9000 Padi Centum 01

 ஸ்ரீ:

ஆழ்வார் திருவடிகளே ஶரணம்

மதுரகவியாழ்வார் திருவடிகளே ஶரணம்

ஸ்ரீமந்நாதமுனிகள் திருவடிகளே ஶரணம்

எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்

ப்ரபந்நஜந கூடஸ்த2ரான நம்மாழ்வார் அருளிச்செய்த

திருவாய்மொழி

பரமகாருணிகரான நஞ்சீயர் அருளிச்செய்த

ஒன்பதினாயிரப்படி வ்யாக்2யாநம்

இந்த ஜக3த்தில், சித3சிதீ3ஶ்வரர்களுடைய ஸ்வரூப ஸ்வபா4வங்க ளொன்றையும் அறியாதே, புருஷார்த்தோ2பாயங்களொன்றிலும் மூளாதே, ஶப்3தா3தி3 விஷயங்களிலே மிகவும் மண்டி, பொறுக்கவும் கடக்கவும் ஒண்ணாதிருக்கிற ஸம்ஸாரது3:க்க2 ஸாக3ரத்திலே அழுந்தாநின்ற சேதநருக்கு, 1. “दुर्लभॊ मानुषॊ दॆहॊ देहिनां क्षणभंगुर: । तत्रापि दुर्लभं मन्यॆ वैकुण्ठ प्रियदर्शनम् ॥” (து3ர்லபோ4 மாநுஷோ தே3ஹிநாம் க்ஷணப4ங்கு3ர: | தத்ராபி து3ர்லப4ம் மந்யே வைகுண்ட2 ப்ரியத3ர்ஶநம் ||) என்கிறபடியே புருஷார்த்தோ2பயோகி3யான மநுஷ்ய ஶரீரம் து3ர்லப4ம்.  இப்படி து3ர்லப4மான ஶரீரத்தைப் பெற்றாலும் மோக்ஷேச்சை2 பிறக்கை யரிது; மோக்ஷேச்சை2 பிறந்தாலும் நிரதஶய ஸுக2ரூபமாய் ப43வத்3 கு3ணாநுப4வ காரிதமான தத்கைங்கர்ய ப்ராப்திரூப மோக்ஷேச்சை2 ஒருவர்க்கும் பிறக்கிறதல்ல.  பா43வத ஶேஷதைகரதித்வா பா4வம் கிம் புநர்ந்யாய ஸித்34ம்.   1. “कलौ जगत्पतिम्”   (கலௌ ஜக3த்பதிம்) இத்யாதி3 ஶ்லோகத்திற்படியாலே மிகவும் கலிகாலத்தில் ப43வத் ருசி ஒருவருக்கும் பிறக்கிறதல்ல. இத்தன்மையை  2.”मनुष्याणां सहस्रॆषु”   (மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு) இத்யாதி3 ஶ்லோகத்தாலே எம்பெருமான் தானும் அருளிச் செய்தான். இப்படியிருக்கிற ஸம்ஸாரத்திலே 3.”ततॊऽखिल जगत्पद्म” (ததோऽகி2லஜக3த்பத்3ம) இத்யாதி3 ஶ்லோகத்திற் சொல்லுகிறபடியே ஜக3த்தில் ஜ்ஞாநாந்த4காரமெல்லாம் நீங்கி லோகமெல்லாம் வாழும்படி யாகச் சேதநர் பண்ணின பா4க்3யத்தாலே, ஆழ்வார் – திருநகரியிலே வந்து திருவவதாரம் பண்ணியருளி, 1. “हसितं भाषितम्” (ஹஸிதம் பா4ஷிதம்)  இத்யாதி3 ஶ்லோகத்திற்படியாலே ப43வத் ப்ரஸாத3த்தாலே ஸாக்ஷாத் -க்ருதமான ப33வத் ஸ்வரூபரூபகு3ண விபூ4திகளையுடைய ராய், 2. “ज्ञानी त्वात्मैव मॆ मतम्”  (ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்) என்று எம்பெருமானருளிச் செய்த ஜ்ஞாநிகளுக்கு அக்3ரேஸரராய்,  3.”बाल्यात्प्रभ्रुति सुस्निग्ध:” (பா3ல்யாத் ப்ரப்4ருதி ஸுஸ்நிக்34)  4.”न च सीता त्वया हीना” (ந ச ஸீதா த்வயா ஹீநா) என்று சொல்லுகிறபடிகளையுடைய இளையபெருமாளைப் போலே  ஜந்ம ப்ரப்4ருதி எம்பெருமானையே தா4ரகாதி3களாக உடையராய், அவனைப் பிரியில் த4ரியாத தன்மையருமாய், நிரஸ்த நிகி2லஸாம்ஸரிக ஸ்வபா4 வருமாய், 5.”न दॆव लॊकाक्रमणम्” (ந தே3வ லோகாக்ரமணம்) இத்யாதி3 ஶ்லோகத்தில் சொல்லுகிறபடியே ப43வத்3வயதிர்க்த புருஷார்த்த2 ப்ரஸ்தாவத்திலே வெருவும்  ஸ்வபா4வருமாய், 6.”विस्तरॆणात्मनॊ यॊगम्”  (விஸ்தரேணாத்மநோ யோக3ம்) 7.”न ततर्प समायान्तम्”  (ந தத்ர்ப்ப ஸமாயாந்தம்) இத்யாதி3யில் சொல்லுகிறபடிகளையுடைய அர்ஜுந த3ஶரதா2தி3களைப்போலே காலதத்வமுள்ளதனையும் எம்பெருமானை அநுப4வித்தாலும் த்ருப்தி பிறவாதே மேன்மேலெனக் கடல்போலே பெருகுகிற தம்முடைய அபி4நிவேஶத்தாலே கப3ளீக்ருத சித3சிதீ3ஶ்வர தத்வ த்ர்யத்தையுமுடையுருமாய், பிராட்டிமார் பக்கலாதல், அந்த லக்ஷ்மண ப4ரதாதி3கள் பக்கலாதல், ஸ்ரீகோ3பிமார் பக்கலாதல், தம்முடைய இப்படிக்கு ஸர்வதா2ஸாம்யம் காணவொண்ணாதபடியான ப்ரபா4வத்தையுடையருமாய், 1.”धर्मात्मा सत्यशौचादि गुणानामाकरस्तथा”  (த4ர்மாத்மா ஸத்யஶௌசாதி3 கு3ணாநாமாகரஸ் ததா2) இத்யாதி3 ஶ்லோகத்தில் ஸ்ரீப்ரஹ்லாதா3ழ்வானை ஸாது4க்களுக்கெல்லாம் உபமாநபூ4மியாகச் சொன்னாப்போலே எல்லாருக்கும் தம்முடைய ஓரோ  வகைகளாலே உபமாந பூ4மியுமாய், 2. “गुणौर्दास्यमुपागत:” (கு3ணைர்தா3ஸ்ய முபாக3த:) என்னும்படியாலே ப43வத்3கு3ணங்களுக்குத் தோற்று அடிமை கொள்ளுவது புகுவதும் செய்து, 3.”अहं तावत्”  (அஹம் தாவத்) இத்யாதி3 ஶ்லோகத்திற்படியே ப43வதை3காந்த்யஸீமையுமாய், 4.”अह्ं सर्वं करिष्यामि”  (அஹம் ஸர்வம் கரிஷ்யாமி)  என்னும்படியலே எப்பேர்பட்ட அடிமையும் செய்தல்லது த4ரியாத படியையுடையருமாய், தம்முடைய ஸந்நிதி4 மாத்ரத்தாலே எல்லாருடைய அஹங்காரமமகாரரூபமான அவித்3யாக்2ய தமஸ்ஸைப் போக்கி ஜ்ஞாந ப4க்திகளைப் பிறப்பித்து அவர்களை ப43வத் கைங்கர்யலக்ஷண மோக்ஷத்துக்கு நிலவராக்கும் ஸ்வபா4வத்தையுடையராய்க்கொண்டு வளர்ந்தருளுகிர காலத்திலே, இவருடைய ப43வத் கு3ணாநுப4வ முள்ளடங்காமை – வேத3ங்களிலும் வேதோ3பப்3ரும்ஹணமான இதிஹாஸ புராணாதி3களிலுமுண்டான ஸம்ஶயங்களை அறுக்கைக்கீடான ஸாத்3கு3ண்யத்தையுடைத்தான திருவிருத்தம், திருவாசிரியம், திருவந்தாதி, திருவாய்மொழி ஆகிற ப்ரப3ந்த4ங்களாய்க்கொண்டு ப்ரவ்ருத்தமாயிற்று.  இப்படி                              x “அவாவிலந்தாதிகளாலிவையாயிரமும்” என்று ஆழ்வார்தாமே அருளிச்செய்தார்.

இது இங்ஙனாகில், இப்ரப3ந்த4ங்களுக்குப் பாட்டும் ஸங்க்2யையும், பாட்டுக்கள் நாலடியாகையும், அக்ஷரங்கள் ஸமமாகையும் தொடக்கமான இப்ரப3ந்த4 லக்ஷணங்கள் சேரவிழுந்தபடி எங்ஙனே? என்னில்; ஶோகவேக3த்தாலே பிறந்த 1.”मानिषाद”  (மாநிஷாத3) இத்யாதி ஶ்லோகமானது 2. “मच्छन्दादॆव” (மச்ச2ந்தா3தே3வ) என்கிற ஶ்லோகத்தின் படியே ப்3ரஹ்மாவின் ப்ரஸாத3த்தாலே ஸர்வலக்ஷணோபேதமானாப் போலே, ப43வத் ப்ரஸாத3மடியாகப் பிறந்த இப்ரப3ந்த4ங்களுக்கு இவற்றில் கூடாததில்லை.

“இவையென்ன கோடியிலே அடைக்கப்பட்ட ப்ரப3ந்த4ங்கள்? இவை பிறந்தபடி எங்ஙனே? இவற்றுக்கு மூலமென்? ஒன்றை மூலமாகச் சொன்னால் அது மூலமென்றறியும்படி எங்ஙனே? இவை ப்ரமாண மென்றறிவதெத்தாலே? இவற்றுக்கு ப்ரதிபாத்3யர் யார்? இப்ரப3ந்த4ங்கள் கற்கைக்கு அதி4காரிகள் யார்? இவற்றுக்கு போ4க்தாக்கள் யார்? இவை எதுக்காகப் பண்ணப்பட்டன?” என்று அவ்யுத்பந்நர் கேட்கில்; இவை புருஷார்த்த2 ப்ரகாஶகமான ப்ரப3ந்த4ங்களில் ப்ரதா4நமான ப்ரப3ந்த4ங்கள், ப43வத்3கு3ணாநுப4வ ஜநித ஹர்ஷப்ரகர்ஷ்ப3லாத்காரம் சொல்லுவிக்கப் பிறந்தன, ப43வத் ப்ரஸாத3 லப்34மான தி3வ்ய சக்ஷுர் மூலமாகப் பிறந்தன என்னுமிடம் ஸ்வரவசநவ்யக்திகளாலே அறியலாம்; வேதா3ர்த்த2 வித்துக்களான ஸர்வ ஶிஷ்ட ஜநங்களும் பர்க்3ரஹிக்கை யாலும், ஸம்ஸாரத்திலுத்3வேக3ம் பிறந்தாருக்கு ஜ்ஞாதவ்யமான வேதா3ர்த்த2ங்களை இப்ரப3ந்த4ங்களிலே காண்கையாலும், இவை உத்க்ருஷ்டமான ப்ரமாணங்களென்றறியலாம்; எல்லாருக்கும் பரம ப்ராப்யபூ4தனான ஶ்ரிய:பதி – இப்ரப3ந்த4ங்களுக்கு ப்ரதிபாத்3யன்; ஸம்ஸாரத்தில் ருசியற்று எம்பெருமான் திருவடிகளிலே எப்பேர்ப்பட்ட அடிமைகளும் செய்யவேணுமென்றிருக்குமவன் – இவை கற்கைக் கதி4காரி; முமுக்ஷுக்களும் முக்தரும் நித்யரும் ஶ்ரிய:பதியான எம்பெருமான் தானும் இவற்றுக்கு போ4க்தாக்கள்; ப43வத் கைங்கர்ய மாகிற நிரதிஶயபுருஷார்த்த2ம் இன்னபடிப்பட்டிருக்குமென்று அறிவிக்கைக்காகப் பிறந்த ப்ரப3ந்த4ங்களிவை – என்று சிரோபாஶித ஸத்3வ்ருத்34ராயிருப்பார் பரிஹரித்தார்கள்.

நிஷித்34 பா4ஷையாயிருக்கையாலும், இப்ரப3ந்த4ங்களை ஸ்த்ரீ ஶூத்3ராதி3களும் அப்4யஶிக்கக்காண்கையாலும், இக்கலிகாலத்திலே ஜ்ஞாநத்துக்கு அடைவில்லாத சதுர்த்த2 வர்ணத்திலே பிறந்தாரொரு -வராலே நிர்மிதங்களாகையாலும், தே3ஶாந்தரங்களிலின்றிக்கே ப்ராதே3ஶிகங்களாகையாலும், அவைதி3கர் க்3ரஹிக்கையாலும் ஶ்ருதி ஸ்ம்ருதி விருத்34மான காம புருஷார்த்த2த்தைப் பலகால் பேசுகை -யாலும், ஶ்ருதிஸ்ம்ருதிகளில் புருஷார்த்த2தயா சொல்லப்படுகிற ஐஶ்வர்ய கைவல்யங்களைக் காற்கடைக்கொள்ளுகையாலும், இப்ரப3ந்த4ங்கள் ப்ரமாணமாகமாட்டாவென்று வைதி3க கோ3ஷ்டி2யில் பழக்கமில்லாதார் சில அறிவுகேடர் ப்ரத்யவஸ்தா2நம் பண்ண; மாத்ஸ்ய புராணத்திலே பா4ஷாந்தரத்திலே பாடாநின்றுள்ள கைஶிகாதி3களைத் தன் நாட்டினின்றும் போகவிட்ட ராஜாவைக் குறித்து, 1. “हरिकीर्तिं विनैवान्यद् ब्राह्मणॆन नरॊत्तम । भाषागानं न गातव्यं तस्मात्पापं त्वया कृतम् ॥” (ஹரிகீர்த்திம் விநைவாந்யத்3 ப்3ராஹ்மணேந நரோத்தம | பா4ஷாகா3நம் ந கா3தவ்யம் தஸ்மாத் பாபம் த்வயா க்ருதம் ||) என்ற யமன் வசனத்தின்படியே பா4ஷா நிஷேத4ம் ப43வத்3விஷயமொழிய பா3ஹ்ய விஷயங்களிலே யாகை -யாலும், இங்ஙனன்றிக்கே பா4ஷா மாத்ராவதி4யாக விதி4நிஷேத4ங்களை அங்கீ3கரிக்கில், ஸம்ஸ்க்ருத பா4ஷையான பா3ஹ்ய ஶாஸ்த்ராப்4யா -ஸங்கள் பண்ண ப்ரஸங்கி3க்கையாலும், ஆழ்வார் தம்முடைய க்ருபாதி-ஶயத்தாலே வேத3த்திலநதி4காரிகளான ஸ்த்ரீ ஶூத்3ராதி3களும் இழவாதபடி வேதா3ர்த்த2த்தை த்3ராவிட3 பா4ஷையாலே அருளிச் செய்கையாலும், x “எதிர்சூழல்புக்கு” என்னுங்கணக்காலே அநேக ஜந்மங்கள் எம்பெருமான் தானே தொடர்ந்து விஷயீகரிக்கைக்கீடான பா4க்3யத்தையுடையராய், நிரந்தர ப43வத் கடாக்ஷ பாத்ரமுமாய், தத்வ ஹிதங்களில் நிபுணராய், அவற்றினுடைய உபதே3ஶத்திலும் ப்ரவ்ருத்த -ராய், விது3ர ஶப3ர்யாதி3களில் விலக்ஷணரான ஆழ்வார் பக்கலிலே இப்ரப3ந்த4ங்கள் பிறக்கையாலும், இப்பாஷை நடையாடி ஶிஷ்ட ப்ரசுரமான தே3ஶங்களெங்குமுண்டாய், பா4ஷாந்தரங்களிலே பிறந்து விலக்ஷணராயுள்ளாரும் இவற்றின் வைலக்ஷணயத்தைக்கேட்டு “இவற்றை அப்4யஶிக்கைக்கீடான இப்பாஷை நடையாடும் தே3ஶத்திலே பிறக்கப்பெற்றிலோமே!” என்றிருக்கையாலும், இவற்றின் நன்மையைக் கண்ட அவைதி3கனுங்கூடப் பரிக்3ரஹிக்கை ஶ்லாக்4யதாஹேதுவாகை -யாலும், வேத3நமென்றும், உபாஸநமென்றும் உபநிஷத்துத் தன்னில் சொல்லப்படுகிற ப4க்தியை இவற்றில் காமமாகச் சொல்லுகையாலும், ஐஶ்வர்ய கைவல்யங்களை தூ3ஷித்தது – அல்பாஸ்தி2ரத்வாதி3 தோ3ஷத்தாலே யாகையாலும், பர்திபாத்3யனான எம்பெருமானுடைய மாஹாத்ம்யத்தாலும், அவனை ஸுஸ்பஷ்டமாக ப்ரதிபாதி3க்கையாலும், ப4க்திக்கும் உத்பாத3கங்களாகையாலும், உத்பந்நையான ப4க்திக்கு வர்த்த4கங்களாகையாலும், ஶ்ரவணாதி3களில், அப்போதே நிரதிஶய ப்ரீதி ஜநகங்களாகையாலும், இவற்றில் சொல்லுகிற பொருளுக்குப் பல விடங்களிலும் வேத3த்தை ஸாக்ஷியாகச் சொல்லுகையாலும், ப்3ரஹ்ம காரணவாத3த்தாலும், ப்3ரஹ்ம ஜ்ஞாநாந் மோக்ஷத்தைச் சொல்லுகை யாலும், புருஷார்த்த2விஷ்யமான ப்ரப3ந்த4ங்களெல்லாவற்றிலும், இப்ரப3ந்த4ங்களை த்3ருட4தர ப்ரமாணங்களாக உபபாதி3த்து வைதி3க கோ3ஷ்டி2களில் அபி4யுக்தரானவர்கள் பரிஹரித்தார்கள்.

 

43வத் ப்ரஸாத3த்தாலே பரிபூர்ணமாக அவனை அநுப4வித்து பூர்ணரா யிருந்த ஆழ்வாருக்கு எம்பெருமானைப் பிரிகையும், பிரிவாலே                     நோவுபட்டுக் கூப்பிடுகையும் கூடினபடி எங்ஙனேயென்னில்; ஓரோ            கு3ணத்தை அநுப4வித்தால் அநுபூ4த கு3ணங்களிலுண்டான ப்ரீதி ப்ரகர்ஷம் க்ஷுத்3ரவிஷயங்களில் வைராக்3யத்தைப் பிறப்பித்து கு3ணாந்தரங்களிலே ஸ்ப்ருஹையைப் பிறப்பிக்கும்; அக்கு3ணங்களில் க்ரமப்ராப்தி பற்றாதே யாதொருபோது ஆசைமிக்கது, அப்போது ஆசைப் பட்ட பொருள் கிடையாமையாலும், ப43வத3நுப4வ விரோதி4யான ப்ரக்ருதி ஸம்ப3ந்த4 ஸ்மரணாதி3களாலுமாக ப43வத்3 விஷயத்தில் அநுப4வித்த அம்ஶத்தையுமிழந்து நோவுபடாநிற்பர்.  ப3ஹுகு3ணனான எம்பெருமான் பக்கலிலே நிரதிஶய ப4க்திமான்களாய், தத்ஸம்ஶ்லேஷ விஶ்லேஷைக ஸுக2து3:க்க2ராய், அவனையல்லதறியாதபடியாய், ப43வத3நுப4வ ஸுக2மே  மிக்கபோது இதர பதா3ர்த்த2ங்களுமெல்லாம் தம்மைப்போலே எம்பெருமானைப்பெற்று ஸுகி2க்கிறனவாக நினைத்தும், விஶ்லேஷமென்றொரு பதா3ர்த்த2முண்டென்றறியாதே லோகயாத்ரையோடொக்க மறந்தும், விஶ்லேஷ வ்யஸந்யம் மிக்கால் ஸம்ஶ்லேஷரஸமுண்டென்றுமறியாதே, அந்யபரமான இதர பதா3ர்த்த2ங் களுமெல்லாம் தம்மைப்போலே எம்பெருமானைப் பிரிந்து நோவுபடுகிற-னவாகக்கொண்டு அவற்றுக்குமாகத்தாம் நோவுபடாநிற்பர்.  இவருக்கு ப்ரியாப்ரியங்களொருகாலும் முடியாதே, பர்யாயேண உண்டாயிருக்கை யாலே சிந்தயந்தியுடைய படி நித்யமாய்ச்செல்லுமென்று சொல்லுவர்.

சேதநருக்கு ஸ்த்ர்யந்ந  பாநாதி3களே தா4ரகபோஷக போ4க்3யங்களாய்ச் செல்லாநிற்க, இவரை ப43வத்3கு3ணைகதா4ரகரென்னக் கூடுமோவென்- னில்; திருவயோத்4யையிலும் கோஸல ஜநபத3த்திலுமுள்ள ஸ்தா2வர ஜங்க3மங்களடைய ராமகு3ணைகதா4ரகங்களாயிருக்கும்படியை அநு -ஸந்தி4த்து இதுவும் கூடுமென்று கொள்வது.  இப்படி யிருக்கிற இவர்க்கு எம்பெருமானோடு ஸம்ஶ்லேஷமாவது – ப்ரத்யக்ஷ ஸமாநாகாரமான ஜ்ஞாந ஸாக்ஷாத்காரம். விஶ்லேஷமாவது – பா3ஹ்ய ஸம்ஶ்லேஷா பேக்ஷை பண்ணி அது பெறாமையாலே மாநஸாநுப4வத்துக்கு வந்த கலக்கம்.  ஸர்வஜ்ஞனாய், ஸர்வஸக்தனாய், ஸர்வநியந்தாவாய், நிரவதி4க க்ருபாவானாயிருந்த எம்பெருமான் இவருடைய இவ்வநுப4வத் தை உருவ நட்த்தாதே விச்சே2தி3த்ததுக்கு ப்ரயோஜநமென்னென்னில்; திருவயோத்4யையிலும் திருக்குரவையிலும் பிரிந்த பிரிவிற்போலே இவர்க்கு அநுபூ4தகு3ணங்கள் ஸாத்மிக்கைக்கும் மேன்மேலென  த்ருஷ்ணை பிறக்கைக்கும். எம்பெருமான் பக்கல் பிறந்த ஆசை முதிர்ந்து நினைத்தபடி பெறாவிட்டவாரே ஶோக, மோஹங்கள் பிறக்கும்.  இப்படி யுள்ள கலவியாலும், பிரிவாலும் ஆழ்வாருக்கு வந்த த3ஶை அந்யாபதேஶ -ப்பேச்சைப் பேசுவிக்கும்.  இப்ரப3ந்த4ங்களில் ஸூக்திகள் ப்ராப்யனான எம்பெருமானுடைய ஸ்வரூப ப்ரதிபாத3கங்களாயிருக்கும் சில; ப்ராப்தா வான ப்ரத்யகா3த்ம ஸ்வரூப விஷயமாயிருக்கும் சில; ப்ராப்த்யுபாயத் -தைச் சொல்லாநிற்கும் சில; ப2லத்தைச் சொல்லாநிற்கும் சில; ப்ராப்தி விரோதி4களைச் சொல்லா நிற்கும் சில; அவஶிஷ்டமானவை இவ்வர்த் -த2ங்களுக்கு உபபாத3கங்களாயிருக்கும். இவற்றிலுத்தே3ஶ்யம் ப2லம்: த்த3ர்த்த2மான மற்றுள்ள நாலர்த்த2மும் சொல்லுகிறது.

இவற்றில் ப்ரத2ம ப்ரப3ந்த4மான திருவிருத்தத்தில் ‘த்வத3நுப4வ விரோதி4 யான ஸம்ஸார ஸம்ப3ந்த4த்தை அறுத்துத் தந்தருளவேணும்’ என்று எம்பெருமானை அர்த்தி2க்கிறார். திருவாசிரியத்தில் நிவ்ருத்த ஸம்ஸார- ர்க்கு விஷயமான என்பெருமானைப் பரிபூர்ணமாக அநுப4வித்து ப்ரீதரா -கிறார். பெரிய திருவந்தாதியில் நிரதியஶய போ4க்யனான எம்பெருமானை அநுப4விக்கையாலே, தத3நுகு3ணமான த்ருஷ்ணை பிறந்து த்ருஷ்ணாநுகு3ணமாக அவனைப் பேசியும் நினைத்தும் த4ரிக்கிறார். திருவாய்மொழியில் இவருடைய த்ருஷ்ணாநுகு3ணமாக ஶ்ரிய:பதியாய், ஸமஸ்த கல்யாண கு3ணாத்மகனாய், தனக்குத் தகுதி -யான தி3வ்யதே3ஹத்தையுமுடையனாய், தி3வ்ய பூ4ஷண பூஷிதனுமாய், ஶ்ங்க2 சக்ராதி3 தி3வ்யாயுத4னுமாய், பரமவ்யோமத்தில் ஆநந்த3மயமான தி3வ்யாஸ்தா2ந ரத்நமண்டபத்திலே பிராட்டிமாரோடே கூட தி3வ்ய ஸிம்ஹாஸநத்திலே வீற்றிருந்தருளி,  அஸ்தா2நே ப4யஶங்கிகளான *அயர்வறுமமரர்களாலே அநவரத பரிசர்யமாண சரண நளிநனாய்க் கொண்டு அங்கு அங்ஙனே செல்லாநிற்க; ஸ்வஸங்கல்பாயத்த ஸ்வரூப ஸ்தி2தி ப்ரவ்ருத்திகமான ஸ்வேதர ஸமஸ்தத்தையும் ஶரீரதயா ஶேஷ -மாகவுடையனாய், அந்தராத்மதயா சேதநாSசேதநங்களையடைய வ்யாபித்து, தத்33ததோ3ஷைரஸம்ஸ்ப்ருஷ்டனாய், நாராயணாதி3 நாமங்களைத் தனக்கு வாசகமாகவுடையனாய், ஏவம் வித4னாக உபநிஷத் ப்ரஶித்34னுமாய், இப்படி விஸஜாதீயனுமாயிருந்துவைத்து ஆஶ்ரித வாத்ஸல்யத்தாலே தே3வமநுஷ்யாதி3 ஸஜாதீயனாய் வந்து திருவவதாரம் பண்ணும் ஸ்வபா4வனுமாய், தன்னுடைய திருவவதாரங்க- ளிலும் உதவுகைக்கீடான பா4க்3யமில்லாதார்க்கும் இழக்கவேண்டாதபடி ஸர்வாபராத4 ஸஹனாய், பத்ர புஷ்பாதி3களாலே ஸ்வாராத4னாய்க் கொண்டு ஆஶ்ரிதர்க்கு அத்யந்த பராதீ4நனாய், அவர்களுடைய இச்சா2நு கு3ணமான போ4ஜந ஶயநாதி3களையுடையனாய், ஸமஸ்த கல்யாண கு3ணபூர்ணனான தானே ஆஶ்ரித ஸுலப4த்வார்த்த2மாகக் கோயில் களிலே வந்து நின்றருளியும், இப்படியுள்ள ஸர்வேஶ்வரத்வத்துக்கும் ஆஶ்ரிதாநுக்3ரஹத்துக்கும் ஏகாந்தமான படிகளால் பரிபூர்ணனான எம்பெருமான், தன்னை நிர்ஹேதுகமாகக்காட்டியருளக் கண்டநுப4வித்-துத் தம்முடைய ப்ரக்ருதிஸம்ப3ந்த4மாகிற ப்ரதிப3ந்த4கமுமற்று எம்பெருமானைப் பெற்று முடிக்கிறார். இனிச் சொல்லவேண்டுவன அவ்வவ திருவாய்மொழிகள் தோறும் சொல்லக் கண்டுகொள்வது.

முதல் திருவாய்மொழியிற் சொல்லிற்றாயிற்று – நாநாரத்ந பூர்ணமாய் அபரிச்சே2த்3யமான கடலை முந்துறத் திரளக்கண்டாப்போலே ஸ்வரூப ரூபகு3ணவிபூ4திகளால் பரிபூர்ணனாய், எல்லாப்படியாலும் எல்லாரிலும் மேற்பட்டு, ஸர்வேஶ்வரனாய், ஶ்ரிய:பதியாக அபௌருஷேயமாய்க் கொண்டு ஸுத்3ருட4 ப்ரமாணமான ஶ்ருதிகளாலே ப்ரதிபாதி3க்கப்பட்ட எம்பெருமானை, பா3ஹ்ய குத்3ருஷ்டிகளால் அவிசால்யமாம்படி அவன் ப்ரஸாத3த்தாலே ஸாக்ஷாத்கரித்து அநுப4வித்து, அநுப4வஜநித ப்ரீதியுள் -ளடங்காமை அநுப4வித்தபடியே ஸவிபூ4திகனான எம்பெருமானைப்பேசி, ஏவம் வித4னானவன் திருவடிகளிலே அடிமை செய்து உஜ்ஜீவியென்று தம் திருவுள்ளத்தைக் குறித்து அருளிச்செய்கிறார். கடலைத் திரளக்கண்டா -னொருவன் அதில் திரைகளையும் மற்றும் அங்குண்டான ரத்நாதி3களை -யும் தனித்தனியே காணுமாபோலே, முதல்  திருவாய்மொழியில் திரள அநுப4விக்கப்பட்ட எம்பெருமானுடைய ஓரோவகைகளிலே ஓரோ திருவாய்மொழியாய்ச் செல்லுகிறது இரண்டாம் திருவாய்மொழி தொடங்கி மேலெல்லாம். இப்படி செய்தாரிவரேயல்ல; பா4ரத ராமாயணங்களைப் பண்ணின வ்யாஸாதி3களும் ஸங்க்ஷேப விஸ்தரங்களாலே தங்கள் ப்ரப3ந்த4ங்களை ப்ரப3ந்தீ3கரித்தார்கள்.

ஒன்பதினாயிரப்படியின் அவதாரிகை முற்றிற்று.

ப்ரபந்நஜந கூடஸ்த2ரான நம்மாழ்வார் அருளிச்செய்த

திருவாய்மொழி

பரமகாருணிகரான நஞ்சீயர் அருளிச்செய்த

ஒன்பதினாயிரப்படி வ்யாக்2யாநம்

*உயர்வற வுயர் நலம் உடையவன் யவனவன்*
மயர்வற மதிநலம் அருளினன் யவனவன்*
அயர்வறு மமரர்கள் அதிபதி யவனவன்*
துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே.

