॥ श्रीमद्रहस्यत्रयसारे परदेवतापारमार्थ्याधिकारः ॥ ६ ॥
6.1 आत्मैक्यं देवतैक्यं त्रिकसमधिगतातुल्यतैक्यं त्रयाणा
मन्यत्रैश्वर्यमित्याद्यनिपुणफणितीराद्रियन्ते न सन्तः ।
त्रय्यन्तैरेककण्ठैस्तदनुगुणमनुव्यासमुख्योक्तिभिश्च
श्रीमान्नारायणो नः पतिरखिलतनुर्मक्तिदो मुक्तभोग्यः ॥ १६ ॥
6.2 उक्तवैधर्म्यங்களாலே பொதுவிலே प्रकृतिपुरुषेश्वरविवेकம் பண்ணினாலும் “”ஒன்றுந்தேவும்””(திருவாய்மொழி (4-10-1)) इत्यादिகளிற்படியே परदेवताविशेषनिश्चयமில்லாதபோது “”உன்னித்து மற்றொரு தெய்வந்தொழாளவனையல்லால்””(திருவாய்மொழி (4-6-10)) என்கிற
6.3 परमैकान्तित्वங்கூடாமையாலும், परमैकान्तिக்கல்லது व्यवधानरहितமாக मोक्षங் கிடையாமையாலும் ईश्वरனின்ன देवताविशेषமென்று निष्कर्षिக்கவேணும். அவ்விடத்தில் चेतनाचेतनங்களுடைய अत्यन्तभेदம் प्रमाणसिद्धமாகையாலே எல்லாம் परदेवतैயாயிருக்கிற ब्रह्मद्रव्यமென்கிற पक्षம் घटिயாது. स्वभावसिद्ध
6.4 மான जीवेश्वरभेदமுமப்படியே देवादिरूपரான ஜீவர்களுடைய अन्योन्यभेदமும் सुखदुःखादिव्यवस्थैயாலே प्रामाणिकமாகையால் सर्वान्तर्यामिயொருவனேயா கிலும் ब्रह्मरुद्रेंद्रादिसर्वदेवதைகளும் ईश्वरனோடும் தன்னில் தானும் अभिन्न ரென்கிறपक्षங்கூடாது. இத்देवதைகளில் प्रधानராகச்சொல்லுகிற ब्रह्म-रुद्रेन्द्रादिகளுக்கு कार्यत्वकर्मवश्यत्वங்கள் प्रामाणिकங்களாகையாலும், ‘‘आभूत-
6.5 संप्लवे प्राप्ते प्रलीने प्रकृतौ महान् । एकस्तिष्ठति विश्वात्मा स तु नारायणः प्रभुः’’(பாரதம் சாந்திபர்வம் 210-24.) ‘‘आद्यो नारा-यणो देवस्तस्माद्ब्रह्मा ततो भवः ।(வராஹபுராணம் 25-6.) ‘‘परो नारायणो देवस्तस्माज्जातश्चतुर्मुखः । तस्माद्रुद्रोभवद्देवि’’(வராஹபுராணம் 90-3.
