சதுர்த்த ப்ரகரணம்

அர்ச்சிராதி சதுர்த்த ப்ரகரணம் (திருவாய் 4.5.1) ஏழுலகும் தனிக்கோல் செல்ல, (திருவாய் 5.5.10)   குழுமித்தேவர் குழாங்கள் கைதொழ எழுந்தருளியிருக்கிற ஸ்ரீவைகுண்டநாதனை (திருவாய் 5.9.6) “காண்பதெஞ்ஞான்று கொலோ”   (பெரிய திரு 4.9.7) “காட்டிரானீர்” என்கிற இழவுதீர, 1. “த்ருஷ்ட ஏவ ஹி நஶ்ஶோகம்” என்று இவன் மநோரதி,த்துக்கொண்டு, சென்றபடியே கண்ணாரக்கண்டு, 2. “ஸமஸ்த பரிவாராய ஸ்ரீமதே நாராயணாய நம:” என்று ஹர்ஷபரவஶனாய் விழுந்து எழுந்திருந்து, பெரிய ப்ரீதியோடேசென்று, பாதபீடத்திலே அடியிட்டு திவ்யஸிம்ஹாஸநத் திலேயேற, அவனும் இவனைக்கண்டு , 3. […]

த்ருதீயப்ரகரணம்

அர்ச்சிராதி த்ருதீயப்ரகரணம் உபயவிபூதியும் தொழிலாக வகுப்புண்டு, ஸர்வாஶ்சர்யமயமான  (திருப்பாவை 23) கோப்புடைய சீரிய சிங்காசனத்திலே பன்னிரண்டி தழாய், நாநாஶக்திமயமான திவ்ய கமலமாய், அதில் திவ்ய கர்ணிகையிலே புஷ்ப ஸஞ்சய விசித்ரமான திவ்யயோகபர்யங்க மாய், அதின்மேலே அநேகமாயிரம் சந்த்ரர்களை உருக்கிவார்த்தாற் போலே குளிர்ந்த புகரையுடைத்தான திருமேனியையுடையனாய், கல்யாணகுணங்களுக்கு அந்தமில்லாமையாலும் ஸர்வவித கைங் கர்யத்திலும் அதிக்ருதனாய், கைங்கரியபரர்க்கெல்லாம் படிமாவா யிருக்கையாலும் அனந்தனென்றும் ஶேஷனென்றும் திருநாமத்தை யுடையனாய், பகவதநுபவத்துக்குப் போக்குவீடாகப் பல வாய்த் தலைகளையுமுடையனாய், விஜ்ஞாநபலங்களுக்கும் ஶைத்ய மார்த் தவ ஸௌரப்யாதி, […]

த்விதீயப்ரகரணம்

அர்ச்சிராதி த்விதீயப்ரகரணம் அதில் முற்பட அர்ச்சிஸ்ஸைக்கிட்டி, அவன் சிறிதிடம் வழிநடத்த, பின்பு அஹஸ்ஸையும், ஶுக்லபக்ஷாபிமாநியையும், உத்தராயணாபி மாநியையும், ஸம்வத்ஸராபிமாநியையும், வாயுவையுங் கிட்டி, அவர்கள் வழிநடத்த, 1. ப்ரவிஶ்ய ச ஸஹஸ்ராம்ஶும்’ (பெரிய திருமடல் 16) ‘மன்னுங்கடுங்கதிரோன் மண்டலத்தினன்னடுவுள்” என்கிறபடியே, ஹிரண்மயமாய், காலசக்ரப்ரவர்த்தகமான (சிறிய திருமடல் 7) தேரார் நிறைகதிரோன் மண்டலத்திலே, எதிர்விழிக்க வொண்ணாதபடி நிரவதிகதேஜஸ்ஸோடே எதிரே ஒரு ஆதித்யன் செல்லுமாபோலே சென்று, அவன் (சிறிய திருமடல் 7) மண்டலத்தைக் கீண்டுபுக்கு அவ்வருகேபோய், 2. “க்ரமாச்சந்த்ரமஸம் ப்ராப்ய” என்கிறபடியே […]

