த்வயப்ரகரணம் Part 2

த்வயப்ரகரணம் (Continued)

‘ஶரண’ ஶப்தார்த்தம்

                            அனந்தரம் மேலில் பதத்வயமும், அதிகாரிகதமானவற்றைச் சொல்லுகிறது. இதில் ஶரணஶப்தம் “உபாயே க்ருஹரக்ஷித்ரோஶ் ஶப்தஶ் ஶரணமித்யயம் வர்த்ததே ஸாம்ப்ரதஞ்சைஷ உபாயார்த்தைகவாசக:” என்கிறபடியே உபாயவாசகமாய், “ச்ரியா ஸார்த்தமாஸ்த” “ஸோஶ்நுதே ஸர்வாந் காமாந்” “ஸதா பஶ்யந்தி ஸூரய:” என்று சொல்லுகிறபடியே ப்ராப்யகோடியிலும் முதலிட்டு, கீழ்ச்சொன்ன ஸ்ரீமத்தைக்கும். நாராயணஶப்தோக்தமான குணவிஶேஷங்களுக்கும், அநந்தரோக்த மான திவ்யமங்களவிக்ரஹத்துக்கும் உபேயவ்யாவ்ருத்தியைப் பண்ணித்தருகிறது.

‘ப்ரபத்யே‘ ஶப்தார்த்தம்

                         “ப்ரபத்யே” என்று, “பத்லு – கதௌ” என்கிற தாதுவிலே கத்யர்த்தமாய், “கத்யர்த்தா:-புத்த்யர்த்தா:” என்று, ஒரு ஜ்ஞானவிஶேஷத்தைச் சொல்லுகிறது. அந்த ஜ்ஞானவிஶேஷமாகி றது:- “அஹமஸ்ம்யபராதாநாமாலயோSகிஞ்சநோSகதி: என்கிற படியே ஸ்வாகிஞ்சந்யாத்யநுஸந்தானபூர்வகமாய், “ப்ரார்த்தநாமதி:” “யாச்ஞா ப்ரபத்தி:” என்கிறபடியே ப்ரார்த்தனாகர்ப்பமாய், “த்வமேவோபாயபூதோ மே பவ” “ததேகோபாயதாயாச்ஞா” என்கிற படியே, தான் உபாயசரீரத்தில் அந்வயியாதே உபாயஸ்வீகாராத்மக மாகையாலே உபேயசரீரத்திலும் அந்வயியாதே அதிகாரிக்கு விஶேஷணமாய், மஹாவிஶ்வாஸாத்மகமான ப்ரதிபத்திவிசேஷம். “ப்ரபத்யே” என்று உத்தமனாகையாலே, “கீழ் உக்தமான விஷயத்தை உபாயதயா ஸ்வீகரிக்கிறேன்” என்று ஸ்வாநுஷ்டானமாகக் கிடக்கிறது.

                                 அங்ஙனன்றியிலே, “கதி” என்று வ்யாபாரமாய், மாநஸகதியையும் வாசிககதியையும் காயிககதியை யும் சொல்லிற்றாகவுமாம். மாநஸகதியாவது:– உபாயத்வேந அத்யவ ஸிக்கை; வாசிககதியாவது:- “ராகவம் ஶரணம் கத:” “அடிக்கீழமர்ந்து புகுந்தேன்” “நாராயணா! ஓ மணிவண்ணா ! நாகணையாய்! வாரா யென்னாரிடரை நீக்காய்” “த்வயவக்தா” என்று சொல்லுகிறபடியே, ரக்ஷித்தருளவேணுமென்று வாயாலே ப்ரார்த்திக்கை. காயிககதி யாவது;- “அஞ்ஜலி: பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவப்ரஸாதிநீ” என்கிற படியே, பகவத்ப்ரஸாதஹேதுபூதகமான அஞ்ஜலியை ப்ரயோகிக்கை. அங்ஙனன்றியிலே, நிஷாதகாகாதிகளைப்போலே ரக்ஷகவஸ்து இருந்த விடத்தே வருகை என்னவுமாம். இத்தைப்பற்றவிறே, “பத்தாஞ்ஜலிபுடம் தீரும் யாசந்தம் ஶரணாகதம்” என்று சதுர்வித மாகச் சொல்லிற்று. இந்நாலும் ஏகாஶ்ரயத்திலே உண்டானபோது  அதிகாரிபூர்த்தி ப்ரகாஶிக்கக்கடவது. இவற்றிலே அந்யதமமாத்ரமான போது பகவத்வைபவம் ப்ரகாஶிக்கக்கடவது.

                                    இதில் “ஈத்ருஶனான நான் அத்யவஸிக்கிறேன்” என்று ஜாதிகுண வ்ருத்தாதிகளாலே ஒருவனை விஶேஷியாமையாலே, இப்ப்ரபத்த்யநுஷ்டானம் ஸர்வாதிகாரமென்று தோற்றுகிறது. இனி, ருசியே வேண்டுவது. இந்த ருசி ப்ரயோஜக மாகையிறே, “ராவணோ நாம துர்வ்ருத்த:” என்று தொடங்கித்    தன் நிகர்ஷாதிகளடையத் தன் வாயாலே சொல்லுவது; “ராவணஸ்யாநுஜோ ப்ராதா விபீஷண இதி ஶ்ருத: சதுர்ப்பிஸ்ஸஹ ரக்ஷோபிந் பவந்தம் ஶரணம் கத:” என்று அருகிருந்தாரிலும் அவன் குறை சொல்லி க்ஷேபிப்பது: அதுக்கு மேலே “வத்யதாம்–பத்யதாம்” என்பதாகாநிற்கச் செய்தேயும் ஸ்ரீவிபீஷணப்பெருமாளை ரக்ஷித்தது; ஶரண்யரான பெருமாள் தாம், “யதி வா ராவணஸ் ஸ்வயம்” என்பது; அவனோடே சேர்ப்பிக்கும் பிராட்டி  “தேந மைத்ரீ பவது தே யதி, ஜீவிதுமிச்சஸி” என்று உபதேசிப்பதாகா நிற்கச்செய்தேயும், “ந நமேயம்” என்கிற ப்ரதிஜ்ஞை குலையாதொழிந்ததும். இப்பதத்திலே “அத்யவஸிக்கிறேன்” என்று அத்யவஸாயாத் மகஜ்ஞாந விஶேஷத்துக்கு ஆஶ்ரயமான அதிகாரி ஸ்வருபமும் அநுஸந்தேயம். அதாவது: திருமந்த்ரத்தில் பதத்ரயத்திலும் சொன்ன ஆகாரத்ரயமும்.

                            ஆக, இப்பதத்தாலே ஸகலஸாம்ஸாரிக துரிதவிதூநநபூர்வகமாக, நிரஸ்தாதிஶயாஹ்லாத, ஸுகபாவைக லக்ஷணமான ஸ்வாநுபவாநந்தத்தைக் கொடுக்கைக்கு அநாதிகாலம் அவஸர ப்ரதீக்ஷனாய், இவனுடைய வைமுக்யவைபவத்தாலே ப்ரதிஹதஶக்திகனாய், ரக்ஷிக்கைக்கு இடம் பெறாதே போந்த ஈஶ்வர னுக்கு “ரக்ஷ்யாபேக்ஷாம் ப்ரதீக்ஷதே” என்கிறபடியே ரக்ஷணாவகாஶமாய், சைதந்யப்ரயுக்தமாய், ஶ்யாமத்வயுவத்வாதி களோபாதி அதிகாரி விஶேஷணமாய், அதிகாரிநியமாபேக்ஷை யில்லாமையாலும், “ஆயாஸஸ் ஸ்மரணே கோSஸ்ய” என்று ஸ்மரணாதிமாத்ரமாகையாலே அநாயாஸமாயும், “யதாததா வாபி” என்கிறபடி ப்ராங்முகத்வாதிநியமாநபேக்ஷமாகையாலும், இது தனக்கு “ஸக்ருதேவ ப்ரபந்நாய’ என்கிறபடியே ஸக்ருத்கரணமாகையாலும், அதிகாரிவிஶேஷநியமாபேகூடிமாய், அத்யாயாஸஸாத்யமாய், ப்ராங்முகத்வாதிநியமாபேக்ஷமாய், அஸக்ருதாவ்ருத்திரூபமான கர்ம ஜ்ஞாநாதிகளில் வ்யாவ்ருத்தமாய், ஆகிஞ்சந்யஸஹகாரியாய், பெருமாள் கடலைச் சரணம் புக்கு, “சாபமாநய” வோடே தலைக் கட்டினாப்போலேயன்றியிலே, இழிகிறவன் நேரே அகிஞ்சனாதிகாரி யாகையாலும், எதிரி நேரே ஸர்வஸமாஶ்ரயணீய விஷயமாகை யாலும், பலாவ்யபிசாரியான உபாயாத்யவஸாயத்தை ஸ்வாநுஷ்டான மாக்கிற்றாய் நின்றது.