) इत्यादिகளிலே ‘‘ततस्त्वमपि दुर्द्धर्षस्तस्माद्भावात्सनातनात् । रक्षार्थं सर्वभूतानां विष्णु-त्वमुपजग्मिवान्’’(ராமாயணம் உத்தரகாண்டம் 101-26.) என்கிறபடியே स्वेच्छावतीर्णனாய் त्रिमूर्तिमध्यस्थனான विष्णुना-
6.6 रायणादिशब्दवाच्यன் தானே தன்னுடைய पूर्वावस्थैயாலே सर्वजगத்துக்கும் कारणமென்கையாலும், ‘‘नित्यं हि नास्ति जगति भूतं स्थावरजङ्गमम् । ऋते तमेकं पुरुषं वासुदेवं सनातनम्’’(பாரதம் சாந்திபர்வம் 347-32) என்கிறபடியே அவனே नित्यனென்கையாலும் त्रिमूर्तिகளும் समரென்றும், त्रिमूर्तिகள் एकतत्त्वமென்றும், त्रिमूर्त्युत्तीर्णனீश्वरனென்றும், त्रिमूर्तिகளுக்குள்ளே ब्रह्माவாதல், रुद्रனாதலீश्वरனாதலென்றுஞ் சொல் லுகிற साम्यैक्योत्तीर्णव्यक्त्यन्तरपक्षங்கள் घटिயாது. ब्रह्मरुद्रादिகள் सर्वेश्वरனுக்குக்
6.7 कार्यभूतரென்னுமிடம், ‘‘तद्विसृष्टस्स पुरुषो लोके ब्रह्मेति कीर्त्यते’’(மநுஸ்ம்ருதி 1-11.) इत्यादिகளாலும், ‘‘संक्षिप्य च पुरा लोकान् मायया स्वयमेव हि । महार्णवे शयानोऽप्सु मां त्वं पूर्वमजीजनः(ராமா -உத். 104-4.), ‘‘क इति ब्रह्मणो नाम ईशोऽहं सर्वदेहिनाम् । आवां तवाङ्गे संभूतौ तस्मात्केशवनामवान्(ஹரிவம்சம் 134-48.), ‘‘अहं प्रसादजस्तस्य कस्मिंश्चित् कारणान्तरे । त्वं चैव क्रोधजस्तात पूर्वसर्गे सनातने’’(பாரதம் சாந்திபர்வம் 352-62.) என்று எதிரிகையாலே விடுதீட்டானபடியே யவர்கள் தங்கள் பாசுரங் களாலும்सिद्धம். இவர்கள் कर्मवस्यராய் சில कर्मविशेषங்களாலே सर्वेश्वरனை
6.8 आराधिத்துத் தந்தாம் पदங்கள் பெற்றார்களென்னுமிடம் ‘‘सर्वे देवा वासुदेवं यजन्ते सर्वे देवा वासुदेवं नमन्ते’’(), ‘‘सब्रह्मकास्सरुद्राश्च सेन्द्रा देवा महर्षयः । अर्चयन्ति सुरश्रेष्ठं देवं नारायणं हरिम्’’(பாரதம் சாந்திபர்வம் 350-30), ‘‘चिन्तयन्तो हि यं नित्यं ब्रह्मेशानादयः प्रभुम् । निश्चयं नाधि-गच्छन्ति तमस्मि शरणं गतः’’(பாரதம் சாந்திபர்வம் 210-33),‘‘पद्मे दिव्येऽर्कसङ्काशे नाभ्यामुत्पाद्यमामपि । प्राजापत्यं त्वया कर्म सर्वं मयि निवेशितम् । सोऽहं सन्यस्तभारो हि त्वामुपासे जगत्पतिम्’’(ராமா-உத். 104-7,8), ‘‘युगकोटि-सहस्राणि विष्णुमाराध्य पद्मभूः । पुनस्त्रैलोक्यधातृत्वं प्राप्तवानिति शुश्रुम’’(பார-குண்டதரோபாக்யானம்),
6.9 ‘‘विश्वरूपो महादेवस्सर्वमेधेमहाक्रतौ । जुहाव सर्वभूतानि स्वयमात्मानमात्मना॥(பாரதம் சாந்திபர்வம் 8-37), महादेव-स्सर्वमेधे महात्मा हुत्वाऽऽत्मानं देवदेवो बभूव । विश्वान् लोकान् व्याप्य विष्टभ्य कीर्त्या विराजते द्युतिमान् कृत्तिवासाः(பாரதம் சாந்திபர்வம் 20-12), ‘‘यो मे यथा कल्पितवान् भागमस्मिन् महाक्रतौ । स तथा यज्ञभागार्हो वेदसूत्रे मया कृतः(பாரதம் சாந்திபர்வம் 34-61)’’ इत्यादिகளிலே प्रसिद्धம்.
