Periazhwar Thirumozhi Part 2

பெரியாழ்வார் திருமொழி (Continued)

மூன்றாம் பத்து

நான்காம் திருமொழி

தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும்

தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலிக் *

குழல்களும் கீதமுமாகி எங்கும்

கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு *

மழை கொலோ வருகின்றதென்று சொல்லி

மங்கைமார் சாலக வாசல் பற்றி *

நுழைவனர் நிற்பனராகி எங்கும்

உள்ளம் விட்டு ஊண் மறந்து ஒழிந்தனரே. 1.           3.4.1

வல்லிநுண் இதழன்ன ஆடை கொண்டு

வசையறத் திருவரை விரித்துடுத்து *

பல்லிநுண் பற்றாக உடைவாள் சாத்திப்

பணைக் கச்சுந்திப் பலதழை நடுவே *

முல்லை நல் நறு மலர் வேங்கை மலரணிந்து

பல்லாயர் குழாம் நடுவே *

எல்லியம் போதாகப் பிள்ளை வரும்

எதிர் நின்று அங்கு இனவளை இழவேல்மினே. 2.  3.4.2

சுரிகையும் தெறி வில்லும் செண்டு கோலும்

மேலாடையும் தோழன்மார் கொண்டோட *

ஒரு கையால் ஒருவன் தன் தோளையூன்றி

ஆனிரையினம் மீளக் குறித்த சங்கம் *

வருகையில் வாடிய பிள்ளை கண்ணன்

மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள் *

அருகே நின்றாள் என் பெண் நோக்கிக் கண்டாள்

அதுகண்டு இவ்வூர் ஒன்று புணர்க்கின்றதே. 3.        3.4.3

குன்றெடுத்து ஆனிரை காத்த பிரான்

கோவலனாய்க் குழலூதியூதிக் *

கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு

கலந்துடன் வருவானைத் தெருவில் கண்டு *

என்றும் இவனை ஒப்பாரை நங்காய் !

கண்டறியேன் ஏடி ! வந்து காணாய் *

ஒன்றும் நில்லா வளை கழன்று துகில்

ஏந்திள முலையும் என் வசமல்லவே. 4.          3.4.4

சுற்றிநின்று ஆயர் தழைகளிடச்

சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து *

பற்றி நின்று ஆயர் கடைத்தலையே

பாடவும் ஆடக்கண்டேன் * அன்றிப் பின்

மற்றொருவர்க்கு என்னைப் பேசலொட்டேன்

மாலிருஞ்சோலை எம்மாயற்கல்லால் *

கொற்றவனுக்கு இவளாமென்றெண்ணிக்

கொடுமின்கள் கொடீராகில் கோழம்பமே. 5.   3.4.5    திருமாலிருஞ்சோலை

சிந்துரமிலங்கத் தன் திருநெற்றி மேல்

திருத்திய கோறம்பும் திருக்குழலும் *

அந்தரமுழவத் தண் தழைக்காவின் கீழ்

வருமாயரோடு உடன்வளைக்கோல் வீச *

அந்தமொன்றில்லாத ஆயப்பிள்ளை

அறிந்தறிந்து இவ்வீதி போதுமாகில் *

பந்து கொண்டானென்று வளைத்து வைத்துப்

பவளவாய் முறுவலும் காண்போம் தோழி ! 6         3.4.6

சாலப் பல் நிரைப் பின்னே தழைக் காவின் கீழ்த்

தன் திருமேனி நின்றொளி திகழ *

நீல நல் நறுங்குஞ்சி நேத்திரத்தால் அணிந்து

பல்லாயர் குழாம் நடுவே *

கோலச் செந்தாமரைக் கண் மிளிரக்

குழலூதி இசை பாடிக் குனித்து * ஆயரோடு

ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை

அழகு கண்டு என் மகள் அயர்க்கின்றதே. 7   3.4.7

சிந்துரப் பொடிக் கொண்டு சென்னி யப்பித்

திருநாமமிட்டு அங்கோர் இலையந் தன்னால் *

அந்தரமின்றித் தன்னெறி பங்கியை

அழகிய நேத்திரத்தால் அணிந்து *

இந்திரன் போல் வரும் ஆயப் பிள்ளை

எதிர் நின்று அங்கு இனவளை இழவேலென்ன *

சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன்

துகிலொடு சரிவளை கழல்கின்றதே. 8 3.4.8

வலங்காதின் மேல் தோன்றிப் பூவணிந்து

மல்லிகை வனமாலை மெளவல் மாலை *

சிலிங்காரத்தால் குழல் தாழவிட்டுத்

தீங்குழல் வாய் மடுத்தூதி யூதி *

அலங்காரத்தால் வரும் ஆயப் பிள்ளை

அழகு கண்டு என் மகள் ஆசைப் பட்டு *

விலங்கி நில்லாது எதிர் நின்று கண்டீர்

வெள் வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே. 9      3.4.9

விண்ணின் மீது அமரர்கள் விரும்பித் தொழ

மிறைத்து ஆயர்பாடியில் வீதியூடே *

கண்ணன் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு

இள ஆய்க் கன்னிமார் காமுற்ற

வண்ணம் * வண்டமர் பொழில் புதுவையர் கோன்

விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும் *

பண்ணின்பம் வரப்பாடும் பத்தருள்ளார்

பரமான வைகுந்தம் நண்ணுவரே. 10          3.4.10          திருவாய்ப்பாடி (கோகுலம்)

ஐந்தாம் திருமொழி

அட்டுக் குவி சோற்றுப் பருப்பதமும்

தயிர் வாவியும் நெய்யளறும் அடங்கப்

பொட்டத் துற்றி * மாரிப் பகை புணர்த்த

பொருமா கடல் வண்ணன் பொறுத்தமலை *

வட்டத் தடங்கண் மடமான் கன்றினை

வலைவாய்ப் பற்றிக் கொண்டு * குறமகளிர்

கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும்

கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே. 1        3.5.1

வழுவொன்றுமில்லாச் செய்கை வானவர் கோன்

வலிப்பட்டு முனிந்து விடுக்கப் பட்ட*

மழை வந்து எழு நாள் பெய்து மாத்தடுப்ப

மதுசூதன் எடுத்து மறித்த மலை *

இழவு தரியாததோர் ஈற்றுப்பிடி

இளஞ்சீயம் தொடர்ந்து முடுகுதலும் *

குழவியிடைக் காலிட்டெதிர்ந்து பொரும்

கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே. 2        3.5.2

அம்மைத் தடங்கண் மட ஆய்ச்சியரும்

ஆனாயரும் ஆனிரையும் அலறி *

எம்மைச் சரண் ஏன்று கொள் என்றிரப்ப

இலங்கு ஆழிக்கை எந்தை எடுத்த மலை *

தம்மைச் சரணென்ற தம் பாவையரைப்

புனம் மேய்கின்ற மானினம் காண்மினென்று *

கொம்மைப் புயக்குன்றர் சிலை குனிக்கும்

கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே. 3        3.5.3

கடுவாய்ச் சின வெங்கண் களிற்றினுக்குக்

கவளமெடுத்துக் கொடுப்பானவன் போல் *

அடி வாயுறக் கையிட்டு எழப் பறித்திட்டு

அமரர் பெருமான் கொண்டுநின்ற மலை *

கடல்வாய்ச் சென்று மேகம் கவிழ்ந்திறங்கிக்

கதுவாய்ப் பட நீர் முகந்தேறி * எங்கும்

குடவாய் பட நின்று மழை பொழியும்

கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே. 4        3.5.4

வானத்திலுள்ளீர் ! வலியீர் உள்ளீரேல்

அறையோ ! வந்து வாங்குமின் என்பவன் போல் *

ஏனத்துருவாகிய ஈசன் எந்தை

இடவனெழ வாங்கி எடுத்த மலை *

கானக் களியானை தன் கொம்பிழந்து

கதுவாய் மதம் சோரத் தன் கையெடுத்துக் *

கூனல் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும்

கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே. 5        3.5.5

செப்பாடுடைய திருமாலவன்தன்

செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும் *

கப்பாக மடுத்து மணி நெடுந்தோள்

காம்பாகக் கொடுத்துக் கவித்த மலை *

எப்பாடும் பரந்திழி தெள்ளருவி

இலங்கு மணி முத்து வடம் பிறழக் *

குப்பாயமென நின்று காட்சி தரும்

கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே. 6        3.5.6

படங்கள் பலவுமுடைப் பாம்பரையன்

படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல் *

தடங்கை விரலைந்தும் மலர வைத்துத்

தாமோதரன் தாங்கு தடவரை தான் *

அடங்கச் சென்று இலங்கையை ஈடழித்த

அனுமன் புகழ்பாடித் தம் குட்டன்களைக் *

குடங்கைக் கொண்டு மந்திகள் கண் வளர்த்தும்

கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே. 7        3.5.7

சலமாமுகில் பல் கணப்போர்க் களத்துச்

சரமாரி பொழிந்து எங்கும் பூசலிட்டு *

நலிவானுறக் கேடகம் கோப்பவன் போல்

நாராயணன் முன் முகம் காத்த மலை *

இலைவேய் குரம்பைத் தவமா முனிவர்

இருந்தார் நடுவே சென்று அணார் சொறியக் *

கொலை வாய்ச் சின வேங்கைகள் நின்றுறங்கும்

கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே. 8        3.5.8

வன் பேய் முலையுண்டதோர் வாயுடையன்

வன் தூணென நின்றதோர் வன்பரத்தைத் *

தன் பேரிட்டுக் கொண்டு தரணி தன்னில்

தாமோதரன் தாங்கு தடவரை தான் *

முன்பே வழிகாட்ட முசுக்கணங்கள்

முதுகில் பெய்து தம்முடைக் குட்டன்களைக் *

கொம்பேற்றி யிருந்து குதி பயிற்றும்

கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே. 9        3.5.9

கொடியேறு செந்தாமரைக் கைவிரல்கள்

கோலமும் அழிந்தில வாடிற்றில *

வடிவேறு திருவுகிர் நொந்துமில

மணிவண்ணன் மலையுமோர் சம்பிரதம் *

முடியேறிய மாமுகில் பல் கணங்கள்

முன்னெற்றி நரைத்தன போல * எங்கும்

குடியேறி யிருந்து மழை பொழியும்

கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே. 10      3.5.10

அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு

அரவப் பகை ஊர்தியவனுடைய *

குரவிற் கொடி முல்லைகள் நின்றுறங்கும்

கோவர்த்தன மென்னும் கொற்றக் குடை மேல் *

திருவில் பொலி மறைவாணர் புத்தூர்த்

திகழ் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும் *

பரவு மன நன்குடைப் பத்தருள்ளார்

பரமான வைகுந்தம் நண்ணுவரே. 11      3.5.11

ஆறாம் திருமொழி

நாவலம் பெரிய தீவினில் வாழும்

நங்கைமீர்கள் ! இது ஓரற்புதம் கேளீர் *

தூவலம்புரி யுடைய திருமால்

தூய வாயில் குழலோசை வழியே *

கோவலர் சிறுமியர் இளங்கொங்கை

குதுகலிப்ப உடலுளவிழ்ந்து * எங்கும்

காவலும் கடந்து கயிறு மாலையாகி

வந்து கவிழ்ந்து நின்றனரே. 1        3.6.1

இடவணரை இடத்தோளொடு சாய்த்து

இரு கை கூடப் புருவம் நெரிந்தேறக் *

குடவயிறு படவாய் கடைகூடக்

கோவிந்தன் குழல் கொடு ஊதின போது *

மடமயில்களொடு மான் பிணை போலே

மங்கைமார்கள் மலர்க் கூந்தலவிழ *

உடை நெகிழ ஓர் கையால் துகில் பற்றி

ஒல்கி ஓடரிக்கணோட நின்றனரே. 2     3.6.2

வானிளவரசு வைகுந்தக்குட்டன்

வாசுதேவன் மதுரை மன்னன் * நந்தர்

கோனிளவரசு கோவலர் குட்டன்

கோவிந்தன் குழல் கொடு ஊதின போது *

வானிளம்படியர் வந்து வந்தீண்டி

மனமுருகி மலர்க்கண்கள் பனிப்பத் *

தேனளவு செறி கூந்தலவிழச்

சென்னிவேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே. 3         3.6.3    வடமதுரை,

