर्थங்களென்று विवेकिப் பார்க்கும், रहस्यशास्त्रங்களிற்படியே सप्तपदार्थचिन्तादिகள் பண்ணுவார்க்கு மவ்வோ ज्ञानानुष्ठानप्रतिष्ठारूपங்களான प्रयोजनविशेषங்கள் கண்டு கொள்வது. ‘‘शास्त्रज्ञानं बहुक्लेशं बुद्धेश्चलनकारणम् । उपदेशाद्धरिं बुद्ध्वा विरमेत्सर्वकर्मसु ॥’’ என்கிறது उपयुक्ततमமான सारांशத்தைக் கடுக श्रवणம்பண்ணி, कृषि பண்ணாதே யுண்ணவிரகுடையவன் कृषि चिन्तैயை விடுமாப்போலே விரிவுகற்கைக் கீடான शास्त्राभ्यासादिकर्मங்களில் उपरतனாய்க் கடுக मोक्षोपायத்திலே மூள प्राप्तமென்றபடி.
उपयुक्तेषु वैशद्यं त्रिवर्गनिरपेक्षता ।
करणत्रयसारूप्यमिति सौख्यरसायनम् ॥
5.59 தேறவியம்பினர் சித்துமசித்துமிறையுமென
வேறுபடும் வியன்றத்துவமூன்றும் வினையுடம்பில்
கூறுபடுங் கொடுமோகமுந் தானிறையாங்குறிப்பும்
மாற நினைந்தருளான் மறைநூல்தந்த வாதியரே. (12)
आवापोद्वापतस्स्युः कतिकति कविधीचित्रवत्ततदर्थेषु
आनन्त्यादस्तिनास्त्योरनवधिकुहनायुक्तिकान्ताः कृतान्ताः ।
तत्त्वालोकस्तु लोप्तुं प्रभवति सहसा निस्समस्तान् समस्तान्
पुंस्त्वे तत्त्वेन दृष्टे पुनरपि न खलु प्राणिता (स्थाणुतादिः) स्थणुताधीः ॥ १५ ॥
इति श्रीकवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे तत्वत्रयचिन्तनाधिकारः पञ्चमः ॥