[highlight_content]

Thiruvoymozhi 8-7

திருவாய்மொழி

எட்டாம் பத்து

ஏழாம் திருமொழி

இருத்தும் வியந்து என்னைத் தன் பொன்னடிக் கீழென்று *

அருத்தித்து எனைத்தோர், பல நாளழைத்தேற்குப் *

பொருத்தமுடை, வாமனன் தான் புகுந்து * என்தன்

கருத்தையுற வீற்றிருந்தான், கண்டு கொண்டே.           8.7.1

இருந்தான் கண்டு கொண்டு, எனதேழை நெஞ்சாளும் *

திருந்தாத ஓரைவரைத், தேய்ந்தற மன்னிப் *

பெருந்தாட் களிற்றுக்கு, அருள் செய்த பெருமான் *

தரும் தான் அருள் தான், இனி யான் அறியேனே.      8.7.2

அருள் தான் இனி யான் அறியேன், அவன் என்னுள் *

இருள் தான் அற, வீற்றிருந்தான் இதுவல்லால் *

பொருள் தான் ? எனின் மூவுலகும் பொருளல்ல *

மருள் தான் ஈதோ ? மாய மயக்கு மயக்கே.     8.7.3

மாய மயக்கு மயக்கான், என்னை வஞ்சித்து *

ஆயன் அமரர்க் கரியேறு, எனதம்மான் *

தூய சுடர்ச் சோதி தனது, என்னுள் வைத்தான் *

தேசம் திகழும், தன் திருவருள் செய்தே.       8.7.4

திகழும் தன் திருவருள் செய்து, உலகத்தார்

புகழும் புகழ் * தான் அது காட்டித் தந்து* என்னுள்

திகழும் மணிக் குன்ற மொன்றே, ஒத்து நின்றான் *

புகழும் புகழ், மற்றெனக்கும் ஓர் பொருளே ?    8.7.5

பொருள் மற்றெனக்கும் ஓர் பொருள் தன்னில், சீர்க்கத்

தருமேல் * பின்னை யார்க்கு, அவன் தன்னைக் கொடுக்கும் ? *

கருமாணிக்கக் குன்றத்துத், தாமரை போல் *

திருமார்பு கால் கண் கை, செவ்வா யுந்தியானே.        8.7.6

செவ்வா யுந்தி, வெண் பல்சுடர்க் குழை தம்மோடும் *

எவ்வாய்ச் சுடரும் தம்மில், முன்வளாய்க் கொள்ளச் *

செவ்வாய் முறுவலோடு, எனதுள்ளத் திருந்த

அவ்வாயன்றி * யான் அறியேன், மற்றருளே.  8.7.7

அறியேன் மற்றருள், என்னையாளும் பிரானார் *

வெறிதே அருள் செய்வர், செய்வார்கட்கு உகந்து *

சிறியேனுடைச், சிந்தையுள் மூவுலகும் * தன்

நெறியா வயிற்றில் கொண்டு, நின்றொழிந்தாரே.        8.7.8

வயிற்றில் கொண்டு நின்றொழிந்தாரும், யவரும் *

வயிற்றில் கொண்டு நின்று, ஒரு மூவுலகும் * தம்

வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை *

வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன், மதியாலே.            8.7.9

வைத்தேன் மதியால், எனதுள்ளத் தகத்தே *

எய்த்தே யொழிவேனல்லேன், என்றும் எப்போதும் *

மொய்த்தேய் திரை மோது, தண்பாற்கடலுளால் *

பைத்தேய் சுடர்ப், பாம்பணை நம்பரனையே.   8.7.10    திருப்பாற்கடல்

சுடர்ப் பாம்பணை நம்பரனைத், திருமாலை *

அடிச்சேர் வகை, வண்குருகூர்ச் சடகோபன் *

முடிப்பான் சொன்ன ஆயிரத்து, இப்பத்தும் சன்மம்

விடத் * தேய்ந்தற நோக்கும், தன் கண்கள் சிவந்தே.          8.7.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.