பரமபதம்

தேனுகன் பிலம்பன் காளியனென்னும்

தீப்பப்பூடுகள் அடங்க உழக்கிக் *

கானகம்படி உலாவியுலாவிக்

கருஞ்சி றுக்கன் குழலூதினபோது *

மேனகையொடு திலோத்தமை அரம்பை

உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி *

வானகம்படியில் வாய் திறப்பின்றி

ஆடல் பாடலவை மாறினர் தாமே. 4     3.6.4

முன் நரசிங்கமதாகி அவுணன்

முக்கியத்தை முடிப்பான் * மூவுலகில்

மன்னரஞ்ச மதுசூதனன் வாயில்

குழலினோசை செவியைப் பற்றி வாங்க *

நன்னரம்புடைய தும்புருவோடு,

நாரதனும் தம் தம் வீணை மறந்து *

கின்னர மிதுனங்களும் தம் தம்

கின்னரம் தொடுகிலோம் என்றனரே. 5 3.6.5

செம்பெருந்தடங்கண்ணன் திரள்தோளன்

தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம் *

நம் பரமன் இந்நாள் குழலூதக்

கேட்டவர்கள் இடருற்றன கேளீர் *

அம்பரம் திரியும் காந்தப்பரெல்லாம்

அமுத கீத வலையால் சுருக்குண்டு *

நம் பரமன்றென்று நாணி மயங்கி

நைந்து சோர்ந்து கைமறித்து நின்றனரே. 6    3.6.6

புவியுள் நான் கண்டதோர் அற்புதம் கேளீர்

பூணி மேய்க்கும் இளம்கோவலர் கூட்டத்து

அவையுள் * நாகத்தணையான் குழலூத

அமரலோகத்தளவும் சென்றிசைப்ப *

அவியுணா மறந்து வானவரெல்லாம்

ஆயர்பாடி நிறையப் புகுந்து ஈண்டிச் *

செவியுள் நாவின் சுவை கொண்டு மகிழ்ந்து

கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே. 7      3.6.7

சிறு விரல்கள் தடவிப் பரிமாறச்

செங்கண்கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக் *

குறு வெயர்ப் புருவம் கூடலிப்பக்

கோவிந்தன் குழல்கொடுஊதினபோது *

பறவையின் கணங்கள் கூடு துறந்து

வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக் *

கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்

கவிழ்ந்திறங்கிச் செவியாட்டகில்லாவே. 8     3.6.8

திரண்டெழு தழை மழை முகில் வண்ணன்

செங்கமலமலர் சூழ் வண்டினம் போலே *

சுருண்டிருண்ட குழல் தாழ்ந்தமுகத்தான்

ஊதுகின்ற குழலோசை வழியே *

மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து

மேய்ந்த புல்லும் கடைவாய் வழிசோர *

இரண்டு பாடும் துலுங்காப் புடை பெயரா

எழுது சித்திரங்கள் போல நின்றனவே. 9        3.6.9

கருங்கண் தோகை மயிற்பீலியணிந்து

கட்டி நன்குடுத்த பீதகவாடை *

அருங்கலவுருவின் ஆயர்பெருமான்

அவனொருவன் குழலூதினபோது *

மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்

மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும் *

இரங்கும் கூம்பும்திருமால் நின்றநின்ற பக்கம்நோக்கி

அவை செய்யும் குணமே. 10           3.6.10

குழலிருண்டு சுருண்டேறிய குஞ்சிக்

கோவிந்தனுடைய கோமள வாயில் *

குழல் முழைஞ்சுகளினூடு குமிழ்த்துக்

கொழித்தெழுந்த அமுதப்புனல் தன்னை *

குழல் முழவம் விளம்பும் புதுவைக் கோன்

விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார் *

குழலைவென்ற குளிர் வாயினராகிச்

சாதுகோட்டியுள் கொள்ளப்படுவாரே. 11           3.6.11

ஏழாம் திருமொழி

ஐயபுழுதி உடம்பளைந்து இவள்பேச்சும் அலந்தலையாய்ச் *

செய்ய நூலின் சிற்றாடை செப்பனுடுக்கவும் வல்லளல்லள் *

கையினில் சிறு தூதையோடு இவள் முற்றில் பிரிந்துமிலள் *

பையரவணைப் பள்ளியானொடு கைவைத்து இவள் வருமே. 1         3.7.1

வாயில் பல்லும் எழுந்தில மயிரும் முடி கூடிற்றில *

சாய்விலாத குறுந்தலைச் சில பிள்ளைகளோடிணங்கித் *

தீயிணக்கிணங்காடி வந்து இவள் தன்னன்ன செம்மை சொல்லி *

மாயன் மாமணிவண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே. 2 3.7.2

பொங்குவெண்மணல்கொண்டு சிற்றிலும் முற்றத்திழைக்கலுறில் *

சங்குசக்கரம் தண்டுவாள் வில்லுமல்லது இழைக்கலுறாள் *

கொங்கை இன்னம்குவிந்தெழுந்தில கோவிந்தனோடு இவளைச் *

சங்கையாகி என்னுள்ளம் நாடொறும் தட்டுளுப்பாகின்றதே. 3            3.7.3

ஏழைபேதை ஓர்பாலகன்வந்து என்பெண்மகளை(எ)இள்கித்*

தோழிமார்பலர் கொண்டுபோய்ச் செய்தசூழ்ச்சியை யார்க்குரைக்கேன்?*

ஆழியா னென்னு மாழ மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி *

மூழை உப்பறியாத தென்னும் மூதுரையு மிலளே. 4        3.7.4

நாடும் ஊரும் அறியவே போய் நல்ல துழாயலங்கல்

சூடி * நாரணன் போமிட மெல்லாம் சோதித்துழி தருகின்றாள் *

கேடு வேண்டுகின்றார் பலருளர் கேசவனோடு இவளைப் *

பாடு காவலிடுமி னென்றென்று பார் தடுமாறினதே. 5     3.7.5

பட்டம்கட்டிப் பொற்றோடு பெய்து இவள் பாடகமும் சிலம்பும் *

இட்டமாக வளர்த் தெடுத்தேனுக்கு என்னோடு இருக்கலுறாள் *

பொட்டப்போய்ப் புறப்பட்டுநின்று இவள்பூவைப்பூ வண்ணாவென்னும்*

வட்ட வார் குழல் மங்கைமீர் ! இவள் மாலுறுகின்றாளே. 6    3.7.6

பேசவும் தரியாத பெண்மையில் பேதையேன் பேதை இவள் *

கூசமின்றி நின்றார்கள் தம்மெதிர் கோல் கழிந்தான் மூழையாய்க் *

கேசவா ! என்றும் கேடிலீ ! என்றும் கிஞ்சுக வாய் மொழியாள் *

வாசவார் குழல் மங்கைமீர் ! இவள் மாலுறுகின்றாளே. 7         3.7.7

காறைபூணும் கண்ணாடி காணும் தன்கையில் வளை குலுக்கும் *

கூறை யுடுக்கும் அயர்க்கும் தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும் *

தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த் தேவன் திறம் பிதற்றும் *

மாறில் மாமணி வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே. 8          3.7.8

கைத்தலத்துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து * இவளை

வைத்துவைத்துக் கொண்டு என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும் ?*

