Periazhwar Thirumozhi Part 1

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

பொதுத்தனியன்கள்

மணவாள மாமுனிகள் தனியன்

(அழகிய மணவாளன் அருளிச் செய்தது)

ஶ்ரீஶைலேஶதயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்|

யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம்முநிம்||

குருபரம்பரை தனியன்

(கூரத்தாழ்வான் அருளிச் செய்தது)

லக்ஷ்மீநாதஸமாரம்பாம் நாதயாமுநமத்யமாம்|

அஸ்மதாசார்யபர்யந்தாம் வந்தே குருபரம்பராம்||.

எம்பெருமானார் தனியன்

(கூரத்தாழ்வான் அருளிச் செய்தது)

யோநித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம

வ்யாமோஹதஸ்ததிதராணித்ருணாயமேநே|

அஸ்மத்குரோர்பகவதோஸ்யதயைகஸிந்தோ:

ராமாநுஜஸ்யசரணௌ சரணம்ப்ரபத்யே.||

நம்மாழ்வார் தனியன்

(ஆளவந்தார் அருளிச் செய்தது)

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ்

ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்|

ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்

ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா.||

(ஸ்ரீ பராசரபட்டர் அருளிச்செய்தது)

பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய பட்டநாத

ஸ்ரீபக்திஸார குலஶேகர யோகிவாஹாந்|

பக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ரமிஶ்ராந்

ஸ்ரீமத் பராங்குஶமுநிம் ப்ரணதோஸ்மிநித்யம்.||

*******

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்விய பிரபந்தங்களுள்

முதலாயிரம்

 

பெரியாழ்வார் திருமொழிகளின்

தனியன்கள்

(நாதமுனிகள் அருளிச்செய்தது)

குருமுகமநதீத்ய ப்ராஹவேதாநஶேஷாந்

நரபதிபரிக்லுப்தம் ஶுல்கமாதாதுகாம:|

ஶ்வஶுரமமரவந்தயம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்

த்விஜகுலதிலகம்தம் விஷ்ணுசித்தம் நமாமி.II

(பாண்டியபட்டர் அருளிச்செய்தவை)

மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று* ஒருகால்

சொன்னார் கழற்கமலஞ் சூடினோம்* – முன்னாள்

கிழியறுத்தானென்றுரைத்தோம்* கீழ்மையினிற்சேரும்

வழியறுத்தோம் நெஞ்சமே வந்து.

பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான்வந்தானென்று

ஈண்டியசங்க மெடுத்தூத* – வேண்டிய

வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான்*

பாதங்கள்யாமுடையபற்று

பெரியாழ்வார் திருமொழி

திருப்பல்லாண்டு

முதல் பத்து

முதல் திருமொழி

பல்லாண்டு பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு *

பலகோடி, நூறாயிரம் *

மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா ! *

உன் செவ்வடி செவ்வி திருக்காப்பு. 1    1.1.1

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு*

வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு *

வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு *

படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே. 2         1.1.2

வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல்

வந்து மண்ணும் மணமும் கொண்மின் *

கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுத லொட்டோம் *

ஏழாட் காலம் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் * இலங்கை

பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. 3            1.1.3

ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து *

கூடு மனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ *

நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணாய வென்று *

பாடு மனமுடைப் பத்தருள்ளீர் ! வந்து பல்லாண்டு கூறுமினே. 4    1.1.4

அண்டக் குலத்துக் கதிபதியாகி அசுர ரிராக்கதரை *

இண்டக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு *

தொண்டக் குலத்தி லுள்ளீர் ! வந்து அடி தொழுது

ஆயிரம் நாமம் சொல்லி *

பண்டைக் குலத்தைத் தவிர்ந்து

பல்லாண்டு பல்லாயிரத் தாண்டென்மினே. 5            1.1.5

எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன்

ஏழ்படி கால் தொடங்கி *

வந்து வழி வழியாட் செய்கின்றோம் * திருவோணத் திருவிழவில் *

அந்தியம் போதில் அரியுருவாகி அரியை யழித்தவனை *

பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத் தாண்டென்று பாடுதுமே. 6 1.1.6

தீயிற் பொலிகின்ற செஞ் சுடராழி திகழ் திருச் சக்கரத்தின் *

கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி யாட்செய்கின்றோம் *

மாயப் பொருபடை வாணனை ஆயிரம் தோளும் பொழி குருதி

பாய * சுழற்றிய ஆழி வல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. 7      1.1.7

நெய்யிடை நல்லதோர்சோறும் நியதமும் அத்தாணிச்சேவகமும் *

கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும் *

மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வள்ளுயிராக்க வல்ல *

பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே. 8          1.1.8

உடுத்துக் களைந்த நின் பீதக வாடை உடுத்து கலத்ததுண்டு *

தொடுத்த துழாய்மலர் சூடிக்களைந்தன, சூடும் இத்தொண்டர்களோம் *

விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில் *

படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப்

பல்லாண்டு கூறுதுமே. 9      1.1.9

எந்நாள் எம்பெருமான் !

உன் தனக்கு அடியோமென்று எழுத்துப் பட்ட

அந்நாளே * அடியோங்கள் அடிக்குடில் வீடு பெற்று உய்ந்தது காண் *

செந்நாள் தோற்றித் திருமதுரையுள் சிலை குனித்து * ஐந்தலைய

பைந்நாகத் தலைப் பாய்ந்தவனே !

உன்னைப் பல்லாண்டு கூறுதுமே. 10     1.1.10

அல்வழக் கொன்று மில்லா,

அணி கோட்டியர் கோன் * அபிமான துங்கன்

செல்வனைப் போலத் திருமாலே ! நானுமுனக்குப் பழவடியேன் *

நல்வகையால் நமோ நாராயணா வென்று நாமம் பல பரவி *

பல்வகையாலும் பவித்திரனே ! உன்னைப் பல்லாண்டு கூறுவனே. 11      1.1.11

பல்லாண்டென்று, பவித்திரனைப்

பரமேட்டியை * சார்ங்கமென்னும்

வில்லாண்டான் தன்னை,

வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல் *

நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாய வென்று *

பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே. 12        1.1.12

இரண்டாம் திருமொழி

வண்ண மாடங்கள் சூழ், திருக்கோட்டியூர் *

கண்ணன் கேசவன் நம்பி, பிறந்தினில் *

எண்ணெய் சுண்ணம், எதிரெதிர் தூவிடக் *

கண்ணன் முற்றம், கலந்தளறாயிற்றே. 1         1.2.1    (திருக்கோட்டியூர்)

ஓடுவார் விழுவார், உகந்தாலிப்பார் *

நாடுவார், நம்பிரான் எங்குற்றான் என்பார் *

பாடுவார்களும், பல்பறை கொட்ட நின்று *

ஆடுவார்களும் * ஆயிற்று, ஆய்ப்பாடியே. 2   1.2.2    திருக்கோட்டியூர்

பேணிச் சீருடைப் பிள்ளை, பிறந்தினில் *

காணத் தாம் புகுவார், புக்குப் போதுவார் *

ஆணொப்பார், இவன் நேரில்லை காண் * திரு

வோணத்தா னுலகு, ஆளுமென்பார்களே. 3.    1.2.3    திருக்கோட்டியூர்

உறியை முற்றத் துருட்டி நின்று ஆடுவார் *

நறு நெய் பால் தயிர் நன்றாகத் தூவுவார் *

செறிமென் கூந்தல் அவிழத் திளைத்து * எங்கும்

அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடி ஆயரே. 4           1.2.4    திருக்கோட்டியூர்

கொண்ட தாளுறி கோலக் கொடு மழு *

தண்டினர் பறியோலைச் சயனத்தர் *

விண்ட முல்லை அரும்பன்ன பல்லினர் *

அண்டர் மிண்டிப் புகுந்து நெய்யாடினார். 5     1.2.5    திருக்கோட்டியூர்

கையும் காலும் நிமிர்த்துக் கடார நீர் *

பைய வாட்டிப் பசும் சிறு மஞ்சளால் *

ஐய நாவழித்தாளுக்கு அங்காந்திட *

வையமேழும் கண்டாள் பிள்ளை வாயுளே. 6           1.2.6    திருக்கோட்டியூர்

வாயுள் வையகம் கண்ட மடநல்லார் *

ஆயர் புத்திர னல்லன் அருந் தெய்வம் *

பாய சீருடைப் பண்புடைப் பாலகன் *

மாயனென்று மகிழ்ந்தனர் மாதரே. 7      1.2.7    திருக்கோட்டியூர்

பத்து நாளும் கடந்த இரண்டா நாள் *

எத்திசையும் சயமரம் கோடித்து *

மத்த மாமலை தாங்கிய மைந்தனை *

உத்தானம் செய்து உகந்தனர் ஆயரே. 8            1.2.8    திருக்கோட்டியூர்

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும் *

எடுத்துக் கொள்ளில் மருங்கை இறுத்திடும் *

ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும் *

மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய் ! 9          1.2.9    திருக்கோட்டியூர்

செந்நெலார் வயல் சூழ் திருக்கோட்டியூர் *

மன்னு நாரணன் நம்பி பிறந்தமை *

மின்னு நூல் விட்டுசித்தன் விரித்த * இப்

பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே. 10   1.2.10    திருக்கோட்டியூர்