6.10 இவர்கள் भगवन्मायापरतन्त्रராய் गुणवश्यராய் ज्ञान- सङ्कोचविकासवाன்களாயிருப் பார்களென்னுமிடம் वेदापहारादिवृत्तान्तங்களிலும்,
6.11 ‘‘ब्रह्माद्यास्सकला देवा मनुष्याः पशवस्तथा । विष्णुमायामहावर्तगर्तान्धतमसावृताः’’(விஷ்ணுபுராணம் 5-30-47.) ‘‘ब्रह्मा विश्वसृजो धर्मो महानव्यक्तमेव च । उत्तमां सात्विकीमेतां गतिमाहुर्मनीषिणः’’(மநுஸ்ம்ருதி 12-50) इत्यादिகளிலும் सुव्यक्तம். இவர்கள் தங்களுக்கு अन्तरात्माவான அவன் கொடுத்த ज्ञानादि களைக்கொண்டு அவனுக்கேவல் தேவை
6.12 செய்கிறார்களென்னுமிடம் ‘‘एतौ द्वौ विबुधश्रेष्ठौ प्रसाद क्रोधजौ स्मृतौ । तदा-दर्शितपन्थानौ सृष्टिसंहारकारकौ’’(பாரதம் சாந்திபர்வம் 350-19) என்று சொல்லப்பட்டது. இவர்களுக்கு शुभाश्रयत्वமில்லை யென்னுமிடத்தை ‘‘हिरण्यगर्भो भगवान् वासवोऽथ प्रजापतिः’’(விஷ்ணுதர்மம் 6-7) என்று துடங்கி ‘‘अशुद्धास्ते समस्तास्तु देवाद्याः कर्मयोनयः’’(விஷ்ணுதர்மம் 56-77) என்றும், ‘‘आब्रह्म-स्तम्बपर्यन्ता जगदन्तर्व्यवस्थिताः । प्राणिनः कर्मजनित संसारवशवर्तिनः’’( விஷ்ணுதர்மம் 104-23) என்றும், ‘‘कर्मणां परिपाकत्वादाविरिञ्चादमङ्गळम् । इति मत्वा विरक्तस्य वासुदेवः परा गतिः’’(ஸ்ரீபாகவதம் 11-19-18.) என்றும், पराशरशौनकशुकादिகள் प्रतिपादिத்தார்கள். இவர்களுக்கு भगवान् आश्रयणीयனென்னுமிடத்தையும் भगवाனுக்கு ஓர் आश्रयणीयரில்லை யென்னுமிடத்தையும் ‘‘रुद्रं समाश्रिता देवा रुद्रो ब्रह्माणमाश्रितः । ब्रह्मा मामाश्रितो राजन्नाहं कञ्चिदुपाश्रितः ॥ ममाश्रयो न कश्चित्तु सर्वेषामाश्रयोह्यहम्’’(பார. ஆஶ்வமேதிகபர்வம் 118-37, 38.) என்று தானே
6.13 யருளிச்செய்தான். இவர்கள் उभयविभूतिनाथனான सर्वेश्वरனுக்கு विभूति-भूतரென்னுமிடம் ‘‘ब्रह्मादक्षादयः कालः(விஷ்ணுபுராணம் 1-22-39.) रुद्रः कालान्तकाद्याश्च’’(விஷ்ணுபுராணம் 1-22-33.) इत्यादिகளிலே மற்றுள்ளாரோடு तुल्यமாகச் சொல்லப்பட்டது. இப்படி वस्त्वन्तरம் போலே இவர்களும் सर्वशरीरिயான सर्वेश्वरனுக்கு प्रकारभूतரென்னுமிடம் वस्त्वन्तरங்களுக்கு மிவர்களுக்குஞ்சேர नारायणादिशब्दसामानाधिकरण्यத்தாலே
6.14 सिद्धம். இவர்கள் शरीरமாய் அவன் आत्माவாயிருக்கிறபடியை ‘‘तवान्त-रात्मा मम च ये चान्ये देहिसंज्ञिताः । सर्वेषां साक्षिभूतोऽसौ न ग्राह्यः केनचित् क्वचित्’’(பாரதம் சாந்திபர்வம் 361-4) என்று ब्रह्मा रुद्रனைக்குறித்துச்சொன்னான். இவர்கள் शेषभूतதர் அவன் शेषी என்னுமிடத்தை ‘‘दासभूताःस्वतस्सर्वे ह्यात्मानः परमात्मनः । अतोऽहमपि ते दास इति मत्वा नमाम्यहम्’’(மந்த்ரராஜபதஸ்தோத்ரம்.) என்று मन्त्रराजपदस्तोत्रத்திலே सर्वज्ञனான रुद्रன் தானே சொன்னான். இப்படி सर्वप्रकारத்தாலும் नारायणன் समाधिकदरिद्र னென்னு
