॥ श्रीमद्रहस्यत्रयसारे मूलमन्त्राधिकारः ॥ (Continued)
27.61 வாய் स्वयं भोग्यதையாலே उपेयமுமாய் ‘‘विष्ण्वाधारं यथाचैतत् त्रैलोक्य समुपस्थितं’’(விஷ்ணுபுராணம் 2-13-2), ‘‘यो लोकत्रयमाविश्य बिभर्त्यव्यय ईश्वर’’(கீதை 15-17) इत्यादिகளிற்படியே आधारமுமாயிருக்கிறபடி சொல்லப்பட்டது. எங்ஙனேயென்னில்; ‘‘इण् गतौ’’ என்கிற धातुவிலே ‘‘ईयते अनेन’’ என்று अयनशब्दத்தில் करणव्युत्पत्तिயாலே ईश्वरனுपायமாயும், ‘‘ईयतेऽसौ’’ என்கிற कर्मव्युत्पत्तिயாலே उपेयமாயும், ‘‘ईयते अस्मिन्’’ என்கிற अधिकरणव्युत्पत्तिயாலே आधारமாயுந்தோற்றுகிறான். ‘‘अय पय गतौ’’ என்கிற अयति धातुவிலும் இவ்வयनपदம் निष्पन्नமாம். இவ்வுपायत्वोपेयत्वादिகளுக்குपयुक्तமான सौलभ्यமும் परत्वமுமிங்கே सिद्धம். अयनமென்று वासस्थानமாய் அப்போது बहुव्रीहिसमासத்தாலே अन्तर्व्याप्तिயும் तत्पुरुषனாலே बहिर्व्याप्तिயுந் தோற்றுகிறதென்றுமनुसन्धिப்பார்கள். இவையிரண்டும் श्रुतिसिद्धம்.
27.62 अन्तर्व्याप्तिயாவது இவையுள்ள விடத்தில் தன்னையில்லை யென்ன வொண்ணாதபடி கலந்து நிற்கை. बहिर्व्याप्तिயாவது இவை யில்லாத விடத்திலுமெங்குந் தானுளனாகை. विभुக்களான कालादिகளுக்கு बहिर्व्याप्ति சொல்லவேண்டா. 85‘‘नारायणमणीयांशमशेषाणामणीयसां’’(விஷ்ணுபுராணம் 1-9-41) என்றது अन्तर्व्याप्तिக்கनुगुणமாய் நிற்கிற प्रतिघातानर्हत्वம், அல்லது अणुपरिमाणत्वமன்று. இது சொல்லுமிடம் उपाध्यवच्छेदத்தாலே யென்று सूत्रभाष्यादिसिद्धம். व्याप्तனுக்கு प्रतिवस्तुपूर्णत्वமாவது ஒரோரு उपाध्यवच्छिन्नप्रदेशமே सर्वத்தையும் निर्वहिக்க வல்ல शक्तिயுடைத்தாயிருக்கை; அல்லது वस्तुதோறும் स्वरूपसमाप्तिயன்று.
27.63 இது கொள்ளில் बहिर्व्याप्तिக்கு विरुद्धமாம். இத்தை अघटितघटनाशक्तिயாலே निर्वहिக்கில் विरुद्धसमुच्चयங்கொள்ளும் परमतங்களிற்படியாம். இங்கு प्रथमाक्षरத்தாலும் नारशब्दத்தில் प्रकृतिயான नरशब्दத்தாலும் अयनशब्दத்தாலும் सर्वेश्वरனைச் சொல்லுகிறபோது रक्षकत्वकारणत्वनित्यत्वनेतृत्वाधारत्वान्तर्यामित्वादिகளான आकारभेदங்களாலே மூன்றும் सप्रयोजनங்கள். प्रणवத்தில் तृतीयाक्षरத் தாலே चेतनனை प्रकाशिப்பிக்கச்செய்தே இங்கு नारशब्दத்தாலே மீண்டுஞ் சொல்லுவானேனென்னில்; 86’’நானுன்னை யன்றியிலேன்கண்டாய் நாரணனே நீ யென்னையன்றியிலை’’(நான்முகன் திருவந்தாதி 7) யென்றும், 87‘‘रामानुजं लक्ष्मणपूर्वजञ्च’’(ராமாயணம் ஸுந்தரகாண்டம் 28-10)
27.64 என்றுஞ் சொல்லுகிறபடியே ஒன்றையிட்டொன்றை निरूपिया நின்றால் अर्जुनरथம் போலே प्रणवம் शेषप्रधानமாகையாலும் रासमण्डलம்போலே नारायणशब्दம் शेषिप्रधानமாகையாலும் पुनरुक्तिயில்லை. प्रणवந்தன்னிலும் शाब्द प्राधान्यம் ஜீவனுக்கானாலும் रक्षकனான शेषिக்கே आर्थம் प्राधान्यம். प्रणवத்திலே
27.65 स्वरूपத்தாலும் गुणத்தாலும் ज्ञानाकारனாய் प्रत्यக்காयणुவாய்த்தோற்றின ஜீவனுக்கு नारशब्दம் क्षयமில்லாதவனென்று नित्यत्वஞ்சொல்லுகையாலும் நரருடைய समूहத்தைச் சொல்லுகையாலே ஜீவர்களுடைய अन्योन्यभेदத்தை व्यक्तமாக்குகையாலும் नराज्जातங்கள் नारங்களென்றபோது विशिष्टवेषத்தாலும் ब्रह्मकार्यत्वந்தோற்றுகையாலும் पदद्वयத்துக்கும் प्रयोजनभेदமுண்டு. नारशब्दसमानाधिकरणமான अयनशब्दத்தாலே இவற்றுக்கு व्याप्यत्वादिகளுங்கண்டு கொள்வது. नित्यரான பல चेतनர்க்கு ஒரு नित्यனான चेतनனभिमतहेतुவென்கிற श्रुत्यर्थமுமிங்கே கண்டுகொள்வது. नित्यனாக प्रमाणसिद्धனான ஜீவனுக்கு ब्रह्मकार्यत्वம் विशेषण द्वारकம். இப்படி नारायणात्मकादिकल्पங்களிலே சொன்ன
27.66 व्युत्पत्त्यन्तरங்களுமெல்லாமிவற்றோடு तुल्यம். ‘‘चेतनाचेतनं सर्वं विष्णोर्यद्वयतिरिच्यते । नारन्तदयनञ्चेदं यस्य नारायणस्तु सः’’() என்கையாலே ‘‘सर्वपुंसां समूहः’’() என்றதுவுமுपलक्षणமாகையால் क्षयिष्णुக்களல்லாமையாலே स्वरूपத்தாலே யாதல் प्रवाहத்தாலேயாதல் नित्यங்களாய் नरशब्दवाच्यங்களான सर्वतत्त्वங் களுடைய समूहங்களும் नारங்கள்.
27.67 सर्वव्यापकत्वादिविशिष्टனாயிருக்கச்செய்தே तद्गतदोषங்களை तत्प्रयुक्तदोषங் களையும் கழிக்கிற क्षयरहितனென்கிற व्युत्पत्तिயாலும், ‘‘नृ नये’’ इत्यादिகளாலும், ‘‘जह्नुर्नारायणो नरः’’(பாரதம் ஆநுஶாஸநிக 231-29) என்று नामधेयமாகச் சொல்லுகையாலும், ‘‘आपो नारायणोद्भूतास्ता एवास्यायनं पुनः’’(வ்யாஸஸ்ம்ருதி) என்கிற व्यासस्मृतिवाक्यத்தாலே ‘‘आपो वै नरसूनव’’ इत्यादिகளில் नरशब्दமும் नारायणனையே சொல்லுகிறதென்னுமிடம் सुव्यक्तமாகையாலும் नरனென்று नित्यனாய் सर्वनेताவான सर्वेश्वरனுக்குத் திருநாமமாகையாலே ‘‘नरसंबन्धिनो नारा नरस्स पुरुषोत्तमः । नयत्यखिलविज्ञानन्नाशयत्यखिलन्तमः ॥ नरिष्यति च सर्वत्र नरस्तस्मात्सनातनः । नरसंबन्धिनस्सर्वे चेतनाचेतनात्मकाः ॥
27.68 ईशितव्यतया नारा धार्यपोष्यतया तथा । नियाम्यत्वेन सृज्यत्वप्रवेशभरणैस्तथा ॥ अयते निखिलान्नारान्व्याप्नोति क्रियया तया । नाराश्चाप्यनन्तस्य तैस्तद्भाव निरूपणात् ॥ नाराणामयनं वासस्ते च तस्यायनं सदा । परमा च गतिस्तेषां नाराणामात्मनां सदा’’(அஹிர்புத்ந்யஸம்ஹிதை 52-50) என்ற अहिर्बुद्ध्न्यादि निर्वचनம் பண்ணினபடியே ‘‘नरसंबन्धि नारं’’ என்கிற व्युत्पत्तिயாலே सर्वेश्वरனுடைய स्वरूपनिरूपकधर्मங்களும் निरूपितस्वरूप विशेषणधर्मங்களும் व्यापारங்களும் विग्रहविशेषங்களும் மற்றுமுள்ள त्रिविधचेतनाचेतनங்களுமெல்லாம் नारशब्दार्थமான போது स्वव्यतिरिक्तसर्वத்துக்குமாश्रयत्वादिरूपेण நிற்கும் प्रकारம் विवक्षितமாகை யாலே स्वनिष्ठत्वादिகளைச் சொல்லுகிறது. இப்படி व्यापन भरणनियमन
27.69 कुदृष्टिகள் சொன்ன स्वरूपैक्यादिभ्रमங்கழியும்படி सर्वशरीरित्वसर्वशब्दवाच्यत्वादि वैभवமுமிங்கே फलितம். नरशब्दத்தாலே शोधकवाक्यार्थமும், नारशब्दத்தாலே स्वाम्यादिகளாலே வேறுபட்டிருக்குற புருஷோத்தமனுக்கும் तत्संबन्धिகளுக்கும் ‘‘नराज्जातानि तत्त्वानि नाराणि’’ என்கையாலே कारणवाक्यार्थமும், अयनशब्दத்தாலே அவ்வோ उपासनवाक्यार्थங்களுமெல்லாமிங்கே प्रकाशितங்களாகிறன. सुबालोपनिष्त्प्रभृतिகளிலே सर्वान्तर्यामिயுமாய் सर्वविधबन्धुமாயிருக்கிற सर्वेश्वरன் नारायणशब्दத்தாலே देवतान्तरव्यावृत्तனாக प्रतिपादितனானான். लोकத்திலுள்ள सर्वबन्धुக்களும் भगवत्सङ्कल्पத்தாலே बन्धुக்களானார்கள்.
