த்வயப்ரகரணம் Part 1

த்வயப்ரகரணம்

அவதாரிகை

                       நம் ஆசார்யர்கள் இம்மந்த்ரார்த்தத்தை விஶதமாக அநுஸந்தித்த ப்ரகாரமாக “மந்தாரம் த்ராயதே” என்கிற வ்யுத்பத்தியின்படியே அநுஸந்தாதாவை ரக்ஷிக்கையாலே மந்த்ரஶப்த வாச்யமுமாய், வாக்யத்வயாத்மகமாகையாலே த்வயமென்று திருநாம முமாய், ஶிஷ்டாசாரத்வாரத்தாலே மந்த்ரஸித்தமான அர்த்தத்துக்கு ப்ரமாணமுமாய், இவ்வர்த்த, நிஷ்டருடைய அநுஷ்டானரூபமாயிருக் கிற த்வயம், திருமந்த்ரத்தில் நமஶ்ஶப்தத்திலும் நாராயணபதத்திலும் உக்தமாய் ஸகலஶாஸ்த்ரதாத்பர்யபூமிபூதமான உபாயாம்ஶத்தையும் உபேயாம்ஶத்தையும் விசதீகரிக்கிறது

                 இப்பதத்வயத்திலும் சொன்ன உபாயோபேயங்களே ஸகலஶாஸ்த்ர தாத்பர்யமென்று நிர்ணயித்துத்தருவார் ஆரென்னில்: நின்றார் நின்ற நிலைகளிலே அவ்வோருக்கு ருசிவிஷயபூதமான புத்ரபஶ்வந்நாதிபுருஷார்த்தஸித்திக்கு ஸாதந விஶேஷங்களை எழுதிப் போருகிற சாஸ்த்ரந்தானே, “பரீக்ஷ்ய லோகாந் கர்மசிதாந் ப்ராஹ்மணோ நிர்வேதமாயாத்” “க்ஷரந்தி ஸர்வா வைதிக்யா ஜுஹோதி யஜதிக்ரியா:, அக்ஷரம் ந க்ஷரம் ஜ்ஞேயம் ப்ரஹ்மா சைவ ப்ரஜாபதி:” என்று, அல்பாஸ்திரத்வாதி, தோஷபஹுளமாயிருக்கை யாலே நிர்வேதகோசரமாகச் சொல்லி, “நிரஞ்ஜந: பரமம் ஸாம்யமுபைதி” “ப்ரஹ்மணோ மஹிமாநமாப்நோதி” “மம ஸாதர்ம்யமாகதா:, ஸர்க்கேபி நோபஜாயந்தே ப்ரளயே ந வ்யதந்தி ச” “ரஸம் ஹ்யேவாயம் லப்த்வாநத்தீ, பவதி” “யத்ர நாந்யத் பஶ்யதி நாந்யச்ச்ருணோதிநாந்யத், விஜாநாதி ஸ பூமா” “நிரஸ்தாதிஶயாஹ் லாத, ஸுகபாவைகலக்ஷணாபேஷஜம் பகவத்ப்ராப்திரேகாந்தாத்யந்திகீ மதா” “ஏதத் ஸாம காயந்நாஸ்தே, ஹாவுஹாவு”, யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி” “இமம் மாநவமா வர்த்தம் நாவர்த்தந்தே” “ந ச புநராவர்த்ததே, ந ச புநராவர்த்ததே” “அநாவ்ருத்திஶ் ஶப்தாதநாவ்ருத்திஶ்ஶப்தாத்” ஆப்ரஹ்ம்புவநால் லோகா: பூநராவர்த்திநோர்ஜுந, மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்யதே” என்கிறபடியே, யாவதாத்மபாவி அநுபவியாநின்றாலும், அநுபூதாம்ஶம் அல்பமாய், அநுபாவ்யாம்ஶம் “”யதோ வாசோ நிவர்த்தந்தே, அப்ராப்ய மநஸா ஸஹ” என்கிறபடியே வாங்மநஸ்ஸு களுக்கு அவிஷயமாம்படி நிரவதிகவைபவத்தையுடைத்தாய், ஸம்ஸாரம், “பஹுதா ஸந்ததது:க்கவர்ஷிணி” என்கிறபடியே ஸுகலேஶகந்தமில்லாதபடி நிஷ்க்ருஷ்டது:க்கமேயாய் இருக்குமாப் போலே, “நோபஜநம் ஸ்மரந்நிதம் ஶரீரம்” என்கிறபடியே பூர்வாநுபூத து:க்கஸ்ம்ருதிக்கு அவகாஶமில்லாதபடி, “ஈறிலின்பத்திரு வெள்ளம் யான் மூழ்கினன்” என்று நிஷ்க்ருஷ்டஸுகாவகாஹநரூபமாய், ஒரு காலத்திலே தோன்றி காலாந்தரத்திலே கழியுண்ணுமதன்றிக்கே போக்யமான அந்தப் பரவஸ்துவோடு போக்தாவான தன்னோடு போக வர்த்தகமான அத்தேஶத்தோடு வாசியற அகாலகால்யமாயிருக்கை யாலே, அவையுள்ளதனையும் அநுவ்ருத்தமாய், நேரே நிஷ்க்ருஷ்ட மான சேதநனுடைய ஸ்வரூபத்துக்கு அநுரூபமுமாய், பகவத் குணாநுபவஜநிதப்ரீதிப்ரேரிதமுமான பகவத்கைங்கர்யமே பரமப்ராப்ய மென்று சொல்லுகையாலும், அதுக்கு மேலே நிரதியஶமாயிருப்ப தொரு புருஷார்த்தமுண்டாக ஶ்ருதமல்லாமையாலும் உபேயமாயறு வது பகவத்கைங்கர்யம்.

                  அப்படி பரமப்ராப்பமான கைங்கர்யத்தைப் பெறுகைக்கு ஸாதனமாக ஶாஸ்த்ரங்களிலே எழுதுகிற, “ஸத்யம் தபோ தமஶ் ஶமோ தாநம் தர்ம ப்ரஜநநமக்நயோக்நிஹோத்ரம் யஜ்ஞோ மாநஸம் ந்யாஸ:” என்றாப் போலே சொல்லுகிற ஸாதந ஸமூஹங்களை “தஸ்மாத் ஸத்யம் பரமம் வதந்தி, தஸ்மாத் தப: பரமம் வதந்தி” என்று என்றுக்கொன்று உத்க்ருஷ்டமாகச் சொல்லி, எல்லாத்துக்கும் மேலே “தஸ்மாந்ந்யாஸமஷாம் தபஸாமதிரிக்தமாஹு” “ந்யாஸ இதி ப்ரஹ்மா, ப்ரஹ்மா ஹி பர: பரோ ஹி ப்ரஹ்மா, தாநி வா ஏதாந்யவராணி தபாம்ஸி ந்யாஸ ஏவாத்யரேசயத்” என்று ஸர்வோத்க்ருஷ்டமாக ந்யாஸஶப்தவாச்ய மான உபாயவிஶேஷத்தைச் சொல்லி, தத்வ்யதிரிக்தங்களையடைய அபக்ருஷ்டமாகச் சொல்லுகையாலும், இதுக்கு மேலே விலஷணமா யிருப்பதொரு உபாயவிஶேஷத்தை எடாமையாலும், அந்த கைங்கர்ய ப்ராப்திக்கு உசிதமான உபாயமும் நமஶ்ஶப்தோக்தமான உபாயமே ஆகையாலே, இவை ஸகலஶாஸ்த்ரதாத்பர்யங்களான உபாயோ பேயங்கள்.

                          ஆக, இந்த ஶாஸ்த்ரத்துக்குத் தாத்பர்ய மாயறுவது இங்கு சொன்ன உபாயமும் உபேயமுமாகில், உபாயாந்தரங்களையும் உபேயாந்தரங்களையும் உபபாதிக்கைக்கு அடியென்னென்னில்: ஶாஸ்த்ரமாகிறது. “த்ரைகுண்யவிஷயா வேதா:” என்கிறபடியே, பெற்றதாய் அந்தபதிராதிகளான விகலகரணரோடு படுகரணரோடு வாசியற வத்ஸலையாய் இருக்குமாப்போலே, மாதாபித்ருஸஹஸ்ரங்களிற்காட்டிலும் வத்ஸலதரமாகையாலே, தம:ப்ரகரரோடு ஸத்வப்ரகரரோடு வாசியற அவர்கள் அபதே ப்ரவ்ருத் தராய், நசிக்கவிட க்ஷமமல்லாமையாலே அவ்வோருடைய குணாநு குணமாக புருஷார்த்தங்களையும் தத்ஸாதநங்களையும் உபதேஶித்துக் கொள்கொம்பிலே ஏறுகைக்கு சுள்ளிக்கால் நாட்டுவாரோபாதி, இவ்வோமுகங்களாலே தன்னுடைய தாத்பர்யாம்ஶத்திலே ஆரோபிக் கைக்காக ப்ரவர்த்திப்பிக்கிறதாகையாலே குறையில்லை.