 

அவ:- முதற்பாட்டுக்குக் கருத்து – அகி2லஹேயப்ரத்யநீக கல்யாண கு3ணனாய், கு3ணங்களுக்கு நிறங்கொடுக்கவற்றான தி3வ்யதே3ஹயுக்த னாய், ஶ்ரிய:பதியாய், ஸௌந்த3ர்யாதி3களுக்கு போ4க்தக்களான அயர்வறுமமரர்களதி4பதியாயிருந்து வைத்துத் தன்னுடைய நிரவதி4க க்ருபையாலே, என்னுடைய தோ3ஷாகரதையைப் பாராதே, என்னுடைய அஜ்ஞாநமெல்லாம் நீங்கும்படி ஸ்வவிஷய ப4க்திரூப ஜ்ஞாநத்தை நிர்ஹேதுகமாக ஸாத3ரனாய்க்கொண்டு தந்தருளினான்; ஆனபின்பு, அவன் திருவடிகளிலே அடிமைசெய்து உஜ்ஜீவிப்போமென்று திருவுள்ளத் தோடேகூட எம்பெருமானுக்கு அடிமை செய்கையிலே ப்ரவ்ருத்தராகி -றார். இத்தால் ப்ரப3ந்தா4ரம்ப4த்திலே வஸ்துநிர்தே3ஶ நமஸ்காரங்களும் பண்ணப்பட்டனவாய் விழுந்தது.

வ்யா:– (உயர்வற உயர்நலமுடையவன்) ஆநந்த3 வல்லியில் சொல்லுகிறபடியாலே ஓரோகு3ணத்தின் ஸந்நிதி4யிலே வ்யதிரிக்த ஸகலார்த்த2 3தமான எல்லாப்படியாலுமுள்ள எல்லாவுயர்த்தியும் – ஆதி3த்ய ஸந்நிதி4யில் நக்ஷத்ராதி3களைப்போலே யுண்டாய், அவற்றை இல்லையென்னலம்படியாய், அவை தனக்கு அவதி4யுண்டாயிருக்கை யன்றியே, காலதத்வ்முள்ளதனையும் அநுஸந்தி4யாநின்றாலும் மேன் மேலென உயர்ந்து காட்டாநிற்பனவான கல்யாண கு3ணங்களையுடை -யான்.  (நலம்) என்றவிடத்தில் ஏகவசநம் – கு3ணஜாதிபரம்.  நலமாவது – கு3ணவிபூ4தாய்திகளை அநுப4விக்கையாலே வந்த ஆநந்த3கு3ணமாக -வுமாம்; ஆநந்த3மென்று ஆநந்த3ஶ்ருதிகளில் ப்ரஸித்34ம்.  கு3ண நிரபேக்ஷமாகத் தானே விலக்ஷணமாய், தன்னைப்பற்றி கு3ணங்கள் நிறம்பெறும்படியான தி3வ்யாத்ம ஸ்வரூபத்தினுடைய உபநிஷத் ப்ரஸித்3தி4யைச் சொல்லிற்றாகவுமாம். (அவன்) முன்புசொன்ன நன்மை களிற்காட்டில் மேற்பட்டதொரு நன்மை சொல்லுகைக்காக அவனென்று நிர்தே3ஶிக்கிறது.  இப்படியே மேல் யவனவன்களுக்கும் பொருள்.  (அவன்) என்று பலகால் சொல்லுகிறதுக்குக் கருத்து – இப்பாட்டில் ப்ரதிபாதி3க்கிற கு3ணங்கள் தனித்தனி ஈஶ்வரத்வஸாத4கங்களென்று தோற்றுகைக்காக.

(மயர்வற) ஸ்வவிஷயத்திலே எனக்கு அநாதி3யாய்வருகிற அஜ்ஞாநமெல் – லாம் போம்படி. (மதிநலம்) ப்4க்திரூபாபந்நஜ்ஞாநம். (அருளினன்) இத்தலை நன்மை தீமை பாராதே நிர்ஹேதுகமாகத் தன் க்ருபையாலே தந்தருளினான். எனக்குத்தந்தருளினான் என்னாதொழிவான் என்னென்-னில்; 1. “असन्नॆव स भवति” (அஸந்நேவ ஸ ப4வதி) என்று சொல்லுகிற கணக்காலே ப43வத்3 விஷ்யீகாரத்துக்கு முன்பு தம்மை அஸத்கல்பராக நினைத்திருக்கையாலே.

(அயர்வறுமமரர்களதிபதி) ப43வத்3 ஜ்ஞாநத்துக்கு விச்சே23மில்லாமை ஸ்வபா4வமாய், அவ்வநுப4வத்துக்கு ஒருநாளும் விச்சே23மின்றிக்கே இருக்கிற நித்யஸூரிகளுக்கு ஸ்வாமி. (அமரர்கள்) என்கிற ப3ஹுவசநத் -துக்கு முக்2யார்த்த2த்வம் ப்ராப்த் மாகையால், அவர்கள் தங்களுக்கு எண்ணில்லை என்கிறது.

(துயரறு சுடரடி) துயரறும் ஸ்வபா4வமாய், அப்ராக்ருத தேஜோரூபமான திருவடிகளை.  திருவடிகளுக்குத் துயருண்டோவென்னில்; ஆஶ்ரித ருடைய துயர் திருவடிகளுக்குத் துயர்.  அவனைத் தொழுதெழு என்னாதே திருவடிகளைத் தொழுதெழு என்பானென்? என்னில்: ஸ்தநந்த4யப்ரஜை முலையிலே வாய்வைக்குமாபோலே அடியனானவனுக்குத் திருவடி களிலே தலைமடுக்கை முறைமையாகையாலே.  (தொழுதெழு) அடிமையாலல்லது செல்லாத தன்மையாயிருக்கச்செய்தே அநாதி3காலம் அடிமையிழந்து, உறாவி, இல்லாதார் கணக்காயிருக்குற நீயே எம்பெருமா னுடைய திருவடிகளிலே அடிமை செய்து உஜ்ஜீவி.  எம்பெருமனோடு ப்ரத்யாஸந்நமான திருவுள்ளத்தோடே தமக்கு ஸம்ப3ந்த4த்தை ஆசைப்பட்டு (என்மனனே) என்கிறார்.

“ஸந்மாத்ரமே வஸ்து” என்கிற வாத3மும், “ஜீவபரர்களுடைய பே43ம் ஔபாதி4கம்; மோக்ஷத3ஶையில் ‘எல்லாம் ஒன்று” என்கிற வாத3மும் இவர்க்கு ஸித்3தா4ந்தமன்று.  என்னுமிடம் வ்யக்தம் இப்பாட்டில்; பரராம் அவர்களுக்கு விருத்34மாகையால்.  இப்பாட்டில் “அவன், அவன்” என்கிற மூன்று பர்யாயத்திலும் “துயரறு சுடரடி தொழுதெழன் மனனே” என்று, வாக்யபே43ம் பண்ணி யோஜிப்பர். 1.  “नमॊ नम: ” (நமோ நம:) இத்யாதி3 ஶ்லோகவத் ப்ரதிவிஶேஷணம் ஈடுபடுகையாலே.

இரண்டாம் பாட்டு

மனனகமலமற மலர் மிசையெழுதரும்*
மனனுணர்வளவிலன் பொறியுணர் வவையிலன்*
இனனுணர்முழுநலம் எதிர்நிகழ்கழிவினும்*
இனனிலன் எனனுயிர் மிகுநரையிலனே.

அவ:-  இரண்டாம் பாட்டில். அகி2லஹேய ப்ரத்யநீகதையாலும், கல்யாணைகதாநதையாலும் சேதநாதேநங்களிற் காட்டில் அத்யந்த விலக்ஷணமாய், ஜ்ஞாநாநந்த3ங்களே தனக்கு வடிவாய், முதற் பாட்டில் அநுப4வித்த கு3ணங்களுக்கு ஆஶ்ரயமாயிருந்துள்ள நிஷ்க்ருஷ்டமான தி3வ்யாத்மஸ்வரூபத்தை ஸோபாநக்ரமத்தாலே அநுப4விக்கிறார் – (மன  னகம்) என்று தொடங்கி.

வ்யா:- யோகா3ப்4யாஸத்தாலே, மநஸ்ஸிலுண்டான அவித்3யாதி3 தோ3ஷங்களெல்லாம் போங்காட்டில், விகஸிதமாய் மேன்மேலெனக் கிளராநின்றுள்ள மாநஸஜ்ஞாநக3ம்யமான ஆத்மாவின் படி அல்லாதான். (பொறியுணர்வவையிலன்) இந்த்3ரியங்களால் அறியப்படும் ப்ராக்ருத ப்தா3ர்த்த2ங்களின் படி அல்லாதான்.  சேதநரிற்காட்டில் விலக்ஷண னென்றபோதே அசேதந வைலக்ஷண்யம் சொல்லிற்றாகாதோவென்னில்; அவனோடு ஒவ்வாமைக்கு அசேதநத்தோடு சேதநத்தோடு ஒருவாசி யில்லை என்னுமிடம் தோற்றுகைக்காக த்3ருஷ்டாந்ததயா சொல்லிற்று.  சேதநாசேதநங்களிற் காட்டில் விலக்ஷணமென்ன அமையாதோ? அவற்றைக் காணும் ப்ரமாணங்களாலும் காணமுடியாதான் என்பா னென்? என்னில்; ஏகப்ரமாணக3ம்யத்வஸாம்யமுமில்லை என்று கொண்டு அத்யந்த வைலக்ஷண்யம் தோற்றுகைக்காக.

(இனன்) என்கிறது, இப்படிப்பட்டானென்று மேற்சொல்லக்கடவ படியைச் சொல்லுகிறது.  (உணர்முழுநலம்) கட்டடங்க ஜ்ஞாநமும் ஆந்ந்த3முமா யிருக்கும். (எதிர் நிகழ் கழிவினுமினனிலன்)  பூ4தப4விஷ்யத்3வர்த்தமாந காலத்ரயத்திலும் ஒத்தாரையில்லாதான்.  சேதநாசேதந வைலக்ஷண்யம் முதலிலே சொல்லிற்றே, மீளவும் தன்னோடு ஒத்தாரில்லாதான் என்பானென்? என்னில்; “திரள ஒப்பில்லையேயாகிலும் ஒருவகையாலும் ஒத்தாரை இல்லாதான் என்கிறது” என்றார்கள் சிலர்.  அதுவும் சேதநா சேதந வைலக்ஷணயம் சொன்னபோதே சொல்லிற்றாம்; ஆனபின்பு, அவனோடு ஒவ்வாதென்று சொல்லுகைக்கு ஸத்3ருஶமாயிருப்பதொரு பதா3ர்த்த2த்தையுடையனல்லன் என்கிறது.

(மிகுநரையிலன்) மிகுநரையில்லாதான்.  ஒத்தாரையில்லாத நிலத்திலே மிக்காரையில்லானென்கிறது – மிக்கார் ஸம்ப4வியாதாப்போலே ஒத்தாரும் ஸம்ப4வியாது என்று தோற்றுகைக்காக.  (என்னுயிர்) இங்ஙனே யிருக்கிற இவன் – எனக்கு தா4ரகன்.

மூன்றாம் பாட்டு

இலனது உடையனிது எனநினைவரியவன்*
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்*
புலனொடு புலனலன் ஒழிவிலன் பரந்த* அந்
நலனுடை யொருவனை நணுகினம் நாமே.

அவ:-  மூன்றாம் பாட்டில்; முதல் பாட்டில் சொன்ன நித்யவிபூ4தி யுக்தனான எம்பெருமானுக்கு லீலார்த்த2மான ஜக3த்3விபூ4தி யோக3த் -தைச் சொல்லுக்கிறது.

வ்யா:- (இலன்) என்றுதொடங்கி. ஒன்றைச்சுட்டி அத்தையுடைய -னல்லன் என்னில், ஐஶ்வர்யத்தில் சிறிது குறைந்து தோற்றும்; ஒன்றைச் சுட்டி இத்தையுடையன் என்னில்; இதொழிய அல்லாதது எல்லாம் இவனது அல்லாமையாலே அத்யல்ப விபூ4திகனாம்; இவ்விரண்டு படியாலும் கருத முடியாதான். பின்னை எங்ஙனே சொல்லுவதென்னில்; கீழில் லோகங்க -ளிலும் மேலில் லோகங்களிலும் உண்டான சேதநாசேதநங்களையுமெல் -லாம் உடையான்.  “உருவினனருவினன்” என்றால் – சேதநாசேதநங்களை உடையன் என்னும் பொருளுக்கு வாசகமாமோ? என்னில்; A “காராயின காளநன் மேனியினன்” என்றாப்போலே இதுவும் வாசகமாம்.

(புலனொடு) என்று தொடங்கி. ப்ரமாணகோ2சரமான பதா3ர்த்த2ங்க ளோடே அந்தராத்மதயா கலந்து நின்றானேயாகிலும், அவற்றின் தோ3ஷங்கள் தன் பக்கல் தட்டாதபடியாய்,  இப்படி எல்லாப் பதா3ர்த்த2ங் -களிலும் வ்யாபித்திருப்பதும் செய்து, இந்த லீலாவிபூ4தியோடே – முதல் பாட்டில் சொன்ன அத்யந்த விலக்ஷணதமமாய், அந்தரங்க3தமமா யிருந்துள்ள நித்ய விபூ4தியை உடையனாய், அத்3விதீயனாவனை – அநாதி3காலம் ஸம்ஸாரத்திலே மங்கி ப43வத்34க்தி க3ந்த4 ரஹிதரான நாம் பரிபூர்ணமாக அநுப4விக்கப்பெற்றோம் என்று திருவுள்ளத்தோடே கூட 1. “मन्यॆ प्राप्ता: स्म तं दॆशम्”    (மந்யே ப்ராப்தா: ஸ்ம தம் தே3ஶம்) என்ற ப4ரதாழ்வானைப் போலே ப்ரீதராய் விஸ்மிதராகிறார்.

நான்காம் பாட்டு

நாமவ னிவனுவன் அவளிவ ளுவளெவள்*
தாமவ ரிவருவர் அதுவிது வுதுவெது*
வீமவை யிவையுவை அவைநலந் தீங்கவை*
ஆமவை யாயவை ஆய்நின்ற அவரே

இத்திருவாய்மொழியில் ஶேஷித்த பாட்டுக்களால் இம்மூன்றாம் பாட்டில் பொருளே விஸ்தரிக்கப்படுகிறது.

அவ:-  நாலாம்பாட்டு.  நாநாவித4மான சொற்களாலே சொல்லப்படுகிற எல்லாப் பதா3ர்த்த2ங்களினுடைய ஸ்வரூபஸ்வபா4வம் ப43வத3தீ4ந மென்று ஸாமாநதி4 கரண்யத்தாலே சொல்லுகிறது.

வ்யா:-  (நாமவனிவனுவன்) என்கிறது – தந்தாமையும், ( *இவ்வாக்யம் முந்திய பாசுரவ்யாக்2யானத்தின் கடைசியில் இருக்கலாம்.) தூ3ரஸ்த2னையும், ஸந்நிஹிதனையும், அதூ3ரவிப்ரக்ருஷ்டனையும் சொல்லுகிறது.  (அவளிவளுவளெவள்) என்கிறது – தூ3ரஸ்தை2யாயும், ஸந்நிஹிதையாயும், அதூ3ரவிப்ரக்ருஷ்டையாயும், வினவப்படுமவளு -மான ஸ்த்ரீலிங்க3 பதா3ர்த்த2ங்களைச் சொல்லுகிறது.  (தாமவரிவருவர்) பூஜ்யராயுள்ளாரில் தூ3ரஸ்த2ராயும், ஸந்நிஹிதராயும், அதூ3ரவிப்ர- க்ருஷ்டராயுமுள்ளாரைச்சொல்லுகிறது.  (அதுவிதுவுதுவெது) என்றது – தூ3ரஸ்த2மாயும், ஸந்நிஹிதமாயும், அதூ3ரவிப்ரக்ருஷ்டமாயும், வினவப்படுவதுமான நபும்ஸக பதா3ர்த்த2ங்களைச் சொல்லுகிறது.  (வீமவையிவையுவை) நஶ்வரமான பதா3ர்த்த2ங்களில் ஸந்நிஹிதமாயும் அதூ3ரவிப்ரக்ருஷ்டமாயும் தூ3ரஸ்த2மாயுமுள்ள பதா3ர்த்த2ங்களைச் சொல்லுகிறது. (அவைநலந்தீங்கவை) அவற்றில் நல்லனவும் தீயனவும்.  (ஆமவை ஆயவை ஆய்நின்ற அவரே) ஆகக்கடவனவும், பண்டே ஆவ்வையும் ஆய்நின்ற பதா3ர்த்த2ங்கள் அவரே.

இப்பாட்டிற்சொன்ன ப்ரயோஜகங்கள் ஓரிட்த்திலுண்டாய் ஓரிட்த்திலின்- றிக்கே யொழிந்தவை இல்லாதவிட்த்தில் யோக்3யமானவை சுட்டிக் -கொள்ளக்கடவது.

ஐந்தாம் பாட்டு

அவரவர் தமதமது அறிவறி வகைவகை*
அவரவர் இறையவர் எனவடி யடைவர்கள்*
அவரவ ரிறையவர் குறைவில ரிறையவர்*
அவரவர் விதிவழி அடையநின் றனரே

அவ:-  அஞ்சாம்பாட்டில், ஸகல பதா3ர்த்த2ங்களுடைய ஸ்தி2தியும் எம்பெருமானாலே என்கிறது.

வ்யா:-  (அவரென்று தொடங்கி) தந்தம் ப்ரக்ருத்யநுகு3ணமாக விவித42லாபி4 ஸந்தி4யையுடைய அதி4காரிகள், தந்தாமறிந்த மார்க்க3பே43ங்களாலே தங்களுடைய அபேக்ஷித ப2லப்ரதா3நஶக்தரான அவ்வவ தே3வதைகளை இவர்களே நமக்கு அஸாதா4ரண ஸ்வாமிக -ளென்று ஆஶ்ரயிப்பர்கள்.

(அவரவரென்று தொடங்கி) ஆஶ்ரயணீயர் ஆஶ்ரயிக்கிறவர்களுடைய அபேக்ஷிதம் செய்கைக்குக் குறையுடையரல்லர்; ஆஶ்ரயிக்கிறவர்கள் ஆஶ்ரயணீயரை வித்4யுக்தப்ரகாரமே ஆஶ்ரயிக்கவும், அவர்கள் அவர்களுக்கு ப2லப்ரதா3நஶக்தராகவும், ஸர்வேஶ்வரன் அந்தராத்மதயா நின்றான்.

ஆறாம் பாட்டு

நின்றனர் இருந்தனர் கிடந்தனர் திரிந்தனர்*
நின்றிலர் இருந்திலர் கிடந்திலர் திரிந்திலர்*
என்றுமொ ரியல்வினர் எனநினை வரியவர்*
என்றுமொ ரியல்வொடு நின்றவெம் திடரே

அவ:-  ஆறாம்பாட்டில் – சேதநாசேதநாத்மக ஸமஸ்த வஸ்துக்களு -டைய ஸமஸ்த ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் ப43வத் ஸங்கல்பாதீ4நமென் -கிறது.

வ்யா:-  (நின்றனரிருந்தனரென்று தொடங்கி) (என்றுமொரியல்வின ரென்று தொடங்கி) அநேக ப்ரகாரனாயிருக்கையாலே ஒரு ப்ரகாரத்தைச் சொல்லி இதுவே படியென்று ஒருநாளும் பரிச்சே2தி3க்க அரியனாய், அபரிச்சே2த்3யதைக ஸ்வரூபனாய், இப்படி ஸுத்3ருட4 ப்ரமாண ஸித்34னாயுள்ளவர்.  “எம்” என்று – ஸ்வலாப4த்தைச்சொல்லுகிறது.  நாலாம் பாட்டிலே ஸ்வரூபதாத்3தீ4ந்யம் ஸித்34மாகையால் இப்பாட்டில் ப்ரவ்ருத்தி நிவ்ருத்த்யம்ஶ தாத3தீ4ந்யத்திலே தாத்பர்யமாயிற்று, “अरुणया पिङ्गाक्ष्या सॊमं क्रीणाति” (அருணயா பிங்கா3க்ஷ்யா ஸோமம் க்ரீணாதி) என்கிற விடத்தில் ஆருண்யாதி3களே விதே4யமானாப்போலே.

ஏழாம் பாட்டு

திடவிசும் பெரிவளி நீர்நிலம் இவைமிசை*
படர்பொருள் முழுவது மாய் அவை யவைதொறும்*
உடன்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்*
சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே

அவ:-  ஏழாம்பாட்டில் – கீழ் மூன்று பாட்டிலாக சேதநாசேதந பதா3ர்த்த2ங்களினுடைய ஸ்வரூபஸ்தி2தி ப்ரவ்ருத்திகள் ப43வத3தீ4ந மென்று ஸாமாநாதி4கரண்யத்தாலும், வையதி4கரண்யத்தாலுமாகப் பேசி, அந்த ஸாமாநாதி4கரண்யத்துக்கு நிப3ந்த4நமான ஜக3தீ3ஶ்வரர் -களுக்குண்டான ஶரீரஶரீரிபா4வ ஸம்ப3ந்த4த்தைச் சொல்லுகிறது.  “ஜக3த்தினுடைய ஸ்வரூப ஸ்தி2த்யாதி3கள் ப43வத3தீ4நமாகையாலே இந்த ஜக3த்து அவனுக்கு ஶரீரமென்கிறது” என்றும் சொல்லுவர்.

வ்யா:-  (திடவிசும்பென்று தொடங்கி) ஸ்வகார்யமான பூ4தசதுஷ்ட – யங்கள் உண்டாவதற்கு முன்பேயுண்டாய், அவை நஶித்தாலும் தான் சிலநாள் நிற்குமதான ஆகாஶம் முதலான பூ4தபஞ்சகங்களையும் உபா-தா3நமாகக்கொண்டு, கார்யமாய் விஸ்த்ருதமாகா நின்றுள்ள தே3வாதி3 பதா3ர்த்த2ங்களையெல்லாம் உண்டாக்கி; இங்கு ஆகாஶத்துக்குச் சொன்ன தா3ர்ட்4யம் லோகாயதாதி3மத நிராஸபரம்.  எரியாவது – தேஜஸ்ஸு.  வளியாவது – காற்று.  (அவையவையென்று தொடங்கி) அவ்வவ பதா3ர்த்தங்கள் தோறும் ஶரீரத்தில் ஆத்மாவைப்போலே – தா4ரகனுமாய் நியந்தாவுமாய்க்கொண்டு வ்யாப்ய பதா3ர்த்த2ங்களுக்குத் தெரியாமே வ்யாபித்து, அவ்வளவன்றிக்கே அப்பதா3ர்த்த2ங்களுடைய புறம்பும் வ்யாபித்து, காலத்திலே இவற்றை ஸம்ஹரிப்பதும் செய்த ஸர்வேஶ்வரன் – முதற்பாட்டுத் தொடங்கிச் சொன்னபடியே, பௌருஷேயத்வ நிப3ந்த4நமான விப்ரலம்பா4தி3தோ3ஷரஹிதமுமாய், அபா3தி4த ப்ரமாணமுமாகையாலே மிக்க தேஜஸ்ஸை உடைத்தாய், ஒருவரால் பண்ணப்பட்டதன்றிக்கே என்றும் கேட்டேவருகையாலே ஶ்ருதி யென்று சொல்லப்படுகிற வேத3த்திலே ப்ரதிபாத்3யனாய்க்கொண்டு உளன்.  தாம் அநுஸந்தி4த்த அர்த்த2த்துக்கு ஶ்ருதியை ஸாக்ஷியாகச் சொல்லுகையாலே, ஶ்ருதியில் சொல்லுகிற ஶ்ரிய:பதித்வமும் நாராயண ஶப்33வாச்யத்வமும் அநுஸந்தி4த்தாராகவேணும்.  இவ்வர்த்த2த்தில் நிர்தோ3ஷ ஶ்ருதியே ப்ரமாணமாகப்பிடிக்கையாலே வேத3 விருத்தரான பா3ஹ்யரும் ஜக3தீ3 ஶ்வரர்களுக்கு அந்யதா2 ஸம்ப3ந்த4ஞ்சொல்லும் குத்3ருஷ்டிகளும் அர்த்தா2த் ப்ரதிக்ஷிப்தரானார்கள்.

எட்டாம் பாட்டு

சுரரறி வருநிலை விண்முதல் முழுவதும்*
வரன்முத லாயவை முழுதுண்ட பரபரன்*
புரமொரு மூன்றெரித்து அமரர்க்கும் அறிவியந்து*
அரனய னெனஉல கழித்தமைத் துளனே

அவ:-  எட்டாம்பாட்டு. – இப்பாட்டில் – இப்படி ஶ்ருதிஸித்34னான ஸர்வேஶ்வரனாகிறான், ஸ்ருஷ்டி ஸம்ஹாரகர்த்தாக்களாக ப்ரஸித்34 ரான ப்3ரஹ்மருத்3ராதி3களிலே ஒருவனானாலோ? என்று சொல்லுகிற குத்3ருஷ்டிகள் நிரஸிக்கப்படுகிறார்கள்.

வ்யா:-  (சுரரென்று தொடங்கி) ப்3ரஹ்மாதி3கள் அறிய வொண்ணாத ஸ்தி2தியை உடைத்தாயிருந்த ப்ரக்ருதி தொடக்கமாக மேலுள்ள ப்ராக்ருத பதா3ர்த்த2ங்கள் எல்லாவற்றுக்கும் வரிஷ்ட2மான காரணமாய்; விண்ணென்று – ப்ரக்ருதிகார்யமான ஆகாஶ வாசி ஸப்33த்தை – காரணமான ப்ரக்ருதியிலே ப்ரயோகி3க்கிறார்.  (அவை முழுதுண்ட) ஈஶ்வரனாலும், அவன் காட்டின வழியை உடைய ப்3ரஹ்மா வாலும் ஸ்ருஷ்டமான பதா3ர்த்த2ங்களில் ருத்3ரனால் ஸம்ஹார்யமாவது ஏகதேஶம்; ஸம்ஹர்த்தாவான ருத்3ரன் தன்னையும், அவனுக்கு நிலமன்றிக்கே இருந்துள்ள மஹதா3தி3களையுமகப்பட ஸம்ஹரித்தவன்.  (பரபரன்) அவன் காடின் வழியாலே ஏகதே3ஶ ஸ்ருஷ்டியையும் ஏகதே3ஶ ஸம்ஹாரத்தையும் பண்ணுகையாலே அஸ்மதா3தி3களைக்காட்டில் பரராயிருக்கிற ப்3ரஹ்மருத்3ரர்களுக்கு நிலமல்லாத ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களைப் பண்ணுகையாலே அவர்களுக்கும் பரனென்றவாறு. (புரமொரு மூன்றெரித்து என்று தொடங்கி) ருத்3ரன் த்ரிபுரத3ஹநம் பண்ணினானென்றும், ப்3ரஹ்மா வைதி3க ஜ்ஞாநத்தை தே3வர்களுக்கு உபதே3ஶித்தானென்றும், அவர்களுக்கு ப்ரஸித்3தி4யைக் கொடுத்து, அந்தராத்மதயா நின்று தானே அவ்வுபகாரங்களை லோகத்துக்குப் பண்ணினாப்போலே ஸமஸ்த ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களையும் தானே செய்தருளுகையாலே வேறேயும் சிலர் ஸ்ருஷ்டி ஸம்ஹாரங்களைப் பண்ணுவாருண்டென்று சொல்ல முடியாது.

ஒன்பதாம் பாட்டு

உளனெனில் உளன் அவனுருவம் இவ்வுருவுகள்*
உளனல னெனில் அவனருவம் இவ்வருவுகள்*
உளனென இலனென இவைகுண முடைமையில்*
உளனிரு தகைமையொடு ஒழிவிலன் பரந்தே

அவ:-  ஒன்பதாம்பாட்டில் – இப்படி ப்ரமாணமும் ப்ரமேயமும் ஒருபடி உளவாகக்கொண்டு, ஈஶ்வர ஸ்வரூபத்திலும் ஈஶ்வர விஶேஷண-த்திலும் விப்ரதிபத்தி பண்ணின வாதி3களை எல்லாம் நிராகரித்து, “ப்ரமாணமும் இல்லை, ப்ரமேயமும் இல்லை; ஸர்வமும் ஶூந்யமாதலால் வேத3முமில்லை;  வேத3ப்ரமேயமாயுள்ள ஈஶ்வரனும் அவனுடைய விபூ4தியாயுள்ள ஜக3த்துமில்லை” என்கிற ஶூந்யவாதி3யை நிராகரிக்கிறது.

வ்யா:-  எங்ஙனேயென்னில்; ஶூந்யவாதி3யான உன்னைக் கேட்போம்.  ஈஶ்வரன் இல்லாமையை ஸாதி4க்க நினைக்கிற நீ, நினைத்த பொருளை ஒரு வாக்யத்தாலே ப்ரதிஜ்ஞை பண்ணி, பின்னை ஹேது -வாலே அத்தை ஸாதி4க்கவேணுமிறே;  அவ்விடத்தில் – நீ ஹேது சொல்லு வதற்கு முன்பே உன் ப்ரதிஜ்ஞையைக்கொண்டு ஈஶ்வரனுளனென்னு மிடமே ஸாதி4ப்பன்; அதுக்காக – ஈஶ்வரனுடைய இன்மையை ப்ரதிஜ்ஞை பண்ணுவது உளனென்ற சொல்லாலேயோ, இலனென்ற சொல்லாலே -யோ? என்ன; இப்படி கேட்கைக்குக் கருத்தென்னென்னில், உளனென்ற சொல்லால் இன்மையைக் காட்ட வொண்ணாதாப்போலே இலனென்ற சொல்லால் நீ * கிற்ற நினைத்த இன்மை காட்ட வொண்ணாதென்றவாறு.  அது எங்ஙனேயென்னில், உண்டென்ற சொல்லாலும், இல்லை என்ற சொல்லாலும் லோகத்தில் யாதொரு பொருள் விளையக் கண்டோம், அப்பொருளே உன் சொற்களுக்கும் பொருளாக வேணுமிறே; கண்டறி -யாத ஒரு பொருளை இஶ்ஶப்33ங்கள் காட்டமாட்டாதிறே; லோகத்தில் குடம் உண்டென்றால் குடம் என்று சொல்லப்படுகிற பொருள் உண்மை என்பதொரு த4ர்மத்தை உடைத்தென்று தோற்றா நின்றது; அவ்விடத்தில் குடமாவது – மண்ணாலே பண்ணிற்றொன்று.  அதினுடைய உண்மை யாவது – மண்ணும் உருளையுமன்றியே இரண்டுக்கும் நடுவில் அவஸ்தை2யாய் வயிறும் வாயும் உடைத்தான மண்ணாயிருக்கை.  இப்படியால், ஈஶ்வரன் உளனென்னில் உளனாய் வரும்; இச்சொல்லால் அவனுடைய இன்மை காட்டவொண்ணாது.  இப்படி ஈஶ்வரன் உளனென் -னவே, ஐஶ்வர்யத்தையொழிய ஈஶ்வரன் உளனாகக் கூடாமையால் அவனுடைய விபூ4தியான ஜக3த்தும் உண்டாம்; ஆமிடத்திலும் அவனுக்கு ஶரீரமாயே உளதாம். இப்பொருள் (அவனுருவமிவ்வுருவுகள்) என்றவிடத் -தாலே சொல்லப்பட்டது.  இனி, ஈஶ்வரன் இலனென்ற சொல்லாலே அவனுடைய இன்மை காட்ட நினைத்தாயாகில், இல்லை என்ற பொருளிலும் லோகத்திற் கண்டபடி பொருள் கொள்ளவேணும்.  லோகத்தில், குடம் இல்லை என்றால், இங்கில்லையென்னுதல், இப்போ – * கிற்ற – ஸமர்த்தி2க்க.

