॥ श्रीमद्रहस्यत्रयसारे निर्याणाधिकारः ॥ २० ॥
20.1 मनसि करणग्रामं प्राणे मनः पुरुषे च तं
झटिति घटयन् भूतेष्वेनं परे च तमात्मनि ।
स्वविदविदुषोरित्थं साधारणे सरणेर्मुखे
नयति परतो नाडीभेदैर्यथोचितमीश्वरः ॥ ४४ ॥
20.2 இப்படி ‘‘लोकविक्रान्तचरणौ शरणं तेऽव्रजं विभो’’(ஜிதந்தாஸ்தோத்ரம்) என்றிவன் கால்பிடிக்க ‘‘हस्तावलंबनो ह्येको भक्तिक्रीतो जनार्दनः’’(விஷ்ணுதர்மம் 3-24) என்கிறபடியே இவனைக் கைப்பிடித்து ‘‘राजाधिराजस्सर्वेषां’’(பாரதம் சாந்திபர்வம் 43-13.) என்கிறபடியே उभयविभूति नाथனான सर्वेश्वरன் தானுகந்ததொரு நிலத்திலே வைக்க अभिषिक्तैயான महिषिயைப்போலே
20.3 बहुमतனாய்த் தன் परमैकान्तित्वத்துக்கनुरूपமான वृत्तिயோடே போருமிவ்வधिकारी. இப்படி வधिकारिகளிலே प्रारब्धदुष्कृतविशेषवैचित्रिயாலே வருமहंकार ममकारங்களென்ன, அவையடியாக வருमपचारங்களென்ன, प्रयोजनान्तररुचिயென்ன, அதடியாக संभावितமான देवतान्तरस्पर्शமென்ன, बुद्धिदौर्बल्यமென்ன, அதடியாக வருமுपायान्तरप्रत्याशैயென்ன, இவ்वैपरीत्यம் பிறந்தவர்களுக்கும் இவை பிறவாதே प्रारब्धसुकृतविशेषத்தாலும் पूर्वप्रपत्तिயில் फलसङ्कल्पविशेषத்தாலும் छिद्रமில்லாத कैङ्कर्यத்திலே प्रतिष्ठितராய்ப்போந்தவர்களுக்கும் संसारத் தினின்றும் निर्याणத்துக்கு विळंबाविळंबங்களிலே நிலையிருக்கும்படி யெங்ஙனேயென்னில்,
20.4 இவ்விடத்திலிவர்களுக்கு चार्वाकादिகளுக்குப்போலே நிலை நின்ற अहङ्कारममकारங்கள் புகிராது. अवहितராய் நடப்பாரிடருமாப் போலே யென்றேனுமொருகால் வருமहङ्कारममकारங்கள் विवेकावधिகளாய் பின்புற்ற தெளிவாலே கழிந்துபோம். अपराधங்கள் பிறந்தால் क्षापणावधि யாயும் शिक्षावधिயாயுங்கோலின காலத்துக்குள்ளே अपराधनिस्तारம் பிறக்கும்படி अपराधपरिहाराधिकारத்திலே சொன்னோம். मोक्षம் பெறுகைக்குக் कालविशेषங்குறியாதே प्रपन्नரானரைப்பற்ற ‘‘अपायाविरतश्शश्वन्माञ्चैव शरणङ्गतः । तनूकृत्याखिलं पापं मामाप्नोति नरश्शनैः ॥’’(லக்ஷ்மீதந்த்ரம் 17-102) என்று சொல்லுகிறது. मुमुक्षुவாயிழிந் தவனாகையாலே प्रयोजनान्तररुचि நிலை நிற்கவுண்டாகாது. उभयभावनர்க்குப்போலே मोक्षरुचिயோடே கூட प्रयोजनान्तररुचिயுங்கலந்து வந்தால் இவனுக்கு हितपरனான வீश्वरன் ‘‘याचितोऽपि सदा भक्तैर्नाहितं कारयेद्धरिः’’(விஷ்ணுதர்மம்.) ‘‘यस्यानु- ग्रहमिच्छामि धनं तस्य हराम्यह’’(ஸ்ரீபாகவதம்.) मित्यादिகளிலும் कुण्डधारोपाख्यानादिகளிலுஞ்