27.70 ‘‘त्वमेव माता च पिता त्वमेव’’(காந்தாரீவாக்யம்) ’’எம்பிரானெந்தை’’(பெரியதிருமொழி 1-1-6), ‘‘पिता त्वं माता त्वं’’(ஆளவந்தார் ஸ்தோத்ரம் 60) इत्यादिகளிற்படியே निरुपाधिकसर्वविधबन्धु सर्वेश्वरனொருவனுமே. ‘‘यस्य प्रसादे सकलाः प्रसीदेयुरिमाः प्रजाः’’(ராமாயணம் கிஷ்கிந்தாகாண்டம் 4-21) என்றும், ‘‘प्रसन्नमभवत्तस्मै प्रसन्नाय चराचरं’’(இதிஹாஸஸமுச்சயம் 33-141), ‘‘प्रसन्ने देवदेवेशे’’(நாரஸிம்ஹபுராணம்) என்றுஞ்சொல்லுகையாலே அவன் प्रसन्नனானால் प्रतिकूल-ராவாரொருவருமில்லை. இவ்வீश्वरனுக்கு ‘‘सुहृदं सर्वभूतानां’’(கீதை 5-29) என்கிற வாகாரம் स्वभावसिद्धம். आकारान्तरம் चेतनருடைய வாज्ञातिलङ्घनமாகிற उपाधिயடியாக வந்தது. அதுவுமल्पव्याजத்தாலே மாறும். ’’இத்தனையடிய ரானார்க்கிரங்குநமரங்கனாயபித்த’’(திருமாலை 4) னென்றார்களிறே.
27.71 இந் नारायणशब्दத்தில் चतुर्थिயாலே மேல் சொல்லப்புகுகிற वाक्यार्थங் களுக்கீடாக तादर्थ्यादिகள் காட்டப்படுகிறன. स्थूलानुसन्धानத்திலிச் चतुर्थी नमश्शब्दयोगத்தாலுங்கொள்ளலாம். அப்போதிச்चतुर्थिக்கு प्रयोजनातिशयமில்லை. ‘‘षष्ठपञ्चदशाद्वर्णात् केवलव्यञ्जनीकृतात् । उत्तरो मन्त्रशेषस्तु शक्तिरित्यस्य कथ्यते’’(நாரதீயம் 1-59) என்கையாலெயிது திருमन्त्रத்தில் फलसिद्धिहेतुவான प्रदेशம். योजनाविशेषங்களில் फलप्रार्थனையுமிவ்விடத்திலேயாகிறது. ‘‘अर्थात् प्रकरणाल्लिङ्गादौचित्याद्देशगकालतः । शब्दार्थाः प्रविभज्यन्ते न शब्दादेव केवलात्’’() என்கிறபடியே ஒரு शब्दத்
27.72 शब्दத்துக்கே प्रकरणादिகளுக்கீடாக अर्थभेदம் கொள்ளுகை सर्वसम्मतம். ஆகையாலே ‘‘दीयमानार्थशेषित्वं संप्रदानत्वमिष्यत’’() इत्यादिகளிற்படியே परस्वत्वापादनமிவ்விடத்தில் கூடாதாகிலும் ईश्वरன் தனக்கு शेषமான वस्तुவைத் தானே रक्षिத்துக்கொள்ளும்படி समर्पिக்கிறவளவைப்பற்ற இவ் व्यापकमन्त्रங்களில் चतुर्थिயை संप्रदानार्थैயாக வहिर्बुद्ध्न्यன் व्याख्यानம் பண்ணினான். ‘‘नीचीभावेन सन्द्योत्यमात्मनो यत्समर्पणं । विष्ण्वादिषु चतुर्थी तत्संप्रदानप्रदर्शिनी ॥ नीचीभूतो ह्यसावात्मा यत्संरक्ष्यतयार्प्यते । तत्कस्मा इत्यपेक्षायां विष्णवे स इतीर्यते’’ என்கிற वचनத்தில் ‘‘विष्ण्वा-दिषु’’(அஹிர்புத்ந்யஸம்ஹிதை 52-35, 36.) என்கையாலே नारायणादि शब्दங்களில் चतुर्थिயும் व्याख्यानம் பண்ணப் பட்டது. இத் திருमन्त्रத்தில் नकारம் முதலான ஏழு திருவக்ஷரங்களுக்கும்
27.73 प्रत्येकம் मन्त्रस्मृतिகளிற்சொன்ன अर्थங்களை ‘‘नायकत्वञ्च सर्वेषां नामनत्वं परे पदे । नाशकत्वं विरुद्धानां नकारार्थः प्रकीर्तिताः ॥ मङ्गळत्वम्महत्वञ्च महनञ्च करोति यत् । आश्रितानान्ततो ज्ञेयो मकारार्थस्ततो बुधैः ॥ नास्तिक्यहानिर्नित्यत्वं नेतृत्वञ्च हरेः पदे । नाकारसेविनां नॄणा`म्मन्त्रविद्भिः प्रकीर्तितः । रञ्जनं भगवत्याशु रागहानिस्ततोऽन्यतः । राष्ट्रत्राणादिकञ्चापि प्राप्यते रेफसेवया ॥ योगोद्योगः फलञ्चाशु यकारात् प्राप्यते बुधैः । वर्णनञ्च तथा विष्णोर्वाणीसिद्धिर्णकारतः ॥ यक्षराक्षसवेताळभूतादीनां भयाय यः । एवमक्षर निर्वाहो मन्त्रविद्भिः प्रकीर्तितः’’(பூர்வாசார்யகாரிகை) इत्यादिகளாலே
27.74 சில आचार्यர்கள் संग्रहिத்தார்கள். இப்படி யிப்पदங்களினுடைய व्याकरणनिरुक्त्यादि सिद्धव्युत्पत्तिपरामर्शத்தாலே परवादिमूलமாக வரும் மாசற விளக்கப் பட்ட திருमन्त्रமாகிற கண்ணாடி परस्वरूपादिகளையும் स्वस्वरूपத்திற்காண வரிய நிலங்களையுமெல்லாம் सुव्यक्तமாகக்காட்டும்.
