- புருஷகாரமாம்போது– க்ருபையும், பாரதந்த்ர்யமும், அநந்யார்ஹத்வமும் வேணும்.
“புருஷகாரவைபவமும்” (வா. 6) இத்யாதி3க்கும், “புருஷகாரமாம்போது” (வா. 7) இத்யாதி3க்கும் सङ्ग्रहविस्तररूपत्वाभ्यां पेटिका-ஸங்க3தியைத் திருவுள்ளம் பற்றி அருளிச்செய்கிறார் (அநந்தரம்) இத்யாதி3 अनन्तरपूर्ववाक्यसङ्गति-யையருளிச்செய்கிறார் ( ப்ரத2மத்திலே ) இத்யாதி3நா. (அவஶ்யாபேக்ஷிதேதி)-पुरुषकारत्वे स्वरूपोपयोगित्वफलोपयोगित्वाभ्यां पुरुषकारत्व-த்துக்கு நியதோபகாரகமான என்றபடி. இத்தால். उपजीव्योपजीवकभाव-ம் ஸங்க3தியென்று வ்யஞ்ஜிதம். (கு3ணங்களை )-स्वाश्रयोत्कर्षावह-மாய். उपादेयतम-முமான த4ர்மங்களை.
“புருஷகாரமாம்போது” என்று “புருஷகாரமாம் காலத்தில்” என்று தோற்றுமாய். அத்தை வ்யாவர்த்திக்கிறார் ( புருஷகாரமாமிடத்தில் என்றபடி ) என்று. पुरुषकारत्व-த்துக்கு என்று पर्यवसितम् “परदु:खानिराचिकीर्षा कृपा” என்று சிலர் பக்ஷம். அது கூடாது. க்ருபாதி3 ஶப்3த3ங்களுக்கு லக்ஷணை ப்ரஸங்கி3க்கையாலும். ஶரீராதி3ஶப்3த3ங்களிலும் இப்படி லக்ஷணையாய். जगच्छरीरत्वाद्यसिद्धप्रसङ्ग-ம் வருகையாலும், कर्ममूलकत्व-மில்லாமையாலே हेयप्रसङ्ग-மில்லாமையாலும். “स एकाकि न रमेत” என்று எம்பெருமானுக்கு அரதியை ஶ்ருதியே சொல்லுகையாலும். “व्यसनेषु मनुष्याणां” என்று கு3ணப்ரகரணத்தில் படி2தமாகையாலும், ஸம்ப3ந்த4 நிப3ந்த4நமான परदु:खाधीनदु:ख-ம் கு3ணமாகையாலும். “पर्युत्सुको भवति यत्सुखितोऽपि जन्तु:” என்று அந்த து3:க்க2ம் सुखित्वप्रतिबन्ध्य-மல்லாமையாலும், பா4ஷ்யகாரர் “परदु:खासहिष्णुतादया” என்று த3யாஸ்வரூபத்தை நிர்வசிக்கையாலும், समानसंवित्संवेद्यतया परदु:ख-த்திலே भगवदसह्यत्वं லபி4க்கையாலே प्रतिकूलतया वेदनीयत्वं ஸித்3த4மாகையாலும். “कथमन्यथा परदु:खदु:खित्वादयोऽस्य गुणा: स्यु:” என்று ப4ட்டரருளிச் செய்கையாலும், “ஆவாவென்றாராய்ந்தருள்” (திருப்பாவை-8) என்று த3யையினுடைய परदु:खदु:खित्वरूपताव्यञ्जक-மான அநுகார நிர்தே3ஶங்கள் பலவுமிருக்கையாலும், परदु:खदु:खित्व-மான परदु:खासहिष्णुत्व-மே த3யையாகக்கடவது.” என்று திருவுள்ளம் பற்றி அருளிச்செய்கிறார் (க்ருபையாவது பரது3:க்கா2ஸஹிஷ்ணுத்வம்) என்று . க்ருபாதி3களுடைய புருஷகாரக்வோபகாரகத்வத்தை த3ர்ஶிப்பிக்கிறார் (இவை புருஷ காரத்வத்துக்கு) இத்யாதி3நா. ( யத்நம் பண்ணுகைக்கு ) என்றவித்தால் स्वरूपोपयोगित्वं लब्धम् (அநுவர்த்தநத்தாலே) ப்ரீதிஜநக வ்யாபாரத்தாலே. (வஶீகரிக்க வேண்டுகையாலே) என்றவித்தால் फलोपयोगित्वं लब्धम् . (சொன்னபடி அவன் செய்கைக்கு) என்றவித்தாலும் फलोपयोगित्वं लब्धम् க்ருபை ஸ்வரூபோபயோகி3நீ. பாரதந்த்ர்யாநந்யார்ஹத்வங்கள் वशीकार-तत्पूर्वकयथोक्तकरण-ங்களாகிற ப2லோபயோகி3களென்றபடி.
( இரண்டுக்கும் கடவனாய் )- இரண்டுக்கும் அர்ஹனாய். (நிறுத்து)- इयत्तयाபரிச்சே2தி3த்து. (அறுத்து)-ईदृशतया பரிச்சே2தி3த்து. (தீத்துமவனாகையாலே)-பு4ஜிப்பிக்குமவனாகையாலே. (ஸ்வாதந்தர்யத்தாலே)-इच्छायां सत्यां अनिवार्यत्व-த்தாலே. (அமுக்குண்டு)-அபி4பூ4தமாய். (ஓரோ த3ஶைகளிலே) कादाचित्क-மாக. (அநுக்3ரஹைகஶீலை)- “अनुग्रह: एक एव शीलंस्वभावो यस्यास्सा अनुग्रहैकशीला ” ஏகஶப்3த3ம் निग्रहव्युदासक-ம். शीलशब्द-ம் அநுக்3ரஹத்தினுடைய कादाचित्कत्वव्युदासकம். இங்கே “अनुग्रहपरामृद्धिम्” என்கிற திருநாமம் விவக்ஷிதம்.
( வேறொன்றால் ) – ஸ்வாதந்தர்யத்தால். ( அபி4ப4வம் )அப்ரகாஶம். இத்தால், कादाचित्कोद्भवவத்தான ஈஶ்வர க்ருபையைக்காட்டில், नित्योद्भूतत्वं பிராட்டிக்ருபைக்கு விஶேஷமென்று ஸித்3த4ம். (கரையழிந்து)-உத்3வேலமாய்; ஸ்வாதந்த்ர்யமாகிற கரையின்றிக்கேயென்றபடி. “அநுக்3ரஹபராம்” என்கிற ஸமாக்2யைக்கு உபோத்3ப3லகமான லிங்க3த்தை அருளிச்செய்கிறார் (ஸம்ப3ந்த4த்தில்) இத்யாதி3நா 1. எம்பெருமானோட்டை ஸம்ப3ந்த4மான பித்ருத்வத்தைக் காட்டில், இவளோட்டை ஸம்ப3ந்த4மான மாத்ருத்வத்துக் குண்டான உத்கர்ஷம் போலேயாய்த்து எம்பெருமானுடைய பித்ருத்வாநுகு3ண க்ருபையைக்காட்டில். இவளுடைய மாத்ருத்வாநுகு3ண க்ருபைக்கு உத்கர்ஷமென்றபடி. “अनुग्रहपराम् ” என்கிற ஸமாக்2யை मातृत्वस्वरूपवस्तुसामर्थ्यानुगृही-தை யென்றபடி. 2. यद्वा ( ஸம்ப3ந்த4த்தில்) இத்யாதி3க்கு “माता पिता भ्राता” என்று சொல்லப்பட்ட எம்பெருமாநுடைய மாத்ருத்வரூப ஸம்ப3ந்த4த்திற்காட்டில், “त्वं माता” என்று சொல்லப்பட்ட இவளுடைய மாத்ருத்வத்துக் குண்டான निरुपाधिकस्त्रीत्वसहकृतत्व-மாகிற வைலக்ஷண்யம் போலேயாய்த்து தத்க்ருபையிற்காட்டில் இவள் க்ருபைக் குண்டான नित्यनिरवधिकोद्भूतत्वமாகிற வைலக்ஷண்யமென்று பொருளாகவுமாம். விபரீத லிங்க3முமில்லையென்கிறார் (இப்படியிருக்கையாலே) இத்யாதி3நா. अनुद्भूतदयाद्युद्भावकपुरुषकारसापेक्षत्वे नित्योद्भूतदयादिमत्त्व-ம் व्याहत-மாம். அப்படி. ஈஶ்வர விஷயத்தில் पुरुषकारान्तरग्राहक புருஷகாரபூ4தையான இவள் விஷயத்தில், प्रमाणोपपत्त्यनुष्ठान-ங்களில்லாமையாலே. இவள் த3யை நித்யோத்3பூ4தையாயிருக்குமென்றபடி.
இப்படி. புருஷகாரத்வாபேக்ஷித க்ருபா விஷயத்தில் வரும் ईश्वरकृपानिर्विशेषत्वव्यामोह-த்தை லிங்க3 ஸமாக்2யைகளாலே ஶமிப்பித்து, तदपेक्षितங்களான भगवत्पारतन्त्र्यभगवदनन्यार्हत्व-ங்கள்விஷயமாக வரும் ऐच्छिकत्वव्यामोह-த்தை ஶமிப்பிக்கிறார் (ஈஶ்வர விஷயத்தில்) இத்யாதி3நா. (ஈஶ்வர விஷயத்தில் பாரதந்தர்யம்) என்றது – स्वरूपसंकल्पाभ्यां ईश्वराधीनस्वरूपस्थिति प्रवृत्तिकत्व-மாகிற ईश्वरनिरूपितपारतन्त्र्य-மென்றபடி. (ஈஶ்வர விஷயத்தில் அநந்யார்ஹத்வம்) என்றது – ईश्वरशेषत्वे सति तदन्यशेषत्वविरहरूप-மான ईश्वरघटितानन्यार्हत्व-மென் றபடி. (ஸ்வரூப ப்ரயுக்தமான மாத்ரமன்றிக்கே) இத்யாதி3-ஸ்வரூபப்ரயுக்தத்வமாவது- भगवदिच्छाधीनत्वे सति लक्ष्मीच्छानधीनत्वम्। “அதுவான மாத்ரமன்றிக்கே என்றது”-लक्ष्मीच्छानधीनत्वे सति भगवदिच्छाधीन-மாய் वक्ष्यमाणभगवत्पत्नीत्वाद्यधीन-முமாயிருக்கையென்றபடி.