20.5 சொல்லுகிறபடியே சில प्रयोजनान्तरங்களைக்கொடாதே கண்ணழித்தும் சிலவற்றிலே अल्पास्थिरत्वदुःखमिश्रत्वादिविवेकத்தாலே யிவன் தனக்கरुचिயை விளைப்பித்தும் सौभरिकुचेलादिகளுக்குப்போலே சில भोगங்களைக் கொடுத்துத் தானே யலமர்ந்துவிடப்பண்ணியும் விடுகையாலே मोक्षकालங்குறித்து प्रपत्तिபண்ணினவனுக்கு அக்காலத்துக்குள்ளே प्रयोजनान्तरवैमुख्यம் பிறந்துவிடும். மற்றையவனுக்கும் ‘‘अथोपायप्रसक्तोऽपि भुक्त्वा भोगाननामयान् । अन्ते विरक्तिमासाद्य विशते वैष्णवं पदं’’(லக்ஷ்மீதந்த்ரம் 17-103) என்கிறபடியே वैराग्यावधिயே विळंबமாயிருக்கும். देवतान्तरस्पर्शமுண்டாயிற்றாகிலும் सर्वेश्वरன் ஏதேனுமொருநாளிலே
20.6 श्रुत्युक्तமானபடியே परमैकान्तिகளோடே சேர்த்து लज्जावधिயாகத்திருத்தி யிவனுடைய व्यभिचारத்தைத் தீர்க்கும். சிலர்க்கு देवतान्तरस्पर्शம் நிலை நிற்குமாகில் முன்பு उपायस्पर्शமில்லை. மேல் नरकादिகளுமுண்டென்றறியலாம். இவனுக்கு भगवद्विषयத்தில் कृतांशம் என்றேனுமொருநாளு पायनिष्पत्तिயைப் பண்ணிக் कार्यकरமாம். महाविश्वासம் पूर्णமாகப் பிறந்து प्रपत्ति பண்ணினார்க்கு बुद्धिदौर्बल्यமும் उपायान्तरप्रत्याशैயும் பிறவாது. இவை பிறந்தவர்களுக்கு முன்பு பிறந்த विश्वासம் मन्दமாயிருக்கும். இவர்களையும்
20.7 सर्वेश्वरன் महाविश्वासावधिயாகத் திருத்திப் पूर्णप्रपत्तिनिष्ठராக்கும். இவ் वैपरीत्यங்களுளொன்றும் பிறவாதே நடந்தவர்களுக்கு विळंबादिशङ्कैயுங்கூட இல்லை. இவர்களுக்கு इच्छावधि विळंबம். இவர்கள் கோலின வெல்லையில் मोक्षमविनाभूतம். இந் निष्ठैயைப் பெற்ற இவ்வधिकारी ‘கடைத்தலை யிருந்து வாழுஞ்சோம்பரையுகத்தி'(திருமாலை 38.) யென்கிறபடியே श्रियःपतिயான सर्वेश्वरனுக்கு सर्वदाभिमतனாயிருக்கும். இவன்றிறத்தில் निरुपाधिकसर्वशेषिயாய்
20.8 निरुपाधिकस्वतन्त्रனாய் सत्यसङ्कल्पனுமான सर्वेश्वरன் सर्वभयங்களுக்கும் कारणமான निग्रहसङ्कल्पத்தை ‘‘तदधिगम उत्तरपूर्वाघयोरश्लेषविनाशौ तद्वयपदेशात्’’(ப்ரஹ்மஸூத்ரம் 4-1-13) என்கிறபடியே सद्वारक प्रपत्तिनिष्ठனுக்கு उपासनप्रारंभத்திற்போலே प्रपत्तिवाक्योच्चारणத்தில் प्रथमक्षणத்திலே விலக்கி, இவனையுமிவனுடைய வनुबन्धिகளையும் नित्यसूरिகள் கோர்வையிலே கோர்த்தாலுமாவல் கெடாதே आश्रितापराधराशिகளிலுண்டதுருக்காட்டாதே வயிறுதாரியாய் अनुबन्धिகளுடைய बुद्धिपूर्वापराधங்களுக்குமनुतापादिகளாலே निस्तारம் பண்ணுவிக்கும்
