॥ श्रीमद्रहस्यत्रयसारे शास्त्रीय नियमनाधिकारः ॥ १७ ॥
17.1 मुकुन्दे निक्षिप्य स्वभरमनघो मुक्तवदसौ
स्वतन्त्राज्ञासिद्धां स्वयमविदितस्वामिहृदयः ।
परित्यागे सद्यस्स्वपरविविधानर्थजनना-
दलङ्घ्यामामोक्षादनुसरति शास्त्रीयसरणिम् ॥ ३८ ॥
17.2 இச் शेषत्वसंबन्धமடியாக भगवद्भागवतविषयங்களிலிவன் பண்ணும் कैङ्कर्यம் शास्त्रसापेक्षरुचिயாலேயோ शास्त्रनिरपेक्षरुचि யாலேயோவென்னில், இருள்தருமாஞாலத்துளிருக்கிற விவனுக்கு शास्त्रம் கைவிளக்காக வேண்டுகையாலே यथाशास्त्रமாய் शास्त्रம் विकल्पिத்தவற்றில் यथारुचिயாகக் கடவது. அதெங்ஙனேயென்னில்; எம்பெருமானார் திருநாட்டுக்கெழுந்தருளுகிறபோது श्रीपादத்திலே सेविத்திருந்த முதலிகளுடைய आर्तिயைக்கண்ட
17.3 ருளி யிவர்களை யழைத்தருளி என்னுடைய वियोगத்தில் देहत्यागம் பண்ணினாருண்டாகில் ஆளவந்தார் श्रीपादமே; என்னோடு அவர்களுக்கு संबन्ध மில்லை யென்றருளிச்செய்ய, இவர்களுமித்தைக்கேட்டு மிகவும் शोकार्तராய் இனி யெங்களுக்குச் செய்யவடுப்பதெதென்று விண்ணப்பஞ்செய்ய, இவரருளிச்செய்தருளின வார்த்தை; ‘ஒருவன் प्रपन्नனானாலவனுடைய आत्मयात्रै भगवदधीநையாகையாலே யதிலவனுக்கந்வய மில்லை. உண்டென்றிருந்தானாகில் आत्मसमर्पणம் பொய்யாமித்தனை, देहयात्रै कर्माधीநையாகையாலே யதுக்குக் கரையவேண்டா. கரைந்தானாகில் नास्तिकனாமித்தனை. ஆகையாலுभययात्रैயையுங் கொண்டிவனுக்குக் कार्यமில்லை. ஆனால் मनोवाक्कायங்களாகிற त्रिविधकरणங்களையுங் கொண்டு வேண்டிற்றுச் செய்து திரியவமையுமோவென்னில்; அது இவனுக்கு स्वरूपமன்று. उपायांशத்திலந்வயமில்லா விட்டாலும் प्राप्यமான कैङ्कर्य பலத்திலிவற்றை யந்வயிப்பிக்குமத்தனை. அதிலிவனுக்கிங்கிருந்த நாள் பண்ணலாம் कैङ्कर्यமஞ்சுண்டு. அவையாவன – भाष्यத்தை வாசித்து प्रवर्तिப்பித்தல், அதுக்கு योग्यதையில்லை யாகிலருளிச் செயலைக்
17.4 கேட்டு प्रवर्तिப்பித்தல், அதுக்கு योग्यதையில்லையாகிலுகந்தருளின दिव्यदेशங்களுக்கமுதுபடி சாத்துபடி திருவிளக்குத் திருமாலைகளை யுண்டாக்குதல், அதுக்கு योग्यதையில்லையாகில் द्वयத்தினுடைய अर्थानुसन्धानம் பண்ணுதல், அதுக்கு योग्यதையில்லையாகிலென்னுடையவ னென்றभिमानिப்பானொரு श्रीवैष्णवனுடைய अभिमानத்திலே ஒதுங்கி वर्तिத்தல் செய்யலாம்.