மூன்றாம் திருமொழி

சீதக் கடல், உள்ளமு தன்ன தேவகி *

கோதைக் குழலாள், அசோதைக்குப் போத்தந்த *

பேதைக் குழவி, பிடித்துச் சுவைத்துண்ணும் *

பாதக் கமலங்கள் காணீரே, பவள வாயீர் ! வந்து காணீரே. 1   1.3.1

முத்தும் மணியும், வயிரமும் நன்பொன்னும் *

தத்திப் பதித்துத் தலைப் பெய்தாற் போல் * எங்கும்

பத்து விரலும், மணிவண்ணன் பாதங்கள் *

ஒத்திட்டிருந்தவா காணீரே, ஒண்ணுதலீர் ! வந்து காணீரே. 2  1.3.2

பணைத் தோள் இளவாய்ச்சி, பால் பாய்ந்த கொங்கை *

அணைத்தார உண்டு கிடந்த, இப்பிள்ளை

இணைக் காலில், வெள்ளித் தளை நின்றிலங்கும்

கணைக் கால் இருந்தவா காணீரே, காரிகையீர் ! வந்து காணீரே. 3 1.3.3

உழந்தாள் நறு நெய், ஓரோ தடாவுண்ண *

இழந்தாள் எரிவினால், ஈர்த்து எழில் மத்தின் *

பழந் தாம்பா லோச்சப், பயத்தால் தவழ்ந்தான் *

முழந்தாள் இருந்தவா காணீரே, முகிழ் முலையீர் ! வந்து காணீரே. 4       1.3.4

பிறங்கிய பேய்ச்சி, முலை சுவைத்துண்டிட்டு *

உறங்குவான் போலே, கிடந்த இப்பிள்ளை

மறங்கொ ளிரணியன், மார்பை முன் கீண்டான் *

குறங்குகளை வந்து காணீரே குவிமுலையீர்! வந்து காணீரே. 5        1.3.5

மத்தக் களிற்று, வசுதேவர் தம்முடை *

சித்தம் பிரியாத, தேவகி தன் வயிற்றில் *

அத்தத்தின் பத்தா நாள், தோன்றிய அச்சுதன் *

முத்தம் இருந்தவா காணீரே, முகிழ்நகையீர்! வந்து காணீரே. 6          1.3.6

இருங்கை மதகளிறு, ஈர்க்கின்றவனை *

பருங்கிப் பறித்துக் கொண்டு, ஓடும் பரமன் தன் *

நெருங்கு பவளமும், நேர் நாணும் முத்தும் *

மருங்கும் இருந்தவா காணீரே, வாணுதலீர்! வந்து காணீரே. 7 1.3.7

வந்த மதலைக், குழாத்தை வலி செய்து *

தந்தக் களிறு போல், தானே விளையாடும் *

நந்தன் மதலைக்கு, நன்றுமழகிய *

உந்தி இருந்தவா காணீரே, ஒளியிழையீர்! வந்து காணீரே. 8    1.3.8

அதிரும், கடல் நிறவண்ணனை * ஆய்ச்சி

மதுர முலையூட்டி, வஞ்சித்து வைத்து *

பதரப் படாமே, பழந்தாம்பா லார்த்த *

உதரம் இருந்தவா காணீரே, ஒளிவளையீர்! வந்து காணீரே. 9  1.3.9

பெருமா உரலில், பிணிப்புண் டிருந்து அங்கு

இருமா மருதம் இறுத்த, இப்பிள்ளை *

குருமாமணிப் பூண், குலாவித் திகழும் *

திருமார்பு இருந்தவா காணீரே, சேயிழையீர் ! வந்து காணீரே. 10      1.3.10

நாள்கள், ஓர் நாலைந்து திங்களளவிலே *

தாளை நிமிர்த்துச், சகடத்தைச் சாடிப்போய் *

வாள் கொள் வளை எயிற்று, ஆருயிர் வவ்வினான்

தோள்கள் இருந்தவா காணீரே, சுரிகுழலீர் ! வந்து காணீரே. 11           1.3.11

மைத்தடங்கண்ணி, அசோதை வளர்க்கின்ற *

செய்த்தலை நீலநிறத்துச் சிறுப்பிள்ளை *

நெய்த்தலை நேமியும், சங்கும் நிலாவிய *

கைத்தலங்கள் வந்து காணீரே, கனங்குழையீர்! வந்து காணீரே. 12    1.3.12

வண்டமர் பூங்குழல், ஆய்ச்சி மகனாகக் *

கொண்டு வளர்க்கின்ற, கோவலர் குட்டற்கு *

அண்டமும் நாடும், அடங்க விழுங்கிய *

கண்டம் இருந்தவா காணீரே, காரிகையீர்! வந்து காணீரே. 13   1.3.13

எந்தொண்டை வாய்ச் சிங்கம், வாவென் றெடுத்துக் கொண்டு *

அந்தொண்டை வாய், அமுதாதரித்து * ஆய்ச்சியர்

தந்தொண்டை வாயால், தருக்கிப் பருகும் * இச்

செந்தொண்டைவாய் வந்து காணீரே, சேயிழையீர்! வந்து காணீரே. 14        1.3.14

நோக்கி யசோதை, நுணுக்கிய மஞ்சளால் *

நாக்கு வழித்து, நீராட்டும் இந்நம்பிக்கு *

வாக்கும் நயனமும், வாயும் முறுவலும் *

மூக்கும் இருந்தவா காணீரே, மொய்குழலீர்! வந்து காணீரே. 15          1.3.15

விண்கொள் அமரர்கள், வேதனை தீர * முன்

மண்கொள் வசுதேவர் தம், மகனாய் வந்து *

திண்கொள் அசுரரைத் தேய, வளர்கின்றான் *

கண்கள் இருந்தவா காணீரே, கனவளையீர் வந்து காணீரே. 16           1.3.16

பருவம் நிரம்பாமே, பாரெல்லாம் உய்ய *

திருவின் வடிவொக்கும், தேவகி பெற்ற *

உருவு கரிய, ஒளி மணி வண்ணன் *

புருவம் இருந்தவா காணீரே, பூண்முலையீர் ! வந்து காணீரே. 17      1.3.17

மண்ணும் மலையும், கடலும் உலகேழும் *

உண்ணும் திறத்து, மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு *

வண்ணமெழில் கொள், மகரக் குழையிவை *

திண்ணம் இருந்தவா காணீரே, சேயிழையீர் ! வந்து காணீரே. 18       1.3.18

முற்றிலும் தூதையும், முன் கைம்மேல் பூவையும் *

சிற்றிலிழைத்துத், திரிதருவோர்களைப் *

பற்றிப் பறித்துக் கொண்டு, ஓடும் பரமன் தன் *

நெற்றி இருந்தவா காணீரே, நேரிழையீர் ! வந்து காணீரே. 19  1.3.19

அழகிய பைம்பொன்னின் கோல், அங்கைக் கொண்டு ‘

கழல்கள் சதங்கை, கலந்தெங்கு மார்ப்ப *

மழகன் றினங்கள், மறித்துத் திரிவான் *

குழல்கள் இருந்தவா காணீரே, குவிமுலையீர் ! வந்து காணீரே. 20  1.3.20

சுருப்பார் குழலி,அசோதை முன் சொன்ன *

திருப்பாத கேசத்தைத் தென் புதுவைப் பட்டன் *

விருப்பா லுரைத்த, இருபதோ டொன்றும்

உரைப்பார் போய் வைகுந்தத்து, ஒன்றுவர் தாமே. 21        1.3.21

நான்காம் திருமொழி

மாணிக்கம் கட்டி, வயிரம் இடை கட்டி *

ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில் *

பேணி உனக்குப், பிரமன் விடுதந்தான் *

மாணிக் குறளனே! தாலேலோ, வையமளந்தானே! தாலேலோ. 1      1.4.1

உடையார் கனமணியோடு, ஒண் மாதுளம்பூ *

இடை விரவிக் கோத்த, எழில் தெழ்கினோடு *

விடையேறு காபாலி, ஈசன் விடுதந்தான் *

உடையாய் ! அழேல் அழேல் தாலேலோ,

உலக மளந்தானே ! தாலேலோ. 2           1.4.2

என்தம் பிரானார், எழில் திருமார்வர்க்கு *

சந்தமழகிய, தாமரைத் தாளர்க்கு *

இந்திரன் தானும், எழிலுடைக் கிண்கிணி *

தந்து உவனாய் நின்றான் தாலேலோ,

தாமரைக் கண்ணனே ! தாலேலோ. 3    1.4.3

சங்கின் வலம்புரியும், சேவடிக் கிண்கிணியும் *

அங்கைச் சரி வளையும், நானும் அரைத் தொடரும் *

அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார் *

செங்கண் கருமுகிலே ! தாலேலோ, தேவகி சிங்கமே ! தாலேலோ. 4       1.4.4

எழிலார் திருமார்வுக்கு, ஏற்கு மிவை யென்று *

அழகிய ஐம்படையும், ஆரமும் கொண்டு *

வழுவில் கொடையான், வயிச்சிராவணன் *

தொழுது உவனாய் நின்றான் தாலேலோ,

தூமணிவண்ணனே ! தாலேலோ. 5        1.4.5

ஓதக் கடலின், ஒளிமுத்தின் ஆரமும் *

சாதிப் பவளமும், சந்தச் சரிவளையும் *

மாதக்க வென்று, வருணன் விடுதந்தான் *

சோதிச் சுடர் முடியாய் ! தாலேலோ,

சுந்தரத்தோளனே ! தாலேலோ. 6 1.4.6

கானார் நறுந்துழாய், கைசெய்த கண்ணியும் *

வானார் செழுஞ்சோலைக், கற்பகத்தின் வாசிகையும் *

தேனார் மலர் மேல், திருமங்கை போத்தந்தாள் *

கோனே ! அழேல் அழேல் தாலேலோ,

குடந்தைக் கிடந்தானே ! தாலேலோ. 7 1.4.7

கச்சொடு பொற்சுரிகை, காம்பு கனகவளை *

உச்சி மணிச் சுட்டி, ஒண் தாள் நிரைப் பொற்பூ *

அச்சுதனுக் கென்று, அவனியாள் போத்தந்தாள் *

நச்சு முலையுண்டாய் ! தாலேலோ,

நாராயணா அழேல் தாலேலோ. 8           1.4.8

மெய் திமிரும், நானப் பொடியோடு மஞ்சளும் *

செய்ய தடங்கண்ணுக்கு அஞ்சனமும் சிந்துரமும் *

வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய் நின்றாள் *

ஐயா ! அழேல் அழேல் தாலேலோ,

அரங்கத்தணையானே! தாலேலோ. 9     1.4.9

வஞ்சனையால் வந்த, பேய்ச்சி முலையுண்ட*

அஞ்சன வண்ணனை, ஆய்ச்சி தாலாட்டிய *

செஞ்சொல் மறையவர் சேர், புதுவைப் பட்டன் சொல் *

எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே. 10           1.4.10

ஐந்தாம் திருமொழி

தன்முகத்துச் சுட்டி, தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய் *

பொன்முகக் கிண்கிணி யார்ப்பப், புழுதி யளைகின்றான் *

என் மகன் கோவிந்தன் கூத்தினை, இளமாமதீ ! *

நின்முகம் கண்ணுளவாகில், நீ இங்கே நோக்கிப் போ. 1 1.5.1

என் சிறுக் குட்டன், எனக்கு ஓரின்னமுது எம்பிரான் *

தன் சிறுக்கைகளால், காட்டிக் காட்டி அழைக்கின்றான் *

அஞ்சன வண்ணனோடு, ஆடலாட உறுதியேல் *

மஞ்சில் மறையாதே, மாமதீ ! மகிழ்ந்தோடி வா. 2 1.5.2

சுற்றும் ஒளிவட்டம், சூழ்ந்து சோதி பரந்து எங்கும் *

எத்தனை செய்யிலும், என் மகன் முகம் நேரொவ்வாய்

வித்தகன் வேங்கட வாணன், உன்னை விளிக்கின்ற *

கைத்தலம் நோவாமே, அம்புலீ ! கடிது ஓடி வா. 3 1.5.3    திருவேங்கடம் திருப்பதி

சக்கரக் கையன், தடங் கண்ணால் மலர விழித்து *

ஒக்கலை மேலிருந்து, உன்னையே சுட்டிக் காட்டும் காண் *

தக்கதறிதியேல், சந்திரா ! சலம் செய்யாதே ! *

மக்கட் பெறாத மலடனல்லையேல், வா கண்டாய். 4       1.5.4

அழகிய வாயில், அமுத வூறல் தெளிவுறா *

மழலை முற்றாத இளஞ் சொல்லால், உன்னைக் கூவுகின்றான் *

குழகன் சிரீதரன், கூவக் கூவ நீ போதியேல் *

புழை இலவாகாதே, நின் செவிபுகர் மாமதீ ! 5          1.5.5

தண்டொடு சக்கரம், சார்ங்க மேந்தும் தடக்கையன் *

கண் துயில் கொள்ளக் கருதிக், கொட்டாவி கொள்கின்றான் *

உண்ட முலைப் பாலறா கண்டாய், உறங்காவிடில் *

விண்தனில் மன்னிய மாமதீ ! விரைந்தோடி வா. 6          1.5.6

பாலகனென்று, பரிபவம் செய்யேல் * பண்டொரு நாள்

ஆலினிலை வளர்ந்த சிறுக்க னவ னிவன் *

மேலெழப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும் வெகுளு மேல் *

மாலை மதியாதே, மாமதீ ! மகிழ்ந்தோடி வா. 7       1.5.7

சிறியனென்று என் இளஞ் சிங்கத்தை, இகழேல் கண்டாய் *

சிறுமையின் வார்த்தையை, மாவலியினிடைச் சென்று கேள் *

சிறுமைப் பிழை கொள்ளில், நீயு முன் தேவைக் குரியை காண் *

நிறைமதீ !, நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான். 8   1.5.8

தாழியில் வெண்ணெய், தடங்கையார விழுங்கிய *

பேழை வயிற்றெம் பிரான் கண்டாய், உன்னைக் கூவுகின்றான் *

ஆழி கொண்டுன்னை யெறியும், ஐயுறவில்லை காண் *

வாழ வுறுதியேல், மாமதீ ! மகிழ்ந்தோடி வா. 9        1.5.9

மைத்தடங் கண்ணி, யசோதை தன் மகனுக்கு * இவை

ஒத்தன சொல்லி, உரைத்த மாற்றம் * ஒளி புத்தூர்

வித்தகன் விட்டுசித்தன், விரித்த தமிழிவை *

எத்தனையும் சொல்ல வல்லவர்க்கு, இடரில்லையே. 10 1.5.10

ஆறாம் திருமொழி

உய்யவுலகு படைத்துண்ட மணிவயிறா !

ஊழிதோறூழி பல ஆலினிலை யதன் மேல் *

பைய உயோகு துயில் கொண்ட பரம்பரனே !

பங்கய நீள்நயனத்து அஞ்சன மேனியனே ! *

செய்யவள் நின்னகலம் சேமமெனக் கருதிச்

செல்வு பொலி மகரக் காது திகழ்ந்திலக *

ஐய ! எனக்கொரு கால் ஆடுக செங்கீரை

ஆயர்கள் போரேறே ! ஆடுக ஆடுகவே. 1      1.6.1

கோளரியின் னுருவங் கொண்டு அவுணனுடலம்

குருதி குழம்பி யெழக் கூருகிரால் குடைவாய் ! *

மீள அவன் மகனை மெய்ம்மை கொளக்கருதி

மேலை யமரர்பதி மிக்கு வெகுண்டுவரக் *

காளநன் மேகமவை கல்லொடு கால் பொழியக்

கருதிவரைக் குடையாக் காலிகள் காப்பவனே !

ஆள எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை

ஆயர்கள் போரேறே ! ஆடுக ஆடுகவே. 2      1.6.2

நம்முடை நாயகனே ! நான்மறையின் பொருளே !

நாவியுள் நற்கமல நான்முகனுக்கு ஒருகால்

தம்மனை யானவனே ! * தரணி தல முழுதும்

தாரகையின் னுலகும் தடவி அதன் புறமும்

விம்ம வளர்ந்தவனே ! * வேழமும் ஏழ்விடையும்

விரவிய வேலைதனுள் வென்று வருமவனே ! *

அம்ம ! எனக்கொரு கால் ஆடுக செங்கீரை

ஆயர்கள் போரேறே ! ஆடுக ஆடுகவே. 3      1.6.3

வானவர் தாம் மகிழ வன் சகடமுருள

வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுண்டவனே ! *

கானக வல் விளவின் காயுதிரக் கருதிக்

கன்றது கொண்டெறியும் கருநிற என் கன்றே ! *

தேனுகனும் முரனும் திண்திறல் வெந்நரகன்

என்பவம் தாம் மடியச் செரு அதிரச் செல்லும் *

ஆனை ! எனக்கொரு கால் ஆடுக செங்கீரை

ஆயர்கள் போரேறே ! ஆடுக ஆடுகவே. 4      1.6.4

மத்தளவும் தயிரும் வார்குழல் நன் மடவார்

வைத்தன நெய் களவால் வாரி விழுங்கி

ஒருங்கு ஒத்த இணைமருதம் உன்னிய வந்தவரை

ஊருகரத்தி னொடும் உந்திய வெந்திறலோய் ! *

முத்தினிள முறுவல் முற்ற வருவதன் முன்

முன்னமுகத்து அணியார் மொய் குழல்களலைய*

அத்த ! எனக்கொரு கால் ஆடுக செங்கீரை

ஆயர்கள் போரேறே ! ஆடுக ஆடுகவே. 5      1.6.5

காயமலர் நிறவா ! கருமுகில் போலுருவா !

