॥ श्रीमद्रहस्यत्रयसारे उपायविभागाधिकारः ॥ ९ ॥
9.1 उपायः स्वप्राप्तेरुपनिषदधीतस्स भगवान्
प्रसत्त्यै तस्योक्ते प्रपदननिदिध्यासनगती ।
तदारोहः पुंसस्सुकृतपरिपाकेन महता
निदानं तत्राऽपि स्वयमखिलनिर्माण निपुणः ॥ २२ ॥
9.2 இவர்களுக்குக் कर्तव्यமான उपायமாவது ஒரு ज्ञानविकास विशेषம். இத்தாலே साध्यமாய் प्राप्तिरूपமான उपेयமாவது ஒரு ज्ञानविकासविशेषம். இவற்றிலுपाय மாகிற ज्ञानविकासविशेषம் करणसापेक्षமுமாய் शास्त्रविहितமுமாய் सत्यत्वादिகளான स्वरूपनिरूपकधर्मங்களஞ்சோடே கூடின அவ்வோ विद्याविशेष प्रति नियतगुणादि
9.3 नियतब्रह्मविषयமுமாயிருக்கும். उपेयமாகிற ज्ञानविकासविशेषம் करणनिरपेक्षமுமாய் स्वभावप्राप्तமுமாய் गुणविभूत्यादिகளெல்லாத்தாலும் परि-पूर्णब्रह्मविषயமுமாயிருக்கும். उपासितगुणादेर्या प्राप्तावप्यबहिष्क्रिया । सा तत्क्रतुनयग्राह्या नाकारान्तरवर्जनम् ॥ प्राप्तिरूपமான இவ்வनुभवத்தினுடைய परीवाहமாய்க் கொண்டு कैङ्कर्यமுपेयம்.
9.4 இவ்வுपायरूपமாயும் प्राप्तिरूपமாயுமிருக்கிற ज्ञानத்துக்கு विषयமாய்க் கொண்டு फलप्रदत्वभोग्यत्वादिवेषத்தாலே ईश्वरனுக்கு उपायत्वமும் उपेयत्वமும்.
9.5 இவ்வீश्वरனுடைய उपायत्वம் अद्वारकप्रपत्तिनिष्ठன்பக்கல் उपायान्तरस्थाननिवेशத்தாலே विशिष्टமாயிருக்கும். மற்ற अधिकारिக்கும் कर्मयोगारम्भம் முதலாக उपासनपूर्ति पर्यन्तமாக நடுவுள்ள कर्तव्यங்களில் अत्यन्ताशक्यமான நேர்களிலே இப்प्रपत्तिवशीकृतனான ईश्वरன் புகுந்து நின்று அந்தदुष्करकर्तव्यங்களாலே
9.6 வரும் पापनिवृत्तिயையும் सत्वोन्मेषादिகளையுமுண்டாக்கிக்கொடுத்து அவ்வுपासनமாகிற उपायத்தை फलपर्यन्तமாக்கிக்கொடுக்கும்.
அங்கு कर्मयोगமாவது – शास्त्रத்தாலே जीवपरमात्मयाथात्म्य ज्ञानं பிறந்தால் தனக்கு शक्यங்களாய் फलसङ्गादिरहितங்களான काम्यकर्मங்களோடும் नित्य-
9.7 नैमित्तिकங்களோடுங்கூடின सनियमமாக परिगृहीतமாயிருக்கும் कर्मविशेषம். அதிலவாन्तरभेदங்கள் ‘‘दैवमेवापरे यज्ञं’’(கீதை 4-25) என்று துடங்கிச் சொல்லப்பட்ட देवार्चनतपस्तीर्थदानयज्ञादिகள்.
अधिकारिभेदத்தாலே प्रपत्तिதானே भक्तिயை யிடையிட்டு மிடையிடாதேயும்
9.8 मोक्षहेतुவானாற்போலே இக்कर्मयोगம் ज्ञानयोगதையிட்டுமிடையிடாதேயும் सपरिकरமான योगத்தைக்கொண்டு आत्मावलोकनसाधनமாம்.