இதுக்கு प्रतिपाद्यदेवतैயாய் प्राप्यமுமான परस्वरूपத்தை இத் திருमन्त्रத்தில் शाब्दங்களாயுமாर्थங்களாயுமுள்ள प्रकारங்களோடே கூட यथाप्रमाणமनुसन्धिக் கும்போது; रक्षकत्वம், அதினுடைய स्वभावसिद्धत्वம், அதின் सर्वविषयत्वம், रक्ष्यवस्तुविशेषानुरूपமாக ரக்ஷையினுடைய नानाप्रकारत्वம், सर्वदा रक्षकत्वம், सर्वत्र रक्षकत्वம், सर्वप्रकाररक्षकत्वம், स्वार्थरक्षकत्वம், सर्वरक्षकत्वापेक्षितமான सर्वज्ञत्वம், सर्वशक्तित्वம், स्वेच्छाव्यतिरिक्तानिवार्यत्वம், अनतिक्रमणीयरक्षणसंरम्भत्वம், परमकारुणिकत्वம்,
27.75 अवसरप्रतीक्षत्वம். व्याजमात्रसापेक्षत्वம், आश्रितसुलभत्वம், विश्वसनीयत्वம், सापराधघटनाद्यनुगुणविशेषणवत्वம், शेषित्वம் அதினுடைய निरुपाधिकत्व नित्यत्वसर्वविषयत्वங்கள், अनन्यशेषित्वம், गुणकृतशेषित्वம், सपत्नीकशेषित्वம், समाभ्यधिकराहित्यம், आत्महविरुद्देशार्हत्वம், अचिद्बद्धमुक्तनित्यविलक्षणत्वம், परशेषित्वहेतुत्वம், स्वतःकर्तृत्वம், शक्त्याधायकत्वம், प्रेरकत्वம், अनन्यप्रेर्यत्वம், अनुमन्तृत्वம், कर्मसाक्षित्वம் सहकारित्वம், प्रियप्रवर्तकत्वம், हितप्रवर्तकत्वம், निरुपाधिकनन्तव्यत्वம், वशीकार्यत्वம், सिद्धोपायत्वம்,
27.76 साध्योपायहेतुत्वம், श्रुतिस्मृतिरूपाज्ञावत्वம், दण्डधरत्वம் सर्वसमत्वம், आश्रितपक्षपातित्वம், अविद्यादिहेतुत्वம், अविद्याद्यनर्हत्वம், आश्रिताविद्यानिवर्तकत्वம் — स्वरूपान्यथाभावराहित्यம், स्वभावान्यथाभावराहित्यம், सर्वनेतृत्वம், सर्वजगद्व्यापारलीलत्वம் — सर्ववेदान्तप्रधानप्रतिपाद्यत्वம், सर्वोपादानत्वம், सर्वनिमित्तत्वம், सत्यसङ्कल्पत्वம், सर्वशरीरित्वம், सर्वशब्दवाच्यत्वம், सर्वकर्मसमाराध्यत्वம், सर्वफलप्रदत्वம், सर्वविधबन्धुत्वம், सर्वव्यापकत्वம்,
27.77 निरतिशयसूक्ष्मत्वம், सर्वाधारत्वம், स्वनिष्ठत्वம், सत्यत्वம், ज्ञानत्वம், अनन्तत्वம், आनन्दत्वம், अमलत्वம், निरूपितस्वरूपविशेषणानुक्तानन्तगुणवत्वம், नित्यदिव्यमङ्गळविग्रहवत्वம், परव्यूहाद्यवस्थावत्वம், सत्यावतारत्वம், अजहत्स्वस्वभावत्वம், अप्राकृतावतारत्वம், अकर्मवश्यावतारत्वம், अकालनियमावतारत्वம், आश्रितार्थगुणपरीवाहावतारत्वம், सर्वावस्थशुभाश्रयत्वம், सर्वावस्थलक्ष्मीसहचरत्वம், दिव्यभूषणायुधमहिषीस्थानपरिजनपरिच्छदद्वारपालपार्षदादिमत्वம் – स्थूलशरीरविश्लेषकत्वம், विश्रमस्थानत्वம், अनुग्रहविशेषवत्वம், ब्रह्मनाडीद्वारप्रकाशकत्वம், तत्प्रवेशकत्वம், ब्रह्मरन्ध्रोत्क्रान्तिहेतुत्वம், अर्चिराद्यातिवाहिकनियोक्तृत्वம், सूर्यद्वारादिनेतृत्वம், अण्डावरणप्रकृतिमण्डलातिक्रमहेतुत्वம், विरजातीरप्रापकत्वம், सूक्ष्मशरीरविश्लेषकत्वம், अप्राकृतदेहप्रदत्वம், दिव्याफ्सरस्सत्कारादिप्रयोजकत्वம், ब्रह्मगन्धादि प्रवेशकत्वம், नित्यमुक्तसत्कारविशेषहेतुत्वம், पर्यङ्काधिरोहणपर्यन्तादरवत्वம், परिपूर्णानुभवहेतुत्वம், प्रधानप्राप्यत्वம், सदेहविदेहबहुदेहकृतसर्वविधकैङ्कर्यप्रतिसंबन्धित्वம், अवाप्तसमस्तकामत्वம், निरतिशयानन्दवत्वம், निरतिशयभोग्यत्वம், सर्वप्रकारभोग्यत्वம், सर्वदानुकूलस्वभावत्वம், अत्यन्ततुल्यभोगप्रदत्वம், आश्रितविश्लेषासहत्वம், अपुनरावृत्तिहेतुत्वம் என்றிவை प्रधानமாக மற்றுமிவற்றைத் துவக்கி வருமேற்றங்களுமெல்லாமடைவே अनुसन्धेयங்கள்.
27.78 *इह सङ्ग्रहतश्श्रीमान् गोप्ता शेषी समाधिकदरिद्रः ।
शरणं सर्वशरीरी प्राप्यस्सेव्यश्च साधुभिर्भाव्यः ॥*
இப்படி प्राप्यனான परमात्मவை प्रापिக்கும் जीवात्मा இத்திருमन्त्रத்தாலே अनुसन्धेयனாம்போது; श्रीमद्रक्ष्यत्वம், अनन्यरक्ष्यत्वம், सर्वत्र सर्वदा सर्वप्रकाररक्षकवत्वம், सुशीलारक्षकवत्वம், पुरुषकारवत्वம், महाविश्वासयोगित्वம், सलक्ष्मीकदासत्वம், नित्यदासत्वம், निरुपाधिकदासत्वம், अनन्यार्हदासत्वம், ज्ञानत्वம் आनन्दत्वம், स्वयंप्रकाशत्वம்,
27.79 स्वस्मै भासमानत्वம், अहंशब्दवाच्यत्वம், अणुपरिमाणत्वம், सूक्ष्मत्वம், छेदनाद्यनर्हत्वம், चतुर्विंशतितत्त्वविलक्षणत्वம், अमलत्वம், ईश्वरादन्यत्वம், ज्ञातृत्वம், आनुकूल्यादियोग्यत्वம், परमपुरुषार्थापेक्षार्हत्वம், नियोगयोग्यत्वம், कैङ्कर्ययोग्यत्वம், सर्वसाक्षात्कारयोग्यत्वம், निरतिशयानन्दयोग्यत्वம், परापेक्षकर्तृत्वம், सोपाधिकस्वामित्वம், भागवतशेषत्वம், भागवतकिङ्करत्वம், अनन्योपायत्वம், अविद्यादिमत्वம், करणादिसापेक्षज्ञानविकासवत्वம், संसारभयाक्रान्तत्वம், अविद्यादि निवृत्तिसापेक्षत्वம், अकिञ्चनत्वம், ईश्वरसौर्हार्दादिमत्वம், सदाचार्यप्राप्तिमत्वம், साध्योपायानुष्ठानार्हत्वம், उपायनिष्ठत्वம், महाप्रभावत्वம், विशिष्टवेषத்தாலே
27.80 सृष्टिसंहारविषयत्वம், अक्षयत्वம், स्वतो बहुत्वம், असंख्यातत्वம், ईश्वरव्याप्यत्वம், ईश्वर नियाम्यत्वம், ईश्वरधार्यत्वம், இவற்றின் नियमமடியாக வந்த ईश्वरशरीरत्वம், ईश्वरलीलारसहेतुत्वம், ईश्वरभोगोपकरणार्हत्वம், तदधीनगतित्वம், तदधीनतत्प्राप्तित्वம், ऐश्वर्यकैवल्यनिरपेक्षत्वம், भगवत्प्राप्त्यर्थित्वம், सर्वाविद्योन्मुक्तत्वம், आविर्भतस्वरूपत्वம், सर्वद्रष्टृत्वம், सर्वप्रकारभगवदनुभवैकभोगत्वம், निरतिशयानन्दवत्वம், भगवद्भोगार्थभोक्तृत्वம், ऐच्छिकविग्रहादिमत्वம், इच्छाविघातरहितत्वம், ईश्वरलक्षणव्यतिरिक्तपरमसाम्यம், अशेषकैङ्कर्यैकरतित्वம், अपुनरावृत्तिमत्वம், என்றிவை प्रधानங்களாகக் கொண்டிவற்றைத் துவக்கி வரும் மற்றுள்ள प्रामाणिकार्थங்களுமெல்லாமிப் पदங்களிலடைவே शब्दसामर्थ्यத்தாலுமर्थस्वभावத்தாலுமनुसन्धेयங்கள்.