20.9 படிக்கீடான अनुग्रहसङ्कल्पத்தைப்பண்ணி, ‘விண்ணுலகந்தருவானாய் விரைகின்றா'(திருவாய்மொழி 10-6-3) னென்கிறபடியே யிவனிசைந்த विळंबத்துக்குத் தான் सानुशयனாய் त्वरिத்து, ‘இருள்தருமாஞாலத்துளினிப்பிறவி யான் வேண்டே'(திருவாய்மொழி 10-6-1.) னென்றும், ‘மாயஞ்செய்யேலென்னை'(திருவாய்மொழி 10-10-2) யென்றுஞ் சொல்லுகிறபடியே இவனுக்கிசைவை யுண்டாக்கி, ‘உன் திருமார்வத்துமாலை நங்கை வாசஞ்செய் பூங்குழலாள் திருவாணை நின்னாணை'(திருவாய்மொழி 10-10-2.) யென்று
20.10 இவன் தான் त्वरिத்து வளைக்கும்படி பண்ணி, ‘சரணமாகுந் தன தாளடைந்தார்க்கெல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும்பிரா'(திருவாய்மொழி 9-10-5) னென்கிறபடியே இவன் கோலுதலுக்கீடாக प्रारब्धशरीरावसानத்திலே परमपदप्राप्तिயுண்டாக்குவதாகக் கோலி, பொன்னுமிரும்புமான விலங்குகள் போலே बन्धकங்களான पूर्वोत्तरपुण्यपापங்களையும் प्रारब्धकार्यமான कर्मத்தில் இவனிசைந்த अंशமொழிய மேலுள்ள கூற்றை யும் ‘போயபிழையும் புகுதருவா நின்றனவுந்தீயினிற்றூசாகு'(திருப்பாவை 5) மென் கிறபடியே முன்பே யிவனோடு துவக்கறுத்துவைக்கையால் शरीरपातத்துக்கு
20.11 நினைப்பிட்ட सமயம் வந்தவாறே ‘‘प्रियेषु स्वेषु सुकृतमप्रियेषु च दुष्कृतं । विसृज्य ध्यानयोगेन ब्रह्माप्येति सनातनं’’(மநுஸ்ம்ருதி 6-79.) என்றும், ‘நம்மன்போலே வீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ள பாவமெல்லாஞ்சும்மெனாதே கைவிட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே'(பெரியாழ்வார் திருமொழி 5-4-3.) யென்றும் स्मर्ताக்கள் சொன்ன उपनिषदर्थத்தின் படியே இவனுக்கनुकूलप्रातिकूलராயிருந்துள்ள விரண்டுசிறகிலும் இவன் பக்கலாनुकूल्यप्रातिकूल्यங்களுக்கு फलமாக அசல்பிளந்தேறிடுகிறதென்னும்படிபண்ணி
20.12 ‘‘दिवा च शुक्लपक्षश्च उत्तरायणमेव च । मुमूर्षतां प्रशस्तानि’’(பாரதம் ஆநுசாஸநிகபர்வம் 242-31) என்று स्मृतिயிலும் ज्योतिश्शास्त्रத்தில் निर्याणप्रकरणத்திலும் फलान्तरप्रसक्तரையும் मोक्षोपायपूर्तिயில்லாதாரையும் பற்றச்சொல்லும் कालनियमமின்றிக்கே ‘‘निशि नेति चेन्न संबन्धस्य यावद्देहभावित्वात्’’(ப்ரஹ்மஸூத்ரம் 4-2-18.) என்றும், ‘‘अतश्चायनेऽपि दक्षिणे’’(ப்ரஹ்மஸூத்ரம் 4-2-19.) என்றுஞ் சொல்லுகிறபடியே मनुष्यपितृदेவர்களுடைய பகல்களிலேயாதல் रात्रिகளிலேயாதல் தான் सङ्कल्पिத்த समयத்திலே अप्रच्युतपूर्वसंस्कारमनोरथனாம்படி
