Thiruvaciriyam Moolam
நம்மாழ்வார் அருளிச்செய்த யஜுர்வேதஸாரமான திருவாசிரியம் தனியன் (அருளாளப்பெருமாளெம்பெருமானார் அருளிச்செய்தது) காசினியோர் தாம்வாழக் கலியுகத்தே வந்துதித்து ஆசிரியப்பாவதனால் அருமறைநூல்விரித்தானை* தேசிகனைப் பராங்குசனைத் திகழ்வகுளத்தாரானை* மாசடையாமனத்துவைத்து மறவாமல்வாழ்த்துதுமே. செக்கர் மாமுகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப் பரிதி சூடி * அஞ்சுடர் மதியம் பூண்டு * பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய் * திகழ் பசுஞ்சோதி மரதகக் குன்றம் * கடலோன் கைம்மிசைக் கண்வளர்வது போல் * பீதகவாடை முடிபூண் முதலா * மேதகு பல்கல னணிந்து * சோதி வாயவும் கண்ணவும் […]
Thiruviruttam Moolam
நம்மாழ்வார் அருளிச்செய்த ருக்வேதஸாரமான திருவிருத்தம் தனியன் (கிடாம்பியாச்சான் அருளிச்செய்தது) கருவிருத்தக்குழிநீத்தபின் காமக்கடுங்குழிவீழ்ந்து* ஒருவிருத்தம்புக்குழலுறுவீர்! உயிரின்பொருள்கட்கு* ஒருவிருத்தம்புகுதாமல் குருகையர்கோனுரைத்த* திருவிருத்தத்தோரடிகற்றீரீர் திருநாட்டகத்தே. பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கும் அழுக்குடம்பும்* இந்நின்ற நீர்மை இனி யாமுறாமை * உயிரளிப்பான் எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய் ! இமையோர் தலைவா! மெய்ந் நின்று கேட்டருளாய் * அடியேன் செய்யும் விண்ணப்பமே. 1 செழுநீர்த் தடத்துக் கயல் மிளிர்ந்தா லொப்ப * சேயரிக் கண் அழுநீர் துளும்ப அலமருகின்றன * வாழியரோ முழுநீர் முகில் வண்ணன் […]
Naanmukan Thiruvandadi Moolam
திருமழிசைப்பிரான் அருளிச்செய்த நான்முகன் திருவந்தாதி தனியன் (சீராமப்பிள்ளை அருளிச்செய்தது) நாராயணன்படைத்தான்நான்முகனை* நான்முகனுக்கு ஏரார்சிவன்பிறந்தானென்னுஞ்சொல்* – சீரார் மொழி செப்பி வாழலாம் நெஞ்சமே!* மொய்பூ மழிசைப்பரனடியேவாழ்த்து. நான்முகனை நாராயணன் படைத்தான் * நான்முகனும் தான் முகமாய்ச் சங்கரனைத் தான் படைத்தான் *- யான் முகமாய் அந்தாதி மேலிட்டு அறிவித்தேன் ஆழ்பொருளைச் * சிந்தாமல் கொண்மின் நீர் தேர்ந்து. 1 தேருங்கால் தேவன் ஒருவனே யென்று உரைப்பர் * ஆருமறியார் அவன் பெருமை *- ஓரும் பொருள் முடிவும் இத்தனையே […]
Moonraam Thiruvandadi Moolam
பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாந்திருவந்தாதி தனியன் (குருகை காவலப்பன் அருளிச்செய்தது) சீராரும்மாடத்திருக்கோவலூர் அதனுள்* காரார்கருமுகிலைக்காணப்புக்கு* – ஓராத் திருக்கண்டேனென்றுரைத்த சீரான்கழலே* உரைக்கண்டாய்நெஞ்சே! உகந்து. திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் * திகழும் அருக்கனணி நிறமும் கண்டேன் *- செருக் கிளரும் பொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக் கண்டேன் * என்னாழி வண்ணன் பால் இன்று. 1 இன்றே கழல் கண்டேன் ஏழ்பிறப்பும் யானறுத்தேன் * பொன் தோய் வரை மார்பில் பூந்துழாய் *- அன்று திருக்கண்டு கொண்ட திருமாலே […]
Irandaam Thiruvandadi Moolam
பூதத்தாழ்வார் அருளிச்செய்த இரண்டாம் திருவந்தாதி தனியன் (திருக்குருகைப்பிரான் பிள்ளான் அருளிச்செய்தது( என்பிறவிதீரஇறைஞ்சினேன் இன்னமுதா அன்பே தகளியளித்தானை* – நன்புகழ்சேர் சீதத்தார்முத்துக்கள்சேரும் கடல்மல்லைப் பூதத்தார்பொன்னங்கழல் அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக * இன்புருகு சிந்தை யிடு திரியா *- நன்புருகி ஞானச் சுடர் விளக் கேற்றினேன் நாரணற்கு * ஞானத் தமிழ் புரிந்த நான். 1 ஞானத்தால் நன்குணர்ந்து நாரணன்தன் நாமங்கள் * தானத்தால் மற்று அவன் பேர் சாற்றினால் *- வானத் தணியமரர் ஆக்குவிக்கு மஃதன்றே? * […]
Mudal Thiruvandadi Moolam