கானக மாமடுவில் காளிய னுச்சியிலே *

தூய நடம் பயிலும் சுந்தர என் சிறுவா !

துங்க மதக் கரியின் கொம்பு பறித்தவனே ! *

ஆயமறிந்து பொருவான் எதிர் வந்த மல்லை

அந்தரமின்றி யழித்தாடிய தாளிணையாய் !.*

ஆய! எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை

ஆயர்கள் போரேறே ! ஆடுக ஆடுகவே. 6      1.6.6

துப்புடை யாயர்கள் தம் சொல் வழுவாது, ஒருகால்

தூய கருங்குழல் நல்தோகை மயிலனைய *

நப்பினை தன் திறமா நல் விடை ஏழவிய

நல்ல திறலுடைய நாதனுமானவனே! *

தப்பின பிள்ளைகளைத் தனமிகு சோதி புகத்

தனியொரு தேர் கடவித் தாயொடு கூட்டிய * என்

அப்ப ! எனக்கொருகால் ஆடுக செங்கீரை

ஆயர்கள் போரேறே! ஆடுக ஆடுகவே. 7        1.6.7

உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில் மருவி

உன்னொடு தங்கள் கருத்தாயின செய்து வரும் *

கன்னியரும் மகிழக் கண்டவர் கண் குளிரக்

கற்றவர் தெற்றி வரப் பெற்ற எனக்கருளி *

மன்னு குறுங்குடியாய் ! வெள்ளறையாய் !

மதிள்சூழ் சோலைமலைக் கரசே ! கண்ணபுரத்தமுதே ! *

என் அவலம் களைவாய் ! ஆடுக செங்கீரை

ஏழுலகும் முடையாய் ! ஆடுக ஆடுகவே. 8  1.6.8    திருவெள்ளறை,

திருக்கண்ணபுரம்,

திருமாலிருஞ்சோலை,

திருக்குறுங்குடி

பாலொடு நெய் தயிர் ஒண்சாந்தொடு சண்பகமும்

பங்கயம் நல்ல கருப்பூரமும் நாறி வரக்*

கோல நறும்பவளச் செந்துவர் வாயினிடைக்

கோமள வெள்ளி முளைப் போல் சில பல்லிலக *

நீல நிறத்தழகார் ஐம்படையின் நடுவே

நின்கனி வாயமுதம் இற்று முறிந்து விழ *

ஏலுமறைப் பொருளே ! ஆடுக செங்கீரை

ஏழுலகும்முடையாய் ஆடுக ஆடுகவே. 9       1.6.9

செங்கமலக் கழலில் சிற்றிதழ் போல் விரலில்

சேர் திகழாழிகளும் கிண்கிணியும் * அரையில்

தங்கிய பொன் வடமும் தாளநன் மாதுளையின்

பூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும் *

மங்கல ஐம்படையும் தோள் வளையும் குழையும்

மகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்திலக *

எங்கள் குடிக்கரசே ! ஆடுக செங்கீரை

ஏழுலகும் முடையாய் ! ஆடுக ஆடுகவே. 10            1.6.10

அன்னமும் மீனுருவும் ஆளரியும் குறளும்

ஆமையு மானவனே ! ஆயர்கள் நாயகனே ! *

என் அவலம் களைவாய் ! ஆடுக செங்கீரை

ஏழுலகும் முடையாய் ! ஆடுக ஆடுக வென்று *

அன்ன நடை மடவாள் அசோதை யுகந்த பரிசு

ஆன புகழ்ப் புதுவைப் பட்டனுரைத்த தமிழ் *

இன்னிசை மாலைகள் இப்பத்தும் வல்லார், உலகில்

எண்டிசையும் புகழ் மிக்கு இன்பமதெய்துவரே. 11  1.6.11

ஏழாம் திருமொழி

மாணிக்கக் கிண்கிணியார்ப்ப, மருங்கின் மேல் *

ஆணிப்பொன்னால் செய்த, ஆய்பொன்னுடை மணி *

பேணிப் பவளவாய், முத்திலங்க * பண்டு

காணி கொண்ட கைகளால் சப்பாணி

கருங்குழல் குட்டனே ! சப்பாணி. 1        1.7.1

பொன்னரைநாணொடு, மாணிக்கக் கிண்கிணி *

தன்னரையாடத் தனிச்சுட்டி தாழ்ந்தாட *

என்னரை மேல், நின்றிழிந்து உங்களாயர் தம் *

மன் அரை மேல் கொட்டாய் சப்பாணி

மாயவனே ! கொட்டாய் சப்பாணி. 2       1.7.2

பன்மணிமுத்து, இன்பவளம் பதித்தன்ன *

என்மணிவண்ணன், இலங்கு பொற்றோட்டின் மேல் *

நின் மணிவாய், முத்திலங்க * நின்னம்மை தன்

அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி ஆழியங்கையனே ! சப்பாணி. 3       1.7.3

தூநிலா முற்றத்தே, போந்து விளையாட *

வானிலா அம்புலீ !, சந்திரா! வாவென்று *

நீ நிலா, நின் புகழா நின்ற * ஆயர்தம்

கோநிலாவக் கொட்டாய் சப்பாணி

குடந்தைக் கிடந்தானே ! சப்பாணி. 4      1.7.4    திருக்குடந்தை (கும்பகோணம்)

புட்டியில் சேறும், புழுதியும் கொண்டு வந்து *

அட்டியமுக்கி, அகம்புக்கறியாமே *

சட்டித் தயிரும், தடாவினில் வெண்ணெயும் உண் *

பட்டிக்கன்றே ! கொட்டாய் சப்பாணி

பற்பநாபா ! கொட்டாய் சப்பாணி. 5         1.7.5

தாரித்து நூற்றுவர், தந்தை சொல் கொள்ளாது *

போருய்த்து வந்து, புகுந்தவர் மண்ணாளப் *

பாரித்த மன்னர் படப், பஞ்சவர்க்கு * அன்று

தேருய்த்த கைகளால் சப்பாணி தேவகி சிங்கமே ! சப்பாணி. 6         1.7.6

பரந்திட்டு நின்ற, படுகடல் தன்னை *

இரந்திட்ட கைம் மேல், எறிதிரை மோதக் *

கரந்திட்டு நின்ற, கடலைக் கலங்கச் *

சரந்தொட்ட கைகளால் சப்பாணி சார்ங்க விற்கையனே ! சப்பாணி. 7       1.7.7

குரக்கினத்தாலே, குரைகடல் தன்னை *

நெருக்கி அணைகட்டி, நீள் நீரிலங்கை *

அரக்கர் அவிய, அடுகணையாலே *

நெருக்கிய கைகளால் சப்பாணி

நேமியங் கையனே ! சப்பாணி. 8 1.7.8

அளந்து இட்ட தூணை, அவன் தட்ட * ஆங்கே

வளர்ந்திட்டு, வாளுகிர்ச் சிங்க வுருவாய் *

உளந்தொட்டு இரணியன், ஒண்மார்வகலம் *

பிளந்திட்ட கைகளால் சப்பாணி

பேய்முலை யுண்டானே ! சப்பாணி. 9  1.7.9

அடைந்திட்டு அமரர்கள், ஆழ்கடல் தன்னை

மிடைந்திட்டு * மந்தரம், மத்தாக நாட்டி *

வடம் சுற்றி, வாசுகி வன் கயிறாகக் *

கடைந்திட்ட கைகளால் சப்பாணி

கார்முகில் வண்ணனே ! சப்பாணி. 10   1.7.10

ஆட்கொள்ளத் தோன்றிய, ஆயர் தங்கோவினை *

நாட்கமழ் பூம்பொழில், வில்லிபுத்தூர்ப் பட்டன் *

வேட்கையால் சொன்ன, சப்பாணி ஈரைந்தும் *

வேட்கையினால் சொல்லுவார், வினை போமே. 11           1.7.11

எட்டாம் திருமொழி

தொடர் சங்கிலிகை சலார் பிலாரென்னத்

தூங்கு பொன்மணி யொலிப்பப் *

படுமும்மதப் புனல் சோர வாரணம் பைய நின்றூர்வது போல் *

உடன்கூடிக் கிண்கிணி யாரவாரிப்ப உடைமணி பறைகறங்கத் *

தடந்தாளிணை கொண்டு சார்ங்கபாணி தளர்நடை நடவானோ. 1    1.8.1

செக்கரிடை நுனிக்கொம்பில் தோன்றும்

சிறு பிறை முளைப்போல் *

நக்க செந்துவர் வாய்த்திண்ணை மீதே நளிர்வெண்பல் முளையிலக *

அக்கு வடமுடுத்து ஆமைத்தாலி பூண்ட அனந்த சயனன் *

தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ. 2       1.8.2

மின்னுக்கொடியும் ஓர் வெண்திங்களும் சூழ்பரி வேடமுமாய்ப் *

பின்னல் துலங்கும் அரசிலையும் பீதகச் சிற்றாடையொடும் *

மின்னில் பொலிந்ததோர் கார்முகில் போலக்

கழுத்தினில் காறையொடும் *

தன்னில் பொலிந்த இருடீகேசன் தளர்நடை நடவானோ. 3       1.8.3

கன்னற்குடம் திறந்தாலொத்தூறிக் கணகண சிரித்து * உவந்து

முன் வந்து நின்று முத்தம் தரும் என் முகில் வண்ணன் திருமார்வன் *

தன்னைப் பெற்றேற்குத் தன் வாயமுதம் தந்து

என்னைத் தளிர்ப்பிக்கின்றான் *

தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே தளர்நடை நடவானோ. 4      1.8.4

முன்னலோர் வெள்ளிப் பெருமலைக் குட்டன்

மொடு மொடுவிரைத்தோடப் *

பின்னைத்தொடர்ந்ததோர் கருமலைக் குட்டன்

பெயர்ந்தடியிடுவது போல் *

பன்னியுலகம் பரவியோவாப்புகழ்ப் பலதேவனென்னும் *

தன் நம்பியோடப் பின் கூடச்செல்வான் தளர்நடை நடவானோ. 5   1.8.5

ஒரு காலில் சங்கு ஒரு காலில் சக்கரம்

உள்ளடி பொறித்தமைந்த

இரு காலும் கொண்டு * அங்கங்கு எழுதினாற் போல்

இலச்சினை பட நடந்து *

பெருகாநின்ற இன்பவெள்ளத்தின் மேல் பின்னையும் பெய்து பெய்து *

கருகார்க் கடல் வண்ணன் காமர் தாதை தளர்நடை நடவானோ. 6 1.8.6

படர் பங்கய மலர் வாய் நெகிழப் பனிபடு சிறு துளிபோல் * இடங் கொண்ட செவ்வாயூறி யூறி இற்றிற்று வீழ நின்று *