“लक्ष्मीर्नित्यानपायिनि तत्सर्वं नारमुच्यते ” என்கிற ப்ரமாணத்தை அநுரோதி4த்து பா4ஷ்யகாரர் க3த்3யத்திலே பிராட்டியை நாரஶப்3தா3ர்த்த2மாக வ்யாக்2யாநம் பண்ணியருளின படியாலும், “शरीरं चास्मि वैष्णवम् ” என்று பிராட்டி தானே ஸ்ரீஶப்3த3நிர்வசநத்திலே தன்னை ப4க3வச்ச2ரீரமென்று நிஷ்கர்ஷிக்கையாலும். நாராந்தரங் களுக்குப்போலே பிராட்டிக்கும் केवलभगवदिच्छाधिन भगवच्छरीरत्वायत्त-भगवदधीनत्वभगवदनन्यार्हत्व ங்கள் ப்ராமாணிகங்களென்றபடி.
“उभयोरपि सर्वभूतेश्वरत्वादिवचनसाम्यात् अस्या गुणभावं उभयेच्छाप्रयुक्तं केचिदाहु: ” என்னும் सर्वभूतेश्वरत्वादि-वचनसाम्य-मूलक-மான பிராட்டியுடைய ऐच्छिकभगवच्छेषत्वपक्ष-ம் “मच्छेषभूता सर्वेषां ईश्वरी वल्लभा मम। अस्याश्च जगतश्चाहं ईश्वरो वेदविश्रुतः॥” என்று. ப4க3வச்சா2ஸ்த்ரந்தானே. “ईश्वरीं सर्वभूतानाम्” “ईश्वरस्सर्वभूतानाम्” என்கிற वचनद्वयगतसर्वशब्दद्वय-த்துக்கும் क्रमेण ஈஶ்வர விஷயமாகவும் பிராட்டி விஷயமாகவும் ஸங்கோசாஸங்கோசங்களை உபப்3ரும்ஹணம் பண்ணுகையாலே. தத்3 விருத்3த4மான विनिगमनाविरहादि-तर्काभासमूलक सर्वशब्दद्वयासंकोचकल्पनावलम्बि-वचनसाम्यरूपहेतुशरीर-ம் दुःस्थ மாகையாலே – अत्यन्तानुपपन्न-ம். இவ்வர்த்த2த்தில் விஸ்தரம் பூர்வர்களுடைய க்3ரந்த3ங்களிலே விஶத3ம்.
(ह्रीश्च) இத்யாதி3– भूमिसाधारणानैच्छिकपत्नीत्वं ஸ்ரீக்கு ஶ்ருதி சொல்லுகையாலே தத்3விருத்3த4மான ऐच्छिकपत्नीत्वकल्पन-ம் (पत्न्यौ) इति सकृच्छ्रुतपत्नीशब्दार्थवैरूप्यप्रसङ्गपराहत-மென்று கருத்து. விஷ்ணுபத்நீ इत्युपक्रमोपसंहारगतविष्णुपत्नीत्वानुरोधेन एतन्मध्यगतजगदीशानात्व த்தைக் கொள்ளவேணுமல்லது. जगदीशानात्व-த்தையிட்டு उपक्रमावगतपत्नीत्व-த்துக்கு ऐच्छिकत्व-ம் கொள்ளுகை அநுசிதமென்று கருத்து. (பத்நீத்வ ப்ரயுக்தமாயும்) இதி- “पत्न्याश्च पतिशेषत्वात् ” என்றும். “उपपन्ना हि दारेषु प्रभुता सर्वतोमुखी” என்றும் சொல்லுகிறபடியே, பிராட்டி பக்கல் இருக்கிற भगवदधिनत्व-भगवदनन्यार्हत्व-ங்கள் नियतनिर्वाधपत्नीत्वायत्त-முமாயிருக்குமென்றபடி. नारशब्दार्थतायात भगववच्छरीरत्वं चेतनाचेतनसाधारणम् ; पत्नीत्वं भूम्यादिसाधारणम् பெரிய பிராட்டியார்க்கு ஏற்றம் என்னென்ன அருளிச்செய்கிறார் (அஹந்தா ப்3ரஹ்மண) இத்யாதி3. “अहन्ता ब्रह्मणस्तस्य साऽहमस्मि सनातनी। आत्मा स सर्वभूतानां अहम्भूतो हरिस्स्मृतः॥ अहन्ता सर्व भूतानां अहमस्मि सनातनी।”, “तस्याहं परमा शक्ति: अहन्ता शास्वती ध्रुवा।।” “अहन्ता नाम सा शक्ति:” इत्यादिकं विवक्षितम् “अहन्तया विनाऽहं हि निरुपाख्यो न सिद्ध्यति” என்கிற வசநத்தாலே “अहन्ता ब्रह्मणस्तस्य साऽहमस्मि ” இத்யாதி3களிலே பிராட்டி எம்பெருமானுக்கு ப்ரதா4நஸ்வரூப நிரூபக பூ4தை என்று லபி4க்கிறது என்று கருத்து. ஆகையிறே “श्रिय:पति: निखिलहेयप्रत्यनीक:” इत्यादिगीताभाष्यम् (ஸ்ரீவத்ஸ) இத்யாதி3 “ईशितव्यात् विभाजकलक्ष्मीवाल्लभ्यसौभाग्यचिह्न श्रीवत्सोऽस्य वक्षसीति श्रीवत्सवक्षा:, श्रीवत्सवक्षा: नित्यश्री: इति” என்கிற ஸஹஸ்ர நாம பா4ஷ்ய ஸ்ரீஸுக்தியை உட்கொண்டு அருளிச்செய்கிறார் (ஸ்வரூபநிரூபகத்வாதி3 ஸித்3த4மான) இதி. “करणत्वोपायत्वादिविशिष्टभगवत्स्वरूप-த்துக்கு इत्व्यावृत्तिहेतुत्वं स्वरूपनिरूपकत्वम् – (ஆதி3) ஶப்3த3த்தாலே.- “का चान्या त्वामृते देवि सर्वयज्ञमयं वपुः। अध्यास्ते देवदेवस्य योगिचिन्त्यं गदाभृतः।।” இத்யாதி3 ஸித்3த4மான विग्रहापृथग्भाव-மும். “कीर्ति: श्रीर्वाक्च नारीणाम् ” என்று பகவான் தானே அருளிச்செய்த விபூ4தித்வமும் ஸங்க்3ருஹீதம். (அநந்யத்வ ப்ரயுக்தமாயுமிருக்கும்) இதி- असाधारणधर्मत्वरूप-மான धर्न्यनन्यत्वाधीन-மாயுமிருக்கு மென்றபடி. अनन्यत्वेत्यनेन, “अनन्या राघवेणाहं भास्करेण प्रभा यथा”, “अनन्या हि मया सीता भास्करेण पर्भा यथा” “आमोदमिव पुष्पस्थं दीपस्थामिव च प्रभां। विनिष्क्रँष्टमशक्यां मां अनन्यां पुरुषोत्तमात् ।।” என்கிற வசநங்கள் அபி4ப்ரேதங்கள். “अहमर्थं विनाहन्ता निराधारा न सिद्धयति। अहन्तया विनाहं हि निरुपाख्यो न सिद्ध्यति।। ” என்று சொல்லுகிறபடியே ஸ்வரூபநிரூபக த4ர்மத்துக்கு धर्म्यधीनत्व-மும், इतरव्यावृत्तिहेतुतया धर्म्यतिशयाधायक-மாகையாலே धर्म्यनन्यार्हत्व-மும் உபபந்நமென்றபடி. (இப்படி யிருக்கையாலே) இத்யாதி3-प्रधानस्वरूपनिरूपक-பூ4தையாய், ப்ரதா4ந பத்நியுமாயிருக்கையாலேயிறே भूम्यादिमहिष्यन्तर- ங்களுக்கும். நித்யர்க்கும். முக்தர்க்கும். ப3த்3த4ர்க்கும். இவளும் ஈஶ்வரனுமான மிது2நத்தைப்பற்ற ஶேஷத்வமும். இந்தப் பெரிய பிராட்டியார் ஒருத்திக்கும் ஈஶ்வரமாத்ரஶேஷத்வமுமாய்த்து என்றபடி. (இந்த அவ்யவதா4நேந உண்டான ஸம்ப3ந்த4த்தாலே)- ஶேஷஶேஷத்வமாகிற व्यवहितसम्बन्धसहकृत-மல்லாத भगवच्छेषत्वमात्र-மாகிற ஸாக்ஷாத் ஸம்ப3ந்த4த்தாலே என்றபடி. (இவளுக்கு ஈஶ்வரனை வஶீகரிக்குமளவில்) ஸாபராத4 சேதநர்க்காக ஈஶ்வரனை நிவ்ருத்த காலுஷ்யனாம்படி பண்ணுமிடத்தில். (புருஷகாரம் வேண்டாதொழிகிறது) என்றது- இவளிலுங்காட்டில் வால்லப்4யாதிஶயமுடைய புருஷகாரம் அநபேக்ஷிதமாயிருக்கிறதென்றபடி
“अस्या मम च शेषं हि विभूतिरुभयात्मिका” இத்யாதி3ப்படியே ஸர்வேஶ்வரன் , உப4யவிபூ4தியையும் தனக்கும். தனக்கு ஶேஷமான இவளுக்கும் ஸ்வேச்சை2யாலே ஶேஷமாக்கி வைக்கையாலே. உப4யவிபூ4தியைப்பற்ற பிராட்டி அத் யந்தாபி4மதையாய், பிராட்டியைப்பற்ற வால்லப்4யாதிஶயம் ஒருவர்க்குமின்றிக்கேயிருக்கையாலே. ஈஶ்வரவஶீகாரார்த்த2மாகப் பிராட்டியால் முன்னிடப்படுவாரில்லையாய். இவள் தான் அத்யந்தாபி4மதையாகையாலே அதுதான் முதலிலே அநபேக்ஷிதமாயிருக்குமென்றபடி.