6.15 மிடத்தை ‘‘न परं पुण्डरीकाक्षाद्दृश्यते पुरुषर्षभ ।(பாரதம் – பீஷ்மபர்வம் 67-2.) परं हि पुण्डरीकाक्षान्न भूतं न भविष्यति । न विष्णोः परमो देवो विद्यते नृपसत्तम’’ न वासुदेवात्परमस्ति मङ्गळं न वासुदेवात्परमस्ति पावनम् । न वासुदेवात्परमस्ति दैवतं न वासुदेवं प्रणिपत्य सीदति’’ ॥(பாரதம் – பீஷ்மபர்வம் 67-17.) ‘‘त्रैलोक्ये तादृशः कश्चिचन्न जातो न जनिष्यते’’() ‘‘न दैवं केशवात्परम्’’(நாரதீய புராணம் 18-33.) ‘‘राजाधिराजस्सर्वेषां विष्णुब्रह्ममयो महान् । ईश्वरं तं विजानीमस्स पिता स प्रजापति’’(பாரதம் ஆச்வமே. 43-13.) रित्यादिகளாலே பலபடியுஞ்சொன்னார்கள். கருவிலே திருவுடையார்களாய் जायमान दशैயிலே रजस्तमःप्रशमहेतुவான
6.16 मधुसूदनனுடைய कटाक्षமுடையவர்கள் मुमुक्षुக்களாவார்களென்னுமிடமும் ब्रह्मरुद्रद्रष्टரானவர்கள் रजस्तमःपरतन्त्रராவார்களென்னுமிடமும் ‘‘जायमानं हि पुरुषं यं पश्येन्मधुसूदनः । सात्विकस्स तु विज्ञेयस्स वै मोक्षार्थचिन्तकः ॥ पश्यत्येनं जायमानं ब्रह्मा रुद्रोऽथ वा पुनः । रजसा तमसा चास्य मानसं समभिप्लुतम्’’(பாரதம் சாந்திபர்வம் 358-73-77) என்று विभजिக்கப்பட்டது. இவர்கள் मुमुक्षुக்களுக்கு अनुपास्यரென்னுமிடமும், இவர்களுக்குக் कारणभूतனான सर्वेश्वरனேயிவர்களுக்கும் மற்றுமுள்ள मुमुक्षुக்களுக்கும் उपास्यனென்னுமிடமும் ‘‘संसारार्णवमग्नानां विषयाक्रान्तचेतसाम् । विष्णुपोतं विना नान्यत् किञ्चिदस्ति परायणम्’’(விஷ்ணு தர்மம் 1-59.) என்றும், ‘‘ब्रह्माणं शितिकण्ठञ्च याश्चान्या देवतास्स्मृताः । प्रतिबुद्धा न सेवन्ते यस्मात्परिमितं फलम्’’(பாரதம் சாந்திபர்வம் 350-36.) என்றும், ‘‘हरिरेकस्सदा ध्येयो भवद्भिस्सत्वसंस्थितैः । उपास्योऽयं सदा विप्रा उपायोऽस्मि हरेःस्मृतौ’’() என்றுஞ்சொல்லப்
6.17 பட்டது. இத்தாலே இவர்களை मोक्षोपकारकராகச் சொன்ன விடங்களும் आचार्यादिகளைப்போலே ज्ञानादिहेतुக்களாகையாலேயென்று निर्णीतம். இவ்வर्थம் ‘‘सूर्यस्यैव तु योभक्तस्सप्तजन्मान्तरं नरः । तस्यैव तु प्रसादेन रुद्रभक्तः प्रजायते ॥ शङ्करस्य तु यो भक्तस्सप्तजन्मान्तरं नरः । तस्यैव तु प्रसादेन विष्णुभक्तः प्रजायते ॥ वासुदेवस्य यो भक्तस्सप्तजन्मान्तरं नरः । तस्यैव तु प्रसादेन वासुदेवे प्रलीयते’’ என்கிறவிட த்திலும் விவக்ஷிதம். இப்படி सूर्यभक्त्यादिகள் परम्परया भगवद्भक्त्यादिகளிலே
6.18 மூட்டுவதும் परावरतत्त्वங்களிலே ऐक्यबुद्धिயும் व्यत्ययबुद्धिயும் समत्वबुद्धिயும் மற்றுமிப்புடைகளிலே வரும் மதிமயக்கங்களும் आसुरस्वभावத்தாலே ஒரு விஷயத்தில் प्रद्वेषादिகளுமன்றிக்கே सूर्यादिகளைப்பற்றுமவர்களுக்கே யென்னுமிடத்தை ‘‘ये तु सामान्यभावेन मन्यन्ते पुरुषोत्तमम् । ते वै पाषण्डिनोज्ञेया-स्सर्वकर्मबहिष्कृताः’’ इत्यादिகளிலே கண்டுகொள்வது. இப்படி ज्ञानादिகளில் மாறாட்டமுடையார்க்கு देवतान्तरभक्तिயுண்டாகிலும் भगवन्निग्रहத்தாலே