27.81 *पदत्रयेऽत्र संक्षेपाद्भाव्यानन्यार्हशेषता ।
अनन्योपायता स्वस्य तथानन्यपुमर्थता ॥*
இப்படி ‘‘सर्वमष्टाक्षरान्तस्थं’’(நாரதீயகல்பம் 1-9) என்னும்படியிருக்கிற இத்திருमन्त्रத்திலே चिदचिदीश्वरस्वरूपங்களும், ஜீவர்களுடையவन्योन्यभेदமும், शेषशेषिभावादिகளாலே निरुपाधिकजीवेश्वरभेदமும், निखिलजगन्निमित्तोपादानभूतपरदेवताविशेष निर्द्धारणादिகளும் सिद्धिக்கையால் இப்படி अनुसन्धिப்பாரிருந்த ஊரிலிருக்குமவர்களுக்கும் ईश्वरனில்லை யென்றும், निर्विशेषனென்றும், अत्यन्तोदासीनனென்றும், प्रतिफलन तुल्यैश्वर्यனென்றும், कर्मविशेषसिद्धैश्वर्यனென்றும், कदाचित् कर्मादिपरवशனென்றும், त्रिमूर्तिகளும், समரென்றும் एकரென்றும், त्रिमूर्त्युत्तीर्णன் परतत्वமென்றும், ब्रह्मादिகளிலே யொருவனீश्वरனென்றும், स्वरूपपरिणामவானென்றும், निमित्तोपादानैक्यங் கொள்ளவொண்ணாதென்றும், जीवेश्वरர்கள் एकात्माவென்றும் उपाधिसिद्धभेदரென்றும், नित्यभिन्नाभिन्नரென்றும், ஜீவன்
27.82 कर्ममात्राधीनशेषभावனென்றும், अनियतशेषभावனென்றும், जडமென்றும், ज्ञानमात्रस्वरूपனென்றும், नित्यमुक्तனென்றும், आरोपितभोगனென்றும், कर्ताவல்ல னென்றும், ईश्वरनिरपेक्षकर्ताவென்றும், आप्रळयस्थायिயென்றும், आमोक्षस्थायिயென்றும், एकனென்றும், स्वनिष्ठனென்றும், स्वरूपतः कार्यभूतனென்றும், कार्यत्वप्रसङ्गरहितனென்றும், कर्ममात्रोपायனென்றும், मुक्तदशैயில் पाषाणकल्पனென்றும், स्वात्मानन्दमात्रतृप्तனென்றும், अत्यन्तस्वतन्त्रனாமென்றும், ईश्वरனோடே एकीभूतனாமென்றும், व्यापारादिरहितனாமென்றும், विभागाविभागादिशक्तिमाனென்றும், आनन्दतारतम्यவானென்றும், व्यवस्थितसालोक्यादिभेदவானென்றும், மற்றுமிப்புடைகளிலுள்ள बाह्यकुदृष्टिमतங்களொன்றாலுங் கலக்கம் வாராது. இப்படியே रक्षकனான श्रियःपतिயைப்பற்ற विश्वासमान्द्यமும், रक्षकान्तरान्वेषणமும், ‘‘त्वम्मेऽहम्मे’’ என்கிற பிணக்கும்,
27.83 निरुपाधिकान्यशेषत्वभ्रमமும், देवतान्तरप्रावण्यமும், तद्भक्तसंसर्गமும், மற்றுமுள்ள असेव्यसेवारुचिயும் देहात्मभ्रमादिகளும் स्वतन्त्रात्मभ्रमादिகளும், स्वार्थपरिग्रहமும், भागवतापचारமும், आकिञ्चन्यविस्मृतिயும், संसारानुवृत्तिरुचिயும், आत्मनाशादिभयமும், असदाचारादिरुचिயும், शत्रुमित्रादिविभागनिरूपणமும், बान्धवान्तरपरिग्रहமும், प्रयोजनान्तररुचिயும், परमप्रयोजन-वैमुख्यமும், மற்றும் स्वनिष्ठाविरोधिகளொன்றும் பின்னாடாது.
*इह निजपक्षविरुद्धैरीदृशनिष्ठाविरोधिभिश्चान्यैः ।
द्विचतुष्कसारवेदी गङ्गाह्रद इव न गच्छति क्षोभम् ॥*
இத் திருमन्त्रத்தில் वाक्यமும் वाक्यार्थமுமிருக்கும்படி யெங்ஙனேயென் னில்; இத்தை एकवाक्यமென்றும் वाक्यद्वयமென்றும், वाक्यत्रयமென்றும், அவ்வோ अनुसन्धिப்பார்கள். இப்படி वाक्यार्थத்தையும் बहुप्रकारமாக வகுத்தनुसन्धानம் பண்ணுவார்கள். एकवाक्यமானபோது
27.84 ‘‘तस्य वाचकः प्रणव’’(பாதஞ்ஜலயோகஸூத்ரம் 1-1-27) इत्यादिகளிற்படியே ‘‘प्रणवप्रतिपाद्यस्वभावविशिष्टाय नारायणाय नमः’’ என்று अन्वयமாம். இப் प्रणवந்தானே नामமாகவற்றாய் நிற்க‘‘अव्यक्तार्थतयोङ्कारः केवलं नैव साधकः’’(சாண்டில்யஸ்ம்ருதி 5-71) என்று शाण्डिल्याद्युक्तप्रक्रिயையாலே व्यापकमन्त्रங்களில் नामान्तरம் व्यक्त्यर्थம். இந்த योजनाविशेषம் अहिर्बुद्ध्न्याद्युक्तமான स्थूलानुसन्धानप्रकारத்தைப் பார்த்தாலுपायपरம். இப்படியானாலும் स्वरूपपुरुषार्थங்களிதிலே अन्तर्गतங்கள். ‘‘बद्धाञ्जलिपुटाहृष्टा नमइत्येव वादिन’’(பாரதம் சாந்திபர்வம் 344-45) इत्यादिகளைப்
27.85 பார்த்து प्राप्यान्तर्गतशेषवृत्तिपरமாகவுமनुसन्धिப்பார்கள். இவ் वृत्तिविशेषமும் स्वरूपानुसन्धानपूर्वकம். இதுவும் कृतोपायர்க்கிவ்வளவு रसिக்குமவस्थैயிலுமுपजीव्यம். இவ்விரண்டनुसन्धानமும் प्रतिष्ठितமாம்போது स्वरूपविवेकம் வேணும். அதற்காக वाक्यद्वयமாக अनुसन्धिக்கும்போது अकारनारायणशब्दवाच्य सर्वरक्षकत्व सर्वाधारत्वादिविशिष्टனானவனுக்கே நான் निरुपाधिकानन्यार्हशेषभूतன்; எனக்குரியேனல்லேன், ஒன்றைப்பற்ற निरुपाधिकस्वामिயுமல்லேன்;
27.86 निरपेक्षस्वतन्त्रனுமல்லேனென்றதாம். अकार नारायणशब्दங்களிரண்டும் भगवन्नामமாகையாலே पुनरुक्ति வாராதோவென்னில்; அப்போது व्युत्पत्तिविशेषसिद्धமான अर्थविशेषத்தை विवक्षिத்து ஒன்று विशेषणமாகக் கடவது. अकारवाच्यனான नारायणனுக்கென்றும் पुनरुक्तिपरिहरिக்கலாம். भगवच्छब्दமும் नामधेयமாயிருக்க वासुदेवादिशब्दத்தோடே समानाधिकरणமாகாநின்றதிறே. सर्वबीजाक्षरवाच्यமான सर्वकारणம் देवतान्तरமோவென்று शङ्कियाதபடி नारायणனென்று विशेषिக்கையாலும் सप्रयोजनம். मन्त्रங்களுக்கு पदक्रमம் अध्ययननियतம். अन्वयமर्थानुगुणமாகக் கடவது. இப்படி वाक्यद्वयமானால் திருमन्त्रம் முழுக்க
27.87 स्वरूपपरம். இந்த स्वरूपपर योजனையைப்பற்ற திருमन्त्रத்திலே பிறந்து द्वयத்திலே வளர்ந்து द्वयैकनिष्ठனாவாயென்று पूर्वர்களருளிச்செய்தார்கள். பிறக்கையாவது:- स्वरूपज्ञानம் பிறக்கையாலே ’’அன்று நான் பிறந் திலேன் பிறந்த பின் மறந்திலே’’(திருச்சந்தவிருத்தம் 64) னென்கிற முன்புற்ற நிலை கழிகை. அதாவது தன்னிசைவாலும் अनन्यशेषனாய், அதடியாக अनन्याधीनனாய், அதடியாக अनन्यप्रयोजनனாய், अनन्यशरणனாகை. வளருகையாவது; अधिकारविशेषानुरूप कर्तव्यविशेष विषयज्ञानविशेषத்தாலே उपायपरिग्रहம் பண்ணுகை. द्वैयैक निष्ठனாகையாவது; द्वयानुसन्धानத்தாலே उपायान्तरத்திலும் प्रयोजनान्तरத்திலுந் துவக்கற இதிற்சொன்ன उपायத்திலும் प्रयोजनத்திலும் प्रतिष्ठितனாகை. இப்படி திருमन्त्रமும் द्वयமுங்கூட स्वरूपोपायपुरुषार्थங்களைக் காட்டுகிறன. இவ்விரண்டு वाक्यமான योजனை தன்னிலே திருमन्त्रம் முழுக்க सपरिकरात्म समर्पणपरமென்றுமनुसन्धिப்பார்கள். அப்போது प्रणवத்தில் मकारம் प्रथमान्त-மேயாகவமையும் हविस्समर्पणन्यायத்தாலே निरुपाधिकமானவாत्महவிஸ்ஸு
27.88 निरुपाधिकदेवதையாய் अकारवाच्यனான नारायणனுக்கே भरமாக समर्पितமென்ற தாயிற்று. இப்படி निरुपाधिकமான வாत्मयागத்தில் ‘‘नमः’’ என்று தன்னோடு தன் துவக்கறுத்து எனக்கு भरமல்லேனென்றதாயிற்று. ‘‘इदमिन्द्राय न मम’’ என்னுமாப்போலே இங்கும் परसंबन्धविधिயிலும் स्वसंबन्धनिषेधத்திலும் प्रवृत्तமாகையாலே वाक्यद्वयமும் सप्रयोजनம். இந் नमஸ்ஸு समर्पणந்தன்னிலும் परनिरपेक्षकर्तृत्वादिகளை निषेधिக்கையிலே तत्परமாகவுமாம். வேறொருத் தருக்கும் भरமன்று எனக்கும் भरமன்று என்று वाक्यद्वयाभिप्रायமாகவுமாம்.