(கர்மணி வ்யுத்பத்தியிலும்) இதி-“कर्तरि कृत् ” என்கிற வ்யாகரண ஸ்ம்ருதியைப்போலே. “श्रीयते चाखिलैर्नित्यम् ” என்கிற நிர்வசந ஸ்ம்ருதியும் ப்ரமாணமாகையாலே. கர்மணி வ்யுத்பத்தியும் ப்ராமாணிகையாய். அது தான் “अर्हे कर्मणि” ப்ரத்யயமாய் कर्मतया आश्रयणार्हत्व-ந்தான் तदुपकारकधर्मरूप-மாய். அதுதான் सामर्थ्यात् कृपातिशय- மென்று பர்யவஸிக்கிறது – என்றபடி. अर्हे कर्मणि प्रत्यय-மும். “श्रयन्ति श्रयणीयाऽस्मि” என்று லக்ஷ்மீதந்த்ரத்தில் சதுர்த்தா2த்4யாயத்திலே ஸ்பஷ்டம். (ஶ்ரயதே என்கிற கர்த்தரி வ்யுத்பத்தியிலும்) இதி- आश्रयाश्रयिभाव-த்திலும் “श्रिञ्” தா4துவுக்கு ப்ரயோக3மிருக்கையாலும், किप् प्रत्यय-த்தில் காலோபாதி4 தோற்றாமையாலே नित्यतदाश्रितत्वं தோற்றுகையாலே अपृथक्सिद्धधर्म-த்வம் ஸித்3தி4க்கையாலும் . “धर्मिसत्ताधीना धर्मसत्ता” என்று तदधीनत्व-மாகிற तत्पारतन्त्र्य-ம் ஸித்3தி4க்கும்- என்றபடி. सेवावाचित्व-த்திலும் ஸேவை सेव्याभिप्रायानुरोधि-யாயிருக்கவேண்டுகையாலே. तदभिप्रायानुरोधित्वप्रयुक्त-மான तदधीनत्वरूपतत्पारतन्त्र्य-ம் ஸித்3த4மென்றபடி. இவ்வுப4யவாசித்வத்திலும் அஸாதா4ரண த4ர்மம் धर्मिस्वरूपनिरूपणरूपधर्म्यतिशयाधायक-மாகையாலும், ஸேவையும் सेव्यप्रीतिरूपतदतिशयाधायक-மாகையாலும். क्रियाफल-த்தினுடைய कर्तृगामित्वसूचक-மான शानजादिनिर्देश-மில்லாமையாலும். अनन्यार्हत्वं सिद्धि-மென் றபடி. (மதுப்பிலும்) இதி- நித்யயோக3வாசியான மதுப்பிலும். नित्यतदाश्रितत्वरूपतदधीनत्व-மும். नित्यतदेकार्थत्वरूपतदनन्यार्हत्व-மும் ஸித்3த4ம்- என்றபடி. (இவளுக்கு ஈஶ்வரனை வஶீகரிக்குமளவில் புருஷகாரம் வேண்டாதொழிகிறது) (172) என்கிறவிடத்தில், “न चास्य माता च पिता न चान्य: स्नेहाद्विशिष्टोऽस्ति मया समो वा ” என்று எம்பெருமானுக்குப் பிராட்டியில் அதி4க வால்லப்4யமும். தத்துல்ய வால்லப்4யமும் ஒருவர்க்குமில்லையென்கிற श्रीरामायाणवचनमभिप्रेतम् “मत्त: प्रियतरो नित्यं भ्राता रामस्य लक्ष्मण:” என்கிறவிது, ‘கோலமலர்ப் பாவைக் கன்பாகிய என்னன்பு‘ (திருவாய் 10-10-7) என்கிற ந்யாயத்தாலே இவளுடைய படுக்கைப்பற்றிலுண்டான प्रियत्वातिशय-த்தைச் சொல்லுகிறதென்று கருத்து. 7.
- பிராட்டி முற்படப் பிரிந்தது, தன்னுடைய க்ருபையை வெளியிடுகைக்காக; நடுவிற் பிரிந்தது, பாரதந்த்ர்யத்தை வெளியிடுகைக்காக; அநந்தரம் பிரிந்தது, அநந்யார்ஹத்வத்தை வெளியிடுகைக்காக.
- இப்படி உபப்3ரும்ஹ்யமான श्रीशब्दव्युत्पत्तिद्वयलब्ध-மான कृपादित्रय-மும் உபப்3ரும்ஹணமான श्रीरामायण-प्रतिपादित विश्लेषत्रयात्मक वृत्तान्तत्रय व्यञ्जित-மென்று அருளிச்செய்கிறார். (இந்த க்ருபாதி3த்ரயத்தையும்) இத்யாதி3நா. நிரபேக்ஷமான ஸ்வதந்த்ர வஸ்துவினுடைய க்ருபையும். ஸர்வஸாதா4ரண பாரதந்த்ர்யமும். அநந்யார்ஹமான ஜ்ஞாநஶக்த்யாதி3 ப4க3வத்3கு3ணங்களும் புருஷகாரத்வ ஹேதுவாகக் கூடாமையாலே அந்யோந்ய ஸாபேக்ஷமான இவை மூன்றும் புருஷகாரத்வ ஹேதுவென்று திருவுள்ளம்பற்றி (த்ரயத்தையும்) என்றருளிச் செய்தார்.
(தே3வத்வே தே3வதே3ஹேயம் ) “विष्णो:” என்கிறவிது “देवत्वे, मानुषत्वे ” என்கிற பூர்வத்திலும். “देहानुरूपां” என்கிற உத்தரத்திலும் அந்வயிக்கிறதென்று திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார் (நாயகனான) இத்யாதி3.“विष्णुपत्नी” என்கிறத்தை யுட்கொண்டு “विष्णो:” என்கிறதுக்கு அர்த்த2ம் (நாயக) இதி. “परमेश्वर:। विष्णुनामा स वेदेषु” என்கிறத்தையுட்கொண்டு (ஸர்வேஶ்வனுடைய) இதி. “विष्णो: देवत्वे देवदेहा, मनष्यत्वे मानुषी च साती-विष्णोर्देहानुरूपां आत्मनुस्तनुं करोति” என்று விவக்ஷித்து அர்த்த2ம் (தத்தத்) இத்யாதி3. “देवत्वे” இத்யாத்3யர்த்த2ம் (தத்தத்) என்று. அநுரூப ஶப்3தா3ர்த்த2ம் (ஸஜாதீய) இதி. (ராக4வத்வே) இதி “चक्रवर्तिकुले जात:” என்கிறத்தையுட்கொண்டு த3ஶரத2னைச் சக்ரவர்த்தியென்று வ்யபதே3ஶித்து. “दशरथात्मजे” என்கிறத்தையுட்கொண்டு பெருமாளைச் ( சக்ரவர்த்திதிருமகன்) என்றது. “देहानुरूपाम्” என்கிற பூர்வாநுஸாரத்தாலே “तुलकयाभिजनलक्षणाम्” என்கிறத்தையுட்கொண்டு (தத3நுரூபமாகத் தானும் ஜநகராஜன் திருமகளான) இதி. “ஸீதா” என்கிறவிது,
“सीता सस्ये नमोनद्यां जानक्यां लाङ्गलाध्वनि” என்று லாங்க3லபத்3த4தியிலே ப்ராது3ர்ப்ப4வித்தவளைச் சொன்னாலும், இங்கே அது விருத்3த4மாகையாலே, “विष्णोर्देहानुरूपाम्”என்கிற உபக்ரமாநுகு3ணமாக “जनकराजसुतात्वेन” இவளை லக்ஷணயா போ3தி4க்கிறது என்று விவக்ஷித்து (ஜநகராஜன்) இதி. “राजर्षिसुत: उत्तमराजकन्या” என்னக்கடவதிறே. (ராவணன் பிரித்தான் என்றொரு வ்யாஜத்தாலே) இதி
“अकर्मवश्यत्वानपायिनीत्व”-ங்கள் “अनन्यथासिद्ध प्रबलप्रमाण प्रमित”- ங்களாகையாலும், “भृगुशापच्छलेनायं भगवान् भक्तवत्सल: । अर्थितोविबुधैस्सद्भि: जज्ञे विष्णुस्सनातन:” என்று லைங்க3த்திலே “तत्र पत्नीवियोगञ्च प्रापस्यसे बहुवार्षिकम् ” என்று வியோக3ஹேதுவான ப்4ருகு3 ஶாபமும்: ஹேதுவன்றிக்கேயிருக்க ஹேதுவாக ஆபாதத: தோற்றும் வ்யாஜம், என்று சொல்லுகையாலும். “अवतर्तुं मनुष्येषु प्रागेव कृतनिश्चय: । नानृतं ते वत्वो विप्र मद्भक्तस्य भविष्यति।।” என்றும். “लोकानां संप्रियार्श्रे तु शापं तं ग्राह्यमुक्तवान् ।” என்றும் உத்தர ஸ்ரீராமாயணத்தில் சொல்லுகையாலும் तुल्यन्यायेन “उत्पत्स्यते हितार्थं व:” என்று உத்தர ஸ்ரீராமாயணத்தில் தே3வஹிதார்த்த2மாக அவதரிக்கிறவளென்று சொல்லப்பட்ட பிராட்டியுடைய விஶ்லேஷத்துக்கு , ராவணன் வ்யாஜமாத்ரமென்று ஸித்3த4ம் என்றபடி. (தே3வ்யா)
இதி.- कारुण्यम्-परदु:खासहिष्णुत्वम् ,रूपम्-धर्मिस्वरूपम्, यस्या: सा यथोक्ता । “रूप्यते यत् तत् रूपं” என்று ரூப ஶப்3த3ம் த4ர்மி ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது. த்3ரவ்யமான த4ர்மி ஸ்வரூபத்துக்கு வாசகமான ரூபஶப்3த3த்தோடே. கு3ணமான க்ருபைக்கு வாசகமான காருண்ய ஶப்3த3த்துக்கு ஸாமாநாதி4 கரண்யம், स्वरूप निरूपक- धर्मवाचकशब्द-த்துக்கு निरूप्य स्वरूपपर्यन्त मुख्यत्वसाधक-மான तद्गुणसारन्यायसिद्धम्. இந்த ந்யாயந்தான் “तदनुगुणसारत्वात्तु तद्व्योदेश: प्राज्ञवत् ” என்று ஸுத்ரகாரராலே சொல்லப்பட்டது. स गुण: सार: स्वरूपनिरूपक: यस्य स: तद्गुणसार: ; त्तवात् तद्व्यपदेश: -गुणवाचकशब्देन व्यपदेश: -मुख्यव्यवहार: “सत्यं ज्ञानं” , “विज्ञानं यज्ञं तनुते” इत्यादाविति तदर्थ:।।