தில்லையென்னுதல், மண்ணுருளையாய் இருந்தது, குடமாய்ப்  பிறந்ததில்லையென்னுதல், தளர்ந்து ஓடுகளாய்க் கிடந்ததென்னுதல், இவ்வனைத்திலொன்று பொருளாகக் கண்டோம்; இப்படியன்றியே, வெறுமனே குடம் இல்லையென்னில், என்றும் எங்கும் எப்படியும் குடம் இல்லை என்று சொல்லிற்றாகவேணும்;  அப்படியாகில், எப்படியும் குடம் என்றொன்று அறிய உபாயம் இல்லையாகையால் குடம் என்று சொல்லவும் கூடாது, நினைக்கவும் கூடாது.  ஆதலால், ஒன்றில்லை என்பானுக்கு ஒருபடியாய் இன்றியே மற்றபடியால் உண்டாக இசைய வேணும்; ஆதலால் இங்கில்லை என்றது – அப்பாலே உண்டென்றவாறு. இப்போதில்லை என்றது – மற்றொருபோது உண்டென்றவாறு.  குடமில்லை என்றது – மண்ணுருளையாயாதல், ஓடுகளாயாதல் இருந்ததென்றவாறு. இப்படியால் இன்மையாவது மற்றொருபடியால் உண்மையாய்த் தோற்றிற்று.  இப்படியால் ஈஶ்வரனில்லை என்றானு க்கும் அவன் தன்னையும் அவனைஶ்வர்யங்களையும் ஒருபடியால் உளவாகக்கொண்டு, அப்படியால் உண்மையில்லை என்ற சொல்லாலே சொன்னானாகவேணும்; ஆதலால் உளனென்ற சொல்லால் அவனும் அவன் ஐஶ்வர்யமும் ஸித்3தி4த்தாப்போலே இலனென்ற சொல்லாலும் அவன்தன்னுடைய உண்மையும் அவனைஶ்வர்யத்தின் உண்மையும் ஸித்34மாய் வந்தது.  இப்பொருள் (உளனலனெனில் அவனருவமிவ்வருவு கள்) என்றத்தால் சொல்லப்பட்டது.  அவனருவம் என்றது – அபா4வமென்ற சொல்லாலே சொல்லப்பட்டதான உளதாயிருந்த அது என்றவாறு.  இப்படியால் உண்மையும் இன்மையுமாகிறன – உள்ள வஸ்துவுக்கே இரண்டு கு3ணமாய் முடிந்தன.  ஆதலால் ஈஶ்வரன் உளனென்றாதல், இலனென்றாதல், இரண்டு படியாலும் உளனாம்.  இவ்வழியாலே வேத3ம் உண்டாயிற்று; அதில் சொன்னபடியே அவன்தான் எங்கும் பரந்துளனா -னான்.  இப்பொருள் இப்பாட்டில் மேல் இரண்டடியாலும் சொல்லுகிறது.  இப்பாட்டு ஆழ்வான் யோஜித்தபடி.

பத்தாம் பாட்டு

பரந்ததண் பரவையுள் நீர்தொறும் பரந்துளன்*
பரந்தஅண் டமிதென நிலவிசும் பொழிவற*
கரந்தசி லிடந்தொறும் இடந்திகழ் பொருள் தொறும்*
கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே

அவ:-  பத்தாம் பாட்டில் – கீழ்ச்சொன்ன ப43வத்3வ்யாப்தியினு -டைய ஸொகர்யத்தை அருளிச்செய்கிறார்.

வ்யா:-  (பரந்த என்று தொடங்கி) பரந்து குளிர்ந்திருந்த கடலில் ஜல பரமாணுதோறும் அஸங்குசிதமான அண்டா3வகாஶத்திற்போலே வ்யாபித்திருக்கும்.  (நிலவிசும்பு என்று தொடங்கி) இப்படி எல்லா பூ4தங்களிலும் பௌ4திகமான க்ஷுத்3ர ஶரீரங்களிலும் தத3ந்தர்வர்த்தி -களாய் ஸ்வயம்ப்ரகாஶமாயுள்ள ஆத்மாக்கள் தோறும் அந்யைரத்3ருஷ்ட னாய்க்கொண்டு ஸமஸ்த வஸ்துக்களிலும் வ்யாபித்திருக்கும். இவற்றை எல்லாவற்றையும் தன் திருவயிற்றிலே வைத்து ஸம்ஹரித்தவன்கிடீர் பரமாணுக்களிலும் வ்யாபித்து நிற்கிறான் என்று கருத்து.

பதினொன்றாம் பாட்டு

*கரவிசும் பெரிவளி நீர்நில மிவைமிசை*
வரனவில் திறல்வலி அளிபொறை யாய்நின்ற*
பரனடி மேல்குரு கூர்ச்சட கோபன்சொல்*
நிரனிறை யாயிரத்து இவைபத்தும் வீடே

அவ:-  நிக3மத்தில் – ஸமஸ்தகல்யாணகு3ணாகரனாய், நிரவதி4க க்ருபாம்போ4தி4யாய், தனக்கு ஸத்3ருஶமான தி3வ்யதே3ஹத்தையும் உடையனாய், ஹேய ப்ரத்யநீகத்வ கல்யாணைகதாநத்வங்களாலே சேதநாசேதநங்களிற்கட்டில் அத்யந்த விலக்ஷணஜ்ஞாநாநந்த3 ஸ்வரூபனு மாய், ஸ்வாதீ4நமான அஶேஷசித3சித் ஸ்வரூபஸ்தி2தி சேஷ்டைகளையும் உடையனாய், ஸமஸ்த ஜக3த்தையும் ஶரீரதயா ஶேஷமாக உடையனாய், அப்ரதிபக்ஷமாம்படி வேத3ப்ரதிபாத்3யனாய், வேத3ங்களில் பரராகச் சொல்லுகிற ருத்3ராதி3களுக்கும் பரனாய், “ப்ரமாணமுமில்லை ப்ரமேயமு மில்லை” என்கிற ஶூந்யவாதி3களால் அவிசால்யமான தன்மையை உடையனாய், பரமாணுக்கள் தோறும் புக்கு அணுதரனாய் வ்யாபிக்க வல்லனாய், ஶ்ரிய:பதியாய், நாராயணனான ஸர்வேஶ்வரனை தத்ப்ரஸாத3லப்3தை4யான ஜ்ஞாநத்3ருஷ்டியாலே ஸாக்ஷாத்கரித்து, தத3நுப4வஜநித ஹர்ஷப்ரகர்ஷத்தாலே தனக்குத் தானே பிறந்து, இவனுடைய ஏவம் வித4பரத்வப்ரதிபாத3கமாய், ஶப்33ச்சேர்த்தியையும் அர்த்த2பௌஷ்கல்யத்தையும் உடைத்தாயிருந்துள்ள இப்பத்தும் எம்பெருமான் திருவடிகளிலே பரிசர்யாரூபமாகப் பிறந்தன என்கிறார்.

வ்யா:-  (கரவிசும்பென்று தொடங்கி) ஸஸ்வபா4வமான பூ4தபஞ்ச கங்களையும், தது3பலக்ஷிதமான கார்யவர்க்க3 நித்யவிபூ4த்யாதி3களை -யும் உடையனாகையாலே ஸர்வஸ்மாத்பரனான ஸர்வேஶ்வரன் திருவடி -களிலே; கரவிசும்பென்னுமிடத்துக்கு அல்லாத பூ4தங்களிற் காட்டில் அச்ச2தயா கரந்திருக்கை என்றுஞ்சொல்லுவர்; திண்மை சொல்லிற்றாக வுமாம். (நிரனிறை) என்கிற இடத்துக்கு – அர்த்த2பௌஷ்கல்யமும் ஶப்33 பௌஷ்கல்யமும்.  1. “पादबद्धॊऽक्षर समस्तन्त्रीलयसमन्वित:” (பாத33த்3தோ4ऽக்ஷர ஸமஸ்தந்த்ரீலயஸமந்வித:) என்றாப்போலே, சொல்லும் பொருளும் இசையும் தாளமும் அந்தாதியும் அடைவே நிறுத்தப்படுகை என்றும் சொல்லுவர்.  பரனடிமேற் சொன்ன இவ்வாயிரத்து இப்பத்தும் மோக்ஷ ப்ரத3மென்றும் சொல்லுவர்கள்.

நஞ்சீயர் திருவடிகளேரணம்

இரண்டாம் திருவாய்மொழி
வீடுமின்: ப்ரவேஶம்

v  v  v

அவதாரிகை    1-2

வீடுமின்அவதாரிகை

இரண்டாம் திருவாய்மொழியில–இப்படி எம்பெருமானுடைய பரத்வத்தை அநுஸந்தி3த்த ஆழ்வார், அவ்வநுப4வஜநித ஹர்ஷப்ரகர்ஷத்தாலே 1. “बॊधयन्त: परस्परम्” (போ34யந்த: பரஸ்பரம்) என்னும்படியாலே சிலரோடே உசாவியல்லது த4ரிக்கமாட்டாத த3ஶை வருகையாலும், அதுக்கு ஈடானா-ரைக் காணாமையாலும், எல்லாரையும் தமக்குப் பாங்காம்படி திருத்தி யாகிலும் அவர்களோடே கூட எம்பெருமானை அநுப4விக்க நினைத்து, அவர்களைத் திருத்தும் விரகு எங்ஙனேயென்று பார்த்தருளி, “சேதநராகி றார் –  பொல்லாதது கண்டால் கைவிடவும், நல்லது கண்டால் கைக் -கொள்ளவும் கடவராயிருப்பர்; ஆனபின்பு அவர்கள் பற்றின நிலத்தில் பொல்லாங்குகளைக் காட்டிக் கொடுத்தும், ப43வத்3கு3ணங்களுடைய நன்மையைக் காட்டிக்கொடுத்தும் இவர்களைத் திருத்துவோம்” என்று இவர்கள் பற்றின நிலங்களினுடைய அஸ்தி2ரத்வாதி3 தோ3ஷங்களை உபதே3ஶித்து, அகி2ல ஹேயப்ரத்யநீகனாய் ஸமஸ்த கல்யாண கு3ணாத் மகனாய் ஸர்வை: ஸ்ப்ருஹணீயனான எம்பெருமான் படியையும், இவனைப்பற்றுமிடத்திலுள்ள அந்தராய பரிஹார பூர்வகமாக, மற்றும் ப4ஜநத்துக்கு வேண்டுமுறுப்புக்களெல்லாம் உபதே3ஶித்தருளி, இப்படி அவனை ப4ஜியுங்கோளென்று ப4க்தியோக3த்தை அருளிச்செய்கிறார்.

முதல் பாட்டு

*வீடுமின் முற்றவும்*
வீடுசெய்துஉம்முயிர்
வீடுடை யானிடை*
வீடு செய்ம்மினே

அவ:-  முதற்பாட்டில் – ப43வத்3வ்யதிரிக்தமான ஸர்வவிஷயங்க-ளையும் அறவிட்டு, ஸர்வஶேஷியான எம்பெருமான் திருவடிகளிலே ஆத்மாவை ஸமர்ப்பியுங்கோள் என்கிறார்.

வ்யா:-  (வீடுமின்) பற்றிநின்ற நிலத்தினுடைய த்யாஜ்யதாதிஶயம் தோற்று கைக்காக முதலிலே விடுங்கோள் என்கிறார். (முற்றவும்) பண்டு பற்றின விஷயங்களில் சில ஹேயமும், சில உபாதே3யங்களுமாயிருக்கி- றனவல்ல; எல்லாம் த்யாஜ்யமே.  (வீடுசெய்து) என்று அநுபா4ஷிக்கிறது – பற்றினவற்றை விடுகையே ப்ரயோஜநம் போந்திருக்கச்செய்தே, அதுக்கு மேலே ஒரு நன்மை உபதே3ஶிக்கைக்காக என்னுமிடம் தெரிகைக்கு.  (உம்முயிரென்று தொடங்கி) உம்முயிரை விடுமிடத்தில் உறவில்லா நிலத்திலன்றிக்கே உடையவன் பக்கலிலே விட இசையுங்கோள்.

இரண்டாம் பாட்டு

மின்னின் நிலையில*
மன்னுயி ராக்கைகள்*
என்னு மிடத்துஇறை
உன்னுமின் நீரே

அவ:-  இரண்டாம்பாட்டில் – நெடுங்காலம் பழகின விஷயங்களை விடவொண்ணுமோ? என்னில், அஸ்தி2ரத்வாதி3 தோ3ஷங்களை அநுஸந்தி4க்கவே விடுகை எளிது என்கிறார்.

வ்யா:-  (மின்னின் நிலையில) மின்னுக்குள்ள நிலையும் இல்லை என்கிறது; அஸ்தி2ரமாயிருந்தே ஸ்தி2ரங்கள் போலே சிலநாள் செல்லு- கிலும் செல்லும் என்றவாறு. (மன்னுயிராக்கைகள்)  ஆத்மாதான் தனக்கு உபாதே3யமாகக் கொண்டு விடேனென்று பற்றிக்கிடக்கிற தே3ஹங்கள்.  “உயிர்” என்கிற ஏகவசநத்துக்கும் “ஆக்கைகள்” என்கிற ப3ஹுவசநத்து -க்கும் கருத்து – ஓர் ஆத்மாவே கர்மாநுகு3ணமாக அநேக தே3ஹங்களிலே நலிவுபடுமென்று தோற்றுகைக்காக.  (என்னுமிட்த்தென்று தொடங்கி) என்னும் இஸ்த2லத்தில் தோ3ஷப்பரப்பெல்லாம் அநுஸந்தி4க்க வேண்டுவ தில்லை; தோ3ஷத்தினுடைய ஏகதே3ஶாநுஸந்தா4நத்தாலே விஷயங்க -ளில் வைராக்3யம் பிறக்கும்.  (நீரே) தோ3ஷாநுஸந்தா4த்துக்கு ப்ரமாணா -பேக்ஷையில்லை; உங்களுக்கே அநுஸந்தி4க்கலாம்.

மூன்றாம் பாட்டு

நீர்நும தென்றிவை*
வேர்முதல் மாய்த்துஇறை
சேர்மின் உயிர்க்கு* அதன்
நேர்நிறை யில்லே

அவ:-  மூன்றாம் பாட்டில் – த்யாஜ்யத்தைச் சுருங்க உபதேஶிக்கிறார்.

 

வ்யா:-  (நீர்நுமதென்று) அநர்த்த2கரமான அஹங்கார மமகாரங்க-ளைச் சொல்லுகிறது.  (இவை வேர்முதல் மாய்த்து) அஹங்கார மமகாரங்- கள்தான் செல்லா நின்றனவேயாகிலும், ஆசார்ய ஸேவா ப்ராசுர்யத் தாலும், ஶாஸ்த்ராப்4யாஸத்தின் மிகுதியாலுமாக இவை அபுருஷார்த்த2 மென்று அத்4யவஸிக்கை – இவற்றினுடைய வேர்முதல் மாய்க்கையாவது.  ஸவாஸநமாக இவற்றை விட்டு எம்பெருமானை ஆஶ்ரயிக்கை து3ஷ்கர மாகையால் இதுவே பொருளாகை உசிதம்.  (இறை என்று தொடங்கி) ஸர்வேஶ்வரனை ஆஶ்ரயியுங்கோள்; ஆத்மாவுக்கு அத்தோடொக்கும் சீரியதில்லை.  சீரியதாவது – ஹிதமும் ப்ரியமும்.

நான்காம் பாட்டு

இல்லதும் உள்ளதும்*
அல்லது அவனுரு*
எல்லையில் அந்நலம்*
புல்குபற் றற்றே

அவ:-  நாலாம் பாட்டில் – பற்றப்படுகிற விஷயத்தின் நன்மை சொல்லுகிறார்.

வ்யா:-  (இல்லதென்று தொடங்கி) ஏகரூபமல்லாமையாலே இல்லை என்னலாம் படியிருக்கிற அசேதநத்தின் தன்மையும், ஏகரூபமாகையாலே உண்டென்னலாம்படி யிருக்கிற சேதநர் படியுமன்றிக்கே இருக்கும் அவன் ஸ்வரூபம், அவன் ஸ்வரூபந்தான் இருக்கும்படி எங்ஙனேயென்னில் (எல்லையிலென்று தொடங்கி) அஸங்க்2யேய கல்யாண கு3ணங்களை உடைத்தாயிருக்கும்.  புறம்புள்ள ஸங்க3த்தை விட்டு, அவனை ஆஶ்ரயி.  “புல்கு” என்கையாலே ஆஶ்ரயணம் இனிதென்று கருத்து.

ஐந்தாம் பாட்டு

அற்றது பற்றெனில்*
உற்றது வீடுயிர்*
செற்றது மன்னுறில்*
அற்றிறை பற்றே

அவ:-  அஞ்சாம் பாட்டில் – ப43வத்ஸமாஶ்ரயணத்துக்கு அந்தராய பரிஹாரத்தை அருளிச்செய்கிறார்.

வ்யா:-  (அற்றதென்று தொடங்கி) ப்ராக்ருதவிஷய ஸங்க3ம் அறுங்காட்டில் ஆத்மா மோக்ஷத்தை உற்றது–கையுற்றது.  (செற்றதென்று தொடங்கி) அந்தப் புருஷார்த்த2த்தைத் தவிர்த்து நிரதிஶய புருஷார்த்த-மான ப43வத் கைங்கர்யத்தைப் பெற்று நிலைநிற்க வேண்டியிருந்தா -யாகில், ஆஶ்ரயிக்கும்போது உன்னை எம்பெருமானுக்கே ஶேஷமாக அத்4யவஸித்து ஸ்வாமியானவனை ஆஶ்ரயிப்பது.

ஆறாம் பாட்டு

பற்றிலன் ஈசனும்*
முற்றவும் நின்றனன்*
பற்றிலை யாய்அவன்
முற்றி லடங்கே

அவ:-  ஆறாம் பாட்டில் – விலக்ஷணரான நித்யாஶ்ரிதரையுடைய ஈஶ்வரன், அவிலக்ஷணராய் இன்றுவந்த அபூர்விகர்களை அங்கீகரிக்-குமோ?என்னில்;

வ்யா:-  நித்யாஶ்ரிதர்பக்கல் அவன் ஸங்க3த்தைத் தவிர்ந்து, இன்று ஆஶ்ரயித்தவர்களையே தா4ரகாதி3களாகக் கொண்டிருப்பானொருவன்.  ஆனபின்பு, நீயும் அப்படியே புறம்புள்ள ஸங்க3த்தை அற்று, அவனையே தா4ரக போஷகாதி3களெல்லாமாகக் கொண்டு பற்று.  நிரபேக்ஷனான ஈஶ்வரன் க்ஷுத்3ரரான நம்மை அங்கீ3கரிக்குமோ? என்னில்; அங்ஙனே இருந்தானேயாகிலும், ஸங்க3 ஸ்வபா4வனாய், அவனுடைய ஸர்வஶேஷ வ்ருத்தியிலும் அதி3கரி என்றுமாம்.

ஏழாம் பாட்டு

அடங்கெழில் சம்பத்து*
அடங்கக்கண்டுஈசன்
அடங்கெழில் அஃதென்று*
அடங்குக உள்ளே

அவ:-  ஏழாம் பாட்டில் – ஸங்க3ஸ்வபா4வனேயாகிலும், அபரிச் -சே2த்3யோப4யவித4 மஹாவிபூ4தியாயிருக்கையாலே, நம் போல்வாருக்- குக் கொள்ளவொண்ணாது; ஆனபின்பு ஆஶ்ரயிக்கக்கூடாது என்னில்; எம்பெருமானோடுள்ள ஸம்ப3ந்த4த்தை அநுஸந்தி4க்கவே தன் சிறுமை யால் வெருவாதே த4ரித்து ஆஶ்ரயிக்கலாம் என்கிறார்.

வ்யா:-  (அடங்கெழிலென்று தொடங்கி) அடங்க எழிலான ஸம்பத்து எல்லாவற்றையும் கண்டு.  (ஈசனென்று தொடங்கி) அந்த விலக்ஷணமான ஸம்பத்தெல்லாம் என் ஸ்வாமியது என்று அநுஸந்தி4த்து, தானும் அவன் விபூ4த்யந்தர்ப்பூ4தனாக அநுஸநிதி4ப்பது.

எட்டாம் பாட்டு

உள்ள முரைசெயல்*
உள்ளஇம் மூன்றையும்*
உள்ளிக் கெடுத்துஇறை
யுள்ளி லொடுங்கே

அவ:-  எட்டாம் பாட்டில் – ப4ஜந ப்ரகாரத்தைச் சொல்லுகிறார்.

வ்யா:-  (உள்ளம் என்று தொடங்கி) மநோவாக்காயங்கள் தேட வேண்டாதே ஸம்பந்நமாய், விதே4யமான மூன்றையும், – என்ன ப்ரயோஜநம் கொள்கைக்கு இவை உண்டாக்கிற்று என்று ஆராய்ந்து, அவற்றுக்கு உண்டான அப்ராப்தமான பா3ஹ்யவிஷய ப்ராவண்யத்தைத் தவிர்த்து, அவன் பக்கலிலே நிவேஶி என்கிறார்.

ஒன்பதாம் பாட்டு

ஒடுங்க அவன்கண்*
ஒடுங்கலும் எல்லாம்*
விடும்பின்னும் ஆக்கை*
விடும்பொழு தெண்ணே

அவ:-  ஒன்பதாம் பாட்டில் – இப்படி ஆஶ்ரயிக்க ப43வத் ப்ராப்தி ப்ரதிப3ந்த4கமான கர்மங்களெல்லாம் நஶிக்கும்; ஶரீரபர்யவஸாந மாத்ரமே இவனுக்கு விளம்ப3ம் என்கிறார்.

வ்யா:-  (ஒடுங்கவென்று தொடங்கி) அவனை ஆஶ்ரயிக்குங்காட் -டில் அவித்3யாதி3 ஸங்கோசங்களெல்லாம் போம்; ஆக்கை என்று ஶரீரத்துக்குப் பேர்.

பத்தாம் பாட்டு

*எண்பெருக்கு அந்நலத்து*
ஒண்பொருள் ஈறில*
வண்புகழ் நாரணன்*
திண்கழல் சேரே

அவ:-  பத்தாம் பாட்டில் – ஸார்த்த2மாகத் திருமந்த்ரத்தை அருளிச் செய்து, இத்தாலே யாவச்ச2ரீரபாதம் எம்பெருமானை ஆஶ்ரயியுங்கோள் என்கிறார்.

வ்யா:-  அஸங்க்2யேயராய், ஜ்ஞாநாதி3 கல்யாணகு3ணங்களை உடையருமாய், நித்யமாய் விலக்ஷணமான ஸ்வரூபத்தையுடைய ஸர்வாத்மாவையும், நித்யஸித்34 கல்யாண கு3ணங்களையும் உடைய நாரயணனுடைய ஆஶ்ரிதரை ஒருகாலும் விடாதே ரக்ஷிக்கும் ஸ்வபா4வ மான திருவடிகளை ஆஶ்ரயி.

பதினொன்றாம் பாட்டு

*சேர்த்தடத்தென்குரு
கூர்ச்சட கோபன்சொல்*
சீர்த்தொடை யாயிரத்து*
ஓர்த்தஇப் பத்தே

அவ:-  நிக3மத்தில்–எம்பெருமானுடைய கு3ணங்களைத் தொடுத்த ஆயிரம் திருவாய்மொழியு(யிலு?)ம் ஆராய்ந்து சொல்லப்பட்டன இவை என்கிறார்.

வ்யா:-  (சேர்த்தடத்தென் குருகூர்ச்சடகோன்) திரண்ட தடங்களை யுடைய திருநகரியை யுடைய ஆழ்வார்.  “சேர்த்தடங்களையுடைத்து” என்றும் சொல்லுவர்; “இப்பத்தைச் சேர்” என்று க்ரியாபத3மாகவும் சொல்லுவர்.  பரோபதே3ஶம் பலரைக் குறித்து உபக்ரமிக்கையாலே. மேல் ஏகவசநமான இடங்களெல்லாம் ஜாத்யபி4ப்ராயம்.

நஞ்சீயர் திருவடிகளேரணம்

மூன்றாம் திருவாய்மொழி
பத்துடையடியவர்: ப்ரவேஶம்

v  v  vஅவதாரிகை    1-3

பத்துடையடியவர்ப்ரவேசம்

முதல் பாட்டு

*பத்துடை யடியவர்க் கெளியவன் பிறர்களுக் கரிய
வித்தகன்* மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்*
மத்துறு கடைவெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு*
எத்திறம் உரலினொடு இணைந்திருந் தேங்கிய எளிவே

மூன்றாம் திருவாய்மொழியில் – ‘லோகத்தில் கண்ணாலே கண்டு கை- யாலேயாயிற்று ப4ஜிக்கலாவது; இரண்டு படியுமன்றிக்கே அதீந்த்3ரிய -னான ஸர்வேஶ்வரனை அதிக்ஷுத்3ரரான நாங்கள் ப4ஜிக்கும்படி எங்ஙனே?’ என்னில்; ‘எம்பெருமான் நிரதிஶய போ4க்3யனென்று கேட்ட மாத்ரத்திலே அவனைக் காணவேணுமென்று அபி4நிவேஶம் பிறந்தால், அவர்களுக்குக் காணலாம்படி – தன்னுடைய ஸௌஶீல்யாதி3 கு3ணப3லா த்க்ருதனாய்க் கொண்டும், அப்ராக்ருத தி3வ்ய தே3ஹத்தோடும் ஆஶ்ரித பரித்ராணார்த்த2மாகவும் தத்3விரோதி4 நிரஸநார்த்த2மாகவும், தன்னு -டைய ஸங்கல்பத்தாலே நிஹீநமான மநுஷ்யாதி3களோடு ஸஜாதீயனாய், ராமக்ருஷ்ணாதி3ரூபேண யுக3ந்தோறும் திருவவதாரம் பண்ணியருளா -நிற்கும்;  பரத்வ த3ஶைகளிற்கட்டில் திருவவதாரங்களிலே தன்னுடைய கல்யாண கு3ணங்கள் நிறம்பெறும்; இவ்வவதாரரஹஸ்யத்தினுடைய சீர்மை ஒருவர்க்கும் அறியவரிது; சில தா4ர்மிகர் ஏரியை கல்லினால் சிலர்க்கு ஜீவநஹேதுவாய்ச் சிலர்க்கு அநர்த்த2ஹேதுவாமாபோலே இத்திருவவதாரங்கள் அநுகூலர்க்கு உஜ்ஜீவந ஹேதுவாய், ப்ரதிகூலர்க்கு எதிரிட்டு அழிகைக்கு ஹேதுவாம்’ என்று தொடங்கி ஸ்ரீகீ3தையில் சதுர்த்தா2த்4யாயத்தில் அருளிச்செய்தபடியே  ஸௌலப்4யத்தைப் பேசி, ‘இப்படி ஸுலப4னாகையாலே ஆஶ்ரயணம் கூடும், ஆஶ்ரயியுங்கோள்’ என்கிறார்.

வ்யா:–  (பத்து) என்கிறது – ப4க்தியை.  (வித்தகன்) ஆஶ்ரித ப4வ்ய -னாயிருக்கிற இருப்பிலே ஶத்ருக்களுக்குக் கணிசிக்க முடியாதே யிருக்கும் விஸ்மயநீயன்.  (மலர் மகளென்று தொடங்கி) பெரிய பிராட்டி யாலும் ஆசிப்படப்படுவானாய், விலக்ஷணனாக ப்ரஸித்34னான பெறுதற்கு அரிய ஸ்வாமி, யஶோதைப் பிராட்டி ஆயாஸித்துக் கடையா நிற்க, சாபலாதிஶயத்தாலே அந்த வெண்ணெய் களவு காண்கிற த3ஶை -யிலே உரஸ்ஸ்த2லத்திலே உரலோடு கட்டுண்டு, உரலோடு தன்னோடு வாசியில்லாதபடியிருந்து ஏங்கின ஸௌலப்4யம் எத்திறம் என்றது – இதென்னபடியென்று தாம் ஈடுபடுகிறார்.  உரத்தையுடைய விடை என்னவுமாம். பெருமிடுக்கு என்றவாறு.

இரண்டாம்பாட்டு

எளிவரும் இயல்வினன் நிலைவரம் பிலபல பிறப்பாய்*
ஒளிவரு முழுநலம் முதலில கேடில வீடாம்*
தெளிதரு நிலைமையது ஒழிவிலன் முழுவதும் இறையோன்*
அளிவரும் அருளினோடு அகத்தனன் புறத்தனன் அமைந்தே

அவ:-  இரண்டாம் பாட்டில் – எம்பெருமானுடைய ஸௌலப்4யத்தை அநுஸந்தி4த்து விவஶரான ஆழ்வார் ப்ரக்ருதிஸ்த2ராய் ப்ரஸ்துதமான ஸௌலப்4யத்தை ஸப்ரகாரமாக உபதே3ஶிக்கிறார்.

