॥ श्रीमद्रहस्यत्रयसारे पुरुषार्थकाष्ठाधिकारः ॥ १६ ॥
16.1 स्वतन्त्रस्वामित्वात् स्वबहुमतिपात्रेषु नियतं
श्रियः कान्तो देवस्स खलु विनियुङ्क्ते चिदचितौ ।
यथा लोकाम्नायं यतिपतिमुखैराहितधियां
ततो नः कैङ्कर्यं तदभिमतपर्यन्तमभवत् ॥ ३६ ॥
16.2 இங்கு भगवत्कैङ्कर्यத்தை भागवतकैङ्कर्यपर्यन्तமாகச்சொல்லுகைக்கடியென் என்னில், ‘‘परगतातिशयाधानेच्छयोपादेयत्वमेव यस्य स्वरूपं सशेषः परश्शेषी’’(வேதார்த்த ஸங்க்ரஹம்.) என்று
16.3 वेदार्थसंग्रहத்திலே யருளிச்செய்தபடியே सर्वेश्वरனைப்பற்ற शेषभूतனான விவன் अतिशयाधानம் பண்ணप्राप्तன். அவ்வतिशयந்தான் वस्तुशक्तिயை अनुरोधिத்து வரவேணும். ஆனால் ஜீவனுக்கு परனைப்பற்ற शक्यமான अतिशयமேதென்று பார்த்தவிடத்தில் शरीरत्वादिमुखத்தாலே अतिशयाधानம் பண்ணுகை யிவனுக்குமचिத்துக்கும் பொதுவாயிருந்தது. இவன் शेषिக்கு विशेषिத்துப்பண்ணுமतिशयம் चैतन्यमुखத்தாலேயாயிருக்கும்.
16.4 அதிலிவன் शास्त्रविरुद्धமாக वर्तिக்கும்போது शासिताவாய் दण्डधरனான ईश्वरனுக்கு लीलारसमात्रத்தையுண்டாக்கி அம்முகத்தாலே யतिशयाधायकனாம். शास्त्रानुगुणமாக वर्तिக்கும்போது ‘‘शुभेत्वसौ तुष्यति दुष्कृते तु न तुष्यतेऽसौ परमश्शरीरी’’(பாரதம் சாந்திபர்வம் 199-25.) என்கிறபடியே யீश्वरனுக்கு सन्तोषத்தை யுண்டாக்கி யவனுடைய औदार्यादिगुणங்கள் குமரிராதபடி யம்முखத்தாலே ‘‘उदारास्सर्व एवैते’’(கீதை 7-18) என்றவன்தானே கொண்டாடும்படி யतिशयाधायकனாம். அப்படியே नित्यரும் मुक्तருமீश्वराभिप्रायத்தை साक्षाकरिத்துப்பண்ணுகிற कैङ्कर्यங்களாலே ‘‘प्रहर्षयिष्यामि सनाथजीवितः’’(ஆளவந்தார் ஸ்தோத்ரம் 46) என்கிறபடியே भोगविशेषத்தை उत्पादिத்தம் முகத் தாலே யतिशयाधायकராவர்கள். இப்प्रकारம் शास्त्रमुखத்தாலே ईश्वराभिप्रायத்தை யறிந்து कैङ्कर्यம் பண்ணுகிற कृतकृत्यனுக்கும் समानம். இவற்றில் शास्त्रविरुद्धங்களாலே ईश्वरனுக்கு लीलारसमात्रத்தை உண்டாக்கும்போது தனக்கनर्थ-
16.5 पर्यवसितமாயிருக்கும். बद्धदशैயில் शास्त्रத்தாலும், मुक्तदशैயில் प्रत्यक्षத்தாலுமீ श्वराभिप्रायத்தைக் கண்டு तदनुरूपமாக वर्तिக்கும்போது ईश्वरனுடைய लीलादिपुरुषार्थத்துடனே யாनुषङ्गिकமாகத் தனக்கும் स्वाभिमतपुरुषार्थமுண்டாம். ஆன பின்பு चेतனான இவன் बुद्धिपूर्वकமாகவொரு प्रवृत्तिபண்ணும்போது தன் पुरुषार्थமுமாनुषङ्गिकமாகவாகிலும் புகிரவேண்டியதாலது வரும் போது ईश्वराभिप्रायविशेषமடியாக வரவேண்டுகையால் அதுக்காக ईश्वराभिप्रायத்தை யாராய்ந்தவிடத்தில் भागवतकैङ्कर्यமவனுக்கு सर्वத்திலுமभिमतமாயிருந்தது. இவ்வर्थத்தில் ‘‘आराधनानां सर्वेषां विष्णोराराधनं परं । तस्मात्परतरं प्रोक्तं तदीयाराधनं परं ॥’’(பாத்மோத்தரம் 29-81.)
