9000 Padi Centum 04

 ஸ்ரீ:

ஆழ்வார் திருவடிகளே ஶரணம்

மதுரகவியாழ்வார் திருவடிகளே ஶரணம்

ஸ்ரீமந்நாதமுனிகள் திருவடிகளே ஶரணம்

எம்பெருமானார் திருவடிகளே ஶரணம்

ப்ரபந்நஜந கூடஸ்த2ரான நம்மாழ்வார் அருளிச்செய்த

திருவாய்மொழி

பரமகாருணிகரான நஞ்சீயர் அருளிச்செய்த

ஒன்பதினாயிரப்படி வ்யாக்2யாநம்

 

நான்காம்பத்துமுதல் திருவாய்மொழி

ஓருநாயகமாய்ப்ரவேசம்

நாலாம்பத்தில், முதல் திருவாய்மொழியில் இப்படி எம்பெருமானை அநுப4வித்து மிகவும் ப்ரீதரான ஆழ்வார், ஹர்ஷப்ரகர்ஷத்தாலே இவனை யொழிய ஐஶ்வர்யாதிகளை ஆசைப்பட்டுள்ளவர்களுக்கு அவற்றினு டைய அல்பாஸ்தி2ரத்வாதி3 தோ3ஷங்க3ளைக் காட்டி ஹேயதையை ஸாதி4யாநின்றுகொண்டு பரமபுருஷார்த்த2பூ4தமான எம்பெருமான் திருவடிகளை ஸமாஶ்ரயியுங்கோள் என்கிறார்.  “வீடுமின்முற்றவும்” – ப43வத் ஸமாஶ்ரயண ப்ரதிபாத3நபரம்.  இத்திருவாய்மொழி – வைராக்3ய ஜநநார்த்த2மாக இதர புருஷார்த்த2ங்களுடைய ஹேயதா ப்ரதிபாத3நபரம்.

முதல் பாட்டு

ஒருநாயகமா யோடவுலகுடனாண்டவர்
கருநாய்கவர்ந்தகாலர் சிதைகியபானையர்
பெருநாடுகாண விம்மையிலேபிச்சைதாங்கொள்வர்
திருநாரணன்தாள் காலம்பெறச்சிந்தித்துய்ம்மினோ.

முதற் பாட்டில், ஸார்வபௌ4மரானவர்கள் ராஜ்யத்தையிழந்து இரந்து ஜீவிக்கும்படி து3ர்க்க3தராவர்.  ஆனபின்பு, நித்யைஶ்வர்யயுக்த னான திருநாராயணனுடைய திருவடிகளையே பரமப்ராப்யமாக ஆஶ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார்.

(ஒருநாயகமாய் என்று தொடங்கி.)  ஏகாதி4பதி3கமாய் நெடுங்காலம் லோகத்தையெல்லாம் ஆண்டவர்கள் ராஜ்யத்தையிழந்து கரியவான நாய்களாலே கவரப்பட்ட கால்களையுடையராய்ப் பொளிந்த பாண்டங்களைக் கொண்டு பண்டு தங்களைக் காண அவஸரம் பெறாத மநுஷ்யரெல்லாம் காணும்படி தாங்கள் ஸம்ருத்த4ராய் வாழ்ந்த இந்த லோகத்திலே பி4க்ஷையை விரும்பிக் கொள்வர். ­­­­­­­­­­­4-1-1.

இரண்டாம் பாட்டு

உய்ம்மின் திறைகொணர்ந்தென்றுலகாண்டவ ரிம்மையே
தம்மின்சுவைமடவாரைப் பிறர்கொள்ளத்ததாம்விட்டு
வெம்மினொளிவெயிற்கானகம்போய்க் குமைதின்பர்கள்
செம்மின்முடித்திருமாலை விரைந்தடிசேர்மினோ.

இரண்டாம் பாட்டில், தங்களாலே அபி4பூ4தரான  ஶத்ருக்களாலே தங்களுடைய மஹிஷிகளையும் இழப்பர் என்கிறார்.

(உய்ம்மின் என்று தொடங்கி.) – ‘எனக்குத் திறையிட்டுப் பிழைத்திருங் கோள்’ என்று ராஜாக்களைச் சொல்லி இந்த உக்திபார்தர்த்தினாலே இந்த லோகத்தையடைய ஆண்டவர் தாங்கள் இப்படி வாழ்ந்த இப்பிறவியிலே தாங்கள் ஜீவிக்கைக்காகத் தங்களுக்கு நிரதிஶய போ4க்3யைக3ளான ஸ்த்ரீகளை ஶத்ருக்கள் பரிக்3ரஹிக்கப் போக்கற்றுத் தாங்களே அவர்களைக் கொண்டுபோகவேணு மென்று ப்ரார்த்தித்துவிட்டு.  (வெம்மின் என்று தொடங்கி) – நாடுகளில் ஸஞ்சரிக்கப்பெறாதே கொடியவெயிலைய்டைய காட்டிலே போய் அங்கும் ஶத்ருக்களால் நலிவுபடாநிற்பர்.  இப்படி பரிபூ4தராகாதே வாழவேண்டியிருந்தி கோளாகில், சிவந்த ஒளியை யுடைய திருவபி4ஷேகத்தை உடையனான ஶ்ரிய:பதியை ஈண்டென ஆஶ்ரயியுங்கோள். ஆஶ்ரயித்தார் தலையிலே வைக்கச் சூடின முடியென்று கருத்து. 4-1-2.

மூன்றாம் பாட்டு

அடிசேர்முடியினராகி அரசர்கள்தாந்தொழ
இடிசேர்முரசங்கள் முற்றத்தியம்பவிருந்தவர்
பொடிசேர்துகளாய்ப்போவர்க ளாதலில்நொக்கெனக்
கடிசேர்துழாய்முடிக் கண்ணன்கழல்கள்நினைமினோ.

மூன்றாம் பாட்டில், மற்றுள்ள ராஜாக்கள் தங்களை ஆஶ்ரயித்து அவர்களை ஒன்றாக மதியாதே வாழ்ந்தவர்கள் அந்த ஐஶ்வர்யத்தை யிழந்து ஒருவரும் மதியாதபடியாவர் என்கிறார்.

(அடிசேர் என்று தொடங்கி.) – தங்கள் காலிலே முடி படும்படியாக அந்ய ராஜாக்கள் வந்து தொழுது க்ருதார்த்த2ராகாநிற்க, இடியிடித்தாற்போலே வாத்3யங்க3ள் முற்றத்திலே த்4வநிக்க இருந்தவர்.  (பொடி என்று தொடங்கி) – க்ஷுத்3ரதூ4ளிபோலே அவதீ4ரணம் பண்ணினோமென்று நினைக்கப்பாத்தம் போராதபடி மதிப்புக்கெடுவர்.  ஆகையாலே, இங்ஙன் எளிவரவுபடாதே பெருமதிப்பு உண்டாம்படி ஸர்வைஶ்வர்ய ஸூசகமாய் த்தன் திருக்குழலின் செவ்வியாலே க்ஷணந்தோறும் பரிமளம் மிகாநின்று ள்ள திருத்துழாயாலே அலங்க்ருதனாய்ப் பரமபோ4க்3யனான க்ருஷ்ணன் திருவடிகளை ஈண்டென நினையுங்கோள். 4-1-3.

நான்காம் பாட்டு

நினைப்பான்புகின் கடலெக்கலின்நுண்மணலிற்பலர்
எனைத்தோருகங்களும் இவ்வுலகாண்டுகழிந்தவர்
மனைப்பால் மருங்கற மாய்தலல்லால் மற்றுக்கண்டிலம்
பனைத்தாள்மதகளிறட்டவன் பாதம்பணிமினோ.

நாலாம் பாட்டில், ஐஶ்வர்யம் ஒன்றுமேயன்று நிலைநில்லா தொழி கிறது, போ4க்தாக்களானவர்களும் ஸபரிகரமாக நஶிப்பர் என்கிறார்.

(எனைத்தோருகங்கள்) – அநேகயுகங்கள்.  (மனைப்பால் என்று தொடங்கி.) – வாழ்ந்த ஸ்த2லமும் அருகும் தெரியாதபடி நசித்துப் போமித்தனை போக்கி ஸ்தி2ரராயிருப்பாரொரு வரையும் கண்டிலோம்.  ஆஶ்ரயண விரோதி4களைப் போக்கும் ஸ்வபா4வனானவனுடைய திருவடிகளை ஆஶ்ரயியுங்கோள். 4-1-4.

ஐந்தாம் பாட்டு

பணிமின்திருவருளென்னும் அஞ்சீதப்பைம்பூம்பள்ளி
அணிமென்குழலா ரின்பக்கலவியமுதுண்டார்
துணிமுன்புநாலப் பல்லேழையர்தாமிழிப்பப்செல்வர்
மணிமின்னுமேனி நம்மாயவன்பேர்சொல்லிவாழ்மினோ.

அஞ்சாம் பாட்டில், அங்க3நாஸம்ஶ்லேஷஸுக2மும் செல்வக்கிடப் புப்போலே அஸ்தி2ரத்வாதி3 தூ3ஷிதம் என்கிறார்.

(பணிமின் என்று தொடங்கி.) – அழகியதாய்க் குளிர்ந்து பரம்பியிருந்து ள்ள பூம்படுக்கைகளிலே யிருந்து ரஸிகத்வத்தின் மிகுதியாலே போ4க்தா வானவன் தான் ‘பணிமின் திருவருள்’ என்று கீழ்மை சொல்லவேண்டும் படி வேண்டற்பாடுடையராய், இவன் கொண்டாட்டத்தை அங்கீகரியாதே குழலைப் பேணாநின்றுள்ள அந்த ஸ்த்ரீகளுடைய அநங்கங்கீகார ப்ரமுக2மான ஸம்ஶ்லேஷாம்ருதத்தைப் பானம் பண்ணினவர்கள்.  ‘பணிமின்திருவருள்’ என்று கீழ்மைசொல்லுகிறார், ஸ்த்ரீகளென்றும் சொல்லுவர்.  (துணி முன்பு என்று தொடங்கி) – ஆச்சா2தி3க்கப் போரா மையாலே துணி முன்பு நாலும்படி க்ருபணராய் இவனைப் பெறாவிடில் செல்லாதபடியான ஸ்த்ரீகள் பலவகைகளாலே உபேக்ஷிக்க, அத்தைப் புத்தி4பண்ணாதே பின்னையும் அவர்களிருந்த இடங்களிலே செல்லா நிற்பர்.  நிரதிஶய போ4க்3யமான திருவழகையும், ஆஶ்ரிதரைவிடில் த4ரிக்கமாட்டாதபடி அதிமாத்ரமாய் நிருபாதி4கமான ஸ்நேஹத்தையு முடையவனென்று ப்ரஸித்த4னான எம்பெருமானுடைய திருநாமத்தை வாயாலே சொல்லி வாழுங்கோள். 4-1-5.

ஆறாம் பாட்டு

வாழ்ந்தார்கள்வாழ்ந்ததுமாமழைமொக்குளின்மாய்ந்துமாய்ந்து
ஆழ்ந்தாரென்றல்லால் அன்றுமுதலின்றறுதியா
வாழ்ந்தார்கள்வாழ்ந்தேநிற்ப ரென்பதில்லைநிற்குறில்
ஆழ்ந்தார்கடற்பள்ளி யண்ணலடியவராமினோ.

ஆறாம் பாட்டில், ஸ்ருஷ்டிகாலம் தொடங்கி இன்றளவும் ஐஶ்வர்ய வான்களாய்க்கொண்டு ஜீவித்தாரொருவரையும் கண்டிலோம் என்கிறார்.

(வாழ்ந்தார்கள் என்று தொடங்கி.) – ஐஶ்வர்யத்தைபெற்று வாழ்ந்தார் ஒரு வருமில்லையோ? என்னில், – வாழ்ந்தவர்கள் வாழ்ந்தது வர்ஷஜலபு3த்3 பு34ம் போலே நஶித்து நஶித்து ஜீவித்த நாள் பண்ணின பாபத்தாலே அதோ23தியிலே விழுந்து போன அத்தனைபோக்கி.  ‘மாமழைமொக்குள்’ என்றது, மஹாவர்ஷத்தில் குமிழி சடக்கென மாயுமென்னுமிடம் தோற்று கைக்காக.  (‘நிற்குறில்’ என்று தொடங்கி) – நிலைநின்ற புருஷார்த்த2ம் வேண்டியிருக்கில், ஆழ்ந்து அகன்றிருந்துள்ள திருப்பாற்கடலிலே ஸமாஶ்ரயணீயனாய்க்கொண்டு கண்வளர்ந்தருளுகிற ஸர்வேஶ்வரனுக்கு அடியாராகுங்கோள். 4-1-6.

ஏழாம் பாட்டு

ஆமின்சுவையவை யாறோடடிசிலுண்டார்ந்தபின்
தூமென்மொழிமடவார் இரக்கப்பின்னுந்துற்றுவார்
ஈமினெமக்கொருதுற்றென்று இடறுவராதலின்
கோமின்துழாய்முடி யாதியஞ்சோதிகுணங்களே.

ஏழாம் பாட்டில், அந்நபாநாதி3 போ43ங்களுடைய அநித்யதையை அருளிச்செய்கிறார்.

(ஆமின் என்று தொடங்கி.) இனிதான ரஸம் ஆறோடு ஸப3ஹுமானமாக இட்ட சோற்றை உண்டு சமைந்தபின்பு பேச்சின் இனிமையாலே சொல் மறுக்கவொண்ணாதபடியான ஸ்த்ரீகள் இரக்க, மறுக்கமாட்டாமையாலே பின்னையும் உண்ணாநிற்குமவர்கள்.  (‘ஈமினெமக்கு’ என்று மேலுக்கு) – அந்த ஸ்த்ரீகள் வாசலிலே சென்று ‘எல்லீரும் கூடி எனக்கு ஒரு பிடியிட வேணும்’ என்று வேண்டித் தட்டித் திரிவர்.  இப்படி விஷய போ43ங்கள் அநித்யமாகையாலே, ஜக3த்துக்குக் காரணமாய் நிரவதி4கஸௌந்த3ர்ய யுக்தனுமாய்த் திருத்துழாயாலே அலங்க்ருதனானவனுடைய கல்யாண கு3ணங்களை அநுஸந்தி4யுங்கோள். 4-1-7.

எட்டாம் பாட்டு

குணங்கொள்நிறைபுகழ்மன்னர் கொடைக்கடன்பூண்டிருந்து
இணங்கியுலகுடனாக்கிலும் ஆங்கவனையில்லார்
மணங்கொண்டபோகத்துமன்னியும் மீள்வர்கள் மீள்வில்லை
பணங்கொளரவணையான் திருநாமம்படிமினோ.

எட்டாம் பாட்டில், இந்த ராஜ்யாதி3போ43ங்கள் எம்பெருமானை ஆஶ்ரயியாவிடின் கிடையா;  ஆஶ்ரயித்துப் பெற்றாலும் நிலைநில்லா என்கிறார்.

(கு3ணங்கொள் என்று தொடங்கி.) – மேலுக்குக் கு3ணவான்களாய் கு3ண வத்தாப்ரதை4யையுமுடையரான ராஜாக்கள் தங்களுக்குள்ள த4நத்தை எல்லாருக்கும் கொடுக்கையே ஸ்வபா4வமாய் இவ்வழியாலே எல்லா ரோடும் சேர்ந்து தங்களை பிரிய வொண்ணாதபடி சேர்த்துக்கொண்டார் களாகிலும், எம்பெருமான் ப்ரஸாத3மில்லையாகில் ராஜ்யந்தான் கிடையாது.  (மணங்கொண்ட என்று தொடங்கி) – ராஜ்ய ஸுக2ம் பெற்றாலும் நிலைநில்லாது; ஆனபின்பு, தன்னுடைய நாமோச்சாரணம் பண்ணினாரைத் திருவநந்தாழ்வானைப்போலே ஶேஷமாக்கிகொள்ளு மவனுடைய திருநாமங்களிலே ப்ரவணராகுங்கோள்.  போ4கத்துகு மீள்வில்லை.  தா3நத4ர்மத்துக்குப் ப2லமாக எம்பெருமானைப் பற்றாதே ஸ்வர்க்கா3தி3 போ4கங்களைப் பற்றினால் நிலைநில்லா என்றுமாம். 4-1-8.

ஒன்பதாம் பாட்டு

படிமன்னுபல்கலன் பற்றோடறுத்துஐம்புலன்வென்று
செடிமன்னுகாயம்செற்றார்களும் ஆங்கவனையில்லார்
குடிமன்னுமின்சுவர்க்கமெய்தியும் மீள்வர்கள் மீள்வில்லை
கொடிமன்னுபுள்ளுடை அண்ணல்கழல்கள்குறுகுமினோ.

ஒன்பதாம் பாட்டில், ஐஹிகமான ராஜ்யாதி3களே யல்ல, உடம்பை யொறுத்துப் பெறும் ஸ்வர்க்கா3த்3யைஶ்வர்ய ஸுக2ங்களும் நிலை நில்லா என்கிறார்.

(படிமன்னு என்று தொடங்கி.) – பழையதாய் வருகிற பூ4மியையும் ஆப4ரணங்களையும் அவற்றில் நசையோடே கூட விட்டு ஐந்து இந்த்3ரிய ங்களையும் வென்று தபஸ்ஸுக்காக உண்டான தீ3ர்க்க4காலாவஸ்தா2நத் தாலே தூறுமண்டும்படி உடைபைச் செறுத்தவர்களு, அவனைப் பற்றாரா கில் ஸ்வர்க்க3ம் கிடையாது.  (கொடி மன்னும் என்று தொடங்கி) – பூ4மி யைப்போலே யன்றியே நெடுநாளிருக்கலாம் ஸ்வர்க்க3த்தைப் பெற்றும் இழப்பர்.  ஆனபின்பு, ஆஶ்ரிதரைத் தனக்கு வ்யாவர்த்தக விஶேஷண மான பெரிய திருவடியைப்போலே அந்தரங்கராக விஷயீகரிக்கும் ஸ்வபா4வனான ஸர்வேஶ்வரன் திருவடிகளை ஆஶ்ரயியுங்கோள்.  (மீள்வில்லை) – உடம்பை யொறுதுதுத் தபஸ்ஸு பண்ணினாலும் அதுக்குப் ப2லதயா எம்பெருமானைப்பற்றாதே ஸ்வர்க்க3 ப்ராப்தியைப் பற்றினால் அது நிலைநில்லாது என்றுமாம்.  4-1-9.

பத்தாம் பாட்டு

குறுகமிகவுணர்வத்தொடுநோக்கி எல்லாம்விட்ட
இறுகலிறப்பென்னும்ஞானிக்கும் அப்பயனில்லையேல்
சிறுகநினைவதோர்பாசமுண்டாம் பின்னும்வீடில்லை
மறுகலிலீசனைப்பற்றி விடாவிடில்வீடஃதே.

பத்தாம் பாட்டில், கைவல்யபுருஷார்த்த2ம் து3ஸ்ஸாத4 மென்றும், அதுதான் அபுருஷார்த்த2மென்றும் ப்ரதிபாதிக்கிறார்.

(குறுக என்று தொடங்கி.) – பா3ஹ்யார்த்த2ங்களிலே தூ3ரப்போய்ப்  பழகின மநஸ்ஸை அவற்றினின்றும் மீட்டு ப்ரத்யகாத்மாவின் பக்கலிலே ப்ரவண மாக்கி விஶத3தமமாம்படி ஆத்மாவலோகநத்தைப் பண்ணி ஆத்மவ்யதிரிக்த ஸகல புருஷார்த்தங்களிலும் தொற்றற்ற அந்த ஸங்குசித த3ஶையை மோக்ஷமென்னும் ஜ்ஞாந நிஷ்டனுக்கும் ஸ்வயம் புருஷார்த்த2ரூபமான எம்பெருமானை ஶுபா4ஶ்ரயமாகப் பற்றாவிடில் ஆத்மாவலோகந விரோதி4யான கர்மம் போகாதே நிற்கும்.  (பின்னும் என்று தொடங்கி) – ஆத்மாவலோகநம் கைவந்தாலும் ஹேயப்ரத்யநீக னாய் ஜ்ஞாநைகாகாரனான ஸர்வேஶ்வரனை அநுஸந்தி4த்து அவனோடு ஸஜாதீயமென்று ஆத்மாவை அநுஸந்தி4க்கையாகிற இந்த அந்திம ஸ்ம்ருதி இல்லையாகில் மோக்ஷத்துக்கு உபாயமில்லை.  இப்படி து3ஸ்ஸாத4மாகையாலும், ஸாதி4க்குமிடத்திலும் எம்பெருமானைப் பற்றியே ஸாதி4க்கவேண்டுகையாலும், தத் கைங்கர்யத்தைக்குறித்துத் தண்ணிதாகையாலும், ப43வத் கைங்கர்யமே பரமபுருஷார்த்த2ம். 4-1-10.

பதினொன்றாம் பாட்டு

அஃதேஉய்யப்புகுமாறென்று கண்ணன்கழல்கள்மேல்
கொய்பூம்பொழில்சூழ் குருகூர்ச்சடகோபன்குற்றேவல்
செய்கோலத்தாயிரம் சீர்த்தொடைப்பாடலிவைபத்தும்
அஃகாமல்கற்பவர் ஆழ்துயர்போய்உய்யற்பாலரே.

நிகமத்தில், இத்திருவாய்மொழி கற்றார் ஐஶ்வர்யாதி3 க்ஷுத்3ர புருஷார்த்த2த்தைத் தவிர்ந்து ப43வத் கைங்கர்யைகபோ43ராவர் என்கிறார்.

(அஃதே என்று தொடங்கி.) – அதுவே உஜ்ஜீவநோபாய மென்று எம்பெருமான் திருவடிகளிலே ஆழ்வார் அருளிச்செய்த விலக்ஷணமான ஆயிரத்தில் அவனுடைய கல்யாண கு3ணங்களையே தொடுத்த இத்திருவாய்மொழி.  அஃகாமை தப்பாமை. 4-1-11.

நஞ்சீயர் திருவடிகளேரணம்

 

அவதாரிகை    4-2

பாலனாய்ப்ரவேசம்

இரண்டாந்திருவாய்மொழியில், இதர புருஷார்த்தங்களுடைய தோ3ஷாநு ஸந்தா4ந பூர்வகமாக ப43வத் வைலக்ஷண்யாநுஸந்தா4நத்தைப் பண்ணி  பரமபோ4க்3யனான எம்பெருமானோடே கலந்து பரிமாறவேணுமென்று ஆசைப்பட்டுப் பெறாமையாலே கலங்கி “முடியானே”யிற் பிறந்த விடாய் ரஸாந்தரங்களாலே அபி4பூ4தமானது தலையெடுத்து அதுக்குமேலே தே3ஶகாலங்களினாலே விப்ரக்ருஷ்டமான அவன் படிகளையும் காண வேணுமென்னும் அபி4நிவேஶம் மிகப்படர்ந்து நினைத்தபடி கிடையாமை யாலே அப்ரக்ருதிங்கதராய்த் தம்முடைய த3ஶையைக் கண்டு ப3ந்து4க்கள் ஶோகிக்கிற படியை, எம்பெருமானை ஆசைப்பட்டுப் பெறாதே நோவுபடுகிறாள் ஒரு பிரட்டியுடைய திருத்தாயார் பேச்சாலே அவனுக்கு விண்ணப்பஞ்செய்கிறார்.

முதல் பாட்டு

பாலனாய் ஏழுலகுண்டுபரிவின்றி
ஆலிலைஅன்னவசஞ்செய்யும் அண்ணலார்
தாளிணைமேலணி தண்ணந்துழாயென்றே
மாலுமால் வல்வினையேன்மடவல்லியே

முதற் பாட்டில், வடதளஶாயியான ஸர்வேஶ்வரனுடைய திருவடி களிலே சாத்தின திருத்துழாயை இப்போதே பெறவேணுமென்று ஆசைப் படாநின்றாளென்று திருத்தாயார் ஶோகிக்கிறாள்.

(பரிவின்றி) – நோவின்றிக்கே.  (அன்னவசம்செய்கை) – இடம் வலங்கொள் ளுகை.  (மாலுமால்) – மயங்காநின்றாள்.  ‘வல்வினை’ என்கிறது, இவள் இங்ஙன் து3ர்க்க4டங்களை ஆசைப்படுகைக்குக் காரணம் என்கர்மம் என்கிறாள். மடம் – தான் நினைத்ததே நினைக்கை. ­­­­­­­­­4-2-1.

இரண்டாம் பாட்டு

வல்லிசேர்நுண்ணிடை ஆய்ச்சியர்தம்மொடும்
கொல்லைமைசெய்து குரவைபிணைந்தவர்
நல்லடிமேலணி நாறுதுழாயென்றே
சொல்லுமால் சூழ்வினையாட்டியேன்பாவையே.

இரண்டாம் பாட்டில், திருக்குரவையில் க்ருஷ்ணனுடைய லீலா சேஷ்டிதங்களைக்காண ஆசைப்படாநின்றாள் என்கிறாள்.

(வல்லிசேர் என்று தொடங்கி.) – வல்லி போலேயிருக்கிற வடிவையும் நுண்ணிய இடையையு முடைய இடைப்பெண்களைத் தன்னுடைய ஸௌந்த3ர்யாதி3களாலெ வரம்பழித்து அவர்களோடே திருக்குரவை கோத்தருளினவருடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகளில்.  (சூழ்வினை) – தப்பாமே அகப்படுத்தும் பாபம். ­­­4-2-2.

மூன்றாம் பாட்டு

பாவியல்வேத நன்மாலைபலகொண்டு
தேவர்கள்மாமுனிவர் இறைஞ்சநின்ற
சேவடிமேலணி செம்பொன்துழாயென்றே
கூவுமால் கோள்வினையாட்டியேன்கோதையே.

மூன்றாம் பாட்டில், திருவுலகளந்தருளின எம்பெருமான் திருவடிகளில் திருத்துழாயை ஆசைப்படாநின்றாள் என்கிறாள்.