27.89 திருमन्त्रமாत्मनिवेदनपरமென்னுமிடத்தை नित्यத்திலே ‘‘मूलमन्त्रेण स्वात्मानं देवाय निवेद्य’’(நித்யம்) என்றருளிச்செய்தார். இப்படி श्रीवैकुण्ठगद्यத்திலும் ‘‘श्रीमता मूलमन्त्रेण मामैकान्तिकात्यन्तिकपरिचर्याकरणाय परिगृह्णीष्वेति याचमानःप्रणम्यात्मानं भगवते निवेदयेत्’’(வைகுண்டகத்யம்) என்றிவ்வर्थம் दर्शितம். वाक्यந்தோறும் ஒரு प्रार्थनापदத்தையध्याहरिத்து திருमन्त्रம் முழுக்க द्वयத்திலுत्तरखण्डம்போலே इष्टप्राप्त्यनिष्टनिवृत्तिरूप पुरुषार्थप्रार्थनापरமாகவுமनुसन्धिப்பார்கள். அப்போதும் स्वरूपानुसन्धानமிதிலே யन्तर्गतம். स्वरूपमात्रपरமானபோதும் पुरुषार्थविशेषம் सूचितம். அதினுपायமும் प्रार्थனையும் तत्तत्प्रमाणवशத்தாலே வரும். இம் मन्त्रोत्पाद्यங்களான शेषत्वज्ञानादिகள் முன்பு
27.90 प्राप्तங்களல்லாமையாலே இம் मन्त्रம் முழுக்க प्राप्यपरமென்றது अन्यपरம். எங்ஙனேயென்னில்; प्राप्यपरமென்றது प्राप्यप्रतिपादकமென்றபடியன்று; शब्दத்தால் उत्पाद्यமான ज्ञानம் शब्दத்துக்கு प्रतिपाद्यமன்றிறே.
திருमन्त्रம் மூன்று वाक्यமானபோது स्वरूपமும் पुरुषार्थமுஞ்சொல்லவு पायமாर्थமாதல், स्वरूपமுமுपायமுஞ்சொல்ல पुरुषार्थமாर्थமாதல், उपायமும் पुरुषार्थமுஞ்சொல்ல स्वरूपமாर्थமாதல், स्वरूपोपायपुरुषार्थங்களடைவே शाब्दங் களாதலாகக் கடவது. எங்ஙனேயென்னில்; ‘‘अकारार्थायैव स्वमहमथ मह्यन्न निवहा नराणां नित्यानामयनमिति नारायणपदम् । यमाहास्मै कालं सकलमपि सर्वत्र सकलास्ववस्थास्वाविस्स्युर्मम सहजकैङ्कर्यविधयः’’(அஷ்டச்லோகீ 3) என்கிறபடியே प्रणवமும் नमஸ்ஸும்
27.91 स्वरूपத்தை शोधिக்கின்றன. மூன்றாம் पदம் प्रणवத்திற்சொன்ன तादर्थ्यத்தை पुरस्करिத்துக்கொண்டு अध्याहृतமான क्रियापदத்தோடே கூடி पुरुषार्थप्रार्थनार्थம். அப்போது अनिष्टनिवृत्तिप्रार्थனை अर्थस्वभावத்தாலே வரக்கடவது. द्वयத்திலும் ‘‘भवांस्तु सह वैदेह्ये’’(ராமாயணம் அயோத்யாகாண்டம் 31-27) त्यादिகளிலுஞ் சொல்லுகிறபடியே कैङ्कर्यप्रतिसंबन्धिயும் सपत्नीकனானபடியாலே இங்கும் सलक्ष्मीकனான नारायणன் பொருட்டாவே ‘‘नारायणाय’’ என்கிறவிதுக்கு क्रियापेक्षैயுண்டாகையால் ‘‘भवेयं’’ என்றொரு पदமध्याहार्यம். ’’வழுவிலா வடிமை செய்யவேண்டு’’(திருவாய்மொழி 3-3-1) மென்றும், ’’அடியேனையாட்கொண்டருளே’’(பெரிய திருமொழி 1-9-2)
27.92 யென்றும், ‘‘नित्यकिङ्करतां प्रार्थये’’(சிறிய கத்யம்) என்றும் ‘‘नित्यकिङ्करो भवानि’’(சிறிய கத்யம்) என்றுமிப் प्रार्थனையை प्रयोगिத்தார்களிறே. तादर्थ्यம் नित्यसिद्धமாகையாலே आशासिக்கவேண்டாமையாலும் இஸ் संबन्धस्वरूपம் प्रणवத்திலே சொல்லுகையாலும் இதின் फलமாய் ‘‘समुद्रे गोष्पदमस्ति’’ என்னுமாப்போலே पुरुषार्थान्तरங்களையெல்லாம் விளாக்குலைக்கொண்டிருக்கிற परिपूर्णब्रह्मानुभवपरीवाहமான कैङ्कर्यம் ஒழிவில்காலத்திற்படியே யிங்கपेक्षिக்கப் படுகிறது.
॥ * ॥ अत्र स्वलाभापेक्षापि स्वामिलाभावसायिनी ।
स्वामिप्रयोजनापेक्षाप्यतस्स्वानन्दहेतुका ॥ * ॥
உன்னை யுகப்பிக்கும் कैङ्कर्यத்தை நான் பெறவேணுமென்றாலும் என்னையடிமை கொண்டு நீ யுகக்க வேணுமென்றாலு மிருவர்க்கும் प्रयोजनம் सिद्धம். ‘‘त्रैगुण्यं षड्गुणाढ्यञ्च द्विधान्नं परिकीर्तितम् । त्रैगुण्यमन्नं बद्धानामितरेषामथेतरत्’’(லக்ஷ்மீதந்த்ரம்) என்கிற षड्गुणाढ्यமான अन्नமாவது भगवद्गुणानुभवம்.
27.93 அதடியாக வருகிற भोग्यतमकैङ्कर्य विशेषங்களாகவுமாம். ‘‘भोगमात्रसाम्यलिङ्गाच्च”( ப்ரஹ்மஸூத்ரம் 4-4-21) என்கிறபடியே मुक्तदशैயில் परमसाम्यம் भोगத்திலும் ज्ञानத்திலுமாகையால் அப்போதும் स्वरूपानुबन्धिயான शेषत्वத்துக்கும் இதின் फलமான कैङ्कर्यத்துக்கும் विरोधமில்லை. मुमुक्षुदशैயிலும் मुक्तदशैயிலுமுண்டானவहंग्रहம் शरीरात्मभावத்தாலே யென்று भाष्यादिகளிலே समर्थितமாகையால் இவ்வहंग्रहம் पारार्थ्यकाष्ठैயடியாக வந்ததிறே. இப்படி मुक्तदशैயில் வரும் कैङ्कर्यம் स्वतःप्राप्तமாய் द्वंद्वरहितமாய் निरन्तरமாய் अनवच्छिन्नरसமாயிருக்கும். मुमुक्षुदशैயில்
27.94 स्वयंप्रयोजनமாகப் பண்ணும் कैङ्कर्यம் सुकृतविशेषोपाधिकமாய் द्वंद्वतितिक्षायुक्तமாய் निद्रादिகளாலேயन्तरितமாய் अवच्छिन्नरसமாயிருக்கும். இங்கிவன் कैङ्कर्यமொழியப்பண்ணும் व्यापारங்களில் भगवदाज्ञैக்குப் பொருந்தாதவை யெல்லாம் ஏதேனுமொரு प्रतिकूलफलத்தைக் கொடுக்கும். भगवदनुज्ञातங்களான काम्यங்களில் स्वर्गपश्वाद्यर्थங்களானவை யெல்லாம் अनेकदोषदुष्टங் களானவनुकूलाभासங்களைக் கொடுத்து அம்முகத்தாலே बाधकங்களாம். ஆகையாலே मुमुक्षुவுக்கு ‘‘त्रैवर्गिकांस्त्यजेद्धर्मान्’’(விஷ்ணுபுராணம்) என்கிறபடியே प्रयोजनान्तरहेतुக்களை விட்டு भक्तितत्त्वज्ञानங்களையும் भगवद्भागवतसमृद्धिயையும் பற்றச்செய்யும் काम्यங்களான भगवद्धर्मங்கள் साधनமாக अनुष्ठिக்கச் செய்தேயும் बन्धकங்களல்லாமையாலே उचितமான कैङ्कर्यकोटिயிலே சேர்ந்து கிடக்கும். प्रणवத்திற்சொன்ன भगवच्छेषत्वம் नमஸ்ஸிலே औचित्यरूपமான
27.95 अत्यन्तपारतन्त्र्यपारार्थ्यங்களடியாக यथाप्रमाणம் तदीयपर्यन्तமாய் நிற்கையாலே ‘‘नारायणाय’’ என்கிறவிடத்திலपेक्षिக்கிற भगवत्कैङ्कर्यமும் तदीयपर्यन्तம். ‘‘मम मद्भक्तभक्तेषु प्रीतिरभ्यधिका भवेत् । तस्मान्मद्भक्तभक्ताश्च पूजनीया विशेषतः’’(பாரதம் ஆச்வமேதிகபர்வம் 116-23), ‘‘तस्माद्विष्णुप्रसादाय वैष्णवान् परितोषयेत् । प्रसादसुमुखो विष्णुस्तेनैवस्यान्न संशय’’(இதிஹாஸஸமுச்சயம் 27-27) इत्यादिகளிலுமிவ்வर्थம் सिद्धம். ‘‘सर्वं परवशं दुःख’’(மநுஸ்ம்ருதி 4-160) मित्यादिகள் தனக்கு प्राप्तமல்லாத क्षुद्रविषयத்திலே कर्ममूलமாக வருகிற पारवश्यம் दुःखकारणமென்கிறன. भगवद्भागवतவிஷயத்தில் पारतंत्र्यம் आत्मभिमानानुगुणपुरुषार्थव्यवस्थैயாலே निरतिशयप्रीतिकारणம். இங்கு तदीयரென்கிறது तदीयत्वव्यवसायरसமுடையவர்களை. नारங்களாலே विशिष्टனான नारायणனைப்பற்ற कैङ्कर्यத்தையपेक्षिக்கும்போது विशेषणமான नारங்களையும்
