6000 Padi Centum 01

ஸ்ரீ:

ப்ரபந்நஜந கூடஸ்த2ரான நம்மாழ்வார் அருளிச்செய்த

திருவாய்மொழி

பரமகாருணிகரான திருக்குருகைப் பிரான் பிள்ளான் அருளிச்செய்த

ஆறாயிரப்படி வ்யாக்2யாநம்

 

முதல் திருவாய்மொழி
உயர்வற: ப்ரவேஶம்

v  v  v

முதல் பாட்டு

*உயர்வற வுயர் நலம் உடையவன் யவனவன்*
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்*
அயர்வறு மமரர்கள் அதிபதி யவனவன்*
துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே.

அவ:- (உயர்வறவுயர்னலம்) அப்ராக்ருதஸ்வாஸாதா4ரண தி3வ்ய ரூப பூ4ஷணாயுத4மஹிஷீ பரிஜந ஸ்தா2ந விஶிஷ்டனாய். நிகி2ல ஜக3து33யவிப4வாதி3 லீலனாயிருந்த பரமபுருஷனை, உள்ளபடியே ஆழ்வார்தாம் தம்முடைய திருவுள்ளத்தாலே அநுப4வித்து அவ்வநுப4வ ஜநிதமான நிரவதி4க ப்ரீதியாலே அவனை அநுப4வித்தபடியே பேசுகிறார்.

வ்யா:- அஶேஷ தோ3ஷப்ரத்யநீகமாய் 1. ‘’ते ये शतं’’ (தே யே ஶதம்) இத்யநுகரமத்தினாலே நிரதிஶயத3ஶாஶிரஸ்கமாக அப்4யஸ்யமாநமாயிருந்த ஆநந்தா3த்3யஸ்ங்க்யேய கல்யாணகு3ணமஹோத3தி4யாய், இந்த ஆநந்தா3தி3 கல்யாணகு3ணங்களை உடையனான தான், மேலே பொன்னுமாய் நாறினாப்போலே நிர்ஹேதுகமாக எனக்குத் தந்திறத்தில் அஜ்ஞாந க3ந்த4மில்லாதொருபடி தன்னை உள்ளபடி அறிவித்துத் தன் திருவடிகளிலே நிரவதி4க ப4க்தியை உண்டாக்கின இம்மஹாகு3ணத்தை உடையனாய்.  இந்தக் கல்யாணகு3ணங்களை உடையனான தன்னை – ஸ்வபா4வத ஏவ நிரஸ்தஸமஸ்த தோ3ஷராய், அஸ்க2லிதஜ்ஞாநராய் இருந்துள்ள ஶேஷஶேஷாஶந வைநதேய ப்ரப்4ருத்யஸங்க்2யேய தி3வ்ய புருஷர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிற பரமௌதா3ர்யத்தை உடையனாயிருந்த எம்பெருமாருடைய ஆஶ்ரித ஜந ஸமஸ்த து3:க்கா2வ்நோத3ந ஸ்வபா4வமான திருவடி மலர்களிலே ஸர்வதே3ஶ ஸர்வகால ஸர்வாவஸ்தோ2சித ஸ்ர்வஶேஷ வ்ருத்தியையும்பண்ணி உஜ்ஜீவி-என்று தம்முடைய திருவுள்ளத்தைக் குறித்து அருளிச்செய்கிறார்

இரண்டாம் பாட்டு

மனனகமலமற மலர் மிசையெழுதரும்*
மனனுணர்வளவிலன் பொறியுணர் வவையிலன்*
இனனுணர்முழுநலம் எதிர்நிகழ்கழிவினும்*
இனனிலன் எனனுயிர் மிகுநரையிலனே.

அவ:- (மனனகம்) இந்த கு3ணங்களுக்கு ஆஶ்ரயமான தி3வ்யாத்ம ஸ்வரூபத்தினுடைய ஹேயப்ரத்யநீகதயா கல்யாணைக தாநதயா உள்ள விஸஜாதீயத்வம் சொல்லுகிறது.

வ்யா:- பா3ஹ்யேந்த்3ரிய ஜந்ய ஜ்ஞாநவிஷயமான அசேதநத்திற் காட்டில் யாதொருபடி விலக்ஷணனாயிருக்கும். அப்படியே யோகா3ப்4யாஸ பரிஶுத்3தா4ந்த:கரண ஜந்யஜ்ஞாநைக படியாலும் ஒப்பில்லாதானாய். ஸமாப்4யதி4கரஹிதனாய், பரிபூர்ண ஜ்ஞாநாநந்த3 ஸ்வரூபனாய், எனக்கு தா4ரகனுமாயிருந்த எம்பெருமானுடைய துயரறுசுடரடியைத் தொழுதெழு என் மனனே என்கிறார்.

மூன்றாம் பாட்டு

இலனது உடையனிது எனநினைவரியவன்*
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்*
புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்த* அந்
நலனுடை யொருவனை நணுகினம் நாமே.

அவ:- (இலனது) இப்படி ஸ்வேதர ஸமஸ்த வஸ்து விலக்ஷண ஸ்வரூபகு3ணவிபூ4திகனான எம்பெருமானுடைய ஜக3தை3ஶ்வர்யம் சொல்லுகிறது.

வ்யா:- ப்ருதி2வ்யந்தரிக்ஷாதி3 ஸகலலோகவர்த்தியான சேதநா சேதநாத்மக ஸமஸ்த வஸ்துக்களுக்கும் ஶேஷியாய். ஸர்வஜக3தா3த்மபூ4தனாய், தத்33த தோ3ஷைரஸம்  ஸ்ப்ருஷ்ட னாய், ஸ்வஶரீரபூ4த ஜக3ந்நியமநரூபைஶ்வர்யத்தை உடையனாய், ஸ்வேதரஸமஸ்த விஸஜாதீயனுமாயிருந்த எம்பெருமானை நாம் பெற்றோம்; அவன் துயரறு சுடரடி தொழுதெழென் மனனே என்கிறார்.

நான்காம் பாட்டு

நாமவ னிவனுவன் அவளிவ ளுவளெவள்*
தாமவ ரிவருவர் அதுவிது வுதுவெது*
வீமவை யிவையுவை அவைநலந் தீங்கவை*
ஆமவை யாயவை ஆய்நின்ற அவரே

அவ:- (நாமவன்) *இனி இத்திருவாய்மொழிக்குறையும் இப்பாட்டை விஸ்தரிக்கிறது.

வ்யா:-விவித4நிர்தேஶங்களாலே நிர்தி3ஶ்யமாந ஸமஸ்தவஸ்துக்களினுடைய ஸ்வரூபம் ப43வத3தீ4நமென்று சொல்லுகிறது.

ஐந்தாம் பாட்டு

அவரவர் தமதமது அறிவறி வகைவகை*
அவரவர் இறையவர் எனவடி யடைவர்கள்*
அவரவ ரிறையவர் குறைவில ரிறையவர்*
அவரவர் விதிவழி அடையநின் றனரே

அவ:-கர்மங்களுக்கு ஆராத்4ய ஸ்வரூபம் ப43வத3தீ4நமென்று சொல்லுகிறது.

வ்யா:- (அவரவர்) ஸ்வர்க்கா3தி3 ஸாத4நபூ4த ஜ்யோதிஷ்டோமாதி3 கர்ம நிஷ்ட2ரான அவ்வவ புருஷர்கள் தந்தாமுடைய ஜ்ஞாநாநு கு3ணமாக அவ்வவ இந்த்3ராதி3களைத் தந்தாமுடைய        கர்மங்களு க்கு ஆராத்4யராகவும், ஸ்வாபி4லஷித ப2லப்ரத3ராகவும் அநுஸந்தி4த்துக்கொண்டு, அந்தக் கர்மங்களாலே ஆஶ்ரயிப் பார்கள்.  ஆஶ்ரயிக்கப்பட்ட அவ்வவ இந்த்3ராதி3தே3வதைகளும், தத்ஸமாராத4காபி4லஷித ப2லப்ரதா3நத்திலே குறையுடையரு மல்லர்; எத்தாலே என்னில்:- ஶாஸ்த்ரோக்த  மார்க்க3த்தாலே அந்தந்தப் புருஷர்கள் இந்த்3ராதி3களை ஆஶ்ரயித்து ஸ்வாய்4லஷித ப2லங்களைப் பெறும்படி பரமபுருஷன்தானே அந்த இந்த்3ராதி3 தே3வதைகளுக்கு அந்தராத்மதயா நின்று ஸகல கர்மப2ல ப்ரத3னாய் ஸர்வகர்ம ஸமாராத்4யனாயிருக்கையாலே.

இவ்வர்த்த2த்தில் ப்ரமாணமென்னென்னில்: 1.  ‘’इष्टापूर्तं बहुधा जातं जायमानं विश्वं बिभर्ति भुवनस्य नाभि:’’  (இஷ்டாபூர்த்தம் ப3ஹுதா4ஜாதம் ஜாயமாநம் விஶ்வம் பி34ர்த்தி பு4வநஸ்ய நாபி:4)  2. ‘’चतुर्होतारो यत्र संपदं गच्छन्ति देवै:’’  (சதுர்ஹோதாரோ யத்ர ஸம்பத3ம் க3ச்ச2ந்தி தேவை:) 3. यो यो यां यां तनुं भक्तश्श्रद्धयार्चितुमिच्छति’’ (யோ யோ யாம் யாம் தநும் ப4த்த ஶ்ஶ்ரத்34யார்ச்சிதுமிச்ச2தி)  4. (अहं हि सर्वयज्ञानां भोक्ता च प्रभुरेव च’’  (அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போ4க்தா ச ப்ரபு4ரேவ ச). 5.  भोक्तारं यज्ञतपसाम्’’ (போ4க்தாரம் யஜ்ஞதபஸாம்)  6. ‘’ये यजन्ति पित्रुन् देवान्’’ (யே யஜந்தி பித்ரூந் தே3வாந்) என்று தொடக்கமாயுள்ள ஶ்ருதி ஸ்ம்ருத் யாதி3கள்.  ஆக இப்பாட்டாலே சொல்லிற்றாயிற்றே தென்னில், எம்பெருமான், ஸர்வதே3வதாந்தராத்மதயா ஸர்வகர்ம ஸமாராத்4ய னாய் ஸகல ப2லப்ரத3னாயிருக்கையாலே ஜக3த்3ரக்ஷணமும் தத3தீ4நம் என்கிறது.

ஆறாம் பாட்டு

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்*
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்*
என்றுமொ ரியல்வினர் எனநினை வரியவர்*
என்றுமொ ரியல்வொடு நின்றவெம் திடரே

வ்யா:– (நின்றனர்) சேதநாதநாத்மக  ஸமஸ்தவஸ்துக்களினுடைய ஸமஸ்த ப்ரவ்ருத்தி  நிவ்ர்த்திகளும் பரமபுருஷ ஸங்கல்பாதீ4ந மென்று சொல்லுகிறது.

ஏழாம் பாட்டு

திடவிசும் பெரிவளி நீர்நிலம் இவைமிசை*
படர்பொருள் முழுவது மாய் அவை யவைதொறும்*
உடன்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்*
சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே

அவ:- (திடவிசும்பு) கீழ்மூன்று பாட்டாலும் ஜக3த்தினுடைய ஸ்வரூபஸ்தி2தி ப்ரவ்ருத்திகள் ப43வத3தீ4நம் என்னுமிடத்தை ஸாமாநாதி4கரண்யத்தாலே சொல்லிற்று;  இனி இந்த ஸாமாநாதி4 கரண்யமானது ஜக3தீஶ்வரயோ: ஶரீராத்மத்வ நிப3ந்த4நமென்று சொல்லுகிறது.

வ்யா:- இந்த ஶரீரத்தை இவ்வாத்மா நியந்த்ருதயா  வ்யாபித்திருந்தாற்போலே எம்பெருமானும், அவா3தி4த ப்ரமான ஸித்34மான ப்ருதி2வ்யாதி3 பூ4தபஞ்சமங்களையும் ததா3ரப்34ங்க ளான ஸமஸ்தவஸ்துக்களையும் நியந்த்ருதயா வ்யாபித்திருக்கும்.  இப்படி கார்யகாரணோப4யாவ ஸ்தா2சித்3 வஸ்துவிற் காட்டிலும் ப3த்34 முக்த நித்யஸித்3த த்ரிவித4 சேதநிற் காட்டிலும் விலக்ஷண

ஜ்ஞாநாந்தா3மல ஸ்வரூபனாய், ஹேயப்ரத்யநீக கல்யாணைக தாநாபரிமிதகு3ண விபூ4திகனாய், அகி2லபு4வநநிர்மாண  த்ராண ஸம்ஹரணாதி3 லீலாவிநோத3னாய், ஸர்வஜக3தா3த்மாவாய், ஸர்வஜக3ச்ச2ரீரனாய், ஸ்வத ஏவ அகர்மவஶ்யனாகையாலே ஸ்வஶரீரபூ4தசேதநாசேதநாத்மக ஸமஸ்தவஸ்துக3த ஸுக2து3:க்க2 விகாராதி3 ஸர்வதோ3ஷைரஸம்ஸ்ப்ருஷ்டனாய் இருந்த பரம புருஷன் – 1. ‘’सत्यंज्ञानमनन्तं ब्रह्म’’ (ஸத்யம் ஜ்ஞாநமந்தம் ப்3ரஹ்ம)  2. ‘’आनन्दो ब्रह्म’’ (ஆநந்தோ3 ப்3ரஹ்ம) 3. ‘’यस्सर्वज्ञस्सर्ववित्’’ (யஸ்ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித்) 4. ‘’परास्य शक्तिर्विविधैव श्रूयते  स्वाभाविकी ज्ञानबलक्रिया च’’ (பராஸ்ய ஶக்திர் விவிதை4வ ஶ்ரூயதே ஸ்வாபா4விகீ ஜ்ஞாநப3ல க்ரியா ச)  5. ‘’मनोमय: प्राणशरीरो भारूपस्सत्यसन्कल्प: आकाशात्मा सर्वकर्मा सर्वकामस्सर्वगन्धस्सर्वरसस्सर्वमिदमभ्यात्तोSवाक्यनादर:’’  (மநோமய: ப்ராண ஶரீரோ பா4ரூபஸ்ஸத்யஸங்கல்ப: ஆகாஶாத்மா ஸர்வகர்மா ஸர்வகாமஸ் ஸர்வக3ந்த4ஸ் ஸர்வரஸஸ் ஸர்வமித3மப்4யாத் தோSவாக்யநாத3ர:) 6. ‘’तस्य नाम महध्यश:’’ (தஸ்ய நாம மஹத்3யஶ:) 7. ‘’अ‍थ परा यया तदक्षरमधिगम्यते यत्तदद्रेश्यमग्राह्यमगोत्र मवर्णमचक्षुश्श्रोत्रं तदपाणिपादम् नित्यं विभुं सर्वगतं सुसूक्ष्मं  तदव्ययं यद्भूतयोनिं परिपश्यन्ति धीरा: ‘’  (அத2 பராயயா தத3க்ஷரமதி43ம்யதே யத்தத3த்3ரேஶ்யமக்3ராஹ்யமகோ3த்ர மவர்ணமசக்ஷுஶ்ஶ்ரோத்ரம் தத3பாணிபாத3ம் | நித்யம் விபு4ம் ஸர்வக3தம் ஸுஸூக்ஷ்மம் தத3வ்யயம் யத்3பூ4தயோநிம் பரிபஶ்யந்தி தீ4ரா:)   8. ‘’अपहतपाप्मा विजरो विम्रुत्युर्विशोको विजिघत्सोSपिपास स्सत्यकामस्सत्यसन्कल्प: ‘’  (அபஹதபாப்மா விஜரோ விம்ருத்யுர் விஶோகோ விஜிக4த்ஸோS-பிபாஸஸ் ஸத்யகாமஸ் ஸ்த்ய  ஸங்கல்ப:)  9. ‘’य एषोSन्तरादित्ये हिरण्मय: पुरुषो द्रुश्यते हिरण्यश्मश्रुर्हिरण्यकेश आप्रणखात् सर्व एव सुवर्ण: | तस्य यथा कप्यासं पुण्डरीकमेवमक्षिणी’’  (ய ஏஷோSந் தராதி3த்யே ஹிரண்மய: புருஷோ த்3ருஶ்யதே ஹிரண்யஶ்மஶ்ருர் ஹிரணய கேஶ ஆப்ரணகா2த் ஸ்ர்வஏவ ஸுவர்ண: | தஸ்ய யதா2 கப்யாஸம் புண்ட3ரீகமேவ மக்ஷிணீ)  10. ‘’सर्व निमीषा ज्ञिरे विध्युत: पुरुषादधि’’ (ஸர்வ நிமேஷா ஜஜ்ஞிரே வித்3யுத: புருஷாத3தி4)  11. ‘’आदित्यवर्णं तमस: परस्ताथ्’’  (ஆதி3த்ய வர்ணம் தமஸ: பரஸ்தாத்) 12. ‘’आदित्यवर्णं तमसस्तु पारे ‘’ (ஆதி3த்ய வர்ணம் தமஸஸ்து பாரே)  13. ‘’नीलतोयदमध्यस्थ, विध्युल्लेखेव भास्वरा’’ (நீலதோயத3மத்4யஸ்தா2 வித்3யுல் லேகே2வ பா4ஸ்வரா)  1. ‘’महारजनं वास:’’ (மஹாரஜநம் வாஸ:) 2.  ‘’ह्रीश्च ते लक्ष्मीश्च पत्न्यौ’’ (ஹ்ரீஶ்ச தே லக்ஷ்மீ ஶ்ச பத்ந்யௌ)  3. ‘’अस्येशाना जगतो विष्णुपत्नी’’ (அஸ்யேஶாநா ஜக3தோ விஷ்ணுபத்நீ)  4. ‘’ईश्वरीं सर्वभूतानां त्वामिहोपह्वये  श्रियम्’’ (ஈஶ்வரீம் ஸர்வபூ4தாநாம் த்வாமிஹோபஹ்வயே ஶ்ரியம்) 5. ‘’यत्र पूर्वं साध्यास्सन्ति देवा: ‘’ (யத்ர பூர்வே ஸாத்4யாஸ் ஸந்தி தே3வா:)  6. ‘’यत्रर्षय: प्रथमजा ये पुराणा:’’ (யத்ரர்ஷய: ப்ரத2மஜா யே புராணா:) 7. ‘’तद्व्पिप्रासो विपन्यवो जाग्रवांश: समिन्धते विष्णोर्यत्परमं पदम्’’ (தத்3விப்ராஸோ விபந்யவோ ஜாக்3ருவாம்ஸஸ் ஸமிந்த4தே விஷ்ணோர்யத் பரமம் பத3ம்) 8. ‘’तद्विष्णो: परमं पदं सदा पश्यन्ति सूरय:’’ (தத்3விஷ்ணோ: பரமம் பத3ம் ஸதா3 பஶ்யந்தி ஸூரய:) 9. ‘’यो वेद निहितं गुहायां परमे व्योमन्’’  (யோ வேத3 நிஹிதம் கு3ஹாயாம் பரமே வ்யோமந்) 10. ‘’यो अस्याध्यक्ष: परमे व्योमन्’’  (யோ அஸ்யாத்4யக்ஷ: பரமே வ்யோமந்) 11. ‘’प्रधानक्षेत्रज्ञपतेर्गुणेश:’’ (ப்ரதா4ந க்ஷேத்ரஜ்ஞபதிர் கு3ணேஶ:) 12. ‘’क्षरं प्रधानमृताक्षरं हर: क्षरात्मानावीशते  देव एक:’’ (க்ஷரம் ப்ரதா4நம் அம்ருதாக்ஷரம் ஹர: க்ஷராத்மாநாவீஶதே தே3வ ஏக:)   13. ‘’स कारणं करणाधिपाधिप:’’  (ஸ காரணம் கரணாதி4பாதி4ப:) 14. द्वा सुपर्णा सयुजा सखाया समानं वृक्षं परिषस्वजाते तयोरन्य: पिप्पलं स्वाद्वत्ति अनश्नन्नन्यो अभिचाकशीति ‘’ (த்3வா ஸுபர்ணா ஸயுஜா ஸகா2யா ஸமாநம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே | தயோரந்ய: பிப்பலம் ஸ்வாத்3வத்தி அநஶ்நந்நந்யோ அபி4சாகஶீதி) 15. ‘’समाने वृक्षे पुरुषो निमग्नो अनीशया शोचति मुह्यमान:| जुष्टं यदा पश्यत्यन्यमीशमस्य महिमानमिति वीतशोक:’’  (ஸமாநே வ்ருக்ஷே புருஷோ நிமக்3நோ அநீஶயா ஶோசதி முஹ்யமாந: | ஜுஷ்டம் யதா3 ஶ்யத்யந்யமீஶமஸ்ய மஹிமாநமதி வீதஶோக:)  16. पृथगात्मानं प्रेरितारञ्च मत्वा’’ (ப்ருத2கா3ட்மாநம் ப்ரேரிதாரஞ்ச மத்வா). 17. भोक्ता भोग्यं प्रेरितारञ्च मत्वा’’(போ4க்தா போ4க்3யம் ப்ரேரிதாரஞ்ச மத்வா) 18. ‘’एतमानन्दमयमात्मानमुपसङ्क्रम्य’’ (ஏதமாநந்த3மயமாத்மாந்முப ஸங்க்ரம்ய) 19. ‘’रसं ह्येवायं लब्ध्वाSSनन्दी भवति’’ (ரஸம் ஹ்யேவாயம் லப்3த்4வாSSநந்தி34வதி) 20. ‘’तदा विद्वान्नामरूपाद्विमुक्त: परात्परं पुरुषमुपैति दिव्यम्’’  (ததா3 வித்3வாந் நாமரூபாத்3 விமுக்த: பராத்பரம் புருஷமுபைதி தி3வ்யம்) 21. ‘’तदा विद्वान् पुण्यपापे विधूय निरञ्जन: परमं साम्यमुपैति’’ (ததா3 வித்3வாந் புண்யபாபே விதூ4ய நிரஞ்ஜந: பரமம் ஸாம்ய முபைதி) 22. ‘’सोSश्नुते सर्वान् कामान् सह ब्रह्मणा विपश्चितेति’’  (ஸோSஶ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்3ரஹ்மணா விபஶ்சிதேதி) 23. ‘’य: प्रुथिव्यां तिष्ठन् पुथिव्या अन्तरो यं पुथिवी न वेद यस्य पुथिवी शरीरम् – य आत्मनि तिष्ठन्नात्मनोSन्तरो यमात्मा न वेद यस्यात्मा शरीरं य आत्मानमन्तरो यमयति स त आत्मा अन्तर्याम्यमृत:’’ (ய: ப்ருதி2வ்யாம் திஷ்ட2ந் ப்ருதி2வ்யா அந்தரோயம் ப்ருதி3வீ ந வேத3 யஸ்ய ப்ருதி2வீ  ஶரீரம் – ய ஆத்மநி திஷ்ட2ந்நாத்மநோSந்தரோ யமாத்மா ந வேத3 யஸ்யாத்மா ஶரீரம் ய ஆத்மாநமந்தரோ யமயதி ஸ த ஆத்மா அந்தர்யாம்யம்ருத:) 24. ‘’एष सर्वभूतान्तरात्माSपहतपाप्मा दिव्यो एको नारायण:’’ (ஏஷ ஸர்வபூ4தாந்தராத்மாSபஹதபாப்மா தி3வ்யோ தே3வ ஏகோ நாராயண:) 25. ‘’अन्त: प्रविष्टश्शास्ता जनानां सर्वात्मा’’ (அந்த:ப்ரவிஷ்டஶ்ஶாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா) 26. ‘’सदेव सोम्येदमग्र आसीत्’’ (ஸதே3வ ஸோம்யேத3மக்3ர ஆஶீத்) 27. ‘’यतो वा इमानि भूतानि जायन्ते’’ (யதோ வா இமாநி பூ4தாநி ஜாயந்தே).