(பாவியல் என்று தொடங்கி.) – நல்ல ச4ந்த3ஸ்ஸையுடைத்தான ருக்3வேத3 த்தில் வைஷ்ணவமான பல ஸூக்தங்களைக் கொண்டு தேவர்களும் ருஷிகளும் ஆஶ்ரயிக்கலாம்படி தன்னைக் கொடுத்துக்கொடு நின்ற.  (கோள்வினை) – முடித்தல்லது போகாத பாபம்.  (கோதை) – தன்னுடைய மயிர்முடியையும் மாலையையும் கண்டாரை இப்பாடு படுத்தவல்ல ளென்று கருத்து. 4-2-3.

நான்காம் பாட்டு

கோதிலவண்புகழ் கொண்டுசமயிகள்
பேதங்கள்சொல்லிப் பிதற்றும்பிரான்பரன்
பாதங்கள்மேலணி பைம்பொன்துழாயென்றே
ஓதுமால் ஊழ்வினையேன் தடந்தோளியே.

நாலாம் பாட்டில், ஸர்வஸ்மாத்பரனாய்த் திருநாட்டிலே எழுந்தருளி யிருக்கிற ஸர்வேஶ்வரனுடைய திருவடிகளில் திருத்துழாயை ஆசைப் படாநின்றாள் என்கிறாள்.

(கோதில என்று தொடங்கி.) – ஒருகுணத்தை அநுஸந்தி4த்தால் கு3ணாந்தர த்திற் போகவொட்டாதபடி கால் கட்டவல்லவான அவ்வவகுணங்களிலே நிஷ்ட2ரானவர்கள்.  (பே43ங்கள் என்று தொடங்கி) – அவ்வவகு3ணங்க ளில் வாசிகளைச் சொல்லி ஈடுபட்டு அடைவுகெடச்சொல்லும்படியான ஔதா3ர்ய கு3ணத்தையுடையனாய் எல்லாப்படியாலும் எல்லாரிலும்  மேற்பட்டிருந்தவனுடைய.  (ஊழ்வினையேன்) – இப்படி து3:கா2நுப4வத் துக்கு ஈடாம்படி முன்னமே பாபத்த்தைப்பண்ணினேன்.  (தடந்தோளி) – எம்பெருமானைப பிச்சேற்றவல்ல தோள்களையுடையவள் என்றவாறு. ­­­­­­­­4-2-4.

ஐந்தாம் பாட்டு

தோளிசேர்பின்னைபொருட்டு எருதேழ்தழீஇக்
கோளியார் கோவலனார் குடக்கூத்தனார்
தாளிணைமேலணி தண்ணந்துழாயென்றே
நாளுநாள் நைகின்றதால் என்தன்மாதரே.

 அஞ்சாம் பாட்டில், நப்பின்னைபிராட்டிக்காக, எருதேழடர்த்தரு ளின க்ருஷ்ணனுடைய திருவடிகளில் திருத்துழாயை ஆசைப்படா நின்றாள் என்கிறாள்.

(தோளி என்று தொடங்கி.) – தன்னோடு துல்யமான ஶீலவயோவ்ருத்தங் களையுடையளாய்த் தனக்கே அஸாதா4ரணமான தோளழகையுடைய நப்பின்னைப்பிராட்டிக்காக எருதேழையும் தழுவிக்கொள்வதும் செய்து, அவர்களுக்கு ஸத்3ருஶமான ஆபி4ஜாத்யத்தையும் செருக்கையுமுடைய வர்.  (நாளுநாள்) – நாள்தோறும் நாள்தோறும்­­­­­­­­4-2-5.

ஆறாம் பாட்டு

மாதர்மாமண்மடந்தைபொருட்டு ஏனமாய்
ஆதியங்காலத்து அகலிடம்கீண்டவர்
பாதங்கள்மேலணி பைம்பொன்துழாயென்றே
ஓதும்மால்எய்தினள் என்தன்மடந்தையே.

ஆறாம் பாட்டில், ஸ்ரீவராஹமாய் ப்ரளயார்ணவத்தில் பூ4மியை எடுத்தருளின போதில் திருவடிகளில் திருத்துழாயைப் பெறவேணு மென்று ஆசைப்படுகிறபடியைச் சொல்லுகிறாள்.

(மாதர் என்று தொடங்கி.) –  ஸ்நேஹயுக்தையாய் அதிஶ்லாக்4யையான ஸ்ரீபூ4மிப்பிராட்டிக்காக.  (ஏனமாய் என்று தொடங்கி.) – ப43வத3வதார காலமாகையாலே ஶ்லாக்4யமான வராஹ கல்பத்தின் ஆதியிலே நீரும் சேறும் காண இறாயாத வராஹவேஷத்தைக்கொண்டு மஹா ப்ருதி2வி யை எடுத்தருளினவருடைய.  ஓதுகை – சொல்லுகை. 4-2-6

ஏழாம் பாட்டு

மடந்தையை வண்கமலத்திருமாதினைத்
தடங்கொள்தார்மார்பினில்வைத்தவர் தாளின்மேல்
வடங்கொள்பூந்தண்ணந்துழாய்மலர்க்கே இவள்
மடங்குமால் வாணுதலீர்! என்மடக்கொம்பே.

ஏழாம் பாட்டில், அம்ருத மத4நத3ஶையிலே பெரியபிராட்டியாரைத் திருமார்பிலே வைத்தருளின எம்பெருமானுடைய திருவடிகளிலே திருத் துழாயை ஆசைப்படாநின்றாள் என்கிறாள்.

(மடந்தை) – பருவம்.  (தடங்கொள் தார்மார்பினில்) – இடமுடைத்தாய்த் திருமாலையையுடைய திருமார்பிலே.  (வடங்கொள் என்று தொடங்கி) – தொடையுண்டு  போ4க்3யமாயிருந்துள்ள தண்ணந்துழாய் மலரையே ஆசைப்பட்டுச் சுருண்டுவிழாநின்றாள்; ஏதேனும் த3ஶையிலும் விக்ருதை யாகாதிருக்கக்கடவ என்மகள்.  (வாள்நுதலீர்) – ஒளியையுடைய நுதலை யுடையீர்.  உங்களைப்போலே இவளைக் காணப்பெறுவதுகாண் என்று கருத்து. 4-2-7.

எட்டாம் பாட்டு

கொம்புபோல்சீதைபொருட்டு இலங்கைநகர்
அம்பெரியுய்த்தவர் தாளிணைமேலணி
வம்பவிழ்தண்ணந்துழாய்மலர்க்கே இவள்
நம்புமால் நான்இதற்குஎன்செய்கேன்?  நங்கைமீர்!

எட்டாம் பாட்டில், ஸ்ரீ ஜநகராஜன் திருமகளுக்காக லங்கா த3ஹநம் பண்ணியருளின சக்ரவர்த்தி திருமகனுடைய திருவடிகளில் நிரதிஶய போ4க்3யமான திருத்துழாயை ஆசைப்படாநின்றாள் என்கிறாள்.

(அம்பெரியுய்த்தவர்) – ஶராக்3நியைப் புகவிட்டவர். 4-2-8.

ஒன்பதாம் பாட்டு

நங்கைமீர் நீரும் ஓர்பெண்பெற்றுநல்கினீர்
எங்ஙனேசொல்லுகேன் யான்பெற்றஏழையைச்
சங்கென்னும்சக்கரமென்னும் துழாயென்னும்
இங்ஙனேசொல்லும் இராப்பகல்என்செய்கேன்?

ஒன்பதாம் பாட்டில், அவனுடைய ஆயுத4ங்களைக் காணவேணு மென்று சொல்லப்புக்கு முடியச்சொல்லமாட்டாதே நோவுபடாநின்றாள் என்கிறாள்.

நல்குகை – வளர்க்கை.  ஏழையை – கிடையாதத்தை ஆசைப்படுகிற சபலையை. 4-2-9.

பத்தாம் பாட்டு

என்செய்கேன் என்னுடைப்பேதை என்கோமளம்
என்சொல்லும் என்வசமுமல்லள் நங்கைமீர்
மின்செய்பூண்மார்பினன் கண்ணன்கழல்துழாய்
பொன்செய்பூண்மென்முலைக்கென்று மெலியுமே.

பத்தாம் பாட்டில், ‘உன் மகள் நீ இட்ட வழக்கன்றோ? அவளுக்கு ஹிதம் சொல்லாய்’ என்றவர்களைக்குறித்துத் தான் சொல்லிற்றுக் கேளாதே அவனை ஆசைப்பட்டுமிகவும் அவஸந்நையாகாநின்றாள் என்கிறாள்.

(என்செய்கேன் என்று தொடங்கி.) – ஹிதங்கொள்ளுகைக்கு ஈடான விவேகமின்றிக்கே வ்யஸநஸஹையு மன்றிக்கேயிருந்துள்ள என் மகள் நான் சொல்லிற்றுக் கொள்ள, முதலிலே நான் இட்ட வழக்கல்லள்.  விளங்கா நின்றுள்ள கௌஸ்துபா4த்3யாப4ரணங்களைத்  திருமார்பிலே யுடைய க்ருஷ்ணனுடைய திருவடிகளில் திருத்துழாயை விரஹவைவர்ண் யத்தையே ஆப4ரணமாகவுடைத்தாய்த் துவண்டிருக்கிற முலைக்கு வேணு மென்று சொல்லப்புக்கு முடியச்சொல்ல மாட்டாதே மெலியா நின்றாள்; இதுக்கு நான் செய்வதென்? (பொன்செய்பூண்) – பொன்னாலே செய்யப்பட்ட ஆப4ரணமென்றும் சொல்லுவர். 4-2-10.

பதினொன்றாம் பாட்டு

மெலியும்நோய்தீர்க்கும் நம்கண்ணன்கழல்கள்மேல்
மலிபுகழ்வண்குருகூர்ச் சடகோபன்சொல்
ஒலிபுகழாயிரத்து இப்பத்தும்வல்லவர்
மலிபுகழ்வானவர்க்காவர் நற்கோவையே.

ஆழ்வார் திருவடிகளே சரணம்

நிகமத்தில்,   ஆழ்வாருக்கு இனியில்லையென்ன வந்த அவஸாத4 மெல்லாம் தீரும்படி ஸம்ஶ்லேஷித்தருளின க்ருஷ்ணன் திருவடிகளிலே தாம் அருளிச்செய்த ஆயிரத்திலும் இத்திருவாய்மொழி வல்லார் அயர்வறும் அமரர்களுக்கு ஸத்ருஶராவர் என்கிறார்.                       (மலிபுகழ் என்று தொடங்கி.)  – எட்டாத நிலத்தையும் அநுப4விக்கைக்கு அபி4நிவேஶித்தாரென்னும் புகழ் மிக்கிருந்துள்ள ஆழ்வார் அருளிச் செயலாய் எம்பெருமானுடைய கல்யாண கு3ணங்களை வ்யக்தமாகச் சொல்லுகிற இத்திருவாய்மொழி வல்லவர். 4-2-11.

நஞ்சீயர் திருவடிகளேரணம்

 

அவதாரிகை    4-3

கோவைவாயாள்ப்ரவேசம்

மூன்றாந்திருவாய்மொழியில், தாம் ஆசைப்பட்டபடியே எல்லாம் பெற்றாராம்படி தம்மோடே ஸம்ஶ்லேஷித்தருளின எம்பெருமானுக்குத் தம்பக்கலுண்டான ப்ரணயித்வத்தை அநுஸநிதி4த்து அத்யந்தம் ப்ரீதரான ஆழ்வார், அந்த ப்ரீதி ப்ரகர்ஷத்தாலே அவனுடைய ப்ரணயித்வ கு3ணத்தைப் பேசியருளுகிறார்.

முதல் பாட்டு

கோவைவாயாள்பொருட்டு ஏற்றினெருத்தமிறுத்தாய் மதிளிலங்கைக்
கோவைவீயச்சிலைகுனித்தாய் குலநல்யானைமருப்பொசித்தாய்
பூவைவீயாநீர்தூவிப் போதால்வணங்கேனேலும் நின்
பூவைவீயாம்மேனிக்குப் பூசும்சாந்துஎன்னெஞ்சமே.

முதற் பாட்டில், ஆஶ்ரித விரோதி4நிரஸநங்களால் வந்த ஶ்ரமம் போகைக்கு ஈடான ஶிஶிரோபசாரங்கள் செய்யப்பெற்றிலேனேயாகிலும் என் ஹ்ருத3யத்தினுடைய ஸத்தையே ஶிஶிரோபசாரமாய்விட்டது என்கிறார்.

(கோவைவாயாள் என்று தொடங்கி.) – நப்பின்னைப்பிராட்டியினுடைய முறுவலுக்குத் தோற்று அவளோட்டை ஸம்ஶ்லேஷத்துக்காக எருதுகளினு டைய பெரிய கழுத்துக்களை முறித்தாய்; அப்ரத்4ருஷ்யமான லங்காதி4 பதியான ராவணன் முடியும்படி வில்லைவளைத்தருளினாய்;  நற் குலத்திலே பிறந்து ஸர்வ லக்ஷண ஸம்பந்நமாகையாலே ஒருவர்க்கும் கணிசிக்கமுடியாதேயிருக்கிற ஆனையினுடைய கொம்பை அநாயாஸேந முறித்தருளினாய்.  (பூவை என்று தொடங்கி.) – பூவோடே கூடின நீரைக்கொண்டு ப்ராப்த காலங்களிலே பரிசர்யை பண்ணப் பெற்றிலேனேயாகிலும்.  (பூவைவீயா என்று.)  – பூவையிட்டு என்றுமாம்.  (நின்பூவைவீயா மேனிக்கு) – பூவைப்பூவின் தன்மையான மேனிக்கு;  பூவையொழியச் செல்லாத மேனி யென்றுமாம். ­­­­­­­­4-3-1.

இரண்டாம் பாட்டு

பூசும்சாந்துஎன்னெஞ்சமே புனையும்கண்ணிஎனதுடைய
வாசகம்செய்மாலையே வான்பட்டாடையும்அஃதே
தேசமானஅணிகலனும் என்கைகூப்புச்செய்கையே
ஈசன்ஞாலமுண்டுமிழ்ந்த எந்தைஏகமூர்த்திக்கே.

இரண்டாம் பாட்டில், ‘என்னுடைய ஸ்ம்ருத்யாதிகள் அவனுக்கு அங்கராகாதிகளாய் விட்ட்தே’ என்று இனியராகிறார்.

(பூசும் சாந்து.) – பூசியல்லது த4ரிக்கவொண்ணாத சாந்து.  (புனையும் கண்ணி) – விரும்பிச்சூடும் பூமாலை.  (வான் பட்டாடை) – அதிஶ்லாக்4ய மான திருப்பரிவட்டம்.  (தேசமான அணிகலன்.) – தேஜஸ்கரமான திரு வணிகலன்கள்.  (ஈசன் என்று தொடங்கி.)- ஸர்வேஶ்வரனாய் ஜகத்துக்குப் பலபடியாலும் ரக்ஷகனாய் அச்செயலாலே விஶேஷித்து எனக்கு ஸ்வாமி யுமாய் விலக்ஷணமான திருமேனியை யுடையவனுக்கு. 4-3-2.

மூன்றாம் பாட்டு

ஏகமூர்த்தியிருமூர்த்தி மூன்றுமூர்த்திபலமூர்த்தி
யாகிஐந்துபூதமாய் இரண்டுசுடராய்அருவாகி
நாகமேறிநடுக்கடலுள்துயின்ற நாராயணனே! உன்
ஆகமுற்றுமகத்தடக்கி ஆவியல்லல்மாய்த்ததே.

மூன்றாம் பாட்டில், தம்மோட்டை ஏவம்வித4 ப்ரணயத்தால் எம்பெருமானுக்கு உண்டான கார்த்தார்த்த்2யம் சொல்லுகிறார்.

(ஏகமூர்த்தி என்று தொடங்கி.) – ஸ்ருஷ்டிக்கு முன்பு ஸ்வாஸாதா4ரண மான திருமேனியையுடையையாய், ப்ரக்ருதி மஹான்களையும் த்ரிவித4 அஹங்காரத்தையும் மந: ப்ரப்4ருதிகரணங்களையும் ஐந்து பூ4தங்களை யும் சந்த்3ர ஸூர்யாதி3களையும் ஸ்ருஷ்டித்து அவற்றினுடைய தா4ரணா ர்த்த2மாக அவற்றுக்கு ஆத்மாவாய். (நாகம் என்று தொடங்கி) – உன்னாலே ஸ்ருஷ்டரான ப்3ரஹ்மாதி3களுக்கு ஸமாஶ்ரயணீயனாகைக் காகத் திருப்பாற்கடலின் நடுவே திருவநந்தாழ்வான்மேலே ஏறிக் கண் வளர்ந்தருளி ஸமஸ்த ஜந்துக்கள் பக்கலிலும் அநுக்3ரஹ ஶீலனானவனே! உன்னுடைய திருமேனிக்கு வேண்டும் தா4ரக போஷகாதி3களெல்லாம் என்னுடைய மந:ப்ரப்4ருதிகளேயாகக் கொண்டு உன்னுடைய மநஸ் நிர்த்3து3:க2மாயிற்றே;   (ஆவி அல்லல் மாய்த்ததே) – நான் நிர்த்3து3:க2னா னேன் என்றுமாம். 4-3-3.

நான்காம் பாட்டு

மாய்த்தலெண்ணி வாய்முலைதந்த மாயப்பேயுயிர்
மாய்த்த ஆயமாயனே! வாமனனே! மாதவா!
பூத்தண்மாலைகொண்டு உன்னைப்போதால்வணங்கேனேலும் நின்
பூத்தண்மாலைநெடுமுடிக்குப் புனையும்கண்ணிஎனதுயிரே.

நாலாம் பாட்டில், பூதநாஸ்தந்யாபாநாதி3 வ்யாபாரங்களாலுள்ள ஆயாஸத்துக்கும் ஶ்ரிய:பதியான உன்னுடைய ஸௌகுமார்யத்துகும் ஈடான ஶிஶிரோபசாரத்துக்கும் என்னுடைய ; ப்ராணன் ஆய்விட்டதே! என்று ப்ரீதராகிறார்.

(பூத்தண்மாலை என்று தொடங்கி.) – குளிர்ந்த பூமாலையைக்கொண்டு ப்ராப்தகாலத்திலே வந்து ஸந்நிஹிதனாய்,  பரிசர்யை பண்ணமாட்டிற்றி லேனேயாகிலும் குளிர்ந்த திருமாலை யால்ல்லது செல்லாத உன் திரு முடிக்குச் சாத்தும் திருமாலை என்னுடைய ப்ராணனாய்விட்டதே! 4-3-4.

ஐந்தாம் பாட்டு

கண்ணிஎனதுயிர் காதல்கனகச்சோதிமுடிமுதலா
எண்ணில்பல்கலன்களும் ஏலுமாடையுமஃதே
நண்ணிமூவுலகும் நவிற்றுங்கீர்த்தியுமஃதே
கண்ணனெம்பிரானெம்மான் காலசக்கரத்தானுக்கே.

அஞ்சாம் பாட்டில், தம்முடைய  ஸ்நேஹாதி3களானவை ஓரோ வொன்றே அவனுக்கு ஆப4ரணாதி3 ஸர்வபரிச்ச23ங்களும் என்கிறார்.

(காதல் என்று தொடங்கி.) – விலக்ஷணமான திருவபி4ஷேகம் முதலாக அஸங்க்2யேயமான திருவணிகலன்களும் திருவரைக்குத் தகுதியான திருப்பரிவட்டமும் இருந்ததேகுடியாக ஆதரித்து ஏத்தும் தன்னுடைய கீர்த்தியும் இவையெல்லாம் என்னுடைய காதலே; காலத்தை நடத்தக் கடவ திருவாழியைத் திருக்கையிலேயுடையனாய் அவ்வழகைக் காட்டி எனக்கு அநந்யபரத்வ பேரேமாபகாரத்தைப் பண்ணும் ஸ்வபா4வனாய் எனக்கு ஸ்வாமியான க்ருஷ்ணனுக்கு. 4-3-5.

ஆறாம் பாட்டு

காலசக்கரத்தொடு வெண்சங்கம்கையேந்தினாய்
ஞாலமுற்றும்உண்டுமிழ்ந்த நாராயணனே என்றென்று
ஓலமிட்டுநானழைத்தால் ஒன்றும்வாராயாகிலும்
கோலமாம்என்சென்னிக்கு உன்கமலமன்னகுரைகழலே.

ஆறாம் பாட்டில், இப்படி ப்ரணயியாயிருந்துள்ள நீ என்னோடு ஸம்ஶ்லேஷித்திலையேயாகிலும் உன்னுடைய ஸத்தையே எனக்குத் தா4ரகாதி33ளெல்லாம் என்கிறார்.  தம்முடைய ப்ரணயித்வம் பேசுவா னென்? என்னில், – எம்பெருமானுடைய ப்ரணயித்வாதிஶயம் தம்மையும் ப்ரணயியாம்படி பண்ணிற்றென்னும் கணக்காலே.

(காலசக்கரம் என்று தொடங்கி.) – ப்ரதிபக்ஷநிரஸநமே ஸ்வபா4வமான திருவாழியோடே திருநிறத்துக்குப் பகைத்தொடையான வெண்மையை யுடைய ஸ்ரீபாஞ்சஜந்யத்தை அழகிய திருக்கையிலே ஏந்தியருளினவனே யென்று அழகைச் சொல்லியும் ஸ்வஶேஷமான ஜக3த்தையெல்லாம் உண்பது உமிழ்வதாய் அவற்றுக்குத் தத்தத்காலோசிதமான ரக்ஷைகளைப் பண்ணாநின்றுகொண்டு அவற்றின்பக்கலிலே மிகவும் வத்ஸலனானவனே யென்று நான் கூப்பிட்டு அழைத்தக்கால் வருகைக்கு ப்ரஸங்கமில்லையேயாகிலும். (கோலம் என்று தொடங்கி.) – உன்னுடைய ஸ்ப்ருஹணீயமான திருவடிகள் எனக்குப் போ4க்3யமாம். 4-3-6.

ஏழாம் பாட்டு

குரைகழல்கள்நீட்டி மண்கொண்டகோலவாமனா!
குரைகழல்கைகூப்புவார்கள் கூடநின்றமாயனே!
விரைகொள்பூவும்நீரும்கொண்டு ஏத்தமாட்டேனேலும் உன்
உரைகொள்சோதித்திருவுருவம் என்னதாவிமேலதே.

ஏழாம் பாட்டில், ஸ்நேஹமும் ஸ்நேஹாநுரூபவ்ருத்திகளுமின்றிக் கேயிருக்கிலும் என்னுடைய ஸத்தையே உனக்கு ஜீவநஹேது வாகா நின்றது; ஒரு ப்ரணயித்வம் இருக்கும்படியே! என்று விஸ்மிதராகிறார்.

(குரைகழல்கள் என்று தொடங்கி.) – குரைகழல்கள் – பெருத்த திருவடிகள்; த்4வநிக்கிற என்றுமாம்.  (குரைகழல் என்று தொடங்கி.) – அல்பாபி4 முக்2யம் பண்ணினவருக்கும் ப்ராபிக்கலாம்படிநின்ற் ஆஶ்சர்யபூ4தனே! (விரை இத்யாதி) – நல்ல உபஹாரங்களைக்கொண்டு பரிசர்யை பண்ண மாட்டேனேயாகிலும் பேச்சுக்கு நிலமல்லாதபடியிருக்கிற தேஜோரூப மான உன்னுடைய திருவடிவுக்கு என்னுடைய ஆத்மஸத்தையே தா4ரக மாயிற்று; இது என்ன ஆஶ்சர்யம்! 4-3-7.

எட்டாம் பாட்டு

என்னதாவிமேலையாய் ஏர்கொளேழுலகமும்
துன்னிமுற்றுமாகிநின்ற சோதிஞானமூர்த்தியாய்
உன்னதென்னதாவியும் என்னதுன்னதாவியும்
இன்னவண்ணமேநின்றாய் என்றுரைக்கவல்லேனே.

எட்டாம் பாட்டில், ஒருவர்க்கு ஒருவராலே ஸ்வரூபஸ்தி2தி ப்ரவ்ருத்திகளாம்படி எம்பெருமானுக்கும் தமக்கும் விளைந்த ஸம்ஶ்லேஷம் பேச்சுக்கு நிலமன்று என்கிறார்.

(என்னதாவி என்று தொடங்கி.) – என்னோடு ஸம்ஶ்லேஷிக்கைக்காக எனக்குத் தப்பவொண்ணாதபடி ஸர்வக3தனாய், தத3ர்த்த2மாக அறிவையே ஸ்வரூபமாகவுடையவனே! என்னோட்டை ஸம்ஶ்லேஷ ஜநித ஹர்ஷப்ரகர்ஷத்தாலே புதுக்கணித்த விபூ4தியை யுடையையாய் அவற்றுக்குள்ளே பூர்ணமாய்க்கொண்டு வ்யாப்தமான ஜ்ஞாநத்தை ஸ்வரூபமாகவுடையவனே! என்றுமாம்.  (உன்னதென்னதாவியும் என்று தொடங்கி.) – என் ஆத்மாவும் நீ இட்ட வழக்கு; உன்னுடைய தி3வ்யாத்ம ஸ்வரூபமும் நான் இட்ட வழக்காயிற்று.  (இன்னவண்ணமே நின்றா யென்றுரைக்க வல்லேனே) – நீயே நோக்கவந்து நிற்கிறபடி இன்னபடி நின்றாயென்று சொல்ல நிலமன்று. 4-3-8.

ஒன்பதாம் பாட்டு

உரைக்கவல்லேனல்லேன் உன்னுலப்பில்கீர்த்திவெள்ளத்தின்
கரைக்கணென்றுசெல்வன்நான் காதல்மையலேறினேன்
புரைப்பிலாதபரம்பரனே பொய்யிலாதபரஞ்சுடரே
இரைத்துநல்லமேன்மக்களேத்த யானுமேத்தினேன்.