கடுஞ்சேக் கழுத்தின் மணிக்குரல் போல் உடைமணி கணகணென *

தடந்தாளிணை கொண்டு சார்ங்கபாணி தளர்நடை நடவானோ. 7    1.8.7

பக்கம் கருஞ்சிறுப் பாறை மீதே அருவிகள் பகர்ந்தனைய *

அக்கு வடமிழிந்தேறித் தாழ அணியல்குல் புடை பெயர *

மக்களுலகினில் பெய்தறியா மணிக்குழவி யுருவின் *

தக்க மாமணி வண்ணன் வாசுதேவன் தளர்நடை நடவானோ. 8       1.8.8

வெண்புழுதி மேல் பெய்து கொண்டளைந்ததோர்

வேழத்தின் கருங்கன்று போல் *

தெண்புழுதியாடித் திரிவிக்கிரமன் சிறு புகர் பட வியர்த்து *

ஒண்போதலர் கமலச் சிறுக்காலுறைத்து ஒன்றும் நோவாமே *

தண்போது கொண்ட தவிசின் மீதே தளர்நடை நடவானோ. 9 1.8.9

திரை நீர்ச் சந்திர மண்டலம்போல்

செங்கண் மால் கேசவன் * தன்

திருநீர் முகத்துத் துலங்கு சுட்டி திகழ்ந் தெங்கும் புடை பெயர *

பெருநீர்த் திரை யெழு கங்கையிலும் பெரியதோர் தீர்த்த பலம்

தருநீர் * சிறுச்சண்ணம் துள்ளம் சோரத் தளர்நடை நடவானோ. 10 1.8.10

ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய

அஞ்சன வண்ணன் தன்னைத் *

தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை *

வேயர் புகழ் விட்டுசித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார் *

மாயன் மணிவண்ணன் தாள் பணியும் மக்களைப் பெறுவர்களே. 11           1.8.11

ஒன்பதாம் திருமொழி

பொன்னியல் கிண்கிணி சுட்டி, புறம் கட்டித் *

தன்னிய லோசை, சலன் சலனென்றிட *

மின்னியல் மேகம், விரைந்தெதிர் வந்தாற்போல்*

என்னிடைக்கு ஓட்டரா அச்சோவச்சோ

எம்பெருமான் வாரா அச்சோவச்சோ. 1 1.9.1

செங்கமலப் பூவில், தேனுண்ணும் வண்டே போல் *

பங்கிகள் வந்து, உன் பவளவாய் மொய்ப்பச் *

சங்கு வில் வாள் தண்டு, சக்கரமேந்திய *

அங்கைகளாலே வந்து அச்சோவச்சோ

ஆரத்தழுவா வந்து அச்சோவச்சோ. 2    1.9.2

பஞ்சவர் தூதனாய்ப், பாரதம் கைசெய்து *

நஞ்சுமிழ் நாகம் கிடந்த, நற்பொய்கை புக்கு *

அஞ்சப் பணத்தின் மேல், பாய்ந்திட்டு அருள் செய்த *

அஞ்சன வண்ணனே ! அச்சோவச்சோ

ஆயர் பெருமானே ! அச்சோவச்சோ. 3. 1.9.3

நாறிய சாந்தம், நமக்கிறை நல்கென்ன *

தேறி அவளும், திருவுடம்பில் பூச *

ஊறிய கூனினை, உள்ளே யொடுங்க * அன்று

ஏறவுருவினாய் ! அச்சோவச்சோ

எம்பெருமான் ! வாரா அச்சோவச்சோ. 4          1.9.4

கழல் மன்னர்சூழக், கதிர்போல் விளங்கி *

எழலுற்று மீண்டே, இருந்துன்னை நோக்கும் *

சுழலைப் பெரிதுடைத், துச்சோதனனை *

அழல விழித்தானே ! அச்சோவச்சோ

ஆழியங்கையனே ! அச்சோவச்சோ. 5   1.9.5

போரொக்கப் பண்ணி, இப்பூமிப் பொறை தீர்ப்பான் *

தேரொக்க ஊர்ந்தாய் !, செழுந்தார் விசயற்காய் *

காரொக்கு மேனிக், கரும் பெருங்கண்ணனே ! *

ஆரத்தழுவா வந்து அச்சோவச்சோ

ஆயர்கள் போரேறே ! அச்சோவச்சோ. 6          1.9.6

மிக்க பெரும் புகழ், மாவலி வேள்வியில் *

தக்கது இது அன்று என்று, தானம் விலக்கிய *

சுக்கிரன் கண்ணைத், துரும்பால் கிளறிய *

சக்கரக்கையனே ! அச்சோவச்சோ

சங்கமிடத்தானே ! அச்சோவச்சோ. 7     1.9.7

என்னிது மாயம் ?, என்னப்ப னறிந்திலன் *

முன்னைய வண்ணமே கொண்டு, அளவா யென்ன *

மன்னு நமுசியை வானில் சுழற்றிய *

மின்னு முடியனே ! அச்சோவச்சோ

வேங்கடவாணனே ! அச்சோவச்சோ. 8 1.9.8    திருவேங்கடம் திருப்பதி

கண்ட கடலும், மலையும் உலகேழும் *

முண்டத்துக் காற்றா, முகில் வண்ணா ! ஓ ! என்று *

இண்டைச் சடைமுடி, ஈசன் இரக்கொள்ள *

மண்டை நிறைத்தானே அச்சோவச்சோ

மார்வில் மறுவனே ! அச்சோவச்சோ. 9           1.9.9

துன்னிய பேரிருள், சூழ்ந்து உலகை மூட *

மன்னிய நான்மறை முற்றும், மறைந்திட *

பின்னிவ் வுலகினில், பேரிருள் நீங்க * அன்று

அன்னமதானானே ! அச்சோவச்சோ

அருமறை தந்தானே! அச்சோவச்சோ. 10         1.9.10

நச்சுவார் முன் நிற்கும், நாராயணன் தன்னை *

அச்சோ வருக வென்று, ஆய்ச்சி யுரைத்தன *

மச்சணி மாடப், புதுவைக் கோன் பட்டன் சொல் *

நிச்சலும் பாடுவார், நீள்விசும்பாள்வரே. 11       1.9.11

பத்தாம் திருமொழி

வட்டு நடுவே, வளர்கின்ற * மாணிக்க

மொட்டு நுனையில், முளைக்கின்ற முத்தே போல் *

சொட்டுச் சொட்டென்னத், துளிக்கத் துளிக்க * என்

குட்டன் வந்தென்னைப் புறம் புல்குவான்

கோவிந்த னென்னைப் புறம் புல்குவான். 1    1.10.1

கிண்கிணி கட்டிக், கிறிகட்டிக் * கையினில்

கங்கண மிட்டுக், கழுத்தில் தொடர்கட்டி *

தன் கணத்தாலே, சதிரா நடந்து வந்து *

என் கண்ணன் என்னைப் புறம் புல்குவான்

எம்பிரா னென்னைப் புறம் புல்குவான். 2         1.10.2

கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ் செல்வம் *

ஒத்துப் பொருந்திக் கொண்டு, உண்ணாது மண்ணாள்வான் *

கொத்துத் தலைவன், குடிகெடத் தோன்றிய *

அத்தன் வந்தென்னைப் புறம் புல்குவான்

ஆயர்க ளேறென் புறம் புல்குவான். 3.   1.10.3

நாந்தக மேந்திய, நம்பி சரணென்று *

தாழ்ந்த, தனஞ்சயற்காகித் * தரணியில்

வேந்தர்களுட்க விசயன் மணித் திண்தேர் *

ஊர்ந்தவன் என்னைப் புறம் புல்குவான்

உம்பர்கோ னென்னைப் புறம் புல்குவான். 4  1.10.4

வெண்கலப் பத்திரம் கட்டி, விளையாடிக் *

கண்பல செய்த கருந்தழைக் காவின் கீழ் *

பண் பல பாடிப், பல்லாண்டிசைப்பப் * பண்டு

மண் பலகொண்டான் புறம் புல்குவான்

வாமன னென்னைப் புறம் புல்குவான். 5         1.10.5

சத்திர மேந்தித், தனியொரு மாணியாய் *

உத்தர வேதியில், நின்ற வொருவனை *

கத்திரியர் காணக், காணி முற்றும் கொண்ட *

பத்திராகாரன் புறம் புல்குவான் பாரளந்தானென் புறம் புல்குவான். 6          1.10.6

பொத்த உரலைக் கவிழ்த்து, அதன் மேலேறித் *

தித்தித்த பாலும், தடாவினில் வெண்ணெயும் *

மெத்தத்திருவயிறார, விழுங்கிய *

அத்தன் வந்தென்னைப் புறம் புல்குவான்

ஆழியா னென்னைப் புறம் புல்குவான். 7        1.10.7

மூத்தவை காண, முது மணற்குன்றேறிக் *

கூத்து உவந்தாடிக், குழலால் இசை பாடி *

வாய்த்த மறையோர், வணங்க * இமையவர்

ஏத்த வந்து என்னைப் புறம் புல்குவான்

எம்பிரா னென்னைப் புறம் புல்குவான். 8         1.10.8

கற்பகக் காவு, கருதிய காதலிக்கு *

இப்பொழுது ஈவனென்று, இந்திரன் காவினில் *

நிற்பன செய்து, நிலாத் திகழ் முற்றத்துள் *

உய்த்தவன் என்னைப் புறம் புல்குவான்

உம்பர் கோனென்னைப் புறம் புல்குவான். 9  1.10.9

ஆய்ச்சி யன்றாழிப் பிரான், புறம் புல்கிய *

வேய்த் தடந்தோளி சொல், விட்டுசித்தன் மகிழ்ந்து *

ஈத்த தமிழிவை, ஈரைந்தும் வல்லவர் *

வாய்த்த நன் மக்களைப் பெற்று, மகிழ்வரே. 10        1.10.10

இரண்டாம் பத்து

முதல் திருமொழி

மெச்சூது சங்கமிடத்தான், நல்வேயூதி *

பொய்ச் சூதில் தோற்ற, பொறையுடை மன்னர்க்காய் *

பத்தூர் பெறாது, அன்று பாரதம் கைசெய்த *

அத்துதன் அப்பூச்சி காட்டுகின்றான்

அம்மனே ! அப்பூச்சி காட்டுகின்றான். 1            2.1.1

மலைபுரை தோள் மன்னவரும், மாரதரும் * மற்றும்

பலர் குலைய நூற்றுவரும் பட்டழியப் * பார்த்தன்

சிலை வளையத், திண் தேர் மேல் முன்னின்ற * செங்கண்

அலைவலை வந்து அப்பூச்சி காட்டுகின்றான்

அம்மனே ! அப்பூச்சி காட்டுகின்றான். 2            2.1.2

காயும் நீர் புக்குக், கடம்பேறிக் * காளியன்

தீய பணத்தில், சிலம்பார்க்கப் பாய்ந்தாடி *

வேயின் குழலூதி, வித்தகனாய் நின்ற *

ஆயன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்

அம்மனே ! அப்பூச்சி காட்டுகின்றான். 3            2.1.3

இருட்டில் பிறந்து போய், ஏழை வல்லாயர் *

மருட்டைத் தவிர்ப்பித்து, வன் கஞ்சன் மாளப்

புரட்டி * அந்நாள் எங்கள், பூம்பட்டுக் கொண்ட *

அரட்டன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்

அம்மனே ! அப்பூச்சி காட்டுகின்றான். 4            2.1.4

சேப்பூண்ட, சாடுசிதறித் * திருடி நெய்க்கு

ஆப்பூண்டு, நந்தன் மனைவி * கடை தாம்பால்

சோப்பூண்டு துள்ளித், துடிக்கத் துடிக்க * அன்று

ஆப்பூண்டான் அப்பூச்சி காட்டுகின்றான்

அம்மனே ! அப்பூச்சி காட்டுகின்றான். 5            2.1.5

செப்பிள மென் முலைத் தேவகி நங்கைக்கு *

சொப்படத் தோன்றித், தொறுப்பாடியோம் வைத்த *

துப்பமும் பாலும், தயிரும் விழுங்கிய *

அப்பன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்

அம்மனே ! அப்பூச்சி காட்டுகின்றான். 6            2.1.6

தத்துக் கொண்டாள் கொலோ ? தானே பெற்றாள் கொலோ ? *

சித்தமனையாள், அசோதை இளஞ் சிங்கம் *

கொத்தார் கருங்குழல், கோபால கோளரி *

அத்தன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்

அம்மனே ! அப்பூச்சி காட்டுகின்றான். 7            2.1.7

கொங்கை வன் கூனி, சொற்கொண்டு * குவலயத்

துங்கக் கரியும், பரியும் இராச்சியமும் *

எங்கும் பரதற்கருளி, வன் கானடை *

அங்கண்ணன் அப்பூச்சி காட்டுகின்றான்

அம்மனே ! அப்பூச்சி காட்டுகின்றான். 8            2.1.8

பதக முதலை, வாய்ப்பட்ட களிறு *

கதறிக் கை கூப்பி, என் கண்ணா ! கண்ணா ! என்ன *

உதவப் புள்ளூர்ந்து, அங்கு உறு துயர் தீர்த்த *

அதகன் வந்து அப்பூச்சி காட்டுகின்றான்

அம்மனே ! அப்பூச்சி காட்டுகின்றான். 9            2.1.9

வல்லாளிலங்கை மலங்கச் சரந்துரந்த *

வில்லாளனை, விட்டுசித்தன் விரித்த *

சொல்லார்ந்த அப்பூச்சிப் பாடல், இவை பத்தும்

வல்லார் போய் * வைகுந்தம், மன்னியிருப்பரே. 10            2.1.10

இரண்டாம் திருமொழி

அரவணையாய் ! ஆயரேறே! அம்மமுண்ணத் துயிலெழாயே *

இரவுமுண்ணாது உறங்கி நீ போய் இன்றுமுச்சி கொண்டதாலோ *

வரவும் காணேன் வயிறசைந்தாய் வனமுலைகள் சோர்ந்து பாயத் *

திருவுடைய வாய் மடுத்துத் திளைத்துதைத்துப் பருகிடாயே. 1          2.2.1

வைத்த நெய்யும் காய்ந்தபாலும் வடிதயிரும் நறுவெண்ணெயும் *

இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான்! நீ பிறந்த பின்னை *

எத்தனையும் செய்யப் பெற்றாய் ஏதும் செய்யேன் கதம்படாதே *

முத்தனைய முறுவல் செய்து மூக்குறிஞ்சி முலையுணாயே. 2        2.2.2

தந்தம் மக்கள் அழுது சென்றால் தாய்மாராவார் தரிக்ககில்லார் *

வந்து நின் மேல் பூசல் செய்ய வாழ வல்ல வாசுதேவா ! *

உந்தையார் உன்திறத்தரல்லர் உன்னை நானொன்றுமுரப்ப மாட்டேன் *

நந்தகோபனணி சிறுவா ! நான் சுரந்த முலையுணாயே. 3        2.2.3

கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட கள்ளச் சகடு கலக்கழிய *

பஞ்சியன்ன மெல்லடியால் பாய்ந்த போது நொந்திடுமென்று *

அஞ்சினேன் காண் அமரர் கோவே ! ஆயர் கூட்டத்தளவன்றாலோ *

கஞ்சனை உன் வஞ்சனையால் வலைப்படுத்தாய்! முலையுணாயே. 4      2.2.4

தீய புந்திக் கஞ்சனுன் மேல் சினமுடையன் சோர்வு பார்த்து *

மாயம் தன்னால் வலைப்படுக்கில் வாழகில்லேன் வாசுதேவா ! *

தாயர் வாய்ச் சொல் கருமம் கண்டாய்

சாற்றிச் சொன்னேன் போக வேண்டா *

ஆயர் பாடிக்கு அணி விளக்கே !