1.‘’ब्रह्म वा इदमेक एवाग्र आसीत्’’ (ப்ரஹ்ம வா இத3மேக ஏவாக்3ர ஆஶீத்) 2.  ‘’सर्वाणि हवा इमानि भूतान्याकाशादेव समुत्पद्यन्ते’’  (ஸர்வாணி ஹவா இமாநி பூ4தாந்யாகாஶாதே3வ ஸமுத்பத்3யந்தே) 3. ‘’आत्मा वा इदमेक एवाग्र आसीत्’’ (ஆத்மா வா இத3மேக ஏவாக்3ர ஆஶீத்)  4. ‘’एको हवै नारायण आसीत्, न ब्रह्मा नेशानो नेमे द्यावापृथिवी न नक्षत्राणि’’ (ஏகோ ஹவை நாராயண ஆஶீத், ந ப்3ரஹ்மா நேஶாநோ நேமே த்3யாவாப்ரொதி2வீ ந நக்ஷத்ராணி)  5. ‘’न तस्येशे कश्चन’’ (ந தஸ்யேஶே கஶ்சந) 6. ‘’पतिं विश्वस्यात्मेश्वरम्’’ (பதிம் விஶ்வஸ்யாத்மேஶ்வரம்) 7. ‘’यच्च किञ्चिज्जगन्यस्मिन् द्दश्यते श्रूयतेSपि वा | अन्तर्बहिश्च तत्सर्वं व्याप्य नारायण स्थित:’’  (யக்க கிஞ்சிஜ் ஜக3த்யஸ்மிந் த்3ருஶ்தே ஶ்ரூயடேSபி வா | அந்தர் ப3ஹிஶ்ச தத் ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்தி2த:) 8. ‘’स् ब्रह्मा स शिव: सेन्द्र: सोक्षर: परम: स्वराट्’’  (ஸ ப்3ரஹ்மா ஸ ஶிவ: ஸேந்த்3ர: ஸோக்ஷர: பரம:  ஸ்வராட்) இத்யாதி3யாய், 9. ‘’अविकाराय शुद्धाय’’ (அவிகாராய ஶுத்3தா4ய) 10. ‘’शुद्धे माहाविभूत्याख्ये’’ (ஶுத்3தே4 மஹாவிபூ4த்யாக்2யே) 11. ‘’स सर्वभूथप्रकृतिं विकारान्’’ (ஸ ஸர்வபூ4தப்ரக்ருதிம் விகாராந்) 12. ‘’रुक्माभं स्वप्नधीगम्यम्’’ (ருக்மாப4ம் ஸ்வப்நதீ43ம்யம்)  13. ‘’समस्ता: शक्तयश्चैता नॄप यत्न प्रतिष्ठिता: | तद्विश्वरूपवैरूप्यं रूपमन्यद्धरेर्महत् ||’’ (ஸமஸ்தா: ஶக்த யஶ்சைதா ந்ருப யத்ர ப்ரதிஷ்டி2தா: | தத்3விஶ்வரூபவைரூப்யம் ரூபமந்யத்34 ரேர்மஹத்||)  14. ‘’भूषणास्त्रस्वरूपस्थम्’’ (பூ4ஷணாஸ்த்ரஸ்வரூபஸ்த2ம்) 15. ‘’ भूतसङ्घ् संस्थानो देहोSस्य परमात्मन:’’ (ந பூ4தஸங்க4 ஸம்ஸ்தா2நோ தே3ஹோஸ்ய பரமாத்மந:) 16. ‘’तमस: परमो धाता शङ्खचक्रगदाधर: | श्रीवत्सवक्षा नित्यश्रीरजय्यश्शाश्वतो ध्रुव: ||’’ (தமஸ: பரமோ தா4தா ஶங்க2சக்ர க3தா34ர: | ஸ்ரீவத்ஸவக்ஷா நித்யஸ்ரீரஜய்ய: ஶாஶ்வதோ த்4ருவ: ||) 17. ‘’नित्यैवैषा जगन्माता विष्णो: श्रीरनपायिनी’’ (நித்யைவைஷா ஜக3ந்மாதா விஷ்ணோ: ஸ்ரீர்நபாயிநீ) 18. ‘’तेषां तत्परमं स्थानं यद्वै पश्यन्ति सूरय: (தேஷாம் தத் பரமம் ஸ்தா2நம் யத்3வை பஶ்யந்தி ஸூரய:) 19. ‘’दिव्यं स्थानमजरञ्चाप्रमेयं दुर्विज्ञेयं चाजमैर्गम्यमाद्यम्’’ (தி3வ்யம் ஸ்தா2நமஜரஞ் சாப்ரமேயம் து3ர்விஜ்ஞேயஞ்சாக3மைர்க3ம்யமாத்3யம்) 20. ‘’वैकुण्ठे तु परे लोके श्रिया सार्धे जगत्पति: | आस्ते विष्णुरचिन्त्यात्मा भक्तैर्भागवतैस्सह ||’’ (வைகுண்டே2 து பரே லோகே ஶ்ரியா ஸார்த4ம் ஜக3த்பதி:  | ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா ப4க்தைர்பா43வதைஸ் ஸஹ ||) 21. ‘’कला मुहूर्तादिमयश्च काल:’’ (கலாமுஹுர்த்தாதி3மயஶ்ச கால:) 22. ‘’कालं स पचते’’ (காலம் ஸ பசதே) 23. ‘’पू: प्राणिनस्सर्व एव गुहाशयस्य’’ (பூ: ப்ராணிந: ஸர்வ ஏவ கு3ஹாஶயஸ்ய) 24. ‘’सर्वं समाप्नोषि ततोSसि सर्व:’’ (ஸர்வம் ஸமாப் நோஷி ததோSஶி ஸர்வ:) 25.  ‘’तानि सर्वाणि तद्वपु:’’ (தாநி ஸர்வாணி தத்3வபு:) 26. ‘’तत्सर्वं वै हरेस्तनु:’’ (தத் ஸர்வம் வைஹரேஸ்தநு:) 27. ‘’स एव सर्वभूतात्मा विश्वरूपो यतोSव्यय:’’ (ஸ ஏவ ஸர்வபூ4தாத்மா விஶ்வரூபோ யதோSவ்யய:) 28. ‘’जगत्सर्वं शरीरं ते’’ (ஜக3த் ஸர்வம் ஶரீரம் தே) 29. ‘’जगद्वयापारवर्जं प्रकरणादसन्निहितत्वाच्च’’ (ஜக3த்3வ்யாபார வர்ஜம் ப்ரகரணாத3ஸன்னிஹிதத்வாச்ச) 30. ‘’भोगमात्रसाम्यलिङ्गाच्च’’ (போ43மாத்ரஸாம்யலிங்கா3ச்ச) 31. ‘’जगद्वायापरवर्जं समानो ज्योतिषा’’ (ஜக3த்3வ்யாபாரவர்ஜம் ஸமாநோ ஜ்யோதிஷா) 32. ‘’इदं ज्ञानमुपाश्रित्य मम साधर्म्यमागता: | सर्गोSपि नोपजायन्ते प्रलये व्यथन्ति ||’’ (இத3ம் ஜ்ஞாநமுபாஶ்ரித்ய மம ஸாத4ர்ம்யமாக3தா: | ஸர்க்கே3பி நோபஜாயந்தே ப்ரளயே ந வ்யத்2ந்தி ச ||)  1. ‘’विष्णोस्सकाशादुद्भूतम्’’  (விஷ்ணோஸ் ஸகாஶாது3த்3பூ4தம்) இத்யாதி3 ஸ்ம்ருதீதிஹாஸ புராணோபப்3ரும்ஹிதமாய், அபௌருஷேயமாகையாலே நிர்தோ3ஷமாய், அபா3தி4தப்ரமாண்யரூபதேஜ:ப்ரசுரமாயிருந்த ஶ்ருதிகளிலே உளனென்கிறார்.  ஆதலால் லோகாயத மாயாவாத3 பா4ஸ்கரீய யாத3வப்ரகாஶாதி3 வேத3விருத்34 ஸ்மயங்களெல்லாம் நிரஸ்தமாயின.

எட்டாம் பாட்டு

சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும்*
வரன்முத லாயவை முழுதுண்ட பரபரன்*
புரமொரு மூன்றெரித்து அமரர்க்கும் அறிவியந்து*
அரனய னெனஉல கழித்தமைத் துளனே

அவ:- (சுரரறிவரு நிலை) இப்படி ஶ்ருதிப்ரஸித்34னாகிற ஸர்வேஶ்வரனாகிறான் ப்3ரஹ்மாவாக அடுக்கும் ஜக3த்ஸ்ருஸ்டி க்ஷமனாகையாலே என்றாதல், ருத்3ரனாக அடுக்கும் ஸம்ஹாரக்ஷமனாகையாலே என்றாதல் சொல்லுகிற குத்3ருஷ்டிகளை நிராகரிக்கிறது.

 வ்யா:- எங்ஙனேயென்னில் 1. ‘’तस्मिन्नण्डेSभवद्ब्रह्मा सर्वलोकपितामह:’’ (தஸ்மிந்நண்டே3Sப4வத்3ப்3ரஹ்மா ஸர்வலோகபிதாமஹ:) 2. ‘’कल्पदावात्मनस्तुल्यं सुतं प्रध्यायत स्तत: | प्रादुरासीत्प्रभोरङ्के  कुमारो नील्लोहित: ||’’ (கல்பாதா3வாத்மநஸ்துல்யம் ஸுதம் ப்ரத4யாயதஸ்தத: | ப்ராது3 ராஶீத் ப்ரபோ4ரங்கே குமாரோ நீலலோஹித: ||)  3.‘’यस्य प्रसादादह मच्युतस्य भूता प्रजासॄष्टिकरोSन्त कारी |  क्रोधाच्च रुद्र: स्थितिहेतुभूतो यस्माच्च मध्ये पुरुष: परस्मात् ||’’ (யஸ்ய ப்ரஸாதா33ஹமஸ்யுதஸ்ய பூ4: ப்ரஜாஸ்ருஷ்டி   கரோSந்தகாரீ | க்ரோதா4ச்ச ருத்3: ஸ்தி2திஹேதுபூ4தோ யஸ்மாச்ச மத்4யே புருஷ: பரஸ்மாத்||) 4. ‘’एतो द्वौ विबुधश्रेष्ठौ प्रसादक्रोधजौस्मृतौ | तदादर्शित पन्थानौ सृष्टिसंहारकारकौ ||’’ (ஏதௌ த்3வௌ விபு34ஶ்ரேஷ்டௌ2 ப்ரஸாத3க்ரோத4ஜௌ ஸ்ம்ருதௌ | ததா33ர்ஶிதபந்தா2நௌ ஸ்ருஷ்டிஸம்ஹார காரகௌ||) 5. ‘’यं देवा मुनयो चाहं   शंकर: | जानन्ति परमेशस्य तद्विष्णो: परमं पदम् ||’’ (யம் ந தே3வா ந முநயோ ந சாSஹம் ந ச ஶங்கர: | ஜாநந்தி பரமேஶஸ்ய தத்3விஷ்ணோ: பரமம் பத3ம் ||) 6. ‘’अहं भवो भवन्तश्च सर्वे नारयणात्मकम्’’  (அஹம் ப4வோ ப4வந்தஶ்ச ஸர்வம் நாராயனாத்மகம்)  7. ‘’तवान्तरात्मा मम च ये चान्ये देहिसंज्ञिता:’’ (தவாந்தராத்மா மம ச யே சாந்யே தே3ஹிஸம்ஜ்ஞிதா:)   இத்யாதி3 வாக்யங்கள் – அண்ட3த்துக்குள்ளே ப்3ரஹ்மா பிறந்தா னென்றும், அந்த ப்3ரஹ்மாவின் பக்கலிலே ருத்3ரன் பிறந்தா னென்றும் சொல்லுகையாலே, அண்டா3ந்தர்க3தரான ப்3ரஹ்ம ருத்3ராதி3கள் அண்டா3த்33ஹிர்பூ4தமான ப்ரக்ருதி மஹத3ஹங் காராதி3 பதா3ர்த்த2ங்களை அறியமாட்டாமையாலும், அவற்றி னுடைய ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களைப் பண்ணமாட்டாமை யாலும், அவற்றினுடைய ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களை எம்பெருமான் பண்ணுகையாலும், 1. ‘’यो बह्माणं विदधाति पूर्वे’’ (யோ ப்3ரஹ்மாணம் வித3தா4தி பூர்வம்) என்றும்.  2. ‘’विष्णुरात्मा भगवतो भवस्यामिततेजस:’’  (விஷ்ணுராத்மா ப43வதோ ப4வஸ்யாமிததேஜஸ:) என்றும் இப்படி ப்ரமாணங்களாலே சதுன்முக2 ருத்3ராந்தர்பூ4தனாய்க்கொண்டு அமரஜநஜ்ஞாநப்ரதா2நமும் த்ரிபுரத3ஹநமும் பண்ணினாப்போலே அண்டா3ந்தர்க3தமான பதா3ர்த்த2ங்களினுடைய ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களையும் முன்பு சொன்ன ந்யாயத்தாலே சதுர்முக2 ருத்3ராந்தர்பூ4தனாய், அத ஏவ தத3வாசக ஶப்33வாச்யனாய்க் கொண்டு அவர்குளுக்கும் தெரியாதபடிநின்ற எம்பெருமாந்தானே செய்தருளுகையாலும் எம்பெருமானே ப்3ரஹ்மருத்3ராதி3களுக்கும் ஈஶ்வரன்என்கிறார்

ஒன்பதாம் பாட்டு

உளனெனில் உளன் அவனுருவம் இவ்வுருவுகள்*
உளனல னெனில் அவனருவம் இவ்வருவுகள்*
உளனென இலனென இவைகுண முடைமையில்*
உளனிரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே

அவ:- (உளனெனிலுளன்) இப்படி வேதா3வலம்பி3 குத்3ருஷ்டி களை நிராகரித்து, ‘’ப்ரமாணமுமில்லை, ப்ரமேயமுமில்லை; ஸர்வமும் ஶூந்யம், ஆகையாலே வேத3மும் வேத3வேத்3யனான ஈஶ்வரனும், அவனுடைய ஐஶ்வர்யமான ஜக3த்துமில்லை’’ என்கிற  ஶூந்யவாதி3யை நிராகரிக்கிறது.

வ்யா:- ஶூந்யவாதி3யான உன்னைக் கேட்போம்.  ஈஶ்வரனுடைய இல்லாமையை ஸாதி4க்கிற நீ, ஈஶ்வரன் உளனென்றோ இலனென்றோ ப்ரதிஜ்ஞை பண்ணுவது? இவை இரண்டு ப்ரகாரத் தாலும் நீ நினைக்கிற இல்லாமை ஸம்ப4வியாது.  எத்தாலே யென்னில்: லோகத்தில் பா4வாSபா4வ ஶப்33ங்களும் பா4வாSபா4வ ப்ரதீதிகளும், வித்3யமாந வஸ்துவினுடைய அவஸ்தா2விஶேஷ கோ3சரமாகக் காண்கையாலே.  ஆதலால் – ஈஶ்வரனுளனின்னில் அஸ்தித்வத4ர்மவிஶிஷ்டனாய் இருக்குமென்று சொல்லிற்றாய் வரும்.  இப்படி ஈஶ்வர வ்யதிரிக்த பதா3ர்த்த2ங்களையும்  உளவென்னில், இவையும் அஸ்தித்வத4ர்ம விஶிஷ்ங்களாய்க் கொண்டு உளவென்று சொல்லிற்றாய் வரும்.  தத்3வ்யதிரிக்த பதா3ர்த்த2ங்களை இல்லையென்னிலும் அவை நாஸ்தித்வத4ர்ம விஶிஷ்டங்களென்று சொல்லிற்றாய் வரும்.  அந்த அஸ்தி நாஸ்தி ரூபபதா3ர்த்த2ங்களும் அவனுக்கு ரூபமாயிருக்கும் – கீழ்ச்சொன்ன ப்ரமாணங்களாலே இப்படி அஸ்தித்வ நாஸ்தித்வங்களாகிற கு3ண்ங்களையுடையனென்று சொல்லுகையாலே – அஸ்தி யென்னிலும் உளன்; நாஸ்தியென்னிலும் உளன்;  உளனாமிடத்து ஸர்வாந்தராத்மாவாய்க்கொண்டு உளனென்கிறார். இப்படி ஶூந்யாவாதி3யை நிரஸித்தது.