ஒன்பதாம் பாட்டில், ‘உன்னுடைய ப்ரணயித்வ ப்ரகர்ஷம் என்னுடைய பேச்சுக்கு நிலமன்று’ என்கிறார்.

உன் உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின் கரைக்கண் என்று செல்வன் நான்? வல்ல அம்ஶத்தைச் சொன்னாலோ வென்னில், – உன்னுடைய அபரிச் சே2த்3யமான ப்ரணயித்வகு3ணத்தின் கரையிலும் ஒரு நாளும் செல்ல முடியாது.  (காதல் மையலேறினேன்) – நீர் பின்னை உப க்ரமிப்பானென்? என்னில், – ஸ்நேஹத்தாலே மதிகெட்டேன்.  (புரைப்பிலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே) – உன்னுடைய ப்ரணயித்வகு3ணத்தில் ஒன்றும் குறையாமே எனக்குக் காட்டி என்னோடே கலந்த கலவியையே நிரவதி4க தேஜஸ்ஸாகவுடையவனே! ப்ரணயித்வ ப்ரகர்ஷமும் அத்தால்வந்த ஹர்ஷ ப்ரகர்ஷமும் வடிவிலே காணலாம்படி யிருக்கிறபடி யென்றுமாம்.  (இரைத்து நல்ல மேன்மக்க ளேத்த யானு மேத்தினேன்) – ப்ரமப4க்தி யுக்த ரான அயர்வறுமமரர்கள் யதா2பலம் வருந்தியேத்தினாற்போலே நானும் ஏத்தினேன். 4-3-9.

பத்தாம் பாட்டு

யானுமேத்தி ஏழுலகும்முற்றுமேத்திப் பின்னையும்
தானுமேத்திலும் தன்னையேத்தவேத்தஎங்கெய்தும்
தேனும்பாலும்கன்னலும் அமுதுமாகித்தித்திப்ப
யானும்எம்பிரானையேஏத்தினேன் யானுய்வானே.

பத்தாம் பாட்டில், ‘என்னாலும் ஸமஸ்த லோகங்களாலும் ஸர்வேஶ்வரனான தன்னாலும் புகழ்ந்து முடிக்கவொண்ணாத ப்ரணயித்வகு3ண விஶிஷ்டனான தன்னை ரஸ்யதையின் மிகுதியாலே விடமாட்டாதே நான் உஜ்ஜீவிக்கைக்காக ஏத்தினேன்’ என்கிறார். 4-3-10.

பதினொன்றாம் பாட்டு

உய்வுபாயம்மற்றின்மைதேறிக் கண்ணனொண்கழல்கள்மேல்
செய்யதாமரைப்பழனத் தென்னன்குருகூர்ச்சடகோபன்
பொய்யில்பாடலாயிரத்துள் இவையும்பத்தும்வல்லார்கள்
வையம்மன்னிவீற்றிருந்து விண்ணும்ஆள்வர்  மண்ணூடே.

நிக3மத்தில், ‘ஈஶ்வரனுடைய உப4யவிபூ4தியும் இத்திருவாய் மொழி யப்4யஸித்தார் இட்டவழக்காம்’ என்கிறார்.

(உய்வு உபாயம் என்று தொடங்கி.) – ப்ரணயித்வம் பேசியல்லது வேறு த4ரிக்கைக்கு உபாயமில்லாமையை அநுஸந்தி4த்து நிரதிஶய போ4க்3ய மான க்ருஷ்ணனுடைய திருவடிகளிலே சிவந்திருந்த தாமரையையுடைய பழனத்தையுடைத்தான தென்னாட்டுத்திருநகரியையுடைய ஆழ்வாரு டைய ஆயிரந்திருவாய்மொழியிலும் ‘இப்படி எம்பெருமான் நிரவதி4க மான அபி4நிவேஶத்தோடே கலந்து பரிமாறின பரிமாற்றத்தில் ஒருபொய் இல்லை; மெய்’ என்று சொல்லுகிற இத்திருவாய்மொழி வல்லார்.  (வையம் மன்னி வீற்றிருந்து) – வைஷ்ணவஸ்ரீயோடே கூடி நெடுங்காலம் பூ4மியிலே இருந்து. 4-3-11.

நஞ்சீயர் திருவடிகளேரணம்

 

அவதாரிகை    4-4

மண்ணையிருந்துப்ரவேசம்

நாலாந்திருவாய்மொழியில், இப்படிப்பிறந்த ப்ரணயித்வாநுஸந்தா4ந ஜநித ப்ரீதிஸாத்மிக்கைக்காக இவருடைய ப்ரக்ருதி யறிந்திருந்துள்ள எம்பெருமான் இவரோட்டைக் கலவியை நெகிழநிற்க, இப்படி ப்ரணயியான இவனைக் காணப்பெறாமையாலே பிச்சேறி ஏதேனும் ஒருபடியாலே “அவனோடு ஸத்3ருஶமான பதா3ர்த்த2ங்களையும் அவனோடு ஸம்பநிதி4களான பதா3ர்த்த2ங்களையுங்கண்டு சிறிது தேறி அவனைக் காணப்பெறாமையாலே வ்யஸநப்படாநின்ற ஆழ்வார் தம்முடைய த3ஶையை அந்யாபதே3ஶத்தாலே பேசியருளுகிறார்.

முதல் பாட்டு

மண்ணையிருந்துதுழாவி வாமனன்மண்ணிதுவென்னும்
விண்ணைத்தொழுதுஅவன்மேவு வைகுந்தமென்றுகைகாட்டும்
கண்ணையுண்ணீர்மல்கநின்று கடல்வண்ணனென்னுமன்னே! என்
பெண்ணைப்பெருமயல்செய்தார்க்கு என்செய்கேன்பெய்வளையீரே.

முதற் பாட்டில், வினவ வந்தவர்களுக்குத் தன் மகள் படிகளை அறிவியாநின்று கொண்டு ‘இப்படி இவளை எம்பெருமான் பிச்சேற்றி னான்; இதுக்கு என்செய்வேன்?’ என்று திருத்தாயார் து3:க்கி2க்கிறாள்.

(மண்ணை என்று தொடங்கி.) – பூ4மியைப் பலகாலும் ஸ்பர்ஶிக்கிறது ஸ்ரீவாமநன் அளந்த மண் என்னும் ஆத3ரத்தாலே என்று கருத்து.  (விண் என்று தொடங்கி) – நாமஸாம்யத்தாலே ஆகாசத்தைத் தொழுது அவன் நிரந்தரவாஸம் பண்ணுகிற வைகுந்தம் என்று சொல்லப்புக்கு பலஹாநி யாலே மாட்டாதொழிந்து ஹஸ்தசேஷ்டையாலே காட்டாநிற்கும்.  திரு நாட்டில் அவன் இருக்கிறபடியைக் காணப்பெறாமையாலே கண்ணீர் மல்கும்படி நின்று தன் ஆற்றாமையாலே ஸ்ரீமஹரமான திருநிறத்தை நினைத்து ‘கடல்வண்ணன்’ என்னும்.  (அன்னே) – செயலறுதியாலே சொல்லும் சொல்; ‘மன்னே’ என்றபோடுதும் இதுவே பொருள்.  (பெய்வளைவீரே) – உங்களைப்போலே கையும் வளையுமாயிருக்க இவளைக்காணவல்லேனே! என்று கருத்து. ­­­­­­­4-4-1.

இரண்டாம் பாட்டு

பெய்வளைக்கைகளைக்கூப்பிப் பிரான்கிடக்கும்கடலென்னும்
செய்யதோர்ஞாயிற்றைக்காட்டிச் சிரீதரன்மூர்த்திஈதென்னும்
நையும்கண்ணீர்மல்கநின்று நாரணனென்னுமன்னே! என்
தெய்வவுருவிற்சிறுமான் செய்கின்றதொன்றறியேனே.

இரண்டாம் பாட்டில், ‘அப்ராக்ருத ரூபையான இவள் செய்கிறன ஒன்றும் தெரிகிறதில்லை’ என்கிறாள்.

(பெய்வளைக் கைகளை.) – ‘கடல் வண்ணன்’ என்று அநுஸந்தி4க்கை யாலே பூரித்த வளைகளையுடைத்தான கைகளை. (பிரான்) – உபகார ஶீலன்.  (செய்யது என்று தொடங்கி.) – ஆதி3த்யனும் ப்ரபை4யும் சேர்ந்திரு க்கிறபடியைக் கண்டு ‘இது ஸ்ரீத4ரனுடைய வடிவு’ என்று ஹ்ருஷ்டையாம்.  ‘பெரிய பிராட்டியார் ஸந்நிஹிதையாயிருக்கச் செய்தே நான் அவனைப் பெறாதொழிவதே!’ என்று ஶிதி2லையாம்.  அந்த ஶைதி2லயத்தாலே கண்ணீர் மல்க நின்று தன்னுடைய தா4ரணார்த்த2மாகத் தன்னோடு அவனுக்கு உண்டான ஸம்ப3ந்த4த்தை நினைத்து, நாராயணனென்னும். ­­­­4-4-2

மூன்றாம் பாட்டு

அறியும்செந்தீயைத்தழுவி அச்சுதனென்னும்மெய்வேவாள்
எறியும்தண்காற்றைத்தழுவி என்னுடைக்கோவிந்தனென்னும்
வெறிகொள்துழாய்மலர்நாறும் வினையுடையாட்டியேன்பெற்ற
செறிவளைமுன்கைச்சிறுமான் ய்கின்றதென்கண்ணுக்கொன்றே.

மூன்றாம் பாட்டில், இவளுடைய அதிப்ரவ்ருத்திகளைச் சொல்ல என்று புக்கு ‘அவற்றுக்கு எண்ணில்லை’ என்கிறாள்.

(அறியும் என்று தொடங்கி.) – ‘மந்த்ராதி3களாலே ப்ரதிப3த்34 ஶக்திக மன்று’ என்று அறியப்படுகிற செந்தீயை ஔஜ்ஜ்வல்யத்தாலே எம்பெருமானாகக் கருதித் தழுவி ‘நாம் மங்காதபடி வந்து ஸந்நிஹிதனா னான்’ என்று சொல்லாநின்று கொண்டு  அத3க்34கா3த்ரையுமாம்.  (எறியும் என்று தொடங்கி) – இனிதாகவீசும் காற்றைப் பசுமேய்த்துத் தன்னோடே ஸம்ஶ்லேஷிக்க வருகிற க்ருஷ்ணனாகக் கொண்டு தழுவி ப்ரீதி உள்ளடங்காமையாலே ‘என்னுடைய கோ3விந்தன்’ என்னாநின்றாள்.  உடம்பெல்லாம் அதிபரிமளமான திருத்துழாய் நாறாநிற்கும்.  (வினை என்று தொடங்கி) – இவளை இங்ஙனே காண்கைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின என் வயிற்றிலே பிறந்த. ‘செறிவளை முன்கைச் சிறுமான்’ என்றது, விஶ்லேஷ வ்யஸநத்தில் புதியது உண்ணாதவளென்றும், தன் கையையும் வளையையும் கண்டார் படும் பாட்டைத் தான் படாநின்றாள் என்றுமாம். ­­­­4-4-3.

நான்காம்பாட்டு

ஒன்றியதிங்களைக்காட்டி ஒளிமணிவண்ணனேயென்னும்
நின்றகுன்றத்தினைநோக்கி நெடுமாலே! வாவென்றுகூவும்
நன்றுபெய்யும்மழைகாணில் நாரணன்வந்தானென்றுஆலும்
என்றினமையல்கள்செய்தார் என்னுடைக்கோமளத்தையே.

நாலாம் பாட்டில், வ்யஸநஸநை யன்றியே இருக்கிற இவளை இப்படி நோவு படுத்தினானென்று கே2திக்கிறாள்.

(ஒன்றிய என்று தொடங்கி.) – பூர்ணசந்த்3ரனைக் காட்டி ‘இவன் ஶ்ரமஹரமான நிறத்தையுடைய எம்பெருமானே’ என்னாநின்றாள்.  நின்றதொருமலையைப் பார்த்து ஸகல லோகங்களையும் அளக்கைக்கு வளர்ந்தருளின எம்பெருமானென்றே கொண்டு ‘என் ஆர்த்தி தீர வாராய்’ என்று அழைக்கும்.  ஸாபராத்4னாய்க் கிட்டவா அஞ்சிநிற்கிறானாகக் கொண்டு ‘உன்னுடைய ஸ்நேஹாதிஶயம் அறியோமோ? வாராய்’ என்று க்ஷேப பூர்வமாக அழைக்கும் என்றுமாம்.  (நன்று என்று தொடங்கி) – அபேக்ஷிதமான த3ஶையில் வர்ஷிக்கும் மேக4த்தைக் கண்டால், மயில் கள் நின்று ஆலுமாபோலே ‘நாராயணன் வந்தான்’ என்று ஸ்ம்ப்4ரமியா நிற்கும்.  (என்றினமையல்கள்) – து3:கா2நுப4வத்துக்குப் பாத்தமில்லாத என்மகளை, சொன்ன இப்படியே பிச்சேறப் பண்ணினான்; அதிபாலை யாயிருக்கிற இவளை என்று இப்பாடு படுத்தினான் என்றுமாம். 4-4-4.

ஐந்தாம் பாட்டு

கோமளவான்கன்றைப்புல்கிக் கோவிந்தன்மேய்த்தனவென்னும்
போமிளநாகத்தின்பின்போய் அவன்கிடக்கைஈதென்னும்
ஆமளவொன்றுமறியேன் அருவினையாட்டியேன்பெற்ற
கோமளவல்லியைமாயோன் மால்செய்துசெய்கின்றகூத்தே.

அஞ்சாம் பாட்டில், ‘இவளுக்கு இவ்வவஸாத3ம் எவ்வளவாய் முடியக்கடவது’? என்று அறிகிறிலேன் என்கிறாள்.

(கோமளவான் என்று தொடங்கி.) – ஸுகுமாரமான ஆன்கன்றுகளைத் தழுவி ஹ்ருஷ்டையாய் ‘இவற்றுக்கு இப்பௌஷ்கல்யம் உண்டாயிற்றது க்ருஷ்ணன் மேய்க்கையாலே’ என்னாநின்றாள்.  போகிறதோர் இளம் பாம்பைத் தொடர்ந்து ‘ இது அவன் படுக்கை’ என்னாநின்றாள்.  (அருவினையாட்டியேன் என்று மேலுக்கு) – இவ்வவஸ்தா2பந்நையாக இவளைக் காண்கைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின நான் பெற்ற ஸுகுமாரையான என் பெண்பிள்ளையைத் தன் ப்ரணயித்வத்தைக் காட்டிப் பிச்சேற்றி யடிக்கிற ஆட்டம். 4-4-5.

ஆறாம் பாட்டு

கூத்தர்குடமெடுத்தாடில் கோவிந்தனாமெனாஓடும்
வாய்த்தகுழலோசைகேட்கில் மாயவனென்றுமையாக்கும்
ஆய்ச்சியர்வெண்ணெய்கள்காணில்அவனுண்டவெண்ணெய் ஈதென்னும்
பேய்ச்சிமுலைசுவைத்தார்க்கு என்பெண்கொடியேறியபித்தே!

ஆறாம் பாட்டில், தன் மகளுடைய பிச்சுக்கு நிதா3நம் இன்னது என்கிறாள்.

(கூத்தர் என்று தொடங்கி.) – குடக்கூத்தாடுவரைக் காணில் கோ3விந்த னென்றே ‘காணுவோம்’ என்று ஓடும்.  நேர்பட்ட குழலோசை கேட்கில்        ‘ஒருவன் குழலூதும்படியே!’ என்று எம்பெருமானாகக் கொண்டு மோஹிக்கும்.  (ஆய்ச்சியர் என்று தொடங்கி.) – இடைச்சிகள் கையிலே வெண்ணெய்கள் காணில் ‘ அவன் அமுது செய்த வெண்ணெயோடு ஸஜாதீயம்’ என்று விரும்பும்.  பூதனையை முலையுண்கிறாணாய் முடித்த உபகாரம் நிமித்தமாக, அத்யந்த விலக்ஷணையன என்மகள் ஏறின பிச்சுக்கள் இவை. 4-4-6.

ஏழாம் பாட்டு

ஏறியபித்தினோடு எல்லாவுலகும்கண்ணன்படைப்பென்னும்
நீறுசெவ்வேயிடக்காணில் நெடுமாலடியாரென்றோடும்
நாறுதுழாய்மலர்காணில் நாரணன்கண்ணிஈதென்னும்
தேறியும்தேறாதும்மாயோன் திறத்தனளேஇத்திருவே.

ஏழாம் பாட்டில், ‘தேறினபோதோடு தேறாதபோதோடு வாசியின்றிக்கே எப்போதும் அவன் திறமல்லது அறிகிறிலள்’ என்கிறாள்.

(ஏறிய என்று தொடங்கி.) – பிச்சேறியிருந்துவைத்தே இஜ்ஜக3த்தெல்லாம் க்ருஷ்ணனாலே ஸ்ருஷ்டமாயிற்றென்று தத்ஸம்ப3ந்த4 நிப3ந்த4நமாக விரும்பிச் சொல்லாநிற்கும்.  ப4ஸ்மத்தைக்கொண்டு மேல்நோக்கியிடி லும் கலக்கத்தின் மிகுதியாலே ஸ்ரீவைஷ்ணவர்களாகக் கொண்டு அவர்கள் நின்ற விடம் ஏற ஓடா நிற்கும்.  (இத்திரு) – பெரியபிராட்டியா ரோடு விகல்பிக்கல்லாம் ஸ்வபா4வையான இவள். 4-4-7.

எட்டாம் பாட்டு

திருவுடைமன்னரைக்காணில்திருமாலைக்கண்டேனேயென்னும்
உருவுடைவண்ணங்கள்காணில் உலகளந்தானென்றுதுள்ளும்
கருவுடைத்தேவில்களெல்லாம் கடல்வண்ணன்கோயிலேயென்னும்
வெருவிலும்வீழ்விலு மோவாக் கண்ணன்கழல்கள்விரும்புமே.

எட்டாம் பாட்டில், அத்யந்தம் து3ர்த்33ஶை வர்த்தியாநின்றாலும் இவள் ததே3கப்ரையாயிருக்கும் என்கிறாள்.

(திருவுடை என்று தொடங்கி.) – ஸ்ரீமான்களான ராஜாக்களைக் காணில் ‘ஶ்ரிய:பதியைக் கண்டேனே’ என்று த்ருப்தையாம்.  காயாம்பூ முதலான பதா3ர்த்த2ங்களுடைய நல்ல நிறங்களைக் கண்டால் ‘இச்செவ்வியுள்ளது திருவுலகளந்தருளின எம்பெருமானுக்கு’ என்றே அத்4யவஸித்து ப்ரீதி யாலே ஸம்ப்4ரமிக்கும்.  (கருவுடை என்று தொடங்கி.)  – ப்ரதிமாவத்தான தே3வாலயங்களெல்லாம் ‘கடல்வண்ணன் கோயிலே’ என்னும்.  ப3ந்து4க் களைக்கண்டு அஞ்சுந்த3ஶையிலும் மோஹித்த த3ஶையிலும் அகப்பட நிரந்தரமாக க்ருஷ்ணனுடைய திருவடிகளை விரும்பாநிற்கும். 4-4-8.

ஒன்பதாம் பாட்டு

விரும்பிப்பகவரைக்காணில் வியலிடமுண்டானேயென்னும்
கரும்பெருமேகங்கள்காணில் கண்ணனென்றேறப்பறக்கும்
பெரும்புலவாநிரைகாணில் பிரானுளனென்றுபின்செல்லும்
அரும்பெறல்பெண்ணினைமாயோன் அலற்றியயர்ப்பிக்கின்றானே.

ஒன்பதாம் பாட்டில், பெறுதற்கரியளான இப்பெண்பிள்ளையை இவ்வளவன்றிக்கே நோவுபடுத்தாநின்றான் என்கிறாள்.

(விரும்பி என்று தொடங்கி.) – ப43வத் ப்ரவணராய் இதர விஷயங்களில் நிரபேக்ஷராயிருக்கும் ப43வான்களைக் காணில் அவர்களை ஆதரித்து அவர்களுடைய நைரபேக்ஷ்யத்தாலே ஜக3த்தினுடைய ப்ரளயாபத்தைத் தீர்த்து நிர்ப்ப4ரனான எம்பெருமானே! என்னாநிற்கும், கறுத்துப் பெருத்திருக்கும் மேக4ங்களைக் காணில் எம்பெருமானென்று நினைத்து ஹர்ஷப்ரகர்ஷத்தாலே அங்கே செல்லப் பறப்பாரைப்போலே அலமரா நிற்கும்.  (பெரும்புலம் என்று தொடங்கி.) – ஸமக்3ரமாய்த் தர்ஶநீயமான பசுநிரையைக் காணில், ‘ஆஶ்ரிதாநுக்3ரஹபரனான க்ருஷ்ணனும் உடனே எழுந்தருளுகிறான்’ என்று அதன் பின்னே செல்லும், பெறுதற் கரிய பெண்ணினைத் தன்னுடைய ப்ரணயித்வாதி கல்யாண கு3ணங்க ளைக் காட்டி ப்ரலாபித்து மோஹிக்கும்படியாகப் பண்ணாநின்றான். 4-4-9.

பத்தாம் பாட்டு

அயர்க்கும்சுற்றும்பற்றிநோக்கும் அகலவேநீள்நோக்குக்கொள்ளும்
வியர்க்கும்மழைக்கண்துளும்ப வெவ்வுயிர்கொள்ளும்மெய்சோரும்
பெயர்த்தும்கண்ணாஎன்றுபேசும் பெருமானேவாவென்றுகூவும்
மயற்பெருங்காதலென்பேதைக்கு என்செய்கேன்வல்வினையேனே.

பத்தாம் பாட்டில், ஸ்மாரக பதா3ர்த்தா2நுஸந்தா4ந க்ஷமமல்லாத படியான வ்ய்ஸநாதி3ஶயத்தாலே தன் பெண்பிள்ளைக்குப் பிறந்த விக்ருதிகளைச் சொல்லி ‘நான் என்செய்வேன்?’ என்கிறாள்.       (அயர்க்கும் என்று தொடங்கி.) – சிந்தா வ்யாபாரமின்றியே யிருக்கும்.  அதுக்கு மேலே காற்றடிக்கிலும் அவன் வந்தானாகக்கொண்டு சுற்றும் ஸாத3ரமாக நோக்கும்; அங்குக்காணாமையாலே ப்ரத2ம பரிஸ்பந்தம் தொடங்கிக் காணலாம்படி பெரும் பரப்பாகக்கொண்டு அவன் இருக்க ஸம்பா4வநையுள்ள தேஶத்தளவும் தூரநோக்கும்.  அங்குக்காணாவிட்ட வாறே ‘நான் இப்படி நோவுபடாநிற்க, வாராதொழிவதே!’ என்று குபிதை யாய் வேர்க்கும்.  கோபமும் ஆறி ஶோகத்தாலே அழும்.  அதுவும் போய்ச் செயலற்று மூச்செறியும்.  பின்னையும் என்று சொல்ல்லும்.  இவ்வழியே பிறந்த அனுஸந்தா4ந ப்ரகர்ஷத்தாலே யுண்டான உருவேளிப்பாட்டாலே அவன் வந்தானாகக்கொண்டு அவனை ஸம்போ3தி4த்து ‘வரலாகாதோ?’ என்று அழைக்கும்.  இப்படி தான் மதிகெடுகைக்கு ஈடான அதிஸ்நேஹத் தைப் பண்ணி ஹிதம் சொன்னால் கேட்கும் பருவமின்றிக்கே யிருக்கிற என்னுடைய பாலைக்கு மஹாபாபியான நான் செய்வதொன்றும் காண்கிறிலேன். 4-4-10.

பதினொன்றாம் பாட்டு

வல்வினைதீர்க்கும்கண்ணனை வண்குருகூர்ச்சடகோபன்
சொல்வினையாற்சொன்னபாடல் ஆயிரத்துள்இவைபத்தும்
நல்வினையென்றுகற்பார்கள் நலனிடைவைகுந்தம்நண்ணித்
தொல்வினைதீரஎல்லாரும் தொழுதெழவீற்றிருப்பாரே.

நிக3மத்தில் இத்திருவாய்மொழிகற்பார் ஸம்ஸார து3ரிதம் நீங்கி ப43வத் விஶ்லேஷ க3ந்த4மில்லாத திருநாட்டிலே எல்லாரும் ஶிரஸாவஹிக்கும்படி பெருவீறோடே யிருப்பார் என்கிறார்.      (வல்வினை என்று தொடங்கி.) – ஆஶ்ரிதருடைய து3:கா2பநோதந ஸ்வபா4வனான க்ருஷ்ணனை ஆழ்வார் கு3ணபலாத்காரத்தாலே அருளிச் செய்த ஆயிரந்திருவாய்மொழியிலும் இத்திருவாய்மொழி ஸ்நேஹமில் லையாகிலும் நன்று என்றாகிலும் கற்பார்.  4-4-11.