அமர்ந்து வந்து என் முலையுணாயே. 5           2.2.5    திருவாய்ப்பாடி (கோகுலம்)

மின்னனைய நுண்ணிடையார்

விரி குழல் மேல் நுழைந்த வண்டு *

இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்

இனிதமர்ந்தாய் ! * உன்னைக் கண்டார்

என்ன நோன்பு நோற்றாள் கொலோ

இவனைப் பெற்ற வயிறுடையாள் ? *

என்னும் வார்த்தை யெய்துவித்த

இருடீகேசா ! முலையுணாயே. 6 2.2.6    ்ரீவில்லிபுத்தூர்

பெண்டிர் வாழ்வார் நின்னொப்பாரைப் பெறுதுமென்னுமாசையாலே *

கண்டவர்கள், போக்கொழிந்தார்

கண்ணிணையால் கலக்க நோக்கி *

வண்டுலாம் பூங்குழலினார் உன் வாயமுதம் உண்ணவேண்டிக் *

கொண்டு போவான் வந்து நின்றார் கோவிந்தா ! நீ முலையுணாயே. 7    2.2.7

இருமலை போலெதிர்ந்த மல்லர்

இருவரங்கம் எரி செய்தாய் ! * உன்

திரு மலிந்து திகழு மார்வு தேக்க * வந்து என்னல்குலேறி

ஒரு முலையை வாய் மடுத்து ஒரு முலையை நெருடிக் கொண்டு *

இரு முலையும் முறை முறையா ஏங்கி ஏங்கி இருந்துணாயே. 8   2.2.8

அங்கமலப் போதகத்தில் அணிகொள் முத்தம் சிந்தினாற்போல் *

செங்கமல முகம் வியர்ப்பத் தீமை செய்து இம்முற்றத்தூடே *

அங்கமெல்லாம் புழுதியாக அளைய வேண்டா அம்ம * விம்ம

அங்கு அமரர்க் கமுதளித்த அமரர் கோவே ! முலையுணாயே. 9      2.2.9

ஓடவோடக் கிண்கிணிகள் ஒலிக்கும் ஓசைப் பாணியாலே *

பாடிப் பாடி வருகின்றாயைப் பற்பநாப னென்றிருந்தேன் *

ஆடியாடி அசைந்தசைந்திட்டு அதனுக்கேற்ற கூத்தை யாடி *

ஓடியோடிப் போய் விடாதே உத்தமா! நீ முலையுணாயே. 10  2.2.10

வாரணிந்த கொங்கையாய்ச்சி மாதவா! உண்ணென்ற மாற்றம் *

நீரணிந்த குவளை வாசம் நிகழ நாறும் வில்லிபுத்தூர் *

பாரணிந்த தொல் புகழான் பட்டர் பிரான் பாடல் வல்லார் *

சீரணிந்த செங்கண்மால் மேல் சென்ற சிந்தை பெறுவர் தாமே. 11  2.2.11

மூன்றாம் திருமொழி

போய்ப்பாடுடைய நின் தந்தையும் தாழ்த்தான்

பொருதிறல் கஞ்சன் கடியன் *

காப்பாரு மில்லை கடல்வண்ணா ! உன்னைத்

தனியே போய் எங்கும் திரிதி *

பேய்ப்பால் முலையுண்ட பித்தனே !

கேசவநம்பி ! உன்னைக் காது குத்த *

ஆய்ப்பாலர் பெண்டுகளெல்லாரும் வந்தார் *

அடைக்காய் திருத்தி நான் வைத்தேன். 1        2.3.1

வண்ணப் பவள மருங்கினில் சாத்தி

மலர்ப் பாதக் கிண்கிணி யார்ப்ப *

நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத

நாராயணா ! இங்கே வாராய் *

எண்ணற்கரிய பிரானே ! திரியை எரியாமே காதுக்கிடுவன் *

கண்ணுக்கு நன்றுமழகு முடைய கனகக் கடிப்பும் இவையா ! 2        2.3.2

வையமெல்லாம் பெறும் வார்கடல் வாழும்

மகரக்குழை கொண்டு வைத்தேன் *

வெய்யவே காதில் திரியை யிடுவன்

நீ வேண்டிய தெல்லாம் தருவன் *

உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய

ஒண் சுடராயர் கொழுந்தே ! *

மையன்மை செய்து இளவாய்ச்சிய ருள்ளத்து

மாதவனே ! இங்கே வாராய். 3      2.3.3

வணநன்றுடைய வயிரக் கடிப்பிட்டு

வார் காது தாழப் பெருக்கிக் *

குண நன்றுடையர் இக்கோபால பிள்ளைகள்

கோவிந்தா ! நீ சொல்லுக் கொள்ளாய் *

இணை நன்றழகிய இக்கடிப்பு இட்டால்

இனிய பலாப்பழம் தந்து *

சுணநன்றணி முலையுண்ணத் தருவன் நான் *

சோத்தம் பிரான் ! இங்கே வாராய். 4     2.3.4

சோத்தம் பிரான் ! என்றிரந்தாலும் கொள்ளாய் *

சுரி குழலாரோடு நீ போய்

கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால்

குணம் கொண்டிடுவனோ ? நம்பீ !’

பேர்த்தும் பெரியன அப்பம் தருவன்

பிரானே ! திரியிடவொட்டில் *

வேய்த்தடந் தோளார் விரும்பு கருங்குழல்

விட்டுவே ! நீ இங்கே வாராய். 5  2.3.5

விண்ணெல்லாம் கேட்க அழுதிட்டாய்

உன் வாயில் விரும்பி அதனை நான் நோக்கி *

மண்ணெல்லாம் கண்டு என் மனத்துள்ளே அஞ்சி

மதுசூதனே என்றிருந்தேன் *

புண்ணேது மில்லை உன்காது மறியும்

பொறுத்து இறைப்போது இரு நம்பீ ! *

கண்ணா ! என் கார்முகிலே ! கடல் வண்ணா !

காவலனே ! முலையுணாயே. 6   2.3.6

முலையேதும் வேண்டேன் என்றோடி

நின் காதில் கடிப்பைப் பறித்தெறிந்திட்டு *

மலையை எடுத்து மகிழ்ந்து கல்மாரி காத்துப்

பசு நிரை மேய்த்தாய் ! *

சிலை யொன்று இறுத்தாய் ! திரிவிக்கிரமா !

திருவாயர் பாடிப் பிரானே ! *

தலை நிலாப்போதே உன் காதைப் பெருக்காதே

விட்டிட்டேன் குற்றமே யன்றே? 7            2.3.7    திருவாய்ப்பாடி (கோகுலம்)

என் குற்றமே யென்று சொல்லவும் வேண்டா காண்

என்னை நான் மண்ணுண்டேனாக *

அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும்

அனைவர்க்கும் காட்டிற்றிலையே *

வன் புற்றரவின் பகைக் கொடி

வாமன நம்பீ ! உன் காதுகள் தூரும் *

துன்புற்றன வெல்லாம் தீர்ப்பாய் பிரானே !

திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே. 8   2.3.8

மெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதித்

தொடுப்புண்டாய் வெண்ணெயையென்று *

கையைப் பிடித்துக் கரையுரலோடு என்னைக்

காணவே கட்டிற்றிலையே? *

செய்தன சொல்லிச் சிரித்து அங்கிருக்கில்

சிரீதரா ! உன் காது தூரும் *

கையில் திரியை இடுகிடாய்

இந்நின்ற காரிகையார் சிரியாமே. 9        2.3.9

காரிகையார்க்கும் உனக்கும் இழுக்குற்றென் ?

காதுகள் வீங்கி எரியில் *

தாரியாதாகில் தலை நொந்திடு மென்று

விட்டிட்டேன் குற்றமே யன்றே ? *

சேரியிற் பிள்ளைக ளெல்லாரும்

காது பெருக்கித் திரியவும் காண்டி *

ஏர்விடை செற்று இளங்கன்று எறிந்திட்ட

இருடீகேசா ! என்தன் கண்ணே ! 10       2.3.10

கண்ணைக் குளிரக் கலந்து எங்கும் நோக்கிக்

கடிகமழ் பூங்குழலார்கள் *

எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும்

பெருமானே ! எங்களமுதே ! *

உண்ணக்கனிகள் தருவன்

கடிப்பொன்றும் நோவாமே காதுக்கிடுவன் *

பண்ணைக் கிழியச் சகடமுதைத்திட்ட

பற்பநாபா ! இங்கே வாராய். 11     2.3.11

வாவென்று சொல்லி என் கையைப் பிடித்து

வலியவே காதில் கடிப்பை *

நோவத் தரிக்கில் உனக்கிங்கு இழுக்குற்றென் ?

காதுகள் நொந்திடும் கில்லேன் *

நாவற்பழம் கொண்டு வைத்தேன்

இவை காணாய் நம்பீ ! * முன் வஞ்ச மகளைச்

சாவப் பாலுண்டு சகடிறப் பாய்ந்திட்ட

தாமோதரா ! இங்கே வாராய். 12   2.3.12

வார் காது தாழப் பெருக்கி யமைத்து

மகரக் குழையிட வேண்டிச் *

சீரால் அசோதை திருமாலைச் சொன்ன சொல்

சிந்தையுள் நின்று திகழப் *

பாரார் தொல் புகழான் புதுவை மன்னன்

பன்னிரு நாமத்தாற் சொன்ன *

ஆராத அந்தாதி பன்னிரண்டும் வல்லார்

அச்சுதனுக் கடியாரே. 13        2.3.13

நான்காம் திருமொழி

வெண்ணெ யளைந்த குணுங்கும்

விளையாடு புழுதியும் கொண்டு *

திண்ணென இவ்விரா வுன்னைத் தேய்த்துக் கிடக்க நானொட்டேன் *

எண்ணெய் புளிப்பழம் கொண்டு இங்கெத்தனை போதுமிருந்தேன் *

நண்ணலரிய பிரானே ! நாரணா ! நீராட வாராய். 1          2.4.1

கன்றுகளோடச் செவியில் கட்டெறும்பு பிடித்திட்டால் *

தென்றிக் கெடுமாகில் வெண்ணெய் திரட்டி விழுங்குமா காண்பன் *

நின்ற மராமரம் சாய்த்தாய் ! நீ பிறந்த திருவோணம் *

இன்று நீ நீராடவேண்டும் * எம்பிரான் ! ஓடாதே வாராய். 2    2.4.2

பேய்ச்சி முலையுண்ணக் கண்டு

பின்னையும் நில்லா தென்னெஞ்சம் *

ஆய்ச்சிய ரெல்லாரும் கூடி அழைக்கவும் நான் முலை தந்தேன் *

காய்ச்சின நீரொடு நெல்லி கடாரத்தில் பூரித்து வைத்தேன் *

வாய்த்த புகழ் மணிவண்ணா ! மஞ்சனமாட நீ வாராய். 3         2.4.3

கஞ்சன் புணர்ப்பினில் வந்த கடிய சகடம் உதைத்து *

வஞ்சகப் பேய் மகள் துஞ்ச வாய் முலை வைத்த பிரானே !*

மஞ்சளும் செங்கழுநீரின் வாசிகையும் நாறு சாந்தும் *

அஞ்சனமும் கொண்டு வைத்தேன் அழகனே! நீராட வாராய். 4         2.4.4

அப்பம் கலந்த சிற்றுண்டி அக்காரம் பாலில் கலந்து *

சொப்பட நான் சுட்டு வைத்தேன் தின்னலுறுதியேல் நம்பி *

செப்பிள மென் முலையார்கள் சிறு புறம் பேசிச் சிரிப்பர் *

சொப்பட நீராட வேண்டும் சோத்தம் பிரான் ! இங்கே வாராய். 5      2.4.5

எண்ணெய்க் குடத்தை யுருட்டி இளம்பிள்ளை கிள்ளியெழுப்பி *

கண்ணைப்புரட்டி விழித்துக் கழகண்டு செய்யும் பிரானே ! *

உண்ணக் கனிகள் தருவன் ஒலி கடலோத நீர் போலே *

வண்ணம் அழகிய நம்பீ ! மஞ்சனமாட நீ வாராய். 6        2.4.6

கறந்த நற்பாலும் தயிரும்

கடைந்து உறி மேல் வைத்த வெண்ணெய் *

பிறந்ததுவே முதலாகப் பெற்றறியேன் எம்பிரானே ! *

சிறந்த நற்றாய் அலர் தூற்றும் என்பதனால் * பிறர் முன்னே

மறந்தும் உரையாட மாட்டேன் மஞ்சனமாட நீ வாராய். 7        2.4.7

கன்றினை வாலோலை கட்டிக் கனிகளுதிர எறிந்து *

பின்தொடர்ந்தோடி ஓர்பாம்பைப் பிடித்துக்கொண்டாட்டினாய்போலும் *

நின் திறத்தேனல்லேன் நம்பி! நீ பிறந்த திருநன்னாள் *

நன்று நீ நீராட வேண்டும், நாரணா ! ஓடாதே வாராய். 8           2.4.8

பூணித்தொழுவினில் புக்குப் புழுதியளைந்த பொன் மேனி

காணப் * பெரிதும் உகப்பன் ஆகிலும் கண்டார் பழிப்பர் *

நாணெத்தனையுமிலாதாய் ! நப்பின்னை காணில் சிரிக்கும் *

மாணிக்கமே ! என் மணியே ! மஞ்சனமாட நீ வாராய். 9          2.4.9

கார்மலிமேனி நிறத்துக் கண்ண பிரானை யுகந்து *

வார்மலி கொங்கை அசோதை மஞ்சன மாட்டிய வாற்றைப் *

பார்மலி தொல் புதுவைக் கோன் பட்டர் பிரான் சொன்ன பாடல் *

சீர் மலி செந்தமிழ் வல்லார் தீவினை யாதுமிலரே. 10                2.4.10

ஐந்தாம் திருமொழி

பின்னை மணாளனைப், பேரில் கிடந்தானை *

முன்னை யமரர் முதல், தனி வித்தினை *

என்னையும், எங்கள் குடி முழுதாட் கொண்ட *

மன்னனை வந்து குழல் வாராய் அக்காக்காய் !