                           இந்த உபாயமாகிறது, வேதாந்தங்களிலே ஸகலஸாதநாதிகமாகவும், “தேவாநாம் குஹ்யம்” என்கிறபடியே தேவ ரஹஸ்யமாகவும், எழுதப்படுகிறதொன்றானால், கர்மஜ்ஞாநாதிகளோ பாதியாகிலும் அதிக்ருதாதிகாரமாகவேண்டாவோ வேகாந்தஸித்தமான இது? அதிக்ருதாதிகாரமன்றியிலே ஒழியில் கர்மஜ்ஞாநாதிகளும் அதி க்ருதாதிகாமின்றியிலே ஒழியவேணும். ஆனால், அவை அதிக்ருதாதி காரம்; இது ஸர்வாதிகாரமென்று நிர்ணயித்துத் தருவாராரென்னில் அவை த்ரைவர்ணிகாதிகாரமாக வேண்டுகிறது. அக்னிவித்யாங்கக மாகையாலே; இனி, அக்நிவித்யாங்ககமான கர்மாபேக்ஷை யுண்டாகை யாலே ஜ்ஞாநாதிகளும் அதிக்ருதாதிகாரம் ஆகிறதித்தனை போக்கி, ஶாஸ்த்ர ஸிக்கமாகையன்று, அங்ஙனன்றாகில், ஶாஸ்த்ரஸித்தமான பாகயஜ்ஞநாம ஸங்கீர்த்தனாதிகளில் ஸ்த்ரீஶூத்ராதிகளுக்கு அந்வய மின்றியிலே ஒழியவேணும்; நிஷாதன் கபோதத்தைச் சரணம் புகாதொழியவேணும்; காகவிபீஷணாதிகள் சக்ரவர்த்தித்திருமகனைச் சரணம் புகாதொழியவேணும்.

                           சக்ரவர்த்தித்திருமகன் கடலைச் சரணம் புகுகிறவிடத்திலே, “ததஸ் ஸாகரவேலாயாம் தர்ப்பாநாஸ்தீர்ய ராகவ:| அஞ்ஜலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிஶிஶ்யே மஹோ ததே:||” என்று ப்ராங்முகத்வாதிநியமங்களோடே ஶரணம் புக்காரென்றெழுதா நின்றது. ஆனால், நியமாநபேக்ஷை இப்ப்ரபத்தி என்கிறபடி என்னென்னில்: சக்ரவர்த்தித்திருமகனை ஶ்ரீவிபீஷணாழ்வான் ஶரணம் புகுகிறவிடத்தில், “த்வாம் து திக் குலபாம்ஸநம்” என்று ராவணன் உபேக்ஷித்த காலமே காலமாக்கடல் கிட்டவே வாராநிற்கச் செய்தேயும், ஸ்தாநாசமனாதிகளும் பண்ணாதே, தானிருந்தபடியே ஶரணம் புக்கானென்றெழுதுகையாலே. நியமாபேக்ஷை உண்டென்னவு மொண்ணாது. ஆகையால் “ஸந்த்யாவந்தனாதிகளோபாதி, விடவுமாம்; ஶிகாயஜ்ஞோபவீ தாதிகளோபாதி கிடக்கவுமாம்.” என்கிற அநியமம் அநுஷ்டானத்வயத்திலும் ப்ரகாசிக்கிறது.

                          “ஸக்ருதேவ ப்ரபந்நாய” என்கிறபடியே ஸக்ருத்கரணம் அமையுமாகில், அஸக்ருதாவ்ருத்திரூபமான உபாஸனாத்மகஜ்ஞானம் போலே இந்த அத்யவஸாயாத்மகஜ்ஞான மும், “ப்ரபத்யே” என்கிற வர்த்தமாநத்தால் தைலதாராவத விச்சிந்நமாய்ப் போரவேண்டும்படி தோன்றாநின்றது. அப்போது “ஸக்ருதேவ” என்கிறவிடம், பகவத்விஷயீகாரத்துக்கு ஸக்ருத்கரணம் அமையுமென்னுமிடத்தை ப்ரகாசிப்பிக்கிறது; வர்த்தமானம், யாவச்சரீரபாதம் காலக்ஷேபாபேக்ஷையாலும், அபிமதபலலாபத்வரை யாலும், அநுவர்த்திக்குமிடத்தை ப்ரகாசிப்பிக்கிறது. “யாவச்சரீரபாதம்” அநுஷ்டியாநின்றாலும் பெறுகிற பலத்தின் கனத்தைப் பார்த்தால், ‘ஸக்ருத்’ என்கைக்கும் “போராதபடிகாண் இருப்பது!” என்று எம்பார் அருளிச்செய்வர். அங்ஙனன்றியிலே, “ஸஹஸாஶப்தத்துக்கு ஸக்ருதா தேஶமாய், ‘ஸக்ருதேவ ப்ரபந்நாய’ என்கிறது. ‘ஸஹஸைவ ப்ரபந்நாய’ என்கிறபடி” என்று ஆழ்வான் பணிக்கும். அதாகிறது: ஸம்ஸாரத்தில் பயாதிஶயத்தாலும், பகவத்விஷயத்தில் ருச்யதிஶயத் தாலும் “ஶ்ரத்தயா ஶரணம் யதி” “ஆஜகாம முஹூர்த்தேந” என்று சொல்லுகிறபடியே ஸத்வரனாய்க் கொண்டு ஆஶ்ரயிக்கை. –

                       ஆக, பூர்வார்த்தத்தாலே அத்யவஸாயாத்மக ஜ்ஞாநவிஶேஷத்தையும், அதுக்கு உபேயாத்வஸாயத்திற்காட்டில் வ்யாவ்ருத்தியையும், அந்த உபாயத்துக்கு ஸாத்யோபாய வ்யாவ்ருத்தியையும், அந்த ஸித்தோபாயத்தில் இழிகைக்கு விரோதியான பூர்வாபராதபயத்துக்கு நிவர்த்தகமான புருஷகார விசேஷத்தையும் சொல்லிற்றாயிற்று.

உத்தரகண்ட விவரணம்

                              அனந்தரம், இதில் ஸ்வீக்ருதமான ஸித்தோபாயம் “தாவதார்த்திஸ் ததா வாஞ்சாதாவந் மோஹஸ் ததாSஸுகம், யாவந் ந யாதி ஶரணம் த்வாமசேஷாகநாஶநம்” என்று, ஆர்த்தாதிகளான சதுர்விதாதிகாரிகளுக்கும் ஸாதாரணமாகை யாலே, இவர்களில் கீழ் உபாயஸ்வீகரணம் பண்ணி நிற்கிறவன் எந்த அதிகாரி என்கிற அபேக்ஷையிலே, “முமுக்ஷுர் வை ஶரணமஹம் ப்ரபத்யே” “ப்ரஹ்மணோ மஹிமாநமாப்நோதி” என்கிறபடியே பலவிஶேஷ ப்ரார்த்தனாரூபாத்யவஸாயத்தாலே இவனை விஶேஷிக் கிறது உத்தரார்த்தம். ஆக, பூர்வார்த்தத்தாலே உபாயப்ரார்த்தனம் பண்ணிற்றாய், உத்தரார்த்தத்தாலே தத்பலமான உபேயத்தை ப்ரார்த் திக்கிறதென்றதாயிற்று.