20.13 பண்ணி, சிறை கிடந்த राजकुमारன் திறத்தில் प्रसन्नனான राजा விலங்கை வெட்டிச் சிறைக்கூடத்தினின்றுங்கொண்டு புறப்படுமாப்போலே प्रशस्ताप्रशस्त नियमமறத் तत्कालोपस्थितமாயிருப்பதேதேனுமொரு शरीरविश्लेष निमित्तத்தையுண்டாக்கி, वागादिகளான बाह्येन्द्रियங்கள் பத்தையும் मनஸ் ஸிலே சேர்த்து, இப்படிக் कर्मज्ञानेन्द्रियங்களெல்லாவத்தோடுங் கூடின मनस्सै प्राणवायुவோடே சேர்த்து, இப்படி பதினோறு इन्द्रियங்களோடும் கூடின प्राणवायुவை ஜீவனோடே சேர்த்து, प्राणेन्द्रिय संयुक्तனானஜீவனை त्रिस्थूणक्षोभदशैயிலே स्थूलदेहத்தினின்றுங் கடைந்தெடுத்த पञ्चभूतसूक्ष्मங்களோடே சேர்த்து, இப்படி इन्द्रियप्राणभूतसूक्ष्मसंयुक्तனான ஜீவனை निसर्गसौहार्दமுடைய
20.14 हार्दனான தன் பக்கலிலே யிளைப்பாற்றி, இப்படி स्थूलशरीरத்தினின்றும் विद्वदविद्वत्साधारणமான வுत्क्रान्तिक्रमத்தை நடத்தி, ‘‘अनन्ता रश्मयस्तस्य दीपवद्य-स्स्थितो हृदि । सितासिताः कद्रुनीलाः कपिलाः पीतलोहिताः ॥ ऊर्ध्वमेकस्स्थितस्तेषां यो भित्वा सूर्यमण्डलम् । ब्रह्मलोकमतिक्रम्य तेनयाति परां गतिम् ॥ यदस्यान्यद्रश्मिशतमूर्ध्वमेव व्यवस्थितम् । तेन देवशरीराणि सधामानि प्रपद्यते ॥ येनैकरूपाश्चाधस्ताद्रश्मयोऽस्य मृदुप्रभाः । इह कर्मोपभोगाय तैस्संसरति सोऽवशः’’(யாஜீஞவல்க்யஸ்ம்ருதி 4-66, 67, 68, 69.) என்கிறபடியே கள்ளர் கொண்டு போம் வழிகள் போலே आत्मापहारिகள் स्वर्गनरकங்களுக்குப்போம் मार्गान्तरங்களுக்கு
20.15 मुखங்களான नाडीविशेषங்களில் போகாதபடி வழிவிலக்கி, अर्चिरादिमार्गத்துக்கு मुखமான शताधिகையான ब्रह्मनाडिயிலே प्रवेशिப்பித்து, सूर्यकरावलंबिயாய்க்கொண்டு புறப்படும்படி பண்ணும். ஆழ்வான் अन्तिमदशैயிலே விடாயிலே நாக்கொட்டி எம்பெருமானார் திருவடிகளைப் பிடிக்க, இவரப்போதாழ்வான் செவியிலே द्वयத்தையருளிச்செய்ய, இப்பேறு நமக்கு வருகையரிது, நாமென் செய்யக்கடவோமென்று அப்போது ஸேவித்திருந்த முதலிகள் கலங்க, இவர்களभिप्रायத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘ஆழ்வான் प्रकृतिயறியீர்களோ; இவ்வस्थैயிலிவருக்கிது कर्पूरத் தையும் खण्डशर्करैயையுமிட்டमात्रமன்றோ, நாமிது उपायத்துக்குப் परिकरமாகச் செய்தோமல்லோ’ மென்றருளிச்செய்ய முதலிகள் தெளிந்து निर्भरரானார்கள். ஆகையால் ‘‘नष्टस्मृतिरपि परित्यजन् देहं’’(வராஹபுராணம்.) என்றும்,