முதலாழ்வார்கள் முதலானோர் அருளிச்செய்த இயற்பா பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதல் திருவந்தாதி தனியன் (முதலியாண்டான் அருளிச்செய்தது) கைதைசேர்பூம்பொழில்சூழ்கச்சிநகர்வந்துதித்த* பொய்கைப்பிரான்கவிஞர்போரேறு* – வையத்து அடியவர்கள்வாழ அருந்தமிழ்நூற்றந்தாதி படிவிளங்கச்செய்தான்பரிந்து. வையம் தகளியா வார் கடலே நெய்யாக* வெய்ய கதிரோன் விளக்காகச் *- செய்ய சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை * இடராழி நீங்குகவே யென்று. 1 என்று கடல் கடைந்தது? எவ்வுலகம் நீரேற்றது ? * ஒன்றும் அதனை உணரேன் நான் *- அன்று அது அடைத்துடைத்துக் கண்படுத்த […]
Kanninum Ciruttambu Moolam
மதுரகவியாழ்வார் அருளிச்செய்த கண்ணிநுண்சிறுத்தாம்பு தனியன்கள் (நாதமுனிகள் அருளிச்செய்தவை( அவிதிதவிஷயாந்தரச்சடாரே உபநிஷதாம்உபகாநமாத்ரபோக| அபிசகுணவசாத்ததேகசேஷீ மதுரகவிர்ஹ்ருதயேமமாவிரஸ்து.|| வேறொன்றும்நானறியேன் வேதம்தமிழ்செய்த* மாறன்சடகோபன் வண்குருகூர் – ஏறு எங்கள் வாழ்வாமென்றேத்தும் மதுரகவியார் * எம்மை ஆள்வார்அவரேயரண். கண்ணி நுண் சிறுத் தாம்பினால், கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன் * என்னப்பனில், நண்ணித் தென்குருகூர் நம்பி யென்றக்கால் * அண்ணிக்கும் அமுதூறும், என் நாவுக்கே. 1 1 நாவினால் நவிற்றி, இன்ப மெய்தினேன் * மேவினேன், அவன் பொன்னடி மெய்ம்மையே * தேவு மற்றறியேன், குருகூர் […]
Amalanaadipirraan Moolam
திருப்பாணாழ்வார் அருளிச்செய்த அமலனாதிபிரான் தனியன்கள் (பெரியநம்பிகள் அருளிச்செய்தது) ஆபாதசூடமநுபூயஹரிம்ஶயாநம் மத்யேகவேரதுஹிதுர்முதிதாந்தராத்மா அத்ருஷ்ட்ருதாம்நயநயோர்விஷயாந்தராணாம் யோநிஶ்சிகாயமநவைமுநிவாஹநந்தம். (திருமலைநம்பிகள் அருளிச்செய்தது) காட்டவேகண்டபாதகமலம்நல்லாடையுந்தி* தேட்டரும்உதரபந்தம் திருமார்வுகண்டம்செவ்வாய் வாட்டமில்கண்கள்மேனி முனியேறித்தனிபுகுந்து * பாட்டினாற்கண்டுவாழும் பாணர்தாள்பரவினோமே. அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை யாட் படுத்த விமலன் * விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன் * நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதி ளரங்கத்தம்மான் * திருக் கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன வொக்கின்றதே. 1 1 திருவரங்கம், திருவேங்கடம் திருப்பதி உவந்த வுள்ளத்தனாய் உலகமளந்து […]
Thirupalliezuchi Moolam
தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி தனியன்கள் (திருமாலையாண்டான் அருளிச் செய்தது) தமேவமத்வாபரவாஸுதேவம் ரங்கேசயம்ராஜவதர்ஹணீயம் ப்ராபோதகீம்யோக்ருதஸூக்திமாலாம் பக்தாங்க்ரிரேணும்பகவந்தமீடே. (திருவரங்கப்பெருமாள் அரையர் அருளிச்செய்தது) மண்டங்குடியென்பர் மாமறையோர் மன்னியசீர் தொண்டரடிப்பொடிதொன்னகரம்* வண்டு திணர்த்தவயல் தென்னரங்கத்தம்மானை* பள்ளியுணர்த்தும்பிரானுதித்தஊர். கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய் * மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்து வந்தீண்டி * எதிர் திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும் * அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும் […]
Thirumaalai Moolam
தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை தனியன்கள் (திருவரங்கப்பெருமாள் அரையர் அருளிச்செய்தது) மற்றொன்றும்வேண்டாமனமே!* மதிளரங்கர் கற்றினம்மேய்த்தகழலிணைக்கீழ்* – உற்ற திருமாலைபாடும்சீர்த் தொண்டரடிப்பொடிஎம் பெருமானை* எப்பொழுதும்பேசு. காவலில் புலனை வைத்துக், கலி தன்னைக் கடக்கப் பாய்ந்து * நாவலிட்டு உழிதருகின்றோம், நமன்தமர் தலைகள் மீதே * மூவுல குண்டுமிழ்ந்த முதல்வ ! நின் நாமம் கற்ற * ஆவலிப் புடைமை கண்டாய், அரங்கமா நகருளானே ! 1 திருவரங்கம் பச்சை மாமலை போல்மேனி, பவளவாய் கமலச்செங்கண் * அச்சுதா அமரரேறே ! […]