17.5 இப்படி वर्तिக்கும் अधिकारिக்கு முன்னடி பார்த்து वर्तिக்க வேண்டுவன மூன்று விஷயமுண்டு. அவையாவன; अनुकूलரென்றும், प्रतिकूलரென்றும், अनुभयரென்றும். अनुकूलராவார் श्रीवैष्णवர்கள். प्रतिकूलராவார் भगवदद्विட்டுக்கள். अनुभयராவாரிவ்விரண்டுமில்லாத संसारिகள். இதில் अनुकूलரைக் கண்டால் चन्दनकुसुमादिகள் போலவும், நிலவுதென்றல் போலவும், अभिमतவிஷயங்கள் போலவுமுகந்து वर्तिப்பான். प्रतिकूलரைக்கண்டால் सर्पाग्नि களைக் கண்டாற்போலே வெருவி वर्तिப்பான். अनुभयரைக் கண்டால்
17.6 काष्ठलोष्टादिகளைக் கண்டாற்போலே तृणवत्करिத்து वर्तिப்பான். இவர்கள नुकूलिப்பார்களாகிலிவர்களுக்கு ज्ञानத்தையுண்டாக்கவும் இவர்கள नुकूलिயார்களாகில் ஐயோவென்றிவர்கள் பக்கலிலே कृपै பண்ணியிருக்கவும் அடுக்கும். இப்படிச் செய்யவொட்டாதொழிகிறது अर्थकाम ங்களில் प्रावण्यம். अर्थकामங்களடியாக श्रीवैष्णवர்களை யनादरिத்திருக்குமாகில், सार्वभौमனாயிருப்பானொரு राजाவினுடைய पुत्रனை राजसन्निधिயிலே परिभविத்தால் राजा வெறுக்குமாப்போலே எம்பெருமான் திருவுள்ளஞ் சீறும். अर्थकामங்களடியாக प्रतिकूलரை आदरिத்திருக்குமாகில், राजा सार्वभौम னாயிருக்க राजमहिषी क्षुद्रजन्तुக்கள் பக்கலிலே மடிப்பிச்சை புக்கால் राजाவுக்கு अवद्यமாய். அத்தாலே யவளையவன் வெறுக்குமாப்போலே எம்பெருமான் திருவுள்ளம் வெறுத்திருக்கும். अर्थकामங்களடியாக अनुभयரை आदरिக்குமாகில், रत्नத்துக்கும் पाषाणத்துக்கும் வாசியறி யாதாப்போலே இவனுக்குப் பிறந்த ज्ञानம் कार्यकर மாயிற்றில்லையாகாதேயென்று, அவனளவிலே எம்பெருமான் अनादरिத்திருக்கும்.’
17.7 இப்படி श्रीभाष्यकारரருளிச்செய்த उत्तरकृत्यத்தில் ‘‘कुलटाषण्डपतितवैरिभ्यः काकिणीमपि । उद्यतामपि गृह्णीयान्नापद्यपि कदाचन ॥’’(சாண்டில்யஸ்ம்ருதி 3-18), ‘‘पररन्ध्रेषु जात्यन्धाः परदारेष्वपुंसकाः । परीवादेषु ये मूकास्तेऽतीव दयिता मम’’(விஷ்ணுதர்மம் 76-22.) इत्यादिகளிற்படியே धर्मविरुद्धार्थकामங்கள் दूरतोनिरस्तங்களானபடியாலே धर्माविरुद्धங்களான अर्थकामங்களு-पाधिயாகவும் अनुकूलप्रतिकूलोदासीन விஷயங்களில் தான் நின்ற நிலை குலையலாகாதென்று திருவுள்ளம். அதில் अनुकूलரை யनादरिக்கலாகாதென்னுமிடம் श्रीशाण्डिल्यस्मृति யிலே ‘‘अनादृतसुतङ्गेही पुरुषं नाभिनन्दति । तथाऽनर्चितसद्भक्तं भगवान्नाभिनन्दति’’(சாண்டில்யஸ்ம்ருதி 4-86.) என்று சொல்லப்பட்டது. प्रतिकूलसंसर्गமாகாதென்னுமிடம்