வ்யா:-  (எளிவருமியல்வினன்) எல்லார்க்கும் ஒக்க எளியனாம் ஸ்வபா4வன்.  (நிலை வரம்பில பல பிறாப்பாய்) உத்க்ருஷ்டயோநி அபக்ருஷ்டயோநி என்றின்றிக்கே, உத்க்ருஷ்ட சேஷ்டிதம் அபக்ருஷ்ட சேஷ்டிதம் என்றின்றிக்கே யிருந்துள்ள பல ஜந்மங்களையும் உடையனாய்; இவை இரண்டு பொருளையும் நிலையில்லாமைக்கு ஆக்கி, வரம்பில்லாமைக்குப் பொருளாக – திருவவதாரங்களிலே பரத்வத்தை ஆவிஷ்கரிக்க வேண்டிலும் ஆவிஷ்கரிக்கும் என்றுமாம். (ஒளிவரு முழுநலம்) திருவவதாரங்களிலே நிறம் பெறும்படியான பூர்ணமான கல்யாணகு3ணங்கள். (முதலில கேடில) அக்கு3ணங்கள் தான் – இன்னநாள் தொடங்கி உண்டாயிற்றென்றாதல், இன்ன நாள் முடியு -மென்றாதல் சொல்லவொண்ணாதே நித்யமாய் உள்ளன.  (வீடானென்று தொடங்கி) மோக்ஷமாகிற தெளிவைத் தரும் ஸ்வபா4வம் தொடக்கமான எல்லாவற்றோடுங்கூட.  (அளிவருமென்று தொடங்கி) ஆஶ்ரித பரித்ராணம் தன் பேறாக்க்கொண்டு அவர்களிட்ட வழக்காய், அநாஶ்ரி தர்க்கு எட்டாதேயிருக்கும்.  (அமைந்தே) இங்ஙனே சமைந்து.

மூன்றாம் பாட்டு

அமைவுடை அறநெறி முழுவதும் உயர்வற வுயர்ந்து*
அமைவுடை முதல்கெடல் ஒடிவிடை யறநில மதுவாம்*
அமைவுடை அமரரும் யாவையும் யாவரும் தானாம்*
அமைவுடை நாரணன் மாயையை அறிபவர் யாரே

அவ:-  மூன்றாம் பாட்டில் – ஸர்வேஶ்வரனான நாராயணனுடைய ஶ்லாக்4யமான ஜந்ம ரஹஸ்யம் அதிஶயித ஜ்ஞாநரான ப்3ரஹ்மாதி3களு – க்கும் நிலமன்று என்கிறார்.

வ்யா:-  (அமைவென்று தொடங்கி) இன்னபடி அநுஷ்டி2க்க இன்ன ப2லத்தைத்தரும் என்னும் வ்யவஸ்தை2யுடைய த4ர்ம மார்க்க3ம் எல்லா வற்றாலும் எல்லார்க்கும் மேற்படுவதுஞ்செய்து, ‘இன்னபடி ஆக’ என்றால் அப்படி உண்டாம் சமைவையுடைத்தான ஸ்ருஷ்டி ஸம்ஹாரம் அவாந்தர ஸம்ஹாரமாகிற இவை மிகவும் கைவந்திருக்கும் சமைவையுடைய ப்3ரஹ்மாதி3களும் மற்றுமுண்டான அசேதநங்களெல்லாமும் சேதநரெல் லாரும். (தானாமென்று தொடங்கி) இவையெல்லாம் தனக்கு விஶேஷ(ண) மாகையாலே இவை தான் என்னலாம்படியான சமைவையுடைய நாராயணனுடைய.

நான்காம் பாட்டு

யாரும் ஓர் நிலைமைய னெனஅறி வரிய எம்பெருமான்*
யாரும் ஓர் நிலைமைய னெனஅறி வெளிய எம்பெருமான்*
பேரும் ஓராயிரம் பிறபல வுடைய எம்பெருமான்*
பேரும் ஓருருவமும் உளதில்லை இலதில்லை பிணக்கே

அவ:-  நாலாம் பாட்டில் – இப்படியிருக்கிற தி3வ்யாவதாரங்கள் ஒருவர்க்கும் நிலமன்றோ என்னில்; இதெல்லாம் ஆஶ்ரிதர்க்கு அத்யந்த ஸுலப4மாய், அநாஶ்ரிதர்க்கு அத்யந்த து3ர்லப4மாயிருக்கும் என்கிறார்.

வ்யா:-  (யாருமென்று தொடங்கி) எத்தனையேனும் அறிவுடையா -ரேயாகிலும், அநாஶ்ரிதரால் ஒரு ஸ்தூ2லாகாரமும் அறியவரியனாய், ஒன்றும் அறிவிலராகிலும், ஆஶ்ரிதர்க்கு இப்படிப்பட்டானென்று பரிச்சே2 -தி3க்கலாம்படி இருக்கும் ஸ்வபா4வனாய், தன் கு3ணசேஷ்டிதாதி3களு -க்கு வாசகமான அநேக திருநாமங்களையும் மற்றும், அநேக விக்3ரஹங் -களையும் உடையான். (பேருமென்று தொடங்கி) இப்பேர்களிலே ஒரு பேரும் ஒருவடிவும் மாத்ரங்கூட அநாஶ்ரிதர் இல்லை என்றிருப்பர்; ஆஶ்ரிதர் இவை எல்லாம்  உண்டு என்றிருப்பர்; இப்படி நித்ய விப்ரதிபந்ந மாயிருக்கும். பலகாலும் “எம்பெருமான்” என்று – ஆஶ்ரிதர்க்கு எளிய -னாய், அநாஶ்ரிதருக்கு அரியனானபடியை அநுஸந்தி4த்திருக்குறபடி.

ஐந்தாம் பாட்டு

பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த*
கணக்கறு நலத்தனன் அந்தமி லாதியம் பகவன்*
வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு*
உணக்குமின் பசையற அவனுடை யுணர்வுகொண் டுணர்ந்தே

அவ:-  அஞ்சாம் பாட்டில் – இப்படி ‘அவன் தூ3ரஸ்த2னாகையாலே ஆஶ்ரயிப்பார்க்கு து3ர்லப4ன்’ என்னுமிடத்தைப் பரிஹரித்து, ஆழ்வார் – ஸ்ரீ கீ3தையில் அருளிச்செய்தபடியே ப4க்தியோக3த்தாலே எம்பெருமானை ஆஶ்ரயியுங்கோள் என்கிறார்.

வ்யா:-  (பிணக்கற என்று தொடங்கி)  ஷட்ஸமயங்களுக்கும் வைதி3கஸமயத்துக்கும் அந்யோந்ய விரோத4த்தாலுள்ள பிணக்கு அறும்- படி வேத3மார்க்க3த்தாலே ஆராய்ந்து அருளிச்செய்த பரமோதா3ரன். (அந்தமிலா தியம்பகவன்) தனக்கு அந்தமின்றி எல்லார்க்கும் தான் ஆதி3யாய், ஸ்வாபா4விகமாய் ஹேயப்ரத்யநீகமான ஜ்ஞாநாதி3 கல்யாண கு3ணபரிபூர்ணன்.  இங்ஙனே சொல்லிற்று – இவன் சொல்லியதை விஶ்வஸிக்கும்படி இவனுடைய ஆப்த தமத்வம் தோற்றுகைக்காக. (வணக்கென்று தொடங்கி) ப4க்தி யோக3த்தை நிரந்தரமாக அநுஷ்டி2த்து, பா3ஹ்ய விஷயங்களாகிற விரோதி4களைத் தவிர்த்து, அவற்றின் ருசியை  யும் ஸவாஸநமாக விடுங்கோள்;  ஆஶ்ரிதர்க்கு இனிதாயிருந்ததேயாகி -லும், இத்தைப் பெருவருத்தமாக்க்கொள்ளும் ப43வத3பி4ப்ராயத்தாலே “தவநெறி” என்கிறது.  (அவனுடையுணர்வுகொண்டுணர்ந்து) ப4க்திரூப தத்3 விஷயஜ்ஞாநத்தாலேயாதல்;  அவன் அருளிச்செய்த சரமஶ்லோகோ- க்தமான உபாயஜ்ஞாநத்தாலேயாதல்.

ஆறாம் பாட்டு

உணர்ந்துணர்ந் திழிந்தகன்று உயர்ந்துரு வியந்தஇந் நிலைமை*
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலை உணர்வரிது உயிர்காள்!*
உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து அரியய னரனென்னும் இவரை*
உணர்ந்துணர்ந் துரைத்துரைத்து இறைஞ்சுமின் மனப்பட்ட தொன்றே

அவ:-  ஆறாம் பாட்டில் – ஸர்வேஶ்வரன் ஸுலப4னாகைக்காக ப்3ரஹ்ம ருத்3ரர்களோடு ஸஜாதீயனாய்த் திருவவதாரம் பண்ணுகை யாலே, ஸமாஶ்ரயணீயன் இன்னானென்று நிர்ணயிக்கவொண்ணாமே பழைய து3ர்லப4த்வ ஶங்கை மீளவும் ப்ரஸங்கி3க்க, மூர்த்தித்ரய நிர்ணயோபாயத்தைச் சொல்லிக்கொண்டு அந்த தௌ3ர்லப்4யத்தைப் பரிஹரிக்கிறார்.

வ்யா:-  (உணர்ந்துணர்ந்து) வீப்ஸையாலே ஆத்மாவுக்கு ஜ்ஞாத்ரு த்வம் ஆக3ந்துகமன்று,  ஸ்வாபா4விக நித்யத4ர்மம் என்கிறது. (இழிந் -தென்று தொடங்கி) ஸ்வஜ்ஞாந ப்ரபை4யாலே பத்து தி3க்கும் வ்யாபித்து, ப்ரக்ருதிவியுக்த்மாய்க்கொண்டு, இப்படியிருக்கிற ஆத்மாவின் நிலைமை யை ஶ்ரவணமநநாதி3களாலே ஸாக்ஷாத்கரிக்கக்கூடிலும், ஸர்வேஶ் -வரன் ப்3ரஹ்ம ருத்3ரர்களோடு ஒக்கத் தன்னை ஸங்கோசித்துக் கொண்டு நிற்கையாலே, இவர்கள் ஈஶ்வரன் இன்னானென்று அறிகை அரிது – (உணர்ந்தென்று தொடங்கி) கு3ணரூபநாமாதி3களாலும் தத்ப்ரதிபாத3க மான ப்ரமாணங்களாலும் இவர்கள் மூவரிலும் எவன் ஈஶ்வரன் என்று மிகவும் ஆராய்ந்து, ஈஶ்வரதயா நிர்ணீதனானவனை மநநாதி3களாலே ஹ்ருத3யத்திலே ப்ரதிஷ்டி2தனாம்படி அநுஸந்தி4த்து ஆஶ்ரயியுங்கோள்.

ஏழாம் பாட்டு

ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற*
நன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னும் இவரை*
ஒன்றநும் மனத்துவைத்து உள்ளிநும் இருபசை யறுத்து*
நன்றென நலஞ்செய்வது அவனிடை நம்முடை நாளே

அவ:-  ஏழாம் பாட்டில் – மந்தா3யுஸ்ஸுக்களான நீங்கள் நிர்ணயோபாயங்களாலே மூவரிலும் இன்னான் பரனென்று நிர்ணயித்து, ஈஶ்வரதயா நிர்ணீதனான இன்னானை ஆஶ்ரயியுங்கோள் என்கிறார்.

வ்யா:-  (ஒன்றென்று தொடங்கி) மூர்த்தி த்ரயத்துக்கும் ஆத்மா ஒருவனோ? பலரோ? பலரானால் அவர்களில் ப்ரதா4நன் எவன்? என்று அறியவொண்ணாதபடியை உடையராய் நின்ற.  (நன்றெழில் நாரணன்) தன் வடிவைக்கண்டால் தானே ஈஶ்வரன் என்று தோற்றும்படி நல்ல எழிலையுடைய நாராயணன்.  (ஒன்றநும் என்று தொடங்கி) சொன்ன மூன்று வகையாலும் விஸத்3ருஶமாய் உள்ள இவர்களைப் பக்ஷபதியாதே.

எட்டாம் பாட்டு

நாளும்நின் றடுநம பழமைஅங் கொடுவினை யுடனே
மாளும்ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி*
நாளும்நம் திருவுடை யடிகள்தம் நலங்கழல் வணங்கி*
மாளும் ஓரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே

அவ:-  எட்டாம் பாட்டில் – எம்பெருமானுடைய ப4ஜநீயனாகைக்கு நிதா3நமான ஶ்ரிய:பதித்வத்தைச் சொல்லாநின்றுகொண்டு, ப4ஜநோப க்ரமகாலத்திலே ப4ஜந விரோதி4 ஸர்வகர்ம நிவ்ருத்தியும் உண்டாம் என்கிறார்.

வ்யா:-  (நாளுமென்று தொடங்கி) நாள்தோறும் இடைவிடாதே நலியா நின்றுள்ள பழையதாய்மிகவும் க்ரூரமான நம்முடைய கர்மங்கள், ஆஶ்ரயிக்கத் தொடங்கினவாறே நிஶ்ஶேஷமாக நஶிக்கும்; ஸர்வேஷ்டங் களும் பூர்ணமாம்.  (மன்னென்று தொடங்கி) “ஈஶ்வரன் இவனோ மற்றையவர்களோ?” என்று தொடக்கமான மநஸ்ஸிலுள்ள ஸம்ஶயங்க- ளையெல்லாம் போக்கி, ஸ்ரீமானாய் ஸ்வாமியான எம்பெருமானுடைய ஆஶ்ரிதாபராத4ம் பாராத திருவடிகளை நாள்தோறும் வணங்கி.  (மாளு மென்று தொடங்கி) நெடுங்காலங்கூட ஸாதி4க்க வேண்டும் ப4க்தியோக3 த்தை ஸாதி4க்கக் காலமும் கரணபாடவமும் இன்றிக்கே சரமத3ஶாபந்ந -ரானவர்கள் இழந்தே போமித்தனையோ? என்னில்; அத்த3ஶையிலேயாகி- லும் ப்ரணாமாதி3களொன்றிலே உபக்ரமித்து அவ்வளவிலே தான் முடியில், அதுவே பரமப4க்தியிலும் நன்று.

ஒன்பதாம் பாட்டு

வலத்தனன் திரிபுர மெரித்தவன் இடம்பெறத் துந்தித்
தலத்துஎழு திசைமுகன் படைத்தநல்லுலகமும் தானும்
புலப்பட* பின்னும்தன் னுலகத்தில் அகத்தனன் தானே
சொலப்புகில்* இவைபின்னும் வயிற்றுள இவைஅவன் துயக்கே

அவ:-  ஒன்பதாம் பாட்டில் – ஸர்வேஶ்வரனான தான் ஸ்வவிபூ4தி பூ4த லோகங்களிலே வந்து திருவவதாரம் பண்ணுகிறது – ஆஶ்ரிதர் கண்டு அநுப4விக்கைக்காக என்கிறார்.

வ்யா:-  (வலத்தனன் என்று தொடங்கி) த்ரிபுரத3ஹநாதி3 ஸமர்த்த2 னான ருத்3ரன், எம்பெருமானுடைய த3க்ஷிணபார்ஶ்வத்தை ஆஶ்ரயித்திருக்கும்.  எழுச்சியையுடைய திசைமுகன் படைத்த லோகமும் தானும் அஸங்குசிதமாக இருக்கிறது.  திருநாபி4கமலத்திலே; இவை இவர் களுடைய ஸர்வப்ரகார ரக்ஷைக்கும் உபலக்ஷணம்.  நல்லுலகமாவது – எம்பெருமானுக்கு, வந்து திருவவதாரம் பண்ணி ஆஶ்ரிதரோடே ஸம்ஶ்லேஷிக்கைக்கு ஈடான தே3ஶம்.  (சொலப்புகில் இவைபின்னும் வயிற்றுள)  இவனுடைய கு3ணங்களைப் பேசப்புக்கால் பேசிமுடிக்க வொண்ணாது. ஜக3த்தைத் திருவயிற்றிலே வைத்து ரக்ஷிக்கும் என்றுமாம்.  (இவை அவன்துயக்கே) ஏவம்வித4 ஸ்வபா4வனென்று எல்லாரும் அறியா தொழிவானென்? என்னில்; தன் பக்கல் விமுக2ரானவர்களுக்கு அறிய வொண்ணாதபடி ஸந்தே3ஹ விபரீத ஜ்ஞாநங்களை எம்பெருமான் பிறப்பிக்கையால்.

பத்தாம் பாட்டு

துயக்கறு மதியில்நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்*
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்*
புயற்கரு நிறத்தனன் பெருநிலம் கடந்தநல் லடிப்போ(து)*
அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே

அவ:-  பத்தாம் பாட்டில் –  ஜலஸ்த2ல விபரீதங்கள் பாராதே எல்லார் தலையிலும் பொருந்துவதாய், தனக்கும் அயத்ந லப்34மாய், நிரதிஶயபோ4க்3யமான திருவுலகளந்தருளின எம்பெருமானுடைய திருவடிகளை மநோவாக்காயங்களாலே அநுப4விக்கப் பாரிக்கிறார்.

வ்யா:-  (துயக்கறுமதி என்று தொடங்கி) நிர்தோ3ஷாந்த:கரணரா- கையலே ஸம்யக்ஜ்ஞாநவான்களான தே3வர்களை அறிவுகெடுக்கும்படி தெரியாத கு3ணசேஷ்டிதங்களோடு கூடின தி3வ்யாவதாரங்களாகிற மஹாஶ்சர்யங்களைப் பண்ணவல்லன்.  (புயற்கரு நிறத்தனன்) நீர் கொண்டெழுந்த காளமேக4ம் போலே கறுத்த நிறத்தை உடையான். (அமர்ந்தே) அநந்ய ப்ரயோஜநனாய்.  “மநோவாக்காயங்களாலே அநுப4விக்கப் பெற்றேன்” என்றும் சொல்லுவர்.

பதினொன்றாம் பாட்டு

*அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் தன்னை*           அமர்பொழில் வளங்குரு கூர்ச்சட கோபன்குற் றேவல்கள்*
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவைபத்தும் வல்லார்*
அமரரோடு உயர்வில்சென்று அறுவர்தம் பிறவியஞ் சிறையே

அவ:-  நிக3மத்தில்  –  இப்பத்தும் அறிவார் முந்துற அயர்வறும் அமரர்கள் வரிசையைப்பெற்று, பின்னை ஸம்ஸார நிக3ளவிச்சேத3த் -தைப் பெறுவர்கள் என்கிறார்.

வ்யா:-  (அமரர்கள் என்று தொடங்கி) தே3வஜாதி அநுப4வித்து வாழ அதிக்ஷுபி4தமாம்படி கடலைக்கடைந்தவனை அமர்ந்திருந்துள்ள – பொழிலன் வளர்த்தியுடைய திருக்குருகூர்ச் சடகோபனுடைய அந்தரங்க3 வ்ருத்திகளாய் ரஸக4நமான ஆயிரம் திருவாய்மொழியிலும் இவை பத்தும் அப்4யஸித்தவர்கள்.

நஞ்சீயர் திருவடிகளேரணம்

நான்காம் திருவாய்மொழி
அஞ்சிறைய: ப்ரவேஶம்

 

அவதாரிகை    1-4

அஞ்சிறையப்ரவேசம்

நாலாம் திருவாய்மொழியில் – எம்பெருமான் தன்னை பு4ஜிக்கைக்கு ஈடான ப4க்த்யாரோக்3யம் ஆழ்வார்க்குப் பிறப்பிக்கைக்காக, வ்யாதி4 பட்டார்க்கு பி4ஷக்குகள் போ4ஜந நிரோத4நம் பண்ணுமாபோலே அநுப4விக்கவேணும் என்று இவர் பண்ணின மநோரத2த்தை அல்பம் தாழ்க்க, அது பொறுக்கமாட்டாதே மிகவும் ஆர்த்தரான ஆழ்வார், அநந்யார்ஹ ஶேஷத்வத்தாலும், அந்த ஶேஷத்வாநுப4வத்தில் எம்பெருமானோடு கலந்தால் பிராட்டிமார்க்குண்டான ரஸம் பிறக்கை யாலும், ததே3கபோ43த்வத்தாலும், பிரியில் த4ரியாமையாலும், தமக்குப் பிராட்டிமாரோடு ஸாம்யம் உண்டாகையாலே, எம்பெருமானோடே கலந்து பிரிந்து பிரிவாற்றாமை நோவுபடுகிறாள் ஒரு பிராட்டி த3ஶையை ஆபந்நராய், அவள் பேச்சாலே  தம்முடைய த3ஶையை எம்பெருமானுக்கு அறிவிக்கிறார்.  தன்னுடைய லீலோத்3யாநத்திலே தோழிமாரும் தானு -மாய் விளையாடாநிற்க, தை3வயோக3த்தாலே தோழிமாரும் அந்யபரை- களான த3ஶையிலே, எம்பெருமான் இயற்கையிலே ஸம்ஶ்லேஷிக்க, மிகவும் நோவு படுகிறாள் ஒரு பிராட்டி – அவன் தானே வரப்பற்றாமை- யாலே, “நம் பக்கல் உண்டான குற்றத்தை அநுஸந்தி4த்து வாராதொழி -கிறான், தன் அபராத4 ஸஹத்வத்தை அறிவிக்க வரும்” என்று பார்த்து, பேரளவுடையரான பெருமாளும் ஸ்ரீ ஜநகராஜன் திருமகளும் யுக்தாயுக்த நிரூபண க்ஷமரன்றிக்கே, 1. “अशोक शोकापनुद” (அஶோக ஶோகாபநுத3) என்றும்,  2. “हंसकारण्डवाकीर्णाम्” (ஹம்ஸகாரண்ட3வாகீர்ணாம்) என்றும் அருளிச்செய்தாற்போலே,  “இவை நம் வார்த்தை அறியா” என்று பாராதே அவ்வுத்3யாநத்திலே வர்த்திக்கிறன சில பக்ஷிகளை, எம்பெருமானைக் குறித்துத் தூது விடுகிறாள்.

முதல் பாட்டு

*அஞ்சிறைய மடநாராய்! அளியத்தாய்!* நீயும்நின்
அஞ்சிறைய சேவலுமாய் ஆவா! என்று எனக்கருளி*
வெஞ்சிறைப்புள் ளுயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்*
வன்சிறையில் அவன்வைக்கில் வைப்புண்டால் என்செய்யுமோ

அவ:-  முதற் பாட்டில் –  இப்பிராட்டி, உத்3யாநத்திலே ஸம்ஶ்லேஷி- த்து வர்த்திக்கிறன சில நாரைகளைக்கண்டு, ஸ்த்ரீத்வத்தாலே அவற்றில் தன்னோடு ஸஜாதீயமான பேடையை நோக்கி, எம்பெருமனுக்கு என் ஆர்த்தியை அறிவிக்கவேணும் என்கிறாள்.

வ்யா:-  (அஞ்சிறை என்று தொடங்கி) சேவலோட்டை ஸம்ஶ்லேஷத் தாலே / செந்தலித்து, நினைத்தவிடத்திலே போகைக்கீடான சிறகையுடை யையாய், ப4வ்யமான நாராய்! இத்த3ஶையிலே உதவும்படியான தகை- மையையுடைய நீயும், நீயிட்ட வழக்காய் அழகிய க3மநஸாத4நத்தை யுடைத்தான சேவலும் கூடி ஆர்த்தையான எனக்கு ஐயோவென்று க்ருபைபண்ணி.  (வெஞ்சிறைப் புள்ளுயுர்த்தார்க்கு) அங்கே போனாலவனை அறியும்படி எங்ஙனே? என்னில், ப்ரதிபக்ஷத்துக்கு வெவ்விதான சிறகை உடைத்தான பெரியதிருவடியைக் கொடியாக உடையவனென்று அடையாளம் சொல்லுகிறாள்.  தன்னைப் பிரித்துச் சடகெனக் கொடுபோகையாலே 1. “अक्रूर: क्रूर हृदय:”  (அக்ரூர: க்ரூர ஹ்ருத3ய:) என்னுமாபோலே, இவ்வெவ்விதான சிறகையுடைய புள்ளாலே வஹிக்கப்பட்டவனுக்கு என்றாளாகவுமாம்.  (என் விடுதூதாய்ச் சென்றக் கால்) அத்யார்த்தையான எனக்குத் தூதாய்ச் சென்றக்கால்.  (வன் சிறை யிலென்று தொடங்கி) தான் அர்த்தி2க்கச்செய்தே அவை போகாதொழிந்த வாறே, தன்பக்கல்நின்றும் சென்ற தங்கள் வார்த்தையை அவன் அங்கீ3க- ரியானென்று பார்த்து அவைபோகாதொழிந்தனவாக்க கொண்டு, அப்படி நீர்மையுடையவன் உங்களைக் கொண்டாடாமையாகிற வன்சிறையிலே வைக்கில்; “பரார்த்த2மாகச் சிறையிருக்கை கிடைப்பதொன்றோ” என்று ஸ்வகோ3ஷடீ2 ப்ரஸித்3தி4யாலே சொல்லுகிறாள்.

இரண்டாம் பாட்டு

என்செய்ய தாமரைக்கண் பெருமானார்க்கு என்தூதாய்*
என்செய்யும் உரைத்தக்கால் இனக்குயில்காள் நீரலிரே*
முன்செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்*
முன்செய்ய முயலாதேன் அகல்வதுவோ விதியினமே

அவ:-  இரண்டாம் பாட்டில் –  சில குயில்களைக்குறித்து எம்பெருமான் பக்கல் சென்றால் விண்ணப்பம் செய்யும் பாசுரத்தைச் சொல்லுகிறாள்.

வ்யா:-  (என்னென்று தொடங்கி) விஶ்லேஷ த3ஶையில், “ஆத்மாத்மீயங்களெல்லாம் உன்னது” என்பாரைப்போலே ஸஸ்நேஹமாக நோக்கின நோக்கையும், இத்தலையைத் தோற்பிக்கையாலே மிகவும் மேனாணிப்பையும் உடையவனாயிருந்தவனுக்கு; ஸம்ஶ்லேஷ த3ஶையில் ஸஸ்நேஹமாக நோக்கின நோக்காலே என்னை அடிமை கொண்டவனுக்கு என்றுமாம்.  அத்யார்த்தையான என்னுடைய தூதாய், எனக்காக ஒருவார்த்தை அங்கே அறிவித்தால், உங்களுக்கு என்ன சேதமுண்டு? சிலவருடைய ஆர்த்திக்கு உதவுகை கிடைப்பதொன்றோ? என்று கருத்து.  (இனக்குயில்காள் நீரலிரே) எங்களைப்போலே பிரியாதே கூடவிருப்பது; நீர்மைக்கு நீங்களாவது.  (முன்செய்த என்று தொடங்கி) அநாதி3காலம் ஸஞ்சிதமான மஹாபாபத்தாலே, திருவடிக்குக் கீழ் அந்தரங்க3 வ்ருத்திகள் பண்ணுகைக்கு ஈடான பா4க்3யத்தைப் பண்டு பண்ணாத நான் அகன்றேபோமித்தனையோ? தந்தாமுக்கென்ன ஒன்றில்லாதார் த3யநீயரன்றோ என்று கருத்து.  (விதியினம்) பாவியோம்.  விதி4 இன்னம் என்றுமாம்.

மூன்றாம் பாட்டு

விதியினால் பெடைமணக்கும் மென்னடைய அன்னங்காள்*
மதியினால் குறள்மாணாய் உலகிரந்த கள்வர்க்கு*
மதியிலேன் வல்வினையே மாளாதோ என்றுஒருத்தி
மதியெல்லாம் உள்கலங்கி மயங்குமால் என்னீரே

அவ:-  மூன்றாம் பாட்டில் –  “தாந்தாம் பண்ணின பாபம் தாந்தாமே அவஶ்யம் அநுப4விக்க வேண்டாவோ” என்று உபேக்ஷித்திருக்கிறானாகக் கொண்டு, “எல்லைச்சதிரியான சிந்தயந்தி பாபம் அநுப4வ விநாஶ்யமாக லாம்;  நான் பண்ணின பாபமேயோ அநுப4வ விநாஶ்யமாகாது?” என்று எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்யவேணுமென்று சில அன்னங்களை அர்த்தி2க்கிறார்.

வ்யா:-  (விதி என்று தொடங்கி) நான் பண்ணின பா4க்3யத்தாலே, பேடையோடே ஸம்ஶ்லேஷித்து அந்த ஸம்ஶ்லேஷ ரஸத்தாலே ஆகர்ஷகமான நடையையுடைய அன்னங்காள்!  பு3த்3தி4 யோக3த்தாலே வாமந வேஷனாய், கு3ணசேஷ்டிதாதி3களாலே ஈடுபடுத்தும் ஸ்வபா4வனானவனுக்கு.  (ஒருத்தி) ஒருத்தி என்னவே தானே “இன்னாள்” என்று அறிகிறானிறே என்று கருத்து.  (மதியெல்லாம் என்று தொடங்கி) ப43வத் ப்ரஸாத3த்தாலே மயர்வறும்படி பெற்ற ஜ்ஞாநப்பரப்பெல்லாம் நிஶ்ஶேஷமாகக் கலங்கி மயங்காநின்றாள் என்று அறிவியுங்கோள்.

நான்காம் பாட்டு

என்நீர்மை கண்டிரங்கி இதுதகா தென்னாத*
என்நீல முகில்வண்ணர்க்கு என்சொ(ல்)லியான் சொல்லுகேனோ*
நன்னீர்மை இனியவர்கண் தங்காதென் றொருவாய்ச்சொல்*
நன்னீல மகன்றில்காள் நல்குதிரோ நல்கீரோ

அவ:-  நான்காம் பாட்டில் –  “என் ப்ரக்ருதியை அறிந்து வைத்து விஶ்லேஷித்தவனுக்குச் சொல்லலாவதுண்டோ?” என்று விஷண்ணை -யாய், மீள ஓராசையாலே சில மகன்றில்களைக் குறித்து, “என்னிடை யாட்டம் அவனுக்கு அறிவிக்க வல்லிகளோ, மாட்டிகளோ?” என்கிறாள்.

வ்யா:-  (என் நீலமுகில் வண்ணர்க்கு) தன்னுடைய ஸொந்த3ர்யாதி3 களைக் காட்டி முன்பு என்னை ஈடுபடுத்தினவனுக்கு நான் இனிச் சொல்லுவது எத்தை? (நன்னீர்மை என்று தொடங்கி) “ஈண்டெனச் சென்று ஸம்ஶ்லேஷியீராகில் அவள் கிடையாள்” என்று ஒரு வார்த்தை சொல்லி என்னை உஜ்ஜீவிப்பியுங்கோள்.  (நன்னீலம் என்று தொடங்கி) நிறம் அவனைப்போலே இருந்தது;  அவனைப்போலே ஆகிறிகளோ, என் அபேக்ஷிதம் செய்கிறிகளோ? என்று கருத்து.

ஐந்தாம் பாட்டு

நல்கித்தான் காத்தளிக்கும் பொழிலேழும் வினையேற்கே*
நல்கத்தா னாகாதோ நாரணனைக் கண்டக்கால்*
மல்குநீர்ப் புனற்படப்பை இரைதேர்வண் சிறுகுருகே*
மல்குநீர்க் கண்ணேற்கு ஓர் வாசகங்கொண் டருளாயே

அவ:-  அஞ்சாம் பாட்டில் – என்னை இப்படி உபேக்ஷித்தால் எல்லாரையும் ரக்ஷிக்கையாலே  பரிபூர்ணமான தன்னுடைய நாராயணத்வம் விகலமாகாதோ என்று அவனுக்கு அறிவித்தால், அவன் அருளிச்செய்த ப்ரதிவசநத்தை எனக்கு வந்து சொல்லவேணுமென்று சில குருகுகளை அபேக்ஷிக்கிறாள்.