9.9 ज्ञानयोगமாவது— कर्मयोगத்தால் अन्तःकरणजयம் பிறந்தவனுக்கு प्रकृत्यादि-विलक्षणமாய் ईश्वरனைப்பற்ற आधेयत्वविधेयत्वशेषत्वங்களாலே शरीरतया प्रकार மான தன்स्वरूपத்தை निरन्तरचिन्तनம் பண்ணுகை. இக்कर्मयोगज्ञानयोगங் களாலே योगमुखத்தாலே आत्मावलोकनம் பிறந்தால் वैषयिकसुखवैतृष्ण्यावहமான आत्मानुभवसुखமாகிற आकर्षकத்தில் அகப்பட்டிலனாகில் परमपुरुषार्थமான भगवदनुभवத்துக்கு उपायமான भक्तियोगத்திலேயிழியும்போது உள்ளிருக்கிற
9.10 रत्नங்காண்கைக்குக் கிழிச்சீரைக் கண்டாற்போலே अन्तर्यामिயைப் பார்க்கும்போதைக்கு அவனுடைய शरीरभूतனான जीवात्माவினுடைய दर्शनம் उपयुक्तமாய்க்கொண்டு भक्तियोगத்துக்கு अधिकारोटिயிலே யேறிட்டுக் கிடக்கும்.
9.11 भक्तियोगமாவது — अनन्यनिष्ठனாய் अनन्याधीनனாய் अनन्यशेषभूतனான भगवाனுடைய स्वरूपादिகளை विषयமாகவுடைத்தாய் निरतिशयप्रीतिरूपமான ध्यानविशेषம். அது தான் तैलधारैயைப்போலே निरन्तरமான स्मृतिरूपமாய் साक्षात्कारतुल्यமான वैशद्यத்தையுடைத்தாய் परमपदத்துக்கு प्रयाणம் பண்ணும்
9.12 दिवसமறுதியாக நாள்தோறும் अनुष्ठिக்க வளர்ந்துவருவதாய் अन्तिमप्रत्ययावधिயான ज्ञानसन्ततिविशेषம். இதுக்கு वर्णाश्रमधर्मங்கள் ज्ञानविकासहेतुவான सत्त्वविवृद्धिக்குக் களையான रजस्तमस्सुக்களுக்கு मूलமான पापங்களைக் கழித்துக்கொண்டு इतिकर्तव्यतैயாயிருக்கும்.
9.13 இப்भक्तियोगந்தானே ‘‘प्रत्ययार्थं च मोक्षस्य सिद्धयस्संप्रकीर्तिताः’’(ஸாத்வத ஸம்ஹிதை.) என்கிற படியே இளநெஞ்சரைத்தேற்றுகைக்கு இட்ட விரகான வழியில் कामनाभेदத்தாலே ऐश्वर्यादिகளுக்கும் साधनமென்னுமிவ்வर्थம் ‘‘चतुर्विधा भजन्ते
9.14 मां’’(கீதை 7-16.) என்று சொல்லப்பட்டது. அவ்விடத்தில் ‘‘तेषां ज्ञानी नित्ययुक्त एकभक्तिर्विशिष्यते’’(கீதை 7-17.) என்று துடங்கிச் சொன்ன ज्ञानिயினுடைய ஏற்றத்தை ‘‘चतुर्विधा मम जना भक्ता एव हि ते स्मृताः । तेषामेकान्तिनश्श्रेष्ठास्ते चैवानन्यदेवताः ।(பாரதம் சாந்திபர்வம் 350-33-35.)
9.15 अहमेव गतिस्तेषां निराशीः कर्मकारिणाम् । ये तु शिष्टा स्त्रयो भक्ताः फलकामा हि ते मताः । सर्वे च्यवनधर्माणः प्रति बुद्धस्तु मोक्षभाक्’’ என்று தானே வெளியிட்டான்.
இப்படி मोक्षोपायமாக विधिத்த भक्तियोगம் परभक्तिயென்று பேசப்பட்டது. இதினுடைய हेतुவாய் सात्विकपरिशीलनादिகளாலே வந்த भगवद्विषयத்தில் प्रीतिविशेषம் सर्वेश्वरனைத் தெளியவறியவேணுமென்னும் अभिनिवेशத்துக்குக் காரணமாய் भक्तिயென்று பேர் பெற்றிருக்கும். இத்தாலே शुद्धभावं
9.16 गतो भक्त्या शास्त्राद्वेद्मि जनार्दनम्’’(பாரதம் உத்யோகபர்வம் 68-5.) என்கிறபடியே शास्त्रजन्यतत्वज्ञानकर्मयोगादि परंपरै யாலே பிறந்த परभक्तिயானது साक्षात्करिக்கவேணுமென்னும் अभिनिवेशத்தை
9.17 யுண்டாக்கி ‘‘योगेश्वर ततो मे त्वं दर्शयात्मानमव्ययम्’’(கீதை 11-4.) “”காணுமாறருளாய்””(திருவா. 8-1-1.) “”ஒரு நாள் காணவாராயே””(திருவா. 6-9-4.) என்று विलपिக்கும்படி பண்ணி இவ்வपेक्षमात्रமடியாக வந்த भगवत्प्रसादविशेषத்தாலே तत्कालनियतமான परिपूर्णसाक्षात्कार த்தையுண்டாக்கும். இस्साक्षात्कारம் परज्ञानமென்று பேசப்பட்டது.