27.96 பற்ற कैङ्कर्यமपेक्षिக்கப்பட்டதாமென்னுமிடம் न्यायसिद्धமாகையாலே இங்கே तदीयकैङ्कर्यம் सिद्धिக்கிறதென்று சிலர் சொல்லுவர்கள். இப்படி विशेषणत्वமே प्रयोजकமானால் नारशब्दार्थங்களாக இங்கு विवक्षितங்களான ब्रह्मादिदेवतान्तरங்களையும் भगवद्द्वेषिகளையும் पश्वादिகளையும் பற்ற कैङ्कर्यापेक्षै नरपतिயைப் பற்ற कैङ्कर्यத்தை अपेक्षिத்தானென்றால் नरரைப்பற்ற कैङ्कर्यமपेक्षितமாகாதாப்போலே இங்கும் न्यायमात्रத்தால் नारங்களைப்பற்ற कैङ्कर्यापेक्षै सिद्धिயாது. ஆனபின்பு प्रमाणमुखத்தாலே स्वामिயினுடைய अभिमतஞ் செய்ய अपेक्षिக்கிறானாகையாலே அவனுக்கு प्रियतमராயிருக்கிற शेषत्वज्ञानமுடைய अनन्यप्रयोजनரைப்பற்ற कैङ्कर्यமपेक्षितமாமித்தனை. अनुभाव्यதையிலும் नारशब्दार्थமான सर्वமும் प्रविष्टமாமென்னுமிடமும் प्रमाणबलத்தாலே வந்ததத்தனை. இப்படி திருमन्त्रத்தில் वाक्यत्रयத்திலே இரண்டு वाक्यம் स्वरूपपरமாய் ஒரு वाक्यம் पुरुषार्थप्रार्थनापरமாக योजिத்தது. இங்ஙனன்றிக்கே प्रणवம் स्वरूपपरமாய் नमஸ்ஸிலே अनिष्टनिवृत्तिप्रार्थனையாய் अनिष्टம் निवर्तिத்தால் வரும் पुरुषार्थத்தை ‘‘नारायणाय स्यां’’ என்று கணிசிக்கிறதாகவுமாம். இந்नमஸ்ஸுக்குமிப்படி द्वयத்தில் नमஸ்ஸுக்குப்போலே विरोधिनिवृत्तिप्रार्थனையிலே तात्पर्यமான योजनाविशेषமும்
27.97 ‘‘प्रणवोदिततच्छेषभावोऽहं निजकर्मभिः । अहङ्कारममत्वाभ्यामभिभूतोऽप्यतः परम् ॥ तच्छेषत्वानुसन्धान पूर्वतच्छेषवृत्तिकः । भूयासमित्यमुं भावं व्यनक्ति नम इत्यदः’’(பட்டர் நித்யம்) என்று भट्टர் नित्यத்திலே प्रदर्शितம். ஆகையாலே ‘‘अहं न मम स्यां’’ என்றாதல், ‘‘न मम किञ्चित्स्यात्’’ என்றாதல் वाक्यान्वयமாய் இத்தாலே ‘‘अस्य जीवात्मनोऽनाद्यविद्यासञ्चितपुण्यपापरूप कर्मप्रवाहहेतुकब्रह्मादिसुरनरतिर्यक्स्थावरात्मक चतुर्विधदेहप्रवेशकृत तत्तदात्माभिमानजनितावर्जनीय भवभयविध्वंसनाय’’(வேதார்த்தஸங்க்ரஹம்) என்றும், ’’பொய்ந் நின்ற ஞானமும் பொல்லாவொழுக்குமழுக்குடம்பு’’(திருவிருத்தம் 1) மென்றுஞ்சொல்லுகிற अविद्याकर्मतदुभयवासनारुचिप्रकृतिसंबन्धादिरूपமான सर्वानिष्टமுமत्यन्तनिवृत्तமாகவேணு மென்றपेक्षिத்ததாயிற்று.
27.98 இப்படி अनिष्टनिवृत्तिயை प्रार्थिத்தாலிष्टप्राप्तिயை अपेक्षिக்கவேணுமோ; ‘‘संपद्याविर्भावस्स्वेन शब्दात्’’(ப்ரஹ்மஸூத்ரம் 4-4-1) என்றும். ‘‘यथा न क्रियते ज्योत्स्ना मलप्रक्षाळनान्मणेः । दोष प्रहाणान्नज्ञानमात्मनः क्रियते तथा ॥ यथोदपानकरणात् क्रियते न जलांबरम् । सदेव नीयते व्यक्तिमसतस्संभवः कुतः ॥ तथा हेयगुणध्वंसादवबोधादयो गुणाः । प्रकाश्यन्ते न जन्यन्ते नित्या एवात्मनो हि ते’’(விஷ்ணுதர்மம் 104-55-57) என்றுஞ்சொல்லுகிறபடியே इष्टप्राप्ति தானே வாராதோவென்னில்;
*स्वतस्स्वार्हं यथाभागं पुत्रः पितुरपेक्षते ।
सापराधस्तथा दासः कैङ्कर्यं परमात्मनः ॥ * ॥
தன்னपराधத்தாலே स्वतः प्राप्तத்தை யிழந்து கிடக்கிறவிவன் என் கூறு நான் பெற வேணும், அதுக்காகவென்னपराधத்தைப் பொறுத்தருளவேணுமென்றपेक्षिக்கையில் विरोधமில்லை. இத்தால் प्रतिबन्धकनिवृत्तिயில் மாணிக்கத்திலொளியும்
27.99 ‘‘इच्छात एव तव विश्वपदार्थसत्ता’’(வைகுண்டஸ்தவம் 36) என்கிறபடியே नियதையான ईश्वरेच्छैயாலே பரம்புமாப்போலே இங்கும் स्वाभाविकமான ज्ञानविकासादिகள் सहजकारुण्यरूपैயானவீश्वरेच्छैயாலே வருகிறனவென்னுமிடந் தோற்றுகிறது. ஆனாலும் भावान्तराभावपक्षத்தில் सर्वानिष्टनिवृत्तिதானே इष्टप्राप्तिயாயிருக்கத் தனித்துச் சொன்னால் पुनरुक्ति வாராதோ? ‘‘अविद्यानिवृत्तिरेव हि मोक्षः’’(ஸ்ரீபாஷ்யம், லகுஸித்தாந்தம்.)
27.100 என்று भाष्यकारருமருளிச்செய்திலரோவென்னில், एकमेव स्वरूपेण परेण च निरूपितम् । इष्टप्राप्तिरनिष्टस्य निवृत्तिश्चेति कीर्त्यते ॥ ஒன்றுதன்னையே स्वरूपத்தாலும் प्रतियोगिயாலும் निरूपिத்து प्रयोजनविशेषाभिसन्धिயாலே பிரியச் சொல்லக் கடவதாயிருக்கும். संसारदशैயில் ஒரு प्रतिकूल निवृत्तिप्रतिकूलान्तरமாயும் अनुकूलप्रतिकूलोभयनिवृत्तिயாயுமிருக்கும். இங்கு सर्वप्रतिकूलनिवृत्तिயாகையாலே மேல் முழுக்க अनुकूलமேயாயிருக்கும். ஆகையால் पूर्वावस्थैயினுடைய अनिष्टतमत्वத்தையும் केवलानुकूलरूपैயான उत्तरावस्थैயினுடைய इष्टतमत्वத்தையுந்தோற்று விக்கைக்காக आदरातिशयத்தாலே பிரியவपेक्षिக்கிறது. भगवन्निग्रहादिनिवृत्तिயும்,
27.101 ஜீவனுடைய ज्ञानविकासादिகளும் வேறாகையாலே பிரியவपेक्षिக்கிறதாகவுமாம். ज्ञानसङ्कोचादिகளுக்கு हेतुவான भगवन्निग्रहादिகளுடைய निवृत्तिயும், निग्रहफलமான ज्ञानसङ्कोचादिகளுடைய निवृत्तिயான ज्ञानविकासकैङ्कर्यादिகளும் வேறுபட்டவையாகையாலே பிரிய अपेक्षिக்கக் குறையில்லையிறே.
सर्वानिष्टनिवृत्ति பிறந்தால் पाषाणकल्पत्वादि मतान्तरशங்கை வாராமைக்காகவும், भगवत्प्राप्तिயில் इन्द्रादिप्राप्तिயிற்போலே दुःखसंबन्धமில்லையென்று தோற்றுவிக்கையில் தாத்பர்யத்தாலும் பிரித்துச் சொல்லுகிறதாகவுமாம். இப்படி स्वरूपமும் पुरुषार्थप्रार्थनமும் शाब्दமானால் இப் पुरुषार्थத்துக்கு साधनமாக शास्त्र-विहितமான साध्योपायமும் भरन्यासपर्यन्तமாக अकिञ्चनனுக்கनिष्टनिवृत्तिயைச் சொல்லுகிற नमஸ்ஸிலேயாर्थமாக अनुसन्धेयம்.