செய்த்தலை எழுநாற்றுப் போல் அவன் செய்வன செய்து கொள்ள *

மைத்தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே. 9      3.7.9

பெருப்பெருத்த கண்ணாலங்கள்செய்து பேணிநம்மில்லத்துள்ளே*

இருத்துவானெண்ணி நாமிருக்க இவளும் ஒன்றெண்ணுகின்றாள் *

மருத்துவப் பதம் நீங்கினாளென்னும் வார்த்தை படுவதன் முன்*

ஒருப்படுத்திடுமின் இவளை உலகளந்தானிடைக்கே. 10 3.7.10

ஞாலமுற்றும்உண்டு ஆலிலைத்துயில் நாராயணனுக்கு * இவள்

மாலதாகி மகிழ்ந்தன ளென்று தாயுரை செய்ததனைக் *

கோலமார் பொழில் சூழ் புதுவையர் கோன் விட்டுசித்தன் சொன்ன *

மாலை பத்தும் வல்லவர்கட்கு இல்லை வரு துயரே. 11           3.7.11

எட்டாம் திருமொழி

நல்லதோர் தாமரைப் பொய்கை நாண்மலர் மேல் பனிசோர *

அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந்தா லொத்ததாலோ *

இல்லம் வெறி யோடிற்றாலோ என் மகளை எங்கும் காணேன் *

மல்லரை யட்டவன் பின்போய் மதுரைப் புறம் புக்காள் கொலோ? 1           3.8.1

ஒன்று மறிவொன் றில்லாத உருவறைக் கோபாலர் தங்கள் *

கன்று கால் மாறுமாபோலே கன்னி யிருந்தாளைக் கொண்டு *

நன்றும் கிறி செய்து போனான் நாராயணன் செய்த தீமை *

என்றும் எமர்கள் குடிக்கு ஒரேச்சுக் கொலாயிடுங் கொலோ ? 2        3.8.2

குமரி மணம் செய்து கொண்டு கோலம் செய்து இல்லத்திருத்தித்*

தமரும் பிறரும் அறியத் தாமோதரற்கென்று சாற்றி *

அமரர் பதியுடைத் தேவி அரசாணியை வழிபட்டுத் *

துமிலமெழப் பறை கொட்டித் தோரணம் நாட்டிடுங் கொலோ? 3        3.8.3

ஒருமகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால் *

திருமகள்போல வளர்த்தேன் செங்கண்மால் தான் கொண்டு போனான்*

பெருமகளாய்க் குடிவாழ்ந்து பெரும்பிள்ளை பெற்றஅசோதை*

மருமகளைக் கண்டுகந்து மணாட்டுப்புறம் செய்யுங்கொலோ? 4         3.8.4

தம்மாமன் நந்தகோபாலன் தழீஇக் கொண்டு என்மகள்தன்னைச்*

செம்மாந்திரே யென்று சொல்லிச் செழுங்கயற்கண்ணும் செவ்வாயும் *

கொம்மைமுலையும் இடையும் கொழும்பணைத்தோள்களும் கண்டிட்டு*

இம்மகளைப் பெற்ற தாயர் இனித் தரியார் என்னுங் கொலோ? 5      3.8.5

வேடர் மறக்குலம் போலே வேண்டிற்றுச் செய்து என்மகளைக் *

கூடிய கூட்டமேயாகக் கொண்டு குடி வாழுங்கொலோ ? *

நாடும் நகரும் அறிய நல்லதோர் கண்ணாலம் செய்து *

சாடிறப் பாய்ந்த பெருமான் தக்கவா கைப்பற்றுங்கொலோ ? 6            3.8.6

அண்டத்தமரர் பெருமான் ஆழியான் இன்று என் மகளைப் *

பண்டப் பழிப்புக்கள் சொல்லிப் பரிசற ஆண்டிடுங் கொலோ? *

கொண்டு குடிவாழ்க்கை வாழ்ந்து கோவலப் பட்டம் கவித்துப் *

பண்டை மணாட்டிமார் முன்னே பாதுகாவல் வைக்குங் கொலோ? 7          3.8.7

குடியில் பிறந்தவர்செய்யும் குணமொன்றும் செய்திலன் அந்தோ!*

நடையொன்றும் செய்திலன் நங்காய் ! நந்தகோபன் மகன் கண்ணன் *

இடையிரு பாலும் வணங்க இளைத்திளைத்து என் மகள் ஏங்கிக் *

கடை கயிறே பற்றி வாங்கிக் கை தழும்பேறிடுங் கொலோ ? 8        3.8.8

வெண்ணிறத்தோய்தயிர் தன்னைவெள்வரைப்பின் முன்னெழுந்து*

கண்ணுறங்காதே யிருந்து கடையவும் தான் வல்லள் கொலோ ? *

ஒண்ணிறத் தாமரைச் செங்கண் உலகளந்தான் என் மகளைப்*

பண்ணறையாப் பணி கொண்டு பரிசற ஆண்டிடுங் கொலோ ? 9      3.8.9

மாயவன் பின் வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு *

ஆயர்கள் சேரியிலும் புக்கு அங்குற்ற மாற்றமுமெல்லாம் *

தாயவள் சொல்லிய சொல்லைத் தண் புதுவைப் பட்டன் சொன்ன *

தூய தமிழ்ப் பத்தும் வல்லார் தூமணி வண்ணனுக்காளரே. 10           3.8.10

ஒன்பதாம் திருமொழி

என்னாதன் தேவிக்கு அன்று இன்பப்பூ ஈயாதாள் *

தன் நாதன் காணவே, தண் பூமரத்தினை *

வன்னாதப் புள்ளால், வலியப்பறித்திட்ட*

என்னாதன் வன்மையைப் பாடிப் பற

எம்பிரான் வன்மையைப் பாடிப் பற. 1   3.9.1

என் வில் வலி கண்டு போவென்று, எதிர் வந்தான்

தன் * வில்லினோடும் தவத்தை, எதிர் வாங்கி *

முன் வில் வலித்து, முது பெண்ணுயிருண்டான்

தன் *வில்லின் வன்மையைப் பாடிப் பற

தாசரதி தன்மையைப் பாடிப் பற. 2          3.9.2

உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக்கொண்டு *

விருப்புற்றங்கேக, விரைந்தெதிர் வந்து *

செருக்குற்றான், வீரம் சிதைய * தலையைச்

சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப் பற

தேவகி சிங்கத்தைப் பாடிப்பற. 3   3.9.3

மாற்றுத் தாய் சென்று, வனம் போகே என்றிட *

ஈற்றுத்தாய் பின் தொடர்ந்து, எம்பிரான் ! என்று அழக் *

கூற்றுத் தாய் சொல்லக், கொடிய வனம் போன *

சீற்றமிலாதானைப் பாடிப்பற சீதை மணாளனைப் பாடிப்பற. 4           3.9.4

பஞ்சவர் தூதனாய்ப், பாரதம் கை செய்து *

நஞ்சுமிழ் நாகம் கிடந்த நற் பொய்கை புக்கு *

அஞ்சப்பணத்தின் மேல், பாய்ந்திட்டு அருள்செய்த *

அஞ்சனவண்ணனைப்பாடிப்பற அசோதைதன்சிங்கத்தைப் பாடிப்பற. 5       3.9.5

முடியொன்றி, மூவுலகங்களும் ஆண்டு * உன்

அடியேற்கருளென்று, அவன் பின் தொடர்ந்த *

படியில் குணத்துப், பரதநம்பிக்கு * அன்று

அடிநிலைஈந்தானைப்பாடிப்பற அயோத்தியர்கோமானைப் பாடிப்பற. 6       3.9.6            திருவயோத்தி

காளியன் பொய்கை கலங்கப், பாய்ந்திட்டு * அவன்

நீள்முடியைந்திலும், நின்று நடம்செய்து *

மீள அவனுக்கு, அருள் செய்த வித்தகன் *

தோள்வலி வீரமே பாடிப்பற தூமணிவண்ணனைப் பாடிப்பற. 7         3.9.7

தார்க்கு இளந்தம்பிக்கு, அரசீந்து * தண்டகம்

நூற்றவள், சொல் கொண்டு போகி * நுடங்கிடைச்

சூர்ப்பணகாவைச், செவியொடு மூக்கு * அவள்

ஆர்க்க அரிந்தானைப் பாடிப்பற அயோத்திக்கரசனைப் பாடிப்பற. 8  3.9.8            திருவயோத்தி

மாயச்சகடமுதைத்து, மருதிறுத்து *

ஆயர்களோடு போய், ஆனிரை காத்து * அணி

வேயின் குழலூதி, வித்தகனாய் நின்ற *

ஆயர்களேற்றினைப் பாடிப்பற ஆனிரை மேய்த்தானைப் பாடிப்பற. 9         3.9.9

காரார் கடலை அடைத்திட்டு, இலங்கை புக்கு *

ஓராதான் பொன்முடி, ஒன்பதோடொன்றையும் *

நேரா அவன் தம்பிக்கே, நீளரசீந்த *

ஆராவமுதனைப் பாடிப்பற அயோத்தியர் வேந்தனைப் பாடிப்பற. 10           3.9.10            திருவயோத்தி

நந்தன் மதலையைக், காகுத்தனை நவின்று *

உந்தி பறந்த, ஒளியிழையார்கள் சொல் *

செந்தமிழ்த் தென் புதுவை, விட்டுசித்தன் சொல் *

ஐந்தினோடைந்தும் வல்லார்க்கு, அல்லலில்லையே. 11 3.9.11

பத்தாம் திருமொழி

நெறிந்த கருங்குழல் மடவாய்! நின்னடியேன் விண்ணப்பம் *

செறிந்த மணிமுடிச் சனகன் சிலையிறுத்து நினைக் கொணர்ந்தது

அறிந்து* அரசு களைகட்ட அருந்தவத்தோன் இடைவிலங்கச் *

செறிந்த சிலைகொடு தவத்தைச் சிதைத்ததும் ஓர் அடையாளம். 1  3.10.1

அல்லியம் பூமலர்க் கோதாய்! அடிபணிந்தேன் விண்ணப்பம் *

சொல்லுகேன் கேட்டருளாய் துணை மலர்க் கண் மடமானே ! *

எல்லியம் போதினிதிருத்தல் இருந்ததோர் இடவகையில் *

மல்லிகை மாமாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓரடையாளம். 2           3.10.2

கலக்கிய மாமனத்தனளாய்க் கைகேசி வரம் வேண்ட *

மலக்கிய மாமனத்தனனாய் மன்னவனும் மறாதொழியக் *

குலக்குமரா ! காடுறையப் போ என்று விடை கொடுப்ப *

இலக்குமணன் தன்னோடும் அங்கு ஏகியது ஓரடையாளம். 3  3.10.3

வாரணிந்த முலைமடவாய் ! வைதேவி ! விண்ணப்பம் *

தேரணிந்த அயோத்தியர் கோன் பெருந்தேவீ ! கேட்டருளாய் *

கூரணிந்த வேல் வலவன் குகனோடும் கங்கை தன்னில் *

சீரணிந்த தோழமையை கொண்டதும் ஓரடையாளம். 4  3.10.4  திருவயோத்தி

மானமரு மென்நோக்கி ! வைதேவி ! விண்ணப்பம் *

கானமரும் கல்லதர் போய்க் காடுறைந்த காலத்துத் *

தேனமரும் பொழில் சாரல் சித்திர கூடத்திருப்பப் *

பால்மொழியாய் ! பரதநம்பி பணிந்ததும் ஓரடையாளம். 5        3.10.5

சித்திரகூடத்திருப்பச் சிறு காக்கை முலை தீண்ட *

அத்திரமே கொண்டெறிய அனைத்துலகும் திரிந்தோடி *

வித்தகனே ! இராமாவோ ! நின்னபயம் என்றழைப்ப *

அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓரடையாளம். 6          3.10.6

மின்னொத்த நுண்ணிடையாய்! மெய்யடியேன் விண்ணப்பம் *

பொன்னொத்த மானென்று புகுந்தினிது விளையாட *

நின் அன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏகப் *

பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததும் ஓரடையாளம். 7     3.10.7

மைத்தகு மாமலர்க் குழலாய் ! வைதேவீ! விண்ணப்பம் *

ஒத்த புகழ் வானரக்கோன் உடனிருந்து நினைத்தேட *

அத்தகு சீர் அயோத்தியர் கோன் அடையாளமிவை மொழிந்தான் *

இத்தகையால் அடையாளம் ஈது அவன் கைம் மோதிரமே. 8  3.10.8  திருவயோத்தி

திக்கு நிறை புகழாளன் தீ வேள்விச் சென்ற நாள் *

மிக்க பெருஞ்சவை நடுவே வில்லிறுத்தான் மோதிரம் கண்டு *

ஒக்குமால் அடையாளம் அனுமான் ! என்று உச்சிமேல்

வைத்துக்கொண்டு* உகந்தனளால் மலர்க்குழலாள் சீதையுமே. 9      3.10.9

வாராரும் முலை மடவாள் வைதேவிதனைக் கண்டு *

சீராரும் திறலனுமன் தெரிந்துரைத்த அடையாளம் *

பாராரும் புகழ்ப் புதுவைப் பட்டர்பிரான் பாடல் வல்லார் *

ஏராரும் வைகுந்தத்து இமையவரோடு இருப்பாரே. 10               3.10.10

நான்காம் பத்து

முதல் திருமொழி

கதிராயிர மிரவி கலந்தெரித்தாலொத்த நீள்முடியன் *

எதிர் இல் பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல் *

அதிரும் கழற்பொருதோள் இரணியனாகம் பிளந்து அரியாய் *

உதிரமளைந்த கையோடிருந்தானை உள்ளவா கண்டாருளர். 1           4.1.1

நாந்தகம் சங்கு தண்டு நாணொலிச் சார்ங்கம் திருச்சக்கரம் *

ஏந்து பெருமை இராமனை இருக்குமிடம் நாடுதிரேல் *

காந்தள் முகிழ் விரல் சீதைக்காகிக் கடுஞ்சிலை சென்றிறுக்க *

வேந்தர் தலைவன் சனகராசன்தன் வேள்வியில் கண்டாருளர். 2      4.1.2

கொலையானைக் கொம்புபறித்துக் கூடலர்சேனை பொருதழியச்*

சிலையால் மராமரமெய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் *

தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரைகொண்டடைப்ப *

அலையார் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தைக் கண்டாருளர். 3       4.1.3

தோயம் பரந்த நடுவு சூழலில் தொல்லைவடிவு கொண்ட*

மாயக்குழவியதனை நாடுறில் வம்மின் சுவடுரைக்கேன் *

ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல் விடை ஏழினையும் *

வீயப்பொருது வியர்த்து நின்றானை மெய்ம்மையே கண்டாருளர். 4           4.1.4

நீரேறு செஞ்சடை நீலகண்டனும் நான்முகனும் முறையால் *

சீரேறு வாசகஞ் செய்ய நின்ற திருமாலை நாடுதிரேல் *

வாரேறு கொங்கை உருப்பிணியை வலியப்பிடித்துக் கொண்டு

தேரேற்றிச்* சேனை நடுவு போர் செய்யச் சிக்கெனக் கண்டாருளர். 5        4.1.5

பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்சப் புணர்முலை வாய்மடுக்க

வல்லானை * மாமணி வண்ணனை மருவுமிடம் நாடுதிரேல் *

பல்லாயிரம் பெருந்தேவிமாரொடு பெளவம் எறி துவரை *

எல்லாரும் சூழச்சிங்காசனத்தே இருந்தானைக் கண்டாருளர். 6         4.1.6            துவாரகை (துவரை)

வெள்ளைவிளிசங்கு வெஞ்சுடர்த் திருச்சக்கரம் ஏந்து கையன் *

உள்ளவிடம் வினவில் உமக்கு இறை வம்மின் சுவடுரைக்கேன்*

வெள்ளைப்புரவிக் குரக்கு வெல்கொடித் தேர்மிசை முன்புநின்று*

கள்ளப்படைத் துணையாகிப் பாரதம் கைசெய்யக் கண்டாருளர். 7    4.1.7

நாழிகை கூறிட்டுக்காத்து நின்ற அரசர்கள் தம்முகப்பே *

நாழிகை போகப் படை பொருதவன் தேவகிதன் சிறுவன் *

ஆழிகொண்டு அன்று இரவிமறைப்பச் சயத்திரதன் தலையைப்*

பாழிலுருளப் படைபொருதவன் பக்கமே கண்டாருளர். 8            4.1.8

மண்ணும் மலையும் மறிகடல்களும் மற்றும் யாவுமெல்லாம்*

திண்ணம் விழுங்கி உமிழ்ந்த தேவனைச் சிக்கென நாடுதிரேல் *

எண்ணற்கரியதோர் ஏனமாகி இருநிலம் புக்கு இடந்து*

வண்ணக் கருங்குழல்மாதரோடு மணந்தானைக் கண்டாருளர். 9      4.1.9

கரிய முகில் புரைமேனி மாயனைக் கண்ட சுவடுரைத்துப் *

புரவி முகம் செய்து செந்நெலோங்கி விளைகழனிப் புதுவைத் *

திருவில்பொலி மறைவாணன் பட்டர்பிரான் சொன்னமாலை பத்தும் *

பரவு மனமுடைப் பத்தருள்ளார் பரமனடி சேர்வர்களே. 10

இரண்டாம் திருமொழி

அலம்பா வெருட்டாக்கொன்று, திரியும் அரக்கரைக் *

குலம் பாழ்படுத்துக், குலவிளக்காய் நின்ற கோன்மலை *

சிலம்பார்க்க வந்து, தெய்வமகளிர்களாடும் * சீர்ச்

சிலம்பாறு பாயும் தென் திருமாலிருஞ்சோலையே. 1      4.2.1            திருமாலிருஞ்சோலை

