श्रीमते निगमान्तमहादेशिकाय नमः
श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु
श्रीमद्रहस्यत्रयसारे गुरुपरंपरासारः
0.1 श्रीमान् वेङ्कटनाथार्यः कवितार्किककेसरी ।
वेदान्ताचार्यवर्यो मे सन्निधत्तां सदा हृदि ॥
சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச்சொன்ன பழமொழியுள் – ஓரொன்று
தானேயமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப்போமளவும் வாழ்வு.
गुरुभ्यस्तद् गुरुभ्यश्च नमोवाकमधीमहे ।
वृणीमहे च तत्राद्यौ दंपती जगतां पती ॥ १ ॥
0.2 பொய்கை முனிபூதத்தார் பேயாழ்வார் தண்
பொருநல்வருங்குருகேசன் விட்டுசித்தன்,
துய்ய குலசேகரன் நம்பாண நாதன்
தொண்டரடிப்பொடி மழிசை வந்தசோதி,
வையமெல்லாமறை விளங்க வாள் வேலேந்து மங்கையர் கோனென்றிவர்கள் மகிழ்ந்து பாடும்,
செய்யதமிழ் மாலைகள் நாம் தெளிய வோதித்
தெளியாதமறை நிலங்கடெளிகின்றோமே. (1)
0.3 இன்பத்திலிறைஞ்சுதலிலிசையும் பேற்றி
லிகழாத பல்லுறவிலிராகம் மாற்றில்,
தன்பற்றில் வினைவிலக்கிற்றகவோக்கத்திந்
றத்துவத்தை யுணர்த்துதலிற்றன்மையாக்கில்,
அன்பர்க்கே யவதரிக்கு மாயனிற்க
வருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு,
துன்பற்ற மதுரகவி தோன்றக்காட்டுந்
தொல்வழியே நல்வழிகள் துணிவார்கட்கே. (2)
0.4 ‘‘पापिष्ठः क्षत्रबन्धुश्च पुण्डरीकश्च पुण्यकृत् । आचार्यवत्तया मुक्तौ तस्मादाचार्यवान् भवेत् ॥’’ என்று
0.5 आचार्यवत्தையே सर्वருக்கும் मोक्षकारणமென்றறுதியிட்டார்கள். मुमुक्षुவுக்கு आचार्य-वंशம் भगवाனளவுஞ்செல்ல अनुसन्धिக்கவேணுமென்றோதப்பட்டது.
‘‘तमिमं सर्वसंपन्नमाचार्यं पितरं गुरुम्’’ என்றும், ‘‘ममाप्यखिल लोकानां गुरुर्नारायणो गुरुः’’ என்றும், ‘‘त्वमेव बन्धुश्च गुरुस्त्वमेव’’ என்றும், ‘‘गुरुरसि गतिश्चासि जगताम्’’ என்றுஞ் சொல்லுகிறபடியே सर्वलोकத்துக்கும் परमाचार्यனான सर्वेश्वरன், ब्रह्माவுக்கடியிலே वेदங்களைக் கொடுத்தும், அவற்றிற்கு
0.6 अपहारம் பிறந்தபோது மீட்டுக்கொடுத்தும், இவன் मुखமாக शास्त्रங் களைப் प्रवर्तिப்பித்தும், இவன் पुत्रர்களான सनत्कुमारादिகளை ‘‘स्वयमागत-विज्ञाना निवृत्तिं धर्ममास्थिताः’’ என்னும்படி பண்ணி அவர்கள் मुखங்களாலே हित-प्रवर्तनं பண்ணுவித்தும், இப்படியே மற்றும் नारद-पराशर-शुक-शौनकादि-களான பல महर्षिகளையிட்டு अध्यात्म-संप्रदायங்குலையாதபடி நடத்தியும், ‘‘कृष्णद्वैपायनं व्यासं विद्धि नारायणं प्रभुम् । को ह्यन्यो भुवि मैत्रेय महाभारतकृद्भवेत्’’ என்றும், ‘‘महर्षेः कीर्तनात्तस्य भीष्मः प्राञ्जलिरब्रवीत्’’ என்றுஞ்சொல்லுகிறபடி நிற்கிற व्यासादिகளை अनुप्रवेशिத்து