                         நநு, உபாயப்ரார்த்தனமாவது:- ஸ்வேஷ்டா நிஷ்டப்ராப்திபரிஹாரங்களுக்கு நீயே ஸாதனமாகவேணும் என்கிற அபேக்ஷையிறே. ஸ்வர்க்ககாமனாய் ஜ்யோதிஷ்டோமத்தில் இழியுமோபாதி, “நமக்கு ப்ராப்யமான இஷ்டம் இன்னது; பரிஹார்யமான அநிஷ்டமின்னது” என்று பிறந்த நிர்ணயத்துக்கு அனந்தரமிறே ததநுகுணமான உபாயஸ்வீகாரத்தில் இழிவது; இனி, ப்ராப்யாபேக்ஷை பண்ணுகிறது: தர்மார்த்தாதிகளான ப்ராப்யாந்தரங் களிற்காட்டில் வ்யாவ்ருத்தி சொல்லுகைக்காகவோ? அங்ஙனன்றி யிலே உபாயதயா ஸ்வீக்ருதனானவனுக்கு ப்ராப்யவிசேஷஜ்ஞாநம் பிறக்கைக்காகவோ? ப்ராப்யவிசேஷத்தை ப்ரார்த்தித்தாலன்றி அத்தைத்தாரானென்றோ? என்னில்; உபாயஸ்வீகாரபூர்வபாவியான முமுக்ஷுத்வத்தாலே தர்மகாமாதிகளிற்காட்டில் வ்யாவ்ருத்தி ஸித்திக்கையாலும், ஸ்வீக்ருதோபாயம் ஸர்வஜ்ஞமாகையாலும், ஸ்வீக்ருதனுமாய் ஸர்வஜ்ஞனுமாய்வைத்து, ப்ராப்யபேக்ஷா ப்ரதீக்ஷனாயிருக்கைக்கு ஒரு ப்ராப்யாபேக்ஷைபண்ணவேண்டா; இனி, ப்ராப்யத்தைக் தரவேணுமென்ற பேக்ஷிக்கை ப்ராப்யாபேக்ஷையாகில், உபாயஸ்வீகாரரூபமான பூர்வார்த்தத்துக்கு ப்ரயோஜனமில்லை. ஆகை யாலே பூர்வார்த்தாநுஸந்தானம் பண்ணுதல், உத்தரார்த்தாநுஸந்தா னம் பண்ணுதலொழிய உபயாநுஸந்தானம் பண்ணுகை புநருக்தமாய்த் தலைக்கட்டுமேயென்னில்:

                         பூர்வார்த்தாநுஸந்தானமாத்ரத்தாலே உபேய லாபம் ஆர்த்தமாய் வருமேயாகிலும் “அத்யாத்மயோகாதிகமேந தேவம் மத்வா தீரோ ஹர்ஷஶோகௌ ஜஹாதி” “தரதி ஶோகமாத்மவித்” என்று, முமுக்ஷுவுக்கு பலம் சொல்லுகிற விடத்தில் ஶோகநிவருத்திமாத்ரத்தைப் புருஷார்த்தமாக்குவது; “தத்ஸுக்ருத்துஷ்க்ருதே தூநதே” என்று புண்யபாபரூபகர்ம விமோசனமாத்ரத்தைப் புருஷார்த்தமாக்குவது; “தஸ்ய தாவதேவா சிரம் யாவந்ந விமோக்ஷ்யே; அத ஸம்பத்ஸ்யே” என்று தேஹ விமோசனத்தைப் புருஷார்த்தமாக்குவது; “விஜ்ஞாநஸாரதிர் யஸ்து மந: ப்ரக்ரஹவாந் நர: | ஸோத்வந: பாரமாப்நோதி தத் விஷ்ணோ: பரமம் பதம் ||” என்று ஒரு தேஶவிஶேஷ ப்ராப்தியைப் புருஷார்த்த மாக்குவது; “ஏஷ ஸம்ப்ரஸாதோஸ்மாச்சரீராத் ஸமுத்தாய பரம் ஜ்யோதிருபஸம்பத்ய ஸ்வேத ரூபேணாபி நிஷ்பத்யதே” என்கிறபடியே ஸ்வஸ்வரூபப்ராப்தியைப் புருஷார்த்தமாக்குவது; “நிரஞ்ஜந: பரமம் ஸாம்யமுபைதி” என்று, பரமஸாம்யாபத்தியைப் புருஷார்த்தமாக்குவது; “ஏதமாநந்தமயமாத்மாந முபஸங்க்ரா மதி” என்று பகவத்ஸாமீப்யத்தைப் புருஷார்த்தமாக்குவது; “ஸோSஶ்நுதே ஸர்வாந் காமாந் ஸஹ ப்ரஹ்மணா விபஶ்சிதா” என்று, பகவத்குணாநுபவத்தைப் புருஷார்த்தமாக்குவது; “விஜ்ஞாநா தாநந்தோ ப்ரஹ்மயோநி:” “ரஸம் ஹ்யேவாயம் லப்த்வாநந்தீ பவதி” என்று பகவதநுபவஜநிதமான பரமானந்தத்தைப் புருஷார்த்த மாக்குவது; “யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி” என்று, பகவதநுவ்ருத்திரூபமான கைங்கர்யத்தைப் புருஷார்த்தமாக்கு வதாய், ஆக இப்படி ஶோக நிவ்ருத்த்யாதிகளைப் புருஷார்த்தமாகச் சொல்லுகிற தத்தத் வாக்யவிஶேஷங்களில் சரம புருஷார்த்த நிஷ்கர்ஷம் பிறவாமையாலே, அந்த புருஷார்த்த விஶேஷத்தை ப்ரகாஶிப்பிக்கைக்காக உத்தரார்த்தம் உதிக்கையாலும் உபாயஸ்வருப விஶேஷப்ரத்யாயகமாக பூர்வார்த்தம் உதிக்கையாலும் பௌநருக்த்ய மில்லை.

                               உபேயதயா வரணமும் உபாயதயா வரணமுமிறே  இரண்டுக்கும் க்ருத்யம். உபேயத்வேந வரித்தபோது உபாயபேக்ஷையுண்டு; ஆகையால் உபாயமும் அபேக்ஷிதமாகக் கடவது. உபேயத்வ வரணமாவது:- ஈஶ்வரன் திருவடிகளிலே கைங்கர் யத்தையே உபேயமாக அத்யவஸிக்கை. அத்யவஸாயத்வயமும் இவ்வதிகாரிக்கு அபேக்ஷிதம். அநந்யஸாதநத்வஸித்திக்கு உபாயத் யவஸாயம் வேணும்; அநந்யபோகத்வஸித்திக்கு உபேயாத்யவ ஸாயம் வேணும். உபாயவிஶேஷாத்யவஸாயம் ப்ரயோஜநாந்தர பரனுக்கும் உண்டாகையாலே தத்வ்யாவ்ருத்தஸித்திக்கு உபேயாத்யவ ஸாயம் வேணும்; ஸாதகனுக்கும் உபேயாத்யவஸாயம் உண்டாகை யாலே தத்வ்யாவ்ருத்தஸித்திக்கு உபாயாத்யவஸாயம் வேணும். ஸாதகன்தானே “இஷ்டம் மநிஷாண, அமும் மநிஷாண, ஸர்வம் மநிஷாண” என்று உபேயவிஶேஷத்தை அபேக்ஷியாநின்றானே: “தைத்யஸந்யபராஜிதா:, ஶரணம் த்வாமநுப்ராப்தா:” என்று ப்ரயோஜனாந்தரபரனுக்கு உபாயாத்ஸவஸாயமுண்டே, தத்வ்யா வ்ருத்திஸித்திக்கும் “அந்தரிக்ஷகதஶ்ஶ்ரீமாந்” “ஸ து நாகவரஶ் ஶ்ரீமாந்” என்கிறபடியே உபாயோபேயாத்யவஸாயங்களாகிற மஹதைஶ்வர்யம் இவ்வதிகாரிக்கு அபேக்ஷிதமாகையாலே அவை யிரண்டையும் இரண்டு வாக்யத்தாலும் சொல்லுகிறது. அத்தைப் பற்றவிறே, “முமுக்ஷுர் வை சரணமஹம் ப்ரபத்யே” என்று ஶ்ருதமா யிற்றதும்.

ஶ்ரீமதே — ஶப்தார்த்தம்

                                கீழ் ’ப்ரபத்யே’ என்று ஸ்வீக்ருதமான உபாயத்தினுடைய பலமான கைங்கர்யத்தை அபேக்ஷிக்கக்கடவதாகக் கொண்டு, அதுக்கு ப்ரதிஸம்பந்திவிஶேஷாதீநத்வம் உண்டாகையாலே அந்த ப்ரதிஸம்பந்தியினுடைய பூர்த்திபூரணபூர்வமாக அநுஸந்திக் கிறது.