நஞ்சீயர் திருவடிகளேரணம்

அவதாரிகை    4-5

வீற்றிருந்துப்ரவேசம்

அஞ்சாந்திருவாய்மொழியில், எம்பெருமான் ஆழ்வாரோடு விஶ்லேஷிக் கையாலே அத்யந்தம் அவஸந்நரான ஆழ்வாருக்குத் தன்னைப் பிரிகை யாலே அக்ஷணத்திலே தன்னைப் பூர்ணமாகப் பு4ஜிப்பிக்கைக்கு ஈடான ப4க்த்யாரோக்3யம் பிறந்தபடியைக் கண்டு; ஶ்ருதீதிஹாஸாதி3களுக்குத் தாத்பர்ய பூ4மியாய் ப்ரஹ்மாதி3களாலே அறியமுடியாதே ஶுபா4ஶ்ரய ப்ரகரணங்களிற் சொல்லுகிறபடிகளாலே எப்போதும் த்4யாநம் பண்ணப் படுவானுமாய்த் தனக்கே அஸாதா4ரணமான ஐஶ்வர்யத்தை யுடைய னாய் ஸ்ரீவைகுண்ட2 தி3வ்யலோகத்திலே அயோத்4யை என்றும், அபரா ஜிதை என்றும் ஶ்ருதிகளிற் பேசப்படுகிற திருநகரியிலே ஆநந்த3மய மான தி3வ்யாஸ்தா2நத்திலே தி3வ்யபர்யங்கத்திலே ஸமஸ்த கல்யாண கு3ணாத்மகனாய் ஸர்வபூ4ஷண பூ4ஷிதனாய் ஸர்வாயுதோ4பேதனாய் அயர்வறுமமரர்கள் நித்யஸேவை பண்ணப் பெரிய பிராட்டியாரோடு கூட வீற்றிருந்தருளி அவ்விருப்பிலே உப4யவிபூ4தியையும் நடத்துவதும் செய்து ப்ரணத ஜந பரித்ராணார்த்த2மாகத் தே3வமநுஷ்யாதி3ரூபேண அவதீ4ர்ணனாய் அகி2லஜந மநோநயநஹாரி தி3வ்ய சேஷ்டித விஶிஷ்ட னாய் ஆத்மேஶ்வரனாய் ஆத்மாவுக்கு ஶரண்யமாய் ஆத்மாவுக்கு நிரதிஶய போ4க்3யமாயிருக்கிற தன்னைத் தன்னுடைய க்ருபையாலே ஸாக்ஷாத்கரிப்பிக்க, இவரும் வந்த3ந ஸ்தோத்ர பூர்வகமாக அடிமைகளை யெல்லாம் செய்து தாம் க்ருதக்ருத்யராய் எம்பெருமானைப் பெற்றாரில் உப4யவிபூ4தியிலும் என்னோடு ஒப்பாரில்லை என்று அதிப்ரீதராகிறார்.

முதல் பாட்டு

வீற்றிருந்துஏழுலகும் தனிக்கோல்செல்லவீவில்சீர்
ஆற்றல்மிக்காளும்அம்மானை வெம்மாபிளந்தான்தன்னைப்
போற்றியென்றேகைகளாரத் தொழுதுசொல்மாலைகள்
ஏற்றநோற்றேற்கு இனியென்னகுறைஎழுமையுமே?

முதற் பாட்டில்,  ஸர்வேஶ்வரனாய்வைத்து மநுஷ்ய ஸஜாதீயனாய் வந்து திருவவதாரம் பண்ணியருளி ஆஶ்ரித ஸம்ரக்ஷணம் பண்ணி யருளுகிற க்ருஷ்ணனைக் கவிபாடப்பெற்ற எனக்கு ஒருநாளும் ஒரு குறையில்லை என்கிறார்.

(வீற்றிருந்து என்று தொடங்கி.) – ஸர்வேஶ்வரனான வேறுபாடு தோற்றும் படி இருந்து ஸகலலோகங்களும் தன்னுடைய ஶாஸநம் சொல்லும்படி, எழென்று லீலாவிபூ4திக்கு உபலக்ஷணம்.  (வீவில் சீராற்றல் மிக்காளுமம் மானை) – ஒரு நாளும் அழிவில்லாத நித்ய விபூ4தியை அநுத்த4தனாய் ஆளுமவனை; சுத்த4ஸத்த்வமயமாயும் ரஜஸ்தமோமிஶ்ரமாயுமுள்ள ப்ரக்ருதி த்3வயமும் இரண்டினுடைய கார்யங்களுக்குமிடையே நித்ய ஸித்த43த்34முக்த கோடித்ரயமுமான சேதநர்களுமாக ஏழுலோகம் என்றுமாம்.  ‘வீவில்சீர்’ என்று கல்யாண கு3ணங்களென்றும் சொல்லுவர்.  (வெம்மா பிளந்தான்தன்னை) – இவ்வவதாரத்தை ஆற்றல் மிக்கு ஆள் கைக்கு உதா3ஹரணமென்றும், ஆற்றல்மிக்கு ஆளுமவன் இன்னா னென்று சொல்லுகிறது என்றும் சொல்லுவர்.  (போற்றி என்று தொடங்கி.) – போற்றியென்று நிரந்தரமாகச் சொல்லாநின்றுகொண்டு, கைகளின் விடாய்களெல்லாம் தீரத் தொழுது நல்லஸ்ரக்குக்கள் போலே ஶிரஸா வஹிக்கும்படியாகத் திருவாய்மொழி பாடுகைக்கு ஈடான பா4க்3யம் பண்ணின எனக்கு. ­­4-5-1.

இரண்டாம் பாட்டு

மையகண்ணாள்மலர்மேலுறைவாள் உறைமார்பினன்
செய்யகோலத்தடங்கண்ணன் விண்ணோர்பெருமான்தன்னை
மொய்யசொல்லால் இசைமாலைகளேத்தி உள்ளப்பெற்றேன்
வெய்யநோய்கள்முழுதும் வியன்ஞாலத்துவீயவே.

இரண்டாம் பாட்டில்,  இந்த மஹைஶ்வர்யத்துக்கு நிதா3நமான லக்ஷ்மீநாத2த்வத்தை அருளிச்செய்கிறார்.

(மைய கண்ணாள் என்று தொடங்கி.) – அஸிதேக்ஷணையாய் மலரின் மேலே உறையக்கடவ பெரியபிராட்டியார் மலரிற்காட்டில் விரும்பித் தன் திருக்கண்களாலே வர்ஷித்துக்கொண்டு நித்யவாஸம்பண்ணுகிற திரு மார்பையுடையனுமாய், அவளோட்டை ஸம்ஶ்லேஷாதி3ஶயத்தாலே மது4 பாநமத்தரைப்போலே சிவந்து அழகியதான திருக்கண்களையுடைய னாய், இவ்வழகு காட்டில் எறித்த நிலாவாகாமே இதுக்குப் போ4க்தாக்க ளான நித்யஸூரிகளையுடையவனைச் செறிந்த சொற்களாலே இசை மாலகளைக்கொண்டு ஏத்தி நினைக்கப்பெற்றேன்.  (வெய்யநோய்கள் என்று தொடங்கி.) – இப்பூ4மியிலே இருக்கச்செய்தே ஸாம்ஸாரிக ஸகல து3ரிதங்களும் போம்படி; லோகத்தில் துரிதங்களுமெல்லாம் நசிக்கும்படி என்றுமாம். 4-5-2.

மூன்றாம் பாட்டு

வீவிலின்பம் மிக எல்லைநிகழ்ந்தநம்அச்சுதன்
வீவில்சீரன்மலர்க்கண்ணன் விண்ணோர்பெருமான்தன்னை
வீவில்காலமிசைமாலைகளேத்தி மேவப்பெற்றேன்
வீவிலின்பம்மிக எல்லைநிகழ்ந்தனன்மேவியே.

மூன்றாம் பாட்டில், ஆநந்தவல்லியில் ஓதப்பட்ட ஸர்வேஶ்வரனு டைய நிரதிஶயாநந்தத்தை விஞ்சிற்று, திருவாய்மொழி பாடி அடிமை செய்யப் பெறுகையால் தமக்குப் பிறந்த ஆநந்தம் என்கிறார்.

(வீவிலின்பம் என்று தொடங்கி.) – நித்யமாய் நிரதிஶயமான ஆநந்தத்தை யுடையனாக ப்ரஸித்த4னாய், இப்படியாலே அச்யுதனென்னும் திருநாமத் தையுடையனாய், இவ்வாநந்தத்துக்கு அடியாய் நித்யமான ஸம்பத்தை யுடையனாய், இஸ்ஸம்பத்தை யுடையவனென்று அறியலாம்படி அழகிய திருக்கண்களையுடையவனை.   இஸ்ஸம்பத்துக்கு அயர்வறும் அமரர் களை போ4க்தாக்களாகப்பெற்றது என்னும் ப்ரீத்யதிஶயத்தினாலே பாட்டுக்கள் தோறும் ’விண்ணோர் பெருமான்’ என்கிறார்.  (வீவில் காலம் என்று மேலுக்கு.) – முடிவில்லாத காலம் திருவாய்மொழி பாடி அநுப4விக்க ப்பெற்றேன்.  (வீவில் என்று தொடங்கி.) – இப்படி அநுப4வித்து நித்ய நிரதிஶயாநந்தியானேன். 4-5-3.

நான்காம் பாட்டு

மேவிநின்றுதொழுவார் வினைபோகமேவும்பிரான்
தூவியம்புள்ளுடையான் அடலாழியம்மான்தன்னை
நாவியலால்இசைமாலைகளேத்தி நண்ணப்பெற்றேன்
ஆவியென்னாவியை யானறியேன்செய்தவாற்றையே.

நாலாம் பாட்டில், அயர்வறுமமரர்களதிபதியாயிருந்துவைத்து அத்யந்த நிஹீநனான என்னை விஷயீகரித்தருளினானென்று அந்த மஹோபகாரத்தை அநுஸந்தி4த்து அதிலே ஈடுபடுகிறார்.

(மேவி என்று தொடங்கி.) – அநந்யப்ரயோஜநராய்க்கொண்டு ஆஶ்ரயிக்கு மவர்களுடைய ஸகலது3:க2ங்களும் நீங்கும்படி ஸம்ஶ்லேஷிக்கும் உபகாரகனாய், த3ர்ஶநீயவேஷனான பெரிய திருவடியையும் ப்ரதிபக்ஷ நிராஸஶீலனான திருவாழியாழ்வானையு முடைய ஸர்வேஶ்வரனை.  தூவி – சிறகு.  பாட்டுத்தொறும் சொல்லுகிற விண்ணோராவார் – இவர்கள் முதலானார்.  (நாவியல் என்று தொடங்கி) – நெஞ்சின் வருத்தமின்றிக்கே வாக்ப்ரவ்ருத்தி மாத்ரத்தாலே பிறந்த திருவாய்மொழியைக்கொண்டு அவனை ஏத்தி அநுப4விக்கப்பெற்றேன். (ஆவி என்று தொடங்கி) – ஸர்வேஷாம் ஆத்மபூ4தனானவன், அத்யந்த நிஹீநனான என்விஷயத்திற் செய்த உபகாரத்தினுடைய பெருமையை என்னாலே நிலையிடவொண் கிறதில்லை. 4-5-4.

ஐந்தாம் பாட்டு

ஆற்றநல்லவகைகாட்டும் அம்மானை அமரர்தம்
ஏற்றை எல்லாப்பொருளும்விரித்தானைஎம்மான்தன்னை
மாற்றமாலைபுனைந்தேத்தி நாளும்மகிழ்வெய்தினேன்
காற்றின்முன்னம்கடுகி வினைநோய்கள்கரியவே.

அஞ்சாம் பாட்டில், அயர்வறுமமரர்களதிபதியாய் ஸர்வேஶ்வரனா யிருந்துவைத்து அர்ஜுநனுக்கு ஸகலார்த்த2ங்களையும் அருளிச்செய் தருளினாற்போலே எனக்குப் பொறுக்கத் தன் கு3ண சேஷ்டிதாதிகளைக் காட்டி அவ்வழியாலே என்னை அடிமை கொண்டவனை அநுப4வித்து மிகவும் ப்ரீதனானேன் என்கிறார்.

(மாற்ற மாலை என்று தொடங்கி.) – து3:க2ங்களும் து3:க2ஹேதுவான கர்மங்களுமெல்லாம் சடக்கென த3க்34மாம்படி சொன்மாலையைத் தொடுத்து ஏத்தி நாடோறும் ப்ரீதனானேன். 4-5-5.

ஆறாம் பாட்டு

கரியமேனிமிசை வெளியநீறுசிறிதேயிடும்
பெரியகோலத்தடங்கண்ணன் விண்ணோர்பெருமான்தன்னை
உரியசொல்லால் இசைமாலைகளேத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியதுண்டோஎனக்கு இன்றுதொட்டும் இனியென்றுமே.

ஆறாம் பாட்டில், ‘உமக்கு வேண்டுவது என்?’ என்று எம்பெருமான் கேட்க, ‘நான் பெறாதே இனி ஸாதித்துதரவேண்டுவது ஒரு பொருளுண்டோ?’ என்கிறார்.

(கரியமேனி என்று மேலுக்கு) – கரிய விழியினுடைய அழகுக்குமேலே அளவே இடப்பட்ட அஞ்சநசூர்ணத்தையுடைத்தாய், பெருத்து அழகிய தான திருக்கண்களையுடையனாய், அயர்வறுமமரர்களாலும் ப4ஜித்து முடியவொண்ணாதபடி அறமிக்கிருந்துள்ள அழகையுடையவனை; கறுத்ததிருவுடம்பின் அழகுக்குமேலே என்றுமாம்.  (உரியசொல்லால் என்று மேலுக்கு) – நேரேவாசகமான சொல்லாலே இசைமாலைகளேத்தி அவனை நினைக்கப்பெற்ற எனக்கு. 4-5-6.

ஏழாம்பாட்டு

என்றுமொன்றாகி ஒத்தாரும்மிக்கார்களும் தன்தனக்கு
இன்றிநின்றானை எல்லாவுலகும்உடையான்தன்னை
குன்றமொன்றால்மழைகாத்தபிரானைச் சொல்மாலைகள்
நன்றுசூட்டும்விதியெய்தினம் என்னகுறைநமக்கே.

ஏழாம் பாட்டில், இஸ்ஸம்பத்தெல்லாம் அவன் ப்ரஸாத3த்தாலே பெற்றேன் என்கிறார்.

(என்றும் என்று தொடங்கி) – தன் ஐஶ்வர்யத்தை ஆவிஷ்கரியாதே மநுஷ் யாதிமாத்ரமாய் வந்து திருவவதாரம்பண்ணியருளின இடத்திலும் என்றும் ஒருவகையாலும் தனக்கு ஒத்தாரையும் மிக்காரையும் இல்லாத ஸர்வலோகேஶ்வரனை. (குன்றம் என்று தொடங்கி) – தனக்கு ரக்ஷணீய ஜந்துக்கள் மழையாலே நோவுபடப்புகக் கிடந்ததொரு மலையை எடுத்து அவ்வாபத்தைப் பரிஹரித்தருளின மஹோபகாரகனைத் திருவாய் மொழியாகிற மாலைகாளை அவன் விரும்பும்படி சூட்டுகைக்கு பா4க்3யத்தைப் பண்ணினேன். 4-5-7.

எட்டாம் பாட்டு

நமக்கும்பூவின்மிசைநங்கைக்கும்இன்பனை ஞாலத்தார்
தமக்கும்வானத்தவர்க்கும்பெருமானைத் தண்தாமரை
சுமக்கும்பாதப்பெருமானைச்சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்கவல்லேற்கு இனியாவர்நிகர்அகல்வானத்தே.

எட்டாம் பாட்டில், எம்பெருமானுக்குத் தமபக்கல் உண்டான ஸங்காதிஶயத்தை அநுஸந்தி4த்து, இப்படியிருக்கிற ஸர்வேஶ்வரனைக் கவிபாடவல்ல எனக்குத்திருநாட்டிலும் நிகரில்லை என்கிறார்.

(நமக்கும் பூவின்மிசை நங்கைக்கு மின்பனை) – தன் திருவடிகளை ஆஶ்ரயித்த நம் திறத்தில் பெரியபிராட்டியார் பக்கலிற்காட்டிலும் ஸ்நிக்34னானவனை.  (ஞாலத்தார்தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானை) – எம்பெருமான் இப்படி ஸ்நேஹிக்கைக்குக் காரணம் நிஸர்க்க3 ஸித்34மான ஶேஷஶேஷிபா4வம்.  (தண்தாமரை சுமக்கும் பாதப்பெருமானை) – குளிந்திருந்துள்ள ஆஸநப3த்மத்தாலல்லது செல்லாதபடியான ஸுகுமாரமான திருவடிகளையுடைய ஸர்வேஶ்வ ரனை.  ஆஸநபத்3மத்தோடு ஒக்க என்சொல்மாலைகளும் அவனுக்கு ஸ்ப்ருஹணீயமென்று கருத்து.  (சொல்மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு) – எம்பெருமானுடைய குணங்களை நினைத்துக் கலங்கச்செய்தே கவிபாடுகைக்கு ஈடாக நெஞ்சை நிலைநிறுத்தி அதிலே உபக்ரமிக்கக்கடவ எனக்கு. ‘ஒருகவிசொல்’ என்றால், அப்போதே சொல்ல வல்ல எனக்கு என்றும் சொல்லுவர். 4-5-8.

ஒன்பதாம் பாட்டு

வானத்தும்வானத்துள்ளும்பரும் மண்ணுள்ளும்மண்ணின்கீழ்த்
தானத்தும் எண்திசையும்தவிராதுநின்றான்தன்னை
கூனற்சங்கத்தடக்கையவனைக் குடமாடியை
வானக்கோனைக் கவிசொல்லவல்லேற்கு இனிமாறுண்டே.

ஒன்பதாம் பாட்டில், அவனுடைய வ்யாப்த்யவதாராதிகளில் எங்கும்புக்குக் கவிசொல்ல வல்லேனென்று ஹ்ருஷ்டராகிறார்.    (வானத்து என்று தொடங்கி.) – ஸ்வர்க்க3ம் தொடக்கமான மேலில் லோக ங்களிலும் பூ4மி தொடக்கமான கீழில் லோகங்களிலும் அவ்விடங்களிலெ ல்லாம் உண்டான தே3வ மநுஷ்யாதி3 பதா3ர்த்த2ங்களெல்லாவற்றிலும் நிரந்தரமாக வ்யாபித்து நின்றவனை.  (கூனல் சங்கம் என்று தொடங்கி.) – ஶங்க2 சக்ரக3தா34ரனாய்க்கொண்டு அப்ராக்ருத தி3வ்ய தே3ஹத் தோடே ஆஶ்ரித பரித்ராணார்த்த2மாக மநுஷ்யாதி3ரூபேண வந்து திருவவதாரம்பண்ணியருளி அதி மநோஹரமான குடக்கூத்து முதலான தி3வ்ய சேஷ்டிதங்களையுடையனான ஸ்ரீவைகுண்ட2நாத2னைக் கவி சொல்லவல்ல எனக்கு எதிருண்டோ? 4-5-9.

பத்தாம் பாட்டு

உண்டும்உமிழ்ந்தும்கடந்தும்இடந்தும் கிடந்தும்நின்றும்
கொண்டகோலத்தொடுவீற்றிருந்தும் மணங்கூடியும்
கண்டவாற்றால் தனதேயுலகெனநின்றான்தன்னை
வண்தமிழ்நூற்கநோற்றேன் அடியார்க்குஇன்பமாரியே.

பத்தாம் பாட்டில், தாம் பாடுகிற கவிகளின் இனிமையைத் தாம் அநுஸந்தித்து, எம்பெருமானுக்கு நல்லராயிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்கள் இவற்றைக்கேட்டால் எங்ஙனே இனியராகிறாரோ? என்கிறார்.

(உண்டும் என்று தொடங்கி.) – உண்பது உமிழ்வது தொடக்கமாக வுண்டான  தி3வ்ய சேஷ்டிதங்களெல்லாவற்றாலும் கண்டபடியால் தனக்கே ஶேஷம் இஜ்ஜக3த் என்று சொல்லும்படி நின்ற ஸர்வேஶ்வரனை. கொண்ட கோலத்தொடு வீற்றிருக்கையாவது – எல்லாருடைய மநோநயந ஹாரியாம்படி ஒப்பித்து வீற்றிருக்கை.  மணம் கூடுகையாவது – பூ4மிக்கு அபி4மாநிநியான பிராட்டியோடே ஸம்ஶ்லேஷிக்கை.  (வண்தமிழ்நூற்க நோற்றேன்) – திருவாய்மொழி பாடுகைக்கு பா4க்3யம் பண்ணினேன்; வண்தமிழாகையவது – எம்பெருமானை உள்ளபடி காட்டவற்றாகை.  (இன்பமாரி) – இன்பத்தை யுண்டாக்கும் மேக4ம். 4-5-10.

பதினொன்றாம் பாட்டு

மாரிமாறாததண்ணம்மலை வேங்கடத்தண்ணலை
வாரிமாறாதபைம்பூம்பொழில்சூழ் குருகூர்நகர்க்
காரிமாறன்சடகோபன் சொல்லாயிரத்துஇப்பத்தால்
வேரிமாறாதபூமேலிருப்பாள் வினைதீர்க்குமே.

ஆழ்வார் திருவடிகளே சரணம்

நிகமத்தில், ‘நமக்கும் பூவின்மிசைநங்கைக்கும்’   என்கிற இம் மஹாகு3ணத்திலே ஈடுபட்டிருக்கிற பெரியபிராட்டியார் இக்கு3ணத்தை யறிந்தருளின ஆழ்வாரைத்  தமக்குத்துணையாகப் பெற்றோமென்னும் ப்ரீதியாலே இவர் அருளிச்செய்த இக்கு3ணப்ரதிபாதகமான இப்பத்தை யும் கற்றவர்களைத் தனக்கே பா4ரமாகக்கொண்டு ஸமஸ்த து3:க2ங்க ளையும் போக்கி ரக்ஷித்தருளும் என்கிறார்.

(மாரிமாறாத என்று தொடங்கி.) – நிரந்தரவர்ஷத்தாலே ஸ்ரீமஹரமான திருமலையைத் தனக்கு தி3வ்யதா4மமாகவுடையனான திருவேங்கட முடையானை.   (வாரிமாறாத என்று தொடங்கி.) – தாம் எம்பெருமானைப் பெறுகையாலே ஸம்ருத்த4மான  திருநகரியையுடைய ஆழ்வார்வேரிபரிமளம். 4-5-11.

நஞ்சீயர் திருவடிகளேரணம்

நான்காம்பத்து

அவதாரிகை    4-6

தீர்ப்பாரைப்ரவேசம்

ஆறாந்திருவாய்மொழியில், முன்பில் திருவாய்மொழியில் தாம் அநுப4வித்த அநுப4வம் மாநஸாநுப4வமாத்ரமாய் பா3ஹ்யகரண யோக்3ய மல்லாமையாலே ஆழ்வார் அத்யந்தம் அவஸந்நராய் வேறேசிலர் அநுஸந்தி4த்துப் பரிஹரிக்க வேண்டும்படி தமக்குப்பிறந்த தஶையை அந்யாபதே3ஶத்தாலே அருளிச்செய்கிறார்.  ஏவம்வித4னான எம்பெருமானைப் புணர்ந்துபிரிந்தாளொருபிராட்டி ஸ்ரீப4ரதாழ்வான் ஶ்ருங்கி3பே3ரபுரத்திலே பெருமாள் வ்ருத்தாந்தத்தைக் கேட்டு மோஹித் தாற்போலே மோஹித்துக்கிடக்க, இவளுடைய ப3ந்து4ஜநங்கள் மிகவும் கலங்கி நோய் இன்னதென்றும், நோய்க்கு நிதா3நம் இன்னதென்றும் அறியாதே ஒருகட்டுவிச்சியை ‘இது என்னநோய்?’ என்றும், ‘இந்நோய்க்கு நிதா3நம் என்?’ என்றும் கேட்டு, அவள் சொற்படியே பா3ஹ்யாக3மம் த்3ருஷ்டியாகவும், அதிக்ஷுத்3ரமாயிருக்கிறது ஒன்றையே தே3வதை யாகவும், நிந்த்3யமான த்3ர்வயங்களை உபகரணமாகவும் கொண்டு இவள் பக்கலுண்டான ஸ்நேஹாதி3ஶயத்தாலே ஏதேனும் ஒரு வழியாலே இவள் பிழைக்க அமையுமென்று அமார்க்கங்களாலே சிகித்ஸிக்க உபக்ரமிக்க, இவளுடைய ரோக3த்தையும் இவளுடைய ப்ரக்ருதியையும் நேரே அறிந்த தோழியானவள் ‘நோயும் பரிஹாரமும் நீங்கள் நினைக்கிற வையல்ல’ என்று அவர்களை நிவர்த்திப்பித்து, ‘இவளுடைய நோய் இன்னது’ என்றும், ‘இந்நோய்க்கு அடி க்ருஷ்ணன்’ என்றும் சொல்லி வைஷ்ணவ கோ3ஷ்டி2யில் ப்ரஸித்த4மான ப43வந்நாமஸங்க்கீர்த்த நாதிகளாலே இவளைப் பிழைப்பியுங்கோள் என்கிறாள்.

முதல் பாட்டு

தீர்ப்பாரையாம்இனி எங்ஙனம்நாடுதும்? அன்னைமீர்!
ஓர்ப்பால்இவ்வொண்ணுதல் உற்றநல்நோயிதுதேறினோம்
போர்ப்பாகுதான்செய்து அன்றைவரைவெல்வித்த மாயப்போர்த்
தேர்ப்பாகனார்க்கு இவள்சிந்தைதுழாய்த்திசைக்கின்றதே.

முதற் பாட்டில்,  இப்பிராட்டியுடைய தோழியானவள், இந்நோய்க்கு நிதாநத்தைச் சொல்லி ‘நீங்கள் பரிஹாரமாக நினைத்துச் செய்கிறவை பரிஹாரமன்று’ என்று அவற்றை நிவர்த்திப்பிக்கிறாள்.

(தீர்ப்பாரை என்று தொடங்கி.) – நம்மைப்போலே யன்றியே த4ரித்து நின்று இனி நோய்தீர்ப்பாரை நாம் எங்ஙனே தேடுவோம்? (ஓர்ப்பால் என்று தொடங்கி) – அதிலோகமான அழகையுடைய இவள் உற்ற ஸ்ப்ருஹ ணீயமான இந்த நோய் நிரூபணத்தாலே அறிந்தோம்.  (போர்ப் பாகு என்று தொடங்கி) – ஸேநையை அணிவகுக்கை தொடக்கமாக யுத்34த்து க்கு வேண்டும் நிர்வாஹமெல்லாம் தானே பண்ணி த4ர்மபுத்ராதி3கள் ஐவரையும் வெல்விப்பதும் செய்து ஆஶ்சர்யமான யுத்34த்திலே திருத்தேரை நடத்தின க்ருஷ்ணனைப் பெறுகைக்காக இவ்வந்த4:கரணம் கலங்கி மதிகெடுகிறது. 4-6-1.