महाभारत-शारीरकादिகளைப் प्रवर्तिப்பித்தும், हंस-मत्स्य-हयग्रीव-नर-नारायण-गीताचार्याद्यवतारங்களாலே தானே வெளி நின்று तत्वहितங்களைப் प्रकाशिப்பித்தும், தானருளிச் செய்த अर्थங்களையெல் லாம் श्रीभीष्मர் முதலான ज्ञानाधिकரையிட்டு மூதலிப்பித்தும், ‘‘पञ्चरात्रस्य कृत्स्नस्य वक्ता नारायणः स्वयम्’’ என்கிறபடியே அடியிலே தானருளிச்செய்த भगवच्छास्त्रத்தை ‘‘ब्राह्मणैः क्षत्रियैर्वैश्यैश्शूद्रैश्च कृतलक्षणैः । अर्चनीयश्च सेव्यश्च नित्ययुक्तैः स्वकर्मसु ॥ सात्वतं विधिमास्थाय गीतस्संकर्षणेन यः । द्वापरस्य युगस्यान्ते आदौ कलियुगस्य च ॥’’ என்கிறபடியே अवसरங்களிலே आविष्करिத்தும், ‘‘पूर्वोत्पन्नेषु भूतेषु तेषु तेषु कलौ
0.7 प्रभुः । अनुप्रविश्य कुरुते यत्समीहितमच्युतः ॥’’ என்கிறபடியே पराङ्कुश-परकालादि-रूपத்தாலே अभिनवமாகவொரு दशावतारம் பண்ணி मेघங்கள் समुद्रजलத்தை வாங்கி सर्वोपजीव्यமான தண்ணீராக உமிழுமாப்போலே वेदार्थங்களில் வேண்டும் सारतमांशத்தை सर्वருக்குமधिकरिக்கலான भाषैயாலே संग्रहिத்துக் காட்டியும், இப்படித் தான் प्रवर्तिப்பித்த सत्पथத்துக்கு प्रकटராயும் प्रच्छन्न-ராயுமிருந்துள்ள पाषण्डिகளால் उपरोधம் வாராமைக்காக ‘‘साक्षान्नारायणो देवः कृत्वा मर्त्यमयीं तनुम् । मग्नानुद्धरते लोकान् कारुण्याच्छास्त्रपाणिना ॥’’ என்றும் “”பீதக வாடைப்பிரானார் பிரமகுருவாகி வந்து”” என்றுஞ்சொல்லுகிற படியே अगस्त्य-सेवितமான देशத்திலே अनेक देशिकापदेशத்தாலே யவதரித்தருளினான்.
0.8 இத்தைக்கணிசித்து ‘‘कलौ खलु भविष्यन्ति नारायण-परायणाः । क्वचित्क्वचिन्महाभागा द्रमिडेषु च भूरिशः ॥ ताम्रपर्णी नदी यत्र कृतमाला पयस्विनी । कावेरी च महाभागा प्रतीची च महानदी ॥’’ என்று महर्षि அருளிச் செய்தான்.
0.9 இவ்வாचार्यர்களில்; ईश्वरमुनिகள் பிள்ளை नाथमुनिகள். இவர் न्याय-तत्वமென்கிற शास्त्रமும் योगरहस्यமும் அருளிச்செய்தார். இவருக்கு श्रीमधुर-कவிகள் முதலாகவுண்டான संप्रदाय-परंपरैயாலும் திருவாய்மொழி
0.10 முகத்தாலும் योगदशैயிலே साक्षात्कृतराயும், நம்மாழ்வார் आचार्यரானார். नाथमुनिகள் பிள்ளை ईश्वरभट्टाழ்வான். ईश्वरभट्टाழ்வான் பிள்ளை யாள வந்தார். இவரருளிச் செய்த प्रबन्धங்கள் – आगमप्रामाण्यமும், पुरुषनिर्णयமும், आत्मसिद्धि, ईश्वरसिद्धि, संवित्सिद्धि என்கிற सिद्धित्रयமும், श्रीगीतार्थसंग्रहமும், स्तोत्र மும், चतुःश्लोकिயும்; ஆக எட்டு. ஆளவந்தார் பிள்ளை சொட்டை நம்பி. சொட்டை நம்பி பிள்ளை என்னாச்சான். என்னாச்சான் பிள்ளைகள் நால்வர்; இவர்களிலொருவர் பிள்ளையப்பர், பிள்ளையப்பர் பிள்ளை தோழப்பர். தோழப்பருக்குப் பெண்பிள்ளைகளிருவர்.
