॥ श्रीमद्रहस्यत्रयसारे स्थानविशेषाधिकारः ॥ १९ ॥
19.1 यत्रैकाग्र्यं भवति भगवत्पादसेवार्चनादेः
यत्रैकान्त्यव्यवसितधियो यस्य कस्यापि लाभः ।
वासस्थानं तदिह कृतिनां भाति वैकुण्ठकल्पं
प्रायो देशा मुनिभिरुदिताः प्रायिकौचित्यवन्तः ॥ ४२ ॥
19.2 இருந்த நாளிப்படி स्वयंप्रयोजनமாக निरपराधानुकूलवृत्तिயிலே रुचिயும் त्वरैயுமுடையவனாய், ‘‘एकान्ती व्यपदेष्टव्यो नैव ग्रामकुलादिभिः । विष्णुना व्यपदेष्टव्यस्तस्य सर्वं स एव हि ॥’’(விஷ்வக்ஸேந ஸம்ஹிதை.) என்னும்படியாயிருக்கிற परमैकान्तिக்கு वृत्तिக்கनुगुणமாக
19.3 वासस्थानविशेषமெதென்னில், आर्यावर्तादिपुण्यदेशங்கள் युगस्वभावத்தாலே யிப்போது व्याकुलங்களானபடியாலே चातुर्वर्ण्यधर्मம் प्रतिष्ठितமானவிடத்திலே वसिப்பானென்கிறதுவே இப்போதைக்கு उपादेयம். அவ்விடங்கள் தன்னிலும் ‘கருந்தட முகில்வண்ணனைக் கடைக்கொண்டு கைதொழும் பத்தர்களிருந்தவூரிலிருக்கும் மானிடரெத்தவங்கள் செய்தார் கொலோ'(பெரியாழ்வார் திருமொழி 4-4-7.) வென்கிறபடியே भागवतोत्तरமான देशம் मुमुक्षुவுக்கு परिग्राह्यம். ‘‘कलौ जगत्पतिं
19.4 विष्णुं सर्वस्रष्टारमीश्वरम् । नार्चयिष्यन्ति मैत्रेय! पाषण्डोपहता जनाः’’(விஷ்ணுபுராணம் 6-1-50.) என்னச்செய்தே ‘‘कलौ खलु भविष्यन्ति नारायणपरायणाः । क्वचित् क्वचिन्महाभागा द्रमिडेषु च भूरिशः ॥ ताम्रपर्णी नदी यत्र कृतमाला पयस्विनी । कावेरी च महाभागा प्रतीची च महानदी ॥ ये पिबन्ति
19.5 जलं तासां मनुजामनुजेश्वर । प्रायो भक्ता भगवति वासुदेवेऽमलाशया ॥’’(பாகவதம் 11-5-38) इत्यादिகளிலே कलियुगத்தில் भागवतர்கள் वसिக்கும் देशविशेषஞ்சொல்லுகையாலே இந்த युगத்திலிப் प्रदेशங்களில் भागवतपरिगृहीतமான स्थलங்களே परिग्राह्यங்கள்.
திருनारायणीयத்தில் ‘‘एकपादस्थिते धर्मे यत्रक्वचन गामिनि । कथं वस्तव्यमस्माभिर्भगवं-स्तद्वदस्व नः’’(பாரதம் சாந்திபர்வம் 349-85) என்று देवர்களும் ऋषिகளும் விண்ணப்பஞ்செய்ய, ‘‘गुरवो यत्र पूज्यन्ते साधुवृत्ताश्शमान्विताः । वस्तव्यं तत्र युष्माभिर्यत्र धर्मो न हीयते ॥ यत्र वेदाश्च यज्ञाश्च तपस्सत्यं दमस्तथा । हिंसा च धर्मसंयुक्ता प्रचरेयुस्सुरोत्तमाः ॥ स वै देशो हि वस्सेव्यो मा वोऽधर्मः पदा स्पृशेत् ।’’(பாரதம் சாந்திபர்வம் 349-86) என்று भगवाனருளிச்செய்தான். அவ்விடங்கள் தன்னில் உகந்தருளின दिव्यदेशங்களிலே தனக்கு कैङ्कर्यத்துக்கு सौकर्यமுள்ள
19.6 விடத்திலே निरन्तरवासம் பண்ண வுचितம். இத்தை ‘‘यावच्छरीरपातमत्रैव श्रीरङ्गे सुखमास्व’’(சரணாகதிகத்யம்) என்று सत्वोत्तरங்களான भगवत्क्षेत्रங்களுக்கு प्रदर्शनार्थமாக வருளிச் செய்தார். भगवत्क्षेत्रங்களே விவேகிக்கு वासस्थानமென்னுமிடத்தை ‘‘यत्र नारायणो देवः परमात्मा सनातनः । तत्पुण्यं तत्परं ब्रह्म तत्तीर्थं तत्तपोवनं ॥ तत्र देवर्षयस्सिद्धास्सर्वे चैव तपोधनाः ।’’(பாரதம் ஆரண்யபர்வம் 88-27.) என்று आरण्यपर्वத்தில் तीर्थयात्रैயிலும், ‘‘गोमन्तः पर्वतो राजन् सुमहान् सर्वधातुमान् । वसते भगवान् यत्र श्रीमान् कमललोचनः ॥ मोक्षिभिस्संस्तुतो नित्यं प्रभुर्नारायणो हरिः ।’’(பாரதம் பீஷ்மபர்வம் 12-8.) என்று प्रदेशान्तरத்திலும் महर्षिயருளிச்செய்தான். ஸ்ரீவால்மீகி भगवाனாலும் ‘‘सुभगश्चित्रकूटोऽसौ गिरिराजोपमो गिरिः । यस्मिन्वसति काकुत्स्थः कुबेर इव नन्दने ।’’(ராமாயணம் அயோத்யாகாண்டம் 98-12.) என்கிறவிடத்திலும் भगवदधिष्ठितक्षेत्रத்தினுடைய अभिगन्तव्यதை सुभगशब्दத்தாலே सूचिக்கப்பட்டது. श्रीसात्वतादिகளிலும் स्वयंव्यक्तसैद्धवैष्णवங்களென்கிற
