[highlight_content]

Thiruvoymozhi 4-3

திருவாய்மொழி

நான்காம் பத்து

மூன்றாம் திருவாய்மொழி

கோவை வாயாள் பொருட்டு

ஏற்றினெருத்த மிறுத்தாய் ! * மதிளிலங்கைக்

கோவை வீயச் சிலை குனித்தாய் !

குல நல் யானை மருப்பொசித்தாய் ! *

பூவை வீயா நீர் தூவிப் போதால் வணங்கேனேலும் * நின்

பூவை வீயா மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.       4.3.1

பூசும் சாந்து என் நெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய *

வாசகம் செய் மாலையே வான் பட்டாடையும் அஃதே *

தேசமான அணிகலனும் என் கை கூப்புச் செய்கையே *

ஈசன் ஞால முண்டுமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.         4.3.2

ஏக மூர்த்தி இரு மூர்த்தி, மூன்று மூர்த்தி பல மூர்த்தி-

யாகி * ஐந்து பூதமாய், இரண்டு சுடராய் அருவாகி *

நாகமேறி நடுக் கடலுள் துயின்ற, நாராயணனே ! * உன்

ஆக முற்று மகத் தடக்கி, ஆவி யல்லல் மாய்த்ததே.        4.3.3      திருப்பாற்கடல்

மாய்த்த லெண்ணி வாய் முலை தந்த மாயப் பேயுயிர்

மாய்த்த * ஆய மாயனே ! வாமனனே! மாதவா ! *

பூத்தண்மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும் * நின்

பூத்தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.            4.3.4

கண்ணி எனதுயிர், காதல் கனகச் சோதி முடி முதலா *

எண்ணில் பல்கலன்களும், ஏலுமாடையும் அஃதே *

நண்ணி மூவுலகும், நவிற்றும் கீர்த்தியும் அஃதே *

கண்ண னெம்பிரா னெம்மான், கால சக்கரத்தானுக்கே.        4.3.5

கால சக்கரத்தொடு வெண் சங்கம், கையேந்தினாய் !*

ஞால முற்றும் உண்டுமிழ்ந்த, நாராயணனே! என்றென்று *

ஓலமிட்டு நானழைத்தால், ஒன்றும் வாரா யாகிலும் *

கோலமாம் என் சென்னிக்கு, உன் கமல மன்ன குரை கழலே.      4.3.6

குரை கழல்கள் நீட்டி, மண் கொண்ட கோல வாமனா ! *

குரை கழல் கை கூப்புவார்கள், கூட நின்ற மாயனே ! *

விரை கொள் பூவும் நீரும் கொண்டு, ஏத்த மாட்டேனேலும் * உன்

உரை கொள் சோதித் திரு வுருவம், என்னதாவி மேலதே.             4.3.7

என்னதாவி மேலையாய், ஏர் கொளேழுலகமும் *

துன்னி முற்றுமாகி நின்ற, சோதி ஞான மூர்த்தியாய் *

உன்ன தென்ன தாவியும், என்ன துன்ன தாவியும் *

இன்ன வண்ணமே நின்றாய், என்றுரைக்க வல்லேனே ?       4.3.8

உரைக்க வல்லேனல்லேன் உன்னுலப்பில் கீர்த்தி வெள்ளத்தின் *

கரைக் கணென்று செல்வன் நான் ? காதல் மைய லேறினேன் *

புரைப்பிலாத பரம்பரனே ! பொய் யிலாத பரஞ்சுடரே ! *

இரைத்து நல்ல மேன் மக்களேத்த யானு மேத்தினேன்.     4.3.9

யானு மேத்தி, ஏழுலகும் முற்று மேத்திப் * பின்னையும்

தானு மேத்திலும், தன்னை ஏத்த ஏத்த எங்கெய்தும் ? *

தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித், தித்திப்ப *

யானும் எம்பிரானையே ஏத்தினேன், யானுய்வானே.       4.3.10

உய்வுபாயம் மற்றின்மை தேறிக் கண்ணனொண் கழல்கள் மேல்*

செய்ய தாமரைப் பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன் *

பொய்யில் பாடலாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள் *

வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணோடே.          4.3.11

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.