வ்யா:-  (பொழில்) பூ4மி.  எல்லா லோகங்களுக்கும் உபலக்ஷணம்.  (வினையேற்கே நல்கத்தானாகாதோ) பாபப்ராசுர்ய ஹேதுவான எனக்கேயோ இரங்கலாகாது? (மல்குநீர் என்று தொடங்கி) பெருகாநின்ற நீரையுடைய நீர்நிலங்களிலே இரையைத் தேடி உன் ஸஹசரத்துக்குக் கொடுக்கும் ஸ்வபா4வமாய், நினைத்தவிட்த்திலே போகலாம்படி நொய் தான ஶரீரத்தையுடைய குருகே! (மல்குநீர்க் கண்ணேற்கு இத்யாதி3) அவற்றுக்கு த3யை பிறக்கும்படி தன் த3ஶையைச் சொல்லுகிறாள்.

ஆறாம் பாட்டு

அருளாத நீர்அருளி அவராவி துவராமுன்*
அருளாழிப் புட்கடவீர் அவர்வீதி ஒருநாளென்று*
அருளாழி யம்மானைக் கண்டக்கால் இதுசொல்லி
அருள்* ஆழி வரிவண்டே யாமும்என் பிழைத்தோமே

அவ:-  ஆறாம் பாட்டில் –  “இத்தனை ஸாபராத4ரோடே ஸம்ஶ்லேஷித்தது – என்று வரும் அகீர்த்தியிற்காட்டில், நாராயணத்வம் விகலமாயிற்றாகிலும் ஆகவமையும்” என்னில்; “அதுவும் விகலமாகாதே, நானும் பிழைப்பதொரு விரகு சொல்லுகிறேன், அப்படி செய்யச்சொல்” என்று ஒரு வண்டை அபேக்ஷிக்கிறாள்.

வ்யா:-  (அருளாத நீரருளி என்று தொடங்கி) ஸம்ஶ்லேஷிக்க நினை யாத நீர்.  த3யநீயத3ஶையையுடையளான இவள் பக்கலிலெ க்ருபை பண்ணி, அவள் உயிர் முடிவத்றகுமுன்னே ஆஶ்ரிதர்பக்கல் பரமத3யாளு வான திருவடியை நடத்தீர்;  (அருளாத நீர்) பண்டு இப்படி நோவுபட்டவ ரில்லாமையாலே க்ருபைபண்ணாதிருக்கிற நீர் என்றுமாம்.  (அவர் வீதி   யொருநாள்) அவர் வீதியிலே ஒருநாள் போனதுக்காக அவத்3யமாய்ப் பிற வாது என்று கருத்து.  (அருளாழியம்மானை) அருட்கடலான ஸர்வேஶ்வ ரனை; த3யாஶீலமான திருவாழியை உடையவன் என்றுமாம்.  (கண்டக் கால் என்று தொடங்கி) அவர் வீதி ஒருநாள் எழுந்தருளவேணுமென்று சொன்ன வார்த்தையைச் சொல்லியருளவேணும்;  ஆர்த்தருடைய ஆர்த்தி யைத் தீர்க்கைக்கீடான அளவையும், ஶ்ரமஹரமான வடிவையுமுடைய வண்டே! (யாமுமென் பிழைத்தோமே) அதுவும் செய்யாதொழியிலோ? என்னில்; எங்கள் தெருவிலே போகலாகாமைக்கு நாங்கள் செய்த குற்றமுண்டோ?

ஏழாம் பாட்டு

என்பிழைகோப் பதுபோலப் பனிவாடை ஈர்கின்றது*
என்பிழையே நினைந்தருளி அருளாத திருமாலார்க்கு*
என்பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என் றொருவாய்ச்சொல்*
என்பிழைக்கும் இளங்கிளியே யான்வளர்த்த நீயலையே

அவ:-  ஏழாம் பாட்டில் –  இத்திருவாய்மொழிக்கு நிதா3நமான அபராத4 ஸஹத்வத்தை அநுஸந்தி4த்து, “ ‘தன்னுடைய இக்கு3ணத்துக்கு நான் புறம்போ?’ என்று எம்பெருமானுக்கு அறிவி” என்று தன் கிளியை நோக்கிச் சொல்லுகிறாள்.

வ்யா:-  (என்பிழை என்று தொடங்கி) விரஹவ்யஸநத்துக்கு மேலே எலும்பை இழைகோத்தாப்போலே பனிவாடை ஈராநின்றது.  நிரதிஶய க்ருபாவானான தனக்கு இங்ஙனே நோவுபடக் கண்டிருக்கை போரா தென்று பாராதே, பிராட்டியோடே கூடி என் குற்றங்களையே அநுஸந்தி4 த்து க்ருபை பண்ணாதிருக்கிறவனுக்கு என் அபராத4மெல்லாம் பொறுத் தருளும்படி பிராட்டி ஸந்நிதி4யிலே அறிவி-என்று கருத்தாகவுமாம்.  (என் பிழைத்தாள் என்று தொடங்கி) ‘ஸ்வாமியான உன்னுடைய அபராத4 ஸஹத்வத்துக்கு விஷயமன்றிக்கே நோவுபடுகைக்கீடான என்ன தப்புச் செய்தாள்?’ என்று ஒரு வார்த்தை சொல்லு. (என்பிழைக்கும் என்று தொடங்கி) ஶ்ரமஹரமான நிறத்தாலும், வடிவழகாலும், ப4வ்யதையாலும், நல்ல பேச்சாலும், வாயின் சிவப்பாலும், பருவத்தாலும் எம்பெருமானோடு உறவு ஒத்திருக்கிற உன் படியைக் காட்டி எலும்பை இழைத்து நோவு படுத்துகிற இளங்கிளியே! என் பிழைக்கும் – என்ன தப்புண்டாம் என்னவுமாம். (யான் வளர்த்த நீயலையே) தாய்மாரைப் பிள்ளைகளும் நலிவரோ?

எட்டாம் பாட்டு

நீயலையே? சிறுபூவாய் நெடுமாலார்க்கு என்தூதாய்*
நோயெனது நுவலென்ன நுவலாதே இருந்தொழிந்தாய்*
சாயலொடு மணிமாமை தளர்ந்தேன்நான்இனிஉனது
வாயலகில் இன்னடிசில் வைப்பாரை நாடாயே

அவ:-  எட்டாம் பாட்டில் –  ஒரு பூவையைக்குறித்து, ப43வத்3 விஶ்லேஷத்தாலே தனக்கு வந்த மஹாவஸாத3த்தைச் சொல்லுகிறாள்.

வ்யா:-  (நீயலையே என்று தொடங்கி) இன்று என் அவஸாத3த்தைக் கண்டு மிகவும் தளருகிற நீயன்றோ-ஆஶ்ரிதருடைய நோவுபொறாதே அவர்கள் பக்கலிலே அதிவ்யாமுக்34னாயிருக்கிற எம்பெருமானுக்கு விரஹவ்யஸநத்தாலே மிகவும் நொந்திருக்கிற என்னுடைய தூதாய் என்னுடைய மஹாவஸத3த்தைச் சொல் என்ன, சொல்லாதே செல்வப் பிள்ளைத்தனமடித்தாய். (சாயலொடு என்று தொடங்கி) சாயலோடே கூட நல்ல நிறத்தை இழந்தேன் நான்; இனி உன் ப்ரக்ருதியறிந்து உன்னை வளர்ப்பாரைத் தேடு;  நான் முடிந்தேன் என்று கருத்து.

ஒன்பதாம் பாட்டு

நாடாத மலர்நாடி நாடோறும் நாரணன்தன்*
வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று*
வீடாடி வீற்றிருத்தல் வினையற்ற தென்செய்வதோ*
ஊடாடு பனிவாடாய் உரைத்தீராய் எனதுடலே

அவ:-  ஒன்பதாம் பாட்டில் –  “ ‘தனக்கு ஶேஷமாயிருக்கிற வஸ்து இங்ஙனே அவஸந்நமாய் முடிந்துபோகப் பெறலாமோ?’ என்று, எம்பெருமானுக்கு அறிவித்தால், அவன் உபேக்ஷித்தருளினானாகில் அவஶ்யம் என்னை முடிக்கவேணும்” என்று ஒரு வாடையை இரக்கிறாள்.

வ்யா:-  (நாடாத மலர் என்று தொடங்கி) இஜ்ஜக3த்தில் ஒருவரால் தேட வொண்ணாத செவ்விப்பூவெல்லாம் தேடி, ஸர்வஶேஷியானவனு டைய வாடாத மலரின் செவ்வியையுடைத்தான திருவடிகளின் கீழே நித்யமும் அடிமை செய்ய இவ்வாத்மாவை உண்டாக்கிற்று. (வீடென்று தொடங்கி) விரஹ வ்யஸநத்திலே ,மூர்த்தா4பி4ஷிக்தமான பொல்லாத இருப்பு என்செய்யக்கடவதோ? எம்பெருமானை பிரிந்து விரஹ வ்யஸநத் திலே மூர்த்தா4பி4ஷிக்தமாயிருக்கைக்கீடாக பா4க்3யஹீநமான இவ்வாத்ம வஸ்து என் செய்யக்கடவது? என்றுமாம். உறவு முறையாரோட் டைத் தொற்று அறுகைக்கும் உம்மைப் பிரிந்திருக்கைக்கும் ஈடான இப்பொல்லாதான இருப்பு என்செய்வது? (ஊடாடு பனிவாடாய் என்று மேலுக்கு) அங்கோடு இங்கோடு உலாவித் திரிகிற குளிர்காற்றே! எம்பெருமானுக்கு என்னை அறிவித்தால் அவன் உபேக்ஷித்தானாகில், அவஶ்யம் ஈரவேணும், அவனோட்டை விரஹத்தாலும் நெஞ்சு இளையா திருக்கிற என்னுடைய உடலை.

 

பத்தாம் பாட்டு

உடலாழிப் பிறப்புவீடு உயிர் முதலா முற்றுமாய்*
கடலாழி நீர்தோற்றி அதனுள்ளே கண்வளரும்*
அடலாழி யம்மானைக் கண்டக்கால் இதுசொல்லி*
விடல்ஆழி மடநெஞ்சே வினையோம் ஒன்றாமளவே

அவ:-  பத்தாம் பாட்டில் –  கீழிற்பாட்டிலே ப்ரஸ்துதமான ஶேஷத் வத்தை அநுஸந்தி4த்துப் பதறுகிற மாநஸத்தை “எம்பெருமானுக்கு நம் முடைய கார்யத்தை விண்ணப்பஞ்செய்து, நம் கருமம் அறுதிபடுந்தனை யும் செல்ல என்னைவிடாதே கொள்” என்று ப்ரார்த்தி2க்கிறாள்.

வ்யா:-  (உடலென்று தொடங்கி) அஸ்ங்க்2யமான ஶரீரங்களினு டைய ஜந்மத்தையும், ஶரீரஸ்த2மான ஆத்மாவையும், மற்றும் எல்லாவற் றையும் உண்டாக்குகைக்காக.  ஆத்மாவை உண்டாக்குகையாவது – ஶரீர த்தோடே கூட்டுகை.  (கடல் என்று தொடங்கி) பெரிதான நீரையுடைய ஏகார்ணவத்தைத் தோன்றுவித்து, இப்பாலுள்ள ஸ்ருஷ்ட்யாதி3களுக்காக அதினுள்ளே கண்வளர்ந்தருளும் ஸ்வபா4வனாய், ஆஶ்ரித விரோதி4 நிரஸந ஸ்வபா4வமான திருவாழியை உடையனான எம்பெருமானைக் கண்டக்கால் கீழ்ப்பாட்டிற்சொன்ன வார்த்தை சொல்லி.  (விடல் என்று தொடங்கி) சுழன்றுவருகிற பேதை நெஞ்சே! நம் கருமம் அறுதிபடுந்த னையும் என்னைவிடாதே கொள். அளவுடையையாய், ப4வ்யமான நெஞ்சு என்றுமாம்.

பதினொன்றாம் பாட்டு

*அளவியன்ற ஏழுலகத் தவர்பெருமான் கண்ணனை*
வளவயல்சூழ் வண்குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த*
அளவியன்ற அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தின்*
வளவுரையால் பெறலாகும் வானோங்கு பெருவளமே

அவ:-  நிக3மத்தில் – இத்திருவாய்மொழி கற்றார் திருநாட்டில் முக்தப்ராப்யமான நிரதிஶய ஸம்பத்தைப் பெறுவர் என்கிறார்.

வ்யா:-  (அளவியன்ற என்று தொடங்கி) அபரிச்சே2த்3ய மஹிம னாய், ஸர்வலோகேஶ்வரனாய் ஆஶ்ரித ப4வ்யனாயிருந்துள்ள எம்பெரு மானை; “ஏழுலகத்தவர் பெருமான்” என்று – தம்மையுமகப்பட ரக்ஷிக்கை யிலே உத்3யுக்தனானானென்று ப்ரீதராய்ச் சொல்லுகிறார்.  (வளவயல் என்று தொடங்கி) வளவிதான வயல் சூழ்ந்து நிரதிஶய போ4க்3யமான, குருகூர்ச்சடகோபன் ஸ்நேஹித்துரைத்த, அபரிச்சே2த்3யமாய் அந்தாதி யான ஆயிரத்துள் இப்பத்தினுடைய வளவிதான உரையாலே.

நஞ்சீயர் திருவடிகளேரணம்

 

ஐந்தாம் திருவாய்மொழி
வளவேழுலகு: ப்ரவேஶம்

 

அவதாரிகை    1-5

வளவேழுலகின்ப்ரவேசம்

அஞ்சாம் திருவாய்மொழியில் – தூ3தப்ரேஷண வ்யாஜத்தாலே அபராத4 ஸஹத்வத்தை அறிவித்த அநந்தரம் எம்பெருமான் வந்து ஸம்ஶ்லேஷோந் முக2னானவாறே, அவனுடைய வைலக்ஷண்யத்தையும், தம்முடைய நிகர் ஷத்தையும் அநுஸந்தி4த்து, “அம்ருதத்தை விஷத்தாலே தூ3ஷிக்குமா போலே விலக்ஷணர்க்கு போ4க்3யனான எம்பெருமானை, ஸம்ஸாரியான நான் தூ3ஷிக்கை ஈடன்று” என்று பார்த்தருளி, ஆழ்வார், “நான் ஸம்ஶ்லே ஷித்து அவனுக்கு அவத்3யத்தை விளைவித்து உஜ்ஜீவிப்பதிற்காட்டிலும், விஶ்லேஷித்து முடிந்தேனாகிலும் முடியவமையும்” என்று பார்த்தருளி, பெருமாளுக்கும் தே3வதூ3தனுக்கும் மந்த்ரம் ப்ரவ்ருத்தமான த3ஶையிலே, “து3ர்வாஸா பெருமாளை ஶபிக்கும்” என்னும் ப4யத்தாலே அவனுடைய ஆக3மநத்தை விண்ணப்பஞ்செய்து, பெருமாளுடைய ப்ரதிஜ்ஞாநுகு3ண மாகத் தம்முடைய வ்யஸநம் பாராதே இளையபெருமாள் விடை கொண்டாற்போலே, தம்முடைய விநாஶத்தையே அங்கீகரித்து, அவனை ஸம்ஶ்லேஷிக்கையில் ஆசையற்று, “பண்டு அவனோடு பரிமாறின பரிமாற்றமும் தப்பச்செய்தோம்” என்று இவர் அகலப்புக; இவரோட்டை ஸம்ஶ்லேஷம் தனக்கு அவத்3யாவஹமன்றிக்கே ஸௌஶீல்ய வர்த்த4க மாயிருக்கிறபடியைக் காட்டியருள; இவர் தன்னோடே ஸம்ஶ்லேஷிக்கை யிலே து3:க்கே2ந இசைந்தருளி, மீளவும் தம் படியை ஆராய்ந்தும் எம்பெருமான் படியைப்பார்த்தும், “என்னுடைய ஸ்பர்ஶத்தாலே வரும் ஸொஶீல்யம் எம்பெருமானுக்கு வேண்டா” என்று அகல உத்3யோகி3க்க; யுத்3தே4 ப்ரவ்ருத்தனாய்வைத்து கஶ்மல விஷ்டனான அர்ஜுநனை தத்வோபதே3ஶத்தாலே யுத்34த்திலே மூட்டினாற்போலே 1. “मित्रभावॆन संप्राप्तं” (மித்ரபா4வேந ஸம்ப்ராப்தம்) இத்யாதி3 ப்ரக்ரியையாலே தன் ப்ரக்ருதியைக்காட்டி மீளவும் சேர்த்துக்கொண்டருளினான் என்கிறார்.

 

முதல் பாட்டு

*வளவே ழுலகின் முதலாய வானோரிறையை அருவினையேன்*
களவேழ் வெண்ணெய் தொடுவுண்ட கள்வா என்பன் பின்னையும்*
தளவேழ் முறுவல் பின்னைக்காய் வல்லா னாயர் தலைவனாய்*
இளவே றேழும் தழுவிய எந்தாய் என்பன் நினைந்துநைந்தே

அவ:-  முதற் பாட்டில் –  ‘அத்யந்த நிக்ருஷ்டனான நான், அத்யந்த விலக்ஷணனான எம்பெருமானை என்னுடைய மநோவாக்காயங்களாலே தூ3ஷித்தேன்’ என்று ஶோகிக்கிறார்.

வ்யா:-  (வளவேழுலகின் முதலாய வானோரிறையை) ப43வத்3 போ43த்துக்கு ஈடான வைலக்ஷண்யத்தையுடையராய், ஏழுலகுக்கும் முதலாயுள்ள *அயர்வறுமமரர்களுக்கு நாயகனை; ‘வளவிதான ஏழுலகு’ என்றுமாம்.  தொடங்கின வாக்யம் பூரிப்பதற்கு முன்பே தம்முடைய மௌர்க்2யத்தை அநுஸந்தி4த்து “அருவினையேன்”  என்கிறார்.  அநிஷ்ட மான ப43வத் ஸம்ஶ்லேஷத்தை விளைக்கையாலே, ப4க்தியை – ‘அருவினை’ என்கிறது.  (களவேழ் என்று தொடங்கி) “களவு ப்ரஸித்34மாம் படி வெண்ணெய் களவுகண்ட கள்வா” என்று யஶோதைப்பிராட்டி அவனைக்களவிலே கண்டுபிடித்துச் சொல்லும் சொல்லைச் சொன்னேன்.  (பின்னையும் என்று தொடங்கி) அதுக்குமேலே – முல்லையரும்பு போலே யிருக்கிற முறுவலையுடைய நப்பின்னைப்பிராட்டியோடே ஸம்ஶ்லேஷி க்கைக்காக, வலியையுடைய இடையருக்கு ப்ரதா4நனாய் வந்து பிறந்து எருதேழடர்த்தபடியை நினைத்து ஶிதி2லனாய், அது உள்ளடங்காமை யாலே ‘இளவேறேழும் தழுவின இச்சேஷ்டிதத்தாலே என்னை அடிமை கொண்டவனே!’ என்பதும் செய்தேன்.

இரண்டாம் பாட்டு

நினைந்து நைந்துஉள் கரைந்துருகி இமையோர் பலரும் முனிவரும்*
புனைந்த கண்ணி நீர்சாந்தம் புகையோடு ஏந்தி வணங்கினால்*
நினைந்த எல்லாப் பொருள்கட்கும் வித்தாய் முதலில் சிதையாமே*
மனம்செய் ஞானத்து உன்பெருமை மாசூணாதோ மாயோனே

அவ:-  இரண்டாம் பாட்டில் –  “அர்ஹனல்லேன் என்கைக்கு நானார்? ப்ரேமார்த3ரசித்தரான ப்3ரஹ்ம ருத்3ராதி3களன்றோ அது சொல்ல அடுப்பது” என்கிறார்.

வ்யா:-  (நினைந்து என்று தொடங்கி) த்வத்3கு3ண ஸ்மரணத்தாலே அத்யந்தம் ஶிதி2லராய். (புனைந்த கண்ணி நீர்) ஸாத3ரமாகத் தொடுத்த மாலை.  (நினைந்த என்று தொடங்கி) ஸம்ஹார ஸமயத்திலே ‘புருஷார்த் தோ2பயோகி3யான கரணகளேப3ரங்களை இழந்து நோவுபட்டன’ என்று ஸ்மரிக்கப்பட்ட ஸகலபதா3ர்த்த2ங்களுக்கும் காரணமாய், ஸ்வகார்யங்க ளைப் பிறப்பிக்கும் போது தான் முதலழியாதபடியான ஸங்கல்பரூப ஜ்ஞாநத்தையுடைய உன் பெருமை மழுங்காதோ, ஆஶ்சர்யமான வைலக்ஷண்யத்தை உடையவனே?

மூன்றாம் பாட்டு

மாயோ னிகளாய் நடைகற்ற வானோர் பலரும் முனிவரும்*
நீயோ னிகளைப் படையென்று நிறைநான் முகனைப் படைத்தவன்*
சேயோன் எல்லா வறிவுக்கும் திசைக ளெல்லாம் திருவடியால்
தாயோன்* எல்லா வெவ்வுயிர்க்கும் தாயோன் தானோ ருருவனே

அவ:-  மூன்றாம் பாட்டில் –  இப்படி அநர்ஹன் என்கைக்கும் தகே னென்று ப43வத்3தா3ஸ்யத்தினின்றும் அத்யந்தம் விப்ரக்ருஷ்டரான ஆழ்வார், தம்மை த்ரை விக்ரமமான ஸௌஶீல்ய வாத்ஸல்யாதி3களைக் காட்டியருளி மீளும்படியாக வஶீகரித்தருளினான் என்கிறார்.

வ்யா:-  (மாயோனிகள் என்று தொடங்கி) ‘மநுஷ்யாதி3களிற்காட் டில் அதி4கமான யோனிகளிலே பிறந்து, அதுக்கு ஈடான மர்யாதை3கள் கற்றுள்ள வானோர் பலரும் முனிவருமான யோனிகளை நீ படை’ என்று, அதி4கஶக்தியான ப்3ரஹ்மாவைப் படைத்தவன்; (சேயோன் எல்லா அறிவு க்கும்) எத்தனையேனும் அதிஶயத ஜ்ஞாநரான ப்3ரஹ்மாதி3களுடைய ஜ்ஞாநத்துக்கும் கோ3சரமல்லாதானாய். (திசைகளெல்லாம் என்று தொடங்கி) உத்கர்ஷாபகர்ஷம் பாராதே ஸகலபதா3ர்த்த2த்தோடும் தன் திருவடிகள் ஸ்பர்ஶிக்கும்படி லோகங்களையெல்லாம் அளப்பதும் செய்து ஜந்ம வ்ருத்தாதி3களால் நிஹீநரானாருமகப்பட எல்லார்க்கும் பரிவனானவன் ஓருருவனே! என்று அவன் கு3ணத்தை அநுஸந்தி4த்து விஸ்மிதராகிறார்.

நான்காம் பாட்டு

தானோரு ருவே தனிவித்தாய்த் தன்னில் மூவர் முதலாய*
வானோர் பலரும் முனிவரும் மற்றும் மற்றும் முற்றுமாய்*
தானோர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி அதனுள் கண்வளரும்*
வானோர் பெருமான் மாமாயன் வைகுந் தன் எம்பெருமானே

அவ:-  நாலாம் பாட்டில் –  “அத்யந்த நிரபேக்ஷனாயிருந்துவைத்து ஸ்ருஷ்ட்யாத்3யநேக யத்நங்களைப் பண்ணி என்னை விஷயீகரித்தவன், இனி நான் ‘அல்லேன்’ என்னிலும் தன்னுடைய ஸௌஶீல்ய கு3ணத்தாலே விடான்” என்று ஸ்மாஹிதராகிறார்.

வ்யா:-  (தானோருரு என்று தொடங்கி) நிமித்தோபாதா3ந ஸஹகா ரிகளான மூன்று வகைப்பட்ட காரணமும் தானேயாய், தன்னோடு மூவரா னவர்கள் முதலான தே3வ திர்யக் ஸ்தா2வரங்களுள்ளிட்ட ஸகல பத3ர்த்த2 ங்களையும் உண்டாக்குகைக்காக; தன்னில் – ஸங்கல்பத்திலே என்னவு மாம்.  (தான் என்று தொடங்கி) தன்னுடைய ஸங்கல்பவஶத்தாலே ஏகார்ணவத்தைத் தோன்றுவித்து அதிலே கண்வளர்ந்தருளும் ஸ்வபா4வ னாய், வைகுந்தனாய், வானோர் பெருமானாயிருந்துவைத்து எனக்குத் தப்ப வொண்ணாதபடி அத்யாஶ்சர்யமான ஶீலவத்தையையுடையவன் எனக்கு ஸ்வாமியே; நானும் அவனுக்கு அடிமை.

ஐந்தாம் பாட்டு

மானேய் நோக்கி மடவாளை மார்வில் கொண்டாய் மாதவா*
கூனே சிதைய உண்டைவில் நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா*
வானார் சோதி மணிவண்ணா மதுசூதாநீ யருளாய்உன்
தேனே(ய்) மலரும் திருப்பாதம் சேரு மாறு வினையேனே

அவ:-  அஞ்சாம் பாட்டில் –  இப்படி இசைந்த ஆழ்வார் – “சடக்கென முகங்காட்டப் பழையபடிக்கே அகலுவர்; இவர் தாமே அர்த்தி2க்குந்தனை யும் செல்ல முகங்காட்டாதே நிற்போம்” என்று எம்பெருமான் பேரநிற்க, “மீண்டு உன் திருவடிளிலே சேர்த்து அடிமை செய்யும்படி பார்த்தருள வேனும்” என்று ப்ரார்த்தி2க்கிறார்.

வ்யா:-  (மானேய் என்று தொடங்கி) மானின் நோக்குப்போலே முக்34மான நோக்கையுடைய பெரிய பிராட்டியாரைத் திருமார்பிலே உடையையாகையாலே ‘மாத4வன்’ என்னும் திருநாமத்தை முக்2யமாக உடையையாய், அநுலேபதா3யிநியான கூனியுடைய மற்றோர் அவயவத் துக்கும் வாட்டம் வாராமே கூனே நிமிரும்படி சுண்டுவில் தெறித்தாற் போலே அநாயாஸேந நிமிர்த்தவனே! ஆஶ்ரிதருடைய அவத்3யம் பாராதே அவர்களை விஷயீகரித்து, அவர்களுடைய அவத்3யத்தைப் பின்னையும் போக்கும் என்று கருத்து.  (கோவிந்தா) திர்யக்குக்களோடும் ஸம்ஶ்லேஷி க்கும் ஸ்வபா4வனானவனே!.  கூனே சிதைய உண்டைவில் நிறத்தில் தெறிக்கையாவது – கூனியுடைய கூன் போம்படி மர்மத்திலே பெருமாள் சுண்டு வில்லெடுத்துத் தெறித்தபடி. “தீம்புசேர்வது ஸ்ரீ நந்த3கோ3பர் திருமகனுக்காகையாலே பெருமாள் தீம்பை அவன் பக்கலிலே வைத்து, ‘கோவிந்தா’ என்கிறது” என்றும் சொல்லுவர்.  (வானார் என்று தொடங்கி) திருநாடெல்லாம் நிறையும்படியான தேஜஸ்ஸையும், ஸ்ப்ருஹணீயமான நிறத்தையும் உடையையாய், ஸமாஶ்ரிதருடைய விரோதி4களைப் போக்கும் ஸ்வபா4வனான நீ, உன்னுடைய நிரதிஶய போ4க்3யமான திருவடிகளை வினையேனான நான் பெறும்படி பார்த்தருளவேணும்.  எம்பெருமானுடைய திருவடிகளிலே அடிமை செய்வோம் என்று இவர் இசைந்த பின்பும் கிடையாமையாலே நலிவு பட்டு “வினையேன்” என்கிறார்.

ஆறாம் பாட்டு

வினையேன் வினைதீர் மருந்தானாய் விண்ணோர் தலைவா கேசவா*
மனைசேர் ஆயர் குலமுதலே மாமா யனே மாதவா*
சினையேய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய் சிரீதரா*
இனையாய் இனைய பெயரினாய் என்று நைவன் அடியேனே

அவ:-  ஆறாம் பாட்டில் –  எம்பெருமான், இவர் அபேக்ஷித்தபோதே அபேக்ஷிதத்தைச் செய்யாத த3ஶையிலே, அவனுடைய கு3ணசேஷ்டிதங் கள் ஸ்ம்ருதி விஷயமாய் நின்று இவரை நலிய, இவற்றாலே நலிவுபட்டு மிகவும் ஶிதி2லராகிறார்.

வ்யா:-  (வினையேன் என்று தொடங்கி) “உனக்கு அவத்3யாவஹம் என்று அடிமை செய்ய அல்லேன்” என்று நான் அகல “எனக்கு உத்கர்ஷ ஹேதுவாமத்தனை” என்று என்னைத் தெளிவித்து அடிமையிலே சேர்த்துக் கொண்டவனே! அயர்வறுமமரர்களதிபதியாய், ப்3ரஹ்ம ருத்3ரர் களுக்கும் உத்பாத3கனாய் வைத்து, இடையர்தம் மனைகளிலே நீயே வந்து சேர்ந்து, அவர்கள் குலத்துக்கு உஜ்ஜீவந ஹேதுவாய், ஸகல ஜந மநோநயநஹாரியான நவநீத சௌர்யாதி3 தி3வ்ய சேஷ்டிதங்களையுடை யையாய், இப்படி ஆஶ்ரித ப4வ்யனாகைக்கு நிதா3நமான ஶ்ரிய:பதித்வத் தையுடையையாய்; ‘மனை சேராயர்’ என்றது – பல மனைகளும் சேர வுடைய இடையர் என்றுமாம். ஸ்ரீ ஸுக்3ரீவ மஹாராஜரை விஶ்வஸிப் பித்து அடிமை கொள்ளுகைக்காக, பெரும் பணைகளையுடைத்தாய், தழைத்திருக்கையாலே இலக்குக்குறிக்க வொண்ணாதிருக்கிற மராமர மேழையும் எய்தவனே! (சிரீதரா) எய்கிற போதை வீரலக்ஷ்மியைச் சொல்லுகிறது.  (இனையாய் என்று தொடங்கி) ஏவம்வித4 கு3ணசேஷ்டி தங்களையுடையையாய், இவற்றுக்கு வாசகமான திருநாமங்களை யுடையவனே!