27.102 இப் पुरुषार्थप्रार्थனை इच्छामात्रமாயிருக்கையன்றிக்கே गोप्तृत्ववरणरूपैயாகையாலே शेषமுपलक्षितமாகவுமாம். அப்போது திருमन्त्रம் स्वरूपोपायप्रधानமாயிருக்கும். अयनशब्दத்தில் करणव्युत्पत्तिயாலே ईश्वरனுடைய उपायत्वமும் सिद्धिக்கும். *केचित्तु चरमश्लोके द्वये चोक्तक्रमादिह । भरन्यासपरं तारं शेषं फलपरं विदुः ॥ * ॥
27.103 இத் திருमन्त्रத்தில் स्वरूपोपायपुरुषार्थங்கள் மூன்றுமடைவே शाब्दமாம். அப்போது प्रणवம் स्वरूपपरம், नमஸ்ஸு उपायपरம், शेषம் पुरुषार्थप्रार्थनापरம். இம்மூன்றின் விரிவெல்லாமध्यात्मशास्त्रங்களைக்கொண்டு தெளிந்திங்கே अनुसन्धेयம். இந்த योजனைக்கு वेदान्तशास्त्रத்தில் तत्त्वोपायपुरुषार्थங்களை निरूपिத்த क्रमத்தோடு சேர்த்தியுண்டு, எங்ஙனேயென்னில்; முதலிரண்டध्यायத்தாலே परावरतत्त्वங்களைத் தெளிவித்து तृतीयத்தாலே अधिकारपरिकरங்களோடே கூடின उपायஞ்சொல்லி चतुर्थத்தாலே फलஞ்சொல்லியிறே शारीरकशास्त्रந் தலைக்கட்டிற்று. அங்கு முதலிரண்டध्यायத்திற்சொன்ன परावरतत्वस्वरूपமும், நான்காமध्यायத்திற்சொன்ன फलமும் स्वतन्त्रप्रपत्तिनिष्ठனுக்கும் तुल्यம்.
27.104 மூன்றாமध्यायத்தில் वैराग्यपादத்திலும் उभयलिङ्गपादத்திலும் சொன்ன संसारदोषமும் शरण्यனுடைய हेयप्रत्यनीककल्याणैकतानत्वமும் मुमुक्षुவான இவனுக்கவश्यம் ज्ञातव्यம். மூன்றாம் पादத்திலுपायமாகச் சொன்ன उपासनभेदங்களை அவற்றுக்கधिकारिகளானவர்களनुष्ठिக்கக்கடவர்கள். अकिञ्चनனான अधिकारि தனக்கவற்றினருமையைக்கண்டு ‘‘नानाशब्दादिभेदात्’’ (ப்ரஹ்மஸூத்ரம் 3-3-56), ‘‘विकल्पोऽविशिष्टफलत्वात्’’ (ப்ரஹ்மஸூத்ரம் 3-3-57) என்கிற अधिकरणங்களிற்சொன்ன கட்டளையிலே विद्यान्तरव्यावृत्तமாய் அவை கொடுக்கும் मोक्षத்தைக் கொடுக்குமிடத்தில் निरपेक्षமுமான न्यासத்தையே பற்றக்கடவன். நான்காம் पादத்திற்சொன்ன वर्णाश्रमधर्मங்களை उपासननिष्ठன் ‘‘सहकारित्वेन च’’ (ப்ரஹ்மஸூத்ரம் 3-4-33) என்கிறபடியே विद्यापरिकरமாக अनुष्ठिக்கும். स्वतन्त्रप्रपत्तिनिष्ठன் ‘‘विहितत्वाच्चाश्रमकर्मापि’’ (ப்ரஹ்மஸூத்ரம் 3-4-32) என்கிறபடியே भगवदाज्ञासिद्धமென்று स्वयंप्रयोजनமாக अनुष्ठिக்கும். இப்படியானால் शारीरकத்திற்சொன்ன स्वरूपोपायपुरुषार्थங்களெல்லாம் श्रीमदष्टाक्षरान्तस्थங்கள். இதில் अर्थपञ्चकादिகள் கிடக்கிற வகுப்பெல்லாங் கீழே சொன்னோம். இப்படி திருमन्त्रமேகवाक्यமானபோது उपायपरமென்றும் वृत्तिपरமென்றும்; वाक्यद्वयமானபோது स्वरूपपरமென்றும், अन्वयव्यतिरेकमुखेन समर्पणपरமென்றும்,
27.105 पुरुषार्थप्रार्थनापरமென்றும், वाक्यत्रयமானபோது முதலிரண்டு पदமும் स्वरूपपरமாய் மேல் पदம் पुरुषार्थप्रार्थनापरமென்றும், प्रणवம் स्वरूपपरமாய் மேலிரண்டு पदமும் अनिष्टनिवृत्तीष्टप्राप्तिप्रार्थनापरமென்றும், இக்கட்டளையிலே प्रथमपदம் स्वरूपपरமாய் மேலிரண்டு पदமுமுपायपरமென்றும், प्रथमपदம் समर्पणपरமாய் மேலிரண்டு पदமும் फलप्रार्थनापरமென்றும், पदत्रयமுமடைவே तत्त्वोपायपुरुषार्थप्रार्थनापरமென்றும் अनन्तार्थगर्भமான வித்திருमन्त्रத்தில் वाक्यार्थத்தைப் பத்துப் படியாக यथासंप्रदायமनुसन्धिப்பார்கள். இப்படி சிலவற்றை प्रधानமாக अनुसन्धिத்தாலும் மற்றுள்ளவையுமாर्थமாகக் கடவது. ॥ * ॥ तदेवं पद वाक्यार्थैस्तत्त्वविद्गुरुदर्शितैः । तत्तत्कुदृष्टिकथितं निरस्तं योजनान्तरम् ॥ * ॥
இத் திருमन्त्रத்தில் बाह्यकुदृष्टिमतங்களால் கலக்கவொண்ணாத தெளிவு டையவனை ‘‘प्रज्ञाप्रासादमारुह्य ह्यशोच्यश्शोचतो जनान् । भूमिस्थानिव शैलस्थो ह्यज्ञान् प्राज्ञः प्रपश्यति’’(பாரதம் சாந்திபர்வம் 450-11) என்கிறது. ‘‘ज्ञानेन हीनः पशुभिस्समानः’’(நரஸிம்ஹபுராணம் 16-13) என்கிறவிடத்தில்
27.106 ज्ञानமென்கிறதுவும் இத்தெளிவை. இப்படித் தெளிந்தவன் ‘‘न प्रहृष्यति सम्माने नावमानेऽनुतप्यते । गङ्गाह्रद इवाक्षोभ्यो यस्स पण्डित उच्यते’’(பாரதம் உத்யோகபர்வம் 33-33) என்கிறபடியே मानावमानादिகளிற்கலங்கான். இத்திருमन्त्रத்தில் यथार्थज्ञानமும் निष्ठैயையுமுடையவனை आदरिக்கும் देशத்திலும் ‘‘यत्राष्टाक्षरसंसिद्धो महाभागो महीयते । न तत्र सञ्चरिष्यन्ति व्याधिदुर्भिक्षतस्कराः’’(நாரதீயம் 1-20) என்கிறபடியே ஒரு दोषங்களும் வாராது. இச் श्लोकத்தால் 140‘‘रागादिरोगान् सततानुषक्तानशेषकायप्रसृतानशेषान् । औत्सुक्यमोहारतिदान् जघान योऽपूर्ववैद्याय नमोऽस्तु तस्मै’’(வாக்படம்) என்று आयुर्वेदவித்துக்கள்
27.107 प्रधानव्याधिகளாக வெடுத்த रागादिகளும் सத்துக்களுக்கு ஸ்ரீயென்றோதப்பட்ட ज्ञानसंपத்தினுடைய सङ्कोचமும் बाह्यतस्कரர்க்கு நிலமல்லாதவாत्मापहारादिகளைப் பண்ணும் महातस्करரான अहङ्कारादिகளும் நடையாடாதென்றதாயிற்று. இத்திருमन्त्रத்திலறுதியிட்ட பொருளே विष्णुवासुदेवशब्दविशिष्टங்களான व्यापकमन्त्रान्तरங்களுக்கும் பொருள். ‘‘व्याप्तिकान्तिप्रवेशेच्छास्तत्तद्धातु निबन्धनाः । परत्वेऽभ्यधिका विष्णोर्देवस्य परमात्मनः’’(அஹிர்புதந்யஸம்ஹிதை 52-38) என்று अहिर्बुद्धन्यादिகள் निर्वचनம் பண்ணினபடியே ‘‘विष्ल् व्याप्तौ’’, ‘‘वश कान्तौ’’, ‘‘विश प्रवेशने’’, ‘‘इषु इच्छायां’’ என்கிற धातुக்களிலே निष्पन्नமான विष्णुशब्दத்திலுள்ள பொருள்களும், वासुदेवशब्दத்திலும் ‘‘वसति वासयति’’ என்றும், ‘‘दीव्यति’’ என்றுந்தோற்றின सर्वव्यापकत्वं, सर्वाधारत्वं, तद्गतदोषरहितत्वं, क्रीडाविजिर्गीषादिमत्वं என்கிறவாकारங் களுமெல்லாம்
27.108 नारायणशब्दार्थத்திலே एकदेशம். ‘‘ऋचो यजूꣳषि सामानि तथै-वाथर्वणानि च । सर्वमष्टाक्षरान्तस्थं यच्चान्यदपि वाङ्मयं’’(நாரதீயகல்பம் 1-9) என்கையால் இத்திருவष्टाक्षरமே मुमुक्षुக்களுக்கு तत्त्वहितानुबन्धिகளான सर्वापेक्षितங்களுக்கும் प्रकाशकம். ‘‘ऋचो यजूꣳषि सामानि योऽधीते सकृदञ्जसा । सकृदष्टाक्षरं जप्त्वा स तस्य फलमश्नुते’’(நாரதீயம் 1-10) என்கையாலே இதினுடைய सकृदुच्चारणம் सर्ववेदजपतुल्यம். ‘‘यस्य यावांश्च विश्वासस्तस्य सिद्धिश्च तावती । एतावानिति नैतस्य प्रभावः परिमीयते’’(நாரதீயகல்பம் 1-14) என்கையாலெ தந்தாம் विश्वासतारतम्यத்துக்கீடாக सिद्धितारतम्यமுண்டானாலும் महाविश्वासமுடையார் பக்கலித் திருमन्त्रம் अनवच्छिन्नप्रभावமாயிருக்கும். இச்श्लोकத்தில் இன்னாரால் परिच्छेदिக் கவொண்ணாதென்று विशेषिயாமையாலே ’’நரநாரணனாயுலகத்தரு நூல்சிங்காமை விரித்தவ’’(பெரியதிருமொழி 10-6-1) னென்கிறபடி இத்திரு मन्त्रத்துக்கு प्रवर्तकனு
27.109 மாய் प्रतिपाद्यனுமாயிருக்கிற स्वतस्सर्वज्ञனான नारायणன் தானுமிதின் प्रभा-वத்தை परिच्छेदयोग्यமன்றென்றறியுமத்தனை. இம் मन्त्रத்துக்கு द्रष्टाவாய் देवतैயுமானவன் பக்கலிலே இத்தை सार्थமாகப்பெற்ற திருமங்கையாழ் வார் ’’அந்தணர் மாட்டந்திவைத்த மந்திரத்தை மந்திரத்தால் மறவாதென்றும் வாழுதியேல் வாழலா’’(திருநெடுந்தாண்டகம் 4) மென்றருளிச்செய்தார்.