பத்தாம் பாட்டு

பரந்ததண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்*
பரந்தஅண் டமிதென நிலவிசும் பொழிவற*
கரந்தசி லிடந்தொறும் இடந்திகழ் பொருள் தொறும்*
கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே

வ்யா:- (பரந்த) ஸமுத்3ரஜல பரமாணுக்களிலும் ப்ருதி2 வ்யந்தரிக்ஷாதி3 லோகாந்தர்வர்த்தியாய் அதிஸூக்ஷ்மமாயிருந்த அசித்3வஸ்துக்களிலும் வ்யாபித்து அவற்றினுள்ளே ப்ரகாஶிக்கிற சித்3வஸ்துக்களிலும், ஸ்தூ2லமான அண்ட3த்தில் வ்யாபித்தாப் போலே அநாயாஸத்தாலே அஸங்குசிதனாய், அந்யைரத்3ருஷ்டனாய்க்கொண்டு ஜக3த்ஸம்ஹர்த்தாவுமாய் ஸுத்3ருட4 ப்ரமாண ஸித்3த4நுமாயிருந்த எம்பெருமானுடைய துயரறுசுடரடி தொழுதெழென் மனனே என்கிறார்.

பதினொன்றாம் பாட்டு

*கரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை*
வரனவில் திறல்வலி அளிபொறை யாய்நின்ற*
பரனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல்*
நிரனிறை யாயிரத்து இவைபத்தும் வீடே

வ்யா:-  (கரவிசும்பு) லீலோபகரண  போ4கோ3ப கரணோப4யவித4 விபூ4திவிஶிஷ்டனான எம்பெருமானை ப்ரதிபாதி3க்கிறது இத்திருவாய்மொழி-என்கிற இப்பொருளை, ஔசித்யத்தாலே அவன் திருவடிகளை ப்ரதிபாதி3க்கிறது என்கிறார்.  இத்திருவாய்மொழியின் சொற்களின் அழகையும், ஸந்த3ர்ப்ப4த்தின் அழகையும், பொருளின் சீர்மையையும், இசையின் அழகையும், இச்சேர்த்திகளினுடைய நிரதிஶய ப்ரேம க3ர்ப்ப4த்வத்தையும், இவை A பொய்யில் பாடலாயிருக்கிற படியையும் பார்த்து, இப்படியாலே B தமிழர் இசைகாரர் பத்தர்பரவும்படி நிரதிஶயகல்யாணமாயிருப்பன எம்பெருமானுக்கு இப்பர்யந்தமாகவேணுமென்று தம்முடைய அபி4நிவேஶத்தாலே ஆயிரம் என்றருளிச்செய்கிறார்.

திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்

இரண்டாம் திருவாய்மொழி
வீடுமின்: ப்ரவேஶம்

v  v  v

அவதாரிகை    1-2

வீடுமின் அவதாரிகை

அவ:- (வீடுமின் முற்றவும்) இப்படி பரமபுருஷ யாதா2த்ம்யாநுப4வஜநித நிரவதி4க ப்ரீதியானது ப43வதே3கபோ43ராயிருப்பார் பலரோடே கூட ப43வத்3ஸ்வரூப ரூப கு3ண சேஷ்டித விப4வங் களைச் சொல்லியும் கேட்டும் அநுப4விக்கவேணுமென்னும் அபேக்ஷை யைப் பிறப்பிக்கையாலே, அந்த அபேக்ஷாநுகு3ணமாக அநுப4விக் கைக்கு இந்த லோகத்தில் ஆத்மாக்களில் ப43வதே3க போ43ரா யிருப்பாரில்லாமையாலே, ‘’இவர்களை ப43வதே3க போ43ராக்கிக் கொண்டாகிலும் அநுப4விக்கவேணும்’’ என்று இந்த ஆத்மாக் களைக் குறித்து ப43வதே3க போ43த்வோபாயமான ப4க்தியோக3 த்தை ப43வத்3 வ்யதிரிக்தவிஷய வைராக்3ய பூர்வகமாக உபதே3ஶிக்கிறார்.

முதல் பாட்டு

*வீடுமின் முற்றவும்*
வீடுசெய்துஉம்முயிர்
வீடுடை யானிடை*
வீடு செய்ம்மினே

வ்யா:-  ப43வத்3 வ்யதிரிக்த ஸர்வவிஷய ஸங்க3த்தையும் விட்டு, இவ்வாத்மாவை ஶேஷத்வேந ஸமர்ப்பியுங்கோள்: ஸமர்ப்பி க்குமிடத்தில் இத்தையுடையவன் பக்கலிலே ஸமர்ப்பியுங்கோள். ஸமர்ப்பணமாவது-இவ்வாத்மா அவனுக்கு ஶேஷமென்று ஸம்வதி3க்கை என்கிறார்.

இரண்டாம் பாட்டு

மின்னின் நிலையில*
மன்னுயி ராக்கைகள்*
என்னு மிடத்துஇறை
உன்னுமின் நீரே

வ்யா:-  (மின்னின்நிலை) சிரகாலவாஸிதமான விஷயங்களை விடமுடியுமோ? என்னில், இவ்வாத்ம ஸம்ப3ந்தி4யான ஶரீராதி3 ப்ராக்ருத விஷங்களினுடைய அஸ்தி2ரத்வாதி3 தோ3ஷங்களை நீங்களே ஆராயுந்து உண்ருங்கோள்; உணரவே எளிதாக விடலாம் என்கிறார்.

 

மூன்றாம் பாட்டு

நீர்நும தென்றிவை*
வேர்முதல் மாய்த்துஇறை
சேர்மின் உயிர்க்கு* அதன்
நேர்நிறை யில்லே

வ்யா:-  (நீர்) ஆத்மநாஶகரமான அஹங்கார மமகாரங்களை ஸவாஸநமாக விட்டு ஸர்வேஶ்வரனை ஆஶ்ரயியுங்கோள்;  இவ் வாத்மாவுக்கு அத்தோடொத்த சீரியதொன்றுமில்லை என்கிற

நான்காம் பாட்டு

இல்லதும் உள்ளதும்*
அல்லது அவனுரு*
எல்லையில் அந்நலம்*
புல்குபற் றற்றே

வ்யா:-  (இல்லதும்) த்யாஜ்யமாகச் சொல்லப்படுகிற ப்ராகுருத விஷயங்களிற் காட்டில் ஸமாஶ்ரயணீயமாகச் சொல்லப்படுகிற விஷயம் நன்றாயிருக்கிலன்றோ இத்தவிட்டு அத்தைப் பற்றலாவ தென்னில்; ஹேயப்ரதயநீகதயா கல்யாணைகதாநதயா இந்தச் சேதநாசேதநங்களிற் காட்டில் அத்யந்த விலக்ஷண ஸ்வரூபனாய் நிரவதி4ககல்யாணகு3ண விஶிஷ்டனாகையாலே நிரவதி4க போ4க்3ய பூ4தனாயாயிற்று அவனிருப்பது; ஆதலால் இந்த ஹேயமான விஷயங்களில் ஸங்க3த்தை விட்டு அவனைப் புல்கு என்கிறார்.

ஐந்தாம் பாட்டு

அற்றது பற்றெனில்*
உற்றது வீடுயிர்*
செற்றது மன்னுறில்*
அற்றிறை பற்றே

வ்யா:-  (அற்றது) விஷயத்தில் ஸங்க3த்தை விடுமளவில், ப்ரக்ருதிவிநிர்முக்தமாய் ஸுக3ரூபமாய் இருந்த ஆத்மா தோம்றும்; அதில் அகப்படாதே, ப43வச்சே2ஷதைகரஸமான உன்னுடைய ஸ்வரூபத்தைப்பெற்று நிலைநிற்கவேண்டியிருக்கில், முதலிலே விஷய ஸங்க3த்தை விடும்போதே எம்பெருமானைப்பற்றிவிடுவது என்கிறார்.

ஆறாம் பாட்டு

பற்றிலன் ஈசனும்*
முற்றவும் நின்றனன்*
பற்றிலை யாய்அவன்
முற்றி லடங்கே

வ்யா:-  (பற்றிலன்) எம்பெருமானை நாம் பற்றினால் அவன் நம்மை விஷயீகரிக்குமோ? அவன் ஸர்வேஶ்வரனல்லனோ? என்னில்; ஸர்வேஶ்வரனேயாகிலும் ஆஶ்ரிதர் எல்லார் பக்கலிலு மொக்க ஸ்நேஹ ஸ்வபா4வனாயிருக்கும்; ஆதலால், நீயும் அவன் பக்கலிலே ஸ்நேஹ ஸ்வபா4வனாய், அவனுடைய ஸர்வஶேஷ வ்ருத்தியிலும் புகு என்கிறார்.

ஏழாம் பாட்டு

அடங்கெழில் சம்பத்து*
அடங்கக்கண்டுஈசன்
அடங்கெழில் அஃதென்று*
அடங்குக உள்ளே

வ்யா:-  (அடங்கெழில்) ஸ்நேஹ ஸ்வபா4வனாயிருந்தானே யாகிலும் இந்த  லீலோபகரணமான ஜக3த்3 விபூ4தியையும், போ4கோ3பகரணமான அப்ராக்ருத மஹாவிபூ4தியையும் உடையனாயிருக்கிற இருப்பைக் கண்டால், சென்று அநுஸந்தி4க் கவே, கூசாதே சென்று அணுகலாம்; அப்படி அநுஸந்தி4த்துக் கொண்டு கூசாதே போய் அடிமை செய்யுங்கோள் என்கிறார்.

எட்டாம் பாட்டு

உள்ள முரைசெயல்*
உள்ளஇம் மூன்றையும்*
உள்ளிக் கெடுத்துஇறை
யுள்ளி லொடுங்கே

வ்யா:-  (உள்ளம்) என்ன உபகரணங்களைக்கொண்டு அடிமை செய்வதென்னில்: ஸம்பாதி3க்க வேண்டாதே.  பண்டே ஸம்பந்நமாயிருந்த வாங்மந:காயங்கள் மூன்றையும் – ப43வத் பரிசர்யா கரணார்த்த3மாகப் பரிகல்பிதமென்னுமித்தை அநுஸந்தி4த்து தத்3வ்யதிரிக்த விஷயங்களில் நின்றும் நிவர்த்திப்பித்து ப33வத்3விஷயமாக்குவது என்கிறார்.

ஒன்பதாம் பாட்டு

ஒடுங்க அவன்கண்*
ஒடுங்கலும் எல்லாம்*
விடும்பின்னும் ஆக்கை*
விடும்பொழு தெண்ணே

வ்யா:-  (ஒடுங்க) இப்படி அவன் பக்கலிலே கர்ணங்களை ஒடுங்கப்பண்ணவே. ப43வத்கைங்கர்ய ப்ரதிப3ந்த4கங்களெல் லாம் போம்.  பின்னையும் இவ்வர்த்தமாந ஶரீரம் போந்தனையும் பார்த்திரு.  அத்தனையே விளம்ப3முள்ளது என்கிறார்.

பத்தாம் பாட்டு

*எண்பெருக்கு அந்நலத்து*
ஒண்பொருள் ஈறில*
வண்புகழ் நாரணன்*
திண்கழல் சேரே

வ்யா:-  (எண்பெருக்கு) இப்படி ஸகல ஸ்மாஶ்ரயணீயனாகச் சொல்லப்பட்ட ஈஶ்வர்ந்தான் ஆரென்னில்; அஸங்க்3யேயராய், ஜ்ஞாநாநந்த3ஸ்வபா4வராயிருந்த ஸர்வாத்மாக்களையும், நித்யஸித்34 கல்யாணகு3ணங்களையும் உடையனாயிருந்த நாராயணன்.  அவனுடைய – ஆஶ்ரிதரை ஒருகாலும் கைவிடாதே ரக்ஷிக்கும் ஸ்வபா4வமான திருவடிகளை ஆஶ்ரயி என்கிறார்.

பதினொன்றாம் பாட்டு

*சேர்த்தடத்தென்குரு
கூர்ச்சட கோபன்சொல்*
சீர்த்தொடை யாயிரத்து*
ஓர்த்தஇப் பத்தே

 

வ்யா:-  (சேர்த்தடம்) ப43வத்3கு3ண ப்ரதிபாத3கமாயிருந்த இவ்வாயிரத்திலும் இத்திருவாய்மொழி எம்பெருமானை உணர்ந்து சொல்லிற்று.

திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்

மூன்றாம் திருவாய்மொழி
பத்துடையடியவர்: ப்ரவேஶம்

v  v  v

முதல் பாட்டு

*பத்துடை யடியவர்க் கெளியவன் பிறர்களுக் கரிய
வித்தகன்* மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்*
மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு*
எத்திறம் உரலினொடு இணைந்திருந் தேங்கிய எளிவே

வ்யா:- (பத்துடையடியவர்) ‘’ஏவம்வித4ப4க்தியும், இதர விஷய வைராக்3யமும் எம்பெருமானை சக்ஷுராதி3கரணங்களாலே அநுப4வித்தாலல்லது பிறவாது. தத்3ருஶாநுப4வந்தானும் – பா3ஹ்யேந்த்3ரியங்களுக்கும் யோகா3ப்4யாஸ பரிஶுத்34மான மநஸ்ஸுக்கும் கோ3சரனல்லனென்று ‘மனனகம்’ என்கிற பாட்டாலே சொல்லப்பட்ட எம்பெருமான் பக்கல் கூடாது; ஆதலால், இனி எம்பெருமானை இழந்துபோமத்தனை யாகாதோ!’’ என்று அவஸந்நரானவர்களைக் குறித்து. ‘’எம்பெருமானைக் காண வேணும் என்ற அபேக்ஷையுடையரா யிருப்பார்க்குக் காணலாம்படி எளியனாம்.  ப்ரதிகூலர்க்கு அவன் அரியனாம்.  அரியனாமிடத்து, ஆஶ்ரிதர்க்கு எளியனான இவ்வாகாரத்தாலே பிறர்களுக்கு அரியனாயிருப்பானொரு விஸ்மயநீயன்’’ என்று கொண்டு எம்பெருமானடைய ஆஶ்ரித ஸுலப4தையை அருளிச்செய்யத் தொடங்கி, மத்தறு கடைவெண்ணெய் களவினிலூரவிடையாப் புண்டு உரலினோடிணைந்து. உள்ளும் மெய்யர் கட்டுண்டேங்கின படியேயிருக்கிற எளிமையைக் கண்டு, இவ்வதிமாத்ராஶ்ர்த ஸுலப4த்வமஹாகு3ணத்திலே ஈடுபட்டு, ‘’ஆஶ்ரித ஸமாஶ்ரயணீய னாயிருக்கைக்கு தத்ஸஜாதீயனாய் வந்து பிறந்தருளவமையாதோ? இங்ஙனே உரலில் கட்டுண்டு நடுங்கினபடியேயிருந்தருள வேணுமோ? பிரானே! இது என் செய்தருளினாய்? எதுக்காகச் செய்தருளினாய்?’’ என்கிறார்.

இரண்டாம்பாட்டு

எளிவரும் இயல்வினன் நிலைவரம் பிலபல பிறப்பாய்*
ஒளிவரு முழுநலம் முதலில கேடில வீடாம்*
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்*
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே

அவ:- (எளிவரும்) இப்படி எம்பெருமான் திருவவதாரம் பண்ணிக்கொண்டு எளியனாம்படியைச் சொல்லப்புக்கு, அந்த ஸுலப4த்வ ப்ரஸங்க3த்தாலே உரலோடே கட்டுண்டு நடுங்கின படியே இருக்கிற நிரதிஶயஸுலப4த்வத்தை அநுஸந்தி4த்து அப்ரக்ருதிங்க3தரான ஆழ்வார், நெடும்போதுக்கு ப்ரக்ருதிங்க3தராய், பின்னையும், ப்ரஸ்துதமான ஸுலப4த்வத்தை அருளிச்செய்கிறார்.

வ்யா:- ஸுலப4னாமிடத்தில், ஜந்மசேஷ்டிதங்களிடைய உத்கர்ஷாபகர்ஷம் பாராதே ஆஶ்ரித ஸஜாதீயனாய்க்கொண்டு அபர்யந்தமான பிறவிகளைப் பிறந்து வந்து ஸுலப4னாம்.  பிறந்தருளும்போது, நித்யஸித்34 கல்யாணகு3ண பரிபூர்ணாநந்த3 ஸ்வஸாக்ஷாத்காரரூபமோக்ஷ ப்ரத3த்வ ஸர்வேஶ்வரத்வாதி3 ஸர்வ கு3ணங்களையும் ஒன்றுமொழியாமே கொண்டு வந்து பிறந்தருளும். இப்படிப் பிறந்தருளி ஆஶ்ரிதர்க்கு ஸஸ்நேஹமாக ஆத்மாதா3நம் பண்ணிக் கொண்டு எளியனாம்; அநாஶ்ரிதர்க்கு அரியனாயிருக்கும் என்கிறார்.

மூன்றாம் பாட்டு

அமைவுடை அறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து*
அமைவுடை முதல்கெடல் ஒடிவிடை யறநில மதுவாம்*
அமைவுடை அமரரும் யாவையும் யாவரும் தானாம்*
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே

 

வ்யா:- (அமைவுடை) அவிகல ஸர்வநிரதிஶய புண்யமார்க்க3 ஸித்34மாய், இதர ஸர்வபுருஷார்த்த3ங்களிற் காட்டில் உத்க்ருஷ்ட மாய், நிரபேக்ஷமாயிருந்த ஜக3த்ஸ்ருஷ்டி ஸம்ஹார அவாந்தர ஸம்ஹார கர்த்ருத்வங்கள் கைவந்திருக்கை யாகிற இவ்வைஶ்வ்ர்யத்தை யுடையராய், நிரபேக்ஷராயிருந்த ப்3ரஹ்ம ருத்3ராதி3 தே3வர்களுக்கும் மற்றுமுள்ள சேதநா சேதநங்களுக்கும் ஆத்மாவாயிருக்கையாகிற நிரபேக்ஷைஶ்வர்யத்தை யுடையனா யிருந்த நாராயணன் ஸஜாதீயனாய்க்கொண்டு பிறந்தருளி எளியனா யிருக்கிற இந்த ஆஶ்சர்யமான கு3ணம் ஒருவருக்கு நிலமோ? என்கிறார்.

நான்காம் பாட்டு

யாரும் ஓர் நிலைமைய னெனஅறி வரிய எம்பெருமான்*
யாரும் ஓர் நிலைமைய னெனஅறி வெளிய எம்பெருமான்*
பேரும் ஓராயிரம் பிறபல வுடைய எம்பெருமான்*
பேரும் ஓருருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே

 

வ்யா:- (யாருமோர்) ப்ரதிகூலர்க்கு அறிய அரியனாமிடத்தில், அவர்கள் எத்தனையேனும் உத்க்ருஷ்டரேயாகிலும், அவர்களுக்கு ‘’இன்ன ஸ்வபா4வத்தையுடையன்’’ என்று அறிய அரியன். அநுகூலர்க்கு அறிய எளியனாமிடத்தில், அவர்கள் எத்தனையேனும் தண்ணியரேயாகிலும், ‘’இன்ன ஸ்வபா4வத்தையுடையன்’’ என்று அறிய எளியன்.  ‘’இன்ன ஸ்வபா4வத்தையுடையன்’’ என்று அறிய எளியனாவது என்னென்னில்; அஸ்ங்க்2யேய கல்யாணகு3ண விஶிஷ்டனாய், மற்றும் ஆஶ்ரித பரித்ராணார்த்த2மாக அஸங்க்2யேய தி3வ்ய ரூபவிஶிஷ்டன் என்று அறிய எளியனாம்.  இப்படி ஓர் பேரும் ஓர் உருவமும் தங்களுக்குத் தோற்றாமையாலே ப்ரதிகூலர்  ‘’இல்லை’’ என்ன; அநுகூலர்க்குத் தோற்றுகையாலே அவை அவர் ‘’உண்டு’’ என்ன, இப்படி விப்ரதிபந்நங்களாயிருக்கும் என்கிறார்.

