Thiruvoymozhi 7-2
திருவாய்மொழி ஏழாம் பத்து இரண்டாம் திருவாய்மொழி கங்குலும் பகலும் கண் துயிலறியாள் கண்ண நீர் கைகளால் இறைக்கும் * சங்கு சக்கரங்களென்று கை கூப்பும் தாமரைக் கண்ணென்றே தளரும் * எங்ஙனே தரிக்கேன் உன்னை விட்டு ? என்னும் இருநிலம் கை துழாவிருக்கும் * செங்கயல் பாய் நீர்த் திருவரங்கத்தாய் ! இவள் திறத்து என் செய்கின்றாயே ? 7.2.1 திருவரங்கம் என் செய்கின்றாய் ? என் தாமரைக் கண்ணா ! என்னும், […]
Thiruvoymozhi 7-1
திருவாய்மொழி ஏழாம் பத்து முதல் திருவாய்மொழி உண்ணிலாவிய ஐவரால் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம் * நண்ணிலா வகையே நலிவான் இன்னு மெண்ணுகின்றாய் * எண்ணிலாப் பெருமாயனே! இமையோர்களேத்தும் உலகம்மூன்றுடை * அண்ணலே ! அமுதே ! அப்பனே ! என்னை யாள்வானே ! 7.1.1 என்னை யாளும் வன் கோ ஓரைந்திவை பெய்து இராப் பகல் மோதுவித்திட்டு * உன்னை நான் அணுகா வகை செய்து, […]
Thiruvoymozhi 6-10
திருவாய்மொழி ஆறாம் பத்து பத்தாம் திருவாய்மொழி உலகமுண்ட பெருவாயா ! உலப்பில் கீர்த்தி யம்மானே ! * நிலவும் சுடர் சூழொளி மூர்த்தி !, நெடியாய் ! அடியேனாருயிரே ! * திலதமுலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே ! * குலதொல்லடியேன் உன பாதம் கூடுமாறு கூறாயே. 6.10.1 திருவேங்கடம் திருப்பதி கூறாய் நீறாய் நிலனாகிக், கொடு வல்லசுரர் குலமெல்லாம் * சீறா எறியும் திருநேமி வலவா ! தெய்வக் கோமானே ! […]
Thiruvoymozhi 6-9
திருவாய்மொழி ஆறாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி நீராய் நிலனாய்த் தீயாய், காலாய் நெடுவானாய் * சீரார் சுடர்கள் இரண்டாய்ச், சிவனாய் அயனானாய் ! * கூராராழி வெண் சங்கேந்திக், கொடியேன் பால் வாராய் * ஒரு நாள், மண்ணும் விண்ணும் மகிழவே. 6.9.1 மண்ணும் விண்ணும் மகிழக், குறளாய் வலங் காட்டி * மண்ணும் விண்ணும் கொண்ட, மாய அம்மானே ! * நண்ணி உனை நான், கண்டுகந்து […]
Thiruvoymozhi 6-8
திருவாய்மொழி ஆறாம் பத்து எட்டாம் திருவாய்மொழி பொன்னுலகாளீரோ ? புவனி முழுதாளீரோ ? * நன்னலப் புள்ளினங்காள் ! வினையாட்டியேன் நான் இரந்தேன் * முன்னுலகங்க ளெல்லாம் படைத்த, முகில் வண்ணன் கண்ணன் * என்னலம் கொண்ட பிரான் தனக்கு, என் நிலைமை யுரைத்தே. 6.8.1 மையமர் வாள்நெடுங்கண், மங்கைமார் முன்பு என்கையிருந்து * நெய்யமர் இன்னடிசில், நிச்சல் பாலொடு மேவீரோ? * கையமர் சக்கரத்து, என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு * மெய்யமர் காதல் சொல்லிக், […]
Thiruvoymozhi 6-7