6.19 प्रत्यவாயமே फलिக்கும். ஆகையால் ‘‘त्वं हि रुद्र महाबाहो मोहशास्त्राणि कारय । दर्शयित्वाल्पमायासं फलं शीघ्रं प्रदर्शय’’(வராஹபுராணம் 70-36.) என்கிறபடியே मोहनशास्त्रங்களிலே दृष्टफल-सिद्धिயை யுண்டாக்கினதுவும் அவற்றையிட்டு मोहिப்பித்து नरकத்திலே விழவிடுகைக்காகவித்தனை. सत्यसङ्कल्पனான भगவான் ஒருவனை निग्राह्यனாகக்கோலினால் ‘‘ब्रह्मा स्वयंभूश्चतुराननो वा रुद्रस्त्रिनेत्रस्त्रिपुरान्तको वा । इन्द्रो महेन्द्रस्सुरनायको वा त्रातुं न शक्ता युधि रामवध्यम्’’(ராமாயணம் ஸுந்தரகாண்டம் 51-45.) என்கிறபடியே देवतान्तरங்கள் ரக்ஷிக்க शक्तரல்லர்கள். सर्वदेवतैகளும் सुग्रीवमहाराजादिகளைப்
6.20 போலே தனக்கு अन्तरङ्गராயிருப்பாரும் தன்னையடைந்தானொருவனை நலிய நினைத்தால் ‘‘सकृदेव प्रपन्नाय’’(ராமாயணம் யுத்தகாண்டம் 18-33.) என்கிறபடியே सत्यप्रतिज्ञனான தன் व्रதங்குலையாமைக்காக रावणादिகளைப்போல दुष्प्रकृतिகளாய்
6.21 निराकरिக்கவேண்டுவோரை निराकरिத்தும், श्रीवाநரவீரர்களைப்போலே सत्प्रकृतिகளாய் अनुकूलिப்பிக்கவேண்டுவோரை अनुकूलिப்பித்தும் सर्वेश्वरன் ரக்ஷிக்கும். देवतान्तरங்கள் பக்கல் ‘‘काङ्क्षन्तः कर्मणां सिद्धिं यजन्त इह देवताः । क्षिप्रं हि मानुषे लोके सिद्धिर्भवति कर्मजा’’(ஸ்ரீ கீதை 4-12.) என்கிறபடியே विषमधुतुल्यங்களான क्षुद्रफलங்கள் கடுக सिद्धिக்கும். அவைதானும் ‘‘लभते च ततः कामान् मयैव विहितान् हि
6.22 तान्’’(ஸ்ரீ கீதை 7-22.) ‘‘एष माता पिता चापि युष्माकञ्च पितामहः । मयानुशिष्टो भविता सर्वभूतवरप्रदः ॥ अस्य चैवानुजो रुद्रो ललाटाद्यस्समुत्थितः । ब्रह्मानुशिष्टो भविता सर्वसत्ववरप्रदः’’(பாரதம் சாந்திபர்வம் 349-76-77.) इत्यादि களிற்படியே भगवदधीनங்கள். ‘‘यस्मात्परिमितं फलम्’’(பாரதம் சாந்திபர்வம் 350-36.) ‘‘सात्विकेषु तु कल्पेषु
6.23 माहात्म्यमधिकं हरेः । तेष्वेव योगसंसिद्धा गमिष्यन्ति परां गतिम्’’(மாத்ஸ்ய புராணம் 290-16) என்கையாலே அவர்கள் பக்கல் मोक्षம் विळम्बिத்துங்கிடையாது. सर्वेश्वरன் பக்கல் ‘‘युग-कोटिसहस्रणि विष्णुमाराद्ध्य पद्मभू’’(பாரதம் குண்டதரோபாக்யானம்.) रित्यादिகளிற்படியே अतिशयितமான ऐश्वर्यादिகளும் வரும். பின்பு விடாய்தீர गङ्गास्नानம் பண்ணப் பாபம் போமாப் போலே विषयस्वभावத்தாலே आनुषङ्गिकமாக पापक्षयம் பிறந்து रजस्तमस्सुக்கள்
6.24 தலைசாய்ந்து सत्वोन्मेषமுண்டாய் जनकाम्बरीषकेकयादिகளுக்குப்போல क्रमेण मोक्षपर्यन्तமாய்விடும். मोक्षोपायनिष्ठனாம்போது ‘‘बहुनां जन्मनामन्ते ज्ञानवान् मां