ஐந்தாம் பாட்டு

பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த*
கணக்கறு நலத்தனன் அந்தமி லாதியம் பகவன்*
வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு*
உணக்குமின் பசையற அவனுடை யுணர்வுகொண் டுணர்ந்தே

வ்யா:- (பிணக்கற) இப்படி விப்ரதிபத்தியுண்டாயிருந்த இடத்தில், இவனுடிய உண்மையை நிஶ்சயிக்கும்படி எங்ஙனே என்னில்.

வ்யா:- அந்த பரதிகூலஷட் ஸ்மயங்களுக்கும் அநுகூலரான வைதி3கர்க்கும் இப்படியுள்ள விப்ரதிபத்தி தீரும்படி வேத3 மார்க்க3த்தை உள்ளபடியே அநுஸந்தி4த்து, ஸாங்க4மான ஸகல வேத3ங்களுக்கும் தானே ப்ரதிபாத்3யனென்னுமிடத்தையும், அபௌருஷேயமாகையாலே நிர்தோ3ஷமான வேத3த்தோடே விரோதி4க்கையாலே இதர ஸமயங்கள் ப்ரமாணம் அன்றென்னு மிடத்தையும், ஸ்வாபா4விக ஸார்வஜ்ஞ்யாதி3 ஸகல கல்யாண கு3ணோபேதனான தானே ஸ்ரீகீ3தையிலே அருளிச் செய்தருளி னான்;  இப்படி வேதா3ர்த்த2த்தை உள்ளபடியே வ்யக்தமாக்கின இம்மஹாகு3ணத்தையுடையனான எம்பெருமான் திறமான ப4க்தி யோக3த்திலே நின்று ப்ராக்ருத விஷயங்களாகிற களையக் கடிந்து, அவற்றின் ஸங்க3த்தையும் விடுங்கோள். எங்ஙனே விடும்படி? என்னில்; அவன் அருளிச்செய்தருளின ஸ்ரீகீ3தையாலே ஸமஸ்த கல்யாண கு3ணாத்மகனான அவனை உணர்ந்து வ்யதிரிக்த ஸங்க3த்தைவிடுவது என்கிறார்.

ஆறாம் பாட்டு

உணர்ந்துணர்ந் திழிந்தகன்று உயர்ந்துரு வியந்தஇந் நிலைமை*
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை உணர்வரிது உயிர்காள்!*
உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து அரியய னரனென்னும் இவரை*
உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே

வ்யா:- (உணர்ந்துணர்ந்து) ஜ்ஞாத்ருத்வைக ஸ்வரூபமாய், ஜ்ஞாநதஸ் ஸர்வக3தமாய், ப்ரக்ருதி விநிர்முக்தமாயிருந்த பரிஶுத் தாத்ம ஸ்வரூபத்தை உள்ளபடியே விஶதமாய் உணரிலும், ஆஶ்ரித ஸமாஶ்ரயணீயத்வார்த்த2மாக தே3வமநுஷ்யாதி3ரூபேண அவதீர்ணனான இந்த ஸர்வேஶ்வரனாகிறான் ப்3ரஹ்மாவோ, ருத்3ரனோ, நாராயணனோ என்றறிகை அரிது.  ஆகில் எங்ஙனே அறியும்படி? என்னில். அரி, அயன், அரன், என்னும் இவர் திறமாக ப3ஹுஶாஸ்த்ர ஶ்ரவணமநநங்களைப் பண்ணுவது.  இப்படி ப3ஹுஶாஸ்த்ர ஶ்ரவணமநநங்களைப் பண்ணவே அவர்களில் ஒருவன் ஈஶ்வரன் என்று தோற்றம்; அவனை ஆஶ்ரயியுங்கோள் என்கிறார்.

ஏழாம் பாட்டு

ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற*
நன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னும் இவரை*
ஒன்றநும் மனத்துவைத்து உள்ளிநும் இருபசை யறுத்து*
நன்றென நலஞ்செய்வது அவனிடை நம்முடை நாளே

 

வ்யா:- (ஒன்றென) ஏகாதி4ஷ்டி2தமோ? அநேகாதி4ஷ்டி2தமோ? என்று அறிய அரிதான வடிவிலே நின்ற நன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னும் இவருடைய ஶ்ரவண மநநங்களை அவஹிதமநஸ்கராய் பண்ணுவது.  அவர்களிலே ஒருவனே ஈஶ்வரன் என்று தோற்றிவரும்.  தோற்றிவருமிடத்திலும் ப்3ரஹ் மருத்3ரர்க்ளுக்கு ஸர்வாத்மநா அஸம்பா4விதமான கல்யாண கு3ணங்களையுடையவனான நாராயணன் என்றே தோற்றிவரும்.  ஆன்பின்பு – த்த்3வ்யதிரிக்த ப்3ரஹ்ம ருத்3ரர்கள் பக்கல் ஈஶ்வரத்வ ஶங்கையை விட்டு அந்த நாராயணன் பக்கலிலே நம்முடைய ஶரீராத்3யுபகரணங்கள் உள்ளபோதே அநந்ய ப்ரயோஜந்ராய்க் கொண்டு அடிமை செய்வது என்கிறார்.

எட்டாம் பாட்டு

நாளும்நின் றடுநம பழமைஅங் கொடுவினை யுடனே
மாளும்ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி*
நாளும்நம் திருவுடை யடிகள்தம் நலங்கழல் வணங்கி*
மாளும் ஓரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே

வ்யா:- (நாளு நின்றடும்) இப்படி அநந்ய ப்ரயோஜநராய்க் கொண்டு நம் திருவுடையடிகள் தம் நலங்கழல் வணங்கவே, இடைவிடாதே நின்று நமக்கு பா34கமாய், அநாதி3கால ஸஞ்சித மாய், ப43வத3நுப4வ விரோதி4யான நம்முடைய கொடுவினை யெல்லாம் வணங்கின அப்போதே மாளும். இனி ஒருநாளும் ஒரு குறையில்லை.  நாம் அபேக்ஷித்தபடி எம்பெருமானை அநுப4விக்கப் பெறலாம்.  இப்படி சிரகாலங்கூட ப3லவத்ஸாத்4யமான ப4க்தி யோக3த்தை ஸாதி4க்கைக்குமக் காலமும் ப3லமுமின்றியே அந்திமத3ஶாபந்நரானார் இழந்து போமித்தனையோ? என்னில்; அந்த அந்திம த3ஶையிலேயாகிலும்.  ஓரஞ்ஜலிமாத்ரமாதல், ஓருக்திமாத்ரமாதல், ஒரு ஸ்ம்ருதி மாத்ரமாதல் அவன் திறத்திலே செய்ய, அந்த ப4க்தி யோக3த்திலும் நன்று என்கிறார்.

ஒன்பதாம் பாட்டு

வலத்தனன் திரிபுர மெரித்தவன் இடம்பெறத் துந்தித்
தலத்துஎழு திசைமுகன் படைத்தநல்லுலகமும் தானும்
புலப்பட* பின்னும்தன் னுலகத்தில் அகத்தனன் தானே
சொலப்புகில்* இவைபின்னும் வயிற்றுள இவைஅவன் துயக்கே

வ்யா:- (வலத்தனன்) ருத்3ரனுடையவும், சதுர்முக2, ஸ்ருஷ்டமான லோகத்தினுடையவும். சதுர்முக2ந்தன்னுடையவும், ஸ்வரூப ஸ்தி2தி ப்ரவ்ருத்தி ஹேதுபூ4தனாய், பின்னையும் ஆஶ்ரித வாத்ஸல்யத்தாலே ஸ்வேநைவ ரூபேண ஸ்வஶேஷபூ4தமான ஜக3த்தினுள்ளே ஆஶ்ரிதர்க்குக் காணலாம்படி வந்து திருவவதாரம் பண்ணியருளும் இவனுடைய கு3ணங்களைச் சொல்லப்புகில், இவை பின்னையும் உள்ளுள்ளும் அபர்யந்தமாய் இருக்கும்.  இந்த கு3ணங்களை உடையனான அவனை எல்லாருமொக்க அறிந்து ஆஶ்ரயியாதொழிவானென்?  என்னில், தன் பக்கல் ஸ்நேஹம் இல்லாதார்க்குத் தன்னை உள்ளபடி அறியவொண்ணாது; ஒருபடி அவர்களை மோஹிப்பித்து வைக்கும் என்கிறார்.

பத்தாம் பாட்டு

துயக்கறு மதியில்நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்*
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்*
புயற்கரு நிறத்தனன் பெருநிலம் கடந்தநல் லடிப்போ(து)*
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே

 

வ்யா:- (துயக்கறு) நிர்தோ3ஷாந்த:கரணாய், ஸம்யக்ஜ்ஞாநி களான ப்3ரஹ்ம ருத்3ராதி3களுக்குக் கூட அறியவரிதாயிருந்த தி3வ்யாவதாரம் தொடக்கமாகவுள்ள மஹாஶ்சர்யங்களைச் செய்தருளவல்லனாய், காளமேக4 நிப4மான தி3வ்ய ரூபத்தை உடையனாயிருந்த எம்பெருமானுடைய திருவுலகளந்த நல்லடிப் போதை – உபதே3ஶ நிரபேக்ஷமாக நான் என்னுடைய ஸர்வ கரணங்களாலும் அநந்யப்ரயோஜநனாய்க் கொண்டு அநுப4விக்கப் பெற்றேனாகாதே! என்றுக்கொண்டு ஸ்வஸ்வபா4வத்தைப் பேசுகிறார்.

பதினொன்றாம் பாட்டு

*அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் தன்னை*           அமர்பொழில் வளங்குரு கூர்ச்சட கோபன்குற் றேவல்கள்*
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவைபத்தும் வல்லார்*
அமரரோடு உயர்வில்சென்று அறுவர்தம் பிறவியஞ் சிறையே

வ்யா:- (அமரர்கள்) ஆஶ்ரிதஸமாஶ்ரயணீயத்வார்த்த2மாக அண்ட3மத்4யே அவதீர்ணனாய், தே3வாதி3 ஸகல ஜநங்களுக்கும் தா3ஸ்யாவஹமான அம்ருதமத2நாதி3 தி3வ்ய சேஷ்டிதங்களை யுடையனாயிருந்த எம்பெருமானுக்கு ஶேஷவ்ருத்தி ரூபமாய், நிரதிஶய ரஸரூபமாயிருந்த ஆயிரம் திருவாய்மொழியிலும் வைத்துக்கொண்டு இத்திருவாய்மொழி வல்லாரை, எம்பெருமான் ப்ரதிப3ந்த4கங்களைப் போக்கி  திருவடிகளில் கொண்டு போகப் ப்ற்றாமை. முந்துற திருவடிகளிலே கொண்டுபோய், அந்தமில் பேரின்பத்தடியரோடிருந்த பின்னை, ப்ரதிப3ந்த4கமான ப்ரக்ருதி ஸம்ப3ந்த4த்தைப் போக்கியருளும் என்கிறார்.

திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்

ப்ரவேம்    1-4

அஞ்சிறையப்ரவேம்

நான்காம் திருவாய்மொழி
அஞ்சிறைய: ப்ரவேஶம்

 

அவ:- (அஞ்சிறைய) ஆழ்வார் இப்படி த3ர்ஶந ஸமாநாகாரமான ஜ்ஞாநத்தினாலே எம்பெருமானை அநுப4வித்து. பா3ஹ்ய ஸம்ஶ்லேஷத்திலே அபேக்ஷை பிறந்து, அதில் ப்ரவ்ருத்தராய், அது கைவாராமையாலே அத்யந்தம் அவஸந்நராய், எம்பெருமானுடைய ஸர்வாபராத4 ஸஹத்வாதி3 கு3ணங்களை அநுஸந்தி4த்து, இப்படி கு3ணவானானவன் நம்மைக் கைவிடான் என்று பார்த்து, தூ3த வாக்யத்தினாலே ஸ்வாபி4லஷித்தை எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்கிறார்; ஒரு பிராட்டியினுடைய வாக்யாப தே3ஶத்தாலே ஸ்வாபி4லஷிதத்தை விண்ணப்பம் செய்கிறார்.

முதல் பாட்டு

*அஞ்சிறைய மடநாராய்! அளியத்தாய்!* நீயும்நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆவா! என்று எனக்கருளி*
வெஞ்சிறைப்புள் ளுயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்*
வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டால் என்செய்யுமோ

 

வ்யா:- எம்பெருமானோடு கலந்து பிரிந்தாளொரு பிராட்டி. தன் முன்னே ஸம்ஶ்லேஷித்து வர்த்திக்கிற நாரைகளைக்கண்டு, தான் வ்யஸநாதிஶயத்தாலே அறிவிழந்திருக்கையால், ‘’தன் வார்த்தைகளை அறியா’’ என்னுமிடத்தை விவேகிக்கமாட்டாதே, அவற்றினுடைய ஸம்ஶலேஷ ஸ்வபா4வத்தைக் காண்கையாலே, தன்னோபாதி அளவுடையனவாகக்கொண்டு, அவற்றைக்குறித்து, தன்னளவிலே வார்த்தை சொல்லுகிறவிடத்தில், சேவலைக்குறித்துச் சொல்லுகை ஈடல்லாமையாலே, அத்தைக்குறித்துச் சொல்லுகிற வார்த்தையும், ஔசித்யத்தாலே பேடையை நோக்கி, ‘’நினைத்த விடத்திலே நினைத்தபோதே செல்லுகைக்கீடான உபகரணங்களை யுடையையாய், ஸம்ஶ்லேஷத்தையே தா4ரகமாக வுடையையாய், து3:க்கா2ஸஹிஷ்ணுவுமாயிருந்த நீ, என் பக்கலிலே க்ருபைபண்ணி, ஆஶ்ரிதருடைய ஸமஸ்த து3:க்க2நிரஸந ஸ்வபா4வனான பெரிய திருவடியை தி3வ்யவாஹநமாகவுடைய எம்பெருமானுக்கு என் விடு தூதாய்ச் சென்று என் திறத்தைச் சொல்லவேணும்’’  என்று அபேக்ஷித்து, பின்னையும் அவை போகாதிருந்தவாறே, சொன்ன வார்த்தையை அவன் அங்கீ3கரியாதொழியில் செய்வதென்னென்று போகாதிருந்தனவாகக்கொண்டு, ‘’இப்படி ஆஶ்ரித வத்ஸல னானவன் அங்கீ3கரியாதொழியுமோ? அவன் என் வார்த்தையை அங்கீ3கரியா தொழிகையாகிற வன்சிறையில் அவன் உங்களை வைக்கில், அத்தனையும் எனக்காகப் பட்டாலாகாதோ என்றே செய்ய்வேணும்’’ என்று சொல்லுகிறாள்.

இரண்டாம் பாட்டு

என்செய்ய தாமரைக்கண் பெருமானார்க்கு என்தூதாய்*
என்செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே*
முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்*
முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே

வ்யா:- (என்செய்ய) பின்னையும் அந்த நாரைகள் போகாதிருந்தவாறே, சில குயில்களை நோக்கி, தன் அழகாலே என்னைத் தோற்பித்து அடிமையாக்கினவனுக்கு நீங்கள் என்திறம் சொன்னால்தான் என்செய்யும்?  என்று சொல்ல, அவையும் போகாதிருந்த இடத்தில், சொல்லும் வார்த்தை கேட்டுப் போகைக்கு நின்றனவாகக் கொண்டு, ‘’என்னுடைய ஜந்மாந்தர பாபத்தாலே, உன் திருவடிகளில் அடிமை செய்கைக்குப் பண்டு பா4க்3யம் பண்ணப் பெற்றிலேன்;  இனி உன் திருவடிகளை நான் அகன்று போமத்தனையோ’’ என்று சொல்லுங்கோள் என்கிறாள்.

மூன்றாம் பாட்டு

விதியினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள்*
மதியினால் குறள்மாணாய் உலகிரந்த கள்வர்க்கு*
மதியிலேன் வல்வினையே மாளாதோ என்றுஒருத்தி
மதியெல்லாம் உள்கலங்கி மயங்குமால் என்னீரே

வ்யா:- (விதியினால்) பாபம் பண்ணினால் அது மாளுந் தனையும் அநுப4விக்க வேண்டாவோ? என்னில்; என்னுடைய பாபமேயோ காலமெல்லாம் அநுப4வித்தாலும் மாளாதது? என்று ஒருத்தி மதியெல்லாம் உள்கலங்கி அறிவிழந்தாள் என்று, தன்னுடைய தி3வ்யசேஷ்டித்ங்களாலே என்னைத் தோற்பித் தவனுக்குச் சொல்லுங்கோள் என்று, பா4க்3யாதிஶத்தாலே பரஸ்பரம் ஸம்ஶ்லேஷித்து வர்த்திக்கிற சில அன்னங்களைக் குறித்துச் சொல்லுகிறாள்.

நான்காம் பாட்டு

என்நீர்மை கண்டிரங்கி இதுதகா தென்னாத*
என்நீல முகில்வண்ணர்க்கு என்சொ(ல்)லியான் சொல்லுகேனோ*
நன்னீர்மை இனியவர்கண் தங்காதென் றொருவாய்ச்சொல்*
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ

வ்யா:- (என் நீர்மை) ‘’நான் தம்மைப் பிரியில், ஒரு க்ஷண மாத்ரமும் த4ரிக்கமாட்டாத ஸ்வபா4வை என்னுமிடத்தை அறிந்து-வைத்து என் பக்கலிலே க்ருபைபண்ணி, ‘இவள் நம்மைப் பிரிந்திருக்கைக்கு ஈடல்லள்’ என்று பாராதவர்க்கு நான் என்ன வார்த்தையைச் சொல்லுவது’’ என்று எம்பெருமானைச் சொன்னாளாய், பின்னையும் அவனை விடமாட்டாமையாலே, ‘’அவளுடைய நல்லுயிரானது இனி அவள் பக்கல் ஒரு க்ஷண மாத்ரமும் தங்காது என்று ஒரு வார்த்தை சொல்லவேணும்’’ என்று சில அன்றில்களை நோக்கிச்சொல்ல, அவையும் போகாதிருந்த விடத்தில், ‘’இத்தனையும் சொல்லவல்லீர்களோ, மாட்டீர்களோ?’’ என்கிறாள்.

ஐந்தாம் பாட்டு

நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே*
நல்கத்தா னாகாதோ நாரணனைக் கண்டக்கால்*
மல்குநீர்ப் புனற்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே*
மல்குநீர்க் கண்ணேற்கு ஓர் வாசகங்கொண் டருளாயே

வ்யா:- (நல்கி) ஸர்வாத்மாக்களுடைய ஸர்வாபராத4ங்களையும் பொறுத்தருளி, அவர்களுடைய அநிஷ்டங்களையெல்லாம் போக்கி, ஸஸ்நேஹமாக ரக்ஷித்தருளுகிற பரமகாருணிகனான எம்பெருமானுக்கு, நான் செய்த பிழையைப் பொறுத்து என்னோடு கலந்து பரிமாறவேயோ ஆகாது? என்று சொல்லி, பின்னை அவன் அருளிச்செய்தருளின வார்த்தையைக் கொண்டுவந்து எனக்குச் சொல்லவேணுமென்று சில குருகுகளை இரக்கிறாள்.