                           அதில் “ஶ்ரீமதே” என்கிற பதம் கைங்கர்ய ப்ரதிஸம்பந்தியைப் பூரிக்கிறது. ஶேஷத்வப்ரதிஸம்பந்தி ஒரு மிதுன மானவோபாதி கைங்கர்யப்ரதிஸம்பந்தியும் ஒரு மிதுனமாயிறே இருப்பது. ஆகையாலே ”பெரியபிராட்டியாரோடே நித்யஸம்யுக்தனான வனுக்கு” என்கிறது. “வைகுண்டே து பரே லோகே ஶ்ரியா ஸார்த்தம் ஜகத்பதி: | ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ ||” என்கிறபடியே ஒரு விபூதியாக மிதுனபோக பரராயிறே இருப்பது. ஆகையிறே அத்திரளினின்றும் பிரிகதிர்ப்பட்டுத் தொடர்ந்தடிமை செய்ய வந்தவர்களும் “பவாம்ஸ்து ஸஹ வைதேஹ்யா கிரிஸாநுஷு ரம்ஸ்யதே அஹம் ஸர்வம் கரிஷ்யாமி” என்றதும் அந்த இளையபெருமாளோபாதி அடிமை செய்ய ஆசையுடையாரும் “கோலத் திருமாமகளோடு கூடின உன்னைக் கூடவேணும்” என்றதும்; “யுவாகுமார:” ““ஏஷ வாமநி: ஏஷ பாமநி:” என்றாப்போலே ஓதுகிற, “பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரியான”யான அவனுடைய வடிவழகையும், ஶீலாதிகுண விஶேஷங்களையும் தலைநீர்ப்பாட்டிலே அநுபவிப்பது; அநுபவித்தவள் உந்மத்தையாவது; அவள் தன்னுடைய ஓரோ அவயவங்களிலே ஆழங்காற்பட்டு “அல்லி மலர் மகள் போகமயக்குக்களாய்”, அவன் தானும் உந்மத்தனாவதாய் ப்ராந்தமிதுனமாய், துவண்டு செல்லும் போது, ஶிஶிரோபசாரம் பண்ணுவது; வ்யஜனாதிகளைப் பரிமாறுவது; படிக்கமிடுவதாய்ப்போலே காணும் மிதுனத்துக்குச் செய்யும் கிஞ்சித் காரமாயறுவது; ஆகையாலே ஒரு மிதுனமே ப்ராப்யம்.

இவற்றிலே, அந்யதமத்தை ப்ராப்யமாக நினைக்கையாவது: விநாஶத்தோடே தலைக்கட்டுகை. பிரிக்கையிறே, தங்கை மூக்கறுப் புண்டதும், தமையன் தலையறுப்புண்டதும், பரிமளம் பூவை ஶ்லாக்யமாக்குமாப்போலேயும், ப்ரபை மாணிக்கத்தை ஶ்லாக்ய மாக்குமாப்போலேயும், இவளாலேயிறே அவனுக்கு போக்யத்வம். “ஶ்ரத்தயா தேவோ தேவத்வமஶ்நுதே” என்னக்கடவதிறே. ஶேஷிக்கு அதிஶயத்தைப் பண்ணுகையிறே ஶேஷவஸ்துவுக்கு க்ருத்யம். இவளாலே அவனுக்கு நிறமுண்டாகையாவது. “விஷ்ணுபத்நீ” “விஷ்ணோஶ்ஶ்ரீ:” என்கிறபடியே இத்தலையில் ஶேஷத்வம் ப்ரகாசிக்கை. இந்த ஸ்ரீஶப்தத்தாலே கைங்கர்யப்ரதி ஸம்பந்திதயா முக்தநித்யாதிகளாலே ஸேவிக்கப்படாநின்றாளென்கிற ஆகாரமும், ஸ்வபோக ஸௌக்யத்தாலே அவனை ஸேவிக்குமென்கிற ஆகாரமும் தோற்றுகிறது. ஆக, இப்பதத்தாலே பிராட்டியும் ஸர்வேஶ் வரனும் சேரவிருந்த சேர்த்தியிலே அடிமை செய்யக்கடவன் என்னும் அர்த்தவிஶேஷம் சொல்லிற்றாயிற்று.

“நாராயண” ஶப்தார்த்தம்

                        அவ்வடிமைதான், அநுபவஜநிதப்ரீதியூற்றாக விளையுமதாகையாலும், அநுபவஜநிதப்ரீதிதான், அநுபாவ்யவிஷயா தீனமாகையாலும், அந்த கைங்கர்யத்துக்கடியான ப்ரீதிக்கு நாற்றங் காலான ஸ்வரூபரூபகுணவிபூதிபூர்த்தியைச் சொல்லுகிறது:- நாராயணபதம். “அஶ்நுதே–காமாந்” “லப்த்வாநந்தீ பவதி” “இமாந் லோகாந்–அநுஸஞ்சரந்” “ஸதா பஶ்யந்தி” என்கிறபடியே, ஸ்வரூபரூபகுணாத்யநுபவம் ப்ரீதிக்கு ஹேதுவாகக்கடவது. ப்ரீதி, கைங்கர்யஹேதுவாகக்கடவது. இல்லையாகில் “ஸ்ரீமதே” என்கிறவிடத்தில் சதுர்த்தியே அமையும்; கைங்கர்யப்ரகாஶகமாகைக்கு நாராயணபதம் வேண்டாவே. ஸ்வரூபரூபகுணவிதிகள் நாலுக்கும் வாசகமாகையாலே, அநுபாவ்ய விஷயபூர்த்தியை காட்டக்கடவது. நாராயண பதம்.

                  நாரசப்தம், ரூபகுணவிபூதிகளுக்கு வாசகமாகிறது. அயநபதம், இவை மூன்றுக்கும் கொள்கலமான ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது. அந்த ஸ்வரூபத்தைப் பார்த்தால் “ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்ரஹ்ம என்கிறபடியே, அசித்திற் காட்டில் அத்யந்தவ்யாவ்ருத்தமான த்ரிவிதாத்மஸ்வரூபத்திலும் அத்யந்த வ்யாவ்ருத்தமாயிருக்கும். ரூபத்தைப் பார்த்தால் “ந பூதஸங்கஸம்ஸ் தாநோ தேஹோஸ்ய பரமாத்மந: என்று அப்ராக்ருதமாயிருக்கை யாலும், அஸ்த்ரபூஷணாத்யாயத்திற் சொல்லுகிறபடியே ஸகலஜகதா தாரமாகையாக ப்ராக்ருதமுமாய், ஆதேயமுமான ஸர்வசேதந ஶரீரங்களிலும் அதிகமாயிருக்கும். “அபஹதபாப்மா விஜரோ விம்ருத்யுர் விஶோகோ விஜிகத்ஸோSபிபாஸஸ் ஸத்யகாமஸ் ஸத்யஸங்கல்ப:” “யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித்” “ஜ்ஞாநஶக்தி பலைஶ்வர்யவீர்ய தேஜாம்ஸ்யஶேஷத: | பகவச்சப்தவாச்யாநி விநா ஹேயைர் குணாதிபி: II” “ஸுவீர்ய ஶக்த்யாதி, குணைகராஶி:, பர: பராணாம் ஸகலா ந யத்ர க்லேஶாதயஸ் ஸந்தி ||” என்கிற படியே, ஹேயகுணாஸம்ஸ்ருஷ்டமாய், “யதோ வாசோ நிவர்த்தந்தே” என்கிறபடியே நிஸ்ஸீமமுமாய், “நேதி நேதி” என்கிறபடியே அபரிச்சிந்நமுமான கல்யாணகுணங்களும் ஹேயகுணஸம்ஸ்ருஷ்ட முமாய் பரிச்சிந்தமுமான ஸர்வசேதநகுணங்களிலும் அதிகமாயிருக் கும், “யஸ்யச்சாயாம்ருதம்” “யஸ்ய ம்ருத்யு:” “பாதோஸ்ய விஶ்வா பூதாநி, த்ரிபாதஸ்யாம்ருதம் திவி” என்கிறபடியே, உபயவிபூதியும் விபூதிகோடிகடிதையாகையாலே, பரிச்சின்னவிபூதிகளில் அதிகையா யிருக்கும்.

                              ஆக, இப்படி ஸர்வப்ரகாரத்தாலும், ஸர்வாதிகனாய், “பதிம் விஶ்வஸ்ய” “பதிம் பதீநாம்” இத்யாதிகளான ஶ்ருதிஶதங்களில் சொல்லுகிறபடியே ஸர்வஸ்வாமியான ஸர்வேஶ் வரன் நாராயணஶப்தத்திலே கைங்கர்யப்ரதிஸம்பந்திதயா சொல்லப் படுகையாலே, “ஸர்வம் பரவஶம் து:க்கம்” “ஸேவா ஶ்வவ்ருத்திர் வ்யாக்யாதா” “அபரப்ரேஷ்ய பாவாத்” என்கிற வாக்யங்களிற் சொல் லுகிற ஸேவாநிஷேதம் அஸேவ்யஸேவாவிஷயம். இல்லையாகில், “ததுபாஸிதவ்யம்” “ததந்வேஷ்டவ்யம்” “தத்வாவவிஜி ஜ்ஞாஸி தவ்யம்” “ஸோந்வேஷ்டவ்ய:” “ஆத்மாநமேவ லோகமுபாஸீத” “காரணந்து. த்யேய:” “ஸ வை வேதி தவ்ய:” “த்யேயஸ் ஸதா” “த்யேயோ நாராயணஸ் ஸதா” “வாஸுதேவ த்ருச்சாயா நாதிஶதோ ந கர்மதா | நரகாங்காரஶமநீ ஸா கிமர்த்தம் ந ஸேவ்யதே ||” என்று பகவத்ஸேவாவிதாயகமான வாக்யங்களோடு விரோதிக்கும். பதிவ்ரதைக்குப் புருஷாந்தரஸ்பர்ஶமன்றோ த்யாஜ்யமாயறுவது; ஸ்வபர்த்ருஸ்பர்சமன்றே .