                அதாவது ஒருவன், தன்னுடைய கர்மவிஶேஷத் தாலே பரஹிம்ஸை ஸாதநமாக தரவ்யார்ஜநம் பண்ணுகையிலே ருசியுடையனாம்; அவனுக்கு பரமபுருஷார்த்தலக்ஷண மோக்ஷ ஸ்வரூபத்தையும், தத்ஸாதநத்தையும் உபதேஶித்தால், ஜீவிக்கை யாகாது. இவனை அநாதரிக்கில் அபதே ப்ரவ்ருத்தனாய் நஷ்டனாம். அதுக்காக இவனுடைய ருச்யநு குணமாக, “நீ த்ரவ்யார்ஜநம் பண்ணுகைக்காக வழிபறிக்கையிலே அந்வயிக்கில் அது ஆயாஸ ஸாத்யமுமாய், நீ நினைக்கிற பலந்தான் பாக்ஷிகமுமாய், நரகோ தர்க்கமுமாயிருக்கும்; நான் சொல்லுகிற வழியே இழியில் அவ்வாயாஸஸாத்யத்வாதிகளின்றியிலே நீ நினைக்கிற பலம் பெறலாம்; நீ கணிசிக்கிற பரஹிம்ஸையையும் கைவிடவேண்டா” என்று ஶ்யேநவிதியை உபதேசிக்கும். ‘ஆனால், சேதமென்’ என்று இதிலே இழிந்து இத்தை அனுஷ்டிக்கும். அது போய் அநாயாஸேந பலபர்யந்தமானவாறே ஶாஸ்த்ரத்திலே ஒரு விஶ்வாஸவிஶேஷம் பிறக்கும். அத்தாலே க்ஷீணபாபனாம். அந்த பாபக்ஷயத்தாலே பிறரைக்கொன்று வயிறு வளர்க்கையில் ருசி கழிந்து, அஹிம்ஸாத் மகமாயிருப்பதொரு வழியாலே த்ரவ்யார்ஜநம் பண்ணுகையிலே ருசி பிறக்கும். அவ்வளவிலே “வாயவ்யம் ஶ்வேதமாலபேத பூதிகாம:” “சித்ரயா யஜேத பசுகாம:” “காரீர்யா வ்ருஷ்டிகாமே யஜேத” என்றாப் போலே, ஐஹிகபலஸாதனங்களை விதிக்கும்; இந்த ஐஹிகபலமான க்ஷேத்ராதிகளிலே, அல்பத்வபரிமிதகாலவர்த்தித்வாதிகளைக்கண்டு, பஹுளமாய் சிரகாலவர்த்தியான பலத்திலே ருசியுண்டானபோது “ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்ககாமோ யஜேத” என்றாப் போலே ஸ்வர்க்காதிஸாதநவிஶேஷங்களை விதிக்கும். அவை தன்னிலும், “ஸ்வர்க்கேபி பாதபீதஸ்ய க்ஷயிஷ்ணோர் நாஸ்தி நிர்வ்ருதி:” “அஸந் தோஷஶ்ச பவதி த்ருஷ்ட்வா தீப்தாம் பரஶ்ரியம்” இத்யாதி, களிற் சொல்லுகிறபடியே, கர்மஸாத்யமாகையாலும், கர்மக்ஷயத்திலே க்ஷீணமாவதொன்றாகையாலும், இடைவிடாமல் பதநபயம் நடையாடு கையாலும், பரஸம்ருத்தி பொறுக்கமாட்டாதபடியாலே உண்டது உருக்காட்டாதே தனக்குண்டான ஸுகம் கீழ் அற்றுப்போகையாலும், ஸ்ருஷ்டி ஸம்ஹாராதிகளுக்குக் கர்மீபவித்துப்போரும் தேஶமாகை யாலும் நிர்விண்ணனாய், து:க்கங்கள் நேராகக் கழலுகையிலே ருசி பிறந்ததாகில் “யோகிநாமம்ருதம் ஸ்தாநம் ஸ்வாத்ம ஸந்தோஷ காரிணாம் என்கிறபடியே ஆத்மப்ராப்திஹேதுபூதமான யோகவிஶே ஷத்தை விதிப்பது; அது தன்னிலும், “தெரிவரியவளவில்லாச் சிற்றின்பம்” என்கிறபடியே ப்ராக்ருதவிஷய போகத்திற்காட்டில் மினுங்கியிருந்ததேயாகிலும், ஸ்வாத்மாநுபவமாத்ரமாகையாலே விதவாபோகத்தோபாதி ஸங்குசிதமாயிருக்குமென்று, தத்ஸங்கோச நிபந்தனமான உபேக்ஷை பிறந்ததாகில், “ஆநந்தோ ப்ரஹ்ம”  “ஆநந்தமய:” “ஆநந்தயாதி” “ஆநந்தீபவதி” “விவிலின்பம் மிகவெல்லை நிகழ்ந்தனன் மேவியே” என்கிறபடியே, தன்னோடு கிட்டினாரையடைய பரமாநந்திகளாகப் பண்ணும்படி ஆனந்தமயனான ஸர்வேஶ்வரனைப் பெறுகைக்கு உபாயமான கர்மஜ்ஞாநாதிஸாதத பரம்பரைகளை விதிப்பது; அந்த ஸாதனங்களுடைய துஷ்கரத்வ ஸாபாயத்வசிரகால ஸாத்யத்வ விளம்ப்யபலப்ரதத்வாத்யநுஸந்தா னத்தாலே இளைத்தவனுக்கு, அந்த ஸாதனங்களுக்கு எதிர்த் தட்டாயிருக்கும் ஸாதனவிஶேஷத்தை விதிப்பதாய்ப் போருகிற தாகையாலே, பரமபுருஷார்த்தலக்ஷணமோகத்தை விதிக்கலாவது –  தத்வ்யதிரிக்த ஸகலபுருஷார்த்தங்களிலும் ஜூகுப்ஸை பிறந்த வனுக்கு, அந்த புருஷார்த்தத்துக்கு ஸாதநமான சரமோபாயத்தை விதிக்கலாவது – முமுக்ஷுவுக்கு ஸம்ஸாரத்திலுண்டான பயமடைய இஸ்ஸாதனங்களிலே உடையனாயிருக்குமவனுக்கு. ஆக, இவை யிரண்டும் அந்திகாரிகளுக்கு உபதேஶிக்கைக்கு யோக்யதையில்லா மையாலே அதிகாரிகளாகைக்காக தத்தத்குணாநுகணமான புருஷார்த்த தத்ஸாதனங்களை விதிக்கிறது.

பூர்வகண்டவிவரணம்

                    ஆக, திருமந்த்ரார்த்தத்தை விஶதீகரிக்கிற த்வயத்தில் பூர்வார்த்தம் பதத்ரயாத்மகமாய், “தஸ்மாந் ந்யாஸ மேஷாம் தபஸாமதிரிக்தமாஹு” “முமுக்ஷுர்வை ஶரணமஹம் ப்ரபத்யே” “த்வாமேவ ஶரணம் ப்ராப்ய நிஸ்தரந்தி மநீஷிண:”  “ஸோஹம் த்வாம் ஶரணமபாரமப்ரமேயம் ஸம்ப்ராப்த:” “ஶரணம் தேவ்ரஜம் விபோ” ஶரண்யம் ஶரணம் பாதோ கோவிந்தம் நாவஸீததி” “ஶரணம் வ்ரஜ” “மாமேகம் ஶரணம் வ்ரஜ” இத்யாதிளிலே முமுக்ஷுவுக்குக் கர்த்தவ்யமாகச் சொல்லப்படுகிற ப்ரபத்தியையும், ப்ரபத்தவ்யவிஷயவிஶேஷத்தையும், அத்தை அச்சமற ஆஶ்ரயிக்கலாம்படி பண்ணித் தரும் புருஷகார விஶேஷத்தையும் சொல்லுகிறது.

ஸ்ரீஶப்தார்த்தம்

                      அதில், பதத்ரயாத்மகமான ப்ரதமபதத்தில் ஸ்ரீஶப்தம், புருஷகாரத்தைச் சொல்லுகிறது. உபாயம் உபேயார்த்தமா யிருக்கச்செய்தேயும், வ்யுத்பத்திவேளையின்றியிலே அநுஷ்டான வேளையாய், உபாயாநுஷ்டாநாநந்தரம் உபேயஸித்தியாகையாலே. ப்ரதமோபாத்தமானவோபாதி இவ்வுபாயஸ்வீகாரத்துக்கு முன்னே வேணுமே சேரவிடும் புருஷகாரமும்; ஆகையாலே ப்ரதமத்திலே புருஷகாரபாவத்துக்கு ஏகாந்தமான ஸ்வபாவவிஶேஷங்களோடே கூடியிருக்கிற வஸ்துவிஶேஷத்தை நிர்தேசிக்கிறது. ஸ்ரீஶப்தம்.