ஆறாம் பாட்டு

அருளாத நீர்அருளி அவராவி துவராமுன்*
அருளாழிப் புட்கடவீர் அவர்வீதி ஒருநாளென்று*
அருளாழி யம்மானைக் கண்டக்கால் இதுசொல்லி
அருள்* ஆழி வரிவண்டே யாமும்என் பிழைத்தோமே

அவ:- (அருளாத நீரருளி) எல்லருடைய பிழைகளையும் பொறுத்து, எல்லாரையும் ரக்ஷிக்கக்கடவோமாகிலும் அத்யந்த விஸ்த்3ரூஶையான அவளுடைய பிழைகளைப் பொறுத்து அவளோடே கலந்து பரிமாறும் பரிமாற்றத்தாலே வரும் காருண்யாதி3 கு3ணங்களும் வேண்டா என்றிருந்தானாகில், அவனுக்குச் சொல்லுவது என்? என்னில்:

வ்யா:-  ‘’ ‘அவளோடு கலந்து பரிமாறுகை திருவுள்ளமன்றாகிலும், உம்முடைய க்ருபைக்கும், ஸர்வேஶ்வரத்துக்கும் தாழ்வு வாராமே அவளும் உஜ்ஜீவிக்கலாம்படி அவள்பக்கலிலே க்ருபை பண்ணி, அவள் முடிவதற்கு முன்னே பரமகாருணிகனான பெரியதிருவடி மேலே ஏறியருளி ஆஶ்ரிதபரித்ராணார்த்த2மாக எழுந்தருளும் போது, பெரியதிருவடியை ஒருநாள் அந்தத் தெருவே கடாவியருளீர்’ என்று சொல்லுவது. ‘அதுவும் கடவதன்று’ என்னில்;  ‘இம்மாத்ரத்தையும் செய்தருளாதொழிகைக்கு நாங்கள் என்ன பிழை செய்தோம்’ என்று இத்தைப் பரமத3யாளுவான திருவாழியை ஏந்தி ஸர்வாத்மாக்களையும் ரக்ஷித்தருளுகிற எம்பெருமானைக் கண்டக்கால் சொல்ல வேணும்’’ என்று வண்டுதன்னைக் கொண்டாடி இரக்கிறாள்.

ஏழாம் பாட்டு

என்பிழைகோப் பதுபோலப் பனிவாடை ஈர்கின்றது*
என்பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு*
என்பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என் றொருவாய்ச்சொல்*
என்பிழைக்கும் இளங்கிளியே யான்வளர்த்த நீயலையே

வ்யா:- (என் பிழை) ‘’தம்மைப் பிரிந்து படுகிற வ்யஸநத்தின் மேலே எலும்பிலே இழைகோத்தாற்போலே என்னைப் பனிவாடை ஈராநிற்கச்செய்தேயும், தன் க்ருபையை ஒன்றும் நினையாதே, என்பிழையே நினைந்தருளி அருளாதிருக்கிறவருக்கு, நான் ஏதேனும் பிழைசெய்தால், தம்முடைய க்ருபைக்கு விஷயமல்லாத தொரு பிழையு முண்டோ?’’ என்று ஒரு வார்த்தை சொல்லவேணும். ‘’உன்னுடைய நிறத்தைக்காட்டியும் அவனுடைய திருநாமத்தைச்  சொல்லியும், என்னுடைய எலும்பை இழைக்கிற இள்ங்கிளியே! அவருக்குச் சொல்லுமிடத்தில், அவர் வார்த்தையை மறுத்தருளிலும் பிராட்டி திருமுன்பே வைத்துச் சொல்லவேணும்’’ என்று ‘இத்தனைக்கும் உறவு போராதோ’ என்கிறாள்.

 

எட்டாம் பாட்டு

நீயலையே? சிறுபூவாய் நெடுமாலார்க்கு என்தூதாய்*
நோயெனது நுவலென்ன நுவலாதே இருந்தொழிந்தாய்*
சாயலொடு மணிமாமை தளர்ந்தேன்நான்இனிஉனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே

வ்யா:- (நீயலையே) தன்னுடைய அவஸாத்3த்தைக் கண்டு அவஸந்நமாகிற பூவையை நோக்கி, எனக்குரியனாகையே தனக்கு ஸ்வரூபமாயிருக்கிறவர்க்கு நோயெனது நுவலென்ன நுவலாதே யிருந்தொழிந்தாய் நீயலேயோ? என்னுயிரானது முடிந்ததுகிடாய்.  உனக்கு ரக்ஷகரைத்தேடாய் என்று சொல்லுகிறாள்.

ஒன்பதாம் பாட்டு

நாடாத மலர்நாடி நாடோறும் நாரணன்தன்*
வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று*
வீடாடி வீற்றிருத்தல் வினையற்ற தென்செய்வதோ*
ஊடாடு பனிவாடாய் உரைத்தீராய் எனதுடலே

வ்யா:– (நாடாத மலர்) ஒரு வாடை வந்து தன்னை ஈரப்புக, அது எம்பெருமானுடைய நியோக3த்தாலே வந்திருக்கிறதாகக் கொண்டு, அத்தைக்குறித்து, ‘’ ‘ஸர்வ ஸ்வாமியான தன் திருவடிகளிலே அபர்யந்த க3ந்த4புஷ்பாதி3 ஸர்வபரிசர்யோப கரணங்களைக்கொண்டு ஸர்வகாலமும் ஸர்வஶேஷ வ்ருத்தியும் பண்ணுகைக்காகவ்ன்றோ என்னுடைய ஸ்வரூபம் பரிக்லுப்த மாயிற்று; ஆனபின்பு, இப்படி ஶேஷதைக ஸ்வபா4வையான நான் தன்னை விஶ்லேஷித்து, விஶ்லேஷத்திலே அபி4ஷிக்தை யாயிருக்கும் இப்பொல்லாவிருப்பு என்செய்வதோ?’ என்று எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்தால் அவன் உபேக்ஷித்திருந் தானாகில் பின்னைவந்து ஈரவேணும்’’ என்கிறாள்.

பத்தாம் பாட்டு

உடலாழிப் பிறப்புவீடு உயிர் முதலா முற்றுமாய்*
கடலாழி நீர்தோற்றி அதனுள்ளே கண்வளரும்*
அடலாழி யம்மானைக் கண்டக்கால் இதுசொல்லி*
விடல்ஆழி மடநெஞ்சே வினையோம் ஒன்றாமளவே

வ்யா:- (உடலாழி) ‘’ஸர்வஜக3த் ஸ்ருஷ்டியையும் பண்ணி, ஸ்ருஷ்டமான ஜக3த்தினுடைய ரக்ஷணார்த்த2மாகத் திருப்பாற் கடலிலே திருவாழி தொடக்கமாகவுள்ள தி3வ்யாயுத4ங்களையும் ஏந்திக்கொண்டு கண்வளர்ந்தருளுகிற  பரமகாருணிகனான எம்பெருமானைக் கண்டக்கால், ‘நாடாத மலர்நாடி’ இத்யாதி3 ‘வினையற்றதென் செய்வதோ’ என்று இதுசொல்லி, அவன் நம்முடைய அபேக்ஷிதம் செய்தருளுமளவும் என்னை நீ த4ரித்துக் கொண்டிரு’’ என்று தன் திருவுள்ளத்தைக் குறித்துச் சொல்லுகிறாள்.

 

பதினொன்றாம் பாட்டு

*அளவியன்ற ஏழுலகத் தவர்பெருமான் கண்ணனை*
வளவயல்சூழ் வண்குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த*
அளவியன்ற அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தின்*
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெருவளமே

வ்யா:- (அளவியன்ற) அபரிச்சே2த்3யமஹிமையையுடை -யனாய், ஸர்வலோகேஶ்வர்னாய், ஆஶ்ரிதஸுலப4த்வைக ஸ்வரூப -னாயிருந்த எம்பெருமானை ப்ரதிபாதி3க்கிற, அபரிச்சே2த்3ய மஹிமையையுடைத்தான இத்திருவாய்மொழியை அழகியதாகச் சொல்லவல்லவர், திருநாட்டிலே சென்று ப43வத் கைங்கர்யரூப மஹாஸம்பத்தைப் பெறுவார்கள் என்கிறார்.

திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்

ஐந்தாம் திருவாய்மொழி
வளவேழுலகு: ப்ரவேஶம்

ப்ரவேம்    1-5

வளவேழுலகின்ப்ரவேம்

 

அவ:- (வளவேழுலகு) இப்படி ஆழ்வார் எம்பெருமானை விஶ்லேஷித்து அத்யந்தம் அவஸந்நராய், ‘’தேவரீருடைய நிரவதி4க க்ருபையாலே அடியேனுடைய ஸர்வாபராத4ங்களையும் க்ஷமித்தருளி அடிமை கொண்டருளவேணும்’’ என்று எம்பெருமானை அபேக்ஷிக்க, எம்பெருமானும் தம்மோடு ஸர்வவித4 ஸம்ஶ்லேஷம் பண்ணுகைக்கு ஈடாம்படி எழுந்தருள, அவனுடைய ஸர்வப்ரகாரத் தாலுமுள்ள நிரதிஶயோத்கர்ஷத்தையும், தம்முடைய ஸர்வப்ரகாரத்தாலுமுள்ள நிரதிஶய நிகர்ஷத்தையும் பார்த்து, ‘’இப்படி நிஹீநனான நான் அவன் திருவடிகளில் அடிமைசெய்யில் அவனுக்கு அவத்3யாவஹமாதலால் அவனுக்கு அவத்3யவஹமாம் -படி அடிமைசெய்து உஜ்ஜீவிக்கையில், அடிமைசெய்யாதே முடிந்துபோமதுவே எனக்கு ஆத்மலாப4ம்: ஆனபின்பு இனி ஆத்மாந்தமாக அவன்திறத்துப் படுவேனல்லேன்’’ என்று பார்த்து, பரமபுருஷ சரணாரவிந்த, பரிசாணத்தினின்றும் நிவ்ருத்தராய், இதுக்கு முன்பு இப்படி நிரூபியாதே எம்பெருமான் திறத்துப் பட்டத்துக்குத் தம்மை க3ர்ஹிக்கிறார்.

முதல் பாட்டு

*வளவே ழுலகின் முதலாய வானோரிறையை அருவினையேன்*
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்*
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லா னாயர் தலைவனாய்*
இளவே றேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்துநைந்தே

வ்யா:- ‘’ஸர்வலோக காரணபூ4தனாய், * அயர்வறுமமரர்கள் அதிபதியான எம்பெருமானை, அத்யந்தஹீநனான நான் என் வாயாலே ‘களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா’ என்பன்; அதிம்மேலே – ‘பின்னையும், நிரதிஶயஸௌந்த3ர்யாதி3 கு3ணங்களையுடையளான நப்பின்னைப் பிராட்டியோடே கலக்கைக்காக, அவள் குலத்தருளி இளவேறேழும் தழுவிய எந்தாய்’ என்று சொல்லுவன்; சொல்லுமிடத்தில் கு3ணங்களை என் நெஞ்சாலே நினைந்து சொல்லுவன்; என்ன அதிநிக்ருஷ்டனோ, என்ன அயுக்தகாரியோ?’’ என்று கொண்டு த்ம்மை நிந்தி3த்து, ‘அவன் கு3ணங்களை இப்படி சொல்லிவைக்கிறது அவன் பக்கலிலே எனக்குள்ள நிரதிஶயஸ்நேஹமாகிற பாபமிறே’ என்று நோகிறார்.  பரமபுருஷார்த்த2மான பரமபுருஷ விஷய ப்ரேமத்தைப் பாபமென்று சொல்லுவானென்? என்னில்; து3:க்க2 மாகையாலும், தம்முடைய வாயாலே அவனைப்பேசுகை அவனுக்கு அவத்3யமாகத் தாம் கருதுகையாலும், இப்படி அவனுக்கு அவத்3யமாகையாலே தமக்கு து3:க்க2ரூபமான இப்பேச்சை தத்3விஷய ஸ்நேஹமானது விளைவிக்கையலும், தமக்கு அவன் பக்கலுள்ள ஸ்நேஹத்தையே பாபம் என்கிறார்.

இரண்டாம் பாட்டு

நினைந்து நைந்துஉள் கரைந்துருகி இமையோர் பலரும் முனிவரும்*
புனைந்த கண்ணி நீர்சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்*
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே*
மனம்செய் ஞானத்து உன்பெருமை மாசூணாதோ மாயோனே

வ்யா:- (நினைந்து) நீர் என்திறத்துப் பண்ணும் வ்ருத்திகள் எனக்கு ஏற்ற மத்தனையல்லது, எனக்கு அவத்3யமாமோ? என்னில், ‘’ஜாதிகு3ணவ்ருத்த ஜ்ஞாநாதி3களால் உத்க்ருஷ்டரான ப்3ரஹ்மேஶ நாதி3கள் பலரும், ஸநகாதி3யோகி3கள் பலரும், கல்யாணமான உபகரணங்களைக்கொண்டு பரமப4க்தியுக்தமாக உனக்கு அடிமை செய்தாலும், நிகி2லபு4வந நிர்மாண த்ராண ஸம்ஹரணாதி3களப் ப்ண்ணினாலும், குரியழியாதேயிருக்கிற தி3வ்யஸங்கல்பாதி3 கல்யாணகு3ணங்களை உடையையாயிருந்த உன் பெருமை மழுங்காதோ ஆஶ்சர்யபூ4தனே?  ஆனபின்பு ஸர்வப்ரகார நிக்ருஷ்டனான நான் உனக்கு அடிமை செய்தால் அது உனக்கு அவத்3யமாம்  என்னுமிடம் சொல்ல வேணுமோ?  ஆதலால் செய்தால் அது உனக்கு அவத்3யமாம் என்னுமிடம் சொல்ல வேணுமோ? ஆதலால் நான் உனக்கு அடிமைசெய்த இதுவும் அதயந்தாயுக்தம்; இனி அடிமைசெய்கையும் அயுக்தம்; ஆதலால் உனக்கு அடிமை செய்வேனல்லேன்’’  என்று அகலுகிறார்.

மூன்றாம் பாட்டு

மாயோ னிகளாய் நடைகற்ற வானோர் பலரும் முனிவரும்*
நீயோ னிகளைப் படையென்று நிறைநான் முகனைப் படைத்தவன்*
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைக ளெல்லாம் திருவடியால்
தாயோன்* எல்லா வெவ்வுயிர்க்கும் தாயோன் தானோ ருருவனே

வ்யா:- (மாயோனிகளாய்) இப்படி தம்முடைய நிகர்ஷாநுஸந்தா4நத்தாலே எம்பெருமானை அகல,  அவனும்-இவரைப் பிரியில் த4ரிக்கமாட்டாமையாலே, ‘’இவரை ஸமாதா4நம் பண்ணுகைக்கு உபாயமேதோ?’’ என்று சிந்தித்து, தே3வாதி3 ஸ்தா2வராந்தமான சதுர்வித4பூ4தஜாதங்களுக்கும் காரண பூ4தனான ப்3ரஹ்மாவுக்கும் காரணபூ4தனாய், வாங்மநஸா பரிச்சே2த்3யமஹிமனாயிருந்துவைத்து, அநாலோசித விஶேஷமாக ஸர்வாத்மாக்களையும் ஒக்க மாத்ருவத் ஸஸ்நேஹமாக ரக்ஷிக்கும் ஸ்வபா4வனாயிருக்கிற தன்னுடைய ஸௌஶீல்யகு3ணத்தைக் காட்டியருள; அந்த கு3ணவிஶிஷ்டனானவனைக்கண்டு தம்முடைய ப்ரீத்யதிஶயத்தாலே ‘’ஒருவனே தானோருருவன்!’’ என்று அவனைக் கொண்டாடுகிறார்.

நான்காம் பாட்டு

தானோரு ருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய*
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்*
தானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண்வளரும்*
வானோர் பெருமான் மாமாயன் வைகுந் தன் எம்பெருமானே

வ்யா:- (தானோருருவே) இப்படி இவனுடைய சௌஶீல்யத்தைக் கொண்டாடி, ‘’லீலோபகரணமாயும் போ4கோ3பகரணமாயுமிருந்த உப4யவிபூ4தி விஶிஷ்டனான எம்பெருமானுடைய இந்த சௌஶீல்யமானது அத்யந்த நிஹீனனான என்னோடே ஸம்ஶ்லேஷியாவிடில் அவனுக்கு ஸித்3தி4யாது; ஆதலால் சௌஶீல்ய கு3ணஸித்3த்4யர்த்த2மாக, இனி அவனுக்கு ஆத்மாந்தமாக ஸர்வஶேஷவ்ருத்தியும் பண்ணுவேன்’’என்கிறார்.

ஐந்தாம் பாட்டு

மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா*
கூனே சிதைய உண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா*
வானார் சோதி மணிவண்ணா மதுசூதாநீ யருளாய்உன்
தேனே(ய்) மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே

வ்யா:- (மானேய் நோக்கி) இப்படி எம்பெருமானுடைய சௌஶீல்யத்தாலே ஆழ்வார் வஶீக்ருதராயிருக்கச்செதே, ‘பின்பும் தானேசென்று ஸம்ஶ்லேஷிக்கில் எவர் பண்டுபோலே தம்முடைய அநர்ஹதாSநுஸந்தா4நத்தாலே அமலுவர்; இவர்தாமே நம்மோடே ஸம்ஶ்லேஷிக்கைக்காகும்’ என்று ஏறவாங்கியிருக்க, இவரும் அவனை அபேக்ஷிக்கிறார்.  எங்ஙனே என்னில்; ‘’லக்ஷ்மீகடாக்ஷ தத்ஸம்ஶ்லேஷைக போ43னாகையாலே ‘மாத4வன்’ என்னும் திருநாமத்தையுடையனாயிருந்து வைத்து, ஆஶ்ரித பரித்ராணார்த்த2மாக மநுஷ்ய ஸஜாதீயனாய் வந்து பிறந்தருளி, ஆஶ்ரிதர்பக்கலுள்ள அவத்3யம் பாராதே அவர்களை விஷயீகரித்து, பின்னை தத்33த தோ3ஷங்களைப் போக்கும் ஸ்வபா4வனாய், திர்யக்3யோனிக3தமான ஜந்துக்களுக்கும் ரக்ஷகனாய், ஸ்வதேஜஸ் ஸினாலே ஆபூரிதமான திகி2லபு4வநங்களையும் திருநாட்டையும் உடையையாய், நிர்மலமாய் ரமணீயமான தி3வ்யரூபத்தை உடையையாய், ஆஶ்ரிதவிரோதி4 நிரஸநஸ்வபா4வனா யிருந்தவனே!, உன் தேனேமலரும் திருப்பாதத்தை வினையேன் சேருமாறு அருளாய்’’ என்கிறார்.

ஆறாம் பாட்டு

வினையேன் வினைதீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா*
மனைசேர் ஆயர் குலமுதலே மாமா யனே மாதவா*
சினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா*
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே

வ்யா:- (வினையேன்) ‘’உன்னோடு ஸம்ஶ்லேஷிக்கைக்கு விரோதி4யான என்னுடைய அநர்ஹதாநுஸந்தா4நமாகிற வினையைப்போக்கின் சௌஶீல்யத்தையுடையவனே! அயர்வறுமமரர்களுக்கூன்னைக் கொடுத்துக்கொண்டிருக்கிற பரமோதா3ரனே! ஆஶ்ரிதவிரோதி4 நிரஸநஸ்வபா4வனானவனே! ஆஶ்ரிதர் இருந்தவிடத்திலே வந்து அவர்களுக்கு ஸுலப4நானவனே! ஆஶ்ரிதர் பக்கலில் நிரதிஶய வ்யாமோஹத்தை உடையவனே! நிரதிஶய போ4க்3யபூ4தனே!  ஆஶ்ரித நியோக3கரனானவனே! ப்ரணயஸ்வபா4வனே! மற்றும் ஏவம்வித4மான சேஷ்கிதத்தையும் கு3ணங்களையுமுடையவனே! உன் திருவடிகளைச் சேரப்பெறாமையாலே அலற்றி, அத்யந்த அவஸந்நனானேன்;  உன் தேனே மலரும் திருப்பாதம் சேருமாறு அருளாய்’’ என்கிறார்.

ஏழாம் பாட்டு

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானை*
கடிசேர் தண்ணந் துழாய்க்கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை*
செடியா ராக்கை அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை*
அடியேன் காண்பா னலற்றுவன் இதனில் மிக்கோ ரயர்வுண்டே

வ்யா:- (அடியேன்) இப்படி எம்பெருமானையே காணவேணும் என்று அபேக்ஷிக்கிற ஆழ்வார், பின்னையும் அவனுடைய  உத்கர்ஷத்தையும் தம்முடைய நிகர்ஷத்தையும் அநுஸந்தி4த்து, ‘’கெட்டேன்! அவனை அடலாதே நான் ‘காணவேணும்’ என்று அபேக்ஷிக்கிறது என்ன ஆசைப்படாதே, இவன் பக்கலிலே கைவல்யாதி3 ப்ரயோஜநங்களைக் கொண்டு அகன்று போவார்கள் என்ன பா4க்3யம் பண்ணினாரோ? நானும் அங்ஙனேயாகப் பெற்றிலேன்’’ என்று நோகிறார்.