இரண்டாம் பாட்டு

திசைக்கின்றதேஇவள்நோய் இதுமிக்கபெருந்தெய்வம்
இசைப்பின்றி நீரணங்காடும் இளந்தெய்வமன்றிது
திசைப்பின்றியே சங்குசக்கரமென்றிவள்கேட்க நீர்
இசைக்கிற்றிராகில் நன்றேயில்பெறுமிதுகாண்மினே.

இரண்டாம் பாட்டில்,  ‘க்ஷுத்3ர தே3வதா ஶாந்திகளால் இவ்வ்யாதி4 போக்குகை அரிது; நீங்கள் கலங்காதே எம்பெருமானுடைய திறம் சொல்லில் இவளைப் பெறலாம்’ என்கிறாள்.

(திசைக்கின்றதே என்று தொடங்கி) – இவள் நோய் நீங்கள் அறிகிறிலீர்; இது பரதே3வதையாலே வந்தது.  ஒரு ஸங்க3தியின்றியே நீங்கள் தேவதை யேறியாடுகிற க்ஷுத்3ர தை3வத்தால் வந்ததன்று, இது.  (திசைப்பின்றியே) – ப்4ரமியாதே.  (இசைக்கிற்றிராகில்) – சொல்லவல்லிகோளாகில்.  (இல்பெறும்) – ஜீவிக்கும்.  இல் – உடம்பு. 4-6-2.

மூன்றாம் பாட்டு

இதுகாண்மின்அன்னைமீர்! இக்கட்டுவிச்சிசொற்கொண்டு நீர்
எதுவானும்செய்து அங்கோர்கள்ளும் இறைச்சியும்தூவேன்மின்
மதுவார்துழாய்முடி மாயப்பிரான்கழல்வாழ்த்தினால்
அதுவேஇவளுற்றநோய்க்கும் அருமருந்தாகுமே.

மூன்றாம் பாட்டில்,  ‘அயுக்தங்களைச் செய்யாதே எம்பெருமான் திருவடிகளை வாழ்த்துங்கோள்; வாழ்த்தலே இவளுடைய து3:க2ங்களெல் லாம் போம்’ என்கிறாள்.

(இக்கட்டுவிச்சி என்று தொடங்கி.) – அதிக்ஷுத்3ரையான கட்டுவிச்சி யுடைய அவிஶ்வஸநீயமான சொல்லைக்கொண்டு விலக்ஷணைகளான நீங்கள் அஸங்க3த ப்ரவ்ருத்திகளைப் பண்ணி துர்த்3ரவ்யங்களாலே இந்த வைஷ்ணவ க்ருஹத்தை தூ3ஷியாதே கொள்ளுங்கோ ளென்று முக2த்தைத் திரியவைத்து நிஷேதி4க்கிறாள்.  (மதுவார் என்று தொடங்கி.) – நிரதிஶய போ4க்3யமான திருத்துழாயைத் திருமுடியிலேயுடைய ஆஶ்சர்யமான திருவழகையுடைய ஸர்வேஶ்வரனுடைய திருவடிகளுக்கு மங்களாஶாஸநம் பண்ணினால், இவள் தான் உகந்து யுக்தமாயிருக்கிற அதுவே இவள் உற்ற நோய்க்கு ஶ்லாக்4யமான மருந்தாகும்.  இவள் உற்ற நோய்க்கும் உங்கள் நோயும் இவள் நோயும் தீரும் என்றுமாம். 4-6-3.

நான்காம் பாட்டு

மருந்தாகுமென்று அங்கோர்மாயவலவைசொற்கொண்டு நீர்
கருஞ்சோறும்மற்றைச்செஞ்சோறும் களனிழைத்தென்பயன்?
ஒருங்காகவே  உலகேழும் விழுங்கியுமிழ்ந்திட்ட
பெருந்தேவன்பேர்சொல்லகிற்கில் இவளைப்பெறுதிரே

நாலாம் பாட்டில்,  வஞ்சகையாய்த் தோற்றிற்றுச் சொல்லக்கடவா ளொரு கட்டுவிச்சியின் வார்த்தையைக் கொண்டு ரஜஸ் தம: ப்ரசுரரான தே3வதைகளுக்கு நாநாவர்ணமான சோற்றைத் தூவி என்ன ப்ரயோஜந முண்டு? ஆபத்ஸக2நான ஸர்வேஶ்வரனுடைய திருநாமஸங்கீர்த்தநத் தைப் பண்ணவல்லிகோளாகில், இவளை உங்களுக்குக் கிடைக்கும் என்கிறாள்.

(களனிழைத்து) – தே3வதைகள் ஸந்நிதி4பண்ணும் ஸ்த2லங்களிலே அவள் சொன்ன நியமங்களாலே இட்டு.  (ஒருங்காகவே) – ஒருகாலே. (பேர் சொல்லகிற்கில்) – பேர்சொல்ல வல்லிகோளாகில். 4-6-4.

ஐந்தாம் பாட்டு

இவளைப்பெறும்பரிசுஇவ்வணங்காடுதலன்றந்தோ
குவளைத்தடங்கண்ணும் கோவைச்செவ்வாயும்பயந்தனள்
கவளக்கடாக்களிறட்டபிரான் திருநாமத்தால்
தவளப்பொடிக்கொண்டுநீர் இட்டிடுமின்தணியுமே.

அஞ்சாம் பாட்டில்,  இவளுடைய நோய்க்கு யோக்3யமான பரிஹாரம் சொல்லுகிறாள்.

(இவளை என்று தொடங்கி.) – இவளைப்பெறுகைக்கு உபாயம் இந்த க்ஷுத்3ரதே3வதாவேஶப்ரவ்ருத்த விகட ந்ருத்தமன்று.  இது பரிஹார மாகாமையன்றிக்கே குவளை நிறம் போலேயாய் அறப்பெருத்த கண்ணும் கோவைப்பழம்போலே சிவந்த வாயும் கண்டார்க்கு த3யநீய மாம்படி விவர்ணமாயிற்று. (கவளக்கடாம் என்று தொடங்கி.) – கவளங் கொண்டு மத3முதி3தமான குவலயாபீட2த்தை முடித்த க்ருஷ்ணனுடைய திருநாமத்தைச் சொல்லி ஸ்ரீவைஷ்ணவர்களுடைய பாத3ரேணுவை இவள் மேலே இடவே, இவள் நோய் தவிரும்.  திருநாமஸங்கீர்த்தநம், தே3வதாந் தரஸம்ப3ந்த4த்தாலே வந்த நோய்க்குப் பரிஹாரம்; ஸ்ரீவைஷ்ணவர்கள் பாத3ரேணு, தே3வதாந்தர ஸம்ப3ந்தி43ள் ஸந்நிதா4நத்தால் வந்த நோய்க்குப் பரிஹாரம். 4-6-5.

ஆறாம் பாட்டு

தணியும்பொழுதில்லை நீரணங்காடுதிர்அன்னைமீர்
பிணியும்ஒழிகின்றதில்லை பெருகுமிதுவல்லால்
மணியினணிநிறமாயன்தமரடிநீறுகொண்டு
அணியமுயலின் மற்றில்லைகண்டீர்இத்வணங்குக்கே.

ஆறாம் பாட்டில், ஸ்ரீவைஷ்ணவர்களுடைய பாத3 தூ4ளியைக் கொண்டு இட உபக்ரமிக்கப்பெறில், அதுவே பரிஹாரம்; மற்று இவள் நோய்க்குப் பரிஹாரமில்லை என்கிறாள்.

(தணியும் என்று தொடங்கி.) – விடாதே நீங்கள் அணங்காடாநின்றிகோள்; இதுக்காக வ்யாதி4 வர்த்தி4க்கிறதித்தனை போக்கிக் குறைத்து காட்டுகிற தில்லை.  (மணியினணிநிறமாயன் தமர்) – எம்பெருமானுடைய அழகுக்கும் கு3ணங்களுக்கும் தோற்றிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்கள். 4-6-6.

ஏழாம் பாட்டு

அணங்குக்கருமருந்தென்று அங்கோராடும்கள்ளும்பராய்ச்
சுணங்கையெறிந்து நும்தோள்குலைக்கப்படும்அன்னைமீர்!
உணங்கல்கெடக் கழுதையுதடாட்டம்கண்டுஎன்பயன்?
வணங்கீர்கள்மாயப்பிரான்தமர் வேதம்வல்லாரையே.

ஏழாம் பாட்டில், இதரதே3வதைகளை ஆஶ்ரயித்தால் இவளுடைய விநாஶமே ப2லித்திவிடுவது; இவள் பிழைக்கவேண்டியிருந்திகோளாகில், வைஷ்ணவர்களை ஆஶ்ரயியுங்கோள் என்கிறார்.

(அணங்குக்கு என்று தொடங்கி.) – அப்ராக்ருத ஸ்வபா4வையான இவளுக்கு ஒருவராலும் செய்யவொண்ணாத மருந்து செய்கிறோமென்று து3ர்த்3ரவ்யங்களை ப்ரார்த்தி2த்துத் திரள நின்று கையைத்தட்டித் தோளைக்குலைத்து ஆடுகிற அன்னைமீர்! (உணங்கல் என்று தொடங்கி.) – ஜீவநஸாத4நமான வ்ரீஹ்யாதி3கள் சே2தப்படும்படி கழுதையைத் தின்னவிட்டு அதனுடைய உத3டாட்டம் கண்டு போது போக்கியிருப்பாரை ப்போலே, இவள் நோவுபடாநிற்க அஸங்க3த ப்ரவ்ருத்திகளாலே போதுபோக்கியிருந்தால் என்ன ப்ரயோஜநமுண்டு? 4-6-7.

எட்டாம் பாட்டு

வேதம்வல்லார்களைக்கொண்டு விண்ணோர்பெருமான்திருப்
பாதம்பணிந்து இவள்நோயிது தீர்த்துக்கொள்ளாதுபோய்
ஏதம்பறைந்துஅல்லசெய்து கள்ளூடுகலாய்த்தூய்க்
கீதமுழவிட்டு நீரணங்காடுதல்கீழ்மையே.

எட்டாம் பாட்டில், ஸ்ரீவைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு ஸர்வேஶ்வரன் திருவடிகளிலே ஶரணம்புக்கு இவளுடைய நோயைத் தீர்த்துக்கொள்ளுகையைத் தவிர்ந்து க்ஷுத்3ர தே3வதைகளை ஆஶ்ரயிக்கை உங்களுக்குக் கீழ்மையைப் பண்ணுமென்கிறாள்.

(ஏதம் என்று தொடங்கி.) – வக்தவ்ய மல்லாதவற்றைச் சொல்லி அயுக்தங் களைப் பண்ணி து3ர்த்3ரவ்யங்களைக் கலந்து தூவிப் பொல்லாத பாட்டோடுங்கூடின வாத்3யங்களை ப்ரவர்த்திபித்து நீங்கள் தை3வாவேஶ த்தாலே ஆடுகிற இது உங்களுக்கு அவத்3யாவஹம். 4-6-8.

ஒன்பதாம் பாட்டு

கீழ்மையினால்அங்கு ஓர்கீழ்மகனிட்டமுழவின்கீழ்
நாழ்மைபலசொல்லி நீரணங்காடும்பொய்காண்கிலேன்
ஏழ்மைப்பிறப்புக்கும்சேமம் இந்நோய்க்கும்ஈதேமருந்து
ஊழ்மையில்கண்ணபிரான் கழல்வாழ்த்துமின்உன்னித்தே

ஒன்பதாம் பாட்டில், நீங்கள் அணங்காடுகையாகிற நிஷ்ப2ல ப்ரவ்ருத்தி நான் காணமாட்டேன்; க்ருஷ்ணன் திருவடிகளை நினைத்து வாழ்த்துங்கோள், இவள் பிழைக்கவேண்டி யிருந்திகோளாகில் என்கிறாள்.

(கீழ்மை என்று தொடங்கி.) – உங்களுடைய கீழ்மையாலே நிஹீந குல ஜனாயிருப்பானொருவன் ப்ரவர்த்திப்பித்த வாத்3யத்தின்கீழே பல மேனாணிப்புச்சொல்லி தேவதைகள் தரமுடைமை சொல்லி என்றவாறு.  (ஏழ்மை என்று தொடங்கி.) – இவளுக்குக் காலமுள்ளதனையும் ரக்ஷை யாம்.  இந்நோய்க்கும் இதுவே பரிஹாரம்.  (ஊழ்மையில்) – யுக்தமான படியாலே. 4-6-9.

பத்தாம் பாட்டு

உன்னித்துமற்றொருதெய்வம்தொழாள் அவனையல்லால்
நும்மிச்சைசொல்லி நும்தோள்குலைக்கப்படும்அன்னைமீர்!
மன்னப்படுமறைவாணனை வண்துவராபதி
மன்னனை ஏத்துமின் ஏத்துதலும்தொழுதாடுமே.

பத்தாம் பாட்டில், இவளுக்கு க்ருஷ்ணன் திருவடிகளிலுண்டான ஐகாந்த்யத்தை அநுஸந்தி4த்து அதுக்கு ஈடாக அவனை வாழ்த்துங்கோள்; வாழ்த்தவே, இவள் உஜ்ஜீவிக்கும் என்கிறாள்.

(உன்னித்து என்று தொடங்கி.) – அவனையொழிய மற்றொருதெய்வம் உண்டென்று அறிதல் தொழுதல் செய்யும் ஸ்வபா4வையல்ல. உங்களுக்கு ப்ரதிபந்நங்களைச் சொல்லி அலமாக்கிற அன்னைமீர்! (மன்ன என்று தொடங்கி.) – ஸுத்3ருட4 ப்ரமாணமான வேத3ப்ரதிபாத்3யனாய்வைத்து க்ருஷ்ணனாய் வந்து திருவவதாரம் பண்ணியருளி, வண்துவராபதிக்கு ராஜாவானவனை.  நீரேறுண்டு மோஹித்தார்க்கு நீரே பரிஹாரமாமாப் போலே நோய்க்கு நிதா3நமான க்ருஷ்ண கு3ணகீர்த்தநமே பரிஹார மென்று கருத்து. 4-6-10.

பதினொன்றாம் பாட்டு

தொழுதாடித்தூமணிவண்ணனுக்கு ஆட்செய்துநோய்தீர்ந்த
வழுவாததொல்புகழ் வண்குருகூர்ச்சடகோபன்சொல்
வழுவாதஆயிரத்துள் இவைபத்துவெறிகளும்
தொழுதாடிப்பாடவல்லார் துக்கசீலமிலர்களே.

ஆழ்வார் திருவடிகளே சரணம்

நிகமத்தில், இத்திருவாய்மொழியை ஸஹ்ருத3யமாக  அப்4யஸிக்குமவர்கள் தாம் எம்பெருமானைப்பிரிந்து பட்ட வ்யஸநம் படார் என்கிறார்.

(தொழுது என்று தொடங்கி.) – திருநாமத்தாலே உஜ்ஜீவித்து நோய் தீர்வதும் செய்து மோஹ தஶையிலும் தே3வதாந்தர ஸ்பர்ஶம் ஸஹியா மையும் அத்தஶையிலும் ப43வத் கு3ணங்களை உஜ்ஜீவநமாகவுடைய ரென்னும் ஸ்வாபா4விகமான புகழைப் புஷ்கலமாகவுடைய ஆழ்வாருடைய சொல்லான.  (வழுவாத ஆயிரம் என்று தொடங்கி.) – ஆயிரந்திருவாய்மொழியிலும் ப43வத் கு3ணங்கள் ஒன்றும் ஒழியாமே ப்ரதிபாதி3த்த வெறிவிலக்கான இத்திருவாய்மொழியை ஸஹ்ருத4ய மான அநுஸந்தி4ப்பார்.  (தொழுதாடி என்று தொடங்கி.) – மோஹம் தீரப் பெறுகையாலே எல்லாம் பெற்றதாக அநுவதிக்கிறது. 4-6-11.

நஞ்சீயர் திருவடிகளேரணம்

 

அவதாரிகை    4-7

சீலமில்லாப்ரவேசம்

ஏழாந்திருவாய்மொழியில், கீழ் “ஏத்துதலும் தொழுதாடும்” என்று ப43வந் நாமஶ்மரணத்தாற் பிறந்த ஆஶ்வாஸம் அவனைக்கிட்டியநுப4விக்கை    க்கு உடலன்றியே அலாப4த்தாலே ஆர்த்த2ராகைக்கு உடலாகையாலே அபி4நிவேஶா திஶயத்தையுமுடைய இவ்வாழ்வார் தமக்கு அநுபா4வ்ய னான ஸர்வேஶ்வரனுடைய – அகி2லவஸ்து ஸத்தையும் அழியாமல் நோக்கும் அஸாதா4ரண ஸம்ப3ந்த4த்தையும், அநந்யார்ஹமாக்கி அநுப4 விப்பிக்கும் ஔதா3ர்யத்தையும், அநந்யார்ஹமான ஆஶ்ரிதர்பக்கல் அத்யந்த ப4வ்யதையையும், அவர்களுக்கு ஆஶாஜநகமான ஆபி4ரூப்யா தி4ஶயத்தையும், அருந்தொழில் செய்தும் ஆஶ்ரிதர்க்கு அபேக்ஷிதங்கொ டுக்கும்படியையும், ஆசைக்கு தீ3பகமான ஆந்தரஸ்தி2தியையும், அந்த அவஸ்த்தா2நத்தினுடைய அதிஶயத போ4க்3யதையையும், போ4க்3யதா நிப3ந்த4நமான அபி4நிவேஶாதி3ஶயஜநகத்வத்தையும், அபி4நிவிஷ்டர்க்கு அநுபா4வ்யமான அஸாதா4ரண சிஹ்நவத்தையையும், அகி2ல வேத3 வேத்3யத்வத்தையும் அநுஸந்தி4த்து, ஏவம்விஶிஷ்டனான போ4க்3யபூ4தன் பக்கல் அநுப4வாபி4நிவேஶத்தாற் பிறந்த ஆர்த்யதி3ஶயத்தை அருளிச் செய்கிறார்

முதல் பாட்டு

சீலமில்லாச்சிறியனேலும் செய்வினையோபெரிதால்
ஞாலமுண்டாய் ஞானமூர்த்தீ! நாராயணா! என்றென்று
காலந்தோறும்யானிருந்து கைதலைபூசலிட்டால்
கோலமேனிகாணவாராய் கூவியும்கொள்ளாயே.

முதற் பாட்டில்,  நெடுங்காலம் கூப்பிடச்சென்ய்தே நீ என்னை விஷயீகரியாதபையாக நான்பண்ணினப்பத்தின்மிகுதி இருந்தபடியென்? என்கிறார்.

[சீலம் என்று தொடங்கி] – நன்மை ஒன்றுமின்றிக்கே அதிக்ஷுத்3ரனா யிருந்தேனே யாகிலும் சித3சிதீ3ஶ்வர தத்த்வத்ரயத்திலும் பெரிது, நான் பண்ணின பாபம். [ஞாலமுண்டாய் என்று தொடங்கி] – ஆபத்துக்கு உதவும் ஸ்வபா4வனே! ஆபந்நிவாரணோபாயம் அறியுமவனே! நிருபாதி4க ப3ந்து4வே! என்று பலகாலும் சொல்லி க்ஷணந்தோறும் நிரந்தரமாகத் தொழுது இருந்தால்.  கைதலை பூசலிடுகையாவது – தலையிலே கையைவைத்துக் கூப்பிடுகை யென்றுமாம்.  [கோலமேனி காணவாராய் கூவியும் கொள்ளாயே] – உன்னுடைய அழகிய திருவடியை க்காண வருவதும் செய்கிறிலை; நீ வராவிட்டால் என்னை அங்கே அழைத்துக்கொள்வதும் செய்கிறிலை. 4-7-1.

இரண்டாம் பாட்டு

கொள்ளமாளாஇன்பவெள்ளம் கோதிலதந்திடும் என்
வள்ளலேயோ! வையங்கொண்டவாமனாவோ! என்றென்று
நள்ளிராவும்நன்பகலும் நானிருந்தோலமிட்டால்
கள்ளமாயா! உன்னை என்கண்காணவந்து ஈயாயே.

இரண்டாம் பாட்டில்,  எம்பெருமான் தந்திறத்தில் பண்ணின உப காரங்களைச் சொல்லி, ‘இப்படி உபகாரகனான நீ நான் அவஸந்நனாய் உன்னைக் காணவேணுமென்ரு கூப்பீட்ட விட்த்திலும் வருகிறிலை’ என்று இன்னாதாகிறார்.

[கொள்ள மாளா என்று தொடங்கி] – உன்பக்கல் மேன்மேலென த்ருஷ்ணையைப் பிறப்பிப்பதுமாய்ப் புறம்பெங்கும் வைத்ருஷ்ண்யத்- தைப் பிறப்பிப்பதுமாய் என்றும் அநுப4வியாநின்றாலும் குறையாத நிரதிஶயாநந்தத்தை எனக்குத் தந்து இதுதானே உனக்குப் பேறாயிருக்கு மவனே! ஆஶ்ரிதர்க்கு உபகரிக்கைகாக உன்னுடைய ஐஶ்வரேமானபடி யைத் தவிர்ந்து அர்த்தி2யானவனே! உன்னுடைய ஸம்ஶ்லேஷத்தாலே போக்கக்கடவ நல்லகாலமெல்லாம் வ்யஸநத்தாலே நான் இருந்து கூப்பிட்டால்.  [நள்ளிராவும் நன்பகலும்] – உன்னை விஶ்லேஷித்த ஶூந்ய மான காலம் என்றுமாம்.  நள்ளிரவு என்கிறது மத்4யராத்ரம்.  [கள்ளமாயா] – என் கண்களுக்குத் தோற்றாதிருக்கிரவனே! [உன்னை என்காண வந்தீ யாயே] – என் கண்கள்காண வந்து உன்னை எனக்குத் தந்தருளுகிறலை; கண்காணவந்து ஈயவேணு மென்றும் சொல்லுவர். 4-7-2. 

மூன்றாம் பாட்டு

ஈவிலாததீவினைகள் எத்தனைசெய்தனன்கொல்?
தாவிவையங்கொண்டஎந்தாய்! தாமோதரா! என்றென்று
கூவிக்கூவிநெஞ்சுருகிக் கண்பனிசோரநின்றால்
பாவிநீயென்றொன்றுசொல்லாய் பாவியேன்காணவந்தே.

மூன்றாம் பாட்டில்,  எனக்கு உன்னைக்காட்டாதொழிந்தால் ‘நீ என்னைக்காண்கைக்கு பா4க்3யம்பண்ணிற்றிலை’ என்று நான் நிராஶனாம்படி ஒன்றும்சொல்லுகிறிலை யென்று இன்னாதாகிறார்.

[ஈவு என்று தொடங்கி] – அநுப4வ விநாஶ்யமல்லாததான எத்தனை பாபங்களைப் பண்ணினேனோ? [தாவி என்று தொடங்கி] – நல்லார் தீயா ரென்று பாராதே அவர்களுடைய அபேக்ஷிதங்களை அநாயாஸேந செய்து – அச்செயலாலே என்னை அடிமைகொண்டவனே! ஆஶ்ரிதர்க்கு அத்யந்த ப4வ்யனானவனே! என்று கூப்பிட்டு அந்த தா3ருணத்4நியாலே அந்த: கரணம் நீராய்க்கண்ணநீர் பாயாநின்றால். 4-7-3.

நான்காம் பாட்டு

காணவந்துஎன்கண்முகப்பே தாமரைக்கண்பிறழ
ஆணிசெம்பொன்மேனியெந்தாய்! நின்றருளாயென்றென்று
நாணமில்லாச்சிறுதகையேன் நானிங்கலற்றுவதென்?
பேணிவானோர்காணமாட்டாப் பீடுடையப்பனையே.

நாலாம் பாட்டில், ப்3ருஹ்மாதி3களும் கூட ஆசைப்பட்டுக் காண மாட்டாதபடியான பெருமையையுடைய ஸர்வேஶ்வரனை அதிக்ஷுத்3ர னான நான் காணவேணுமென்று கூப்பிடாநின்றேன்; என்ன நிர்லஜ்ஜனோ? என்கிறார்.

[காண என்று தொடங்கி] – நான் காணும்படியாக என் கண்ணெதிரே வந்து [தாமரை என்று தொடங்கி] – தாமரைப்பூப்போலேயிருக்கிற திருக் கண்கள் மிளிர ஒட்டற்ற செம்பொன்போலேயிருக்கிற அழகிய திருவடிவைக்காட்டி என்னை அடிமை கொண்டவனே! [நின்றருளாய் என்றென்று] – நிர்லஜ்ஜனாய் அதிக்ஷுத்3ரனான நான் இவ்வுலகத்திலே யிருந்து கதறினால் என்ன ப்ரயோஜநமுண்டு? பிறழ – விளங்க என்றும் சொல்லுவர். 4-7-4.

ஐந்தாம் பாட்டு

அப்பனே அடலாழியானே ஆழ்கடலைக்கடைந்த
துப்பனேஉன்தோள்கள்நான்கும் கண்டிடக்கூடுங்கொலென்று
எப்பொழுதும்கண்ணநீர்கொண்டு ஆவிதுவர்ந்துதுவர்ந்து
இப்பொழுதேவந்திடாயென்று ஏழையேன்நோக்குவனே.