ஈஶ்வர க்ருபையிற் காட்டில் இவள் க்ருபைக்கு அதிஶயம் पूर्वे साधित மாகையாலே இவளுடைய அஸங்குசித க்ருபை இவளுக்கு ஸ்வரூப நிரூபகமாகலாம். இத்தை அருளிச் செய்கிறார் (தத்கு3ணஸாரத்வத்தாலே) இத்யாதி3நா. அந்த க்ருபா கு3ணத்தை ஸ்வரூபநிரூபக த4ர்மமாக உடைத்தாகையாலே என்றபடி. (காருண்யந்தானாகச் சொல்லும்படியான) இதி. காருண்யமென்று-வசநஸ்த2காருண்ய ஶப்3த3மும். தானாகவென் று-तत्रत्यरूपशब्दமும் व्याख्यातம். (பரக்ருபை)- ஈஶ்வர க்ருபை. (பரமக்ருபை)- இவள் க்ருபை. க்ருபைக்குப் பரமத்வம் उद्भावकनैरपेक्ष्यम्. “ரக்ஷணோபயோகி3யான க்ருபையை ஜநிப்பித்துக்கொண்டு” என்று क्वचिद्व्याख्यात ம்; அங்கே. “ कारुण्यं-ईश्वरकारुण्य रुपयाति-प्रकाशयति इति कारुण्यरूपा” என்றாகிறது. ‘காருண்யந்தான் ஒரு வடிவு கொண்டாப்போலே’ என்றும் क्वचिद्व्याख्यात-ம். அங்கு. कारुण्यं रूपं-शरीरं यस्यास्सा तथोक्ता என்றாகிறது. காருண்யமாக रूप्यते-मुखं चन्द्र इतिवत् , इयं ईश्वरस्य कारुण्यमिति रूपणविषयीक्रियते -इति कारुण्यरूपा என்றும் क्वचिद्व्याख्यात-ம். இவை மூன்று வ்யாக்2யாநங்களைப்பற்ற (காருண்யந்தானாகச் சொல்லும்படியான) என்று இங்குத்தை வ்யாக்2யாநத்துக்கு प्रतीतिशैघ्रथ -முண்டென்று கருத்து. அவதாரம் அஜஹத் ஸ்வபா4வமாகையாலே இந்தப் பரமக்ருபை இங்கும் ப்ரகாஶிக்குமென் றபடி. (தர்ஜந) இதி-भयोत्पादनव्यापार -த்தினுடைய कायिकत्व वाचिकत्व-ங்களாலே तर्जन भर्त्सन- ங்களுக்கு पौनरुक्त्व மில்லை. “भर्त्स्नं त्वपकारगी:” என்னக்கடவதிறே. “भर्त्सितां तर्जितां वापि” என்கிறத்தைப்பற்ற (தர்ஜந ப4ர்த்ஸநம்) இதி. (அல்லும்)- ராத்ரியும். “क्ररा: क्ररतरेक्षणा:” என்கிறத்தைப்பற்ற (க்ரூரராக்ஷஸிகள் )இதி. (பீ4தைகளாய்) இத்யாதி3– இங்கே. அப4யப்ரதா4நரூப கார்யத்தாலே. -परदु:खासहिष्णुत्वरूपकृपादिशय-ம் अर्थसिद्ध- மென்றுகருத்து. “प्रियमाख्यामि ते देवि” என்கிறத்தைப்பற்ற (ஶோப4நம் சொல்ல) இதி. “एवंप्रकारैर्बहुभिर्विप्रकारैर्यशस्विनि-हन्तुमिच्छामि” என்கிறத்தைப்பற்ற. (சித்ரவத4ம்) இதி. (சித்ரவத4ம்)-சித்ரரூபம் என்னுமாப்போலே நாநாவித4ஹிம்ஸை-என்றபடி. चित्रपदं लक्षणया नानाविधपरम्. (மர்ஷயாமி) இதி- இங்கே. ஸர்வஸ்த்ரீ ஸாதா4ரணமான அப3லாத்வத்தைச் சொல்லில் ப்ரயோஜநமில்லாமை
யாலும், शत्रूपरोधप्रयुक्तदौर्बल्यं शत्रुवधानन्तर மில்லாமையாலும். (துர்ப3லா )என்று मनोदौर्बल्यं சொல்லுகிறது. அதில், “बलं-धारणसामर्थ्यम् तदभाव: दौर्बल्यम्” என்றாய். பரது3:க2ம் கண்டு நெஞ்சு த4ரித்திராமை தௌ3ர்ப3ல்யம் என்றாய், परदु:खासहिष्णुत्व-த்திலே பர்யவஸிக்கிறதென்று திருவுள்ளம் பற்றி அருளிச்செய்கிறார் (பிறர்நோவு) இத்யாதி3. இத்தால் கீழே आर्थिकतया ஸித்3தி4த்தது. இங்கே ஶாப்3த3மாகச் சொல்லிற்று என்று கருத்து. (கார்யம்) இத்யாதி3-(அவனுக்கு)-திருவடிக்கு. (இரங்கியல்லது) இத்யாதி3-(இரங்கி) என்று. கருணஶப்3தா3ர்த்த2ம். (அல்லது நிற்கவொண்ணாத) என்று. करुणकरणाभाव-த்தில் अनार्यत्वव्यञ्जक-மான ஆர்யஶப்3த3த்தினுடையவும். अपाराधित्व-த்தினுடைய सार्वत्रिकत्वायात-மான
திருவடிப்ரப்4ருதிகளுக்கு दण्डनीयत्वप्रसङ्गव्यञ्जक-மான “न कश्चिन्नापराध्यति” என்கிற வாக்யத்தினுடையவும் அர்த்த2ம். இத்தால். அப4யப்ரதா3நத்தாலே ஆர்த்தி2கமாகவும். ”து3ர்ப3லா” என்று सामान्यरूपेण ஶாப்3த3மாகவும். “कार्ये करुणम्” என்று विशेषरूपेण ஶாப்3த3மாகவும் परदु:खासहिष्णुत्व-ம் सिद्ध-மென்று प्रमाणापादोनशैलि-யாலே வ்யஞ்ஜிதம். (பண்ணின் ப்ரதிஜ்ஞாநுகு3ணமாக) “भवेयं शरणं हि व:” என்று பண்ணின ப்ரதிஜ்ஞாநுகு3ணமாக. இத்தால், பிராட்டியினுடைய ஶரணத்வம்- வஸ்துஸாமர்த்2யத்தாலேயும். அநுஷ்டா2நத்தாலேயும் परकीयनिग्रहशामकत्वरूप-மென்று ஸித்3த4மென்று கருத்து. (ஆர்த்3ராபராதை4களான)- “आर्द्रा मे स्त्री त्रिषु क्लिन्ने” என்று क्लिन्नवाचि-யான ஆர்த்3ரஶப்3த3ம் गौण्या वृत्त्या ப்ரத்ய க்2ரதையைச் சொல்லுகிறது. இங்கே. “मातर्मैथिलि राक्षसीस्त्वयि तदैवार्द्रापराधा:” என்கிறப4ட்டர் ஸ்ரீஸுக்தி ஸ்போரிதை.
(1) “भर्स्तितामपि याचध्वं”என்று த்ரிஜடையுபதேஶித்தாலும், ராக்ஷஸிகள் ப்ரபத்தியை அநுஷ்டி2யாமையாலும், त्रिजटा देहसम्बन्धमात्रं रावणादिसाधारण- மாகையாலும். ராக்ஷஸிகள் த்ரிஜடாபி4மாந நிஷ்டை2கள் என்னுமதில் விஶிஷ்ய ப்ரமாணமில்லாமையாலும். (2) सीतया कृतसंवादस्तिष्ठत्यमितविक्रम:। न च तं “जानकी सीता निवेदयितुमिच्छति” என்று ராவணனுக்குச் சொன்னபடியாலே அநந்தரமும் ப்ராதிகூல்ய வர்ஜநமில்லாமையாலும். (3) हते तस्मिन्न कुर्युर्हि என்று ராவணவத4 பர்யந்தம் ப்ராதிகூல்யம் பண்ணினதாகப் பிராட்டி வாக்யத்தில் லபி4க்கையாலும். (4) ‘நீ வந்த நாள் முதல் இவர்கள் ப்ராதிகூல்யம் தவிர்ந்தார்கள்’ என்று திருவடிக்குப் பிராட்டி சொல்லாமையாலும் ( (5) प्रत्युत “राजसंश्रयवश्यानां” इत्यादिना राजाज्ञप्तकरण-ம் गुण-மென்று சொல்லுகையாலும். (6) “लौकहिंसाविहाराणाम्” इत्यादिना जात्युचितकर्म-ம் दण्डहेतु-வன்று என்று சொல்லுகையாலும் “आर्द्रापराधा” என்னத்தட்டில்லை என்று கருத்து.
(நடுவில்) இத்யாதி3;- (திருவயிறு வாய்த்திருக்கிற காலத்திலே) க3ர்ப்பி4ணியாயிருக்கிற காலத்திலே. இங்கு. “மிதிலைச் செல்வி உலகுய்யத்திருவயிறு வாய்த்த” (பெருமாள் திருமொழி 10. 8) என்கிற குலஶேக2ரப்பெருமாள் ஸ்ரீ
ஸூக்தி ஸ்போ2ரிதை. (அபத்யலாப4) இத்யாதி3-அறுபதினாயிரமாண்டு மலடு கிடந்த ஐயரைப்போலே “बहुभिश्च परिश्रमै:” என்று வருத்தப்பட்டன்றிக்கே. எளிதாகவே எனக்குப் பிள்ளைப்பேறு நன்றாகக் கிட்டிற்றே; அவஶ்யம் பு4ஜித்தல்லது நிற்கவொண்ணாத போ4க்3யாபி4லாஷத்தோடே கூடியிருக்கிற நீ எத்தை இச்சி2க்கிறாய், அதெல்லாவற்றையும் சொல்லாய். உள்ளோடுகிறவை நிழலெழுகிற முகவொளியுடையவளே!– என்றபடி. (தபோவநாநி). இத்யாதி3-“ऋषीणां पादमूलेषु वर्तितुं, ऋषीणां तपोवनानि द्रष्टुं इचदछामि” என்றந்வயிப்பது. “ருஷிகளுடைய பாத3 மூலங்களிலே வர்த்திக்கைக்காக அவர்களுடைய தபோவநங்களைக் காண ஆசைப்படுகிறேன்” என்றபடி. – (ஏஷ ) இத்யாதி3-“आहारशुद्धौ सत्त्वशुद्धि:”
என்கிறபடியே. ஸத்வத்3தி4 ஹேதுவாக மூலப2லபோ4ஜிகளாய். அத ஏவ புண்யகீர்த்திகளாயிருக்கிற ருஷிகளிடத்திலே. ஒரு நாளெல்லாமாகிலும் வாஸம் பண்ண ஆசைப்படுகிறேன் என்கிறது யாதொன்று. இதுவே எனக்குப் பரமமான காமம் என்றபடி. இங்கே, “फादमूलं गमिष्यामि यानहं पर्यचारिषम्” என்கிற ஶப3ரி வாக்யத்தாலும். “पादमूलेषु वर्तितुं” என்கிற பிராட்டி வாக்யத்தாலும் सोपबृंहणवेद-प्रधानप्रतिपाद्य-மான சரமப்ராப்யம் நிஷ்கர்ஷிக்கப்பட்டது. (வந) இத்யாதி3-1. வநவாஸத்திலுண்டான ரஸமுண்டு-சரமப்ராப்யமாகிற ரஸ்யவஸ்து. அதில் வாஞ்சை2-என்றபடி. 2.’வநவாஸத்திலுண்டான ரஸம்- ஹர்ஷம். அதில் வாஞ்சை2‘ என்றுமாம். 3. வநவாஸராக3மாகிற வாஞ்சை2 என்று-सामान्यविशेषभावेन कर्मधारय
மாகவுமாம். “रसो रागे द्रवे हर्षे” என்னக்கடவதிறே.