ஏழாம் பாட்டு

அடியேன் சிறிய ஞானத்தன் அறிதல் ஆர்க்கும் அரியானை*
கடிசேர் தண்ணந் துழாய்க்கண்ணி புனைந்தான் தன்னைக் கண்ணனை*
செடியா ராக்கை அடியாரைச் சேர்தல் தீர்க்கும் திருமாலை*
அடியேன் காண்பா னலற்றுவன் இதனில் மிக்கோ ரயர்வுண்டே

அவ:-  ஏழாம் பாட்டில் –  இப்படி “எம்பெருமானைக் காணவேணும்” என்று அபி4நிவேஶித்த ஆழ்வார், அவன் ஸம்ஶ்லேஷோந்முக2னான      வா றே, மீளவும் அவன் வைலக்ஷணயத்தையும் தம்முடைய நிகர்ஷத்தை யும் அநுஸந்தி4த்து அகலுகிறார்.

வ்யா:-  (அடியேன்) அடிமை தவிர்ந்திருக்கிறவர் “அடியேன்” என்பா னென்? என்னில், பூர்வ வாஸனையாலே.  (அறிதல் என்று தொடங்கி) எத்தனையேனும் அளவுடையார்க்கும் அறிய நிலமன்றிக்கே, ஐஶ்வர்யத் துக்கு ஸூசகமாய், நிரதிஶய போ4க்3யமான திருத்துழாய் மாலையாலே அலங்க்ருதனாய், மிகவும் கு3ணவானானவனை.  (செடியாராக்கை என்று தொடங்கி) கர்மங்களாலே நிரந்தரமான தே3ஹ ஸம்ப3ந்த4து3ரிதம் ஆஶ்ரிதர் பக்கல் சேராமே காக்கும் ஶ்ரிய:பதியை. கைவல்யார்த்தி2 களை “அடியார்” என்கிறது, தம்மைப்போலே அவனோடே பரிமாறி அவனுக்கு அவத்3யத்தை விளையாதே ப்ரயோஜநாந்தரங்களைக் கொண்டு அகலுகையால்.  (அடியேன் என்று தொடங்கி) நான் காண வேணும் என்று அலற்றாநின்றேன்; இதுக்கு மேற்பட அறிவுகேடுண்டோ சில?

எட்டாம் பாட்டு

உண்டாய் உலகேழ் முன்னமே உமிழ்ந்து மாயை யால்புக்கு*
உண்டாய் வெண்ணெய் சிறுமனிசர் உவலை யாக்கை நிலையெய்தி*
மண்டான் சோர்ந்த துண்டேலும் மனிசர்க் காகும் பீர்* சிறிதும்
அண்டா வண்ணம் மண்கரைய நெய்யூண் மருந்தோ மாயோனே

அவ:-  எட்டாம் பாட்டில் –  இப்படி ஆழ்வார் அகல, இவரைச் சேர்த்து க்கொள்ளுகைக்காக, ஆஶ்ரிதரோடே ஸம்ஶ்லேஷித்தல்லது த4ரிக்க மாட்டாத தன்னுடைய படியைக் காட்டியருள, கண்டு விஸ்மிதராகிறார்.

வ்யா:-  (உண்டாய் என்று தொடங்கி) இஜ்ஜக3த்தையெல்லாம் பண்டே உன் திருவயிற்றிலே வைத்தாய்; அந்த லோகத்தை உமிழ்ந்து, அதினுள்ளே, உன்னுடைய அப்ராக்ருதமான திருமேனியை க்ஷுத்3ரரான மநுஷ்யருடைய ஹேய தே3ஹங்களோடு ஸஜாதீயமாக்கிக்கொண்டு திருவவதாரம்பண்ணி, அபி4நிவேஶத்தாலே வெண்ணெயை உண்டாய்; (மண்தான் என்று தொடங்கி) லோகங்களைத் திருவயிற்றிலே வைத்து உமிழுகிறபோது ஶேஷித்தது ஏதேனும் மண்ணுண்டாகிலும், அத்யல்ப மும் மநுஷ்யருக்கு ஶேஷியாதபடி நெய்யூண் மண்கரைய மருந்தோ? அங்ஙனன்றே; ஆஶ்ரிதர் த்3ரவ்யத்தை பு4ஜித்தல்லது ஆத்மதா4ரணமில் லாமை என்று கருத்து.  (பீர் சிறிதும் அண்டாவண்ணம்) வைவர்ண்யம் ஒன்றுமின்றியே ஒழியும்படி என்னவுமாம். (மாயோனே) நிரதிஶயாஶ்சர்ய பூ4தனே.

ஒன்பதாம் பாட்டு

மாயோம் தீய வலவலைப் பெருமா வஞ்சப் பேய்வீய*
தூய குழவி யாய்விடப்பாலமுதா அமுது செய்திட்ட
மாயன்* வானோர் தனித்தலைவன் மலராள் மைந்தன் எவ்வுயிர்க்கும்
தாயோன்* தம்மான் என்னம்மான் அம்மா மூர்த்தி யைச்சார்ந்தே

அவ:- ஒன்பதாம் பாட்டில் –  “பரிவரான யஶோதா3தி3களுடைய வெண்ணெய் உனக்கு அம்ருதஸமம்; என்னுடைய ஸ்பர்ஶம் உனக்கு நஞ்சோடு ஒக்கும்; நான் அகலுகையே யுக்தம்” என்று ஆழ்வார் விண்ணப் பஞ்செய்ய, “பூதனை நஞ்சு பா34கமன்றிக்கே யொழிந்தாற்போலே உம்முடைய தோ3ஷம் பா34கமன்று” என்று எம்பெருமான் அருளிச் செய்ய, “அங்ஙனேயாகில் அகல்வேனல்லேன்” என்று ஸமாஹிதராகிறார்.

வ்யா:-  (மாயோம் என்று) மாயக்கடவோமல்லோம்; (தீயவலவலை என்று தொடங்கி) பொல்லாத நெஞ்சையுடையளாய்வைத்து யஶோதை3ப் பிராட்டியைப்போலே மிகவும் புகழாநின்றதும் செய்து, ஈஶ்வரனான தனக்கும் இன்னாள் என்று தெரியாதபடி மிகுந்திருந்த வஞ்சனையையு   முடையளாயுள்ள பூதனை முடியும்படி, ஈஶ்வரத்வ ஜ்ஞாநம் கலவாதபடி வெறும்பிள்ளையாயிருக்கச்செய்தே நச்சுப்பாலே அம்ருதமாம்படி அமுதுசெய்து நம்மை உளோமாக்கின ஆஶ்சர்யபூ4தன்.  (வானோர் தனித் தலைவன் என்று தொடங்கி) அயர்வறுமமரர்களுக்கு அத்3விதீயனான அதி4பதியுமாய், ஶ்ரிய:பதியுமாய், எல்லாவுயிருக்கும் தாய்போல் பரிவனு மாய், ஸர்வேஶ்வரனுமாய் வைத்துத் தன்னுடைய கு3ணவத்தையைக் காட்டி என்னை அடிமைகொண்ட பெரியோனைப்பற்றி.

பத்தாம் பாட்டு

சார்ந்த இருவல் வினைகளும் சரித்து மாயப் பற்றறுத்து*
தீர்ந்து தன்பால் மனம்வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்*
ஆர்ந்த ஞானச் சுடராகி அகலம் கீழ்மே லளவிறந்து*
நேர்ந்த உருவாய் அருவாகும் இவற்றி னுயிராம் நெடுமாலே

அவ:- பத்தாம் பாட்டில் –  அடிமைசெய்கையிலே உந்முக2ராம்படி பண்ணித்தம்மைத் திருநாட்டிலே கொண்டுபோக உத்3யோகி3யாநின்று ள்ள எம்பெருமானுக்குத் தம் பக்கலுண்டான வ்யாமோஹத்தைப் பேசுகிறார்.

வ்யா:-  (சார்ந்த என்று தொடங்கி) ஆத்மாவோடுஅவிநாபூ4தமான புண்யபாப ரூபங்களான கர்மங்களை அநாயாஸேந போக்கி, விஷயங்க ளிலுள்ள ருசிவாஸநைகளை அறுத்து, அத்தாலே க்ருதக்ருத்யனாய், தன்னுடைய ஸௌந்த3ர்யாதி3களைக்காட்டித் தன் பக்கலிலே மநஸ்ஸு ப்ரவணமாம்படி பண்ணி; “தீர்ந்து தன்பால் மனம் வைக்கத்திருத்தி” என்றத்தால் – அநந்ய ப்ரயோஜநராய்க்கொண்டு தன்பாடே மநஸ்ஸை வைக்கும்படி திருத்தி என்றுமாம். (வீடுதிருத்துவான்) ஆழ்வார் எழுந்தருளு கிற மஹோத்ஸவத்துக்குத் திருநாடு கோடிக்கத் தொடங்கினான்.  பரிபூர்ண ஜ்ஞாநப்ரப4னாய், ஸர்வக3தனாய், அதிஸூக்ஷ்மமான சேதநா சேதநங்களுக்கு ஆத்மாவாய், ஆஶ்ரித விஷயத்தில் நிரதிஶய வ்யாமோ ஹத்தை உடையவன்.  ஆழ்வாரை இப்படி திருத்துகைக்காக வ்யாப்த னாய் இருந்தான் என்றும், அவரைப் பெற்றபின்பு வ்யாப்தி பூர்ண மாயிற்று என்றும் வ்யாப்திக்கு ப்ரயோஜநம் சொல்லுவர்.

பதினொன்றாம் பாட்டு

மாலே! மாயப் பெருமானே! மாமா யனே! யென்றென்று*
மாலே யேறி மாலருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்*
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட* இவைபத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே

அவ:- நிக3மத்தில் – இத்திருவாய்மொழி கற்றார்க்குள்ள ப2லம் அருளிச்செய்கிறார்.

வ்யா:-  (மாலே என்று தொடங்கி) பெரியோனே! என்றும், ஆஶ்சர்ய மான கு3ணங்களையுடையவனே! என்றும், ஆஶ்சர்ய் சேஷ்டிதங்களை யுடையவனே! என்றும், அவனுடைய வைலக்ஷண்யத்தை அநுஸந்தி4த்து “எம்பெருமானுக்கு அடிமை செய்வோமல்லோம்” என்று ஏங்கி, அடிமை செய்யப்பெறாமையலே அவஸந்நராய், மீளவும் அவனுடைய நிரவதி4க க்ருபையாலே சேர்ந்து அடிமை செய்யப்பெற்று தாம் உளரான ஆழ்வார். (பாலேய் தமிழர் இசைகாரர் என்று தொடங்கி) இயலறிந்து கொண்டார், இசையறிவார், ப43வத்3கு3ணவித்34ர் விரும்பும் ஆயிரத்திலும் இத் திருவாய்மொழி வல்லார்க்கு எம்பெருமானுடைய வைலக்ஷண்யத்தைக் கண்டு “தாம் அயோக்3யர்” என்று அகலும் து3:க்க2மில்லை.  பாலென்று – தமிழ் நூல்.  பாலேய் தமிழ் – பால்போன்ற தமிழ்.

நஞ்சீயர் திருவடிகளேரணம்

 

ஆறாம் திருவாய்மொழி
பரிவதில்: ப்ரவேஶம்

 

அவதாரிகை    1-6

பரிவதில்ப்ரவேசம்

ஆறாம் திருவாய்மொழியில் – ‘அவாப்த ஸமஸ்தகாமனாய், நிரபேக்ஷ னாய், பரிபூர்ணனான எம்பெருமானை, அதிக்ஷுத்3ரனும் அதிக்ஷுத்3ரோ பகரணனுமாயிருக்குமவன் ஆஶ்ரயிக்கைக்கு உபாயமுண்டோ?’ என்று ஆஶங்கிப்பார்க்கு, அவன் அத்யந்த பரிபூர்ணனேயாகிலும் அந்தப் பூர்த்தி யெல்லாம் ஸ்வாராத4தைக்கு உறுப்பாம்படி ஶ்ரிய:பதியாய் ஸுஶீலனா கையாலே, ஆஶ்ரயிக்கப்புக்கார்க்கு வித்தவய்யாயாஸங்களில்லாமை யாலும், ப்ரத்யவாய ப்ரஸங்க3மில்லாமையாலும், ப2லாதி4க்யத்தாலும், த்3ரவ்யாதி3 கார்யங்களுடைய ப்ரகாரவிஶேஷங்கொண்டு கார்யமில்லா மையாலும், ப43வத்3கீ3தா மத்4யம ஷட்காதி3களில் ப்ரதிபாதி3த்தாப் போலே ஆஶ்ரயணம் ஸுகரமென்று அருளிச்செய்கிறார்.

*பரிவதில் ஈசனைப் பாடி*
விரிவது மேவ லுறுவீர்*
பிரிவகை யின்றிநன் னீர்தூய்*
புரிவது வும்புகை பூவே

அவ:-  முதற் பாட்டில் –  எம்பெருமான் பரிபூர்ணனாகையாலும், ஶீலவானாகையாலும் ஏதேனும் பத்ரபுஷ்பாதி3 த்3ரவ்யங்களாலே த்ருப்த னாவானொருவன் என்கிறார்.

வ்யா:-  (பரிவதில் ஈசனை) ஹேயப்ரத்யநீகனான ஸர்வேஶ்வரனை ஹேயப்ரத்யநீகத்வம் கல்யாணகு3ணங்களுக்கும் உபலக்ஷணம்.  இத்தால் ப்ராப்யஸ்வரூபம் சொல்லிற்று.  (பாடி என்று தொடங்கி) ஸம்ஸாரமுக்த ராய் அநுப4வித்து, அவ்வநுப4வ ஜநித ப்ரீதியாலே 1. “एतत्साम गायन्नास्तॆ”   (ஏதத் ஸாம கா3யந்நாஸ்தே) என்னும்படியாலே பாடி விஸ்த்ருதராகையைப் பெறவேண்டியிருப்பீர்.  (பிரிவகை என்று தொடங்கி) உபகரணங்களில் குறைவு பார்த்து அகலுகை தவிர்ந்து, அஸம்ஸ்க்ருத ஜலத்தை ஏதேனும் ஒருபடி ப்ரயோகி3த்து, மற்றும் அவனுக்குக் கொடுப்பதுவும் ஏதேனும் புகையும் ஏதேனும் பூவும்.

இரண்டாம் பாட்டு

மதுவார் தண்ணந் துழாயான்*
முதுவேத முதல் வனுக்கு*
எதுவேது என்பணி என்னாது*
அதுவே ஆட்செய்யு மீடே

அவ:-  இரண்டாம் பாட்டில் –  ஆஶ்ரயணத்துக்கு அதி4காரிநியம மில்லை என்கிறார்.

வ்யா:-  (மதுவார் என்று தொடங்கி) ஐஶ்வர்ய ஸூசகமாய், திருக்குழலின் ஸ்பர்ஶத்தாலே மது4ஸ்யந்தி3யான திருத்துழாயை உடைய னாய், அபௌருஷேயமான வேத3ப்ரதிபாத்3யனாய் உள்ளவனுக்கு. (எது வேது என்று தொடங்கி) இப்படி விலக்ஷணனான அவனுக்கு நான் அடிமை செய்கைக்கு அயோக்3யன் என்று பாராதே, அந்தரங்க3வ்ருத்தியோடு ப3ஹிரங்க3வ்ருத்தியோடு வாசியின்றிக்கே எல்லா வ்ருத்தியும் செய்யக் கடவனாகை, ஆட்செய்கைக்கு அதி4காரம்.

மூன்றாம் பாட்டு

ஈடும் எடுப்பும்இல் ஈசன்*
மாடு விடாதென் மனனே*
பாடும்என்நா அவன் பாடல்*
ஆடும் என்அங்கம் அணங்கே

அவ:-  மூன்றாம் பாட்டில் –  கீழ் இரண்டு பாட்டாலும் சொன்ன கு3ணங்களை அநுஸந்தி4த்து, ஸர்வேஶ்வரன் பக்கலிலே தம்முடைய வாங்மந:காயங்கள் ப்ரவண மாயிருக்கிறபடியை அருளிச்செய்கிறார்.

வ்யா:-  (ஈடும் என்று தொடங்கி) ஆஶ்ரிதரை-ஜாத்யாதி3களுடைய அபகர்ஷமும் உத்கர்ஷமும் நிப3ந்த4நமாக விடுதல் பற்றுதல் செய்யக் கடவனன்றிக்கே, நிருபாதி4க ஶேஷியானவன்பாடுநின்றும் போகிற தில்லை என் மநஸ்ஸு.  (பாடும் என்று தொடங்கி) என்னுடைய வாக்கும் அவனுடைய இந்த கு3ணப்ரதிபாத3கமான கா3தை2யைப் பாடாநின்றது; அங்க3மும் தே3வாவிஷ்டரைப்போலே ஆடா நின்றது.

நான்காம் பாட்டு

அணங்கென ஆடும் எனங்கம்*
வணங்கி வழிபடும் ஈசன்*
பிணங்கி அமரர் பிதற்றும்*
குணங்கெழு கொள்கையி னானே

அவ:-  நாலாம் பாட்டில் –  நித்யஸூரிகளைப்போலே எனக்கு பக3வத் ப்ராவண்யம் நித்யமாயிற்று என்கிறார்; ப3ஹுகு3ணனான ஈஶ்வரனை என் அங்க3ம் வணங்கி வழிபடும் என்கிறார் என்றுமாம்.

வ்யா:-  (அணங்கென்று தொடங்கி) தை3வாவிஷ்டமானாற்போலே ப43வத்3கு3ணஜிதமாய்க்கொண்டு ஆடாநின்றுள்ள எனுடைய அங்க3ம், என்றும் வணங்குகையே ஸ்வபா4வமாக உடைத்தாயிற்று. (ஈசன் என்று தொடங்கி) ஒருவர்க்கொருவர் “நான் முற்படவேணும்” என்று பிணங்கி, அயர்வறும் அமரர்கள் ஸந்நிபதிதரைப்போலே பிதற்றும் கு3ணங்கள் சேருகைக்குப் பாத்ரமாயுள்ள ஸர்வேஶ்வரனை.

ஐந்தாம் பாட்டு

கொள்கைகொ ளாமை இலாதான்*
எள்கல் இராகம் இலாதான்*
விள்கைவிள் ளாமைவி ரும்பி*
உள்கலந் தார்க்கு ஓரமுதே

அவ:-  அஞ்சாம் பாட்டில் –  அநந்யப்ரயோஜநர்க்கு எம்பெருமான் நிரதிஶய போ4க்3யனாம் என்கிறார்.

வ்யா:-  (கொள்கை கொளாமையிலாதான்) ஆஶ்ரிதரோடு தான் பரிமாறுமிடத்தில் அவர்கள் பக்கல் தாரதம்யமில்லாதான்.  (எள்கலிராக மிலா தான்) எல்லாரையும் ஒக்க ஸ்நேஹித்திருப்பவன்.  (விளகை என்று தொடங்கி) ப்ரயோஜநாந்தரங்களை கொண்டு அகலுமோ, அநந்ய ப்ரயோஜநனாய் அகலாதொழியுமோ? என்று மிகவும் அநுஸந்தி4த்து.

ஆறாம் பாட்டு

அமுதம் அமரர்கட் கீந்த*
நிமிர்சுடர் ஆழி நெடுமால்*
அமுதிலும் ஆற்ற இனியன்*
நிமிர்திரை நீள்கட லானே

அவ:-  ஆறாம் பாட்டில் – நிரதிஶய போ4க்3யனான எம்பெருமானை உபாயமாகப் பற்றி ப்ரயோஜநாந்தரங்களைக்கொண்டு அகலுகிறவர் களை இகழ்கிறார்.

வ்யா:-  (அமுதம் என்று தொடங்கி) “க்ஷுத்3ரபுருஷார்த்த2த்தை அபேக்ஷிக்கிறார்” என்று இகழாதே, தே3வர்களுக்குக் கடலைக் கடைந்து அம்ருதத்தைக் கொடுப்பதும் செய்து, நிரவதி4க தேஜஸ்கமான திருவாழி யையுடையவனுமாய், ஆஶ்ரயித்த மாத்ரத்திலே அதிவ்யாமுக்34னான வன், அவர்கள் போ4க்3யமாகப் பற்றுகிற அம்ருதத்திற்காட்டிலும் நிரவதி4கபோ4க்3யன்.  (நிமிர்திரை நீள் கடலானே) தூ4ரஸ்த2னன்றிக்கே, இவர்கள் ஆசைப்பட்ட அம்ருதம் பிறந்த கடலிலே, ஆஶ்ரயிப்பார்க்கு உறுப்பாம்படி கண்வளர்ந்தருளுகிறவன்.

ஏழாம் பாட்டு

நீள்கடல் சூழ் இலங் கைக்கோன்*
தோள்கள் தலைதுணி செய்தான்*
தாள்கள் தலையில் வணங்கி*
நாள்கடலைக் கழிமினே

அவ:-  ஏழாம் பாட்டில் – ப4ஜமாநரான உங்களுக்கு அவனைக் காண்கையிலுள்ள ஆசையாலே, ஓரோ தி3வஸம் ஓரோ கடல்போலே நெடி தாய், காலக்ஷேபம் அரிதானால் பெருமாளுடைய வீரசரிதத்தை அநுஸந் தி4த்துத் திருவடிகளை தலையாலே வணங்கிக் காலத்தைப்போக்குங் கோள் – என்கிறார்; ஆஶ்ரித விரோதி4 நிரஸந ஶீலனான த3ஶரதா3த்ம ஜனை ஆஶ்ரயித்து நிர்த்து3:க்க2ராகுங்கோள் என்றுமாம்.

வ்யா:-  எட்டாம் பாட்டில் – அநந்ய ப்ரயோஜநராய் ப4ஜிக்குமவர்களு க்கு, விக்4நங்களையெல்லாம் போக்கி அடிமையாகிற அழிவில்லாத ஸம்பத்தை எம்பெருமான் தரும் என்கிறார்.

எட்டாம் பாட்டு

கழிமின்தொண் டீர்கள் கழித்து*
தொழுமின் அவனைத் தொழுதால்*
வழிநின்ற வல்வினை மாள்வித்து*
அழிவின்றி ஆக்கம் தருமே

வ்யா:-  (கழிமின் தொண்டீர்கள்) பா3ஹ்யருசிகளை விடுங்கோள்.  (கழித்துத்தொழுமின்) அவஶ்யம் அவற்றைவிட்டு எம்பெருமானை ஆஶ்ர யியுங்கோள்.  (அவனைத்தொழுதால் என்று தொடங்கி)  ஆஶ்ரயிக்குமவ னுக்கு ஆஶ்ரயணம் தானே ப்ரயோஜநம் போந்திருக்கச்செய்தே, ப43வத் ப்ராப்திக்கு விக்4நமான அவித்3யாதி3களைப்போக்கி.

ஒன்பதாம் பாட்டு

தரும வரும்பய னாய*
திருமக ளார்தனிக் கேள்வன்*
பெருமை யுடைய பிரானார்*
இருமை வினைகடிவாரே

அவ:-  ஒன்பதாம் பாட்டில் – ஆஶ்ரயிப்பாருடைய விக்4நங்களை நீக்கி நித்ய கைங்கர்யத்தைக் கொடுக்கும் போது, பெரியபிராட்டி யாரோடே கூடிநின்றே ஸாத3ரமாக்கொடுக்கும் என்கிறார்.

வ்யா:-  (தரும் என்று தொடங்கி) உபநிஷத் ப்ரஸித்34மான பரம புருஷார்த்த2ங்களைத் தரும் பெரியபிராட்டியாருடைய கு3ணாதி4கனா  யுள்ள நாயகன்.  (பெருமை என்று தொடங்கி) ஶ்ரிய:பதித்வ நிப3ந்த4ந மான பெருமையையுடையராய், ஆஶ்ரிதாநுக்3ரஹ ஸ்வரூபராய், அவர்க ளுடைய புண்யபாப ஸ்வரூபமான கர்மங்களைப் போக்கும் ஸ்வபா4வ ரானவர்.  த4ர்மத்தினுடைய பரமப்ரயோஜந ரூபமான திருமகளார் என்றுமாம்.

பத்தாம் பாட்டு

கடிவார் தீய வினைகள்*
நொடியா ரும்அள வைக்கண்*
கொடியா அடுபுள் உயர்த்த*
வடிவார் மாதவ னாரே

அவ:-  பத்தாம் பாட்டில் – பெரியபிராட்டியாரோடு கூடவந்து ஈண்டி ப்ரதி ப3ந்த4கங்களைப் போக்கியருளும் என்கிறார்.

வ்யா:-  (கடிவார் தீய வினைகள்) ப்ரதிப3ந்த4க கர்மங்களைப் போக்கும் ஸ்வபா4வர்.  (நொடியாரும் அளவைக்கண்) க்ஷணமாத்ரத்திலே.  (கொடியா அடுபுள் உயர்த்த வடிவார்) ஆஶ்ரித ஸம்ரக்ஷணம் பண்ணுகை க்கு ப்ரதிபக்ஷ நிரஸந ஸ்வபா4வனான பெரிய திருவடியைக் கொடியாக எடுக்கையை ஸ்வபா4வமாகவுடையவர்.  பெரிய திருவடியை விஷயீகரி க்குமாபோலே, இன்று ஆஶ்ரயிப்பாரை விஷயீகரிக்கும் ஸ்வபா4வர் என்று மாம்.  (மாதவனார்) ஶ்ரிய:பதியானவர்.

பதினொன்றாம் பாட்டு

*மாதவன் பால்சட கோபன்*
தீதவ மின்றி உரைத்த*
ஏதமில் ஆயிரத்து இப்பத்து*
ஓதவல் லார்பிற வாரே

அவ:-  நிகமத்தில்- இத்திருவாய்மொழி கற்றார் பெறும் ப2லத்தை அருளிச்செய்கிறார்.

வ்யா:-  கவிபாடுகிறவனுக்கும் கவிபாட்டுண்கிறவனுக்கும் கவிக்கும் குற்றமாகிற ஏதமில்லாதபடியிருக்கிற ஆயிரத்தில், ஶ்ரிய:பதி யான தன் பக்கலுள்ள மேன்மையை அநுஸந்தி4த்தல், ஆஶ்ரயித்தவனு டைய சிறுமை அநுஸந்தி4த்தல் செய்கையாகிறதீதும் அவமுமில்லாத இத்திருவாய்மொழி கற்கவல்லார் ப4க்தியோக3த்துக்கு மேட்டு மடையான ஸம்ஸாரத்தில் பிறவார்.  ஏதமாவது – குற்றம்.  “கவிபாடுகிறவனுக்கும், கவிபாட்டுண்கிறவனுக்கும், கவிக்குமுள்ள மூன்று குற்றத்தையும் – தீதும், அவமும், ஏதமும் என்றும் சொல்லுவர்.

நஞ்சீயர் திருவடிகளேரணம்

 

 

ஏழாம் திருவாய்மொழி
பிறவித்துயர்: ப்ரவேஶம்

 

அவதாரிகை    1-7

பிறவித்துயர்ப்ரவேசம்

ஏழாம் திருவாய்மொழியில் – ஸர்வஶேஷியாய், ஶ்ரிய:பதியாய், ஸமஸ்த கல்யாணகு3ணாத்மகனாய், நிரதிஶயாநந்த3பூர்ணனாய், தன்னை அநுப4வித்தாரைத் தன்னிற் காட்டிலும் நிரதிஶயாநந்த3பூர்ணராகப் பண்ணவல்லனாயிருந்துள்ள எம்பெருமானை ப4ஜியாநின்றுவைத்தும் ப2லாந்தரத்தை இச்சி2க்கிறவர்களை நிந்தி3த்து, அவர்களுக்கு அபேக்ஷித் ப2லத்தைக் கொடுக்கிற எம்பெருமானைக்கண்டு அதீவ விஸ்மிதராய், ஏவம் வித4னாயிருந்துள்ள எம்பெருமான் பக்கலுள்ள ப4க்தியே நிரதிஶய போ4க்3யம் என்கிறார்.

முதல் பாட்டு

பிறவித் துயரற ஞானத்துள் நின்று*
துறவிச் சுடர்விளக்கம் தலைப் பெய்வார்*
அறவனை ஆழிப் படைஅந் தணனை*
மறவியை யின்றி மனத்துவைப் பாரே

அவ:-  முதற் பாட்டில் –  நிரதிஶய போ4க்3யனான தன்னை ஆஶ்ரயி யாநின்று வைத்தே ஆத்ம மாத்ர நிஷ்ட2ரான முமுக்ஷுக்களுடைய அபேக்ஷித ஸம்விதா4நம் பண்ணுகிற எம்பெருமான் படியைக் கண்டு விஸ்மிதராகிறார்.

வ்யா:-  (பிறவி என்று தொடங்கி)ஜந்ம ஜரா மரணாதி3 ஸாம்ஸாரிக து3:க்க2ம் அறுகைக்காக ஆத்ம ஜ்ஞாநத்திலே நின்று ப்ரக்ருதி விநிர்முக் தாத்மஸ்வரூபத்தை ஸாக்ஷாத்கரிக்க வேண்டியிருப்பார்.  (அறவனை) அநந்யப்ரயோஜநரோடு ஒக்க ப்ரயோஜநாந்தர பரரையும் அங்கீ3கரித்து, அவர்கள் அபேக்ஷிதத்தைச் செய்யுமவனை.  (ஆழியென்று) கையும் திரு வாழியும் கண்டு தங்கள் புருஷார்த்த2த்தை மறவாதே, அவன் பக்கல் ஶுத்3தி4 மாத்ரத்தையே அநுஸநிதி4த்து ஆஶ்ரயியாநிற்பரே! இவர்களுக் கும் ஆஶ்ரயிக்கலாம்படி இருப்பதே! என்ன அறவனோ! என்று கருத்து.

இரண்டாம் பாட்டு

வைப்பாம் மருந்தாம் அடியரைவல்வினைத்
துப்பாம் புலனைந்தும் துஞ்சக் கொடான் அவன்*
எப்பால் யவர்க்கு(ம்) நலத்தால் உயர்ந்துயர்ந்து*
அப்பா லவன் எங்க ளாயர் கொழுந்தே

அவ:- இரண்டாம் பாட்டில் – அநந்யப்ரயோஜநர் திறத்திலே எம்பெருமான் இருக்கும்படியை அருளிச்செய்கிறார்.