அஞ்சாம் பாட்டில், ப்3ரஹ்மாதி3களுக்கும் காணமுடியாதிருக்கிற உன் அழகைக்காணவேணுமென்று ஆசைப்பட்டு த4ரிக்கமாட்டாமை யாலே ‘இப்பொழுதே வந்திடாய்’ என்று அபேக்ஷித்து, வரும்போது தப்பாமே காணவேணுமென்று பார்த்திருப்பன்.  என்னுடைய சாபலம் இருந்தபடியென்? என்கிறார்.  [அப்பனே என்று தொடங்கி] – உபகாரகனே! ப்ரதிகூல நிரஸந ஸ்வபா4வமான திருவாழியை யுடையவனே! ஆஶ்ரிதரு டைய அபேக்ஷிதங்கள் செய்து கொடுக்கைக்கு ஈடான ஸாமர்த்2யத்தை யுடையவனே! அழகிய தோளும் கையும் திருவாழியும் காணக்கூடு மேயோ? என்று.  [எப்பொழுதும் என்று தொடங்கி] – உன் அழகை நினைத்து எப்போதும் கண்ணநீர் பாயாநின்றுகொண்டு ப்ராணன் அற உலர்ந்து. 4-7-5.

ஆறாம் பாட்டு

நோக்கிநோக்கிஉன்னைக்காண்பான் யானெனதாவியுள்ளே
நாக்குநீள்வன்ஞானமில்லை நாள்தோறும்என்னுடைய
ஆக்கையுள்ளும்ஆவியுள்ளும் அல்லபுறத்தினுள்ளும்
நீக்கமின்றிஎங்கும்நின்றாய் நின்னையறிந்தறிந்தே.

ஆறாம் பாட்டில், என்பக்கலிலே ஸதா3 ஸந்நிஹிதனாயிருந்து வைத்து உன்னைக்காட்டாதொழிகிறது நீ உன்னைக்காட்ட நினையாமை என்று அறிந்துவைத்தே ப்ரதி க்ஷணம் காணவேணுமென்று ஆசைப்படா நின்றேன்; அதுக்கு அடி, அறிவுகேடு என்கிறார்.

[நோக்கி என்று தொடங்கி] – உன்னைக்காண்கைக்காக எங்கும்பார்த்து உன்னைக் காணவேணுமென்று வாயாரச்சொல்லமாட்டாதே என் நெஞ்சி னுள்ளே மிகவும் ஆசைப்படாநின்றேன்.  ஞானமில்லை – அறிவில்லை.  [நாடோறும் என்று மேலுக்கு] – என்றுமொக்க என்னுடைய ஆத்மாவிலும் ஶரீரத்திலும் மற்றும் இந்த்3ரியாதி3களிலும் பிரியாதே எங்கும் ஸந்நிஹித னாயிருந்துவைத்துச் செய்யாதொழிகிறது செய்யநினையாமையிறே என்று மிகவும் அறிந்து வைத்தே. 4-7-6.

ஏழாம் பாட்டு

அறிந்தறிந்துதேறித்தேறி யான்எனதாவியுள்ளே
நிறைந்தஞானமூர்த்தியாயை நின்மலமாகவைத்துப்
பிறந்தும்செத்தும் நின்றிடறும் பேதைமைதீர்ந்தொழிந்தேன்
நறுந்துழாயின்கண்ணியம்மா! நானுன்னைக்கண்டுகொண்டே.

ஏழாம் பாட்டில், ‘நீர் கிடந்து கூப்பிடுகிற தென்? நம்மையறிவித்து உம்முடைய ஸம்ஸார து3:க2மெல்லாம் கெடுத்தோமிறே’ என்ன, ‘அத்தால் போராது’ என்கிறார்.

[அறிந்து என்று தொடங்கி] – உன்னுடைய ப்ரஸாத3த்தாலே அறிவுபிறந்து அது ஒருகாலுக்கு ஒருகால் அந்த:கரணம் தெளிவதுஞ்செய்து தெளிந்த மநஸ்ஸிலே பரிபூர்ணஜ்ஞாந ஸ்வரூபனான உன்னை விஶத3தமமாக அநுப4வித்து.  [பிறந்தும் என்று தொடங்கி] – நிரஸ்த ஸாம்ஸாரிக து3:க2னானேன்.  அதிபரிமளமான திருத்துழாய் மாலையையுடைய ஸர்வேஶ்வரனான உன்னை நான் கண்டுகொண்டு. 4-7-7.

எட்டாம் பாட்டு

கண்டுகொண்டென்கைகளார நின்திருப்பாதங்கள்மேல்
எண்டிசையுமுள்ளபூக்கொண்டு ஏத்தியுகந்துகந்து
தொண்டரோங்கள்பாடியாடச் சூழ்கடல்ஞாலத்துள்ளே
வண்டுழாயின்கண்ணிவேந்தே! வந்திடகில்லாயே.

எட்டாம் பாட்டில், ‘இனி உமக்குச் செய்யாதது என்?’ என்னில், – இஸ் ஸம்ஸாரத்திலே தே3வரீரைக்கண்டு அடியோங்கள் எல்லாவடிமைகளும் செய்து உஜ்ஜீவிக்கும்படி வருகிறிலை என்கிறார்.

[கண்டுகொண்டு என்று தொடங்கி] – என் கண்கள் விடாய்தீரக்கண்டு கொண்டு, என் கைகள் பூரிக்கும்படி நிரதிஶய போ4க்3யமான உன் திருவடிகளிலே மிகவும் அடிமை செய்து நிரவதி4கப்ரீதியாலே ஸ்ரீவைஷ்ணவர்களோடே நான் பாடியாட [சூழ் என்று தொடங்கி] – ஸம்ஸாரத்தினுள்ளே ஸர்வேஶ்வரத்வ ஸூசகமான திருத்துழாய்மாலை யையுடைய ஸர்வேஶ்வரனான நீ. 4-7-8.

ஒன்பதாம் பாட்டு

இடகிலேனொன்றட்டகில்லேன் ஐம்புலன்வெல்லகில்லேன்
கடவனாகிக்காலந்தோறும் பூப்பறித்தேத்தகில்லேன்
மடவன்னெஞ்சங்காதல்கூர வல்வினையேன்அயர்ப்பாய்த்
தடவுகின்றேன்எங்குக்காண்பன் சக்கரத்தண்ணலையே?

ஒன்பதாம் பாட்டில், எம்பெருமானைக் காண்கைக்கு ஈடான கர்ம யோகா3த்3யுபாயங்களின்றிக்கே யிருக்கிற நான் காணவேணுமென்று ஆசைப்பட்டால் காண்கைக்கு உபாயமுண்டோ? என்கிறார்.

[இடகிலேன் என்று தொடங்கி] – எம்பெருமான் இனியனாம்படி பசித்தார் க்குச் சோற்றையிடுதல், தா3ஹித்தார்க்குத் தண்ணீர்வார்த்தல் செய்ய மாட்டுகிறிலேன்.  அர்த்த2லோப4த்தாலே அவை செய்யாவிட்டால் இந்த்3ரியங்களை வெல்லவும் மாட்டுமிறிலேன்.  [கடவனாகி] – அதிலே கடவனாய்.  [மடவல்நெஞ்சம் என்று தொடங்கி] – ப43வத்3கு3ணங்களிலே விழும் ஸ்வபா4வமாய் விழுந்தால் எம்பெருமான் தன்னாலும் எடுக்க முடியாதபடியான நெஞ்சில் ஸ்நேஹம் மிக்குத் திருவடிகளில் தா3ஸ்ய ரஸத்தை அறிந்துவைத்தே நினைத்தபடி கிடையாமைக்கு ஈடான பாபத்தைபண்ணின நான், ஐஶ்வர்ய ஸூசகமான திருவாழியை யேந்தின அழகையுடைய ஸர்வேஶ்வரனை. 4-7-9.

பத்தாம் பாட்டு

சக்கரத்தண்ணலேயென்று தாழ்ந்துகண்ணீர்ததும்ப
பக்கம்நோக்கிநின்றலந்தேன் பாவியேன்காண்கின்றிலேன்
மிக்கஞானமூர்த்தியாய வேதவிளக்கினை என்
தக்கஞானக்கண்களாலே கண்டுதழுவுவனே.

பத்தாம் பாட்டில், காணப்பெறாவிட்டால் மறந்து ஸுக2மேயிரு க்கவொண்ணாதபடி எனக்குத் தக்கதொரு ஜ்ஞாநத்3ருஷ்டி எங்ஙனே உண்டாயிற்று? என்று இன்னாதாகிறார்.

[சக்கரத்தண்ணலே என்று தொடங்கி] – திருவாழியைக்காட்டி என்னை எழுதிக்கொண்டவனே! என்று இவ்வுக்தியோடேகூடத் தரைப்பட்டுக் கண்ணநீர்ததும்புபடி நீ வந்து தோற்றியருள ஸம்பா4வநையுள்ளதொரு பார்ஶ்வத்தை நோக்கி நின்று சாலத்தளர்ந்தேன். மஹாபாபியாகை யாலே, காணப்பெறுகிறிலேன்.  [மிக்கஞானமூர்த்தி என்று தொடங்கி] – பரிபூர்ண ஜ்ஞாநாகாரனாய் வேதை3க ஸமதி33ம்யனாயிருக்கிறவனை.  [கண்டு தழுவுவனே] – கண்டு அநுப4விப்பான். 4-7-10.

பதினொன்றாம் பாட்டு

தழுவிநின்றகாதல்தன்னால் தாமரைக்கண்ணன்தன்னைக்
குழுவுமாடத்தென்குருகூர் மாறன் சடகோபன்சொல்
வழுவிலாத ஓண்தமிழ்கள் ஆயிரத்துளிப்பத்தும்
தழுவப்பாடியாடவல்லார் வைகுந்தமேறுவரே.

ஆழ்வார் திருவடிகளே சரணம்

நிகமத்தில், இத்திருவாய்மொழி கற்றார் எம்பெருமானோடே நித்ய ஸம்ஶ்லேஷம் பண்ணலாம் திருநாட்டிலே செல்லுவர் என்கிறார்.

[தழுவி என்று தொடங்கி] – நான் விடுவேனென்றாலும் விடவொண்ணாத படி அவனைத் தழுவி நின்ற அதிமாத்ரஸ்நேஹத்தாலே இப்படிப்பட்ட ஸ்நேஹத்தை விளைப்பித்த திருக்கண்களையுடையவனை.  [குழவு என்று தொடங்கி] – ஸம்ருத்த4மான திருநகரியையுடைய ஆழ்வாரருளிச் செய்லாய் ப43வத்3கு3ணங்களுக்கும் பூர்ணமாக வாசகமாய் ஸுபோ44 மான ஆயிரந்திருவாய்மொழியிலும் இத்திருவாய்மொழியை.  [தழுவ] – இதில் ஓடுகிற கருத்தோடே கூட. . 4-7-11.

நஞ்சீயர் திருவடிகளேரணம்

 

அவதாரிகை    4-8

ஏறாளும்ப்ரவேசம்

எட்டாந்திருவாய்மொழியில், இப்படி அவஸந்நராய்க் கூப்பிடச்செய்தே ஸௌஶீல்யாதி3கு3ணோததி4யாய் ப்ரதிகூல நிரஸநஸமர்த்தனான எம்பெருமான் வாராதொழிந்தவாறே தம்மை உபேக்ஷித்தானாகக் கருதின ஆழ்வார் தத3ர்த்த2மாக வுண்டான ஆத்மாத்மீயங்கள அவனுக்கு ஆத3ரணீயங்களல்லவாகில் எனக்கும் அவற்றால் கார்யமில்லை யென்று அவற்றில் தாம்நசையற்றபடியை அந்யாபதேஶத்தாலே அருளிச் செய்கிறார்.

முதல் பாட்டு

ஏறாளுமிறையோனும் திசைமுகனும்திருமகளும்
கூறாளுந்தனியுடம்பன் குலங்குலமா அசுரர்களை
நீறாகும்படியாக நிருமித்துப்படைதொட்ட
மாறாளன்கவராத மணிமாமைகுறைவிலமே.

முதற் பாட்டில், அத்யந்தம் கு3ணவானுமாய் விரோதி4ந்ரஸந ஸமர்த்த2னுமா யிருக்கிற எம்பெருமான் விரும்பாத ஶ்லாக்4யமான நிறங் கொண்டு ஒருகரும்மில்லை யென்கிறாள்.

[கூறாளும்] – ஓரோப்ரதேஶத்தைக் கூறாகக்கொள்ளும். [தனியுடம்பு] – இப்படி பரார்த்த2மாகையாலே அத்3விதீயமான உடம்பு.  [நிருமித்துப்படை தொட்ட மாறாளன்] –  ஸங்கல்பித்து ஆயுத4 க்3ரஹணம்பண்ணின ஆண்பிள்ளை. 4-8-1.

இரண்டாம் பாட்டு

மணிமாமைகுறைவில்லா மலர்மாதருறைமார்பன்
அணிமானத்தடவரைத்தோள் அடலாழித்தடக்கையன்
பணிமானம்பிழையாமே அடியேனைப்பணிகொண்ட
மணிமாயன்கவராத மடநெஞ்சால்குறைவிலமே.

இரண்டாம் பாட்டில், பெரியபிராட்டியார் நித்யவாஸம்பண்ணுகிற திருமார்பையுடையனுமாய் அழகியதாய்க் கொழுந்துவிட்டுத் திரட்சி பெற்றுச் சிக்கென்றிருந்த திருத்தோளையும் ப்ரதிபக்ஷத்தையடக்கும் ஸ்வபா4வமான திருவாழியாலே பூர்ணமான கையையுமுடையனாய்.  [பணிமானம் என்று தொடங்கி] – அடிமைகொள்ளுமிடத்தில் பெரிய பிராட்டியாரோடு ஒக்க என்னை அடிமைகொள்ளுவதும் செய்து இந்த்3ர நீலம்போலே கறுத்த திருநிறத்தையுடையனானவன். 4-8-2.

மூன்றாம் பாட்டு

மடநெஞ்சால்குறைவில்லா மகள்தாய்செய்தொருபேய்ச்சி
விடநஞ்சமுலைசுவைத்த மிகுஞானச்சிறுகுழவி
படநாகத்தணைக்கிடந்த பருவரைத்தோட்பரம்புருடன்
நெடுமாயன்கவராத நிறைவினாற்குறைவிலமே.

மூன்றாம் பாட்டில், அத்யந்த விலக்ஷணனாயிருந்துவைத்துப் பண்டு என்பக்கலிலே அத்யபி4நிவேஶத்தைப் பண்ணினவன் விரும்பாத அடக்கம் எனக்கு வேண்டா என்கிறாள்.

[மடநெஞ்சால் என்று தொடங்கி] – பரிவையுடைய யஶோதைப்பிரட்டி யைப்போலே ஒரு ஸ்த்ரீ வேஷத்தைக்கொண்டு நிக்ருதிபரதைக்குத் தன்னோடொப்பாரில்லாத பூதனை முடியும்படி நஞ்சையுடைய முலையைச் சுவைத்த பிள்ளைத்தனத்திலே தாய்முலையன்று என்று அறிந்த பேரறிவையுடையவன். [படநாகத்து என்று தொடங்கி] – தன்னுடைய ஸ்பர்ஶத்தாலே பணம் விரித்திருந்துள்ள திருவநந்தாழ்வான் மேலே கண்வளர்ந்தருளுகையாலே மலைபோலே வளர்ந்த தோள்களை முடையனாய்ப் புருஷோத்தமனுமாயுள்ளான். 4-8-3.

நான்காம் பாட்டு

நிறைவினாற்குறைவில்லா நெடும்பணைத்தோள்மடப்பின்னை
பொறையினான்முலையணைவான் பொருவிடையேழடர்த்துகந்த
கறையினார்துவருடுக்கைக் கடையாவின்கழிகோற்கைச்
சறையினார்கவராத தளிர்நிறத்தாற்குறைவிலமே.

நாலாம் பாட்டில், ஸ்வாஶ்ரிதார்த்த2ப்ரவ்ருத்திகளெல்லாம் தனக்கு போ43மாகவுடையனான க்ருஷ்ணன் விரும்பாத தளிர்போலே  யிருக்கிற நிறத்தால் காரியமில்லை என்கிறாள்.

மடப்பம் – மார்த்த3வம். [பொறையினால் என்று தொடங்கி] – ஸம்ஶ்லேஷி க்கைக்காக வ்யஸநஸஹனாய், ஹிம்ஸ்ரமாய்வந்து மேல்விழுகிற விடை யேழையும் அநாயாஸேந நிரஶிப்பதும் செய்து மிகவும் கறையேறியிருக் கிற சிவந்ததோலை உடையாகவுடையராய், கறக்கும் மூங்கிற்குழாயை யும் பிடிக்கும் வீசுகோலையும் கையிலேயுடையராய், வடிவுபேணாதே பசுக்களின் பின்பே திரிகையாலே சறைந்திருந்துள்ளவர்.  ‘சறை’ என்றது, சறைமணி: சறையினாராகிறார் – அது உடையர் என்றுமாம்.

ஐந்தாம் பாட்டு

தளிர்நிறத்தாற்குறைவில்லாத் தனிச்சிறையில்விளப்புற்ற
கிளிமொழியாள்காரணமாக் கிளரரக்கன்நகரெரித்த
களிமலர்த்துழாயலங்கல்கமழ்முடியன் கடல்ஞாலத்து
அளிமிக்கான்கவராத அறிவினாற்குறைவிலமே.

அஞ்சாம் பாட்டில், பரமப்ரணயியான தஶரதா2த்மஜன் விரும்பாத அறிவினால் ஒருப்ரயோஜநமில்லை என்கிறாள்.

[தளிர் நிறம் என்று தொடங்கி] – தளிர்போலே யிருக்கிற நிறத்தால் பரிபூர்ணையாய் ராக்ஷஶீமத்4யத்திலே நிருத்3தை4யா யிருந்தாளென்று திருவடிவாயாலே விண்ணபஞ்செய்யப்பட்ட.  ஆஶ்ரிதர்க்காக லோக ப்ரஶித்த4மாகச் சிறையிருந்தபடி என்றும் சொல்லுவர்.  [கிளிமொழி என்று தொடங்கி] – இனிய பேச்சையுடைய பிராட்டி நிமித்தமாக ராவண னுடைய ஸம்ருத்த4மான நகரத்தை த3ஹிப்பதும்செய்து, தேனையுடைத் தாய் மலர்ந்திருந்துள்ள திருத்துழாய் மாலையாலே கமழாநின்றுள்ள திருமுடியை யுடையான்.  இது, மீண்டு எழுந்தருளி ஒப்பித்திருக்கிற படிக்கு உபலக்ஷணம்.  [கடல் ஞாலத்து அளிமிக்கான்] – ஸம்ஸாரிகள் பக்கலிலே மிகவும் அநுக்3ரஹஶீலனானவன். 4-8-5.

ஆறாம் பாட்டு

அறிவினாற்குறைவில்லா அகல்ஞாலத்தவரறிய
நெறியெல்லாமெடுத்துரைத்த நிறைஞானத்தொருமூர்த்தி
குறியமாணுருவாகிக் கொடுங்கோளால்நிலங்கொண்ட
கிறியம்மான்கவராத கிளரொளியாற்குறைவிலமே.

ஆறாம் பாட்டில், ஸகல லோகங்களுக்கும் ஸ்வபராப்தியுபாயங்க ளெல்லாம் தானே அருளிச்செய்து ஹிதோபதேஶத்துக்குப் பாங்கல்லாத வர்களைத் தன் அழகாலே வஶீகரிக்கும் ஸ்வபா4வனான ஶ்ரீவாமநன் விரும்பாத மிக்கிருந்துள்ள லாவண்யத்தால் காரியமுடையோமல்லோம் என்கிறாள்.

[அறிவினால் என்று தொடங்கி] –  தன் திறத்தில் அறிவுகொண்டு காரிய மில்லாத ஸம்ஸாரிகள் அறியும்படி ப்ரபத்திபர்யந்தமான ஸகலோபாய ங்களையும் வ்யக்தமாக அருளிச்செய்தருளின பரிபூர்னஜ்ஞாநத்தை யுடையனாய் அத்3விதீய ஸ்வரூபனாயுள்ளான்.  [குறிய மாணுரு என்று தொடங்கி] – குறளான பிள்ளைவடிவையுடையனாய்க்கொண்டு மஹா பலியை அழகாலே மிகவும் நெருக்கிப் பூ4மியை வாங்கிக்கொண்ட விரகனான ஸர்வேஶ்வரன். 4-8-6.

ஏழாம் பாட்டு

கிளரொளியாற்குறைவில்லா அரியுருவாய்க்கிளர்ந்தெழுந்து
கிளரொளியவிரணியனது அகல்மார்பங்கிழித்துகந்த
வளரொளியகனலாழி வலம்புரியன்மணிநீல
வளரொளியான்கவராத வரிவளையாற்குறைவிலமே.

ஏழாம் பாட்டில், ஆஶ்ரித விரோதி4யான ஹிரண்யநிரஸநம் பண்ணுமிடத்தில் அவனளவல்லாதபடியாகச் சீறி அவனை முடிக்கும் ஸ்வபா4வனானவன் விரும்பாத விலக்ஷணமானவளைகொண்டு காரிய முடையோமல்லோம் என்கிறாள்.

[கிளரொளி என்று தொடங்கி] –  பெருகாநின்றுள்ள ஒளியால் மிக்க ஶிம்ஹ ரூபியாய்ச் சீறிக்கொண்டு தோன்றி மிக்க தேஜஸ்ஸையுடைய வனாயிருந்துள்ள ஹிரண்யனுடைய விஸ்த்ருதமானமார்பை அநாயா ஸேந பிளந்து ‘ஆஶ்ரித விரோதி4 போகப்பெற்றது’ என்று உகப்பதும் செய்டு திருவுகிர்களாலே முந்துற ஹிரண்யன் முடிகையாலே தங்களுக்கு இரைபெறாத சீற்றத்தின் மிகுதியாலே நெருப்பையுமிழா நின்றுள்ள ஶங்க2 சக்ராதி3 தி3வ்யாயுதோ4பேதனய்.  [மணி நீலவளரொளியான்] – கோபமெல்லாம் தணித்த ஶீதளமான நிரவதி4கதேஜஸ்ஸை யுடையவன். 4-8-7.

எட்டாம் பாட்டு

வரிவளையாற்குறைவில்லாப் பெருமுழக்காலடங்காரை
எரியழலம்புகவூதி இருநிலமுன்துயர்தவிர்த்த
தெரிவரியசிவன்பிரமன் அமரர்கோன்பணிந்தேத்தும்
விரிபுகழான்கவராத மேகலையாற்குறைவிலமே.

எட்டாம் பாட்டில், பாத4கரானவர்களையெல்லாம் முடித்து லோகத்தினுடைய உபத்3ர்வத்தையெல்லாம் போக்கின் கு3ணத்திலே ப்3ரஹ்மேஶாநாதி3களாலே ஸ்தூ2யமாநனாயிருந்தவன் விரும்பாத மேக4லையால் ஒரு காரியமில்லை என்கிறாள்.

[வரிவளை என்று தொடங்கி] – ப்ரதிபக்ஷத்தின் அளவல்லாத த்4வநியை யுடைத்தான ஶ்ரீபாஞ்சஜந்யத்தைத் திருப்பவளத்திலே மடுத்து து3ர்யோ த4நாதி3களை மஹாப4யம் ப்ரவேசிக்கும்படி ஊதிப் பண்டு இம்மஹா ப்ருதி2வியினுடய து3:க2த்தைப் போக்குவதும் செய்து, து3ர்ஜ்ஞே யரான ருத்3ராதி3கள் தன்னுடைய வீரஶ்ரீக்குத் தோற்றுத் திருவடிகளிலே விழுந்து ஏத்தும்படியான மிக்கிருந்துள்ள கீர்த்தியையுடையனானவன். 4-8-8.

ஒன்பதாம் பாட்டு

மேகலையாற்குறைவில்லா மெலிவுற்றவகலல்குல்
போகமகள்புகழ்த்தந்தை விறல்வாணன்புயந்துணித்து
நாகமிசைத்துயில்வான்போல் உலகெல்லாம்நன்கொடுங்க
யோகணைவான்கவராத உடம்பினாற்குறைவிலமே.

ஒன்பதாம் பாட்டில், ஆஶ்ரித விரோதி4யான பா3ணனுடைய பா3ஹுவநத்தைக் கழித்துத் திருவநந்தாழ்வான்மேலே கண்வளர்ந்தருளு மவன்போலே ஸகலஜந்துக்களும் உஜ்ஜீவிக்கும் ப்ரகாரத்தைத் திருவுள்ள த்தாலே ஆராயாநின்றுள்ள எம்பெருமான் விரும்பாத உடம்புகொண்டு கார்யமில்லை என்கிறாள்.

[மேகலையால் என்று தொடங்கி] – ம்ருது3ஸ்வபா4வையாய் மேகலாலங் க்ருதமாய் விஸ்த்ருதமான நித3ம்ப3 ப்ரதேஶத்தையுடையளாய் போ43 யோக்3யையான உஷையுடைய தமப்பனுமாய் ஶௌர்ய வீர்யாதி3ப்ர தை3யையுடையனுமாய்ப் பெருமிடுக்கனான பா3ணனுடைய பா3ஹு வநத்தைக் கழித்து. 4-8-9.

பத்தாம் பாட்டு

உடம்பினாற்குறைவில்லா உயிர்பிரிந்தமலைத்துண்டம்
கிடந்தனபோல்துணிபலவா அசுரர்குழாந்துணித்துகந்த
தடம்புனலசடைமுடியன் தனியொருகூறமர்ந்துறையும்
உடம்புடையான்கவராத உயிரினாற்குறைவிலமே.

பத்தாம் பாட்டில்,  ப்ரதிபக்ஷம் எத்தனையேனும் மிக்கதேயாகிலும் போக்கும் ஸ்வபா4வனாய் அத்யந்த ஶீலவானாயுள்ள எம்பெருமான் கவராத உயிரினால் கார்யமுடையோமல்லோம் என்கிறாள்.