(இப்பிரிவுக்கு ப்ரயோஜநம்) இதி-(கட்டிலே வைத்த போதோடு)-“या न शक्या पुरा द्रष्टुं भूतैराकाशगैरपि” என்னும்படி அந்த:புரத்திலே அஸுர்யம்பஶ்யையாகக் காவலிட்டு வைத்த
போதோடு – என்றபடி. (காட்டிலே விட்டபோதோடு)-
“राजमार्गगता जना:” என்கிறதுக்கும் மேற்பட்ட ஆரண்யகர்கள் காணும்படி. தம்மையின்றிக்கே காட்டிலே வைத்த போதோடு – என்றபடி. இத்தால். கட்டுக்கும் காட்டுக்கும் ஆகாரபே4த3மித்தனையல்லது. पतिचित्तानुविधान-பரையான
பிராட்டிக்கு அவற்றில் ரஸபே4த3 மில்லையென்றபடி. “यस्त्वया सह स: स्वर्गो निरयो यस्त्वया विना”-என்கிறவிதுவும் பெருமாள் திருவுள்ளத்துக்குப் பாங்கான தத்ஸஹபா4வம் தனக்கு ஸ்வர்க்க3மென்றும். அவர் திருவுள்ளத்துக்குப் பாங்கல்லாத தத்3விநாபா4வம் தனக்கு
நரகமென்றும் பிராட்டிக்குக் கருத்து, என்று சொல்லிற்று – என்று கண்டு கொள்வது. (கங்கை)இத்யாதி3-(பெருமாள் திருவுள்ளமாய் (விட்டருளின கார்யத்தை) என்றது – பெருமாள் பிராட்டியைக் காட்டிலே விட்டருளுகைக்கு ப்ரயோஜநமாகத்திருவுள்ளம்பற்றின லோகாபவாத3பரிஹாரத்தை-என்றபடி. (மிகவும் ப்ரலபித்து)– அதி4கமாகப் பரிதே3வித்து என்றபடி. “विलाप: परिदेवनं प्रलापोऽनर्थकं वच:” என்று கோஶமிருந்தாலும். “शोकक्षोभे च हृदयं प्रलापैरेव धार्यते” என்றும். “वचो वैदेहीति प्रतिपदं उदक्षु प्रलपितम्” என்றும். விலாபத்திலும் ப்ரலாபபத3த்துக்கு மஹாகவிப்ரயோக3மிருக்கையாலே (மிகவும் ப்ரலபித்து) என்றருளிச்செய்தது கண்டு கொள்வது. (ந க2லு ) இத்யாதி3:-“सौमित्रे! भर्तुर्वंशे भर्तु: राघवं मा परिहास्यतीति जाह्नवीजले जीवितमद्यैव न त्यजेयं खलु” इति योजना “பிள்ளாய்! பெருமாளைச் சுட்டியிருக்கிற ரகு4ஸந்தாநமானது பெருமாளுடைய திருவம்ஶத்திலே யின்றிக்கேயொழியவொண்ணாதென்று. க3ங்கா3 ஜலத்திலே ப்ராணனை இப்போதே விடுகைக்கு அர்ஹையாகிறிலேன் என்று உனக்கும் தெரியுங்கிடாய் ” என்றபடி. “व्यवहितोऽपि
पितामहादीनां अपत्यम्” என்கிற முக்2யபக்ஷத்திலே. பெருமாளுடைய அபத்யம், ரகுவுக்கும் அபத்யமாகத் தட்டில்லையாகையால். भर्तु: राघवं-பெருமாளுடைய ஸம்ப3ந்தி4யான ரக்4வபத்யமென்று யோஜிக்கப்பட்டது. பெருமாள் ஸம்ப3ந்தி4த்வந்தான்- तज्जन्यत्व-மும். तदभिमतत्व-மும்; ஆகையிறே. பெருமாள் “अपत्यलाभ:” என்றருளிச்செய்தது. ஸ்த்ரீப்ரஜையென்றாதல், பும்ஸ்ப்ரஜையென்றாதல், ஒற்றை ப்ரஜையென்றாதல். இரட்டைப்ரஜையென்றாதல் நிர்த்தா4ரணமில்லாமைதோற்ற, பொதுவான सामान्ये नपुंसकत्व-த்தையும் जात्येकत्व-த்தையும் விவக்ஷித்து. “राघवं” என்று ப்ரயோகி3த்தது: ஆகையிறே. “एवं हि दृश्यते लोके अनिर्ज्ञातेऽर्थे गुणसन्देहे च नपुंसकलिङ्गं प्रयुज्यते, किं जातं इत्युच्यते, द्वयं चैव हि जायते स्तरी वा पुमान् वेति” என்றும், “आकृतिवाचिदत्वादेकवचनं भविष्यति” என்றும் மஹாபா4ஷ்யத்திலே சொல்லப்பட்டது. (மாபரிஹாஸ்யதி)-परिहीणं न भविष्यति “ओहाक् त्यागे” என்று படி2தமான தா4துவுக்கு ‘ரூபஹாநி: ப்ரஹீணம் அகர்மகத்வமுமுண்டு. ஆகையால். இன்றிக்கேயொழியவொண்ணாதென்று லபி4த்தது. நிஷேதா4ர்த்த2க ‘மா’ ஶப்3த3மாகையாலே ‘லுங்’ வரவில்லை. ஸமபி4வ்யாஹாரத்தாலே, ”மாபரிஹாஸ்யதி’ ‘நத்யஜேயம்” என்கிற இவற்றுக்குக் கார்யகாரணபா4வம் லபி4க்கையாலே, “मा परिहास्यति इति न त्यजेयं” என்று “இதி” ஶப்3த3ம் புகுரும். (க2லு) ஶப்3தா3ர்த்த2ம்- உனக்கும் தெரியுங்கிடாய் என்று. “इङ्गितज्ञास्तु कोसला:” என்னக் கடவதிறே. ( த்யஜேயம் ) என்று “शकि लिङ्”, “अर्हे लिङ्” वा (இத்தால்) இத்யாதி3-(முடிந்து பிழைக்கை)-“मरणमेव श्रेय:” என்னுமாப்போலே முடிகையாகிற பிழைப்பு-என்றபடி. (தேட்டமாகா நிற்கச்செய்தேயும்) என்றது – அபேக்ஷிதமாகா நிற்கச்செய்தேயும் என்றபடி. (பெருமாள் நினைவைப் பின்சென்று)-“अपत्यलाभ:” என்று பெருமாள் லாப4மாக அருளிச்செய்தத்தால் ஸுசிதமான பெருமாளுடைய அபத்யவிஷயமான அத்யாத3ரத்தை அநுரோதி4த்து- என்றபடி. அபி4ஶஸ்திகாலாதிரிக்த காலத்திலே अभिशस्तोत्पन्नापत्य-த்துக்கு अभिशस्तिदोष-மில்லையென்று शास्त्रसिद्ध-மென்று பெருமாளுக்குத் திருவுள்ளமென்று கருத்து. அபத்யத்தினுடைய த4ர்மிஸத்தை கிடந்தால், காலாந்தரத்திலேயாகிலும் प्रतदययमुखेन मिथ्याभिशस्ति கழிந்தால் அபத்யத்தை ப்ராபிக்கலாம் என்றும் பெருமாளுக்குத்திருவுள்ளமென்று கருத்து. (மாயும்) இத்யாதி3– வல்வினையேன் பெண்பிறந்து-ஸ்த்ரீ ஜந்மஹேதுவான ப்ரப3ல பாபயுக்தையான நான் பெண்ணாகப் பிறந்து. மாயும் வகையறியேன்-ஸ்த்ரீத்வ ப்ரயுக்தமான பாரதந்த்ர்யத்தாலே முடியும் ப்ரகாரத்தை அறிகிறிலேன் – என்றபடி. “पराधिना: स्त्रिय:सर्वा:” என்கிறவிது இங்கே விவக்ஷிதம். (பதிர்ஹி)
இத்யாதி3-दैवतं आराध्य: बन्धु: उपलाल्य: गति: प्राप्यप्रापकभूत: हि-यस्मात्, तस्मात् हेतो:भर्तु: प्रियं प्राणै: विशेषत: अपि कार्यम् । பிராணன்களையும் அதுக்கு மேற்பட்டத்தையும் விட்டாகிலும் ப4ர்த்தாவுக்கு ப்ரியத்தைச் செய்யவேணும். “मशकार्थो धूम:” என்கிறவிடத்தில் நிவர்த்யமான மஶகம் ப்ரயோஜாமானாப்போலே. இங்கு. த்யாஜ்யமான ப்ராணாதி3கள் ப4ர்த்ருப்ரியகரணத்திலே கரணமாகில் ஆகலாம் என்றபடி. முடிகை பிழைக்கையானால். तुल्यन्यायेन பிழைக்கை முடிகையாகையாலே. பிராட்டி ஸ்வப்ரக்ருத்யநுகு3ணமான முடிகை ஸ்தா2நீயமான பிழைக்கையை அப்4யுபக3மம்பண்ணி.
“प्राणैरपि प्रियं तस्मात्” என்று தான் அருளிச்செய்தபடி செய்தாள் என்று திருவுள்ளமாய் அருளிச்செய்கிறார் (தானருளிச்செய்தபடியே) இதி. ( பதிசித்தாநுவிதா4நமே நமக்கு ஸ்வரூபம்) இத்யாதி3— भर्त्राभिप्रायानुसरेण-மே स्वाभाविकपत्नीत्वविशिष्ट-மான எனக்கு स्वासाधारणधर्म-மென்னும் பாரதந்தர்யாத்4யவஸாயத்தாலே-என்றபடி. (நமக்கு) என்று பூ4ம்யாதி3களையும் கூட்டிக்கொண்டு சொல்லுகிறாள் என்றுமாம். (பதிசித்தாநுவிதா4நம்) என்கிறவித்தால், “पालयन्ति हरेर्भावं पत्नी भगवतो ह्यहम्” என்கிற வசநம் ஸ்போ2ரிதம். (பாடாற்றியிருந்தது)–ஸஹித்திருந்தது.
(அநந்தரத்தில் பிரிவாவது ) இத்யாதி3-( பிறந்தகத்திலே )-ஜந்ம ப4வநமான பூ4மிக்குள்ளே. ( உப4யஸம்மதமான )- பிராட்டியும் பெருமாளுமாகிற ஶேஷஶேஷிகளிருவர்க்கும் प्रामाणिकत्वेन-வும், स्वाभाविकत्वेन-வும் இஷ்டமான-என்றபடி.(அநந்யத்வ ப்ரயுக்தமான )-மான என்றபடி. (ஸர்வஸம்மதமாம்படி)-தே3வமநுஷ்யாதி3 ஸர்வப்ராணிகளுக்கும் ப்ராமாணிகமென்றும் ஸ்வாபா4விகமென்றும் நிஶ்சிதமாம்படி-என்றபடி. (பெருமாள் அஶ்வமேத4ம்) இத்யாதி3-(நியோக3த்தாலே )-ஆஜ்ஞையாலே. (விஶேஷஜ்ஞரெல்லாரையும்)-“गान्धर्वे च भुवि श्रेष्ठ:”-என்கிற தம்மைப்போலவும். “तौ तु गान्धर्वतत्त्वज्ञौ” என்கிற குஶலவர்களைப் போலவும் सङ्गीतरहस्यनिष्णात-ரெல்லாரையும்-என்றபடி. (தனக்கேற )-ஆத்மஸாக்ஷிகமாக. (ப்ரத்யய
முக2த்தாலே)-सुद्धिनिश्चयहेतुभूतप्रमाणप्रदर्शनपूर्वक-மாக-என்றபடி. (ப்ரகாஶிப்பிப்பாளாக)-प्रकाशयतु-என்றபடி. (மஹர்ஷிக்கும்)-வால்மீகி ப4க3வானுக்கும். (மஹாபரிஷத்திலே ) பெரிய ஸத3ஸ்ஸிலே. (ஒடுங்கிநிற்கச்செய்தே) -लज्जाविनयभयपरिभव-ங்களாலே ஸங்குசித்துக்கொண்டு நிற்கும்போது என்றபடி.