எட்டாம் பாட்டு

உண்டாய் உலகேழ் முன்னமே உமிழ்ந்து மாயை யால்புக்கு*
உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர் உவலை யாக்கை நிலையெய்தி*
மண்டான் சோர்ந்த துண்டேலும் மனிசர்க் காகும் பீர்* சிறிதும்
அண்டா வண்ணம் மண்கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே

அவ:- (உண்டாய்) இப்படி ஆழ்வார் தம்மை நிந்தி3த்துக் கொண்டு எம்பெருமானை அகல, அவனும் அநாலோசித கு3ணாகு3ணமாக ஆஶ்ரித ஸம்ஶ்லேஷைக தா4ரகத்வமாகிற தன் ஸ்வரூபத்தைக் காட்டி இவரை ஸமாதா4நம் பண்ணுகிறான்.

வ்யா:- அதிக்ஷுத்3ர மநுஷ்ய ஸஜாதீயனாய் வந்து பிறந்தருளி, திருவாய்ப்பாடியிலே போய்ப்புக்கு, ஆய்ச்சியருடைய வெண்ணெயையும் நெய்யையும் அபி4நிவேஶாதிஶயத்தினாலே அவர்களுக்கு ஒன்றும் ஶேஷியாத தொருபடி உண்டருளிற்று – பண்டு இந்த லோகங்களை உண்டுமிழ்ந்தருளுகிறபோது ஏதேனும் மண்தன் ஶேஷித்த துண்டாகிலும் அந்த மண் கரைகைக்கு மருந்தாகவோ? அன்றிறே; ஆஶ்ரிதரோடு கலந்து பரிமாறியல்லது த4ரிக்கமாட்டாத தன்மையாகையாலே செய்தருளினாயித் தனையிறே – என்கிறார்.

ஒன்பதாம் பாட்டு

மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய்வீய*
தூய குழவி யாய்விடப்பாலமுதா அமுது செய்திட்ட
மாயன்* வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன்* தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தி யைச்சார்ந்தே

வ்யா:- (மாயோம்) ஸர்வேஶ்வரனாய் அயர்வறுமமரர்கள் அதிபதியாயிருந்து வைத்து, ஆஶ்ரிதபரித்ராணார்த்த2மாக ஸ்வாஸதா4ரண தி3வ்யரூபத்தோடே வந்து பிறந்தருளி, ஆஶ்ரிதவிரோதி4 நிரஸநைக ஸ்வபா4வனாய் அநாலோசிதகு3ண தோ3ஷமாக ஸமஸ்தாஶ்ரிதஜந பரித்ராணைக தா4ரகனாய், அத ஏவ எனக்கு ஸ்வாமியாயிருந்த எம்பெருமானுடைய இந்த ஆஶ்ரித ஸம்ஶ்லேஷைக தா4ரகத்வ ஸ்வரூபஸித்3த்4யர்த்த2ம் அவனைப் பற்றி, பின்னை ஒருகாலமும் விடேன் என்கிறார்.

பத்தாம் பாட்டு

சார்ந்த இருவல் வினைகளும் சரித்து மாயப் பற்றறுத்து*
தீர்ந்து தன்பால் மனம்வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்*
ஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ்மே லளவிறந்து*
நேர்ந்த உருவாய் அருவாகும் இவற்றி னுயிராம் நெடுமாலே

வ்யா:- (சார்ந்த) இப்படி என்னுடைய நிகர்ஷத்தைப் பாராதே என் பக்கலுள்ள ஸ்வஸம்ஶ்லேஷ விரோதி4யான மஹாபாபங்கள் எல்லாவற்றையும் போக்கி, பாபநிப3ந்த4நமான ப்ராக்ருதவிஷய ஸங்க3த்தையும் போக்கி, ப்ராப்யமும் ப்ராபகமும் தானே என்னும் வ்யவஸாய பூர்வகமாக அநவரத ஸ்வாநுஸந்தா4நைக போ4கனாம் – படி என்னைத்திருத்தி, பின்னை எனக்குத் திருநாட்டையும் தந்தருளுகைக்காக ஆகுவதே, எம்பெருமானுடைய ஸர்வஜ்ஞத்வ ஸர்வஶக்தித்வ பரமகாருணிகத்வாSSஶ்ரிதவத்ஸலத்வம் என்ற இப்படி அபர்யந்த கு3ணங்கள் எல்லாம் என்கிறார்.

பதினொன்றாம் பாட்டு

மாலே! மாயப் பெருமானே! மாமா யனே! யென்றென்று*
மாலே யேறி மாலருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்*
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட* இவைபத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே

வ்யா:- (மாலே) இப்படி, எம்பெருமானுடைய ஆஶ்சர்யமான சௌஶீல்ய வாத்ஸல்யாதி3 கல்யாண கு3ணங்களையும், ஆஶ்சர்யமான தி3வ்யசேஷ்டிதங்களையும் காலதத்வமெல்லாம் பேசினாலும், ஆராத அபி4நிவேஶத்தை உடையனாய், அந்த கு3ணங்களையே தா4ரகமாக உடையனான குருகூர்ச் சடகோபன் சொன்ன ஸர்வஜநபோ4க்3யமான ஆயிரத்தின்பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு எம்பெருமானை விஶ்லேஷிக்கையாகிற தீங்கில்லை என்கிறார்.

திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்

 ஆறாம் திருவாய்மொழி
பரிவதில்: ப்ரவேஶம்

 

முதல் பாட்டு

*பரிவதில் ஈசனைப் பாடி*
விரிவது மேவ லுறுவீர்*
பிரிவகை யின்றிநன் னீர்தூய்*
புரிவது வும்புகை பூவே

வ்யா:- (பரிவதில் ஈசனை) இப்படி எம்பெருமானுடைய சௌஶீல்யாதி3 கு3ணாநுப4வ ஜநிதமான தம்முடைய நிரவதி4க ப்ரீதியாலே, ஹேயப்ரத்யநீகனாய், ஸர்வேஶ்வரனாயிருந்த எம்பெருமானை நிரஸ்த ஸமஸ்த ப்ரதிப3ந்த4காராய்க்கொண்டு ஸர்வகாலமும் பிரியாதே திருப்பல்லாண்டு பாடி ஸம்ருத்34ராக வேணுமென்று அபேக்ஷையுடையராயிருந்து, தது3பாயப4க்தி யோகா3நுஷ்டா2ந்த்திலே ப்ரவ்ருத்தராய், ப4க்தியோகோ3சிதமான உபகரணத்3ரவ்யங்களுடைய து3ரோப4த்வத்தினாலும், ப4க்தி யோக3த்தை அவிகலமாக அநுஷ்டி2க்க முடியாமையாலும், ப4க்தி யோக3த்தை அநுஷ்டி2க்கமாட்டாதே விஷண்ணராயிருக்கிறவர் -களைக் குறித்து, ஸர்வஸுலப4மான பத்ர புஷ்ப கேவலதோயாத்3 யுபகரணங்களைக் கொண்டு, அவன் திருவடிகளிலே நீங்கள் ஏதேனும் ஓரடிமை செய்யிலும், அவனுடைய நிரவதி4கசௌஶீல்யத் தாலே அத்தைக் கைக்கொண்டருளும்; ஆனபின்பு தத்ஸமாராத4நத்துக்கு உசிதமான உபகரணங்களே து3ர்லப4மென்றும், தத்ஸமாராத4நத்தை அவிகலமாகச் செய்கை அரிதென்றும் விஷண்ணராகாதே அடிமை செய்யுங்கோள் என்கிறார்.

இரண்டாம் பாட்டு

மதுவார் தண்ணந் துழாயான்*
முதுவேத முதல் வனுக்கு*
எதுவேது என்பணி என்னாது*
அதுவே ஆட்செய்யு மீடே

வ்யா:- (மதுவார்) இப்படி எம்பெருமாபுக்கு அடிமை எளிதானாலென்? நிர்தோ3ஷமான அஶேஷவேத3 ப்ரதிபாத்3 யனுமாய், நிரவத்3யமான ஸ்வரூபரூபகு3ண விபூ4தியையும் உடையவனானவனுக்கு நாங்கள் அடிமைசெய்கைக்கு அர்ஹரோ? என்னில்; அடிமைசெய்கைக்கு அர்ஹதையாவது – தந்தாமுடைய அநர்ஹதையைப் பாராதொழிகை.

மூன்றாம் பாட்டு

ஈடும் எடுப்பும்இல் ஈசன்*
மாடு விடாதென் மனனே*
பாடும்என்நா அவன் பாடல்*
ஆடும் என்அங்கம் அணங்கே

அவ:- எத்தாலே? என்னில்; அடிமை செய்கையிலே அபேக்ஷையுடையாரை ஜாதி கு3ண வ்ருத்தாதி3களால் தண்ணியர் என்று பொகடும் ஸ்வபா4வனல்லமையாலே என்கிறார்.

வ்யா:- (ஈடுமெடுப்பும்) இப்ப்டி தனக்கு அடிமை செய்கையிலே அபேக்ஷையுடையராயிருப்பார்பக்கல் உத்கர்ஷாபகர்ஷம் பாராதே, அவர்கள் எல்லரையும் ஒக்க அடிமை செய்வித்துக்கொள்ளும் ஸ்வபா4வனாயிருந்த எம்பெருமானை, என்னுடைய ஸர்வகரணங் -களாலும் அநுப4வித்து, அநுப4வஜநித ப்ரீதியாலே தை3வாவிஷ்டரைப் போலே நின்று ஆடப்பெற்றேன் என்கிறார்.

நான்காம் பாட்டு

அணங்கென ஆடும் எனங்கம்*
வணங்கி வழிபடும் ஈசன்*
பிணங்கி அமரர் பிதற்றும்*
குணங்கெழு கொள்கையி னானே

வ்யா:- (அண்ங்கென) அந்யைர்நுபூ4யமாநமான கு3ணங்களிற்காட்டில் ஸ்வைரநுபூ4யமாநமான கு3ணங்களுக்கு, பரஸ்பரம் விவாத3மாக, உத்கர்ஷத்தை ப்ரதிபாதி3யாநின்று கொண்டு அயர்வறும் அமரர்கள் அக்ரமமாகக்கொண்டு அநுப4விக்கிற கல்யாணகு3ணங்கள் சேருகைக்குக் கொள்கலமாய், ஸர்வேஶ்வரனான எம்பெருமானை நான் அநுப4வித்து, ப்ரீத்யதிஶயத்தாலே தை3விஷ்கரைப்போலே அக்ரமமாக நின்று ஆடி அவனை வணங்கி அடிமை செய்யும் இதுவே ஸ்வபா4வமாகப் பெற்றேன் என்கிறார்.

ஐந்தாம் பாட்டு

கொள்கைகொ ளாமை இலாதான்*
எள்கல் இராகம் இலாதான்*
விள்கைவிள் ளாமைவி ரும்பி*
உள்கலந் தார்க்கு ஓரமுதே

அவ:- (கொள்கை) இப்படி நிஹேதுகமாகத் தாம்பெற்ற ஸம்ருத்3தி4யைத் தம்முடைய ப்ரீத்யதிஶயத்தாலே நடுவே பேசி, பின்னையும் ப43வத் பரிஸ்ர்யோந்முக2ராய்த் தங்களுடைய அநர்ஹதையாலே கூசியிருந்தவர்களைக் குறித்து, அவர்களுடைய கூச்சம் போம்படி, பின்னையும் எம்பெருமானுடைய கு3ணங்களைச் சொல்லுகிறார்.

வ்யா:- ஸ்வசரணயுக3ள பரிசர்யாபேக்ஷையுடையராயிருப்ப -ருடைய உத்கர்ஷாபகர்ஷம் பாராதே அடிமை செய்வித்துக் கொள்ளும் ஸ்வபா4வனென்னுமிடம், ‘’ஈடு மெடுப்பும்’’ என்னும் பாட்டாலே பிறந்தது; இனி, ‘’அவர்களை அடிமை செய்வித்துக் கொள்ளுமிடத்தில், அவர்களை எல்லாரையும் ஒக்க அந்தரங்க33ஹிரங்க3 ஸர்வஶேஷ வ்ருத்தியையும் செய்வித்துக்கொள்ளும் ஸ்வபா4வனுமாய், அவர்கள் பக்கல் ஸ்நேஹோபேக்ஷா வைஷம்யம் பண்ணாதே ஸமாநமாயிருக்கும். இப்படி ஶீலவானாயிருக்கிறவன் ஆஶ்ரயித்தாரெல்லார்க்கும் ஒக்கத் தன்னையே ப்ராப்வமாகக் கொடாதே, சிலர்க்கே தன்னைக் கொடுப்பானென்?’’ என்னில்; அதுக்குக் காரணம் – வேறே ஒரு ப்ரயோஜநத்தைப் பற்றித் தன்னை விடுகையும், தன்னையே ப்ராப்யமாகப்பற்றித் தன்னை விடாமையும்.  இவற்றைப் பார்த்து, தன்னையே ப்ராப்யமாகப் பற்றி விடாதவர்களுக்குத் தன்னையே போ4க்3யமாகக் கொடுக்கும்; அல்லாதார்க்குத் தன்னையொழிய ப்ரயோஜநாந்தரங்களைக் கொடுக்கும்.

ஆறாம் பாட்டு

அமுதம் அமரர்கட் கீந்த*
நிமிர்சுடர் ஆழி நெடுமால்*
அமுதிலும் ஆற்ற இனியன்*
நிமிர்திரை நீள்கட லானே

வ்யா:- (அமுதம்) ‘’ஆஶ்ரிதவத்ஸலனாய், ஆஶ்ரிதர்க்கு ஆத்மதா3நம் பண்ணும் ஸ்வபா4வனாய், நிரவதி4க தேஜோவிஶிஷ்ட – னான திருவாழியை ஏந்தின அழகாலே அம்ருதத்திற்காட்டிலும் பரமபோ4க்3யனாயிருந்தவனுகைய திருவாழியும் கையும் கண்டு வைத்து, சிலர் அதிக்ஷுத்3ரமான ப்ரயோஜநாந்தரங்களைக் கொண்டு போவதே! என்ன பா4க்3யஹீநரோ!’’ என்றுகொண்டு, கீழ்ப்பாட்டில் ப்ரஸ்துதமான ப்ரயோஜநாந்தரார்த்தி2களுடைய இழவை அநுஸந்தி4த்து இன்னாதாகிறார்.

ஏழாம் பாட்டு

நீள்கடல் சூழ் இலங் கைக்கோன்*
தோள்கள் தலைதுணி செய்தான்*
தாள்கள் தலையில் வணங்கி*
நாள்கடலைக் கழிமினே

வ்யா:- (நீள்கடல்) இப்படி பரமஶீலவானாய், ஆஶ்ரித விரோதி4 நிரஸநைக போ43னாயிருந்த எம்பெருமானுடைய  திருவடிகளை, ஒன்றும் கூசாதே உங்கள் தலையாலே வண்ங்கிக் கொண்டு காலத்தைப் போக்கிக்கொள்ளுங்கள் என்கிறார்.

எட்டாம் பாட்டு

கழிமின்தொண் டீர்கள் கழித்து*
தொழுமின் அவனைத் தொழுதால்*
வழிநின்ற வல்வினை மாள்வித்து*
அழிவின்றி ஆக்கம் தருமே

வ்யா:- (கழிமின்) அவனைத்தொழுமிடத்து, முந்துற தத்3வ்யதிரிக்த ஸர்வ விஷயங்களையும் விடுங்கோள். அவனைத்தொழவே, ஸ்வவிஷய கைங்கர்ய ப்ரதிப3ந்த4கமான உங்கள் வினைகளைப்போக்கி, நித்யஸித்34மான அந்தக் கைங்கர்யரூப மஹா ஸம்பத்தை உங்களுக்குத் தந்தருளும் என்கிறார்.

ஒன்பதாம் பாட்டு

தரும வரும்பய னாய*
திருமக ளார்தனிக் கேள்வன்*
பெருமை யுடைய பிரானார்*
இருமை வினைகடிவாரே

வ்யா:- (தரும்) ப்ரதிப3ந்த4கங்களைப்போக்கி அந்தப் பெறுதற்கரிதான ஸம்பத்தைத் தந்தருளுமிடத்தில், பிராட்டியோடே கூடநின்று தந்தருளும் என்கிறார்.

பத்தாம் பாட்டு

கடிவார் தீய வினைகள்*
நொடியா ரும்அள வைக்கண்*
கொடியா அடுபுள் உயர்த்த*
வடிவார் மாதவ னாரே

வ்யா:- (கடிவார்) பிராட்டியோடே கூட நின்று, பெரியதிருவடிக்குக் கொடுத்தருளுமாபோலே தந்தருளும்; அதுக்கு ப்ரதிப3ந்த4கங்களையும் ஒரு க்ஷணத்திலே போக்கியருளும் என்கிறார்.

பதினொன்றாம் பாட்டு

*மாதவன் பால்சட கோபன்*
தீதவ மின்றி உரைத்த*
ஏதமில் ஆயிரத்து இப்பத்து*
ஓதவல் லார்பிற வாரே

வ்யா:- (மாதவன்பால்) கவிபாடுகிற தமக்கும், பாட்டுண்டருளுகிற எம்பெருமானுக்கும், இக்கவிகளுக்கும் ஒரு தீங்கு இல்லாதபடி, மாதவன்பால் சடகோபனுரைத்த ஆயிரத்து இப்பத்து ஓதவல்லார், ப43வத்ஸம்ஶ்லேஷ விரோதி4யான ஸம்ஸாரத்தில் புகார் என்கிறார்.

திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்

ஏழாம் திருவாய்மொழி
பிறவித்துயர்: ப்ரவேஶம்

v  v  v முதல் பாட்டு

பிறவித் துயரற ஞானத்துள் நின்று*
துறவிச் சுடர்விளக்கம் தலைப் பெய்வார்*
அறவனை ஆழிப் படைஅந் தணனை*
மறவியை யின்றி மனத்துவைப் பாரே

வ்யா:- (பிறவித்துயர்)  இப்படி பரமைகாந்திகளான இவர்களோடு யாதொருபடி ஸம்ஶ்லேஷித்தருளும், அப்படியே  கைவல்யாதி3 க்ஷுத்3ர ப்ரயோஜநார்த்த2மாகத் தன்னை ஆஶ்ரயித்து வர்த்திக்கிற அவர்களோடு ஒரு வாசிபாராதே ஸம்ஶ்லேஷிக்கும் ஸ்வபா4வதையாகிற எம்பெருமானுடைய பரமதா4ர்மிகத்வத்தை அநுஸந்தி4த்து ப்ரீதராய், ‘என்ன தா4ர்மிகனோ! என்ன தா4ர்மிகனோ!’ என்கிறார்.

இரண்டாம் பாட்டு

வைப்பாம் மருந்தாம் அடியரைவல்வினைத்
துப்பாம் புலனைந்தும் துஞ்சக் கொடான் அவன்*
எப்பால் யவர்க்கு(ம்) நலத்தால் உயர்ந்துயர்ந்து*
அப்பா லவன் எங்க ளாயர் கொழுந்தே

அவ:- (வைப்பாம்) பின்னையும், தன் திருவடிகளையே ‘’பரமப்ராப்யம்’’ என்று தன்னை ஆஶ்ரயித்தார்பக்கல் எம்பெருமானுடைய அபி4நிவேஶத்தைச் சொல்லுகிறார்.

வ்யா:- ஆநந்தா3தி3 கல்யாணகு3ணங்களால் ப்3ரஹ்மாதி3களிற் காட்டிலும் உத்க்ருஷ்டனாய் வைத்து, ஆஶ்ரித ஸஜாதீயனாய் வந்து  பிறந்தருளி, அவர்களுடைய ஸ்வஸம்ஶ்லேஷ விரோதி4யான ஸம்ஸாரத்தைப் போக்குகைக்கு மருந்துமாய், ப்ராப்யமுமா யிருக்கும் என்கிறார்.