[உடம்பினால் என்று தொடங்கி] – ஸப்ராணனாய்க்கொண்டு ஸஞ்சரிக் கிற பெரியபர்வதங்கள் ப்ராணஹீந்மாய் முறிந்து விழுந்துகிடந்தாற் போலே பலதுணியாம்படி பேருடம்பை யுடையரான அஸுரஸமூஹங்க ளைச் சே2தி3த்து ஆஶ்ரித விரோதி4 நீங்குகையாலே நிரவதி4க ப்ரீதியுக்த னாவதும் செய்து பெருவெள்ளமான கங்கா ஜலத்தை ஏகதே3ஶத்தே அடக்கவற்றான ஜடையோடு கூடின முடியையுடையனான ருத்3ரன் தனக்கு அடைத்த தேஶத்திலேதானே நிரந்தரவாஸம் பண்ணும்படியான திருமேனியை யுடையான். 4-8-10.

பதினொன்றாம் பாட்டு

உயிரினாற்குறைவில்லா உலகேழ்தன்னுள்ளொடுக்கித்
தயிர்வெண்ணெயுண்டானைத் தடங்குருகூர்ச்சடகோபன்
செயிரில்சொல்லிசைமாலை ஆயிரத்துளிப்பத்தால்
வயிரஞ்சேர்பிறப்பறுத்து வைகுந்தம்நண்ணுவரே.

ஆழ்வார் திருவடிகளே ஶரணம்

நிகமத்தில், ஸர்வேஶ்வரனாயிருந்துவைத்து ஆஶ்ரித ஸுலப4 னான எம்பெருமானைச் சொன்ன இத்திருவாய்மொழியை வல்லார் காழ்ப்பேறின ஸம்ஸார து3ரிதமற்றுத் திருநாட்டிலே புகுவர் என்கிறார்.

[உயிரினால் என்று தொடங்கி] – அஸங்க்2யரான ஆத்மாக்களையுடைய ஸமஸத லோக நிர்வாஹத்தையெல்லாம் தன் ஸங்கல்பத்தாலே பண்ணி ஆஶ்ரித க்3ருஹங்களிலே வந்து திருவவதாரம் பண்ணி அவர்களுடைய வஸ்துக்களே தா4ரகமான தன்மையையுடையவன்.செயிர்–குற்றம். 4-8-11.

நஞ்சீயர் திருவடிகளேரணம்

 

அவதாரிகை    4-9

நண்ணாதார்ப்ரவேசம்

ஒன்பதாந்திருவாய்மொழியில், ‘எம்பெருமான் விரும்பாத ஆத்மாத்மீயங் களால் கொள்வதொரு கருமமில்லை; அவனுக்கு உபயோகப்படாதவை நசிக்க அமையும்’ என்று மநோரதி2த்திருந்த இடத்திலும் அது தாம் நினை த்தபடியல்லாமையாலே விரஹவ்யஸநத்தாலே மிகவும் த3ஹ்யமாநராய் ஸமது3:கி2களோடே கூட ப்ரலாபித்து த4ரிப்போமென்று லோகத்தை அந்வேஷித்த இடத்தில் தம்மைப்போலே தத்ஸம்ஶ்லேஷ விஶ்லேஷ ஸுக2து3:க2ரன்றிக்கே அந்யபரராய் ஶப்3தா3தி3 விஷயங்களுடைய லாபா4லாப4ங்களே ஸுக2து3:க2ங்களாகக் கொண்டிருக்கிற ஜந்துக்கள் படுகிற து3:க2த்தை அநுஸந்தி4த்து மிகவும் நோவுபட்டு, தமக்கு எம்பெரு மானோடு உள்ள விஶ்லேஷவ்யஸநத்தை மறந்து ‘இஜ் ஜந்துக்களுடைய து3:க2த்தைப் போக்கும் விரகு ஏது?’ என்று அதிலே தத்பரராய், ‘ஸர்வஜ்ஞ னாய் ஸர்வஶக்தியாய்ப் பரமோதாரனாய் என்றும் எல்லாருடைய  ரக்ஷணத்திலே தீ3க்ஷிதனாய் ஸர்வாபராத4 ஸஹனாய் நினைத்தது முடிக்கைக்கு ஈடான ஸாமர்த்த்2யத்தை யுடைய ஸர்வேஶ்வரனான நீ உளனாயிருக்க, ஸம்ஸ்த ஜந்துக்களும் எண்ணிறந்த து3:க2ங்களாலே மிகவும் நலிவு படும்படியாக ’இது ஒரு லோகஸ்வபா4வத்தைப் பண்ணும் படியே!’ இவற்றை இங்ஙனே படுத்தியருளவொண்ணாது; இவர்களை நிர்த்து3:க2ராம்படி பண்ணியருளுதல், இது கண்டு பொறுக்க மாட்டாதே யிருக்கிற என்னை முடித்தல் செய்தருள வேணும்’ என்று ஆழ்வார் ஆந்ரு ஶம்ஸ்யத்தாலே நோவுபட்டு அர்த்தி2க்க, ‘அவர்களுக்கு இச்சை2யின்றி க்கே ஒழிந்த பின்பு என்னால் செய்யலாவது உண்டோ?’ என்று எம்பெரு மான் அருளிச்செய்ய, ‘அங்ஙனேயாகில், என்னை ஈண்டென விஷயீகரித் தருளவேணும்’ என்ன, இவருக்கு ஸம்ஸாராநுஸந்தா4நத்தால் வந்த க்லேஶமெல்லாம் நிவ்ருத்தமாம்படி பரமபத3த்திலே அஸ்ப்ருஷ்ட ஸம்ஸார க3ந்த4ரான அயர்வறு மமரர்கள் அடிமை செய்யப் பெரிய பிராட்டியாரும் தானும் வ்யாவ்ருத்தனாக இருந்தருளினபடியைக் காட்டி யருள, கண்டு அநுப4வித்து க்ருதார்த்த2ராகிறார். ‘உன்னை யொழிய அந்யபரமான ஜக3த்திலே இருக்கிற இருப்பு உன்னை விஶ்லேஷித்த வ்யஸநத்திற்காட்டிலும் மிகவும் து3ஸ்ஸஹமாயிராநின்றது; ஆனபின்பு, அவர்கள் நடு இராமே என்னை முடிக்கவேணும்’ என்று எம்பெருமானைக் குறித்து விண்ணப்பஞ்செய்கிறார் என்றுமாம்.

முதல் பாட்டு

நண்ணாதார்முறுவலிப்ப நல்லுற்றார்கரைந்தேங்க
எண்ணாராத்துயர்விளைக்கும் இவையென்னவுலகியற்கை?
கண்ணாளா! கடல்கடைந்தாய்! உனகழற்கேவரும்பரிசு?
தண்ணாவாதடியேனைப் பணிகண்டாய்சாமாறே.

முதற் பாட்டில், ‘நீ ஸர்வரக்ஷண ஸமர்த்த2னாய் ஸர்வநிர்வாஹக னா யிருக்க, இந்த ஸம்ஸாரிகள் அபரிமித து3:க2 பா4க்குக்களாயிருக்கிற படியைக் கண்டு நான் பொறுக்கமாட்டுகிறிலேன்; இவர்களார்த்தியைத் தீர்த்தல், இத்தை அநுஸந்தி4யாதபடி என்னை முடித்தல் செய்யவேணும்’ என்று எம்பெருமானுகு விண்ணப்பஞ்செய்கிறார்.

[நண்ணாதார் என்று தொடங்கி] – ஶத்ருக்கள் ப்ரீதராய்ச் சிரிக்கும்படி யாகவும் ஸ்நேஹிகளான ப3ந்து4க்கள் அவஸந்நராம்படியாகவும் எண்ணிறந்த து3:க2ங்களை விளைக்கிற இவை என்ன லோகயாத்ரை!  [கண்ணாளா என்று தொடங்கி] – க்ருபவானாய் மஹாயத்நம் பண்ணியும் ஆஶ்ரிதருடைய அபேக்ஷித்ங்களை முடித்துக் கொடுக்குமவனே! உன் திருவடிகளிலே வரும்படி தாழாதே என்னை ஶரீரத்தை விஶ்லேஷிப்பித் தருளவேணும். 4-9-1.

இரண்டாம் பாட்டு

சாமாறும்கெடுமாறும் தமருற்றார்தலைத்தலைப்பெய்து
ஏமாறிக்கிடந்தலற்றும் இவையென்னவுலகியற்கை?
ஆமாறொன்றறியேன் நான்அரவணையாய்அம்மானே!
கூமாறேவிரைகண்டாய் அடியேனைக்குறிக்கொண்டே.

இரண்டாம் பாட்டில், சேதநருடைய மரணாத்யநர்த்த2ங்களைச் சொல்லி விஷண்ணராய், இவர்கள் து3:க2த்தைப் போக்கியருளாயாகில் நான் இது அநுஸந்தி4யாத3படி என்னை ஈண்டெனத் திருவடிகளிலே அழைத்தருள வேணும் என்கிறார்.

[தமர் என்று தொடங்கி] – ஜ்ஞாதிகளும் ஸம்பந்திகளும் மேல் விழுந்து மேல் விழுந்து து3:கி2தராய்க் கிடந்து கூப்பிடுகையும் இவை என்ன லோகயாத்ரை? [ஆமாறு என்று தொடங்கி] – இந்த து3:க2 நிவ்ருத்திக்கு ஈடான உபாயம் நான் ஒன்றும் அறிகிறிலேன். ஸர்வேஶ்வரனாகைசுட்டி இவற்றினுடைய ரக்ஷணம் உனக்கு பா4ரமாகையாலே அதுக்கு உறுப்பாகத் திருப்பாற்கடலிலே கண்வளர்ந்தருளினவனே! [அடியேனைக் குறிக்கொண்டே] – என் ஸ்வபா4வத்தை அறிந்தருளி. 4-9-2.

மூன்றாம் பாட்டு

கொண்டாட்டும்குலம்புனைவும் தமருற்றார்விழுநிதியும்
வண்டார்பூங்குழலாளும் மனையொழியவுயிர்மாய்தல்
கண்டாற்றேனுலகியற்கை கடல்வண்ணா! அடியேனைப்
பண்டேபோற்கருதாது உன்னடிக்கேகூய்ப்பணிகொள்ளே.

மூன்றாம் பாட்டில், ஜந்துக்கள் ஆபி4ஜாத்யாதி3களெல்லாம் கிடக்க முடிகிறபடியைக் கண்டு ஒன்றும் பொறுக்கமாட்டுகிறிலேன்; இத்து:32ங் களை அநுஸந்தி4க்க வேண்டாத உன் திருவடிகளிலே அழைத்து அடிமை கொள்ளவேணும் என்கிறார்.

[கொண்டாட்டும் என்று தொடங்கி] – ஶ்லாகை4யும் ஆபி4ஜாத்யமும் ஜ்ஞாதிகளும் ஸம்ப3ந்தி4களும் சீரியநிதி4யும் அத்யந்த போ4க்3யையான ஸ்த்ரீயும் இஸ் ஸம்பத்துகு ஈடான க்3ருஹமும் இவையெல்லாம் கிடக்கத் தான் மாய்ந்து போம்படியான இந்த லோகயாத்ரையைக் கண்டு த4ரிக்க மாட்டுகிறிலேன்.  [கடல்வண்ணா என்று தொடங்கி] – இவர்கள் து3:கா2நு ஸந்தா4நத்தாற் படுகிற வ்யஸநம் உன்னைப் பிரிந்து நான் படும் வ்யஸந த்தோபாதியாக நினையாதே என்னுடைய க்லேஶம்தீர ஶ்ரமஹரமான உன்னுடைய வடிவைக்காட்டு. 4-9-3.

நான்காம் பாட்டு

கொள்ளென்றுகிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம்நெருப்பாகக்
கொள்ளென்றுதமம்மூடும் இவையென்னவுலகியற்கை?
வள்ளலே! மணிவண்ணா! உனகழற்கேவரும்பரிசு
வள்ளல்செய்தடியேனை உனதருளால்வாங்காயே.

நாலாம் பாட்டில், அதிஸ்ம்ருத்த4மான ஐஶ்வர்யமே தங்களுக்கு அநர்த்த2ஹேதுவாயிருக்கச்செய்தே பின்னையும் அத்தை ஆசைப்படுகிற லோகத்தினுடைய பொல்லாங்கை அநுஸந்தி4த்து இத்து3:கா2நுஸந்தா4ந க3ந்த4மில்லாத உன் திருவடிகளிலே என்னைக் கொண்டு போக வேணும் என்கிறார்.

[கொள் என்று தொடங்கி] – ஒருகாலுக்கு ஒருகால் ஸம்ருத்த4மான ஸம் பத்து அநர்த்த2ஹேதுவாகப் பின்னையும் ஸஹ்ருதயமாக இவ்வைஶ்வர் யத்தை ஆசைப்படுகைக்கு ஈடாகத் தமஸ்ஸு அபி34விக்கும்படியான இந்த லோகயாத்ரை பொறுக்க வொண்கிறதில்லை.  ‘கொள்’ என்று ப்ரேரிக்கிறது மநஸ் ஆகவுமாம். [வள்ளலே என்று தொடங்கி] – பரமோதா3 ரனாய் ஆஶ்ரித ஸுலப4னான நீ உன் க்ருபையாலே கு3ணாகு3ண நிரூபணம் பண்ணாதே என்னை விஷயீகரித்து உன் திருவடிகளிலே வாங்கவேணும். 4-9-4.

ஐந்தாம் பாட்டு

வாங்குநீர்மலருலகில் நிற்பனவும்திரிவனவும்
ஆங்குயிர்கள்பிறப்பிறப்புப் பிணிமூப்பால்தகர்ப்புண்ணும்
ஈங்கிதன்மேல்வெந்நரகம் இவையென்னவுலகியற்கை?
வாங்கெனைநீமணிவண்ணா! அடியேனைமறுக்கேலே.

அஞ்சாம் பாட்டில், ஜந்மஜராதி3 து3:க2ங்களையுடையரான இவ் வாத்மாக்கள வர்த்திக்கிற இந்த லோகத்தினின்றும் அடியேனை இதன் படியைக் காட்டி மறுகப்பண்ணாதே வாங்கியருளவேணும் என்கிறார்.

[வாங்குநீர் என்று தொடங்கி] – ஸ்வகார்யவர்க்க3த்தையடையத் தன் பக்கலிலே உபஸம்ஹரிப்பதான நீரிலே பிறந்த லோகத்தில் ஸ்தா2வர ஜங்க3மாத்மகமான ஆத்மாக்கள ஜராமரணாதி3களாலே நலிவுபடுவர்கள்.  இஹலோகத்தில் இந்த ஶரீரம் போனால் பின்னைக் கொடியநரகங்களை அநுப4விப்பர்கள.  இது ஒருலோகயாத்ரையே! ஶ்லாக்4யமான உன்னு டைய திருவழகை யநுப4விக்கலாம்படி உன் திருவடிகளிலே வாங்கி யருளவேணும்.  [வாங்கு நீர்மலருலகில்] – வளைந்த நீரையுடைத்தாய் மலரைத் தலையாகவுடைய லோகத்தில என்றுமாம்.  ஆங்கு வாங்கு என்று கூட்டிக்கொள்வது. 4-9-5.

ஆறாம் பாட்டு

மறுக்கிவல்வலைப்படுத்திக் குமைத்திட்டுக்கொன்றுண்பர்
அறப்பொருளையறிந்தோரார் இவையென்னவுலகியற்கை?
வெறித்துளவமுடியானே! வினையேனையுனக்கடிமை
யறக்கொண்டாய் இனியென்னாரமுதே! கூயருளாயே.

ஆறாம் பாட்டில், ஸம்ஸாரிகளுடைய ப43வத் வைமுக்2யாதி3 தோ3ஷங்களை அநுஸந்தி4த்து இவர்களை சுட்டி எம்பெருமானை இன்னாதாகை தவிர்ந்து,இவர்களோட்டை ஸஹவாஸத்தை விடும்படி என்னை உன் திருவடிகளிலே அழைத்தருளவேணும் என்கிறார்.

[மறுக்கி என்று தொடங்கி] – இஜ்ஜந்துக்கள அர்த்தா2பஹாரம் பண்ணு கைக்காக நிரபராத4ரா யிருப்பார்க்கு மஹாப4யஹேதுக்களை உத்பாதி3த்து மநஸ் மறுகும்படி பண்ணி நலிந்து அவர்களை ஹிம்ஶித்து ஜீவிப்பர்.  [அறம் என்று தொடங்கி] – த4ர்மதத்த்வத்தை அறிந்து ‘நமக்கு வேணும்’ என்று அத்4யவஸாயம் பண்ணுவாரில்லை.  இது ஒரு லோக ஸ்வபா4வம் இருந்தபடி என்? [ஓரார்} – பரஹிம்ஸையினின்றும் நீங்கார் என்றும் சொல்லுவர்.  அர்த்த2 புருஷார்த்த2த்திலே மிகவும் ப்ரவணராய் மற்றொரு நன்மை தீமைகள் ஆராயார் என்றுமாம்.  [வெறி என்று தொடங்கி] – இங்ஙனேயான பின்பு இனி இவர்களுக்கு ஶோகித்து ப்ரயோஜநம் என்? உன்னுடைய நிரதிஶய போ4க்3யமான வடிவழகைக் காட்டி விஷப்ரவணனான என்னை உனக்கேயாம்படி பண்ணின நீ. 4-9-6.

ஏழாம் பாட்டு

ஆயேயிவ்வுலகத்து நிற்பனவுந்திரிவனவும்
நீயேமற்றொருபொருளு மின்றிநீநின்றமையால்
நோயேமூப்பிறப்பிறப்புப் பிணியேயென்றிவையொழியக்
கூயேகொள்ளடியேனைக் கொடுவுலகங்காட்டேலே.

ஏழாம் பாட்டில், அபேக்ஷிதம் தாம் நினைத்தபோதே கிடையாவிட்ட வாறே ‘நீரே யத்நம்பண்ணி வாரீர்’ என்று எம்பெருமான் பேசாதிருந்தா னாகக்கொண்டு ஸகலபதா3ர்த்தங்களினுடைய ஸ்வரூபஸ்தி2த்யாதி3க ளெல்லாம் த்வத3தீ4நமானபின்பு த்வத்3விமுக2மான ஸம்ஸாரத்தைக் காட்டாதே நான் உன் திருவடிகளிலே வரும்படி நீயே பார்த்தருளவேணும் என்கிறார்.

[ஆயே என்று தொடங்கி] – இந்த லோகத்தில் ஸ்வதந்த்ரமாய் ஜீவிப்பது ஒரு பதா3ர்த்த2முமின்றிக்கே ஸ்தா2வர ஜங்கமாத்3மகமான ஸகல பதா3ர்த்த2ங்களும் த்வத3தீ4ந ஸ்வரூபஸ்தி2த்யாதி3களாம்படியாயே நீ நின்றமையாலே.  [ஆயே] – பரிவனே! என்றுமாம்.  [இறப்பிறப்பு] – இறப்பு பிறப்பு.  [கூயேகொள்] – அழைத்துக்கொள். 4-9-7.

எட்டாம் பாட்டு

காட்டிநீகரந்துமிழும் நிலம்நீர்தீவிசும்புகால்
ஈட்டிநீவைத்தமைத்த இமையோர்வாழ்தனிமுட்டைக்
கோட்டையினிற்கழித்தென்னை உன்கொழுஞ்சோதியுயரத்துக்
கூட்டரியதிருவடிக்கள் எஞ்ஞான்றுகூட்டுதியே?

எட்டாம் பாட்டில், எம்பெருமான் ‘நீர் அபேக்ஷித்தபடியே செய்கிறோம்’ என்ன, ‘என்று செய்வது?’ என்கிறார்.

[காட்டி என்று தொடங்கி] – நீ ஸ்ருஷ்டித்துத் திருவயிற்றிலே வைத்துப் புறப்படவிடும் ப்ருதி2வ்யாதி3பூ4தங்களைந்தாலும் சமைத்து வைப்பதும் செய்த ப்3ரஹ்மாதி3களுக்கு போ43ஸ்தா2நமாய் அத்யந்த விலக்ஷண மான அண்டமாகிற கோட்டையினின்றும் புறப்படவிட்டு.  [என்னை என்று தொடங்கி] – விலக்ஷண தேஜோரூபமாய் மற்றும் எல்லாப்படியாலும் மேற்பட்டிருந்துள்ள திருநாட்டிலே தந்தம் மிடுக்கால் து3ஷ்ப்ராபமான உன் திருவடிகளை. 4-9-8.

ஒன்பதாம் பாட்டு

கூட்டுதிநின்குரைகழல்கள் இமையோரும்தொழாவகைசெய்து
ஆட்டுதிநீஅரவணையாய் அடியேனு மதுவறிவன்
வேட்கையெல்லாம்விடுத்தென்னை உன்திருவடியேசுமந்துழலக்
கூட்டரியதிருவடிக்கள் கூட்டினைநான்கண்டேனே.

ஒன்பதாம் பாட்டில், இவருடைய வ்யஸநமெல்லாம் நிவ்ருத்தமாம் படி திருநாட்டிலிருந்த இருப்பைக் காட்டியருளக் கண்டு த்வத்வ்ய்திரிக்த ங்களில் ருசியை யெல்லாம் தவிர்த்தருளி ‘துஷ்ப்ராபமான உன் திருவடி களை எனக்குத் தந்தாய்; நான் அநுப4விக்கப் பெற்றேன்’ என்று த்3ருபத3 ராகிறார்.

[கூட்டுதி என்று தொடங்கி] – ஓரளவில்லாதாரையும் நீ நினைத்தாரை உன்னுடைய திருவடிகளோடே திருவநந்தாழ்வானைப்போலே கூட்டுதி. எத்தனையேனும் அளவுடை யாரேயாகிலும் நீ நினையாதாரைக் காண வொண்ணாதபடி விஷயங்களைக்காட்டி அகற்றி அலமந்து திரியப் பண்ணுதி.  லோகவேதங்களில் ப்ரஶித்34மான உன்னுடைய இந்தப் படியை நானும் அறிவன்.  [வேட்கை என்று தொடங்கி] – ‘நீர் அறிந்தபடி எங்ஙனே?’ என்னில், – பா3ஹ்யவிஷயஸங்க3த்தையெல்லாம் அறுத்து உன் திருவடிகளில் கைங்கர்யமே பண்ணி வர்த்3தி4க்கும்படி ஸ்வபா3ஹு ப3லத்தால் து3ஷ்ப்ராபமான உன் திருவடிகளைக் கூட்டினாய், நான் அநுப4விக்கப் பெற்றேனாகையால், அறிந்தேன். 4-9-9.

பத்தாம் பாட்டு

கண்டுகேட்டுற்றுமோந்து உண்டுழலுமைங்கருவி
கண்டவின்பம்தெரிவரிய வளவில்லாச்சிற்றின்பம்
ஒண்டொடியாள்திருமகளும் நீயுமேநிலாநிற்பக்
கண்டசதிர்கண்டொழிந்தேன் அடைந்தேனுன்திருவடியே.

பத்தாம் பாட்டில், ‘விட்டது இன்னது பற்றிற்று இன்னது’ என்று ப்ரீத் யதிஶயத்தாலே வ்யக்த்மாக அருளிச்செய்கிறார்.

[கண்டு என்று தொடங்கி] – இப்பாட்டுக்கு, கண் செவி முதலான இந்த்3ரிய ங்களாலே அநுப4விக்கப்பட்ட ஸுக2த்தையும் ஸம்ஸாரிகளுக்கு து3ஜ்ஞே யமாய் ஐந்த்3ரிய ஸுக2த்திற்காட்டில் பெருத்து ப4கவத் கைங்கர்ய ஸுக2 த்திற்காட்டில் சிறுத்திருந்துள்ள ஆத்மாந்ப4வஸுக2த்தையும் ஒழிந்தேன்; திருநாட்டிலே வேறொருவர் அபி4மாநிக்கக் கடவரின்றிக்கே எல்லாரும் உங்கள் அபி4மாநத்திலே அடங்கும்படியாகப் பெரியபிராட்டியாரும் நீயுமே வர்த்தி4க்கக் கடவதாகக் கண்டுவைத்த நேர்பாட்டைக் கண்டு திருவடிகளை அடையவும் பெற்றேன்.  ஒண்தொடி – அழகிய வளை. 4-9-10.

பதினொன்றாம் பாட்டு

திருவடியைநாரணனைக் கேசவனைப்பரஞ்சுடரைத்
திருவடிசேர்வதுகருதிச் செழுங்குருகூர்ச்சடகோபன்
திருவடிமேலுரைத்ததமிழ் ஆயிரத்துளிப்பத்தும்
திருவடியேயடைவிக்கும் திருவடிசேர்ந்தொன்றுமினே.

ஆழ்வார் திருவடிகளே ஶரணம்

நிக3மத்தில்,  இத்திருவாய்மொழி அப்4யஶித்தாரை இத்திரு வாய்மொழி தானே எம்பெருமான் திருவடிகளிலே சேர்க்கும்; ஆனபின்பு இத்தை அப்4யஶித்த அவன் திருவடிகளைச் சேர்ந்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார்.

[திருவடியை என்று தொடங்கி]–எல்லாருக்கும் ஸ்வாமியாய், வத்ஸலனாய் ஸ்வாஶ்ரித ஸம்ஶ்லேஷ விரோதி4யான கேஶிப்ரப்4ருத்யஸுர நிரஸநத் தைப் பண்ணும் ஸ்வபா4வனாய், திருவவதாரம் பண்ணின விடத்தில் ஐஶ் வரமான படியிற்காட்டிலும் உஜ்ஜ்வலமான தேஜஸ்ஸை யுடையவனைத் திருவடிகளைச் சேரவேணுமென்னுங் கருத்தாலே [செழுங்குருகூர்] – தம் முடைய து3:க2த்தை எம்பெருமான் கெடுத்தருளுகையாலே ஸம்ருத்34 மான திருநகரி. 4-9-11.