ப்ரதமப்ரகரணம்

பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த அர்ச்சிராதி தனியன் (கலித்துறை)      போர்மண்டலஞ்சங்கு தண்டுவில்வாள்புக ராழிவெய்யோன்      கார்மண்டலஞ்சென்று காண்பார்தமக்குக் கதிரொளியோன்       ஏர்மண்டலந்தன்னை யெய்தும்வழியை யினிதுரைத்தான்       பேர்மண்டலகுரு வென்னு முடும்பை பிறந்தவனே. ப்ரதமப்ரகரணம் ஶ்ரிய:பதியான ஸர்வேஸ்வரனுக்கு விபூதித்வயமும் ஶேஷமா யிருக்கும். அதில் போகவிபூதியிலுள்ளார் (திருவாய் 4.9.10) “ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்ப” என்கிறபடியே அவனுடைய செங்கோலே ஏகாதபத்ரமாக நடக்கும்படி அவனுடையஅபிமாநத்திலே அந்தர்பவித்துப் போருவர்கள், லீலா விபூதியிலுள்ளார். அவர்களைப்போலே சந்தாநுவர்த்திகளன்றிக்கே ஸங்கல்பாநுவிதாயிகளாய், 1. “நம இத்யேவ வாதி, ந:” என்கிறதுக்கு […]

யாத்ருச்சிகப்படி

பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த யாத்ருச்சிகப்படி திருமந்த்ரப்ரகரணம் யாத்ருச்சிக பகவத் கடாக்ஷத்தாலே பகவதாபிமுக்யம் பிறந்து ஸதாசார்ய ஸமாஶ்ரயணம் பண்ணின முமுக்ஷுவுக்கு ரஹஸ்ய த்ரயமும் அநுஸந்தேயம். அதில், ஸ்வரூபஶோதநார்த்தமாக ப்ரவ்ருத்தமாகையாலே ப்ரதமத்திலே அநுஸந்தேயமான திருமந்த்ரம் – ஸ்வரூபத்தையும், ஸ்வரூபாநுரூபமான பரமபுருஷார்த்தத்தையும் ப்ரதிபாதிக்கிறது. அப்பரமபுருஷார்த்தத்துக்கு அநுரூபமான சரமஸாதந ஸ்வீகாரத்தை விதிக்கிறது – சரமஶ்லோகம். விஹிதோபாய பரிக்ரஹத்தையும், ஸப்ரகார புருஷார்த்த ப்ரகாரத் தையும் ப்ரதிபாதிக்கிறது – த்வயம். அதில் திருமந்த்ரம் – எட்டுத் திருவக்ஷரமாய், மூன்று பதமாயிருக் கும். அதில் முதல் பதமான ப்ரணவம் – […]

நவவித ஸம்பந்தம்

பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த நவவித ஸம்பந்தம் “பிதா ச ரக்ஷகஶ்ஶேஷீ பர்த்தா ஜ்ஞேயோ ரமாபதி: | ஸ்வாம்யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யமநூதித ||” என்கிறபடியே – 1. அகாரத்தாலே – பிதாபுத்ரஸம்பந்தம் சொல்லி, 2. 2.”அவ-ரக்ஷணே” என்கிற தாதுவினாலே – ரக்ஷ்யரக்ஷக ஸம்பந்தஞ்சொல்லி, 3. லுப்தசதுர்த்தியாலே – ஶேஷஶேஷி ஸம்பந்தஞ்சொல்லி, 4. உகாரத்தாலே – பர்த்ருபார்யா ஸம்பந்தஞ் சொல்லி, 5. மகாரத்தாலே – ஜ்ஞாத்ருஜ்ஞேய ஸம்பந்தஞ் சொல்லி, 6. நமஸ்ஸாலே  ஸ்வஸ்வாமி ஸம்பந்தஞ்சொல்லி,  7. நாரப்பதத்தாலே – ஶரீரஶரீரி […]

நவரத்நமாலை

பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த நவரத்நமாலை ஶரணாகதனானவன் -1. தன்னையும், 2. தனக்கு விரோதியான தேஹத்தையும், 3. தேஹத்தைப் பற்றிவரும் பந்துக்களையும், 4. ஸம் ஸாரிகளையும், 5. தேவதாந்தரங்களையும், 6. ஸ்ரீவைஷ்ணவர்களையும், 7, ஆசார்யனையும், 8. பிராட்டியையும், 8. ஈஶ்வரனையும் நினைத் திருக்கும்படி எங்ஙனேயென்னில் உடம்பில் வேறுபட்டு நித்யனாய், ஒருபடிப்பட்டு அணுவாய், ஜ்ஞாநத்தையும் ஆநந்தத்தையும் வடிவாகவுடையனாய், ஜ்ஞாநத்துக்கும் ஆநந்தத்துக்கும் இருப்பிடமாய், எம்பெருமானை யொழிய வேறொன்று நினைத்தல் சொல்லுதல் செய்யமாட்டாதே எம்பெருமானுக்கேயுரியனாய், தன் காரியத்துக்குத் தான் கடவனன் றிக்கே அவனையே பலமாகவுடையனாயிருக்குமென்று தன்னை […]