“ஆய” ஶப்தார்த்தம்

                               அனந்தரம், பகவத்ஸ்வரூபரூபகுண விபூத்யாதிகளை அநுபவித்து அந்த பகவதநுபவ ஜநிதப்ரீதிப்ரகர்ஷம் ப்ரேரிக்க “ஹாவு ஹாவு ஹாவு, அஹமந்நமஹமந்ந மஹமந்நம்” “யேந யேந தாதா கச்சதி தேந தேந ஸஹ கச்சதி” “இரைத்து நல்ல மேன்மக்களேத்த” “சூட்டு நன் மாலைகள் தூயனவேந்தி” இத்யாதி களிற் சொல்லுகிறபடியே விரோதி நிவ்ருத்தி பூர்வகமாக ஒரு தேஶ விஶேஷத்திலே போய் வாசிகமாகவும் காயிகமாகவும் பண்ணும் கிஞ்சித்காரங்களை ப்ரார்த்திக்கிறது- “ஆய” என்கிற சதுர்த்தியாலே. அபிமதலாபம் விரோதி நிவ்ருத்தி பூர்வகமாகவன்றி உதியாமையாலே இங்குப் பண்ணுகிற கைங்கர்யாபேக்ஷையாலே விரோதி நிவ்ருத்தியும் ப்ரார்த்திக்கையாகக் கடவது. இரண்டும் அபேக்ஷிதமாகில் இரண்டை யும் ப்ரார்த்தியாதே, கைங்கர்யத்தையே பரார்த்திப்பானென்னென்னில்: கைங்கர்யஸித்தியே பரமப்ரயோஜனம். அதுக்கு பரதிபந்தகமாகை யாலே விரோதியினுடைய நிவ்ருத்தி அபேக்ஷிதமாகிறதித்தனை போக்கி, ஜராமரணமோக்ஷார்த்தமாக இழிந்த கேவலனைப்போலே ஸ்வயம் உத்தேஶ்யமல்லாமையாலே வந்த அப்ராதான்யம் தோற்ற அத்தை எடாதொழிகிறது. விரோதி நிவ்ருத்தியை அவன் ஸ்வயம் ப்ரயோஜனமாக நினைத்திருக்கும்; இவன் கைங்கர்ய விரோதிதயா த்யாஜ்யமென்று நினைத்திருக்கும். ஸம்ஸாரபயமிறே அவனுக் குள்ளது; பகவத்ப்ராவண்யமுள்ளது இவனுக்கேயிறே. சரமஶ்லோகத் தில் விரோதி நிவ்ருத்தியை ப்ரதானமாகச் சொல்லிற்று; ஸ்வயமுத் தேச்யமாய் அன்று; ஆத்மாவுக்கு ஸ்வாபாவிகதர்மமான கைங்கர்யம் ப்ரகாஶிக்கைக்கு நடுவில் இடைச்சுவர் போகவேண்டுவதென்னும் நினைவாலே.

                            இச்சதுர்த்தி, ‘தாதர்த்யே சதுர்த்தி’ யாய், ஶேஷத்வவாசியாயற்றதேயாகிலும் பண்ணின ப்ரபத்திக்கு ஶேஷத்வ மாத்ரம் பலமல்லாமையாலே, “அகிஞ்சித்கரஸ்ய ஶேஷத்வாநுபபத்தி:” என்கிறபடியே ஶேஷத்வபலமான ஶேஷவ்ருத்தியைச் சொல்லுகிறது. ஜ்ஞானமில்லாதவன்று ஸ்வருபம் ‘அஸந்நேவ’ ஆமோபாதியும், அநுஷ்டானமில்லாதபோது அந்த ஜ்ஞானந்தான் ‘அஸந்நேவ’ ஆமோபாதியும், ஶேஷவ்ருத்தியில்லாதபோது ஶேஷத்வமும் அஸத் கல்பமாகக்கடவது. ஆகவிறே மகாரத்துக்கு மேலில் சதுர்த்தி விவரணமாயிற்றது. ஶேஷத்வம் இங்கே ஸித்தியாநிற்கச்செய்தேயும். ஓரு தேஶவிஶேஷம் தேடிப்போகவேண்டுகிறது, ஶேஷவ்ருத்தி ஸித்திக்காகவிறே. உபாயஸ்வீகாரத்துக்கு முன்னே உண்டே ஶேஷத்வஜ்ஞானம்; ஆகையன்றோ திருமந்த்ரத்துக்குப் பின்பு த்வயமாக வேண்டிற்று. ஆகையாலே ஶேஷத்வஜ்ஞானம் முற்படக் கடவது, அனந்தரம், உபாயஸ்வீகாரமாகக் கடவது. அனந்தரம் கைங்கர்யரூபமான ப்ராப்யத்தினுடைய ப்ரார்த்தனமாகக்கடவது.

                                 ப்ராப்யாபேக்ஷைக்கனந்தரமன்றோ தல்லாபஹேதுவான உபாயஸ்வீகாரம் பண்ணுவது. ஆனால், “அர்த்தரார்த்தீ ராஜகுலம் கச்சேத்” “மந்தாக்நிர் நாம்பு பிபேத்” “ஜ்யோதிஷ்டோமேந ஸ்வர்க்ககாமோ யஜேத” என்கிறாப்போலே, உபேயாபேக்ஷையுடையவனுக்கு உபாயாபேக்ஷையாகையாலே, உத்தரார்த்தம் முற்பட்டு, பூர்வார்த்தம் பிற்படவேண்டாவோ? என்னில்:  வ்யுத்பத்திதஶையில் அது வேண்டுவது; அநுஷ்டானதசையில் மாறாடி யிருக்கும். ஜ்யோதிஷ்டோமாநுஷ்டானாநந்தரமன்றோ ஸ்வர்க்க ஸித்தி,

                          ஆக, இச்சதுர்த்தியாலே ஶேஷத்வத்தைப் பூரித்துத் தரும் ஶேஷவ்ருத்தியை ப்ரார்த்திக்கிறது. இது ப்ரார்த்தனா ரூபம் என்னுமிடத்தில் ப்ரமாணமென்னென்னில்: கீழ் உபாய ஸ்வீகாரம் பண்ணினவன், லப்தாபிமதனாயிருக்குவனல்லாமை யாலும், அபிமதபலலாபதஶையில்லாமையாலும், இவ்வர்த்த விவரணம் பண்ணின பாஷ்யகாரர் “பவாநி” என்று ப்ரார்த்திக்கை யாலும், ப்ரதமாசார்யரான நம்மாழ்வார் “அடிமை செய்ய வேண்டும்” என்று ப்ரார்த்திக்கையாலும், ப்ரார்த்தனாரூபமாகக்கடவது. ஆகையாலே, கைங்கர்யப்ரார்த்தனம் பண்ணுகிறதாய் இப்பதம், “ஒழிவில் காலமெல்லாமுடனாய் மன்னி வழுவிலா அடிமைசெய்ய வேண்டுநாம்” என்று கைங்கர்யவிஶேஷணமாகச் சொல்லுகிற ஸர்வகாலாதிஶப்தங்களாலே அந்த கைங்கர்யப்ரகாரத்தைச் சொல்லு கிறது.