நஞ்சீயர் திருவடிகளேரணம்

 

அவதாரிகை    4-10

ஒன்றுந்தேவும்ப்ரவேசம்

பத்தாந் திருவாய்மொழியில், ஸம்ஸாரத்தினுடைய அஸாரதையைக் கண்டு ஸர்வரையும் எம்பெருமானைக் கொண்டு ஸம்ஸார் ஸம்ப3ந்த4 த்தை யறுத்து உஜ்ஜீவிப்பிக்க வேணுமென்று பார்த்து யத்நம்பண்ணி அவர்களுக்கு அபேக்ஷையில்லாமையயாலே தம்முடைய அபேக்ஷிதத்தை எம்பெருமான் பக்கலிலே அர்த்தி2த்துப் பெற்று உஜ்ஜீவித்த ஆழ்வார் அவன் தன் கு3ணங்களாலும் திருத்தவொண்ணாதே கைவிட்ட ஸம்ஸாரி களைத் தம்முடைய க்ருபாதி3ஶயத்தினாலே ப43வத் பரத்வஜ்ஞாந ப்ரதா3நத்தைப் பண்ணித் திருந்த உத்3யோகி3த்து ஸுக2து3:க2ங்களில் தாங்கள் நினைத்தபடியன்றிக்கே பரதந்த்ரரா யிருக்கிற இருப்பைக் காட்டிக் கர்மாதி4பரதந்த்ரனன்றிக்கே ஸ்வதந்த்ரனா யிருப்பான் வேறே யொருவனைக் கொள்ளாவிடில் ஸுக2து3:கா2நுப4வங்களும் மற்றுண் டான  லோகயாத்ரைகளும் நடவமையாலே ஒருநிர்வாஹகன் வேண்டின விடத்தில் ‘ஜக3த்துக்கு நிர்வாஹகனாக நாம் அங்கீகரித்த இவன் ஆர்? என்ன கு3ணங்களையுடையவன்? என்ன பேரையுடையவன்?’ என்று ஏவம் ஆதி3களை அறியவேணுமென்று அபேக்ஷை பிறந்தால் அவற்றை ப்ரதி பாதி3க்கும்போது ப்ரத்யக்ஷாதி3கள் அதீந்த்3ரிய விஷயத்தில் ப்ரமாண மாக மாட்டாமையாலே அவ்வர்த்த2த்தில் ஶாஸ்த்ரமே ப்ரமாணமாக வேண்டின விடத்தில் பா3ஹ்யாக3மங்க3ள் புருஷபுத்3தி4 ப்ரப4வங்களாகை யால் விப்ரலம்பா3தி3 தோ3ஷ ஸம்பா4வனநையாலே ப்ரமாணமாக மாட்டா; சதுர்த்த3ஶ வித்3யாஸ்தா2நப்ரதா4நமான வேத3மே ப்ரமாணமாக வேணும்.  அதிலும் பூர்வபா43மானது ஸ்வர்க்க3 தத்ஸாத4நாதி3களுக்கு ப்ரதிபாத3கமாகையாலே பரத்வத்தில் ப்ரமாணமாக மாட்டாது.  ஸாத்விக புராணேதிஹாஸங்களாலே உபப்3ரும்ஹிதமாய் ந்யாயோபேதமான வேதா3ந்தம் ப்ரமாணமாக வேணும்.  அதுதான் தத்த்வபரமாயும் உபாஸந பரமாயும் ப்ராப்திபரமாயுமுள்ள வாக்யங்களில் வைத்துக்கொண்டு தத்த்வபரமான காரணவாக்யங்களுக்குக்கெல்லாம் வ்யாக்2யாநம் ப2லிக் கும்படி க3திஸாமாந்ய ந்யாயத்தாலே நிர்ணீதனான ஶ்ரிய:பதியான நாராயணனுடைய ஜக3த்காரணத்வத்தாலும் ஜக3ந்நியந்த்ருத்வத்தாலும் ஜக3த்ரக்ஷகத்வத்தாலும் ஸர்வாபத்துக்களையும் போக்குகையாலும் ஸர்வதத்த்வத்துக்கும் ஆத்மாவாகையாலும் ஸராதி4பனாகையாலும் ப்3ரஹ்மருத்3ராதி3களுக்கு ஈஶ்வரனாகையாலும் ப்3ரஹ்மருத்3ராதி3களு  டைய ஈஶ்வரத்வத்தை நிராகரித்து ‘ஶ்ரிய:பதியே  ஈஶ்வரன்’ என்றும், ‘அவன் அத்யந்த ஸுலப4ன்’ என்றும் ப்ரதிபாதியாநின்றுகொண்டு ஶ்ருதி ச்சா2யையாலே ப43வத் பரத்வத்தையும் ஸௌலப்4யத்தையும் உபபாதித்து அவர்களை ப43வத்ப்ரவணராக்குகிறார்.

முதல் பாட்டு

ஒன்றுந்தேவுமுலகுயிரும்மற்றும் யாதுமில்லா
அன்று நான்முகன்தன்னொடு தேவருலகோடுயிர்படைத்தான்
குன்றம்போல்மணிமாடநீடு திருக்குருகூரதனுள்
நின்றவாதிப்பிரான்நிற்க மற்றைத்தெய்வம்நாடுதிரே.

முதற் பாட்டில், “ஏகோஹவை நாராயணஆஶீத்” என்றுள்ள உபநிஷத் வாக்யபரக்ரியையை அநுஸரியாநின்றுகொண்டு கார்ய ரூப ப்ரபஞ்சம் ஒன்று ஒழியாமே இன்றிக்கே கிடந்த காலத்திலே சதுர்முக2 ப்ரமுக2மான ஜக3த்தையெல்லாம் உண்டாக்கின ஜக3த்காரணமான ஸர்வேஶ்வரன் உங்களுக்குக் கண்ணாலே கண்டு ஆஶ்ரயிக்கலாம்படி மலைபோலே மணிமாடங்கள் உயர்ந்திருக்கிற திருநகரியிலே நின்றரு ளின அவனை ஆஶ்ரயியாதே  வேறே ஆஶ்ரயணீய தை3வம், உண்டென்று தேடித் திரிகிறிகோளே! என்று அவர்களை க்ஷேபிக்கிறார்.

[ஒன்றும் தேவும் என்று தொடங்கி] – தை3வங்களும் லோகங்களும் மநுஷ் யாதி3களான ஆத்மாக்களும் அண்டத்துக்கு அடியான மஹதா3திகளும் ஒன்றுமில்லாத காலத்திலே.  ‘ஒன்றும்’ என்று தே3வாதி3கார்யகளுக்குக் காரணத்திலே லயத்தைச் சொலிற்றாகவுமாம். 4-10-1.

இரண்டாம் பாட்டு

நாடிநீர்வணங்குந்தெய்வமும் உம்மையும்முன்படைத்தான்
வீடில்சீர்ப்புகழாதிப்பிரானவன் மேவியுறைகோயில்
மாடமாளிகைசூழ்ந்தழகாய திருக்குருகூரதனைப்
பாடியாடிப்பரவிச்சென்மின்கள் பல்லுலகீர்பரந்தே.

இரண்டாம் பாட்டில், அவனாலே ஸ்ருஜ்யராமிடத்தில் உங்கோடு நீங்கள் ஆஶ்ரயிக்கிற தே3வதைகளோடு வாசியில்லை;  ஆனபின்பு, நித்ய ஶ்ரீயான ஸர்வேஶ்வரன் நின்றருளுகிற திருநகரியை ஆஶ்ரயியுங்கோள் என்கிறார்.

[நாடிநீர்வணங்கும் என்று தொடங்கி] – வசநாபா4ஸங்களாலும் யுக்த்யா பா4ஸங்களாலும் மேலாக உபபாதித்து நீங்கள் ஆஶ்ரயிக்கிற தே3வதை களையும் உங்களையும் கண்டு படைப்பதும் செய்து அவற்றைப்போலே யன்றிக்கே நித்யமான ஸ்ரீயையும் புகழையுமுடைய ஜக3த்காரண பூ4த னான ஸர்வேஶ்வரன் நிரந்தரவாஸம்பண்ணுகிற கோயில். பரந்து – ஸர்வதோதி4க்கமாக. 4-10-2.

மூன்றாம் பாட்டு

பரந்ததெய்வமும்பல்லுலகும்படைத்து அன்றுஉடனேவிழுங்கிக்
கரந்துமிழ்ந்துகடந்திடந்தது கண்டும்தெளியகில்லீர்
சிரங்களாலமரர்வணங்கும் திருக்குருகூரதனுள்
பரன்திறமன்றிப்பல்லுலகீர்! தெய்வம்மற்றில்லைபேசுமினே.

மூன்றாம் பாட்டில், ஜக3ந்நிகரணாதி3 தி3வ்யசேஷ்டிதங்களாலும் இவனே பரன்; இது இசையாதார் என்னோடே வந்து பேசிக் காணுங்கோள் என்கிறார்.

[பரந்த என்று தொடங்கி] – ஈஶ்வரத்வ ஶங்கை பண்ணலாம்படி விஸ்த்ருத மான பல தே3வதைகளையும் அவர்களுக்குப் போரும்படியான பல லோக ங்களையும் உண்டாக்கி.  [தெளிய கில்லீர்] – தெளியமாட்டுகிறிலீர்.  [பரன் என்று தொடங்கி] – ஸர்வஸ்மாத்பரனான பொலிந்து நின்றபிரானுக்கு ஶேஷமாயல்லது ஸ்வதந்த்ரமாயிருப்பது வேறொரு தேவதையில்லை;  உண்டாகில், அதுக்கு உபபத்திகளைச் சொல்லுங்கோள். 4-10-3.

நான்காம்பாட்டு

பேசநின்றசிவனுக்கும் பிரமன்தனக்கும்பிறர்க்கும்
நாயகனவனே கபாலநன்மோக்கத்துக்கண்டுகொண்மின்
தேசமாமதிள் சூழ்ந்தழகாய திருக்குருகூரதனுள்
ஈசன்பாலோரவம்பறைதல் என்னாவது? இலிங்கியர்க்கே.

நாலாம் பாட்டில், வ்யோமாதீத நையாயிக வைஶேஷிகாதி3 கள் வந்து ப்ரத்யவஸ்தி2தராய் ‘ஸாவயவமான ஜக3த்து கார்யம்’ என்றும் ‘கார்யமாகையாலே கர்த்ருமத்’ என்றும், கர்த்ரு விஶேஷாபேக்ஷை பண்ணில் உபநிஷத்துக்கள்  ‘ஈஶன்’ என்றும் ‘ஈஶாநன்’ என்றும் சொல்லு கிற பேரைத் துணையாகக் கொண்டு கீழ்ச்சொன்ன அநுமாந முக2த்தா லும் மற்றும் அவ்வர்த்த2த்துக்கு ஸாத4கமான உபபத்திகளாலும் ‘ருத்3ர தத்த்வம் பரம்’ என்று அவர்கள் ஸாதி4க்க, ‘ஒருவன் தான் ப்ராணனோடே யிருக்கத் தன் தலையை யறுக்கக் கொடுக்க, ஒருவன் அத்தாலே பாதகி யாய்க் கபாலபாணியாய் இரந்து ஶரீரதா4ரணம் பண்ணித் திரிய, ஸர்வே ஶ்வரன் க்ருபையாலே கபாலமோக்ஷாதிகளைப் பண்ணி ரக்ஷித்தான்’ என்று இதிஹாஸபுராணாதி3களில் ப்ரஶித்த4மான லிங்கத்தையும் அகாரார்த்த2த்தை ஸர்வேஶ்வரனாகச் சொல்லுகிற ஶ்ருதியையும் காட்டி அவற்றின் ஸந்நிதி4யில் நிலைநிற்கமாட்டாதே து3ர்ப்ப3லையான ஸமாக்2 யையைத் தள்ளி இந்த ஶ்ருதிலிங்கங்களையே ஈஶ்வராநுமாநத்துக்கும் காலாத்யயாபதி3ஷ்டமான தூ3ஷணத்துக்கு உடலாக முன்னிட்டு இப் புடைகளாலே அவர்களை நிராகரித்து ப்ரஶித்த4மான உபநிஷந்மரியா தையாலே எம்பெருமான் ஸர்வேஶ்வரன் என்று ஸாதி4த்து குத்3ருஷ்டிக ளான உங்களுக்கு ஒரு ப்ரயோஜநமில்லை என்கிறார்.

[பேசநின்ற என்று தொடங்கி] – நீங்கள் ஈஶ்வரன் என்று பேசுகிற ருத்3ரனு க்கும் அவனுக்கு ஜநகனான ப்3ரஹ்மாவுக்கும் மற்றுமுள்ளார்க்கும் ஈஶ்வரன் உபநிஷத் ப்ரஶித்த4னான நாராயணனே; இவ்வர்த்த2த்தை ப்ரஶித்த4மான கபால மோக்ஷத்திலே கண்டு கொள்ளுங்கோள்.  [தேசமாமதிள் என்று தொடங்கி] – அநபி44வநீயமாம்படி தேஜஸ்ஸை யுடைத்தாய் அரணாகப் போரும்படி மதிள் சூழ்ந்து அழகிதான திருநகரி யில் நின்றருளின ஈஶ்வரன் பக்கல் குத்3ருஷ்டிகளாய் ஆநுமாநிகரான உங்களுக்கு அநீஶ்வரத்வ ஸாத4கமான ஆபா4ஸயுக்திகள் தேடிச் சொன்னால் நிஷ்ப2லம். 4-10-4.

ஐந்தாம் பாட்டு

இலிங்கத்திட்டபுராணத்தீரும் சமணரும்சாக்கியரும்
வலிந்துவாதுசெய்வீர்களும் மற்றுநுந்தெய்வமுமாகிநின்றான்
மலிந்துசெந்நெல்கவரிவீசும் திருக்குருகூரதனுள்
பொலிந்துநின்றபிரான்கண்டீர் ஒன்றும்பொய்யில்லைபோற்றுமினே.

அஞ்சாம் பாட்டில், லைங்கபுராண நிஷ்டர் தொடக்கமான நீங்க ளும் உங்களுடைய தேவதைகளுமெல்லாம் நாராயாணாத்மகரா யிருக் கிறிகோள்; ஆனபின்பு, அவனை ஆஶ்ரயியுங்கோள் என்கிறார்.

[இலங்கித்து என்று தொடங்கி] – ருஷிக்குத் தம:ப்ரசுரதஶையிலே லிங்க ப்ரஶம்ஸார்த்த2மாக ப்ரவ்ருத்தமான புராணநிஷ்டரான உங்களுக்கும் மற்றும் யுக்திகளைச் சொல்லி வலிந்து பிணங்கா நின்றுள்ள க்ஷபண ஶாக்3யமதாநுஸாரிகளான உங்களுக்கும் உங்கள் தே3வதைகளுக்கும் ஆத்மதயா நின்றான்.  [மலிந்து என்று மேலுக்கு] – செந்நெற் கதிர்கள் வந்து கவரி வீசினாற்போலே அசைந்து வருகிற திருநகரியுள்ளே எழுந்த ருளி நின்றருளின பொலிந்து நின்ற பிரானே கிடிகோள்; இவ்விடத்தில் ஓர் அர்த்த2வாத3மில்லை. 4-10-5.

ஆறாம் பாட்டு

போற்றிமற்றோர்தெய்வம் பேணப்புறத்திட்டு உம்மைஇன்னே
தேற்றிவைத்தது எல்லீரும்வீடுபெற்றால்உலகில்லையென்றே
சேற்றிற்செந்நெல்கமலமோங்கு திருக்குருகூரதனுள்
ஆற்றவல்லவன்மாயங்கண்டீர் அதறிந்தறிந்தோடுமினே.

ஆறாம் பாட்டில், எம்பெருமானே ஸர்வேஶ்வரனாகில் எங்களை தே3வதாந்தர ப்ரவணராக்கி வைப்பானென்? என்னில்; – இங்ஙனே செய்தது ஸத3ஸத்கர்மகாரிகளான ஜந்துக்கள் அவ்வவகர்மாநுகு3ண ப2லங்களை அநுப4விக்கக்கடவதான ஶாஸ்த்ரமர்யாதை அழியுமென்று ஆனபின்பு, இத்தையறிந்து எம்பெருமானை ஸமாஶ்ரயித்து அவன் வஞ்சநத்தைத் தப்புங்கோள் என்கிறார்.

[போற்றி என்று தொடங்கி] – தன் பக்கல் நின்றும் அகற்றி இதர தே3வதை களை விரும்பி ஸமாஶ்ரயிக்கும்படி உங்களுக்கு இவற்றின் பக்கலிலே இப்படி விஶ்வாஸம் பிறப்பித்து வைத்தது, தன்னையே ஸமாஶ்ரயித்து எல்லாரும் முக்தரானால் புண்யபாபரூபகர்மங்களைப் பண்ணினவர்கள் அவ்வவகர்மப2லங்களைப் பெறக் கடவதான ஶாஸ்த்ரமர்யாதை கெடு மென்று.  [ஆற்றவல்லவன் என்று மேலுக்கு] – அதிஶயிதஶக்திகனானவனு டைய  வஞ்சநம் கிடிகோள். 4-10-6.

ஏழாம்பாட்டு

ஓடியோடிப்பலபிறப்பும்பிறந்து மற்றோர்தெய்வம்
பாடியாடிப்பணிந்து பல்படிகால்வழியேறிக்கண்டீர்
கூடிவானவரேத்தநின்ற திருக்குருகூரதனுள்
ஆடுபுட்கொடியாதிமூர்த்திக்கு அடிமைபுகுவதுவே.

ஏழாம் பாட்டில், ‘அபி4லஷிதபுருஷார்த்த2ங்களுக்காக தே3வதாந் தரங்களை ஆஶ்ரயித்தாலோ?’ என்னில், – ‘நெடுங்காலம் அவர்களை ஆஶ்ரயித்துப் பெற்ற ப2லமிறே இனி ஆஶ்ரயித்தாலும் பெறுவது; ஆன பின்பு, அவற்றைவிட்டுப் பொலிந்துநின்றபிரானை ஸமாஶ்ரயியுங்கோள்’ என்கிறார்.

[ஓடி என்று தொடங்கி] – இனி ஆராய வேண்டாதபடி கர்மாநுகுணமாகப் போய்ப் போய்ப் பலபிறவிகளும் பிறந்து தே3வதாந்தரங்களை ஸாத3ர மாக ஆஶ்ரயித்து அநேக பர்யாயம் அவை தரும்புருஷார்த்த2ங்களையும் பெற்று அப்புருஷார்த்த2ம் இருக்கும்படியும் அறிந்திகோள். [கூடி வானவர் என்று தொடங்கி] – ‘ஆகில், செய்ய அடுப்பது என்?’ என்னில், – நீங்கள் ஈஶ்வரர்களாக ஶங்கிக்கிற தே3வதைகளெல்லாம் ஏககண்ட2ராய் ஆஶ்ர யிக்கும்படி திருநகரியிலே நின்றருளின ஸர்வேஶ்வர ஶேஷத்வாநு ஸந்தா4ந ஜநித ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே ஆடாநின்றுள்ள பெரிய திருவடியை ரக்ஷகத்வக்2யாபநத்4வஜமாகவுடைய ஜகத்3காரணமான ஸர்வேஶ்வரனுக்கு அடிமைபுகுங்கோள். 4-10-7.

எட்டாம்பாட்டு

புக்கடிமையினால்தன்னைக்கண்ட மார்க்கண்டேயனவனை
நக்கபிரானுமன்றுய்யக்கொண்டது நாராயணனருளே
கொக்கலர்தடந்தாழைவேலித் திருக்குருகூரதனுள்
மிக்கவாதிப்பிரான்நிற்க மற்றைத்தெய்வம்விளம்புதிரே.

எட்டாம் பாட்டில், ‘மார்க்கண்டேய ப43வான் ருத்3ரனை ஆராதி3த்து ஸ்வப்ரார்த்தி2தத்தைப் பெற்றிலனோ?’ என்னில், – ‘அவ்விடத்தில் ருத்3ரன் புருஷகாரமாத்ரமே.  அவனுடைய ப்ரார்த்தி2தம் கொடுத்தருளினான எம்பெருமானே’ என்கிறார்.

[புக்கடிமையினால் தன்னைக்கண்ட] – அடிமையாலே புக்குத் தன்னை க்கண்ட. [அருளே] – ப்ரஸாத3த்தாலே. [கொக்க்லர் என்று மேலுக்கு] – கொக்கின் நிறம்போலே யிருந்துள்ள பூக்களையுடைய பெரிய தாழை களை வேலியாகவுடைய திருகரியில் தன்னுடைய ஐஶ்வர்யாதி3களால் ஸம்ருத்த4னான ஜக3த்காரணமான ஈஶ்வரன் நிற்க, மற்று என்ன தே3வதைகளை பேசுகிறிகோள்? 4-10-8.

ஒன்பதாம் பாட்டு

விளம்பும்ஆறுசமயமும் அவையாகியும்மற்றும்தன்பால்
அளந்துகாண்டற்கரியனாகிய ஆதிப்பிரானமரும்
வளங்கொள்தண்பணைசூழ்ந்தழகாய திருக்குருகூரதனை
உளங்கொள்ஞானத்துவைம்மின் உம்மைஉய்யக்கொண்டுபோகுறிலே.

ஒன்பதாம் பாட்டில், வேத3பா3ஹ்யரும் குத்3ருஷ்டிகளும் பண்ணும் து3ஸ்தர்க்கங்களால் அழிக்கவொண்ணாத ஐஶ்வர்யத்தை யுடைய எம்பெருமான் எழுந்தருளியிருக்கிற திருநகரியை ஆஶ்ரயியுங் கோள், பிழைக்க வேண்டியிருந்திகோளாகில் என்கிறார்.

[விளம்பும் ஆறு சமயமும்] – இப்பாட்டுக்கெல்லாம் பேச்சுப் போக்கி உள்ளீ டின்றிக்கே யிருக்கிற பா3ஹ்ய ஸமயங்களாறாலும் விழுக்காட்டில் அவற்றோடு ஒத்திருக்கிற மற்றுள்ள குத்3ருஷ்டிகளாலும் அவிசால்யமான ஸ்வரூபரூபகு3ண விபூ4திகளையுடைய ஸர்வேஶ்வரன் நிரந்தர வாஸம் பண்ணுகிற வளவிதான நீர்நிலத்தையுடைத்தாய் அதிரமணீயமான திரு நகரியை மாநஸஜ்ஞாந விஷயமாக்குங்கோள்;  உங்களை நீங்கள் பிழை ப்பித்துக்கொண்டுபோகவேண்டில். 4-10-9.

பத்தாம் பாட்டு

உறுவதாவதெத்தேவும் எவ்வுலகங்களும்மற்றுந்தன்பால்
மறுவின்மூர்த்தியோடொத்து இத்தனையும்நின்றவண்ணம்நிற்கவே
செறுவிற்செந்நெல்கரும்பொடோங்கு திருக்குருகூரதனுள்
குறியமாணுருவாகிய நீள்குடக்கூத்தனுக்காட்செய்வதே.

பத்தாம் பாட்டில், தன் ஐஶ்வர்யத்தில் ஒன்றும் குறையாமே வந்து நின்றருளின பொலிந்துநின்றபிரானுக்கு அடிமை செய்கையே உறுவதாவது என்கிறார்.

[எத்தேவும் என்று தொடங்கி] – எல்லாத் தே3வதைகளும் எல்லா லோகங்க ளும் மற்றும் உள்ளனவெல்லாம் தன்னுடைய அப்ராக்ருதமான திருமேனி யோடொக்க விதே4யமாம்படியான இந்த ஐஶ்வர்யத்தோடே கூடவே.  [செறு] – விளைநிலம்.  [குறிய என்று தொடங்கி] – ஆஶ்ரிதர்க்காக ஸ்ரீ வாமநனாயும் அநுப4விப்பாரளவல்லாதபடி குடமாடுவதும் செய்த பொலிந்துநின்றபிரானுக்கு. 4-10-10.

பதினொன்றாம் பாட்டு

ஆட்செய்தாழிப்பிரானைச்சேர்ந்தவன் வண்குருகூர்நகரான்
நாட்கமழ்மகிழ்மாலைமார்பினன் மாறன்சடகோபன்
வேட்கையாற்சொன்னபாடல் ஆயிரத்துள்இப்பத்தும்வல்லார்
மீட்சியின்றிவைகுந்தமாநகர் மற்றதுகையதுவே.

ஆழ்வார் திருவடிகளே ஶரணம்

நிக3மத்தில், இத்திருவாய்மொழி கற்றவர்களுக்குப் பரமபதம் ஸுலப4மென்கிறார்.

[ஆள்செய்து என்று] – இப்பாட்டுக்கு எம்பெருமானுடைய கையும் திரு வாழியுமான அழகுக்குத் தோற்று அடிமைசெய்து கொண்டு திருவடி களிலே சேர்ந்த திருநகரியையுடையராய் ப43வத3நுப4வ ப்ரீதியாலே செவ்விபெற்று நாடோறும் கமழாநின்றுள்ள மகிழ்மாலையைத் திரு மார்பிலேயுடையராய் ப43வத3நுப4வ விரோதி4களுக்கு ஶத்ருவான ஆழ்வார்.  [வேட்கையால் என்று மேலுக்கு] – அபி4நிவேஶத்தாலே சொன்ன ஆயிரந்திருவாய்மொழியினும் இத்திருவாய்மொழி வல்லவர்களுக்கு இப்பத்து அப்4யஸிக்கப்பெற்றதுக்குமேலே மீட்சியில்லாத வைகுந்த மாநகராகிறதும் அத்யந்த ஸுலப4ம்.  இப்பாட்டில், ஆழ்வார் தம்மை ஸ்தோத்ரம்பண்ணிற்று, பரப்ரதிபாத3நார்ஹமாம்படி ப43வத் ஜ்ஞாநம் கைவந்த ஹர்ஷ ப்ரகர்ஷத்தாலே; ஸ்ரீவால்மீகி ப43வான்  “வால்மீகிர் ப43வாந்ருஷி:” என்று கொண்டு தன்னைத்தானே புகழ்ந்துகொண்டாற் போலே.     4-10-11.

நஞ்சீயர் திருவடிகளேரணம்

திருவாய்மொழி நான்காம்பத்து ஓன்பதினாயிரப்படி வ்யாக்2யானம் முற்றிற்று.

 

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.