6.25 प्रपद्यते’’(கீதை 7.19) ‘‘ये जन्मकोटिभिस्सिद्धास्तेषामन्तेऽत्र संस्थितिः’’(பெளஷ்கரஸம்ஹிதை.) ‘‘जन्मान्तरसहस्रेषु तपोध्यान-समाधिभिः । नराणां क्षीणपापानां कृष्णे भक्तिः प्रजायते’’(பாஞ்சராத்ரம்.) என்கிறபடியே विळम्बமுண்டு. मोक्षरुचि பிறந்து வல்லதொரு उपायத்திலே மூண்டால் ‘‘तेषामहं समुद्धर्ता मृत्यु
6.26 संसारसागरात् । भवामि न चिरात्पार्थ मय्यावेशितचेतसाम्’’(கீதை 12-7.) என்கிறபடியே मोक्षसिद्धिக்கு विळम्बமில்லை. स्वतन्त्रप्रपत्तिनिष्ठனுக்குத் தான் கோலினதேயளவு, வேறு विळम्बाविळम्बங்களுக்குக் குறியில்லை. இந் நியமங்களெல்லாம் ‘‘स्वात
6.27 न्त्र्यमैश्वरमपर्यनुयोज्यमाहुः’’(வைகுண்டஸ்தவம் 55.) என்கிற निरङ्कुशस्वच्छन्दதையாலே सिद्धங்களென்று प्रमाणपरतन्त्रருக்கு सिद्धம். இவ்வर्थங்களிப்படி தெளியாதார்க்கே देवतान्तरங்கள் सेव्यங்களென்னுமிடம் ‘‘प्रतिबुद्धवर्जं सेव्यन्तु’’() என்று व्यस्थै பண்ணப் பட்டது. இத்देवतान्तरங்களை भगवच्छरीरமென்று அறியாதே பற்றினார்க்கு चार्वाकனாயிருப்பனொரு सेवकன் राजाவினுடம்பிலே चन्दनादिகளை
6.28 प्रयोगिக்க राजशरीरத்தில் आत्मा प्रीतமானாப்போலே वस्तुवृत्तिயில் सर्वेश्वरனே आराध्यனானாலும் ‘‘येत्वन्यदेवता भक्ता यजन्ते श्रद्धयान्विताः । तेऽपि मामेव कौन्तेय यजन्त्यविधिपूर्वकम्’’(கீதை 9-23.) என்கிறபடியே शास्त्रार्थवैकल्यமுண்டானபடியாலே அவற்றிற்சொன்ன फलம் विकलமாம். भगवच्छरीरங்களென்றறிந்து क्षुद्रफल ங்களைக் கடுகப் பெறவேணுமென்கிற रागविशेषத்தாலே அவர்களை उपासिப்பார்க்கு அவ்வோ फलங்கள் पूर्णங்களாம். இப்படியறிந்தால் भगवाன் தன்னையே ‘‘आर्तो जिज्ञासुरर्थार्थी’’(கீதை 7-16.) என்கிறபடியே फलान्तरங்களுக்
6.29 காகவும் பற்றினால் அந்த फलங்கள் अतिशयितங்களாம். अनन्यप्रयोजनராய்ப் பற்றினார்க்கும் ‘‘शरीरारोग्यमर्थांश्च भोगांश्चैवानुषङ्गिकान् । ददाति ध्यायिनां नित्यम-पवर्गप्रदो हरिः’’(விஷ்ணுதர்மம் 74-43) என்கிறபடியே फलान्तरங்கள் आनुषङ्गिकமாக வரும். இவ்வर्थ
6.30 த்தை अनुषङ्कसिद्धैश्वर्यரான ஸ்ரீகுலசேகரப்பெருமாளும் “”நின்னையே தான் வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டுஞ் செல்வம் போல்””(பெருமாள் திருமொழி 5-9.) என்றருளிச்செய்தார். ‘‘अभिलषितदुरापा ये पुरा कामभोगा जलधिमिव जलौघास्ते विशन्ति स्वयं नः’’() என்று ஈசாண்டானும் தாமருளிச் செய்த स्तोत्रத்திலே निबन्धिத்தார். இது विद्याविशेषरागविशेषादिनियतம். இப்படி
6.31 सर्वेश्वरனுக்கும் ब्रह्मरुद्रादिகளுக்குமுண்டான विशेषங்களை “”””எம்பெரு மானுண்டுமிழ்ந்தவெச்சில் தேவரல்லாதார்தாமுளரே””””(பெரியதிருமொழி 11-6-2.