வல்லாளன் தோளும், வாளரக்கன் முடியும் * தங்கை

பொல்லாத மூக்கும், போக்குவித்தான் பொருந்தும் மலை *

எல்லாவிடத்திலும், எங்கும் பரந்து பல்லாண்டொலி *

செல்லா நிற்கும், சீர்த் தென் திருமாலிருஞ்சோலையே. 2          4.2.2            திருமாலிருஞ்சோலை

தக்கார் மிக்கார்களைச் சஞ்சலம் செய்யும் சலவரைத் *

தெக்கா நெறியே போக்குவிக்கும், செல்வன் பொன்மலை *

எக்காலமும் சென்று சேவித்திருக்கும் அடியரை *

அக்கான்நெறியை மாற்றும், தென் மாலிருஞ்சோலையே. 3      4.2.3            திருமாலிருஞ்சோலை

ஆனாயர் கூடி, அமைத்த விழவை * அமரர்தம்

கோனார்க்கொழியக் கோவர்த்தனத்துச் செய்தான் மலை *

வானாட்டில் நின்று, மாமலர்க் கற்பகத் தொத்திழி *

தேனாறு பாயும், தென் திருமாலிருஞ்சோலையே. 4          4.2.4            திருமாலிருஞ்சோலை

ஒரு வாரணம் பணிகொண்டவன், பொய்கையில் * கஞ்சன் தன்

ஒரு வாரணம் உயிருண்டவன், சென்றுறையும் மலை *

கரு வாரணம், தன் பிடி துறந்தோடக் * கடல்வண்ணன்

திருவாணை கூறத்திரியும், தண் மாலிருஞ்சோலையே. 5          4.2.5            திருமாலிருஞ்சோலை

ஏவிற்றுச் செய்வான், ஏன்றெதிர்ந்து வந்த மல்லரை *

சாவத் தகர்த்த, சாந்தணிதோள் சதுரன் மலை *

ஆவத்தனமென்று, அமரர்களும் நன் முனிவரும் *

சேவித்திருக்கும், தென் திருமாலிருஞ்சோலையே. 6         4.2.6            திருமாலிருஞ்சோலை

மன்னர் மறுக, மைத்துனன்மார்க்கு ஒரு தேரின் மேல் *

முன்னங்கு நின்று, மோழை எழுவித்தவன் மலை *

கொன்னவில் கூர்வேல்கோன், நெடுமாறன் தென்கூடற்கோன்*

தென்னன் கொண்டாடும், தென்திருமாலிருஞ்சோலையே. 7      4.2.7            திருமாலிருஞ்சோலை

குறுகாத மன்னரைக், கூடு கலக்கி * வெங்கானிடைச்

சிறுகால் நெறியே போக்குவிக்கும், செல்வன் பொன் மலை *

அறுகால் வரிவண்டுகள், ஆயிர நாமம் சொல்லி *

சிறுகாலைப் பாடும், தென் திருமாலிருஞ்சோலையே. 8  4.2.8            திருமாலிருஞ்சோலை

சிந்தப் புடைத்துச் செங்குருதி கொண்டு * பூதங்கள்

அந்திப் பலி கொடுத்து, ஆவத்தனம் செய் அப்பன் மலை *

இந்திர கோபங்கள், எம்பெருமான் கனிவாயொப்பான் *

சிந்தும் புறவில், தென்திருமாலிருஞ்சோலையே. 9 4.2.9    திருமாலிருஞ்சோலை

எட்டுத் திசையும், எண்ணிறந்த பெருந்தேவிமார் *

விட்டு விளங்க வீற்றிருந்த விமலன் மலை *

பட்டிப் பிடிகள், பகடுறிஞ்சிச் சென்று * மாலை வாய்த்

தெட்டித் திளைக்கும், தென் திருமாலிருஞ்சோலையே. 10          4.2.10            திருமாலிருஞ்சோலை

மருதப் பொழிலணி, மாலிருஞ்சோலை மலை தன்னைக் *

கருதி யுறைகின்ற, கார்க்கடல் வண்ணனம்மான் தன்னை *

விரதம் கொண்டேத்தும், வில்லிபுத்தூர் விட்டுசித்தன் சொல் *

கருதி யுரைப்பவர், கண்ணன் கழலிணை காண்பர்களே. 11        4.2.11            திருமாலிருஞ்சோலை

மூன்றாம் திருமொழி

உருப்பிணிநங்கை தன்னை மீட்பான் தொடர்ந்தோடிச்சென்ற *

உருப்பனை யோட்டிக் கொண்டிட்டு உறைத்திட்ட உறைப்பன் மலை *

பொருப்பிடைக் கொன்றைநின்று முறியாழியும் காசும் கொண்டு *

விருப்பொடு பொன் வழங்கும் வியன் மாலிருஞ்சோலையதே. 1      4.3.1            திருமாலிருஞ்சோலை

கஞ்சனும் காளியனும், களிறும் மருதும் எருதும் *

வஞ்சனையில் மடிய, வளர்ந்த மணிவண்ணன் மலை *

நஞ்சுமிழ் நாகம் எழுந்தணவி, நளிர் மாமதியைச் *

செஞ்சுடர் நாவளைக்கும், திருமாலிருஞ்சோலையதே. 2 4.3.2            திருமாலிருஞ்சோலை

மன்னுநரகன் தன்னைச் சூழ் போகி வளைத்தெறிந்து *

கன்னிமகளிர் தம்மைக் கவர்ந்த, கடல் வண்ணன் மலை *

புன்னை செருந்தியொடு, புனவேங்கையும் கோங்கும் நின்று*

பொன்னரிமாலைகள் சூழ், பொழில் மாலிருஞ்சோலையதே. 3 4.3.3            திருமாலிருஞ்சோலை

மாவலி தன்னுடைய, மகன் வாணன் மகளிருந்த *

காவலைக் கட்டழித்த, தனிக்காளை கருதும் மலை *

கோவலர் கோவிந்தனைக், குறமாதர்கள் பண் குறிஞ்சி

பாவொலி பாடி நடம்பயில், மாலிருஞ்சோலையதே. 4     4.3.4            திருமாலிருஞ்சோலை

பல பல நாழம் சொல்லிப், பழித்த சிசுபாலன்தன்னை *

அலவலைமை தவிர்த்த அழகன், அலங்காரன் மலை*

குலமலை கோலமலை, குளிர் மாமலை கொற்றமலை *

நில மலை நீண்ட மலை, திருமாலிருஞ்சோலையதே. 5 4.3.5            திருமாலிருஞ்சோலை

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கமெல்லாம் *

ஆண்டு அங்கு நூற்றுவர்தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை *

பாண்தகு வண்டினங்கள் பண்கள் பாடி மதுப்பருகத் *

தோண்டலுடைய மலை தொல்லை மாலிருஞ்சோலையதே. 6          4.3.6            திருமாலிருஞ்சோலை

கனங்குழையாள் பொருட்டாக் கணைபாரித்து * அரக்கர் தங்கள்

இனம் கழுவேற்றுவித்த எழில் தோள் எம்மிராமன் மலை *

கனம்கொழி தெள்ளருவி வந்து சூழ்ந்து அகல் ஞால மெல்லாம் *

இனம் குழு ஆடும் மலை, எழில் மாலிருஞ்சோலையதே. 7     4.3.7            திருமாலிருஞ்சோலை

எரி சிதறும் சரத்தால், இலங்கையினைத் * தன்னுடைய

வரிசிலை வாயில் பெய்து வாய்க் கோட்டம் தவிர்த்து * உகந்த

அரையன் அமரும் மலை, அமரரொடு கோனும் சென்று *

திரிசுடர் சூழும் மலை, திருமாலிருஞ்சோலையதே. 8       4.3.8            திருமாலிருஞ்சோலை

கோட்டுமண் கொண்டிடந்து குடங்கையில் மண் கொண்டளந்து *

மீட்டும் அது உண்டுமிழ்ந்து விளையாடும் விமலன் மலை *

ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கு அடியுறை யென்று *

ஓட்டரும் தண் சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே. 9          4.3.9            திருமாலிருஞ்சோலை

ஆயிரம் தோள் பரப்பி, முடியாயிரம் மின்னிலக *

ஆயிரம் பைந்தலைய, அனந்தசயனன் ஆளும் மலை *

ஆயிரம் ஆறுகளும், சுனைகள் பலவாயிரமும் *

ஆயிரம் பூம்பொழிலுமுடை, மாலிருஞ்சோலையதே. 10  4.3.10            திருமாலிருஞ்சோலை

மாலிருஞ்சோலை யென்னும், மலையை யுடைய மலையை *

நாலிரு மூர்த்தி தன்னை, நால் வேதக் கடலமுதை *

மேலிருங் கற்பகத்தை, வேதாந்த விழுப்பொருளின் *

மேலிருந்த விளக்கை * விட்டுசித்தன், விரித்தனனே. 11  4.3.11            திருமாலிருஞ்சோலை

நான்காம் திருமொழி

நாஅகாரியம் சொல்லிலாதவர் நாடொறும் விருந்தோம்புவார் *

தேவ காரியம் செய்து வேதம் பயின்று வாழ் திருக்கோட்டியூர் *

மூவர் காரியமும் திருத்தும் முதல்வனைச் சிந்தியாத * அப்

பாவகாரிகளைப் படைத்தவன் எங்ஙனம் படைத்தான் கொலோ ! 1 4.4.1            திருக்கோட்டியூர்

குற்றமின்றிக் குணம்பெருக்கிக் குருக்களுக்கு அனுகூலராய்ச் *

செற்றமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ் திருக்கோட்டியூர் *

துற்றியேழுலகுண்ட தூமணிவண்ணன்தன்னைத் தொழாதவர் *

பெற்ற தாயர் வயிற்றினைப் பெருநோய் செய்வான் பிறந்தார்களே. 2        4.4.2            திருக்கோட்டியூர்

வண்ண நல் மணியும் மரதகமும் அழுத்தி நிழலெழும் *

திண்ணை சூழ் திருக்கோட்டியூர்த் திருமாலவன் திருநாமங்கள் *

எண்ணக்கண்ட விரல்களால் இறைப்பொழுதும் எண்ணகிலாது போய் *

உண்ணக் கண்ட தம் ஊத்தை வாய்க்குக் கவள முந்துகின்றார்களே. 3     4.4.3            திருக்கோட்டியூர்

உரகமெல்லணையான்கையில் உறைசங்கம்போல்மடஅன்னங்கள்*

நிரை கணம் பரந்தேறும் செங்கமல வயல் திருக்கோட்டியூர் *

நரக நாசனை நாவிற் கொண்டழையாத மானிட சாதியர் *

பருகு நீரும் உடுக்கும் கூறையும் பாவம் செய்தனதாம் கொலோ. 4            4.4.4            திருக்கோட்டியூர்

ஆமையின்முதுகத்திடைக் குதிகொண்டு தூமலர்சாடிப்போய்த் *

தீமை செய்து இளவாளைகள் விளையாடு நீர்த் திருக்கோட்டியூர் *

நேமி சேர் தடங்கையினானை நினைப்பிலா வலி நெஞ்சுடை *

பூமிபாரங்கள் உண்ணும் சோற்றினை வாங்கிப் புல்லைத் திணிமினே. 5  4.4.5            திருக்கோட்டியூர்

பூதம் ஐந்தொடு வேள்வி ஐந்து புலன்கள் ஐந்து பொறிகளால் *

ஏதமொன்றுமிலாத வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் *

நாதனை நரசிங்கனை நவின்றேத்துவார்கள் உழக்கிய *

பாத தூளி படுதலால் இவ்வுலகம் பாக்கியம் செய்ததே. 6         4.4.6            திருக்கோட்டியூர்

குருந்த மொன்றொசித்தானொடும் சென்று

கூடியாடி விழாச் செய்து *

திருந்து நான் மறையோர்

இராப்பகல் ஏத்தி வாழ் திருக்கோட்டியூர் *

கருந்தடமுகில் வண்ணனைக்

கடைக் கொண்டு கைதொழும் பத்தர்கள் *

இருந்த ஊரில் இருக்கும் மானிடர்

எத்தவங்கள் செய்தார் கொலோ ! 7        4.4.7    திருக்கோட்டியூர்

நளிர்ந்த சீலன் நயாசலன்

அபிமான துங்கனை * நாடொறும்

தெளிந்த செல்வனைச் சேவகங் கொண்ட

செங்கண்மால் திருக்கோட்டியூர் *

குளிர்ந்துறைகின்ற கோவிந்தன்

குணம் பாடுவார் உள்ள நாட்டினுள்*

விளைந்த தானியமும் இராக்கதர்

மீது கொள்ளகிலார்களே. 8   4.4.8    திருக்கோட்டியூர்

கொம்பினார் பொழில் வாய்க் குயிலினம்

கோவிந்தன் குணம் பாடு சீர்ச் *

செம்பொனார் மதிள்சூழ்

செழுங் கழனியுடைத் திருக்கோட்டியூர் *

நம்பனை நரசிங்கனை

நவின்றேத்துவார்களைக் கண்டக்கால் *

எம்பிரான் தன சின்னங்கள்

இவர் இவர் என்று ஆசைகள் தீர்வனே. 9        4.4.9    திருக்கோட்டியூர்

காசின் வாய்க்கரம் விற்கிலும்

கரவாது மாற்றிலி சோறிட்டுத் *

தேசவார்த்தை படைக்கும்

வண்கையினார்கள் வாழ் திருக்கோட்டியூர் *

கேசவா! புருடோத்தமா!

