[highlight_content]

Thiruvoymozhi 8-1

திருவாய்மொழி

எட்டாம் பத்து

முதல் திருவாய்மொழி

தேவிமாராவார் திருமகள் பூமி ஏவ

மற்றமரர் ஆட்செய்வார் *

மேவிய உலகம் மூன்றவை யாட்சி

வேண்டு வேண்டுருவம் நின்னுருவம் *

பாவியேன் தன்னை அடுகின்ற

கமலக் கண்ணது, ஓர் பவள வாய் மணியே ! *

ஆவியே அமுதே ! அலை கடல் கடைந்த

அப்பனே !, காணுமாறு அருளாய்.    8.1.1

காணுமாறருளா யென்றென்றே கலங்கிக்

கண்ண நீர்களலமர * வினையேன்

பேணுமாறெல்லாம் பேணி, நின் பெயரே

பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ ! *

காணுமாறு அருளாய் காகுத்தா ! கண்ணா !

தொண்டனேன் கற்பகக் கனியே ! *

பேணுவாரமுதே ! பெரிய தண் புனல் சூழ்

பெருநில மெடுத்த பேராளா !            8.1.2

எடுத்த பேராளன் நந்தகோபன் தன்

இன்னுயிர்ச் சிறுவனே ! * அசோதைக்கு

அடுத்த பேரின்பக் குலவிளங் களிறே !

அடியனேன் பெரிய அம்மானே ! *

கடுத்த போரவுண னுடலிரு பிளவாக்

கையுகிராண்ட எங்கடலே ! *

அடுத்த தோருருவாய் இன்று நீ வாராய்

எங்ஙனம் தேறுவர் உமரே?    8.1.3

உமர் உகந்துகந்த உருவம் நின்னுருவமாகி

உன்தனக்கு அன்பரானார் அவர் *

உகந்தமர்ந்த செய்கை உன் மாயை

அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் *

அமர்அது பண்ணி அகலிடம் புடைசூழ்

அடுபடை யவித்த அம்மானே ! *

அமரர் தம் அமுதே ! அசுரர்கள் நஞ்சே !

என்னுடை ஆருயிரே ஓ !     8.1.4

ஆருயிரே ! ஓ ! அகலிட முழுதும்

படைத் திடந்துண்டு மிழ்ந்தளந்த *

பேருயிரே ! ஓ பெரிய நீர் படைத்து அங்குறைந்து

அது கடைந் தடைத் துடைத்த *

சீரியரே! ஓ ! மனிசர்க்குத் தேவர் போலத்

தேவர்க்கும் தேவாவோ ! *

ஓருயிரே ! ஓ ! உலகங்கட் கெல்லாம்

உன்னை நான் எங்கு வந்துறுகோ ?            8.1.5

எங்கு வந்துறுகோ ? என்னை யாள்வானே !

ஏழுலகங்களும் நீயே *

அங்கவர்க் கமைத்த தெய்வமும் நீயே

அவற்றவை கருமமும் நீயே *

பொங்கிய புறம்பால் பொருளுள வேலும்

அவையுமோ, நீ இன்னே யானால் *

மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே

வான்புல னிறந்ததும் நீயே.   8.1.6

இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே

நிகழ்வதோ நீ, இன்னே யானால் *

சிறந்த நின் தன்மை அதுவிதுவுது வென்று

அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன் *

கறந்த பால் நெய்யே! நெய்யினின் சுவையே !

கடலினு ளமுதமே ! * அமுதில்

பிறந்த இன் சுவையே ! சுவையது பயனே !

பின்னை தோள் மணந்த பேராயா !             8.1.7

மணந்த பேராயா ! மாயத்தால் முழுதும்

வல் வினையேனை யீர்கின்ற

குணங்களை யுடையாய் ! * அசுரர் வன்கையர் கூற்றமே !

கொடிய புள்ளுயர்த்தாய் ! *

பணங்களா யிரமுடைய பைந்நாகப் பள்ளியாய் !

பாற்கடற் சேர்ப்பா ! *

வணங்குமாறு அறியேன், மனமும்

வாசகமும் செய்கையும் யானும் நீ தானே.     8.1.8      திருப்பாற்கடல்

யானும் நீ தானே யாவதோ மெய்யே

அருநர கவையும் நீ * ஆனால்

வானுயரின்ப மெய்திலென் ?

மற்றை நரகமே யெய்திலென்? எனிலும் *

யானும் நீ தானாய்த் தெளிதொறும் நன்றும்

அஞ்சுவன் நரகம் நானடைதல் *

வானுயரின்பம் மன்னி வீற்றிருந்தாய் !

அருளு நின் தாள்களை எனக்கே.    8.1.9

தாள்களை எனக்கே தலைத்தலைச் சிறப்பத்

தந்த பேருதவிக் கைம்மாறாத் *

தோள்களை யாரத் தழுவி என்னுயிரை

அறவிலை செய்தனன் சோதீ ! *

தோள்களாயிரத்தாய் ! முடிகளாயிரத்தாய் !

துணைமலர்க் கண்களாயிரத்தாய் ! *

தாள்களாயிரத்தாய் ! பேர்களாயிரத்தாய் !

தமியனேன் பெரிய வப்பனே !      8.1.10

பெரிய வப்பனைப் பிரமனப்பனை

உருத்திரனப்பனை * முனிவர்க்கு

உரிய வப்பனை அமரரப்பனை

உலகுக்கோர் தனியப்பன் தன்னைப் *

பெரிய வண்குருகூர் வண் சடகோபன்

பேணின ஆயிரத்துள்ளும் *

உரிய சொல்மாலை இவையும் பத்து இவற்றால் *

உய்யலாம் தொண்டீர் ! நங்கட்கே.          8.1.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.