16.6 ‘‘मम मद्भक्तभक्तेषु प्रीतिरभ्यधिका भवेत् । तस्मान्मद्भक्तभक्ताश्च पूजनीया विशेषतः ॥’’(பாரதம் ஆச்வமேதிகபர்வம் 116-23) ‘‘मद्भक्त जनवात्सल्यं पूजायाञ्चानुमोदनं । मत्कथाश्रवणे भक्तिः स्वरनेत्राङ्गविक्रिया ॥ स्वयमाराधने यत्नो ममार्थेडंभवर्जनं । ममानुस्मरणं नित्यं यच्च मां नोपजीवति ॥ भक्तिरष्टविधा ह्येषा यस्मिन् म्लेच्छेऽपि वर्तते । स विप्रेन्द्रो मुनिश्श्रीमान् स यतिस्स च पण्डितः ॥ तस्मै देयं ततो ग्राह्यं स च पूज्यो यथा ह्यहं’’(காருடபுராணம் 219-6-9)
16.7 ‘‘अनन्य देवताभक्ता ये मद्भक्तजनप्रियाः । मामेव शरणं प्राप्तास्ते मद्भक्ताः प्रकीर्तिताः’’(பாரதம் ஆச்வமேதிகபர்வம் 104-91.) ‘‘तस्य यज्ञवराहस्य विष्णोरमिततेजसः । प्रणामं येऽपि कुर्वन्ति तेषामपि नमो नमः’’(பாரதம் சாந்திபர்வம் 46-130.) ‘‘तदाश्रयस्याश्रयणात्तस्य तस्य च तस्य च । संसेवनान्नरा लोके पूयन्ते सर्वपातकै’’(காருடபுராணம்.) रित्यादिप्रमाणங்களை யாராய்ந்தால் राजाவுக்கு राजकुमारोपलालनம் போலே भागवतकैङ्कर्यம் भगவானுக்கभिमतமாயிருக்கையால் शेषभूतனான இவன் செய்யும் किञ्चित्कारங்களில் भागवतकैङ्कर्यம் प्रधानமாயிற்று. இவ்விடத்தில் तत्त्वविத்துக்கு प्रमाणसरणिயைப் பார்த்தால் ‘‘ये यजन्ति पितॄन् देवा’’(பாரதம் சாந்திபர்வம் 355-4. (தக்ஷஸ்ம்ருதி)) नित्यादि களிற்படியே யீश्वरன் भागवतशरीरனாய்க்கொண்டுமாराध्यனாம்.
16.8 ‘‘स च मम प्रियः’’(கீதை 7-17.) என்கிறபடியே परमैकान्तिவிஷயத்தில் प्रीतिपरतन्त्रனான प्रकारिயினு டைய நினைவைப்பார்த்தால் ‘‘ज्ञानी त्वात्मैव मेमतं’’(கீதை 7-18.) என்கிறபடியே भागवत कैङ्कर्यத்தை भगவான் தன்னन्तर्यामिபக்கலிலே பண்ணினதாகவுகக்கும்.