0.11 नाथमुनिகள் श्रीपादத்தை आश्रयिத்தமுதலிகள்; உய்யக்கொண்டார், குருகைக் காவலப்பன், நம்பி करुणाकरदासர், ஏறுதிருவுடையார், திருக்கண்ண மங்கையாண்டான், வானமாதேவியாண்டான், உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை, சோகத்தூராழ்வான் ஆக எண்வர். உய்யக்கொண்டார் श्रीपादத்தை आश्रयिத்தவர்கள் ஐவர். அவர்களாகிறார்; மணக்கால் நம்பி, திருவல்லிக்கேணி பாண்பெருமாளறையர், சேட்டலூர் செண்டலங் காரர், श्रीपुण्डरीकदासர், உலகப்பெருமாள் நங்கை. மணக்கால் நம்பி श्रीपादத்தை आश्रयिத்தவர்கள் ஐவர். அவர்களாகிறார்; ஆளவந்தார், தெய்வத்துக்கரசு நம்பி, गोमठத்துத் திருவிண்ணகரப்பன், சிறுப்புள்ளூர் ஆவுடையபிள்ளை, ஆச்சி. ஆளவந்தார் श्रीपादத்தை आश्रयिத்தவர்கள் பதினைவர்கள். அவர்களாகிறார்; பெரியநம்பி, திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டான், ஆளவந்தாராழ்வார், திருமலைநம்பி, ஈசாண்டான், தெய்வவாரியாண்டான், சிறியாண்டான், திருமோகூர ப்பன், திருமோகூர் நின்றார், தெய்வப்பெருமாள், திருமங்கையாளி யார், பிள்ளை திருமாலிருஞ்சோலை दासர், மாறனேர் நம்பி, ஆள் கொண்டி. பெரியநம்பி श्रीपादத்தை आश्रयिத்தவர்கள் அறுவர். அவர் களாகிறார்; எம்பெருமானார், மலைகுனிய நின்றார், आर्यश्रीशठकोपदासர், அணியரங்கத்தமுதனார், திருவாய்குலமுடையான் பட்டர், திருக்கச்சி நம்பி. எம்பெருமானார், திருக்கோட்டியூர் நம்பி श्रीपादத்திலே रहस्यार्थ-ங்களை शिक्षिத்தார். திருமாலையாண்டான் श्रीपादத்திலே திருவாய்மொழி கேட்டார். ஆளவந்தாராழ்வார் श्रीपादத்திலே திருவாய்மொழியும் ஓதி स्तोत्रादिகளும், அருளிச்செயலும் நல்வார்த்தைகளும் கேட்டருளினார். திருமலைநம்பி श्रीपादத்திலே श्रीमद्रामायणங் கேட்டருளினார். இவரருளிச் செய்த प्रबन्धங்கள் श्रीभाष्यம், दीपம், सारம், वेदार्थसंग्रहம், श्रीगीताभाष्यம், சிறிய गद्यம், பெரிய गद्यம், श्रीवैकुण्ठ गद्यம், नित्यம் ஆக ஒன்பது. இவர் श्रीपादத்தில் आश्रयिத்த முதலிகளைத் தந்தாம் संप्रदायப்படிகளிலே அறிந்து கொள்வது.
0.12 ‘‘गुरुं प्रकाशयेद्धीमान् मन्त्रं यत्नेन गोपयेत् । अप्रकाश – प्रकाशाभ्यां क्षीयेते संपदायुषी ॥’’ என்றார்கள். गुरुவையொருவன் प्रकाशिப்பிக்கிறதுவும் ஒருவன் प्रकाशिப் பியாதொழிகிறதுவும் गुरुभक्तिயில் तारतम्यத்தாலேயிறே. भगवद्विषयத்திற் போலே गुरु விஷயத்திலும் परैயான भक्तिயுடையவனுக்கு अपेक्षितार्थங் களெல்லாம் प्रकाशिக்குமென்னுமிடம் कठ-जाबालादि-श्रुतिகளிலும் सञ्जयादि वृत्तान्तங்களிலும் प्रसिद्धம்.
0.13 இங்ஙனல்லாதார்க்கு இப்படி ज्ञानसंपत्துண்டாகாதென்னுமிடம் शिष्यர்களுடைய ज्ञान-तारतम्यத்தாலே கண்டுகொள்வது. மிகவும் गुणाधिक-ரான शिष्यர்களுக்குங் கடுக अध्यात्मविषयங்களை प्रकाशिப்பியாதார்க்கு निष्ठै குலையாதென்னுமிடம் रैक्वादि वृत्तान्तங்களிலே प्रसिद्धம். பெற்றது गुणமாக
0.14 உபதேசித்தால் ‘‘शिष्य-पापं गुरोरपि’’ என்கையாலே आचार्यனுக்கு निष्ठै குலையும் படியாமென்னுமிடம், வருவது विचाரியாதே इन्द्रனுக்கு उपदेशिத்துத் தானும் ब्रह्मविद्यैயை மறந்து தன் शिष्यனான नारदभगवाனையிட்டு सर्वेश्वरன் உணர்த்து விக்க வேண்டும்படியிருந்த चतुर्मुखன் பக்கலிலே கண்டு கொள்வது.