வ்யா:-  (வைப்பாம் என்று தொடங்கி) ஆஶ்ரிதர்க்கு ப்ராப்யமான பரம புருஷார்த்த2மும், தத்3விரோதி4யான ஸம்ஸாரம் போக்குகைக்கு மருந்துமாய், அவர்களை – ஸ்வவிஶ்லேஷ ஜநகமான மஹாபாபத்தை  விளைக்கவற்றான இந்த்3ரியங்கள் நலியிலும் நலிவுபட விட்டுக்கொடான்.  (எப்பால் என்று தொடங்கி) ஆநந்த3வல்லியில் சொல்லி நின்றபடியே எல்லா இடத்திலுமுள்ள எல்லாரிலுங்காட்டில் ஆநந்த3த்தாலே மேற்பட்டு வாங்மநஸ்ஸுக்களுக்கு நிலமன்றியே இருந்துவைத்து, தன்னுடைய நிரவதி4க க்ருபையாலே ஆஶ்ரிதர்க்காக இடையரில் ப்ரதா4நனாய் வந்து பிறந்தான்.

மூன்றாம் பாட்டு

ஆயர் கொழுந்தாய் அவரால் புடையுண்ணும்*
மாயப் பிரானைஎன் மாணிக்கச் சோதியை*
தூய அமுதைப் பருகிப் பருகி*என்
மாயப் பிறவி மயர்வறுத் தேனே

மூன்றாம் பாட்டில் – எம்பெருமானைத் தனக்கு இனிதாக பு4ஜியா நிற்கச்செய்தே ஸாம்ஸாரிக ஸகல து3:க்க2மும் போயிற்று என்கிறார்.

வ்யா:-  (ஆயர் என்று தொடங்கி) ஆயர் உளராகத்தானும் தன்மை யையுடையனாய், அவர்களது ஏதேனும் ஒரு த்3ரவ்யத்தாலல்லது த4ரியா மையாலே, வெண்ணெய் களவுகாணப்புக்கு அகப்பட்டு, தாயிற்காட்டி லும் பரிவரான ஊரிலுள்ளாரெல்லாராலும் புடையுண்ணும் ஆஶ்சர்யத் தையுடையனாய், ஆஶ்ரிதராலே நெருக்குண்கையாலே பெருவிலைய னான தன் திருவழகை எனக்கு அநுப4விக்கத் தந்தவனை.  (தூய அமுதை என்று தொடங்கி) நியமங்களும் வேண்டாதே, அதி4காரிதான் ஆரேலுமாக வுமாய், ஸர்வதா3 ஸேவ்யமுமாய், ஸம்ஸாரத்தைப் போக்குமதுவுமாயிரு க்கிற ஶுத்3தி4யையுடைய அம்ருதத்தை மேன்மேலெனப்பருகி, ஸம்ஸார த்தில் பிறக்கையாலே ஸஞ்சிதமான அஜ்ஞாநாதி3களையெல்லாம் போக்கினேன்.

நான்காம் பாட்டு

மயர்வற என்மனத்தே மன்னினான் தன்னை*
உயர்வினை யேதரும் ஒண்சுடர்க் கற்றையை*
அயர்வில் அமரர்கள் ஆதிக் கொழுந்தைஎன்
இசைவினை என்சொல்லி யான்விடு வேனோ?

அவ:- நாலாம் பாட்டில் – தன் படியைக் காட்டி என்னை இசைவித்து ‘அயர்வறும் அமரர்களோடு கலக்குமாபோலே என்னோடு கலந்த மஹோபகாரகனை எனக்கு விட உபாயமுன்டோ? என்கிறார்.

வ்யா:-  (மயர்வற என்று தொடங்கி) அஜ்ஞாநமெல்லாம் போம்படி ஒரு நாளும் மாறாதே என் நெஞ்சிலே இருந்து, எனக்கு மேன்மேலென உச்ச்2ராயத்தைத்தந்து, அது தன் பேறாகக்கொண்டு, அத்தாலே விடவிள ங்காநின்றுள்ள அழகையுடையவனை.  “ஒண்சுடர்க் கற்றை என்று – தம்மை வஶீகரிக்கைக்கு அடியான அழகைச் சொல்லுகிறது” என்றும் சொல்லுவர்.  (அயர்வு என்று தொடங்கி) ப43வத்3 விஷயத்தில் விஸ்மரணம் இல்லாத அமரர்களுடைய ஸத்தாதி3களுக்கு ஹேதுவாய், ப்ரதா4நமாய் வைத்து, எனக்குத் தன்னை அநுப4விப்போம் என்னும் இசைவைப் பிறப்பித்தவனை.

ஐந்தாம் பாட்டு

விடுவேனோ என் விளக்கைஎன் னாவியை*
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதனை*
தொடுவே செய்து இள வாய்ச்சியர் கண்ணினுள்*
விடவேசெய்து விழிக்கும் பிரானையே?

அவ:- அஞ்சாம் பாட்டில் – தன்னை அறியாதே மிகவும் அந்யபரனா யிருக்கிற என்னை, தன் திருக்கண்களின் அழகாலே இடைப் பெண்களை அகப்படுத்திக்கொண்டாற் போலே நிர்ஹேதுகமாக விஷயீகரித்தவனை விட உபாயமுண்டோ? என்கிறார்.

வ்யா:-  (என் விளக்கை என்று தொடங்கி) ஸ்வவிஷயாஜ்ஞாநாந்த4 காரம் எல்லாம் நீங்கும்படி தன்னுடைய கல்யாணகு3ணங்களை ப்ரகாஶி ப்பித்து, நான் மிகவும் அந்யபரனாயிருக்கச்செய்தே நிர்ஹேதுகமாய் வந்து, ஸ்வவிஷய ஜ்ஞாந விஸ்ரம்ப44க்திகளைப் பிறப்பித்து உஜ்ஜீவிப் பியாநின்று கொண்டு என்னை அடிமை கொண்டவனை.  (தொடுவே செய்தென்று மேலுக்கு) நவநீதாதி3களைக் களவுகண்டு “இவன் களவு கண்டான்” என்று முறையிட வந்த இளவாய்ச்சியர்க்கு மறுநாக்குக் கொடுக்க வொண்ணாதபடி, வேறொருவருக்கும் தெரியாதே அவர்கள் கண்ணுள்ளே படும்படியாக விடவே பண்ணி நோக்கி அடிமை கொண்ட வனை.  கண்ணினுள் விடவே செய்து விழிக்கும் – கண்ணினுள்ளே தூ3தராக விழிக்கும் என்றுமாம்.  விடவு – விடருடைய செயல்.  விடவே செய்து விழிக்கை – ஸவிலாஸமாக நோக்குகை என்றுமாம்.

ஆறாம் பாட்டு

பிரான் பெருநிலம் கீண்டவன்பின்னும்
விராய் மலர்த்துழாய் வேய்ந்த முடியன்*
மராமரம் எய்த மாயவன்என்னுள்
இரானெனில் பின்னை யானொட்டு வேனோ?

அவ:- ஆறாம் பாட்டில் – அவனேதான் விடில் செய்வதென்? என்னில்; தன்னுடைய தி3வ்யசேஷ்டிதங்களாலே என்னைத் தோற்பித்து என்னோடே கலந்தவனை நான் விட ஸம்வதி3ப்பேனோ? என்கிறார்.

வ்யா:-  (பிரான் என்று தொடங்கி) தொடுக்கப்பட்டுப் பரிமளத்தை யும் செவ்வியையுமுடைய திருத்துழாயாலே அலங்க்ருதமான திருமுடி யையுடையனாய், ப்ரளயார்ணவமக்3நையான பூ4மியை எடுப்பதும் செய்து, ஆஶ்ரிதர் ஏவிற்றுச்செய்து அவர்கள் பக்கலிலே வ்யாமுக்3த்4 னாய், இச்செய்ல்களாலே என்னை அடிமை கொண்டவன்.  விராய் மலர்த்துழாய் – பூக்கள் விரவின துழாய் என்றுமாம்.

ஏழாம் பாட்டு

யானொட்டி யென்னுள் இருத்துவ மென்றிலன்*
தானொட்டி வந்து என் தனிநெஞ்சை வஞ்சித்து*
ஊனொட்டி நின்று என் னுயிரில் கலந்(து)* இயல்
வானொட்டு மோஇனி யென்னை நெகிழ்க்கவே?

அவ:- ஏழாம் பாட்டில் – எனக்கு இசைவின்றிக்கேயிருக்கத் தானே வருந்தித்தன் திருவடிகளிலே சேர்த்துக்கொண்டவன், நான் போவேன் என்னிலும் என்னைப் போகவிடான் என்கிறார்.

வ்யா:-  (யான் ஒட்டி என்று தொடங்கி) நான் இசைந்து ஹ்ருத3யத் திலே இருத்துவேன் என்றிலேன்; தானே இருப்பானாக ப்ரதிஜ்ஞை பண்ணிக்கொடு வந்து அவிதே4யமான என்னுடைய நெஞ்சைத் தன்னு டைய கல்யாண கு3ணங்களைக்காட்டி என்னையறியாமே அகப்படுத்தி.  (ஊன் ஒட்டி என்று தொடங்கி) என்னுடைய தே3ஹத்தையே நிரதிஶய போ4க்3யமாகப் பற்றி, விடாதே நின்று, என் ஆத்மாவோடே கலந்து அக்கலவியாலல்லது செல்லாத தன்மையையுடையவன்.

எட்டாம் பாட்டு

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நல்நெஞ்சந்
தன்னைஅகல்விக்கத் தானும்கில் லான்இனி*
பின்னை நெடும்பணைத் தோள்மகிழ் பீடுடை*
முன்னை அமரர் முழுமுதலானே

வ்யா:- எட்டாம் பாட்டில் – என்னை ஒரு படி விடுவித்தானாகிலும், அயர்வறும் அமரர்கள் ஸேவிக்க, நப்பின்னைப் பிராட்டியோடு கூட இருந்தருளின அழகைக்கண்டு அடிமை புக்க என் நெஞ்சை ஸர்வஶக்தி யான தானும் தன்பக்கல் நின்றும்; இனி விடுவிக்கமாட்டான் என்கிறார்.  (பின்னை என்று மேலுக்கு) நப்பின்னைப் பிராட்டியுடைய நெடியதாய்ப் பணைத்திருந்துள்ள தோளை அநுப4விக்கைக்கீடான முதன்மையுடைய னாகை.  பணைத்தோள்- வேய்போலேயிருந்த தோள் என்றுமாம்.

ஒன்பதாம் பாட்டு

அமரர் முழுமுதல் ஆகிய ஆதியை*
அமரர்க்கு அமுதீந்த ஆயர் கொழுந்தை*
அமர வழும்பத் துழாவிஎன் னாவி*
அமரத் தழுவிற்று இனி அகலுமோ?

அவ:- ஒன்பதாம் பாட்டில் – தாம் அவனோடு கலந்த கலவியின் மிகுதியால் விஶ்லேஷ ஸம்பா4வநையில்லை என்கிறார்.

வ்யா:-  (அமரர் என்று தொடங்கி) அயர்வறும் அமரர்களுக்கு எல்லாம் தானே காரணமாயிருப்பானாய், இஜ்ஜக3த்துக்கும் காரணமாய், க்ஷுத்3ரமான ப்ரயோஜநங்களை வேண்டின ப்3ரஹ்காதி3களுக்கும் அவர்கள் அபேக்ஷிதங்களை கொடுப்பது செய்து, இடைச்சாதியில் வந்து, அவர்கள் உளராகத் தானும் உளனானவனை.  (அமர என்று தொடங்கி) மிகவும் நெருங்கக் கலசி, என் ஆத்மா ஒருவராலும் பிரிக்க வொண்ணாத படி ஸம்ஶ்லேஷித்தது.

பத்தாம் பாட்டு

அகலில் அகலும் அணுகில் அணுகும்*
புகலும் அரியன்  பொருவல்லன் எம்மான்*
நிகரில் அவன்புகழ் பாடி இளைப்பிலம்*
பகலும் இரவும் படிந்து குடைந்தே

அவ:- பத்தாம் பாட்டில் – என்னோடு கலந்த எம்பெருமானுடைய கு3ணங்களைக் காலதத்வமுள்ளதனையும் அநுப4வித்தாலும் த்ருப்தனா கிறிலேன் என்கிறார்.

வ்யா:-  (அகலில் என்று தொடங்கி) தன்னை ஆஶ்ரயித்து ப்ரயோ ஜநாந்தரங்களைக்கொண்டு போகில், தான் இழவாளனாய்க்கொண்டு அகலும் ஸ்வபா4வனாய், அவர்களே அநந்ய ப்ரயோஜநராகில், நிரதிஶயா பி4நிவேஶத்தோடேகூட ஸம்ஶ்லேஷிகும் ஸ்வபா4வனாய், ப்ரதிகூலர்க்கு அணுகவொண்ணாதானாய், ஸமாஶ்ரயணோந்முக2ராயிருப்பார்க்கு ஒரு தடையின்றியே எளியனுமாய், இந்நீர்மைகளினாலே என்னை அடிமை கொண்டவன்.  (நிகரில் என்று தொடங்கி) ஒப்பில்லாத அவன் கு3ணங்களிலே மிகவும் அவகா3ஹித்து நிரந்தரமாகப் பாடி இனிமையின் மிகுதியாலே விடவும் மாட்டுகிறிலேன்.

பதினொன்றாம் பாட்டு

*குடைந்துவண் டுண்ணுந் துழாய்முடி யானை*
அடைந்த தென்குரு கூர்ச்சட கோபன்*
மிடைந்த சொல்தொடை ஆயிரத்து இப்பத்து*
உடைந்து நோய்களை ஓடு விக்குமே

அவ:- நிக3மத்தில் – இத்திருவாய்மொழி ப4க்திக்கு ப்ரதிப3ந்த4க மான ஸகல து3ரிதங்களையும் உந்மூலிதமாக்கும் என்கிறார்.

வ்யா:-  (குடைந்து என்று தொடங்கி) வண்டுகள் முழுகி மது4பாநம் பண்ணின திருத்துழாயைத் திருமுடியிலே உடையனாகையாலே நிரதிஶயபோ4க்3யனாயுள்ளவனை அவ்வண்டுகள் திருத்துழாயிலே மது4 வுக்குப் படிந்தாற்போலே அநந்யார்ஹராம்படி ஆக்ருஷ்டரான ஆழ்வாரு டைய சொல் செறிந்த தொடையையுடைய ஆயிரத்து இப்பத்து.

நஞ்சீயர் திருவடிகளேரணம்

 

எட்டாம் திருவாய்மொழி
ஓடும்புள்: ப்ரவேஶம்

 

அவதாரிகை    1-8

ஓடும்புள்ப்ரவேசம்

எட்டாம் திருவாய்மொழியில் – முக்தரும் பத்34ருமான சேதநர்க்கும் தனக்கும் ஸம்ஶ்லேஷம் பிறக்கும்போது இரண்டத்தொருதலை ப4வ்யமா கவேணும்; ப4வ்யமாமிடத்தில், அவர்களைத் திருத்துவதிற்காட்டில் தான் அவர்களுக்குப் பாங்காகை ஸுக2மாகையாலே, மேடான ஸ்த2லத்துக்கு நீர் அபேக்ஷையானால் விரகாலே நீரை மேட்டிலே ஏற்றுமாபோலே, தன்னு டைய ஸ்வரூப ரூப சேஷ்டிதாதி3களை ஸங்கோசித்து அவர்களுக்குத் தன்னைப் பாங்காக்கி அவர்களோடே கலக்கும் என்கிறார்.

முதல் பாட்டு

ஓடும் புள்ளேறி*
சூடும் தண்டுழாய்*
நீடு நின்றவை*
ஆடு மம்மானே

அவ:-  முதற் பாட்டில் –  நித்யஸித்34ரோடு எம்பெருமான் கலக்கும் படி பேசுகிறார்.

வ்யா:-  (ஓடும் என்று தொடங்கி) பெரிய திருவடிக்குத் தன்னை வஹிக்கை அபேக்ஷிதமானால் அவன் மேலே ஏறி ஸஞ்சரிக்கும்; திருத்துழாய் செவ்வியழியாமே சூடவேண்டும் த3ஶையறிந்து சூடும்.  (நீடு என்று தொடங்கி) ஸர்வேஶ்வரன் காலமுள்ளதனையும் மிகவும் அத்தோடு ஸாத3ரமாக ஸம்ஶ்லேஷிக்கும்.

இரண்டாம் பாட்டு

அம்மா னாய்ப்பின்னும்*
எம்மாண் புமானான்*
வெம்மா வாய்கீண்ட*
செம்மா கண்ணனே

அவ:-  இரண்டாம் பாட்டில் –  ஸம்ஸாரத்தில் ஸமாஶ்ரிதரானா ரோடு ஸம்ஶ்லேஷிக்கும்படியை அருளிச்செய்கிறார்.

வ்யா:-  (அம்மானாய் என்று தொடங்கி) கீழ்ச்சொன்ன நித்ய விபூ4தியை உடையனாய் அதின்மேலே எல்லா மாண்பையும் உடையனா னான்; “மாண்பு” என்று திருவவதாரங்களைச் சொல்லுகிறது.  (வெம்மா என்று தொடங்கி) கொடியனான கேஶியின் வாயை அநாயாஸேந பிளந்த ப்ரீதியாலே சிவந்து மலர்ந்த திருக்கண்களை உடையான்.

மூன்றாம் பாட்டு

கண்ணா வானென்றும்*
மண்ணோர் விண்ணோர்க்கு*
தண்ணார் வேங்கட*
விண்ணோர் வெற்பனே

அவ:-  மூன்றாம் பாட்டில் –  ப3த்34முக்தகோடி த்3வயத்தோடும் ஸம்ஶ்லேஷிக்கைக்கு ஈடாகத் திருமலையிலே வந்து நின்றருளினான் என்கிறார்.

வ்யா:-  (கண்ணென்று தொடங்கி) ஸம்ஸாரிகளுக்கும் நித்யஸித்3 4ருக்கும் என்றும் கண்ணாகைக்காக; கண்ணாமவன் என்றுமாம்.  (தண் ணென்று தொடங்கி) ரக்ஷணீய ஜந்துக்களுக்கு ப்ரத்யாஸந்நமாகையாலே ஈஶ்வரனுக்கு ஶ்ரமஹரமாய் அயர்வறும் அமரர்களுக்குப் பரமப்ராப்ய மான திருமலையிலே நின்றருளினான்.

நான்காம் பாட்டு

வெற்பை யொன்றெடுத்து*
ஒற்க மின்றியே*
நிற்கு மம்மான்சீர்*
கற்பன் வைகலே

அவ:-  நாலாம் பாட்டில் –  கோ3வர்த்34நோத்34ரணம் பண்ணின வனுடைய கு3ணத்தை என்றும் அநுப4விப்பேன் என்கிறார்.

வ்யா:-  (வெற்பை ஒன்று எடுத்து இத்யாதி3) அப்போதைக்கு எட்டிற் றொரு மலையெடுத்து.  (ஒற்கம் இன்றியே என்று மேலுக்கு) இளைப்பு இன்றியே நிற்பதும் செய்து, கோ3வர்த்34நோத்34ரணோபகாரத்தாலே ஜக3த்திலுள்ளாரையெல்லாம் அடிமை கொண்டவனுடைய கு3ணங்களை என்றும் சொல்லுவன்.

ஐந்தாம் பாட்டு

வைகலும்வெண்ணெய்*
கைகலந்துண்டான்*
பொய்கலவாதென்*
மெய்கலந்தானே

அவ:-  அஞ்சாம் பாட்டில் –  தன்னுடைய கு3ணகீர்த்தநோபக்ரமத் திலே, தம் பக்கல் எம்பெருமான் அபி4நிவிஷ்டனானபடியை அருளிச் செய்கிறார்.

வ்யா:-  (வைகலும் என்று தொடங்கி) நாடோறும் வெண்ணெய் களவு காணப்புக்க அபி4நிவேஶாதிஶயத்தாலும் மௌக்3த்4யத்தாலுமாக இரண்டு கையாலும் வெண்ணெய் விழுங்குமவன்.  (பொய் என்று தொடங்கி) அப்படியே ததே3க தா4ரகனாய்க்கொண்டு என்னுடம்பிலே கலந்தான்.

ஆறாம் பாட்டு

கலந்தென் னாவி*
நலங்கொள் நாதன்*
புலன்கொள் மாணாய்*
நிலம்கொண் டானே

அவ:-  ஆறாம் பாட்டில் –  தம்மோடு கலந்த எம்பெருமான் தம்மை அநந்யார்ஹமாக்கிக்கொண்டபடியை ஸநித3ர்ஶநமாகச் சொல்லுகிறார்.

வ்யா:-  (கலந்து என்று தொடங்கி) என்னோடே ஸம்ஶ்லேஷித்து, என் ஆத்மாவில் நன்மையைக் கொண்டு, என்னையாளுங்கொண்டான்.  (புலன் என்று தொடங்கி) ஸர்வேந்த்3ரியாபஹாரக்ஷமமான குறள் வடிவைக் காட்டி மஹாப3லியில் நிலங்கொண்டாற்போலே.

ஏழாம் பாட்டு

கொண்டா னேழ்விடை*
உண்டா னேழ்வையம்*
தண்டா மஞ்செய்துஎன்
எண்தா னானானே

அவ:-  ஏழாம் பாட்டில் –  தன் விஷயத்தில் என்னுடைய மநோரத2 த்தை, என்பக்கலிலே தான் பண்ணினான் என்கிறார்.

வ்யா:-  (கொண்டான் என்று தொடங்கி) நப்பின்னைப் பிராட்டியோ ட்டை ஸம்ஶ்லேஷ விரோதி4யான எருதேழையும் கொன்றான்; ஜக3த்தை யடையத் திருவயிற்றிலே வைத்துக்கொண்டான்; இதுக்குக் கருத்து – தம் முடைய ஸம்ஶ்லேஷ விரோதி4களைப்போக்கி, ஜக3த்துக்குத் தன்னை யொழியச் செல்லாதாப்போலே தம்மை யொழிய எம்பெருமானுக்குச் செல்லாது – என்று.  (தன் தாமம் செய்து) பரமபத3த்திற்பண்ணும் வ்யா மோஹத்தைப் பண்ணி நான் நினைத்தபடி செய்தான் என்றுமாம்.

எட்டாம் பாட்டு

ஆனா னானாயன்*
மீனோ டேனமும்*
தானா னானென்னில்*
தானாயசங்கே

அவ:-  எட்டாம் பாட்டில் –  ஸர்வேஶ்வரன் என்பக்கலுண்டான ஸங்கா3திஶயத்தாலே தே3வமநுஷ்யாத்3யநேகாவதாரங்களைப் பண்ணி யருளினான் என்கிறார்.

வ்யா:-  “(என்னில் தானாய சங்கே) ஸர்வேஶ்வர்னாயிருந்து வைத்து, எனக்காகப் பண்ணின திருவவதாரத்துக்கு எண்ணில்லை” என்றும் சொல்லுவர்.

ஒன்பதாம் பாட்டு

சங்கு சக்கரம்*
அங்கை யிற்கொண்டான்*
எங்கும் தானாய*
நங்கள் நாதனே

அவ:-  ஒன்பதாம் பாட்டில் – ஆஶ்ரிதரோடு ஸம்ஶ்லேஷிக்கைக் காக எங்கும் வந்து திருவவதாரம் பண்ணும்போது தன்னுடைய ஐஶ்வர மான சிஹ்நங்களைக்கொண்டு வந்து திருவவதாரம் பண்ணியருளும் என்கிறார்.

வ்யா:-  (எங்கும் என்று தொடங்கி) பலவிடத்திலும் தே3வமநுஷ் யாதி3 ரூபேண வந்து திருவவதாரம் பண்ணியருளி எங்களை வஶீகரித்து அடிமைகொண்டவன்.  (எங்கும் தானாய) வ்யாப்தியாகவுமாம்.

பத்தாம் பாட்டு

நாதன் ஞாலங்கொள்*
பாதன் என்னம்மான்*
ஓதம் போல்கிளர்*
வேத நீரனே

அவ:-  பத்தாம் பாட்டில் – எம்பெருமானுடைய படி வேதை3க ஸமதி43ம்யம் என்கிறார்.

வ்யா:-  (நாதன் என்று தொடங்கி) ஸர்வேஶ்வரனாய்வைத்து த்ரை விக்ரமமான படியைக்காட்டி என்னை அடிமைகொண்டவன்.  (ஓதம் என்று தொடங்கி) தன் கு3ணாநுஸந்தா4நத்தாலே ஓதம்போலே கிளரா நின்றுள்ள வேத3ங்களாலே ப்ரதி பாத்3யமான நீர்மையுடையவன்.

பதினொன்றாம் பாட்டு

*நீர்புரை வண்ணன்*
சீர்சட கோபன்*
நேர்த லாயிரத்து*
ஓர்த லிவையே

அவ:-  நிக3மத்தில் – இத்திருவாய்மொழி, எல்லாத் திருவாய்மொழி யிலும் ஆராய்ந்து சொல்லப்பட்டது என்கிறார்.

வ்யா:-  (நீர்புரை வண்ணன் சீர்) உபாயஜ்ஞர்க்கு நினைத்தவிடத் திலே கொடுபோகலான நீரின் தன்மையையுடையவனுடைய கு3ணத்தை.  நேர்தல் – சொல்லுகை.  ஓர்தல் – ஒப்பன என்னவுமாம்.

நஞ்சீயர் திருவடிகளேரணம்

 

ஒன்பதாம் திருவாய்மொழி
இவையும்: ப்ரவேஶம்

 

அவதாரிகை    1-9

இவையும்ப்ரவேசம்

ஒன்பதாம் திருவாய்மொழியில் – தன்னுடைய விபூ4திஶ்ரவணத்தாலே ஸஞ்ஜாத ப4க்திகனாய், ஏவம்வித4னான தன்னை ஸாக்ஷாத்கரித்து அநுப4விக்கவேணும் – என்ற அர்ஜுநனுக்கு அதுக்கீடான தி3வ்ய சக்ஷுஸ் ஸைக் கொடுத்தருளி, அதிவிஸ்மயகரமான வைஶ்வரூபயத்தைக் காட்டி அவனை உஜ்ஜீவிப்பித்தருளினாற்போலே, ஸர்வேஶ்வரனாய், ஶ்ரிய:பதி யாய், பரமரஸிகனாய், ஆழ்வார்ப4க்தியிலே துவக்குண்டு அவரோடு ஏக ரஸனான எம்பெருமான், கீழில் திருவாய்மொழியில் சொன்ன ஆர்ஜவ கு3ணாநுஸந்தா4நத்தாலே பிறந்த ப4க்த்யாரோக்3யத்தையுடைய ஆழ்வாருக்கு, மஹிஷீ பரிஜநாதி3ரூபத்தாலே பல வகைகளாலும் தனக்கு போ4க்தாக்களானவர்களுக்கு நிரதிஶய போ4க்3யமான தன்னுடைய படி களைக் காட்டி, அவர்கள் எல்லாரோடுங்கூட ஸம்ஶ்லேஷிக்கும் ஸம்ஶ்லே ஷத்தை, அநாதி3காலம் தாம் இழந்த இழவெல்லாம் தீரும்படி ஸர்வேந்த்3 ரியங்களாலும், ஸர்வகா3த்ரங்களாலும் யதா2மநோரத2ம் தமக்கு ஸாத்மி க்கும்படி தம்மோடே ஸம்ஶ்லேஷிக்க, அத்தை அநுப4வித்து ப்ரீதராகிறார்.

முதல் பாட்டு

*இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்*
எவையும் யவரும்தன் னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்*
அவையுள் தனிமுதல் எம்மான் கண்ண பிரான்என் னமுதம்*
சுவையன் திருவின் மணாளன் என்னுடைச் சூழலு ளானே

அவ:-  முதற் பாட்டில் –  ஜக3த்தினுடைய ஸ்ருஷ்ட்யாதி3 ஹேது வாய், ஸர்வாந்தராத்மதயா நின்று அவற்றுக்கு தா4ரகனாய், ஶ்ரிய:பதி யாய், பரமரஸிகனாய், எனக்கு போ4க்3யபூ4தனாய், எனக்கு நாத2னா யுள்ள க்ருஷ்ணனானவன், என்தனக்குத் தன்னோட்டை ஸம்ஶ்லேஷ ரஸத்தைத் தந்தருளுகைக்காக என்னுடைய பர்யந்தங்களிலே வந்து வர்த்தியாநின்றான் என்று ஹ்ருஷ்டராகிறார்.

வ்யா:-  (இவையும் அவையும்) சேதநாசேதநங்களை எல்லாவற்றை யும்.  (தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்) ஸம்ஹரித்துத் தன்னு டைய த3யையாலே அவற்றை உண்டாக்கி, அவற்றினுடைய ரக்ஷணத்தை யும் பண்ணுமவன்.

இரண்டாம் பாட்டு

சூழல் பலபல வல்லான் தொல்லையங் காலத்து உலகைக்*
கேழலொன் றாகி யிடந்த கேசவன் என்னுடை அம்மான்*
வேழ மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ண லரியான்*
ஆழ நெடுங்கடல் சேர்ந்தான் அவனென் னருகலி லானே

அவ:- இரண்டாம் பாட்டில் –  ப்3ரஹ்மேஶாநாதி3களுடைய வாங்மந ஸ்ஸுக்களுக்கும் அபூ4மியாயிருந்துவைத்து, அவர்களுக்காக க்ஷீரார்ண வஶாயியாய், தன்னுடைய திருவவதாரங்களாலும் கு3ணசேஷ்டிதங்களா லும் வஶீகரித்து, என்னைத் தனக்கு அடிமையாக்கிக்கொண்டவன், எனக்குத் தன்னோட்டை ஸம்ஶ்லேஷ ரஸம் தருகைக்காக என் அருகே வந்து நின்றான் என்று த்ருப்தராகிறார்.

வ்யா:-  (சூழல் என்று தொடங்கி) சேதநரையெல்லாம் தன் பக்கலிலே அகப்படுத்திக்கொள்ள வல்லவான பா திருவவதாரங்களைப் பண்ணவல்லனாய், வராஹ கல்பத்துக்கு முதலாய், தான் திருவவதரிக்கக் கடவனாகையாலே அழகிதான காலத்திலே, ப்ரளயார்ணவ மக்3நமான பூ4 லோகத்தை அதிவிலக்ஷணமான அழகையுடைய ஸ்ரீவராஹமாய் அநாயா ஸேந எடுத்தருளி, ஆர்த்3ரமாய், அதிஸுந்த4ரமான கேஶ பாஶத்தையுடை யவன்.  (வேழ மருப்பை ஒசித்தான்) குவலயாபீட3த்தினுடைய கொம்யை அநாயாஸேந பிடுங்கினவன்.

மூன்றாம் பாட்டு

அருகலி லாய பெருஞ்சீர் அமரர்க ளாதி முதல்வன்*
கருகிய நீலநன் மேனி வண்ணன்செந் தாமரைக் கண்ணன்*
பொருசிறைப் புள்ளுவந் தேறும் பூமக ளார்தனிக் கேள்வன்*
ஒருகதி யின்சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே

அவ:- மூன்றாம் பாட்டில் – மஹிஷீப்ரப்4ருதிகள், ஒரோ வகைக ளாலே தன்னோடு ஸம்ஶ்லேஷரஸம் பெறுமாபோலேயன்றிக்கே, எல்லா வகைகளாலும் உள்ள ஸம்ஶ்லேஷ ரஸத்தை எனக்குத் தந்து, என்னை ஒரு காலும் விடாதபடியானான் என்கிறார்.