17.8 महाभारतத்திலே ‘‘ये द्विषन्ति महात्मानं न स्मरन्ति च केशवम् । न तेषां पुण्यतीर्थेषु गतिस्संसर्गिणामपि’’(பாரதம் சாந்திபர்வம் 336-36.) என்று சொல்லப் பட்டது. அப்படியே ‘‘मूढैः पापरतैः क्रूरैर्भगवच्छास्त्रदूषकैः । संबन्धन्नाचरेद्भक्तिर्नश्यत्येतैस्तु सङ्गमे’’(சாண்டில்யஸ்ம்ருதி 1-121.) என்று प्रतिकूलसंसर्गம் भगवत्प्रेमத்தையழிக்குமென்று சொல்லப்பட்டது. उदासीनரை तृणवत्करिக்கவேணு மென்னுமிடம், ‘‘अद्य प्रभृति हे लोका यूयं यूयं वयं वयम् । अर्थकाम परा यूयं नारायणपरा वयम् ॥ नास्ति सङ्गतिरस्माकं युष्माकञ्च परस्परम् । वयन्तु किङ्करा विष्णोर्यूयमिन्द्रियकिङ्करा’’() इत्यादिகளிலே प्रसिद्धம். இப்படி முன்னடி பார்த்து वर्तिக்கவேணுமென்ற ருளிச்செய்தवर्थம் शास्त्रैकवेद्यமாகையாலே शास्त्रीयங்களுக்கு उपलक्षणமாக
17.9 सारोद्धारம்பண்ணியிவரருளிச்செய்த कैङ्कर्यங்களும் தான் வேண்டினபடி செய்யவொண்ணாமையாலே शास्त्रोक्तமான नियमத்தோடே செய்தால் कैङ्कर्यமாமென்று सूचितம். ‘வேண்டிற்றுச் செய்து திரியவமையுமோ வென்னில் அதிவனுக்கு स्वरूपமன்’ றென்றருளிச்செய்தபடியாலே ‘‘अशास्त्रमासुरं कृत्स्नं’’(கீதார்த்தஸங்க்ரஹம் 21.) என்று ஆளவந்தாரருளிச்செய்தபடியே शास्त्रविरुद्धங்கள் दैवप्रकृतिயானயிவன் स्वरूपத்துக்குப் பொருந்தாமையாலும், ‘‘श्रुतिस्स्मृतिर्ममैवाज्ञा यस्तामुल्लङ्घ्य वर्तते । आज्ञाच्छेदी मम द्रोही मद्भक्तोऽपि न वैष्णवः’’(விஷ்ணுதர்மம் 6-31.) என்று அடிமைகொள்ளுகிறவனருளிச்செய்தபடியாலும் இவன் शरीरத்தோடி ருந்த कालம் शास्त्रवश्यனாயடிமை செய்யவேணுமென்று திருவுள்ளம்.
17.10 ‘‘निजकर्मादिभक्त्यन्तं कुर्यात् प्रीत्यैव कारितः । उपायतां परित्यज्य न्यस्येद्देवे तु तामभीः’’(கீதார்த்தஸங்க்ரஹம் 31) என்று श्रीगीतार्थसंग्रहத்தில் ‘‘प्रीत्यैव’’ என்கிறவवधारणத்தாலே साधनत्वबुद्धिயை व्यवच्छेदिத்தாரென்னுமிடம் ‘‘उपायतां परित्यज्य’’ என்று விவரிக்கையாலே व्यक्तம். शास्त्रीयकैङ्कर्यத்தில் प्रीतिயினுடைய प्रेरकत्वातिशयம் विवक्षितமானாலும் ‘‘निजकर्मादिभक्त्यन्तं’’ என்கிறவிவற்றின் स्वरूपத்துக்கு शास्त्रமே प्रमाणமென்னுமிடம்
17.11 निजकर्मशब्दத்தாலே दर्शितமாயிற்று. இச்शास्त्रीय नियमம் ‘‘अविप्लवाय धर्माणां पालनाय कुलस्य च । संग्रहाय च लोकस्य मर्यादास्थापनाय च ॥ प्रियाय मम विष्णोश्च देवदेवस्य शार्ङ्गिणः । मनीषी वैदिकाचारं मनसापि न लङ्घयेत्’’(லக்ஷ்மீதந்த்ரம் 17-93,-94.) என்று प्रपत्त्यद्ध्यायத்திலே प्रसिद्धம். இது தவிர்ந்த போது வருமनिष्टமும் ‘‘यथा हि वल्लभो राज्ञो नदीं राज्ञा