                        ஸர்வகாலசப்தத்தாலே “ந ச புநராவர்த்ததே ந ச புநராவர்த்ததே” “அநாவ்ருத்திஶ் ஶப்தாத நாவ்ருத்திஶ் ஶப்தாத்” என்கிறபடியே யாவதாத்மபாவி அநுபாவ்யமான போகத்தை ப்ரார்த்திக் கிறது. இத்தாலே “கதாகதம் காமகாமா லபந்தே” “கத்வா கத்வா நிவர்த்தந்தே சந்த்ரஸூர்யாதயோ க்ரஹா:” என்கிறபடியே, தேஶாந் தரத்திலே த்ரவ்யத்தை ஆர்ஜித்து தேசாந்தரத்திலே அறவிற்றிட்டு ஜீவித்து, மாண்டவாறே தேஶாந்தரம் போவாரோபாதி, இங்கே ஆர்ஜிதமான புண்யத்தை அநுபவித்து போகாவஸானத்திலே, “யதேத மாகாஶம், ஆகாஶாத் வாயும், வாயுர் பூத்வாதூமோ  பவதி, தூமோ பூத்வா அப்ரம் பவதி, அப்ரம் பூத்வா மேகோ பவதி, மேகோ பூத்வா ப்ரவர்ஷதி” என்று சொல்லுகிற க்ரமத்திலே புநராவ்ருத்தி லக்ஷணமான ஸ்வர்க்காத்யைஶ்வர்யபோகத்திற்காட்டில் வ்யாவ்ருத்தி சொல்லிற்று.

                           ஸர்வதேஶஶப்தத்தாலே திவ்யவேஶ்மம், திருமாமணிமண்டபம், திவ்யோத்யானம் தொடக்கமான, பரமபதத்தில் போகஸ்தானங்களோடு, ஆமோதப்ரமோதஸம்மோதரூபமான வ்யூஹ ஸ்தானங்களோடு, லீலாவிபூதியில் வ்யூஹவிபவார்ச்சாவதாராதி ஸ்தானங்களோடு வாசியற, “தஸ்ய ஸர்வேஷு லோகேஷு காமசாரோ பவதி” “இமாந் லோகாந் காமாந்நீ காமரூப்யநுஸஞ்சரந்” என்கிறபடியே தேஶபரிச்சேதமில்லாதபடி அடிமை செய்யப் பெறுவேனாக வேண்டுமென்கிறது. இத்தால் தேஶபரிச்சின்னமான கேவலனுடைய போகத்தை வ்யாவர்த்திக்கிறது. அதாவது: ஸாம்ஸாரிகமான ஸப்தாதிவிஷயங்களினுடைய அனுபவம், கர்மஜநிதஸம்ஸாரவஶவர்த்திகளான ப்ரஹ்மாதிகளுக்கே போக்யமா யிருக்கையாலும், ஆத்மாநுபவஸுகத்தைப்பற்ற அதிக்ஷூத்ரமாயிருக் கையாலும், ஶப்தாதி, விஷயங்களில் அந்வயமில்லை; ‘ஏகாந்திநஸ் ஸதாப்ரஹ்மத்யாயிநோ யோகிநோ ஹி யே தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் யத் வைஶ்யந்தி ஸூரய: || என்று அநந்யப்ரயோஜநரான பரமைகாந்திகளாலே அநுபாவ்யமான அபரிச்சின்னபகவதநுபவத்தில் அந்வயமில்லாமையாலும், அனுபரிமாணனான ஆத்மாவே போக்யமா யிருக்குமே; ஆகையாலே அவ்வாத்மாநுபவம் தேஶபரிச்சின்னம்.

                        ஸர்வாவஸ்தாஶப்தத்தாலே கீழ்ச்சொன்ன ஐஶ்வர்யம்போலே நஶ்வரமன்றிக்கே யாவதாத்மபாவியாய், கைவல்யம்போலே ஸங்குசிதமன்றியிலே, ஸர்வதேஶாநு வ்ருத்தமா யிருந்ததேயாகிலும், நித்யாக்நிஹோத்ரம் போலே போகோபரதிகர்ப்ப மாய் இருப்பன சில காலவிஶேஷங்களும் இடைவிடலாம்; அங்ஙனன்றியிலே அந்தரங்கதஶையோடு பஹிரங்கதஶையோடு வாசியற ஒரு காலகலையும் வந்த்யையாகாதபடி அடிமைசெய்யப் பெறுவேனாக வேண்டும் என்கிறது. அழகோலக்கம் கொடுக்கும் போதோடு, நாச்சிமாரும் தேவருமாய், தென்றலும் பிற்காலிக்க வேண்டும்படியான தசையோடு வாசியறத் திருவனந்தாழ்வானோபாதி அடிமை செய்யவேணும். ஓலக்கம் கொடுக்கும்போது சத்ரசாமராதி பாணியாயும் அந்தரங்கதஶையில் படுக்கை, படிக்கம், ஒட்டுப்பெட்டில், காளாஞ்சி, லீலாஶுகம் தொடக்கமானவையாயும், இடைவிடாமல் அடிமை செய்யக்கடவனாயிறே இருப்பது முக்தன்.

                                இத்தால் ஒருகால், “ஆத்மாநம் வாஸுதேவாக்யம் சிந்தயந்” என்கிறபடியே ஸ்வாநுபவவைபவத் தாலும், ஸ்ரீஸ்தனஸம்ஶ்லேஷாநுபவத்தாலும், “அஹமந்நம்” என்கிற படியே பரம்போக்யபூதமான நித்யமுக்தருடைய ஸ்வரூபாநுபவத் தாலும், பரமானந்தியாகா நிற்கச் செய்தேயும், “ஸ ஏகாகி நரமேத” “ப்ருஶம் பவது து:க்கித:” க்ரோதமாஹாரயத் தீவ்ரம்” “கோபஸ்ய வஶமேயிவாந்” என்கிறபடியே ஸூரிகளோபாதி தன்னோடே அவர்ஜநீயஸம்பந்தமுடையார் சில சேதநர் கரணகளேபரவிதுரராய்க்  கிடக்கிற படியைக் கண்டு, உண்டது உருக்காட்டாதொழிவது; கரணகளேபரங்களைக் கொடுத்தாலும் தாபத்ரய தப்தராய் நோவு படுகிற படியைக்கண்டு அவர்கள் தாம் வந்து ஸாந்த்வனம் பண்ணவேண்டும்படி வெறுப்பது; அவை பண்ணுகிற பகவதபசாராதி களைக்கண்டு இரக்கத்துக்கு உறுப்பான ஹ்ருதயத்தை க்ரோதத்துக்கு இடமாக்குவதாய், லீலாவிபூதிஸம்பந்தத்தாலே, ஒருதலை தோதவத்தியும் (பெரியாழ் திருமொழி 4-8-1) [ தோதவத்தி—தௌதவஸ்த்ரீ (வெள்ளை வஸ்த்ரம் தரித்தவன்) (இங்கு) பரிசுத்தமான சரீரத்தையுடையவன் ] ஒருதலை விழுப்புமான ஈஶ்வரனுடைய போகத்திற்காட்டில் போகமாத்ர ஸாம்யயுக்தனான முக்தனுடைய போகத்துக்கு வ்யாவ்ருத்தி சொல்லிற்றாயிற்று.

            ஸர்வவித ஶப்தத்தாலே “நிவாஸஶய்யாஸநபாதுகாம்ஶு கோபதாநவர்ஷாத பவாரணாதிபி:” “சென்றால் குடையாம் இருந்தால் சிங்காதனமாம் நின்றால் மரவடியாம்” என்கிறபடியே ஆதராநுரூபமாக, “ஸ ஏகதா பவதி, த்விதா பவதி, திரிதா பவதி, ஶததா பவதி, ஸஹஸ்ரதா பவதி” என்கிறபடியே அனேகவிக்ரஹபரிக்ரஹம் பண்ணி, “அஹம் ஸர்வம் கரிஷ்யாமி” என்று இளையபெருமாள் சத்ரசாமரபாணிகளாவது, கநித்ரபிகாதரராவது, பலாஹரணாதிகளைப் பண்ணுவது, ஶாலாஸந்நிவேஶாதிகளைப் பண்ணுவது, குஸும சயனாதிகளைப் பண்ணுவது, கையும் வில்லுமாய் நோக்குவதாய், படைவீட்டில் பெருமாள் பரிகரவர்க்கம் செய்ததடையத் தாமே செய்தாப்போலே, நானும் எல்லாவகைப்பட்ட அடிமைகளையும் செய்யப்பெறுவேனாக வேணுமென்று ப்ரார்த்திக்கிறது. இத்தாலே வெறும் முலையாலே அடிமைசெய்யும் ‘நித்யாநபாயிநி’யான பிராட்டி யுடைய போகத்திற்காட்டில் வ்யாவ்ருத்தி சொல்லிற்றாயிற்று. சேதநனுடைய ஸ்வரூபத்தோடு போகத்தோடு கிஞ்சித்காரத்தோடு வாசியற அத்யந்தவ்யாவ்ருத்தமாயிருக்கும். பகவச் சேஷத்வம் அவளுக்கு ஸ்வரூபம்; மிதுன ஶேஷத்வம் இவனுக்கு ஸ்வரூபம், பகவத்போகமே அவளுக்குள்ளது; அவளும் அவனுமான சேர்த்தி இவனுக்கு போக்யம். ஸ்தனதடாதிகளாலே பண்ணும் கிஞ்சித்காரம் அவளுக்குள்ளது; இவனுக்கு மிதுனவிஷயமான ஸர்வுவித கிஞ்சித்காரமுமுண்டு.