எட்டுமாமூர்த்தி யெண் கண்ணனெண்டிக்
கெட்டிறையெண்பிரகிருதி
எட்டு மா வரைகளீன்ற வெண்குணத்தோ
னெட்டெணு மெண்குணமதியோர்க்
கெட்டுமாமல ரெண்சித்தி யெண்பத்தி
யெட்டுயோகாங்கமெண்செல்வம்
எட்டுமாகுண மெட்டெட்டெணுங்கலை
யெட்டிரத மேலனவு மெட்டினவே. ( 38)
27.110 सर्वकारणभूतனுமாய் अखिलहेयप्रत्यनीककल्याणैकतानனுமான सर्वेश्वरனுக்கு प्रतिपादकமான திருவष्टाक्षरத்தை अनुसन्धिக்கும் महामतिகளுக்கு आत्मगुणादिகளிலு மष्टैश्वर्यादिகளிலும் यथामनोरथं दुर्लभமாயிருப்பதொன்றுமில்லை யென்கிறது. (எட்டுமாமூர்த்தி) आकाशादिभूतங்களைந்தும், चन्द्रादित्यர்களும், यजमानனுந்தனக்கு मूर्तिகளாக வரம் பெற்று अष्टमूर्तिயென்று பேர் பெற்ற रुद्रன், (எண்கண்ணன்) चतुर्मुखனாகையாலே எட்டுக்கண்ணுடைய ब्रह्मा, (எண்டிக்கு) எட்டு दिக்குகள், (எட்டிறை) इन्द्रादिகளான दिक्पालकர்கள். (எண்பிரகிருதி) अव्यक्तमहदहङ्कारादिகளான எட்டு तत्त्वங்கள், (எட்டுமாவரைகள்) எட்டு कुलपर्वतங்கள், (ஈன்றவெண்குணத்தோன்) இவையெல்லாத்தையும் सृष्टिத்த गुणाष्टकविशिष्टனான परमात्मा இவனுக்கு எட்டு गुणங் களென்கிறது; कर्मवश्यत्व जरामरणशोकक्षुत्पिपाஸைகளன்றிக்கேயொழிகையும், नित्यங்களான भोग्यங்களையுடையனாகையும், நினைத்து முடிக்கவல்லனாகையும் (எட்டெணுமெண்குணமதியோர்க்கு) இப்படிப்பட்ட सर्वेश्वरனுக்கு प्रधानमन्त्रமான திருவष्टाक्षरத்தை सार्थமாகக் கேட்டनुसन्धिக்கும் अष्टाङ्गबुद्धिயுடையவनन्यரான प्रतिबुद्धர்க்கு, बुद्धिக்கு எட்டङ्गங்களாவன; ‘‘ग्रहणं धारणञ्चैव स्मरणं प्रतिपादनम् । ऊहोऽपोहोऽर्थविज्ञानं तत्त्वज्ञानञ्च धीगुणाः’’() என்கிறவை
27.111 (எட்டுமாமலர்) ‘‘अहिंसा प्रथमं पुष्पं पुष्पमिन्द्रिय निग्रहः । सर्वभूतदया पुष्पं क्षमा पुष्पं विशेषतः ॥ ज्ञानं पुष्पं तपः पुष्पं ध्यानं पुष्पं तथैव च । सत्यमष्टविधं पुष्पं विष्णोः प्रीतिकरं भवेत्’’() என்கிற पुष्पங்கள். (எண்சித்தி) ‘‘ऊहस्तर्कोऽध्ययनं दुःखविघातास्त्रयस्सुहृत्प्राप्तिः । दानञ्च सिद्धयोऽष्टौ’’(ஸாங்க்யகாரிகை) என்கிற வெட்டு सिद्धि, (எண்பத்தி) ‘‘मद्भक्तजनवात्सल्यं पूजायाञ्चानुमोदनं । मत्कथाश्रवणे भक्तिः स्वरनेत्राङ्गविक्रिया ॥ स्वयमाराधने यत्नो ममार्थे डंभवर्जनम् । ममानुस्मरणं नित्यं यच्च मां नोपजीवति ॥ भक्तिरष्टविधा ह्येषा’’(பாரதம் ஆச்வமேதிக 116-23) என்கிற எட்டுவிதங்களான भक्तिகள். (எட்டு யோகாங்கம்) योगाङ्गமாகச் சொல்லப்பட்ட यमनियमादिகள், (எண்செல்வம்) ‘‘अणिमा महिमा च तथा लघिमा गरिमा वशित्वमैश्वर्यम् । प्राप्तिः प्राकाम्यञ्चेत्यष्टैश्वर्याणि योगयुक्तस्य’’(ஸாங்க்யகாரிகை) என்கிற विभूतिகள், (எட்டுமா குணம்) मुक्तदशैயிலாविर्भविக்கும் गुणाष्टकம், ‘‘अष्टौ गुणाः पुरुषं दीपयन्ती’’(பாரதம் உத்யோகபர் 32-106) त्यादिகளிற்சொன்னவையாகவுமாம், (எட்டெட்டெணும்கலை) चतुष्षष्टिகலைகள், (எட்டிரதமேலதுவும்) ‘‘शृङ्गारवीरकरुणाद्भुतहास्यभयानकाः । बीहत्सरौद्रौ च रसाः’’ என்கிற रसங்களெட்டுக்கும் மேலான शान्तिरसம். இவையெல்லாம்,
27.112 (எட்டினவே) இவற்றிலிவனுக்கிच्छैயுள்ளபோது எட்டாதவையொன்று மில்லை. आत्मगुणादिகள் நிரம்பாதொழிகிறது अनुसन्धानத்திலூற்றம் போதாமையாலே. अष्टैश्वर्यादिகளும் வாராதொழிகிறது उपेக்ஷையாலே. கடுக संसारம் निवर्तिயாதொழிகிறது இசைவில் குறையாலே. ஆகையா லேயிறே ‘‘नमो नारायणायेति मन्त्रस्सर्वार्थ साधकः’’(நாரதீயம் 1-41) என்கிறது.
अविद्यापूतनोन्मुक्तैरनवज्ञातसत्पथैः । असदास्वादसव्रीळैरादिष्टमिति दर्शितम् ॥
உயர்ந்த நங்காவலனல்லார்குரிமை துறந்துயிராய் மயர்ந்தமை தீர்ந்து மற்றோர் வழியின்றி யடைக்கலமாய் பயந்த வந்நாரணன்பாதங்கள் சேர்ந்த பழவடியார்
நயந்த குற்றேவலெல்லா நாடு நன் மனு வோதினமே. ( 39 )
27.113 इत्थं सङ्घटितः पदैस्त्रिभिरसावेकद्विपञ्चाक्षरैरर्थैस्तत्त्वहितप्रयोजनमयैरध्यात्मसारैस्त्रिभिः । आद्यस्त्र्यक्षरवेदसूतिरजहत्स्थूलादिवृत्तित्रय-स्त्रैगुण्यप्रशमं प्रयच्छति सतां त्रय्यन्तसारो मनुः ॥ ६३ ॥
इति श्रीकवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे मूलमन्त्राधिकारः सप्तविंशः ॥