இப்படி शेषिக்கभिमतமென்கிறவளவேயன்று, शेषत्वமாகிற संबन्धந்தான் सद्वारकமாகவுமுண்டாகையால் कैङ्कर्यமும் सद्वारकமாகவும் प्राप्तம். அதெங்ஙனே யென்னில்; नित्यं श्रिया समेतस्य भक्तैरात्मवतस्सदा । सह सद्वारकञ्च स्याच्छेषित्वं
16.9 परमात्मनः ॥ स्वतन्त्रனாய் स्वच्छन्दलीलனான राजा தான் பூண்டவாभरणத்தையு மிட்ட மாலையையு மடியார்களுடையவு மானைகுதிரைகளுடையவுங் கழுத்திலேயிடுமாப்போலே ‘அடியார்க்கென்னையாட்படுத்த விமல'(அமலனாதிபிரான் 1.) னென்றும், ‘‘नारदोऽहमनुप्राप्तस्त्वद्दर्शनकुतूहलात् । प्रभवो भगवद्भक्ता मादृशां सततं द्विज ॥’’(இதிஹாஸ ஸமுச்சயம் 31-54.) என்றும், ‘மற்றுமோர் தெய்வமுளதென்றிருப்பாரோடுற்றிலேனுற்றது முன்னடியார்க்கடிமை'(பெரியதிருமொழி 8-10-3.) யென்றுஞ்சொல்லுகிறபடியே अत्यन्तपारतन्त्र्यादि களடியாக भगवदिष्टविनियोगार्हதையாலே भगवच्छेषत्वம் தான் यावदात्मभाविயான கட்டளையிலே भागवतशेषत्वपर्यन्तமாயிற்று. இங்கு भागवतत्वமடியாக स्वरूप-
16.10 प्रयुक्तமாகவும் ‘‘गुणैर्दास्यमुपागतः’’(ராமாயணம் கிஷ்கிந்தாகாண்டம் 4-12) என்கிற न्यायத்தாலே गुणज्ञानமடியாக स्वेच्छैயாலும் வந்த भागवतशेषत्वம் ‘‘भगवद्भक्ताः, मादृशां’’ என்கிற விரண்டு पदத்தாலும் सूचितம். இப்भागवतशेषत्वம் क्रयஞ்செல்லும்படியை ‘பேசு வாரடியார்களெந்தம்மை விற்கவும் பெறுவார்களே'(பெரியாழ்வார் திருமொழி 4-4-10) யென்று कल्पसूत्र-व्याख्याताக்களான பெரியாழ்வாரருளிச்செய்தார். இது मध्यमपदத்துக்குத்
16.11 तात्पर्यार्थம். இவ்வर्थத்தை अनुसन्धिத்தால் இச் शेषत्वம் सद्वारकமாகவுமद्वारक மாகவும் நின்ற நிலையிலே शेषवृत्तिயான कैङ्कर्यமும் நிற்கும். ஆகையால் தன் शक्तिக்கनुरूपமாக भगवत्कैङ्कर्यத்தினுடைய साध्याकारविवृद्धिயான पुरुषार्थத்திலெல்லை நிலத்தைத் தரிசு தூறு விடாதொழிய प्राप्तம்
16.12 இது ‘‘भर्तुर्भृत्यगणस्य च’’(பெளஷ்கர ஸம்ஹிதை) ‘‘आप्तो विष्णोरनाप्तश्च द्विधा परिकरस्स्मृतः । नित्यो वन्द्यो न चानित्यः कर्मवश्यो मुमुक्षुभिः’’(பெளஷ்கர ஸம்ஹிதை) என்று श्रीपौष्करादिகளிற்சொன்ன न्यायத்தாலே पतिव्रताधर्मம்போலேயிருக்கிற परमैकान्तित्वத்துக்கு மிகவுமுசிतமான पतिचित्तानुवर्तनம். ஆகையால் हेत्वन्तरத்தாலன்றிக்கே अनन्यार्हशेषत्वज्ञानமடியாக வருகையாலே யிவ்வन्यशेषत्वம் विरुद्धமன்று.
