Thirupallandu Moolam

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

பொதுத்தனியன்கள்

மணவாள மாமுனிகள் தனியன்

(அழகிய மணவாளன் அருளிச் செய்தது)

ஶ்ரீஶைலேஶதயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்|

யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம்முநிம்||

குருபரம்பரை தனியன்

(கூரத்தாழ்வான் அருளிச் செய்தது)

லக்ஷ்மீநாதஸமாரம்பாம் நாதயாமுநமத்யமாம்|

அஸ்மதாசார்யபர்யந்தாம் வந்தே குருபரம்பராம்||.

எம்பெருமானார் தனியன்

(கூரத்தாழ்வான் அருளிச் செய்தது)

யோநித்யமச்யுதபதாம்புஜயுக்மருக்ம

வ்யாமோஹதஸ்ததிதராணித்ருணாயமேநே|

அஸ்மத்குரோர்பகவதோஸ்யதயைகஸிந்தோ:

ராமாநுஜஸ்யசரணௌ சரணம்ப்ரபத்யே.||

நம்மாழ்வார் தனியன்

(ஆளவந்தார் அருளிச் செய்தது)

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதிஸ்

ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்|

ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்

ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா.||

(ஸ்ரீ பராசரபட்டர் அருளிச்செய்தது)

பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய பட்டநாத

ஸ்ரீபக்திஸார குலஶேகர யோகிவாஹாந்|

பக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ரமிஶ்ராந்

ஸ்ரீமத் பராங்குஶமுநிம் ப்ரணதோஸ்மிநித்யம்.||

*******

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்விய பிரபந்தங்களுள்

முதலாயிரம்

 

பெரியாழ்வார் திருமொழிகளின்

தனியன்கள்

(நாதமுனிகள் அருளிச்செய்தது)

குருமுகமநதீத்ய ப்ராஹவேதாநஶேஷாந்

நரபதிபரிக்லுப்தம் ஶுல்கமாதாதுகாம:|

ஶ்வஶுரமமரவந்தயம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்

த்விஜகுலதிலகம்தம் விஷ்ணுசித்தம் நமாமி.II

(பாண்டியபட்டர் அருளிச்செய்தவை)

மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று* ஒருகால்

சொன்னார் கழற்கமலஞ் சூடினோம்* – முன்னாள்

கிழியறுத்தானென்றுரைத்தோம்* கீழ்மையினிற்சேரும்

வழியறுத்தோம் நெஞ்சமே வந்து.

பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான்வந்தானென்று

ஈண்டியசங்க மெடுத்தூத* – வேண்டிய

வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான்*

பாதங்கள்யாமுடையபற்று

பெரியாழ்வார் திருமொழி

திருப்பல்லாண்டு

முதல் பத்து

முதல் திருமொழி

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு *

பலகோடி நூறாயிரம் *

மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா ! * உன்

 செவ்வடி செவ்வி திருக்காப்பு.   1.1.1

 

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு*

வடிவாய்நின்வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு *

வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு *

படைபோர்புக்குமுழங்கும் அப்பாஞ்ச ன்னியமும் பல்லாண்டே.      1.1.2

 

வாழாட்பட்டு நின்றீருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின் *

கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம் *

ஏழாட்காலம் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர்வாழ்  இலங்கை *

பாழாளாகப்படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.     1.1.3

 

ஏடுநிலத்தில்இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்து *

கூடுமனமுடையீர்கள்வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ *

நாடும்நகரமும்நன்கறிய நமோ நாராயணாயவென்று *

பாடுமனமுடைப்பத்தருள்ளீர் ! வந்து பல்லாண்டு கூறுமினே.    1.1.4

 

அண்டக்குலத்துக்கதிபதியாகி அசுரரிராக்கதரை *

இண்டக்குலத்தைஎடுத்துக்களைந்த இருடீகேசன் தனக்கு *

தொண்டக்குலத்திலுள்ளீர்  வந்துஅடிதொழுது ஆயிரம் நாமம் சொல்லி *

பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத் தாண்டென்மினே.        1.1.5

 

எந்தைதந்தைதந்தைதந்தைதம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி *

வந்துவழிவழியாட் செய்கின்றோம் * திருவோணத்திருவிழவில் *

அந்தியம்போதில் அரியுருவாகி அரியையழித்தவனை *

பந்தனை தீரப்பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே.  1.1.6

 

தீயிற்பொலிகின்றசெஞ்சுடராழி திகழ் திருச்சக்கரத்தின் *

கோயிற்பொறியாலே ஒற்றுண்டுநின்று குடிகுடியாட் செய்கின்றோம் *

மாயப்பொருபடைவாணனை ஆயிரம் தோளும்பொழிகுருதி

பாய * சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.       1.1.7

 

நெய்யிடைநல்லதோர்சோறும் நியதமும் அத்தாணிச்சேவகமும் *

கைஅடைக்காயும்கழுத்துக்குப்பூணொடு காதுக்குக்குண்டலமும் *

மெய்யிடநல்லதோர்சாந்தமும்தந்து என்னை வள்ளுயிராக்கவல்ல *

பையுடைநாகப்பகைக்கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே.     1.1.8

 

உடுத்துக்களைந்த நின்பீதக வாடைஉடுத்து கலத்ததுண்டு *

தொடுத்ததுழாய்மலர்சூடிக்களைந்தன சூடும்இத்தொண்டர்களோம் *

விடுத்ததிசைக்கருமம்திருத்தித் திருவோணத்திருவிழவில் *

படுத்தபைந்நாகணைப்பள்ளிகொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.  1.1.9

 

எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோமென்று எழுத்துப் பட்ட

அந்நாளே * அடியோங்கள்அடிக்குடில்வீடுபெற்று உய்ந்தது காண் *

செந்நாள்தோற்றித் திருமதுரையுள்சிலைகுனித்து * ஐந்தலைய

பைந்நாகத்தலைப்பாய்ந்தவனே ! உன்னைப் பல்லாண்டு கூறுதுமே.  1.1.10

 

அல்வழக்கொன்றுமில்லாஅணிகோட்டியர்கோன் * அபிமானதுங்கன்

செல்வனைப்போலத் திருமாலே ! நானுமுனக்குப் பழவடியேன் *

நல்வகையால்நமோநாராயணாவென்று நாமம்பலபரவி *

பல்வகையாலும்பவித்திரனே ! உன்னைப் பல்லாண்டு கூறுவனே.  1.1.11

 

பல்லாண்டென்றுபவித்திரனைப் பரமேட்டியை * சார்ங்கமென்னும்

வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர்விட்டுசித்தன் விரும்பியசொல் *

நல்லாண்டென்றுநவின்றுரைப்பார் நமோநாராயணாய வென்று *

பல்லாண்டும்பரமாத்மனைச் சூழ்ந்திருந்துஏத்துவர் பல்லாண்டே. 1.1.12

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.