20.16 ‘‘स्थिते मनसि सुस्वस्थे’’(வராஹசரமச்லோகம்.) என்கிற श्लोकद्वयத்திலும், ‘துப்புடையாரையடை வதெல்லா'(பெரியாழ்வார் திருமொழி 4-10-1.) மென்கிற பாட்டிலுஞ் சொல்லுகிறபடியே प्रपन्नனுக்கन्ति- मस्मृत्यादिகளில் निर्बन्धமில்லை. ‘‘शरीरपातसमयेतु केवलं मदीयवैव दययाऽतिप्रबुद्धो मामेवावलोकयन्नप्रच्युतपूर्वसंस्कारमनोरथः’’(ஶரணாகதி கத்யம்) என்றருளிச்செய்ததும் இவ்வचनங் களுக்கविरुद्धமாகவொருप्रकारத்தாலே निर्वाह्यம். எங்ஙனேயென்னில்; गद्यத்திலருளிச்செய்கிறவन्तिमस्मृति இவ்வन्तिमस्मृतिயையுமுपायफलமாகக் கோலி प्रपन्नரானவர்களுக்கு வரக்கடவதென்று சில आचार्यர்கள் निर्वहिப் பர்கள். இப்படியாகில் ஒரு शरीरத்திலுமन्तिमமான प्रत्ययம் निर्विषयமாயிராமையால்
20.17 प्राणवियोगकाले यत्नेन चित्ते विनिवेशयन्ती’’(பாரதம் சாந்திபர்வம் 46-143) त्यादिகளிலும் स्वयत्नसाद्ध्यமாக विधिத்த கட்டளையிலே उपायமாக अन्तिमस्मृति வேண்டாவென்கிறனவென்று சில आचार्यர்கள் अनुसन्धिப்பார்கள். ‘‘केवलं मदीययैव दयया’’(சரணாகதிகத்யம்) என்றிறே யிங்கருளிச் செய்தது. अन्तिमस्मृतिயாவது; वागादिகள் उपशान्तமானால் मनஸ்ஸு उपशान्त மாவதற்கு முன்பே பிறப்பதொரு स्मृति । இது அருகிருந்தார்க்குத் தெரியாது. ‘‘दृश्यते हि वागिन्द्रिय उपरतेऽपि मनःप्रवृत्तिः’’ என்கிற भाष्यமும் எதேனு மொரு लिङ्गத்தாலே ஒரு मनःप्रवृत्तिயிவனுக்குண்டென்றறிகிறவளவைச் சொல்லுகிறது, தனக்கு சில व्याध्याद्यवस्थैகளிலே கண்டபடியைச் சொல்
20.18 சொல்லுகிறதாகவுமாம். ஆன பின்பு भगवद्विषयத்தில் अन्तिमस्मृतिमुक्तராகிறவர்க்கும் मोक्षங்கொடுக்கிறவர்க்குந் தெரியுமித்தனை. இதுக்கनन्तरம் योगिகளோடும் अयोगिகளோடும் வாசியற हार्दனான परमात्माவின் பக்கலிலே विश्रमिக்குமளவும் सुषुप्तितुल्यமாயிருக்கும். இவ்வस्थैயைப்பற்ற
20.19 ‘‘काष्ठपाषाणसन्निभं, नष्टस्मृतिरपि’’(வராஹசரமச்லோகம்) என்றும், ‘நினைக்கமாட்டே'(பெரியாழ்வார் திருமொழி 4-10-1) னென்றுஞ் சொல்லுகிறதென்றால் प्रपन्नाधिकारिக்கு विशेषिத்தோரतिशयஞ்சொல்லிற் றாகாது. இதுக்குமேல் ‘‘मत्तः स्मृतिर्ज्ञानमपोहनञ्च’’(கீதை 15-15.) என்கிற प्राज्ञனுணர்த்த तत्प्रकाशितद्वारனாய்க்கொண்டு ब्रह्मनाडिயிலே प्रवेशिத்தால் பின்பு कालतत्त्वமுள்ள தனையுமொருபகலாயுணர்த்தியேயாம்.
20.20 நன்னிலமாமது நற்பகலாமது நன்னிமித்தம்
என்னலுமாமதுயாதானுமா மங்கடியவர்க்கு
மின்னிலைமேனி விடும்பயணத்து விலக்கிலதோர்
நன்னிலையா நடு நாடிவழிக்கு நடைபெறவே. (27)
दहरकुहरे देवस्तिष्ठन्निषद्वरदीर्घिका
निपतितनिजापत्यादित्सावतीर्णपितृक्रमात् ।
धमनिमिह नस्तस्मिन् काले स एव शताधिकां
अकृतकपुरप्रस्थानार्थं प्रवेशयति प्रभुः ॥ ४५ ॥
इति श्रीकवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे निर्याणाधिकारः विंशः ॥