கிளர் சோதியாய் ! குறளா ! என்று *

பேசுவார் அடியார்கள்

எந்தம்மை விற்கவும் பெறுவார்களே. 10           4.4.10  திருக்கோட்டியூர்

சீதநீர் புடைசூழ் செழுங்கழனியுடைத் திருக்கோட்டியூர்*

ஆதியான் அடியாரையும் அடிமையின்றித் திரிவாரையும் *

கோதில் பட்டர்பிரான் குளிர் புதுவைமன் விட்டுசித்தன் சொல்*

ஏதமின்றி உரைப்பவர் இருடீகேசனுக்காளரே. 11      4.4.11            திருக்கோட்டியூர்

ஐந்தாம் திருமொழி

ஆசைவாய்ச் சென்ற சிந்தையராகி

அன்னை அத்தன் என் புத்திரர் பூமி *

வாசவார்குழலாளென்று மயங்கி

மாளுமெல்லைக்கண் வாய் திறவாதே *

கேசவா! புருடோத்தமா ! என்றும்

கேழலாகிய கேடிலீ ! என்றும் *

பேசுவாரவர் எய்தும் பெருமை

பேசுவான் புகில் நம் பரமன்றே. 1            4.5.1

சீயினால் செறிந்தேறியப் புண்மேல்

செற்றலேறிக் குழம்பிருந்து * எங்கும்

ஈயினால் அரிப்புண்டு மயங்கி

எல்லைவாய்ச் சென்று சேர்வதன் முன்னம்*

வாயினால் நமோ நாரணாவென்று

மத்தகத்திடைக் கைகளைக் கூப்பிப் *

போயினால் பின்னை இத்திசைக்கு என்றும்

பிணைக்கொடுக்கிலும் போகவொட்டாரே. 2   4.5.2

சோர்வினால் பொருள் வைத்ததுண்டாகில்

சொல்லு சொல் என்று சுற்றுமிருந்து *

ஆர் வினவிலும் வாய் திறவாதே

அந்த காலம் அடைவதன் முன்னம் *

மார்வமென்பதோர் கோயிலமைத்து

மாதவனென்னும் தெய்வத்தை நாட்டி *

ஆர்வமென்பதோர் பூவிட வல்லார்க்கு

அரவதண்டத்தில் உய்யலுமாமே. 3         4.5.3

மேலெழுந்ததோர் வாயுக்கிளர்ந்து

மேல் மிடற்றினை உள்ளெழ வாங்கிக் *

காலும் கையும் விதிர் விதிர்த்தேறிக்

கண் உறக்கமதாவதன் முன்னம் *

மூலமாகிய ஒற்றை யெழுத்தை

மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி *

வேலை வண்ணனை மேவுதிராகில்

விண்ணகத்தினில் மேவலுமாமே. 4        4.5.4

மடி வழிவந்து நீர் புலன் சோர

வாயிலட்டிய கஞ்சியும் மீண்டே *

கடை வழிவரக் கண்டம் அடைப்பக்

கண் உறக்கமதாவதன் முன்னம் *

துடை வழி உம்மை நாய்கள் கவரா

சூலத்தால் உம்மைப் பாய்வதும் செய்யார் *

இடைவழியில் நீர் கூறையும் இழவீர்

இருடீகேசனென்று ஏத்தவல்லீரே ! 5      4.5.5

அங்கம் விட்டு அவை ஐந்துமகற்றி

ஆவி மூக்கினில் சோதித்த பின்னை *

சங்கம் விட்டவர் கையை மறித்துப்

பையவே தலை சாய்ப்பதன் முன்னம் *

வங்கம் விட்டுலவும் கடற்பள்ளி மாயனை

மதுசூதனை மார்பில் தங்க விட்டு வைத்து *

ஆவதோர் கருமம் சாதிப்பார்க்கு

என்றும் சாதிக்கலாமே. 6      4.5.6

தென்னவன் தமர் செப்பமிலாதார்

சேவதக்குவார் போலப் புகுந்து *

பின்னும் வன் கயிற்றால் பிணித்தெற்றிப்

பின் முன்னாக இழுப்பதன் முன்னம் *

இன்னவன் இணையானென்று சொல்லி

எண்ணி உள்ளத்திருளற நோக்கி *

மன்னவன் மதுசூதனனென்பார்

வானகத்து மன்றாடிகள் தாமே. 7 4.5.7

கூடிக் கூடி உற்றார்கள் இருந்து

குற்றம் நிற்க நற்றங்கள் பறைந்து *

பாடிப்பாடி ஓர் பாடையிலிட்டு

நரிப்படைக்கு ஒரு பாகுடம் போலே *

கோடி மூடி எடுப்பதன் முன்னம்

கெளத்துவ முடைக் கோவிந்தனோடு *

கூடியாடிய உள்ளத்தரானால்

குறிப்பிடம் கடந்து உய்யலுமாமே. 8      4.5.8

வாயொரு பக்கம் வாங்கி வலிப்ப

வார்ந்த நீர்க்குழிக்கண்கள் மிழற்றத் *

தாயொரு பக்கம் தந்தையொரு பக்கம்

தாரமும் ஒரு பக்கம் அலற்றத் *

தீ ஒரு பக்கம் சேர்வதன் முன்னம்

செங்கண்மாலொடும் சிக்கெனச் சுற்றமாய் *

ஒரு பக்கம் நிற்க வல்லார்க்கு

அரவதண்டத்தில் உய்யலுமாமே. 9         4.5.9

செத்துப் போவதோர் போது நினைந்து

செய்யும் செய்கைகள் தேவபிரான் மேல் *

பத்தராய் இறந்தார் பெறும் பேற்றைப்

பாழித்தோள் விட்டுசித்தன் புத்தூர்க் கோன் *

சித்தம் நன்கொருங்கித் திருமாலைச்

செய்த மாலை இவை பத்தும் வல்லார் *

சித்தம் நன்கொருங்கித் திருமால் மேல்

சென்ற சிந்தை பெறுவர் தாமே. 10          4.5.10

ஆறாம் திருமொழி

காசும் கறையுடைக் கூறைக்கும், அங்கோர் கற்றைக்கும்

ஆசையினால் * அங்கு அவத்தப் பேரிடும் ஆதர்காள் *

கேசவன் பேரிட்டு, நீங்கள் தேனித்து இருமினோ *

நாயகன் நாரணன் தம் அன்னை, நரகம் புகாள். 1    4.6.1

அங்கொரு கூறை, அரைக்கு உடுப்பதன் ஆசையால்*

மங்கிய மானிட சாதியின், பேரிடும் ஆதர்காள்*

செங்கணெடுமால் ! சிரீதரா ! என்று அழைத்தக்கால் *

நங்கைகாள் ! நாரணன் தம் அன்னை, நரகம் புகாள். 2     4.6.2

உச்சியில் எண்ணெயும், சுட்டியும் வளையும் உகந்து *

எச்சம் பொலிந்தீர்காள் !, என்செய்வான் பிறர்பேரிட்டீர் ?*

பிச்சை புக்காகிலும், எம்பெருமான் திருநாமமே

நச்சுமின் * நாரணன் தம் அன்னை, நரகம் புகாள். 3           4.6.3

மானிட சாதியில் தோன்றிற்று, ஓர் மானிட சாதியை *

மானிட சாதியின் பேரிட்டால், மறுமைக்கில்லை *

வானுடை மாதவா !, கோவிந்தா ! என்று அழைத்தக்கால்*

நானுடை நாரணன் தம் அன்னை, நரகம் புகாள். 4. 4.6.4

மலமுடை ஊத்தையில் தோன்றிற்று, ஓர் மலஊத்தையை *

மலமுடை ஊத்தையின் பேரிட்டால், மறுமைக்கில்லை *

குலமுடைக் கோவிந்தா! கோவிந்தா! என்றழைத்தக்கால் *

நலமுடை நாரணன் தம் அன்னை, நரகம் புகாள். 5            4.6.5

நாடும் நகரும் அறிய, மானிடப் பேரிட்டுக் *

கூடி அழுங்கிக், குழியில் வீழ்ந்து வழுக்காதே *

சாடு இறப் பாய்ந்த தலைவா !, தாமோதரா ! என்று

நாடுமின்* நாரணன் தம் அன்னை, நரகம் புகாள். 6 4.6.6

மண்ணில் பிறந்து மண்ணாகும், மானிடப் பேரிட்டு * அங்கு

எண்ண மொன்றின்றி யிருக்கும், ஏழை மனிசர்காள் ! *

கண்ணுக்கினிய, கருமுகில் வண்ணன் நாமமே

நண்ணுமின் * நாரணன் தம் அன்னை, நரகம் புகாள். 7    4.6.7

நம்பி பிம்பி என்று, நாட்டு மானிடப் பேரிட்டால் *

நம்பும் பிம்பும் எல்லாம், நாலு நாளில் அழுங்கிப் போம் *

செம்பெருந் தாமரைக் கண்ணன், பேரிட்டழைத்தக்கால் *

நம்பிகாள் ! நாரணன் தம் அன்னை, நரகம் புகாள். 8          4.6.8

ஊத்தைக் குழியில், அமுதம் பாய்வது போல் * உங்கள்

மூத்திரப் பிள்ளையை, என்முகில் வண்ணன் பேரிட்டுக் *

கோத்துக் குழைத்துக் குணால மாடித் திரிமினோ *

நாத்தகு நாரணன் தம் அன்னை, நரகம் புகாள். 9     4.6.9

சீரணி மால், திருநாமமே இடத் தேற்றிய *

வீரணி தொல் புகழ், விட்டுசித்தன் விரித்த *

ஓரணியொண்தமிழ், ஒன்பதோடொன்றும் வல்லவர் *

பேரணி வைகுந்தத்து, என்றும் பேணியிருப்பரே. 10            4.6.10

ஏழாம் திருமொழி

தங்கையை மூக்கும் தமையனைத் தலையும்

தடிந்த * எம் தாசரதிபோய்

எங்கும் தன் புகழாவிருந்து அரசாண்ட

எம் புருடோத்தமனிருக்கை *

கங்கை கங்கை என்ற வாசகத்தாலே

கடுவினை களைந்திடு கிற்கும் *

கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற

கண்டமென்னும் கடிநகரே. 1           4.7.1    திருக்கண்டங்கடிநகர் (தேவப்ரய

சலம்பொதி யுடம்பில் தழலுமிழ் பேழ் வாய்ச்

சந்திரன் வெங்கதிர் அஞ்ச *

மலர்ந்தெழுந் தணவு மணிவண்ண னுருவின்

மால் புருடோத்தமன் வாழ்வு *

நலம்திகழ் சடையான் முடிக்கொன்றை மலரும்

நாரணன் பாதத் துழாயும் *

கலந்திழி புனலால் புகர் படு கங்கைக்

கண்டமென்னும் கடிநகரே. 2           4.7.2    திருக்கண்டங்கடிநகர் (தேவப்ரய

அதிர்முகமுடைய வலம்புரி குமிழ்த்து

அழலுமிழ் ஆழி கொண்டெறிந்து *

அங்கு எதிர் முகவசுரர் தலைகளை யிடறும்

எம் புருடோத்தமனிருக்கை *

சதுமுகன் கையில் சதுப்புயன்தாளில்

சங்கரன் சடையினில்தங்கிக் *

கதிர்முக மணிகொண்டிழி புனல் கங்கைக்

கண்டமென்னும் கடி நகரே. 3         4.7.3    திருக்கண்டங்கடிநகர் (தேவப்ரய

இமையவர் இறுமாந்திருந்து அரசாள

ஏற்று வந்தெதிர் பொரு சேனை *

நமபுரம் நணுக நாந்தகம் விசிறும்