) யென்றும், “”””நான்முகனை நாராயணன் படைத்தான் நான்முகனும் தான்முக மாய்ச் சங்கரனைத்தான் படைத்தான்””””(நான்முகன் திருவந்தாதி 1.) என்றும், “”””மேவித்தொழும் பிரமன் சிவனிந்திரனாதிக்கெல்லாம் நாபிக்கமலமுதற்கிழங்கே””””(திருவாய்மொழி 10-10-3.) என்றும், “”””தீர்த்தனுலகளந்தசேவடிமேற்பூந்தாமஞ்சேர்த்தியவையே சிவன்முடிமேல் தான் கண்டு பார்த்தன் தெளிந்தொழிந்த பைந்துழா
6.32 யான் பெருமை””(திருவாய்மொழி 2-8-6.) என்றும், “”வானவர் தம்மையாளுமவனும் நான்முகனும் சடைமுடியண்ணலும் செம்மையாலவன் பாதபங்கயஞ் சிந்தித்தேத்தித் திரிவரே””(திருவாய்மொழி 3-6-4.) என்றும், “”பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகனவனே””(திருவாய்மொழி 4-10-4.) என்றும், “” ஒற்றைவிடையனும் நான்முகனுமுன்னையறியாப்பெருமையோனே”” (பெரியாழ்வார் திருமொழி 4-10-4.) என்றும், “”எருத்துக்
6.33 கொடியுடையானும் பிரமனுமிந்திரனும் மற்றுமொருத்தருமிப்பிறவி யென்னும் நோய்க்கு மருந்தறிவாருமில்லை””””(பெரியாழ்வார் திருமொழி 5-3-6.) என்றும் பலமுகங்களாலே யருளிச்செய்தார்கள். இப்परमदेवतापारमार्थ्यமும் திருमन्त्रத்தில் प्रथमाक्षरத்திலும் नारायणशब्दத்திலும் द्वयத்தில் सविशेषणங்களான नारायणशब्दங்களிலும் चरमश्लोकத்தில் ‘‘माम्’’ ‘‘अहम्’’ என்கிற शब्दங்களிலும் अनु-सन्धेयம். இத்देवताविशेषनिश्चयமுள்ளவனுக்கல்லது “”””கண்ணன் கண்ணல்லதில்லையோர் கண்ணே””””(திருவாய்மொழி 2-2-1.) என்றும், “”””களைவாய் துன்பங் களையாதொழிவாய் களைகண்மற்றிலேன்””””(திருவாய்மொழி 5-8-8.) என்றும், “”””ஆவிக்கோர்
6.34 பற்றுக்கொம்பு நின்னலாலறிகின்றிலேன் யான்”””” (திருவாய்மொழி 10-10-3.) என்றும், “”””தருதுயரந் தடாயேல்””””(பெருமாள் திருமொழி 5-1.) என்கிற திருமொழி முதலானவற்றிலுஞ்சொல்லும் अनन्य-शरणत्वावस्थै கிடையாது. இந்த परदेवतापारमार्थ्यத்தைத் திருमन्त्रத்திலே கண்டு तदीयपर्यन्तமாக देवतान्तरत्यागமும் तदीयपर्यन्तமாக भगवच्छेषत्वமும் प्रतिष्ठितமான படியை “”””மற்றுமோர் தெய்வமுளதென்றிருப்பாரோடு உற்றிலேன்
6.35 உற்றதுமுன்னடியார்க்கடிமை””””(பெரிய திருமொழி 8-10-3.) என்கிற பாட்டிலே सर्वेश्वरன் பக்கலிலே सर्वार्थग्रहणம்பண்ணின ஆழ்வாரருளிச்செய்தார். இவர் “”””பாருருவில் நீரெரிகால்””””(திருநெடுந்தாண்டகம் 2.) என்கிற பாட்டிலே परिशेषक्रमத்தாலே विवादविषयமான மூவரை