மூன்றாம் பாட்டு

ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்*
மாயப் பிரானைஎன் மாணிக்கச் சோதியை*
தூய அமுதைப் பருகிப் பருகி*என்
மாயப் பிறவி மயர்வறுத் தேனே

வ்யா:- (ஆயர்) இப்படி, ஆஶ்ரிதவாத்ஸல்ய ஸொஶீல்ய ஸௌந்த3ர்ய – ஔஜ்ஜ்வல்யாதி3 கல்யாண்கு3ண விஶிஷ்டனாயிருந்த எம்பெருமானாகிற தூய அமுதைப்பருகிப் பருகி, ஸகலகாலமும் அவனோடு ஸம்ஶ்லேஷிக்கைக்கு விரோதி4யான ஸம்ஸாரத்தைப் போக்கினேன் என்கிறார்.

நான்காம் பாட்டு

மயர்வற என்மனத்தே மன்னினான் தன்னை*
உயர்வினை யேதரும் ஒண்சுடர்க் கற்றையை*
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தைஎன்
இசைவினை என்சொல்லி யான்விடு வேனோ?

அவ:- (மயர்வற) இப்படி எம்பெருமானோடு வ்ருத்தமான ஸம்ஶ்லேஷத்துக்கு ஒருபடியாலும் மேல் ஒழிவில்லை என்கிறார்.

வ்யா:- தன் திறத்தில் எனக்குள்ள அஜ்ஞாநமெல்லாம் போம்படி என்னுள்ளே புகுந்தருளி, தன்னுடைய கல்யாணமான கு3ணஸ்வரூபங்களை அத்யந்த விஶத3மாம்படி எனக்குக் காட்டியருளி, தனக்கு ஸத்3ருஶரான A அயர்வறும் அமரர்களோடு ஸம்ஶலேஷிக்கும்போலே என்னோடு ஸம்ஶ்லேஷித்தருளினவனை எங்ஙனே நான் விடும்படி? என்கிறார்.

ஐந்தாம் பாட்டு

விடுவேனோ என் விளக்கைஎன் னாவியை*
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை*
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்*
விடவேசெய்து விழிக்கும் பிரானையே?

வ்யா:- (விடுவேனோ) நிர்ஹேதுகமாக, திருவாய்ப்பாடியில் பெண்பிள்ளைகளுடைய கண்களிலே தோற்றி, மற்றொருத் தருக்கும் தோற்றாதபடி களவிலே சில செயல்களைச் செய்தும், திருக்கண்களாலே  பார்த்தருளியும் அவர்களை வஶீகரித்து, அவர்களோடு ஸம்ஶ்லேஷித்தாற்போலே நிர்ஹேதுகமாக வந்து, எனக்குத் தன்னுடைய கு3ணசேஷ்டிதங்களைக்காட்டி இவற்றாலே என்னை வஶீகரித்து, எனக்கு தா4ரகனாய், என்னோடே கலந்தருளின அக்கலவியாலே என்னை உய்யக்கொள்கின்ற நாதனை நான் விடுவேனோ? என்கிறார்.

ஆறாம் பாட்டு

பிரான் பெருநிலம் கீண்டவன்பின்னும்
விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்*
மராமரம் எய்த மாயவன்என்னுள்
இரானெனில் பின்னை யானொட்டு வேனோ?

வ்யா:- (பிரான்) அவந்தான் விடில் செய்வதென்? என்னில்; தன்னுடைய அதிமநோஹரமான தி3வ்யசேஷ்டிதங்களாலும் அழகாலும் என்னைத் தோற்பித்து அடிமையாக்கினவன் என்னை விடுவேன் என்றால், நான் அவனை விடவொட்டுவேனோ?  என்கிறார்.

ஏழாம் பாட்டு

யானொட்டி யென்னுள் இருத்துவ மென்றிலன்*
தானொட்டி வந்து என் தனிநெஞ்சை வஞ்சித்து*
ஊனொட்டி நின்று என் னுயிரில் கலந்(து)* இயல்
வானொட்டு மோஇனி யென்னை நெகிழ்க்கவே?

வ்யா:- (யான் ஒட்டி) என்னுடைய பா4க்3யஹாநியாலே அவன் என்னை விட்டு, எனக்கும் ஒரு பு3த்3தி4 தன்னோடு பிறப்பிக்கில் செய்வதென்? என்னில்; என்னுடைய  கு3ணசேஷ்டிதா -விஷ்காரத்தாலே என் நெஞ்சை வஞ்சித்து அகப்படுத்தி, இந்த ஹேயமான ப்ரக்ருதியோடே ஸம்ப3ந்தி4த்திருக்கிற ஆத்மாவோடே ஸம்ஶ்லேஷித்து வர்த்திக்கிற இவன், தன்னை விடுவேன் என்றால் என்னை விடவொட்டுமோ? என்கிறார்.

எட்டாம் பாட்டு

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நல்நெஞ்சந்
தன்னைஅகல்விக்கத் தானும்கில் லான்இனி*
பின்னை நெடும்பணைத் தோள்மகிழ் பீடுடை*
முன்னை அமரர் முழுமுதலானே

வ்யா:- (என்னை) ஆஶ்ரித வத்ஸலனாகையாலே அவந்தானும் என்னைவிடான்; என்பக்கலுள்ள கு3ணஹாநியாலே என்னை விட நினைக்கிலும், ஸர்வேஶ்வரன் தன்னாலும் என்னுடைய நெஞ்சை விடமுடியாது; நெஞ்சோடுள்ள ஸம்ப3ந்த4த்தாலே என்னையும் விடமுடியாது.  நெஞ்சை விடமுடியாதொழிவானென்? என்னில், அது நப்பின்னைப்பிராட்டி யடிமையன்றோ என்கிறார்.

ஒன்பதாம் பாட்டு

அமரர் முழுமுதல் ஆகிய ஆதியை*
அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை*
அமர வழும்பத் துழாவிஎன் னாவி*
அமரத் தழுவிற்று இனி அகலுமோ?

வ்யா:- (அமரர்)  A அயர்வறும் அமரர்கள் அதிபதியாய், அர்த்தி2கல்பகனாய், நிரதிஶய ஸௌந்த3ர்யத்தை உடையனான எம்பெருமானோடே ப்ருத2ங்நிர்தே3ஶாSந்ர்ஹமாம்படி ஸம்ஶ்லேஷிக்கையாலே, இனி என்னாலும் அவனை விடமுடியாது என்கிறார்.

பத்தாம் பாட்டு

அகலில் அகலும் அணுகில் அணுகும்*
புகலும் அரியன்  பொருவல்லன் எம்மான்*
நிகரில் அவன்புகழ் பாடி இளைப்பிலம்*
பகலும் இரவும் படிந்து குடைந்தே

வ்யா:- (அகலில் அகலும்) ‘’ப்ரயோஜநாந்தரார்த்த2மாகத் தன்னை ஆஶ்ரயித்துத்தன் பக்கலிலே அந்த ப்ரயோஜநத்தைக் கொண்டு தன்னை அகலில், தான் இழவாளனாய்க் கொண்டு அவனை அகலும் ஸ்வபா4வனாய், அவர்களே அந்த ப்ரயோஜநத்தை விட்டுத் தன் திறத்திலே அல்பாபி4முக்2யத்தைப் பண்ணினால், அவர்கள் பக்கல் நிரதிஶயாபி4நிவேஶத்தோடே விழும் ஸ்வபா4வனாய், ப்ரதிகூலர்க்கு து3ஷ்ப்ராபனாய், ஸமாஶ்ரயணோந் முக2ராயிருப்பார்க்கு ஒரு தடையின்றியே புக்கு ஆஶ்ரயிக்கலாம் படி எளியனாய், எனக்கு ஸ்வாமியாயிருந்த எம்பெருமானுடைய ஒப்பில்லாத கல்யாணகு3ணங்களிலே படிந்து குடைந்து பாடி, பின்னையும் த்ருப்தனாகப் போருகிறிலேன்’’ என்று கொண்டு, தம்மோடு ஸம்ஶ்லேஷித்தருளின எம்பெருமானுடைய கு3ணங்களை அநுப4விக்கிறார்.

பதினொன்றாம் பாட்டு

*குடைந்துவண் டுண்ணுந் துழாய்முடி யானை*
அடைந்த தென்குரு கூர்ச்சட கோபன்*
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து*
உடைந்து நோய்களை ஓடு விக்குமே

வ்யா:- (குடைந்து) இத்திருவாய்மொழி வல்லாருடைய ஸமஸ்த து3:க்க2ங்களையும் இத்திருவாய்மொழிதானே உடைந்தோடும்படி பண்ணும் என்கிறார்.

திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்

 

ப்ரவேம்    1-8

ஓடும்புள்ப்ரவேம்

எட்டாம் திருவாய்மொழி
ஓடும்புள்: ப்ரவேஶம்

v  v  v

(ஓடும்புள்) இப்படி தம்மோடு கலந்தருளின எம்பெருமானுடைய தி3வ்யைஶ்வர்யம் சொல்லுகிறது.

முதல் பாட்டு

ஓடும் புள்ளேறி*
சூடும் தண்டுழாய்*
நீடு நின்றவை*
ஆடு மம்மானே

வ்யா:- (ஓடும்புள்) அதில் முதற்பாட்டில், திருநாட்டில் ஐஶ்வர்யம் சொல்லுகிறது.

இரண்டாம் பாட்டு

அம்மா னாய்ப்பின்னும்*
எம்மாண் புமானான்*
வெம்மா வாய்கீண்ட*
செம்மா கண்ணனே

வ்யா:- (அம்மானாய்) நித்யஸித்34மான அந்த ஐஶ்வர்யத்தின் மேலே அஸங்க்2யேய தி3வ்யாவதாரரூபமான நிரவதி4கைஶ்வர்யத்தை உடையவனானான் என்கிறார்.

மூன்றாம் பாட்டு

கண்ணா வானென்றும்*
மண்ணோர் விண்ணோர்க்கு*
தண்ணார் வேங்கட*
விண்ணோர் வெற்பனே

வ்யா:- (கண்ணாவான்) அந்த ஐஶ்வர்யத்தின்மேலே, அயர்வறும் அமரர்க்கும் எந்த லோகத்திலுள்ள ஆத்மாக்களுக்கு -மொக்க த்3ருஷ்டிபூ4தனாய்க்கொண்டு, அயர்வறும் அமரர்களுக்கும் ப்ராப்யமான திருமலையிலே நிற்கையாகிற மஹாஸம்பத்தை உடையனாயிருக்கும் என்கிறார்.

நான்காம் பாட்டு

வெற்பை யொன்றெடுத்து*
ஒற்க மின்றியே*
நிற்கு மம்மான்சீர்*
கற்பன் வைகலே

வ்யா:- (வெற்பை) ஏவம்வித4மான ஐஶ்வர்ய பரம்பரைகளையுடையனான எம்பெருமான் தன்னுடைய காருண்யாதி3 கல்யாணகு3ணங்களைக் காட்டியருள, நானும் அவற்றைக் கண்டு அநுப4வித்து, அவ்வநுப4வஜநிதப்ரீத்யதிஶயம் என்னைக் கற்பிக்க, ஸர்வகாலமும் இந்த கு3ணங்களைக் கற்கப்பெற்றேன் என்கிறார்.

ஐந்தாம் பாட்டு

வைகலும்வெண்ணெய்*
கைகலந்துண்டான்*
பொய்கலவாதென்*
மெய்கலந்தானே

வ்யா:- (வைகலும்) A தாரார் தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி- ஆராதவெண்ணெய் விழுங்கினவன், வெண்ணெ யளைந்த திருவுடம்போடே கூட வந்து, தன்னுடைய ஆந்ருஶம்ஸ்ய கு3ண ரக்ஷணார்த்த2மாக கார்யபு3த்3த்4யா என்னோடு ஸம்ஶ்லேஷிக்கையன்றியே, என்னோடு ஸம்ஶ்லேஷித்தல்லது த4ரிக்கமாட்டாத ஸ்வபா4வனாய்க் கொண்டு என்னுடைய இந்த உடம்போடே ஸம்ஶ்லேஷித்தருளினான் என்கிறார்.

ஆறாம் பாட்டு

கலந்தென் னாவி*
நலங்கொள் நாதன்*
புலன்கொள் மாணாய்*
நிலம்கொண் டானே

வ்யா:- (கலந்து என் ஆவி) இப்படி என்னோடே கலந்த கலவியாலே தோற்பித்து அடிமையாக்கின இவன், எனக்கு போ4க்3யமாகைக்காக ஸகலஜந மநோநயநஹாரியான தன்னுடைய அழகிய திருவடினைக் காட்டி, மஹாப3லியை வஶீகரித்து, இந்த லோகத்தையும் கொண்டான் என்கிறார்.

ஏழாம் பாட்டு

கொண்டா னேழ்விடை*
உண்டா னேழ்வையம்*
தண்டா மஞ்செய்துஎன்
எண்தா னானானே

வ்யா:- (கொண்டான்) திருநாட்டிற்பண்ணும் ப்ரேமத்தை என் பக்கலிலே பண்ணி, தன்னோடு ஶேஷத்வேந ஸம்ஶ்லேஷிக்க வேணும் என்றுள்ள என்னுடைய மநோரத2த்தைத் தான் கைக்கொண்டு என்னோடு ஸம்ஶ்லேஷித்தருளின இவன், எனக்கு போ4க்3யமாகைக்காக, இன்னம் எருதேழடர்த்தது தொடக்கமாக அபர்யந்த தி4வ்ய சேஷ்டிதங்களைப் பண்ணியருளா நின்றான் என்கிறார்.

எட்டாம் பாட்டு

ஆனா னானாயன்*
மீனோ டேனமும்*
தானா னானென்னில்*
தானாயசங்கே

வ்யா:- (ஆனான்) தன்னுடைய தி3வ்யசேஷ்டிதமாத்ரமேயோ எனக்கு போ4க்3யமாகச் செய்தருளிற்று? தன்னுடைய தி3வ்யாவதாரங்களுமெல்லாம், என்பக்கலுள்ள ஸ்ங்க3த்தாலே எனக்கு போ4க்3யமாகச் செய்தருளினான் என்கிறார்.

ஒன்பதாம் பாட்டு

சங்கு சக்கரம்*
அங்கை யிற்கொண்டான்*
எங்கும் தானாய*
நங்கள் நாதனே

வ்யா:- (சங்குசக்கரம்) இப்படி எனக்காக ஸர்வயோநிகளிலும் வந்து பிறந்தருளுகிறான்; தன்னுடைய திருக்கைகளில் அழகிய திருவாழியும் திருச்சங்கமும் ஏந்தி, அவ்வழகோடுகூட வந்து பிறந்தான் என்கிறார்.

பத்தாம் பாட்டு

நாதன் ஞாலங்கொள்*
பாதன் என்னம்மான்*
ஓதம் போல்கிளர்*
வேத நீரனே

வ்யா:- (நாதன்) இப்படி எனக்காக அஸங்க்2யேயமான திருவவதாரங்களைப்பண்ணியருளின இவனுடைய இந்த நிரவதி4கமான ஆஶ்ரித வ்யாமோஹத்தைப் பேசுமிடத்தில், கடலோதம் கிளர்ந்தாற்போலே கிளர்ந்துகொண்டு அவனைப் பேசக்கடவிய வேத3ங்களே பேசவேண்டாவோ? என்கிறார்.

பதினொன்றாம் பாட்டு

*நீர்புரை வண்ணன்*
சீர்சட கோபன்*
நேர்த லாயிரத்து*
ஓர்த லிவையே

வ்யா:- (நீர்புரை) அதிஶீதளமாய் ஸர்வபோ4க்3யமான திருநிறத்தையுடையனாயிருந்த எம்பெருமானுடைய ஆஶ்ரித வாத்ஸல்யமாகிற மஹாகு3ணத்தை உள்ளபடியே பேசிற்று இத்திருவாய்மொழி என்கிறார்.

திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்

ப்ரவேம்    1-9

இவையும்ப்ரவேம்

 

ஒன்பதாம் திருவாய்மொழி
இவையும்: ப்ரவேஶம்

 

(இவையும் அவையும்) இப்படி, எம்பெருமான் என்னோடு ஸம்ஶ்லேஷித் தருளினான் என்கிறார்.

முதல் பாட்டு

*இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்*
எவையும் யவரும்தன் னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்*
அவையுள் தனிமுதல் எம்மான் கண்ண பிரான்என் னமுதம்*
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழலு ளானே

வ்யா:- ஸ்வஸங்கல்பக்ருத நிகி2லஜக3து33ய விப4வலய லீலனாய், ஸர்வ ஜக3தா3த்மபூ4தனானவன், என்னோடு ஸம்ஶ்லேஷி – க்கையிலுள்ள அபி4நிவேஶத்தாலே என்னை வஶீகரிக்கைக்காக என்னுடைய சூழலிலே வந்து புகுந்தான் என்கிறார்.

இரண்டாம் பாட்டு

சூழல் பலபல வல்லான் தொல்லையங் காலத்து உலகைக்*
கேழலொன் றாகி யிடந்த கேசவன் என்னுடை அம்மான்*
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ண லரியான்*
ஆழ நெடுங்கடல் சேர்ந்தான் அவனென் னருகலி லானே

வ்யா:- (சூழல் பலபல) இப்படி என்னுடைய சூழலிலே வந்து புகுந்து, தன்னுடைய தி3வ்யசேஷ்டிதங்களையும், ப்3ரஹ்மாதி3வாங் மநஸாபரிச்சே2த்3யமான தன்னுடைய கல்யாணகு3ணங்களையும் எனக்குக் காட்டி என்னை வஶீகரித்து, பின்னை என் அருகே எழுந்தருளினான் என்கிறார்.

மூன்றாம் பாட்டு

அருகலி லாய பெருஞ்சீர் அமரர்க ளாதி முதல்வன்*
கருகிய நீலநன் மேனி வண்ணன்செந் தாமரைக் கண்ணன்*
பொருசிறைப் புள்ளுவந் தேறும் பூமக ளார்தனிக் கேள்வன்*
ஒருகதி யின்சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே

வ்யா:- (அருகலில்) ஹேயப்ரத்யநீக கல்யாணாநவதி4கா -ஸங்க்2யேய கு3ணவிஶிஷ்டனாய், அயர்வறும் அமரர்களதிபதியாய, நிரதிஶய ஸௌந்த3ர்ய ஸௌக3ந்த்4ய ஸௌகுமார்ய லாவண்ய யௌவநாத்3யபரிமித கல்யாணகு3ண பரிபூர்ணனாய், பெரிய திருவடியை தி3வ்ய வாஹநமாக உடையனாய், ஶ்ரிய:பதியாயிருந்த எம்பெருமான் என் அருகேவந்து பின்னையொருபடியால் என்னோடு ஸம்ஶ்லேஷித்து விட்டிலன்; ஸர்வப்ரகாரத்தாலும் ஸம்ஶ்லேஷியா நின்றான் என்கிறார்.

நான்காம் பாட்டு

உடனமர் காதல் மகளிர் திருமகள் மண்மகள் ஆயர்
மடமகள்என்றிவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே*
உடனவை ஒக்க விழுங்கி ஆலிலைச் சேர்ந்தவன் எம்மான்*
கடல்மலி மாயப் பெருமான் கண்ணன்என் ஒக்கலை யானே

அவ:- (உடன் அமர்) இனிமேல் அவன் கலந்தருளின க்ரமத்தைச் சொல்லுகிறார்.

வ்யா:- பெரிய பிராட்டியாரும், ஸ்ரீ பூ4மிப்பிராட்டியும், நப்பின்னைப் பிராட்டியும் அவனுக்கு தி3வ்யமஹிஷிகள்; ப்ருதி2வ்யந்தரிக்ஷாதி3 ஸர்வ லோகங்களும் அவனுக்கு லீலோபகரணம்; இந்த லோகங்களி னுடைய ஸ்ருஷ்டி ஸ்தி2தி ஸம்ஹாராதி3கள் அவனுக்கு லீலை; இன்னம் அபர்யந்தமாய், ஆஶ்சர்யமான கல்யாண கு3ணங்களை யுடையனாயிருந்த கண்ணன், யசோதைப் பிராட்டி ஒக்கலையிலே யிருந்தருளுமாபோலே என்னுடைய ஒக்கலையிலே ஏறியருளினான் என்கிறார்.