நம் புருடோத்தமன் நகர் தான் *

இமவந்தம் தொடங்கி இருங்கடலளவும்

இருகரை உலகிரைத்தாட *

கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல்

கண்டமென்னும் கடிநகரே. 4           4.7.4    திருக்கண்டங்கடிநகர் (தேவப்ரய

உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும்

ஒண்சுடராழியும் சங்கும் *

மழுவொடு வாளும் படைக்கல முடைய

மால் புருடோத்தமன் வாழ்வு *

எழுமையும் கூடி ஈண்டிய பாவம்

இறைப் பொழுதளவினில் எல்லாம் *

கழுவிடும் பெருமைக் கங்கையின் கரை மேல்

கண்டமென்னும் கடிநகரே. 5           4.7.5    திருக்கண்டங்கடிநகர் (தேவப்ரய

தலைப்பெய்து குமுறிச்சலம் பொதி மேகம்

சல சல பொழிந்திடக் கண்டு *

மலைப் பெருங்குடையால் மறைத்தவன் மதுரை

மால் புருடோத்தமன் வாழ்வு *

அலைப்புடைத் திரை வாய் அருந்தவ முனிவர்

அவபிரதம் குடைந்தாடக் *

கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரை மேல்

கண்டமென்னும் கடிநகரே. 6           4.7.6    திருக்கண்டங்கடிநகர் (தேவப்ரய

விற்பிடித்திறுத்து வேழத்தை முறுக்கி

மேலிருந்தவன் தலை சாடி *

மற்பொருது எழப் பாய்ந்து அரையனை யுதைத்த

மால் புருடோத்தமன் வாழ்வு *

அற்புத முடைய ஐராவத மதமும்

அவரிளம் படியரொண் சாந்தும் *

கற்பக மலரும் கலந்திழி கங்கைக்

கண்டமென்னும் கடிநகரே. 7           4.7.7    திருக்கண்டங்கடிநகர் (தேவப்ரய

திரைபொரு கடல் சூழ் திண்மதிள் துவரை வேந்து

தன் மைத்துனன் மார்க்காய் *

அரசினை அவிய அரசினை யருளும்

அரி புருடோத்தம னமர்வு *

நிரை நிரையாக நெடியன யூபம்

நிரந்தரம் ஒழுக்கு விட்டு * இரண்டு

கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கைக்

கண்டமென்னும் கடிநகரே. 8           4.7.8    திருக்கண்டங்கடிநகர் (தேவப்ரய,

துவாரகை (துவரை)

வடதிசை மதுரை சாளக்கிராமம்

வைகுந்தம் துவரை அயோத்தி

இடமுடை வதரி யிடவகை யுடைய

எம் புருடோத்தமனிருக்கை*

தடவரை யதிரத் தரணி விண்டு இடியத்

தலைப் பற்றிக் கரை மரம் சாடிக்*

கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக்

கண்டமென்னும் கடிநகரே. 9           4.7.9    திருவயோத்தி,

சாளக்கிராமம்,

வதரியாச்சிராமம்,

திருக்கண்டங்கடிநகர் (தேவப்ரய,

துவாரகை (துவரை),

வடமதுரை,

பரமபதம்

மூன்றெழுத்ததனை மூன்றெழுத்ததனால்

மூன்றெழுத்தாக்கி * மூன்றெழுத்தை

ஏன்று கொண்டிருப்பார்க்கு இரக்கம் நன்குடைய

எம் புருடோத்தம னிருக்கை *

மூன்றடி நிமிர்த்து மூன்றினில் தோன்றி

மூன்றினில் மூன்றுரு வானான் *

கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரைமேல்

கண்டமென்னும் கடிநகரே. 10         4.7.10  திருக்கண்டங்கடிநகர் (தேவப்ரய

பொங்கொலி கங்கைக் கரைமலிகண்டத்துறை

புருடோத்தமனடிமேல் *

வெங்கலி நலியா வில்லிபுத்தூர்க்கோன்

விட்டுசித்தன் விருப்புற்றுத் *

தங்கிய அன்பால் செய்தமிழ் மாலை

தங்கிய நாவுடையார்க்குக்*

கங்கையில் திருமால் கழலிணைக்கீழே

குளித்திருந்த கணக்காமே. 11         4.7.11  திருக்கண்டங்கடிநகர் (தேவப்ரய

எட்டாம் திருமொழி

மாதவத்தோன் புத்திரன் போய் மறிகடல் வாய் மாண்டானை *

ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தானூர் *

தோதவத்தித் தூய்மறையோர் துறைபடியத் துளும்பி எங்கும்

போதில் வைத்த தேன் சொரியும் புனலரங்க மென்பதுவே. 1  4.8.1    திருவரங்கம்

பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும் *

இறைப்பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படுத்து உறைப்பனூர் *

மறைப் பெருந்தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை அளித்திருப்பார் *

சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்க மென்பதுவே. 2        4.8.2    திருவரங்கம்

மருமகன்தன் சந்ததியை உயிர்மீட்டு மைத்துனன்மார் *

உருமகத்தே வீழாமே குருமுகமாய்க் காத்தானூர் *

திருமுகமாய்ச் செங்கமலம் திருநிறமாய்க் கருங்குவளை *

பொரு முகமாய் நின்றலரும் புனலரங்க மென்பதுவே. 3           4.8.3    திருவரங்கம்

கூன் தொழுத்தை சிதகுரைப்பக்

கொடியவள் வாய்க் கடிய சொல் கேட்டு *

ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிய *

கான்தொடுத்த நெறி போகிக் கண்டகரைக் களைந்தானூர் *

தேன் தொடுத்த மலர்ச்சோலைத் திருவரங்க மென்பதுவே. 4  4.8.4    திருவரங்கம்

பெரு வரங்களவை பற்றிப் பிழக்குடைய இராவணனை *

உருவரங்கப் பொருதழித்து இவ்வுலகினைத் கண் பெறுத்தானூர் *

குரவு அரும்பக் கோங்கு அலரக் குயில் கூவும் குளிர் பொழில் சூழ் *

திருவரங்க மென்பதுவே என் திருமால் தான் சேர்விடமே. 5   4.8.5    திருவரங்கம்

கீழுலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே *

ஆழி விடுத்து அவருடைய கருவழித்த அழிப்பனூர் *

தாழை மடலூடுரிஞ்சித் தவள வண்ணப் பொடி அணிந்து * யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே. 6          4.8.6    திருவரங்கம்

கொழுப்புடைய செழுங்குருதி கொழித்திழிந்து குமிழ்த்தெறியப் *

பிழக்குடைய அசுரர்களைப் பிணம் படுத்த பெருமானூர் *

தழுப்பரிய சந்தனங்கள் தடவரை வாய் ஈர்த்துக் கொண்டு *

தெழிப்புடைய காவிரி வந்து அடிதொழும் சீரரங்கமே. 7 4.8.7    திருவரங்கம்

வல்லெயிற்றுக் கேழலுமாய் வாளெயிற்றுச் சீயமுமாய் *

எல்லை யில்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தானூர் *

எல்லியம் போது இருஞ்சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி*

மல்லிகை வெண் சங்கூதும் மதிளரங்க மென்பதுவே. 8 4.8.8    திருவரங்கம்

குன்றாடு கொழுமுகில் போல்

குவளைகள் போல் குரைகடல் போல் *

நின்றாடு கணமயில் போல் நிறமுடைய நெடுமாலூர் *

குன்றூடு பொழில் நுழைந்து கொடியிடையார் முலையணவி *

மன்றூடு தென்றலுலாம் மதிளரங்க மென்பதுவே. 9          4.8.9    திருவரங்கம்

பருவரங்க ளவை பற்றிப் படையாலித் தெழுந்தானைச் *

செருவரங்கப் பொருதழித்த திருவாளன் திருப்பதி மேல் *

திருவரங்கத் தமிழ் மாலை விட்டுசித்தன் விரித்தன கொண்டு *

இருவரங்க மெரித்தானை ஏத்தவல்லா ரடியோமே. 10     4.8.10  திருவரங்கம்

ஒன்பதாம் திருமொழி

மரவடியைத் தம்பிக்கு வான் பணையம்

வைத்துப் போய் * வானோர் வாழச்

செருவுடைய திசைக் கருமம் திருத்தி வந்து

உலகாண்ட திருமால் கோயில் *

திருவடிதன் திருவுருவும்

திருமங்கை மலர் கண்ணும் காட்டி நின்று *

உருவுடைய மலர் நீலம்

காற்றாட்ட ஓ ! சலிக்கும் ஒளியரங்கமே. 1   4.9.1    திருவரங்கம்

தன்னடியார் திறத்தகத்துத்

தாமரையாளாகிலும் சிதகு உரைக்குமேல் *

என்னடியார் அது செய்யார்

செய்தாரேல் நன்று செய்தார் என்பர் போலும் *

மன்னுடைய விபீடணற்கா

மதிள் இலங்கைத் திசை நோக்கி மலர்க் கண் வைத்த*

என்னுடைய திருவரங்கற்கன்றியும்

மற்றொருவர்க்கு ஆளாவரே? 2      4.9.2    திருவரங்கம்

கருளுடைய பொழில் மருதும்

கதக்களிறும் பிலம்பனையும் கடியமாவும் *

உருளுடைய சகடினையும் மல்லரையும்

உடையவிட்டு ஓசை கேட்டான் *

இருளகற்றும் எரிகதிரோன்

மண்டலத்தூடு ஏற்றி வைத்து ஏணி வாங்கி *

அருள் கொடுத்திட்டு அடியவரை

ஆட்கொள்வான் அமருமூர் அணியரங்கமே. 3          4.9.3    திருவரங்கம்

பதினாறா மாயிரவர்

தேவிமார் பணிசெய்யத் * துவரை யென்னும்

அதில் நாயகராகி வீற்றிருந்த

மணவாளர் மன்னுகோயில் *

புதுநாண்மலர்க் கமலம் எம்பெருமான்

பொன் வயிற்றில் பூவே போல்வான் *

பொதுநாயகம் பாவித்து இறுமாந்து

பொன்சாய்க்கும் புனலரங்கமே. 4 4.9.4    திருவரங்கம்,

துவாரகை (துவரை)