“इयं दाशरथे सीता सुव्रता साधुचारिणी। अपापा ते परित्यक्ता ममाश्रमसमीपत:।।” என்று தொடங்கி. “सुतौ तवैव दुर्धर्षौ सत्यमेव ब्रवीमि ते न स्मराम्यनृतं वाक्यं तथेमौ तव पुत्रकौ।। बहुवर्षसहस्राणि तपश्चर्या मता कृता।तस्या: फलमुपाश्नीयां अपापा मैथिली यथा।।मनसा कर्मणा वाचा भूतपूर्वे न किल्बिषम् । फल तस्याप्युपाश्नीयां अपापा मैथिली यथा।अहं पञ्चसु भूतेषु मनप्यष्टेषु राघव। विचिन्त्य सीतां शुद्धेति अगृह्यां वननिर्झरे।।इयं शुद्धसमाचारा अपापा पतिदेवता।।” என்றத்தைப்பற்ற (வால்மீகி ப4க3வாந் இவள் ஸுத்3தை4யென்னுமிடம் பல முக2த்தாலும் சொல்ல) என்றது. “अपापेत्यभिजानता” என்றத்தைப்பற்ற ( நானுமறிவன் ) இதி. “एतदेवं महाभाग यथा वदसि धर्मवित् ।प्रत्ययो हि महान् ब्रह्मन् तव वाक्यैरकल्मषै:” என் றத்தைப்பற்ற (மஹர்ஷி சொன்னதுவே போரும்) இதி. ( ஸர்வாந் ) இத்யாதி3 -विरक्त्यतिशयप्रयुक्तं काषायवस्त्रं “काषाम्बरधारिणम्” என்றிறே ப4ரதாழ்வானு
மிருந்தது. “प्राञ्जलि:” என்றத்தைப்பற்ற (கையும் அஞ்ஜலியுமாய்) இதி. “अधोदृष्टिरवाङ्मुखी” என்றத்தைப்பற்ற (கவிழ்தலையிட்டுக்கொண்டு) தலையைக் கவிழவிட்டுக்கொண்டு என்றபடி. (மாத4வீ தே3வீ)-பூ4தே3வி. “विष्णुपत्नीं महीं देवीं माधवीं” என்றிறே பூ4ஸுக்தம். (விவரம் )-
ப்ரவேஶார்த்த2ம் அவகாஶம். (மநஸாபி) என்கிற ஸமுச்சயத்தை விவரிக்கிறார் ( மநஸா கர்மணா வாசா ) இதி. ( ஸமர்த்த2யே )- ஸமர்த்தி2க்கிறேன் ; அநுஸந்திக்கிறேன் (யதை2தத்) இத்யாதி3-(நச) इत्यत्र चकार: इतिशब्दसमानार्थक:।रामादन्यं न वेद्मि इत्येतत् मे उक्तं-मम वाक्यं यथा सत्यं यथा माधवी देवी विवरं दातुं अर्हति-इति योजना।अर्थस्स्फुट: त्रिवारं शपथकरणं दाढ्यार्थम्। “पश्यन्तु सीताशपथं” என்றத்தைப்பற்ற (ஶபத2ம் பண்ண) என்றது. (ததா2 ஶபந்த்யாம் ஸீதாயாம்) இத்யாதி3 பிராட்டி ஸ்வஶபத3ப்ரகாஶநமாத்ரம் பண்ணினாளித்தனையல்லது ஆக்ரோஶத்தைப் பண்ணினாளல்லாமையாலே, “” என்கிற ஸுத்ரத்தாலே. “” என்று ப்ரயோகி3யாமல், “” என்றது – என்று கண்டுகொள்வது. ( பூ4மியில் நின்றும் ) இத்யாதி3நா ஶ்லோகங்களுக்கு அர்த்த2 மருளிச்செய்கிறார். “” என்கிற ஸப்தம்யர்த்த2ம் (அவ்வளவிலே) இதி. (இப்பிரிவிலே ) த்ருதீயவிஶ்லேஷத்திலே.
(இக்கு3ணங்களை)-க்ருபாதி3த்ரயத்தை. “विष्नो: एषानपायिनी”, “नित्यानपायिनी विष्णो:” என்றத்தைப்பற்ற (அநபாயிநியாய்) இதி. “यथा सर्वगतो विष्णु: तथैवेयं द्विजोत्तम” என்கிற हेयप्रत्यनीकत्वातिदेश-த்தைப் பற்ற (அகர்மவஶ்யையாய்) இதி. “अनवद्यानवद्याङ्गी” என்கிற लक्ष्मीतन्त्रवचन-மும் விவக்ஷிதம். இத்தால், “ममैव दुष्कृतं किञ्चित् महदस्ति न संशय:” என்கிறது कर्मवश्यत्वारोपप्रयुक्त-மென்று கருத்து. உக்தமான விஶ்லேஷ த்ரய ஹேதுவை ப4ட்டர் ஸ்ரீஸூக்தியாலே ஸம்வதி3ப்பிக்கிறார் (ஆகையிறே ) இத்யாதி3நா. “औदार्यकारुणिकताश्रितवत्सलत्वपूर्वेषु सर्वमतिशायितमत्र मात:।श्रीरङ्गधाम्नि यदुतान्यदुदाहरन्ति सीतावतारमुखमेतदमुष्य योग्या।।” வாரீர் நிருபாதி4கமாதாவான ஸ்ரீரங்க3 நாச்சியாரே! सर्वकामप्रदत्व सिद्धोपायप्रदत्वरूपऔदार्य-மென்ன परदु:खासहिष्णुत्व-மே ஸ்வபா4வமாயிருக்கையாகிற करुणाशीलत्व-மென்ன. ஆஶ்ரிததோ3ஷத்தை கு3ணமாகக் கொள்ளுகையாகிற ஸ்வபா4வவிஶேஷமென்ன, இவற்றை முதலாகவுடைத்தான கல்யாணகு3ணங்களிலே வைத்துக்கொண்டு. ஒளதா3ர்யாதி3களெல்லாம் இந்தக் கோயிலாகிற திருப்பதியிலேயுண்டான ஸ்ரீரங்க3 நாச்சியாரான
அவதாரவிஶேஷேத்திலே அதிஶயித்திருக்கும். மற்றை ஸீதாவதாரம் முதலான அவதார ஜாதமான யாதொன்றை ஐதிஹாஸிகரும் பௌராணிகரும் சொல்லுகிறார்கள் – ஶ்ருதி ஸித்3த4மான தே3வர்கு3ண ஜாதத்துக்கு நித3ர்ஶந ஸ்தா2நமாகச் சொல்லுகிறார்கள் இந்த ஸீதாவதாராத்3யவதார ஜாதமானது. கீழ்ச்சொன்ன ஸ்ரீரங்க3 நாச்சியாரான இந்த விஶேஷத்தினுடைய यथाभिमतप्रकारनिष्पत्तिहेतुभूत-மான அப்4யாஸம்” என்று ஸ்ரீ குணரத்நகோஶத்தில் ப4ட்டர் அருளிச்செய்தார்- என்றபடி. “योग्या गुणनिकाभ्यास:” என்னக்கடவதிறே. “वत्सलत्वपूर्वेषु” என்கிறவிடத்தில் பூர்வ ஶப்3த3த்தாலே- “कमितुरिदमित्थंत्वविभव:” என்று சொன்ன பாரதந்த்ர்யமும். “म्रदिमपतिपारार्थ्यं” என்று சொன்ன அநந்யார்ஹத்வமும் ஸங்க்3ருஹீதம். कृपादिगुणाभ्यसार्थ-ம் -अवतार-ம் என்றவித்தால்- தத3ந்தர்க3தமான இந்த விஶ்லேஷ த்ரயமும் இந்த க்ருபாதி3களுக்கு प्रातिस्विकवेषेण प्रकाशक-ம் என்று ஸித்3த4ம்- என்று கருத்து. (அநுக்3ரஹத்துக்கு)- “अस्तु ते, तयैव सर्वं सम्पत्स्यते” इत्यादिफलप्रयोजकसंकल्पादि-களுக்கு. ( அணுகி )- கிட்டி. (ஶாஸ்த்ரங்களில் )- ஶ்ருதி ப4க3வச்ஶாஸ்த்ராதி3களில். (கேட்கிறமாத்ரமன்றிக்கே)-श्रूयमाणमात्र-மன்றிக்கே. (அநுஷ்டா2நபர்யந்தமாக)- अनुष्ठानं-कृपादिप्रयुक्तोपदेशाद्याचार: पर्यन्तं-अन्त्यावस्था, यस्य यथोक्तम्। அதுவாக என்றபடி. शास्त्रेषु श्रूयमाणत्वं कृपादे: प्रथमावस्था मननं मध्यमावस्था, अनुष्ठीयमानतया दर्शनं चरमावस्था।இப்படி அவஸ்தா2த்ரயத்தாலே कृपादिप्रमिति-யுண்டானால். இவனுடைய पुरुषकारतया वरण-த்திலே प्रवृत्तिप्रयोजक-மான उत्कटेच्छारूपरुचि-யும். पुरुषकारभावोपयोगिगुणवत्ताध्यवसायरूपविश्वास-மும் उत्तरकालीनबाध-अपर्यवसान-மாகிற உறைப்பையுடைத்தாகும்-என்றபடி. 8.
- ஸம்ஶ்லேஷ விஶ்லேஷங்களிரண்டிலும் புருஷகாரத்வம் தோற்றும்.
- ஸம்ஶ்லேஷ விஶ்லேஷ இத்யாத்3யுத்தரவாக்யத்துக்கு அவதாரிகை (ஏவம் பூ4தகு3ண) இத்யாதி3. (ஏவம் பூ4த) என்றது विश्लेषत्रयादिप्रकाशित-மான என்றபடி. இத்தால்-புருஷகாரத்வாபேக்ஷித கு3ணங்கள் ப்ரகாஶித்தவிடம் கீழ்ச்சொல்லிற்று. இனி தத்3கு3ணஹேதுக புருஷகாரத்வம் ப்ரகாஶித்தவிடம் சொல்லுகிறது என்கிற ஸங்க3தி விஶேஷம் ஸுசிதம்.