                    அந்த ஸ்வபாவங்களாவன:- புருஷகாரமாக நினைக்கிற வஸ்துவைப் பற்றும்போது வேறொரு புருஷகாரம் தேட வேண்டாதபடி, இவனோடே ஒரு ஸம்பந்த விஶேஷமுண்டாகையும், இவன் நினைக்கிற விஷயத்தோடே சேர்க்கும்போது இவன்றன்னோ பாதி, தனக்கு வேறொரு புருஷகாரம் வேண்டாதபடி அவ்விஷயத் தோடே ஒரு ஸம்பந்தவிஶேஷமுண்டாகையும்; ஆக, இரண்டுமிறே புருஷகாரவஸ்துவுக்கபேக்ஷிதம். அவை இரண்டு ஸ்வபாவ விஶேஷத்தையும் “ஶ்ரிங்–ஸேவாயாம் என்கிற தாதுவிலே “ஸ்ரீயதே” “ஶ்ரயதே” என்கிற வ்யுத்பத்தித்வயத்தாலுமாக ப்ரகாஶிப்பிக்கிறது. வ்யுத்பத்தித்வயத்தாலும் “ஸேவிக்கப்படாநின்றாள்; ஸேவியா நின்றாள்” என்று, ஸேவாவிஷயமாயிருக்கும்; ஸேவைக்கு ஆஶ்ரயமுமாயிருக்குமென்கிறது. “ஈஶ்வரீம் ஸர்வபூதாநாம்” “அஸ்யே ஶாநா ஜகத:” இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே, பகவத் வ்யதிரிக்த ஸகலபதார்த்தங்களுக்கும் ஈஶ்வரியாயிருக்கையாலே, தரிவிதாத்ம வர்க்கத்தாலும் ஸேவிக்கப்படாநிற்கும். ஆகையாலே ஸேவாவிஷயபூ,தையாயிருக்கக்கடவள், “விஷ்ணுபத்நீ” “விஷ்ணோஶ் ஶ்ரீ:” “ஹ்ரீஶ்ச தே லக்ஷ்மீஶ்ச பத்ந்யௌ” இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே, பத்நீத்வேந ஈஶ்வரனுக்கு ஶேஷ பூதையாயிருக்கையாலே, அவனை ஸேவியாநிற்கும். ஆகையாலே ஸேவைக்கு ஆஶ்ரயமுமாயிருக்கும். ஆனபோதிறே கர்ம கர்த்ருபாவ விரோதமின்றிக்கேயொழிவது. மாதாவாகில் ப்ரஜைகளுக்கு ஸ்வாமிநி யுமாய் பார்த்தாவுக்கு ஶேஷபூதையுமாயிறே இருப்பது, “த்வம் மாதா ஸர்வலோகாநாம் தேவதேவோஹரி: பிதா” என்னக்கடவதிறே. ஆக, மாத்ருத்வத்தாலே சேதனரோடே நித்யஸம்பந்தமுண்டாகையாலும், பத்நீத்வேந ஈஶ்வரனோடே நித்யஸம்பந்தமுண்டாகையாலும் புருஷகாரபூதை பிராட்டி என்னுமிடத்தை வ்யுத்பத்தித்வயத்தாலும் சொல்லிற்றாயிற்று.

                    புருஷகாரபாவத்துக்கு ஏகாந்தமாக இவளுக்குச் சொன்ன உபயஸம்பந்தத்துக்குமுண்டான ப்ரயோஜனவிஶேஷத்தைச் சொல்லுகிறது; “ச்ருணோதீதி ஸ்ரீ:” “ஶ்ராவயதீதி ஸ்ரீ:” என்கிற நிருக்தம், “ஶ்ருணோதி” என்று, கேட்குமென்கையாலே, சேதநரோ டுண்டான பந்தகார்யத்தைச் சொல்லுகிறது. “ஶ்ராவயதி” என்று, கேட்பியாநிற்குமென்கையாலே ஈஶ்வரனோடுண்டான பந்தகார்யத் தைச் சொல்லுகிறது.

                       அதாவது:- இவன் “ஈஶ்வரதத்வமில்லை” என்று எழுத்திடுமென்றும், இவன் உருமாயாதபடி இராமடமூட்டு வாரோபாதி, கண் காணாமல் நோக்கிப் போருவது; கரணகளேபர விதுரமாய் அசித்கல்பமாய்க் கிடக்க, அபேக்ஷாநிரபேக்ஷமாகவே தயமானமநாவாய்க்கொண்டு கரணகளேபரங்களைக்கொடுப்பது; பின்பு, இவற்றுக்கு ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஶக்தியுண்டாகைக்காக அநுப்ரவே ஶிப்பது; பின்பு, அஸுர ராக்ஷஸாதிகள் காலிலே துகையுண்ணும் போது, “நாட்டில் பிறந்து படாதன பட்டு” ராமக்ருஷ்ணாதி ரூபேண மார்பிலே அம்பேற்று, எதிரிகளை இடறிக்கொடுப்பது; “நம்மைப் பெறுகைக் கீடாயிருப்பதொரு அறிவுண்டாமோ” என்னும் நோயாசையாலே, வேதங்களையும், வைதிகரையும். ப்ரவர்த்திப்பித்து, இவை படுகிற நோவைக் கண்டு, இவர்களிலும் “ப்ருசம் பவதி து:க்கித:” என்று திருவுள்ளம் மிகவும் உடைகுலைப்படுவது; ஸாத னங்களாகக் கொடுத்த கரணகளேபரங்களே பாதகங்களானால், அவற்றைக் கொண்டு அத:பதியாமைக்காக, அவற்றை ஒத்திட்டுவைப்பது; பின்பு, “ஸ ஏகாகீ ந ரமேத” என்று நித்யவிபூதி யுக்தனான தான் இவற்றையொழியச் செல்லாமையுடம்பு வெளுப்ப தாம்படியான நிருபாதிகபந்தமும், “ரக்ஷ்யாபேக்ஷாம் ப்ரதீக்ஷதே” என்கிறபடியே, இவை படுகிற நோவு பொறுக்கமாட்டாமையாலே “நாம் இழிந்து நோக்குகைக்கு, சிறிது இடம் பண்ணித் தருவது காண்!” என்று அவஸரப்ரதீக்ஷனாவது; “அரி: ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய:” என்று “நான் அழிந்தேயாகிலும் ஆஶ்ரிதரை ரக்ஷிக்கக்கடவேன்” என்பது: “தோஷோ யத்யபி தஸ்யஸ்யாத் ந த்யஜேயம் கதஞ்சந” “ஸமோஹம் ஸர்வபூதேஷு” என்னும் ஸ்வபாவவிஶேஷமும்; ஏவமாதிகளடைய ஆஶ்ரயணீயனான ஸர்வேஶ்வரன் பக்கலிலே ஸமவேதமாயிராநிற்கச்செய்தேயும், அப்படிப்பட்டிருக்கிற அவனுடைய வாத்ஸல்யஶ்தளமான திருவுள்ளத்தை, “க்ரோத மாஹாரயத் தீவ்ரம் என்கிறபடியே க்ரோதத்துக்கு இரையாக்கிக் கடல் கொதித்தாப் போலே கொதிக்கும்படி பண்ணுவது; “ப்ரியம்வத:” என்கிறபடியே ம்ருத ஸஞ்ஜீவிநியான வாகம்ருதத்தை “க்ஷிபாமி” “ந க்ஷமாமி” “ஹந்யாம்” என்கிறபடியே, விஷதாரை போலே ஶ்ரவணகடுகமாம்படி பண்ணுவது; ஸர்வோஜ்ஜீவனஹேதுவான அவனுடைய திவ்யவ்யாபாரங்களை நரகாதிகளிலே தள்ளிக் குட்டிக்கொலையாக நிறுத்தறுத்துத் தீர்த்துகை யிலே அதிக்ருதமாம்படியும், அநாதிகாலம் பண்ணிப்போருகிற பகவதபசார பாகவதாபாசாராஸஹ்யாபசார நாநாவிதாநந்தாபசாரா நுஸந்தாநத்தாலே குடல் கரிந்து அநாதிகாலம் கர்மங்களை நிறுத்தறுத்துத் தீர்த்துப்போருகிற அவனை ஆஶ்ரயிக்கப் புகுகிறது; “அவன் உதிரக்கை கழுவாதபடி பண்ணிப்போந்த நான் ஆஶ்ரயிக்கப் புகுகிறேன்; அதுக்குக் கைதொடுமான கர்மம் இலச்சினைப்படியே குறியழியாமல் கிடக்கிறது.” என்கிற பயாதிஶயத்தாலே தேங்கி, ஸம்ஸாரத்தில் வெம்மையும், பகவத்விஷயத்தில் வைலக்ஷண்யமும் வடிம்பிடுகையாலே பண்டுபோலே ஆஶ்ரயணவிமுகனாகமாட்டாதே, துஷ்கரத்வாதிகளாலே ஸாதநாந்தரங்களில் காலிடக்கூசி, புறம்பே போக்கடியற்றுத் தெகிடாடுகிற இச்சேதநன் ‘ஈச்வரன் திருவுள்ளத்தில் நடையாடுகிற அழல் தீயை ஆற்றி, நம்மைச் சேரவிடுகைக்கு நம்மோடும் அவனோடும், நிருபாதிகஸம்பந்தத்தை உடையளாய், “ந கச்சிந் நாபராத்யதி” என்னுமிவளையொழியப்புகுவாசலில்லை என்று காகவ்ருத்தாந்தாதிமுகத்தாலே அறுதியிட்டு, “ப்ரணிபாதப்ரஸந்நா ஹி மைதிலீ ஜநகாத்மஜா என்று புருஷகாரநிரபேக்ஷமாக அஞ்ஜலிமாத்ர ஸுலபையான இவளை வந்து கிட்டி, “மாதர் மைதிலி ராக்ஷஸீஸ் த்வயி ததைவார்த்ரா பராதாஸ் த்வயா ரக்ஷந்த்யா பவநாத்மஜால்லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா” என்கிறபடியே, “புறம்புள்ள பொருத்தமடைய அற்று, ஈச்வரனுக்காளாகாதபடி, பூர்வாபராதத்தாலே அஞ்சின எனக்கு நிருபாதிகஜநநியான தேவரீர் திருவடிகளொழியப் புகலில்லை, இனி நான் ஈஶ்வரனுடைய இரக்கத்துக்கு இரையாய் ரக்ஷிதனாதல்; அவனுக்கு ஸ்வாதந்த்ர்ய பாத்ரமாய் நாஶத்தோடே தலைக்கட்டுதலொழிய இளைப்பாறுகைக் கிடமில்லாதபடி அநந்யகதி; இனி, அடியேனுக்கு ஹிதமின்னதென் றறிந்து ரக்ஷித்தருளுகை தேவரீருக்கே பரம்.” என்று இவன் சொன்ன வார்த்தையைக் கேட்கையும்;