16.13 இப் भागवतशेषत्वம் स्वाभाविकமோ औपाधिकமோவென்னில்; कर्माद्युपाधिகளற ‘‘नित्याभिवाञ्छितपरस्परनीचभावैः’’(வைகுண்டஸ்தவம் 77) என்கிறபடியே यावदात्मभाविயாய்க் கொண்டு मुक्तदशैயிலும் अनुवर्तिப்பதொன்றாகையாலே स्वाभाविकமென்னவுமாம், भगवत्संबन्धज्ञानविशेष निबन्धनமாகையாலே औपाधिकமென்னவுமாம். இப்படியாகில் இருவருக்கும் भागवतत्वமுண்டானாலொருவரைப்பற்ற
16.14 வொருவர்க்கு शेषत्वமும் शेषित्वமும் வருகை विरुद्धமன்றோவென்னில்; परस्परोपकार्योपकारकभावादिகளிற்போலேயிங்கும் विरोधமில்லை. अधिकार्यवस्थैயிலே क्रिயைக்கு शेषिயானவன் தானே कर्तृत्वावस्थैயிலே யிதுக்கு शेषமாய் நில்லா நின்றான். அப்படியே अन्योन्यம் பண்ணும் अतिशयங்களை उपजीविயாதே யொருத்தருக்கொருத்தரतिशयाधानம் பண்ணினால் अतिशयाधायकत्ववेषத்தாலே இவருக்கும் शेषत्वமுண்டாய், अतिशयத்துக்காश्रय மான वेषத்தாலே இவருக்கும் शेषित्वமுண்டாகாக்குறையில்லை. இப்படி ईश्वरेच्छैயாலே யிருவரும் परस्परमतिशयाधायकராக विनियुक्तராகையாலேயிருவருக்கும்
16.15 भागवतशेषत्वसंबन्धம் प्रामाणिकம். गुणवशीकृतனான தன் நினைவாலே भगवद्विषयத்திலும் भागवतविषयத்திலும் வரும் दासत्वம் भोगवर्द्धकமாய்க்கொண்டு தன்னேற்றமாயிருக்கும். இவ்விடத்தில் ईश्वरன் स्वातन्त्र्य सहकृतैயான தன்னிच्छैயாலே भागवतர்க்கெல்லாம் शेषित्वத்தையுண்டாக்கும். இவர்களிच्छैயையுங் கூட்டிக்கொண்டிவர்களுக்கு भागवतशेषत्वத்தை உண்டாக்கும். இப்படி स्वामिக்கிष्टविनियोगार्हராய்க்கொண்டு शेषिகளாய் நிற்கை
16.16 தன்னாலே யிருவரும் स्वरूपம் பெற்றார்கள். स्वाभीष्टமான भागवतशेषत्वமுமதின் फलமான भागवतकैङ्कर्यமும் सिद्धिக்கையாலிருவரும் पुरुषार्थकाष्ठै பெற்றார்கள். இருவரையுமிப்படி परस्परशेषशेषिகளாக नियमिத்து रसिக்கையாலே ईश्वरன் தன்னீश्वरत्वமும் भोक्तृत्वமும் பெற்றான். இப்प्रकारத்தாலே தங்களுக்குவந்த शेषत्वशेषित्वादिகளெல்லாமீश्वरனுடைய भोक्तृत्वத்துக்கு शेषமென்று தெளிகையாலே இருவர்க்குங்கோதற்ற पुरुषार्थकाष्ठैயுண்டாகிறது. இப்படி निश्चितार्थராய் सारவித்துக்களான कृतकृत्यருக்கு अपराधरुचिயும்,
16.17 अतिशङ्कैயும் अन्यदेवतास्पर्शமும், आत्माधीनभोगமும் आत्मार्थभोगமுமாகிற பழுதில்லாத परमैकान्तिகளுடைய प्रसादமே எப்போதும் स्वयंप्रयोजनமாக अपेक्षणीयம்.
வேதமறிந்த பகவர் வியக்க விளங்கிய சீர்
நாதன் வகுத்த வகை பெறுநாமவனல்லடியார்க்-
காதரமிக்க வடிமை யிசைந்தழியாமறைநூல்
நீதி நிறுத்த நிலைகுலையா வகை நின்றனமே. (23 )
16.18 नाथे नस्तृणमन्यदन्यदपि वा तन्नाभिनाळीकिनी
नाळीकस्पृहणीयसौरभमुचा वाचा न याचामहे ।
शुद्धानान्तु लभेमहि स्थिरधियां शुद्धान्तसिद्धान्तिनां
मुक्तैश्वर्यदिनप्रभातसमयासत्तिं प्रसक्तिं मुहुः ॥ ३७ ॥
इति श्रीकवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे पुरुषार्थकाष्ठाधिकारः षोडशः ॥