ஆமையாய்க் கங்கையாய்

ஆழ்கடலாய் அவனியாய் அருவரைகளாய் *

நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய்த்

தக்கணையாய்த் தானுமானான் *

சேமமுடை நாரதனார் சென்று சென்று

துதித்திறைஞ்சக் கிடந்தான் கோயில் *

பூமருவிப் புள்ளினங்கள்

புள்ளரையன் புகழ்குழறும் புனலரங்கமே. 5   4.9.5    திருவரங்கம்

மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து

அவர்களையே மன்னராக்கி *

உத்தரைதன் சிறுவனையும் உய்யக்கொண்ட

உயிராளன் உறையும் கோயில் *

பத்தர்களும் பகவர்களும்

பழமொழிவாய் முனிவர்களும் பரந்த நாடும் *

சித்தர்களும் தொழுதிறைஞ்சத்

திசை விளக்காய் நிற்கின்ற திருவரங்கமே. 6           4.9.6    திருவரங்கம்

குறட்பிரமசாரியாய்

மாவலியைக் குறும்பதக்கி அரசு வாங்கி*

இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை

கொடுத்து உகந்த எம்மான் கோயில் *

எறிப்புடைய மணிவரை மேல்

இளஞாயிறு எழுந்தாற்போல் அரவணையின் வாய்*

சிறப்புடைய பணங்கள் மிசைச்

செழுமணிகள் விட்டெறிக்கும் திருவரங்கமே. 7      4.9.7    திருவரங்கம்

உரம் பற்றி இரணியனை

உகிர் நுதியால் ஒள்ளிய மார்புறைக்க ஊன்றிச் *

சிரம் பற்றி முடியிடியக் கண் பிதுங்க

வாயலரத் தெழித்தான் கோயில் *

உரம் பெற்ற மலர்க் கமலம்

உலகளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட *

வரம்புற்ற கதிர்ச் செந்நெல்

தாள் சாய்த்துத் தலை வணக்கும் தண்ணரங்கமே. 8        4.9.8    திருவரங்கம்

தேவுடைய மீனமாய் ஆமையாய்

ஏனமாய் அரியாய்க் குறளாய்

மூவுருவின் இராமனாய்க் கண்ணனாய்க்

கற்கியாய் முடிப்பான் கோயில் *

சேவலொடு பெடை யன்னம்

செங்கமல மலரேறி ஊசலாடிப் *

பூவணை மேல் துதைந்து எழு செம்பொடியாடி

விளையாடும் புனலரங்கமே. 9      4.9.9    திருவரங்கம்

செருவாளும் புள்ளாளன் மண்ணாளன்

செருச் செய்யும் நாந்தக மென்னும்

ஒரு வாளன் * மறையாளன்

ஓடாத படையாளன் விழுக்கையாளன் *

இரவாளன் பகலாளன் என்னையாளன்

ஏழுலகப் பெரும் புரவாளன் *

திருவாளன் இனிதாகத்

திருக்கண்கள் வளர்கின்ற திருவரங்கமே, 10   4.9.10  திருவரங்கம்

கைந்நாகத்திடர் கடிந்த

கனலாழிப் படையுடையான் கருதும் கோயில் *

தென்னாடும் வடநாடும் தொழ நின்ற

திருவரங்கம் திருப்பதியின் மேல் *

மெய்ந்நாவன் மெய்யடியான் விட்டுசித்தன்

விரித்த தமிழுரைக்க வல்லார் *

எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ்

இணை பிரியா திருப்பர் தாமே. 11           4.9.11  திருவரங்கம்

பத்தாம் திருமொழி

துப்புடையாரை அடைவது எல்லாம்

சோர்விடத்துத் துணையாவரென்றே

ஒப்பிலேன்* ஆகிலும் நின்னடைந்தேன்

ஆனைக்கு நீ அருள் செய்தமையால் *

எய்ப்பென்னை வந்து நலியும் போது

அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன் *

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்

அரங்கத்தரவணைப் பள்ளியானே ! 1     4.10.1  திருவரங்கம்

சாமிடத்து என்னைக் குறிக்கொள் கண்டாய்

சங்கொடு சக்கரமேந்தினானே ! *

நா மடித்து என்னை அனேக தண்டம்

செய்வதா நிற்பர் நமன் தமர்கள் *

போமிடத்து உன் திறத்து எத்தனையும்

புகாவண்ணம் நிற்பதோர் மாயை வல்லை *

ஆமிடத்தே உன்னைச் சொல்லி வைத்தேன்

அரங்கத்தரவணைப் பள்ளியானே ! 2     4.10.2  திருவரங்கம்

எல்லையில் வாசல் குறுகச் சென்றால்

எற்றி நமன் தமர் பற்றும் போது *

நில்லுமின் என்னும் உபாய மில்லை

நேமியும் சங்கமும் ஏந்தினானே ! *

சொல்லலாம் போதே உன் நாமமெல்லாம்

சொல்லினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும் *

அல்லல் படா வண்ணம் காக்க வேண்டும்

அரங்கத்தரவணைப் பள்ளியானே ! 3     4.10.3  திருவரங்கம்

ஒற்றை விடையனும் நான்முகனும்

உன்னை யறியாப் பெருமையோனே ! *

முற்ற உலகெல்லாம் நீயேயாகி

மூன்றெழுத்தாய முதல்வனேயோ ! *

அற்றது வாணாள் இவற்கென்றெண்ணி

அஞ்ச நமன் தமர் பற்றலுற்ற *

அற்றைக்கு நீ என்னைக் காக்க வேண்டும்

அரங்கத்தரவணைப் பள்ளியானே ! 4     4.10.4  திருவரங்கம்

பையரவினணைப் பாற்கடலுள்

பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி ! *

உய்ய உலகு படைக்க வேண்டி

உந்தியில் தோற்றினாய் ! நான்முகனை *

வைய மனிசரைப் பொய்யென்றெண்ணிக்

காலனையும் உடனே படைத்தாய் ! *

ஐய! இனி என்னைக் காக்க வேண்டும்

அரங்கத்தரவணைப் பள்ளியானே ! 5     4.10.5  திருவரங்கம்,

திருப்பாற்கடல்

தண்ணனவில்லை நமன் தமர்கள்

சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர் *

மண்ணொடு நீரும் எரியும் காலும்

மற்றும் ஆகாசமுமாகி நின்றாய் ! *

எண்ணலாம் போதே உன் நாமமெல்லாம்

எண்ணினேன் என்னைக் குறிக்கொண்டு என்றும்

அண்ணலே! நீ என்னைக் காக்க வேண்டும்

அரங்கத்தரவணைப் பள்ளியானே ! 6     4.10.6  திருவரங்கம்

செஞ்சொல் மறைப் பொருளாகி நின்ற

தேவர்கள் நாயகனே! எம்மானே ! *

எஞ்சலில் என்னுடை இன்னமுதே !

ஏழுலகு முடையாய் ! என்னப்பா ! *

வஞ்ச உருவின் நமன்தமர்கள்

வலிந்து நலிந்து என்னைப் பற்றும் போது *

அஞ்சலம் என்றென்னைக் காக்க வேண்டும்

அரங்கத்தரவணைப் பள்ளியானே ! 7     4.10.7  திருவரங்கம்

நான் ஏதும் உன் மாயம் ஒன்றறியேன்

நமன் தமர் பற்றி நலிந்திட்டு * இந்த

ஊனே புகேயென்று மோதும் போது

அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன் *

வானேய் வானவர் தங்களீசா !

மதுரைப் பிறந்த மாமாயனே! * என்

ஆனாய் ! நீ என்னைக் காக்க வேண்டும்

அரங்கத்தரவணைப் பள்ளியானே ! 8     4.10.8  திருவரங்கம்,

வடமதுரை

குன்றெடுத்து ஆனிரை காத்த ஆயா !

கோ நிரை மேய்த்தவனே! எம்மானே ! *

அன்று முதல் இன்றறுதியா

ஆதியஞ்சோதி மறந்தறியேன் *

நன்றும் கொடிய நமன்தமர்கள்

நலிந்து வலிந்தென்னைப் பற்றும் போது *

அன்றங்கு நீ என்னைக் காக்க வேண்டும்

அரங்கத்தரவணைப் பள்ளியானே ! 9     4.10.9  திருவரங்கம்

மாயவனை மதுசூதனனை மாதவனை மறையோர்கள் ஏத்தும்

ஆயர்களேற்றினை * அச்சுதனை அரங்கத்தரவணைப் பள்ளியானை *

வேயர் புகழ் வில்லிபுத்தூர்மன் விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்*

தூயமனத்தனராகி வல்லார் தூமணி வண்ணனுக்காளர் தாமே. 10    4.10.10            திருவரங்கம்

ஐந்தாம் பத்து

முதல் திருமொழி

வாக்குத் தூய்மை யிலாமையினாலே

மாதவா ! உன்னை வாய்க் கொள்ள மாட்டேன் *

நாக்கு நின்னை யல்லால் அறியாது

நானதஞ்சுவன் என் வசமன்று *

மூர்க்குப் பேசுகின்றா னிவனென்று

முனிவாயேலும் என் நாவினுக்கு ஆற்றேன் *

காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர்

காரணா ! கருளக் கொடியானே! 1           5.1.1

சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன்

சங்கு சக்கர மேந்து கையானே ! *

பிழைப்பராகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது

பெரியோர் கடனன்றே? *

விழிக்கும் கண்ணிலேன் நின்கண் மற்றல்லால்

வேறொருவரோடு என் மனம் பற்றாது *

உழைக்கு ஓர் புள்ளி மிகையன்று கண்டாய்

ஊழியேழுலகுண்டு உமிழ்ந்தானே ! 2    5.1.2

நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன்

நாரணா ! என்னும் இத்தனை யல்லால் *

புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப்

புகழ்வானன்று கண்டாய் திருமாலே ! *

உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன்

ஓவாதே நமோ நாரணா என்பன் *

வன்மையாவது உன் கோயிலில் வாழும்

வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே! 3     5.1.3

நெடுமையால் உலகேழு மளந்தாய் !

நின்மலா ! நெடியாய் ! * அடியேனைக்

குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா

கூறை சோறு இவை வேண்டுவதில்லை *

அடிமை யென்னும் அக்கோயின்மையாலே

அங்கங்கே அவை போதரும் கண்டாய் *

கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின் தாதை

கோத்த வன்தளை கோள் விடுத்தானே ! 4     5.1.4

தோட்டம் இல்லவள் ஆத் தொழு ஓடை

துடவையும் கிணறும் இவை யெல்லாம் *

வாட்டமின்றி உன் பொன்னடிக் கீழே

வளைப்பகம் வகுத்துக் கொண்டிருந்தேன் *

நாட்டு மானிடத்தோடு எனக்கு அரிது

நச்சுவார் பலர் கேழலொன்றாகிக் *

கோட்டு மண்கொண்ட கொள்கையினானே !

குஞ்சரம் வீழக் கொம்பு ஒசித்தானே ! 5           5.1.5

கண்ணா! நான்முகனைப் படைத்தானே !

காரணா ! கரியாய்! அடியேன் நான் *

உண்ணா நாள் பசியாவ தொன்றில்லை

ஓவாதே நமோ நாரணா என்று *

எண்ணா நாளும் இருக்கெசுச் சாம வேத

நாண் மலர் கொண்டு * உன பாதம்

நண்ணா நாள் * அவை தத்துறுமாகில்

அன்றெனக்கு அவை பட்டினி நாளே. 6 5.1.6

வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை

மெத்தையாக விரித்து * அதன் மேலே

கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம்

காணலாங்கொல் என்றாசையினாலே *

உள்ளம் சோர உகந்து எதிர் விம்மி

உரோம கூபங்களாய்க் * கண்ண நீர்கள்

துள்ளம் சோரத் துயிலணை கொள்ளேன்

சொல்லாய் யான் உன்னைத் தத்துறுமாறே. 7          5.1.7    திருப்பாற்கடல்

வண்ண மால் வரையே குடையாக

மாரி காத்தவனே ! மதுசூதா ! *

கண்ணனே ! கரிகோள் விடுத்தானே !

காரணா ! களிறட்டபிரானே ! *

எண்ணுவார் இடரைக் களைவானே !

ஏத்தரும் பெருங் கீர்த்தியினானே ! *

நண்ணி நான் உன்னை நாடொறுமேத்தும்

நன்மையே அருள் செய் எம்பிரானே ! 8           5.1.8

நம்பனே ! நவின்றேத்த வல்லார்கள்

நாதனே ! நரசிங்கமதானாய் ! *

உம்பர் கோன் ! உலகேழு மளந்தாய் !

ஊழியாயினாய் ! ஆழி முன்னேந்திக் *

கம்பமா கரிகோள் விடுத்தானே !

காரணா ! கடலைக் கடைந்தானே ! *

எம்பிரான் ! என்னை ஆளுடைத் தேனே!

ஏழையேன் இடரைக் களையாயே. 9      5.1.9

காமர் தாதை கருதலர் சிங்கம்

காண இனிய கருங்குழல் குட்டன் *

வாமனன் என் மரதக வண்ணன்

மாதவன் மதுசூதனன் தன்னை *

சேம நன்கமரும் புதுவையர் கோன்

விட்டுசித்தன் வியன் தமிழ் பத்தும் *

நாமமென்று நவின்றுரைப்பார்கள்

நண்ணுவார் ஒல்லை நாரணனுலகே. 10         5.1.10

இரண்டாம் திருமொழி

நெய்க்குடத்தைப் பற்றி ஏறும்

எறும்புகள் போல் நிரந்து * எங்கும்

கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள் ! காலம் பெற உய்யப் போமின் *

மெய்க் கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார் *

பைக்கொண்ட பாம்பணையோடும் பண்டன்று பட்டினம் காப்பே. 1  5.2.1

சித்திரகுத்தன் எழுத்தால் தென்புலக்கோன் பொறியொற்றி *

வைத்த இலச்சினை மாற்றித் தூதுவர் ஓடியொளித்தார் *

முத்துத் திரைக் கடல் சேர்ப்பன் முதறிவாளர் முதல்வன் *

பத்தர்க்கு அமுதன் அடியேன் பண்டன்று பட்டினம் காப்பே. 2 5.2.2

வயிற்றில் தொழுவைப் பிரித்து வன்புலச் சேவை யதக்கிக் *

கயிற்றும் அக்காணி கழித்துக் காலிடைப் பாசம் கழற்றி *

எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்து * என்னைப்

பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான் பண்டன்று பட்டினம் காப்பே. 3          5.2.3

மங்கிய வல்வினை நோய்காள்! உமக்கும்ஓர் வல்வினைகண்டீர் *

இங்குப் புகேன்மின் புகேன்மின் எளிதன்று கண்டீர் புகேன்மின்*

சிங்கப் பிரானவன் எம்மான் சேரும் திருக் கோயில் கண்டீர் *

பங்கப் படாது உய்யப் போமின் பண்டன்று பட்டினம் காப்பே. 4         5.2.4

மாணிக் குறளுருவாய மாயனை என் மனத்துள்ளே *

பேணிக் கொணர்ந்து புகுத வைத்துக் கொண்டேன் பிறிதின்றி *

மாணிக்கப் பண்டாரம் கண்டீர் வலி வன்குறும்பர்களுள்ளீர் ! *

பாணிக்க வேண்டா நடமின் பண்டன்று பட்டினம் காப்பே. 5    5.2.5

உற்ற வுறு பிணி நோய்காள் !