                       அதுக்கு மேலே வெந்நீருக்குக் குளிர்நீர் போலே நிரங்குஶஸ்வாதந்த்ர்யத்தாலே “அபித: பாவகோபமம்” என்கிறபடியே அநபிபவநீயனான ஈச்வரனைத் தன்னுடைய போக்ய தாதிஶயத்தாலே பதமாக்கி “நாயந்தே! இச்சேதநனை அங்கீகரித்தருளீர்” என்னும் “ஆவதென்; ‘ஶ்ருதிஸ்ஸ்ம்ருதிர் மமைவாஜ்ஞா’ என்று நம்முடைய ஆஜ்ஞாரூபமான ஶாஸ்த்ரமர்யாதையை அதிலங்கித்து நம் நெஞ்சு புண்படும்படி தீரக்கழிய அபராதம் பண்ணிப்போந்தவ னல்லனோ? இவனை அங்கீகரிக்கையாவதென்?” என்னும் ஈஶ்வரன்; “அவனுடைய பூர்வாபராதங்களை உம்முடைய பொறைக்கிலக்காக்கி ரக்ஷித்தருளீர்” என்னும் பிராட்டி; “பொறையை நோக்குகைக்காக ஶாஸ்த்ரமர்யாதையைக் குடநீர் வழியவோ” என்னும் ஈச்வரன்; “ஶாஸ்த்ரமர்யாதையை நோக்குகைக்காக உம்முடைய ஸ்வாபாவிக மான க்ஷமாதத்வத்தைக் குடநீர் வழியவோ” என்னும் பிராட்டி; “க்ஷமையை நோக்கில், ஶாஸ்த்ரமர்யாதை, குலையும்; ஶாஸ்த்ர மர்யாதையை நோக்கினால் க்ஷமாதத்வம் குலையும்; இரண்டும் குலையாதொழிய வேண்டும்; செய்யப்படுவதென்?” என்னும் ஈஶ்வரன், “கிங்கர்த்தவ்யதாகுலனாயிருந்தால் அத்தனையே; அவை இரண்டும் குலையாதபடி வழி சொல்லுகிறேன்; அப்படியே செய்தருளீர்.” என்னும் பிராட்டி; “இரண்டும் குலையாமல் இச்சேதநனை நோக்க வழியுண்டா மாகில் நமக்குப் பொல்லாதோ? சொல்லிக்காண்” என்னும் ஈஶ்வரன்; “ஆனால், ஶாஸ்த்ரமர்யாதையை விமுகர் விஷயமாக்குவது; உம்முடைய க்ஷமையை அபிமுகவிஷயமாக்குவது; இரண்டும் ஜீவித்ததாயறும்” என்னும் விஷயவிபாகம் பண்ணிக்கொடுக்கும் பிராட்டி; அத்தைக்கேட்டு “அழகிய விபாகம்!” என்று இச்சேதநனை அங்கிகரித்தருளும் ஈஶ்வரன்; ஆக, இப்படி ஸாபராதஜந்துவை ஈஶ்வரன் அங்கீகரித்தருளும்படியான வார்த்தைகளைக் கேட்பித் தருளுகையும்.

மதுப்பின் அர்த்தம்

                       ஆக, புருஷகாரத்வஸமர்ப்பகமான ஸ்வபாவ விசேஷங்களும், தத்கார்யங்களும் தர்மிக்ராஹகமான ஸ்ரீஶப்தத்தாலே சொல்லிற்றாயிற்று. இப்படி, புருஷகாரபூதையாயற்றாலும் இவள் அஸந்நிஹிதையாயிருக்குமாகில், “சஞ்சலம் ஹி மந:” “சலசித்தம்

“நின்றவா நில்லா நெஞ்சு” என்கிறபடியே, சூறாவ(ழி)ளிக்காற்றுப் போலே சுழன்று வருகிற இஸ்ஸம்ஸாரி சேதநருடைய நெஞ்சு தளமாக அங்குரித்த ருசியாகையாலே, க்ஷணபங்குரையாயிருக்கு மாகையாலே, அது தீவதற்கு முன்னே ஈஶ்வரனை ஆஶ்ரயிக்கைக்கு விரகற்றுப் பழைய குருடே ஆய்விடும் என்கிற ஶங்கையிலே, ருசி பிறந்தபோதே ஆஶ்ரயிக்கலாம்படி ஆஶ்ரயணீயவஸ்துவோடே இவள் நித்யஸம்யுக்தையாய் இருக்கும் என்கிறது – மதுப்பு.

                      இம்மதுப்பு, ‘நித்யயோகே, மதுப்’ ஆகையாலே இவள் நித்யாநபாயிநியாய் இருக்குமென்கிறது. அதுக்கு ஹேது என்னென்னில்: ஜ்ஞாநாநந்தலக்ஷணமான பகவத்ஸ்வரூபத்துக்கு ஜ்ஞாநாநந்தலக்ஷணமான ஆத்மஸ்வரூபத்திற்காட்டில் வ்யாவர்த்தக மான ஹேயப்ரத்யநீகத்வவிபுத்வஶேஷித்வாதிகளோபாதி, ஶ்ரிய:பதித் வமும், மருதுபாதாநகமான கடகரகாதிகளில் ப்ருதுபுத்நோதராகார ரூபையான கடத்வஜாதி கடத்துக்கு கரகாதிவ்யாவ்ருத்தியைப் பண்ணு கிறவோபாதி, வ்யாவ்ருத்தியைப் பண்ணித்தரும்படி, ஸ்வரூபநிரூபக பூதையாகையாலும், ஸ்வாபாவிகமாகவும் ஒளபாதிகமாகவும் பகவத் ஸாரூப்யம் பெற்றிருக்கிற நித்யருடையவும் முக்தருடையவும் விக்ரஹங்களிற்காட்டில் வ்யாவ்ருத்தமாம்படி, “ஸ்ரீவத்ஸவக்ஷா:” என்கிறபடியே, அஸாதாரணதிவ்யமங்களவிக்ரஹத்துக்கு நிரூபகபூதை யாகையாலும், ஒரு மிதுனவிஷயகிஞ்சித்காரத்தை யொழியில், க்ஷணகாலமும் தரிக்கமாட்டாதபடியான நித்யரையும் முக்தரையும் நித்யகைங்கர்யம் கொள்ளுகைக்காக. “ஶ்ரியா ஸார்த்தமாஸ்தே” என்கிறபடியே நிரந்தரஸம்ஶ்லேஷம் பண்ணிக்கொண்டிருக்கை யாலும், விபவாதிகளிலும் வந்தால், “தேவத்வே தேவதேஹேயம் மநுஷ்யத்வே ச மாநுஷீ, விஷ்ணோர் தேஹாநுரூபாம் வை கரோத்யேஷாத்மநஸ் தநும்” என்கிறபடியே அவ்வோ அவ்வோ அவதாரஸஜாதீயமான விக்ரஹபரிக்ரஹம் பண்ணிவந்து அவதரிக்கை யாலும், அதுக்கு மேலே “அகலகில்லேனிறையும்” என்று மார்பிலே இருந்து மடலெடுக்கும்படி பகவத்போகத்திலே ஆழங்காற்பட்டு, “ஜலாந் மத்ஸ்யாவிவோத்த்ருதௌ” என்கிறபடியே க்ஷணகால விஶ்லேஷாஸஹையாய் இருக்கையாலும்,  “ஸ்வவைஶ்வரூப்யேண ஸதாநுபூதயாப்யபூர்வவத் விஸ்மயமாததாநயா” என்கிறபடியே பகவதநுபவாவகாஹநம் பண்ணி நித்யமுக்தஸங்கங்கள் “ஸ ஏகதா பவதித்விதாபவதி, த்ரிதாபவதி, ஶததாபவதி, ஸஹஸ்ரதாபவதி” என்று, அனேகசரீரபரிக்ரஹம் பண்ணி நிரந்தராநுபவம் பண்ணி னாலும், “நிரவத்ய: பர: ப்ராப்தே:” என்கிறபடியே அநுபூதாம்ஶம் அல்பமாய், அநுபாவ்யாம்ஶமே அபரிச்சிந்நமாம்படியான பெரிய வைபவத்தையுடைய தானும் தன்னுடைய ஜ்ஞாநஶக்த்யாதிகளை யும், ஸ்வவைஶ்வரூப்யத்தையும் நேர்ந்து ஒருகாலகலைகதேஶமும் மலடு பற்றாதபடி நிரந்தராநுபவம் பண்ணாநின்றாலும், ஆனைக்குக் குதிரை வைத்து அந்த வைஶ்வரூப்யாநுபவமடைய போகோபோத் காதகேளீசுளகிதமாம்படி பண்ணவற்றான அவளுடைய நிரவதிக போக்யதாதிஶயத்தாலே மார்பிலே இருத்தி மடலெடுக்கும்படி க்ஷணகாலமும் விரஹாஸஹனாகையாலும், இவள் நித்யஸம்யுக்தை யாயிருக்கும்.