0.15 இப்படி ‘‘अप्रकाश-प्रकाशाभ्याम्’’ என்கிற இரண்டுக்கும் ‘‘क्षीयेते संपदायुषी’’ என்கிற फलங்களை औचित्यத்தாலும் प्रमाण-प्रसिद्धिயாலும் क्रमத்தாலே उदाह-ரித்தவித்தனை. இரண்டிலும் இரண்டு फलं अन्वयिத்தாலும் वाक्यத்தில் வரும் विरोधமில்லை. ஆகையால் सर्वावस्थैயிலும் गुरुभक्तिயின் परीवाहமாக गुरुவை प्रकाशिப்பிக்கவும், महारत्नगर्भமான மாணிக்கச் செப்புப்போலேயிருக்கிற
0.16 திருमन्त्रத்தினுடைய சீர்மையுந் தன் निष्ठैயுங் குலையாமைக்காக சில்வான प्रयोजनங்களைப்பற்ற शिष्य-गुणपूर्तिயில்லாத चपलர்களுக்கு வெளியிடாதே मन्त्रத்தை மிகவும் சேமிக்கவும் प्राप्तम् । இவ்விடத்தில் गुरुशब्दं परमगुरुக் களுக்கும் उपलक्षणं. सामान्यமாகவுமாம். मन्त्रशब्दं मन्त्रार्थं முதலான रहस्य-ங்களுக்கும் प्रदर्शनपरम् । தானிந்த रहस्यங்களை अनुसन्धिக்கும்போதெல் லாம் आचार्यपरंपरैயை अनुसन्धिக்கையும் विधिबलप्राप्तம். இவ்வாचार्यர்களுடைய अनुसन्धानं ‘‘संभाष्य पुण्यकृतो मनसा ध्यायेत्’’ என்கிறபடியே प्रतिषिद्ध संभाषणத்துக்கு प्रायश्चित्तமாம்.
0.17 என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம்புக்கி
யானடைவே அவர் குருக்கள் நிரை வணங்கிப்
பின்னருளாற் பெரும்பூதூர் வந்த வள்ளல்
பெரிய நம்பி யாளவந்தார் மணக்கால் நம்பி
நன்னெறியை யவர்க்குரைத்த வுய்யக்கொண்டார்
நாதமுனி சடகோபன் சேனை நாதன்
இன்னமுதத்திருமகளென்றிவரை முன்னிட்
டெம்பெருமான் றிருவடிகளடைகின்றேனே. (3)
0.18 एते मह्यमपोढमन्मथशरोन्माथाय नाथादय
स्त्रय्यन्तप्रतिनन्दनीयविविधोदन्ताः स्वदन्तामिह ।
श्रद्धातव्यशरण्यदंपतिदया दिव्यापगाव्यापकाः
स्पर्धाविप्लव विप्रलम्भपदवी वैदेशिका देशिकाः ॥२॥
0.19 हृद्या हृत्पद्मसिंहासनरसिकहयग्रीवहेषोर्मिघोष-
क्षिप्तप्रत्यर्थिदृप्तिर्जयति बहुगुणा पङ्क्तिरस्मद्गुरूणाम् ।
दिक्सौधाबद्धजैत्रध्वजपटपवनस्फातिनिर्धूततत्तत्सिद्धान्त
स्तोमतूलस्तबकविगमनव्यक्तसद्वर्तनीका ॥ ३ ॥
0.20 ஆரண நூல்வழிச்செவ்வை யழித்திடுமைதுகர்க்கோர்
வாரணமாயவர் வாதக்கதலிகள் மாய்த்தபிரான்
ஏரணிகீர்த்தி யிராமானுசமுனியின் னுரைசேர்
சீரணிசிந்தையினோம் சிந்தியோமினித்தீவினையே. (4)
0.21 நீளவந்தின்று விதிவகையால் நினைவொன்றிய நாம்
மீள வந்தின்னும் வினையுடம்பொன்றி விழுந்துழலா
தாளவந்தாரெனவென்றருடந்து விளங்கிய சீர்
ஆளவந்தாரடியோம் படியோமினியல்வழக்கே. (5)
0.22 காளம் வலம்புரி யன்ன நற்காதலடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ்மறை யின்னிசை தந்தவள்ளல்
மூளுந்தவநெறிமூட்டிய நாதமுனிகழலே
நாளுந்தொழுதெழுவோ நமக்கார் நிகர் நா நிலத்தே. (6)
इति श्रीकवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे गुरुपरंपरासारः संपूर्णः ॥