6.36 நிறுத்தியவர்கள் மூவரிலும் प्रमाणानुसन्धानத்தாலே யிருவரைக் கழித்து परिशेषिத்த परंज्योतिस्साன ஒருவனை “”””முகிலுருவமெம்மடிகளுருவம்””””(திருநெடுந்தாண்டகம் 2.) என்று निष्कर्षिத்தார். இந்த रूपविशेषத்தையுடைய परमपुरुषனே सर्ववेदप्रतिपाद्यமான परतत्वமென்னுமிடத்தை सर्ववेदसारभूतप्रणवप्रतिपाद्यதையாலே
6.37 “”மூலமாகியவொற்றையெழுத்தை மூன்றுமாத்திரையுள்ளெழவாங்கி வேலைவண்ணனை மேவுதிராகில்””””(பெரியாழ்வார் திருமொழி 4-5-4.) என்று பெரியாழ்வாரருளிச் செய்தார். तैत्तरीयத்தில் श्रियः पतित्वचिह्नத்தாலே महापुरुषனுக்கு व्यावृत्तिயோ தினபடியை நினைத்து “”””திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன்””””(மூன்றாம் திருவந்தாதி 1.) என்று उपक्रमिத்து “”””சார்வு நமக்கு””””(மூன்றாம் திருவந்தாதி 1. 100.) என்கிறபாட்டிலே प्रतिबुद्धரான நமக்குப்
6.38 பெரியபிராட்டியாருடனேயிருந்து என்றுமொக்கப் பரிமாறுகிற விவனையொழிய प्राप्यान्तरமும் शरण्यान्तरமுமில்லை. இத்दम्पतिகளே प्राप्यரும் शरण्यருமென்று निगमिக்கப்பட்டது. இவ்வर्थத்தை ‘‘देवतापारमार्थञ्च यथावद्वेत्स्यते भवान्(விஷ்ணுபுராணம் 1-1-26) पुलस्त्येन यदुक्तं ते सर्वथैतद्भविष्यति(விஷ்ணுபுராணம் 1-1-28.)’’ என்று पुलस्त्यवसिष्ठ-
6.39 वरप्रसादத்தாலே परदेवतापरामार्थ्यज्ञानமுடையனாய், பெரியமுதலியார் ‘‘तस्मै नमो मुनिवराय पराशराय’’(ஆளவந்தார் ஸ்தோத்ரம் 4.) என்று आदरिக்கும்படியான श्रीपराशरब्रह्मर्षि பரக்கப் பேசி ‘‘देवतिर्यङ्मनुष्येषु पुन्नामा भगवान् हरिः । स्त्रीनाम्नी लक्ष्मीर्मैत्रेय नानयोर्विद्यते परम्’’(விஷ்ணுபுராணம் 1-8-35.)
6.40 என்று परमरहस्ययोग्यனான सच्छिष्यனுக்கு उपदेशिத்தான். இத்தை மயர்வற மதி நலமருளப்பெற்று ‘‘आद्यस्य नः कुलपतेः’’ என்கிறபடியே प्रपन्नसन्तान-कूटस्थரான நம்மாழ்வாரும் “”””ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக்கண்ட சதிர்கண்டு””””(திருவாய்மொழி 4-9-10.) என்றருளிச்செய்தார். இவ்விஷயத்தில் वक्तव्यமெல்லாம் चतुश्श्लोकीव्याख्यानத்திலே परपक्ष प्रतिक्षेपपूर्वकமாகப் பரக்கச்சொன்னோம். அங்கே கண்டுகொள்வது.
6.41 வாதியர்மன்னுந் தருக்கச்செருக்கின் மறைகுலையச்
சாதுசனங்களடங்க நடுங்கத் தனித்தனியே
ஆதியெனாவகை யாரணதேசிகர் சாற்றினர் நம்
போதமருந் திருமாதுடனின்ற புராணனையே. // 13 //
6.42 जनपदभुवनादिस्थानजैत्रासनस्थेषु
अनुगतनिजवार्तं नश्वरेष्वीश्वरेषु ।
परिचितनिगमान्तः पश्यति श्रीसहायं
जगति गतिमविद्यादन्तुरे जन्तुरेकः ॥ १७ ॥
इति कवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे परदेवतापारमार्थ्याधिकारः षष्ठः ॥