9.18 இப்படி निरतिशयभोग्यமான भगवत्स्वरूपத்தை साक्षात्करिத்தவாறே பெருவிடாய்ப்பட்டவன் तटाकத்தைக்கண்டாப்போலே பிறந்த प्रीत्यतिशयம் परमभक्ति । இது “”முனியே நான்முகனி””(திருவா. 10-10-1) ற்படியே सङ्कोचமற अनुभविத்தல்லது धरिக்கவொண்ணாத अभिनिवेशத்தை உண்டாக்கி மறுக்கவொண்ணாத திருவாணையிட்டு வளைத்துக்கூப்பிடுகையாலே இவனுக்குக்கடுக
9.19 प्राप्तिயைக்கொடுக்கும்படி सर्वेश्वरனுக்கு त्वरातिशयத்தை உண்டாக்கி இவனையவாவற்று வீடு பெறப்பண்ணும்.
இப்भक्तियोगம் तैत्रवर्णिकரையொழிந்தார்க்கும் तैत्रवर्णिकர்தங்களில் ज्ञानத்திலேயாதல் शक्तिயிலேயாதல் இரண்டிலுமாதல் குறையுடையார்க்கும் फलविळम्बம் பொறுக்க இசையாத तीव्रसंवेगமுடையார்க்கும் योग्य
9.20 மல்லாமையாலே தங்கள் அளவுகளைத் தெளிந்து अद्वारकமாக प्रपत्तिயை मोक्षोपायமாகப் பற்றுமவர்களுக்கு सर्वफलसाधनமான प्रपत्तिதானே परभक्तिस्थानத்திலே चोदिதையாகையாலே उपासकனுக்கு परभक्तिக்கு மேல் வரும் अवस्थैகள் போலே இस्स्वतन्त्रप्रपत्तिनिष्ठனுடைய கோலுதலுக்கீடாக இப்प्रपत्तिக்கு மேல் வரும் अनुकूलावस्थैகள் இதின் फलமாயிருக்கும்.
9.21 இப்படி प्रपत्तिக்கும் भक्तिக்கும் अधिकारिविशेषத்தைப்பற்றி तुल्यफलत्व முண்டாகையாலே विकल्पமாகக்கடவது. இவற்றுக்கு ‘‘नाना शब्दादि भेदात्’’(ப்ரஹ்மஸூத்ரம் 3-3-56) என்கிற अधिकरणத்திலே भेदம் सिद्धம். ‘‘विकल्पोऽविशिष्टफलत्वात्’’(ப்ரஹ்மஸூத்ரம் 3-3-57.) என்கிற अधिकरणத்திலே विकल्पமும் सिद्धம். उपासनத்தில் विशेषங்கள் போலே
9.22 शाखाभेदங்களிலும் भगवच्छास्त्रसंहिताभेदங்களிலுஞ்சொல்லும் न्यासविद्यैயில் मन्त्रादिविशेषங்கள் கண்டுகொள்வது.
9.23 नमस्कारம் वाचिकம் मानसம் कायिकமென்று பிரிந்தாப்போலே प्रपत्तिயிலு மோரொன்றை முன்னிட்டு இவ்विभागங்கள் சொல்லப்பட்டது. இவை
9.24 மூன்றும் பொருந்தினபோது पूर्णनमस्कारமானாற்போலே पूर्णप्रपत्तिயாகக் கடவதென்றவர்கள் பாசுரங்களுக்கும் वाचिककायिकங்களான व्यापारविशेषங்கள் परीवाहமாம்படியான मानसप्रपत्तिயினுடைய पूर्तिயிலே तात्पर्यமாகக் கடவது. यथाधिकारமிவையெல்லாம் फलप्रदங்களென்னுமிடம் முன்பே சொன்னோம்.
9.25 நின்றநிலைக்குற நிற்குங் கருமமுநேர்மதியால்
நன்றென நாடிய ஞானமுநல்குமுட்கண்ணுடையார்
ஒன்றியபத்தியுமொன்றுமிலாவிரைவார்க்கருளால்
அன்று பயன்றருமாறுமறிந்தவரந்தணரே. (16)
9.26 कर्मज्ञानमुपासनञ्च शरणव्रज्येति चावस्थितान्
सन्मार्गानपवर्गसाधनविधौ सद्वारकाद्वारकान् ।
एकद्व्याकृतियोगसंभृतपृथग्भावानुभावानिमान्
सम्यक्प्रेक्ष्य शरण्यसारथिगिरामन्ते रमन्ते बुधाः ॥ २३ ॥
इति श्रीकवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे उपायविभागाधिकारो नवमः ॥