மாதவன்தன் குழல் வாராய் அக்காக்காய் 1.  2.5.1    திருப்பேர்நகர்

பேயின் முலையுண்ட, பிள்ளை இவன் முன்னம் *

மாயச் சகடும், மருதும் இறுத்தவன் *

காயாமலர் வண்ணன், கண்ணன் கருங்குழல் *

தூய்தாக வந்து குழல் வாராய் அக்காக்காய் !

தூமணி வண்ணன் குழல் வாராய் அக்காக்காய். 2 2.5.2

திண்ணக் கலத்தில், திரையுறி மேல் வைத்த *

வெண்ணெய் விழுங்கி, விரைய உறங்கிடும்

அண்ணல் * அமரர் பெருமானை, ஆயர்தம்

கண்ணனை * வந்து குழல் வாராய் அக்காக்காய் !

கார்முகில் வண்ணன் குழல் வாராய் அக்காக்காய். 3       2.5.3

பள்ளத்தில் மேயும், பறவை யுருக் கொண்டு *

கள்ள வசுரன், வருவானைத் தான் கண்டு *

புள்ளிது வென்று, பொதுக் கோ வாய் கீண்டிட்ட *

பிள்ளையை வந்து குழல் வாராய் அக்காக்காய் !

பேய்முலை யுண்டான் குழல் வாராய் அக்காக்காய். 4    2.5.4

கற்றினம் மேய்த்துக், கனிக்கொரு கன்றினைப் *

பற்றி யெறிந்த, பரமன் திருமுடி *

உற்றன பேசி, நீ ஓடித் திரியாதே *

அற்றைக்கும் வந்து குழல் வாராய் அக்காக்காய் !

ஆழியான் தன் குழல் வாராய் அக்காக்காய் !. 5      2.5.5

கிழக்கில் குடிமன்னர், கேடிலாதாரை *

அழிப்பான் நினைந்திட்டு, அவ்வாழி யதனால் *

விழிக்கு மளவிலே, வேரறுத்தானைக் *

குழற் கணியாகக் குழல் வாராய் அக்காக்காய் !

கோவிந்தன் தன் குழல் வாராய் அக்காக்காய்!. 6    2.5.6

பிண்டத் திரளையும், பேய்க்கிட்ட நீர்ச்சோறும் *

உண்டற்கு வேண்டி, நீ ஓடித் திரியாதே *

அண்டத்து அமரர் பெருமான் அழகமர் *

வண்டொத் திருண்ட குழல் வாராய் அக்காக்காய் !

மாயவன் தன் குழல் வாராய் அக்காக்காய் !. 7.       2.5.7

உந்தி யெழுந்த, உருவ மலர் தன்னில் *

சந்தச் சதுமுகன் தன்னைப், படைத்தவன் *

கொந்தக் குழலைக், குறந்து புளியட்டித் *

தந்தத்தின் சீப்பால் குழல் வாராய் அக்காக்காய் !

தாமோதரன் தன் குழல்வாராய் அக்காக்காய் !. 8    2.5.8

மன்னன்தன் தேவிமார், கண்டு மகிழ்வெய்த *

முன்னிவ் வுலகினை, முற்றும் அளந்தவன் *

பொன்னின் முடியினைப், பூவணை மேல் வைத்துப் *

பின்னே யிருந்து குழல் வாராய் அக்காக்காய் !

பேராயிரத்தான் குழல் வாராய் அக்காக்காய் !. 9     2.5.9

கண்டார் பழியாமே, அக்காக்காய் ! * கார்வண்ணன்

வண்டார் குழல் வார, வாவென்ற ஆய்ச்சி சொல் *

விண்தோய் மதிள், வில்லிபுத்தூர்க் கோன் பட்டன் சொல் *

கொண்டாடிப் பாடக், குறுகா வினை தாமே. 10         2.5.10

ஆறாம் திருமொழி

வேலிக் கோல் வெட்டி, விளையாடு வில்லேற்றித் *

தாலிக் கொழுந்தைத் தடங்கழுத்தில் பூண்டு *

பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டுக் *

காலிப்பின் போவாற்கு ஓர் கோல் கொண்டு வா

கடல் நிறவண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா. 1 2.6.1

கொங்குங் குடந்தையும், கோட்டியூரும் பேரும் *

எங்கும் திரிந்து, விளையாடும் என் மகன் *

சங்கம் பிடிக்கும், தடக்கைக்குத் தக்க *

நல் அங்கமுடையதோர் கோல் கொண்டு வா

அரக்கு வழித்ததோர் கோல் கொண்டு வா. 2 2.6.2    திருப்பேர்நகர்,

திருக்குடந்தை (கும்பகோணம்),

திருக்கோட்டியூர்

கறுத்திட்டு எதிர்நின்ற, கஞ்சனைக் கொன்றான் *

பொறுத்திட்டு எதிர் வந்த, புள்ளின் வாய் கீண்டான் *

நெறித்த குழல்களை, நீங்க முன்னோடிச் *

சிறுக்கன்று மேய்ப்பாற்கு ஓர் கோல் கொண்டு வா

தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா. 3 2.6.3

ஒன்றே யுரைப்பான், ஒரு சொல்லே சொல்லுவான் *

துன்று முடியான், துரியோதனன் பக்கல் *

சென்று அங்குப் பாரதம், கையெறிந்தானுக்குக் *

கன்றுகள் மேய்ப்பதோர் கோல் கொண்டு வா

கடல் நிற வண்ணற்கு ஓர் கோல் கொண்டு வா. 4          2.6.4

சீரொன்று தூதாய்த், துரியோதனன் பக்கல் *

ஊரொன்று வேண்டிப், பெறாத உரோடத்தால் *

பாரொன்றிப், பாரதம் கை செய்து * பார்த்தற்குத்

தேரொன்றை யூர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா

தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா. 5 2.6.5

ஆலத்திலையான், அரவினணை மேலான் *

நீலக்கடலுள், நெடுங்காலம் கண் வளர்ந்தான் *

பாலப் பிராயத்தே, பார்த்தற்கருள் செய்த *

கோலப் பிரானுக்கு ஓர் கோல் கொண்டு வா

குடந்தைக் கிடந்தாற்கு ஓர் கோல் கொண்டு வா. 6          2.6.6    திருக்குடந்தை (கும்பகோணம்),

திருப்பாற்கடல்

பொற்றிகழ், சித்திரகூடப் பொருப்பினில் *

உற்ற வடிவில், ஒரு கண்ணும் கொண்ட * அக்

கற்றைக் குழலன், கடியன் விரைந்து * உன்னை

மற்றைக் கண் கொள்ளாமே கோல் கொண்டு வா

மணிவண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா. 7          2.6.7

மின்னிடைச், சீதை பொருட்டா * இலங்கையர்

மன்னன் மணி முடி பத்துமுடன் வீழத் *

தன்னிகரொன்றில்லாச், சிலை கால் வளைத்திட்ட *

மின்னு முடியற்கு ஓர் கோல் கொண்டு வா

வேலை யடைத்தாற்கு ஓர் கோல் கொண்டு வா. 8          2.6.8

தென்னிலங்கை மன்னன், சிரம் தோள் துணிசெய்து *

மின்னிலங்கு பூண், விபீடண நம்பிக்கு *

என்னிலங்கு நாமத்தளவும், அரசென்ற *

மின்னலங்காரற்கு ஓர் கோல் கொண்டு வா

வேங்கட வாணற்கு ஓர் கோல் கொண்டு வா. 9    2.6.9    திருவேங்கடம் திருப்பதி

அக்காக்காய், நம்பிக்குக் கோல் கொண்டு வாவென்று *

மிக்காளுரைத்த சொல், வில்லிபுத்தூர்ப் பட்டன் *

ஒக்க வுரைத்த தமிழ்ப் பத்தும் வல்லவர் *

மக்களைப் பெற்று, மகிழ்வர் இவ்வையத்தே. 10       2.6.10

ஏழாம் திருமொழி

ஆனிரை மேய்க்க நீ போதி அருமருந் தாவதறியாய் *

கானக மெல்லாந் திரிந்து உன் கரிய திருமேனி வாடப் *

பானையில் பாலைப் பருகிப் பற்றாதா ரெல்லாம் சிரிப்பத் *

தேனிலினிய பிரானே ! செண்பகப்பூச் சூட்ட வாராய். 1  2.7.1

கருவுடைமேகங்கள் கண்டால்

உன்னைக் கண்டா லொக்கும் கண்கள் *

உருவுடையாய் ! உலகேழு முண்டாக வந்து பிறந்தாய் ! *

திருவுடையாள் மணவாளா ! திருவரங்கத்தே கிடந்தாய் ! *

மருவி மணம் கமழ்கின்ற மல்லிகைப்பூச் சூட்ட வாராய். 2      2.7.2    திருவரங்கம்

மச்சொடு மாளிகையேறி மாதர்கள் தம்மிடம் புக்குக் *

கச்சொடு பட்டைக் கிழித்துக் காம்பு துகிலவை கீறி *

நிச்சலும் தீமைகள் செய்வாய் ! நீள் திருவேங்கடத் தெந்தாய் !

பச்சைத் தமனகத்தோடு பாதிரிப்பூச் சூட்ட வாராய். 3       2.7.3    திருவேங்கடம் திருப்பதி

தெருவின்கண்நின்று இளவாய்ச்சிமார்களைத் தீமை செய்யாதே *

மருவும் தமனகமும் சீர் மாலை மணம் கமழ்கின்ற *

புருவம் கருங்குழல் நெற்றி பொலிந்த முகிற் கன்று போலே *

உருவ மழகிய நம்பீ ! உகந்திவை சூட்ட நீ வாராய். 4     2.7.4

புள்ளினை வாய் பிளந்திட்டாய் !

பொரு கரியின் கொம்பொசித்தாய் ! *

கள்ள வரக்கியை மூக்கொடு காவலனைத் தலை கொண்டாய் ! *

அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது அடியேன் அடித்தேன் *

தெள்ளிய நீரிலெழுந்த செங்கழுநீர் சூட்ட வாராய். 5         2.7.5

எருதுகளோடு பொருதி ஏதுமுலோபாய் காண் நம்பீ ! *

கருதிய தீமைகள் செய்து கஞ்சனைக் கால்கொடு பாய்ந்தாய் ! * தெருவின் கண் தீமைகள் செய்து சிக்கென மல்லர்களோடு *

பொருது வருகின்ற பொன்னே! புன்னைப்பூச் சூட்ட வாராய். 6           2.7.6

குடங்களெடுத்தேற விட்டுக் கூத்தாட வல்ல எங்கோவே ! *

மடங்கொள் மதிமுகத்தாரை மால் செய்ய வல்ல என்மைந்தா ! *

இடந்திட்டு இரணியன் நெஞ்சை இருபிளவாக முன் கீண்டாய் ! *

குடந்தைக் கிடந்த எங்கோவே! குருக்கத்திப்பூச் சூட்ட வாராய். 7      2.7.7            திருக்குடந்தை (கும்பகோணம்)

சீமாலிகன் அவனோடு தோழமை கொள்ளவும் வல்லாய் !*

சாமாறு அவனை நீ எண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டாய் *

ஆமாறறியும் பிரானே ! அணியரங்கத்தே கிடந்தாய் ! *

ஏமாற்ற மென்னைத் தவிர்த்தாய்! இருவாட்சிப்பூச் சூட்ட வாராய். 8            2.7.8            திருவரங்கம்

அண்டத் தமரர்கள் சூழ அத்தாணியுள் அங்கிருந்தாய் ! *

தொண்டர்கள் நெஞ்சி லுறைவாய் ! தூமலராள் மணவாளா ! *

உண்டிட்டு உலகினை யேழும் ஓராலிலையில் துயில் கொண்டாய் ! *

கண்டு நானுன்னை யுகக்கக் கருமுகைப்பூச் சூட்ட வாராய். 9            2.7.9

செண்பக மல்லிகையோடு செங்கழுநீர் இருவாட்சி *

எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்றிவை சூட்ட வாவென்று *

மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்துரை செய்த இம்மாலை *

பண்பகர் வில்லிபுத்தூர்க் கோன் பட்டர் பிரான் சொன்ன பத்தே. 10 2.7.10

எட்டாம் திருமொழி

இந்திரனோடு பிரமன் ஈசன் இமையவரெல்லாம் *

மந்திர மாமலர் கொண்டு மறைந்து உவராய் வந்து நின்றார் *

சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள் வெள்ளறை நின்றாய் ! *

அந்தியம் போது இது வாகும் அழகனே ! காப்பிட வாராய். 1  2.8.1            திருவெள்ளறை

கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்ற பசுவெல்லாம் *

நின்றொழிந்தேன் உன்னைக் கூவி நேசமே லொன்று மிலாதாய் ! *

மன்றில் நில்லேல் அந்திப் போது மதிள் திருவெள்ளறை நின்றாய் ! *

நன்றுகண்டாய் என்தன் சொல்லு நான் உன்னைக் காப்பிட வாராய். 2      2.8.2            திருவெள்ளறை

செப்போதுமென்முலையார்கள் சிறுசோறும் இல்லும்சிதைத்திட்டு *

அப்போது நானுரப்பப் போய் அடிசிலு முண்டிலை ஆள்வாய் !*

முப்போதும் வானவரேத்தும் முனிவர்கள் வெள்ளறை நின்றாய் !*

இப்போது நானொன்றும் செய்யேன் எம்பிரான்! காப்பிட வாராய். 3  2.8.3            திருவெள்ளறை

கண்ணில் மணல் கொடு தூவிக்

காலினால் பாய்ந்தனை என்றென்று *

எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு இவரால் முறைப் படுகின்றார் *

கண்ணனே வெள்ளறை நின்றாய் !

