ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஆத்ம விவாஹம்
ஶ்ரிய:பதியாகிற காளமேகத்திலும் ஸௌஹார்த்தம் என்கிறதொரு பாட்டம் மழை விழுந்து க்ருபை ஆகிற நிலத்திலே ஜீவனாகிற ஓஷதி4 முளைத்து ஆசார்யனாகிற பிதா விரஹம் என்கிற சங்கமத்தாலே பெண்பிள்ளை பிறக்க ருசியாகிற ஜீவநத்தையிட்டு வளர்த்துக்கொண்டு போந்து விவேகமாகிற பக்வம் பிறந்தவாறே பரம சேஷிகளாகிற ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரளைச் சேர்த்து எம்பெருமானாகிற வரன் கையில் ஸ்வரூப ஜ்ஞாநம் என்கிற தா4ரையை வார்த்துக் கொடுக்க அவனும் சேஷமாகிற மந்த்ரவாஸஸ்ஸை உடுத்தி சேஷ வ்ருத்தியாகிற மங்கள கையைப்பிடித்துக்கொண்டுபோந்து அத்4யவஸாயம் என்கிறதொரு ஆசனத்திலே கொண்டிருந்து வ்யாபகம் என்கிற அக்னியை வளர்த்து இதரோபாய த்யாக3ம் என்கிற ஸமிதை4களையிட்டு ஸித்தோ4பாய ஸ்வீகாரம் என்கிற ப்ரதா4ந ஆஹுதியைப்பண்ணி சாஸ்த்ரங்களாகிற பொரியைச்சிதறி ஸம்ப3ந்த4 ஜ்ஞாநம் என்கிற பூர்ணாஹுதியாலே ப்ராப்தி ப்ரதி ப3ந்த4கங்களை நிச்சேஷமாக்கி நிர்ப4ரத்வாநுஸந்தா4நம் பண்ணிவிக்கிற பூர்வாசார்யர்களாகிற பந்து4க்கள் முன்னிலையாக மாதாபிதாக்கள் இருவரும் சேரவிருந்து காட்டிக்கொடுக்க ஆழ்வார்கள் ஈறச்சொற்கள் ஆகிற மூப்போடே சேரவிட்டு வாத்ஸல்யாதி குணயுக்தன் ஆனவன்தான் ப4ர்தாவான ஆகாரம் கொலையாதபடி அணைத்துக்கொண்டுபோந்து தானும் தன் ப்ரதா4ன மஹிஷிகளும் கூட அந்த:புரக்கட்டிலிலே கொண்டுபோய் பேரின்பத்தடியாகிற ப4ந்து4 க்களோடே சேர்த்து ஹர்ஷபகர்ஷத்தோடே அங்கீகரித்து ப்ரீதிவெள்ளம் ஆகிற படுக்கையிலே கொண்டுபோய் விஷயவைலக்ஷண்யங்களாகிற போ4க3போ4க்3யங்களோடே ஸகலவித4 கைங்கர்யங்களாகிற அநுப4வத்திலே மூட்டி ஆனந்தமாகிற பெருக்காற்றூடே ஆழங்கால்பட்டு ‘நம:’ என்பது ‘போற்றி’ என்பது ‘ஜிதம்’ என்பது பல்லாண்டு என்பதாக நிற்கும்.
நஞ்சீயர் திருவடிகளே ஶரணம்
ஆத்ம விவாஹம் ஸம்பூர்ணம்