உமக்கொன்று சொல்லுகேன் கேண்மின் *

பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர் *

அற்றம் உரைக்கின்றேன்

இன்னம் ஆழ்வினைகாள் ! * உமக்கு இங்கோர்

பற்றில்லை கண்டீர் நடமின் பண்டன்று பட்டினம் காப்பே. 6  5.2.6

கொங்கைச் சிறுவரை என்னும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி *

அங்கோர் முழையினில் புக்கிட்டு அழுந்திக் கிடந்து உழல்வேனை *

வங்கக்கடல் வண்ணன் அம்மான் வல்வினை யாயின மாற்றிப் *

பங்கப் படா வண்ணம் செய்தான் பண்டன்று பட்டினம் காப்பே. 7     5.2.7

ஏதங்களாயினவெல்லாம் இறங்கலிடுவித்து * என்னுள்ளே

பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து *

போதில் கமல வன்னெஞ்சம் புகுந்தும் என் சென்னித்திடரில் *

பாத இலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே. 8     5.2.8

உறகல் உறகல் உறகல் ஒண்சுடராழியே சங்கே !

அறவெறி நாந்தக வாளே ! அழகிய சார்ங்கமே ! தண்டே ! *

இறவு படாமலிருந்த எண்மர் உலோக பாலீர்காள் !

பறவை அறையா ! உறகல் பள்ளியறை குறிக்கொண்மின். 9  5.2.9

அரவத்து அமளியினோடும் அழகிய பாற்கடலோடும் *

அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து *

பரவைத் திரை பல மோதப் பள்ளி கொள்கின்ற பிரானைப் *

பரவுகின்றான் விட்டுசித்தன் பட்டினம் காவற் பொருட்டே. 10 5.2.10  திருப்பாற்கடல்

மூன்றாம் திருமொழி

துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த

வலையை அறப்பறித்துப் *

புக்கினில் புக்கு உன்னைக் கண்டு கொண்டேன்

இனிப்போகவிடுவதுண்டே ? *

மக்கள் அறுவரைக் கல்லிடை மோத

இழந்தவள் தன் வயிற்றில் *

சிக்கென வந்து பிறந்து நின்றாய்!

திருமாலிருஞ்சோலை எந்தாய்! 1 5.3.1    திருமாலிருஞ்சோலை

வளைத்து வைத்தேன் இனிப் போகலொட்டேன்

உந்தன் இந்திர ஞாலங்களால்

ஒளித்திடில் * நின் திருவாணை கண்டாய்

நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை *

அளித்தெங்கும் நாடும் நகரமும்

தம்முடைத் தீவினை தீர்க்கலுற்றுத் *

தெளித்து வலம் செய்யும் தீர்த்தமுடைத்

திருமாலிருஞ்சோலை எந்தாய் ! 2          5.3.2    திருமாலிருஞ்சோலை

உனக்குப் பணிசெய்திருக்கும் தவமுடையேன்

இனிப்போய் ஒருவன்

தனக்குப் பணிந்து * கடைத்தலை நிற்கை

நின் சாயை அழிவு கண்டாய் *

புனத்தினைக் கிள்ளிப் புது அவி காட்டி

உன் பொன்னடி வாழ்கவென்று *

இனக் குறவர் புதியதுண்ணும்

எழில் மாலிருஞ்சோலை எந்தாய் ! 3     5.3.3    திருமாலிருஞ்சோலை

காதம் பலவும் திரிந்து உழன்றேற்கு

அங்கோர் நிழலில்லை நீருமில்லை *

உன் பாதநிழலல்லால் மற்றோருயிர்ப்பிடம்

நானெங்கும் காண்கின்றிலேன் *

தூதுசென்றாய் ! குருபாண்டவர்க்காய்

அங்கோர் பொய்ச் சுற்றம் பேசிச்சென்று

பேதம் செய்து எங்கும் பிணம் படுத்தாய் !

திருமாலிருஞ்சோலை எந்தாய் ! 4          5.3.4    திருமாலிருஞ்சோலை

காலும் எழா கண்ணநீரும் நில்லா

உடல் சோர்ந்து நடுங்கிக் குரல்

மேலுமெழா மயிர்க் கூச்சுமறா

என தோள்களும் வீழ்வொழியா *

மால் உகளா நிற்கும் என் மனனே

உன்னை வாழத் தலைப்பெய்திட்டேன் *

சேல் உகளா நிற்கும் நீள் சுனை சூழ்

திருமாலிருஞ்சோலை எந்தாய் ! 5          5.3.5    திருமாலிருஞ்சோலை

எருத்துக்கொடியுடையானும்

பிரமனும் இந்திரனும் * மற்றும்

ஒருத்தரும் இப்பிறவி என்னும் நோய்க்கு

மருந்து அறிவாருமில்லை *

மருத்துவனாய் நின்ற மாமணிவண்ணா !

மறு பிறவி தவிரத்

திருத்தி * உன் கோயிற்கடைப் புகப் பெய்

திருமாலிருஞ்சோலை எந்தாய் ! 6          5.3.6    திருமாலிருஞ்சோலை

அக்கரையென்னும் அனத்தக் கடலுள்

அழுந்தி * உன் பேரருளால்

இக்கரை ஏறி இளைத்திருந்தேனை

அஞ்சேல் என்று கை கவியாய் *

சக்கரமும் தடக்கைகளும்

கண்களும் பீதகஆடையொடும்*

செக்கர் நிறத்துச் சிவப்புடையாய் !

திருமாலிருஞ்சோலை எந்தாய் ! 7          5.3.7    திருமாலிருஞ்சோலை

எத்தனை காலமும் எத்தனை ஊழியும்

இன்றொடு நாளையென்றே*

இத்தனை காலமும் போய்க் கிறிப்பட்டேன்

இனி உன்னைப் போகலொட்டேன் *

மைத்துனன்மார்களை வாழ்வித்து

மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்! *

சித்தம் நின்பாலது அறிதியன்றே?

திருமாலிருஞ்சோலை எந்தாய் ! 8          5.3.8    திருமாலிருஞ்சோலை

அன்று வயிற்றில் கிடந்திருந்தே

அடிமை செய்யலுற்றிருப்பன் *

இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன்

இனிப் போக விடுவதுண்டே ?

சென்றங்கு வாணனை ஆயிரம் தோளும்

திருச் சக்கர மதனால் *

தென்றித் திசை திசை வீழச் செற்றாய் !

திருமாலிருஞ்சோலை எந்தாய் ! 9          5.3.9    திருமாலிருஞ்சோலை

சென்றுலகம் குடைந்தாடும் சுனைத்

திருமாலிருஞ்சோலை தன்னுள்

நின்றபிரான் * அடிமேல் அடிமைத் திறம்

நேர்பட விண்ணப்பம் செய் *

பொன் திகழ் மாடம் பொலிந்து தோன்றும்

புதுவைக் கோன் விட்டுசித்தன் *

ஒன்றினோடு ஒன்பதும் பாடவல்லார்

உலகமளந்தான் தமரே. 10    5.3.10  திருமாலிருஞ்சோலை

நான்காம் திருமொழி

சென்னியோங்கு தண்திருவேங்கடமுடையாய்! *

உலகுதன்னை வாழநின்ற நம்பீ! தாமோதரா! சதிரா! *

என்னையும் என்னுடைமையையும் உன்சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு*

நின்னருளே புரிந்திருந்தேன் இனி என் திருக்குறிப்பே ? 1          5.4.1    திருவேங்கடம் திருப்பதி

பறவை யேறு பரம்புருடா !* நீ என்னைக் கைக்கொண்ட பின் *

பிறவி யென்னும் கடலும் வற்றிப் பெரும் பதமாகின்றதால் *

இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇ வேகின்றதால் *

அறிவை யென்னும் அமுத ஆறு தலைப் பற்றி வாய்க் கொண்டதே. 2     5.4.2

எம்மனா ! என் குலதெய்வமே ! என்னுடை நாயகனே ! *

நின்னுளேனாய்ப் பெற்ற நன்மை இவ்வுலகினில் ஆர்பெறுவார்? *

நம்மன் போலே வீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ள பாவமெல்லாம் *

சும்மெனாதே கைவிட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே. 3 5.4.3

கடல் கடைந்து அமுதம் கொண்டு கலசத்தை நிறைத்தாற்போல்*

உடலுருகி வாய் திறந்து மடுத்து உன்னை நிறைத்துக் கொண்டேன் *

கொடுமை செய்யும் கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா *

தடவரைத் தோள் சக்கரபாணீ ! சார்ங்கவிற் சேவகனே ! 4       5.4.4

பொன்னைக்கொண்டு உரைகல் மீதே நிறமெழ உரைத்தாற்போல்*

உன்னைக்கொண்டு என்நாவகம்பால் மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன்*

உன்னைக்கொண்டு என்னுள் வைத்தேன்என்னையும் உன்னிலிட்டேன் *

என்னப்பா! என் இருடீகேசா ! என்னுயிர் காவலனே ! 5 5.4.5

உன்னுடைய விக்கிரமம் ஒன்றொழியாமல் எல்லாம் *

என்னுடைய நெஞ்சகம் பால் சுவர்வழி எழுதிக் கொண்டேன் *

மன்னடங்க மழு வலங்கைக் கொண்ட இராம நம்பீ ! *

என்னிடை வந்து எம்பெருமான்! இனி எங்குப் போகின்றதே? 6            5.4.6

பருப்பதத்துக் கயல் பொறித்த பாண்டியர் குலபதி போல் *

திருப் பொலிந்த சேவடி என் சென்னியின் மேல் பொறித்தாய் *

மருப்பொசித்தாய்! மல்லடர்த்தாய்! என்றென்று உன் வாசகமே *

உருப்பொலிந்த நாவினேனை உனக்கு உரித்தாக்கினையே. 7  5.4.7

அனந்தன் பாலும் கருடன் பாலும் ஐது நொய்தாக வைத்து *

என் மனம் தனுள்ளே வந்து வைகி வாழச் செய்தாய் எம்பிரான் ! *

நினைந்து என்னுள்ளே நின்று நெக்குக் கண்கள் அசும்பொழுக *

நினைந்திருந்தே சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே ! 8          5.4.8

பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு * ஓடி வந்து என்

மனக்கடலில் வாழ வல்ல மாய மணாள நம்பீ! *

தனிக்கடலே ! தனிச்சுடரே ! தனி உலகே ! என்றென்று *

உனக்கிடமாயிருக்க என்னை உனக்கு உரித்தாக்கினையே. 9   5.4.9    திருப்பாற்கடல்

தடவரைவாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங்கொடி போல் *

சுடரொளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும் என் சோதி நம்பீ ! *

வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராவதியும் *

இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே. 10           5.4.10            துவாரகை (துவரை),

திருப்பாற்கடல்,

பரமபதம்

வேயர் தங்கள் குலத்துதித்த விட்டுசித்தன் மனத்தே *

கோயில் கொண்ட கோவலனைக் கொழுங்குளிர் முகில் வண்ணனை *

ஆயரேற்றை அமரர் கோவை அந்தணர்தம் அமுதத்தினைச் *

சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே. 11         5.4.11

பெரியாழ்வார் திருமொழி முற்றும்

                 பெரியாழ்வார் திருவடிகளே சரணம்  

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.