                     “ஸ்ரீயதே” என்கிற வ்யுத்பத்தியாலே த்ரிவிதாத்ம வர்க்கத்திற்காட்டில் யாவரும் சொல்லிற்று. மதுப்பாலே அல்லாத நாச்சிமாரிற்காட்டில் வ்யாவ்ருத்தி சொல்லிற்று. அல்லாதவர்களுக்கு நித்யஸம்யோகஹேதுபூதங்களான ஸ்வரூபநிரூபகத்வாதிக ளில்லையே. ஆக இவள் சொன்னதொன்றை மேல் விழுந்து கேட்கும் படியான இவானடுண்டான நிருபாதிகபந்தத்தாலும், நித்யாநபாயிநி யாய் நின்று, “அல்லிமலர்மகள் போகமயக்குக்களாகியும் நிற்கும்” என்னும்படி பண்ணும் தன்னுடைய வால்லப்யாதிஶயத்தாலும் நிருத்தமாம்படியான தன்னுடைய உக்திவிஶேஷங்களாலும், அவனுடைய ஸ்வாதந்த்ர்யத்தை ஆற்றிச்சேரவிட க்ஷமையாகை யாலும், புருஷகாரபாவம் சொல்லிற்றாயிற்று –

                          ஸ்ரீமந்நாராயணசரணௌ” என்று உபாயதயா வக்ஷ்யமாணனான நாராயணனுக்கு விஶேஷணமாக ஸ்ரீமத்தையைச் சொல்லாநின்றால், நாராயணஶப்தத்தினால் சொல்லப்புகுகிற குணவிஶேஷங்கள் விஶேஷணத்வேந உபாய ஶரீரத்தில் அந்விதமாகிறவோபாதி, இவளும் உபாயாவயவமாக ப்ராப்தையுமாய், மாதாபிதாக்கள் இருவரும் சேரவிருந்து ப்ரஜாரக்ஷணம் பண்ணுகை ப்ராப்தமுமாய், அதுக்கு மேலே “வேரி மாறாத பூமேலிருப்பான் வினை தீர்க்கும்” என்று உபாயக்ருத்யமான விரோதிநிவர்த்தகத்வம் இவ்வர்த்தத்திலே நிஷ்டரான நம்மாழ்வார் திருவுள்ளத்தாலுமுண்டாய், ப்ரதேஶாந்தரங்களில் இவளைப் புருஷகாரமாக நினைத்துச் சொல்லுகிறார்களென்கிற அவையும் உபாயபாவத்திலே அந்வயிப்பிக்க யோக்யமுமாய், அதுக்கு மேலே “அரி ப்ராணாந் பரித்யஜ்ய ரக்ஷிதவ்ய:” என்று மேலே அநுஷ்டிக்கப்புகுகிற ப்ரபத்திதானே, புருஷகாரக்ருத்யத்தைச் செய்ய வற்றாகையாலும், மாட்டாதாகில், இவள் ஸ்வாதந்த்ர்யத்தை ஆற்றிச் சேரவிட, உபாயபூதனான ஈச்வரன் ரக்ஷிக்க அமைந்திருக்க உபாயாந்விதமான இவனுடைய ப்ரபத்த்யநுஷ்டானம் நிஷ்பலமாம் படியுமாயிருக்க, இவளுக்கு உபாயஶரத்திலே அந்வயமில்லை, புருஷகாரத்திலே என்று ஒதுக்கித் தருவார் ஆரென்னில்:

                      விஶேஷணத்வமுண்டேயாகிலும், விஶேஷண பூதமான குணவிஶேஷங்களோபாதி, உபாயோபயோகித்வம் அவளுக்கில்லாமையாலும், ஸமாஶ்ரயணைகாந்தமான ஸௌஶீல் யாதி, குணோதயவிரோதியான ஸ்வாதந்த்ர்யத்தைப் புருஷகாரபூதை யான இவள் ஆற்றினாலும், அவன் கார்யம் செய்யும்போதைக்கு “ரக்ஷ்யா பேக்ஷாம் ப்ரதீக்ஷதே என்கிறபடியே உபாயப்ரார்த்தனா ரூபமான ப்ரபத்தி வேண்டுகையாலும், “வினைதீர்க்கும்” என்கிற இடம் “களைவாய் துன்பம் களையாதொழிவாய் களைகண் மற்றிலேன்” என்கிறவருடைய உக்தியாகையாலே, இத்திருவாய்மொழி அநுஸந்தித் தவர்கள் பக்கல் இவளுக்குண்டான ஆதராதிஶயப்ரகாஶகமாகை யாலும், இவளுக்குப் புருஷகாரபாவத்திலே நோக்காகக்கடவது.

                   இவளுக்கு, உபாயபாவத்தில் அந்வயமுண்டாகில், ஸாதநபூதமான கர்மஜ்ஞாநாதி,களுக்கு “பலமத:” “ஸ ப்ரீதோலம் பலாய” என்று, ஆராதநப்ரீதனான ஈஶ்வரமுகத்தாலே இஷ்டாநிஷ்ட ப்ராப்திபரிஹாரரூபமான பலஸித்தி இவளாலேயாதல், அங்ஙனன்றி யிலே பலோபபாதநஹேதுவான ஜ்ஞாநஶக்த்யாதிகளுக்கு உத்பாதகையாத லாகவேண்டும். தான் பலப்ரஸாதகையாகில், “யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித்” “பராஸ்ய ஶக்திர்விவிதைவ ஶ்ரூயதே ஸ்வாபாவிகீ ஜ்ஞாநபலக்ரியா ச “தேஜோபலைஶ்வர்யமஹாவபோத ஸுவீர்யஶக்த்யாதி, குணைகராசி:” என்று ஶ்ருதிஸ்ம்ருதிகளில் ஈஶ்வரனுக்குச் சொல்லுகிற ஜ்ஞாந ஶக்த்யாதிகுண விஶேஷங்களின்றியிலே ஒழியவேணும். உண்டாகில் இவளை யொழியவே ஈஶ்வரன்றானே கார்யம் செய்ய க்ஷமனே. அக்குணங் களை உத்பாதிக்கிறாளாகில் குணங்களுக்கு ஸ்வாபாவிகத்வமின்றியிலே ஒழியும்,

                        ஸௌஶீல்யாதிகளோபாதி திரோஹிதமான வற்றை ப்ரகாஶிப்பிக்கிறாளென்னில்; ஐகத்ஸ்ருஷ்டிஸ்திதிஸம்ஹா ராதிகளிலே இடைவிடாமல் விநியோகங்கொண்டு போருகிற ஜ்ஞாநஶக்த்யாதிகளுக்கு, ஸௌஶீல்யாதிதிரோதாயகமான ஸ்வாதந்தர்யத்தோபாதி ஒரு திரோதாநமில்லையே உண்டாகில் ஸ்ருஷ்ட்யாதிகள் நடவாதொழியவேணும். ஸர்வதா அந்விதையா மாகில் ஸ்வவிரோதிநிவ்ருத்தியில் “தத் தஸ்ய ஸத்ருஶம் பவேத்” என்றிருக்கக் கூடாதே. குணவிஶேஷங்களே அமைகையன்றோ, “ஆஶம்ஸேயம் ஹரி ஶ்ரேஷ்ட்ட க்ஷிப்ரம் மாம் ப்ராப்ஸ்யதே பதி:. அந்தராத்மா ஹி மே ஶத்தஸ் தஸ்மிம்ஶ்ச பஹவோ குணா:” என்று தன் பக்கல் அநந்யோபாயத்வமும் அவன் பக்கல் குணவிஶேஷங்க ளுமே பலஸித்திக்கும் அபேக்ஷிதமாகத்தான் அறுதியிட்டு வைத்தது.