17.12
प्रवर्तिताम् । लोकोपयोगिनीं रम्यां बहुसस्यविवर्धनीम् ॥ लङ्घयन् शूलमारोहेदनपेक्षोऽपि तां प्रति । एवं विलङ्घयन्मर्त्यो मर्यादां वेदनिर्मिताम् ॥ प्रियोऽपि न प्रियोऽसौ मे मदाज्ञाव्यतिवर्तनात्’’(லக்ஷ்மீதந்த்ரம் 17-95, 96,97) என்ற नन्तरஞ் சொல்லப்பட்டது. இந்த भगवदप्रीतिக்கு க்ஷமை கொண்டிலனாகில் मुक्तனாவதற்கு முன்னே अधिकारानुरूपமாக ஏதேனுமொரு வनिष्ठத்தை விளைப்பிக்கும். அது நிற்க सत्वप्रकृतिயானவிவனுக்கு भगवदप्रीतिக்கு மேற்பட்ட नरकமில்லை. அந்த भगवदप्रीतिशमिப்பதும் பின்பு க்ஷமை
17.13 கொள்ளில், ‘‘सुहृदं सर्वभूतानां’’(கீதை 5-29) என்கிறபடி निसर्गसुहृத்தான ईश्वरனுடைய अप्रीति शमिக்குமளவு மிவனுக்கरुन्तुदமாயிருக்கும். இங்ஙனிராதவனுக்கு स्वामिविषयத்தில் प्रावण्यமும் कैङ्कर्यरूपமான मोक्षத்தில் रुचिயும் शङ्किக்கவடுக்கும். இவ்வாज्ञातिलङ्घनம் ‘‘प्रहर्षयिष्यामि’’(ஆளவந்தார் ஸ்தோத்ரம் 46) என்று उद्देश्यैயான भगवत्प्रीतिக்கு विरोधिயானபடியாலே இச் शास्त्रीयनियमம் रहस्यत्रयத்தில் विरोधिनिवृत्तिயை अनुसन्धिக்குமிடங்களிலே अनुसन्धिக்கப் प्राप्तம். இந்த नियमानुवर्तनம் पूर्णोपायரல்லாத
17.14 வधिकारिகளுக்கு उपायपूर्तिविरोधिயை शमिப்பித்துக்கொண்டு भगवत् प्रसादनமாயிருக்கும். पूर्णोपायருக்கतिलङ्घनहेतुकाप्रीति பிறவாதபடி பண்ணிக் கொண்டு भगवत्प्रीणनமாயிருக்கும்.
आज्ञानुज्ञाविभागेन द्विधा शास्त्रीयपद्धतिः ।
निग्रहानुदयायाद्या परा तत्तत्फलाप्तये ॥
अनुज्ञया प्रवृत्तेऽपि क्रमकोपादिसंभवे ।
आज्ञातिक्रमदोषस्स्यान्नियमोऽतो दुरत्ययः ॥
प्रत्यवायपरीहारे फलान्तरसमन्विते ।
तत्र संवलितं प्राहुरधिकारं विचक्षणाः ॥
17.15 नित्यकाम्यस्वरूपैक्ये विनियोगपृथक्त्वतः ।
फलार्थं क्रियमाणेऽपि नित्यं भवति तन्त्रतः ॥
अनुज्ञामात्रसिद्धेषु कैङ्कर्येषु विचक्षणैः ।
अकृतौ तत्फलालाभो न तु दोष इतीरितम् ॥
17.16 நின்றனமன்புடைவானோர் நிலையினிலமளந்தான்
நன்றிது தீயதிதென்று நடத்திய நான்மறையால்
இன்று நமக்கிரவாதலி லிம்மதி யின்நிலவே
அன்றி யடிக்கடி யாரிருடீர்க்க வடியுளதே. (24 )
श्रुतिस्मृत्याचारैस्स्वमतिगतिभिश्शुद्धमनसां
सुसङ्कल्पैर्धर्म्यैः कुलचरणदेशादिसमयैः ।
नियोगैर्योग्यानां नियमयितुरादेरभिमतं
निमित्तस्वप्नाद्यैरपि निपुणमन्विच्छति बुधः ॥ ३९ ॥
इति श्रीकवितार्किकसिंहस्य सर्वतन्त्रस्वतन्त्रस्य श्रीमद्वेङ्कटनाथस्य वेदान्ताचार्यस्य कृतिषु श्रीमद्रहस्यत्रयसारे शास्त्रीयनियमनाधिकारः सप्तदशः ॥