19.7 क्षेत्रविशेषங்களையும் அவற்றினெல்லைகளிலேற்றச் சுருக்கங்களையும் பிரியச்சொல்லி ‘‘दुष्टेन्द्रियवशाच्चित्तं नृणां यत्कल्मषैर्वतम् । तदन्तकाले संशुद्धिं याति नारायणालये ॥’’(ஸாத்வத ஸம்ஹிதை 7-120) என்றவ்வோ क्षेत्रங்களிலெல்லைக்குள்ளே वसिத்தவனுக்கு देहन्यासकालத்திலே வரும் विशेषமுஞ்சொல்லப்பட்டது. ஆகையால் ‘‘यत्किञ्चिदपि कुर्वाणो विष्णोरायतने वसेत् । न किञ्चिदपि कुर्वाणो विष्णोरायतने वसेत्’’() என்கிறபடியே प्रवृत्तिनिवृत्तिகளாலே வல்ல कैङ्कर्यத்தைப் பண்ணிக்
19.8 கொண்டு भगवद्भागताभिमानவிஷயமான सत्वोत्तर क्षेत्रத்திலே वसिக்கையுமுचितம். ‘‘निगृहीतेन्द्रियग्रामो यत्रयत्र वसेन्नरः ॥ तत्र तत्र कुरुक्षेत्रं नैमिशं पुष्करन्तथा’’(இதிஹாஸ ஸமுச்சயம் 27-18.) என்று சொல்கிறவிது गत्यन्तरமில்லாதபோது ஏதெனுமொரு देशத்திலே वसिத்தாலுமிவன் वासத்தாலே அத்देशமும் प्रशस्तமாமென்கைக்காக. இதுக்கு शाण्डिलीवृत्तान्तமுदाहरणமாகக் கண்டுகொள்வது. ஆகையால் ‘‘ज्ञानसमकालमुक्त्वा कैवल्यं याति गतशोकः । तीर्थे श्वपचगृहे वा नष्टस्मृतिरपि परित्यजन्देहम्’’(வராஹபுராணம்.) என்று शरीरपातத்துக்கும் ஒரு देशविशेष नियमமில்லையென்றதுவும் எப்படிக்கும் फलத்திலிழவில்லையென்கைக்காக.
19.9 ஆராதவருளமுதம் பொதிந்த கோயி
லம்புயத்தோ னயோத்திமன்னர்க் களித்தகோயில்
தோராத தனிவீரன் தொழுதகோயில்
துணையான வீடணற்குத் துணையாங்கோயில்
சேராத பயனெல்லாஞ் சேர்க்குங்கோயில்
செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்தகோயில்
தீராத வினையனைத்துந் தீர்க்குங்கோயில்
திருவரங்கமெனத் திகழுங்கோயில் தானே.
19.10 கண்ணனடியிணை யெமக்குக் காட்டும் வெற்புக்
கடுவினையரிருவினையுங் கடியும் வெற்புத்
திண்ணமிது வீடென்னத் திகழும் வெற்புத்
தெளிந்த பெருந்தீர்த்தங்கள் செறிந்த வெற்புப்
புண்ணியத்தின் புகலிதென்னப் புகழும் வெற்புப்
பொன்னுலகிற் போகமெல்லாம் புணர்க்கும் வெற்பு
விண்ணவரு மண்ணவரும் விரும்பும் வெற்பு
வேங்கடவெற்பென விளங்கும் வேதவெற்பே.
19.11 உத்தம வமர்த்தல மமைத்ததோ ரெழிற் றனுவுனுயர்த்த கணையால்
அத்திரவரக்கன் முடிபத்து மொருகொத்தென வுதிர்த்த திறலோன்
மத்துறுமிகுத்த தயிர்மொய்த்தவெணெய் வைத்ததுணுமத்தனிடமா
மத்திகிரிபத்தர்வினை தொத்தறவறுக்குமணியத்திகிரியே.
19.12 தேனார் கமலத் திருமகணாதன் றிகழ்ந்துறையும்
வானாடுகந்தவர் வையத்திருப்பிடம் வன்றருமக்
கானாரிமயமுங் கங்கையுங் காவிரியுங் கடலும்
நானாநகரமு நாகமுங் கூடிய நன்னிலமே. (26)
19.13 सा काशीति न चाकशीति भुवि सायोद्ध्येति नाद्ध्यास्यते
सावन्तीति न कल्मषादवति सा काञ्चीति नोदञ्चति ।
धत्ते सा मधुरेति नोत्तमधुरां नान्यापि मान्या पुरी
या वैकुण्ठकथासुधारसभुजां रोचेत नो चेतसे ॥ ४३ ॥
इति श्रीकवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे स्थानविशेषाधिकारः एकोनविंशः ॥