திருவாய்மொழி ஆறாம் பத்து ஏழாம் திருவாய்மொழி உண்ணும் சோறு பருகு நீர், தின்னும் வெற்றிலையு மெல்லாம் * கண்ணன் எம்பெருமான், என்றென்றே கண்கள் நீர்மல்கி * மண்ணினுள் அவன் சீர், வளம் மிக்கவனூர் வினவித் * திண்ணம் என் இளமான் புகுமூர், திருக்கோளூரே. 6.7.1 திருக்கோளூர் ஊரும் நாடும் உலகமும், தன்னைப் போல் * அவனுடைய பேரும் தார்களுமே பிதற்றக், கற்பு வானிடறிச் * சேரும் நல் வளஞ்சேர், பழனத் திருக்கோளூர்க்கே * போருங் கொல் […]
Thiruvoymozhi 6-6
திருவாய்மொழி ஆறாம் பத்து ஆறாம் திருவாய்மொழி மாலுக்கு, வையமளந்த மணாளற்கு * நீலக் கருநிற, மேக நியாயற்குக் * கோலச், செந்தாமரைக் கண்ணற்கு * என் கொங்கல ரேலக் குழலி, இழந்தது சங்கே. 6.6.1 திருவேங்கடம் திருப்பதி சங்கு வில் வாள் தண்டு, சக்கரக் கையற்குச் * செங்கனி வாய்ச், செய்ய தாமரைக் கண்ணற்குக் * கொங்கலர் தண்ணந்துழாய், முடியானுக்கு * என் மங்கை யிழந்தது, மாமை நிறமே. 6.6.2 திருவேங்கடம் திருப்பதி நிறங் […]
Thiruvoymozhi 6-5
திருவாய்மொழி ஆறாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி துவளில் மாமணிமாடமோங்கு தொலைவில்லிமங்கலம் தொழும் இவளை * நீர்இனி அன்னைமீர் ! உமக்காசை யில்லை விடுமினோ * தவள வொண் சங்கு சக்கர மென்றும் தாமரைத் தடங்கணென்றும் * குவளை யொண் மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே. 6.5.1 தொலைவில்லிமங்கலம் குமுறுமோசை விழவொலித் தொலைவில்லிமங்கலம் கொண்டு புக்கு * அமுதமென் மொழியாளை நீர் உமக்கு ஆசையின்றி யகற்றினீர் * திமிர் கொண்டாலொத்து நிற்கும் மற்றிவள் தேவதேவபிரானென்றே […]
Thiruvoymozhi 6-4
திருவாய்மொழி ஆறாம் பத்து நான்காம் திருவாய்மொழி குரவையாய்ச்சியரோடு கோத்ததும், குன்றமொன்றேந்தியதும் * உரவு நீர்ப் பொய்கை நாகம் காய்ந்தது முட்பட மற்றும் பல * அரவிற் பள்ளிப் பிரான் தன், மாய வினைகளையே அலற்றி * இரவும் நன்பகலும் தவிர்கிலன், என்ன குறை எனக்கே? 6.4.1 கேயத் தீங்குழலூதிற்றும், நிரை மேய்த்ததும் கெண்டை யொண்கண் * வாசப் பூங்குழல் பின்னை தோள்கள் மணந்ததும் மற்றும் பல * மாயக் கோலப்பிரான் தன் செய்கை நினைந்து மனம் […]
Thiruvoymozhi 6-3
திருவாய்மொழி ஆறாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி நல்குரவும் செல்வும், நரகும் சுவர்க்கமுமாய் * வெல் பகையும் நட்பும், விடமும் அமுதமுமாய்ப் * பல்வகையும் பரந்த பெருமான், என்னை யாள்வானைச் * செல்வம் மல்கு குடித், திருவிண்ணகர்க் கண்டேனே. 6.3.1 திருவிண்ணகர் கண்ட இன்பம் துன்பம், கலக்கங்களும் தேற்றமுமாய்த் * தண்டமும் தண்மையும், தழலும் நிழலுமாய்க் * கண்டு கொள்தற் கரிய பெருமான், என்னை யாள்வானூர் * தெண் திரைப் புனல் சூழ், திருவிண்ணகர் […]