ஸம்ஸாரஸாம்ராஜ்யம்

பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த ஸம்ஸாரஸாம்ராஜ்யம் ( ஸாரார்த்த சதுஷ்டயமென்கிற ரஹஸ்யத்தை (18) ரஹஸ்யத்தில் ஒன்றாகக் கொண்டிருக்கிறார்கள் சிலர். அது பொருந்தாது. எங்களாழ்வான் அருளிச்செய்ததாக வார்த்தாமாலையில் அது உள்ளது. ) (நாச் திரு 13.10) “துன்பக்கடலாய்” (திருவாய் 10.6.1) “இருள்தருமா” ஞாலமான ஸம்ஸாரத்துக்கு உள்வாயிலே பஞ்சபூதங்களாலே சமைந்து, 1.”நவத்வாரபுரே” என்கிறபடியே–(பெரிய திரு 1.6.9) ஒன்பது வாசலான படைவீட்டுக்கு உள்வாயிலே (திருவாய் 3.2.9) “கொடு வினைத்தூறு” என்பதொரு தூறாய், புக வழிதெரியுமித்தனை யொழியப் புறப்பட வழி தெரியாதிருப்பதொரு காட்டினுள்ளே, அநந்தக்லேஶபாஜநமான மரத்தையிட்டு, அவித்யையென்கிற […]

ஸாரஸங்க்ரஹம்

பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த ஸாரஸங்க்ரஹம் அகிலஜகத்திதாநுஶாஸநபரமான வேதத்திலும், வேதோபப்ரும்ஹ ணார்த்தமாக ப்ரவ்ருத்தங்களான ஸ்ம்ருதீதிஹாஸ புராணாதி, ஸமஸ்தஶாஸ்த்ரங்களிலும் ப்ரஸித்தமாய், ஸர்வேஶ்வரனுடைய ஸர்வஸ்வம்மாய், நம் ஆசார்யர்களுக்கு ஆபத்தநமாயிருந்துள்ள அர்த்தத்வயத்தையும் பிரதிபாதிக்கையாலே – த்வயமென்று திரு நாமத்தையுடைத்தாயிருந்துள்ள வாக்யத்வயம், பத்து அர்த்தத்தை ப்ரதிபாதிக்கிறது. அதாகிறது -1. ஶ்ரீய:பதித்வமும், 2. நாராயணத்வமும், 3. நாராயண னுடைய ஸர்வலோகஶரண்யமான சரணாரவிந்தயுகளமும்,  4.அதினுடைய ப்ராபகத்வமும், 5. தத்கோசரமாய் சேதநகதமாயிருந் துள்ள ப்ரார்த்தநாகர்ப்பவிஸ்ரம்பமும், 6. லக்ஷ்மீ தத்வல்லபர்க ளுடைய நிகிலாத்ம நித்யகைங்கர்ய ப்ரதாநார்த்தமான நித்ய ஸம்பந்தமும், 7. கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியான […]

ப்ரபந்நபரித்ராணம்

பிள்ளைலோகாசார்யர் அருளிச்செய்த ப்ரபந்நபரித்ராணம் முமுக்ஷவாய், மோக்ஷார்த்தமாக ஸர்வேஶ்வரனைப் பற்றியிருக்கு மவனுக்கு அநந்யகதித்வமும், ஆகிஞ்சந்யமும் வேணும். அநந்ய கதித்வமாவது – (திருவாய் 5-8-8) “களைவாய் துன்பங்களையாதொழி வாய் களைகண்மற்றிலேன்” என்கிறபடியே ஸர்வேஶ்வரனை யொழிய வேறெரு ரக்ஷகரில்லை என்றிருக்கை. ப்ராதாக்கள், புத்ரர்கள், மாதாபிதாக்கள், ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமானவர்கள் ரக்ஷகராகக் குறையென்னென்னில்–ப்ராதாக்கள் ரக்ஷகரல்லர் என்னு மிடம் வாலிபக்கலிலும், ராவணன் பக்கலிலும் காணலாம். புத்ரர்கள் ரக்ஷகரல்லர் என்னுமிடம், ருத்ரன் பக்கலிலும், கம்ஸன் பக்கலிலும் காணலாம். மாதாபிதாக்கள் ரக்ஷகரல்லர் என்னுமிடம், கைகேயி பக்கலிலும், ஹிரண்யன் பக்கலிலும் […]

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.