கண்டாரோடே தீமைகள் செய்வாய் ! *

வண்ணமே வேலையதொப்பாய் ! வள்ளலே காப்பிட வாராய். 4       2.8.4            திருவெள்ளறை

பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமைகள் செய்வார் *

எல்லாம் உன் மேலன்றிப் போகாது எம்பிரான்! நீ இங்கே வாராய் *

நல்லார்கள் வெள்ளறை நின்றாய்! ஞானச் சுடரே ! உன் மேனி *

சொல்லார வாழ்த்தி நின்றேத்திச் சொப்படக் காப்பிட வாராய். 5       2.8.5            திருவெள்ளறை

கஞ்சன் கறுக்கொண்டு நின்மேல் கருநிறச் செம்மயிர்ப் பேயை *

வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையு முண்டு *

மஞ்சு தவழ் மணிமாட மதிள் திருவெள்ளறை நின்றாய் ! *

அஞ்சுவன் நீ அங்கு நிற்க, அழகனே ! காப்பிட வாராய். 6          2.8.6            திருவெள்ளறை

கள்ளச் சகடும் மருதும் கலக்கழிய உதை செய்த

பிள்ளை யரசே !* நீ பேயைப் பிடித்து முலையுண்ட பின்னை *

உள்ளவாறு ஒன்றுமறியேன் ஒளியுடை வெள்ளறை நின்றாய் !*

பள்ளிகொள் போது இதுவாகும் பரமனே ! காப்பிட வாராய். 7 2.8.7            திருவெள்ளறை

இன்பமதனை உயர்த்தாய்! இமையவர்க்கு என்றும் அரியாய்! *

கும்பக் களிறட்ட கோவே! கொடுங் கஞ்சன் நெஞ்சினில் கூற்றே ! *

செம்பொன் மதிள் வெள்ளறையாய்! செல்வத்தினால் வளர் பிள்ளாய்! *

கம்பக் கபாலி காண் அங்கு கடிதோடிக் காப்பிட வாராய். 8      2.8.8            திருவெள்ளறை

இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு

எழில் மறையோர் வந்து நின்றார் *

தருக்கேல் நம்பீ ! சந்தி நின்று

தாய் சொல்லுக் கொள்ளாய் சில நாள் *

திருக்காப்பு நானுன்னைச் சாத்தத்

தேசுடை வெள்ளறை நின்றாய் ! *

உருக்காட்டும் அந்தி விளக்கு

இன்றொளி கொள்ள ஏற்றுகேன் வாராய். 9    2.8.9    திருவெள்ளறை

போதமர் செல்வக் கொழுந்து

புணர் திருவெள்ளறையானை *

மாதர்க்குயர்ந்த அசோதை

மகன் தன்னைக் காப்பிட்ட மாற்றம் *

வேதப் பயன் கொள்ள வல்ல

விட்டுசித்தன் சொன்ன மாலை *

பாதப் பயன் கொள்ள வல்ல

பத்தருள்ளார் வினை போமே. 10  2.8.10  திருவெள்ளறை

ஒன்பதாம் திருமொழி

வெண்ணெய் விழுங்கி வெறுங் கலத்தை

வெற்பிடை யிட்டு அதனசை கேட்கும் *

கண்ண பிரான் கற்ற கல்வி தன்னைக்

காக்க கில்லோம் உன் மகனைக் காவாய் *

புண்ணில் புளிப்பெய்தா லொக்கும் தீமை

புரை புரையால் இவை செய்ய வல்ல *

அண்ணற் கண்ணானேர் மகனைப் பெற்ற

அசோதை நங்காய் ! உன் மகனைக் கூவாய். 1       2.9.1

வருக வருக வருக இங்கே வாமன நம்பீ ! வருக இங்கே *

கரிய குழல் செய்ய வாய் முகத்துக் காகுத்த நம்பீ ! வருக இங்கே *

அரிய னிவன் எனக்கு இன்று நங்காய் !

அஞ்சன வண்ணா ! அசலகத்தார் *

பரிபவம் பேசத் தரிக்ககில்லேன் பாவியேனுக்கு இங்கே போதராயே. 2    2.9.2

திருவுடைப் பிள்ளை தான் தீயவாறு

தேக்கமொன்றுமிலன் தேசுடையன் *

உருக வைத்த குடத்தொடு வெண்ணெய்

உறிஞ்சி யுடைத்திட்டுப் போந்து நின்றான் *

அருகிருந்தார் தம்மை அநியாயம்

செய்வது தான் வழக்கோ ? அசோதாய் ! *

வருகவென்று உன் மகன் தன்னைக் கூவாய்

வாழவொட்டான் மதுசூதனனே. 3 2.9.3

கொண்டல் வண்ணா ! இங்கே போதராயே

கோயிற் பிள்ளாய் ! இங்கே போதராயே *

தெண் திரை சூழ் திருப்பேர்க் கிடந்த

திருநாரணா ! இங்கே போதராயே *

உண்டு வந்தேன் அம்மமென்று சொல்லி

ஓடி அகம் புக ஆய்ச்சிதானும் *

கண்டெதிரே சென்றெடுத்துக் கொள்ளக்

கண்ணபிரான் கற்ற கல்வி தானே. 4     2.9.4    திருப்பேர்நகர்

பாலைக் கறந்தடுப்பேற வைத்துப்

பல்வளையாள் என் மகளிருப்ப *

மேலை யகத்தே நெருப்பு வேண்டிச் சென்று

இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன் *

சாளக்கிராம முடைய நம்பி

சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான் *

ஆலைக் கரும்பின் மொழி யனைய

அசோதை நங்காய் ! உன் மகனைக் கூவாய். 5       2.9.5    சாளக்கிராமம்

போதர் கண்டாய் இங்கே போதர் கண்டாய்

போதரே னென்னாதே போதர் கண்டாய் *

ஏதேனும் சொல்லி அசலகத்தார்

ஏதேனும் பேச நான் கேட்கமாட்டேன் *

கோதுகலமுடைக் குட்டனேயோ !

குன்றெடுத்தாய் ! குடமாடு கூத்தா ! *

வேதப் பொருளே ! என் வேங்கடவா !

வித்தகனே ! இங்கே போதராயே. 6         2.9.6    திருவேங்கடம் திருப்பதி

செந்நெல் அரிசி சிறு பருப்புச்

செய்த அக்காரம் நறு நெய் பாலால் *

பன்னிரண்டு திருவோணம் அட்டேன்

பண்டும் இப்பிள்ளை பரிசறிவன் *

இன்ன முகப்பன் நானென்று சொல்லி

எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான் *

உன் மகன் தன்னை அசோதை நங்காய் !

கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே. 7         2.9.7

கேசவனே ! இங்கே போதராயே

கில்லே னென்னாது இங்கே போதராயே *

நேசமிலாதா ரகத்திருந்து

நீ விளையாடாதே போதராயே *

தூசனம் சொல்லும் தொழுத்தைமாரும்

தொண்டரும் நின்றவிடத்தில் நின்று *

தாய் சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய்

தாமோதரா ! இங்கே போதராயே. 8        2.9.8

கன்னல் இலட்டுவத்தோடு சீடை

காரெள்ளினுண்டை கலத்திலிட்டு *

என்னக மென்று நான் வைத்துப் போந்தேன்

இவன் புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான் *

பின்னும் அகம்புக்கு உறியை நோக்கிப்

பிறங்கொளி வெண்ணெயும் சோதிக்கின்றான் *

உன் மகன் தன்னை அசோதை நங்காய் !

கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே. 9         2.9.9

சொல்லில் அரசிப்படுதி நங்காய் !

சூழலுடையன் உன் பிள்ளை தானே *

இல்லம் புகுந்து என் மகளைக் கூவிக்

கையில் வளையைக் கழற்றிக்கொண்டு *

கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற

அங்கொருத்திக்கு அவ்வளை கொடுத்து *

நல்லன நாவற்பழங்கள் கொண்டு

நானல்லேனென்று சிரிக்கின்றானே. 10 2.9.10

வண்டு களித்திரைக்கும் பொழில் சூழ்

வருபுனல் காவிரித் தென்னரங்கன் *

பண்டு அவன் செய்த கிரீடையெல்லாம்

பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல் *

கொண்டு இவை பாடிக் குனிக்க வல்லார்

கோவிந்தன்தன் அடியார்களாகி *

எண்திசைக்கும் விளக்காகி நிற்பார்

இணையடி என்தலை மேலனவே. 11     2.9.11  திருவரங்கம்

பத்தாம் திருமொழி

ஆற்றிலிருந்து, விளையாடுவோங்களைச் *

சேற்றாலெறிந்து, வளை துகில் கைக்கொண்டு *

காற்றில் கடியனாய், ஒடி அகம் புக்கு *

மாற்றமும் தாரானால் இன்று முற்றும்

வளைத்திறம் பேசானால் இன்று முற்றும். 1 2.10.1

குண்டலம் தாழக் குழல் தாழ நாண் தாழ *

எண்திசையோரும், இறைஞ்சித் தொழுதேத்த *

வண்டமர் பூங்குழலார், துகில் கைக்கொண்டு *

விண்தோய் மரத்தானால் இன்று முற்றும்

வேண்டவும் தாரானால் இன்று முற்றும். 2    2.10.2

தடம்படு, தாமரைப் பொய்கை கலக்கி *

விடம்படு நாகத்தை, வால்பற்றி ஈர்த்து *

படம்படு பைந்தலை, மேலெழப் பாய்ந்திட்டு *

உடம்பை அசைத்தானால் இன்று முற்றும்

உச்சியில் நின்றானால் இன்று முற்றும். 3.    2.10.3

தேனுகனாவி, செகுத்துப் * பனங்கனி

தானெறிந்திட்ட, தடம் பெருந்தோளினால் *

வானவர்கோன் விட, வந்த மழை தடுத்து *

ஆனிரை காத்தானால் இன்று முற்றும்

அவை உய்யக்கொண்டானால் இன்று முற்றும். 4  2.10.4

ஆய்ச்சியர் சேரி, அளை தயிர் பாலுண்டு *

பேர்த்தவர் கண்டு, பிடிக்கப் பிடியுண்டு *

வேய்த்தடந்தோளினார், வெண்ணெய்கொள்மாட்டாது* அங்கு

ஆப்புண்டிருந்தானால் இன்று முற்றும்

அடியுண்டு அழுதானால் இன்று முற்றும். 5  2.10.5

தள்ளித் தளர்நடையிட்டு, இளம்பிள்ளையாய் *

உள்ளத்தினுள்ளே, அவளையுற நோக்கிக் *

கள்ளத்தினால் வந்த, பேய்ச்சி முலை உயிர் *

துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும்

துவக்கற உண்டானால் இன்று முற்றும். 6     2.10.6

மாவலி வேள்வியில், மாணுருவாய்ச் சென்று *

மூவடி தாவென்று இரந்த, இம்மண்ணினை *

ஓரடியிட்டு, இரண்டாமடி தன்னிலே *

தாவடியிட்டானால் இன்று முற்றும்

தரணியளந்தானால் இன்று முற்றும். 7 2.10.7

தாழை தண் ஆம்பல், தடம் பெரும் பொய்கை வாய் *

வாழு முதலை, வலைப்பட்டு வாதிப்புண் *

வேழம் துயர் கெட, விண்ணோர் பெருமானாய் *

ஆழி பணி கொண்டானால் இன்று முற்றும்

அதற்கருள் செய்தானால் இன்று முற்றும். 8 2.10.8

வானத்தெழுந்த, மழை முகில் போல் *

எங்கும் கானத்து மேய்ந்து, களித்து விளையாடி *

ஏனத்துருவாய் இடந்த, இம்மண்ணினைத் *

தானத்தே வைத்தானால் இன்று முற்றும்

தரணி இடந்தானால் இன்று முற்றும். 9           2.10.9

அங்கமலக் கண்ணன் தன்னை, அசோதைக்கு *

மங்கை நல்லார்கள் தாம் வந்து முறைப் பட்ட *

அங்கவர் சொல்லைப், புதுவைக் கோன் பட்டன் சொல் *

இங்கிவை வல்லவர்க்கு, ஏதமொன்றில்லையே. 10 2.10.10

மூன்றாம் பத்து

முதல் திருமொழி

தன்னேராயிரம் பிள்ளைகளோடு

தளர்நடையிட்டு வருவான் *

பொன்னேய் நெய்யொடு பாலமுதுண்டு

ஒரு புள்ளுவன் பொய்யே தவழும் *

மின்னேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை துஞ்ச

வாய் வைத்த பிரானே ! *

அன்னே ! உன்னை அறிந்து கொண்டேன்

உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே. 1    3.1.1

பொன் போல் மஞ்சனமாட்டி

அமுதூட்டிப் போனேன் வருமளவு இப்பால் *

வன் பாரச் சகடம் இறச் சாடி

வடக்கில் அகம் புக்கிருந்து *

மின்போல் நுண்ணிடையாள் ஒரு கன்னியை

வேற்றுருவம் செய்து வைத்த *

அன்பா ! உன்னை அறிந்து கொண்டேன்

உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே. 2    3.1.2

கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக்

குடத்தயிர் சாய்த்துப் பருகி *

பொய்ம்மாய மருதான அசுரரைப்

பொன்றுவித்து இன்று நீ வந்தாய் *

இம்மாயம் வல்ல பிள்ளை நம்பீ !