                            நாம் உபாயமாக யாதொரு வஸ்துவை ஸ்வீகரிக்கிறோம்; அவ்வஸ்துவுக்கு இவள் ஸ்வரூபம், நிரூபகமாகை யாலே, ப்ரணவத்தில் ப்ரதமபதத்திற்போலே “யத்யபி ஸச்சித்த:” என்கிற குணஸித்திந்யாயத்தாலே, அவர்ஜநீயமாய் அந்வயியாதோ? என்னில்: ஸ்வரூபநிரூபகத்வேந அவர்ஜநீயபந்தமுண்டேயாகிலும், உபாயதசையில், கண்டுகொள்வதொரு ப்ரயோஜநமில்லாமையாலே, ஸ்வரூபநிரூபகங்களான ஜ்ஞாநாநந்தங்களோபாதியும் ஸ்வரூபாஶ்ரய மான குணாந்தரங்களோபாதியும் குமரிருந்து போமத்தனை.

                                இவற்றுக்கு ப்ரயோஜனமின்றிக்கே ஒழிகைக்கு ஹேது அவனுடைய நைரபேக்ஷ்யமாகில், சில குணவிசே ஷங்கள் உபாயதயா அந்வயிக்கிறபடி என்னென்னில்: அவை கார்யோபயோகியாகையாலும், குணத்வேந அப்ருதக்புத்திப்ரவ்ருத்திக மாகையாலும், குணிகுணத்வாரா கார்யம் செய்கை நைரபேக்ஷ்யத் துக்குக் குறையில்லாமையாலும், அவற்றுக்குத் தட்டில்லை. இவள் கார்யாநுபயுக்தையாகையாலும், த்ரவ்யத்வேந ப்ருதக்புத்தி ப்ரவ்ருத்தி யோக்யதையுண்டாகையாலும், அத்தாலே உபாய நைரபேக்ஷ்யத் துக்குக் கொத்தையாயறுகையாலும், உபாயபாவத்தில் அந்வயமில்லை. ஆகையாலே, ஶேஷித்வதஶையிலும் ப்ராப்யத்வதசையிலும் ஒரு மிதுனமேயாக வேண்டினவோபாதி, உபாயதசையிலே ஸ்வேதரஸகல ஸஹாயாஸஹமாயிருக்கையாலே, இவளுக்கு உபாயபாவத்தில் அந்வயமின்றியிலே புருஷகாரபாவத்திலேயாகக்கடவது.

                         இச்சேதநனோட்டை ஸம்பந்தம், ஈஶ்வரனுக்கும் பிராட்டிக்கும் ஒத்திருக்க, அவன் புருஷகாரத்வாரா ஸமாஶ்ரயணீயனாகைக்கும், இவள் புருஷகாரபூதையாகைக்கும் ஹேது என்னென்னில்: அவன் புருஷோத்தமனாய், பும்ஸ்த்வப்ரு யுக்தமாய் வரும் காடின்யம் நடையாடுகையாலும், “தேவதோவோ ஹரி: பிதா” என்கிறபடியே பித்ருத்வப்ரயுக்தமாய் வரும் ஹிதபரத்வத் தாலும், அதுக்கு மேலே ஸ்வேதரஸகலபதார்த்த ஸார்த்த நிருபாதிக நிர்வாஹகனாகையாலே “தஹ: பச” என்னும்படியான க்ரௌர்யத் தாலும், அவனை ஆஶ்ரயிக்கும்போது புருஷகாரத்வாரா ஆஶ்ரயிக்க வேண்டும். இவள் நாரீணாமுத்தமையாகையாலே, ஸ்த்ரீத்வப்ரயுக்த மாய் வரும் மார்தவத்தாலும், “த்வம் மாதா ஸர்வலோகாநாம்” என்கிறபடியே மாத்ருத்வப்ரயுக்தமான வாத்ஸல்யாதிஶயத்தாலும், தத்தத்கர்மாநுகுணநிர்வஹணமில்லாமையால் வரும் மாதுர்யத் தாலும், அவனிற்காட்டில் இவளுக்கு நெடுவாசியுண்டாகையால் இவள் புருஷகாரபூதையாகக்கடவள்.

 

நாராயணபதார்த்தம்

                          ஆக ஸ்ரீமத்பதார்த்தத்தாலே ஆஶ்ரயணை காந்தமான விலக்ஷணபுருஷகாரயோகம் சொல்லிற்றாயிற்று. அனந்தரம், நாராயணபதம், இச்சேதநனுடைய பூர்வாபராததர்ஶனத் தாலே கடல் கொதித்தாப்போலே, ஸ்வாபாவிகமான ஸௌஶீல்யாதி கள் தலைசாயும்படி அத்யுந்நதமான ஸ்வாதந்த்ர்யத்தை ஆற்றி, புருஷகாரபூதையான பிராட்டி உத்பவித்த வாத்ஸல்யாதிகுணவிஶே ஷங்களைச் சொல்லுகிறது. ஸ்வாதந்த்ர்யாபிபூதமான குணோதய மிறே, புருஷகாரகார்யமாயறுவது.

                          இந்த குணோதயத்துக்குப் புருஷ காராபேக்ஷையுண்டாகில், உபாயம் ஸாத்யமுமாய், ஸாபேக்ஷமுமாம். அநுத்பூதமான குணங்கள் உத்பூதங்களாகிறதாகையாலே, உபாயத் துக்கு ஸாத்யத்வமுண்டாம்; உபாயஸ்வரூபோத்பத்திக்கு ஸஹகாரி ஸாபேக்ஷத்வமுண்டாகையாலே, பக்தியோபாதி அங்கஸாபேக்ஷத்வ முமாம், ஸ்வரூபகதமாய் திரோஹிதமாய்க் கிடந்தத்தை ப்ரகாஶிப்பிக்குங்காட்டில் புருஷகாரத்துக்கு அங்கஸாதநத்வம் உண்டாமோ? என்ன ஒண்ணாதபடி, ஆத்மதர்மமான பக்தி விஶேஷத்துக்கு ப்ரகாஶகமான கர்மயோகாதிகளை அங்கஸாதந மாகச் சொல்லாநின்றது. அதுக்குமேலே, ஆத்மதர்மமாய் அப்ரகாஶ மான அபஹதபாப்மத்வாதி, குணங்களைப் ப்ரகாஶிப்பிக்கிற ஈச்வரனுக்கு ப்ரதானஸாதநத்வவ்யவஹாரம் உண்டாகாநின்றது. ஆகையாலே உபாயாந்தரவ்யாவ்ருத்திரூபமான ஸித்தத்வ நைரபேக்ஷ்யங்கள் இரண்டும் குலையுமே என்னில்: உபாயமாவது:- இஷ்டாநிஷ்டப்ராப்திபரிஹாரகரமாய் இருப்பதொன்றாய், அப்படிப்பட்ட உபாயமாவது, ஜ்ஞானஶக்த்யாதி குணவிசிஷ்டனான ஈஶ்வரனாகை யாலே வாத்ஸல்யாதிகுணங்களுக்கு உபாயத்வமில்லை; உள்ளது. ஆச்ரயணைகாந்ததையே. ஆகையாலே உபாயபூதமான ஜ்ஞான ஶக்த்யாதிகளுடைய உத்பத்யாதிகளுக்குப் புருஷகாராபேக்ஷை இல்லாமையாலே, உபாயாந்தரவ்யாவ்ருத்திரூபமான ஸித்தத்வத்துக் கும் நிரபேக்ஷத்வத்துக்கும் ஒரு குறையில்லை. ஆகையிறே “மாம்” என்கிற ஸ்வீகார்ய விஷயத்திலே ஸ்வீகாரோபயோகியான ஸௌஶீல்யாதிகளை அநுஸந்தித்து, “அஹம்” என்கிற பாப விமோசகன் பக்கலிலே ஜ்ஞாநஶக்த்யாதிகளை அநுஸந்தித்தது.

                   வாத்ஸல்யமாவது:- “வத்ஸம் லாலயதி” என்கிற வ்யுத்பத்தியாலே. அன்றீன்ற கன்றின்பக்கல் தாய் பண்ணும் வ்யாமோஹம். அதாவது:- சுவடுபட்ட புல்லையும் காற்கடை கொள்ளும் தஶையிலும், தன் கடையினின்றும் புறப்பட்ட கன்றினுடைய அளும்பு நாற்றத்தையே தனக்கு போக்யமாக ஸ்வீகரித்துத் தன்னுடைய க்ஷீரத்தாலே அத்தை தரிப்பிக்குமாப் போலே, “தோஷோ யத்யபி தஸ்ய ஸ்யாத்” என்கிறபடியே ஆஶ்ரித கதமான தோஷங்களைத் தன் பேறாக மேல்விழுந்து போக்கித் தன் குணங்களாலே அவர்களை தரிப்பிக்கை. ஆத்மகுணாநுஸந்தான மாகையாலே, ஆஶ்ரயணாநந்தரம் வரும் பாபவிமோசன வ்யாபாரத் தோடு விரோதம் பிறவாது.