வ்யா:-  (அருகலில் என்று தொடங்கி) ஹேயப்ரத்யநீக கல்யாண மஹாகு3ணனாய், அயர்வறும் அமரர்களுடைய ஸ்வரூப் ஸ்தி2த்யாதி3க ளுக்கும் போஷணதி3களுக்கும் காரணமாய், கறுத்து நெய்த்து விலக்ஷண மான திருவுடம்பில் நிறத்தையுடையான்.  (பொருசிறை என்று தொடங்கி) தன்னுடைய விஷயீகாரத்தாலே பிறந்த ஹர்ஷப்ரகர்ஷத்தாலே / பற்றி நின்றுள்ள திருச்சிறகையுடைய பெரியதிருவடி மேலே ப்ரீதனாய்க் கொண்டு ஏறுவதுஞ்செய்து பெரியபிராட்டியாருக்கு நாயகன் என்னும் வைலக்ஷண்யத்தையுடையான்.  அருகல் – க்ஷயிக்கை.

நான்காம் பாட்டு

உடனமர் காதல் மகளிர் திருமகள் மண்மகள் ஆயர்
மடமகள்என்றிவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே*
உடனவை ஒக்க விழுங்கி ஆலிலைச் சேர்ந்தவன் எம்மான்*
கடல்மலி மாயப் பெருமான் கண்ணன்என் ஒக்கலை யானே

அவ:- நாலாம் பாட்டில் – ஸர்வேஶ்வரனாய், அத்யாஶ்சர்யபூ4த னாய், எனக்கு ஸ்வாமியான க்ருஷ்ணன் என் ஒக்கலையிலே வந்திருந் தான் என்று ப்ரீதராகிறார்.

வ்யா:-  (உடன் அமர் காதல் மகளிர்) அவனோடு நிரந்தர ஸம்ஶ்லே ஷாதி ரஸத்தையுடைய பிராட்டிமார்.  (ஆளும் உலகமும் மூன்றே) கீழும் மேலும் நடுவுமுள்ள லோகங்களாதல், த்ரிவித4 சேதநராதல்.  (உடன் அவை ஒக்க விழுங்கி ஆலிலைச் சேர்ந்தவன்) தன் வ்பூ4தியில் ப்ரளயாபத்33த மானவற்றைத் தரம் பாராதே ஒருகாலே விழுங்கி ஆலிலையிலே கண்வள ர்ந்தருளினவன்.  (கடல் மலி மாயப்பெருமான்) கடலில் மிக்கிருந்துள்ள ஆஶ்சர்யங்களையுடைய ஸர்வேஶ்வரன்.

ஐந்தாம் பாட்டு

ஒக்கலை வைத்து முலைப்பா லுண்ணென்று தந்திட வாங்கி*
செக்கஞ் செகஅன்று அவள்பால் உயிர்செக உண்ட பெருமான்*
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக*
ஒக்கவும் தோற்றிய ஈசன் மாயன்என் நெஞ்சினுளானே

அவ:- அஞ்சாம் பாட்டில் – ப்3ரஹ்மேஶாநாதி3களுக்குங்கூட ஜநகனான ஈஶ்வரன் என்னுடைய ப்ரதிப3ந்த4கங்களெல்லாம் போக்கி என் நெஞ்சிலே வந்து புகுந்தான் என்கிறார்.

வ்யா:-  (தந்திட) கொடுக்க.  (செக்கஞ்செக அன்று என்று தொடங்கி) தாய்முகம் பார்த்து முலையுண்ணுமாபோலே திருப்பவளத்தில் சிவப்பு மிகவும் தோற்றும்படி பூதனை முகத்தைப் பார்த்து, அத்த3ஶையிலே அவள் பக்கல் நின்றும் ப்ராணன் போம்படியாக முலையையுண்ட இவ்வுப காரத்தாலே எல்லாரையும் அடிமை கொண்டான்.  (செக்கம் செக) அவன் கருதின தீங்கு வெல்லும்படி என்றுமாம்.  (தோற்றிய) தோற்றுவித்த.  (மாயன்) இப்படியாலே மஹாஶ்சர்யபூ4தன்.

ஆறாம் பாட்டு

மாயன்என் னெஞ்சி னுள்ளான் மற்றும் யவர்க்கும் அதுவே*
காயமும் சீவனும் தானே காலும் எரியு மவனே*
சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசர மல்லன்*
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடைத் தோளிணை யானே

அவ:- ஆறாம் பாட்டில் – ஸர்வாந்தராத்மாவாய், அநாஶ்ரிதர்க்கு து3ர்லப4நனாய், ஆஶ்ரிதர்க்கு ஸுலப4னான எம்பெருமான் வந்து தோளி ணையானானது என்னொருவன் பக்கலிலே பண்ணும் ப்ரஸாதா3திஶயம் என்கிறார்.

வ்யா:-  (மற்றும் யவர்க்கும் அதுவே) நான் பெற்ற பேறு மற்றும் ஆரேனும் பெற்றாருண்டோ? (காயம் என்று தொடங்கி) தே3வாதி ஶரீர பே43ங்களுக்கும், தத3ந்தர்வர்த்திகளான ஆத்மாக்களுக்கும், ஜக3தா3ரம் ப4கமான ப்ருதி2வ்யாதி3 பூ4தங்களுக்கும் அந்தராத்மா தான்; காலும் எரியும் என்று – பூ4தபஞ்சகத்துக்கும் உபலக்ஷணம்.  (சேயன் என்று தொடங்கி) அநாஶ்ரிதர்க்கு அத்யந்த து3ர்லப4னாய், ஆஶ்ரிதர்க்கு அத்யந்த ஸுலப4நாய், எத்தனையேனும் அளவுடையாரேயாகிலும் அநாஶ்ரிதர்க்குத் தன்னை அறியவொண்ணாதபடி ஸம்ஶய விபர்யய ஜ்ஞாநங்களைப்பிறப்பித்து மதிகெடுக்குமவன்.

ஏழாம் பாட்டு

தோளிணை மேலும்நன் மார்பின் மேலும் சுடர்முடி மேலும்*
தாளிணை மேலும் புனைந்த தண்ணந் துழாயுடை யம்மான்*
கேளிணை யொன்றுமி லாதான் கிளரும் சுடரொளி மூர்த்தி*
நாளணைந் தொன்றும் அகலான் என்னுடை நாவினு ளானே

அவ:- ஏழாம் பாட்டில் – என்னோடு ஸம்ஶ்லேஷிக்கைக்காகத் திருத்துழாயாலே திருமேனியெல்லாம் அலங்கரித்துக்கொண்டு, எம்பெருமான் என்னுடைய நாவிலே வந்து புகுந்தான் என்கிறார்.  எனக்கு ஸ்துதிவிஷயமானான் என்றுமாம்.

வ்யா:-  (கேள் இணை ஒன்றும் இலாதான்) தன்னுடைய ஸ்வரூப கு3ணாதி3களுக்குத் திரளவும் தனியும் ஒப்பில்லாதான்; பூர்ணமான ஒப்பில்லாதான் என்றுமாம்.  (கிளரும் சுடர் ஒளிமூர்த்தி) கிளராநின்றுள்ள ஔஜ்ஜ்வல்யத்தையுடைய ஒளியே வடிவாக உடையவன்.  (நாள் அணைந்து ஒன்றும் அகலான்) நாள்தோறும் அணைந்து ஒருகாலும் அகலுகிறிலன்.

எட்டாம் பாட்டு

நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக் கெல்லாம்*
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே*
பூவியல் நால்தடந் தோளன் பொருபடை யாழிசங் கேந்தும்*
காவிநன் மேனிக் கமலக் கண்ணன்என் கண்ணி னுளானே

அவ:- எட்டாம் பாட்டில் – ஸர்வ வித்3யாஸ்த2லங்களுக்கும் ஶப்3தா3 ர்த்த2 ஸம்ப3ந்த4நியமங்களையும், அவற்றினுடைய ஸ்தி2தி ஸம்ஹாரங்க ளையும் பண்ணும் ஸ்வபா4வனான எம்பெருமான், என் கண்ணுள்ளே வந்து புகுந்தான் என்கிறார்; என் கண்ணுக்கு விஷயமானான் என்றுமாம்.

வ்யா:-  (நாவினுள் நின்று மலரும் ஞானக்கலைகளுக்கெல்லாம்) ஜிஹ்வாக்3ரத்திலே விகஸியாநின்றுள்ள வித்3யாஸ்த2லங்களுக்கெல் லாம்.  ஆவியாகிறது – அர்த்த2ம்.  ஆக்கையாகிறது – ஶப்33ம்.  அழிப்போ டளிப்பாவது – வித்3யைகள் கெடாமே காக்கையும், லேக2க தோ3ஷாதி3 களாலே ஸ்வரூபம் அந்யதா24வித்தால் அத்தை ஸம்ஹரிக்கையும்.  (பூவியல் நால்தடந்தோளன்) திருமாலைகளாலே அலங்க்ருதமான நாலு திருத்தோள்களையும் உடையான்.  (பொருபடை என்று தொடங்கி) யுத்34 ஸாத4நமான திருவாழியையும் ஸ்ரீ பாஞ்சஜந்யத்தையும் ஏந்தும் ஸ்வபா4 வனாய், ஒரு சாயல் நெய்தலோடு ஒத்து அதிற்காட்டில் அத்யந்த விலக்ஷ ணமான திருமேனியும், தாமரைப்பூப்போலே இருந்துள்ள திருக்கண்        களையும் உடையான்.

ஒன்பதாம் பாட்டு

கமலக்கண்ணன்என்கண்ணினுள்ளான் காண்பன்அவன்கண்க ளாலே*
அமலங்க ளாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி*
கமலத் தயன்நம்பி தன்னைக் கண்ணுத லானொடும் தோற்றி*
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என்நெற்றியு ளானே

அவ:- ஒன்பதாம் பாட்டில் – ஸர்வஸ்ரஷ்டாவான எம்பெருமான், என் நெற்றியிலே வந்து நின்றான் என்கிறார்.

வ்யா:-  (காண்பன் என்று தொடங்கி) நானும் அவனைக் காணா நின்றேன்; தன்னக் காணவல்லேனாம்படி நிர்த்தோ3ஷனாக என்னை நோக்கியருளாநின்றான்; அவனுடைய திருவழகைக்கண்டு, என் இந்த்3ரி யங்களும் அவனுக்கு ஶரீரவத்3 விதே4ய மாயிற்றன.  (கமலத்தயன் என்று தொடங்கி) கமலாஸநனாய், ப்ரதா4நனான ப்3ரஹ்மாவை லலாட நேத்ர னான ருத்3ரனோடுங்கூடத் தோன்றுவித்து, ஸத்வப்ரசுரரான தே3வர்க ளோடுங்கூட லோகங்களையெல்லாம் உண்டாக்குமவன்.

பத்தாம் பாட்டு

நெற்றியுள் நின்று என்னை யாளும் நிரைமலர்ப் பாதங்கள் சூடி*
கற்றைத் துழாய்முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்*
ஒற்றைப் பிறையணிந் தானும் நான்முக னும்இந் திரனும்*
மற்றை யமரரும் எல்லாம் வந்து எனது உச்சியு ளானே

அவ:- பத்தாம் பாட்டில் – ப்3ரஹ்ம ருத்3ராதி3களுக்கு அற அரியனா யுள்ள எம்பெருமான், தன் திருவடிகளை அவர்கள் கொண்டாடி ஏத்தா நிற்கச்செய்தே அத்தை அநாதி3ரித்து, தான் வந்து என் உச்சியுள்ளே    புகுந்தான் என்கிறார்.

வ்யா:-  (நெற்றியுள் நின்று என்று தொடங்கி) நெற்றியுள்ளே நிற்கிற, என்னை ஆளுகிற, ஒழுங்கான மலர்கள் போலே இருக்கிற திருவடிகளை ஆத3ரித்துத் திருக்குழலில் செவ்வியாலே சாத்தியருளின திருத்துழாய் தழைக்கும்படியான திருமுடியின் அழகையுடைய க்ருஷ்ண னைத் தொழுவார்.

பதினொன்றாம் பாட்டு

*உச்சியுள் ளேநிற்கும் தேவ தேவற்குக் கண்ண பிராற்கு*
இச்சையுள் செல்ல உணர்த்தி வண்குரு கூர்ச்சட கோபன்*
இச்சொன்ன ஆயிரத் துள் இவையுமோர் பத்துஎம்பி ராற்கு*
நிச்சலும் விண்ணப்பம்செய்ய நீள்கழல் சென்னி பொருமே

அவ:- நிக3மத்தில் – இத்திருவாய்மொழியை, எம்பெருமானுக்கு விண்ணப்பஞ்செய்ய, எம்பெருமான் திருவடிகள் அவன் தலையிலே நாடோறும் சேரும் என்கிறார்.

வ்யா:-  (உச்சியுள்ளே நிற்கும் தேவதேவற்கு) தே3வதே3வனாய் வைத்து என் உச்சியுள்ளே நின்றவனுக்கு; என் உச்சியுள்ளே நிற்கையாலே அயர்வறும் அமரர்கள் அதிபதியானான் என்றுமாம்.  (கண்ணபிராற்கு) உள்ளத்திலே படும்படி அமைத்து.

நஞ்சீயர் திருவடிகளேரணம்

 

பத்தாம் திருவாய்மொழி
பொருமாநீள்: ப்ரவேஶம்

v  v  v

அவதாரிகை    1-10

பொருமாநீள்ப்ரவேசம்

பத்தாம் திருவாய்மொழியில் – பு3த்3த்4யாதி3 பதா3ர்த்த2ங்களுக்கெல்லாம் தானே காரணமாகையாலே, ஜ்ஞாந விஶேஷாऽத்3வேஷமென்ன, க3ண னையென்ன, நிரதிஶய ப4க்தியென்ன, இவற்றையெல்லாம் நிரதிஶய மாக எம்பெருமான் தமக்குப் பிறப்பித்துத் தம்மோடே நிரவதி4க ஸம்ஶ் லேஷத்தைப் பண்ணினபடியைக் கண்டு “அத்3வேஷாதி3களுடையா ரோடு, தம்மோடு ஸம்ஶ்லேஷித்தாற்போலே  ஸம்ஶ்லேஷிக்கும்” என்றும், “தான் நினைத்தார்க்கு அவ்வளவுகளைப் பிறப்பிப்பான் தானே” என்றும் அநுஸந்தி4த்து நிர்வ்ருதராகிறார்.

முதல் பாட்டு

*பொருமாநீள்படை ஆழிசங்கத்தொடு*
திருமாநீள்கழல் ஏழுலகும்தொழ*
ஒருமாணிக் குறளாகிநிமிர்ந்தஅக்
கருமாணிக்கம் என்கண்ணுளதாகுமே

அவ:-  முதற் பாட்டில் –  எம்பெருமான் தன்னுடைய ஸௌந்த3ர்ய ஶீலாதி3களைக் காட்டி வஶீகரித்துத் தம்மை அநந்யார்ஹமாக்கித் தம் மோடு உந்மஸ்தகரஸமாக முன்பு கலந்த கலவியை அநுபா4ஷிக்கிறார்.

வ்யா:-  (பொருமா என்று தொடங்கி) எம்பெருமான் பக்கல் பரிவாலே ப்ரதிபக்ஷத்தின்மேலே விழாநிற்பதுஞ்செய்து, எம்பெருமான் வளர்த்திக்குத் தக்கபடி மிகவும் வளராநின்றுள்ள தி3வ்யாயுத4மான திருவாழியோடும், ஸ்ரீ பாஞ்சஜந்யத்தோடும், அழகியதாய், பூஜ்யமாய் வளராநின்றுள்ள திருவடிகளை ஸகலலோகங்களும் கண்டு தொழும்படி.  (ஒரு மாணிக்குறளாகி என்று தொடங்கி) அர்த்தி2தைக்கு ஈடாய், அழகா லே ஆகர்ஷகமான குறள் வடிவாய், தன்னுடைய அபேக்ஷிதம் பெற்ற ப்ரீத் யதிஶயத்தாலே மிகவும் வள்ருவதுஞ்செய்துவிலக்ஷணமான அழகையு டைய எம்பெருமான் அப்படியே எனக்கு வந்து ஸுலப4னானான்.

இரண்டாம் பாட்டு

கண்ணுள் ளேநிற்கும் காதன்மை யால்தொழில்*
எண்ணி லும்வரும் என்இனி வேண்டுவம்*
மண்ணும் நீரும் எரியும்நல் வாயுவும்*
விண்ணு மாய்விரி யும்எம் பிரானையே

அவ:-  இரண்டாம் பாட்டில் –  எம்பெருமான், தன்பக்கல் நிரதிஶய ப4க்தரானவர்களுக்கும், “தான் ஒருவன் உளன்” என்று பரிக3ணித்தார்க் கும் அத்யந்த ஸுலப4னாம் என்ற கு3ணத்தாலே தாம் ஈடுபடுகிறார்.

வ்யா:-  (என் இனி வேண்டுவம்) இங்ஙனே ஆனபின்பு நமக்கு ஒரு குறையில்லை.  (மண்ணும் நீருமென்று மேலுக்கு) இப்படி ஆஶ்ரித ஸம்ரக்ஷணார்த்த2மாகக் கார்யபூ4த ப்ருதி2வ்யாதி3 ஸகலபதா3ர்த்த2 ரூபேண அத்யந்த விஸ்த்ருதனாயுள்ளவன்; ஸர்வேஶ்வரன் என்றுமாம்.  (நல்வாயுவும்) என்கிறது – தா4ரகத்வத்தைப் பற்ற.

மூன்றாம் பாட்டு

எம்பி ரானைஎந் தைதந்தை தந்தைக்கும்
தம்பி ரானைதண் தாமரைக் கண்ணனை*
கொம்ப ராவுநுண் ணேரிடை மார்வனை*
எம்பி ரானைத் தொழாய்மட நெஞ்சமே

அவ:-  மூன்றாம் பாட்டில் –  எம்பெருமானுக்கு ஆஶ்ரித விஷயத் தில் வந்த நீர்மைக்கு அடியான லக்ஷ்மீஸம்ப3ந்த4த்தை அநுஸந்தி4த்து, திருவுள்ளத்தைக் குறித்து, “அவனைத் தொழாய் ப4வ்யமான நெஞ்சே” என்கிறார்.

வ்யா:-  (எம்பிரானை என்று தொடங்கி) என் நாயனை, என்குடி நாயனை என்று ப்ரீத்யதிஶயத்தாலே அருளிச்செய்கிறார்.  (கொம்பராவு நுண்ணேரிடை மார்பனை) வஞ்சிக்கொம்பு போலவும் அரவு போலவும்  நுண்ணிதாய் நேரிதான இடையையுடைய பெரியபிராட்டியாரைத் திருமார்விலே உடையவன்.  கொம்பை லகூ4கரியா நின்றுள்ள இடை என்றுமாம்.  (எம்பிரானை) பிராட்டியோட்டை ஸம்ப3ந்த4த்தை அநுஸந்தி4த்து, ப்ரீத்யா மீளவும் ‘என் நாயனை’ என்கிறார்.

நான்காம் பாட்டு

நெஞ்ச மேநல்லை நல்லைஉன் னைப்பெற்றால்
என்செய் யோம்இனி என்ன குறைவினம்*
மைந்த னைமல ராள்மண வாளனை*
துஞ்சும் போதும் விடாது தொடர்கண்டாய்

அவ:- நாலாம் பாட்டில் –  தம்முடைய நிகர்ஷாநுஸந்தா4நத்தைப் பண்ணி, ‘விஶ்லேஷத்தாலே முடியவேண்டும் த3ஶை வந்தேயாகிலும் அவனை விடாதே பற்று’ என்று திருவுள்ளத்தாய்க் குறித்து அருளிச்செய்கி றார்.

வ்யா:-  (நெஞ்சமே நல்லை நல்லை) ‘அத்யந்த விலக்ஷணமாயிருந் தது உன்படி’ என்று தம்முடைய நெஞ்சைக் கொண்டாடுகிறார்.  (உன்னை என்று தொடங்கி) ப43வத்3விஷயம் என்னில் ப்ரதிகூலியாதே பாங்கா யிருக்கிற உன்னைப் பெற்றால், இனி நமக்கு ஸாதி4க்க முடியாத துண்டோ? நமக்கு இனி என்ன குறையுண்டு? (மைந்தனை என்று தொடங்கி) நித்யமான யௌவநத்தை உடையனாய்.  (மலராள் மணவா ளனை) நிரதிஶய போ4க்3யமான பெரிய பிராட்டியாருக்கு போ4க்தாவா யுள்ளவனை.

ஐந்தாம் பாட்டு

கண்டாயே நெஞ்சே! கருமங்கள் வாய்க்கின்றுஓர்
எண்தானும் இன்றியே வந்தியலு மாறு*
உண்டா னைஉல கேழும்ஓர் மூவடி
கொண்டானை* கண்டு கொண்டனை நீயுமே

அவ:- அஞ்சாம் பாட்டில் – தன் திறத்தில் எண்ணுகைதானுமின் றியே இருக்கச்செய்தே, என்பெருமான் தம்மை ஆகஸ்மிகமாக விஷயீ கரித்தபடியைச் சொல்லுகிறார்.

வ்யா:-  (கருமங்கள் வாய்க்கின்று) ஓரோ ப்ரயோஜநங்கள் நேர் படப் புக்கால்.  இயலுதல் – ப2லிக்கை.  (உண்டானை உலகேழும் ஓர் மூவடி கொண்டானை) இவையிரண்டும் ரக்ஷனத்திலே அபேக்ஷையில்லாதாரை யும் ரக்ஷிக்கும் என்னுமிடத்துக்கு த்3ருஷ்டாந்தம்.  (கண்டுகொண்டனை நீயுமே) வேறே சில த்3ருஷ்டாந்தங்கள் சொல்லவேணுமோ? அபேக்ஷா க3ந்த4 ரஹிதமான நீயுமன்றோ கண்டுகொண்டாய்.

ஆறாம் பாட்டு

நீயும் நானும் இந் நேர்நிற்கில்மேல்மற்றோர்
நோயும் சார்கொடான் நெஞ்சமே! சொன்னேன்*
தாயும் தந்தையு மாய்இவ் வுலகினில்*
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே

அவ:- ஆறாம் பாட்டில் – “இப்படி ஸுலப4னானவன் நம்மை விடா னிறே” என்னில்; “நீயும் நானும் நம் அயோக்3யதையை அநுஸந்தி4த்து ‘அவனோடே ஸம்ஶ்லேஷிப்போமல்லோம்’ என்னாதே இப்படி இசைந்திரு க்கில், நம்மை ஒரு நாளும் விடான்” என்று திருவுள்ளத்தைக் குறித்துச் சொல்லுகிறார்.

வ்யா:-  (மேல் என்று தொடங்கி) மேலுள்ள காலம் ஸ்வஸம்ஶ்லேஷ விரோதி4களையெல்லாம் போக்கி, நம்மோடே ஸம்ஶ்லேஷம் பண்ணும்; நெஞ்சே! இவ்வர்த்த2த்துக்கு என்னை விஶ்வஸித்திரு.  (தாயும் என்று தொடங்கி) தாயும் தமப்பனும்போலே பரிவுடையனாய், இவ்வுலகத்திலே வந்து திருவவதாரம்பண்ணித்தன் வடிவழகைகாட்டித் தானிட்ட வழக்காக்கி அடிமைகொள்ளுகிறவன். ‘ப43வல்லாப4த்துக்கு சேதநர் பக்கல் வேண்டுவது ப்ராதிகூல்ய நிவ்ருத்தியே’ என்று இப்பாட்டுக்குக் கருத்து.

ஏழாம் பாட்டு

எந்தை யேஎன்றும் எம்பெரு மான்என்றும்*
சிந்தை யுள்வைப்பன் சொல்லுவன் பாவியேன்*
எந்தை எம்பெருமான் என்று வானவர்*
சிந்தை யுள்வைத்துச் சொல்லும்செல் வனையே

அவ:- ஏழாம் பாட்டில் – ‘அத்யந்த விலக்ஷணனான எம்பெருமானை, அத்யந்த நிக்ருஷ்டனான நான் வாங்மநஸங்களாலே நினைத்தும் பேசியும் தப்பச்செய்தேன்’ என்று அகலுகிறார்.

வ்யா:- (எந்தையே என்று தொடங்கி) என்தனக்குப் பிரிவன் என்றும், ஸ்வாமி என்றும்.  (எந்தை என்று தொடங்கி) எம்பெருமானை நினைக்கவும் பேசவும் யோக்3யராயுள்ள ‘அயர்வறும் அமரர்கள்’, ஸ்நேஹ யுக்தராய்க்கொண்டு எம்பெருமானை நினைத்து, அது உள்ளடங்காமை யாலே ‘எந்தை எம்பெருமான்’ என்று சொல்ல, அத்தாலே மதிப்பனானவனை.

எட்டாம் பாட்டு

செல்வ(ன்) நாரண னென்றசொல் கேட்டலும்*
மல்கும் கண்பனி நாடுவன் மாயமே*
அல்லும் நன்பக லும்இடை வீடின்றி
நல்கி* என்னை விடான்நம்பி நம்பியே

அவ:- எட்டாம் பாட்டில் – அநர்ஹன் என்று அகன்ற நான், யாத்3ருச்சி2க ப43வந்நாமஶ்ரவணத்தாலே அப3லனாய் அகலமாட்டு கிறிலேன்; எம்பெருமானும் என்னை விரும்பி விடிகிறிலன்; இதொரு விஸ்மயம்! என்கிறார்.

வ்யா:- (செல்வன் நாரணன் என்று) ஸ்ரீமானான நாராயணன்.  (நாடுவன் மாயமே) “அல்லேன்” என்ற நான், என்னுடைய சாபலாதிஶயத் தாலே A”எங்குற்றாய்” என்று தேடாநின்றேன்;  இதொரு ஆஶ்சர்யமிருந்த படியென்! (அல்லும் நன்பகலும் என்று மேலுக்கு) என்னைப் பெறுகை யாலே பரிபூர்ணனான எம்பெருமான், தன்னோட்டை ஸம்ஶ்லேஷத்தாலே நன்றான இரவும் பகலும் இடைவிடாதே என்னை ஸ்நேஹித்து விடுகிறிலன்.

ஒன்பதாம் பாட்டு

நம்பி யைத்தென் குறுங்குடி நின்றஅச்
செம்பொ னேதிக ழும்திரு மூர்த்தியை*
உம்பர் வானவர் ஆதியஞ் சோதியை*
எம்பி ரானைஎன் சொல்லி மறப்பனோ?

அவ:- ஒன்பதாம் பாட்டில் – அவன் விடாதொழிந்தால், நீர் அந்யபர்ராய் அவனை மறந்தாலோ? என்னில்; திருக்குறுங்குடியிலே நின்றருளின நம்பியைக் கண்டு வைத்து மறக்க உபாயமுண்டோ? என்கிறார்.

வ்யா:- (அச்செம்பொன் என்று தொடங்கி) ஓடவைத்த செம்பொன் னின் ஒளிபோலே திகழாநிற்பதுஞ்செய்து ஒருவருடைய வாங்மநஸாதி3 களாலும் பரிச்சே2தி3க்க வொண்ணாதபடியான திருமேனியையுடைய வனை.  (உம்பர் என்று தொடங்கி) ப்3ரஹ்மேஶாநாதி3களிற்கட்டில் அத்யந்த விலக்ஷணரான நித்யஸூரிகளுக்கு ஜீவந ஹேதுவாய், அதி மநோஹரமான தேஜஸ்ஸையுடையனுமாய், அயர்வறும் அமரர்களைப் போலே தானே தா4ரகமாம்படி என்னைப் பண்ணிணவனை.

பத்தாம் பாட்டு

மறப்பும் ஞானமும் நானொன் றுணர்ந்திலன்*
மறக்கு மென்றுசெந் தாமரைக் கண்ணொடு*
மறப்பற என்னுள்ளே மன்னினான் தன்னை*
மறப்ப னோஇனி யான்என் மணியையே

அவ:- பத்தாம் பாட்டில் – வருந்தியாகிலும் அவனை மறந் தாலோ? என்னில், அழகிய திருக்கண்களாலே நோக்கிக்கொண்டு ஒரு நாளும் மறக்கவொண்ணாதபடி என்னுள்ளே நிரந்தரமாக வர்த்திக்கிற வனை, நான் மறக்கும்படி எங்ஙனே? என்கிறார்.

வ்யா:- (மறப்பும் ஞானமும் நானொன்று உணர்ந்திலன்) ஜ்ஞாந மென்று ஒன்றென்றும், மறப்பென்று ஒன்றென்றும் அறிந்திலேன்; அஸத் கல்பன்.  (மறக்குமென்று தொடங்கி) ஏவம்வித4னான எனக்கு அறிவைப் பிறப்பித்து, “இவன் நம்மை மறக்கும்’ என்று பார்த்து.  (என் மணியை) தன்னுடைய திருவழகை எனக்கு போ4க்3யமாம்படி தந்தவனை.

பதினொன்றாம் பாட்டு

*மணியை வானவர் கண்ணனைத் தன்னதோ
ரணியை* தென்குரு கூர்ச்சட கோபன்* சொல்
பணிசெ யாயிரத்துள் இவை பத்துடன்*
தணிவி லர்கற்ப ரேல்கல்வி வாயுமே

அவ:- நிக3மத்தில் – இப்பத்தும் கற்பார் நிரதிஶய புருஷார்த்த2 மான ப43வத் கைங்கர்யத்தைப் பெறுவர் என்கிறார்.  இக்கல்விதானே அமையும் என்றுமாம்.

வ்யா:- (மணியை என்று தொடங்கி) தனக்குத் தானே பூ4ஷண மாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய், ஆஶ்ரயிப்பார்க்கு எளியனா யிருந்துள்ளவனை.  (தென்குருகூர் என்று தொடங்கி) ஆழ்வார்க்கு அத்யந்த விதே4யமாய்ச் சொற்கள் பணிசெய்த ஆயிரத்து இப்பத்தையும்; எம்பெருமானுக்குச் சொல்லாலே ஆழ்வார் பணிசெய்த ஆயிரம் என்று மாம்.  (உடன் என்று தொடங்கி) ஸாபி4ப்ராயமான ஶ்ரத்34தா4நராய்க் கற்பாராகில் கல்வி வாய்க்கும்.

நஞ்சீயர் திருவடிகளேரணம்

திருவாய்மொழி முதற்பத்து ஓன்பதினாயிரப்படி வ்யாக்2யானம் முற்றிற்று.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.