                         உசிதஶப்தத்தாலே ஸர்வகாலங்களிலும் ஸர்வதேஶங்களிலும் ஸர்வாவஸ்தைகளிலும் ஸர்வவிதகிஞ்சித்கார மும் பண்ணக்கடவேனென்கிற ஸங்கல்பமே இவனுக்குள்ளது. அனுஷ்டிக்குமிடத்தில் “க்ரியதாம்” என்கிறபடியே “அவன் திருவுள்ளத் துக்கு யாதொன்று அநுகூலமானது, அது அநுஷ்டேயம்” என்று, ஸ்வேச்சாவ்யாவ்ருத்தமான கைங்கர்யத்தைச் சொல்லுகிறது. அதாவது:- மரவடிகளோபாதி திருவடிகளிலே கிடக்கவுமாய், மாலையோபாதி திருமுடியில் ஏறவுமாய், இளையபெருமாளோபாதி கூடப்போகவுமாய், ஸ்ரீபரதாழ்வானோபாதி தலையிலே முடிவைக்கவு மாயிருக்கை. இதுவிறே பாரதந்த்ர்யத்துக்கு எல்லைநிலம். யாதொன்று திருமுகமலர்த்திக்கு உறுப்பாயறுவது, அதிறே கைங்கர்யமாவது.

                           ஆக, இத்தால், நெடுநாள் போகவிரோதி யான க்ஷயரோகத்தாலே நொந்தவன் . ஸித்தௌஷதத்தைப் பெற்று நோய்விட்டுக் குளிக்குமோபாதி, பகவத்ப்ரஸாதமாகிற பரமபேஷஜ வைபவத்தாலே ஸாம்ஸாரிகமான தடையறக்கழிந்து, அழுக்குக் கழற்றின மாணிக்கம் போலே அத்யுஜ்ஜ்வலனாய். அர்ச்சியாகிகதி யாலே பரமபதமாகிற திவ்யதேஶத்திலே புக்கு, நிரந்தரபகவதநுபவைக யாத்ரையான நித்யஸூரிஸங்கத்திலே அந்யதமனாய், கடல் உடைந்தாப்போலே கண்டவிடமெங்கும் திறந்துபாய்கிற பரமபக்தி ரூபாபன்னஜ்ஞானத்தாலே. ஈஶ்வரனுடைய ஸ்வரூபத்தோடு குணத்தோடு விபூதியோடு வாசியற விளாக்குலை கொண்டு அநுபவித்து, அநுபவஜநித ப்ரீதிப்ரகாஷத்தாலே மதுபானமத்தரைப் போலே அக்ரமமாக ஸ்தோத்ரமுகனாய்க் களித்தாடுவது; அதுதான் போய்த் தலைமண்டையிட்டு கிஞ்சித்காரங்களில் குதூஹலத்தைப் பிறப்பித்து அடிமையிலே மூட்டுவது; அந்த கிஞ்சித்காரந்தான், “நிரவத்ய: பர: ப்ராப்தே:” என்கிறபடியே அநுபூதாம்ஶம் அல்பமாய் அநுபாவ்யாம்ஶமே விஞ்சும்படியான விஷயவைலக்ஷண்ய வைபவமும், அதுதன்னையும் விளாக்குலை கொள்ளவற்றான அபிநிவேஶாதிசயமும் கைதொட்டு வளர்க்க, அத்தால் கொள் கொம்பு மூடப்படர்ந்து ஒரு காலபரிச்சேதத்தையாதல், தேஶபரிச்சேதத்தை யாதல், அவஸ்தாபரிச்சேதத்தையாதல், க்ரியாபரிச்சேதத்தையாதல் ஸஹியாமையாலே. ஸர்வகாலங்களிலும் சர்வதேசங்களிலும், ஸர்வாவஸ்தைகளிலும் பண்ணும் ஸர்வவித கைங்கர்யங்களையும் ப்ரார்த்தித்ததாய் நின்றது: “ப்ரார்த்தநாயாம் சதுர்த்தீ” என்கிற சதுர்த்தி யாலே.

‘நம:’ ஶப்தார்த்தம்

                          “அபஹதபாப்மா விஜரோ விம்ருத்யு:”  “நிர்குணம் நிரஞ்ஜநம்” என்கிறபடியே ஹேயகுணநிஷேதத்தையும், “யஸ் ஸர்வஜ்ஞஸ் ஸர்வவித்” இத்யாதிகளிற்படியே விலக்ஷண குணயோகத்தையும் சொல்லி, இப்படி விலக்ஷணகு,ணயுக்தமாய் ஹேயகுணரஹிதமான வஸ்துவே உபாஸ்யமென்று உபாஸ்யவஸ்து நிர்ணயம் பண்ணினவோபாதி, ப்ராப்யமாயறுவதும் வைலக்ஷண்ய பூர்ணமாய் ஹேயகந்தரஹிதமாயிருக்க வேண்டுகையாலே, அதில் வைலக்ஷண்ய பூர்த்தியைக் கீழடையச் சொல்லிற்றாகையாலே, அனந்தரமான இந்த நமஶ்ஶப்தம் ஹேயகந்தராஹித்யத்தைச் சொல்லுகிறது.

                              அதில் போகத்துக்கு ஹேயாந்வய முண்டாவது, போக்யவஸ்துவின் பக்கல் குறையாலேயாதல்; போக்தாவின் பக்கல் குறையாலேயாதலிறே. அதில் இங்குச்சொன்ன போக்யம் ஸர்வமங்களாயதநபூதையான பிராட்டிக்கும் மாங்கள்ய கரமாய், தான் “மங்களாநாம் ச மங்களம்” என்கிறபடியே ஸ்வரூப ரூபாதிகளாலே ஸர்வமங்களங்களுக்கும் அவ்வருகுபட்டிருக்கையாலே குறைவற்றிருந்தது; இனி போக்த்ருத்வதோஷமேயுள்ளது. அத்தைக் கழிக்கிறது இப்பதம். அதாவது: அஹங்காரமமகாரங்கள்.

                             ஸ்வரூபயாதாத்ம்யஜ்ஞானஜனகமான திருமந்த்ரத்திலே அஹங்காரமமகாரங்கள் மருத்தமாயிருக்க, இப்போது நிவர்த்யமாகிற அஹங்காரமமகாரங்கள் எவையென்னில்: இவ்வஹங்காரமமகாரங்கள் தான் மூன்று வகைப்பட்டிருக்கும். “அநாத்மந்யாத்மபுத்திர் யா அஸவே ஸ்வமிதி யா மதி:” என்கிற படியே, அநாத்மாவான தேஹத்தில் ஆத்மபுத்தியும், தேஹாநுபந்தி யான பதார்த்தங்களில் ஸ்வத்வபுத்தியும், அஹங்காரமமகாரமாகக் கடவது. அதுக்கு மேலே “ஸ்வதந்த்ரோஹம்” என்று தேஹாத் பரமாக ஆத்மாவை ப்ரதிபத்தி பண்ணிப் போராநிற்கச்செய்தேயும், ஸ்வதந்த்ரமாக ப்ரதிபத்தி பண்ணிப் போருவதொன்றுண்டு; அதுவு மொரு அஹங்காரம். விஷயமுண்டாகில் மமதையும் அநுவர்த்திக்கு மிறே. அதுக்கு மேலே கர்மஜ்ஞானாதிகளை அநுஷ்டிக்கவுமாம்; ஒரு ஸாதனவிஶேஷ ஸ்வீகாரம் பண்ணவுமாம், “அவற்றுக்கு அநுஷ்டாதா நான்; என்னுடைய அநுஷ்டானம் இவை” என்று பிறப்பன சில அஹங்காரமமகாரங்களும் உள; இப்படி மூன்று வகைப்பட்ட அஹங்காரமமகாரங்களும் ப்ரதமாக்ஷரத்தில் சரமபதத்தாலும், அதில் விபக்திவிசேஷத்தாலும், அனந்தரபதத்தாலும் வ்யாவ்ருத்தமாயிற்று. இனி, இவை மூன்றுக்குமேலே காகாக்ஷிந்யாயத்தாலே ஒரு பதவிஶேஷத்தாலே வ்யாவ்ருத்தமாய், போகததஶாநுவ்ருத்திக்கும் யோக்யதையுண்டாயிருப்பதொரு அஹங்கார மமகாரமுண்டு; அத்தை வ்யாவர்த்திக்கிறது இங்கு. அதாகிறது:- “நான் போக்தா; என்னுடைய போகம்”, என்றிருக்கை. |