                       ஸ்வாமித்வமாவது:- இந்த வாத்ஸல்யத்துக்கு ஊற்றாய், “ஈச்வரப்ராப்தி ஆத்மாவுக்கன்று; ஆத்மப்ராப்தி ஈஶ்வரனுக்கு” என்னும்படி இச்சேதநவஸ்துவை உடையனாகை, உடையானிறே உடைமையைப் பெறுகையிலே யத்னம் பண்ணுவான்.

                       வத்ஸலனுமாய் வகுத்தவனுமாயிருந்தாலும், “தமஸ: பரஸ்தாத்” “ரஜஸ்: பராகே” என்கிற தேஶவிஶேஷத்திலே, “அவாக்யநாதர:” என்கிறபடியே, தன்னுடைய விஶ்ருங்கலிதமான ஐஶ்வர்யமடையத் தோற்றும்படி இருக்குமாகில், இத்தேஶத்திலே அதிக்ஷூத்ரனான இச்சேதநனாலே ஆச்ரயிக்க ஒண்ணாதே? என்னவேண்டாதபடி, “மஹதோ மந்தைஸ்ஸஹ நீரந்த்ரேண ஸம்ஶ்லேஷஸ்வபாவ: ஶீலம்” என்று பெரியனான தான் தன்னைத் தாழவிட்டு, “ஹே! க்ருஷ்ண! ஹே! யாதவ! ஹே! ஸகே” என்னலாம்படி சிறியாரோடே ஒரு நீராகக் கலந்து பரிமாறுகையும், பரிமாறாநின்றால் “ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தஶரதாத்மஜம் என்கிறபடியே, தன் வைபவம் தன் திருவுள்ளத்திற் படாதபடி பரிமாறுகையும் ஸெளஶீல்யமாவது.

                         இனி, ஒரு தேஶகாலவிப்ரகர்ஷாதிகளாலே நினைத்தபோது ஆஶ்ரயிக்கை அஶக்யமாயிருக்கையன்றியிலே, எப்போதும் எல்லாராலும் ஆஶ்ரயிக்கலாம்படி. அர்ச்சாவதார ஸுலபனாகை – ஸௌலப்யமாவது. பரமபதம், க்ஷீராப்தி தொடக்க மானவை, தேஶவிப்ரகர்ஷத்தாலே ஆஶ்ரயிக்கவொண்ணாது. விபவாதிகள் இதாநீந்தநர்க்கு காலவிப்ரகர்ஷத்தாலே ஆஶ்ரயிக்க வொண்ணாது. அந்தர்யாமித்வாதிகள் அசக்ஷூர்விஷயமாகயாலே ஆஶ்ரயிக்கவொண்ணாது. இனி, இந்த காலவிப்ரகர்ஷத்தாலே வரும் குறையுமின்றியிலே, தேஶவிப்ரகர்ஷத்தாலே வரும் குறையுமின்றி யிலே, அசக்ஷூர் விஷயத்வத்தால் வரும் குறையுமின்றியிலே, “பின்னானார் வணங்கும் சோதித் திருமூழிக்களம்” என்கிறபடியே ஸர்வஸமாஶ்ரயணீயமாயறுவது, உகந்தருளின நிலமேயாகையாலே ஸர்வஸௌலப்யம் பூர்ணமாயிருப்பது அர்ச்சாவதாரத்துக்கே.

                            தன் தோஷங்கண்டு இறாயாமைக்கு, ,ஸ்வாமித்வத்தை அநுஸந்திக்கவேணும். அவன் அப்ராப்தனென்று இறாயாமைக்கு, ஸ்வாமித்வத்தை அநுஸந்திக்கவேணும். மேன்மை கண்டு இறாயாமைக்கு ஸௌஶீல்யத்தை அநுஸந்திக்கவேணும். அதீந்த்ரியனென்று இறாயாமைக்கு ஸௌலப்யத்தை அநுஸந்திக்க வேணும். தன்னுடைய தோஷமாதல்; அவனுடைய அப்ராப்தியாதல்; அவன் மேன்மையாதல்; அவன தீந்த்ரியத்வமாதல்; இவை, நெஞ்சிலே நடையாடில், ஆஶ்ரயிக்க யோக்யதை யில்லாமையாலே, அவற்றுக் கெதிர்த்தட்டாய், ஆச்ரயணைகாந்தமாய், புருஷகாரபூதையான பிராட்டி யாலே உத்பவிக்கப்பட்டு, பின்னை அவள்தானே அழிக்கநினைக்கிலும், “அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் த்வாம் வா ஸிதே ஸலஷ்மணாம்” த்வயி கிஞ்சித் ஸமாபந்நே கிம் கார்யம் ஸீதயா மம” “தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல் என்னடி யாரது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார்” என்னும்படி பண்ணக்கடவதாய், ப்ரதமாசார்யரான நம்மாழ்வாராலே ஆஶ்ரயணைகாந்தமாக “நிகரில் புகழாய்! உலகம் மூன்றுடையாய்! என்னையாள்வானே! திருவேங்கடத்தானே!” என்று வாத்ஸல்யாதி,க்ரமத்திலே அநுஸந்திக் கப்பட்டிருக்கிற நாலு குணங்களையும் சொல்லிற்றாயிற்று.

                               ஈச்வரன் ஆஶ்ரயணீயனாமிடத்தில், ஆஶ்ரயணஸௌகர்யமுண்டாமளவு போராதே. ஸம்ஸாரபயபீதனாய், பகவத்ப்ராப்திருசி வடிம்பிடும்படியான இவ்வதிகாரிக்கு ஸம்ஸார ஸம்பந்தத்தை அறுக்கைக்கும், பகவதநுபவஜநிதகைங்கர்யத்தைக் கொடுக்கைக்கும் ஏகாந்தமான ஸ்வபாவவிஶேஷங்கள் வேணும். ஆகையால், உத்தரார்த்தத்தில் சொல்லுகிற விரோதி, நிவ்ருத்தி பூர்வகமான ப்ராப்யஸித்திக்கு ஏகாந்தமாய், அஹம் ஶப்தத்திலே உக்தமான ஜ்ஞாநஶக்த்யாதி, குணசதுஷ்கமும், அவற்றுக்குப் பெருநிலை நிற்கும் இரக்கமும் இப்பதத்திலே அநுஸந்தேயம்.

                           ஆச்ரிதருடைய ஹிதாஹிதங்களறியும் போதைக்கு ஸர்வஜ்ஞனாகவேணும், அறிந்தபடியே கார்யம் செய்கைக்கு ஸர்வஶக்தி ஆகவேணும். ஸர்வஶக்தனானாலும் இவன் பக்கலொன்றும் நச்சாதொழிகைக்கு அவாப்தஸமஸ்தகாமனாக வேணும். இத்தனையும் உண்டானாலும் தன் பேறாகக் கார்யம் செய்யும்போதைக்கு ஸர்வஸ்வாமியாகவேணும். அநாதிகாலம் கர்மாநுகுணமாக அறுத்தறுத்துத்தீற்றுகைக்குக் கருவியாய்ப் போந்த இவை, ரக்ஷணத்துக்கு உறுப்பாகைக்கு இரக்கம் வேணும். ஆகையாலே ஸௌஶீல்யாதி குணசதுஷ்டயத்தோடு ஜ்ஞாநஶக்த்யாதி குணபஞ்சகத்தோடு வாசியற இப்பதத்திலே அநுஸந்தேயம்.