“புருஷகாரத்வம் தோற்றும்” (வா. 9) என்கிறவிடத்தில் “புருஷகாரத்வம்” என்கிற வித்தால். भगवत्क्षमाद्युद्भावकत्मात्र-த்தை விவக்ஷித்தால விஶ்லேஷபத3ம் அந்வயியாது. उपदेशादिना चेतनस्य भगवदाश्रयणप्रवृत्तिकरत्वादि-த்தை விவக்ஷித்தால் ஸம்ஶ்லேஷபத3ம் அந்வயியாது. உப4யா நுகு3ணமாக புருஷகாரத்வ பத3த்துக்குத் தாத்பர்யார்த்த2த்தை அருளிச்செய்கிறார் ( புருஷகாரத்வமாவது க4டகத்வம்) என்று. சேதநேஶ்வர விஷயங்களான புருஷகாரபத3த்தினுடைய யோகா3ர்த்த2ங்களிலே
அநுக3தாகாரமான चेतनेश्वरादिगत- प्रपत्तृप्रपत्तव्यभाव- क्षमितृक्षन्तव्यभाव- अन्यतररूपघटना- शब्दित- सम्बन्धकरत्व-ம் पुरुषकारत्वपदविवक्षित-ம் என்றபடி. ஸம்ஶ்லேஷாதி3கள் प्रतिसम्बन्धिसापेक्ष-மாகையாலே ஈஶ்வரனாகிற ப்ரதிஸம்ப3ந்தி4யைப் பூரித்துக்கொண்டு அர்த்த2மருளிச்செய்கிறார் (இவளுக்கு அவனோடு கூடியிருக்கும் த3ஶையிலும்) இத்யாதி3நா. ஸம்ஶ்லேஷ த3சையில் புருஷகாரத்வம் தோற்றுமென்று பூர்வம் உபபாதி3யாமையாலும், ஸம்ஶ்லேஷ விஶ்லேஷங்களென்கிற நிர்தேஶம் துல்யமாயிருக்கையாலும். என்கை संश्लेषग्रहणं दृष्टान्तार्थं அநுசிதம் என்று திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார் (கூடியிருக்கும் த3ஶையிலும் நீங்கியிருக்கும் த3ஶையிலும் ) என்று. அத்தை விசேஷ விஷயமாகக் காட்டுகிறார் (ஸம்ஶ்லேஷத3ஶையிலே) இத்யாதி3நா. “नेदानीं त्वदृते सीते स्वर्गोऽपि मम रोचते” என்கிறவிடத்தில், “विशेषविधि: शेषनिषेधफलक:” என்கிற ந்யாயத்தாலே. இளையபெருமாளை நிறுத்திப்போகையில் அபி4ப்ராயம் தோற்றினபடியாலே. “एवं शृत्वा तु संवादं लक्ष्मण: पूर्वमागत:
।बाष्पपर्याकुलमुखश्शोकं सोढुमशक्नुवन्।।” என்று இளையபெருமாள் ஶோகித்தாரென்றத்தைப்பற்ற (பெருமாள் நிறுத்திப் போவதாகத் தேடின வளவில்) என்றது. “अहं चानुगमिष्यामिवनमग्रे धनुर्धर:” என்றத்தைப்பற்ற (என்னைக் கூடக் கொண்டுபோகவேணும்) என்றது. (ஸ ப்4ராது:) இத்யாதி3– “ईश्वरं गुरुं च भजस्व” என்கிறவிடத்திற்போலே ஏகசகாரமாகையாலே ஸமுச்சயபரமாய், ஸமுச்சயத்தில் க்ரியா பதா3வ்ருத்தியாகையாலே க்ரியாத்3வயமாய், “सीतामुवाच, भ्रातुश्चरणौ गाढं निपिड्य महाव्रतं राघवं च उवाच” என்று அர்த்த2க்ரமத்தாலே பாட2க்ரமத்தை பா3தி4க்கிறது. (ஸீதாமுவாச) என்கிறவிடம் पुरुषकारपुरस्करणं . இந்த உக்தி ப்ரகாரத்தை யோக்3யதாநுகு3ணம் ஊஹித்துக்கொள்வது.(ப்4ராதுஶ்சரணௌ கா3ட4ம் நிபீட்3ய) என்று காயிக ப்ரபத்தியையும். (ராக4வம் ச உவாச) என்று வாசிக ப்ரபத்தியையும் சொல்லுகிறது. “शोकं सोढुमशक्नुवन् ” என்று மாநஸப்ரபத்தியும் ஸுசிதம். இத்தைத் திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார் (ஶரணம் புகுகிறவளவிலும் )என்று. இது (புருஷகாரமாக முன்னிட்டு) என்று उत्तरत्र அந்வயிக்கிறது. “जलरामण्यकं यत्र स्थलरामण्यकं तथा।. . . पुष्पितैस्तरुभिर्वृत:” என்றத்தைப்பற்ற (நீரும் நிழலும்) இதி. “यत्र” என்று सामान्यनिर्देश-த்துக்கு. विशेषपरिग्रह-த்திலே இளையபெருமாளுக்கு स्वतन्त्रकर्तृत्वं ப்ரஸங்கி3க்கையாலும், रमण्यकशब्दार्थघटकरतिशब्दितेच्छायां இளையபெருமாளுக்கு कर्तृत्वं सूचित மாகையாலே “वैदेही रमते यत्र त्वमहं चापि लक्ष्मण” என்று “त्वं रमसे” என்கையாலும். இளையபெருமாளிடத்திலே ஸ்வாதந்த்ர்யத்தைப் பெருமாள் திருவுள்ளம் பற்றினார்என்று अभिप्रेत्यं (நம் தலையிலே) இத்யாதி3 वक्ष्यमाणश्लोकस्थ ‘तु’ शब्दार्थ -ம் (விக்ருதராய்) இதி. (ஏவம் உக்தஸ்து) இத்யாதி3 (संयताञ्जलि: सीतासमक्षं काकुस्थं अब्रवीत्)என்று “संयताञ्जलि: सीतासमक्षं” என்று – पुरुषकारविषयककायिकप्रपत्ति-யும். “काकुस्थं अब्रवीत्” என்று उपायविषयकवाचिकप्रपत्ति- யும் சொல்லிற்று.
(பரவாநஸ்மி) இத்யாதி3– “स्वयं रुचिरे देशे” என்று – रुचिरशब्दार्थघटकरुचिशब्दितेच्छै-யிலும், देशविशेषनिर्णय-த்திலும் பெருமாளுக்கு कर्तृत्व-மும். “तु” शब्दार्थावधारण-த்தாலே அவற்றில் தமக்கு कर्तृत्वगन्धराहित्य-முமாகிற अत्यन्तपारतन्त्र्य-ம் இளையபெருமாளுக்கு அபேக்ஷிதம். ஆகையிறே பெருமாளும். “अयं देशस्समश्श्रीमान् पुष्पितैस्तरुभिर्वृत:।इहाश्रमपदं सौम्य यथावत्कर्तुमर्हसि” என்று “श्रीमान् ” என்று स्वयं रुचिरत्व-த்தையும். “इह” என்று தே3ஶவிஶேஷத்தையும் அருளிச்செய்தது. இத்தைத் திருவுள்ளம் பற்றி அருளிச்செய்கிறார் (தம்முடைய பாரதந்த்ர்யத்தை) இத்யாதி3. “संयताञ्जलि:” என்கிறவிதுக்கு. “काकुस्थमब्रवीत् ” என்கிறவிடத்திலும் அந்வயம் என்றருளிச்செய்கிறார் (கையும் அஞ்ஜலியுமாய்) இத்யாதி3. 1 पूर्वोक्तरीत्या பிராட்டிக்கு उपायतया वरणं இல்லாமையாலும். 2 இத்தை उपायतया वरणं என்னில் पुरुषकारतया वरणं அத்4யாஹரித்துக்கொள்ளவேண்டி வருகையாலும், 3 இத்தை पुरुषकारतया वरणं என்னில் उपायतया वरणं அத்4யாஹரிக்கவேண்டி வருகையாலும், उभयाभ्युपेत-மான पुरुषकारत्व- மே பிராட்டிக்கு प्रामाणिक-மாகையாலும். पुरुषकारतया वरण-மே “सीतामुवाच” “सीतासमक्षं” என்கிறவிடத்தில் விவக்ஷிதம் என்று திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார் (புருஷகாரமாக முன்னிட்டு) என்று. पूर्वत्र वाचिकप्रपत्ति-யும், उत्तरत्र “संयताञ्जलि:” என்று कायिकप्रपत्ति-யுமாகிற இவற்றை साधारण-மாக நிர்தே3ஶிக்கிறார் (முன்னிட்டு) इति . वनानुगमन-த்துக்கும் स्वातन्त्र्यगन्धरहित-மான பாரதந்தர்யத்துக்கும் साधारणनिर्देश-ம் (தம்மபேக்ஷிதம்) இதி. (ஆஸுர ப்ரக்ருதியான) இத்யாதி3— असुरस्य इयं आसुरी, सा प्रकृतिः-स्वभावः यस्य स तथोक्त: “विष्णु भक्तिपरो देव: विपरीतस्तथाऽसुर:” என்கிறபடியே, ப4க3வத்3 பா4க3வத விஷயத்திலே அஸஹ்யாபசாரஹேது தமோகு3ண ப்ராசுர்யமாகிற ஸ்வபா4வத்தையுடையவன்- என்றபடி. தே3வனான இவன் ஆஸுரப்ரக்ருதியாகைக்கு ஹேது அஸுரனான புலோமாவுக்கு தெள3ஹித்ரனாகை, “एतस्मिन्नन्तरे वीरः पुलोमा नाम वीर्यवान्। दैतयस्तेन सङ् गृह्य शचीपुत्रोऽपवाहितः।। मातामहो यतस्तस्य पौलोमीयेन सा शची” என்று உத்தர ஸ்ரீராமாயணத்தில் சொல்லக்கடவதிறே. “विरोचनविरुद्धोऽपि प्रह्लाद: प्रकृतिं स्मरन्। विष्णो: त्रि: क्रममाणस्य पादाम्भोजं रुरोध ह।।” என்று வாமந புராணத்திலும் சொல்லுகிறடியே ப்ரக்ருதியானது ப்ரஹ்லாத3னையும் எதிரிடப்பண்ணினால். ஜயந்தனுக்குச் சொல்லவேண்டாவிறே என்று தோற்ற (ஆஸுரப்ரக்ருதியான) என்று “ப்ரக்ருதி” ஶப்3த3 ப்ரயோகம் பண்ணிற்று என்று கண்டு கொள்வது. (ஜயந்தனானவன்) இத்யாதி3 “स दृश्ट्वा जानकीं तत्र कन्दर्पशरपीडितः। विरराद नखै: तीक्ष्णै: पीनोन्नत पयोधरौ।।” என்றத்தைப்பற்ற (ஜநநி பக்கலிலே அக்ருத்ய ப்ரவ்ருத்தனாக) என்றது. “प्राणेभ्य: परिरक्षित:” என்றத்தை யுட்கொண்டு (தலையையறுப்பதாக) என்றது. (ஸ பித்ரா ச) இத்யாதி3– “त्रीन् लोकान् ” என்கிறதின் அர்த்த2ம் (எங்கும்) இதி. “संपरिक्रम्य” என்கிற सोपसर्गद्वयधात्वर्थ-ம் (சுற்றித்திரிந்த விடத்திலும்) இதி. “परित्यक्त:” என்கிறதின் அர்த்த2ம் (ஒரு புகல் இல்லாமையாலே) இதி. “तमेव शरणं गत:” என்கிறதின் அர்த்த2ம் (போக்கற்று ஶரணம் புக) என்றது. (ஸ தம் நிபதிதம்) இத்யாதி3-(புரத: பதிதம்) இத்யாதி3 अत्र “जयन्त: कामुकतया समागत इति न रामायणोक्तं। नचाप्युपारमन्मांसात् भक्षार्थी बलिभोजनः। भक्षगृध्नेन काकेन रादितन्तु स्तनान्तरे॥’ इत्यादिमात्रवचनात्। अतो वालिवत् असौ इन्द्रजन्मा प्रबलः कश्चित् वायसः। “मत्कृते काकमात्रे तु ब्रह्मास्त्रं समुदीरितम्” इति” चोक्तम्” என்று சிலர் பக்ஷம். அதில், “पुत्र: किल स शक्रस्य” என்கிற ராமாயண வசநத்திலுண்டான ‘जयन्तवाल्यन्यतर-னோ? அன்றிக்கே अपूर्वपुत्र-னோ? என்கிற விஶேஷாகாங்க்ஷையை अपूर्वकल्पनाविरहानुगृहीत-மான पुराणवचनसमर्पितजयन्तरूपविशेष-ம் ஶமிப்பிக்கையாலே. ஸாமாந்ய விஶேஷந்யாயத்தாலேயும் ஸர்வ ஶாகாப்ரத்யயந்யாயத்தாலேயும் ஜயந்தன் காகரூபேண வந்தான் என்னுமிடம் ஸித்3த4ம். பாத்3மோத்தரத்திலே दिव्याष्टोत्तरशतनामविषयाध्याय-த்திலே “जयन्तत्राणवरद:” என்று काकवृत्तान्तस्थान-த்திலே சொல்லுகையாலே. காகன் ஜயந்தன்
என்னுமிடம் லப்3த4ம். பூர்வவாஸிஷ்ட2த்தில் ஹநுமத்3 விஜயத்திலும். “ वायसोऽभूज्जयन्तस्य इन्द्राणी यमजीजनत्।तत्र हेतुं प्रवक्ष्यामि शृणु भद्रे मयोदितम्॥ पुरा मरुत्वान् देवेशो गौतमस्य प्रियां सतीम्।अहल्यां कामयन् मोहात् निशीये वायसोऽरटत्।।” என்று தொடங்கி விஸ்தரேண சொல்லி “इन्द्रस्य वायसत्वं च जयन्ते प्रत्यपादयन्। आत्मा हि पुत्रस्सर्वेषां इति स्वं नाथमिच्छव: ।। प्रसाद्य गौतमं तेन वायसत्वस्य चावधिम् । रामास्त्रस्पर्शममरा: कामयामासुरीश्वराः॥ जयन्तः काकरूपेण विचरन् भुवने चिरम्। वने राघसिंहस्य कोपं जनयितुम् . . ।।” இத்யாதி3 விஸ்தரேண சொல்லி “अतो राममहास्त्रेण जयन्तो भयविद्रुतः। तेनानुद्रवता भद्रे द्रावितो नैव मारित:” என்று தலைக்கட்டுகையாலே காகன் ஜயந்தன் என்னுமிடம் ஸ்பு2டம். (1) “कस्माद्यो मां हरेत्तवत्त: क्षमसे तं महीपते” என்கிற வாக்யஶேஷ ஸ்வாரஸ்யத்தாலே. एकदेशक्षतिकरणरूप-स्वल्पापराध-த்துக்கு இத்தனை செய்தால், த4ர்மியையே அபஹரித்த மஹத்தராபராத4த்தைப் பொறுத்திருக்கை என்? என்று, “मत्कृते काकमात्रे तु ब्रह्मास्त्रं समिदीरितम् ” என்கிறதுக்கர்த்த2ம். “काकमात्रे” என்கிறதுக்கு भूयिष्ठापराधप्रदर्शनवाक्यशेषानुसार-த்தாலே. த4ர்மியை அபஹரியாதே ஏகதே3ஶ க்ஷதி பண்ணினவனிடத்தில் என்றபடி. (2) ஜயந்தனாகி ஓர் காகஶரீரத்தைக்கொண்டபோதே காகமேயாகையிறே, “तमहं लोष्टमुद्यम्य वारयामि स्म वायसम् ” என்று காகாந்தரத்தைப் போலே லோஷ்டத்காலே வாரிதமாய் மறைந்திருந்தது. இப்படி ஸ்த்ரீயானவென்னாலே லோஷ்டத்தாலே எறியுண்டு மறையும்படி து3ர்ப3லமான வாயஸ விஷயத்தில் ப்3ரஹ்மாஸ்த்ரத்தை ப்ரயோகி3த்து ராக்ஷஸ விஷயத்திலே பொறுத்திருப்பது என்? என்றுமாம். 1 “प्रबल: कश्चित् वायस:” என்பார்க்கும். இந்தக் காகத்துக்கு ப்ராக்ருத காகங்களைப் பற்ற வைலக்ஷண்யமிஷ்டமாகையாலே. “मात्र” பத3த்தாலே அந்த ப்ரப3லத்வத்தை வ்யவச்சே2கி3க்கக்கூடாமையாலே धर्म्यपहार-மே व्यवच्छेद्य-மென்னவேணுமாகையால். “काकमात्रे” என்கிற “मात्र” ஶப்3த3ம் – अन्यथासिद्ध-மாகையாலும். 2 “विज्ञानघनएव” என்கிற ஏவகாரம்போலே அவதா4ரண வாசியாகையாலே வாக்யாந்தரஶேஷபூ4தமாய் ஸ்வதந்த்ரவாக்யாந்தர ஸித்3தா4ர்த்த2 பா3த4கமாகமாட்டாமையாலும் पुराणान्तरकण्ठोक्त-जयन्तपर्यवसान-विरोधि-யாகாது. 1 “नखाग्रै: केन ते भीरुरादितञ्च स्तनान्तरे” என்று नखरूपकरणसामर्थ्य-த்தாலும். स्तनरूपाधिकरणसामर्थ्य-த்தாலும், रदनशब्दित-विलेखनरूप-क्रियासामर्थ्यத்தாலும் ராமாயணத்திலே வ்யஞ்ஜிதமாய். “कन्दर्पशरपीडित: विरराद नखै: तीक्ष्णै: पीनोन्नतपयोधरौ।।” என்று பாத்3ம புராணத்திலே कण्ठोक्त-முமான कामुकत्व-மும், “भक्षार्थी —भक्षगृध्नेन” என்று ராமாயணத்திலே கண்டோ2க்தமான भक्षार्थित्व-மும். जयन्तत्वप्रयुक्तवासनै-யாலும். काकशरीरसम्बन्धनिबन्धन-வாஸநையாலும் जातिस्मरन्यायेन एकत्र सङ्कटनार्ह-மாகையாலும், 2. காகம் -அபூர்வ புத்ரன் என்று अन्यत्र சொல்லியிராமையாலும். 3 இத்தைக் கொண்டே கல்பிக்கில் कल्पनगौरवं- ப்ரஸங்கி3க்கையாலும். 4 “किल” शब्दस्वारस्य -த்தாலும். 5 “इन्द्राय पुत्रिणे” என்கிறவிடத்தில் “புத்ர” ஶப்3த3ம் ஜயந்தபரமாகக் கண்டபடியாலும். 6 “प्रयोगरत्नावलीपद्धति” என்கிற க்ரந்தத்தைப்பண்ணி -भगवच्छास्त्र-प्रामाण्यप्रवर्तन- த்தாலே ஆப்தனான போஜராஜனும் “ब्रह्मास्त्रवित्रस्त-जयन्तकाक-कथामभिज्ञाप्य” என்று ப்ரபந்தித்தபடியாலும், ஜயந்தன் காமுகதயா காகரூபேண வந்தான் என்று ஸித்3த4ம் என்று திருவுள்ளம் பற்றி அருளிச்செய்கிறார் (ராமாயண பாத்3ம புராணங்களிற் சொல்லுகிறபடியே) இதி. “जयन्तत्राणवरद:” என்கிற பாத்3மபுராண வசநம் இங்கே விவக்ஷிதம். இங்கே,’ “ராமாயண பாத்3மபுராண” என்கிற பூர்வாபர நிர்தேஶத்தாலே. छागपशुन्यायविषयत्व-மும் सर्वशास्त्रप्रत्ययन्यायविषयत्व-மும் सूचित-ம் तुल्यवदेकक्रियान्वयित्वबोधक-மான द्वन्द्वनिर्देश-த்தாலே अविरोधेन सङ्कटनार्हत्व-மும் व्यञ्जित-ம். (இஹஸந்த) இத்யாதி3— ( ததா2 ) நீ ஸத3நுவர்த்தநம் பண்ணுகிறிலை யென்கைக்கு ஸம்வாதி3யாக என்றபடி. (விபரீத புத்3தி4யான)-ஜநநி பக்கலிலே காமுகத்வபுத்3தி4யுக்தனான என்றபடி. “விரராத3” என்று -प्रवृत्तिपर्यन्तविवक्षै-யாலே (அக்ருத்ய ப்ரவருத்தனாக) என்றார் கீழ் (ப. 202); இங்கே नलकूबरादिशापप्रतिसन्धान-த்தாலே प्रवृत्तिपर्यन्त-மன்றிக்கே बुद्धिमात्र-மென்று “बुद्धिराचारवर्जिता” என்றாளென்று (விபரீத புத்3தி4யான) என்றார் என்று கண்டுகொள்வது. (விரகு)- உபாயம். “तेन मैत्री भवतु ते” என்கிற ஶரணாகதி யென்றபடி. (பாபாநாம்) இத்யாதி3– பாபாநாம் – திருவடியபி4ப்ராயத்காலே. ஶுபா4நாம்- सदानुग्रहसम्प-ந்நையான தன்னபி4ப்ராயத்தாலே.