                            “அஹமந்நாத:” “ஸோஶ்நுதே ஸர்வாந் காமாந்” “ஸதாபஶ்யந்தி” “போகமாத்ர ஸாம்யலிங்காச்ச” “அத்ர ப்ரஹ்ம ஸமஶ்நுதே” என்று சொல்லுகிறபடியே, நேரே குணாதிகளுக் கடைய போக்தாவாயிருக்க, அதுக்கு மேலே குணாத்யநுபவம் ரஸித்து ப்ரீதனானால், அந்த ப்ரீதிப்ரேரிதமாய் வருமதாயுமிருக்க கைங்கர்யம், “போக்த்ருத்வம் எனக்கில்லை” என்றிருக்கையாவதென்? போக்த்ருத்வவமில்லையாகில் “லப்த்வாநந்தீ பவதி” என்கிற ஆனந்தித்வமின்றியிலே ஒழியும், ஆனந்தித்வமில்லாமையாலே அபுருஷார்த்தமுமாம். கர்மாநுஷ்டானதஶையில் அகர்த்ருத்வாநு ஸந்தானம், “அதிஷடாநாம் ததா கர்த்தா கரணஞ்ச ப்ருதக்விதம், விவிதா ச ப்ருதக் சேஷ்டா தைவஞ் சைவாத்ர பஞ்சமம்” என்கிற படியே ஆத்மாவுக்கு சைதந்யப்ரயுக்தமான ப்ரயத்னமாத்ரமேயாய் அதிஷ்டானாதிகளுக்கே கர்த்ருத்வமாகையாலே அங்கு உபபன்னம். முக்தனானால் கர்த்ருத்வாரோபண விஷயமான அதிஷ்டானாதிகள் இல்லாமையாலும், “ஸர்வத: பாணிபாதம் தத் ஸர்வ தோக்ஷிஶிரோமுகம். ஸர்வதஶஶ்ருதிமல்லோகே ஸர்வமாவ்ருத்ய திஷ்டதி” என்கிறபடியே அதிஷ்டானாதிகளால் கொள்ளும் கார்யத்தை ஸ்வரூபேண கொள்ள வல்லனாய், “ப்ரஜ்ஞயா ஹி விபஶ்யதி” “மநஸைவைதாந் காமாந் பஶ்யந் ரமதே” என்கிறபடியே அநுபவத்துக்கு வேண்டுவது ஆத்மதர்மபூதமான ஜ்ஞானமாத்ரமாகச் சொல்லுகையாலும் அநுபபந்நமென்னில்: இப்போது அதுவன்று நினைக்கிறது. பதிவ்ரதையான ஸ்த்ரீக்கு பர்த்ருஸம் ஶ்லேஷ ஜநிதஸாரஸ்யாநுபவம் உண்டாகா நிற்கச்செய்தேயும், பர்த்தாவி னுடைய முகவிகாஸமாய் ப்ரயோஜனம், “அவ்விகாஸஹேது’ என்று ஸம்ஶ்லேஷாதிகளிலே ஸங்கம் பிறக்குமோபாதி, பகவத்குணாநுப வாதிகளில் “நான் போக்தா” “எனக்கு ரஸித்தது” என்று புருஷ போகத்தோபாதி ஸ்வதந்த்ரமாயிருத்தல், ஸாதாரணமாயிருத்தல் செய்கையன்றியிலே, “ஈச்வரன் முகமலர்த்தி, எனக்கு ஹேது” என்று அவற்றிலே ஸங்கமாய், முகமலர்த்தியே தனக்கு போக்யமாக நினைத்திருக்கை. அத்தைப் பற்றவிறே முதலிலே “அஹமந்நம்” என்று சொல்லி, பின்னே “அஹமந்நாத:” என்றதும்.

நிகமநம்

                            ஆக, இவ்வாக்யத்வயத்தாலும் ஸ்வரூப ஜ்ஞாநானந்தரபாவியாய் பதத்வயோக்தமான உபாயோபேயங்களை ப்ரார்த்தித்ததாய் நின்றது. அதில் பூர்வவாக்யத்தில் “ப்ரபத்யே” என்கிற க்ரியாபதம், அத்யவஸாயத்தைச் சொல்லுகிறது. அதுக்கு உபேயாத் யவஸாய வ்யாவ்ருத்தியைப் பண்ணித்தருகிறது; உபாயவாசகமான ஶரணஶப்தம். அந்த உபாயத்துக்கு ஸாத்யோபாயவ்யாவ்ருத்தியைப் பண்ணித்தருகிறது. “நாராயணசரணௌ” என்று. அந்த ஸித்தஸாதனத்தில் இழியும் துறையைச் சொல்லுகிறது:- ஶ்ரீமத்பதம். ப்ராப்யதஶாநு வ்ருத்திவிரோதியினுடைய நிவ்ருத்தியைச் சொல்லுகிறது. நமஶ்ஶப்தம். அவனுக்கு ப்ராப்யமான கைங்கர்யத்தைச் சொல்லுகிறது:- சதுர்த்தி, அந்த கைங்கர்யப்ரதி ஸம்பந்தியைச் சொல்லுகிறது:- நாராயணபதம். ப்ரதிஸம்பந்தி யைப் பூரித்துத் தருகிறது ஶ்ரீமத்பதம். ஆக, கைங்கர்யவிரோதி நிவ்ருத்தியையும், கைங்கர்யத்தையும், கைங்கர்யப்ரதிஸம்பந்தியையும், ப்ரதிஸம்பந்திபூர்த்தியையும், அத்தைப் பெறுகிற அதிகாரி விஶேஷணமான அத்யவஸாயத்தையும், அது உபாயாத்யவஸாயமென்னுமிடத்தையும், அந்த உபாயத்தினுடைய ஸித்தத்வத்தையும், அந்த ஸித்தோபாயத்திலே மூட்டும் புருஷகாரத்வத்தையும் சொல்லிற்றாயிற்று.

                            பிராட்டியுடைய புருஷகாரத்வத்தையும், புருஷகாரபூதையான அவளுடைய நித்யபோகத்தையும், நித்யயுக்தை யான அவளாலே உதிக்கப்பட்ட ஶீலாதிகுணவிஶேஷங்களையும், அந்த குணப்ரகாஶகமான விலஷணவிக்ரஹயோகத்தையும், குணவிக்ரஹவிஶிஷ்டனுடைய உபாயபாவத்தையும், அந்த உபாயா வலம்பியான சேதநனுடைய அத்யவஸாயத்தையும், அத்யவஸாய விஶிஷ்டனுக்கு ப்ராப்யம் ஒரு மிதுனமென்னுமிடத்தையும், அந்த ப்ராப்யத்தைப் பூண்கட்டித்தரும் ஸர்வஸ்வாமித்வத்தையும், ஸர்வஸ்வாமி திருவடிகளில் கைங்கர்யமே புருஷார்த்தமென்னு மிடத்தையும், அதுக்கு விரோதி அஹங்காரமமகாரமென்னுமிடத்தை யும் சொல்லிற்றாயிற்று.

த்வயப்ரகரணம் முற்றிற்று

பெரியவாச்சான்பிள்ளை திருவடிகளே ஶரணம்.

error: Content is protected !!

|| Donate Online ||

Donation Schemes and Services Offered to the Donors:
Maha Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 5,00,000 or USD $12,000 or more

Poshaka : 

Institutions/Individuals who donate Rs. 2,00,000 or USD $5,000 or more

Donors : 

All other donations received

All donations received are exempt from IT under Section 80G of the Income Tax act valid only within India.

|| Donate using Bank Transfer ||

Donate by cheque/payorder/Net banking/NEFT/RTGS

Kindly send all your remittances to:

M/s.Jananyacharya Indological Research Foundation
C/A No: 89340200000648

Bank:
Bank of Baroda

Branch: 
Sanjaynagar, Bangalore-560094, Karnataka
IFSC Code: BARB0VJSNGR (fifth character is zero)

kindly send us a mail confirmation on the transfer of funds to info@srivaishnavan.com.

|| Services Offered to the Donors ||

  • Free copy of the publications of the Foundation
  • Free Limited-stay within the campus at Melkote with unlimited access to ameneties
  • Free access to the library and research facilities at the Foundation
  • Free entry to the all events held at the Foundation premises.