உன்னை என் மகனே என்பர் நின்றார் *

அம்மா! உன்னை அறிந்து கொண்டேன்

உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே. 3    3.1.3

மையார் கண் மடவாய்ச்சியர் மக்களை

மையன்மை செய்து * அவர் பின் போய்

கொய்யார் பூந்துகில் பற்றித் தனி நின்று

குற்றம் பல பல செய்தாய் *

பொய்யா ! உன்னைப் புறம் பல பேசுவ

புத்தகத்துக்குள கேட்டேன். *

ஐயா ! உன்னை அறிந்து கொண்டேன்

உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே. 4    3.1.4

முப்போதும் கடைந்தீண்டிய வெண்ணெயினோடு

தயிரும் விழுங்கிக் *

கப்பாலாயர்கள் காவிற்கொணர்ந்த

கலத்தொடு சாய்த்துப்பருகி *

மெய்ப்பாலுண்டு அழு பிள்ளைகள் போல

நீ விம்மி விம்மி அழுகின்ற *

அப்பா ! உன்னை அறிந்து கொண்டேன்

உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே. 5    3.1.5

கரும்பார் நீள் வயல் காய் கதிர்ச் செந்நெலைக்

கற்றானிரை மண்டித் தின்ன *

விரும்பாக் கன்றொன்று கொண்டு

விளங்கனி வீழ எறிந்தபிரானே ! *

சுரும்பார் மென் குழல் கன்னி யொருத்திக்குச்

சூழ் வலை வைத்துத் திரியும் *

அரம்பா ! உன்னை அறிந்து கொண்டேன்

உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே. 6    3.1.6

மருட்டார் மென்குழல் கொண்டு பொழில் புக்கு

வாய் வைத்து அவ்வாயர்தம் பாடி *

சுருட்டார் மென்குழல் கன்னியர் வந்து உன்னைச்

சுற்றும் தொழ நின்ற சோதி ! *

பொருட்டாயமிலேன் எம்பெருமான் !

உன்னைப் பெற்ற குற்றமல்லால் * மற்றிங்கு

அரட்டா ! உன்னை அறிந்து கொண்டேன்

உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே. 7    3.1.7

வாளாவாகிலும் காணகில்லார்

பிறர் மக்களை மையன்மை செய்து *

தோளாலிட்டு அவரோடு திளைத்து

நீ சொல்லப் படாதன செய்தாய் *

கேளார் ஆயர் குலத்தவர் இப்பழி

கெட்டேன் ! வாழ்வில்லை * நந்தன்

காளாய் ! உன்னை அறிந்து கொண்டேன்

உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே. 8    3.1.8

தாய்மார் மோர் விற்கப் போவர்

தமப்பன்மார் கற்றானிரைப் பின்பு போவர் *

நீ ஆய்ப்பாடி இளங்கன்னிமார்களை

நேர் படவே கொண்டு போதி *

காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து

கண்டார் கழறத் திரியும் *

ஆயா ! உன்னை அறிந்து கொண்டேன்

உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே. 9    3.1.9

தொத்தார் பூங்குழல் கன்னியொருத்தியைச்

சோலைத் தடம் கொண்டுபுக்கு *

முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை

மூவேழு சென்ற பின் வந்தாய் ! *

ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர்

உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன் *

அத்தா ! உன்னை அறிந்து கொண்டேன்

உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே. 10  3.1.10

காரார் மேனி நிறத்தெம்பிரானைக்

கடிகமழ் பூங்குழலாய்ச்சி *

ஆரா இன்னமுதுண்ணத் தருவன் நான்

அம்மம் தாரேன் என்ற மாற்றம் *

பாரார் தொல் புகழான் புதுவை மன்னன்

பட்டர் பிரான் சொன்ன பாடல் *

ஏரார் இன்னிசை மாலை வல்லார்

இருடீகேசனடியாரே. 11          3.1.11

இரண்டாம் திருமொழி

அஞ்சன வண்ணனை, ஆயர் கோலக் கொழுந்தினை *

மஞ்சன மாட்டி, மனைகள் தோறும் திரியாமே *

கஞ்சனைக் காய்ந்த, கழலடி நோவக் கன்றின் பின்

என் செயப் பிள்ளையைப் போக்கினேன், எல்லே பாவமே. 1.   3.2.1

பற்று மஞ்சள் பூசிப், பாவை மாரொடு பாடியில் *

சிற்றில் சிதைத்து, எங்கும் தீமை செய்து திரியாமே *

கற்றுத் தூளியுடை, வேடர் கானிடைக் கன்றின் பின் *

எற்றுக்கென் பிள்ளையைப் போக்கினேன், எல்லே பாவமே. 2  3.2.2

நன்மணி மேகலை, நங்கை மாரொடு நாள்தொறும் *

பொன்மணி மேனி, புழுதியாடித் திரியாமே *

கன்மணி நின்றதிர், கானதரிடைக் கன்றின் பின் *

என் மணி வண்ணனைப் போக்கினேன், எல்லே பாவமே.3        3.2.3

வண்ணக் கருங்குழல் மாதர், வந்து அலர் தூற்றிட *

பண்ணிப் பலசெய்து, இப்பாடி யெங்கும் திரியாமே *

கண்ணுக் கினியானைக் கானதரிடைக், கன்றின் பின் *

எண்ணற் கரியானைப் போக்கினேன், எல்லே பாவமே. 4            3.2.4

அவ்வவ்விடம் புக்கு அவ்வாயர் பெண்டிர்க் கணுக்கனாய்க் *

கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் கூழைமை செய்யாமே *

எவ்வும் சிலையுடை, வேடர் கானிடைக் கன்றின் பின் *

தெய்வத் தலைவனைப் போக்கினேன், எல்லே பாவமே. 5         3.2.5

மிடறு மெழுமெழுத்தோட, வெண்ணெய் விழுங்கிப்போய் *

படிறு பல செய்து, இப்பாடி யெங்கும் திரியாமே *

கடிறு பல திரி, கானதரிடைக் கன்றின் பின் *

இடற என் பிள்ளையைப் போக்கினேன், எல்லே பாவமே. 6      3.2.6

வள்ளி நுடங்கிடை மாதர் வந்து அலர் தூற்றிடத் *

துள்ளி விளையாடித், தோழரோடு திரியாமே *

கள்ளி யுணங்கு, வெங்கானதரிடைக் கன்றின் பின் *

புள்ளின் தலைவனைப் போக்கினேன். எல்லே பாவமே. 7         3.2.7

பன்னிரு திங்கள், வயிற்றில் கொண்ட அப்பாங்கினால் *

என்னிளங் கொங்கை, அமுதமூட்டி யெடுத்து யான் *

பொன்னடி நோவப், புலரியே கானில் கன்றின்பின் *

என்னிளஞ் சிங்கத்தைப் போக்கினேன், எல்லே பாவமே. 8        3.2.8

குடையும் செருப்பும் கொடாதே, தாமோதரனை நான் *

உடையும் கடியன ஊன்று, வெம்பரற் களுடைக் *

கடிய வெங்கானிடைக், காலடி நோவக் கன்றின் பின்*

கொடியேன் என் பிள்ளையைப் போக்கினேன் எல்லே பாவமே. 9     3.2.9

என்றும் எனக்கு இனியானை, என் மணி வண்ணனைக்

கன்றின் பின் போக்கினேன் என்று, அசோதை கழறிய *

பொன் திகழ் மாடப், புதுவையர் கோன் பட்டன் சொல் *

இன்தமிழ் மாலைகள் வல்லவர்க்கு, இடரில்லையே. 10        3.2.10

மூன்றாம் திருமொழி

சீலைக் குதம்பை ஒரு காது

ஒரு காது செந்நிற மேல் தோன்றிப் பூ *

கோலப் பணைக் கச்சும் கூறை யுடையும்

குளிர் முத்தின் கோடாலமும் *

காலிப் பின்னே வருகின்ற

கடல் வண்ணன் வேடத்தை வந்து காணீர் *

ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார்,

நங்கைமீர் ! நானே மற்றாருமில்லை. 1           3.3.1

கன்னி நன் மா மதிள் சூழ்தரு

பூம்பொழில் காவிரித் தென்னரங்கம் *

மன்னிய சீர் மதுசூதனா ! கேசவா !

பாவியேன் வாழ்வுகந்து *

உன்னை இளங்கன்று மேய்க்கச்

சிறுகாலே ஊட்டி ஒருப்படுத்தேன் *

என்னில் மனம் வலியாள் ஒரு பெண்ணில்லை

என் குட்டனே ! முத்தம் தா. 2       3.3.2    திருவரங்கம்

காடுகளூடு போய்க்

கன்றுகள் மேய்த்து மறியோடிக் * கார்க்கோடல்

பூச் சூடி வருகின்ற தாமோதரா !

கற்றுத் தூளி காண் உன்னுடம்பு *

பேடை மயில் சாயல் பின்னை மணாளா !

நீராட்டமைத்து வைத்தேன்

ஆடி அமுதுசெய் * அப்பனும் உண்டிலன்

உன்னோடு உடனே உண்பான். 3  3.3.3

கடியார் பொழில் அணி வேங்கடவா !

கரும்போரேறே ! * நீ உகக்கும்

குடையும் செருப்பும் குழலும் தருவிக்கக்

கொள்ளாதே போனாய் மாலே! *

கடிய வெங்கானிடைக் கன்றின் பின் போன

சிறுகுட்டச் செங்கமல

அடியும் வெதும்பி * உன் கண்கள் சிவந்தாய்

அசைந்திட்டாய் நீ எம்பிரான் ! 4   3.3.4    திருவேங்கடம் திருப்பதி

பற்றார் நடுங்க முன் பாஞ்சசன்னியத்தை

வாய் வைத்த போரேறே ! *

என் சிற்றாயர் சிங்கமே ! சீதை மணாளா !

சிறுகுட்டச் செங்கண்மாலே ! *

சிற்றாடையும் சிறு பத்திரமும்

இவை கட்டிலின் மேல் வைத்துப் போய்க் *

கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக்

கலந்துடன் வந்தாய் போலும். 5    3.3.5

அஞ்சுடராழி உன் கையகத்தேந்தும்

அழகா ! நீ பொய்கை புக்கு *

நஞ்சுமிழ் நாகத்தினோடு பிணங்கவும்

நான் உயிர்வாழ்ந்திருந்தேன் *

என்செய்ய என்னை வயிறு மறுக்கினாய் ?

ஏதுமோர் அச்சமில்லை *

கஞ்சன் மனத்துக்கு உகப்பனவே செய்தாய்

காயாம்பூ வண்ணம் கொண்டாய் ! * 6  3.3.6

பன்றியும் ஆமையும் மீனமுமாகிய

பாற்கடல் வண்ணா ! * உன்மேல்

கன்றினுருவாகி மேய் புலத்தே வந்த

கள்ள அசுரர் தம்மைச் *

சென்று பிடித்துச் சிறுக் கைகளாலே

விளங்காய் எறிந்தாய் போலும் *

என்றும் என் பிள்ளைக்குத் தீமைகள் செய்வார்கள்

அங்ஙனமாவர்களே. 7 3.3.7    திருப்பாற்கடல்

கேட்டறியாதன கேட்கின்றேன்

கேசவா ! கோவலர் இந்திரற்குக் *

காட்டிய சோறும் கறியும் தயிரும்

கலந்துடனுண்டாய் போலும் *

ஊட்ட முதலிலேன் உன்தன்னைக்கொண்டு

ஒரு போதும் எனக்கரிது *

வாட்டமிலாப் புகழ் வாசுதேவா !

உன்னை அஞ்சுவன் இன்று தொட்டும். 8         3.3.8

திண்ணார் வெண் சங்குடையாய் !

திருநாள் திருவோணம் இன்றேழு நாள் * முன்

பண்ணேர் மொழியாரைக் கூவி முளையட்டிப்

பல்லாண்டு கூறுவித்தேன் *

கண்ணாலம் செய்யக்

கறியும் கலத்ததரிசியும் ஆக்கி வைத்தேன் *

கண்ணா ! நீ நாளைத் தொட்டுக் கன்றின் பின் போகேல்

கோலம் செய்து இங்கே இரு. 9    3.3.9

புற்றரவல்குல் அசோதை நல்லாய்ச்சி

தன் புத்திரன் கோவிந்தனைக் *

கற்றினம் மேய்த்து வரக் கண்டு உகந்து

அவள் கற்பித்த மாற்றமெல்லாம் *

செற்றமிலாதவர் வாழ் தரு

தென் புதுவை விட்டுசித்தன் சொல் *

கற்றிவை பாட வல்லார்

கடல் வண்ணன் கழலிணை காண்பர்களே. 10.        3.3.10

…..Continued

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.