                         நநு, பகவத்ஸ்வரூபகுணவிபூத்யாதிகளுக்கு அவ்யவஹிதவாசகமாயிருக்க, இந்த நாராயணஶப்தம் ஸ்வருபாதி களை ஒழிய குணஜாதத்தில் குணைகதேஶத்துக்கு வாசகமாகிற தென்னுமிடத்துக்கு நிர்ணாயகப்ரமாணம் ஏதென்னில்: இவற்றுக் கெல்லாத்துக்கும் வாசகமேயாகிலும், “ப்ரபத்யே” என்று, ப்ரகரணம் ஆஶ்ரயணமாகையாலே, அது கோபலீவர்தந்யாயத்தின்படியே ஆஶ்ரயணைகாந்தமான குணவிஶேஷங்களையே ஒதுக்கித் தரக் கடவது, ஒரு மாணிக்கப்பேழையிலே நாட்டிலுள்ள ஆபரணங்க ளடையச் சமைத்திட்டுவைத்தால், தந்தாமுக்கு அவவோகாலங்களில் அபிமதமான ஆபரணங்களை எடுத்துப் பூண்பாரோபாதி, இதுவும் ஸர்வார்த்தங்களுக்கும் வாசகமாயிருந்ததேயாகிலும், அவ்வோகாலங்க ளுக்கு அபேக்ஷிதமான அர்த்தவிஶேஷங்களை எடுத்து விநியோகம் கொள்ளுமதொழிய, எல்லாவற்றையும் எடுக்கவேணுமென்கிற நியமமில்லை. உண்டாகில்; ஈஶ்வரனுக்கு உபாயோபேயத்வரூபமான விபாகமின்றியிலே ஒழியும், ஸமஸ்தகல்யாணகுணங்களுக்கும் ஆஶ்ரயமாயிருக்கச் செய்தேயும், உபாயத்வைகாந்தமான ஸ்வபாவ விஶேஷங்களை அவன் பக்கலிலே அநுஸந்திக்குமதொழிய, ஏகாஶ்ரயஸ்த மென்னா போகைகாந்தமான குணங்களை அநுஸந்தி யாதே. வாச்யபூதனான அவன் பக்கல் அப்படியேயானால், வாசக பூதமான இந்த ஶப்தமும் அப்படியேயாமித்தனை, கோபலீபவர்த ந்யாயமாவது:- ப்ரயோஜகவ்ருத்தன் ப்ரயோஜ்ய வ்ருத்தனைக் குறித்து ‘காவ ஆநீயந்தாம்’ என்று, ‘பசுக்களைக் கொண்டுவா’ என்றால், அந்த கோத்வஜாதி எருதின் பக்கலிலும் கிடக்கையாலே, எருதுகளையும் பசுக்களையும் சேரப்பிடித்துக்கொண்டு வரப்புகும். அப்போது ‘பலீவர்த்தாஸ் திஷ்டந்து’ என்று. ‘எருதுகள் நிற்க’ என்கிற விஶேஷவிதானத்தாலே அவ்வெருதுகளை யொழியப் பசுக்களைக் கொண்டு வருகை. அப்படியே இதுவும் எல்லாவற்றுக்கும் வாசகமே யாகிலும், இந்த ஶப்தம் இப்போது ப்ரகரணபலத்தாலே இக்குண விஶேஷங்களுக்கே வாசகமாகக் கடவது.

                             ஆக, நாரயணபதத்தில் நாரஶப்தம், “நாரஶப்தேந ஜீவாநாம் ஸமூஹ: ப்ரோச்யதே புதை:” என்கிறபடியே ப்ராப்தாக்களான ப்ரத்யகாத்மாக்களைச் சொல்லி, அயநஶப்தம், “இண்-கதௌ” என்கிற தாதுவிலே “ஸம்ஸாரார்ணவமக்நாநாம் விஷயாக்ராந்தசேதஸாம், விஷ்ணுபோதம் விநா நாந்யத் கிஞ்சிதஸ்தி பராயணம்” என்கிறபடியே உபாயவாசகமாய், ஆக நாராயணபதம், ஸர்வேஶ்வரனையே ஸர்வாத்மாக்களுக்கும் ஸம்ஸாரநிஸ்தரணாதி களுக்கு ஸாதநபூதனென்றதாய், அந்த ஸாதநஸமாஶ்ரயணத்துக்காக ஸௌஶீல்யாதி, குணசதுஷ்கங்களை அநுஸந்தித்ததாய், கார்யகர மாகைக்கு ஜ்ஞாநஶக்த்யாதிகுணபஞ்சகங்களை அநுஸந்தித்ததாய் நின்றது.

சரணௌஶப்தார்த்தம்

                           அனந்தரம், குணவிஶேஷவிஶிஷ்டமான ஆஶ்ரயணீயவஸ்து ஶுத்தேந மநஸாக்ராஹ்ய:” “ஸ்வப்நதீ கம்யம்” “ஸஹைவ ஸந்தம் ர விஜாநந்தி தேவா:” யமாத்மா ந வேத,” “பொறியுணர்வவையிலன்” என்கிறபடியே ஐந்த்ரியிகஜ்ஞாநகம்யம் அல்லாமையாலும், கண்டாலல்லது ஆஶ்ரயிக்கவொண்ணாமை யாலும், ஆஶ்ரயண ஸௌகர்யத்துக்காக, அவ்வஸ்துவை ப்ரகாஶிப்பிக்கக் கடவதாய், கீழ்ச்சொன்ன ஸௌலப்யமென்கிற ஆத்ம குணத்தினுடைய பலமான ப்ரகாஶத்தையுடைத்தான விலக்ஷண விக்ரஹத்தைச் சொல்லுகிறது: “சரணௌ” என்கிற பதம்.

                            ஸ்வரூபத்தோடு, ஸ்வரூபாஶ்ரயமான குணங்களோடு வாசியற, ஶுத்தஸத்வமயமான அப்ராக்ருத திவ்ய ஸம்ஸ்தானத்திலே, பொற்குப்பியில் மாணிக்கம் போலே புறம் பொசிந்து காட்டுகையாலும், அவ்வடிவுதான், ”ந ஸந்த்ருஶே திஷ்டதி ரூபமஸ்ய, ந சக்ஷுஷா பஶ்யதி கஶ்சநைநம்” ”ந மாம்ஸசக்ஷுரபிவீக்ஷதே தம்” “அபஶ்யந்த: பரம் ரூபம்” என்கிற பரம ரூபமன்றியிலே விபவார்ச்சாவதாரரூபமாகையாலும், ஆஶ்ரயணை காந்தமாகக்கடவது.

                             அங்ஙனன்றியிலே, நாராயணபதத்திற் சொல்லுகிறபடியே ஈஶ்வரன் குணத்வாரா உபாயபூதனாமோபாதி, விக்ரஹத்வாராவும் உபாயபூதனாமென்று விக்ரஹத்தினுடைய ஸ்வதந்த்ரோபாயத்வம் தோற்றுகைக்காக, தனியே விக்ரஹத்தை உபாதானம் பண்ணுகிறதென்னவுமாம். “சிந்தயந்தீ ஜகத்ஸூதிம் பரப்ரஹ்மஸ்வரூபிணம் நிருச்ச்வாஸதாய முக்திம் கதாந்யா கோபகந்யகா” “ப்ரஸாதபரமௌ நாதெள மம கேஹமுபாகதௌ, தந்யோஹமர்ச்சயிஷ்யாமீத்யாஹ மால்யோபஜீவந:” என்கிறபடியே இடக்கையும் வலக்கையும் அறியாத இடைச்சி, போக்யமான பூவை விற்று வயிறு வளர்க்கும் மாலாகாரர் தொடக்கமானாரை, “பரமாத்மநி யோ ரக்தோ விரக்தோSபரமாத்மநி “மாற்பால் மனம் சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு” என்று தன்பக்கலிலே நிரதிஶயமான ப்ராவண்யத்தைப் பிறப்பித்து, அதுவே கருவியாக இதரவிஷய விரக்தியையும் பிறப்பித்து, தானே முடிய நடத்தக்கடவதாயிறே விக்ரஹமிருப்பது,

                                  விக்ரஹமே உபாயபூதமாமாகில், விபவார்ச்சாவதாரரூபங்களைக் கண்டவர்களடைய பகவத்விஷயத் தில் ப்ரவணராகாதொழிவானென்னென்னில்: எல்லார்க்குமொக்கக் காட்சி உண்டேயாகிலும், விஷயந்தான் ஸௌந்தர்யாதிகளை ஆவிஷ்கரியாமையாலே அந்யபரராகிறார்களல்லது, விக்ரஹத்துக்கு அந்த ஸ்வபாவமில்லாமையன்று. ஆகையிறே பாஷ்யகாரர் “ஸௌந்தர்ய ஸௌஶீல்யாதி, குணாவிஷ்காரேண அக்ரூர மாலாகாராதீந் பரமபாகவதாந் க்ருத்வா” என்றருளிச்செய்ததும்.

                        ஆக, உக்தமான குணங்களுக்கு ப்ரகாஶமாக விக்ரஹத்தை உபாதாநம் பண்ணுகிறதாதலாகிறது; ஸ்வதந்த்ரஸாதந மாக உபாதாநம் பண்ணுகிறதாதலாகிறது. நே வாசகமாயிருப்பதொரு சப்தத்தைவிட்டு விக்ரஹத்தைச் சொல்லாதே, சரணஶப்தார்த்தமான திருவடிகளாலே விக்ரஹத்தை உபலக்ஷிக்கைக்கு ஹேதுவென் னென்னில்: இங்கு உபாயதயா ஸ்வீகரிக்க இழிகிற அதிகாரி, கீழே திருமந்த்ரத்திலே ஸுஶிக்ஷிதஸ்வரூபனாகையாலே, சேஷத்வ ப்ரகாஶகமான இந்த வ்யவஹாரமொழிய அறியாமையாலும் ஸ்தனந்தயத்துக்கு மாதாவினுடைய ஸர்வாவயவங்களும் உத்தேஶ்ய மாகா நிற்கச்செய்தேயும், ஸ்தனத்திலே ஒரு விஶேஷப்ராப்தி யுண்டாமோபாதி, இவனுக்கும் திருவடிகளிலே ஒரு விஶேஷ ஸம்பந்தமுண்டாகையாலும், திருவடிகளைக்கொண்டு விக்ரஹத்தை உபலக்ஷிக்கிறது.

 

….continued

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.