ஐந்தாம் பாட்டு

ஒக்கலை வைத்து முலைப்பா லுண்ணென்று தந்திட வாங்கி*
செக்கஞ் செகஅன்று அவள்பால் உயிர்செக உண்ட பெருமான்*
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக*
ஒக்கவும் தோற்றிய ஈசன் மாயன்என் நெஞ்சினுளானே

வ்யா:- (ஒக்கலை) ப்3ரஹ்மாதி3ள்தா2வராந்தமான ஸர்வ ஜக3த்துக்கும் ஸ்ரஷ்டாவாய், ஸர்வஜக3ந்நியந்தாவாய், ஆஶ்சர்ய பூ4தனுமாய், விரோதி4நிரஸநஸ்வபா4வனுமாயிருந்தவன், என் ஒக்கலையிலே தானிருந்த இருப்பு எனக்கு ஸாத்மித்தாவாறே, என் மார்விலே வந்து இருந்தருளினான் என்கிறார்.

ஆறாம் பாட்டு

மாயன்என் னெஞ்சி னுள்ளான் மற்றும் யவர்க்கும் அதுவே*
காயமும் சீவனும் தானே காலும் எரியு மவனே*
சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசர மல்லன்*
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணை யானே

வ்யா:- (மாயன்) தே3வாதி3ஶரீராதி3களுக்கும் தத3ந்தர் வர்த்திகளான ஜீவர்களுக்கும், ப்ருதி2வ்யாதி3 பூ4தங்களுக்கும் ஆத்மாவாய், ஆஶ்ரிதஸுலப4னாய், அநாஶ்ரிதர்க்கு அபூ4மியாய், அபூ4மியாமிடத்து, அவர்கள் எத்தனையேனும் உத்க்ருஷ்டரே யாகிலும், அவர்கள் மநஸ்ஸுக்குங்கூட அபூ4மியாயிருந்தவன்தான் என் மார்விலே எழுந்தருளியிருந்த இருப்பு ஸாத்மித்தவாறே, ஸம்ஶ்லேஷைக ப்ரயோஜநனாய், தன்னுடைய கு3ணங்களாலும் செயல்களாலும் என்னை நைவித்து என்னை அறிவழித்துக் கொண்டு, பெரிய திருவடி திருத்தோளிலே இருந்தருளுமாபோலே என்னுடைய தோளிலே ஏறியிருந்தருளினான;  இப்படி மற்றும் ஆரேனுமொருவருக்குச் செய்தருளினானோ? இவனுக்கு என்பக்கலுள்ள அபி4நிவேஶமிருக்கும்படியே ஈது! என்கிறார்.

ஏழாம் பாட்டு

தோளிணை மேலும்நன் மார்பின் மேலும் சுடர்முடி மேலும்*
தாளிணை மேலும் புனைந்த தண்ணந் துழாயுடை யம்மான்*
கேளிணை யொன்றுமி லாதான் கிளரும் சுடரொளி மூர்த்தி*
நாளணைந் தொன்றும் அகலான் என்னுடை நாவினு ளானே

வ்யா:- (தோளிணை) தம்மோடு கலந்த்ருளுகைக்காக எம்பெருமான் தன்னுடைய நிரவதி4கமாய், நிருபமமாய், ஸ்வாபா4விகமான அழகுக்குமேலே, என்னோடே ஸம்ஶ்லேஷிக்கைக்காகத் தண்ணந்துழாய் கொண்டு அணிந்து, ஒரு க்ஷணமாத்ரம் என்னை விடில் த4ரிக்கமாட்டாத ஸ்வபா4வனாய்க்கொண்டு என்னுடைய நாவிலே வந்து புகுந்தருளினான் என்கிறார்.

எட்டாம் பாட்டு

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக் கெல்லாம்*
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே*
பூவியல் நால்தடந் தோளன் பொருபடை யாழிசங் கேந்தும்*
காவிநன் மேனிக் கமலக் கண்ணன்என் கண்ணி னுளானே

வ்யா:- (நாவினுள்) ஸாங்க3ஸகலவேத3 ப்ரதிபாத்3யனாய்,  தத்ஸ்வரூபஸ்தி2தி ப்ரவ்ருத்தி ஹேதுபூ4தனாய், நிகி2லஜக3து33ய விப4வ லய லீலனாய், புஷ்பஹாஸ ஸுகுமாரனாய், சதுர்பு4ஜனாய், ஶங்க2சக்ர க3தா34ரனாய், இந்தீ3வரத3ள ஶ்யாமனாய், கமலபத்ராக்ஷனாயிருந்தவன், என் கண்ணுக்குள்ளே புகுந்தருளினான் என்கிறார்.

ஒன்பதாம் பாட்டு

கமலக்கண்ணன்என்கண்ணினுள்ளான் காண்பன்அவன்கண்க ளாலே*
அமலங்க ளாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி*
கமலத் தயன்நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி*
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என்நெற்றியு ளானே

வ்யா:- (கமலக்கண்ணன்) ப்3ரஹ்மாதி3 ஸ்தா2வராந்தமான ஸகல ஜக3த்தையும் படைத்தருளின கமலக்கண்ணன், என் கண்ணினுள்ளே புகுந்தருளினான்; நானும் அவனை என் கண்களால் காணப் பெற்றேன்; அவனும் தன்னுடைய ஶீதளமான அழகிய திருக்கண்க ளாலே என்னுடைய ஸமஸ்த ஸந்தாபங்களும் போம்படி என்னைக் குளிரப் பார்த்தருளாநின்றான்;  இப்படி மற்றுமுள்ள ஶ்ரோத்ராதி3 ஸகல கரணங்களாலும் அவனையே பு4ஜிக்கப்பெற்றேன், நிரவதி4கமான நிர்வ்ருதி எனக்கு ஸாத்மித்த -வாறே, பின்னை என் நெற்றியுள் நின்றருளினான் என்கிறார்.

பத்தாம் பாட்டு

நெற்றியுள் நின்று என்னை யாளும் நிரைமலர்ப் பாதங்கள் சூடி*
கற்றைத் துழாய்முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்*
ஒற்றைப் பிறையணிந் தானும் நான்முக னும்இந் திரனும்*
மற்றை யமரரும் எல்லாம் வந்து எனது உச்சியு ளானே

வ்யா:- (நெற்றியுள்) ப்3ரஹ்மேஶாநாதி3 ஸகல தே3வதை -களும், நெற்றியுடன் நின்று என்னை அடிமைகொண்டருளுகிற இந்தத் திருவடிமலர்களைச் சூடிக்கொண்டு, கற்றைத்துழாய் முடிக்கோலக் கண்ணபிரானைத் தொழுவார்; அவனே ஸர்வேஶ்வரனாய், அவாப்த ஸமஸ்தகாமனான எம்பெருமான்; என் நெற்றியுள் நின்றருளின நிலை எனக்கு ஸாத்மித்தவாறே, பின்னை என் உச்சியுள்ளே வந்து புகுந்தருளினான் என்கிறார்.

பதினொன்றாம் பாட்டு

*உச்சியுள் ளேநிற்கும் தேவ தேவற்குக் கண்ண பிராற்கு*
இச்சையுள் செல்ல உணர்த்தி வண்குரு கூர்ச்சட கோபன்*
இச்சொன்ன ஆயிரத் துள் இவையுமோர் பத்துஎம்பி ராற்கு*
நிச்சலும் விண்ணப்பம்செய்ய நீள்கழல் சென்னி பொருமே

வ்யா:- (உச்சியுள்ளே) இப்படி உச்சியுள்ளே நிற்கையாலே ஸர்வேஶ்வரனானவனுக்கு இப்படிச் சொன்ன இத்திருவாய்மொழி -யை எம்பெருமானுக்கு நிச்சலும் விண்ணப்பஞ்செய்ய, நீள் கழல் சென்னி பொரும் என்கிறார்.

திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்

ப்ரவேம்    1-10

பொருமாநீள்ப்ரவேம்

பத்தாம் திருவாய்மொழி
பொருமாநீள்: ப்ரவேஶம்

v  v  v

(பொருமாநீள் படை) இப்படி எம்பெருமான் தம்மோடே கலந்த கலவியால் தமக்குப் பிறந்த நிரவதி4கமான நிர்வ்ருதியாலே அக்கலவியைப் பேசுகிறார்.

முதல் பாட்டு

*பொருமாநீள்படை ஆழிசங்கத்தொடு*
திருமாநீள்கழல் ஏழுலகும்தொழ*
ஒருமாணிக் குறளாகிநிமிர்ந்தஅக்
கருமாணிக்கம் என்கண்ணுளதாகுமே

வ்யா:- விரோதி4நிரஸநஸமயத்தில் அவர்களுக்குத் தக்கபடியன்றியே, அதி4கமாகக் கிளர்ந்துகொண்டு செல்லும் ஸ்வபா4வமான திருவாழி திருச்சங்கு முதலான தி3வ்யாயுத4ங்களை ஏந்தின அவ்வழகையும், அள்விறந்த அழகையுடைத்தான தன் திருவடியையும் ஸர்வாத்மாக்களும் கண்டு தொழும்படியாக ஒரு மாணிக்குறளாகி நிமிர்ந்த அக்கருமாணிக்கம் அவ்வழகோடே என் கண்ணுள்ளே இருந்தது என்கிறார்.

இரண்டாம் பாட்டு

கண்ணுள் ளேநிற்கும் காதன்மை யால்தொழில்*
எண்ணி லும்வரும் என்இனி வேண்டுவம்*
மண்ணும் நீரும் எரியும்நல் வாயுவும்*
விண்ணு மாய்விரி யும்எம் பிரானையே

வ்யா:- (கண்ணுள்ளே நிற்கும்) ஸர்வஜக3தீ3ஶ்வரனான எம்பெருமான், தன்னுடைய அபி4நிவேஶத்தாலே, என்னுடைய மநோரத2த்தை விஞ்சும்படி என்னுடைய கண்கள் தொடக்கமாக -வுள்ள ஸர்வகரணங்களுக்கும் போ4க்3யமாக, இனி நமக்கு வேண்டுவதுண்டோ? என்கிறார்.

மூன்றாம் பாட்டு

எம்பி ரானைஎந் தைதந்தை தந்தைக்கும்
தம்பி ரானைதண் தாமரைக் கண்ணனை*
கொம்ப ராவுநுண் ணேரிடை மார்வனை*
எம்பி ரானைத் தொழாய்மட நெஞ்சமே

வ்யா:- (எம்பிரானை) இப்படி தம்மோடு கலந்தருளின எம்பெருமான், பிராட்டியும் தானுமாக எழுந்தருளியிருக்கிற இருப்பையும், தன் திருக்கண்களாலே தம்மைக் குளிரப் பார்த்தருளுகிறபடியையும் கண்டு ப்ரீதராய், ‘’எம்பிரான்’’ என்றும், ‘’எந்தை தந்தை தந்தைக்கும் தம்பிரான்’’ என்றும் அவனை ஏத்திக்கொண்டு தமக்குத் துணையாக எம்பெருமானைத் தொழாய் மடநெஞ்சமே! என்று தம்முடைய திருவுள்ளத்தைக்குறித்து அருளிச்செய்கிறார்.

நான்காம் பாட்டு

நெஞ்ச மேநல்லை நல்லைஉன் னைப்பெற்றால்
என்செய் யோம்இனி என்ன குறைவினம்*
மைந்த னைமல ராள்மண வாளனை*
துஞ்சும் போதும் விடாது தொடர்கண்டாய்

வ்யா:- (நெஞ்சமே) இப்படி தாம் அருளிச்செய்வதற்கு முன்பே தம்முடைய திருவுள்ளம் அவனுடைய திருவடிகளிலே விழுந்தபடியைக் கண்டு உகந்து, ‘’நல்லை நல்லை; உன்னைப்பெற்றால் நமக்கு முடியாததென்? இனி நமக்கு என்ன குறையுண்டு?’’ என்று தம்முடைய திருவுள்ளத்தைக் கொண்டாடி, ‘’இனி ஒரு த3ஶையிலும் அவனை விடாதேகிடாய்’’ என்கிறார்.

ஐந்தாம் பாட்டு

கண்டாயே நெஞ்சே! கருமங்கள் வாய்க்கின்றுஓர்
எண்தானும் இன்றியே வந்தியலு மாறு*
உண்டா னைஉல கேழும்ஓர் மூவடி
கொண்டானை* கண்டு கொண்டனை நீயுமே

வ்யா:- (கண்காயே) ‘’உண்டானை உலகேழும் ஓர் மூவடி கொண்டானை நீயும் நானும் காணப்பெற்றோம்;  நெஞ்சமே! நமக்கு அசிந்திதமாக வந்து ஸம்ருத்3தி4கள் விளைகிறபடி கண்டாயே!’’ என்று தம்முடைய திருவுள்ளத்தோடேகூட அநுப4விக்கிறார்.

ஆறாம் பாட்டு

நீயும் நானும் இந் நேர்நிற்கில்மேல்மற்றோர்
நோயும் சார்கொடான் நெஞ்சமே! சொன்னேன்*
தாயும் தந்தையு மாய்இவ் வுலகினில்*
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே

வ்யா:- (நீயும்) ‘’இப்படி இருவரும் ஒரு வண்ணம் எம்பெருமானைக் காணப் பெற்றோம்; இனி அவன் நம்மை விடில் செய்வதென்?’’ என்னிலி; ‘’நீயும் நானும் இப்படி அவனை விடாதே நிற்கில், ஸர்வாத்மாக்களுக்கும் தாயும் தந்தையுமாய், ஸர்வ ஸ்வாமியாய், ஆஶ்ரித ஸுலப4னாய், இப்படி ஸம்ஶ்லிஷ்டனா -யிருந்தவன் ஒரு நாளும் நம்மை விடான்; நெஞ்சமே! என்னை விஶ்வஸித்திரு’’ என்கிறார்.

ஏழாம் பாட்டு

எந்தை யேஎன்றும் எம்பெரு மான்என்றும்*
சிந்தை யுள்வைப்பன் சொல்லுவன் பாவியேன்*
எந்தை எம்பெருமான் என்று வானவர்*
சிந்தை யுள்வைத்துச் சொல்லும்செல் வனையே

வ்யா:- (எந்தையே) இப்படித் தம்முடைய திருவுள்ளத்தோடே எம்பெருமானை அநுப4விக்கிற ஆழ்வார் -அவனுடைய உத்கர்ஷத்தையும், தம்முடைய நிகர்ஷத்தையும் பார்த்து,   அயர்வறும் அமரர்கள் தங்கள் சிந்தையுள்ளே வைத்துச் சொல்லும் அந்த ஸ்ரீமானை, நான் த3ரித்3ரனாக்கினேனித்தனை; என்ன நிக்ருஷ்டனோ!’ என்று தம்மை க3ர்ஹிக்கிறார்.

எட்டாம் பாட்டு

செல்வ(ன்) நாரண னென்றசொல் கேட்டலும்*
மல்கும் கண்பனி நாடுவன் மாயமே*
அல்லும் நன்பக லும்இடை வீடின்றி
நல்கி* என்னை விடான்நம்பி நம்பியே

வ்யா:- செல்வன் நாரணன் என்ற) இப்படி என்னுடைய அயோக்3யதையைப் பார்த்து ‘’அவன் திறத்துப் படுவேனல்லேன்’’ என்று இருக்கச்செய்தேயும். செல்வ(ன்) நாரணன் என்ற சொல்லைக் கேட்குமளவில் என்னுடைய ஸர்வகரணங்களும் என் வஶமன்றியே இழுத்துக்கொண்டு அவன் பக்கலிலே விழாநின்றன; நானும் அதிசபலனாய்,  ‘’எங்குற்றாய் எம்பெருமான்’’ என்று அவனை நாடுவன்; இதென்ன ஆஶ்சர்யம்!இப்படி நான் அதிசபலனாய்த் தன்னை விடமாட்டாதொழிந்தால், அவன் என்னை விடலாமிறே.  அவன் என்னிற்காட்டிலும் அபி4நிவிஷ்டனாய், என் பக்கலிலே அதிப3ஹுமாநத்தைப் பண்ணிக்கொண்டு என்னை விடுகிறிலன்; நான் என்செய்வன்? – என்று நோகிறார்.

ஒன்பதாம் பாட்டு

நம்பி யைத்தென் குறுங்குடி நின்றஅச்
செம்பொ னேதிக ழும்திரு மூர்த்தியை*
உம்பர் வானவர் ஆதியஞ் சோதியை*
எம்பி ரானைஎன் சொல்லி மறப்பனோ?

வ்யா:- (நம்பியை) தன்னுடைய சாபலத்தாலே நம்மை விடாதொழிந்தால், அவனுடைய கு3ணஶ்ரவணாதி3களைப் பண்ணாதே அந்யபரனாய் அவனை மறந்திருந்தாலோ? என்னில், தத்3கு3ணஶ்ரவணமாத்ரத்தாலே சபலனாய்த் தன் பக்கலிலே விழாநிற்கச்செய்தே, அதின் மேலே அயர்வறும் அமரர்களோடே கூடத் திருக்குறுங்குடியிலே நின்றருளி, தன்னுடைய நிரவதி4கமான அழகைக்காட்டி என்னைத் தோற்பித்துத் தன் பக்கலிலே விழவிட்டுக்கொண்டான்; இனி எங்ஙனே நான் அவனை மறக்கும்படி? என்கிறார்.

பத்தாம் பாட்டு

மறப்பும் ஞானமும் நானொன் றுணர்ந்திலன்*
மறக்கு மென்றுசெந் தாமரைக் கண்ணொடு*
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை*
மறப்ப னோஇனி யான்என் மணியையே

வ்யா:- (மறப்பும்) வருந்தியாகிலும் அவன் பக்கலில் நின்றும் நெஞ்சை நிவர்த்திப்பித்து, அவனை மறந்திருந்தாலோ? என்னில்; இப்படி தன் அழகை எனக்குக் காட்டியருளி ‘’ஒரு நாள் தன்னைக் காட்டிப்போகில், ஜ்ஞாநாஜ்ஞாநங்களிரண்டுக்கும் ஆஶ்ரயமல்லாமையாலே அசித்கல்பனான இவன் நம்மை மறக்கும்’’ என்று பார்த்தருளி, தன்னை நான் மறவாமைக்காக, அசேதநத்தைச் சேதநமாக்கவல்ல தன்னுடைய அழகிய திருக்கண்களோடே கூட என்னுள்ளே புகுந்து, எனக்குப் பரமஸுலப4னாய்க் கொண்டு, ‘’இனிப் பேரேன்’’ என்று இருந்தருளினான்; இவனை நான் ‘’மறப்பேன்’’ என்று வருந்தினால் மறக்கமுடியுமோ? என்கிறார்.

பதினொன்றாம் பாட்டு

*மணியை வானவர் கண்ணனைத் தன்னதோ
ரணியை* தென்குரு கூர்ச்சட கோபன்* சொல்
பணிசெ யாயிரத்துள் இவை பத்துடன்*
தணிவி லர்கற்ப ரேல்கல்வி வாயுமே

வ்யா:- (மணியை) வானவர் கண்ணணாயிருந்துவைத்து எனக்கு எளியனாய், தனக்குத் தானே பூ4ஷணமாயிருந்த எம்பெருமானுக்கு ஶேஷவ்ருத்தி ரூபமாகச் சொன்ன இத்திருவாய்மொழியைக் கற்று ஆராதிருக்குமவர்களுக்கு அக்கல்விதானே வாயும் என்கிறார்.

திருக்குருகைப்பிரான் பிள்ளான் திருவடிகளே ஶரணம்

திருவாய்மொழி முதற்பத்து ஆறாயிரப்படி வ்யாக்2யானம் முற்றிற்று.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.